- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 15 
மெதுவாய் சூரியன் மறையத் தொடங்கிய பொழுது. ஆதிரை வேலையை முடித்து தேவாவின் அறைக்குச் சென்று கையெழுத்திட்டு விறுவிறுவென தன் உடமைகளோடு வாகனத்தை நெருங்கினாள்.
வானம் இருட்டிக்கொண்டு கிடந்தது. மழை வருவதற்கு முன்னே வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்ற அவசரம் அவளிடம்.
“ஆதி... ஸ்டாப், ஸ்டாப். என்னை பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்றீங்களா? என்னோட பைக் சர்வீஸ் விட்டிருக்கேன்!” சுபாஷ் கத்தியபடி அவளுக்கு அருகே விரைந்தான். வேலை விரைவிலே முடித்திருக்க, அதனாலே சீக்கிரம் கிளம்பிவிட்டான்.
“வாங்க சுபாஷ், ட்ராப் பண்றேன்!” தலைக்கவசத்தை சிரத்தில் பொறுத்தியபடி அவள் கூற, இவன் அவளுக்குப் பின்னே ஏறியமர்ந்து ஏதோ கேலியாய்க் கூறவும், ஆதிரை முறைக்க முயன்று சிரிப்புடன் வாகனத்தை இயக்கினாள். தேவா அவர்கள் இருவரையும் சலனமற்றுப் பார்த்திருந்தான். குபுகுபுவென பொறாமை உணர்வு மேலெழுவதை அவனால் தடுக்க இயலவில்லை.
இந்த சில நாட்களாகவே சுபாஷ் ஆதிரையிடம் அதிக உரிமை எடுத்துப் பழகுவதைக் கண்டு இவனுக்குக் கடுப்பானது. யார் யாருடன் நட்பு பாராட்டினால் எனக்கென்ன என வீம்பாய்க் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் இது போல ஏதேச்சையாக கண்ணில் தென்படும் காட்சிகள் அவனது இரத்த அழுத்தத்தை உயர்த்தின. பெருமூச்சை விட்டவன் மனம் சில பல கெட்ட வார்த்தைகளை கொட்ட விழைய, ‘சே...’ எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
மறுநாள் காலை சுபாஷ் வந்ததும், “சுபாஷ், இனிமே நீங்க ஐஞ்சு மணிக்கு கிளம்ப கூடாது. செவன் ஓ க்ளாக் வரை என்கூடவே இருக்கணும். ஐ நீட் யுவர் ப்ரசென்ஸ்!” தேவா கண்டிப்புடன் கூறிவிட, அவன் தலையை அசைத்து ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
“என்ன சுபாஷ் ப்ரோ, மூஞ்சில சோகம் அப்புன மாதிரி இருக்கே!” தர்ஷினி நக்கலாய்க் கேட்க, “ஏன் கேக்க மாட்ட... நல்லா கிண்டல் பண்ணு. தேவா சார் இனிமே ஏழு மணி வரை அவர்கூடவே இருந்து வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாரு. அதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு!” சலிப்பாய் உரைத்தான்.
“சரி விடுங்க, நீங்க இல்லாம நம்ப ஃபர்மே ரன் ஆகாதுன்னு நம்ப பாஸ்க்கும் தெரிஞ்சுடுச்சு. அதான் கப்புன்னு பிடிச்சு வச்சிக்கிட்டாரு!” தர்ஷினி கூறியதும் மற்ற இருவருக்கும் புன்னகை தொற்றியது. அன்றைக்கு பால் வருகை வெகு குறைவு. அதனாலே பொறுமையாக அனைத்தையும் செய்தனர்.
ஆதிரை கூட சோம்பேறித் தனத்தோடு வேலை செய்தாள். வார கடைசி வேறு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை என்று எண்ணும் போதே உடலில் புத்துணர்ச்சி வந்தது.
“ஏன் ஆதி, நான் ரொம்ப நாளா டீம் லஞ்ச் போகலாம்னு கேட்குறேன். ஒருத்தர் கூட க்வாப்ரேட் பண்ண மாட்றீங்க!” சுபாஷ் ஆர்வத்துடன் கேட்க, கோமதி இடை புகுந்தார்.
“தம்பி சுபாஷூ... நீ போய் சார்கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு வாயேன். நம்ப டீம் லஞ்ச் போய்ட்டு வரலாம்!” அவர் கூறியதும் சுபாஷ் முகத்தில் அசடு வழிந்தது.
“நம்ப ஏன் ஆதியைப் பெர்மிஷன் வாங்க அனுப்ப கூடாது. அவங்கதான் இங்க சீனியர் ஸ்டாஃப் அவங்கதான்!” அவன் கூற்றில் ஆதிரை அவனைப் பொய்யாய் முறைத்தாள்.
“அக்கா... அக்கா, ப்ரோ சொல்றதும் கரெக்ட். இப்போலாம் சார் உங்களைத் திட்டுறது இல்ல. உங்களைப் பார்த்து சிரிக்க வேற செய்றாரு... நீங்க பெர்மிஷன் வாங்கித் தாங்க கா!” தர்ஷினி ஆதிரைக் கையைப் பிடித்தாள்.
“ப்ம்ச்... அவர் என்னைப் பார்த்து மட்டும் சிரிக்கலை தர்ஷினி. ஏதோ கொஞ்ச நாளா நல்ல மூட்ல இருக்காரு மனுஷன். அதான் எல்லாரைப் பார்த்தும் சிரிக்கிறாரு!” ஆதிரைக் கண்டிப்புடன் கூறினாள்.
“ப்ம்ச்... இப்போ அவர் சிரிக்கிறதுதான் முக்கியமா? யாராவது ஒருத்தர் பெர்மிஷன் வாங்குங்கப்பா... அப்போதானே போய்ட்டு வர முடியும். ஒரு ஒன் ஹவர் கிடைச்சா கூடப் போதும். போய்ட்டு மந்தி பிரியாணி சாப்ட்டு வரலாம். புதுசா ஒரு ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணி இருக்கதலா ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர் வேற இந்த மந்த்!” கோமதி இடை புகுந்தார்.
“ஆமா... எங்க வீட்ல தயிர் சாதம். அதை சாப்பிட்றதுக்குப் பதிலா பிரியாணி சாப்பிடலாம் பா. எப்படியாவது பெர்மிஷன் மட்டும் வாங்கிடுங்க. ரொம்ப போர் அடிக்குது வேற...” தர்ஷினி அணிந்திருந்த வெள்ளை அங்கியை நீக்கினாள். அனைவரும் வெளியே செல்ல ஆயத்தமாகி விட்டனர் என்பது ஆதிரைக்குப் புரிந்தது.
“சரி, நான் அவர்கிட்ட கேக்குறேன். ஓகே சொன்னா போகலாம். பட் நோ சொல்லிட்டார்னா, என்னை ப்ளேம் பண்ண கூடாது!” அவள் கூற, “ஐயோ, அக்கா... நீங்க சின்சியர் வொர்க்கர். நீங்க கேட்டு சார் இல்லைன்னு சொல்ல மாட்டாரு கா. போய்க் கேளுங்க... ஆல் தி பெஸ்ட்!” குதூகலித்த தர்ஷினியை முறைத்து வைத்தாள் இவள்.
“ஆதி, கம்... நீங்க கேளுங்க. நான் உங்க கூட வரேன். ஓகே சொல்லிட்டார்னா, உங்க ஸ்கூட்டில நான் வரேன். தர்ஷினி ஸ்கூட்டில கோமதிக்கா வரட்டும். க்விக்!” அவன் எழுந்து கொள்ள, ஆதிரை யோசனையுடன் தேவா அறைக்குச் சென்றாள். அவன் இன்றைக்கு நல்ல மனநிலையில் இருந்தால் ஒப்புக் கொள்ளுவான். இல்லையென்றால் கடித்து குதறிவிடுவானே என பயத்தோடுதான் சென்றாள்.
“எக்ஸ்யூஸ் மீ சார்!” இவள் குரல் கொடுத்துக் கொண்டே நுழைய, சுபாஷூம் உடனிருந்தான். அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த தேவாவிற்கு எரிச்சலாக வந்தது.
“வாட், வேலை நேரத்துல என்ன விஷயம்? ஆதிரை... லாக் புக்கை முடிச்சுட்டீங்களா? இன்னைக்கு எவ்வளோ பால் ஸ்டோர் பண்ணோம். கோல்ட் ரூம் செக் பண்ணீங்களா?” கடுப்புடன் அவன் கேட்டதும், ஆதிரைக்குப் புரிந்து போனது.
சர்வ நிச்சயமாக அவன் அனுமதி தர வாய்ப்பில்லை என மானசீகமாக நொந்தவள், “யெஸ் சார்... லாக் புக் இனிமேதான் எழுதணும். இன்னைக்கு பால் தௌசண்ட் ஃபைவ் ஹண்ட்ரட்தான் சார். ஈவ்னிங் போகும்போது எல்லாத்தையும் சப்மிட் பண்ணிட்றேன் சார்!” கடகடவென ஒப்பித்தாள்.
“ஃபைன்...” என்றவன் சுபாஷிடம் திரும்பி, “வாட் அபவுட் யூ சுபாஷ்? லேப்ல உங்களுக்கு என்ன வேலை?” எனக் கேட்டான்.
“சார், சூப்பர் வைஸ் பண்ணிட்டேன் சார். வொர்க் எல்லாம் கரெக்டா நடக்குது. அதான் ஆதிக்கு எதுவும் ஹெல்ப் பண்ணலாம்னு லேப்க்குப் போனேன்!” அவன் மெதுவாகக் கூற,
“அங்க வேலை சரியா நடக்குது சரி. அதுக்காக நீங்க லேப்ல ஓபி அடிக்கணும்னு அவசியம் இல்லையே! அவங்க வேலையை அவங்க பார்ப்பாங்க. ஆதிரையாழ் உங்களை ஹெல்ப்க்கு கூப்ட்டாங்களா?” எனக் கேட்டவனின் பார்வை அவளிடம் திரும்ப,
“நோ சார், நான் கூப்பிடலை. பட் அவர் என் வேலையை ஷேர் பண்ணிக்கத்தான் வந்தாரு!” என அவனுக்கும் தனக்கும் பாதகம் இல்லாமல் பேசினாள். அவனுக்கு ஆதரவாக அவள் பேசியதும் தேவாவிற்கு இன்னுமே கோபம் மேலெழுந்தது.
“ஏன் வேலையை மட்டும் ஷேர் பண்ணிக்கிறீங்க... சேலரியைக் கூட ஷேர் பண்ணிக்கலாம் இல்ல?” அவன் கடுகடுக்கவும், ஆதிரையின் முகம் மெதுவாய் மாறியது. இவர்கள் கேட்டார்கள் என்று தேவாவைப் பற்றி யோசிக்காமல் அனுமதிக் கேட்க வந்தது தவறென மூளை இடிந்துரைக்க, பதிலில்லை அவளிடம்.
“லுக் சுபாஷ், உங்களுக்கு என்ன வேலை கொடுத்தேனோ... அதை மட்டும் பார்த்தா போதும். லேப்ல டெஸ்ட் பண்றது எல்லாம் உங்க வொர்க் கிடையாது அண்ட் நீங்க எம்.பி.ஏ தான் படிச்சிருக்கீங்க. நாட் கெமிஸ்ட்ரி. இனிமே லேப் பக்கம் உங்களை நான் பார்க்கவே கூடாது. போய் எவ்வளோ மில்க் ஸ்டோரேஜ்ல இருக்கு. இன்னைக்கு ஷாட்ரேஜை அதை வச்சு சரி பண்ணலாமான்னு பார்த்துட்டு எனக்கு அப்டேட் பண்ணுங்க!” கடித்து துப்பியவனிடம் தலையை அசைத்த சுபாஷ் கடுப்போடு வெளியேறினான்.
‘சை... ஒரு டீம் லஞ்ச் போகலாம்னு ஆசைப்பட்டது குத்தமா? இர்ரிடேட்டிங் பாஸ்!’ என மனதிற்குள்ளே வகை தொகையில்லாம் தேவாவைத் திட்டிக் கொண்டே அவன் ஏவிய வேலையை செய்ய சென்றான்.
ஆதிரை அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். “மிஸ் ஆதிரையாழ், நீங்கதான் இங்க சின்சியர் ஸ்டாப்னு நினைச்சேன். பட் நீங்களும் சின்ன பசங்களோட சேர்ந்து வேலையை ஒழுங்கா செய்யாம கதை பேசிட்டு இருக்கீங்களா?” அவன் கேட்டதும்,
ஆதிரை நிமிர்ந்து அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவள், “சாரி டூ சே திஸ் சார், என் வொர்க்கை நான் கரெக்டா செஞ்சிட்டுதான் இருக்கேன்!” ரோஷமாய்க் கூறினாள்.
அவளை உறுத்துப் பார்த்தவன், “பைன்... இப்போ எதுக்கு வந்தீங்க? ஆன்சர் மீ...” என்றான். ஆதிரைக்கு சட்டென பொய்யுரைக்க முடியவில்லை. என்ன சொல்வது எனத் தடுமாறினாள். அவள் வெளியே செல்ல அனுமதி கேட்ட வந்த விடயத்தைக் கூறினால் இன்னும் இரண்டு மண்டகப்படி கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
“அது... சார், சும்மாதான் வந்தேன்!” அவள் தயங்கியபடியே கூற, “சும்மா பார்க்க இங்க என்ன மேஜிக் ஷோ காட்டுறேனா ஆதிரையாழ்?” எனக் கடுப்படித்ததவனிடம், “சாரி சார்!” என உள்ளே சென்ற குரலில் உரைத்தவள் விறுவிறுவென வெளியேற சென்றாள். முகம் வாடிக் கிடந்தது. அவளை உற்றுப் பார்த்த தேவாவிற்கு அப்படியே விட மனதில்லை. அந்த முகம் அவனை தொல்லை செய்தததை விருப்பும் வெறுப்புமாய் ஏற்றிருந்தான்.
பெருமூச்சை இழுத்துவிட்டு பிடரியைக் கோதியவன், “ஆதி...” என்றான் மென்மையாய். ஆதிரை முகத்தில் திகைப்பு விரவியது. அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“சாரி... நான் ஏதோ மூட் அப்செட்ல பேசிட்டேன். கம் அண்ட் சிட் ஹியர்!” என்றான் இருக்கையைக் கைக் காண்பித்து. ஆதிரை திகைப்பும் தயக்கமுமாய் அவன் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“சொல்லுங்க, என்ன கேட்க வந்தீங்க?” பொறுமையாய்க் கேட்டான்.
“ஒன்னும் இல்ல சார்... டீம் லஞ்ச் போகலாம்னு ப்ளான் பண்ணோம். பட் இப்போ ட்ராப் பண்ணிட்டோம் சார்!” ஒருவழியாகக் கூறிவிட்டாள்.
“வொய், ஏன் ட்ராப் பண்ணீங்க? நல்ல ஐடியா தானே?” என அவன் கேட்டதும், ஆதிரைக்கு அவனை ஏதாவது திட்ட வேண்டும் என கடுப்பாய் வந்தது.
ஆனாலும் முகத்தில் எதையும் காண்பிக்காதவள், “நீங்க விட மாட்டீங்க சார்!” என்றாள் சமாளிப்பான சிரிப்புடன்.
“ப்ம்ச்... நான் விட மாட்டேன்னு நீங்களே எப்படி டிசைட் பண்ணலாம். யூ ஹேவ் டூ ஆஸ்க் மீ ஃபர்ஸ்ட் தென் என்னோட டிசஷனைக் கேட்டு டிசைட் பண்ணுங்க. நீங்களா எதையும் ப்ரிடென்ட் பண்ணாதீங்க!” என்றவனிடம் ஆதிரை முகம் மாறாதிருக்கப் பிரயத்தனப்பட்டாள்.
“அப்போ பெர்மிஷன் தரீங்களா சார்?” உதடுகளில் வலியப் புன்னகையை புகுத்திக் கேட்டாள்.
“ஷ்யூர், நாட் மோர் தென் ஒன் ஹவர். சீக்கிரம் போய்ட்டு வாங்க. டோன்ட் டேக் எனி அட்வாண்டேஜ் இன் வொர்க். கரெக்டா வொர்க்கை முடிச்சிடணும். தென் இது ஃபர்ஸ்ட் டைம் கேட்குறதால ஐ வில் கிவ் பெர்மிஷன். நெக்ஸ்ட் இந்த மாதிரி ப்ளான் எல்லாம் லீவ் டேய்ஸ்ல பண்ணுங்க. ஏன்னா, உங்களுக்கு மட்டும் பெர்மிஷன் கொடுத்தா அது மத்த ஸ்டாப்ஸ்க்குள்ள பார்ஷியாலிட்டி பார்த்த மாதிரி ஆகிடும். உங்களுக்குப் புரியுதா?” அவன் கேட்டதும் ஆதிரை தலையை அசைத்து ஏற்றுக் கொண்டாள்.
“எப்படி போறீங்க? கேப்?” அவன் கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினான்.
“இல்ல சார், என் ஸ்கூட்டி அண்ட் த்ரஷினியோட ஸ்கூட்டி இருக்கு சார். நாலு பேரும் அதுல போறோம்!” அவள் கூறியதும் தேவாவின் முகம் மாறிற்று.
எப்படியும் சுபாஷ் ஆதிரையோடு செல்லக் கூடுமென்பதை அனுமானித்தவன், “வாங்க, நானே கார்ல ட்ராப் பண்றேன். எனக்கு வெளிய வேலை இருக்கு...” என எழுந்தான்.
“இட்ஸ் ஓகே சார்.. நாங்க போய்க்கிறோம்...” அவள் மறுப்பதைக் காதில் வாங்காது தேவா மகிழுந்தை நோக்கி செல்ல, இவள் தர்ஷினியையும் கோமதியையும் அழைத்தாள்.
“சூப்பர் கா.. சாரோட கார்லயே போறோமா? செம்ம போங்க. ஆமா, வரும்போது யாருக்கா நம்பளை ட்ராப் பண்ணுவா? அதையும் அவரைப் பண்ண சொல்லுங்களேன்!” தர்ஷினி கேட்டதும் ஆதிரை முறைக்க, அவள் அசட்டு சிரிப்போடு வெளியே சென்றாள்.
“சுபாஷ், இங்க வாங்க...” என்ற தேவாவைப் புரியாது பார்த்தவன் மகிழுந்து அருகே வந்தான்.
“உள்ள வந்து உக்காருங்க... நானே உங்களை ஹோட்டல்ல ட்ராப் பண்றேன்!” அவன் கூறியதும் சுபாஷ் முகம் மலர்ந்தது.
“சார்... தேங்க் யூ... தேங்க் யூ சோ மச் சார்!” அவன் உற்சாகத்துடன் மகிழுந்தில் ஏறியதும் பெண்கள் மூவரும் பின்புறம் ஏறிக் கொள்ள, பதினைந்தே நிமிடத்தில் தர்ஷினி குறிப்பிட்ட அந்த உணவகத்தின் முன்பு மகிழுந்தை நிறுத்தினான் தேவா.
அனைவரும் இறங்க, “தேங்க் யூ சார்!” எனத் தயங்கிய ஆதிரையாழ், “எங்களோட ல்ஞ்ச ஜாய்ன் பண்ணிக்கிறீங்களா சார்?” என சம்பிரதாயமாகக் கேட்க,
அவள் முகத்தையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், “வொய் நாட்... காரைப் பார்க் பண்ணிட்டு வரேன்....” அவன் அகன்றான். ஆதிரை முகம் திகைப்பில் திளைத்தது. இந்த தேவா அவர்களுக்குப் புதிது.
“க்கா... அவரை ஏன் கூப்ட்டீங்க? இப்போ அட்டென்ஷன்ல உக்கார்ந்து சாப்பிடணுமா? இவர் கூட இருந்தா நிம்மதியா பிரியாணியைக் கூட சாப்பிட முடியாதே. ஏன்கா வேலில போற ஓணானை வேட்டில விடுறீங்க? ட்ராப் பண்ணதோட அந்த மனுஷனை கட் பண்ணி விட வேண்டியதுதானே கா?” தர்ஷினி கோபத்துடன் முணுமுணுத்தாள்.
“ச்சு... ட்ராப் பண்ணார்னு நான் கர்டசிக்காக கேட்டேன். பட் சார் வரேன்னு சொல்லிட்டாரு” அவள் பதிலளித்தபடியே நடக்க, “பரவாயில்லை விடு தர்ஷினி, அவர் என்ன சிங்கமா? புலியா? நம்ப பாஸ் அவரு...” சுபாஷ் இயல்பாக கூறினான்.
“அந்த சிங்கம் புலிக்கு முன்னாடிதான் எதுவும் பேச முடியாம கெக்க பெக்கன்னு முழிச்சிட்டு நின்னீங்க சுபாஷ்!” ஆதிரை அவனை வார, அவன் முறைத்தான். பெண்கள் மூவரும் ஒருபுறம் அமர, ஆண்கள் அவர்களுக்கு எதிர்ப்புறம் அமர்ந்தனர். ஆதிரை முகத்தைப் பார்க்குமாறு தேவா அமர்ந்தான்.
“எனக்கு மந்தி பிரியாணி!” தர்ஷினி கூற, “எனக்கும் அதே!” என சுபாஷ் கூறினான்.
“எனக்கு மட்டன் பிரியாணி... சீரக சம்பா அரிசில பண்ணது போதும்!” கோமதி கூற, “எனக்கு ப்ரான் பிரியாணி!” என்ற ஆதிரை தேவாவின் முகம் பார்த்தாள்.
“ஒன் ப்ளஸ் ஒன் தானே? லெட்ஸ் ஷேர்...” அவன் தோளைக் குலுக்க, அவர்கள் கேட்ட உணவை ஊழியர் மேஜையில் பரிமாறினார். தேவா யார் கருத்தையும் கவராது ஆதிரை வாங்கிய இறால் பிரியாணியில் ஒன்றை தன்புறம் நகர்த்தினான்.
“டேஸ்ட் நல்லா இருக்குல்ல தர்ஷினி, இனிமே அடிக்கடி இங்க வரணும்!” கோமதி கூற, “ஆமா கா... ஆஃபர் முடியறதுக்குள்ளே இன்னொரு டைம் வரணும்!” தர்ஷினி வாயில் உணவை அடைத்தபடி பதிலளித்தாள். உணவின் சுவை நன்றாய் இருக்கவும், அனைவரும் அமைதியாய் உண்டனர்.
“ஆதி, ப்ரான் பிரியாணி நல்லா இருக்கா? நான் டேஸ்ட் பண்றேன்!” சுபாஷ் ஆதிரையின் தட்டிலிருந்து உணவை எடுத்து சுவைக்க, “நல்லா இருக்கு சுபாஷ்... இந்தாங்க!” இவள் அவன் தட்டில் தான் உண்டு கொண்டிருந்த உணவைப் பரிமாறினாள்.
“மந்தி பிரியாணி நல்லா இருக்கு. டேஸ்ட் இட்!” தன் தட்டிலிருந்ததை அவன் ஆதிரை தட்டிற்கு மாற்ற முயல, இவ்வளவு நேரம் அவர்களது பேச்சை எரிச்சலாய்க் கேட்டுக் கொண்டிருந்த தேவா, படக்கென தண்ணீரை எடுப்பது போல சுபாஷ் மீது குவளையைக் கவிழ்த்திவிட்டான்.
“சாரி சுபாஷ்... சாரி!” தண்ணீர் பட்டதும் அவன் ஆதிரையிடம் தன் உணவை பகிர்ந்து கொள்ளாது எழுந்துவிட்டான்.
“இட்ஸ் ஓகே சார்... நான் ட்ரையர்ல ஒரு ஃபைவ் மினிட்ஸ் ட்ரை பண்ணிட்டு வரேன்!” அவன் எழுந்து சென்றான். ஐந்து நிமிடங்கள் கழித்து சுபாஷ் வரும்போது ஆதிரை உண்டு முடித்திருக்க, அனைவரது தட்டும் காலியாகி இருந்தது.
சுபாஷ் அமர்ந்து உண்ண, ஆதிரை பணம் செலுத்துவதற்காக கைப்பையை துழாவ, “நான் பே பண்றேன் ஆதிரையாழ்...” என்ற தேவா பணத்தை எடுத்துக் கொடுத்தான்.
“ஐயோ... இட்ஸ் ஓகே சார்... நாங்களே ஷேர் பண்ணி பே பண்ணிக்கிறோம்!” ஆதிரை சங்கடத்துடன் கூற, “க்கா... சார் நம்பளுக்கு ஒருநாள் ட்ரீட் கொடுத்துருக்காரு கா. விடுங்க!” தர்ஷினி அவளைத் தடுத்துவிட்டாள். இப்போது ஆதிரை சின்னவளை முறைக்க, அவள் ஏதோ மெல்லிய குரலில் சமாதானம் செய்ய முயன்றதை தேவா இயல்பாகப் பார்த்திருந்தான்.
சில நிமிடங்களில் அவன்புறம் திரும்பியவள், “தேங்க் யூ சோ மச் சார். உங்களுக்கு வொர்க் இருக்குன்னு சொன்னீங்களே... நீங்க கிளம்புங்க சார். நாங்க கேப்ல ஆர் ஆட்டோல போய்க்கிறோம்!” என்றாள் தயக்கத்துடன்.
“நோ... என்னோட வேலை முடிஞ்சது ஆதிரை. நானே உங்களை ட்ராப் பண்றேன்!” என்றவன் எழ, மீண்டும் ஐவரும் உழவர் துணை நோக்கிச் சென்றனர்.
ஆய்வகத்தில் நுழைந்ததும், “இன்னைக்கு காலைலயே ராசி பலன்ல நல்லவிதமா சொன்னான் கா. ஆனால் நான் நம்பலை. பட் பாருங்களேன் எட்டாவது அதிசயமா டீம் லஞ்ச்க்கு ஓகேவும் சொல்லி, நம்பளை கூட்டீட்டு போய் பே பண்ணாரு பாருங்க நம்ப தேவா சார்! அன்பிலிவபிள் போங்க!” தர்ஷினி அதிசயித்துக் கூறினாள்.
ஆதிரைக்கும் ஒன்றும் புரியவில்லை. வேலை இருக்கிறது என்றுரைத்தவன் பின்னர் அது முடிந்துவிட்டது என மீண்டும் அவனே அழைத்து வந்துவிட்டான். சில பல நிமிடங்கள் என்னவென யோசித்தவள், பின்னர் அதைக் கிடப்பிலிட்டு அலுவலக வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
மாலை பெண்கள் வேலை முடிந்து கிளம்ப, சுபாஷ் தேவாவோடு இருந்துவிட்டு ஏழு மணிக்குத்தான் வீட்டிற்கு சென்றான்.
ஆதிரை அபியை அழைத்துக் கொண்டே வீட்டை நோக்கிப் படிகளில் ஏற, “ஆதிரை, நாளைக்கு பிரதோஷம்... சிவன் கோவில்ல பெருசா பூஜை பண்றாங்களாம். வரீயா போய்ட்டு வரலாம்... அவருக்கு நாளைக்கு ஏதோ வேலை இருக்குன்னு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு!” என கீழேயிருந்து ரூக்குப் பாட்டி கேட்க, ஆதிரை மறுக்கவில்லை. அபினவை எந்நேரம் என்றாலும் அவர்கள்தானே பார்த்துக் கொள்வது. அதனாலே ருக்குப் பாட்டி எது கேட்டால் அவள் இல்லையென்று மறுக்க மாட்டாள்.
“சரிங்க மா, போய்ட்டு வரலாம்!” என்றவள் வீட்டைத் திறந்தாள்.
“அபி... நாளைக்கு அம்மா பாட்டீயோட சீக்கிரம் எழுந்து கோவிலுக்குப் போறேன். நீ எப்படியும் எழுந்திரிக்க மாட்ட. கதவை வெளிய இருந்து பூட்டி சாவியை உள்ள போட்றேன். எதுவும்னா அம்மாவுக்கு கால் பண்ணு!” என இரவு உணவை முடித்து தன்னருகே படுத்திருக்கும் மகனிடம் கூறினாள்.
“நோம்மா... நானும் உங்க கூட கோவிலுக்கு வரேன்!” சின்னவன் மூடியிருந்த ஒற்றை விழியை மட்டும் திறந்து பதிலுரைத்தான்.
“ம்கூம்... சும்மா நாள்லயே நீ எழ மாட்ட. சண்டே அதுவும் எப்படிடா சீக்கிரம் எழுவ?” அவள் சிரிப்புடன் மகன் தலையைத் தடவ, “காலைல எப்படி எழுந்திரிக்கிறேன்னு மட்டும் பாருங்க!” என ரோஷத்துடன் தாயை ஒட்டிப் படுத்தான் சின்னவன். ஆதிரை முகத்தில் புன்னகை அரும்பியது.
“சரி விடு, நாளைக்கு ரெண்டு பேரும் கோவிலுக்குப் போகலாம்!” தாய்க் கூற, மகன் பற்கள் தெரியப் புன்னகைத்தான். இருவரும் உறங்கிப் போயினர்.
தொடரும்...