- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
நெஞ்சம் – 10 
“ம்மா...ம்மா!” காலையிலிருந்து தன்னையே சுற்றி வந்த அபினவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே உணவை தயாரித்து கொண்டிருந்தாள் ஆதிரை.
“என்ன தான் டா வேணும் உனக்கு? குளிச்சிட்டு யூனிபார்ம் போடாம என் பின்னாடி சுத்துற?” என இவள் அதட்டலிட, “ம்மா... நித்தி இருக்கால்ல, அவ சண்டே ஃபேமிலியோட சென்னையை சுத்திப் பார்க்கப் போறாளாம். அவங்க சென்னைக்குப் புதுசாம். என்னையும் கூப்ட்டாம்மா. நானும் கூட போய்ட்டு வரேனே!” தாயின் முகத்தை எதிர்பார்ப்போடு ஏறிட்டான்.
ஆதிரை அவனை முறைத்தவள்,
“அவங்க தானே டா புதுசு. நீயும் நானும் எத்தனை டைம் சென்னையை சுத்தி வந்திருக்கோம். அப்புறம் என்ன? அதெல்லாம் வேணாம்!” ஆதிரை கண்டிப்புடன் மறுத்தாள்.
“ப்ம்ச்... ம்மா சண்டே உனக்கு லீவ் இல்ல, வொர்க் இருக்குன்னு சொன்னல்ல. ருக்கு பாட்டீ செம்ம போர் மா. நான் நித்தி கூடப் போறேன்!” அபி அடமாய் நின்றான்.
“அபி, சொல்றதை கேக்கணும். அவங்க ஃபேமிலியா போறாங்க. நீ கூடப் போனா நல்லா இருக்குமா? நீயும் நானும் மந்த் எண்ட் அவுட்டிங் போகலாம்...” ஆதிரைக் கூறியதும் அவன் முகம் வாடியது. அபினவ் எந்த விடயத்திலும் பெரிதாய் அடம்பிடிக்க மாட்டான். ஆனால் நித்திலாவின் நட்பு கிடைத்தப் பின்னர் அவர்களைக் காரணம் காண்பித்து, அங்கே செல்ல வேண்டும் இங்கே சுற்ற வேண்டும் எனக் கேட்கிறான்.
ஆதிரையும் முடிந்தவரையில் அவனது ஆசைகளை நிறைவேற்றுவாள். சில சமயங்களில் நேரமிருக்காது இல்லையென்றால் பணப்பற்றாக்குறை ஏற்படும். அப்போதெல்லாம் சொன்னால் கேட்டுக் கொள்வான். ஆனால் இப்போதெல்லாம் வேண்டாம் என்று கூறினால் முகத்தை சோகமாக வைத்துக் கொள்கிறான் என அவளுக்கு வருத்தமாகப் போயிற்று.
“போய் ஸ்கூலுக்கு ரெடியாகு அபி!” தாய் அதட்டலிட அபி எதுவும் கூறாது அமைதியாய் பள்ளிக்குச் சென்றுவிட்டான். மாலை அவனுக்குப் பிடித்த தின்பண்டங்களை வாங்கிச் சென்றாள். ஆசையாய் உண்டாலும் மீண்டுமொரு நித்தியின் பேச்சை துவங்கினான். ஆதிரையால் அவனைக் கடிந்து பேச முடியவில்லை. ஆனாலும் இது போல வேறு விஷயங்களில் அவன் அடம்பிடிக்க கூடாது எனக் கண்டித்தாள்.
அதற்கு இடையில் அலைபேசி அழைப்பு வந்திருந்தது. “ஹலோ அபிம்மா... நான் நித்தியோட அம்மா பேசுறேன்!” என முறையாய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அந்தப் பெண். இவளுக்கும் அன்றைக்கு சந்தித்தது நினைவு வர, இருவரும் முகமன் விசாரித்தனர்.
“கம்மிங் சண்டே நாங்க சென்னைக்குப் பர்ச்சேஸ் பண்ணப் போறோம். அப்படியே சுத்திப் பார்க்கலாம்னு ஒரு ஐடியா. நித்தி அபி கூட வரணும்னு விருப்பப்படுறா. உங்களுக்கு ஓகேன்னா நாங்க அவனைக் கூட்டீட்டு போகலாமா?” என அவர் கேட்க, அபி அவளது முகத்தையே பார்த்திருந்தான்.
இது அவன் வேலைதான் எனப் புரிய, மெதுவாய் அவனை முறைத்தவள், “இல்ல, நீங்க ஃபேமிலியா போறீங்க. இவனை வேற கவனிச்சுக்கணும். உங்களுக்குத்தான் சிரமம்!” என்றாள் இவள்.
“அட...பரவாயில்ல அபிமா, என் பொண்ணைப் பார்த்துக்குற மாதிரிதானே உங்க பையனையும் பார்த்துக்கப் போறேன். இதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. உங்களுக்கு ஓகேன்னா அனுப்பிவிடுங்க!” அவர் கேட்டதும் மறுக்க முடியாதவள், “சரிங்க... கூட்டீட்டுப் போங்க. கொஞ்சம் விளையாட்டு பிள்ளை. பத்திரமா பார்த்துக்கோங்க!” என்றாள் தயக்கத்துடன்.
“டோன்ட் வொர்ரீ... நான் பார்த்துக்குறேன்!” என அவர் அழுத்திக் கூறியதும்தான் ஆதிரை முழுமனதுடன் ஒப்புக் கொண்டாள்.
அலைபேசியை வைத்ததும், “அபி, என் முன்னாடி வா!” என்றாள் கண்டிப்புடன். மிரண்ட விழிகளுடன் தாய் முன்னே வந்து நின்றான் அவன்.
“நான்தான் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்ல. அப்புறம் எதுக்கு நித்தியோட அம்மாவை விட்டு பேச சொன்ன. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதை? என்கிட்ட கேட்காம நீயே போக வேண்டியது தானே?” என்றாள் அதட்டலுடன். அவன் கண்களில் சரசரவென நீர் நிறைந்தது.
“ம்மா... நான் வரலைன்னு சொல்லிட்டேன் மா. நித்திதான் அவங்க மாம்கிட்டே பேசுறேன்னு சொன்னா. நான் கூட வேணாம்னு தடுத்தும் அவ பேசிட்டா மா!” என்றான் தேம்பலுடன்.
“பொய் சொல்றீயா அபி?” இவள் அதட்ட, “ப்ராமிஸா மா!” என்றான் அழுகையினூடே. ஆதிரை சமாதானமாகவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்தவன், “ம்மா... நான் நித்தி கூட போகலை. ருக்கு பாட்டியோட இருந்துக்குறேன்...” என்றான் விசும்பியடியே.
“அதான் நான் உன்னை அனுப்புறேன்னு சொல்லிட்டேன் இல்ல. அப்புறம் என்ன போக மாட்டேன்னு சொல்றது? வர வர என் பேச்சை கேட்குறதே இல்லை நீ. நான் வேணாம்னு சொன்னா அது சரியா இருக்கும்னு தோணாதா அபி உனக்கு. அவங்களோட அனுப்புனா நீ சேஃப்டியா இருக்கீயா என்னென்னு எனக்குப் பதறிட்டே இருக்கும் டா. அம்மா சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். என் பேச்சை கேட்காம அழுது சாதிக்கிற, இல்லைன்னா கெஞ்சி கேக்குற. நான் தனிமனுஷியா உன்னைப் பார்த்துக்க எவ்வளோ கஷ்டப்படுறேன். நீ என்னடான்னா நீ புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு நிக்க ஆரம்பிச்சுட்ட!” என அவள் பேசிக்கொண்டே இரவு உணவை சமைக்க, அபி பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டே தாயைப் பார்த்திருந்தான். அவள் அவனைக் கண்டும் காணாமலும் உணவை சமைத்து முடித்தாள்.
“வந்து சாப்பிடு...” அதட்டலாய் உரைத்தவள் குரலுக்கு அவன் அமைதியாய் அமர்ந்து சாப்பிட, இவளும் உண்டு முடித்தாள். ஆதிரை சமையலறையை சுத்தம் செய்ய, அபி அவள் பின்னே வந்து நின்றான்.
“நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் அபி. போ, போய் தூங்கு!” இப்போதும் குரலில் கோபம் மிச்சமிருந்தது. தாயை சோகமாகப் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனான். வேலை முடித்து வந்தவள் அவனது கண்ணீர் தடயங்களைப் பார்த்து வருந்தினாள். உறக்கம் கலையாது மகனை அருகே இழுத்து அணைத்துப் படுத்தாள்.
அவள் வேண்டுமென்றே மகனிடம் கடுமையைக் காண்பிக்கவில்லை. தான் வேண்டாம் எனக் கூறியும் இவன் வேறு வழிகளில் அதை செய்ய முயன்ற கோபம் வார்த்தைகளில் வெளிப்பட்டிருந்தது. இது சிறிய விடயம். நாளைக்கே வேறு எதாவது ஒன்றில் இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது. இப்போது அவள் கண்டித்ததால் மறுமுறை இந்த தவறை அவன் செய்ய மாட்டான். இவள் திட்டினால்தான் பயமிருக்கும் எனக் கோப முகத்தைக் காண்பித்துவிட்டாள்.
காலையில் விழித்தவளை அபினவ் அணைத்துக்கொண்டு உறங்க, இவள் அவன் நெற்றியில் முத்தமிட்டதும் சின்னவன் படக்கென விழித்துவிட்டான். “ம்மா... கோபம் போய்டுச்சா மா? சாரி மா. இனிமே இப்படி பண்ண மாட்டேன் மா!” எனத் தாயோடு ஒன்றினான் அபினவ்.
அவன் முடியைக் கலைத்தவள், “போய்டுச்சு அபி. ஆனால் இதுதான் லாஸ்ட். இனிமே இந்த மாதிரி அடம் பிடிக்க கூடாது!” என்றாள் மென்மையாய்.
“ஷ்யூர் மா... நான் நித்தி கூடப் போகலை மா. ருக்குப் பாட்டியோட சமத்தா இருந்துப்பேன் மா!” படபடவென ஒப்பித்தான். தாயின் கோபம் குறைந்ததிலே மற்றவை பின்னுக் தள்ளப்பட்டுவிட்டன. அதில் நித்திலாவுடனான பயணமும் அடக்கம்.
“பரவாயில்லை அபி... இந்த டைம் போய்ட்டு வா. சேட்டை பண்ணாம சமத்தா இருக்கணும். தனியா எங்கேயும் போகக் கூடாது. நித்தி அம்மாவோட இல்ல அப்பாவோட இருக்கணும். அம்மா ஃபோன் நம்பர் ஞாபகம் இருக்குல்ல?” அவள் கேட்ட நொடி கடகடவென மகன் ஒப்பித்திருந்தான்.
“குட்... எங்கேயும் தொலைஞ்சு போய்ட்டா யார்கிட்டேயும் போன் வாங்கி அம்மாவுக்கு கால் பண்ணணும். யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக் கூடாது!” என்றாள். எல்லாவற்றிற்கும் தலையை அசைத்தவன் தாயின் கன்னத்தில் எக்கி முத்தமிட்டு, “தேங்க் யூ சோ மச் மா!” பற்கள் தெரியப் புன்னகைத்தான். இவளுக்கும் அதில் முறுவல் பிறந்தது. பதிலுக்கு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
பின்னர் இரண்டு நாட்கள் கடகடவென ஓடிவிட, காலை எட்டு மணிக்கே நித்தியின் பெற்றோர்கள் காரில் வந்து அபியை அழைத்துச் சென்றனர். நூறு பத்திரங்கள், அறிவுரைகளைக் கூறித்தான் ஆதிரை அனுப்பி வைத்தாள். அன்றைக்கு உழவர் துணையில் ஒரு விசேஷத்திற்காக பாலை விநியோகம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டு வாரங்கள் முன்பே தேவா அறிவுறுத்தியிருந்தான். நேற்றுக் கூட ஞாபகப் படுத்திவிட்டுத்தான் கிளம்பினான்.
“ஆதிரை, நான் நாளைக்கு வர மாட்டேன். வெளிய போறேன். சோ நீங்களும் சுபாஷூம்தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். ரொம்ப அர்ஜென்ட், உங்களால மேனேஜ் பண்ண முடியலைன்னா மட்டும் எனக்கு கால் பண்ணுங்க!” என அவன் கூறியிருக்க, இவளும் தலையை அசைத்து ஏற்றிருந்தாள். முக்கியமான விடயம் அன்றி தேவா பெரும்பாலும் விடுமுறை எடுக்க மாட்டான். அவன் வரவில்லை என்றால் அலுவலக சம்பந்தப்பட்ட பயணமாகக் கூட இருக்கலாம் என எண்ணியவள் பின்னர் அதை மறந்திருந்தாள்.
காலையிலிருந்தே லேசாய் காய்ச்சல் அடிப்பது போலிருந்தது ஆதிரைக்கு. நேற்றைக்கு வேலைவிட்டு வரும்போது கொஞ்சமாயத் தூறிக் கொண்டிருந்த வானம் இவள் வீடு வரும் முன்னே ஊரையே நனைந்திருந்தது. ஆதிரை வந்ததுமே தலையை உலர்த்தி ஒரு மாத்திரையை விழுங்கி இருந்தாள்.
இருப்பினும் காலையிலிருந்து உடல் வெப்பநிலை மெதுவாய் உயருவதை உணர்ந்தவள் உண்டுவிட்டு மீண்டும் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு அலுவலகம் கிளம்பினாள். இன்றைக்கு வேலை வேறு அதிகம். இவள் இல்லாது போனால் கண்டிப்பாக ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடும். தேவாவும் இல்லாது விடுமுறை எடுப்பது உசிதமாகப் படவில்லை. அதனாலே பார்த்துக் கொள்ளலாம் எனக் கிளம்பிவிட்டாள்.
***
அடர் ஆரஞ்சும் சாம்பல் வண்ணமும் சேர்ந்த அந்த சட்டையை தேவா இரண்டு முறை முறைத்துவிட்டான். பொதுவாகவே அவனுக்கு ஆரஞ்சு, ரோஜா வண்ணம் போன்றவை அறவே பிடிக்காது. கண்ணைக் கவராத வகையில் மெல்லிய வண்ணங்களையே உடுத்திப் பழகியவனுக்கு இந்த அடர் ஆரஞ்சு எரிச்சலை தந்தது.
“லாஸ்ட் டைம் மீட்டிங்க்கு வந்த மாதிரி வராதீங்க தேவா. அது நல்லாவே இல்லை. கோஷூவல் வியர்தான் நல்லா இருக்கும். சோ, உங்களுக்குன்னு நான் டீஷர்ட் அண்ட் ஜீன்ஸை ஆர்டர் போட்டிருக்கேன். எப்படியும் நாளைக்கு டெலிவரி பண்ணிடுவாங்க. அதைப் போட்டுட்டு வாங்க!” இரண்டு முறை நேற்றைக்கு வலியுறுத்திய விஷாலியின் வார்த்தைகளைத் தட்ட முடியாது அந்த உடையை அணிந்து கொண்டான்.
ஞாயிறு விடுமுறை என்பதால் அனைவருமே அன்றைக்கு வீட்டிலிருந்தனர். வெளியே செல்ல ஏதோ ஒரு தயக்கம் ஆட்கொண்டது. பெருமூச்சுடன் தலையை வாரிக் கலைத்துவிட்டு விறுவிறுவென யார் முகத்தையும் பார்க்காது அவன் நழுவி செல்ல முயல, “என்ஜாய் ப்ரோ!” என்ற ஹரியின் குரலால் அனைவரின் கவனமும் இவனிடம் குவிந்ததில் தம்பியை தீயென முறைத்து விட்டு இருசக்கர வாகனத்தின் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
விஷாலி தேவாவின் முதல் வெளி சந்திப்பு சென்ற வாரமே நடந்திருந்தது. அன்றைக்கு அவன் மகிழுந்தில் அவளைக் காண செல்ல, “என்ன தேவா கார்ல வந்து இருக்கீங்க. பைக்தான் செம்ம கிக்கா இருக்கும். நெக்ஸ்ட் டைம் பைக் எடுத்துட்டு வாங்கப்பா!” என்றாள் மென்மையாய். இவனும் சரியென தலையை அசைத்திருந்தான்.
அவள் மட்டும் வருவாள் என எதிர்பார்த்து போயிருந்தவனுக்கு அவளுடன் சேர்ந்து நான்கு பெண்களைக் கண்டு திகைத்துப் போயிருந்தான். தேவா பெண்களுடன் நெருங்கிப் பழகியிராதவன். அதனாலே இத்தனைப் பெண்களுக்கு மத்தியில் தனி ஆணாய் சங்கடப்பட்டு போயிருந்தான். அதையெல்லாம் விஷாலி கண்டு கொள்ளவில்லை. ஒருவேளை முன்பே அவள் கூறியிருந்தால், மனதளவில் தயாராகி வந்திருப்பான். எதிர்பாராத நிகழ்வில் எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியாது தடுமாறி போனான்.
விஷாலி தேவாவை அவளது நண்பிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். பின்னர் பெண்கள் தங்களுக்குள் கலகலக்க, இவன் தனித்துப் போயிருந்தான். அலைபேசியை எடுத்து அதில் எதையோ பார்ப்பது போல நேரத்தை நெட்டித் தள்ளினான். அப்படியே ஒரு உயர்தர உணவகத்திற்குள் நுழைந்தனர். உண்டு முடித்ததும் தேவாதான் பணத்தை செலுத்தினான். ஏழு பேர் உண்டதற்கு ஐந்தாயிரம் செலவாகியிருக்க, அவன் மலைத்துப் போனான். விஷாலிக்கு அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை. அடுத்து சென்னையின் பிரபல வணிக வளாகம் செல்ல, அவள் வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் இவனது பண அட்டை தேய்ந்தது.
மாலை அவளை வீட்டில் இறக்கி விடச் செல்லும்போது தான் அவனது உடை நன்றாக இல்லையென கூறிவிட்டாள். முகத்தில் அடித்தது போல உரைக்கவில்லை எனினும் தன்மையாய் அவளது விருப்பு வெறுப்புகளை இவனிடம் புகுத்தத் தொடங்கி இருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் ஹரி, “ஃபர்ஸ்ட் அவுட்டிங் எப்படி இருந்துச்சு ப்ரோ?” எனக் கேட்டவனை முறைத்து விட்டு அறைக்குள் உடை மாற்றச் சென்றுவிட்டான் தேவா.
“ப்ரோ... உன்கிட்டதானே கேக்குறேன். பதில் சொல்லு!” இவன் ஆர்வமாய் கேட்க, “கேர்ள்ஸ் ரொம்ப காஸ்ட்லியா இருப்பாங்க போல. ஒரு நாளைக்கு பத்தாயிரத்துக்கு செலவு வச்சுட்டா விஷாலி!” அயர்வுடன் நடந்தவற்றை சுருக்கமாய் உரைத்தான்.
“ப்ரோ... அண்ணியும் உன்னை மாதிரியே கஞ்சமா இருக்கணும்னு நினைக்கிறீயா? அண்ணி நல்லா செலவு பண்றவங்களா இருப்பாங்க. மோர் ஓவர் எல்லா கேர்ள்ஸூம் ஷாப்பிங்னு போனா குறைஞ்சது பத்தாயிரம் பில் கட்ட வைப்பாங்க. இது ஃபர்ஸ்ட் மீட்டிங். சோ அண்ணி எக்ஸைட்டடா இருந்து இருப்பாங்க!” ஹரி சமாதானம் செய்ய, இவன் அரை மனதாக ஏற்றிருந்தான்.
நினைவுகளுடனே விஷாலி குறிப்பிட்ட அந்த திரையரங்கம் முன்பு நின்றான். கையில்லாத குட்டி சட்டையும் அதற்குத் தோதாக அடர் நீல வண்ண ஜீன்ஸ் கால்சராயும் அணிந்திருந்தாள் விஷாலி.
“ஹாய் தேவா!” அவள் கையசைக்கத், அது தேவையே இல்லை என்பது போல இவனே அவளுக்கு அருகே சென்று நின்றான்.
“யூ லுக் ப்யூட்டி புல் இன் திஸ் அவுட் ஃபிட். செம்மையா இருக்குல்ல?” அவள் சிலாகிக்க, இவன் புன்னகைத்தான்.
“என் ட்ரெஸ் எப்படி இருக்கு?” என அவள் கேட்க, “நல்லா இருக்கு, பட் ஷர்ட்தான் குட்டியா இருக்கு!” என்றான். அவள் இவனை நோக்கி கையைத் தூக்கும் போது குட்டியான சட்டை மேலே உயர்ந்து வெண்ணிற இடை பளிச்சென தெரிய, ஒரு சிலர் விழிகள் அவளை மேய்ந்தன. தேவாவுக்கு அது சுத்தமாய் பிடிக்கவில்லை.
பெண்களை உடை விஷயத்தில் கட்டுப்படுத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஏன் ஜனனி பிரதன்யா இளையவர்களாக சேர்ந்து எங்கேனும் சுற்றுலா சென்றால் நவீனரக உடையணிந்து வருவார்கள். ஆனால் அது யாருடைய கண்ணையும் உருத்தாத வகையில் இருக்கும். இங்கே விஷாலியின் மேல் சட்டை கொஞ்சம் பெரிதாக இருக்கலாம் என்பது அவனுடைய எண்ணம்.
“ப்ம்ச்... தேவா, இது ஷார்ட் டாப். அப்படித்தான் இருக்கும். ஷோ ஆரம்பிக்க போகுது, வாங்க!” என அவனை அழைத்துக் கொண்டே திரையரங்கிற்குள் நுழைந்தாள். கூட்டம் நிரம்பி வழிய, இவர்கள் தங்களது இருக்கையைத் தேடி அமர்ந்தனர். படம் தொடங்கியது. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றியை பெற்றப் படம் என்ற நம்பிக்கையில் தேவா திரையில் ஒன்றினான்.
முதல் பகுதியிலே படத்தின் நாயகன் பொறுப்பற்று கல்லூரியில் குடித்துப் பெண்களுடன் சுற்றி வந்தது தேவாவிற்குப் பிடிக்கவில்லை. இரண்டாம் பகுதியில் ஓரளவிற்கு திருந்தி நிதர்சனம் உணர்ந்து வேலைக்குச் சென்றாலும் முழுதாய் பொறுப்பு வரவில்லை. அதற்குள்ளே அவனுக்குத் திருமணம் முடிய, அதீத காதல் காட்சிகளை வேறு இணைத்திருந்தனர். முடிவில் அவர்கள் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்வது போல இயக்குனர் காண்பித்திருக்க, இவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
திரையைவிட்டு வெளியே வந்ததும், “செம்ம மூவி இல்ல தேவா? லாஸ்ட் வீக்கே நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட தியேட்டர்ல பார்த்துட்டேன். உங்க கூட ஒரு தடவைப் பார்க்கலாம்னு கூட்டீட்டு வந்தேன்!” என்றவளை சில நொடிகள் அமைதியாய் பார்த்தான்.
“என்னதான் ஹீரோ அப்படி இப்படி இருந்தாலும் ஹீரோயினை செம்மையா தாங்குறான் இல்ல. செம்ம ரொமான்டிக்கா நடந்துக்குறான். அவளுக்காக சர்ப்ரைஸ் எல்லாம் அடிக்கடி பண்றான்!” என்றாள் சிலாகித்து.
“எப்படி? வேலைக்குப் போகாம கையில காசில்லாம கடன் வாங்கி பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் பண்றது செம்மையா இருக்கா விஷாலி. சச் அ டிஸ்கஸ்டிங்!” இவன் மறுத்துப் பேசினான்.
“ப்ம்ச்... கையில காசே இல்லைன்னா கூட கடன் வாங்கிப் பொண்டாட்டியை சர்ப்ரைஸ் பண்றான் தேவா. அவனோட லவ்வைப் பாருங்க!” அவளும் விடாது வாதாடினாள்.
“எனக்கு இது லவ்வா தெரியலை விஷாலி. பொறுப்பில்லாத் தனம். ஒழுங்கா படிக்காம குடிச்சிட்டு பொண்ணுங்க பின்னாடி சுத்தியிருக்கான். பெத்தவங்க, ரெண்டு மாசம் இவன் வேலைக்குப் போனதை நம்பி பொறுப்பு வந்துடுச்சுன்னு கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணி இருக்காங்க!” எரிச்சலாக அவன் கூறியதும், இவளுக்கு முகம் சுருங்கியது.
“ஏன் தேவா எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்குறீங்க. வயசு கோளாறுல தப்பு பண்ணிட்டான். திருந்தி பொண்டாட்டி புள்ளைன்னு சந்தோஷமா வாழலையா அவன்?” எனக் கேட்டவள், “மோர் ஓவர் சச் ரொமான்டிக் பெர்சன் அவன். லவ், ஹக், கிஸ்னு செம்மையா இருந்துச்சுல்ல!” தன் பிடியிலே நின்றாள்.
“ஓஹோ... வேலைக்குப் போகாம பொண்டாட்டியை உரசிட்டே லவ் பண்ணிட்டு திரிஞ்சா மூனு வேளை சாப்பாடு கிடைக்குமா? பிள்ளைங்க ஸ்கூல் பீஸ் அதுவா கட்டும்? ரெஸ்பான்சிபிள் மேன் இஸ் பெட்டர் தென் அ ரொமான்டிக் மேன்!” அவன் கடுப்பாய்க் கூறினான்.
“ஐ லவ் ரொமான்டிக் மேன் தேவா. பொறுப்பு பருப்புன்னு எனிடைம் சீரியஸ் மோட்லயே சுத்தாதீங்க. இந்தப் படத்துக்கு உங்களை கூட்டீட்டு வந்ததுக்கு காரணமே நீங்க அவனை மாதிரி ரொமான்டிகா இருக்கணும்தான்!” அவள் உரைத்ததும், “சாரி... நான் அந்த மாதிரி ஆள் இல்லை!” என்றான் பட்டென்று.
“ச்சு... இதுக்கு முன்னாடி இல்லன்னா என்ன தேவா? இனிமே மாறிக்கோங்க!” அவள் கூறியதைக் கேட்டதும் இவனுக்கு எரிச்சல் படர்ந்தது. நடந்த மூன்று சந்திப்பிலுமே இந்த வார்த்தையை கூறியிருந்தாள். ஆனால், அவன் அவளிடம் மாற வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதையும் கட்டாயப்படுத்தவில்லை என்ற உபரித் தகவலை மூளைப் பகிர்ந்தது.
“லீவ் இட் தேவா... இந்த ஹோட்டலுக்குப் போகலாம்!” என அவள் அலைபேசியில் காண்பித்த உணவகத்திற்கு செல்ல குறைந்தது நாற்பது நிமிடங்களாக தேவைப்படும்.
“விஷாலி, பக்கத்துலயே நல்ல ஹோட்டல்ஸ் எல்லாம் இருக்கே. ஏன் இவ்வளோ தூரம் போகணும்?” அவன் கேட்டதும்,
“இன்ஸ்டால ரீல்ஸ்ல பார்த்தேன் தேவா. அங்க பிரியாணி செம்ம டேஸ்டா இருக்குமாம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போய்ட்டு ஸ்டோரி போட்டுட்டாங்க. நம்பளும் ஒரு தடவைப் போய்ட்டு வரலாம்!” என அவன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்ததும் பின்னே ஏறியமர்ந்தவள் கெஞ்சலாகக் கேட்க, இவனால் மறுக்க முடியவில்லை. தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
நாற்பது நிமிடங்களில் இருவரும் அந்த உணவகத்திற்குள் நுழைய, ஏற்கனவே அவர்களுக்கு முன்னே இரண்டு வரிசை நின்றிருந்தது. எல்லாம் இணையதள உணவு ரிவ்யூக்கள் மூலம் என்றுணர்ந்தவன் இங்குதான் சாப்பிட வேண்டுமா என எண்ணி விஷாலியைக் காண, அவள் உணவகத்தின் ஒரு மூலையில் நின்று சுயமிப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
“தேவா... கம், கம்!” என அவனையும் நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்தவள், “நான் இன்ஸ்டால ஷேர் பண்றேன். நீங்க போய் பிரியாணி வாங்கிட்டு வாங்க!” என்றுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அலைபேசியில் முகம் புதைத்தாள். இவன் பெருமூச்சுடன் அந்த வரிசையில் நின்றான்.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழித்து அவன் உணவோடு வர, “வெயிட்... வெயிட். சாப்பிட்றாதீங்க. ஒரு பிக்சர் எடுத்துடலாம்!” என சாப்பிட உணவைக் கையிலெடுத்து வாயில் வைக்கச் சென்றவனை தடுத்தவளைக் கண்டு தேவா தன் பொறுமையை இழுத்துப் பிடித்தான். உணவு ஈயாத வயிறு கத்திக் கொண்டிருந்தது. பசியோடு உண்ணச் சென்றவனைத் தடுத்து இப்படி புகைப்படம் எடுத்து இணையத்தில் போட வேண்டுமா என மனதில் கடுப்பாய் நினைத்தான். எல்லாம் இந்த ஆன்லைன் மோகம் என மனதிற்குள்ளே புலம்ப மட்டுமே அவனால் முடிந்தது.
“ஓகே சாப்பிடலாம்...” என அவள் கூறியதும் இவன் உண்ணத் தொடங்கினான். உணவு சுவை ஒன்றும் அத்தனைப் பிரமாதம் இல்லை. விலை அதிகமாய் வேறு இருந்தது.
“பிரியாணி ரொம்ப சுமார் இல்ல தேவா?” என அவளே கேட்டு உண்ண, இவன் வாங்கிய உணவை வீணடிக்க கூடாது என முழுவதையும் சாப்பிட்டு முடித்திருந்தான்.
பாதி அளவு கூட உண்ணாத விஷாலி, “எனக்குப் போதும். நல்லா இல்ல!” எனக் கையை கழுவிவிட்டாள். வீட்டில் பிரதன்யா, ராகினி உணவை உண்ணாது வைத்தாலே இவன் அதட்டுவான். ஆனால் இந்தப் பெண் உணவையும் காசையும் சேர்த்து வீண் பண்ணிவிட்டாள் என மனம் புழுங்கியது. அவன்தான் அனைத்திற்கும் செலவு செய்தான்.
“டீ நகர் போலாம் தேவா!” என அவள் கூற, “இல்ல விஷாலி... வேற எங்கேயும் போகலாம். இப்பவே டைம் நாலாகப் போகுது. அப்புறம் லேட் நைட்தான் வீட்டுக்கு வருவோம். மேரேஜ்க்கு முன்னாடி இதெல்லாம் சரி இல்ல!” அவன் கண்டிக்க, “பம்ச்... எங்க வீட்ல நான் பேசிக்கிறேன். உங்க வீட்ல இன்னுமா உங்களை சைல்ட் மாதிரி ஏன் லேட்டு, எங்கப் போறன்னு கேட்குறாங்க?” என கேலியாகக் கேட்டாள்.
அவளை உறுத்து விழித்தவன், “லுக் விஷாலி, எங்கப் போற, வர்ற, ஏன் லேட்டுன்னு கேட்குறது எல்லாம் சைல்ட் டிஷ் கிடையாது. அது அவங்க என் மேல வச்சிருக்க அன்பு, அக்கறை. கண்ட நேரத்துக்கு வர்றதுக்கு போறதுக்கு நான் அனிமல் கிடையாது. ஐ ஹேவ் சம் டிக்னிட்டீஸ்!” அவன் முகத்தில் அடித்தாற் போல கூறிவிட்டான்.
“ஓகே... விடுங்க. இப்போ டீ நகர் போறோமா இல்லையா?” விஷாலி தன் பிடியிலே நிற்க, கோபமாய் வாகனத்தை உயிர்ப்பித்தான் அவன். அவள் தோளைக் குலுக்கிக்கொண்டு பின்னே ஏறியமர்ந்தாள். பத்து நிமிடங்கள் சென்றிருக்கும்.
“தேவா...ப்ளீஸ் ஸ்டாப்!” என அவள் கத்தவும், இவன் பதறிப் போய் வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டான். கீழே இறங்கி குடுகுடுவென ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள் விஷாலி.
தேவா தண்ணீர் பொத்தலை எடுத்துக் கொண்டு அவளருகில் சென்றான். அதை வாங்கி முகம் கழுவி வாய் கொப்பளித்தாள் அவள்.
“என்னாச்சு விஷாலி, ஆர் யூ ஓகே?” இவன் கேட்க, “பிரியாணி ஒத்துக்கலை போல தேவா. ஐ யம் ஓகே!” என்றாள்.
“யூ ஆர் நாட் வெல். டீ நகர் கண்டிப்பா போகணுமா?” அவன் யோசிக்க, “நான் ஓகேதான் தேவா. வாங்க போகலாம்...” என அவள் அடமாய்க் கூற, அவர்களது பயணம் தொடங்கியது. அடுத்த பத்து நிமிடத்திலே அவள் மீண்டும் வாந்தியெடுத்தாள்.
“விஷாலி, யூ ஆர் நாட் ஓகே. நம்ப எங்கேயும் போகலை...” அவன் அழுத்திக் கூற, சரியென்று ஒப்புக் கொண்டாள்.
இருவரும் அவளது வீட்டிற்கே திரும்ப, “வயிறு வலிக்குது தேவா... தலை சுத்துது. வாமிட் வருது!” என அவள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒன்றைக் கூற, அருகிலிருந்த மருத்துவனைக்குச் சென்றனர்.
அவளைப் பரிசோதித்த மருத்துவர், “ஃபுட் பாய்சன் ஆகிருக்கு. பயப்பட்ற மாதிரி ஒன்னும் இல்ல. வாமிட் நிக்க ஒரு இன்ஜெக்சன் போட்றேன். நைட்டுக்கும் காலைலக்கும் மாத்திரை எழுதி தரேன். சாப்பிட்டா யூ வில் ஃபீல் பெட்டர்!” அவர் கூறியதும், “ஐயோ டாக்டர்... ஊசியெல்லாம் வேணாம். எனக்குப் பயம், ப்ளீஸ்!” என அவள் சிறுபிள்ளை போல அடம்பிடித்து சிணுங்கியதில் அனைவரின் பார்வையும் அவளிடம் குவிந்தது.
“விஷாலி, நீயே ஒரு டென்டிஸ்ட். இன்ஜெக்ஷனுக்குப் பயப்படலாமா?” என அவன் அதட்ட, “நான் டென்டிஸ்டா இருந்தா எனக்கு நானே டெய்லி ஊசி போட்டுக்குவேனா என்ன?” என அவள் பதிலுக்கு கேட்க, செவிலியர் அழைத்துச் சென்று ஊசியைக் குத்த, கண்களில் கண்ணீரோடு வந்தாள்.
“விஷாலி, இதென்ன குழந்தை மாதிரி அழறது?” அவன் அதட்ட, “என் அம்மா, அப்பா கூட வந்தா அவங்க என்னை சமாதானம் செய்வாங்க. நீங்க என்ன அதட்டுறீங்க. உங்களுக்கு ஊசிப் போட்டா தெரியும் என் வலி!” என்றாள் சிடுசிடுவென. இவன் மாத்திரைகளை வாங்கிவிட்டு வர, இருவரும் கிளம்பினர்.
சிறிது தூரம் சென்றதும் விஷாலி அவன் முதுகில் முகம் வைத்து வயிற்றோடு கட்டிக் கொள்ள, சில நொடி வாகனம் அவனது கைகளில் தடுமாறி இருந்தது.
“விஷாலி, வாட் ஆர் யூ டூயிங். திஸ் இஸ் பப்ளிக் ப்ளேஸ்!” அவன் கண்டிப்புடன் கூற, “தேவா, ஐ யம் சோ டயர்ட். தலை சுத்துற மாதிரி இருக்கு. சப்போர்ட்க்குத்தான் பிடிச்சுக்கிறேன்!” அவள் முனங்க, இவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
இவன் பிரதானக் கதவை கடந்து உள்ளே சென்று நிறுத்த, விஷாலி தேவாவை உள்ளே வா என்று கூட அழைக்காமல் விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தாள். அவனுக்கு கோபம் கனன்றது. இருந்தாலும் வீடுவரை வந்து உள்ளே செல்லாமல் சென்றால் அது முறையல்ல என வாகனத்தை நிறுத்திவிட்டு உள் நுழைந்தான்.
விஷாலி கூடத்திலிருந்த நீள்விருக்கையில் படுத்திருக்க, தலையை அவளது தாய் தாங்கி இருந்தார். காலுக்கு அருகே தந்தை அமர்ந்து இருந்தார்.
“ஊசி போட்டது வலிக்குது மா... தலை சுத்தது. வயிறு வலிக்கது!” குழந்தை போல கூறி அவர்களிடம் அனுதாபத்தையும் அன்பையும் பெறுபவளை இவன் அமைதியாகப் பார்த்தான்.