• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
நெஞ்சம் – 14 💖

என்ன முயன்றும் உதட்டோடு உறைந்த புன்னகை முகத்தை மலர செய்தது. இறுக்கம் தளர்ந்து முறுவலோடு தேவா வீட்டிற்குள்ளே நுழைய, “தேவாப்பா.‌..” என ராகினி அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.

சிரிப்புடன் தேவா குழந்தையைத் தூக்க, “ப்பா... தம்பி வரப் போகுது நம்ப வீட்டுக்கு!” என அவள் மழலைக் குரலில் கூறவும், இவனது நெற்றி சுருங்கிப் பின் முகம் மலர்ந்தது.

அவன் நிமிர்ந்து பார்க்க, ஹரி சிரிப்பும் வெட்கமுமாய் அவனைப் பார்த்திருந்தான். தேவா அவனுக்கு அருகே சென்று தோளைத் தட்டி, “கங்கிராட்ஸ் டா!” என்றான்.

“தேங்க்ஸ் டா...” ஹரி தமையனை அணைத்துக் கொள்ள, பொன்வானி பாசிப்பருப்பு பாயசத்தை அடுப்பில் வைத்துக் கிண்டிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியையும் மீறி அவரது கண்கள் கலங்கிப் போயிருந்தன. ஹரி இரண்டாவது குழந்தையே பெற்றுக் கொள்ளப் போகிறான். ஆனால் தேவாவிற்கு ஒரு நல்ல வழியைக் கடவுள் காண்பிக்க மாட்டேன் என்கிறாரே என மனம் வேதனையில் உழன்றது.

“அதெப்படி ண்ணா... நான் கரெக்டா ஸ்கூல் முடிச்சப்போ ஃபர்ஸ்ட் ரிலீஸ் பண்ண. இப்போ செகண்ட் ரிலீஸ் என் காலேஜ் லாஸ்ட் செமஸ்டர்லதான் பண்ணுவ. நானென்ன உன் புள்ளைங்களை வளர்க்குற ஆயம்மாவா தெரியுறேனா உனக்கும் உன் பொண்டாட்டிக்கும்?” பிரதன்யா ஜனனி தோளில் இடித்தாள்.

“இதென்ன கேள்வி பிரது? நீதான் அரசு ஊழியர்... பால்வாடி ஆயா மாதிரி என் புள்ளைகளையும் என் அண்ணன் புள்ளைங்களையும் வளர்க்கத்தான் காலம் போன கடைசில உன்னை அம்மா பெத்து விட்டிருக்காங்க !” அவன் குறும்பாய்க் கூறி சிரிக்க, பிரதன்யா அவனை எட்டி முதுகிலே இரண்டு அடி போட்டாள்.

“அத்தை... போ...என் அப்பாவை அடிக்காதே!” ராகினி அவளது முடியைப் பிடித்துழுக்க, “உன்னை வளர்த்து விட்டதுக்கு நீ என் மார்லயே பாய்ஞிட்ட ராகி...” என பிரதன்யா போலியாய்க் கண்ணீர் வடித்தாள்.

“என் தங்க குட்டி... அப்படித்தான் அவளை அடி. புள்ளைக்கு வச்ச சரளாக்கை திருடி தின்னுட்டு வளர்த்து விட்டேன்னு பொய்யா சொல்லிட்டு சுத்துறா உங்க அத்தை...” ஜனனியின் கூற்றில் பிரதன்யா முகம் அஷ்டக் கோணலானது.

“அண்ணி... போ... அதெல்லாம் ஏதோ அறியாத வயசுல பண்ணது. நீ அதை மறக்கவே மாட்டீயா?” இவள் சிணுங்க, பொன்வானி பாயாசத்தோடு நுழைந்தார்.

கோபால் குவளை நிரம்ப இருக்கும் பாயசத்தை எடுக்க செல்ல, “ப்ம்ச்... சுகர் மூன்னூறு ஏறிட்டது ஞாபகம் இருக்கா இல்லையாங்க?” என்ற பொன்வானி ஒரு சிறிய குவளையில் போனால் போகிறது என்று கொஞ்சமாய் அவருக்குப் பாயாசத்தைக் கொடுக்க, “ஒரு நாள் சாப்ட்டா ஒன்னும் ஆகாது வாணி...” என அவர் கூற்று எடுபடாமல் போனது.

“ப்பா... சுகர் லெவல் எப்படி அவ்வளோ ஏறுச்சு. சாப்பாடு கன்ட்ரோலாதானே சாப்பிட்றீங்க?” தேவாவின் கவனம் அவரிடம் குவிந்தது.

“சாப்பாடு எல்லாம் சரியாதான் சாப்பிட்றேன் பா. டாக்டர்கிட்டே கேட்டேன். ஸ்ட்ரெஸ்னால சுகர் கூடுமாம். ஒழுங்கா தூங்கலைனாலும் கூடுமாம்!” கோபால் கூறியதும், தேவாவிடம் பதிலில்லை. மகன் முகத்தையே பார்த்திருந்த பொன்வாணி ஒவ்வொருத்தருக்காய் பாயாசத்தைக் கொடுத்துவிட்டு அவனுக்கு அருகே வந்து அமர்ந்தார்.

“அவருக்கு உன்னைப் பத்தின கவலைதான் தேவா... ஹரிக்கும் ரெண்டு புள்ளை ஆகப் போகுது. உன் புள்ளைங்களையும் பார்க்கணும்னு ஆசை. ஆனால் விதி விட மாட்டுதே... நாங்க என்ன பண்ணுவோம் டா?” என்றவாறே அவர் பாயாசத்தை நீட்ட,

குழந்தை மனைவி என்றதும் நிமிடத்தில் சிரித்த உதடும் மலர்ந்த முகமுமாய் ஆதிரை நின்றிருக்க, அவளது கையில் ஒரு பெண் குழந்தையும் அருகே அபினவும் நின்றிருப்பது போலத் தோன்ற, இவனுக்கு நெஞ்சம் திடுக்கிட்டுப் போனது.

படக்கென அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தவன் அறைக்குள் நுழைந்து கதவை படாரெ அடைக்க, இதயத் துடிப்பு மட்டும் அதிகமாகிவிட்ட உணர்வு.

‘ரிலாக்ஸ் தேவா... ரிலாக்ஸ். இட்ஸ் ஜஸ்ட் இமாஜினேஷன். வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு ஆதிரையைப் பத்தி நினைச்சுட்டே இருந்ததாலதான் அவங்க வந்தாங்க. லீவ் இட்...’ தன்னைத் தானே சமாதானம் செய்து ஆசுவாசம் செய்தவன் அலுப்புத் தீரக் குளித்து வரலாம் என்று சென்றுவிட்டான்.

“ஏம்மா... ஏன் தான் இப்படி பண்றீங்க? அவன் இப்பதான் கொஞ்சம் சிரிச்சான். அது பொறுக்கலையா உங்களுக்கு? பாயாசத்தை கூட குடிக்க விடாம மறுபடியும் கல்யாண பேச்சை ஸ்டார்ட் பண்ணி அவன் மூடை அப்செட் பண்ணிட்டீங்க!” ஹரி தாயைக் கடிந்தான்.

“ஆமா மா... அண்ணன் சிரிச்சா உனக்குப் பிடிக்கலையா? கோபமா போய்டுச்சு அது!” பிரதன்யா வருந்தினாள்.

“அத்தை, மாமா இப்போதைக்கு இந்தப் பேச்சு வேணாம், தேவா மாமா மனசு மாறட்டும்னு சொன்னாருல்ல... அதை மறந்துட்டீங்களா?” ஜனனி மாமியாரை மென்மையாய் கடிந்தாள். மகன் தான் கொடுத்த பானத்தைக் கூட வாங்காது முகத்தில் அடித்தாற் போல சென்றதிலே பொன்வாணிக்கு விழிகள் கலங்கின. இதில் அவர் செய்தது தவறு என இளையவர்கள் குற்றம் சாட்டவும் அவரது மகிழ்ச்சி மொத்தமும் வடிந்து முகம் வாடியது.

மனைவியை அப்படிக் காணப் பொறுக்காத கோபால், “டேய்... விடுங்க டா... அவ என்ன வேணும்னா பேசுனா? ஏதோ மனசுல உள்ளது வாய்ல வந்துடுச்சு. அதுக்குன்னு ஆளாளுக்கு எம் பொண்டாட்டியைத் திட்டுவீங்களா?” மனைவிக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

“ஹக்கும்... அத்தையை சொன்னதும் மாமாவுக்கு மூக்கு வேர்த்துடும்!” முகத்தைக் கோணிய ஜனனி எழுந்து குவளையைக் கழுவ சென்றாள்.

“பின்ன... என் பொண்டாட்டிக்கு நான் சப்போர்ட் பண்ணாம யாரு பண்ணுவாங்களாம்?” மனைவி தோளில் அவர் கையைப் போட்டு அணைக்க, “என்னங்க நீங்க...” என்ற பொன்வாணி கூச்சத்துடன் அவரது கையைத் தட்டிவிட்டார்.

தேவா குளித்து முடித்து வெளியே வந்ததும் அனைவரது பேச்சும் தடைபட, அவன் முகத்தையே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவன் புரியாது வந்து இருக்கையில் அமர்ந்தான்.

“ப்ரோ...அம்மா பேசுனதுக்கு எல்லாம் கோபப்பட்டு பாயாசத்தை குடிக்காம போவியா?” ஹரி அவனைக் கடிந்தான்.

“ண்ணா... அம்மா ஏதோ தெரியாம பேசிட்டாங்க. இந்த மாதிரி சந்தோஷமான நேரத்துல நீ மட்டும் கோபமா இருந்தா நல்லா இருக்குமா?” என்ற பிரதன்யா குவளையை அவன் கையில் கொடுத்தாள்.

“அம்மாக்காக குடிண்ணா... சேமியா பாயாசம் உனக்குப் பிடிக்காதுன்னுதான் பாசிப் பருப்பு பாயாசம் எல்லாம் மெனக்கெட்டு செஞ்சு இருக்காங்க. நீ குடிக்கலைன்னதும் அவங்க மனசு கஷ்டப்படும்ண்ணா!” சின்னவள் கூற,

“ஹே... நான் கோபப்பட்டு எல்லாம் போகலை. வெளிய போய்ட்டு அப்படியே எதுவும் சாப்பிடுவேனா நான்? குளிச்சிட்டு ப்ரெஷ்ஷாகிட்டு குடிக்கலாம் இருந்தேன் பிரது...” எனத் திகைத்தவன் பொன்வாணியின் புறம் திரும்ப, அவர் கண்கள் கலங்கி இருந்தன.

“ப்ம்ச்... ம்மா... என்ன நீங்க?” என அதட்டலாய் உரைத்து அவருக்கு அருகே சென்று அமர்ந்து பாயாசத்தை ஒரே மிடறில் குடித்து முடித்தான்.

“ம்மா...” என இவன் அழைக்க, “அம்மா மேல இருக்க கோபம் போய்டுச்சாயா? இனிமே என்கிட்ட பேசுவீயா?” வருத்தமாய் அவர் கேட்டதும், இவனுக்கு பாவமாய் போய்விட்டது.

“அம்மா... உங்ககிட்டேலாம் பேசாம யார்கிட்டேமா பேசப் போறேன். அது... அப்போ கொஞ்சம் கோபம்தான். அதுக்காக பேசாமலேயே போய்டுவேனா என்ன?” அவர் தோளில் முகம் புதைத்தான் இவன். நீண்ட நாட்கள் கழித்தான் தாயின் ஸ்பரிசம். அவன் தலையை அவர் கோதிவிடவும், அலைபுற்றிருந்த மனம் ஆசுவாசம் கொண்டது. சில வாரங்களாக இழுத்துப் பிடித்தக் கோபம் கானல்நீராய் கரைய, வேண்டாம் என எத்தனை விரட்ட முயன்றும் ஆதிரை கண்ணுக்குள் வந்து நின்றாள். பெருமூச்சுடன் இமை மூடி அவளது பிம்பத்தை விரட்டினான்.

“தலையை ஒழுங்கா துவட்டலையா தேவா? என்ன டா இது?” பொன்வாணி அதட்டலுடன் கூற, கோபால் ஒரு துவாலை எடுத்து வந்து மகன் தலையை உலர்த்தினார்.

பெற்றவர்கள் செய்கைகளை மேலும் கீழுமாக ப்ரார்த்த ரிதன்யா, “ஏன் ஹரி... இவனை சமாதானம் செய்ய இவ்வளோ நேரம் தம் கட்டி நம்ப ரெண்டு பேரும் பேசுனா, ஓவரா சமாதானமாகிட்டு நம்பளை கண்டுக்க மாட்றாங்க பாரேன்!” கொஞ்சமே கொஞ்சம் பொறாமை கலந்து வந்தது அவளது குரல்.

“கரெக்ட் டி... பாரேன் நேத்து பொறந்தப் புள்ளையைக் கொஞ்சுற மாதிரி கொஞ்சுறதை!” ஹரி மூக்கை விடைத்துக் கூறினான்.

“அட அற்ப பதர்களே... மாமாவே இப்போத்தான் சிரிச்ச முகமா இருக்காரு. அதுல உங்களுக்கு என்ன பொறாமை!” ஜனனி இவர்களது பொறுமலைக் கேட்டு அற்பமாய்ப் பார்த்து வைத்தாள்.

“அதான் டி எனக்கு டவுட்டு... ரெண்டு வாரமா முகத்தை கடுகடுன்னு வச்சிருந்த தேவா இன்னைக்கு வீட்டுக்கு வரும் போதே முகத்தை சிரிச்ச மாதிரிதான் இருந்துச்சு. இப்போ என்னடான்னா என்னைக்கும் இல்லாத திருநாளா அம்மா, அப்பாகிட்டே கொஞ்சிட்டு கிடக்கான். சரியில்லையே! சம்திங் பிஃஷி!” ஹரி தாடையைத் தடவினான்.

“ஏன் ண்ணா... ஒரு வேளை தேவாவுக்கு லவ் எதுவும் செட்டாகிடுச்சோ? ஏன்னா அண்ணன் கோபமா இருந்தா அவனை மலை இறக்குறது அவ்வளோ ஈஸி இல்ல. உனக்குத்தான் அவனைப் பத்தி தெரியுமே!” பிரதன்யா கேட்கவும், ஹரி முகம் அஷ்டக்
கோணலானது.

“வாய்ல அடி... வாய்ல அடி டி... நெவர், எங்க அண்ணனாவது லவ் பண்றதாவது... அவனுக்கு லவ்க்கு அர்த்தம் எல்லாம் தெரியும்னு நினைக்குறீயா? முப்பத்தி மூனு வயசு வரை வராத லவ்வா இப்போ வரப் போகுது. இந்த மூஞ்சிக்கு அதெல்லாம் செட்டா வாய்ப்பே இல்ல. இவன் ஆஞ்சநேயர் பக்தனாகப் போறவன்!” தீவிரமானக் குரலில் இளையவன் பேச,

“ஏன்...இந்த மூஞ்சிக்கே லவ் செட்டாகும் போது அவருக்கு செட்டாகாதா என்ன?” என ஜனனி ஹரியின் இடையில் கிள்ளினாள்.

“ஏய்... நான் காலேஜ்ல ரோமியோ டி. ஏதோ பார்க்க வெள்ளையா புசுபுசுன்னு பொமேரியன் நாய் மாதிரி க்யூட்டா இருந்தீயே... சரி போனா போகுதுன்னு அத்தை மகளுக்கு வாழ்க்கை கொடுத்தேன்டி நான்!” அவன் சிரிக்காது குறும்புடன் கூறவும்,

“பொமேரியன் நாயா? ஹம்ம்... ரூம்க்குள்ள வாடா நீ... நாய் என்ன பண்ணதுன்னு தெரியும்...” என முணுமுணுப்புடன் அவள் அறைக்குள் நுழைந்து இவனை முறைக்க, தங்கை பார்க்கிறாளா எனக் கணப் பொழுதில் அவளிடம் பார்வையைப் பதித்து திருப்பிவன் மனைவியிடம் உதட்டைக் குவித்து, “சாரி டி மொசக் குட்டி!” என்றான் இதழ்களை மட்டும் அசைத்து‌.

“போடா...” என அவள் அறைக் கதவை அடைக்க, இவன் முகத்தில் முறுவல் பூத்தது.

“ஹக்கும்... ண்ணா! நான் பார்த்துட்டேன்!” பிரதன்யா அவன் புறம் திரும்பாது உரைக்கவும், ஹரி முகத்தில் அசடு வழிந்தது.

“வெட்கமாவே இல்லையா டா உனக்கு?” சின்னவள் குறும்பாய் கேட்க, “பொண்டாட்டி கிட்டே சாரி கேட்க வெட்கப்படுறவன் மேரேஜ் பண்ணவே தகுதி இல்லாதவன் பிரது!” என கூறியவனை சிரிப்பும் முறைப்புமாய்ப் பார்த்தவள், தேவா அவனது அறைக்குள் செல்லவும் பூனை நடை போட்டு அவன் பின்னே சென்றாள்.

“என்ன பிரது?” தேவா தங்கையைக் கேள்வியாகப் பார்த்தான்.

“சும்மாண்ணா... உன்கிட்ட பேசலாம்னு!” என இழுத்தவள், “இன்னைக்கு உன் முகத்துல அன்யூஷூவலா தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது. என்ன மேட்டர்னு ஹரி கேட்க சொன்னான்!” என்றவள் அவன் முறைப்பில், “ஹரிண்ணா கேட்க சொன்னான்!” பற்கள் அனைத்தையும் காண்பித்து சிரித்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே! நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்!” விறைப்பாய் கூற முயன்றவனின் இதழோரம் தாராளமாகப் புன்னகை அரும்பித் தொலைத்தது.

“பார்த்தீயா... பார்த்தீயா? ரெண்டு வாரமா முகத்தை மூனு இஞ்சுக்கு தூக்கி வச்சிருந்தீயே ண்ணா... எப்படியும் உன்னை மலையிறக்க கொஞ்ச மாசமாவது ஆகும்னு நினைச்சா, நீ எங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து சீக்கிரமா அம்மாகிட்ட பேசிட்ட?” இவள் உதட்டைக் கோணவும், தேவா பிரதன்யா தலையில் வலிக்காது கொட்டினான்.

“ஷ்... சரி, ரெண்டு வாரமா முகத்தை வேற டெரரா வச்சிருந்தண்ணா நீ. உன்னைவிட்டா பாக்கெட் மணி எனக்கு யார் தருவா இந்த வீட்ல. கையில ஒத்தக் காசில்லை ப்ரோ!” அவள் இரண்டு கையையும் விரித்து காண்பிக்க, “அடிப்பாவி... ரெண்டு நாளைக்கு முன்னாடி ஐநூறு ரூவா கொடுத்தேனே! அதெங்க?” ஹரி பின்னிருந்து சற்றே திகைப்புடன் கேலியாய் வினவிக் கொண்டே உள்ளே நுழைய, தேவா தங்கையை முறைத்தான்.

பிரதன்யா ஹரியின் புறம் திரும்பி அவனை முறைத்தவள், “ப்ம்ச்...‌ அந்தக் காசை வெண்ணெய் வாங்கிக் குடு, நெய் வாங்கிக் குடுன்னு உன் பொண்டாட்டிக்குத்தான் செலவளிச்சேன் ஹரிண்ணா!” என்றாள் பல்லைக் கடித்து.

“சரி, இப்போ உனக்கு காசு எதுக்கு?” தேவா கேட்க, “ஃபேர் வெல்க்கு கொடுக்கணும்!” என்றாள்.

“ஹம்ம்... ரொம்ப செலவு பண்ணாத. இந்த மந்த் இதான் உனக்கு பாக்கெட் மணி. அடுத்து நெக்ஸ்ட் மந்த்தான்!” கண்டிப்புடன் அவன் கொடுத்த ஐநூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு பிரதன்யா ஓடிவிட, ஹரி தமையனைக் குறுகுறுவென பார்த்தான்.

“என்ன டா... எதுக்கு அப்படி வெறிச்சுப் பார்க்குற?” தேவா சங்கடத்துடன் அதட்ட, “இல்ல... எனக்குப் புரியலை ப்ரோ. அம்மாகிட்டே கோபம் போய்டுச்சுன்னு கொஞ்சுற. பிரது கேட்டதும் காசு கொடுக்குற. என்னவாம்?” என்றான் புருவத்தை உயர்த்தி.

அதில் தேவா முறைக்க முயன்றாலும் முடியவில்லை. தொண்டையை செருமியவன், “நீ மட்டும் சண்டை போட்டா உடனே சமாதானமாகிடுவ‌. நான் சிடுசிடுன்னு எல்லார்கிட்டயும் சிடுமூஞ்சின்னு பேர் வாங்கணும்? இதென்ன டா நியாயம்?” தேவா கேட்டதும், ஹரி முதலில் விழித்துப் பின்னர் தமையனை அணைத்துக் கொண்டான்.

“ஷப்பா... ரெண்டு வாரமாச்சு டா நீ சரியாகி வர. ஐ க்நோ, கஷ்டம்தான். பட் என் அண்ணன் ஸ்டராங்க். எல்லாத்தையும் க்ராஸ் பண்ணிடுவான்னு தெரியும்!” என்றவனைப் பார்த்து தேவா மென்னகை புரிந்தான்.

“நீ ஒன்னும் கவலைப்படாத ப்ரோ. எப்படியும் நீ மேரேஜ் பண்ண போறது இல்ல தானே?” ஹரி தீவிரக் குரலில் கேட்க, தேவா அவனை முறைத்தான்.

“ப்ம்ச்... முறைக்காம பதில் சொல்லு ப்ரோ!” அவன் கேட்கவும், தேவா சில நொடிகள் அமைதியாகிப் பின்னர் தலையை மையமாக அசைத்தான்.

“ஆங்... அதான் நீ எப்படியும் கல்யாணம் பண்ண போறது இல்ல. அதான் நான் இன்னொன்னை ரிலீஸ் பண்ணப் போறேனே. நீ சம்பாரிக்கிறது எல்லாம் வீணாப் போகும்னு நினைக்காத. அடுத்து ஒரு சிங்கக்குட்டியைப் பெத்து தரேன். ஏற்கனவே ஒரு குரங்கு குட்டி இருக்கு. ரெண்டையும் நீயே வளர்த்து சொத்து பத்தை எழுதி வச்சிடு. நானும் என் ஜானுவும் ஜாலியா இருப்போம்!” என்றவனை தேவா சிரிப்புடன் அடிக்க கை ஓங்கினான்.

“ஏய்... என்ன டா சிரிக்கிற? சீரியஸா பேசுற? எப்படியும் நீ சிங்கிளாதானே இருக்க போற. ரெண்டு பிராஞ்சையும் என் புள்ளைங்களுக்கு ஆளுக்கொன்னா கொடுத்துடலாம். வீட்டை எனக்கும் என் பொண்டாட்டிக்கும் எழுதிக் கொடுத்துடு டா!” அவன் குறும்பாய் கேட்க,

“அப்போ நான், அம்மா, அப்பா எல்லாம்?” தேவா முறைக்க, தொண்டையைக் கனைத்தவன், “வயசான காலத்துல நீயும் அவங்களோட ஹரேஹரா போட்டு கோவில் குளம்னு சுத்து டா. ஒரே ஜாலியா இருக்கும்!” ஹரி கூறியதைக் கேட்டு,

“ஏன் டா... நீயும் உன் பொண்டாட்டியும் சந்தோஷமா இருப்பீங்க. என் மகன் மட்டும் கோவில் குளம்னு சுத்தணுமோ? இதுல இந்த வீடு உங்களுக்கு? பிச்சு புடுவேன் டா!” பொன்வாணி பின்னூடே வந்தார்.

“மம்மி, என்ன இப்படி உல்டாவா பல்டி அடிக்கிற... இப்படிலாம் பேசுனா தேவா கோபப்படுவான். அப்படியே லேசு வாக்குல ஒரு பொண்ணைப் பார்த்து வச்சிருக்கேன்னு நீதானே சொன்ன? மறந்துட்டீயா?” கமுக்கமாக சிரித்துக் கொண்டே ஹரி வெளியேற, பொன்வாணி பெரிய மகனைக் கண்டு கெக்க பெக்கவென விழித்தார்.

‘கொளுத்திப் போட்டுட்டு போய்ட்டானே நான் பெத்த வாலு!’ என அவர் பதறி தேவாவை மலை இறக்கி முடியவே அந்தநாள் முடிந்து போயிருந்தது. ஒருவாறாக வீட்டில் உள்ள அனைவரது முகத்திலும் புன்னகை மீண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பிற்குத் திரும்பினர்.

தேவா மறுநாள் உழவர் துணைக்குச் செல்ல, ஆதிரை அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் காலை வணக்கம் சொல்ல, இவனது முகத்திலும் முறுவல் பிறந்தது. ஆனால் அதற்கடுத்த நாட்களில் ஆதிரையின் முகம் பார்ப்பதை தவிர்த்தான் தேவா. ஏனோ இந்தப் பெண்ணிடம் ஏற்பட்ட சிறு சலனத்தைப் பெரிதாக்க அவன் விரும்பவில்லை. வேண்டாம் என மூளை அறிவுறுத்தியது. ஆனால் மனம் அவளில் தடுமாறித் தயங்கித் தவித்தது.

ஆதிரைக்கு மணமாகவில்லை என்று புத்திக்குப் புரிந்தாலும் அபினவ் எங்கோ ஓர் மூலையில் நச்சரித்தான். ஒருவேளை மணமுறிவு ஏற்பட்டிருக்க கூடும். அதனாலே அவள் அன்றைக்கு
‘மிஸ் ஆதிரையாழ்!’ என அழுத்தம் கொடுத்திருக்கலாம் என அவனே ஒரு முன்முடிவிற்கும் வந்திருந்தான்.

பார்க்க கூடாது என அவன் முடிவெடுத்தால் போதுமா என்ன? அவனுக்கு கீழே வேலை செய்யும் பெண்ணிடம் கேட்க, வேலை ஏவ என ஆயிரம் காரணங்கள் முன்னே வந்து நின்றன. சொந்த காரணங்களுக்காக வேலையில் அலட்சியம் காட்டுவது அவனுக்குப் பிடிக்காத ஒன்று. அதனாலே வேலை நிமித்தமாக அவளிடம் பேச வேண்டியிருந்ததை தட்டிக் கழிக்கவில்லை.

ஆதிரை தேவாவிடம் தென்பட்ட சிறு சிறு மாற்றங்களைக் கவனித்தாள். முன்பு போல அவன் சுள்ளென எரிந்து விழவில்லை. அதிசயமாக அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

தர்ஷினி கூட, “ஏன் கா... நம்ப சாருக்குள்ள ஏதும் ஆவி புகுந்திடுச்சோ என்னமோ? முதல்ல மாதிரி இல்லாம இப்போ ரொம்ப சஃப்டா ஹேண்டில் பண்றாரே... ஒரு வேளை கல்யாணம் நிச்சயமாயிருக்குமோ? அதான் வருங்காலத்துக்கிட்டே பேசுற சோக்குல நம்பளை கவனிக்கலையோ?” அவள் கிண்டலாய் கேட்க, ஆதிரையின் முகம் சுருங்கியது.

“தேவா சார் அன்மேரிட்-ஆ தர்ஷினி?” இவள் கேட்டதும்,

“அட ஆமாக்கா... உங்களுக்குத் தெரியாதா? முன்னாடி மேடை வரை வந்து கல்யாண பொண்ணு ஓடிப் போய்டுச்சு. அப்புறம் இந்த மனுஷன் கல்யாணமே பண்ணலை. ஒருவேளை இப்போ கல்யாண ஆசை வந்திருக்குமோ?” என அவளாக யூகத்தில் கேட்க, தர்ஷினி சொன்ன செய்தி அவளுக்குப் புதிது. தேவாவிற்காக மனம் நொடி நேரம் வருத்தப்பட்டது.

“ச்சு... அது அவர் பெர்சனல் தர்ஷினி. சிடுசிடுன்னு இருந்தாலும் குறை சொல்ற. சிரிச்சாலும் குறை சொல்றீயே நீ!” அவள் அதட்ட, தர்ஷினி அசடு வழிந்தாள்.

“எல்லாம் ஒரு ஆர்வம்தான் கா!” அவள் கூற, “இந்த ஆர்வத்தை வேலைல காட்டியிருந்தா இந்நேரம் நீ என் இடத்துக்கு வந்திருக்கலாம்!” கேலியாய் கூறினாலும் ஆதிரை அவ்வப்போது தர்ஷினியும் கோமதியும் வேலை சரியாய் செய்யவில்லை என்று சிரித்துக் கொண்டே குட்டுவாள்.

“அக்கா... போங்க!” அவள் சிலுப்பினாள். நாட்கள் அதன் போக்கில் மெதுவாய் நகர்ந்தன.

தேவா முயன்று இந்தப் பெண்ணிடம் தன் கவனத்தை சிதறாது பார்த்துக் கொண்டான். குதிரைக்கு கடிவாளம் இட்டதைப் போல அவள்புறம் ஏற்பட்ட சலனத்தை, ஈர்ப்பை பெரிது படுத்தாது நேரே சென்றான். ஆம், தேவாவைப் பொறுத்தவரை இது வெறும் ஈர்ப்புதான். காதலில் எல்லாம் அவனுக்குப் பெரிதாய் நம்பிக்கை இல்லை.

‘போக்கத்தவன்தான் காதலிப்பான்!’ என கேலியாய் எண்ணுபவனுக்கு முப்பத்து மூன்று வயதில் ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என்ற வரையறைக்குள் வைக்க முடியவில்லை. அப்படி காதல் என்று ஒப்புக் கொள்ள அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. ஏதோ அவள் தன்னை நன்றாய் புரிந்து வைத்திருக்கிறாள் என்ற சலனம்தான். மற்றபடி இது எதுவும் என்னைப் பாதி
க்காது என்று இறுமாந்திருந்தவனின் எண்ணம் ஒருநாள் தூள் தூளாக உதிர்ந்து வெடித்துச் சிதறப் போகும் நாளும் வெகுவிரைவில் காத்திருந்தது.

தொடரும்...

 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Andha nall ah sikkiram kondu vanga illa na ivanuku straight ah arupatham kalyanam panra mathiri aagidum
 
Top