- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 23 
நாற்காலியில் தலையை சாய்த்து மின்விசிறிக்கு கீழே அமர்ந்து தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் ஆதிரை. விழிகள் மெதுவாய் அதன் இணையோடு சேர்ந்திருக்க, மனம் ஏதோதோ நினைவுகளில் உழன்று கொண்டிருந்தது.
அபினவ் தானே குளித்துவிட்டு வருகிறேன் என குளியலறைக்குள் சென்று இருபது நிமிடங்கள் கடந்துவிட்டிருக்க, மூளை அன்னிச்சை செயலாக அதை நினைவுப்படுத்தியது.
விழி திறந்து தலையை நிமிர்த்தியவள், “அபி, தண்ணில இன்னும் விளையாடீட்டு இருக்கீயா நீ. எவ்வளோ நேரம் குளிப்ப. அடி வாங்கப் போற?” என்ற தாயின் அதட்டல் வேலை செய்தது.
“ம்மா... நோ மா. நான் குளிச்சு முடிச்சுட்டேன். ட்ரெஸ் சேஞ்ச் பண்றேன். டூ மினிட்ஸ் மா!” இப்போதெல்லாம் தாயின் முன்னே உடை மாற்ற சங்கடப்பட்டுக் கொண்டே உள்ளே உடையை உடுத்தி வருகிறான் அபி. அதில் ஆதிரைக்கு சிரிப்பு மலர்ந்தாலும், மகன் வளர்ந்துவிட்டான் என உணர்த்தவும் செய்தது.
இரண்டு நிமிடங்களைக் கடந்து ஐந்து நிமிடத்தில் முழுக்கை அரக்கு நிற சட்டையும் கருப்பு கால்சராயுமாக வெளியே வந்தான். அவன் தலையிலிருந்து நீர் சொட்டியது.
“அபி... தலையை நல்லா துவட்டு,
இங்க வா!” என அவனை அருகே அமர்த்தி தலையை இவளே துவட்டிவிட்டாள்.
நேரம் நான்கு முப்பது எனக் காண்பித்தது. சூடாய் தேநீரைத் தயாரித்து ரொட்டியோடு அவனுக்கு உண்ண கொடுத்தாள். செல்லும் இடத்தில் எத்தனை மணிக்கு உணவு உண்ண முடியும் என்று சொல்ல முடியாது. அபிக்கு எட்டு மணிக்கே பசித்துவிடும். அதனாலே மகன் வயிற்றை இப்போதே நிரப்பினாள்.
“பிஸ்கட் போதும் மா... கிளம்பலாம்!” என முகப்பூச்சுத் தூளைக் கைகளில் கொட்டி முகத்தில் தடவினான். அங்காங்கே திட்டுதிட்டாய் அது நின்றின்றிக்க, இவள் அதை சரிசெய்து விட்டாள்.
“ம்மா... ஐ கேன், நானே பார்த்துக்கிறேன்!” அபி இவள் கையைத் தட்டிவிட, அவனை மென்மையாய் முறைத்தவள்,
உலர்ந்திருந்த முடியை சிறிய கவ்வியில் மாட்டி விரித்துவிட்டாள். முகத்திற்கு அரிதாரம் பூசி கண்ணாடியில் மேலிருந்து கீழே தன்னைப் பார்த்து திருப்திப்பட்டவள், அலைபேசியை எடுத்தாள்.
தேவா இங்கே வந்துவிட்டு அழைப்பான் என இவள் எண்ணியிருக்க, “ஆதி, ரெடியா?” என வாயிலில் அவன் குரல் கேட்டது. மெதுவாய் அவன் பேசினாலும் கூட காலியாயிருந்த கூடத்தில் அது எதிரொலித்து பெரிய சப்தத்தைக் கொடுத்தது.
கைப்பையை எடுத்து மாட்டியவள், “அபி... வா போகலாம்!” என மகன் கையை ஒரு கரத்தில் பிடித்துவிட்டு வீட்டுச் சாவியை துழாவி எடுத்துக்கொண்டு வாயிலுக்கு சென்றாள்.
“நாங்க ரெடி சார்... போகலாம்!” என்றவளை அவன் பார்வை ஒரு நொடி தழுவி மீண்டது. அரக்கு நிறப் புடவையை அவள் அணிவாள் என தேவா உத்தமமாய் நம்பவில்லை. இருந்தும் மனதினோரம் ஒட்டிக் கொண்டிருந்த ஆசை ஏமாற்றத்தை தருவித்தது.
“ஹம்ம்... லாவண்டர் கலர் சேரி கூட ஓகே!” கதவைப் பூட்டிவிட்டு குனிந்து காலணிகளை மாட்டியவளின் காதில் அவன் முணுமுணுப்பது விழ, நிமிர்ந்து அவனை முறைத்தாள். அதைக் கண்டு கொள்ளாதவன் போல தேவா முன்னே சென்று மகிழுந்தை உயிர்ப்பித்தான்.
ருக்கு பாட்டியும் தாத்தாவும் இந்த சப்தத்தில் வெளியே வந்தனர்.
“என்ன ஆதிரை, வெளிய கிளம்பிட்டீயா?” அவர் பார்வை தேவாவை தொட்டு மீண்டது. இரண்டொரு முறை அவனை இங்கு பார்த்துவிட்டார். முதலில் கண்டு கொள்ளாது விட்டாலும் இப்போது இருவரது முகத்திலும் யாரிவன் என்ற கேள்வி படர்ந்திருந்தது.
“ஆமாம்மா... அவர் என்னோட ப்ரெண்ட், ஃபைவ் இயர்ஸ் ஒன்னா வொர்க் பண்றோம். ஒரு பங்க்சனுக்கு போறோம்... வந்துட்றேன்!” பட்டும்படாமல் அவர்களிடம் உரைத்துவிட்டு விறுவிறுவென மகிழுந்தின் முன்புறம் ஏறியமர்ந்து மூச்சை வெளிவிட்டாள். அபி பின்புறம் அமர்ந்து ஜன்னலில் வேடிக்கைப் பார்த்தபடி இருந்தான்.
ஆதிரைக்கு இது போல விளக்கம்
உரைப்பதில் எல்லாம் விருப்பமில்லை. ஆனால் ருக்குவும் அவர் கணவரும் அபியை தன் பேரப்பிள்ளை போல பார்த்துக் கொள்கின்றனர். அவர்களிடம் நிறைய உதவியை வேறு பெற்றிருக்கிறாள்.
இங்கு குடியிருக்கும் வரை பெரியவர்கள் துணை அவசியம். அதனாலே சம்பிரதாயத்திற்காக இரண்டு வார்த்தையை உதிர்த்துவிட்டு வந்தாள். அவள் அதையே சிந்தித்தபடி வர, தேவாவின் குரல் அவளைக் கலைத்தது. புரியாது அவன்புறம் திரும்பினாள்.
“உள்ள வான்னு ஒரு வார்த்தைக் கூப்பிட்டிருக்கலாம் ஆதி. பேசிக் கர்டசி கூட இல்ல உனக்கு. உங்களுக்காகத்தான் நான் கிளம்பி வந்தேன்!” சாலையைப் பார்த்தபடி அவன் முனங்க, ஆதிரை அவனை முறைத்தாள்.
“நான் உங்களை வர சொல்லலை சார். நீங்க வந்ததால வீட்டு ஓனருக்கு நான் ரீசன் சொல்ற மாதிரி ஆகிடுச்சு. பேசாம நீங்க தனியா வந்திருக்கலாம். நான் கேப்ல வந்ததும் உங்களோட ஜாய்ன் பண்ணி உள்ள வந்திருப்பேன்!” முறைப்போடு அவள் பொரியவும், தேவாவின் வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.
ஒரு மணி நேரம் பயணித்தவர்கள் தாம்பரம் சேலையூர் பகுதியிலிருந்த விஜயலட்சுமி நகருக்குள் நுழைந்தது.
பத்தொன்பதாம் எண் வீட்டின் முன்னே அவர்கள் இறங்கினர். ஆதிரை ஒருமுறை அலைபேசியில் வீட்டு முகவரியை சரி பார்த்தாள். தேவா ஓரமாய் மகிழுந்தை நிறுத்திவிட்டு வர, மூவரும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்கப்பா... உள்ளே வாங்க!” ஐம்பதைத் தொட்ட பெண்மணி ஒருவர் அவர்களை வரவேற்றார்.
அப்புவைத் தேடி ஆதிரையின் விழிகள் சுழன்றன. அவனைத் தவிர ஒருவரையும் அவளுக்குப் பரிட்சயம் இல்லையே. அதனால் அந்நிய இடத்தில் சங்கோஜமாய் உணர்ந்தாள். அப்படியே திரும்பி தேவாவைப் பார்க்க, அவன் விழிகள் வீட்டை அளந்தன.
“வாங்க ஆதிரை... நல்லா இருக்கீங்களா? வாங்க அண்ணா...” ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ரூபிகா அவர்களைப் முகம் முழுக்க புன்னகையோடு வரவேற்றாள். அப்பு ஆதிரையும் தேவாவும் வருவதை முன்பே உரைத்து, அவர்களை முறையாய் வரவேற்கும்படி அறிவுறுத்தியிருந்தான்.
“நான் நல்லா இருக்கேன்... நீங்க வந்து உக்காருங்க!” இவள் எழுந்து நின்றாள்.
“இல்ல... இல்ல, நீங்க உக்காருங்க ஆதிரை. அவர் பக்கத்துல கடை வரை போய்ருக்காரு. நீங்களும் உங்க ஹஸ்பண்டும் வருவீங்க, வெல்கம் பண்ணணும்னு சொல்லிட்டுத்தான் போனாரு...” என்றாள் புன்னகையுடன். ஆதிரை உதட்டிலும் சிரிப்பு மலர்ந்தது.
“இவங்க என் அம்மா, அப்புறம் அப்பா... இது என் அத்தை... அவங்களோட பசங்க எல்லாம் பின்னாடி தோட்டத்துல இருக்காங்க!” ரூபிகா அனைவரையும் அறிமுகம் செய்தாள். தேவாவும் ஆதிரையும் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டனர்.
“எத்தனை மாசம் உங்களுக்கு?” இவள் கேட்க, ரூபி பதிலளிக்க, அப்பு வந்துவிட்டான்.
“வா ஆதி... வா, வா... ப்ரோ, வாங்க!” அவன் உற்சாகத்துடன் வரவேற்க, தேவா எழுந்து நின்றான். அவனை அணைத்தவன், ஆதிரையை அணைக்கச் சென்று பின்னர் வீட்டுப் பெண்கள் அவனை ஒருவழி செய்திட கூடுமென அவள் தோளில் கைப்போட்டு விடுவித்தான். மொத்தமே இருபது பேர்தான் வீட்டை நிறைத்தனர்.
வீட்டின் பின்புறம் சிறிய தோட்டத்தோடு கூடிய இடமிருக்க, அங்கேதான் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். பெரிதாய் அலங்காரம் என்று ஏதுமில்லை. வெகு எளிமையாக இருந்தது அவ்விடம். ஆங்காங்கே நாற்காலியில் இளம்வட்டங்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, இவர்களும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
“எல்லாரும் வந்தாச்சுல்ல... கேக் கட் பண்ணிடலாமா?” ஒல்லியாய் உயரமாய் இருந்த இளம் சிட்டு ஒருவன் பெரிய அட்டையிலிருந்த அணிச்சலை எடுத்து வந்து நடுவில் வைத்தான்.
“ஏன் டா அப்புசாமி... பத்து வருஷம் நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து வாழ்ந்ததுக்கா இவ்வளோ அலப்பறை பண்ணிட்டு இருக்க. நானும் என் புருஷனும் நாற்பது வருஷமா ஒன்னா இருக்கோம் டா!” அப்புவின் பாட்டி அணிச்சலைப் பார்த்து அங்கலாய்த்தார்.
“அப்பத்தா... நீயும் ஐயாவும் நாற்பது வருஷம் வாழ்ந்தது பெருசில்ல. உன் பேத்தியோட நான் பத்து வருஷம் குப்பைக் கொட்டி இருக்கேன். எனக்கு அது பெருசுதான். உன்னை மாதிரி உன் பேத்தி சாந்த சொரூபியா இருக்கா. அப்போ அப்போ கையெல்லாம் நீட்டி அடிச்சு வைக்கிறா. என்ன வளர்த்திருக்க நீ!” அவரைக் கேலி செய்தவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். ரூபி கணவனை முறைத்தாள்.
அனைவரும் அவளை சிரிப்புடன் நோக்கவும், அப்புவின் தோள் பின்னே மறைந்தவள், “என்ன மாமா இது... எப்போ நான் உங்களை அடிச்சேன்!” என சிணுங்கலாகக் கேட்டாள்.
அவளைப் புன்னகையுடன் பார்த்தவன், “அன்னைக்கு புள்ளை சேட்டை பண்ணான்னு அவளோட சேர்த்து எனக்கும் ரெண்டு அடி கொடுத்தல்ல டி!” அவன் உதட்டைக் கோண, இவள் முறைத்தாள்.
“வீடு முழுசும் தண்ணியைப் பிடிச்சு இறைச்சு அட்டகாசம் பண்ணா, அடிக்காம கொஞ்சுவாங்களா?” அவள் கடுப்புடன் உரைக்க,
“ஏன்டி ரூபி... என் முன்னாடியே என் பேரனை அடிப்பேன்னு சொல்ற நீ!” பெரியவர் இடைபுகுந்து ரூபியின் கன்னத்திலே மெதுவாய் குத்தினார்.
“பாட்டீ... என் பொண்டாட்டிக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும். உள்ள வராதே நீ!” அப்பு படக்கென மனைவியை தன்புறம் பிடித்திழுக்க,
“ஏத்தா... அவனைப் பத்தி தெரியாதா உனக்கு... புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள ஏன் போற நீ!” ரூபிகாவின் தாய் அந்த முதிய பெண்மணியை மென்மையாய் கடிந்தார். ஆதிரை அனைத்தையும் சின்ன புன்னகையுடன் பார்த்தாள்.
அவளுக்கு இந்தக் குடும்பத்தை, அவர்களின் பிணைப்பை மிக மிகப் பிடித்தது.
மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டதும் எல்லோருடைய கவனமும் அணிச்சலில் குவிந்தது. அப்புச்சாமி (எ) தேவநந்தன், ரூபிகா, அனிகா என எழுதப்பட்டு, ஹேப்பி வெட்டிங் ஆன்வர்சரி என வண்ணக் கோலமிட்டிருந்தனர். அப்புவும் ரூபிகாவும் ஒன்றாய் கத்தியைப் பிடித்து அதை வெட்ட, அவள் கணவனுக்கு ஊட்டிவிட்டாள்.
அவன் சட்டென
விழிகளை துழாவி மகளை, “அனி... வா!” என அழைக்க, ரூபிகா காரமாய் அவனைப் பார்த்தாள்.