- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 18 
தேவாவின் கூற்றில் ஆதிரை அதிர்ந்து விழிக்க, அவன் நொடியில் அவளிடமிருந்து விழிகளைத் திருப்பி அதிவேகத்துடன் வாகனத்தை செலுத்த, இவளுக்குப் பயமாகப் போயிற்று.
“சார், ப்ளீஸ்... கொஞ்சம் ஸ்லோவா போங்க. இந்த டைம்ல இவ்ளோ ஸ்பீட் நல்லதுக்கு இல்ல!” அவள் பயந்து தயக்கத்துடன் கூறவும், அவன் நிதானித்தான்.
“சாரி!” அவன் இதழ்கள் முணுமுணுக்க, மிதமான வேகத்துடன் வாகனத்தை இயக்க, ஆதிரைக்கு அவன் பேச்சின் சாராம்சம் சுத்தமாகப் புரியவில்லை. என்ன கூறினான் என மூளையைத் தட்டி யோசித்தும், அவளால் வேறு எப்படியும் யோசிக்க முடியவில்லை.
அதுவும் தேவாவை அவள் எந்த விதத்திலும் தவறாக யோசிக்கவில்லை. அவனைக் கடந்த ஐந்து வருடங்களாகத் தெரியும். ஒரு தவறான பார்வையோ? பேச்சோ ஏன் அவளிடம் சிரித்துக் கூட ஒரு வார்த்தை அதிகமாகப் பேசியது இல்லை. அலுவல் சம்பந்தப்பட்ட பேச்சும் மட்டும்தான். அதைத் தவிர்த்து வீண் பேச்சுகள் ஒருநாளும் இருந்தது இல்லையே. அதனாலே மனம் குழம்பித் தவித்தது.
தேவா முன்புறக் கண்ணாடி வழியே அவள் முகத்தைதான் பார்த்திருந்தான். அவனுக்கும் புரியாமல் இல்லை. இப்போது எதைக் கூறினாலும் அவனால் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க முடியாது. இந்த தடுமாற்றம் அவனில் பெருவெடிப்பை உண்டு செய்திருந்தது. முதலில் அவனை அவனாக சமாளிக்க வேண்டி இருந்தது. தன்னை நிதானப்படுத்த முனைந்தான். மூச்சை வெளிவிட்டு பார்வையை சாலையில் பதித்தவன் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
ஆதிரை வீட்டிற்கு முன்னே அவன் வாகனத்தை நிறுத்தியதும், அவள் இறங்கி முன்புற ஜன்னல் வழியே அவனைத் தயக்கமாகப் பார்த்தாள்.
தேவாவும் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், “சாரி ஆதிரை, ரொம்ப பயப்பட வச்சுட்டேன்னா?” எனக் கனிவாய்க் கேட்டான். இந்தக் குரல் அவளுக்குப் புதிது. சிடுசிடுவென கடுஞ்சொற்களை உதிர்க்கும் தேவாவிடம் இத்தனை மென்மையை அவள் எதிர்பார்க்கவில்லை.
சில நொடிகள் மௌனமாய் இருந்தவள், “கொஞ்சம் பயந்துட்டேன் சார்...” என்றுவிட்டு, “நீங்க எமோஷனலா ரொம்ப டிஸ்டர்பா இருக்கீங்க போல. அதான் இப்படி பிஹேவ் பண்ணீங்களா சார் இப்போ நீங்க ஓகேவா சார்?” எனத் தயங்கிக் கேட்டவளை அவன் அமைதியாகப் பார்த்தான். அவள் வார்த்தையில் சக மனிதர்களின் மீதான கரிசனத்தில் உதிர்ந்த வார்த்தையிலும் அவள் அருகாமை மனதிற்குள் மென்மையாய் சுகமாய் இறங்கிற்று. தயங்கித் தவித்த உதடுகளும் அவன் முகம் பார்த்த விழிகளும் இவனை தடுமாறச் செய்தன. குளிருக்கு இதமாய் இந்தப் பெண்ணிடம் சுருண்டு வெப்பத்தை தேட முனையும் உடலும் மனதும் கட்டுக்கடங்காது அலைபாய்ந்தது.
இதே மனதுதான் பெண் துணை இன்றி உன்னால் வாழ முடியும் என சொற்பொழிவாற்றியது. ஆனால் இன்றைக்கு இந்தப் பெண்ணின் அண்மையில் அவள் மீதான தனக்கு புதிதாய் முளைத்த பிரியத்தில் அவளுடன் வாழ்க்கையை பகிர்ந்துவிட வேண்டும் என்றொரு சுகமான பேராசை மேலேழுந்து அவனை உந்தித் தள்ளியது.
அவள் கூற்றை ஆமோதிப்பது போல தலையை அசைத்தவன், “அகைன் ஐ யம் சாரி... நீ எதுவும் தப்பா நினைக்கலையே?” என சங்கடமாய் முணுமுணுத்தவன் பார்வையை அவளிடமிருந்து திருப்பினான். மனம் அந்த விழிகளைப் பார்த்து பேசும் திராணியற்றுப் போனது.
“உங்களை என்னால தப்பா நினைக்க முடியலை சார். ஆஸ் யூ செட், யூ ஆர் டிஸ்டர்ப்ட் பை சம் ஒன்? பட் அது நானா இருக்க வாய்ப்பே இல்லை சார்?” சரியாய் யூகித்து மென்மையான முறுவலுடன் மறுப்பைத் தெரிவித்தவளை சில நொடிகள் ஆழப் பார்த்தவனின் உதடுகளில் மென்முறுவல் படர்ந்தது.
“நோன்னு பொய் சொல்ல மாட்டேன் ஆதிரை, நீதான் என்னை டிஸ்டர்ப் பண்ற. ஐ க்நோ, உன்னைப் பத்தி எதுவுமே தெரியாம இப்படி பேசுறது நாட் ஃபேர். பட், ஐ காண்ட் கன்ட்ரோல் மை செல்ஃப். யூ மேட் மீ ஸ்டன்ட். இதை ஜஸ்ட் அட்ராக்ஷன்னு உதறித் தள்ள முடியலை. டீனேஜ்ல வந்திருந்தா அட்ராக்ஷன்னு அதுக்குப் பேர் வச்சிருப்பேன். பட், இப்போ இதை லவ், நேசம், காதல்... ம்ஹூம்... எனக்குப் பெருசா காதல்ல எல்லாம் நம்பிக்கையே இல்லை. உன் கூட ட்ராவல் பண்ணா என் லைஃப் நல்லா இருக்கும்னு மனசு சொல்லுது.
எவ்வளவோ யோசிச்சும் எனக்குள்ளயே தோத்துட்டேன். அதனாலதான் இப்போ வார்த்தையா சொல்லிட்டேன் ஆதிரை!” அவள் விழிப் பார்த்து தயங்கி மனதில் உள்ள பிரியத்தை வார்த்தைகளில் வடித்து ஒருவாறாகக் கூறி முடித்திருந்தான். இதயம் மட்டும் அதனிருப்பை இரண்டு மடங்கு உறுதி செய்து தொலைத்தது.
கொஞ்சமே கொஞ்சம் சங்கடமாக போயிற்று அவனுக்கு. இத்தனை வயதில் ஒரு பெண்ணிடம் பிடித்தம் என நிற்கிறான். அவன் வாழ்நாளில் இப்படியொரு நாளொன்று உதிக்கும் எனக் கிஞ்சிற்றும் எண்ணி இருக்கவில்லை. ஆனால் இந்நொடி ஆதிரையைத் தவிர வேறொருவரும் அவனுடைய வாழ்க்கைக்குப் மிகப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். அவளுடைய கடந்த கால வாழ்க்கை, அவள் குழந்தை என எல்லாமே அவன் சிந்தையில் பின் சென்று ஒளிந்து கொள்ள, ஆதிரைக்கான பிரியம் மட்டுமே இந்நொடி அவனை ஒரு பெண்ணிடம் மண்டியிடச் செய்திருந்தது. பரிபூரணமாக இந்தப் பெண்ணிடம் அடிபணிவதில் தவறில்லை என நேசம் கொண்ட நெஞ்சம் இவளிடம் உருகிப் போயிருந்தது.
ஆதிரையின் முகத்தில் முதலில் அதிர்ச்சி படர்ந்தாலும் பின்னர் உதடுகளில் வலிய புன்னகையைப் புகுத்தியவள், “சாரி சார், நீங்க நிஜமா ஏதோ குழப்பத்துல இருக்கீங்க. நல்லா தூங்கி எழுந்தா சரியா போய்டும்!” சற்று முன்னர் அபியிடம் பேசிய அதே குரல்தான். கோபப்படாமல் அவனுக்குப் புரிய வைத்திடும் நோக்கில் பேசினாள்.
தேவாவின் உதடுகளில் மெதுவாய் புன்னகை ஏறின.
“ஹம்ம்... தூங்கி எழுந்து சரியாகலைன்னா என்ன பண்ணலாம் மேடம்?” எனக் குறும்பாய்க் கேட்டவனை திகைத்துப் பார்த்தவள்,
“டாக்டர்ட்ட போங்க சார், க்யூர் ஆகிடும்!” என்றுவிட்டு “தேங்க் யூ சோ மச் ஃபார் யுவர் ஹெல்ப் சார். இனிமே உங்களை நம்பி கார்ல வர மாட்டேன்!” என்றாள் இழுத்துப் பிடித்த புன்னகையுடன். உன் பேச்சு எனக்கு உவப்பாய் இல்லை. இத்தோடு கிளம்பிவிடு என்று அவள் உதடுகள் உதிர்க்காத வார்த்தைகளை முகம் காண்பித்துக் கொடுத்தது.
“இந்த மாதிரிலாம் சொல்லாத ஆதிரை. லைஃப் லாங்க் என் கூடதான் ட்ராவல் பண்ணணும். நான் டிசைட் பண்ணிட்டேன்!” அவன் கூற்றில் உள்ளம் அதிர்ந்தாலும் ஆதிரை அமைதியாக அவனைப் பார்த்தாள். தேவா ஆதிரையை மணம் முடிப்பதில் தீவரமாய் இருந்தான். சர்வ நிச்சயமாக அவள்தான் தன் வாழ்க்கை துணை என மனம் முன்முடிவொன்றைத் தனக்குள்ளே எடுத்தது.
“நீங்க எதை நினைச்சு இதை சொல்றீங்கன்னு எனக்குத் தெரியாது சார். பட், எனக்கு இந்த மாதிரி பேச்செல்லாம் சுத்தமா பிடிக்கலை. உங்ககிட்டே நான் ஐஞ்சு வருஷமா வேலை பார்க்குறதுக்கு ஒரே ரீசன் நீங்க ஜென்யூன் பெர்சன். தனியா இருக்க பொண்ணுன்னு என்கிட்ட எந்த அட்வாண்டேஜூம் எடுத்துக்கிட்டது இல்ல. இப்போ வரை உங்க மேல எனக்கொரு மரியாதை இருக்கு. இதே மாதிரி பேசிட்டு இருந்தீங்கன்னா, அப்புறம் மரியாதை காணாமப் போய்டும்!” சிரித்துக் கொண்டே கூறினாள் ஆதிரை.
அமைதியாக அவளைப் பார்த்த தேவா, “ஐ வாண்ட் டு மேரி யூ மிஸ் ஆதிரையாழ். ஐ யம் நாட் ஜோக்கிங்!” என்றான் அவள் விழிப்பார்த்து தயங்காது. அவனுக்குமே ஆதிரையின் மனம் புரிந்தே இருந்தது. ஒரு குழந்தையுடன் தனித்திருக்கும் பெண்ணிடம் திருமணம் என்று வந்து நின்றால், நிச்சயமாக அவளால் நல்லவிதமாக யோசிக்க முடியாது. இந்த சமூகம் அவளை யோசிக்க விடாது என்பதே உண்மை.
அவன் கூற்றில் மனம் திடுக்கிட்டாலும் ஆதிரை முகம் மாறாதிருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டே, “ஐ யம் நாட் இன்ட்ரெஸ்டட் சார். நீங்க மிஸ் மிஸ்னு கூப்பிட்றதால நான் சிங்கிள் இல்லை. ஆல்ரெடி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு எட்டு வயசுல குழந்தை கூட இருக்கு. உங்களுக்கு கூடத் தெரியும்னு நினைக்குறேன். மறந்துட்டு என்கிட்ட இந்த மாதிரி பேசுறீங்களா?” கோபம்தான். ஆனால் குரலை உயர்த்தாது அமைதியாகக் கேட்டாள்.
“ஐ க்நோ, உனக்கு பேபி இருக்குன்னு எனக்குத் தெரியும் ஆதி. எல்லாம் தெரிஞ்சுதான் கேட்குறேன், ஐ வாண்ட் டூ மேரீ யூ...” என்றான். ஆதிரை அவன் கண்களை நேரே உற்று நோக்கினாள். அவனிடம் சிறு தடுமாற்றமோ சலனமோ பொய்யோ இல்லை. மறுநொடியே அழுத்தமாக முடியாது எனத் தலையை அசைத்தாள்.
அவன் ஏதோ கூற வரும் முன்னே, “ம்மா...” என அபினவ் வரவும் அந்தப் பேச்சு முற்றிலும் தடைபட்டு போனது. அபி தேவாவைப் பார்த்ததும் புன்னகைத்தான்.
“ஹாய் அபி!” அவன் கையை உயர்த்த, “ஹாய் அங்கிள்...” என இவனும் பற்கள் தெரிய புன்னகைக்க, தேவா மகிழுந்திலிருந்து ராகினிக்காக வாங்கி வைத்த இன்னெட்டுகளை சின்னவனிடம் கொடுக்க, அவன் நிமிர்ந்து ஆதிரையைப் பார்த்தான்.
அவள் தலையை அசைத்ததும், “தேங்க்ஸ் அங்கிள்...” எனக் குஷியுடன் அதைப் பெற்றுக் கொண்டு படிகளில் கடகடவென ஏற, “நான் வரேன் ஆதி...” என்றவனுக்கு அவள் பதிலே உரைக்கவில்லை.
“டீனேஜ் பையன் மாதிரி என்னை உன் பின்னாடி சுத்த வசுட்டாதம்மா!” முணுமுணுப்புடன் ஆதிரையைப் பார்த்தவாறு அவன் அகல, அவள் அவனை முறைத்துப்
பார்த்தாள். தேவாவின் உதடுகளில் முறுவல் பூத்தது.