- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 17 
விழிகள் சாலையில் பதிந்திருந்தாலும் கவனம் என்னவோ அங்கில்லை. கைகள் மகிழுந்தின் திசை மாற்றியில் லாவகமாகத் திருப்ப, சிந்தனையில் சுருங்கிய நெற்றியோடு தேவா அந்த சாலையில் பயணித்தான்.
நேற்றைக்கு நடந்த சம்பவத்தை எத்தனையோ முறை அலசி ஆராய்ந்து விட்டான். முடிவாக மனம் இந்தப் பெண்ணிடம் தலைக் குப்புற விழுந்துவிட்டதை ஒருவாறாக தன்முனைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு ஒப்புக் கொண்டிருந்தான். ஆதிரையைப் பற்றி எதுவுமே அவனுக்குத் தெரியாது. ஏன் அவளுக்கு ஒரு மகன் இருப்பதே வெகு சமீபத்தில் தானே அவன் அறிய வந்தது.
திருமணம் என்ற வரையறைக்குள் அடங்காது குழந்தையை மட்டும் வளர்ப்பவளை எந்தக் கட்டுக்குள்ளும் அவனால் அடக்க முடியவில்லை. ஒருவேளை அவள் காதலனுடன் சண்டையிட்டு மனம் ஒத்து வராமல் பிரிந்திருந்திருக்கிறாள் என்றால், இந்நிலையில் தேவா தன் அவளிடம் விருப்பத்தை தெரிவிப்பது சுத்த அபத்தமாய் தோன்றுமே.
சண்டையிட்டவர்கள் நாளையே சமாதானம் அடைந்து ஒன்றாய் வாழ விருப்பம் கொண்டால் என்ன செய்வது? அல்லது அந்தக் குழந்தையை ஆதிரை தத்தெடுத்து வளர்க்கிறாளோ? இல்லை சொந்தக்காரக் குழந்தையாக இருக்குமோ என மனம் பலவிதமான கற்பனைகளை வாரி இறைத்தது. முதலில் அவளது பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர்தான் தன்னுடைய விருப்பத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
அவளைப் பற்றி அடியும் நுனியும் அறியாது பிடித்திருக்கிறது என்றோ திருமணம் என்றோ ஒரு பெண்ணிடம் எப்படி கேட்க முடியும். அதுவும் ஐந்து வருடங்களாக அவனிடம் வேலை பார்க்கும் ஒரு சக ஊழியர் அவள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யும் ரகமில்லை தேவா. உழவர் துணைக்கு சென்றதும் முதல் வேலையாக ஆதிரையின் சுய விவரக் குறிப்பை எடுத்துப் பார்க்க வேண்டும் என எண்ணியபடியே பயணிக்க, “சார்... சார்!” என்ற குரலில் அவன் கவனம் கலைந்தது.
சுபாஷ் பேருந்து நிலையத்திலிருந்து இவனது மகிழுந்தைப் பார்த்து கத்தினான். தேவா அவனருகே சென்று வாகனத்தை நிறுத்த, “சார், நானும் ஃபர்ம்க்குதான் வரேன் சார். ட்ராப் பண்றீங்களா?” என அவன் வினவ, தேவா தலையை அசைக்கவும் முன்னே ஏறியமர்ந்தான்.
“உங்க பைக் இன்னும் சர்வீஸ் பண்ணி வரலையா சுபாஷ்?” தேவா சாலையைப் பார்த்து வாகனத்தை ஓட்டிக் கொண்டே வினவினான்.
“ப்ம்ச்... அதை ஏன் சார் கேட்குறீங்க? நான் எப்பவும் விட்ற மெக்கானிக் ஷாப்லதான் விட்டேன். அந்தப் பையனோட தாத்தா செத்துட்டார்னு கடையை அடைச்சுட்டு ஊருக்குப் போய்ட்டான். வீக் எண்ட் வந்து பைக்கை தரேன்னு சொல்லிட்டான் சார். அதுவரை பஸ்லதான் போய்ட்டு வரணும்!” சலிப்பாய் உரைத்தான்.
“ஆட்டோல வர வேண்டியது தானே சுபாஷ், வெயில்ல ஏன் நடந்து வரீங்க?”
“ஹக்கும்... வீட்ல இருந்து இங்க பஸ்ல வரவே இருபது ரூவா தான் சார். பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நம்ப பர்ம்க்கு வர எம்பது ரூபா கேட்குறான் ஆட்டோகாரன். இப்போலாம் கொள்ளை அடிக்குறாங்க சார்!” அவன் கடுப்புடன் கூறினான். இருவரும் உழவர் துணையைச் சென்றடைய, சரியாய் அதே நேரம் ஒரு தானி வந்து நின்றது. ஆதிரை அதிலிருந்து இறங்கினாள்.
“என்ன ஆதி, ஸ்கூட்டி என்னாச்சு? ஆட்டோல வர?” சுபாஷ் அவளுக்கு அருகே வந்தான். கடந்த சில நாட்களாக பன்மை விளிப்பு எல்லாம் காணாமல் போயிருந்தது.
“வர்ற வழியில ஸ்கூட்டி ரிப்பேர் ஆகிடுச்சு சுபாஷ், அதான் ஒரு மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டு வந்தேன்!” என்றவாறே உள்ளே நடந்தாள். சுபாஷூம் அவளுடன் செல்ல, தேவா அவர்களைத்தான் பார்த்திருந்தான்.
தேவா வரும்போது வெளியே ஒருவர் நின்றிருந்தார். தேவாவை நோக்கி அவர் வர, “ஹாய் சார், சாரி நேத்து எனக்கு ஒரு இம்பார்டெண்ட் வொர்க். அதான் உங்களை வர வேண்டாம்னு சொல்லிட்டேன்!” என்றவாறே அவரை அழைத்துக்கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
“இட்ஸ் ஓகே சார், நானும் சண்டே கூட வேலையைக் கட்டி அழணுமான்னு புள்ளைங்களோட தியேட்டர்க்குப் போய்ட்டேன்!” அவர் புன்னகை முகமாகக் கூற, இவனும் முறுவலித்தான். அவர்கள் நடத்தி வரும் ஆண்கள், பெண்கள் விடுதிக்கு தினமும் பால் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர் கூற, இவன் அவர்களது செயலியைப் பற்றிக் கூறினான்.
“ஆப்ல மந்த்லி சப்ஸ்க்ரிப்ஷன் இருக்கு சார். உங்களுக்கு எந்தப் ப்ளான் ஓகேன்னு பாருங்க சார். இயர்லி மெம்பர்ஷிப் கார்ட் போட்றவங்களுக்கு ஆஃபர் கூட இருக்கு!” என்றவன் அவரை ஒப்புக் கொள்ள வைத்து பண்ணையை ஒருமுறை சுற்றியும் காண்பித்தான்.
பளபளவென்றிருந்த வேலை நடக்கும் இடமும் தலைக்கவசம் முதல் கையுறை வரை அணிந்திருந்த ஊழியர்களும் அவருக்கு வெகு திருப்தியை அளிக்க, முன்பணத்தை செயலியில் கட்டிவிட்டு அவர் விடை பெற்றார்.
ஆதிரை அந்த வாடிக்கையாளர் சென்றதும் அவனது அறைக்குள் நுழைந்தாள். தேவா கேள்வியாகப் பார்க்க, “சார், இது நான் எப்பவும் போற ஹாஸ்பிடல் அட்ரஸ். அவங்களுக்கு பேஷண்ட்க்கு கொடுக்க பசும்பால் டெய்லி சப்ளை பண்ணணும் கேட்டாங்க. அதான் நம்ப பர்மைப் பத்தி சொன்னேன். நேர்ல வர முடியாது. ஃபோன்ல காண்டாக்ட் பண்றேன்னு சொல்லி இருக்காங்க!” என அவள் பேசியதைக் கேட்டு தலையை அசைத்தான்.
“ஓகே ஆதிரையாழ், ஃபோன் பண்ணா நான் பேசிக்கிறேன். பால் எவ்வளோ ஸ்டோரேஜ் இருக்கு. இப்போ ஒரு ஆர்டர் எடுத்துருக்கேன். சோ, நம்பளோட ப்ரக்யூர்மெண்ட் அதிகப்படுத்தணும். பால் கொடுக்க வர்றவங்கள்ல வேற யாரும் ரிலேட்டீவ்ஸ் இருந்தாலும் வர சொல்லுங்க. லிட்டர் பாலுக்கு ஐஞ்சு ரூபா அதிகமா தர்றதா சொல்லுங்க. அப்போதான் இன்னும் நிறைய பேர் பால் குடுக்க வருவாங்க!” அவன் கூறியதைக் கேட்டவள்,
“நமக்கு ப்ராபிட்ல இடிக்காதா சார்?” அவள் தயங்கினாள்.
“யெஸ்... ப்ராபிட் குறையும். பட் கஸ்டமர்ஸ் நிறைய கிடைப்பாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல நியூ இயர் வருதே. புது வருஷத்துல இருந்து பால் லிட்டருக்கு பத்து ரூபா இன்க்ரீஸ் பண்ணிடுவோம்!”
“டெய்லி பத்து ரூவான்னா மாசத்துக்கு மூன்னூறு ரூபா. கஸ்டமர்ஸ் யோசிக்க மாட்டாங்களா சார்?” அவள் தயங்க,
“யெஸ் யோசிப்பாங்கதான். ஆரோக்யா பால் ஒரு லிட்டர் எவ்வளோ?” அவன் கேட்டதும்,
“செவன்டி ஃபைவ் ருபீஸ் சார்!”
“ஹம்ம்... நம்பளோட பால் ஒரு லிட்டர் எவ்வளோ?”
“ஐம்பது ரூபா சார்!”
“ஓகே... நம்ப க்வாலிட்டில எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்றோமா என்ன?”
“இல்ல சார், வீ டிட் எவ்ரிதிங்க் ப்ராப்பர்லி டூ சர்வ் க்வாலிட்டி ப்ராடெக்ட்!”
“ரைட்... நம்ப எந்த இடத்துலயும் காம்ப்ரமைஸ் ஆகாம நல்ல தரமான பாலைக் குடுக்குறோம். ஒரு பத்து ரூபா அதிகமா போட்டு வாங்குறதுல தப்பில்லை. அண்ட் பாட்டிலோட சைஸ் அதிகப்படுத்துங்க. அதோட திக்னெஸும் அதிகப்படுத்துங்க. சோ, அதே அளவு பால்தான் நம்ப சர்வ் பண்ண போறோம். பட், வாங்குறவங்களுக்கு அளவு அதிகமான ஃபீல் வரும். நம்ப சேல்ஸூம் பாதிகப்படாது!” தேவா கையிலிருந்த வண்ணக் கல்லை உருட்டியபடிக் கூறவும், ஆதிரை ஒரு நொடி வியந்து பின் தலையை அசைத்து வெளியே வந்தாள்.
‘ப்ரிலியண்ட்!’ தேவாவை அவள் மனம் வியந்தது.
அவள் அகன்றதும் தேவா ஆதிரை வேலைக்கு சேரும்போது கொடுத்த சுயவிவரக் குறிப்பு, சான்றிதழ் நகல் அனைத்தையும் எடுத்துப் பார்த்தான். பாதுகாவலர் இடத்தில் யாரையும் அவள் குறிப்பிடவில்லை. பெற்றோர் தகவலில் ஒருவர் பெயரும் இல்லை. அவன் குழம்பிப் போனான். அவளின் பெயர், படிப்பு, தற்போதைய வீட்டின் முகவரி, லண்டனில் அவள் படித்த பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிட்டிருந்தாள். அவளைப் பற்றி எந்த தகவலும் ஆதிரையைத் தவிர யாராலும் கூற முடியாது எனப் புரிந்தது. அவளிடமே கேட்கலாம் என்றால் எந்த உரிமையில் கேட்பான்.
இதுவரைக்கும் இந்தப் பெண்ணிடம் நட்பாய்க் கூட அவன் பேசியிருக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவளுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய கேள்வியைக் கேட்பது அபத்தமாகத் தோன்றிற்று. என்ன செய்து ஆதிரையைப் பற்றித் தெரிந்து கொள்வது என சிந்தனையில் ஆழ்ந்தான்.
“சார், ஸ்டோரேஜ் மிஷின்ல ஏதோ ஃபால்ட். பால் லீக்காகுற மாதிரி இருக்கு!” சுபாஷ் வந்து கூறியதும் ஆதிரையைப் பற்றிய எண்ணத்தைக் கிடப்பிலிட்டவன் விரைந்து சென்று என்னவெனப் பார்த்தான். இயந்திரம் பழுது பார்ப்பவருக்கு அழைத்தான்.
காலையில் வேலை இருப்பதால் மதியத்திற்கு மேல் அவர் வருவதாக கூற, வேலை அப்படியே நின்று போனது. தேவா வேறு நபரை அழைத்து வரலாம் என கிளம்ப, தர்ஷினியும் கோமதியும் கதையளக்கத் தொடங்கினர். ஆதிலா அவர்களுடன் சேராது அலைபேசியில் மூழ்கினாள்.
“ப்ம்ச்... அங்க ஸ்டோரேஜ் மிஷின்ல தானே ப்ராப்ளம். நீங்க ஏன் வேலை எதுவும் செய்யாம ஓபி அடிக்குறீங்க? ஈவ்னிங்குள்ள சரி பண்ணிடுவாங்க. நம்ப சாம்பிள் டெஸ்ட் பண்ணி முடிச்சாதான் பாலை ஸ்டோர் பண்ண முடியும். க்விக்!” ஆதிரை அவர்களை அதட்ட, சோம்பேறித் தனத்தோடு தர்ஷினி மெதுவாய் வேலை செய்ய, கோமதியுமே அப்படித்தான் இருந்தார்.
“ஆதிலா, லஞ்ச் டைம்ல ஃபோன் பேசிக்கலாம். இப்போ வேலையைப் பாருங்க!” அவள் கொஞ்சம் கடுமையைக் கூட்டி உரைக்கவும், மூவரும் முகத்தை சுளித்தாலும் வேலை செய்தனர்.
இவள் இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தாள். பொத்தல்கள் எல்லாம் கழுவாது அப்படியே பெட்டியில் இருக்க, மூன்று பெண்களும் ஒரு ஓரமாய் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தனர்.
“அக்கா, டீ டைம் இன்னும் வரலையே!” என்றவள், “சீக்கிரம் டீயைக் குடிச்சிட்டு பாட்டிலைக் கழுவி மெஷின்ல லோட் பண்ணுங்க கா!” என்றாள் அதட்டலான குரலில்.
“மேடம், அதான் பாலே மிஷின்ல இல்லையே?” மூன்று பெண்களில் ஒருவர் அங்கலாய்க்க, “ஒன் ஹவர்ல மிஷின் ரெடியாகிடும். நீங்க உங்க வேலையை சரியா பாருங்க. இல்லைன்னா நைட்டு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போக முடியும். அப்புறம் உங்க இஷ்டம்!” எனக் கடுப்பானவள், அனைவரையும் அதட்டி வேலை வாங்கினாள். சுபாஷூம் அவளுடன் இணைய, குளிரூட்டும் அறையில் பால் எவ்வளவு இருப்பில் உள்ளது எனப் பார்த்தனர்.
“கண்டிப்பா இது நாளைக்கு பத்தாது சுபாஷ். இப்போ மெஷின் ரிப்பேர் பண்ணலைன்னா நாளைக்கு சப்ளை பண்ண முடியாது!” என்றவள், “பேசாம ஹரி சாருக்கு கால் பண்ணிட்டு அந்தப் பிராஞ்ச்க்கு பாதி பாலை அனுப்பிடலாமா?” எனக் கேட்டாள்.
“ஆதி, தேவா சார்கிட்டே கேட்டுடலாம்!” என்ற சுபாஷ் அவனுக்கு அழைப்பை விடுக்க, அவன் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறான் என்ற பதிலே திரும்ப திரும்ப கிடைத்தது.
மதிய உணவு நேரம் வந்துவிட, உண்டு முடித்த ஆதிரை ஹரிக்கு அழைத்து கேட்கவும், “ஓகே ஆதிரை, அனுப்பிவிடுங்க. இங்க இன்னைக்கு வொர்க் லோட் கம்மிதான்!” என அவன் கூறவும், அலுவலகத்தின் வாகனத்திலே பாலை ஏற்றி அனுப்பி விட்டாள்.
“ஆதி, சாரைக் கேட்காம பண்றோமே, அவர் எதுவும் திட்டிடப் போறாரு!” சுபாஷ் யோசனையுடன் கேட்க, “அவர் இருந்தா இதான் பண்ணிருப்பாரு சுபாஷ். சோ டோன்ட் வொர்ரீ!” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே தேவா ஆட்களுடன் வந்துவிட்டான்.
“சார், ஆதி அந்த ப்ராஞ்ல ஹரி சாருக்கு கால் பண்ணிப் பேசிட்டு பாதி பாலை அங்க அனுப்பிட்டாங்க!” சுபாஷ் தயக்கத்துடன் கூற, “ஐ க்நோ, இப்போதான் ஹரிகிட்டே பேசுனேன் சுபாஷ். நானே சொல்லலாம்னு நினைச்சேன். ஷி டிட் இட்!” என்றவன் ஆதிரையைத் தேட, அவள் ஆய்வகத்தில் இருந்தாள். வேலை எல்லாம் சரியாய் நடந்து கொண்டிருக்க, அவள்தான் காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது.
வந்திருந்த ஆட்கள் இயந்திரத்தை பழுது நீக்கி, பாலை வடிகட்டி அதில் சேமித்து பொத்தலில் நிரப்பி குளிரூட்டும் அறைக்கு எடுத்துச் செல்லும் போது மணி ஆறைத் தொட்டிருந்தது. ஆதிரையும் அப்போதுதான் மடிக்கணினியை மூடி வைத்தாள்.
“ஐயோ... மழை லைட்டா தூறுது, சீக்கிரம் வீட்டுக்குப் போய் சேரணும்!” என மற்ற மூவரும் விறுவிறுவென வெளியேற, இவளும் மடிக்கணினியை எடுத்து மேஜையில் பூட்டிவிட்டு நிமிர, “ஆதி, ஹரி சார்க்கு சாம்பிள் ரிப்போர்ட்ஸை மெயில் பண்ண தேவா சார் சொன்னாரு...” சுபாஷ் குரலில் தலையில் கை வைத்தாள்.
“ஷ்... மறந்துட்டேன் சுபாஷ்!” என்றவள் மீண்டும் மடிக்கணினியை உயிர்ப்பித்து ஹரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நிமிர, மழை தூறலில் இருந்து கொஞ்சமாய் அடித்து ஊற்றத் தொடங்கியது. அக்டோபர் மாதம் தொடங்கியிருக்க, இப்போது மழை வெகு பரிட்சயமாக தினமும் பொழியத் தொடங்கிருந்தது.
“ஆதி... எப்படி போவ? நான் கேப் புக் பண்ணவா? ஆட்டோ எதுவும் இந்த சைட் வரலை!” என்ற சுபாஷ் அவளுக்கும் சேர்த்து வாகனத்தை முன்பதிவு செய்தான்.
தேவா வேலை அனைத்தும் முடிய, சரியாய் இருக்கிறதா எனப் பார்த்தான். நாளைய விநியோகம் எந்த வகையிலும் கெடாத வகையில் வேலை முடிய, ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். அனைவரும் கிளம்ப, யாரும் உள்ளே இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு இயந்திரப் பகுதியை இழுத்துப் பூட்டினான். ஆய்வகத்தையும் தன் அறையையும் அடைத்தவன், சாவியை காவலாளிடம் கொடுத்தான்.
அவர் திறப்பை வாங்கிக் கொண்டு வாயிலை ஒட்டிய அந்த சிறிய அறைக்குள் சென்று நின்றார். சுபாஷூம் ஆதிரையும் மழை வராத ஓரிடத்தில் ஒதுங்கி நின்றிருக்க, இவன் அவர்களுக்கு அருகே சென்றான்.
“சுபாஷ், கிளம்பலையா?” அவன் கேட்டதும், “கேப் புக் பண்ணி இருக்கோம் சார். மழை இன்னும் கொஞ்ச நேரத்துல ஹெவி ஆகிடும் போல. அதான் கேப் பெஸ்ட். ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடும் சார்!” என்றவாறே அலைபேசியைப் பார்த்தவன், “சே... ட்ரைவர் கேன்சல் பண்ணிட்டான் போல!” என எரிச்சலானான். ஆதிரையின் முகத்தில் சலிப்பு. மகன் அங்கே ருக்கு பாட்டி வீட்டில்தான் இருப்பான். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இவன் சேட்டை எதுவும் செய்தால் என்ற நினைப்பிலே உழன்றாள்.
“நானே உங்க ரெண்டு பேரையும் ட்ராப் பண்றேன் சுபாஷ்... வாங்க ஆதிரை!” அவன் சென்று வாகனத்தை இயக்க, ஆதிரை சில நொடிகள் யோசித்துப் பின்னே மகிழுந்தின் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.
பேருந்து நிலையம் வந்ததும், “சார், என்னை பஸ் ஸ்டாப்லயே இறக்கி விட்ருங்க சார். ஆதிரை உங்க நீங்க போற வழிதானே, சோ அவங்களை ட்ராப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க. நான் பஸ்ல போய்ட்றேன்!” என்றான்.
“வேணாம் சுபாஷ், மழை அதிகமாகிடுச்சு...” தேவா கூற, “இல்ல சார், என் ஃப்ரெண்ட் வரேன்னு சொன்னான். நான் ரெண்டு ஸ்டாப்ல இறங்கி அவனோட போய்ட்றேன். நீங்க என்னை ட்ராப் பண்ணி, தென் ஆதிரையை விட்டுட்டு இந்த மழைல, ட்ராஃபிக்ல வீடு போக டைம் ஆகிடும். அதனால நான் இறங்கிக்கிறேன்...” கீழே இறச்கியவன் “ஆதி டேக் கேர், வீட்டுக்குப் போய்ட்டு ஒரு மெசேஜ் போடு...” என்றான் அவள்புறம் குனிந்து.
“நீங்களும் பத்திரமா போங்க சுபாஷ்!” இவள் முறுவலிக்க, அவன் பேருந்து நிலையத்தை நோக்கி நகன்றான்.
தேவா பிரதான சாலையில் வாகனத்தை செலுத்தினான். சாலையே மறைக்கும் அளவிற்கு மழை வெளுத்து வாங்கியது. சில பல நிமிடங்களில் அவர்கள் அந்தப் போக்குவரத்து நெருசலில் சிக்கியிருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் நிரம்பி வழிய, தேவா எரிச்சலோடு அதைப் பார்க்க, ஆதிரைக்கு மனம் மகனைச் சுற்றியது.
அவன் அப்படியே வாகனத்தை நகர்த்தி ஓரமாய் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னே சென்றான். அரைமணி நேரம் ஊர்ந்து ஊர்ந்து அவர்கள் அகல, ஆதிரை நேரத்தைப் பார்த்தாள். மணி எட்டாக பத்து நிமிடங்கள் இருந்தன.
இந்த நேரத்திற்கு எல்லாம் மகன் பசிக்கிறது என்று வந்து தன்னைச் சுற்றுவானே என மனம் பதற, ருக்குவிற்கு அழைத்துவிட்டாள்.
“என்ன ஆதிரை... எங்க இருக்க? மழை வேற இப்படி பெய்யுது. ஸ்கூட்டீயைப் பார்த்து ஓட்டிட்டு வா!” அவர் எடுத்ததும் கூற, இவளது முகத்தில் புன்னகை படர்ந்தது.
“ம்மா... நான் ஸ்கூட்டில வரலை. கார்ல தான் வரேன்!” என்றவள் பின்னர் தயங்கி, “அபி என்ன பண்றான் மா? மணி எட்டாச்சு, அவனுக்குப் பசிக்கும் மா. ஸ்நாக்ஸ் கூட இன்னைக்கு அவன் சாப்பிடலை!” என்றாள் தவிப்பை வெளிக்காட்டாது.
“ஏன்டி... நான் உன் புள்ளையை பட்னி போடுவேனா என்ன? வந்ததும் பூஸ்ட் குடுத்துட்டேன். இதோ சாம்பரை இறக்கிட்டு, அவனுக்குத்தான் தோசை ஊத்தப் போறேன்!” அவர் கொஞ்சம் அதட்டலுடன் உரைக்க, இவளுக்கு ஆசுவாசம் பிறந்தது.
“அதில்ல மா... அவன் எதாவது கேட்டு அடம்பிடிப்பான், அதான் சொன்னேன்!” இவள் சமாளித்தாள்.
“அதெல்லாம் அவன் சமத்தா அவரோட உக்கார்ந்துட்டு இருக்கான்!” அவர் கூடத்தை எட்டிப் பார்த்து உரைத்ததும் தன் தாய்தான் பேசுகிறார் என்பதை உணர்ந்து ஓடி வந்தவன், “பாட்டி, அம்மாகிட்டே நான் பேசுறேன்!” என்றான்.
“ஆதிரை... இந்தா உன் மகன் பேசணுமாம்!” அபியிடம் அலைபேசியைக் கொடுத்த ருக்கு சாம்பார் பாத்திரத்தை இறக்கிவிட்டு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றினார்.
“அபிமா... என் தங்கம் என்ன பண்ணுறான்... சமத்தா இருக்கானா?” இவள் கேட்டதும்,
“ம்மா...நான் குட் பாய்மா. ருக்கு பாட்டியைத் தொல்லை பண்ணாம இருக்கேன். எப்போ வருவ மா?” எனக் கேட்டான்.
“ட்ராஃபிகா இருக்கு அபிமா, அம்மா வர டைம் ஆகும். ருக்கு பாட்டி தோசை ஊத்தி தருவாங்க. ஒன்னோட டிமிக்கி குடுக்க கூடாது. ரெண்டு தோசை சாப்பிடணும். அம்மா வந்ததும் அவங்ககிட்ட கேட்பேன்!” இவள் கண்டிப்புடன் உரைத்தாள்.
“சரிம்மா... சீக்கிரமா வாம்மா! எனக்கு ஃபீவரா இருக்கு!” அவன் குரல் சோர்ந்து வர, இவளுக்குப் பதறியது.
“ஏன்... ஏன் பீவரா இருக்கு அபி? மழைல நனைஞ்சியா?” பதற்றத்துடன் கேட்டாள்.
“நோம்மா...நானும் நித்தியும் ஹைட் அண்ட் சீக் விளையாடும் போது கீழே விழுந்துட்டேன். ப்ளட் எல்லாம் வந்துடுச்சு மா!” அவன் அழு குரலில் கூற, ஆதிரை நொடியில் பயந்து போனாள்.
“அபி... என்ன எப்படி விழுந்த நீ? அடி ரொம்ப பலமா?” இவள் படபடப்புடன் விவன, அவன் பதிலுரைக்கும் முன்னே அலைபேசி பறிக்கப்பட்டது.
“அடியே ஆதிரை, உன் மகன் சொன்ன அளவுக்கு எல்லாம் காயம் இல்ல. சும்மா முட்டியில சிராய்ச்சிருக்கு. அதுக்குத்தான் கண்ணு காது வச்சு சொல்லிட்டு இருக்கான். நீ பதறாம வீடு வா!” என்ற ருக்குவை அபி முறைத்தான். அவர் கூற்றில் ஆதிரையின் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை முளைத்தது. தேவா சாலையில் விழிகளைப் பதித்திருந்தாலும் ஆதிரையின் பேச்சை உள்வாங்கி மூளைக்கு கடத்திக் கொண்டிருந்தான்.
“சரிங்க மா, நீங்க போனை அவன்கிட்ட கொடுங்க!” என்றவள், “அபிமா, என் தங்கம் இல்ல, சமத்தா சாப்ட்டு டீவியைப் பாரு. அம்மா வந்துடுறேன்!” என்றாள்.
“சரிம்மா... சீக்கிரம் வாம்மா. எனக்குப் புண்ணு பெய்னா இருக்கு. உன்னை ஹக் பண்ணித் தூங்கணும் போல இருக்கு!” அவன் ருக்குவிற்கு கேட்க கூடாது என கிசுகிசுப்பாகப் பேச, இவளுக்கு அதில் முகம் மலர்ந்தது.
“சீக்கிரம் வரேன் அபிமா, ஐ லவ் யூ!” என்றவள் அலைபேசியில் அவனுக்கு சில முத்தங்களை வாரி வழங்க, மகிழுந்தில் அமர்ந்திருந்த தேவாவின் இதயம் நொடியில் தடம் புரண்டிருந்தது. சீராய் சென்றிருந்த மகிழுந்து நொடியில் தடம் மாறியிருக்க, தன்னை சமாளித்து வழியில் கவனத்தை வைத்தவனுக்கு நான்கு புறமும் ஆதிரையின் பேச்சும் முத்தமும் பெரும் சத்தமாய் எதிரொலித்து சிந்தையை தடை செய்திருந்தது.
முயன்று வாகனத்தை ஓட்ட முயன்றவனின் கரம் நடுங்க, வெளியே இருக்கும் குளிரையும் மீறி மகிழுந்து முழுவதும் உஷ்ணம் பரவத் தொடங்க, நெற்றியில் வியர்த்து வழிந்தது. இதுவரை தன் உணர்வுகளை மறைத்து பழகியவனுக்கு இந்நொடி வெடித்துச் சிதறிவிடுமோ என அச்சம் எழுந்தது.
ம்கூம்... முடியாது என மூளை அனத்தி வேலை நிறுத்தம் செய்ய, இதயம் தொண்டையில் வந்து துடிப்பதை உணர்ந்தவன் மகிழுந்தை ஓரமாய் நிறுத்துவிட்டு கதவை அடித்துச் சாற்றி வெளியேறினான். செவியில் உள்ள மென்னரம்புகள் எல்லாம் இன்னுமே அந்த முத்த சத்ததில் அதிர்ந்தன. பெருமூச்சை வெளிவிட்டு உடலின் வெப்பதைக் குறைக்கலாம் என எண்ணியவனை ஊசியாய் மழைத்துளிக் குத்தியது. எதிரிலிருக்கும் சாலை, மரங்கள் என எதுவுமே கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு மழை வெளுத்து வாங்க, நொடியில் உடல் வெடவெடன நடுங்கத் துவங்க, கையைக் கட்டி அந்தக் குளிரை தாங்கினான் அன்றி உள்ளே ஏற முயலவில்லை.
உள்ளிருக்கும் உஷ்ணத்தைவிட உடலை ஊடுருவும் இந்தக் குளிரே பரவாயில்லை என்று மனதும் மூளையும் போர்க்கொடி தூக்கின. இந்தப் பெண்ணின் முன்னால் தன் உணர்வுகளை அத்தனை எளிதில் காண்பிக்க கூடாது என்று இறுமாந்திருந்தவனால் சர்வ நிச்சயமாக இந்த நொடியை இந்தப் பெண்ணைக் கடக்க முடியவில்லை. உணர்வுகளின் மேலீட்டில் தன்னுடைய நிலையை அவளிடம் கொட்டிவிட துளியும் விருப்பமில்லை.
வாகனத்தை அவன் நிறுத்திவிட்டு திடீரென வெளியே இறங்கி செல்லவும் ஆதிரை திகைத்துப் போனவள், ஜன்னலுக்கு அருகே நகர்ந்து, “சார், என்னாச்சு... ஏன் மழைல இறங்கி நிக்குறீங்க?” எனப் பதற்றத்துடன் கேட்டாள். ஜன்னல் வழி மழைத் தூறல் அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.
பதில் கூறாதவனின் உடல் நடுங்கியது.
அதில் பயந்தவள், “சார் ப்ளீஸ்... உள்ள வாங்க, என்னாச்சு?” எனத் தவிப்பாய்க் கேட்டாள். உள்ளே வர முடியாது என நிர்தட்சண்யமாக மறுத்திருந்தான்.
ஆதிரை எதற்காக இவன் இப்படி பாதியில் அழைத்து வந்து வெளியே நின்று கொண்டிருக்கிறான் என எரிச்சலும் கோபமும் வந்தது. பேசாமல் கீழே இறங்கி விடலாம் என எண்ணி அவள் கதவில் கை வைக்க, அதை தடுத்து மூடியவன், “கிவ் மீ டூ மினிட்ஸ்!” என முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தவனை இவள் சுருங்கிய முகத்தோடு பார்த்தாள்.
உரைத்தது போலவே இரண்டு நிமிடத்தில் உள்ளே ஏறியவன் சட்டையை கழற்றி அருகே போட்டுவிட்டு பரபரவென முடியிலிருந்த நீரை உதற, ஆதிரை குழப்பமாய் அவனைப் பார்த்தாள். குளிரில் விறைத்துப் போன விரல்களை தேய்த்தவனைப் பார்த்தவள், “சார், ஆர் யூ ஓகே?” எனத் தயங்கியபடியே கேட்டாள்.
சடாரெனத் திரும்பி அவளை உறுத்து விழித்தவன், “ஐ யம் நாட் ஓகே ஆதிரை, யூ டிஸ்டப்ட் மீ அ லாட்... என்னை என்ன பண்ற நீ? என்னால முடியலை. வெடிச்சு சிதறிடுவேனோன்னு பயமா இருக்கு!” எனக் கோபமாக ஆரம்பித்து கடைசி வரியை முனங்கலாகக் கூறிப் பிடரியைக் கோதியவனை ஆதிரை அதிர்ந்து போய் பார்த்தாள்.
தொடரும்...
அடுத்த அப்டேட் சண்டே தான் டியர்ஸ். இரண்டு நாள் ட்ராவல்ல இருப்பேன்