- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 13 
ஒரு வாரம் கடந்திருந்தது. அன்றைக்கு தேவாவின் ரௌத்திரமான பேச்சில் அதிர்ந்து போன பெற்றவர்கள் அவனை சமாதானம் செய்ய முயல, “ம்மா...எனக்கு கோபம் குறைஞ்சதும் நானே உங்ககிட்டே பேசுறேன். நீங்களா எதாவது செஞ்சு என் கோபத்தை அதிகப்படுத்தாதீங்க!” என்று தன்மையாகவே கூறினான். பொன்வானிக்கும் கோபாலுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.
தன் இளைய மகன் மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ, இவன் மட்டும் தனித்து நிற்கிறானே என மூத்தவனைப் பற்றிய கவலை எப்போதும் உண்டு. அதனாலே முதலில் தடைபட்ட திருமணத்தின் எந்த சுவடும் அற்று மகனுக்கு சிறந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என எண்ணித்தான் விஷாலியை பேசி முடித்தது. இந்தக் காலத்து படித்தப் பெண், தன் மகனுக்கும் நல்ல துணையாக இருப்பாள் என அவர்கள் எண்ணியிருக்க, என்னவோ இந்த முறையும் அவனது திருமணம் கை நழுவிப் போயிருந்தது. பெற்றவர்களாலே அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஷாலியின் வீடு வரைச் சென்று தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு வந்த பொன்வாணி, அதற்கும் சேர்த்து மகனிடம் வசவுகளைப் பெற்றிருந்தார்.
இந்த முறை எந்த தடங்கலும் அற்று தேவாவின் திருமணத்தை நல்லபடியாக முடித்து விடலாம் பெற்றவர்களின் எண்ணம் மொத்தமாய் பொய்த்துப் போனது. மீண்டும் திருமணப் பேச்சைத் தொடங்கினால் அவன் வீட்டிற்கே வர மாட்டேன் என்று கூறிய வார்த்தைகள் வேறு மனதைப் பிசைந்தது.
தங்களைத் தவிர அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்? அப்படி இருக்கையில் மகன் எங்கு செல்லக் கூடும். தனியாய் சென்று என்ன செய்வான் என்றெண்ணியவருக்கு மனம் கனத்துப் போனது. கோவிலுக்குச் சென்று தன் பாரம் முழுவதையும் கடவுளிடம் இறக்கி வைத்துவிட்டார். அவர் பார்த்துக் கொள்ளட்டும். இப்படியே தன் மகன் யாருமற்று நிற்கவா ஆசையாய் பெற்று வளர்த்தது.
சிறு வயதிலேயே பொறுப்பாய் வீட்டை கவனித்துக் கொண்டவன். எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்யும் அவனுக்குத் தங்களால் ஒரு நல்லது செய்ய முடியவில்லையே என மனம் புழுங்கிற்று. ஜனனியிடம் வாய் ஓயாது சொல்லி மாய்ந்து போனார். இனிமேல் திருமணப் பேச்சை எடுக்கவும் முடியாது. அதற்காக அவனை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன? எந்த முடிவும் எடுக்க முடியாது மனைவி தள்ளாட,
“வாணி, கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கும். பொலம்பாம இரு முதல்ல. ஒரு ரெண்டு மாசம் போகட்டும். உன் மகன் சரியானதும் அடுத்து என்னென்னுப் பார்ப்போம். அப்படியே எல்லாம் அவனை விடப் போறது இல்ல. இதையே நினைச்சு நீ உடம்பைக் கெடுத்துக்காத!” என கோபால் மனைவியை அதட்டி உருட்டி அமைதிப்படுத்தினார்.
ஹரி அன்றைக்கு அடித்துப் பிடித்து ஓடி வந்து தேவாவிடம் பேச முனைய, அவன் மறுத்துவிட்டான். யாரிடமும் பேசவில்லை. தனிமையை நாடினான். இரண்டு நாட்கள் பொறுமை காத்த ஹரி மீண்டும் அவனிடம் பேச முயல, “டேய், ப்ளீஸ் எதாவது அட்வைஸ் பண்றேன்னு வந்துடாத. யார் மேலயோ இருக்க கோபத்தை எல்லாம் உன் மேல காட்டிடுவேன். என்னைத் தனியா விடு. ஐ வில் பீ ஓகே!” என்றவன் குரலில் ஹரியாலும் எதுவும் செய்ய முடியாது போயிற்று.
ராகினியிடம் மட்டுமே தேவா பேசினான். மற்றபடி வீட்டில் உள்ளவர்களிடம் என்ன, ஏது என்பது போலத்தான் பார்த்தான். வெளியே சிடுசிடுவென இருந்தாலும் வீட்டில் கொஞ்சம் இலகுவானவன்தான். ஆனால் இப்போது வீட்டிலும் முகம் இறுகியே கிடந்தது. யாராலும் தேவாவை சமாதானம் செய்ய முடியவில்லை என்பதே உண்மை. அவனாக சரியாகி வரட்டும் என அவனுக்கான நேரத்தைக் கொடுத்தனர்.
ராகினி மட்டுமே அவ்வீட்டை உயிர்ப்புடன் வைத்திருந்தாள். கலகலப்பு, சிரிப்பு எல்லாம் குறைந்திருந்தது. ஹரி முடிந்தவரை அனைவரையும் இலகுவாக்க முயன்றான். ஆனாலும் பெரியவர்களின் முகம் வாடியே கிடந்தது.
“ம்மா... எனக்கு என்னமோ தேவாவுக்காக விஷாலி பிறக்கலைன்னு தோணுது. அவனுக்காக பிறந்தப் பொண்ணை இன்னும் கடவுள் நம்ப கண்ல காட்டலை மா!” என்றவனை முறைத்த பொன்வானி,
“இப்பவே அவனுக்கு முப்பத்து மூனு டா. வந்ததுல பாதி வரன் இவனோட வயசைக் காரணம் காட்டியே வேணாம்னு சொல்லிட்டாங்க. போதாத குறைக்கு உங்க அண்ணனுக்கு முன்னாடி நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட. ஏன் மூத்தவனுக்கு எதுவும் குறையான்னு கேட்டு பொண்ணைத் தரலை. எல்லாம் உன்னால வந்தது டா. அவனுக்கு முன்னாடியே ஜனனியைக் கட்டுவேன்னு வந்து நின்னுட்ட. அண்ணனுக்கு கல்யாணமாகாம நானும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா, இந்நேரம் உன்னை மாதிரியே அவனும் பொண்டாட்டி புள்ளைன்னு சந்தோஷமா இருந்து இருப்பான்!” தன்னை சமாதானம் செய்த ஹரியை அவர் காய்ச்சி எடுத்ததில் அவன் ஓடிவிட்டிருந்தான். ஜனனியிடமும் பொன்வாணி முகத்தைக் காண்பித்தார்.
“ஹரி, உங்கம்மா இப்போ எதுக்கு என்கிட்ட மூஞ்சியைக் காட்றாங்க. நானா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்த கால்ல நின்னேன்? ஹம்ம்... எங்கப்பா வேற யாருக்கும் என்னைக் கல்யாணம் பண்ணிக் குடுத்துடுவாரோன்னு பயந்து நீதானே அவசர அவசரமா கல்யாணத்துக்கு எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண?" அறைக்குள்ளே மனைவியும் அவனைத் திட்டி தீர்த்ததில் தாயிடமும் தாரத்திடமும் அல்லாடிப் போனான். இப்படி யாருக்குமே உவப்பே இல்லாது நாட்கள் நகர்ந்தது.
“பைப்லைன் ஏன் இப்படி துருப்பிடிச்சிருக்கு? உள்ள எப்படி இருக்கு? இதே மாதிரி இருந்தா பால்ல டஸ்டாகிடாதா? சுபாஷ் இதெல்லாம் பார்க்காம என்ன பண்றீங்க?” தேவா கடுமையாய் கேட்க, “சாரி சார், நான் பார்த்து சரி பண்ணிட்றேன்...” என்றவனை முறைத்துவிட்டு அடுத்தப் பகுதிக்குள் நுழைந்தான். கடந்த ஒரு வாரமாகவே அவனது கடுகடு முகத்தைதான் அனைவரும் பார்த்திருந்தனர். மருந்துக்கும் அவன் முகத்தில் சிரிப்பு இல்லை. சிறு பிரச்சனை என்றால் கூட யார் என்ன ஏது என்று முகதாட்சண்யம் பார்க்காமல் திட்டித் தீர்த்தான். அதனாலே இந்த ஒரு வாரமும் ஊழியர்கள் அனைவரும் எள் என்றால் எண்ணெயாய் நின்றனர்.
ஆதிரை கூட அவனது இந்த முகத்தைப் பார்த்து வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள். சிறு தவறு கூட நடந்து விடாமல் பார்த்துக் கொண்டாள்.
தேவா மேற்பார்வை பார்த்தவாறு இருக்க, அலுவலக சம்பந்தமாக அழைப்பு ஒன்று வந்தது. புதிதாய் உழவர் துணை கிளை ஒன்று துவங்கலாமா என்றெண்ணம் சமீபகாலமாக முளைத்திருந்தது. வேலையில் முழுமையாக தன்னை மூழ்கடித்தால் நிஜவாழ்க்கையில் இருந்து சற்றே தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணினான். முன்பே திட்டமிடப்பட்டதுதான் என்றாலும் இப்போது இன்னுமே அந்த எண்ணம் வலுப்பெற்றிருந்தது.
ஓயாது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றொரு உந்துதல். விஷாலி மீது அப்படியொன்றும் அவனுக்கு ஆசையோ, அன்போ துளிர்க்கவில்லை. ஆனாலும் நடந்த நிகழ்வு அவனது தன்னம்பிக்கையை சற்றே சரித்துப் போட்டிருந்தது. வீட்டு மக்களின் முன்னே நன்றாய் இருக்கிறேன் என்ற அரிதாரத்தைப் பூசியிருந்தாலும் உள்ளுக்குள்ளே கொஞ்சம் உடைந்து போயிருந்தான். ஏன் பெண்களுக்கு மட்டும்தான் திருமணம் நடக்காது போனால் வலியும் வேதனையுமா என்ன? வலிக்கு ஆண், பெண் பேதம் தெரியாதே. இன்றைய நிலைக்குத் திருமணச் சந்தையில் விலை போகாத இருபாலருக்கும் ஏக்கமும் வலியும் பொதுவுடமை தானே?
தன்னம்பிக்கையை உயர்த்த வேண்டும். திருமணம் மட்டும்தான் வாழ்க்கையா என்ன? எத்தனையோ பேர் தனியாக வாழ்ந்து காட்டவில்லையா? என எண்ணும் போதே டாடா குழுமத்தின் நிறுவனர்தான் அவன் நினைவிற்கு வந்தார். அத்தனைப் பெரிய நிறுவனத்தை நிர்வகித்த மனிதர் திருமணம் செய்யாது நன்றாய் தானே வாழ்ந்தார். தானும் இனிமேல் எந்தப் பெண்ணையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள கூடாது என திண்ணமான முடிவை எடுத்திருந்தான். திருமணம், வாழ்க்கையில் ஒரு பகுதியன்றி அதுவே வாழ்க்கையா என்ன?
ஏன் கல்யாணம் செய்தும் அந்த வாழ்க்கைத் தோல்வி அடைந்து எத்தனையோ பேர் தனித்து வாழவில்லையா என்ன? அப்படி எண்ணிக் கொள்கிறேன் என நினைத்து நேற்றிரவுதான் மனதை ஒருவாறு சமாதானம் செய்திருந்தான்.
இரவு உறங்குவதற்கு முன்பு கண்ணாடி முன்னே சென்று நின்றான். முப்பத்து மூன்று என்று பார்த்ததும் சொல்லிவிட முடியாது. திராவிட நிறம், முன்னெற்றியில் முடிகள் பறந்தன. கையை வைத்துக் கோதினான். உயர்த்திற்கு ஏற்ற உடல்வாகு. எந்நேரமும் ஓடிக் கொண்டே இருப்பதால் வயிறு ஒட்டிப் போய் உடல் நன்றாய் முறுக்கேறி இருந்தது.
‘எனக்கு என்ன? நான் நன்றாய் இருக்கிறேன். இனிமேல் என் வாழ்வில் நானே ராஜா, நானே மந்திரி. விஷாலியை திருமணம் செய்திருந்தால் கூட அவளுக்காகவென்று நிறைய மாறியிருக்க வேண்டும். அவளுக்காகவென தன்னுடைய கொள்கைகளைத் தளர்த்தியிருக்க வேண்டும் என என்றெண்ணி அவளிடமிருந்து தப்பித்து விட்டதாய் மனம் களிப்புற்றது.
தேவா ஊரின் மையப்பகுதியில் இருந்த அந்த இடத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்தான். ஏனோ அங்கே மற்றொரு கிளை வைப்பதில் அவனுக்கு விருப்பமற்றுப் போய்விட, அப்போதே இடத்தை வேண்டாம் என கூறிவிட்டு, வேறு ஏதும் நல்ல இடமாக இருந்தால் கூறுமாறு தரகரிடம் கூறிவிட்டு வந்தான்.
“அக்கா... அக்கா!” ஆதிரையின் வெள்ளை அங்கியின் முனையைப் பிடித்து இழுத்தாள் தர்ஷினி.
“என்ன தர்ஷினி, எத்தனை சாம்பிள் போட்டிருக்க நீ?” அவள் கணினியில் கவனமாய் இருந்தபடியே வினவ, “உங்க சின்சியாரிட்டிக்கு அளவே இல்லாம போச்சு. லஞ்ச் டைம் வந்துடுச்சு, வாங்க சாப்பிடலாம்!” அலுத்துக் கொண்டாள் சின்னவள். ஆதிரை கணினியை மடித்துவிட்டு எழுந்து சென்று உணவை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
கோமதி அன்றைக்கு விடுமுறை எடுத்திருக்க, ஆதிலாவிற்கு உடல்நிலை சரியில்லை என வந்துவிட்டு ஒரு மணிநேரத்திலே கிளம்பிவிட்டாள். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் பாலை சோதனை செய்தனர்.
“ஏன் கா... நான் எடுத்த டிசிஷன் சரி தானே?” இத்தோடு நான்காவது முறையாகக் கேட்ட தர்ஷினியை முறைத்துவிட்டு ஆதிரை உணவை உண்ணத் தொடங்கினாள்.
“யோசிச்சுட்டே இருந்தா லஞ்ச் டைம் முடிஞ்சிடும் தர்ஷினி!” இவள் அதட்ட, சின்னவளின் முகம் வாடியது.
“ரொம்ப குழப்பமா இருக்கு. பயமா கூட இருக்கு கா!” சோர்ந்தக் குரலில் கூறியவளைப் பார்க்க ஆதிரைக்கும் பாவமாய்ப் போய்விட்டது.
“ப்ம்ச்... இப்போ என்ன உன் ப்ராப்ளம்? அவர்கிட்ட நீ நோ சொன்னதுதான் உன் பிரச்சனையா?” ஆதிரை எழச் சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்து வினவினாள்.
“ஹம்ம்... அதான் கா. ரொம்ப நல்லவரு. பட், கொஞ்சம் சிடுமூஞ்சி. பேசுனப்போ கூட ஓகேன்னு தோணுச்சு. ஆனா பழகும்போது ஒத்தே வராதுன்னு தோணுச்சு. நான் நோ சொல்லிட்டேன். ஆனால் அவருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் இல்ல கா? எனக்கு இதை நினைச்சே தூக்கம் வரலை!” தர்ஷினி குரலில் வருத்தம் மேவியது.
“நீ அவருக்கு சொன்னது நோ இல்ல தர்ஷினி. அவருக்கு செஞ்ச பெரிய உதவி... ஹம்ம் நிம்மதின்னு கூட சொல்லலாம்...” ஆதிரைக் கூறியதும் மற்றவள் புரியாது விழித்தாள்.
“இதுவரைக்கும் எத்தனை தடவை நீங்க மீட் பண்ணி இருக்கீங்க?”
“த்ரீ டைம்ஸ் கா”
“சண்டை எதுவும் வந்திருக்கா?” ஆதிரைக் கேட்டதும் இவள் முகம் கோணலானது.
“சண்டை மட்டும்தான் கா வந்திருக்கு. மூனு மீட்டிங்க்ல ரெண்டு சண்டை. ஏன்டா அவுடிங் போனோம்னு நினைக்கிற அளவுக்கு வெறுத்துப் போய்ட்டேன் கா. அவர் சிடுமூஞ்சி சிதம்பரம். எதுக்கெடுத்தாலும் அதை செய்யாத, இதை பண்ணாத. செல்ஃபி எடுத்தா பிடிக்காதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். நெக்ஸ்ட் டைம் என் அண்ணா அவர் கூட போறீயான்னு கேட்டப்போ அவனைப் புடிச்சு நல்லா திட்டிவிட்டுட்டேன், அவன் வேற பாவம்!” தர்ஷினி முகத்தைச் சுருக்கி நடந்ததை விளக்கினாள்.
“ரெண்டு மணி நேரம் கூட ஒன்னா இருக்க முடியாத நீங்க ரெண்டு பேரும் எப்படி லைஃப் லாங் வாழ முடியும்னு யோசிச்சுப் பார்த்தீயா? முகதாட்சண்யம் பார்த்து சரின்னு சொல்றதுக்கு மேரேஜ் சின்ன விஷயம் இல்ல தர்ஷினி. ஒரே ஒரு வாழ்க்கை தான். கல்யாணத்துக்குப் பிறகு சந்தோஷமா இல்லைனாலும் நிம்மதியா வாழ வேணாமா? நீ நோ சொன்னதுல அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஆற அமர யோசிச்சுப் பார்த்தா அவருக்கே புரியும் தர்ஷினி. குடும்பத்துக்காக கல்யாணம் பண்றது, சொசைட்டிகாக கல்யாணம், வயசாகிடுச்சேன்னு பண்றது எல்லாம் சுத்த ஹம்பக். மேரேஜே ஒரு ட்ராப்தான். நம்மளோட சொசைட்டி அப்படி மாத்தி வச்சிருக்கு!” ஆதிரைக் கூறியதும்,
“அப்போ மேரேஜ் பண்ண வேணாம்னு சொல்றீங்களா? அதெப்படி தனியாவே வாழ முடியும்?”
“மேரேஜே பண்ண வேணாம்னு சொல்லலை தர்ஷினி. உனக்கான ஒருத்தரைத் தேடிக் கண்டு பிடி. உன்னோட எண்ணமும் செயலும் ஒத்துப் போகுற ஒருத்தரோட வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கோ. அம்மா, அப்பா சொல்றாங்கன்னு ரெண்டு நிமிஷம் பார்த்து ரெண்டு டைம் அவுட்டிங் போனதும் சரின்னு சொல்றது ரொம்ப ரிஸ்க். நீ ஃபோட்டோ காட்டும் போதே அவரு உனக்கு செட்டாக மாட்டார்னு தோணுச்சு!”
“அப்படியா? எப்படிக்கா தோணுச்சு?” தர்ஷினி அதிசயித்தாள்.
“அவரைப் பார்த்தா மிலிட்டரிக்கு ஆள் எடுக்குற மாதிரி இருக்காரு. நீ அவருக்கு செட்டாக மாட்ட. இன்பேக்ட் உன்கிட்ட இருந்து அவர் எஸ்கேப் ஆகிட்டாரு. இல்லை அவர் ரூல்ஸ் போட்டுட்டே வாழ்க்கையை ஓட்டியிருக்கணும். நீ அதையெல்லாம் கண்டுக்காம டென்ஷன் பண்ணுவ, சண்டை வரும். நீ ரொம்ப எக்ஸ்பெக்டேஷன் உள்ள ஆளு. அவர் சிம்பிளா லைஃபை லீட் பண்ண நினைக்கிறவரு. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைக் கொடுக்கும். ரெண்டு தடவை அட்ஜஸ்ட் பண்ணிப் போனாலும் மூணாவது தடவை அதைக் கோபமா காட்டிடுவ. அப்போ வாழ்க்கை கசந்துடும் தர்ஷினி. அரேஞ்ச் மேரேஜ்ன்ற கான்செப்டை விடு. இருபத்து நாலு வயசுதானே ஆகுது. பொறுமையா உன் கேரக்டருக்கு செட்டாகுற பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. வாழ்க்கை சந்தோஷமாக இல்லைனாலும் நிம்மதியாவாது இருக்கும்...” ஆதிரைப் பேசி முடித்ததும்,
“அப்போ நோ சொன்னதுல அவர் ஹேர்டாகியிருக்க மாட்டாருன்னு சொல்றீங்களா?”
“அப்சல்யூட்லி நோ. அவர் ஹேர்ட் ஆகி இருப்பாரு தான். பட் இட்ஸ் சேக் ஃபார் ஹிஸ் வெல்தான்னா நோ சொல்றதுல தப்பில்லை. பிடிக்கலைன்னு சொல்றதுக்கு தயங்காத!”
“அவருக்கு நல்ல பொண்ணா கிடைக்குமா கா?”
“நீ நல்ல பொண்ணு இல்லையா தர்ஷினி?” ஆதிரை கேள்வியில் தர்ஷினி முறைத்தாள்.
“அவரோட எண்ணத்துக்கு ஏத்த மாதிரி சிம்பிளா, பெருசா எக்ஸ்பெக்டேஷன் இல்லாத பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணா அவரோட வாழ்க்கை நல்லா போகும் தர்ஷினி. அவரைப் பத்தி நீ இவ்வளோ யோசிக்காத. போய் சாம்பிளை டெஸ்ட் பண்ணு...” என ஆதிரை எழுந்து காய்ந்திருந்தக் கையைத் தேய்த்துக் கழுவினாள்.
“நீங்க சொல்றதும் கரெக்ட் கா. அவரை நினைச்சுப் பாவமா இருந்தாலும் அன்னைக்கு அவர் போட்ட ரூல்ஸ்ல எனக்கு செம்ம காண்டாகிடுச்சு. சே, எப்படித்தான் எனி டைம் சிடுசிடுன்னு இருக்க முடியுதோ?” என நொடித்த தர்ஷினி, “அப்படியே நம்ப தேவா சார் மாதிரி... அவரும் சரியான சிடுமூஞ்சி தானே? இந்த மனுஷனுக்கு சிரிக்கத் தெரியுமான்னு யோசிக்கிறேன் கா நான். வீட்லயும் கஞ்சிப் போட்ட மாதிரி விறைப்பாத்தான் இருப்பாரு போல!” கிடைத்த இடைவெளியில் தேவாவையும் வாயில் அரைத்தாள்.
“தர்ஷினி...யாரைப் பத்தியும் அவங்க இல்லாதப்போ பேசுறது தப்பு!” ஆதிரை தர்ஷினியை அதட்டினாலும் இந்த வாக்கியத்தைக் கூறித் தன்னைத் திட்டியவனின் நினைவும் பின்னோடே அழைக்காமல் வந்து நின்றது.
கையிலிருந்த சோதனைக் குழாயில் பாலை நிரப்பிய தர்ஷினி, “நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். ஒரு நாளாவது தேவா சார் நம்பளைப் பார்த்து சிரிச்சிருக்காரா கா?” முகத்தைக் கோணினாள்.
“அவர் உன்னைப் பார்த்து ஏன் சிரிக்கணும். அதுக்கு என்ன அவசியம்?” ஆதிரைக் கேட்டதும் ஒரு நொடி விழித்தவள்,
“ப்ம்ச்... ஒரு கர்டசிக்காவது சிரிக்க வேணாமா கா?” முனங்கலாக கேட்டாள்.
“சரி, அவர் சிரிச்சா உனக்கு என்ன கிடைக்கப் போகுது. சம்பளத்துல கொஞ்சம் கூட வரப் போகுதா என்ன?” ஆதிரை இடக்காக கேட்டதும் தர்ஷினி அவளை முறைத்தாள்.
“அப்படியே தேவா சார் சிரிச்சா நீ என்ன பண்ணுவ? சிடுசிடுன்னு இருக்கும் போதே எப்படி வேலை செய்யாம ஓபி அடிக்கலாம்னு பார்க்குற ஆளு நீ. அவர் சிரிச்சா அவ்வளோ தான், உன்கிட்ட வேலை வாங்க முடியுமா? அதுவும் இல்லாம அவர் முறைச்சுட்டே சுத்துனாலும் ஒரு பாஸா அவர் பொஷிசன்ல கரெக்டா இருக்காரு. உனக்கு என்னைக்காவது சேலரி கொடுக்க லேட் பண்ணி இருக்காரா? எக்ஸ்ட்ரா டைம் வேலை வாங்கி இருக்காரா? இல்ல வேற எந்த வகையிலும் தொல்லைப் பண்ணாரா?” அதிரைக் கேட்டதும், தர்ஷினி விழித்துப் பின் இல்லையென தலையை அசைத்தாள்.
“ஹம்ம்... அவர் குணம் அதுலயே தெரியலையா தர்ஷினி. ஹீ இஸ் பெர்பெக்ட் இன் ஆல். சோ, நேர்மையா உண்மையா இருக்கவங்ககிட்டே இருக்க கோபம், சிடுசிடுப்பு, விறைப்பு எல்லாம் அவர்கிட்ட இருக்குறதுல தப்பில்லை. சொல்லப் போனா அவர் இப்படி இருக்கதாலதான் இந்த பண்ணை நல்லா ரன் ஆகுது. சிரிச்சிட்டே இருந்தா ஈஸியா அட்வாண்டேஜ் எடுக்குற கூட்டம் இது!” என்றவள் பேச்சு முடிந்தது என கணினியில் தலையைப் புதைக்க,
“க்கா... இதுல இவ்வளோ இருக்கா? நம்ப சார் கொஞ்சம் நல்லவர்தான் போல. சிடுசிடுன்னே இருந்துட்டுப் போகட்டும்!” தர்ஷினி தாராள மனதோடு கூற, “ரெண்டு சாம்பிளை சீக்கிரம் போட்டு முடிக்கிற நீ...” என ஆதிரை வேலையைக் கவனிக்கலானாள்.
ஏதேச்சையாக அவர்களது உரையாடலைக் கேட்ட தேவா, வேலை நேரத்தில் என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது எனத் திட்ட நுழையும் முன்னே ஆதிரையின் பேச்சில் அப்படியே நின்று போனான். ஆதி முதல் அந்தம் வரை அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்காகவே கூறியது போலிருக்க, ஒரு நொடி திடுக்கிட்டுப் போனான். அவனின் திருமண விடயம் யாருக்கும் தெரியாதே என மனம் குழம்பிற்று.
ஆனால் அவர்களின் உரையாடல் தன்னைத் தொடும் என நினைத்தே பார்க்கவில்லை. அதிலும் ஆதிரையின் தன் மீதான பிம்பத்தில் திகைத்துப் போனான். இந்தப் பெண் இத்தனை தூரம் தன்னைக் கவனித்திருக்கிறாளா என மனம் வியந்து போனது. அதிலும் இரண்டு பெண்களால் சரிந்திருந்த நம்பிக்கை இந்தப் பெண்ணால் மீண்டும் எழுந்து நின்றிருந்தது.
தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு கடந்த சில பல நாட்களாக தன்னம்பிக்கையற்றிருந்த மனம் அவள் பேச்சில், தன் மீதான பிம்பத்தில், எந்த வகையிலும் தான் தவறவில்லை எனக் கேட்கையில் உள்ளே ஏதோ சொல்ல முடியாத உணர்வொன்று ஆட்கொண்டது. தோல்வியுற்று வந்த மகனை தாய் தேற்றும் போது ஆற்றுப்படும் மனநிலையில் மனம் அவள் பேச்சில் இதமாய் சுருண்டது.
இந்த நொடி விஷாலி செய்த விஷயம் பூதாகரமாகத் தோன்றவில்லை. ஆதிரை அவனைக் குடைந்தாள். அவள் பேச்சில் மனம் தடுமாறியது, அவனும்தான். யாரேனும் இப்படி வார்த்தைகளை உதிர்க்க மாட்டார்களா என எண்ணித் தவித்த மனதிற்கு இந்தப் பெண் மருந்திட்டிருந்தாள். காயம் கண்ட இதயத்தை மயிலிறகால் வருடியது போல சுகமாய் அந்தப் பேச்சில் இத்தனை நாட்கள் பிடித்து வைத்திருந்தக் கோபம் கரைந்து, உடல் தளர்ந்தது.
‘தேவா சார் அவரோட விஷயத்துல சரியா இருக்காரு. அவர் குணத்தை யாருக்காகவும் மாத்திக்கணும்னு அவசியம் இல்ல. ஹீ இஸ் அ ஜெம்!’ மீண்டும் மீண்டும் செவியோரம் அவளது வார்த்தைகள் ரிங்காரமிட, நீண்ட பொழுதுகளுக்குப் பிறகு உதட்டில் முறுவல் அரும்பிற்று.
எங்கே யாரையும் பேச அனுமதித்தால் மேலும் காயப்படுத்தி விடுவார்களோ? அல்லது அறிவுரை என்ற பெயரில் இன்னும் அவனை நோகச் செய்வார்களோ என அஞ்சித் தானே யாரையும் அணுகவிடவில்லை. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து ஆதிரையின் பேச்சு அவனை சமன் செய்திருந்தது. இந்தக் கணம் ஆதிரைக்கு மனப்பூர்வமாக நன்றி நவில வேண்டும் என்றொரு உந்துதல். அறைக்குச் சென்றவன் அவளை அழைத்தான்.
“எக்ஸ்யூஸ் மீ சார்!” அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள் ஆதிரையாழ்.
ஏன் அழைத்தான் என்ற கேள்வியோடு அவள் நிற்க, “சிட் ஆதிரை...” என்றவன் முகம் அவளிடம் கனிந்தப் புன்னகையை உதிர்த்தது.
அவள் அமர, “இந்த எக்ஷெல் ஷீட் ப்ளாங்கா இருக்கே?” அவன் கேள்வியில் இவளது பார்வை கணினியை நோக்கியது.
அவள்புறம் திருப்பி வைத்தவன், “செக் இட் மிஸ்ஆதிரையாழ்!” என்றாள் அவளது முகத்தை ஆராய்ந்தபடி.
அவன் காண்பித்ததைப் பார்த்து ஒரு நொடி விழித்துப் பின்னர், “ஆமா சார், புது கஸ்டமர், அதான் லாஸ்ட் பேஜ்ல டீடெயில்ஸ் எடுத்து வச்சேன். நீங்க ஒன் டைம் பார்த்துட்டா நான் லிஸ்ட்ல ஆட் பண்ணிட்றேன் சார்!” என்றாள் கடைசி பக்கத்தைக் காண்பித்து.
புதிதாய் பால் கொடுப்பவர்களின் விவரங்களைத் தனியாகப் பதிந்து அவனிடம் அனுமதிப் பெற்றே மற்றவர்களுடன் இணைக்க வேண்டும் என்று முன்பெருமுறை கண்டிப்புடன் கூறிவிட்டிருந்தான். அதை மறக்காது ஆதிரைப் பின் பற்றினாள்.
“ஹம்ம்... தேங்க் யூ ஆதிரையாழ்!” தலையை அசைத்தவனின் உதடுகளில் அவளுக்கென சிநேகமானப் புன்னகை குமிழிட்டது. ஆதிரைக்கு ஏன் இந்த நன்றி எனப் புரியவில்லை எனினும் அதை ஏற்றுக் கொண்டதாய் தலையை அசைத்தவள் விடைபெற, தேவாவின் முகத்தில் அவனையும் அறியாது நிம்மதி படர்ந்தது.
ஆதிரைக் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் தேவாவின் உண்மையான குணாதிசயங்கள். அவன் மட்டுமே அறிந்தவற்றை, உணர்ந்தவற்றை யாரோ ஒருவர் உரைக்க கேட்கும் போது சுகமாய் இருந்
தது. அவள் பேச்சின் கனகனப்பை, கதகதப்பை செவி இன்னுமே உணர, வெளியே செல்லும் ஆதிரையையே பார்த்திருந்தான் தேவநந்தன்.
தொடரும்...
சாரி சாரி கைய்ஸ். இந்த வாரம் பிஸி. அடுத்த அப்டேட் சண்டே தான். தென் கடகடன்னு போடலாம். நெக்ஸ்ட் ஸ்டோரி டைட்டில் சும்மா சொல்லி வைப்போம்
"கனவென்னைக் களவாடுதே!"