- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 12
மறுநாள் காலை வெகுத் தாமதமாகத்தான் ஆதிரை எழுந்தாள். மாத்திரையின் உபயத்தால் இப்போது காய்ச்சல் முற்றிலும் குறைந்திருந்தது. ஆனாலும் உடலில் சோர்வு அப்பயிருக்க, எதையும் சமைக்கும் மனநிலை இல்லை. இருந்தும் நேற்று முழுவதும் அபினவ் வெளியேதான் உண்டிருக்கிறான். அதனாலே வெகு எளிமையாக உப்புமாவைக் கிண்டி தேங்காய் சட்னியோடு முடித்தாள்.
காலை உணவை முடித்துவிட்டு இருவரும் ஹாரி பாட்டர் படத்தைப் பார்த்து கதையளந்து அன்றைய நாளை கடந்திருக்க, மறுநாள் அபினவ் பள்ளிக்குச் சென்றுவிட்டான். ஆதிரை அனறைக்கும் விடுமுறை எடுத்து அலுப்புத் தீரக் குளித்து தூங்கி எழவே புத்துணர்ச்சி வந்திருந்தது. மறுநாள் வேலைக்குச் சென்றுவிட்டாள்.
உள்ளே நுழைந்ததும் தேவாதான் எதிர்ப்பட்டான். அவனைக் கண்டதும் இவள் சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள். உடல்நிலை எப்படி இருக்கிறது என அவன் நலவிசாரிப்போடு அகல, இவள் சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தாள். இப்போதெல்லாம் தேவா அவளிடம் கடுகடுப்பது இல்லை. கொஞ்சம் சிரித்துப் பேசுகிறான். அதற்குத் தன்னுடைய வேலை நேர்த்தியும் முக்கிய காரணம் என அவளுக்குப் புரிந்தே இருந்தது.
“அக்கா... காய்ச்சல் சரியாகிடுச்சா?” தர்ஷினி வந்ததும் அவளது கையைப் பாசமாகப் பிடித்துக் கொள்ள, மற்ற இருவரும் கூட இவளது நலத்தை நாடினர்.
தேவா உழவர் துணை செயலியில் ஏதோ கோளாறு என தொழில்நுட்ப துறையில் உள்ளவர்களை அழைத்திருந்தான். மேலும் சில பல வசதிகளை செயலியில் இணைக்க வேண்டும் என்பதால் அவர்களை நேரில் அழைத்து அமர வைத்துப் பேசிக் கொண்டிருக்க, விஷாலி அழைத்துவிட்டாள்.
கடந்து சென்ற இரண்டு நாட்களாக இருவரிடமும் பேச்சு வார்த்தை இல்லை. தேவா தன்னுடைய கோபம் குறையட்டும், தேவையற்ற வீண் விவாதம் வேண்டாம் என் அமைதி காத்தான். இடையே ஒருமுறை அவளது உடல் நிலை எப்படி இருக்கிறது எனக் கேட்டு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி இருந்தான். அதுவும் படிக்கப்படாமல் போய்விட, இவனும் வேலையில் மூழ்கிப் போனான்.
விஷாலியின் அழைப்பை இரண்டு முறை துண்டித்தவன், மூன்றாவது முறை அவள் அழைத்ததும் ஏதோ அவசரமாக இருக்கக் கூடுமென எண்ணி, “சொல்லு விஷாலி...” என அறையைவிட்டு வெளியே வந்தான்.
“என்ன பண்றீங்க தேவா?” அவள் கேட்க, “வேலையா இருக்கேன் விஷாலி...” நல்லவிதமாகவே இவன் பேசத் தொடங்கினான்.
“எல்லா நாளும் வேலை இருக்கும் தேவா. எனக்கு இன்டைஜஷன் ஆகிடுச்சே. கால் பண்ணி ஒரு வார்த்தைக் கேக்கணும்னு தோணுச்சா உங்களுக்கு?” அவள் கடுப்புடன் கேட்டாள்.
“விஷாலி, நான் உனக்கு வாட்சப் பண்ணி இருந்தேனே!” அவன் பதிலுரைக்க,
“பெரிய பொல்லாத மெசேஜ். என்ன பண்ணி இருக்கீங்க? ஏதோ பார்மல் மெயில் அனுப்புற மாதிரி ஹோப் யூ ஆர் வெல்னு ஆரம்பிச்சு எதையோ அனுப்பிட்டு மெசேஜ் போட்டாராம்!” அவள் இளக்காரமாகப் பேசியதில் தேவாவின் தன் முனைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தது.
“சோ, அப்போ மெசேஜ் பார்த்துட்டு நீ ரிப்ளை பண்ணலை. அது மட்டும் சரியா?” அழுத்தமாய்க் கேட்டான்.
“ப்ம்ச்... நான் உங்களுக்கு ரிப்ளை பண்ணாததுதான் பிரச்சனையா? வாட் ரப்பிஷ் தேவா. உங்களுக்கு பொண்டாட்டியா வரப் போறவகிட்டே அக்கறையா நாலு வார்த்தைப் பேசணும்னு கூட உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டி இருக்கு!” விஷாலி அலுத்துக் கொள்ள, இவனுக்கு அவள் தன்னை மட்டம்தட்டிப் பேசுதாக எண்ணம் துளிர்த்தது.
“உங்களுக்கு என்னதான் தெரியும் தேவா? வெறும் வேலை! வேலை! வேலை நாளைக்கு வேலைதான் வந்து உங்கப் பொண்டாட்டியையும் புள்ளையையும் பார்க்குமா? அன்னைக்கு வீட்டுக்கு வந்தீங்களே. கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசக் கூட நேரமில்லாம ஓடிட்டிங்க. எங்க அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. நாளைப் பின்ன என் பொண்ணு எப்படி கிடந்தாலும் இப்படித்தான் வேலைன்னு ஓடுவாரான்னு. என்னைப் பார்த்துக்கணும்னு உங்களுக்குத் தோணாதா?” அவள் எரிச்சலுடன் கேட்க, தேவா வெகு அமைதியாகப் பேசினான்.
“நான் உன்னை அந்த ரெஸ்டாரண்ட் கூட்டீட்டுப் போனேனா விஷாலி?” அவன் கேள்வியில் அவளுக்கு கோபம் வந்தது.
“யெஸ் அப்கோர்ஸ். நான்தான் ரெஸ்டாரண்ட் சூஸ் பண்ணேன். சோ, அதுக்காக நீங்க என்னைக் கேர் பண்ணிக்க மாட்டீங்க?” அவள் பற்களை நறநறத்தாள்.
“விஷாலி, கேர் பண்ணிக்கலை, பண்ணிக்கலைன்னு சொல்ற இல்ல. என்ன நான் உன்னைப் பார்த்துக்கலை. உனக்கு வாமிட் வந்ததும் ஹாஸ்பிடல் அழைச்சுட்டுப் போய் டாக்டரைப் பார்த்துட்டு பத்திரமா வீட்டுல விட்டுட்டுத் தான் என் வேலையை பார்க்கப் போனேன். அப்படியே உன்னை விட்டுட்டு போகலையே....” சூடாய் தேவா பதிலளித்தான்.
“அது மட்டும் போதுமா தேவா? நைட் கால் பண்ணி என்னாச்சுன்னு ஒரு அரைமணி நேரம் அக்கறையா பேசணும். அப்படியே மார்னிங் என்னோட க்ளினிக் வந்து பார்த்துட்டுப் போகணும். வீடியோ கால் வா, உன் முகத்தைப் பார்க்கணும்னு கேட்கணும். ரெண்டு நாள்ல ஒரு பத்து கால், இருபது மெசேஜாவதுப் பண்ணி இருக்கணும் தேவா. அங்க அங்க நாள் முழுக்க பேசுறாங்க. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?” அவள் ஆதங்கத்துடன் கேட்டாள்.
மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன், “விஷாலி, நீ ஒன்னைப் புரிஞ்சுக்கணும். கேர் பண்ணிக்கிறது வேற. நீ எல்லாத்தையும் ரொமான்டிசைஸ் பண்ற. ஜஸ்ட் ரியாலிட்டிக்கு வா முதல்ல. உன்னோட கற்பனையை குறைச்சு கண்ணு முன்னாடி இருக்கவங்களைப் புரிஞ்சுக்கோ”
“இருபத்து நாலு மணி நேரமும் போன் பேசி, கொஞ்சுனாதான் உன் மேல எனக்கு அக்கறை இருக்குன்னு இல்ல. உன்னைப் பத்திரமா பார்த்துக்கணும். மனைவியா வரப் போற பொண்ணுன்னு அன்பும், அக்கறையும் என்கிட்ட நிறையவே இருக்கு. ஆனால் நான் எக்ஸ்ப்ரசீவ் இல்ல!” அவளுக்கு எடுத்துக் கூற முயன்றான்.
“தேவா... நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா. நான் என்ன பணம், கிஃப்ட் இதெல்லாமா கேட்குறேன். ஐ நீட் டூ டாக் டூ யூ. நீங்க என்கிட்ட பேசணும். நம்ப புரிஞ்சுக்கணும். எனக்காக ஒரு டூ த்ரி ஹவர்ஸ் ஸ்பெண்ட் பண்ண முடியாதா என்ன? திஸ் இஸ் டூ மச். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா?” அவள் குரல் சோர்ந்து வந்தது.
“சாரி விஷாலி, டோன்ட் கம்பேர் மை செல்ஃப் வித் எனி ஓன். அது எனக்குப் பிடிக்காது. அண்ட் மேரேஜ் பண்ணி என் கூட தானே வாழப் போற. அப்புறம் என்ன? தினமும் நம்ப டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்மா!” என்றான் குரலில் அக்கறையுடன்.
“ப்ம்ச்... அதெல்லாம் ஆஃப்டர் மேரேஜ்னு போய்டும் தேவா. மேரேஜ்க்கு முன்னாடி டைம் ஸ்பெண்ட் பண்ணணும், நிறைய போட்டோஸ் எடுக்கணும். அதை இன்ஸ்டா மெமரீஸ்ல போட்டு, பின் பண்ணி வைக்கணும். ஆனால் இது எதுவும் உங்களுக்குத் தோண மாட்டுது. வெறும் வேலை மட்டும்தான் முக்கியமா?” மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே அவள் வந்து நிற்க, தேவாவிற்கு தலை வலித்தது.
“லுக் விஷாலி, வேலை மட்டும்தான் முக்கியாமன்னு கேட்காத! எனக்கு நீ எவ்வளோ முக்கியமோ அந்தளவுக்கு வேலையும் முக்கியம். என்னை நம்பி ஆயிரக்கணக்கான கஸ்டமர்ஸ் இருக்காங்க. சரியான நேரத்துல க்வாலிட்டியான பாலை அவங்ககிட்டே நான் டெலிவரி பண்ணணும். ஏன்னா, என் மேல இருக்க நம்பிக்கையில மாசம் மாசம் பணம் கட்டுறவங்க. அவங்ககிட்டே பொறுப்பா நடந்துக்கணும். அதான் எதிக்ஸ்!”
“அதை விட்டுட்டு உன்கிட்ட இருபத்து நாலு மணி நேரமும் பேசிட்டு இருக்க முடியுமா? மோர் ஓவர் நீ என்னோட லைஃப்ல ஒரு பார்ட். தட்ஸ் இட். என்னை சார்ந்து என் அம்மா, அப்பா, காலேஜ் படிக்கிற தங்கச்சி அண்ட் என் தம்பி ஃபேமிலி இருக்கு. நான்தான் வீட்டுக்கு மூத்தப் பையன்னு அவங்களைப் பார்த்துக்கிற கடமை இருக்கு. என்னோட பொறுப்பை தட்டிக் கழிச்சுட்டு உன் பின்னாடி சுத்த முடியாது, புரிஞ்சுக்கோ!” இவன் அழுத்தமாய் உரைத்தான்.
“இதான் தேவா உங்களோட பிரச்சனை. ஏன் நான் உங்க ப்யூச்சர் வொய்ப் தானே. நீ தான் என் உலகம், வேலை இரண்டாம்பட்சம்தான். உன்னோட பேசுறதுதான் முக்கியம்னு ஒரு பொய் கூட சொல்ல மாட்றீங்க. நான் இப்படித்தான்னு ரஃப் அண்ட் டஃபா இருக்கீங்க. என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியலை!” விஷாலி ஆதங்கமும் கோபமுமாய் கேட்டாள்.
“பொய்யான நம்பிக்கை கொடுக்குறது எனக்குப் பிடிக்காது விஷாலி. கசப்பா இருந்தாலும் உண்மையை சொல்லிட்றது ரொம்ப பெட்டர். சரி, இப்போ தூரமா இருக்கன்னு நான் நீதான் உலகம், அது இதுன்னு ரப்பிஷா பொய் சொல்லலாம்”
“பட் ஆஃப்டர் மேரேஜ் எத்தனை நாள் என்னால பொய்யைக் கண்டினியூ பண்ண முடியும்னு நினைக்கிற? என்னைக்கா இருந்தாலும் நீ என்னோட நேச்சுரல் கேரக்டரோட தானே வாழணும்?” தேவா உண்மையை உரைத்ததும் அவளிடம் பெரும் மௌனம்.
“விஷாலி!” இப்போது அவன் தன்மையை அழைத்தான்.
“சொல்லுங்க!” அவள் குரல் மெதுவாய் வந்தது.
“நீ அவங்க அப்படி இருக்காங்க, இவங்க இது பண்றாங்கன்னு தப்பானவங்களை உதாரணமா எடுத்துக்குற. வெளிய சுத்தி போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம்ல போட்றது மட்டும் வாழ்க்கை இல்லை மா. நம்ப இரண்டு பேருக்கும் இடையில புரிதல், அன்பு, அக்கறை, இணக்கம் இதெல்லாம் வரணும்.”
“அப்படின்னா நீ என்னைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணணும். நீ பிடிச்ச முயலுக்கு மூனு கால்னு சும்மா எனக்காக மாற மாட்டீங்களா? பழகிக்கோங்கன்னு சொல்லாத. அட்ஜஸ்ட் பண்ணிப் போகலாம், நம்ப லைஃப் பாட்னருக்காக ஒரு சில விஷயத்துல மாறலாம். பட், உனக்காக என்னோட சுயத்தையே மாத்திக்கிறது இம்பாசிபிள்...”
“உன்னோட நியாயமான ஆசைக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன். முதல்ல நீ வாழ்ற பேண்டசில இருந்து இறங்கி வா. நீ படிச்சிருக்க, ஒரு ஹாஸ்பிடல்ல டென்டிஸ்டா இருக்க. உன்னோட வயசு இருபத்தியெட்டு. அப்படியிருக்கப்போ எல்லாத்தையும் ட்ரமாட்டிக்கா பார்க்காத. கொஞ்சம் பக்குவமா யோசிச்சு என்னோட சூழ்நிலையைப் புரிஞ்சுக்கணும். நானும் உன்னை, உன் கேரக்டரை அக்செப்ட் பண்ணணும். இட் டேக்ஸ் டைம், சோ டோன்ட் கன்ப்யூஸ் யுவர் செல்ஃப்!” தேவா ஒரு வழியாய் தன் மனதில் உள்ளதை உரைத்திருந்தான். விஷாலி அமைதியாய் இருக்கும் போதே அவள் யோசிக்கிறாள் என இவனுக்குப் புரிந்தது. யோசித்து தெளிந்து புரிந்து கொள்ளட்டும் என அழைப்பைத் துண்டித்தவன் அறைக்குள் நுழைந்தான்.
“சார், நீங்க கேட்ட பியேச்சர்ஸை ஆட் பண்ணி ரன் பண்ணி எரர்ஸ் செக் பண்ணிட்டோம். எந்த பிராப்ளமும் எங்க சைட் இல்ல. நீங்க ஒன் டைம் பாருங்க!” என அந்த வாலிபன் இவனை நோக்கி மடிக்கணினியை திருப்ப,
ஒரு முறை அனைத்தையும் பார்த்து திருப்திபட்டுக் கொண்டவன், “தேங்க் யூ கௌசிக், எனக்கு ஓகேதான். கஸ்டமர்ஸ் எதுவும் இஸ்ஸூன்னா கம்பளைண்ட் பண்ணுவாங்க. அப்போ உங்களை நான் கான்டாக்ட் பண்றேன்!” எனப் புன்னகைத்த தேவா அவனுக்கான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
அன்றைக்கு பொழுது கழிந்திருக்க, விஷாலி சாரி என அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தாள். இவனது முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது. அவள் எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வாள் என எண்ணியவனுக்கு, அவளுடன் தன் வாழ்வு நன்றாய் இருக்குமென நினைத்துப் புன்னகைத்தான். இரண்டு நாட்கள் கடகடவென ஓடியிருந்தது.
அன்றைக்கு காலையில் தேவா உழவர் துணைக்கு வந்து அமர்ந்ததும் விஷாலி அழைத்தாள். அழைப்பை ஏற்றவன், “சொல்லு விஷாலி!” என்றான் கணினியில் கண் பதித்து.
“பிசியா இருக்கீங்களா தேவா? உங்களை மீட் பண்ணணும். இப்போ பண்ணலாமா?” அவள் கேட்க, “இப்போதான் பர்ம்க்கு வந்தேன் விஷாலி. லஞ்ச் வெளிய சாப்பிடலாம். மார்னிங் எனக்கு வொர்க் இருக்கு!” அவன் கூறியதும்,
“ஓகே தேவா, உங்க ஃபர்ம் பக்கத்துலயே ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குமே! டெம்பிள் க்ரீன். அங்க ஒன் ஓ க்ளாக் மீட் பண்ணலாம்...” என அவள் அழைப்பைத் துண்டிக்க, தேவா சரியாய் ஒரு மணிக்கு அங்கு சென்றுவிட, விஷாலி இருபது நிமிடங்கள் தாமதமாக வந்தாள்.
“சாரி தேவா, கொஞ்சம் லேட்டாகிடுச்சு. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்!” அவள் சங்கடமான புன்னகையுடன் அமர, தேவாவிற்கு இந்த விஷாலி புதிது. எப்போதும் பளிச்சென புன்னகையுடன் வருபவள், இப்படி நாகரீகமாக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டாளே! பேச்சில் ஒரு துள்ளல் உரிமை இருக்கும். ஆனால் இன்றைக்கு விலகல் அதிகமாய் இருக்க, யோசனையுடன் தலையை அசைத்தான். இருவருக்குமான உணவை வரவழைத்து உண்ணத் தொடங்கினர்.
“தேவா, நான் உங்ககிட்ட ஒரு சாரி கேட்கணும்!” அவள் குரல் கேட்டதும் குனிந்து உணவை வாயில் வைத்தவன் என்னவெனப் புரியாது முகத்தை மாற்றினான்.
“அன்னைக்கு உங்ககிட்டே நான் பேசுனது சைல்டிஸ்ஷா தெரிஞ்சு இருக்கலாம். உங்களுக்கு அது சுத்தமா பிடிக்கலைன்னு நீங்க அரை பக்கம் அட்வைஸ் பண்ணும் போதே எனக்குப் புரிஞ்சுக்க முடிஞ்சது!” என்றவள் உணவை ஒரு கவளம் உண்டுவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள். தேவநந்தன் அவளைப் பேசவிட்டான். அவள் மனதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளவே அமைதி காத்தான்.
“நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் தேவா. ஒரு வேளை மேரேஜ்க்கு முன்னாடி நீங்க எனக்காக நடிச்சு, ஆஃப்டர் மேரேஜ் உங்களோட ட்ரூ கேரக்டர் தெரிய வந்திருந்தா எனக்கு பெரிய டிசப்பாய்ன்மெண்டா இருந்து இருக்கும். இப்பவே நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டீங்க. எனக்காக உங்களால எப்படி நாள் முழுசும் பொய்யா நடிக்க முடிஞ்சிருக்கும். நாட் இடியட் மாதிரி கேட்டிருக்கேன்!” என்றவளின் பேச்சு தேவாவிற்குப் புரிவதாய் இருக்க, எதுவும் எதிர்வினை
ஆற்றவில்லை.
“உங்களால எப்படி எனக்காக நடிக்க முடியாதோ, அதே மாதிரி என்னாலயும் உங்களுக்காக நடிக்க முடியாது தேவா. நான் ரொம்ப எக்ஸைடட்டான ஆள். என்னோட கனவு, ஆசையெல்லாம் உங்களோட தாட்ஸ்க்கு சுத்தமா ஒத்துப் போகாது. நீங்க அரைப் பக்கம் அட்வைஸ் பண்ணிங்கன்னு நான் அதை அக்செப்ட் பண்ணிக்கலாம். பட் என்னோட கேரக்டர் என் கூடவே பொறந்தது. அது உங்களுக்கு ஏத்த மாதிரி மாறும்னு எனக்குத் தோணலை. நீங்க பேசும்போது நானும் யோசிச்சேன். கோபத்தை தள்ளி வச்சுப் பார்க்கும் போது யூ ஆர் நட் மை கப் ஆஃப் காபின்னு புரிஞ்சது. ஆப்போசிட் டேரேக்ஷன் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்ன்றதுலாம் சுத்த ஹம்பக். ஒருநாள் நம்ப வெளிய போய்ட்டு வந்தப்பவே முட்டிக்கிச்சு. அப்போ லைஃப் லாங் எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்குப் பயமா இருக்கு தேவா!” என்றவளை இவன் முகம் இறுக பார்த்தான்.
“நான் சொல்ல வர்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். ஆல்ரெடி உங்களுக்கு மேரேஜ் ஸ்டாப்பானதுல நீங்க வெக்ஸ் ஆகித்தான் இவ்வளோ நாள் கல்யாணத்துப் பக்கம் வராம இருந்தீங்க. உங்களுக்காக பாவம் பார்த்து நான் இப்போ ஓகே சொன்னா, நம்ப ரெண்டு பேரோட வாழ்க்கையும் ஸ்பாயிலாகிடும்.”
“என்னோட எதிர்பார்ப்புகளை நீங்க புரிஞ்சுக்க மாட்றீங்க. எனக்கு என்னை மட்டுமே சுத்தி வர ஹஸ்பண்ட் வேணும். வேலையை கட்டீட்டு அழறவரு வேணாம். அப்படியும் நம்ப கல்யாணம் பண்ணா, நான் கண்டிப்பா மாற மாட்டேன். நான் அடமெண்ட். என்னோட கேரக்டரை எங்கேயும் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன். நீங்க மட்டுமே வளைஞ்சு கொடுக்குற மாதிரி இருக்கும். உங்களால அது முடியாது!” என்றவள் சில நொடிகள் தயங்கி,
“நான் மேரேஜ்க்கு அப்புறம் தனிக்குடித்தனம் போற ப்ளான்ல இருந்தேன். நீங்க பேசும்போதே ஃபேமிலி ஃபேமிலின்னு இருக்கீங்க. எந்த வகையிலும் ஒட்டாத ரெண்டு பேர் சேர்ந்தா எப்படி இருக்கும்னு திங்க் பண்ணுங்க. என் அம்மா, அப்பாகிட்டே சொல்லி புரிய வச்சுட்டேன். சோ மேரேஜை கால் ஆஃப் பண்ணிடலாம் தேவா. லெட்ஸ் ப்ரேக் அவர் ரிலேஷன்ஷிப் ஹியர். ஐ க்நோ இட் ஹேர்ட்ஸ் யூ. ஆனாலும் என்னால கண்டினியூ பண்ண முடியாது!” தயங்கித் தயங்கியேனும் விஷாலி அனைத்தையும் கூறிவிட, தேவா முகம் இறுக அமர்ந்திருந்தான்.
“தேங்க் யூ விஷாலி, எனக்காகப் பாவம் பார்த்து நீங்க மேரேஜ்க்கு ஓகே பண்ணணும்னு அவசியம் இல்ல. பைன், எனக்கு எந்தவித வருத்தமும் இல்ல. ஐ யம் ஹேப்பி வித் யுவர் டிசிஷன்!” என்றான் கையை திசு காகிதத்தில் துடைத்து. குரல் அழுத்தமாக வந்தது.
“நோ தேவா, நான் சொன்னது ராங்கா கன்வே ஆகியிருக்கு உங்களுக்கு!” அவள் பதற, “நோ... நோ யூ ஆர் ரைட். ஐ யம் நாட் யுவர் கப் ஆஃப் காபி. ஆர்டர் பண்ணிட்டோம்னு குடிக்க அவசியம் இல்ல. கேன்சல் பண்ணிட்றது பெட்டர்!” என்றவன் அழுத்தமாகக் கூறிவிட்டு அகல, விஷாலி அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு தோளைக் குலுக்கினாள்.
வாகனத்தின் திசைமாற்றியில் கையை வைத்த தேவாவின் முகம் கோபத்தில் சிவந்தது. ஏனோ இந்த நிராகரிப்பை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரண்டாவது முறை அவமானப்பட்டு நிற்கிறான். என்ன இல்லை அவனிடம்? நன்றாய் படித்து முடித்து சொந்தமாக தொழில் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறான். எல்லாவற்றையும் விட குடும்பத்தைப் பொறுப்பாய் பார்த்துக் கொள்ளும் ஆண்மகன். இதுவரை ஒழுக்க நெறி தவறாதவன். தனக்கு வரப் போகும் பெண்ணைத் தவிர அனைவரையும் தாய், தமக்கை ஸ்தானத்தில் பார்ப்பவன்.
அப்படி இருப்பவனை அற்ப காரணங்களுக்காக ஏன் இந்தப் பெண் நிராகரிக்க வேண்டும் என்ற ஆண் அகந்தை தலை தூக்கியது. ஆம், அகந்தைதான். நேர்மையாய் இருப்பவனுக்கு அகந்தை, கோபம், தன்முனைப்பு எல்லாம் இயல்பாகவே அதிகமாய் இருந்தது. அதிலும் தவறொன்றும் இல்லையே.
இந்தக் காலத்து பெண்களுக்கு எல்லா வகையிலும் நேர்மையாய் கண்ணியமாய் இருக்கும் ஆண்களைப் பிடிப்பதில்லை. குடி, கூத்து, கும்மாளம், முகநூலில் வண்ண வண்ணமாக புகைப்படங்கள், காணொளிகளைப் பகிர்ந்து பொது வாழ்க்கையை கொஞ்சமும் நாகரீகமின்றி அனைவருக்கும் படம் போட்டுக் காண்பித்துப், பொறுப்பைத் தட்டி கழிப்பவர்களைத்தான் விரும்புவார்கள். கேட்டால் வேலையைக் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள், வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவர்கள். மாதம் மாதம் கேளிக்கை கூத்து எனப் பணத்தை தண்ணீராய் செலவழித்துவிட்டு குடியிருக்கும் வீட்டிலிருந்து கையில் வைத்திருக்கும் அலைபேசி வரை இம்.எ.ஐ என்ற பெயரில் கடனோடு இருக்க வேண்டும். சுய ஒழுக்கம், வாழ்க்கையின் நெறிமுறைகள் எல்லாம் இவர்களுக்கு க்ரிஞ் என்ற வரையறைக்குள் வந்து விடும். அதைப் பற்றி பேசினாலே ஏதோ விநோத ஜந்துவைப் பார்ப்பது போல விமர்சித்து கேலி செய்வார்கள்.
சுய ஒழுக்கம் சிறிதும் இன்றி கட்டற்று வாழும் தலைமுறையினர் இவர்கள்.
இப்படி இணையதள மோகத்தில் மூழ்கி இருப்பவர்களைத் திருத்த முடியாது. அப்படிப்பட்ட பெண்ணைத் தனக்குத் தேர்ந்தெடுத்த தாய், தந்தையை நினைத்து ஒருபுறம் கோபமாய் வந்தது.
இது போலெல்லாம் நடக்க கூடுமென எண்ணித்தானே திருமணம் வேண்டாம் என தேவா நிர்தட்சண்யமாக மறுத்தான். ஏற்கனவே ஒருமுறை மறுக்கப்பட்டு, அவமானப்பட்டதின் சுவடு கூட அப்படியே தான் இருந்தது. அதை விஷாலி கீறி விட்டு விட்டதாய் ஒரு எண்ணம். அவன் தவறானவன், ஒழுக்கமில்லாதவன் என்ற காரணங்களுக்காக அவள் தன்னைத் நிராகரித்திருந்தால் இத்தனைக் கோபம் வந்திருக்காதோ என்னவோ? அவள் கூறிய காரணங்களை மனம் சர்வ நிச்சயமாக ஏற்காது. மனதில் கோபம் கனன்று விருட்சமாக, வீட்டிற்குள் நுழைந்தான்.
மொத்த வீடும் பேரமைதியாய் இருந்தது. பிரதன்யா, ராகினி கல்லூரி பள்ளி சென்றிருக்க, ஹரியும் மற்ற கிளைக்குச் சென்றிருந்தான். ஜனனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
தாயும் தந்தையும் அறைக்குள் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இவனது வாகனச் சப்தம் கேட்டதும் எழுந்து வந்த பொன்வானி, “டேய் தேவா, என்ன இன்னைக்கு இவ்வளோ சீக்கிரம் வந்துட்ட?” எனக் கேட்டவர், “ நீ வந்ததும் நல்லதுதான் டா. இவரோட அக்கா வீடு வரைக்கும் போய் நானும் உங்க அப்பாவும் முறையா நிச்சியத்துக்கு அவங்களை அழைக்கணும்னு பேசிட்டு இருந்தோம். நீயும் வந்தா நல்லா இருக்கும். மூனு பேரும் சேர்ந்து போய்ட்டு வருவோம் வா!” என்றவரை உணர்வுகளற்றுப் பார்த்தான்.
“இந்தக் கல்யாணம் நடக்காது மா. எதுக்கு இவ்வளோ மெனக்கெடுறீங்க?” எனக் கேட்டவன் குரலில் கோபம் கொட்டிக் கிடந்தது. எங்கே தாய் தந்தையைக் காயப்படுத்தி விடுவோமோ என அஞ்சி தன்னைக் கட்டுப்படுத்தி இருந்தான். அவன் கூறியதில் பெற்றவர்கள் இருவருமே அதிர்ந்து போயினர்.
“தேவா... என்ன... என்ன டா பேசுற நீ? இப்போதான் உனக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சு இருக்கு. உன் கல்யாணத்தை முடிச்சுட்டு நாங்க நிம்மதியா இருக்கணும்னு பார்த்தா இப்படி சொல்றீயே டா!” கோபால் குரலை உயர்த்தினார். மகன் பேச்சில் கட்டுக்கடங்காது கோபம் பெருகிற்று அவருக்கு.
“அதானே பா... உங்களுக்கும் அம்மாவுக்கும் உங்களோட கடமை முடிஞ்சா போதும். எதாவது ஒரு பொண்ணை என் தலைல கட்டி வச்சிட்டு உங்க கடமையை முடிச்சிட்டு நிமமதியா இருங்க. நான் நிம்மதி இல்லாம செத்தா உங்களுக்கு என்ன?
எனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு ஒரு வார்த்தைக் கேட்டீங்களா? நீங்களா எல்லாமே முடிவு பண்ணீங்க. உங்க பேச்சை நம்பித்தானே ரெண்டு தடவை கண்ணை மூடி தலையை ஆட்டுனேன். அதுக்குத் தக்க தண்டனை கிடைச்சுடுச்சு எனக்கு!” அவன் சீற்றத்துடன் கூற, பெரியவர்கள் திகைத்தனர்.
“டேய்... ஏன் டா என்னென்னமோ பேசுற? பொண்ணு வீட்டுக்காரங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாகிடும் டா. ஒழுங்கா கல்யாணத்தைப் பண்ற வழியைப் பாரு. உனக்கும் விஷாலிக்கும் எதாவது சண்டையா டா. கல்யாணத்துக்கு பின்னாடி ரெண்டு பேருக்கும் பிடிப்பு வரும் டா. நீயா எதுவும் கற்பனை பண்ணிப் பேசாத!” பொன்வானி பதற, அதற்குள்ளே ஜனனி சப்தம் கேட்டு அடித்துப் பிடித்து வெளியே வந்தாள்.
“ம்மா... நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா இல்லையா? உங்கப் பையனை வேணாம்னு சொல்லிட்டுத் தூக்கிப் போட்டுப் போய்ட்டா மா. இந்தக் கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லையாம்? இந்த மூஞ்சியை, என்னோட குணத்தைப் பிடிக்கலைன்னுப் போய்ட்டா!” என்றவன் குரல் வேதனையில் தோய்ந்திருந்தது. வலித்ததுதான், பொறுப்பற்று இருந்து இப்படியெல்லாம் நடந்திருந்தால் அதை அசட்டை செய்திருக்க கூடும். ஒரு மனிதன் எல்லா விதத்திலும் சரியாய் இருப்பது பிரச்சனை என்றால் அதற்குத் தான் ஒன்றும் செய்ய முடியாது என தன்மானம் முன்னே வந்து நின்றது. எதற்கும் கலங்காதவன்தான். ஆனாலும் இன்றைக்கு மனம் வெகுவாய் அடி வாங்கியதாக உணர்ந்தான். குரல் சோர்ந்து முகம் வேதனையை அப்பியது.
“மாமா... என்ன சொல்றீங்க நீங்க? எனக்குப் புரியலை. விஷாலி உங்களைப் பிடிச்சுத்தானே சம்மதம் சொன்னாங்க. இப்போ என்ன? ஏன்? அவுடிங் எல்லாம் போனீங்களே!” அவள் திகைப்புடன் கேட்க, தலையைக் கோதி தன்னை சமன் செய்த தேவா, “ஒத்து வராதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டா ஜனனி!” என்றான் வெற்றுக் குரலில். விஷாலி சென்றுவிட்டாள் என அவன் வருத்தப்படவில்லை.
தன் பெற்றோர்கள் கடமையை முடிக்க வேண்டும் என்று தன்னை இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெறும் முகத்தையும் ஜாதகத்தையும் பார்த்துப் பெண்ணை முடிவு செய்யலாமா? அவளது குணம் எப்படி? மகனோடு ஒத்துப் போகுமா என ஒரு தடவை எண்ணியிருக்க வேண்டாமா? எல்லாம் கூடி வந்து இல்லை என்று கையைவிட்டு செல்லும் வலி அவனுக்குத்தானே. அவர்கள் வெறும் பார்வையாளர்கள்தானே.
“ப்ம்ச்... மாமா, விஷாலி இல்லைன்னா என்ன? உங்களோட திறமைக்கும், குணத்துக்கும் எத்தனையோ நல்ல பொண்ணுங்க வருவாங்க மாமா. அவ போனதை நினைச்சு எல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. ஷீ டஸ் நாட் டிசர்வ் யூ. யூ டிசர்வ் பெட்டர் பெர்சன் இன் லைஃப்!” என்ற ஜனனியின் முன்னே கையை நீட்டியவன்,
“போதும் ஜனனி... இதெல்லாம் கேட்டு அலுத்துப் போச்சு. எனக்கு இந்த மேரேஜ் லைஃப் செட்டாகாது. எந்தப் பொண்ணும் என்னை அட்ஜஸ்ட் பண்ணி போக மாட்டா. என்னாலையும் மாற முடியாது. இதுக்கும் மேல ஒரு நிராகரிப்பை என்னால தாங்கிக்க முடியாது. நான் எப்படி இருக்கேனோ அப்படியே இருந்துட்டுப் போறேன். மேரேஜ்தான் லைஃப் இல்ல!” உணர்வுகளற்று உரைத்தவன், அறைக்குள் நுழைய சென்றான்.
“டேய் ராஜா... ஏன் டா இப்படி பேசுற? அம்மா உனக்கு நல்லதுதான் டா பண்ணுவேன். இந்தப் பொண்ணு பேசினா புரிஞ்சுப்பா டா. நானும் அப்பாவும் அவங்க வீட்டுக்கு போய் பேசுறோம்!” என பொன்வானி தவிப்புடன் பேச,
“ஸ்டாபிட் மா... அப்படி மட்டும் எதுவும் செஞ்சீங்க, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். போய் என் பையனுக்கு வாழ்க்கை குடுன்னு பிச்சைக் கேட்க போறீங்களா? எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு மா. எங்கேஜ்மெண்ட், மேரேஜ்னு ஒவ்வொரு டைம் எல்லாரையும் இன்வைட் பண்ணி அது நடக்காதப் போது வலிக்குது மா. இனிமே யாரும் என் கல்யாணத்தைப் பத்திப் பேசக் கூடாது. அப்படி பேசுனீங்கன்னா, நான் வீட்டுக்கு வர மாட்டேன்!” என்றவன் கோபத்தோடு கதவை சாடரென அடைக்க, பொன்வானி மனதில் மூண்ட ஆத்திரத்துடன் விஷாலியின் வீட்டிற்கு அழைப்பை விடுத்தார். தாயாய் மகனின் குரலில் இருந்த வேதனை அவரை சுட்டிருந்தது.
விஷாலியின் தாய் ஏதோ சமாதானங்களைக் கூற, பொன்வானி கோபம் கொண்டு கத்தினார். கோபால் அவரது பங்கிற்கு சண்டை போட, தேவா அனைத்தையும் கேட்டு அமர்ந்திருந்தான். தலையை நாற்காலியில் சாய்த்திருந்தவனின் மனம் ரணப்பட்டு போயிருந்தது.