- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 33 
தான் குடித்து முடித்த கோப்பையை கீழே வைத்த ஆதிரை நிமிர்ந்து அமர்ந்து முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள்.
“சொல்லுங்க தேவா, எப்படியும் என்ன பேசுறதுன்னு ப்ரிபேர்டா தானே வந்து இருப்பீங்க. சொல்லுங்க, நான் கேட்குறேன்!” உதட்டோரம் புன்னகை நெளிய கேட்டாள் பெண்.
“ஹம்ம்... நான் எதுவுமே ப்ரிபேர் பண்ணலை ஆதிரை. எனக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு. யூனிட்லதான் இருந்தேன். பட், வேலைல ரொம்ப கான்சென்ட்ரேஷன் மிஸ்ஸாச்சு. சோ, இங்க வந்தேன்!” என்றான் கையை விரித்து மனதை மறையாது. இவளது புருவங்கள் உயர்ந்தன.
“சரி, வந்தீங்க. சாப்டீங்க, சுகமா தூங்குனீங்க. காஃபி வேற. அப்புறம் என்ன கிளம்ப வேண்டியது தானே?” எனக் கேட்டவள் மடக்கியே வைத்திருந்ததில் மரத்துப்போன வலது காலை கீழே தொங்கவிட்டாள். அவள் குனிந்து காலை நீவிவிட, தேவாவிடம் பதிலில்லை. நிமிர்ந்து பார்த்தாள்.
“எனக்கே தெரியலை ஆதிரை. அன்னைக்கு நீ வேணாம்னு சொன்னதும் ஐ ப்ளாக்ட் யுவர் நம்பர். அப்படியொன்னும் மானம் கெட்டுப் போய் இவ பின்னாடி சுத்தணுமான்னு உன் பின்னாடி வரக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்!” தலையைக் கோதி பெருமூச்சுவிட்டான்.
“நல்ல டிசிஷன் தானே தேவா சார்?” ஆதிரை கதைக் கேட்கும் பாணியில் நாடியில் கையைக் குற்றி அமர்ந்தாள்.
“என்னாலே என் டிசிஷனை எக்ஸ்க்யூட் பண்ண முடியலை. நாலு நாள்தான். பட், சரியா சாப்பிடலை, தூங்கலை. எதுவுமே பண்ண முடியலை. போயும் போயும் ஒரு பொண்ணுக்காக நானா இப்படின்னு என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு. இப்படியெல்லாம் நான் பேசுவேன்னு உன்கிட்ட சொல்லும் போதுதான் எனக்கே தெரியுது. நான்... நான் ரொம்ப ட்ரமாட்டிக்கா பேசுறேன்ல ஆதிரை?” சங்கடத்துடன் கேட்டான் தேவா. இவளது உதட்டில் முறுவல் அரும்பிற்று.
இல்லையென தலையை அசைத்துப் பின்னர் ஆமாம் என்றவள், “ஹம்ம்... ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி நீங்க இதெல்லாம் பண்ணியிருந்தா ட்ரமாட்டிக்கா தெரிஞ்சு இருக்காது தேவா சார். பட், இப்போ உங்களுக்கு வயசாகிடுச்சுல்ல. சோ, ட்ரமாட்டிக்தான்!” கேலி இழையோட கூறியவளை அவன் முறைத்து வைத்தான்.
“சரி, நீங்க கண்டினியூ பண்ணுங்க!” உதட்டில் விரலை வைத்து சிரிப்பை அடக்கினாள்.
“நான் கதையா சொல்றேன் ஆதி. ஒரு தடவை யாரும் என்கிட்ட முகத்தை காட்டிட்டாலோ இல்ல கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டாலோ கூட அவங்க பக்கமே நான் போக மாட்டேன். மோர் ஓவர் என்னை யாரும் அப்படி பேசுனதும் இல்லை. அப்படி இருக்கும்போது உன்கிட்ட இவ்வளோ ப்ளெக்சிபிளா இருக்கேன். பட், நீ எதையும் கண்சிடர் பண்றதே இல்லை. எனக்கு எவ்வளோ கோபம் வரும்னு உனக்கே தெரியும். இந்தப் பொறுமையை உன் இடத்துல யார் இருந்தாலும் தூக்கிப் போட்டுட்டு போய்ருப்பேன். ஏன், நீயே வேணாம்னு என் ஈகோ சொல்லுது. யூ க்நோ, ஐ யம் ஈகோயிஸ்ட். யாருக்காகவும் நான் இறங்கி வர மாட்டேன். பட், ஐ நீட் யூ இன் மை லைஃப்!” என்னவோ இப்படித்தான் பேச வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருக்கவில்லை. மனதிலிருப்பதை அப்படியே கொட்டினான்.
“நான் உங்களை இப்படியெல்லாம் இருங்கன்னு சொல்லலை தேவா சார். இன்பேக்ட் எனக்கு கில்டா இருக்கு. எனக்காகன்னு நீங்க எதாவது செய்யும் போது அதை என்னால ஏத்துக்கிட்டு உங்களுக்கு ஹோப் குடுக்க முடியாது. ஏன்னா உங்களுக்கு நான் நோதான் சொல்லப் போறேன்னு என் மனசுக்குத் தெரியும்!” ஆதிரை மெல்லிய குரலில் உரைத்ததும், “ஏன்?” ஆதங்கமாய்க் கேட்டான் தேவா.
“முகதாட்சண்யம் பார்க்காம எடுத்தெறிஞ்சு பேசுற உங்களோட குணம் சுத்தமா எனக்குப் பிடிக்கலை. நான் கூட கோபம் வந்தா பேசுவேன். பட், எதிர்ல இருக்கவங்களும் நம்மளை மாதிரிதானேன்னு எனக்கொரு எண்ணம் இருக்கும். அதனாலே மோஸ்ட்லி யாரையும் ஹேர்ட் பண்ண மாட்டேன். நீங்க எனக்கு ஆப்போசிட். சோ, எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்!” ஆதிரையின் குரலில் தேவாவின் முகம் நொடியில் மாறியது.
“ஃபைன்! ரிஜெக்ஷன் எனக்குப் புதுசில்ல ஆதிரை!” கசந்த முறுவலோடு அவள் முகம் பார்க்காது வானத்தை வெறித்தான். ஆதிரைக்கு ஒருமாதிரி மனதில் பாரமேறியது.
“ஐ டோன்ட் மீன்!” அவள் ஏதோ பேச வரும் முன்னே இடைபுகுந்து கையை நீட்டியவன், “பிடிக்கலைன்னா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். ஐ க்நோ, எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு அவசியம் இல்லை. ஐஞ்சு வருஷமா முகத்தைக் கூடப் பார்க்காதவன், எறிஞ்சு விழுந்தவன் ரெண்டு மாசமா பின்னாடி சுத்தி வந்தா பிடிக்கணும்னு அவசியம் இல்லை. தட்ஸ் ரியாலிட்டி. நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்!” என முறுவலித்தான்.
“நீங்க ரொம்ப ப்ராக்டிகலான ஆள் தேவா சார்!” அவள் கூறவும், இவன் தலையை அசைத்து ஆமோதித்தான்.
“உன் விஷயத்தை தவிர நான் எல்லாத்துலயும் ப்ராக்டிகல்தான் ஆதிரை! உன்கிட்ட மட்டும் என் எமோஷன்ஸை, பீலிங்க்ஸை கண்ட்ரோல் பண்ண முடியலை. சம்டைம்ஸ் ரொம்ப சீப்பா பிஹேவ் பண்றேனோன்னு கூடத் தோணி இருக்கு!” அவன் புன்னகைக்க, ஆதிரை தலையை இடம் வலமாக அசைத்தாள்.
“நீங்க ஜென்யூன் பெர்சன் தேவா சார். இதுவரைக்கும் லிமிட்டைக் க்ராஸ் பண்ணாமதான் உங்களோட ப்ரபோசலை என்கிட்ட வச்சிருக்கீங்க. ஐ ரெஸ்பெக்ட் யுவர் பீலிங்க்ஸ். பட், அதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ண இஷ்டமில்லை!”
“ரைட்... என்னோட கேரக்டர்தான் உன் ப்ராப்ளம்னு ஐ அண்டர்ஸ்டாண்ட். உனக்காக நான் சேஞ்ச் ஆகுறேன்னு பொய் சொல்ல வரலை எனக்கு. ஏன்னா முப்பத்து மூனு வருஷமா நான் இப்படித்தான் இருக்கேன். நேத்து வந்த உனக்காகன்னு நானே நினைச்சா கூட என்னோட குணத்தை மாத்த முடியாது. ஐ டோன்ட் கிவ் பேக் ப்ராமிசஸ். இப்போ கூட உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்ற ஒரே ரீசன்காக மட்டும்தான் இந்தளவுக்கு இறங்கி வந்து பேசுறேன்!” அவன் கூற்றில் ஆதிரைக்கு வியப்பேதுமில்லை. அவனைப் பற்றி அவளுக்கும் தெரியுமே.
“ஐ க்நோ யூ வெரி வெல் சார்!” ஆதிரைப் புன்னகைத்தாள்.
“நீ இப்படி சொல்லும் போதுதான் உன்னை விட்றக் கூடாதுன்னு தோணுது ஆதி!” அவன் குரலில் நிறைய நிறைய வருத்தம் கொட்டிக் கிடந்தது. கட்டாயப்படுத்தி இந்தப் பெண்ணை சம்மதிக்க வைக்க முடியாது. ஆனாலும் அவளை விட்டுவிட முடியாமல் மனம் முரண்டியது.
“தேவா சார்... இப்படியெல்லாம் பேசாதீங்க. ஏற்கனவே எனக்கு கில்டா இருக்கு. இதோ, இப்படி பார்க்குறது, பேசுறதுன்னு என்னை ரொம்ப பீல் பண்ண வைக்காதீங்க. யூ க்நோ, நான் ரொம்ப ரொம்ப சாதாரண பொண்ணு. எனக்கும் என்னை மட்டுமே நேசிச்சு, எனக்காகான்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்ற ஒருத்தங்களோட லைஃபை ஷேர் பண்ணிக்கணும். முக்கியமா குடும்பமே இல்லாம வாழ்ந்த என் வாழ்க்கையை மாத்துற மாதிரி பெரிய ஜாய்ண்ட் ஃபேமிலியா இருக்க பையனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு பேராசை கூட இருந்துச்சு... யெஸ், அது பாஸ் டென்ஸ் தேவா சார்!” என்றாள் புன்னகைத்து.
“அதெல்லாம் அழிஞ்சு போன ஆசை. ஐ க்நோ, நிறைவேறலை. அப்படியெல்லாம் நினைச்சு வச்சிருக்க என்கிட்ட நீதான் வேணும்னு வந்து நிக்கிற உங்ககிட்டே நோ சொல்றது எவ்வளோ கஷ்டம் தெரியுமா தேவா சார். நான், நான்னு வாழ்ந்த வாழ்க்கைல மிச்சமிருக்க வாழ்க்கை முழுக்க அன்பா பார்த்துக்குறேன்னு செயல்ல காட்டுறீங்க. அதெல்லாம் அவ்வளோ ஈஸியா தட்டிவிட முடியாது தேவா. அப்படி இருக்குறப்போ அடிக்கடி வந்து இப்படிலாம் பேசாதீங்க. நான் எமோஷனலி ரொம்ப வீக். அதானலே யாரையும் அண்ட விடாம என் புள்ளை, நான்னு வாழ்ந்துட்டு இருக்கேன். இப்போ உங்களுக்கு என்னோட ரிஜெக்ஷன் கஷ்டமா இருக்கலாம். பட், ப்யூச்சர்ல நான் பாசிங் க்ளவுடா தெரிவேனோ என்னவோ!” உதட்டைப் பிதுக்கினாள்.
“நான் ஒன்னு சொல்லவா தேவா சார்?” எனக் கேட்டவளிடம் அவன் பதிலளிக்கவில்லை.
“இப்போ நீங்க ஒரு காபி போட்டுக் கொடுத்தீங்களே. அப்போ பேசாம உங்களுக்கு ஓகே சொல்லிடலாம்னு தோணுச்சு!” மெல்லிய முறுவலுடன் கூறியவளை அவன் அமைதியாய்ப் பார்த்தான்.
“தனியா இருக்கது கொடுமைன்னு சொல்றேன் தேவா சார். டெய்லி நானே சமைச்சு நானே சாப்பிட்றது ரொம்ப போர். சில சமயம் கடுப்பா இருக்கும். வேலை முடிச்சு வீட்டுக்கு வந்ததும் யாராவது காஃபி போட்டுத் தரமாட்டாங்களான்னு இருக்கும். யாரும் இல்லையேன்னு நானே போட்டுப்பேன். இன்னைக்கு வேலை செஞ்சு நான் செம்ம டயர்ட். காஃபி குடிக்கணும்னு தோணுச்சு. ஆனாலும் கால் வலிக்குதேன்னு உக்கார்ந்துட்டேன். நீங்க காபியோட வந்தீங்க...” என்றவளை ஆதுரமாய்ப் பார்த்தான்.
“வாட் இஸ் ஈட்டிங் இன் யூ ஆதி? உன் மனசுல என்ன இருக்கு?” தேவா பொறுமையாய்க் கேட்டான்.
“ப்ம்ச்... என் மனசுல ஆயிரம் இருக்கும் தேவா சார். அதெல்லாம் பேசுனா விடுஞ்சுடும். நேரமாச்சு, நீங்க கிளம்புங்க!” ஆதிரை முகத்தில் மெல்லிய புன்னகை.
முடியாது எனத் தலையை அசைத்தவன், “நீ என்ன யோசிக்கிறன்னு எனக்குத் தெரியணும் ஆதி. ஐ வாண்ட் டூ நோ யுவர் தாட்ஸ். ஜஸ்ட் நான் சிடுசிடுன்னு இருக்கேன்றதுக்காக நீ என்னை ரிஜெக்ட் பண்ணலை. நீ பேசுறதுல இருந்தே புரிஞ்சுக்க முடியுது. எனக்கு காரணம் தெரியணும். வேலிட்டா இருந்தா அக்செப்ட் பண்ணறேன். அப்படியில்லேன்னா, உன்னை என்னால விட முடியாது, சாரி டூ சே திஸ். மாரல், எதிக்ஸ் எல்லாம் உன் விஷத்துல என்னால ஃபாலோ பண்ண முடியாது. ஐ நீட் யூ!” அழுத்தமாய் அவள் முகம் பார்த்துக் கூறினான் தேவா. ஆதிரை உதட்டோரம் அவனறியாது புன்னகை உதிர்ந்தது.
“நீங்க சொல்றது கரெக்ட் தான் தேவா சார். ஜஸ்ட் அன்னைக்கு நீங்க கோபமா பேசுனீங்கன்றதுக்காக நான் நோ சொல்லலை. இன்பேக்ட் அதெல்லாம் எனக்குப் பெருசா தெரியலை. ஐஞ்சு வருஷம் உங்ககிட்டே திட்டு வாங்கி அதெல்லாம் பழகிப் போச்சு!” கேலியாய் கூறினாள். அவன் பேசாது அவளது பேச்சின் தாத்பரியத்தை மட்டும் உள்வாங்கினான்.
“ப்ம்ச்... ரொம்ப பச்சையா ஒரு மாதிரி இருக்கும் தேவா சார். உண்மையா நான் என்ன யோசிக்கிறேன்னு சொல்லணுமா?” யோசனையுடன் கேட்டாள்.
“அப்கோர்ஸ் எனக்குத் தெரியணும். நீ என்னை ரிஜெக்ட் பண்றேன்னா, அதுக்கான காரணம் கண்டிப்பா சொல்லணும்!” கூறியே ஆக வேண்டும் என்றொரு கட்டளை அதில் பொதிந்திருந்தது.
சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், “ஐ ஹேவ் அ பாஸ்ட். உங்களுக்கு அது தெரியும் தானே தேவா சார்?” அவள் கேட்டதும், அவனது தலை அசைந்தது.
“ஊர்ல பொறுக்கித் தனம் பண்றவனே தனக்கு வரப்போற பொண்ணு கைப்படாத ரோஜாவா இருக்கணும்னு நினைப்பாங்க. அப்படி இருக்கையில நீங்க எந்தப் பொண்ணையும் திரும்பிக் கூடப் பார்க்காத ஆள். அப்போ நான் உங்களுக்கு ரொம்ப ஓவர் தேவா சார்!” என்றவளை அவன் முறைத்தான்.
“முறைக்காதீங்க, நான் சொன்னாலும் சொல்லலைனாலும் இதான் நிஜம். ஏற்கனவே ஒருத்தனோட வாழ்ந்து ஒரு புள்ளையை பெத்தவ சார் நான். ஒருவேளை நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வைங்க. ஆஃப்டர் மேரேஜ் நீங்க என்ன முனிவரா? என்னைத் தொடாமயே இருக்க?”
“என் பக்கத்துல வரும்போது இவளை ஏற்கனவே ஒருத்தன் தொட்டிருக்கான்னு உங்களுக்குத் தோணாமலா போகும்?” எனக் கேட்டவள்,
“கண்டிப்பா தோணும், அதான் மனுஷ இயல்பு. அதுவும் இல்லாம குழந்தை பெத்த உடம்பு சார் என்னோடது. முகத்தை வேணா நான் கேர் பண்ணி பளபளன்னு வச்சுக்கலாம். பட், பாடி அப்படி இல்லை. சி-செக்சன்லதான் அபி பொறந்தான். வயித்துல அந்த தழும்பு, ஸ்ட்ரெச் மார்க்ஸ் எல்லாம் அப்படியேதான் இருக்கு. போதா குறைக்கு தொப்பை வேற போட்டுட்டேன். அதனாலே லூசா ட்ரெஸ் பண்ணிட்டு வரேன். தனியாவே இருந்துட்டதால என் ஃபீலிங்க்ஸ் எல்லாம் மரத்துப் போச்சு. ஒரு ஜென் நிலைல இருக்கேன் நான். புதுசா கல்யாணமான பொண்டாட்டின்னு நீங்க பக்கத்துல வந்தா வெட்கம் கூட வருமோ வராதோ? நீங்க தொட்டா எனக்கு சிலிர்க்காது தேவா சார். குறைஞ்ச பட்சமா வொய்ஃபா வரப் பொண்ணுகிட்டே உங்களுக்குன்னு சில எக்ஸ்பெக்டேஷன் இருக்கும். அதெல்லாம் என்னால நிறைவேத்த முடியாது. நான் சொல்றது உங்களுக்கு சில்லியா தெரியலாம். பட், ரியாலிட்டிக்குன்னு பார்த்தா, இதுதான் உண்மை. நான் ஒரு செக்ண்ட் ஹேண்ட் தேவா சார். யூ டிசர்வ் பெட்டர்!” அவன் முகம் பார்த்து ஆதிரை உரைத்ததும்,
“ரைட்... நெக்ஸ்ட் எதாவது இருக்கா?” என நக்கலாய்க் கேட்டான் தேவநந்தன். அதற்கெல்லாம் அசரவில்லை ஆதிரை.
“ஏன் இல்ல, இருக்கே தேவா சார். இரண்டு வருஷமா அலசி ஆராஞ்சு எத்தனையோ பொண்ணைப் பார்த்து ரிஜெக்ட் பண்ணி கடைசியா ஒரு பொண்ணை செலக்ட் பண்ண உங்க பேரண்ட்ஸ் என்னை எந்த வகையில அக்செப்ட் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்குறீங்க. என்னோட ஜாதி, குலம், கோத்திரம், ஃபேமிலி பேக்ரவுண்ட்னு எல்லாத்தையும் தோண்டி துருவுவாங்க. அம்மா, அப்பா தனிதனியா கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டதால இவ ஒழுக்கம் கெட்டு கழுத்துல தாலி இல்லாம பிள்ளையோட இருக்கான்னு பேசுவாங்க. நிச்சயமா சொல்வாங்க தேவா சார். என்னை யாரும் ஜட்ஜ் பண்றது எனக்குப் பிடிக்காது. என் லைஃப், இதுவரைக்கும் நான் என் இஷ்டப்படித்தான் வாழ்ந்தேன். கஷ்டமோ நஷ்டமோ நானே ஃபேஸ் பண்ணிட்டேன். இனிமேலும் பார்த்துக்குற மன உறுதி என்கிட்ட இருக்கு. என்னால யாரையும் டிபெண்ட் பண்ணி இருக்க முடியாது சார்...”
“சப்போஸ் நீங்க உங்க ஃபேமிலியை கன்வின்ஸ் பண்ணாலும் கூட அபியை வச்சு நிறைய பேச்சு வரும் சார். நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்தா என் பையன் ரெண்டாம்பட்சமா போய்டுவான். அம்மா, அப்பா இருந்தாலும், நான் அவங்க அன்புக்காக ஏங்கி இருக்கேன். அது எனக்கு கிடைக்கவே இல்லை. அப்படி இருக்கப்போ நானே என் பையனுக்கு அப்படியொரு சிட்சுவேஷன் வர வைக்கலாமா? எல்லா விதத்திலும் நீங்களும் நானும் கல்யாணம் பண்றது ஒத்து வராது தேவா சார்!”
“சப்போஸ் எனக்கு உங்க மேல பீலிங்க்ஸ் வந்திருந்தா கூட நான் இவ்வளோ ரிஸ்க் எடுக்குறதுல ஒரு நியாயம் இருக்கு. எனக்கு உங்களைப் பிடிக்கும் அஸ் அ ப்ரெண்டா. அதுக்கும் மேல எதுவுமே தோணலை. நாலு நாள் அவுட்டிங் போய்ட்டு வந்தா லவ் வந்துடும்னு நினைச்சீங்களா?” கேலியாய்க் கேட்டவளை முறைத்தவன், விறுவிறுவென எழுந்து உள்ளே செல்ல, ஆதிரையும் இருவர் குடித்த குவளைகளோடு அவன் பின்னே சென்றாள்.
உள்ளே நுழைந்ததுதான் தாமதம். சட்டென அவள் கரத்தைப் பிடித்திழுத்து சுவரோடு ஒன்ற வைத்தவன், “நான் ஒன்னும் இருபது வயசு சின்ன பையன் இல்ல ஆதி. சும்மா உன் பின்னாடி சுத்துறேன்னு நினைக்காத. நீ சொன்னதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா. என் பக்கம் எல்லாத்தையும் என்னால ஹேண்டில் பண்ண முடியும். நீ என்னைப் பத்தி ஓவரா திங்க் பண்ணாத. ஒன்னு இல்ல மூனு புள்ளை பெத்துக்கிட்டாலும் அபிதான் நம்மளோட மூத்த பையன்!” என்றான் கோபத்துடன். அவனது மூச்சுக் காற்று இவளது முகத்தில் மோதியது.
பக்கவாட்டாய்த் திரும்பியவள், “முதல்ல தள்ளி நில்லு பேசுங்க தேவா சார். உங்களை நான் இப்படி... அது, சங்கடமா இருக்கு சார்!” என்றாள் பல்லைக் கடித்து.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன். இப்போ இதான் முக்கியமா டீ?” அவன் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
“ஆமா... எனக்கு இது முக்கியம் தான்!” என அவள் பேசி முடிக்கும் முன்னே ஆதிரையின் மொத்த உடலும் தேவாவின் இறுகிய அணைப்பில் இருந்தது. அழுத்தமாய் அணைத்து அவளது கழுத்தில் முகம் புதைத்திருந்தான். இவளது நெஞ்சம் திடுக்கிட்டு போக, கையிலிருந்த குவளையால் அவனை ஓங்கி அடிக்கச் சென்றாள். நொடியில் அவளது செயலை அவதானித்தவன், கரத்தைப் பிடித்து தடுத்துவிட்டான்.
“இப்போ உனக்கு என்ன தோணுது ஆதி?” செவியோரம் கேட்டக் குரலோடு அவளது வெற்றுக் கழுத்தை மோதிச் சென்ற மூச்சுக் காற்றில் என்னென்னவோ செய்தது.
பல்லைக் கடித்தவள், “நீங்க அசந்தா டம்ப்ளரை வச்சு மண்டையைப் பொளக்கலாம்னு தோணுது!” என்றாள் கோபத்தோடு.
“ம்ப்ச்...” எரிச்சலோடு அவளை உதறியவன், “எனக்கு உன்னைக் கட்டிப் பிடிக்கும்போது நீ மட்டும்தான் டீ தெரிஞ்ச. மூளை, மனசு, உடம்புன்னு அத்தனைலயும் நீ மட்டும்தான் வந்து நின்னு உசுர வாங்குற. அப்பு, உன் பாஸ்ட் மண்ணாங்கட்டின்னு எதுவுமே எனக்குத் தோணலை. ஐ டோன்ட் கேர் அபவுட் யுவர் பாஸ்ட். எனக்கு என் முன்னாடி இருக்க ஆதிரையைத்தான் தெரியும். அவ மட்டும்தான் எனக்கு வேணும். சும்மா கதை சொல்லீட்டு இருக்கா!” கடுப்போடு அவன் உரைத்ததும் இவளுக்கு எரிச்சலானது.
“ம்ப்ச்... கிளிபிள்ளைக்கு சொன்னா மாதிரி சொல்லீட்டு இருக்கேன். அது உங்களுக்கு புரியலையா? நீங்க கட்டிப் பிடிச்சதும் மணிரத்னம் ப்லிம் மாதிரி எனக்கு ரொமான்டிக் எழவு ஒன்னுமே வரலை தேவா சார். சொன்னதையே சொல்லி எரிச்சல் படுத்தாம இடத்தைக் காலி பண்ணுங்க. ஜென்யூன்னு சொன்ன வாயலயே வாங்கிக் கட்டிக்காதீங்க!” உச்சபட்ச எரிச்சலோடு இரைந்தவள் நங்கு நங்கென்று நடந்து சமையலறைக்குள் சென்றாள்.
சில நொடிகளில் பின்னே அரவம் கேட்க, “இன்னும் நீங்க கிளம்பலையா?” எனக் கடுப்பாய்க் கேட்டாள்.
“பைனலா உன் முடிவு என்ன ஆதிரை?” அவன் அழுத்தமாய்க் கேட்க,
“பைனலா என்ன? முதல்ல இருந்தே நான் அதைத்தானே சொல்றேன். நோ மீன்ஸ் நோ தான் சார்!” இவள் கோபமாய்க் கூற, “ஃபைன்!” என உறுமிவிட்டு அவன் அகன்றான்.
‘போயா... போய்த் தொலை. என் உசுரை வாங்கன்னே வருவான்!’ என அவள் நிம்மதி பெருமூச்சுவிட, அதற்கு ஆயுள் வெகு சொற்பமென சென்ற வேகத்திலே வந்து நின்றான்.
“எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஆதிரை!” அவன் குரலில் எரிச்சல் அடைந்தவள், “இன்னும் என்னய்யா சொல்லணும்?” என சமையல் மேடையில் கத்தியை கடுப்போடு எறிந்தாள்.
இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளியை பூஜியமாக்கியவன் ஒற்றைக் கரத்தால் அவள் முகத்தைப் பிடித்தான். “இப்போதான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நான் கன்பார்ம் பண்ணேன்!” அவன் நிறுத்தவும், தன் கன்னத்தை அழுத்திய கையை விலக்கப் போராடியபடியே, “என்னத்த கன்பார்ம் பண்ணீங்க?” என ஏகக் கடுப்பில் கேட்டாள்.
“ஹம்ம்... இதுவரைக்கும் உன் மேல எனக்கு இருக்க ஃபீலிங்க்ஸை வெறும் ஈர்ப்பு, பிடித்தம்னு நினைச்சுட்டு இருந்தேன். பட், என் பீலிங்க்ஸ்க்குப் பேர் வச்சுட்டேன். யெஸ், திஸ் இஸ் ப்யூர் லவ். நீ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணலை. அப்போ இது லவ் இல்லாம வேற எதுக்கும் காதல்னு பேர் வைக்க முடியாது. ஐ லவ் திஸ் கேர்ள் ட்ரூலி, மேட்லி, டீப்லி. ஐ லவ் யூ மிஸ் ஆதிரையாழ்!” மூச்சு வாங்க அவன் கூறி முடித்ததும் ஆதிரையின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடிக்க, மூச்சடக்கி அவனைத் தள்ள முயன்றாள்.
அனாயசமாக அவள் முயற்சியைத் தடுத்து முகம் நோக்கி குனிந்து நெற்றியில் முத்தமிட முனைந்தான. நொடியில் அதை அவதானித்து பதறிய ஆதிரை, அவன் வாயிலே பட்டென்று அடித்து உதறி தள்ளி நின்று பெரிய பெரிய மூச்சுகளாய் வெளிவிட்டாள்.
“சாவடிச்சுடுவேன் தேவா சார்... முத்தம் கித்தம் குடுத்து தொலைஞ்சுடாதீங்க. அப்புறம் உங்க முகத்துல எப்படி முழிக்கிறது?” என நடுங்கும் உதடுகளும் கோபத்தை இழுத்துப் பிடிக்க முயன்ற குரலோடு சுவரில் சாய்ந்து நின்றாள்.
அவள் அடித்ததில் உதடு வலிக்க, விரல் கொண்டு அதைத் தடவியன், நொடி நேரத்தில் தன்னை தடுத்து நிறுத்திவிட்டாளே என கடுப்பானான்.
“ம்மா...” அபி உறக்கம் கலைந்து எழுந்து வரவும், இவர்களது பேச்சு தடைப்பட்டது.
வந்தவன் ஆதிரையிடம் செல்ல, “தூங்கி எழுந்துட்டீயா தங்கப்புள்ளை?” என்றவாறே அவனை இடுப்பில் தூக்கிவைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். இப்போதுதான் உடலும் மனதும் கொஞ்சம் சமனநிலைக்கு வந்திருந்தது.
அடுப்பில் பாலை சூடு செய்தவள், “அந்த பூஸ்ட் டப்பாவை எடுத்துட்டு வாங்க!” என்றாள். அவனும் முறைப்போடு எடுத்து வந்தான். மகனுக்கு சத்துமாவு பாலைக் காய்ச்சி கொடுத்தாள்.
அவன் குடிக்க, “அபி!” என அவளது அழைப்பில் இருவரும் திரும்பினர்.
“தேவா அங்கிளை உனக்குப் பிடிக்குமா?” எனக் கேட்டாள்.
“யெஸ் மா... பிடிக்கும்!” அபி மகிழ்ச்சியுடன் தலையை அசைக்க, தேவா புரியாது அவளைப் பார்த்தான்.
“எவ்வளோ பிடிக்கும்... நிறைய பிடிக்குமா? இல்லை கொஞ்சமாவா?” விடாது சின்னவனிடம் கேட்டாள்.
“ஹம்ம்... நிறைய... நிறையப் பிடிக்கும் மா. ரொம்ப பிடிக்கும். அவர் என்னைப் பைக்ல கூட்டீட்டுப் போனாரு!” என்றான் கண்களை விரித்து.
அவன் உதட்டுக்கு மேலிருந்த பாலைத் துடைத்துவிட்டவள், “தேவா அங்கிள், அவர் வீட்டுக்கு நம்பளைக் கூப்பிட்றாரு. அவர் கூடப் போய் நம்ப ஒன்னா சேர்ந்து இருக்கலாமா? உனக்கு ஓகே வா?” எனக் கேட்க, சின்னவன் புரியாது விழித்தான். தேவா ஆதிரையை அழுத்தமாய்ப் பார்த்தான். அவள் பேச்சின் சாராம்சம் இப்போதுதான் அவனுக்கு உறைத்தது.
“சொல்லு அபி... அவரோட போய் இருக்கலாமா? உனக்கு ஓகேன்னா நம்ப தேவா அங்கிள் வீட்டுக்குப் போகலாம்?” என மகனின் முகம் பார்த்தாள்.
“யெஸ் மா... போகலாம். ஐ லவ் தேவா அங்கிள். அவரோடவே இருக்கலாம். எனக்கு டபுள் ஓகே!” அவன் குரல் துள்ளியது. தேவா அபியை அன்பாய்ப் பார்த்தான்.
“அப்போ நீயே அங்கிள்கிட்டே சொல்லு!” தேவாவின் முகத்தைப் பார்க்கவே இல்லை ஆதிரை. மகனிடமே பேசினாள்.
“தேவா அங்கிள், நானும் அம்மாவும் உங்க வீட்டுக்கு வரோம்!” தாயின் கையிலிருந்து கீழே இறங்கினான்.
தேவா அபியின் கன்னத்தைக் கிள்ளினான். “கண்டிப்பா அபி, இனிமே நீ, நான், உங்கம்மா எல்லாம் ஒன்னா இருக்கலாம்!” எனவும், சின்னவன் வேகமாய் தலையை அசைத்தான்.
ஆதிரை முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நான் வரேன்!” அழுத்தமாய்க் கூறியவன் அகல, ஆதிரை அவன் பின்னே சென்றாள். குனிந்து காலணியை மாட்டியவன் அவளை கடுப்புடன் முறைத்தான்.
“என்ன... என்ன முறைக்குறீங்க? நியாயமா முறைக்க வேண்டியது நான்தான். அதான் நினைச்சதை சாதிச்சுட்டீங்களே. அப்புறம் என்ன?” இவள் கோபத்துடன் கேட்டாள்.
“ஆமா... அப்படியே ஆசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான்னு நான் சந்தோஷப்படணும். இவ்வளோ நேரம் தனியா இருந்தப்பலாம் முகத்தை முகத்தை காட்டிட்டு சின்னப் பையன் முன்னாடி சொல்லி கடுப்பேத்துறா!” அவன் கடுப்படித்தான்.
“ஐயோ... இந்த முகத்தைப் பார்த்து ஆசை வந்து அப்படியே கட்டி முத்த மழைப் பொழிஞ்சு சொல்லிட்டாலும். உங்க முகத்தைலாம் பார்த்து ரொமான்ஸ் பண்ணிட்டாலும்!” வேண்டுமென்றே அவனை வம்பிழுத்தாள்.
“ஏன்... ஏன், என் முகத்துக்கு என்ன டீ குறை!” எகிறிக் கொண்டு வந்தான்.
“ச்சே... எப்போ பார்த்தாலும் சிடுசிடுன்னு இருக்கது. இதுல ரொமான்ஸ் ஒன்னுதான் குறை. இடத்தைக் காலி பண்ணுங்க!” என்றாள் உதட்டை வளைத்து.
“உனக்கு வேற வழி இல்லை டீ. இந்த ஜென்மத்துல நான்தான் உன் புருஷன்!” சூளுரைத்துக் கொண்டே அவன் படிகளில் இறங்க, “ஆமா... என் தலையெழுத்து!” என இவள் சடைத்தாள்.
“சரிதான் போடீ!” அவன் மெல்லிய குரலில் கத்த, “போயா!” என இவளும் கதவை அறைந்து சாற்றி அதன் மீதே சாய்ந்து சில நிமிடங்கள் நின்றவள் மெதுவாய் பால்கனிக்குச் சென்றாள்.
தேவா தன் இருசக்கர வாகனத்தை இயக்கிய
வன் நிமிர்ந்து மேல பார்க்க, ஆதிரை படக்கென திரும்பி முகத்தை மறைத்து வீட்டிற்குள் சென்றாள். தேவா அவளை முறைத்துவிட்டே அவ்விடத்திலிருந்து அகன்றான்.
தொடரும்...