• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
நெஞ்சம் – 19 💖

தேவா ஆதிரையிடம் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. அடுத்தடுத்த நாட்கள் அவன் எதாவது பேசுவான், எதிர்வாதம்
செய்வான் என இவள் முன்னெச்சரியாக என்னக் கூறலாம் என யோசித்து வைத்திருக்க, அதற்கெல்லாம் வேலையே அற்றுப் போனது.

தேவா எப்போதும் போல ஆதிரையிடம் அலுவலக நிமித்தமாக மட்டுமே பேசினான். முன்பு‌ போல முகத்தை உர்ரென வைக்கவில்லை எனினும் கண்டிப்புடன்தான் நடந்து கொண்டான். ஆனால் அவன் பார்வை மட்டும் தன்னைத் தொடர்வதை அவள் உணர்ந்தே இருந்தாள். எதையும் பேசாதவன் ஏன் தன்னையே தொடர வேண்டும் என்ற கேள்வி அவளுக்குள்ளே குழப்பத்தை உண்டு பண்ணியது.

உண்மையிலே இந்த தேவா அவளுக்குப் புரியாத புதிர்தான். கடுகடு முகத்திற்கு பின்னே இப்படியொரு முகத்தை ஒளித்து வைத்திருக்கிறான். பிடித்திருக்கிறது, திருமணம் செய்து கொள்வோம் எனக் கட்டாயப்படுத்தினான். அவள் எடுத்துக் கூறியும் புரிந்து கொள்ளாமல் தர்க்கம் செய்தான். பிறகு மறுநாளே எதுவும் நடவாதது போன்ற அவனது செய்கைகள் இவளைத் தடுமாற செய்தன.

ஒருவேளை தன்னிடம் விளையாடுவதற்காக அப்படி பேசினானோ? ஆனால் தேவா அப்படியெல்லாம் விளையாடும் ரகமில்லையே. அவன் எல்லாவற்றிலும் சரியாய் இருப்பவன், அதனாலே அவளது கணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டுப் போனான்.

அவனது அலுவலக அறைக்குச் செல்லும் போது அவன் தன்னைக் கவனிக்கிறானா என ஆதிரை அவன் முகத்தையே அவ்வப்போது பார்க்க, வேலையைப் பற்றிய பேச்சு முடிந்ததும், “ஹக்கும்... வேணாம், பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்படியே என்னைப் பார்த்தா என்ன அர்த்தம் ஆதிரை?” எனக் கண்டிப்புடன் கேட்டவனைப் பார்த்து இவள்தான் விழிக்க வேண்டியதாகப் போயிற்று.

“மனசை அலைபாய விடக் கூடாது ஆதி. பீ ஸ்ட்ராங்க் இன் யுவர் டிசிஷன்!” என்றவனை முறைத்துப் பார்த்தவள், கதவை கோபத்தோடு அறைந்துவிட்டு வெளியேற, தேவாவின் முகத்தில் முறுவல் பூத்தது.

எப்படி அவளை சம்மதிக்க வைக்கலாம் என்ற சிந்தித்த போது முதன்முதலில் அவனுக்குத் தோன்றியது, அவளுடைய கவனத்தை தன்புறம் திருப்ப வேண்டும் என்பதுதான். உண்மையில் தேவாவிற்குப் பெண்களிடம் எப்படி பேச வேண்டும், சம்மதம் பெற வேண்டும் என்பதைப் பற்றிய நுனியைக் கூட அறியாதவன்.

ஆனால், ஆதிரை விஷயத்தில் எல்லாம் தன்னியல்பாக நடந்தது. அவன் இந்தப் பெண்தான் வேண்டும் என்று எவ்வித முயற்சியும் எடுக்காத போதும் தன் மனதிற்குள் நுழைந்தவளை துரத்த விளையாது அரவணைத்துக் கொண்டான்.‌ அவ்வளவே, அடுத்து என்ன செய்வது என யோசித்து, ஆதிரையைப் பற்றி முழுதாய் விசாரிக்கச் சொல்லி இருந்தான்.

உண்மையில் அவளுடன் பேசி தன்னைப் புரிய வைப்பதில் தேவாவிற்கு உடன்பாடில்லை. அவனுக்கு எப்படி அவளைப் புரிந்து பிடித்ததோ, அதே போல அவளுக்குத் தன்னைப் புரிந்து, பிடிக்க வேண்டும் என்றொரு எண்ணம். பரஸ்பர அன்பும் புரிதலும் இருந்தால்தானே இருவரும் சேர்ந்து பிரியத்துடன் வாழ முடியும். அப்படி அவளுக்கு இல்லாதபட்சத்தில் இவன் வலுக்கட்டாயமாக அவளைத் திருமணம் செய்தால் ஆதிரைக்குத் தன் மீது வெறுப்பு மட்டுமே எஞ்சிவிடும்.

அதற்காக அவள் பிடிக்கவில்லை என்றதும் விட்டுவிடும் எண்ணமில்லை. தேவா என்ற தனிமனிதனை அவள் உணர வேண்டும். அதற்கடுத்து அவளது எதிர்வினையைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்றெண்ணி தன்னிருப்பை மட்டும் அவளருகில் உறுதி செய்தான். அவளைப் பார்வையால் தொடர்ந்தான் அன்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. அவனைப் பற்றி ஆதிரைக் குழம்புகிறாள் எனத் தெரிந்த போதும் கூட அவன் பெரிதாய் அலட்டிக்
கொள்ளவில்லை.

மேலும் இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது. ஆதிரை தேவாவின் விஷயத்தை ஒருவாறாக மறந்து போயிருந்தாள். பணிச்சுமை, அபியின் பள்ளியில் நடந்த ஆசிரியர் – பெற்றோர் கலந்துரையாடல் என அவளுக்கு நிற்க நேரமில்லாமல் நகர, தேவா சிந்தனையிலிருந்து பின்னகர்ந்திருந்தான்.

அதோ இதோவென வாரயிறுதி வந்துவிட, ஆதிரைக்கு அன்றைய ஞாயிறு பத்து மணிக்குத்தான் விடிந்தது. அபியும் தாயின் மேல் காலைப் போட்டு சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறக்கம் கலையாது எழுந்தவள் சோம்பல் முறித்துவிட்டு முகம் கழுவி பல் துலக்கி வந்தாள்.

வாசலில் பால் பாத்திரம் நிரப்பப்பட்டிருக்க, அதை எடுத்து சூடு செய்தாள். இந்த சில மாதங்களாக அந்த தெருவில் பசு வைத்திருக்கும் ஒருவரிடம் நேரடியாக பசும்பாலை வாங்கி பழக்கப்பட்டிருந்தாள்.

தண்ணீர் கலக்காது பாலைக் கொதிக்க வைத்து தேநீர் பொடி கலந்து வடிகட்டி அதை நுகர்ந்து கொண்டே வந்து இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்குமென உடலும் மனதும் ஓய்விற்கு கெஞ்சியது. மூன்று மணியானதும் அபியை நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றெண்ணமே அலுப்பை தருவித்தது.

இந்த வாரமாவது ஆற அமர உறங்கி எழுந்து தேநீரைப் பருகுகிறாள். சென்ற வாரமெல்லாம் காலை ஆறு மணிக்கே வீட்டிலிருந்து தாயும் மகனும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டிருந்தனர். அபிக்கு மாநில அளவில் நீச்சல் போட்டி ஒன்று சென்னையில் நடக்கவிருந்தது.

பதினாறு வயதிற்கு கீழே இருக்கும் பிரிவினரில் இவன் பங்கேற்றிருக்க, எட்டு முப்பதுக்கே போட்டிக் களத்தை அடைந்திருனர். ஒன்பது மணிக்குத் துவங்கிய போட்டியில் இவன் மூன்றாம் பரிசை வென்றிருக்க, ஆதிரைக்கு மகிழ்ச்சி பொங்கியது. மகனை ஆரத் தழுவி முத்தமிட்டு தன் உவகையைப் பகிர்ந்து கொண்டாள்.

ஆனால் அவன்தான் முதல்பரிசு கிடைக்கவில்லை என்று முகத்தில் சோகத்தை அப்பியிருந்தான். இவள்தான் அவனிடம் பேசி சமாதானம் செய்து இருவரும் சென்னையில் உள்ள பிரபலமான உணவு விடுதியில் உண்டுவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தனர். இந்த வாரம்தான் அவளுக்கு மூச்சுவிட நேரம் கிடைத்தது.

“ம்மா...” என அறையிலிருந்து எழுந்து கண்ணைக் கசக்கிய அபி தாய் கூடத்தில் அமர்ந்திருக்கவும், அவள் மடியில் தலையை வைத்து நீள்விருக்கையில் உடலை சரித்துப் படுத்தான். அவன் செய்கையில் இவளது முகத்தில் புன்னகை படர்ந்தது.

“அபிம்மா... என் தங்கம் எழுந்துட்டானா? அம்மா பால் காய்ச்சி தரவா?” என அவன் தலையை ஆதுரமாகக் கோதினாள்.

“பூஸ்ட் வேணும்மா...” சின்னவன் தூக்க கலக்கத்தில் உரைக்க, இவள் அவனை சரியாய் படுக்க வைத்துவிட்டு எழுந்து சென்று பூஸ்ட் டப்பாவில் கொட்டி வைத்திருந்த சத்து மாவை பாலில் கலந்து நாட்டுச் சர்க்கரை இட்டு கலக்கினாள். சிறுவயதில் அவனை ஏமாற்றுவதற்காக செய்தது. அது இன்றுவரை தொடர்கிறது.

“அபி கண்ணா... எழுந்திரி டா!” என்றவள் அவனை எழுந்தமரச் செய்து குவளையைக் கையில் கொடுக்க, அவன் மெதுவாய் அருந்த தொடங்கினான்.

ஆதிரை ஆறிப் போயிருந்த தேநீரை ஒரே மிடறில் குடித்துவிட்டு குவளையை கீழே வைத்தவள், இருக்கையில் தலையை வசதியாய் சாய்த்து காக்க காக்க படத்தின் பாடல் தொலைக்காட்சியில் ஒலிக்க, அதை முணுமுணுத்தாள்.

“பெண்களை நிமிர்ந்து பார்த்திடா, உன் இனிய கண்ணியம் பிடிக்குதே!” என அவள் உதடுகள் முணுமுணுக்க, வெளியே அழைப்புமணி கேட்டது. ருக்குவைத் தவிர பெரிதாய் அவள் வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள். அவரும் மூட்டு வலி இருப்பதால் எப்போதாவது ஒருமுறைதான் வருவார்.

‘யார் வந்திருக்கிறார்கள்?’ என யோசனையுடனே வெளியே சென்றாள். கதவு திறந்திருக்க, திரைச்சிலை வாயிலை மறைத்திருந்தது. ஆண் உருவம் ஒன்று நின்றிருக்க,

“யாராது?” எனக் கேட்டு அவள் திரைச்சிலையை விலக்க, தேவநந்தன் நின்றிருந்தான். அவனை எதிர்பாராது திகைத்த ஆதிரை, “நீங்க?” எனக் கேட்கும் முன்னே, “இப்போதான் அம்மாவுக்கும் மகனுக்கும் விடிஞ்சுதா?” என உரிமையான அதட்டலுடன் அவள் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் செய்கையில் அவள் திகைத்துப் போனாள்.

“சார், என்ன பண்றீங்க நீங்க?” முகத்தைக் கடுமையாக்கி அவன் கையை அவள் உதற முனைய, “ஹெ ஆதி...” என்ற குரலில் திடுக்கிட்டு போனாள்.

அடுத்தக் கணம் அவள் வாயிலை நோக்க, “ஹாய் ஆதி...” என்றபடியே அப்பு உள்ளே நுழைந்தான். அவனை எதிர்பாராது திகைத்தாள் இவள்.

“அப்பு... நீ... நீ நெக்ஸ்ட் இயர்தான் வருவேன்னு சொன்ன? எப்போ வந்த? எப்படி டா வந்த?” என்றாள் எவ்விதம் எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் திணறியபடி.

“சர்ப்ரைஸ்... நான் வந்து டென் டேஸ் ஆச்சு. என் கசின் மேரேஜ்க்காக வந்தேன். அதுவும் இல்லாம ரூபி செகண்ட் பேபி ப்ரக்னென்டா இருக்கா. அங்க அவ தனியா கஷ்டப்பட வேணாம்னு இங்கயே விட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். அன்எக்ஸ்பெக்டடா ப்ரோவா மீட் பண்ணேன். அவர் வீட்டுக்கு கூட்டீட்டு வந்துட்டாரு!” என்றவன் வெகு உரிமையாக சமையலறைக்குள்ளே நுழைந்தான்.

ஆதிரை தேவாவை தீப்பார்வை பார்க்க, “இட்ஸ் நாட் மை ஃபால்ட் ஆதி. நீ ஸ்டார்ட் பண்ணி வச்சது, நான் கண்டினியூ பண்றேன்!” அவன் அலட்டிக்காது தோளைக் குலுக்க, “அவன் கிளம்பட்டும், உங்களைப் பார்த்துக்கிறேன்...” சிடுசிடுப்புடன் அப்புவின் பின்னே சென்றவளை இவனது சிரிப்பு தொடர்ந்தது.

அவனைத் திரும்பிப் பார்த்து மீண்டும் முறைத்தவள், “சாப்டீயா நீ? ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு... காபி குடிக்கிறீயா? என்ன ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணட்டும்?” என அப்புவிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்.

“மூச்சு விட்டுட்டுப் பேசு டி... தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். காஃபி வேணாம்... நீ எப்பவும் செஞ்சு தருவீயே, தேங்காய் பால் சாதம், அதுவும் உன்னோட ஸ்பெஷல் முட்டை க்ரேவியும் வேணும்!” என்றான் சமையலறை திண்டில் சாய்ந்து நின்று.

“பார்றா... இன்னும் நீ அதை ஞாபகம் வச்சிருக்கீயா? சரி, நான் குக் பண்றேன். நீ போய் அவர் கூட பேசிட்டு இரு!” என்றாள்.

“ஹம்ம்... வரும்போதும் அவர் கூடத்தான் பேசிட்டு வந்தேன். ஹீ இஸ் ஜெம் ஆதி. உன்னைப் பத்தி பெருமையா பேசுனாரு. ஸ்மைலிங் ஃபேஸ், ஜோவியலா இருக்காரே!” அவன் கூறியதும் சரியாய் அந்நேரம் சமையலறைக்குள் நுழைந்த தேவா அதைக் கேட்டு இருமினான். ஆதிரை அவனை நக்கலாகப் பார்த்தாள்.

“ப்ரோ... தண்ணி குடிங்க!” அப்பு அவனுக்கு நீரைக் கொடுத்தான். அபி அப்பு வாங்கி வந்த பொம்மைகளுடன் ஐக்கியமாகி விட, இவர்கள் பக்கம் அவன் வரவில்லை.

“சரி... நாங்க உன்னை டிஸ்டர்ப் பண்ணலை. உங்க லவ் ஸ்டோரியை கேட்டா, ப்ரோ அரேஞ்ச்ட் மேரேஜ்னு சப்பையா முடிச்சுட்டாரு ஆதி!” என அவன் கூறவும், அவள் முகம் அப்படியே மாறிப் போய்விட்டது.

தேவாவும் அவளைக் கவனித்தவன், “நீங்க வாங்க அப்பு... உங்ககிட்டே உங்க ஃப்ரெண்டைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி இருக்கு!” என அவனை அழைத்துச் சென்றுவிட்டான்.
அவள் தேவாவை மனதில் தாளித்தவாறே சமைத்தாள். அவர்கள் பேச்சு அறையும் குறையுமாய் அவளுடைய செவியிலும் நுழைந்தது.

“ஆமா தேவா, உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாகுது?” என அப்பு கேட்கவும், தேவா என்ன சொல்வது என யோசித்து அபியின் வயதை ஒருவாறாக கணித்து, “நைன் இயர்ஸாகப் போகுது!” என்றான்.

“வாவ்! சூப்பர் ப்ரோ... நெக்ஸ்ட் வீக் என்னோட டென்த் இயர் ஆன்னிவர்சரி. வீட்ல சின்னதா ஒரு கெட் டூ கெதர் ப்ளான் பண்ணி இருக்கோம். நீங்களும் அவளும் கண்டிப்பா வரணும். அவ எதாவது ரீசன் சொல்லி வர மாட்டேன்னு சொல்லிடுவா. நீங்கதான் உங்க வொய்பை கூட்டீட்டு வரணும்!” அப்பு அவர்கள் இருவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அழுத்தி அழைத்தான்.

“அதுக்கென்ன அப்பு... ஷ்யூர், எல்லா நாளும்தான் வேலை இருக்கும். கண்டிப்பா ஃபேமிலியா நாங்க வருவோம்!” தேவா பதிலளித்ததும் ஆதிரை பெரும் சத்தத்துடன் பாத்திரத்தை கீழே தள்ளிவிட்டிருந்தாள்.

அபி திடுக்கிட்டு நிமிர, “ஒன்னும் இல்ல அபி... நீ விளையாடு. உங்கம்மா தான்!” என அவனை சமாதானம் செய்தான் தேவா. அவனும் விளையாட்டு மும்மரத்தில் தலையை அசைத்து மீண்டும் குனிந்து அந்த பொம்மை தொடர் வண்டியை வட்டமாய் இருந்த தண்ட வாளத்தில் ஓட விட்டான்.

“என்ன ப்ரோ?” அப்பு கேட்க, “இப்போ நான் உள்ள வரணும்னு சிக்னல் கொடுக்குறா என் பொண்டாட்டி. நான் போய் என்னென்னு கேட்டுட்டு வரேன் அப்பு...” என தேவா சமையலறைக்குள் நுழைந்தான்.

அவன் வருவான் எனக் காத்திருந்த ஆதிரை கோபமான முகத்துடன், “யாரைக் கேட்டு அவன்கிட்டே வரேன்னு சொன்னீங்க?” என எரிச்சலாகக் குரலை தழைத்துக் கேட்டாள்.

“ப்ம்ச்... அவர் அவ்வளோ வற்புறுத்தி கூப்பிடும் போது வரலைன்னு சொன்னா நல்லா இருக்காது ஆதி!” தேவா பதிலுரைத்ததும் கையிலிருந்த கத்தியை அவன் முன்னே நீட்டியவள், “செம்ம கோபத்துல இருக்கேன் சார். நீங்க பண்ற எல்லாம் என்னை டென்ஷன் பண்ணுது. என் லைஃப்ல முடிவெடுக்க நீங்க யாரு?” என்றாள் பல்லைக் கடித்து.

“ஆதிரை... சில், இது ஒரு சின்ன டிசிஷன்தான்!” அவன் பொறுமையாகக் கூற, “முதல்ல நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க. கோபத்துல எதாவது திட்டிடப் போறேன்!” அவள் கடுப்புடன் முணுமுணுக்க, இன்னுமே அவன்புறம் நீட்டிய கத்தியை அவள் கீழிறக்கவில்லை. தேவாவின் முகத்தில் முறுவல் படர்ந்தது.

“கல்யாணமே ஆகலை... ஆனாலும் பொண்டாட்டி மாதிரி என்னை அதிகாரம் பண்ற ஆதி. இதுவரைக்கும் என்கிட்ட இந்தமாதிரி யாருமே பேசுனது இல்ல. என்னை ரொம்ப மிரட்டுற நீ!” குறையாயக் கூறினாலும் இன்னுமே அவன் உதட்டோரம் சிரிப்பு வழிந்தது.

கீழ் கண்ணால் அவனை முறைத்தவள், “இதுக்கு முன்னாடி நீங்க யார்கிட்டேயும் இப்படி பிஹேவ் பண்ணி இருக்க மாட்டீங்க. அதனால யாரும் மிரட்டி இருக்க மாட்டாங்க!” என்று முனங்கலாகக் கூறினாள்.

அவள் பதிலில் தேவாவின் முகம் மலர, “ஹம்ம்... கரெட்தான் ஆதி!” எனத் தாடியை தடவியவன், “அப்போ இதுவரைக்கும் எந்தப் பொண்ணுப் பின்னாடியும் போகாத உத்தமன் இந்த தேவான்னு நம்புற?” எனப் புருவத்தை உயர்த்தினான். அவன் முகத்திலிருந்த புன்னகையைத்தான் பார்த்திருந்தாள் ஆதிரை. இவனுக்கு இப்படி பேச, சிரிக்கவெல்லாம் தெரியுமா என அவளுக்கு லேசாய் மயக்கம் கூட வரப் பார்த்தது.

“ஓஹோ... அப்படியே உங்களோட சிரிச்ச முகத்தை வச்சுட்டு நீங்க பொண்ணுங்க பின்னாடி போய்ட்டாலும்!” அவள் இழுத்துக் கூறியபடியே திரும்பி வெங்காயத்தை நறுக்க, தேவா சத்தமாய் சிரித்துவிட்டான்.

“ஹம்ம்... அதான் பாரு, காலம் போன கடைசியில உன் பின்னாடி சுத்த வச்சிட்ட நீ. இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் இப்படிலாம் பேசுனது இல்ல. அங்க யூனிட்ல வேலை நிறைய இருக்கு. ஆனாலும் உன் ப்ரெண்டைப் பார்த்ததும், அப்படியே உன்னைப் பார்க்க கூட்டீட்டு வந்துட்டேன். என்னை நினைச்சு எனக்கே ஸ்ட்ரேஞ்சா இருக்கு ஆதி. ஒரு பொண்ணுக்காகப் போய் ஏன் இவ்வளோ பண்றாங்கன்னு மத்தவங்களைப் பார்த்து யோசிச்சு இருக்கேன். பட், பைனலி நானே ஒரு பொண்ணு பின்னாடி இர்ரெஸ்பான்சிபிளா சுத்தீட்டு இருக்கேன்!” தயக்கமாய் முணுமுணுத்து பின்னந்தலையைக் கோதினான் தேவா.

அவனுக்கு தன்னை நினைத்து ஆச்சரியம்தான். இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் அவன் அடிபணிந்து போவான் என கனவிலும் நினைத்தது இல்லை. அதுவும் ஆதிரை எல்லாம் அவன் பார்வையில் ஒரு ஊழியர். அவ்வளவே, மற்றபடி அவள் முகத்தைக் கூட ஊன்றி கவனித்திருக்க மாட்டான். ஆனால், இன்றைக்கு எல்லாம் தலைகீழாக மாறிப் போயிற்று.

ஆதிரைத் திரும்பி அவனைப் பார்த்தவள், “நீங்க சர்ப்ரைஸ் ஆனீங்களோ இல்லையோ சார், நான்தான் ரொம்ப சர்ப்ரைஸானேன். எங்க தோவா சாரா இது? அந்த முசுட்டு மூஞ்சியா இது? நீங்களா இதுன்னு எனக்கு லைட்டா மயக்கம் வர்ற மாதிரி இருக்கு!” கையை ஆட்டி அதிசயித்துப் பேசியவளின் கரத்தில் கத்தி இருக்க, சரியாய் அந்நேரம் அப்பு உள்ளே நுழைந்தான்.

“ஏய் ஆதி... நான் இருக்கும் போதே அவரைக் கத்திய வச்சு மிரட்டுற நீ?” அவன் சிரிப்புடன் கேட்க, “இந்த அநியாயத்தை நீங்கதான் கேட்கணும் ப்ரோ!” என தேவா அவனுடன் கூட்டு சேர்ந்தான். ஆதிரை அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு சமையலைத் தொடர்ந்தாள்.

“ஏன் ப்ரோ... இப்பவே கத்தியெல்லாம் வருதே. நான் இல்லைன்னா அடிப்பாளா?” அப்பு தாடயைத் தடவ, “டெபனட்லி அப்பு... இதுவரைக்கும் நிறைய டைம் வாங்கி இருக்கேன்!” எனத் தேவாவும் விளையாட்டாய்ப் பேச, “ரெண்டு பேரும் வெளிய போங்க...” என அவர்களை விரட்டிய ஆதிரை சமைத்து முடித்திருந்தாள்.


கூடத்திலிருந்த நாற்காலியை அவள் கடினப்பட்டு நகர்த்த, “என்கிட்ட சொல்ல வேண்டியது தானே?” என மெல்லிய அதட்டலுடன் தேவா அவளுக்கு உதவ, அப்பு அறியாது அவனை முறைத்தாள் இவள்.

பின்னர் பாயை விரித்து சமைத்த உணவுகளை எடுத்து வந்து வைத்தாள். அவள் கூறும் முன்னே அப்பு கீழே அமர்ந்து தட்டை எடுத்து தனக்குத் தானே பரிமாறினான்.

“நான் வர மாட்டேனா டா?” என மென்மையாய் கடிந்தவள், “அபி... அப்புறம் விளையாடலாம். வந்து சாப்பிடு!” என அதட்டி அவனை அமர வைத்தவள், நின்று கொண்டிருந்த தேவாவை நிமிர்ந்து முறைத்தாள்.

“உங்களுக்கு தனியா சொல்லணுமா? வந்து உக்காருங்க!” அவள் அதட்ட, தேவா புருவத்தை உயர்த்தியபடியே அவளுக்கு அருகே அமர்ந்தான்.

மூவருக்கும் அவள் பரிமாற, “நீயும் சாப்பிடு ஆதி...” என அவளுக்கும் ஒரு தட்டை வைத்தான் தேவா.

“இல்லை, நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறம் சாப்ட்டுக்கிறேன்!” என சமாளிப்பாய் சிரித்தவள், மனதிற்குள்ளே அவனை முறைத்தாள்.

“ஆதி, இத்தனை வருஷமானாலும் உன்னோட குக்கிங் டேஸ்ட் மாறவே இல்லை. செம்மையா இருக்கு. பிரியாணிக்கு அப்புறம் நான் லைக் பண்றது உன்னோட தேங்காய் சாதம்தான்!” சிலாகித்து உண்டான் அப்பு. இவள் சின்ன சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.

அவன் வேகவேகமாக சாப்பிட்டதால் இருமல் வர, “மெதுவா சாப்பிடு டா, பொறுமை அவசியம்!” என அவன் தலையில் தட்டியவளை தேவாவின் விழிகள் சற்றே பொறாமையுடன் தொட்டு மீள, வேண்டுமென்றே இவனும் இருமினான். ஆதிரை அவனை முறைத்தாள். மீண்டும் மீண்டும் இருமினான்.

“ப்ம்ச்... தண்ணியை குடிங்க...” அவனருகே தண்ணீர் குவளையை நகர்த்தி வைத்தவள் ஏகத்துக்கும் அவனை முறைத்தாள். தேவா அதையெல்லாம் புறந்தள்ளி நீரைக் குடித்துவிட்டு உண்டு முடித்து எழுந்திருந்தான்.

“பையன் ரொம்ப சைலண்டா ஆதி?” தட்டில் உணவோடு கோலம் போட்டுக் கொண்டிருந்த அபியைப் பார்த்து அப்பு கேட்டான்.

“ஹம்ம்... அது, புதுசா யாரையும் பார்த்தா அவ்வளோ சீக்கிரம் அட்டாச்சாக மாட்டான் அவன்...” அபியைப் பார்த்தவாறே பதிலளித்தாள்.

“அபி, உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?” அப்பு கேட்டதும் சின்னவன் திருதிருவென விழித்து பதில் கூறாதிருக்க, “அபி... தட்டுல என்ன விளையாடீட்டு இருக்க. இங்க வா, அம்மா ஊட்டுறேன்...” என தட்டை வாங்கி ஆதிரை அவன் வாயில் உணவை
அடைத்துவிட்டாள்.

தேவா அவளுக்கு அருகே அமர்ந்து ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தவன், “அப்படியே நீயும் சாப்பிடுமா... மணி எத்தனைன்னு பாரு!” என மென்மையாய் அவளைக் கடிந்தவனை நிமிர்ந்து சில நொடிகள் சலனமற்றுப் பார்த்த ஆதிரை எதுவும் கூறாது உண்டாள்.

எல்லாவற்றையும் அவள் உண்டு முடித்து சமையலறைக்குள் எடுத்து வைக்க, அப்பு கிளம்புகிறேன் என்று வந்து நின்றான்.

“ஏன் அப்பு... இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்ல. அதுக்குள்ளேயும் கிளம்பணுமா?” ஆதி கேட்க, அவளுக்கு அருகே வந்து தோளோடு அணைத்தவன், “இல்ல ஆதி, எனக்காக எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க. நான் இன்னொரு நாள் பொறுமையா வந்து டைம் ஸ்பெண்ட் பண்றேன்!” என்றான். இவளும் புன்னகையுடன் தலையை அசைக்க, தேவா அருகே சென்று அவனை இறுக அணைத்தான்.

“தேங்க் யூ சோ மச் ப்ரோ!” என அவன் கூறவும், இருவரும் அவனைக் கேள்வியாகப் பார்த்தனர்.

“அன்எக்ஸ்பெக்டட் விசிட். ஆதியைப் பார்த்ததுல ஐ யம் சோ ஹேப்பி!” என்றான். தேவா சின்ன புன்னகையுடன் அதை ஏற்றான்.

“ஆதி... மறக்காம அவரும் நீயும் நெக்ஸ்ட் வீக் பார்ட்டிக்கு வரணும்!” என அவள் கையைப் பிடித்து அழுத்தினான்.

ஒரு நொடி பார்வையை தேவாவிடம் திருப்பியவள், “வரோம் டா!” என்றாள். அப்பு இருசக்கர வாகனத்தில்தான் வந்திருந்தான். தேவாவும் ஆதிரையும் கீழே சென்று அவனை வழியனுப்பி வைத்தனர்.

அவன் அகன்றதை உறுதிப்படுத்திய ஆதிரை தேவாவின் புறம் திரும்பினாள். இத்தனை நேரம் மென்மையாயிருந்த முகம் இப்போது கோபத்தில் கடுகடுத்தது. “அப்படியே கிளம்பிடலாம்னு நினைக்காதீங்க. மேல வாங்க, உங்ககிட்டே பேசணும்!” பற்களை கடித்துக் கொண்டு கூறி முன்னேற, “ரொம்ப சூடா இருக்கா போல...” என முணுமுணுத்த தேவா அவள்பின்னே சென்றான்.


ஆதிரை படபடவென பொரியும் முன்னே தேவா ஒரே வார்த்தையில் அவள் வாயை அடைத்திருந்தான். அவள் என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது தவித்துப் போனாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Adei ne ipadi pesurathu ah ketu engalukkae mayakam vandhudum pola ne innum enna solli aadi oda vai ah adichi irupa vera yosichi mayangi yae vizhundhuduvom confirm ah aniyathuku change aagi irukan pa irundhalum ithuvum nalla than iruku
 
Well-known member
Messages
964
Reaction score
712
Points
93
Semmmmmmmaaaaa superrrrrrrrr ud

Apdi enna solli ice vachaan nu theriyalaye
 
Top