- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 21 
ஐந்து நிமிடங்களாக குனிந்து கட்டிலின் அடியிலிருந்த தூசியை துடைத்து நிமிர்ந்த ஆதிரை எழுந்து இடுப்பை இருபுறமும் அசைத்தாள். மாதத்திற்கு ஒரு முறையாவது வீட்டைத் துடைக்க வேண்டும் என்று எண்ணினாலும் வாரத்தில் கிடைக்கும் ஒருநாள் விடுப்பு அவளுக்கே போதவில்லை. இதில் எங்கே சுத்தம் செய்வது என மனம் அலுத்துக் கொள்ளும்.
இன்றைக்கு வேலைக்குச் செல்லும் மனநிலை அற்றுப் போக, விடுப்பு கேட்டு தேவாவிற்கு வேண்டா வெறுப்பாக ஒரு மின்னஞ்சலைத் தட்டவிட்டவள், வீடு முழுவதையும் சுத்தம் செய்து துடைத்து முடித்தாள். முதுகும் காலும் வலித்தது. ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடு என்றாலும் சுத்தம் செய்தது ஆதிரையைச் சோர்ந்து போகச் செய்தது.
துடைக்கும் குச்சியை வாசலுக்கு அருகே இருந்த சுவரில் சாய்த்துவிட்டு காலை நன்றாய் கழுவி கால்மிதியடியில் துடைத்துவிட்டு உள்ளே நுழைந்து அறை மற்றும் கூடத்திலிருந்த மின்விசிறியை சுழலவிட்டாள்.
இத்தோடு பத்துமுறை அலைபேசி அழைத்து ஓய்ந்து போனது. இப்போது மீண்டும் அது ஒலி எழுப்ப, திரையைப் பார்க்காமலே அது தேவாவாகத்தான் இருக்க கூடுமென அனுமானித்தவள், பெருமூச்சுடன் அதை எடுத்துக் காதில் பொருத்தினாள்.
“ஃபோனை எடுக்க இவ்வளோ நேரமா ஆதி?” அவன் எரிச்சலாய்க் கேட்க,
“இன்னைக்கு நான் லீவ் சார். எனக்குன்னு பெர்சனல் வேலை இருக்கு. நீங்க கால் பண்ணுனதும் ஓடி வந்து எடுக்க நான் சும்மா இல்லை சார். லீவ் நாள்ல நீங்க என்னை டிஸ்டர்ப் பண்றதே தப்பு. வொர்க்கிங் டேவா இருந்தா யூ கேன் ஆஸ்க் திஸ் கொஸ்டீன்!” அலட்டிக்காது பதிலளித்தவளை நேரிலிருந்தால் தேவா முறைத்து தள்ளியிருப்பான்.
“வித்தவுட் ஆஸ்கிங் மை பெர்மிஷன், ஏன் லீவ் போட்ட ஆதிரை?” அவன் கோபமாய் கேட்டான்.
“முதல்ல உங்க மெயிலை செக் பண்ணுங்க சார். மார்னிங்கே நான் சிக் லீவ் வேணும்னு மெயில் ரெய்ஸ் பண்ணி இருக்கேன். எதையும் பார்க்காம வந்து என்கிட்ட கோபப்பட்றதுல நோ யூஸ் சார்!” கேலி மிகுந்த குரல் அவனது கோபத்திற்கு தூபம் போட, சில பல நிமிடங்கள் மூச்சை வெளியேற்றித் தன்னை சமன் செய்தவன்,
“ஏன், என்னாச்சு ஆதி. நேத்துப் பார்த்தப்போ நல்லாதானே இருந்த?” அவன் குரலில் கோபம் மட்டுப்பட்டிருக்க, அவளுக்கு என்னவானது என மெல்லிய தவிப்பு குரலில் இழையோடியது. தன்னுடைய செய்கைதான் காரணமோ என மனம் தன்னையே நிந்தித்தது.
“ஏன், என் உடம்புக்கு என்னென்னு உங்ககிட்டே சொல்லியே ஆகணுமா சார்? பொண்ணுங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கும். அதெல்லாம் உங்க கிட்டே சொல்ல அவசியம் இல்ல. அண்ட் ஒன் மோர் திங்க் இதே மாதிரிதான் மத்த ஸ்டாஃப் லீவ் போட்டா கால் பண்ணி கேட்பீங்களா சார்?” ஆதிரை கடுப்போடு கேட்டாள்.
“ஃபர்ஸ்ட் சாரி ஆதிரை, நான் என்னால தான் நீ வரலைன்னு நினைச்சு கேட்டுட்டேன்!” என்றவன் சில நொடிகள் நிறுத்தி, “உன்னோட கேள்விக்கு உனக்கே பதில் தெரியும். ஆதிரையும் மத்தவங்களும் ஒன்னு இல்ல!” என்றான் அழுத்தமாக. அவன் பதிலில் ஆதிரை முகத்தில் எரிச்சல் படர்ந்தது.
“லீவ் நாள்ல கூட கால் பண்ணி தொல்லைப் பண்ணாதீங்க சார். நீங்க சொல்ற கதையைக் கேட்கத்தான் நான் லீவ் போட்டேனா? ஐ ஹேவ் அ லாட் ஆஃப் பெர்சனல் வொர்க்ஸ். எதுவா இருந்தாலும் நாளைக்கு நேர்ல வந்ததும் பேசுங்க. டோன்ட் டிஸ்டர்ப் மை ப்ரைவசி!” அவன் பதிலுரைக்கும் முன்னே முகத்தில் அடித்தாற் போல பேசி ஆதிரை அழைப்பைத் துண்டிக்க செல்ல, “என் மேல இருக்க கோபத்தை சாப்பாட்டுல காட்ட வேணாம் ஆதி!” என்றவன் குரல் செவியில் மோத, ஒரு நொடி கண்களை மூடித் திறந்தவள் கோபத்தோடு அலைபேசியை மெத்தையில் எறிந்தாள்.
தேவா கைப்பேசியால் தன் நெற்றியிலே அடித்துக் கொண்டான். தன்னைக் கண்டாலே பயமும் மரியாதையும் தவிர வேறொன்றும் பேசாத ஆதிரை இன்றைக்கு இப்படி நடந்து கொள்ள அவனே வாய்ப்பளித்துவிட்டான். தேவாவிற்கு யாரும் தன்னை உதாசீனம் செய்வது அறவே பிடிக்காது. ஆனால் ஆதிரை விஷயத்தில் கோபம் வரவில்லை. மாற்றாக அவளை எப்படி சமாதானம் செய்யப் போகிறோம் என அயர்ந்து போனான்.
ஆதிரை மனநிலை சரியில்லை. அதனால்தான் விடுப்பு எடுத்தாள் எனப் புரிந்த போதும் அவளிடம் பேசினால் நன்றாய் இருக்குமென மனத்தின் குரலுக்கு செவிசாய்த்து அழைத்து அசிங்கப்பட்டிருந்தான். உண்மையிலே அவனது தன்மானம், தன்முனைப்பு, தன்னகங்காரம் எல்லாவற்றையும் இந்தப் பெண் அடித்து நொறுக்கியிருந்தாள்.
போகட்டும்! மனைவியாகப் போகிறவளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க கூடாது என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். அவள் இன்றைக்கு வரவில்லை என்பதால் அவனுக்கு இரண்டு மடங்கு வேலை. அவளை மறந்துவிட்டு அலுவலில் ஆழ்ந்தான்.
ஆதிரை வேலையை முடிக்க வயிறு பசியில் காந்தியது. காலையில் எதுவுமே அவள் உண்டிருக்கவில்லை. இன்றைக்கு தாமதமாகத்தான் எழுந்தாள். அபிக்கு இரண்டு தோசையை ஊட்டிவிட்டவள், மதியத்திற்கு தயிர் சாதமும் உருளைக்கிழங்கும் செய்து அனுப்பினாள்.
சமையலறைக்குள்ளே சென்றவளுக்கு தயிர் சாப்பிட விருப்பமில்லை. பத்தே நிமிடத்தில் ரசம் வைத்தவள் வயிறு நிரம்ப உண்டு முடித்துப் பின்னர் சிறிது நேரம் உறங்கி எழுந்தாள். நேற்றைக்கு விட இன்றைக்கு மனநிலை ஓரளவிற்கு சரியாகி இருந்தது.
சுடசுட தேநீரைக் குடித்துவிட்டு அபியை அழைத்து வரப் பள்ளிக்குச் சென்றாள். அப்படியே இருவரும் கடைவரை சென்று அந்த வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தார்கள். அப்படியே ருக்குவிற்கும் வேண்டுபவனற்றை வாங்கி வந்து கொடுத்தாள்.
“ம்மா... என்னம்மா இது?” அபினவ் அரவை இயந்திரத்தை எட்டிப் பார்த்து ஆர்வத்துடன் வினவினான். அவன் உயரத்திற்கு எட்டவில்லை.
“பட்டர் எடுக்குறேன் அபி!” என்றவள் தினமும் வாங்கும் பாலை வடிகட்டி மாதத்திற்கு ஒருநாள் அதிலிருந்து வெண்ணெய் எடுப்பாள்.
“ஐ! அப்போ நைட் டின்னர் பன் பட்டர் ஜாமா மா?” அவன் துள்ளலாய் கேட்க, இவள் முறுவலுடன் தலையை அசைத்தாள்.
“ஐ லவ் யூம்மா!” இடையோடு தாயை அணைத்தான் சின்னவன். அவன் செய்கையில் ஆதிரைக்கு சிரிப்பு வந்தது. அவனுக்கு வெண்ணை வைத்து ரொட்டி சாப்பிட பிடிக்கும். ஆனால் ஆதிரை அடிக்கடி வாங்கித் தர மாட்டாள். முடிந்தளவு வீட்டிலே சமைத்துக் கொடுப்பாள்.
அவள் வெண்ணெய் எடுத்ததும், அபினவ் ரொட்டியை தட்டிலிட்டு கூடத்தில் அமர்ந்தான். இவள் வெண்ணெயும் ஜாமையும் எடுத்து வந்து அவனுக்கு அருகே அமர்ந்தாள்.
“ம்மா... ஃபர்ஸ்ட் எனக்கு, நெக்ஸட் உனக்கு!” என்றவன் ரொட்டியை எடுக்க, அதை வாங்கியவள் வெண்ணையும் ஜாமையும் தடவினாள்.
“ம்மா... இந்த கார்னர்ல ஜாம் இல்ல. அங்க இல்ல மா!” எனத் தொணதொணத்தவனை இவள் மென்மையாய் முறைக்க, சின்னவன் பற்கள் தெரியப் புன்னகைத்தான். அவன் போதும் போதும் என்றவரை ரொட்டியைக் கொடுத்தவள், தானும் உண்டு முடித்தாள்.
“ம்மா... நான் நித்தி கூட ஃபைட் பண்ணிட்டேன்!” பாலைக் குடித்து முடித்து குவளையை ஆதிரையிடம் நீட்டினான் அபி. அதை வாங்கி வைத்தவள் அவன் உதட்டுக்கு மேலே இருந்த பால் மீசையைத் துடைத்துவிட்டவாறே, “ஏன் டா... அவதான் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆச்சே?” எனக் கேட்டாள்.
“ம்ப்ச்... ஆமா மா. நானும் அவளும்தான் லஞ்ச் சாப்பிடுவோம். இன்னைக்கு அவ ப்ரமோத் கூட சாப்பிட்டுட்டா. நான் கா விட்டுட்டு வந்துட்டேன்!” என மேலும் அவன் பேசிக் கொண்டே இருக்க, இவள் ம்ம் கொட்டிக் கொண்டே பாத்திரங்களை கழுவி கவிழ்த்தினாள்.
“நெக்ஸ்ட் வீக்ல இருந்து உனக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுதுல்ல அபி. நல்லா படிக்கணும். மிஸ் கிட்டே குட் பாய்னு நேம் வாங்கணும்!” என ஆதிரைக் கூறவும், இவன் சமாளிப்பாய் தலையை அசைத்தான். அபினவ் படிப்பில் கொஞ்சம் சுமார்தான். அதற்காக அவனைத் திட்ட மாட்டாள். முடிந்தளவு படித்து மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எப்போதும் ஆதிரை அறிவுறுத்தவாள்.
“குட் நைட் மா!” ஆதிரை அறை விளக்கை அணைத்ததும் போர்வையில் சுருண்ட அபி கூறவும், இவளும் அவனுக்கு அருகே படுக்கையில் சரிந்தாள்.
காலையிலிருந்து எதையும் நினைக்க கூடாதென அனைத்து வேலையையும் இழுத்துப் போட்டு செய்தாள். இப்போது எந்த வேலையும் அற்று விழிகளை மூடினால் தேவநந்தன்தான் வந்தான். அவனிடம் எத்தனைக் கடுமையைக் காண்பித்தும், அவனது தன்முனைப்பைத் தூண்டிவிட்டும் அவன் தன்னுடைய விஷயத்தில் பின் வாங்கவில்லை என்று அவளுக்கு வருத்தமாக போயிற்று.
உண்மையில் அவனை காயப்படுத்த வேண்டும் என்பது அவளது நோக்கம் அன்று. எப்படியாவது தன் மனநிலையை அவனுக்குப் புரிய வைத்துவிடலாம் என முயற்சி செய்கிறாள். ஆனால் அவனின் அதிப்படியான உரிமை, அக்கறை இரண்டும் இவளைக் கோபப்படுத்துகின்றன. அன்பும் அரவணைப்பும் தேவைப்பட்ட காலங்களையே கடந்துவிட்டாள். இப்போது வாழ்கையைப் பற்றிய நிதர்சனம் உணர்ந்து முதிர்ந்து விட்டாள். அப்படி இருக்கையில் அவனுடைய அக்கறை இவளைக் குளிர்விக்கவில்லை. மாறாய் எரிச்சலைத் தருவித்தது.
நான் நன்றாய் இருக்கிறேன் என்ற எண்ணம் ஆதிரைக்கு எப்போதும் மனதில் உண்டு. நிம்மதியாக வாழ்கிறாள். அதுவே அவளுக்கு நிறைவாய் இருந்தது. இந்த வயதிற்கு மேல், எட்டு வயதில் ஒரு மகனை வைத்துக் கொண்டு திருமணம் என்ற சிக்கலில் சிக்கி கொள்ள அவளுக்கு விருப்பமே இல்லை. இப்போது என்றில்லை, எப்போதுமே அவளுக்கு திருமணத்தின் மீது நல்லெண்ணம் இருந்தது இல்லை. இரண்டு பேர் உடல்தேவை, மனத்தேவைக்காக சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்று வேறு கதியற்று காலத்தை ஓட்டுவதில் அவளுக்கு உடன்பாடில்லை.
திருமணம் என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என சிந்தித்திருக்கிறாள். அப்படிப்பட்டவளிடம், என்னை மணம் முடித்துக் கொள் என்று வந்து நிற்பவனிடம் என்னவென்று எதிர்வினையாற்ற என பெருமூச்சு எழுந்தது.
நாளை எப்படியும் அவன் முகத்தில்தான் விழிக்க வேண்டும் என நினைத்ததும் கசந்தது. தேவநந்தன் என்னப் பேசினாலும் அதற்கு எதிர்வினையாற்றக் கூடாது என நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள்.
மறுநாள் தேவா உழவர் துணைக்குள் நுழைய, ஆதிரை ஆய்வு கூடத்தில் இருந்தாள். அந்த அறையைக் கடந்து சென்றவனின் பார்வை அவளை உரசிச் சென்றது. வெள்ளை அங்கியுடன் பாலை சோதனை செய்தவளுக்கு அவன் வருகையை அறிய முடியவில்லை. சில பல நிமிடங்கள் கழிய, அலைபேசி இசைத்தது. அவன்தான் அழைத்தான்.
“தர்ஷினி, காலை அட்டென்ட் பண்ணி என்னென்னு கேளு!” என்ற ஆதிரை வேலையில் மும்முரமாக இருந்தாள்.
“சார்தான் கா...” என்றவள் அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க சார்!” தர்ஷினி குரல் கேட்டதும், “மிஸ் தர்ஷினி, ஆதிரையை லாக் புக்கை எடுத்துட்டு வர சொல்லுங்க!” என்றான்.
“ஓகே சார்!” அழைப்பை துண்டித்தவள், “லாக் புக்கை எடுத்துட்டு உங்களை வர சொன்னாரு கா...” அவன் கூறியதை இவளிடம் ஒப்பித்தாள்.
“நீ போய்ட்டு வா தர்ஷினி, நான் இந்த சாம்பிளை போட்டு முடிக்கணும்!” ஆதிரை கூற, இவளும் சரியென்று லாக் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குச் சென்றாள்.
ஆதிரை வருவாள் என எதிர்பார்த்தவன், தர்ஷினி வந்ததும் எரிச்சலானான். “உங்க பேர் ஆதிரையா?” அவன் கடினக் குரலில் கேட்க, தர்ஷினி ஒரு நொடி விழித்தாள்.
“சார், அது... அக்காதான் வேலை இருக்குன்னு என்னைப் போக சொன்னாங்க!” என்றாள் திணறலாய்.
“நான் உங்களுக்கு பாஸா? அவங்க பாஸா?” அவன் கடுப்புடன் கேட்க, “சார்...அது!” என அவள் பயந்து விழித்தாள். இன்றைக்கு இவனிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என அவள் முகம் மாறியது.
“நீங்க போய்ட்டு மிஸ் ஆதிரையாழை வர சொல்லுங்க!” என அவன் கூறி முடித்ததும், விட்டால் போதுமென வெளியே வந்தவள், “க்கா... இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை போல. அந்த மனுஷன் என்னமோ போருக்குப் போற மாதிரி முகத்தை வச்சிருக்காரு. நல்ல நாள்லயே அவர் நல்லசிவம். இன்னைக்கு மூஞ்சியை அப்படி வச்சிருக்காரு. அவர்கிட்டே என்னை மாட்டி விடப் பார்த்தீங்களே... போங்க, நீங்களே போய் என்னென்னு கேளுங்க. எதாவது மிஸ்டேக் பண்ணிட்டீங்களா கா?” என தர்ஷினி புலம்பிக் கொண்டே இருக்கையில் அமர, ஆதிரையிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை.
“அக்கா... உங்ககிட்டே தான் சொல்றேன். சீக்கிரம் அவர் ரூம்க்குப் போங்க. இல்லை, அதுக்கும் திட்டு விழும்!” தர்ஷினி ஆதிரையின் தோள் தொட்டு உசுப்பினாள்.
“ப்ம்ச்... தர்ஷினி, ஆசிட் கீழே சிந்துது பாரு. என்னை போட்டு உலுக்காத!” கண்டிப்புடன் கூறிய ஆதிரையைப் பார்த்து மற்றவள் விழித்தாள்.
“போங்க... இன்னைக்கு அவர் உங்களை வறுத்தெடுக்கப் போறாரு. எனக்கென்ன வந்துச்சு!” அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஏன் ஆதிரை ஒரு மாதிரி இருக்க?” என கோமதி அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.
“எனக்கென்ன கா... நான் நல்லாதான் இருக்கேன்!” ஆதிரை முறுவலித்தாள்.
“ஹாய் ஆதி... ஹாய் தர்ஸூ!” சுபாஷ் துள்ளலுடன் உள்ளே நுழைந்தான்.
“ண்ணா... நம்ம தேவா சார் சூடா இருக்காரு. எப்படியும் இப்போ விசிட் வருவாரு. நீங்க உங்க செக்ஷனுக்குப் போங்க. இல்லைன்னா செம்மையா திட்டு வாங்குவீங்க. நீங்களாவது நான் சொல்றதைக் கேளுங்க!” முகவாயைத் தோளில் இடித்தாள் தர்ஷினி. சுபாஷ் அவளைப் புரியாது பார்த்தான்.
“மசமசன்னு நிக்காம இடத்தைக் காலி பண்ணுங்க ண்ணா... ரெண்டு நிமிஷத்துல தேவா சார் இங்க வருவாரு!” அவள் துரிதப்படுத்த இவன் ஒன்றுமே புரியாது ஆய்வகத்தைவிட்டு வெளியேற, சரியாய் தேவா உள்ளே நுழைந்தான். இவன் அவன் கண்ணில் படாது அகன்றுவிட்டான். அப்படி நினைத்துக் கொண்டான் சுபாஷ்.
தேவா கண்ணில் அவன் தென்பட்டாலும் கருத்தில் நிறையவில்லை. தான் அழைத்தும் மதிப்புக் கொடுத்து வராத ஆதிரையின் மீது அவனுக்கு கோபம் துளிர்த்தது. அதனாலே விறுவிறுவென இங்கே வந்துவிட்டான்.
வாயில் வழியே வந்த வெளிச்சம் முற்றிலும் மறைய, தேவாதான் வந்திருப்பான் எனத் திரும்பி பார்க்காமலே அவளால் உணர முடிந்தது. தர்ஷினி அவனைப் பார்த்ததும் படக்கென மறுபுறம் திரும்பி அமில பொத்தலைக் கையில் எடுத்தாள்.
“மிஸ் தர்ஷினி, உங்ககிட்டே என்ன சொல்லிவிட்டேன் நான்?” அவன் திடுக்கென்று கேள்வி கேட்கவும், “நான் சொல்லிட்டேன் சார். ஆதிரை அக்காதான் வேலை இருக்குன்னு சொன்னாங்க!” என்றாள்.
ஆதிரையை மாட்டிக் கொடுக்கும் எண்ணமில்லை. ஆனால் தேவாவிடம் திட்டு வாங்க பயந்து அவள் பேரைக் கூறிவிட்டாள். ஆதிரை இதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல தன் வேலையைக் கவனித்தாள்.
“மிஸ் ஆதிரை யாழ்!” அவன் அழுத்தமான அழைப்பு செவியைத் தீண்ட மிக மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் அலட்சியம் தெறித்தது.
“நான் உங்களை என் ரூம்க்கு வர சொல்லி டென் மினிட்ஸ் ஆச்சு!” அவன் வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.
“சாரி சார், எனக்கு இப்போ வேலை இருக்கு. சாம்பிள் எல்லாம் போட்டு முடிச்சாதான் பாலை பாட்டில் பண்ணி ஸ்டோர் பண்ண முடியும்!” என்றாள் விட்டேற்றியாக.
அதில் சினந்தவன், “லுக் ஆதிரையாழ், இங்க நான்தான் பாஸ். நான் சொல்றதை தான் நீங்க ஒபே பண்ணணும். நீங்க சொல்றதைக் கேக்க ஒன்னும் நான் இந்த யூனிட்டை ரன் பண்ணலை!” என்றான் அழுத்தமாய்.
அவனை நக்கலாகப் பார்த்தவள், “யூ ஆர் ரைட் சார். நீங்க தானே பாஸ், சோ நீங்க சொல்ற எல்லாத்தையும் ஒபே பண்ணித்தானே ஆகணும்!” என்றாள் குத்தலாக. அவனுக்கு உறைக்க வேண்டும் என்றுதான் அப்படி கூறினாள். தேவாவின் முகம் மாறிற்று. அவளை முறைத்தவன் விறுவிறுவென வெளியே செல்ல, தர்ஷினி சிலையாய் சமைந்திருந்தாள்.
“ஆதி... என்னாச்சு, ஏன் சார்கிட்டே இப்படி நடந்துக்குற. அவர் எதாவது கடுப்புல பேசுனா நீதானே பொறுமையா பேசி சமாளிப்ப. ஆனால் இன்னைக்கு நீ வேணும்னே அவர்கிட்டே பேசுற மாதிரி இருக்கு?” கோமதி யோசனையாக அவளைப் பார்த்தார்.
“அக்கா... கரெக்டா சொன்னீங்க. எனக்கு என்னமோ இது நம்ப ஆதியக்காவான்னு யோசனையா இருக்கு!” கோமதியிடம் புலம்பிய தர்ஷினி மற்றவளின் புறம் திரும்பி, “அவர்கிட்ட ஏன் இப்படி பேசுறீங்க கா? ஒருவேளை மறுபடியும் வேலையை ரிசைன் பண்ண போறீங்களா?” எனப் படபடத்தாள்.
ஆதிரை பெருமூச்சை வெளிவிட்டவள், “மே பீ ரிசைன் பண்ற சிட்சுவேஷன் சீக்கிரமே வந்துடும் போல தர்ஷினி!” என்றாள் மெல்லிய குரலில்.
அதிர்ந்து போன தர்ஷினி, “க்கா... அப்படிலாம் போய்டாதீங்க கா. அப்புறம் முன்னாடி இருந்துச்சே ஒரு அலட்டல், அது மாதிரி வேற யாரும் வந்தா நிம்மதி போய்டும் கா!” என்றாள் வேகமாக. அவளுக்கு அவளுடைய கவலை என எண்ணிய ஆதிரை வேலை பார்க்க முயன்றாள். ஆனால் முடியாது போனது. தேவாவை இத்தனை பேரின் முன்னே வைத்து இப்படி பேசியது தவறு என மனதில் உறுத்தியது.
“ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்!” அனைவரிடமும் பொதுவாகக் கூறிய ஆதிரை எழுந்து தேவா அறை நோக்கிச் சென்றாள்.
“எக்ஸ்யூஸ் மீ சார்!” அவள் அனுமதி கேட்க, தேவா எதுவும் கூறாது அமர்ந்திருந்தான். சில நொடிகள் காத்திருந்தவள் அறைக்குள்ளே அனுமதியின்றி நுழைந்தாள்.
“என் பெர்மிஷன் இல்லாம ரூம்க்குள்ள வர்து டீசென்சி இல்லை ஆதிரையாழ்!” அவன் குரல் செவியில் மோதினாலும் அதற்கு எதிர்வினையாற்றாதவள் அவன் கோபத்திற்கு இரையாகி கீழே இரைந்து கிடந்த காகிதங்களை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
அவனுக்கு முன்னே தண்ணீர் பொத்தலை நகர்த்தியவள், “தண்ணியைக் குடிச்சு ரிலாக்ஸ் பண்ணுங்க சார்!” என்றாள் நிதானக் குரலில். அவளை முறைத்தவன் நீரை எடுத்து கடகடவென அருந்தினான்.
அவன் கோபம் குறையக் காத்திருந்தவள், “சாரி சார், அத்தனை பேர் முன்னாடியும் நான் உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டது தப்பு. என்னால உங்க மேல அவங்க வச்சிருக்க, பயம், மரியாதை எல்லாம் குறையலாம். நான் அதை இன்டென்ஷனலா செய்யலை!” என்றாள். தேவா அமைதியாய் அவளைப் பார்த்தான்.
“என்னோட பிஹேவியர் உங்களைக் கோபப்பட வச்சுதா சார்?” அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள். அவனிடம் பதில் இல்லை.
“ஹம்ம்... நான் இதை ஆமான்னு எடுத்துக்குறேன். ஒரு சின்ன விஷயம், நீங்க கூப்பிட்டு நான் உங்க ரூம்க்கு வரலைன்றதுக்கே உங்களுக்கு இவ்வளோ கோபம் வருதே, அப்போ என் லைஃப்ல என் அனுமதி இல்லாம நீங்க நுழையப் பார்க்குறீங்களே! அப்போ எனக்கு எவ்வளோ கோபம் வரும்? ஹம்ம்?” அமைதியாய் அதே சமயம் அழுத்தமாய்க் கேட்டாள்.
“உங்களை அவமானப்படுத்துறதோ, உங்க கூட சண்டை போட்றதோ என்னோட நோக்கம் இல்லை. உங்களுக்குப் புரிய வைக்கிறேன் சார். பிடிக்காத விஷயத்தை யார் செஞ்சாலும் தப்பு தப்புதானே சார்?” எனக் கேட்டவளைப் பார்த்தவன்,
“நான் ஒன்னு சொல்லவா ஆதி?” எனக் கேட்டான். இவள் கேள்வியாகப் பார்த்தான்.
“சீரியஸ்லி ஐ டோன்ட் நோ ஹவ் டு ஹேண்டில் யூ... உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியலை. ஹம்ம்... பொண்ணுங்க ரொம்ப டிபிகல்டா இருக்கீங்க?” இரண்டு கைகளையும் விரித்து கோபமும் ஆற்றாமையுடன் கூறியவனைப் பார்த்து இவளது உதட்டில் முறுவல் அரும்பிற்று.
“நான் முன்னாடியே சொன்னேனே சார். உங்களோட கேரக்டரே இது இல்ல. எனக்காக நீங்க உங்க மரியாதையைக் குறைச்சுக்காதீங்க சார். எப்பவும் உங்ககிட்டே ஒரு தெளிவு, நேர்மை இருக்கும். இப்போலாம் அதைக் காணோம் சார்!” ஆதிரைக் கூறியதும் தலையைக் கோதியவன்,
“எனக்கே புரியது ஆதிரை. பட் என்னால உன்னை விட முடியலை. தூங்கும் போது கண்ணு முன்னாடி வந்து நிந்து கண்ணை நிறைக்கிற. சண்டே நான் அப்புவைப் பத்தி சொன்னதும் நீ கண்ணு கலங்குனது எனக்கு கஷ்டமா போச்சு. என்னை என்ன பண்ண சொல்ற நீ? என்னால முடிஞ்ச அளவுக்கு ஜென்யூனாதான் அப்ரோச் பண்றேன். பட் நீ அக்செப்ட் பண்ண மாட்ற!” என்றான் உண்மையை மறைக்காது.
“உங்க அப்ரேச் ஜென்யூன்தான் சார். நான் இல்லைன்னு சொல்லலையே. அதே மாதிரி நானும் நாகரீகமாக என் மறுப்பை உங்ககிட்டே சொல்லியும் நீங்க அதை அக்செப்ட் பண்ண மாட்றீங்களே, ஏன் சார்?” எனக் கேட்டவளை அவன் முறைத்துப் பார்த்தான்.
“முறைக்காதீங்க சார், இதோ... இங்க வச்சுதானே உங்க தங்கச்சியை லவ் பண்றேன்னு ஜென்யூனா சொன்ன பையனை மூஞ்சி, வாயெல்லாம் அடிச்சு உடைச்சீங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார்? கண்டிப்பா இருக்குமே! அதெப்படி சார் ஊருக்கு ஒரு உபதேசம். உங்களுக்கு தனி உபதேசம்?” கேலியாய்க் கேட்டவளைப் பார்த்தவனின் முகத்தில் முறைப்பு கூடியது.
“என்னை முறைச்சுப் பார்த்தா நீங்க செஞ்சது கரெக்டாகாது சார். என் வாழ்க்கைல நீங்க வேணும்னு நான் நினைக்கணும் சார். நான் நினைச்சா மட்டும்தான் உங்களுக்கு என் லைஃப்ல இடம். மத்தபடி யாரு வந்து சொன்னாலும் என் டிசிஷன் மாறாது!” என்றாள் அழுத்தமாய்.
“ஏன் நீ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாது ஆதிரை. என்னோட இன்டென்ஷன் தப்பானது இல்ல. உனக்கே அது தெரியும்!” தேவா கூறியதும்,
“மறுபடியும் மறுபடியுமா சார்? ஏற்கனவே எனர்ஜி வேஸ்டா போச்சு சார். ஈவ்னிங் வரை நான் வொர்க் பண்ணணும். அதனால அகைன் ஸ்டார்ட் பண்ணாதீங்க. இன்னும் கல்யாணம் ஆகாம தனியா இருக்கதாலதான் உங்க எமோஷன்ஸை கன்ட்ரோல் பண்ண முடியலை சார். பெட்டர் எவ்வளவோ மேட்ரிமோனி இருக்கு. உங்களுக்கு செட்டாகுற பொண்ணா பாருங்க சார். கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா உங்களோட எல்லா ப்ராப்ளமும் சால்வாகிடும்!” குரலில் கேலி இல்லை. வெகு தீவிரமாக பேசியவளை எரிக்கும் பார்வை பார்த்தான் தேவா.
“எனாஃப்... நீ கிளம்பலாம்!” வெளியே கையைக் காண்பித்தவனைப் பார்த்து பெருமூச்சுவிட்டவள், “நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுறதா ஞாபகம் சார். நீங்க மட்டும் ஏன் நீ வா போன்னு கூப்பிட்றீங்க? ஓ... வயசுல சின்ன பொண்ணு, தங்கச்சி மாதிரி நினைச்சுட்டீங்களா?” எனக் கேட்டு இருக்கையில் எழுந்தவளைப் பார்த்தவன், “பேசாம கிளம்புடீ, என்னைக் எப்படி கடுப்பேத்துறதுன்னே யோசிச்சுட்டு வருவா!” என அவன் கோபத்தில் இரைந்தான்.
“ஹம்ம்... உங்களுக்கு கோபம் வந்தா டீ போட்டு பேசத் தோணுமோ சார். இதோட ரெண்டு டைம் டீ போட்டுடீங்க. நீங்க எப்படி ரெஸ்பெக்ட் எதிர்பார்ப்பீங்களோ அதே மாதிரி தான் நான். இன்னொரு தடவை டீ போட்டீங்கன்னா, அப்புறம் நான் டா போட்டு பேச வேண்டி வரும் சார். எப்படி வசதின்னு நீங்களே பார்த்துக்கோங்க!” சம்பிரதாயப் புன்னகையுடன் வெளியேறிவளைக் கடித்திக் குதறுவது போல பார்த்தான் தேவா.
தொடரும்...
எப்போது இவர்களுக்குள் இணக்கம் வந்து எப்போது கதையை முடிப்பது என ஆசிரியருக்கு கண்ணைக் கட்டுகிறது மக்களே
20 அத்தியாயம் வந்ததும் கதை முடியப் போகிறது என ஜாலியாகிடுவேன். ஆனால், இந்தக் கதை இப்போதைக்கு முடியாது போல
பாவம் ஆத்தரே இந்தக் கேரக்டர்ஸ் கன்ப்யூஸ் பண்றாங்க 