15
ஏலச்சியில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் வரும் உல்லாசப்பிரயாணிகள் அதிகமாய் விஜயம் செய்யும் மலைப்பகுதியில் ஒரு மிகப்பிரபலமான wellness ஆயுர்வேத மூலிகை ஸ்பா உடன் இணைந்து வீ ஆர் எஸ்டேட்டின் துளசி ஏலச்சி தேயிலையை புதிதாக அங்கே அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஒரு ஆஷ்ரமம் போல செட் போடப்பட்டிருந்த அமைப்பில் வெளிநாட்டவர் உள்நாட்டவர் வேறுபாடின்றி முன்னே அமைக்கப்பட்டிருந்த சின்னக்குடிலில் இருந்த ஷாட் கிளாஸ் போலிருந்த மிகச்சிறு கண்ணாடிக்குவளைகளில் இருந்த துளசி இலை கலந்த தேநீரை ருசி பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப்பக்கம் செப்பு குவளை லேசாக துருப்பிடித்தது போல உருவகம் கொடுக்க வடிவமைக்கப்பட்டிருந்த தேயிலை பாக்கேஜ் பரபரப்பான விற்பனையில் இருந்தது.
நிரு எப்போதும் போல கால்களில் சில்லை கட்டிக்கொண்டு சேலையையும் ஒருபக்கம் இழுத்துப்பிடித்துக்கொண்டு சுழன்று கொண்டிருந்தாள்.
மூன்று மாதங்கள், மிகப்பரபரப்பான மூன்று மாதங்கள், எதையும் நினைக்காமல் மனதில் எந்த பாரமும் இல்லாமல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காய் கொண்டு அவள் ஓடிய மூன்று நெடிய மாதங்கள் அவளுக்கு வெற்றி மேல் வெற்றியை தான் கொண்டு வந்து சூடியிருந்தன.
தொழில் வெற்றி மட்டுமா? எத்தனை உறவுகள் அவளுக்கு புதிதாய் கிடைத்திருந்தன.. அவளை பார்த்துக்கொண்டு மட்டுமே பழக்கப்பட்ட உறவுகளுக்கு இடையில் இப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே சக மனுஷியாய் பழக முடியும் இந்த உறவுகளை அவளுக்கு இன்னும் பிடித்திருந்தது.
அவளது கண்கள் தன்னை சுற்றி ஒருமுறை பெருமிதமாய் வலம் வந்தன.
மொத்த செட்டுமே அன்றைக்கு லாஞ்சுக்காக அமைக்கப்பட்டதே..இது அவர்களின் மூன்றாவது அறிமுக விழா. கற்பூரவள்ளி, குப்பைமேனி வரிசையில் இன்றைக்கு துளசி தேயிலை மார்க்கட்டில் இறங்கியிருந்தது.
சாதனா அக்காவின் பிள்ளைகளான சாரண்யா ஷாமிலா இருவரும் பட்டுப்பாவாடை சட்டையில் மங்களகரமாய் வருபவர்களை வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டிந்தனர்.
நிதர்ஷன், பிரியன், சேந்தன், ஜெயந்தன், வெண்ணிலா என வீ ஆர் எஸ்டேட்டின் புதிய டீம் அங்கே சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அவர்களோடு wellness ஸ்பா நிறுவனத்தின் ஊழியர்களும் தங்களுடைய உபகரணங்கள் இத்யாதிகள், இன்டீரியர் வடிவமைப்பில் என்னமோ நிஜமான ஆஷ்ரமத்துக்கு வந்த உணர்வை கொடுத்துக்கொண்டிருந்தனர்.
வெளியே நின்று கொண்டிருந்த வெளிநாட்டு பெண்மணி ஒருவரின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி அவரை தங்களுடைய சுவை பார்க்கும் இடத்துக்கு அனுப்பி சுவை பார்க்குமாறு ஊக்கப்படுத்திய நிரு செல்போனில் நேரம் பார்த்தபடி ஷாமி, சாரன் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்தாள்.
“குட்டீஸ்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா ரிசப்ஷனிஸ்ட் கிட்ட நின்னே வெல்கம் பண்ணிக்கலாம் சரியா? வெளியே குளிர் அதிகமாயிட்டிருக்கு” என்று அழைக்க
ஹ்ம்ம் என்றவர்கள் “மாலை எங்களை போட் ரைடிங் கூட்டிட்டு போகணும்” என்று மீளவும் உறுதிப்படுத்தி கொண்டனர் கறார் வியாபாரிகளாய்
“சப்பா.. கண்டிப்பா கூட்டிட்டு போறேன்.. இப்போ உள்ளே வந்து கொஞ்சம் நேரம் உக்காருங்க..” என்று அவர்களை இழுத்து வந்தவளுக்கு சிரிப்பு. இந்த காலத்து குழந்தைகள் தான் எவ்வளவு உஷார்.. என்னையெல்லாம் யாராவது பட்டு பாவாடை போட்டு சந்தன குப்பியை கையில் கொடுத்தால் வாசலில் ஈ என்று பொம்மை போலவே நின்று விடுவேன். நல்ல பிள்ளை, அவ்ளோ சமர்த்து என்று ஐஸ் வைத்தே எத்தனை பேர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்!
இவர்களை பாரேன்.. “விழா முடிந்ததும் போட் ரைடிங் கூட்டிட்டு போவீங்கனா மட்டும் தான் வருவோம்” என்று கறார் பிசினஸ் பேசியே கிளம்பி வந்திருந்தனர்..
உள்ளே மெஷினில் அவர்கள் இருவருக்கும் ஹாட் சாக்கலேட் எடுத்து கொடுத்து உள்ளே கொஞ்ச நேரம் உட்கார வைத்து விட்டு அவளுக்கும் ஒரு லாட்டே எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் இப்போது வெளியே அவளிடத்தில் சேந்தன் நின்று கொண்டிருப்பதை கண்டு ஆசுவாசமாய் குஷனுக்குள் புதைந்தாள்.
எனக்கு பத்து நிமிஷம் ப்ரேக்!
“நானும் பத்து நிமிஷம் தலைமறைவு” என்றபடி அவளுக்கு அருகில் கையில் ஒரு பானத்தோடு புதைந்த வெண்ணிலாவை பார்த்து புன்னகைத்தாள் நிரு. வெண்ணிலா தான் இவ்வளவு நேரமும் சுவை பார்க்கும் குடிலில் நின்று கொண்டிருந்தவள். மெலிதாய் பேசும் விழிகளும் குளிர் பிரதேசத்துக்கே உரிய அழகும் என்று கியூட் பாக்கேஜாக இருந்தவளுக்கு வயது முப்பத்து இரண்டு, ஒரு குழந்தைக்கு அம்மா என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். வீ ஆர் குடும்ப இன்னொரு உறுப்பினள் இவள்.
“இன்னிக்கு கூட்டம் ரொம்ப அதிகம்க்கா.. தெரிஞ்சிருந்தா இன்னும் ஆளுங்களை கூட்டிட்டு வந்திருக்கலாம்” என்று நிரு சொல்ல
“இனி அடுத்தடுத்த விழாக்களுக்கு கூட்டம் இதை விட அதிகமே தான் வரும். ஆனால் நம்ம நேரா போக வேண்டியதில்லை இனிமே. ஜூனியர்சை ரெடி பண்ணி அனுப்பலாம்” என்றாள் வெண்ணிலா
“நம்பவே முடியலை இல்ல?” என்ற நிருவின் கேள்விக்கு
“நீங்கல்லாம் தான் படையப்பா படமா ஒரு பாட்டுல ஜெயிக்கன்னு கிண்டல் பண்ணிட்டிருந்தீங்க.. நான் நம்பினேன். ஏன்னா எங்களுக்கு எல்லாமே இந்த தடவை பாசிட்டிவா அமைஞ்சிருந்தது” என்றவள்
“நேத்து போர்ட் மீட்டிங்க்ல எல்லாரும் செம்ம பாசிட்டிவா பேசிட்டிருந்தாங்க.. நீ தான் எங்களோட மாஸ்டர் மைன்ட்னு அங்கேயே நிதர் சொன்னான்” என்று பகிர
பட்டென்று முகம் சிவந்தவள் “என்னை மட்டும் சொல்லாதிங்க. துளசி, கற்பூர வள்ளி எல்லாம் தனித்தனியா காயவச்சு டீன்னு விப்பாங்க.. லெமன் டீ போல தேயிலைல சேர்த்து உண்டாக்கி அதையும் இவ்வளவு தரமா கொடுத்ததெல்லாம் ஜெயந்தன் சார் தான். அதை நான் வெளியே கொண்டு போனேன். எங்களுக்கு சப்போர்ட்டுக்கு நீங்க எல்லாருமே எதை சொன்னாலும் பண்ணலாம் பண்ணலாம்னு ஊக்கப்படுத்தலைன்னா எதுவும் நடந்திருக்காது” என்றாள் நிஜமாகவே
“ஹாஹா ஜெயந்தனே சொன்னான். இந்த தேயிலையை உருவாக்கும் போது வெளிநாட்டுக்காரங்களை தான் நான் மனசுல வச்சிருந்தேன். ஆனா இவ நேரடியா Wellness ஸ்பா கூட கோர்த்து விட்டு வேற லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டான்னு..நீ இந்த பின்னணியில் இல்லாத ஆளுன்னு நீ சொன்னாலே தவிர நம்பவே முடியாது நிரு..” என்ற வெண்ணிலாவின் மனமார்ந்த பாராட்டில்
முகம் மலர புன்னகையோடு அமர்ந்திருந்தாள் நிரு. களைப்புத்தான் நிற்காத ஓட்டம் தான். இரவில் கூட வேலை செய்ய வேண்டி இருந்தது தான். ஆனால் மனதில் அத்தனை சந்தோஷம். வெண்ணிலா சொன்னது போல என்னமோ ஆண்டாண்டு காலமாய் இந்த பின்னணியிலேயே இருந்தவள் போல பட்டென்று பொருந்திப்போய் விட்டவள் கடந்த மூன்று மாதத்தில் ஏகப்பட்ட வேலை செய்திருந்தாள்
முதலில் ஒரு நான்கு நாள் பாக்டரியை சுற்றி வந்து அதை புரிந்து கொள்ள மட்டுமே பிடித்தது.
கிராமத்தில் நூறுக்கு தொண்ணூறு பேர் அங்கே ஏதோ ஒரு பணியில் இருந்தார்கள். அதுவும் பரம்பரைகளாய்..ஆக அந்த எஸ்டேட் தனியே எஸ்டேட் மட்டும் அல்ல அந்த ஊர் மக்களின் அடையாளம் என்று புரிய.... அவள் முதலில் நிதர்ஷன் மற்றும் நிர்வாகக்குழுவுக்கு செய்த முதலாவது பரிந்துரையே வீ ஆர் தேயிலை என்ற குடும்ப பெயரை ஏலச்சி என்று மாற்றியது தான். அந்த மண்ணுக்கு ஒரு சுவை உண்டு என்று முதன் முதலில் நிதர்ஷனன் சொன்னது போல.. ஏலச்சி மண்ணின் தனிச்சுவை என்பது அவர்களின் டாக்லைன் ஆனது. அந்த ஊரின் நூறு வருஷ பாரம்பரியத்தை சொல்லும் ஒரு ஊடகமாய் அந்த ஊர் தேயிலை தயாரிப்பு கதையை மிகக்கவனமாய் வடிவமைத்து வெற்றி கண்டிருந்தாள் நிரு.
கம்பனியின் இன்ஸ்டாக்ராம் முகப்புத்தகம், ட்விட்டர் ஆகியவற்றை கையாளும் ஊழியர்களோடு சேர்ந்து அவற்றையும் முழுக்க மாற்றி ப்ரோமொஷன்கள் , தடையற்ற தொடர்பாடல் என்று முழுக்க மாற்றியது..
ஏலச்சியில் இருந்து மலைப்பிரதேசம் வரை சின்ன சின்ன டென்ட்கள் மூலம் புதிய ஏலச்சி தேயிலைக்கு... வழக்கமான தேயிலை எஸ்டேட்களில் சுவை பார்க்கவென்றே அதிகாரிகள் இருப்பார்களே..அதை போலவே சிறு கண்ணாடிக்குவளைகளில் சுவை பார்க்கும் இடங்கள் அமைத்து அங்கேயே விரும்பினால் வாங்கிப்போகும் படி ஸ்டால்கள் அமைத்தது..
அரச அலுவலகங்களுக்கும் VIP களுக்கும் இலவச பாக்கேஜ் தேயிலை மட்டும் அல்லாமல் ஏலச்சியில் தயாரிக்கப்படும் கைப்பொருட்கள், ஸ்வீட்கள், உள்ளடங்கலான பாக்கேஜ் அனுப்பி வைத்து வாடிக்கையாளர்களாய் ஆக்க முயன்றது..
புதிய பங்குதாரர்களை கண்டுபிடித்து இணைத்து ஏலச்சியின் எல்லைகளை விரிவு படுத்தியது. வெல்னஸ் ஸ்பா, பிரபல மால்கள் கடைகள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று ஏகப்பட்டவர்கள்...அதற்கான மீட்டிங்குகள் என்று அது மட்டுமே தனி வேலை..
இது அவர்களின் மூன்றாவது பெரிய திறப்பு விழா. அங்கேயே மலிவு விலையில் மொத்தமாய் வாங்கிச்செல்ல வழி வகுத்திருந்ததால் விற்பனையும் நன்றாகவே சூடு பிடித்திருந்தது.
இத்தனையையும் அவள் தனியாளாய் செய்து முடிக்கவில்லை தான். ஆனால் மிக முக்கிய பங்கு அவளதும் என்பது அவளுக்கு பெருமிதம் தரும்.
அங்கே அவளது பாதை ஒன்றும் மலர்ப்பாதையாய் இருக்கவில்லை. சந்தைப்படுத்தலுக்கு ஏகப்பட்ட நிதி தேவைப்பட்டது. எஸ்டேட்டே நஷ்டத்தில் ஓடும் போது விளம்பரத்துக்கு இவ்வளவு தேவையா என்று ஆரம்பத்தில் நிர்வாகக்குழு மறுத்தார்கள். நிதர்ஷனன் ஒரே பிடியாய் அவளுக்கு ஆதரவாய் நின்றதில் அந்த தடையும் நீங்கி போனது, அவள் என்ன வேண்டும் என்று கேட்கிறாளோ தடையே இல்லாமல் அதற்குரிய நிதியை ஒதுக்கியதால் தான் இவ்வளவும் சாத்தியமானது
கம்பனியை விற்கும் முடிவை நிர்வாகக்குழு இப்போது ஏறிக்கொண்டே இருக்கும் விற்பனையை பார்த்து அடுத்த கட்ட முடிவை மேற்கொள்வதை ஒரு வருடத்துக்கு தள்ளி போட்டிருக்கிறார்கள்
லாட்டேவை குடித்தபடி இலக்கின்றி தங்களுடைய கைவண்ணங்களை பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்ணில் அப்போது தான் கறுப்பு ஷர்ட்டோடு தேயிலை சுவை பார்க்கும் பகுதியில் ஷாட் கிளாஸ் ஒன்றை எடுத்து குடித்துப்பார்த்துக்கொண்டிருந்த மனிதர் பட.. இதயத்தில் எங்கோ ஒரு நரம்பு மீட்டப்படும் அதிர்வோடு.. மீண்டும் ஒரு முறை கவனித்து பார்த்தாள், அதுவே தான்.. யோசிக்காமல் எழுந்து அவரை நோக்கி ஓடினாள் நிரு.
நிரு..எங்கேடி ஓடற? என்ற வெண்ணிலாவின் கேள்வி காற்றில் கரைந்து கலைந்தே போனது..
அங்கே நின்று கொண்டிருந்த ஊழியர்கள் அவருக்கு ஒவ்வொரு வகையையும் சுவை பார்க்க வழங்கிக்கொண்டிருக்க குடித்து பார்த்து அவர்களோடு பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தவரிடம் தானும் தன்னை அறிமுகப்படுத்தி கொஞ்சம் பேசியவள் தயங்கியபடியே அவ்வளவு நேரமும் மனதுக்குள் முட்டிக்கொண்டிருந்த “நீங்க போட்டுட்டிருக்கற ஷர்ட் அபராஜிதன் டிசைன் தானே?” என்று கேட்டு விட்டாள்
“அட,,,கண்டுபிடிச்சிட்டீங்களே.” அவருக்கு ஏக சந்தோஷம்
அ ,,,அபய் என் என்று உற்சாகமாய் ஆரம்பித்து விட்டவள் என்னவென்று சொல்வது என்று உதட்டை கடித்து பிரன்ட் என்று முடித்த போது அவளின் முகத்தில் ஒரே சிவப்பு.
ஓஒ... ரொம்ப திறமையான டிசைனர் அவர். என்னோட லேட்டஸ்ட் கலெஷன் எல்லாமே வர்ணா ஹவுஸ்ல இருந்து தான் வாங்கி வச்சிருக்கேன்.. ரொம்ப நல்லா பண்றார் என்று அவர் புகழ என்னமோ அவளையே புகழ்ந்தது போல புளகாங்கித்து நின்றாள் நிரு,
உடை பற்றி பேசியே நெருங்கி விட்டதில் அவருக்கு துளசி டீ டேஸ்ட் ரொம்பவே பிடித்ததாக சொல்லி பெரிய பாக்கேஜ் ஒன்றை வாங்கிக்கொண்டவர் அவரும் தலைநகரில் கார்மெண்ட்ஸ் பாக்டரி வைத்திருப்பதாக சொல்ல அவரை நிதர்ஷனனிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்து வைத்தாள் நிரு.
விடைபெறும் போது மிஸ்டர் அபராஜிதன்... உங்க அபயை திரும்ப பார்த்தேன்னா உங்களை பார்த்ததா சொல்றேன் என்று சிரித்தபடி விடை பெற்று செல்ல
“ஹேய்.. அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போலிருக்கு.. மேலே பேசுவோம்னு சொல்லிட்டு போயிருக்கார், எங்கே இவரை கண்டு பிடிச்ச?” என்று நிதர்ஷன் சிரித்துக்கொண்டே கேட்டதெல்லாம் அவளின் காதில் எங்கே விழுந்தது..
அச்சோ.. சொல்லி விடுவாரோ என்ன நினைப்பான்? சதா அவன் நினைப்பிலேயே திரிகிறேன்..அவன் ஆரம்பத்தில் செய்த டிசைனை கூட ஞாபகம் வச்சிருக்கேன்னு நினைச்சிருவானா? என்று நினைவெல்லாம் அங்கேயே உழன்றது.
மூன்று மாதம் ஆயிடுச்சு.. எப்படி இருக்கிறேன்..என்ன செய்றேன்னு கேட்டானா? குறைந்த பட்சம் இன்ஸ்டாக்ராமில் அவள் பதிவுகளுக்கு லைக் போட்டிருந்தாலாவது பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று மனது சாந்தியாகி இருக்கும். அது கூட இல்லை..குறைந்த பட்சம் பதிவுகளை பார்க்கவாவது செய்வானா என்ன?
அவன் பாட்டுக்கு சாத்தான் லியோன் கெட்டப்பில் இப்போதெல்லாம் அடிக்கடி ரன் வே களில் பங்குபற்றுகிறான். இவள் தான் இன்ஸ்டாக்ராம் யன்னல் வழி எட்டி எட்டி பார்த்து உயிர் குறைந்து கொண்டிருந்தாள்.
சௌமி போன் பண்ணும் போது “ஏன்டி..பாஸ் பாஸ்னு உயிரை விடுவ...அவரோட புது ஆபீசுக்கு போய் பார்த்திருக்கலாம் தானே” என்று லாவகமாய் அவளை அனுப்பி அவனை பற்றி அறிந்து கொள்ள பிட்டை போட்டால் அவளோ
“எங்க கிட்ட சொல்லிக்காம ரிசைன் பண்ணிட்டு கிளம்பினார்ல நான் எதுக்கு போகணும்...நான் இனிமே ஜென்மத்துக்கும் அவரோட முகமே பார்க்க மாட்டேன்” என்று திடீர் சபதம் செய்து நிருவை ஆப் செய்து விட்டாள்..
ப்ச்..அநியாயத்துக்கு ரோஷக்காரியா இருக்காளே..நம்ம ராஜ தந்திரங்கள் எதுவுமே பலிக்கலையே என்று சோகத்தில் நிரு.
இடைவெளி வேண்டும் என்று அவள் கேட்டாள்..அதை அவன் கொடுத்திருக்கிறான் என்பதை மனம் ஏற்க மறுத்தது. ப்ச்
அதையே எண்ணிக்கொண்டிருக்க முடியாமல் யாரோ அவளை அழைக்கவும் நினைவுகளை விலக்கிக்கொண்டு கடமைக்கு திரும்பி விட்டாள்
மூலிகை தைலங்கள், அங்கேயே விரும்பினால் தலைக்கு சின்னதாய் மசாஜ், அதோடு கூட இனிமையான மூலிகை தேநீர் அந்த குளிருக்கு அற்புதமாய் பொருந்திப்போயிருக்க கூட்டம் மதியத்துக்கு பிறகு இன்னும் அள்ளியது.
நான்கு மணிக்கு எல்லாம் முடிந்ததும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எல்லாருமே சேர்ந்து போட்டிங் போவதென்று முடிவாயிற்று.
குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு நின்றவளோடு நிதர்ஷன் வந்து சேர அடுத்ததாய் வந்த வெண்ணிலாவும் தங்களோடு வருவாள் என்று எதிர்பார்த்தவள் அவள் முன்னே போனவர்களோடு இணைந்து கொள்ள நெற்றி சுருக்கினாள்.
காலையில் இருந்தே இதை கவனித்து கொண்டு தான் இருந்தாள். நிதர்ஷனன் அருகில் நின்றால் வெண்ணிலா நிருவை தனியே விட்டு விட்டு விலகிக்கொண்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.
குட்டீஸ் ஜாலியாய் அங்கே ஓடிக்கொண்டிருந்த பிற படகுகளோடு போட்டி போட்டு விளையாடிக்கொண்டிருக்க வெண்ணிலாக்காக்கு என்னாச்சு என்று நிதர்ஷனையே கேட்டாள் நிரு.. மூன்று மாத இணைந்த ஓட்டம் அவர்களை மரியாதை பன்மைகளை கைவிட்டு நண்பர்களாய் நெருக்கியிருந்தது.
கண்டுக்காத விடு.. என்றவனின் பார்வை அடுத்த போட்டில் இருந்தது.
“இல்ல சொல்லுங்க.. காலைலயும் கவனிச்சேன். என்னை தனியா விட்டுட்டு ஓடிட்டாங்க..உங்க கூட கோபமா?”
“என்னை உன் கூட சேர்த்து வைக்கிறாங்களாம் மேடம்” என்று அவன் அமர்த்தலாய் சொல்ல
நிரு அதை எதிர்பார்க்கவில்லை..மீ? என்றாள் அவள் சுட்டு விரலால் அவளை சுட்டி
அவளது ரியாக்ஷனை பார்த்து “அது தான் கண்டுக்காதன்னு சொன்னேன்” என்று அவன் சிரிக்க
“ஏன் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்?”
அவளது குழப்பத்தை கவனித்து “ஒண்ணையும் கவனிக்க மாட்டியா நீ? என்று கேட்டான் நிதர்
“என்ன கவனிக்கணும்?” என்றவளுக்கு கோபமாய் வந்தது. ஆளாளுக்கு இப்படியே சொல்லுங்கடா
“ஐ ஆம் இன் லவ் வித் ஹேர். இது எஸ்டேட்ல எல்லாருக்குமே தெரியும்”
ஆஆஅ.. என்று அவனையே அதிர்வாய் ஏறிட்டாள் நிரு. இவனை விட ஐந்து வயதாவது பெரியவளாய் இருப்பாள். அதுவும் அவள் கணவனை இழந்தவள், ஒரு குழந்தை இருக்கிறது..நிருவின் மனக்கணனியில் டேட்டா ஓட..
அவங்க கிட்ட சொல்லிட்டீங்களா? வேணாம்னு சொன்னாங்களா?” என்று ஆர்வமாய் கேட்டாள்
“செட் ஆகாதாம்.. நீ எனக்கு பொருத்தமா இருப்பன்னு மேடம் நினைக்கிறாங்க” என்று அவன் பல்லை கடித்தான்
“திடீர்னு என்ன?” சற்று நேரம் முன் பேசும் போதும் சாதாரணமாய் இவனை குறிப்பிட்டு பேசினாங்களே
“நேத்து பாப்பாவோட ஸ்கூல்ல அப்பான்னு சொல்லி நானே போய் அட்டென்டன்ஸ் போட்டுட்டு வந்துட்டேன்..அதுதான் மேடமுக்கு செம கான்ட்டு”
“அடப்பாவிகளா? பிராடுகள் சூழ் உலகமடாப்பா..” என்று அவள் வாயில் கைவைத்துக்கொள்ள
“பின்னே உன்னை மாதிரி அம்மாஞ்சிகள் சூழ உலகமா இது” என்று அவன் சிரிக்க
ஹுக்கும் என் ஹிஸ்டரி தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..நாங்க உங்களுக்கு சீனியர் பாஸ் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட நிருவோ வெளியில் அப்பாவியாய் சிரித்து வைத்தாள்.. சற்று நேரத்துக்கெல்லாம் மற்ற படகில் இருந்த சேந்தனின் காமராவில் இருந்து ப்ளாஷ்கள் மின்ன கையை ஆட்டி குட்டீசோடு போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்
வேண்டுமட்டும் விளையாடி முடித்து எல்லாரும் அலுவலக வண்டியிலேயே வீட்டுக்கு திரும்பினர். ஓடிப்போய் வெண்ணிலாவோடு சேர்ந்து கொண்டவள்
வெண்ணிலாக்கா அதென்ன இன்னிக்கு போட்டிங்ல என்னை தனியா நிதர் சார் கூட விட்டுட்டு போயிட்டீங்க...என்று நேராகவே கேட்டுவிட்டாள்
அப்படியெல்லாம் இல்லையே..என்று வெண்ணிலா அவளின் நேரடித்தாக்குதலில் தடுமாற
ஒரு ரகசியம் கிட்ட வாங்களேன் என்று அவளின் அருகில் குனிந்தவள் “வருஷக்கணக்கா ஹார்ட்வொர்க் பண்ணி ஒரு ட்ராகனை பிடிச்சு சொந்தமா வளர்க்கிறேன் ..என் மொத்த எனர்ஜியும் அங்கேயே தான் போகுது. இதுக்கு நடுவுல மத்தவங்களோட மாட்டுக்குட்டி ஆட்டுக்குட்டியை எல்லாம் தத்தெடுக்க எனக்கு எனர்ஜி இல்லை..ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட்..இனிமே என்னை யார் கூடவும் கோர்க்க முயற்சி பண்ண கூடாது” என்று விளையாட்டு போலவே தன் எதிர்ப்பை பதிவு செய்து விட்டாள்
சாரி நிரு..என்று குற்ற உணர்வோடு சொன்ன வெண்ணிலாவுக்கு கண் சிமிட்டி அதை மறக்கடித்து விட்டு
போட்டோஸ் எல்லாம் அழகா வந்துருக்குல்ல என்று வெண்ணிலாவுக்கும் காண்பித்துக்கொண்டே வண்டியில் வைத்தே எஸ்டேட்டின் சமூக வலைத்தள பக்கங்களில் அன்றைய அறிமுக விழாவை பற்றி எழுதி படங்களும் பதிவு செய்து கடைசியில் தங்களுடைய போட்டிங் படங்கள் இரண்டையும் சேர்த்தே பதிவேற்றம் செய்தாள்.
இரண்டில் ஒரு படத்தில் தனியான படகில் அவளும் நிதரும் குட்டீசும் சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தது, விளம்பரங்களில் வரும் குடும்ப படம் போல இருப்பதை சொல்லி ஏலச்சி டீ குடிங்க சந்தோஷமா இருங்க என்று எல்லாரும் கலாய்க்க அவர்களின் வீடு நோக்கிய பயணம் குதூகலமாய் சென்றது.
எல்லாரும் ஒவ்வொருவராய் உதிர்ந்து கொள்ள குட்டீஸ் தூங்கி போயிருந்தனர். நிருவும் குட்டீசும் தான் கடைசியாய் இறங்க வேண்டும்.. இப்போது முற்றாய் கவிந்திருந்த இருளில் யன்னலில் தலை வைத்து வேடிக்கை பார்த்திருந்தவளின் திறந்திருந்த மடிக்கணனியில் யாரோ கமன்ட் செய்திருப்பதாய் ஒரு புதிய அறிவிப்பு முளைத்தது.
பலர் கமன்ட் செய்வார்கள்..மேலோட்டமாய் பார்த்து வன்ம காமன்ட்களை நீக்குவது அவள் வழக்கம். அந்த பழக்கத்தில் திறந்தால் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த அபயின் தனிப்பட்ட கணக்கில் இருந்து ஏலச்சி உத்தியோகபூர்வ பக்கத்துக்கு ஒரு கமன்ட் வந்திருந்தது.
அபயா? இங்கேயா?
மூச்சடைத்து போய்விட்டவள் நடுங்கும் விரல்களோடு அறிவிப்பை திறந்தாள்
“படகு ஓட்டத்துக்கு முன்னாடி துளசி டீ குடிக்கணுமா பின்னாடி குடிக்கணுமா? அதை சொல்லவே இல்லை”
கொஞ்ச நேரம் பிரமை பிடித்தவள் போல அதையே பார்த்திருந்தவளுக்கு அவன் கமன்ட் புரிய சிரிப்பும் வந்து விட்டது. நக்கலை பாரேன்
சாருக்கு அந்த ‘குடும்ப’ படத்தை பார்த்து கான்டாகி இருக்கிறது. அது தான் மூன்று மாதமாய் தியானத்தில் இருந்த சாமியார் கண் திறந்திருக்கிறார்.. ஹா ஹா இது தெரிந்திருந்தால் அந்த ஒரு படத்தோடேயே நிறுத்தி விடாமல் இன்னும் ஏகப்பட்ட படங்களை போட்டிருக்கலாமே என்று குறும்போடு எண்ணிக்கொண்டாலும் அவளுக்குள் சந்தோஷப்படபடப்பும் கட்டுப்படுத்தவே முடியாத சிரிப்பும்
அப்போ சார் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்.
ஜெயிச்சிட்ட மாறா!!!
வீட்டில் இருந்திருந்தால் குத்தாட்டமே போட்டிருப்பாள்.. இங்கே மனதுக்குள் மட்டும் தான் ஆட முடிந்தது.

Last edited by a moderator: