- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 36 
மாலை மூன்று மணியைத் தொட்டிருந்தது. ஆதிரை லாக் புத்தகத்தில் அன்றைய வரவு செலவு, பாலின் இருப்பு என அனைத்தையும் எழுதினாள். ஒற்றைக் காலைத் தொங்கவிட்டு மறு காலை மடக்கி நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
நீண்ட நேரம் ஒரே கோணத்தில் அமர்ந்ததில் காலிற்கு இரத்தம் செல்லாது மதமதப்பாய் இருக்க, எழுது கோலை வைத்துவிட்டு காலை உதறி சரிசெய்தாள். எழுந்து நின்றதும் சமநிலை இல்லாதது போல தெரிய, சுவரில் சாய்ந்தவாறே தண்ணீர் பொத்தலை எடுத்து வாயில் சரித்தாள்.
“என்ன ஆதி... கால் மதமதன்னு இருக்கா?” கோமதி கேட்டதற்கு பதிலளித்தாலும் அவளின் சிந்தனை இங்கில்லை. காலையிலிருந்து தேவாவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாது போனது. அவன் குரலை அவதானித்து கோபமாய் இருக்கிறான் என இவளால் உணர முடிந்தது. நேற்றைக்கு என்னவாகியிருக்கும் என அவளுக்கே கற்பனை கணக்கில்லாது கட்டவிழ, அவன் சொல்லவே தேவையில்லாது போயிற்று. அதை மனதில் நினைத்துக் கொண்டே வேலை செய்தாள்.
சோதனைக் கூடத்தின் வாசலில் ஒரு பெண் வந்து நிற்க, ஆதிரைதான் அவளை முதலில் பார்த்தது. “யாரைப் பார்க்கணும் உங்களுக்கு?” எனக் கேட்டவளின் வலக்கை மேஜையில் தண்ணீர் பொத்தலை வைத்தது. அவள் வெளியே நிற்கவும் இவள் ஆய்வகத்தின் வாயிலுக்குச் சென்றாள்.
கல்லூரிப் பையை முதுகில் மாட்டியிருந்தாள் பிரதன்யா. உள்ளே வரும் போதே அண்ணனின் கண்ணில் பட்டுவிடக் கூடாதென வெகு கவனமாய் நுழைந்தாள். சோதனைக் கூடத்தில்தான் ஆதிரை வேலை பார்க்கிறாள் என ஹரியின் வாய்வழியே கேட்டிருந்தவள், நேராய் இங்கே வந்துவிட்டாள்.
“ஆதிரையாழ்... அது அவங்களைப் பார்க்கணும்!” சின்னவள் தயங்கினாள். வயதிற்கு மூத்தவள், அண்ணியாக வரப் போகிறவளை பெயர் சொல்லி அழைப்பது தவறு. திடீரென்று சொல்லாம் கொள்ளாமல் வந்துவிட்டு அண்ணியென முறை வைத்துக் கூப்பிடுவதும் அத்தனை சரியாய் இருக்காது. அதனாலே அவளது குரல் தடுமாறியது.
“நான்தான் ஆதிரையாழ். நீங்க?” அவள் நிறுத்தவும், பிரதன்யாவின் முகம் நொடியில் மலர, பளீரென்று அவளது உதட்டில் புன்னகை உதயமானது.
‘அண்ணன் செலக்ஷன் சூப்பர். அண்ணி அழகா இருக்காங்க!’ மனதிற்குள்ளே அவளுக்கு மகிழ்ச்சி ஊற்றுப் பெருகிற்று. ஆதிரை அன்றைக்கு ஊதா நிற சுரிதார் அணிந்திருந்தாள். அவளது வெண்ணிற மேனியை அது அழகாய் எடுத்துக் காண்பித்தது.
“அது... அண்ணி, நான் பிரதன்யா...” என்றாள் மெல்லிய பயத்துடன். அண்ணனிடம் இவள் தன்னை போட்டுக் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான் என மனம் பதறியது.
“அண்ணியா?” ஆதிரையிடம் திகைப்பு எழுந்தது.
“நான் பிரதன்யா அண்ணி. தேவாவோட தங்கச்சி. அண்ணா நேத்து உங்களைப் பத்தி வீட்ல சொன்னதும், ஒரே ஆர்வமாகிடுச்சு. என் அண்ணனுக்கும் ஒரு பொண்ணைப் பிடிச்சு லவ் பண்றான்னா, அவங்க எப்படி இருப்பாங்கன்னு பார்க்கலாம்னு வந்தேன். ப்ளீஸ், அண்ணாகிட்டே போட்டுக் கொடுத்துடாதீங்க!” மனதிற்குள் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்ததை கடகடவென சின்னவள் கொட்டிவிட, ஆதிரைக்கு என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை.
தேவநந்தனையே இன்னும் அவள் நண்பன் என்ற ஸ்தானத்தில் தானே வைத்திருக்கிறாள். அதற்குள்ளே அண்ணி என ஒரு சிறு பெண் திடீரென வந்து நிற்கவும், என்ன பேசுவது எனத் தெரியாது மூளை சதிசெய்திட, “ஹம்ம்... உங்க பேர்?” என தன்னை இயல்பாக்கி கொண்டு கேட்டாள்.
“பிரதன்யா அண்ணி... நீ, வா போன்னு கூப்பிடுங்க. நான் சின்ன பொண்ணு தானே!” அவளிடம் சட்டென ஒரு சுறுசுறுப்பு வந்து ஒட்டிக் கொண்டது. இவளது உதடுகளில் முறுவல் படர்ந்தது.
“ஓகே பிரதன்யா, ஏன் ஹஸ்கி வாய்ஸ்லயே பேசுறீங்க?” இவள் யோசனையுடன் கேட்டாள்.
“அண்ணி, என் வாய்ஸ் அண்ணனுக்கு கேட்டுடக் கூடாதுன்ற முன்னெச்சரிக்கை தான். அவனுக்குத் தெரியாம வந்திருக்கேன். தெரிஞ்சா அவ்வளோதான் திட்டியே அழ வச்சுடுவான்!” மெல்லிய குரலில் பதிலியம்பினாள்.
“அவர் காரணம் இல்லாம திட்ட மாட்டாரே பிரதன்யா. நீங்க என்னைப் பார்க்க வந்ததுக்கு கண்டிப்பா திட்ட மாட்டாரு. வேற என்ன தப்பு பண்ணீங்க?” ஆதிரை கேட்டதும், சின்னவள் சில நொடிகள் விழித்துப் பின்னர், “ஆஃப்டர் நூன் க்ளாஸ் கட் பண்ணிட்டேன் அண்ணி!” என்றாள் தயங்கியபடியே.
“ஏன் கட் பண்ணீங்க? தப்புதானே. நீங்க தப்பு செஞ்சாதான் உங்க அண்ணன் திட்டுவார். மத்தபடி தேவையில்லாம ஒரு வார்த்தைக் கூட அவர் பேச மாட்டாரு. இதுதான் லாஸ்ட். இனிமே நீங்க காலேஜை கட்டடிக்க கூடாது. என்னைப் பார்க்கணும்னா, உங்க அண்ணன் கிட்டே கேட்டு லீவ் நாள்ல வாங்க!” என்றாள் கண்டிப்புடன்.
“அண்ணனுக்கு சளைச்சவங்க இல்ல நீங்க. ஜாடிக்கேத்த மூடிதான் போங்க!” அவள் முனங்கலாக கூற, ஆதிரை சிரித்துவிட்டாள். பிரதன்யா முகத்தை உம்மென வைத்தாள்.
“சரி விடுங்க, ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணி இருக்கோம். என்ன குடிக்குறீங்க? டீ, காஃபி, ஜூஸ்?” என பெரியவள் கேட்டதும், பிரதன்யாவிடம் பலமான மறுப்பு.
“எதுவும் வேணாம் அண்ணி. அண்ணன் கண்ல படாம வெளியே போனா போதும். நீங்க நம்ப வீட்டுக்கு வாங்க. காஃபி, டீ என்ன சேர்ந்து லஞ்சே சாப்பிடலாம். இப்போ நான் கிளம்புறேன்!” என்றாள் பயம் விலகாத குரலில்.
“இவ்வளோ பயமா அவருக்கு. வீட்லயும் ரொம்ப ஸ்ட்ரிக்டா அவர்?” இவளது உதட்டோரம் மெல்லிய புன்னகை. எந்த இடத்திலும் பாரபட்சமே கிடையாது. இருபத்து நாலு மணி நேரமும் முகத்தை உர்ரென வைத்திருப்பதற்கு இவனுக்கு விருதே வழங்கலாம் என மனம் கேலி செய்ய, சிரிப்பு வந்தது.
“ரொம்ப... ரொம்ப அண்ணி. ஸ்டரிக்டோ ஸ்ட்ரிக்ட். ஹரி அப்படியில்லை. தேவா அண்ணா சின்ன வயசுல இருந்தே ஒரே அட்வைஸ், கண்டிப்புதான்!” அவள் முகத்தை உர்ரென வைத்துக் கூறினாள்.
“சரி விடுங்க, உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா நான் சமாளிச்சுக்குறேன். காஃபி குடிக்கலாம்!” என தேவா அறைக்கு மறுபுறமிருந்த குட்டி சந்தின் வழியே பின்புறத்திலிருந்த சமையல் கூடத்தை அடைந்தாள்.
முன்பு அவர்கள் அமர்ந்து உண்ணும் இடம்தான். இடப்பற்றாக் குறை காரணமாக இப்போதேல்லாம் ஆய்வகத்திலே உண்கின்றனர்.
அங்கே தேநீர், குளம்பி தயாரிக்க, நொறுக்கு தீனிகள் செய்ய என கணவன் மனைவியாய் இருவர் வேலையில் இருந்தனர்.
“அண்ணா, ரெண்டு காஃபி...” என்ற ஆதிரை ஒரு இருக்கையில் அமர, பிரதன்யாவும் அமர்ந்தாள்.
“அண்ணி, நான் ஒன்னு கேட்பேன். கோச்சுக்காம பதில் சொல்லுவீங்களாம்!” சின்னவள் பீடிகையோடு ஆரம்பிக்க, “நீங்க கேட்குற விஷயம் என்னை கோபப்படுத்தாம இருந்தா, பதில் சொல்றேன்!” என இவள் முறுவலித்தாள்.
“ப்ம்ச்... பெருசா ஒன்னும் இல்ல அண்ணி. என் அண்ணாவுக்கும் லவ்வுக்கும் சுட்டுப் போட்டாலும் ஆகாது. எப்படி அவன் லவ் பண்ணான்? எப்போ ப்ரபோஸ் பண்ணான்? அவன் ஒரு ரோபோவாச்சே அண்ணி!” பிரதன்யா குரலில் ஆர்வம் கொட்டிக் கிடந்தது.
“இதை நீங்க உங்க அண்ணன்கிட்டயே கேட்கலாமே. அவரே அழகா இன்னொரு டைம் ப்ரபோஸ் பண்ணி காட்டுவாரு!” இவள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“ஹக்கும்... அங்க என் பருப்பு வேகாதுண்ணி. இதெல்லாம் கேட்டா, முறைச்சே பத்தபடி தூரம் போக வச்சுடுவான்!” என்றாள் நொடிப்பாக. குளம்பி வரவும், குடித்துக் கொண்டே பேசினர். அவர்கள் உரையாடல் பிரதன்யாவின் படிப்பு, கல்லூரி என சுற்றியது.
“கேட்க மறந்துட்டேன் பிரதன்யா, திவினேஷ் எப்படி இருக்கான்?” ஆதிரை கேட்டதும், மற்றவள் திகைத்துப் பின்னர் விழித்தாள்.
“உங்க அண்ணன் இங்க வச்சுத்தான் ஃபைட் சீக்வன்ஸ் பண்ணாரு!” ஆதிரை கேலியுடன் கூறினாள்.
“ஓ... பாவம் திவினேஷ்... அண்ணன் ரொம்ப அடிச்சுட்டான் போல. மூக்குல ப்ளாஸ்த்ரி, நெத்தில கட்டெல்லாம் போட்டு இருந்தான். அப்புறம் சரியாகிடுச்சு. நான் போய் சாரி கேட்டேன். ஆனால் ராஸ்கல் முகத்தை திருப்பிட்டுப் போய்ட்டான். லைட்டா எனக்கு கில்டா கூட இருந்துச்சு. அப்புறம் நான் பார்த்தா கூட அவன் ஸ்மைல் பண்ணலை. பட், லாஸ்ட் செமஸ்டர்ல அவன் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிட்டான் அண்ணி. இதுக்கு முன்னாடி நாலஞ்சு அரியர் வச்சுருந்தான்!” முதலில் வருந்திப் பின்னர் மெல்லிய கோபம்கொண்டு இறுதியில் அதிசயித்து என நவரசத்தையும் முகத்தில் காண்பித்து முடித்தாள் பிரதன்யா. இவள் முறுவலித்தாள்.
“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கன்றது உண்மைதான் போல. அவன் ரோஷப்பட்டு படிக்கிறான்!” ஆதிரை கூறிவிட்டு சிரித்தாள்.
“இருக்கும்... இருக்கும். பட், அவன் ரொம்ப நல்ல பையன் அண்ணி. ஐ மிஸ்ட் ஹிஸ் ஃப்ரெண்ட்ஷிப். லவ்னு தொல்லைப் பண்ணாம இருந்திருந்தா, அவனை மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்!” பிரதன்யா வருந்தினாள்.
“இதெல்லாம் இந்த வயசுல வர்ற ஈர்ப்புதான் பிரதன்யா. எங்கேயும் வழுக்கிடாம நல்லா படிச்சு ஒரு வேலைக்கு போ. அப்புறம் லவ் பண்ணு. நானே உங்க அண்ணாகிட்டே சொல்லி சப்போர்ட் பண்ணுவேன். பட், இதெல்லாம் நீ படிச்சு முடிச்சு ஒரு நல்ல ஜாப்ல செட்டிலாகி சொந்தக் கால்ல நின்னதும்தான்!” ஆதிரைக் கூறியதும் பிரதன்யாவின் முகம் மலர்ந்தது.
“அப்போ என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு சொல்றீங்களா அண்ணி?” என உற்சாகத்துடன் கேட்டாள். ஆதிரை அவளைப் புருவம் தூக்கிப் பார்த்தாள்.
“ஹிஹிஹி... சும்மா ஒரு ஆர்வத்துல கேட்டேன் அண்ணி. மத்தபடி திவினேஷ் என்னோட குட் ப்ரெண்ட்!” என்றாள் சமாளிப்பாய்.
“ஃப்ரெண்ட்னா நல்லதுதான் பிரது. உனக்கே எது நல்லதுன்னு தெரியும். பார்த்துக்கோ!” என்றுவிட்டாள். இதற்கு மேலே சின்னவளிடம் அறிவுரை உரைப்பது அவளுக்கு எரிச்சலை தருவிக்கலாம். இக்கால ஈராயிரக் குழவிகள் தனியொரு ரகம். அதுவும் இல்லாமல் இன்றைக்குத்தான் முதன்முதலில் சந்தித்திருக்கிறோம். அதீத உரிமை எடுப்பது சரியல்ல என இவள் தன் எல்லையில் நின்று மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு நிழல் தெரிய, பிரதன்யா அதிர்ந்து எழுந்து நின்றாள். தேவாதான் அவளை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான். இவள் விழிக்க, ஆதிரை திரும்பி பார்த்தாள்.
“இப்போ டைம் என்ன பிரது? காலேஜ் போகாம இங்க என்ன பண்ற?” என அழுத்தமாய்க் கேட்டான்.
“அண்ணா, அது... அண்ணியைப் பார்க்க வந்தேன்!” மென்று விழுங்கினாள் அவள்.
“அதுக்காக காலேஜைக் கட்டடிச்சுட்டு வருவீயா? காலேஜ் முடிஞ்சு வந்திருக்கணும். இல்ல, என்கிட்ட சொல்லிட்டு வரணும். இப்படி பண்றது நல்ல பழக்கமா?” என அதட்டவும், சின்னவள் முகம் வாடியது.
“ப்ம்ச்... சின்ன பொண்ணு, தெரியாம பண்ணிட்டா தேவா சார். இந்த ஒரு டைம் விட்டுடுங்க. நெக்ஸ்ட் டைம் க்ளாஸ் கட் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா!” ஆதிரை அவளுக்கு ஆதரவுக்கரம் நீட்டினாள்.
“ஆதி, இதெல்லாம் என்க்ரேஜ் பண்ண கூடாது. ஹாஃப் டே க்ளாஸ் கட் பண்ணியிருக்கா. வீட்டுக்குத் தெரியாமதான் இங்க வந்திருப்பா. வர்ற வழியில எதுவும்னா என்ன பண்றது. வீட்ல இருக்கவங்க காலேஜ் போய்ருக்கான்னு நினைப்பாங்க. காலேஜ்ல வீட்டுக்குப் போய்ட்டான்னு நினைப்பாங்க. அவ வந்தது தப்பில்லை. என்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கணும்!” என்றான் அதட்டலாய். பிரதன்யா தலையைக் குனிந்தாள். அவள் தவறு புரிந்ததுதான்.
“தப்புதான். பட், இப்போ என் முன்னாடி வச்சு திட்டாதீங்க. அவளுக்கு அன்ஈஸியா இருக்கும். வீட்டுக்கு அனுப்புங்க. எதுனாலும் அங்கப் போய் பேசிக்கோங்க!” இவள் அவனை அதட்ட, பிரதன்யாவின் முன்னே ஆதிரையைத் திட்ட முடியாதவன்,
“திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங் பிரது. இனிமே சொல்லாம கொள்ளாம வரக் கூடாது. க்ளாஸூம் கட் பண்ண கூடாது. இப்போ வீட்டுக்கு கிளம்பு. நான் கேப் புக் பண்ணிட்டேன். ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடும். ரீச்சாகிட்டு எனக்கு மெசேஜ் போடு!” என்றான் கண்டிப்புடன்.
பிரதன்யா வேகமாய் தலையை ஆட்டி பையை எடுத்து மாட்டினாள். ஆதிரையைப் பார்த்து தலையை அசைத்தவள் விறுவிறுவென வெளியே சென்றாள்.
‘ஒரே ஒரு அதட்டல் போட்டங்க அண்ணி. அதுக்கே அண்ணன் ஆஃப் ஆய்ட்டான். காதல் வந்தா எல்லாரும் இப்படித்தான் ஆகிடுவாங்க போல. பொண்டாட்டின்னா சும்மாவா? சே, இதெல்லாம் தெரிஞ்சு இருந்தா, முன்னாடியே அண்ணியைத் தேடி கண்டு பிடிச்சு அண்ணாவுக்கு மேரேஜ் பண்ணி வச்சுருப்பேன். ரொம்ப லேட்டா எங்க ஃபேமிலில எண்டர் ஆகுறீங்களே அண்ணி!’ இவள் மனம் சிணுங்கிற்று.
“ஆதிரை, அவ பண்ற தப்புக்கு இனிமே சப்போர்ட் பண்ண கூடாது. உனக்கும் இதான் லாஸ்ட் வார்னிங். கோ அண்ட் டூ யுவர் வொர்க். சாம்பிள்ஸ் எல்லாம் டெஸ்ட் பண்ணியாச்சா?” எனக் கேட்டான். அவனை மென்மையாய் முறைத்தவள் விறுவிறுவென முன்னே நடந்தாள். தேவா அவளுக்குப் பின்னே நடந்து வந்தான்.
ஆதிரைக்கு அப்போதுதான் நினைவு வந்தது. அவளது நடை நிதானப்பட, திரும்பி தேவாவைப் பார்த்தாள். அவன் அருகே வந்ததும், “நேத்து வீட்ல ரொம்ப சண்டையா தேவா சார். காலைல இருந்தே முகத்தை உர்ருன்னு வச்சுருக்கீங்களே?” எனக் கேட்டாள்.
“நத்திங்!” ஒரே வார்த்தையில் அவன் முடித்துவிட்டான்.
“ஹம்ம்...பொய் சொல்றீங்களா தேவா சார்? உங்கம்மா இல்ல அப்பா என்னைத் திட்டியிருப்பாங்க. கரெக்டா?” எனக் கேட்டவளை முறைத்தான்.
“ஹம்ம்... லெட் மீ கெஸ்... என்ன சொல்லி இருப்பாங்கன்னு நானே சொல்றேன். ஏற்கனவே எவன்கிட்டயோ கெட்டுப் போய் புள்ளையோட நிக்கிறவ. இப்போ எதைக் காட்டி என் புள்ளையை வளைச்சுப் போட பார்த்தாளோன்னு கேட்டாங்களா தேவா சார்?” எனக் கேட்டவள் உதட்டோரம் கேலியாய் புன்னகை முளைத்தது. தேவா அவளைத் தீயாய் முறைத்தான்.
“ஜஸ்ட் ஷட் யுவர் நான் சென்ஸ் டாக்கிங் ஆதிரை!” என கோபத்தோடு மொழிந்தவன் அறைக்குள் நுழைந்தான். ஆதிரையும் பின்னோடு சென்றாள்.
“ஹம்ம்...இவ்வளோ தூரம் கோபப்படுறீங்கன்னா, அப்போ உங்க வீட்ல இருக்கவங்க இன்னும் என்னைப் பத்தி கேவலமா பேசி இருப்பாங்க போலயே தேவா சார்?”
“இப்போ என்ன டீ வேணும் உனக்கு?” அதீத எரிச்சலில் அவன் கத்தினான். ஏற்கனவே வீட்டில் இருக்கும் பிரச்சனையில் இவள் வேறு இடையில் வந்து கடுப்பேற்றுகிறாளே என சினம் மேலெழுந்தது.
“ரிலாக்ஸ் தேவா சார், அவங்க அப்படி பேசலைன்னாதான் ஆச்சர்யம். நான் இந்த மாதிரி பேச்செல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணேன். பட், நான் கேட்கும்போது நீங்க யெஸ், நோன்னு சொல்லாம இருக்கதும் நல்லதுதான். ஏன்னா, நாளைப் பின்ன உங்க வீட்ல இருக்கவங்களை நீங்க கன்வின்ஸ் பண்ணி நான் அங்க வந்து வாழ்ந்தா, அவங்க முகத்துல எல்லாம் முழிக்கணும் இல்ல?” என்றாள் முறுவலுடன்.
தேவா அவளை அமைதியாய் பார்த்தான்.
“இந்த பாதை அவ்வளோ ஈசி இல்லை. நிறைய கரடு முரடா இருக்கும் தேவா சார். கண்டிப்பா நீங்க ட்ராவல் பண்ணியே ஆகணுமா. அதுவும் இல்லாம அவ்வளவோ வொர்த்தான பாதையும் இல்லை. உங்க முடிவை இப்போ கூட ரீ-கன்சிடர் பண்ணலாம். நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். பழையபடி நீங்க சிடுமூஞ்சி பாஸாவும், நான் உங்களோட எம்ப்ளாயியாகவும் கண்டினியூ பண்ணலாம். எனக்கு ப்ராப்ளம் எதுவும் இல்ல!”
“வேற எதுவும் சொல்லணுமா? இல்லைன்னா ப்ளீஸ் லீவ். எனக்கு வேலை இருக்கு!” என வாயிலைக் கை காண்பித்தான். குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது. ஆதிரை அவனை முறைத்தாள்.
“ப்ம்ச்... உங்களோட நல்லதுக்குத்தான் சொல்றேன் தேவா சார். இத்தனை நாள் உங்களை பாராட்டி சீராட்டி வளர்த்த அம்மா, அப்பாவை எனக்காக எடுத்தெறிஞ்சு பேசிடாதீங்க. அது ரொம்ப தப்பு. அவங்களை முடிஞ்சளவுக்கு கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுங்க. முடியலைன்னா அவங்க சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்லாகிடுங்க. அதுதான் உங்களுக்கு சேஃப் சோன். என்னைக் கல்யாணம் பண்ணா, வீட்லயும் உங்களுக்கு ரெண்டு பக்கமும் இடிதான் விழும். நாளைப் பின்னே உங்க அம்மா என்னைப் பேசுனா நான் அமைதியா இருக்க மாட்டேன் தேவா சார். தினமும் பஞ்சாயத்து வரும், நல்லா யோசிச்சுகோங்க!” என்றாள் தீவிரமாய்.
“அந்த ஈர வெங்காயத்தை நான் பார்த்துக்குறேன். நீ என்னை இர்ரிடேட் பண்ணாம கிளம்பு. உன்னையே இப்போதான் கன்வின்ஸ் பண்ணி இருக்கேன். என் பேரண்ட்ஸை சம்மதிக்க வைக்க ஐ நீட் டைம். அதுவரைக்கும் பெர்சனலை இங்க பேசாத!” என்றான் கண்டிப்புடன்.
“பைன்... உங்கபாடு, உங்க பேரண்ட்ஸ் பாடு!” என்றவள் கட்டுப்புடன் எழுந்து சென்றாள். தேவாவும் அவளை முறைத்து வைத்தான்.
ஆதிரை ஆய்வகத்திற்குள் நுழைந்தாள். அவளுக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல தர்ஷினி அவளுக்கு அருகே வந்தாள்.
“அக்கா, அந்தப் பொண்ணு யாரு? சொந்தக்கார பொண்ணா?” எனக் கேட்டாள்.
“சொந்தக்கார பொண்ணு இல்லை. இனிமேல் சொந்தமாகுற பொண்ணு!” என்ற ஆதிரை கணினியை படக்கென்று தட்டினாள்.
“புரியலையே கா?” தர்ஷினி விழித்தாள்.
“என்னோட வருங்கால நாத்தனார்!”
“என்ன! நிஜமாவா கா? நம்பவே முடியலை. கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” ஆச்சர்யத்துடன் கேட்டாள் தர்ஷினி.
“ஆமா! வேற வழியில்லாம ஓகே சொல்லிட்டேன்!”
“பாரு டா... எங்க ஆதிரை அக்காவையும் ஓகே சொல்ல வச்ச அந்த நல்ல மனுஷனை நான் பார்க்கணுமே!”
“எல்லா உனக்கு தெரிஞ்சவர்தான்!” ஆதிரையின் ஒற்றை வரி பதிலில் இவளிடம் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
“எதாவது க்ளூ கொடுங்க கா. அப்போதானே ஆள் யாருன்னு கெஸ் பண்ண முடியும்!”
“நம்ப பண்ணைலதான் இருக்காரு அவர்!”
“வர்ரே வா... சுபாஷ் அண்ணனா? நீங்களும் அவரும் அப்போ அப்போ ரகசியம் பேசும் போதே நினைச்சேன் நான்! ஆனாலும் என்கிட்டயே மறைச்சுட்டீங்க இல்ல?” அவள் முறுக்கினாள்.
“ப்ம்ச்... சுபாஷ் எனக்குத் தம்பி மாதிரி!” ஆதிரைப் பல்லைக் கடித்தாள்.
“ஐயோ... அப்போ அவர் இல்லையா? அப்படின்னா வேற யாரு கா... உள்ளே வொர்க் பண்றவங்களா? பட், அவங்க கூட நீங்க அவ்வளோவா பேசுனது கூட இல்லையே!” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“நான் ஆள் யாருன்னு சொல்லிடுவேன். பட் நீ நம்ப மாட்ட!” ஆதிரை தோளைக் குலுக்கினாள்.
“ப்ம்ச்... ரொம்ப சஸ்பென்ஸ் வேணாம். ப்ளீஸ், சொல்லிடுங்க!”
“நம்ப தேவா சார்தான்!” ஆதிரைக் கூறியதும் அவள் ஏதோ பெரிய ஹாஸ்யம் சொல்லிவிட்டது போல தர்ஷினி பக்கென்று சிரித்துவிட்டாள்.
“க்கா... என்கிட்ட பண்ண காமெடியை தேவா சார் இருக்கும்போது மறந்தும் பண்ணிடாதீங்க. அப்புறம் கடிச்சு கொதறிடப் போறாரு!” என்றுவிட்டு தன்னிடத்திற்குச் சென்றாள். கோமதியிடமும் ஆதிரை கூறியதை பகிர்ந்து மீண்டும் ஒருமுறை சிரித்தவளை ஆதிரைக் கீழ் கண்ணால் முறைத்து வைத்தாள்.
அதே கடுப்புடன் வேலை முடிந்து கிளம்பியவள் கடைசியாய் சென்று கையெழுத்திட்டு தேவாவை குறுகுறுவென பார்த்தபடியே நின்றாள். அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“உங்ககிட்டே ஒன்னு கேட்க மறந்துட்டேன் தேவா சார்!” விறைப்பாய் நின்றபடி கேட்டாள். தேவா அவளை என்னவென்பதாய் பார்த்தான்.
“அழகா அம்சமா ஒரு பையன் இருந்தா யாரா இருந்தாலும் வளைச்சுப் போடத்தான் பார்ப்பாளுகங்கன்னு உங்கம்மா உங்க முகத்தை நெட்டி முறிச்சிருப்பாங்களே!” கேலியாய் உதட்டை வளைத்து அவள் கூறவும், வேறு ஏதோ கூறப் போகிறாள் என வெகு தீவிரமாக கேட்டவன் முறைத்தான். ஆனாலும் உதட்டோரம் புன்னகை அரும்ப பார்த்தது. மேஜை மீதிருந்த எழுதுகோலை எடுத்து அவள் மீது எறிந்தான்.
சரியாய் அதைக் கையில் பிடித்தவள், “நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேணும் தேவா சார்!” என்றாள் போலியான முறைப்புடன்.
“போடீ... வீட்டுக்கு கிளம்பு!” என்றவன் குரலில் துளியும் காரமில்லை. உடல் தளர்ந்து இத்தனை நேரப் பதற்றம் தணிந்து போயிருந்ததை இவளால் உணர முடிந்தது. இதழ்களில் மெல்லிய முறுவல் ஜனித்தது.
“ஷப்பா! சிரிச்சுட்டீங்களா! எப்போ பாரு முகத்தை இப்படி உர்ருன்னு வச்சிருந்தா எப்படி நிம்மதியா வேலை பார்க்குறது?” எனக் கடைசி வரியை முணுமுணுத்தாள். அவள் பேச்சு இவனுக்கும் கேட்க, முகம் மலர்ந்தது. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து புருவத்தை உயர்த்தினான்.
“என் முகமே அப்படித்தான் மா!” என்றான் கேலியாய்.
“ப்ம்ச்... ஐ க்நோ தேவா சார். அதை நீங்க எக்ஸ்ப்ளெண்ய்ன் பண்ணணும்னு அவசியம் இல்ல!” உதட்டைச் சுளித்தாள்.
“டைமாகிடுச்சுல்ல... வீட்டுக்கு கிளம்பலையா நீ?”
“கிளம்பணும்... கிளம்பணும். இங்கேயேவா படுத்து தூங்கப் போறேன்!” என சடைத்தவள், “அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லணும். எதுக்கெடுத்தாலும் உர்ரூன்னு மூஞ்சியை தூக்காதீங்க. எல்லாருக்கும் பிராப்ளம் வரும், போகும். அதையே நினைக்க கூடாது. கோ வித் தி ப்ளோ தான். நடந்ததையும் சரி, நடக்கப் போறதையும் சரி. யாரலையும் மாத்த முடியாது. சோ, ரிலாக்ஸா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுங்க!” என்றாள்.
“சரிங்க மேடம்!” அவன் போலியாய் தலையை அசைக்க, “போயா... உங்களுக்காக பார்த்து பேசுனேன்ல. என்னை சொல்லணும்!” என முறைத்துவிட்டுப் போனவளைப் பார்த்த தேவாவின் உதட்டில் தாராளமாக புன்னகை அரும்பிற்று. தனக்கான என்ற சொல்லே அவன் மனநிலையை முற்றிலும்
மாற்றி போட்டிருந்தது.
“நீ எனதருகினில் நீ, இதைவிட ஒரு கவிதையே கிடையாதே.
நீ எனதுயிரினில் நீ, இதைவிட ஒரு புனிதமும் இருக்காதே!”
தொடரும்...
நெக்ஸ்ட் அப்டேட்ல மேரேஜ் மக்களே

Last edited: