• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நின் நெஞ்சம் நேர்பவளே !... - 3

Messages
37
Reaction score
20
Points
8
அத்யாயம் -3

அனைவரும் இரவு உணவு உண்ண உணவு மேஜைக்கு வர சிவகாமி இருவருக்கும் பரிமாறினார்.

உணவை சுவைத்தவாரே வேதாச்சலம் மௌனத்தை கலைக்கும் விதமாக பேச்சை ஆரம்பித்தார் .

"மிரு ஒரு முக்கியமான சந்தோஷமான செய்தியை பேசணும் கண்ணு"

என்று சொல்லும் போதே அவர் முகம் சந்தோச தாண்டவம் ஆட. அதை பார்த்து மிரு இதற்காகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோண சிவகாமி ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார் .

வேதாச்சலம் தொடர்ந்தார்-" மிருகுட்டி நீ இனிமே வேலைக்கு எல்லாம் போக வேண்டி இல்ல"

என்று சொல்ல முகத்தில் ஒரு சலனம் அதை வெளிக்காட்டாமல் சிரிப்புடன் தன் தந்தை என்ன சொல்ல வருகிறார் என்று கேட்க

"இவ்வளவு நாள் உன்னை வேலைக்கு அனுப்பினது வீட்ல சும்மா இருக்க புடிக்கலன்னு சொன்னதுனால தான் உன்னோட நண்பர்கள் இருந்ததுனால தான் அங்க அனுப்புன இல்லனா நம்ம கம்பெனியில் வேலை செய்ய சொல்லி இருப்பேன் இப்ப நீ எங்கேயும் போக வேண்டாம் "என்று சொல்ல.

மிரு -"அப்பா எதுக்கு இப்ப இத பத்தி பேசுறீங்க"

என்று ஒரு தயக்கத்துடன் சொல்ல.

" நீ சாப்பிட்டு முடி நா முக்கியமான விஷயமா பேசணும்"

என்று மட்டும் சொல்லி சாப்பிட தொடங்கினார் .வேதாச்சலம் சிவகாமியும் அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு முடித்தார்.

அனைவரும் கூடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் மனம் ஏதோ நடக்கவிருக்கிறது என்று அடித்துக் கொள்ள தன் தாய் பக்கம் திரும்பியவள் என்னவென்று செய்கையில் கேட்க அவர் முகத்தில் ஏதும் தென்படாததாள் மீண்டும் தந்தை பக்கம் திரும்பினாள்.

"மிரு இங்க வந்து உட்காரு" என்று பாசமாக அழைத்தார் மேலும் மனதில் அப்பா எதை பற்றி கூறப்போகிறார் என்று தெரியவில்லை சொல்லும் முன் முந்திக்கொள்ள மிரு என்று மனம் சொல்லியது அனால் நடந்ததுதான் வேறு.

அப்பாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தவழுக்கு படபடப்பாக இருக்க வேதாச்சலம் மலர்ந்த முகமாக

"மிரு அப்பா சொன்னா கேப்ப தானே இப்ப அப்பா உன்னோட கல்யாணத்தை பத்தி தான் பேச கூப்பிட்டேன் கண்ணு"

எதுவாக இருக்க கூடாது என்று நினைத்தாளோ அதையே சொல்லிவிட்டார் வேதாசலம்.

" இதை பத்தி இப்போ .......எதுக்கு பா" விட்டால் அழுதுவிடுவாள் அவள் நினைத்தது நடக்கவில்லை அதற்கு முரணாக நடக்கிறது சுலபமாக சொல்லி சம்மதம் வாங்கிவிடலாம் என்று நினைத்தவளுக்கு இது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி .

வேதாச்சலம் தொடர்ந்தார்-" என்னோட நண்பர் ராஜா சன் ஃபாரினில் இருந்து இந்தியா வந்து அவங்க அப்பா கம்பெனியை எடுத்து நடத்துவதா சொன்னார் நல்ல பையன் நம்ம கண்ணு முன்னாடி வாழ்ந்தவன் "

என்று சொல்லி இடைநிறுத்தியவர்

" இன்னும் ரெண்டு நாள்ல எங்க கம்பெனியில் 75% இன்வெஸ்ட் பண்ண தேஜ் குரூப்ஸ் நிறுவனத்தோட எம்டி வராரு அதுக்கு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கு அன்னைக்கு தான் சாராவாத் கம்பெனியை டேக் ஓவர் செய்றான்"

பேச்சை நிறுத்தி மிருவை பார்க்க அவள் திருவிழாவில் காணாமல் போன பிள்ளை போல் முழித்துக்கொண்டிருந்தால் .

அதை பார்த்த வேதாசலம் -"நீ சாராவாத்தை பார்த்து புடிச்சு இருந்தா சொல்லு உனக்கு புடிக்கலனா சொல்லிடு அப்பா பாத்துக்குறேன் "

என்று பெரியதாக பேசி முடிக்க .

இப்பொழுதுதான் மிருவிற்கு மூச்சே வந்தது போல் இருந்தது ஆனாலும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை அப்பா சொல்வதை சொல்லிவிட்டார் .

முடிவெடுக்க வேண்டியது இவளின் கையில் உள்ளது என்ன செய்வது என்று அவளுக்கு தலையும் புரியவில்லை காலம் புரியவில்லை தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் .

இப்பொழுது எதுவும் சொல்லி அப்பாவை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள்

"நாம சாராவாத் கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்திடலாம்"

என்று கணக்கிட்டவள் ஒளி இழந்த முகத்தை மறைத்தவள் சிறிய புன்னகையுடன்

"சேரிங்கப்பா"

என்றவள் அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் தனது அறைக்கு சென்று விட்டாள் .

வேதாச்சலம் சிவகாமியை பார்த்தவர்

என் மகள் என்னும் கர்வத்தோடு பார்க்க சிவகாமியும்-" பார்த்தது போதும் உங்களுக்கு போட்டியா ஒரு மருமகன் வருவான் அப்போ பேசுகிறேன் "

என்று சொல்லி பாத்திரத்தை சுத்தம் செய்ய சென்று விட்டார் .

தனது அறைக்கு வந்த மிருதுளா படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் கண்ணீரை கட்டுப்படுத்த தெரியாமல் துடைத்துக் கொண்டிருக்க அவளது மனமோ கார்திக்கின் நினைவால் இன்னும் சஞ்சலம் அடைய தொலைபேசியை எடுத்தவள் நடந்ததை சுருக்கமாக மெசேஜின் மூலம் அனுப்பினாள் .

அவனோ நன்றாக குடித்துவிட்டு உறங்கிக் கொண்டு இருந்தான்.

மிருதுளாவிற்கு தூக்கம் வரவே இல்லை மனம் ஒரு நிலையில் இல்லை அனுப்பிய மெசேஜ்ற்கு பதிலும் வரவில்லை இதை ஏற்கவும் முடியவில்லை மனம் வாடியவள் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என்று தெரிய வில்லை இப்பொழுதான் மனதிற்கு ஏதோ தவறாக பட எண்ணங்களை கலைத்தவள் நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது எப்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம் அப்பா அம்மா மனம் நோகாமல் இதை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே விழித்திருந்தாள் மிருதுளா .

அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வில் தன் வாழ்க்கையை பற்றி முடிவெடுப்பது வேறு ஒருவன் என்பது தெரியாமல் கண்கள் விழி மூட மறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் .
 
Last edited:
Top