- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 20 
தேவா உள்ளே வரவும் அபியை அறைக்குள் அனுப்பிய ஆதிரை, “சொல்லுங்க தேவா சார்?” அழுத்தமாய் அவனைப் பார்த்தாள்.
“என்ன சொல்லணும் ஆதி?” என அசட்டையாய்க் கேட்டவன் அவளைத் தாண்டி சென்று இருக்கையில் பொத்தென அமர்ந்தான்.
“எதுக்காக அப்புவை இங்க கூட்டீட்டு வந்தீங்க? வெளிய பார்த்தா, ஹாய் பாயோட அனுப்பிவிட வேண்டியது தானே! வாட் ஆர் யூ ட்ரையிங் டூ ப்ரூஃப்?” அமைதியாய் கேட்டாள். குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.
“ஹம்ம்...” எனத் தாடையைத் தடவிய தேவா, “நான் உன் ஹஸ்பண்ட்னு அப்புவுக்கு ப்ரூஃப் பண்ண வேணாமா ஆதி?” எனக் கேட்டான். அதில் இவள் முகம் சூடானது.
“ப்ம்ச்... ஒரே ஒரு பொய் சொல்ல போய் எனக்கே அது வினையா வந்துடுச்சு!” கோபமாய் அவள் முணுமுணுக்க, “தட்ஸ் யுவர் ஃபேட்...” தோளைக் குலுக்கியவனை அற்பமாய்ப் பார்த்தாள். தேவநந்தனின் மீதான மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது.
“ஏன் தேவா சார் இப்படி பண்றீங்க? நீங்க இப்படி இல்லவே இல்ல. உங்களோட கெத்து என்னாச்சு? எல்லாரையும் ஒரே பார்வையில தூர நிறுத்திடுவீங்க. அதிகமா ஒரு வார்த்தைக் கூடப் பேசாத மனுஷன். நானே உங்களை நிறைய நேரம் ஆச்சர்யமா ம்யூசியம் பீஸ் மாதிரி பார்த்திருக்கேன். பட் இப்போ நீங்க ஏன்?” ஆற்றாமையாகக் கையை விரித்தாள் ஆதிரை. ஏன் என்னை தொல்லை செய்கிறான் இவன் என கோபமும் ஆதங்கமும் முகத்தில் வழிந்தது.
“ஹம்ம்... ஒரே ஆன்சர்தான். பிகாஸ் ஆஃப் ஆதிரையாழ்!” அசராது பதிலுரைத்தவனை முறைத்தாள்.
“நீங்க... உங்களோட குணத்துக்கு உயரத்துக்கு நல்ல பொண்ணுங்க எல்லாம் கிடைப்பாங்க சார். என்னை மாதிரி பொண்ணு உங்களுக்கு வேணாம்!” வெறுமையாகக் கூறினாள்.
“உன்னை மாதிரி பொண்ணுன்னா என்ன அர்த்தம் ஆதி?” அவன் அழுத்தமாய்க் கேட்க, “ஹம்ம்... என்னை மாதிரின்னா கல்யாணம் ஆகாம குழந்தையோட நிக்கிற நான் உங்களுக்கு வேணாம் சார்!” என்றாள் கசந்த முறுவலுடன்.
“லுக் ஆதி, அந்த வயசுல உனக்கு நல்லது கெட்டது சொல்லித் தந்து கைட் பண்ண ஒருத்தரும் இல்ல. அதனால நீ ஸ்லிப் ஆகி இருக்க. கண்டிப்பா நீ எதையும் வேணும்னு செஞ்சிருக்க மாட்ட. இட் வாஸ் நாட் யுவர் மிஸ்டேக்!” என்றவன் முன்னே கையை நீட்டியவள், “நான் வேணும்னுதான் பண்ணேன். என்னோட சுயநினைவோட தப்புன்னு தெரிஞ்சே தான் பண்ணேன் சார். யெஸ், நான் என் தப்பை என்னைக்குமே நியாயப்படுத்த மாட்டேன். அப்போ அந்த வயசுல பெருசா தெரியலை. சோ, ஐ டிட்!” என்றாள் தோளைக் குலுக்கி.
“ஹம்ம்... நீ செஞ்சது தப்புதான். நீ அதை உணர்ந்துட்ட. டோன்ட் ஃபீல் கில்ட்!” என்றான்.
“வெயிட் வெயிட் சார்... நான் கில்டா ஃபீல் பண்ணேன் நீங்கப் பார்த்தீங்களா? அங்க அங்க கொலை, கொள்ளை ரேப் பண்ணவனே தைரியமா இருக்கான். நான் என் வைஃபை எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தேன். சோ, அதுக்கெல்லாம் நான் கில்டா பீல் பண்ணணும்னு அவசியம் இல்ல சார். ஆக்சுவலி ஐ யம் ஹேப்பி வித் அபினவ். ஐ டோன்ட் நீட் எனி ஒன் இன் மை லைஃப்!” உறுதியாக உரைத்தாள்.
“பொய் சொல்லாத ஆதிரை. நீ கில்டா ஃபீல் பண்ணலைன்னா ஏன் மேரேஜ் பத்தி யோசிக்கலை?” அவள் திருமணம் வேண்டாம் என மறுப்பதற்கான காரணத்தை அறிய முயன்றான் தேவா.
அவன்புறம் திரும்பியவள், “ஹம்ம்... உங்களுக்கு நான் ஏன் மேரேஜ் வேணாம்னு சொல்றேன்னு ரீசன் வேணும். ரைட்?” எனக் கேட்டவளிடம் வியப்புடன் தலையை அசைத்தான்.
“என் பையனை நினைச்சுத்தான் சார். எவ்வளோ பெரிய பரமாத்மாவை நான் கல்யாணம் பண்ணாலும் எப்படியும் அவனுக்கும் எனக்கும் குழந்தை பிறக்கும். என் பையன் ரெண்டாம்பட்சமா போய்டுவான்.”
“அவன் எந்த இடத்திலயும் என்னை மாதிரி ஆகிடக் கூடாதுன்ற பயம்தான் சார். யெஸ், இந்த பத்து வருஷத்துல எல்லா நாளுமே தனிமை என்னை சந்தோஷப்படுத்தலை. எவ்வளவோ நாள் பையனுக்கு உடம்பு முடியாம போனப்போ, என்னால முடியலைன்னு எக்ஸாஸ்ட் ஆனப்போ எல்லாம் ஐ நீட் சம் ஒன் டூ டேக் கேர் ஆஃப் அஸ். பட் அந்த சிட்சுவேஷனை எல்லாம் நானே ஹேண்டில் பண்ணிட்டேன். ஒருநாள் துணை தேவைன்றதுக்காக காலம் முழுக்க என் பையனை நான் கஷ்டப்படுத்த விரும்பலை சார். நான்தான் அப்பா, அம்மா இல்லாத அநாதையா வாழ்ந்தேன். அட்லீஸ்ட் என் பையனுக்கு அம்மாவோட அன்பும் அரவணைப்புமாவது முழுசா கிடைக்கணும் சார்!” ஆதிரையின் முகம் சலனமற்றிருந்தது.
“சோ, நான் உன்னைக் கல்யாணம் பண்ணா, அபியை என் பையனா பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கிற?” அவன் கேட்டதும், “அப்சல்யூட்லி... எவ்வளோ நல்லவனா இருந்தாலும் தான் ரத்தம்னு வரும்போது எல்லாமே செக்ண்ட்ரிதான் சார். உங்களை நான் நம்பி கல்யாணம் பண்றேன்னு வைங்க. ஏதோ ஒரு இடத்துல அவன் உடம்புல உங்க ரத்தம் இல்ல, எவனுக்கோ பிறந்தவன்னு தோணுச்சுனாலும் வாழ்க்கை நரகமாகிடும் தேவா சார். ஏன் எனக்குமே ஒரு லைஃப் பாட்னரோட அருகாமை இருந்தா நல்லா இருக்கும்னு தோணும். அப்படி நினைக்கும் போதெல்லாம் என் பையன்தான் என் கண்ணு முன்னாடி வருவான். சோ, அவனுக்காக இதான் என் லைஃப்னு எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணிட்டேன். ஒரு சிலரெல்லாம் தனியாவே பொறந்து தனியாவே வளர்ந்து காலம் முழுக்க தனிமரமா நிக்கணும்னு வரம் வாங்கி வந்திருப்பாங்க சார். அது வேற யாரும் இல்ல, நான்தான்!” கேலி இழையோடக் கூறியவளை வருத்தமாய்ப் பார்த்தான்.
“நான் வெறும் வாய் வார்த்தையில எதை சொன்னாலும் நீ நம்ப மாட்ட ஆதி!” அவன் பேசும்போதே,
“நிச்சயமா நம்ப மாட்டேன் சார். உங்களைன்னு இல்ல, எந்த ஆம்பளையும் நம்ப மாட்டேன். உங்க மேல நம்பிக்கை வைக்கிற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு? நீங்க என் பாஸ், நான் உங்களோட எம்ப்ளாயி. தட்ஸ் இட். அதுக்கும் மேல இந்த ரிலேஷன்ஷிப்பை எடுத்துட்டுப் போறதுல எனக்கு உடன்பாடில்லை சார்!” அவளது பேச்சை அமைதியாய் அவதானித்தவன்,
“அப்போ இதான் உன் பைனல் டிசிஷனா?” எனக் கேட்டான் சாய்ந்து அமர்ந்து.
“ஆரம்பத்துல இருந்து இதைத்தானே சார் நான் சொல்றேன். நீங்க... அது என்னைப் பார்த்து எப்போ இம்ப்ரெஸானிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை சார். நான் நீங்க நினைக்கிற அளவுக்கு நல்லவ எல்லாம் இல்லை. இப்படியே நீங்க பேசிட்டு இருந்தீங்கன்னா, இந்த மாசத்தோட ரிசைன் பண்ணிடலாம்னு கூட யோசிச்சேன். என் லைஃபை பொறுத்தவரை நான் செல்ஃபிஷ் தான் சார். அதனால உங்களுக்கு நான் ஹோப் கொடுக்க விரும்பலை. உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க!” எப்படியாவது அவன் புரிந்து கொண்டால் நல்லது என்ற எண்ணத்தோடு பேசினாள்.
நாற்காலியில் நன்றாய் சாய்ந்து அமர்ந்தவன், “ஹம்ம்... நீ சொல்றதுலயும் லாஜிக் இருக்கு ஆதி. இதுவரைக்கும் உன்கிட்ட ரெண்டு நிமிஷம் நின்னு பேசாத என்னை நம்பி மேரேஜ் வரை ப்ரொசீட் பண்றது கஷ்டம்தான். உன் பேச்சுல நியாயம் இருக்கு!” என்றான் யோசனையுடன்.
“உங்களுக்குப் புரிஞ்சிடுச்சா சார்? தேங்க் காட்!” நிம்மதி அடர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள் ஆதிரை.
“கம் அண்ட் சிட் ஆதி!” அருகே இருந்த இருக்கையை கை காண்பித்தான் தேவா. அவளும் சென்று அமர்ந்தாள்.
“என்னைப் பத்தி எதுவுமே தெரியாம என்னை நீ ரிஜெக்ட் பண்றது சரியா ஆதி?” எனக் கேட்டவனை அவள் புரியாது நோக்கினாள்.
“பழகிப் பார்க்கலாம். நான் அவ்வளோ ஈஸியா எந்த தோல்வியையும் ஏத்துக்க மாட்டேன் ஆதி. முப்பத்து மூனு வருஷம் எந்தப் பொண்ணு மேலயும் வராத ஃபீல் உன்கிட்டே என்னால உணர முடியுது. மேரேஜே வேணாம்னு நினைச்சிட்டு இருந்த என்னோட டிசிஷன் உன்னாலதான் ப்ரேக் ஆச்சு. சோ, அவ்வளோ ஈஸியா உன்னை நான் விட மாட்டேன் ஆதி.”
“அதுக்காக உன்னை ஃபோர்ஸ் பண்ணவும் எனக்கு விருப்பம் இல்ல. பிகாஸ், என் கேரக்டர் அது கிடையாது. யூ க்நோ தட். எனக்கு நீ வேணும்னா நான் கொஞ்சமாச்சும் அதுக்கு எபஃர்ட் போடணும். அட் த சேம் டைம் நீயும் அதுக்கு கொஞ்சம் க்வாப்ரேட் பண்ணு ஆதி. நீ சொல்றது நியாயம்தான். என்னதான் இருந்தாலும் அபியை நான் எதாவது ஒரு இடத்துல பிரிச்சுப் பார்த்துடுவேன்ற உன்னோட பயம் கரெக்ட்தான்.”
“நான் அவனை அப்படி பார்த்துப்பேன், என் ரத்தம் இல்லைனாலும் என்னோட உயிர் அது இதுன்னு எல்லாம் டயலாக் எல்லாம் பேச வராது மா. பெட்டர் நீ என்னோட பழகு. என்னைப் புரிஞ்சுக்கோ, ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு சொன்னா அவங்கவங்க பாதையைப் பார்த்துட்டு போய்டலாம். லெட்ஸ் கிவ் அ ட்ரை!” யோசித்து பேசியவனை ஆதிரைக் கடுப்பாக பார்த்தாள்.
“வொய் ஷூட் ஐ கிவ் அ ட்ரை அண்ட் க்வாப்ரேட் வித் யூ. எனக்கு அதுல கொஞ்சமும் இஷ்டம் இல்ல சார்!” வெடுக்கென முகத்தை திருப்பினாள். வார்த்தைகளில் அனல் பறந்தது. புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம். இவன் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என நிற்கும் போது, இதற்கு மேலும் அவள் வாதாட விரும்பவில்லை.
“யூ ஷூட் ஆதிரை... ஹம்ம் இது ப்ளாக் மெயிலா கூடத் தெரியலாம். ஐ யம் சாரி டூ சே திஸ், நீ ஓகே பண்ணலைன்னா அப்பு விஷயத்துல ஐ யம் ஹெல்ப்லெஸ்!” அசட்டையாய்த் தோளைக் குலுக்கியவனை ஒரு நொடி புரியாது பார்த்தவளின் உதடுகள் பின்னர் கோணலாய் வளைந்தன.
“ஓ... இது ப்ளாக் மெயில் மாதிரி இல்ல சார். அப்சல்யூட்லி ப்ளாக் மெயிலே தான். பைனலி உங்களால் முடியலைன்னதும் இதுக்குத்தான் வருவீங்கன்னு எனக்குத் தெரியும். போங்க... போய் அவன்கிட்டே சொல்லுங்க. ஐ டோன்ட் கேர். அவனை நான் சமாளிச்சுக்கிறேன். இந்த மாதிரி வேலை எல்லாம் என்கிட்ட பலிக்காது!” அவனை உறுத்து விழித்தாள் பெண். உன்னால் முடிந்தது செய்து கொள் என்ற திமிரும் அலட்சியமும் அவள் முகத்தில் படர்ந்திருந்தது.
“ஹம்ம்... நான் அப்புகிட்டே போய் உண்மையை சொன்னா, அப்புறம் அவர் வந்து உன் பையனை உரிமை கொண்டாடுவார். பரவாயில்லையா ஆதி? என்ன இருந்தாலும் அவர்தானே அபியோட லீகல் ஃபாதர்!” அதிராமல் தேவா கூறியதும் ஆதிரை முகம் மெதுவாய் மாறத் தொடங்கியது. அவன் புறம் திரும்பியவளுக்கு மனமெங்கும் திடீரென அதிர்வு படர்ந்தது. அவள் மட்டுமே அறிந்த ரகசியம். அவளைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அப்படி இருக்கையில் இவனுக்கு எப்படி தெரிந்தது என மனம் தவித்துப் போனது.
“நீங்க... அது உங்களுக்கு எப்படி தெரியும்?” எனத் திணறினாள். முகத்தில் வியர்வை அரும்பத் தொடங்கியது.
“ஆதி... ரிலாக்ஸ். முதல்ல தண்ணியைக் குடி. ஐ வில் ப்ராமிஸ், நான் எப்பவுமே இதை அப்புகிட்டே சொல்ல மாட்டேன்!” என அவளை ஆசுவாசம் செய்ய முயன்றான்.
“இந்த விஷயம் உங்களுக்கு எப்படி சார் தெரிஞ்சது?” அழுத்தமாய்க் கேட்டாள்.
“எப்படியோ தெரிஞ்சது ஆதி. விடேன்!” ஆதிரையின் விழிப்பார்த்து பேசத் தயங்கி முகம் திருப்பினான்.
“ம்ம்... என்னைப் பத்தி எனக்கு தெரியாம விசாரிச்சுருக்கீங்க?” அவள் குரலில் கோபமா ஆற்றாமையா எனப் பிரித்தரிய முடியவில்லை. தேவா இப்படி செய்வான் என அவள் கிஞ்சிற்றும் எண்ணி இருக்கவில்லை. ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையினைப் பற்றி தெரிந்து கொள்ளும் அளவு தேவா கீழ்த்தரமானவன் என அவள் எண்ணவில்லையே. அடிபட்ட பார்வையோடு அவனைப் பார்த்தாள். கடைசியில் நீயும் இப்படி நடந்து கொண்டாயே என மனம் வலித்ததை முகத்தில் காண்பித்தாள்.
“ப்ம்ச்... இந்த மாதிரி பார்க்காத ஆதி. நான்... உன்கிட்ட நான் கேட்டேன். நீ சொல்லலை. வேற எப்படி உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறது. ஐ க்நோ, திஸ் இஸ் நாட் ஃபேர். பட் ஐ வாண்ட் டூ நோ. என்னை வேற என்ன பண்ண சொல்ற?” எனக் கேட்டான். குரல் தடுமாறியது. அவள் பார்வை இவனை ஏதோ செய்திருக்க கூடும்.
“இப்போ நான் நீங்க சொல்றதைக் கேட்லைன்னா அப்புகிட்டே போய் சொல்லிடுவீங்க. அதுதானே விஷயம்? என்னைக் கார்னர் பண்ண ஈஸியா உங்களுக்கு விஷயம் கிடைச்சுடுச்சு இல்ல. தனியாதானே இருக்கா? என்ன பண்ணாலும் ஆள் இல்லைன்னு நினைச்சு ப்ளாக் மெயில் பண்றீங்களா தேவா சார். இல்லை என்னை ரிஜெக்ட் பண்ணவ கடைசி வரை தனியா செத்துப் போகட்டும்னு என் பையனை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறீங்களா?” எனக் கேட்டவளின் குரல் கமறியது. அழுக கூடாது என்ற வைராக்கியத்துடன் உதட்டைக் கடித்து தொண்டை வரை வந்த அழுகையை அடக்கினாள்.
“ச்சு, லூசு மாதிரி பேசாதடீ. அறைஞ்சுடப் போறேன். அப்படியொரு எண்ணம் இருந்தா விஷயம் தெரிஞ்ச ஒரு வாரத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்க மாட்டேனா? நான் உன் பாஸ்ட் லைஃப் பத்தி தெரிஞ்சுக்க தான் நினைச்சேனே தவிர, உன்னை ப்ளாக் மெயில் பண்றது என்னோட எண்ணம் இல்ல. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு ஜென்யூனாதானே சொன்னேன் ஆதி?” அவளுக்கான தவிப்பு குரலில் கொட்டிக் கிடந்தது. அவள் முகம் பார்த்து இவனுக்குப் பொறுக்கவில்லை.
ஆதிரை எழுந்து நின்றவள், “நீங்க கிளம்புங்க சார். ஐ நீட் ஸ்பேஸ்!” என்றாள் குரலை முயன்று சரி செய்து. சாகும்வரை யாருக்குமே தெரியக் கூடாது என தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த விஷயம் ஒன்று மூன்றாவது மனிதர் வாயிலாகக் கேட்கவும், அவளுக்கு தாளவே இல்லை.
அபினவ் அவளுடைய மகன். அவளுக்கு மட்டுமே சொந்தமானவன். யாரிடமும் அவனைப் பங்கிடுவதில் ஆதிரைக்கு உடன்பாடில்லை. அதுவும் தேவாவின் செய்கை அவளுக்கு வலித்தது. அவன் இப்படித்தான் என ஒரு பிம்பத்திற்குள் புகுத்தியிருந்தாள், அதை அவன் உடைத்தெறிந்திருந்தான், அவள் நம்பிக்கையும் அடிபட்டு போனது. கடைசியில் இவனும் எல்லா ஆண்களைப் போலே முடியாது என்றதும் இன்னொரு முகத்தைக் காண்பித்து விட்டானே என மனம் ஆற்றாமையில் விம்மித் தவித்தது.
“நோ, ஆதி... நீ முதல்ல என் முகத்தைப் பாரு. என்னை நம்பணும் நீ...” இப்படியே இந்தப் பெண்ணை விட்டு சென்றால் நிச்சயமாக அவனுக்கு தூக்கம் வராது. அவள் முகமும் குரலும் இவனைப் போட்டு உலுக்கின. உண்மையில் இந்த விஷயத்தை ஆதிரையிடம் தெரியப்படுத்தும் எண்ணமே இல்லை. அவள் மாட்டேன் என்று முரண்டு பிடிக்கவும் வேறு வழியற்று அவளை சம்மதிக்க வைக்க வேண்டி இப்படி பேசியிருந்தான்.
“நீங்க யார் சார்? நான் எதுக்கு உங்களை நம்பணும்?” ஒரே வார்த்தையில் அந்நியப்படுத்தியவளிடம் கோபம் கொள்ள முனையாது மூச்சை இழுத்துவிட்டவன், “நான் என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்லை ஆதி. பட் ஒன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. உன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி எதையும் நான் செய்ய மாட்டேன்!” என்றவனைப் பார்த்து அவள் இதழ்கள் கசப்பாய் வளைந்தன.
“நீங்க இப்போ கிளம்பலாம் சார். தனியா இருக்க பொண்ணு வீட்டுக்கு அடிக்கடி வராதீங்க. இது என் சொந்த வீடில்லை. வாடகை வீடுதான். அப்புறம் இதுவும் இல்லாம நானும் என் பையனும் நடுத்தெருவுலதான் நிக்க வேண்டியிருக்கும்!” அவள் பேச்சில் தேவாவிற்கு மூளை சூடானது.
“இதுவரைக்கும் ரெண்டு டைம் நான் உன்னை ட்ராப் பண்ணி இருக்கேன் ஆதிரை. அப்போ எல்லாம் நான் உன் வீட்டுக்குள்ள வந்ததா ஞாபகம் இல்ல!” அவன் சூடாய் பேசினான்.
“சாரி சார், உங்க கிட்டே பேசுற மனநிலைல நான் இல்லை. ப்ளீஸ் கிளம்புங்க. ஐ நீட் ப்ரைவசி!” வாயிலைக் கை காட்டினாள். தேவா பெருமூச்சோடு அவள் அருகே சென்று தோளோடு சேர்த்து அணைத்தான். ஆதிரை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் திமிறி விலகவில்லை.
“என்கிட்டே வந்துடு ஆதி. நான் உன்னைப் பத்திரமா பார்த்துக்குறேன். தனியா இருந்து கஷ்டப்பட வேணாம்! என்னோட அப்ரோச் முன்ன பின்ன இருக்கலாம். பட் இன்டென்ஷன் தப்பு இல்லைம்மா” மென்குரலில் அவள் முகம் பார்த்துப் பேசினான்.
“நான் தனியா இருந்தே சந்தோஷமாதான் இருக்கேன் சார். உங்களை மாதிரி ஆட்கள்தான் பாதுகாப்பு தரேன்னு டார்ச்சர் பண்றீங்க!” கேலியாய் பதிலுரைத்தாள் ஆதிரை. தேவாவின் முகத்தில் கோபம் படர்ந்தது.
“அவனுங்களும் நானும் ஒன்னா ஆதி?” ஆற்றாமையுடன் கேட்டவன் கரத்தை மெதுவாகத் தட்டிவிட்டவள், “ஹம்ம்... அவங்க எல்லாம் கீப்பா வச்சுக்கிறேன்னு கூப்ட்டாங்க. நீங்க கொஞ்சம் டிப்ரெண்ட் சார், கல்யாணம்னு கூப்பிட்றீங்க. பெருசா எனக்கு வித்யாசம் தெரியலை!” தோளைக் குலுக்கியவளைக் கண்டு பல்லை நறநறத்தவன், “நான் கிளம்புறேன்...” எனக் கடித்து துப்பிவிட்டு கோபத்தோடு அகன்றான். உண்மையிலே இந்தப் பெண்ணை கையாளத் தெரியாது தேவநந்தன் தடுமாறினான்.
அவன் சென்றதும் கதவை அடைத்த ஆதிரையின் விழிகளில் சரசரவென நீர் வழிந்தது. யாரு முன்பும் அழுவது அவளுக்கு சுத்தமாய்ப் பிடிக்காது. சிறுவயதிலே தனித்து வாழப் பழகியதால் அவளை அவளேதான் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அதனாலே தைரியமான பெண்ணாய் தன்னைக் காண்பித்துக் கொண்டாள். ஆனால் மனதளவில் பெரிய கோழை அவள். அவளை நோக்கி நீளும் நேசக்கரத்தை தட்டிவிட முடியாத பெரிய கோழை.
தேவநந்தனை அவளுக்கு தனிமனிதனாய் நிரம்ப பிடிக்கும். ஆனால், அவள் வாழ்க்கையில் இடம் தர விருப்பமில்லை. அவனுக்கு மட்டுமன்று, யாரையும் அனுமதிக்கும் எண்ணமும் கிஞ்சிற்றும் இல்லை. மனம் சோர்ந்து போனது. அறைக்குள்ளே சென்றாள். அபி விளையாடிக் கொண்டிருக்க, அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டாள். அவளுடைய வாழ்வின் பெரிய பற்றுக்கோல் அவன்தானே. நீண்ட பெரிய ஒன்பது வருடங்களை அவன் முகம் பார்த்துதானே கடந்திருந்தாள்.
“ம்மா... என்னாச்சு மா?” அபி தாயின் கண்ணீரைத் துடைத்துக் கேட்க, “அம்மாவுக்கு ஸ்டமெக் பெய்ன் அபி!” என்றாள் புன்னகைக்க முயன்ற உதடுகளுடன்.
தாயின் கன்னத்தில் முத்தமிட்டவன், “படுத்து தூங்குனா சரியா போய்டும் மா!” என்றான் அவளைப் போலவே. அதில் அவளது இதழ்களில் மென்னகை படர்ந்தது.
தேவா உழவர் துணைக்கு செல்லவில்லை. சுபாஷை அழைத்துப் பாரத்துக் கொள்ள கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டான். விரைவிலே வந்தவனை அனைவரும் என்னவென விசாரிக்க, “ப்ம்ச்... ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு இயர்லியா வந்தேன். பிடிக்கலைன்னா சொல்லுங்க, கிளம்புறேன்!” என்று அவன் பொரியவும், அனைவரும் திகைத்துப் போயினர்.
“ப்ரோ... சில். போ, நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் பேசிக்கலாம்!” ஹரிதான் அவனை சமாதானம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தான்.
தேவாவிற்கு அன்றைய நாள் முழுவதும் அழுத ஆதிரையின் முகம்தான் இம்சையைக் கூட்டியது. இரவு முழுவதும் உறக்கமே வராது விழித்தே கிடந்தான். சிவந்த விழிக
ளுடன் மறுநாள் முதல் ஆளாய் அவன் உழவர் துணைக்கு செல்ல, ஆதிரை வராது அவனைக் கடுப்பேற்றியிருந்தாள்.
தொடரும்...