- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 22 
வேலை முடிந்து சோர்வாய் வீட்டிற்குள்ளே நுழைந்தாள் ஆதிரை. அவளுக்கு அன்றைக்கு மாதவிடாய் தொடங்கி இருக்க, வயிறு வேறு கொஞ்சம் வலித்தது.
அபி அறைக்குள் நுழைந்து உடைமாற்றி வந்ததும் இவள் அவனுக்கென வாங்கி வைத்திருந்த மாலை நேர சிற்றுண்டியைக் கொடுத்து வீட்டுப் பாடம் செய்ய பணித்துவிட்டு கட்டிலில் சுருண்டு படுத்தாள். இந்த மாதம் உதிரப் போக்கு அதிகமாய் இருக்கவும், உடலில் சோர்வு அப்பிக் கொண்டது.
செவ்வாய் கிழமை தேவாவிடம் பேசியதோடு சரி. அதற்குப் பின்னே இருவரும் முகம் கொடுத்து கூடப் பேசவில்லை. தேவா இவளைக் கண்டு கொள்ளாது தன் வேலையை மட்டும் கவனிக்கலானான். ஆதிரைக்கு இவன் இப்படியே இருந்தால் நலம் என்று தோன்றிற்று. ஆனால் கண்டிப்பாக தேவா தன் விஷயத்தை விட்டுவிடவில்லை என உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருந்தது.
இன்னும் ஒரு வாய்ப்புதான் அவனுக்கு கொடுக்கலாம் என எண்ணி இருந்தாள். இதற்கு மேலும் அவன் தொல்லை செய்தால் மேற்கொண்டு யோசிப்பதற்கு எதுவும் இல்லை, வேலையை விட்டுவிடலாம் என்ற ஸ்திரமான முடிவொன்றை எடுத்தப் போதும் மனம் லேசாகிப் போன உணர்வு.
அவனையும் கஷ்டப்படுத்தி அவளும் மனநிலையைக் கெடுத்துக்கொண்டு இந்த வேலையில் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லையே. இதைவிட வேறு நல்ல வேலையைப் பார்க்க வேண்டும். முடிந்தால் ஊரைக் கூட மாற்றலாம். வேண்டாம், வேண்டாம். இத்தனை வருடங்கள் இங்கிருந்ததில் அவளுக்கென்றால் உதவ ருக்கு பாட்டி, அவருடைய மகன்கள், எப்போதும் பலசரக்கு வாங்கும் மளிகை கடைக்காரர், தெரு முனையில் பரிட்சயமான மருத்துவர் என அத்தனைப் பேரையும் அவன் ஒருத்தனுக்காக தூக்கியெறிந்துவிட்டு செல்ல முடியாது. அது மட்டும் அன்றி இங்கிருக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடைக்குமா என்பது பெரிய சந்தேகம்தான். அதனாலே இடத்தை மாற்றும் எண்ணத்தை கிடப்பிலிட்டாள்.
“ம்மா... ஐ யம் அங்க்ரி!” அபினவ் உதட்டைப் பிதுக்கி வயிற்றைத் தடவ, இவளுக்கு உதட்டில் சரிப்பு மலர்ந்தது.
“டென் மினிட்ஸ் அபி மா, அம்மா குக் பண்றேன். என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே முடியைக் கஷ்டப்பட்டு கொண்டையிட்டாள். தோள்பட்டை வரை மட்டுமே இருந்த முடி இப்போது கொஞ்சமே கொஞ்சம் வளர்ந்து முதுகைத் தொட்டிருக்க, அதை வெட்டத் தோன்றாது அப்படியே விட்டுவிட்டாள்.
“ஹம்ம்... மேகி சாப்பிடலாமா மா? லாஸ்ட் மந்த் சாப்ட்டது. ஈஸியா குக் பண்ணலாம் இல்ல. நீங்க டயர்டா இருக்கீங்க!” அவன் கூறியதும் இவளது புருவம் உயர்ந்தது.
“பார்றா... நான் டயர்டா இருக்கது என் மகனுக்கு தெரியுதா?” என அவன் தலையைக் கலைத்தாள்.
“யெஸ் மா... இல்லைன்னா நீங்க குக் பண்ணி இருப்பீங்களே!” அவன் பெரிய மனித தோரணையில் கூற, இவள் அவனை அன்பாய் பார்த்து கன்னத்தைக் கிள்ளி உதட்டில் ஒட்டிக் கொண்டவள், கேப்பையில் செய்த நூடுல்ஸ் வாங்கி வைத்திருந்தாள். பத்து நிமிடத்தில் முட்டை கலந்து அதை தயார் செய்து எடுத்து வர, இருவரும் உண்டனர்.
ஆதிரையின் அலைபேசி இசைக்க, அப்புதான் அழைத்திருந்தான். என்னவென்று யோசனையுடன் அழைப்பை ஏற்றாள்.
“ஆதி, என்ன பண்ற? அபி என்ன பண்றான்?” அவன் வினவ,
“இப்போதான் ரெண்டு பேரும் டின்னர் முடிச்சோம் அப்பு. சாரி அன்னைக்கு உன் வொய்ப் பத்தி கேட்கவே மறந்துட்டேன். அவங்க எப்படி இருக்காங்க?” என விசாரித்தாள்.
“அவ எங்கம்மா கவனிப்புல சூப்பரா இருக்கா. நான் கால் பண்ணதே சண்டே வீட்ல என்னோட ஆன்னிவர்சரி பங்க்ஷனுக்கு ரிமைண்ட் பண்ணதான். கண்டிப்பா நீயும் ப்ரோவும் வரணும்!” என்றான் ஆர்வமாய். ஆதிரைக்கு சலிப்பானது.
“நான் வரேன் டா. ஆனால், அவருக்கு வேலை இருக்கும். வரமாட்டாரு அவரு!” அவள் கூற,
“ப்ம்ச்... நீயா சொல்லாத ஆதி. இப்போதான் ஃபைவ் மினிட்ஸ்க்கு முன்னாடி பேசுனேன். அவர் வரேன்னு சொல்லிட்டாரு. ட்ரைவிங்க்ல இருந்தாரு. இன்னும் வீட்டுக்கு வரலையா?” என யோசனையாக கேட்டான்.
“ஆங்... அது இனிமேதான் வருவாரு டா!” என்றவள், “உன்கிட்ட வரேன்னு சொல்லிட்டு நான் கூப்ட்டா வேலை இருக்கு, வர முடியாதுன்னு சொல்வாரு டா!” என்றாள் சமாளிப்பாக.
“நீயே அவரை வர வேணாம்னு சொல்லிடுவ போல ஆதி!” அவன் கடுப்புடன் கூறவும், மேற்கொண்டு அவனிடம் பேசி புரிய வைக்க முடியாது என உணர்ந்தவள், “சரி, நானும் அவரும் வந்துடுறோம்!” ஆதிரை அப்போதைக்கு அவனிடம் பொய்யுரைத்து சமாளித்தாள்.
“தட்ஸ் க்ரேட். ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் முன்னாடி வந்துடுங்க. ஃபேமிலி பங்க்சன்தான். வேற யாரையும் இன்வைட் பண்ணலை. உங்களை மட்டும்தான் கூப்ட்டிருக்கேன். சோ, மறக்காம வந்துடு ஆதி!” என பலமுறை அவன் வற்புறுத்த, ஆதிரை கைபேசியால் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
அன்றைக்கு அப்படி ஒரு பொய்யைக் கூறாது விட்டிருந்தால், இன்றைக்கு இத்தனை துன்பட நேரிடாது என மனதில் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாள். மறுநாள் தேவாவிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கையிலே எரிச்சலாய் வந்தது. இப்போதுதான் அவன் தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறான். அப்படி இருக்கையில் இவளாக அவனிடம் பேசச் சென்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடுமோ என அச்சம் எழுந்தது.
மறுநாள் ஆதிரை வேலை முடிந்ததும் லாக் புத்தகத்தோடு தேவா அறைக்குள் நுழைந்தாள். இரண்டு நாட்களாகவே அவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை தர்ஷினி மூலம்தான் நடந்தது. அவள்தான் இருவருக்கும் தூதுவராக இருக்கிறாள்.
நுழைந்தது அவள்தான் எனத் தெரிந்தும் தேவா நிமிரவில்லை. புத்தகத்தை வைத்துவிட்டு கையெழுத்திட்டு விட்டாயா? கிளம்பு என்பதைப் போல மடிக்கணினியில் தலையைப் புதைத்திருந்தான்.
இவள் சில நொடிகள் நகராது அங்கே நிற்க, “வாட் டூ யூ வாண்ட் மிஸ் ஆதிரையாழ்? லாக் புக்கை சப்மிட் பண்ணிட்டா யூ கேன் கோ!” என்றான் அழுத்தமாய்.
“உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும் சார்!” அவள் கூற்றில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.
“வாட்?” எரிச்சலாய்க் கேட்டான். ஏதோ முக்கியமான வேலையில் இருந்திருப்பான் போல. அது தடைபட்டதில் முகம் சுளித்தான்.
“நீங்க சண்டே அப்பு வீட்டுக்கு வரக் கூடாது!” அவள் அழுத்திக் கூற, அவன் நெற்றி சுருங்கியது.
“லுக் ஆதிரை, நான் எங்க போகணும், போக கூடாதுன்றதை நீங்க முடிவு பண்ண கூடாது!” அவன் குரலில் கண்டிப்பு இருந்தது.
“நீங்க எங்க போகணும்ன்றது உங்களோட விஷ் சார். உங்க ப்ரைவசில நான் இன்வால்வ் ஆக மாட்டேன். இதுல என்னோட விஷயமும் சம்பந்தப்பட்டிருக்கு. சோ, என்னால அமைதியா இருக்க முடியாது. நீங்க வர வேணாம்னுதான் சொல்றேன். இன்பேக்ட் உங்களுக்குப் பெர்சனல் வேலை இருக்கும். எதுக்கு தேவையில்லாத கஷ்டம்?” அவள் குரல் எப்போதும் போல இயல்பாய் வந்து விழுந்தது.
அவளை உறுத்து விழித்தவன் மேஜையிலிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அப்புவிற்கு அழைத்தான். ஆதிரை அவன் என்ன செய்கிறான் எனப் புரியாது பார்த்து நின்றாள்.
“ஹாய் ப்ரோ... வாட்ஸ் ஆப்?” அப்புவின் குரல் கேட்டதும் திடுக்கிட்ட ஆதிரை தேவாவை முறைத்தாள்.
“ஹாய் அப்பு... ஐ யம் குட். ஆக்சுவலி சண்டே எனக்கு ஒரு இம்பார்டெண்ட் வொர்க் வந்துடுச்சு. அதான் என்னால பங்க்சனுக்கு வர முடியாது!” தேவா நெற்றியைத் தேய்த்தபடி கூறி முடித்தான்.
“ஆதிதான் இப்படி சொல்ல சொன்னாளா?” அவன் சரியாய் ஊகித்து கேட்டதும் ஆதிரை அதிர்ந்தாள்.
அவள் முகத்தைக் கேலியாகப் பார்த்த தேவா, “அதெல்லாம் இல்லை அப்பு. நிஜமா எனக்கு வொர்க் இருக்கு...” இவன் குரல் அவனை சமாதானம் செய்ய விழைந்தது.
“அதெப்படி ப்ரோ நேத்து கேட்கும் போது இல்லாத வொர்க் இன்னைக்கு வந்துடுச்சு. எனக்குத் தெரியும். ஆதிதான் எதாவது சொல்லி இருப்பா. நீங்க உங்க பொண்டாட்டி பேச்சை மீற மாட்டீங்க. அப்படித்தானே?” அவன் அடமாய்க் கேட்டான்.
“இல்ல ப்ரோ... அவளுக்கும் இதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. திடீர்னு ஒரு ஆர்டர். நான் இருந்தாக வேண்டிய சிட்சுவேஷன். என்னைப் பார்த்தா பொண்டாட்டி பேச்சைக் கேட்டுத் தலையாட்ற மாதிரியா தெரியுது?” கேலியாய் அவனை சமாளித்துவிட முயன்றான்.
“அட நீங்க வேற ப்ரோ... இந்த ஆதியைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. அவ புடிச்ச முயலுக்கு மூனு கால்னு முயலோட ஒரு காலை உடைக்க கூட தயங்க மாட்டா. அதனால அவதான் உங்களை இப்படி பேச வச்சு இருக்கணும். ஐ க்நோ, அவ இப்போ மட்டும் இல்ல. நாங்க படிக்கும் போதே அப்படித்தான். சரியான ராங்கி!” அவன் வேறு என்ன கூறி இருப்பானோ, அதற்குள் படக்கென மேஜை மீதிருந்த அலைபேசியை எடுத்த ஆதிரை, “ப்ம்ச்... உனக்கென்ன நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு வரணும் அவ்வளோ தானே?” என எரிச்சலுடன் கேட்டாள்.
“ஆமா... பட் இப்போ நீ எரிச்சலாக என்ன இருக்கு? ஒரு பங்க்சனுக்கு உன்னையும் உன் ஹஸ்பண்டையும் இன்வைட் பண்ணி இருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதுல என்ன பிரச்னை? சம்திங் ராங்!” அவன் கூற்றில் ஆதிரை அதிர்ந்தது ஒரு நொடிதான்.
“ச்சு... அதெல்லாம் ஒரு ராங்கும் இல்ல, நாளைக்கு நானும் அவரும் கரெக்ட் டைம்க்கு வந்துடுவோம் டா!” படபடவென உரைத்தாள். மனதிற்குள் பயம் நொடியில் விரவியது.
“பார்ப்போம் நாளைக்கு நீ அவரோட வந்தாதான் நான் நம்புவேன். இல்லைன்னா வேற ஏதோ ப்ராப்ளம் இருக்கு!” அவன் கூற்றில் ஆதிரை பதறினாள். அப்பு தன்னைப் பற்றி தோண்டி துருவினால் அபியைப் பற்றிய உண்மை தெரிந்துவிடுமே என பயபந்து சுழன்றது.
“நீ ஃபோனை வை...நானும் அவரும் வருவோம்!” அழுத்தி அவனுக்குப் புரியும்படி கூறி அழைப்பைத் துண்டித்தாள். தேவா அவளுடைய பேச்சைத்தான் கேட்டுக் கொண்டிருந்தான்.
“சார், நாளைக்குப் பங்க்ஷனுக்கு போய்ட்டு வந்துடலாம் சார்!” அவனைப் பார்த்து தயங்கியபடியே அலைபேசியை மேஜைமீது வைத்தாள்.
“ஹம்ம்... சாரி ஆதிரை, நான் என் டிசிஷனை சேஞ்ச் பண்ணிட்டேன். எனக்கு அங்க வர விருப்பம் இல்லை. ஐ ஹேவ் சம் கமிட்மெண்ட்ஸ் ஆன் சண்டே!” தயங்காது பொய்யுரைத்தவனைப் பார்த்துக் கடுப்பானவள்,
“வேணும்னே பண்றீங்களா சார்?” என கோபத்தில் மெலிதாய் குரலை உயர்த்தினாள்.
“லுக் ஆதிரை, இங்க நீங்கதான் என்கிட்டே ஹெல்ப் கேட்குறீங்க. சோ, ரெடியுஸ் யுவர் வாய்ஸ். ஒன் மோர் திங்க், வேணும்னே பண்ண உங்களுக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு? ஐ யம் யுவர் எம்ப்ளாயர். நீங்க என்கிட்ட வொர்க் பண்றீங்க. தட்ஸ் இட் ரைட்?” எனக் புருவத்தை உயர்த்தியவன் அசட்டையாக கூற, ஆதிரை மூச்சை இழுத்துவிட்டு அவன் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“யெஸ் அப்கோர்ஸ் சார், நான் பண்ண முதலும் கடைசியுமான தப்பு அன்னைக்கு அப்பு உங்களை என் ஹஸ்பண்ட்னு சொல்லும் போது அமைதியா இருந்தது! அதனால்தான் நீங்க இப்போ என்னை அலட்சியமா பேசுனாலும், எதிர்த்துப் பேச முடியாம இருக்கேன். சரி சொல்லுங்க, நான் என்ன பண்ணா நாளைக்கு பங்க்சனுக்கு வருவீங்க?” அமைதியாய் கேட்டாலும் குரலில் வருத்தமும் ஆதங்கமும் சரி விகிதத்தில் இருந்தது.
“சாரி ஆதிரை... என்கிட்ட எந்த டிமாண்டும் இல்லை. நான் எதாவது சொல்லப் போய் அப்புறம் நீங்க அதை ப்ளாக் மெயில்னு சொல்லிடுவீங்க. எனக்கு அதுல சுத்தமா விருப்பம் இல்லை. என்னால நாளைக்கு வர முடியாது. சண்டே ஒரு நாள்தான் நானே ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்றேன். அதையும் உங்களுக்காக தியாகம் பண்ண முடியாது!” அவள் முகம் பார்க்காது பார்வையை சுழலவிட்டபடி உரைத்தவனை ஆதிரை அமைதியாகப் பார்த்தாள்.
“அப்போ நாளைக்கு வர மாட்டீங்க?” அவன் முகத்தை அழுத்தமாகப் பார்த்தாள்.
“நிச்சயமா வர மாட்டேன் ஆதிரை. அங்க வர்றதுக்கு நான் வீட்ல ரெஸ்டாவது எடுப்பேன். லீவே இல்லாம உழைக்கறதோட கஷ்டம் உங்களுக்கும் தெரியும்தானே? அதுவும் இல்லாம இன்னைக்கு உங்களுக்காகன்னு நான் நடிக்க ஒத்துகிட்டா அப்புறம் நாளைக்கு என் கல்யாணத்துல எதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது?”
“நீங்களே சொல்லுங்க. கல்யாணமே ஆகாத என்னை ஒரு ஏழெட்டு வயசு பையனுக்கு அப்பாவாக்கிட்டீங்க. இதனால என் பெர்சனல் லைஃப் பாதிக்கப்படுறதை நான் விரும்பலை. எல்லாத்துக்கும் மேல எத்தனை நாள் நான் உங்களுக்கு ஹஸ்பண்டா நடிக்க முடியும். அன்னைக்கு நீங்க பொய் சொன்னப்பவே நாலு டோஸ் கொடுத்திருந்தா, இவ்வளோ தூரம் வந்திருக்காது. அப்போ நான் நல்ல மைண்ட் செட்ல இருந்துட்டேன். இல்லைன்னா இவ்வளோ கஷ்டம் ரெண்டு பேருக்குமே இல்லை!” எனக் கேலியாய் முடித்தவனை உணர்வுகளற்றுப் பார்த்தவள்,
“சாரி சார், யூ ஆர் ரைட். அன்னைக்கே நீங்க என் புத்திக்கு உறைக்கிற மாதிரி சொல்லி இருக்கலாம். என் மேலதான் தப்பு. உங்களோட பெர்சனல் லைஃப் என்னால ஸ்பாயிலாக வேணாம். சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க!” என்று உரைத்தவள் விரைந்து சென்று கதவில் கையை வைத்தாள்.
“ஆதி!” தேவா அவளை சத்தமாய் அழைக்க, ஆதிரை திரும்பவில்லை. ஆனால் அவளது நடை நிதானப்பட்டது.
“ஹம்ம்... நாளைக்கு நான் உன்கூட வரணும்னா, கம் அண்ட் சிட்!” அழுத்தமாய் அவன் குரல் செவியில் மோத, ஆதிரை அவனைக் கீழ் கண்ணால் முறைத்தாள்.
“ஓகே... வேணாம்னா யூ கேன் கோ அவுட்!” அசட்டையாய்த் தோளைக் குலுக்கியவனைப் பார்த்து இவளுக்கு கோபம் கட்டுங்காமல் பொங்கியது. ஆனாலும் அவளுக்கு அவன் உதவி தேவையாகிற்றே. அப்படி இல்லையென்றால் அப்பு அவளைத் துளைத்தெடுத்து விடுவான். வேறு வழியற்று பல்லைக் கடித்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.
“தண்ணியைக் குடிச்சு முதல்ல ரிலாக்ஸாகு ஆதி!” தான் முன்னே நீண்ட குவளையை அவள் வாங்கவில்லை.
“குடிக்கணும்!” தேவா அழுத்தமாய்க் கூற, அவனை முறைத்தவாறே கடகடவென அதைப் பருகி முடித்திருந்தாள்.
“ஹம்ம்... நீ ஓகே தானே ஆதி?” எனக் கேட்டவனிடம் பொறுமையை இழுத்துப் பிடித்து தலையை அசைத்தாள்.
“ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஐ யம் சாரி ஆதிரை. நான் உன்னை கோபப்பட வைக்கணும்னோ இல்லை கெஞ்ச வைக்க, அவமானப்படுத்த அப்படி பேசலை. என்னோட சிட்சுவேஷனை உனக்குப் புரிய வைக்க ட்ரை பண்ணேன்.”
“யூ க்நோ மை பிசி ஷெட்யூல். என் ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு எவ்வளோ இம்பார்டெண்ட்னு உனக்குப் புரிய வச்சேன். ஐ லவ் மை பேமிலி. நான் வர முடியாதுன்னு ஜென்யூனாதானே சொன்னேன். பட் நீ கோபப்படற. நான் என்ன செய்ய? நீயே சொல்லு!” எந்த விதத்திலும் முகத்தின் பாவனையை மாற்றாது வெகு தீவிரக் குரலில் தன்னுடைய வார்த்தைகளை வைத்தே தன்னை தாக்கியவனை ஆதிரை கடுப்புடன் நோக்கினாள்.
“ஆதி, நீ இப்படியே என்னை கோபமா பார்த்தா நான் என்ன பண்றது? நோ மீன்ஸ் நோ தானே? எனக்கு விருப்பம் இல்லைதான். பட், உனக்காக நான் இதை செய்றேன். இல்லைன்னா அப்புவுக்கு உண்மை தெரிய வாய்ப்பு இருக்கு. அதனால அபினவ் உன்கிட்ட இருந்து பிரியலாம். அபினவ் உனக்கு முக்கியம் தானே?” தாடையைத் தடவி பாவனையாய்க் கேட்டவனை வெட்டவா குத்தவா என மனம் கேள்வி கேட்க, முயன்று அமைதியாய் இருந்தாள்.
“ஹம்ம்... முக்கியமா? இல்லையா?” ஒவ்வொரு வார்த்தையாய்ப் பிரித்துக் கேட்டான்.
“ரொம்ப முக்கியம் சார். இல்லைன்னா உங்ககிட்டே இப்படி பொறுமையா உட்காரணும்னு என்ன அவசியம்?” என்ன முயன்றும் மெல்லிய எரிச்சல் குரலில் படர்ந்தது.
“ஏன் ஆதிரை இவ்வளோ கோபம். ஹம்ம்... நான் ஒரு நிமிஷ ஆட்ல உன்னை நடிக்க சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டுப் போய்ட்ட. பட், நான் இப்போ நிஜத்துல உனக்கு ஹஸ்பண்டா நடிக்க ஓகே சொல்லி இருக்கேன். என்னோட ப்ராட் மைண்ட்க்கு நீ தேங்க்ஸ் சொல்லணும். இப்படி எரிஞ்சு விழக் கூடாது. எனக்கு அது பிடிக்கலை!” சிரித்துக் கொண்டே கூறினாலும் அவளைக் குத்தின வார்த்தைகள்.
“நீங்க செய்யப் போற ஹெல்ப் ரொம்ப பெருசு சார். தேங்க் யூ சோ மச் சார்!” செயற்கையாய் புன்னகைக்க முயன்ற உதடுகள் சதி செய்தன.
“எனக்கு இந்த தேங்க்ஸ் பத்தாதே ஆதி!” அவன் கூற்றில் ஆதிரை நெற்றி சுருங்கியது.
“என்ன டிமாண்ட் சார்?” அவள் நேரடியாக கேட்டாள்.
“ஹம்ம்... ரொம்ப பெருசா எல்லாம் வேணாம் ஆதி. ஜஸ்ட் உன்னோட நைன்டி சிக்ஸ் ஹவர்ஸ் எனக்கு வேணும். ஐ நீட் யுவர் ஃபோர் டேய்ஸ். வரப்போற நாலு சண்டே நீயும் அபியும் என்னோட அவுட்டிங் வரணும்!” அவள் முகம் பார்த்து தெளிவாய் உரைத்தான். ஆதிரையின் உதடுகளில் கேலி புன்னகை ஏறின.
“என் வாழ்க்கைலயே இந்த மாதிரி ஒரு அவுட்டிங் நான் கேள்விபட்டதே இல்லை சார்!” நக்கலாக கூறினாள்.
“யெஸ்... எனக்கும் இது புது எக்ஸ்பீரியன்ஸாதான் இருக்கப் போகுது. டீல் அக்செப்டடா?” அவன் உதட்டின் ஓரம் புன்னகை துளிர்த்ததோ என ஐயம் கொள்ளும்படி அது தோய்ந்து போயிருந்தது.
“ஷ்யூர்... நான் அக்செப்ட் பண்றேன் சார்!” அவள் தளர்வாய் சாய்ந்து அமர்ந்தாள்.
“வாட், எங்க போறோம், எப்ப போறோம்... எதுவுமே கேட்காம டீல் அக்செப்ட் பண்ற ஆதி? என் மேல அவ்வளோ நம்பிக்கையா?” கொஞ்சம் ஆச்சர்யமாய்க் கேட்டான். அவள் புன்னகைத்தாள்.
“அப்படியெல்லாம் நீங்க தப்பா பிஹேவ் பண்ற ஆள் இல்லை சார். உங்க இடத்துல வேற யாரும் இருந்தா யோசிச்சு இருப்பேன். பட் நீங்கன்னதும் ஓகே சொன்னேன்!” அவள் கூற்றில் அடக்கி அடக்கிப் பார்த்தும் அகம் வெளிப்பட்டு விட்டதில் உதடுகளில் புன்னகை ஜனித்தது.
“ஹம்ம்... இட்ஸ் சவுண்ட்ஸ் குட்!” என்றான் மலர்ந்த முகத்துடன்.
கொஞ்சம் இருக்கையை முன்னே தள்ளி அமர்ந்தவள், “ஆனாலும் என் மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை சார். நாலு நாள் அவுட்டிங் போனா உங்களுக்கு ஓகே சொல்லிடுவேன்னு நினைக்குறீங்களா?” கேலியாய்க் கேட்டாள்.
உதட்டோரம் தாராளமாய் அரும்பிய புன்னகையுடன் கையிலிருந்த கடிகாரத்தை வருடியவன், “நம்பிக்கை தானேமா எல்லாம். பதினேழாவது தடவைதான் கஜினி முகமதே ஜெய்ச்சாராம். இந்த தேவா எல்லாம் எம்மாத்திரம். பட், நான் அவ்வளோ ஈஸியா என் தோல்வியை ஒத்துக்க மாட்டேன். சோ ரிஸ்க் எடுக்குறதுல தப்பில்லை!” என்றான் இலகுவான குரலில்.
“பட், நான் அவ்வளோ வொர்த் இல்லை சார். நானே சொல்றேன், நீங்க காதுல வாங்கிக்க மாட்றீங்க. அப்புறம் பின்னாடி வருத்தப்படக் கூடாது சார்!” அவள் சின்ன புன்னகையுடன் கூறினாள்.
“எனாஃப் ஆதி... அதை நான் டிசைட் பண்ணிக்கிறேன். நாளைக்கு ஈவ்னிங் ஐஞ்சு மணிக்கு ரெடியா இரு. நானே பிக்கப் பண்ணிக்கிறேன்!” மெல்லிய அதட்டலுடன் கூறினான்.
ஆதிரை மறுத்து ஏதோ கூற வர, “ஸ்டாப் ஆதி... நான் ஆட்டோல வரேன், கேப்ல வரேன்ற கதையே வேணாம். ஹஸ்பண்ட் அண்ட் வொஃய்ப் ஒரே வீட்ல இருந்து தனித்தனியா போனா நல்லா இருக்காது. சோ, நானே பிக்கப் பண்ணி ட்ராப் பண்றேன். நீ இப்போ கிளம்பு...” கரத்தை கதவை நோக்கி நீட்டியவனை மென்மையாய் முறைத்துவிட்டு எழுந்தாள். இவனுடன் பேச வந்து நேரமாகிவிட்டது. மகன் காத்திருப்பான் என அவள் மனம் எச்சரிக்க, வெளியே செல்ல முனைந்தாள்.
“ஆதி ஒன் மினிட்!” மீண்டும் அவன் அழைக்க, ‘என்னய்யா வேணும்?’ எனப் பார்வையோடு திரும்பினாள்.
சில நொடிகள் தயங்கியவன், தலையைக் கோதி சரிதெய்தபடியே, “அன்னைக்கு கோவில்ல கட்டி இருந்த மெரூன் கலர் சேரியை நாளைக்கும் கட்டீட்டு வா!” மென்குரலில் அவள் முகம் பார்க்காது உரைத்தான்.
ஆதிரை வேறு ஏதோ கூறப் போகிறான் என நினைத்துக் கேட்டவள் அவன் பேச்சில் ஏகமாய் முறைத்தாள். “இதெல்லாம் அந்த டிமாண்ட்ல சேராதே சார்?” நக்கலாக கேட்டாள்.
“ஹம்ம்... இது கொசுறு மா!” அவன் குறுஞ்சிரிப்புடன் கூற, “கொசுற கொசு அடிக்கிற மாதிரி அடிச்சுடுவேன் சார்!” என்றுவிட்டு வெளியேறியவளை தேவா முறைத்துப் பார்த்தான். ஆனாலும் உதட்டோரம் சிரிப்பு வழிந்தது.
‘ஷ்... இவளை
ஓகே பண்ணி கல்யாணம் பண்ணா ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம்தான் பண்ணணும் போல!’ முணுமுணுத்தவனின் முகம் இரண்டு நாட்களுக்குப் பின்னே மலர்ந்து செழித்தது.
தொடரும்...