14
“ஏலச்சி”யை ரயில் நெருங்கிக்கொண்டிருப்பதாய் கூகிள் மாப் தெரிவிக்கவும் லேசாய் பதட்டம் நிருவுக்குள் தொற்றிக்கொண்டது. பக்கப்புறமாய் மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்க ரயில் ஒரே வேகத்தில் முன்னேறிப் போய்க்கொண்டிருந்தது நிருவின் மனதை போலவே..
கடந்த நாட்களில் அவளுக்கு நிறைய வாய்ப்புக்கள் வந்தன. வரும் என்று எதிர்பார்த்தாள் தான் ஆனால் இத்தனையை அவளே எதிர்பார்க்கவில்லை. அடீராவின் நிறுவனத்தலைவரின் காரியதரிசி என்ற ஒரு வரி அவளுக்கு நிறைய சிறிய பெரிய லேபிள்களின் கதவுகளுக்கான திறப்பாய் இருந்தது.
மார்க்கட்டிங் மற்றும் விளம்பரப்படுத்தல் பிரிவில் வரும் பதவிகளுக்குத் தான் அவள் விண்ணப்பித்திருந்தாள். அவள் விண்ணப்பிக்காமலே கூட மிகப்பிரபலமான ஒரு மாடலின் தனிப்பட்ட காரியதரிசி வேலை அதுவும் அவருக்கான விளம்பரப்படுத்தல் சமூக வலைத்தளங்களை கையாளுதல் ஆகிய பொறுப்புகள் உள்ளடங்கியதாய் இருக்கும் என்று விவரித்து நிருவை லிங்க்ட் இன் மூலமாய் அவர்களே தொடர்பு கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு திருப்தியே ஏற்படவில்லை..மனக்கிடங்கை தனியே தேடியபோது தான் புரிந்தது. இந்த காமரா வெளிச்சங்கள், ஆடைகள் , ஷோ ரூம்கள் தாண்டிய புது உலகம்.. அதாவது அடீராவில் அவள் பெற்ற தொடர்புகள்,. நட்புகள் , அங்கே செய்த வேலை எதனோடும் தொடர்பில்லாத, அங்கே பெற்ற எதையும் பயன்படுத்த முடியாத ஒரு வேலை அவளுக்கு வேண்டும். அந்த வேலையின் வெற்றிகளின் ஒவ்வொரு செங்கல்லும் அவளே கட்டியதாய் இருக்க வேண்டும். ஏலச்சியின் விளம்பரம் கண்ணில் பட்டதுமே மனம் சொன்னது இது தான் அது என்று.
அவள் நினைத்தது போலவே விண்ணப்பித்து இரண்டாவது நாள் ஏலச்சியின் தற்போதைய நிருவனத்தலைவரே அவளை மொபைலில் அழைத்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பவனதுக்கு பக்கத்தில் இருந்த ஒரு காபி ஷாப்பில் அவரை நேரில் சந்தித்த போது அவளது முடிவு இன்னும் உறுதியாகிவிட்டது.
நிருவனத்தலைவர் அவளை விட மூன்றே வயது பெரியவன் தான். நிதர்ஷனன். கவிழும் நிலையில் இருக்கும் ஒரு கப்பலை காக்க நினைக்கிறான். கிட்டத்தட்ட நூறு வருஷ பாரம்பரியம் கொண்ட தேயிலை தொழிற்சாலையும் எஸ்டேட்டும் அவனது குடும்பத்துக்கு சொந்தமானது. மாற்றங்களோடு மாற மறுத்ததால் வியாபாரம் நொடித்து விற்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.. பிறந்ததில் இருந்து தங்களுக்குள் இழையோடிப்போயிருந்த எஸ்டேட்டின் நினைவுகளை அறுத்தெறிய மனதில்லாமல் தனியே பிசினஸ் செய்து கொண்டிருந்தவன் இப்போது புதிதாய் உள்ளே வந்து புத்துயிர் கொடுக்க பார்க்கிறான்.
நிருவுக்கு ஒரே கேள்வி தான். என்னை என் தேர்ந்தெடுத்தீங்க? என்று ஆர்வமாய் கேட்டாள்..உரிய பின்னணி கூட என்னிடம் இல்லையே..
வந்ததில் இருந்து இயல்பான ஒருமையிலே பேசிக்கொண்டிருந்தவன் “உன் பின்னணியை பார்த்தேன், உயர்மட்டத்தில் சதா காமரா வெளிச்சத்திலேயே இருக்கும் மனிதர்களோடான உன் அனுபவம் உனக்கு வானமே எல்லை என்ற பட்டறிவை கொடுத்திருக்கும். உன்னுடைய முயற்சிகள், எங்களுடைய வழக்கமான எல்லைகளை கடந்து செல்லும் என்ற நம்பிக்கை தான்..” என்று சிரித்தான்..
“எனக்கு இது மீள கிடைக்காத ஒரே வாய்ப்பு, வாய்த்தால் எஸ்டேட் தப்பும் இல்லாவிட்டால் விற்க வேண்டியதுதான். நீ எதற்காய் எங்களை தேர்ந்தெடுத்தாய்?” என்று அவனும் கேட்டான்
கொஞ்சம் யோசித்த நிருவும் “ என்னை நிரூபிக்க.. இதுவரை நான் செய்ததெல்லாம் எனக்கு அமைஞ்சது தான். ஆமாம் என்னை நிரூபிக்கணும்..எனக்கே” என்றாள்
ஒரு நீண்ட கணம் அவளை பார்த்திருந்தவன் “அப்படின்னா சைன் பண்ணிக்கலாம் நிருதி” என்று இலகுவாகவே தன்னுடைய புதிய குழுவுக்குள் அவளையும் இணைத்துக்கொண்டான் நிதர்ஷனன். “ஏலச்சிக்கு” என்று சிரித்தபடி அவன் ஜூஸ் கிளாசை உயர்த்த சிரிப்போடு கிளாசை தானும் உயர்த்தினாள் அவள்..
அந்த நிருதி அவளுக்கு பிடித்திருந்தது. நிரு இல்லை..நித்தி இல்லை.. கடமை இல்லை.. நன்றிக்கடன் இல்லை..காதலும் இல்லை.. வெறுமனே நிருதி..வெறுமனே அவள்..
வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன்
சிரிய பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டுக்கொண்டு இறங்கிக்கொண்டவள் ஸ்டேஷனின் வாசல் பகுதியை நோக்கி நடந்தாள். வெகு சின்ன ஸ்டேஷன், விறைபான உத்தியோகத்தர்கள் இல்லாமல் உறவு முறைகளோடு விடைபெற்றுக்கொண்டிருந்த வெகு சில மக்களும் தங்களுக்கு நடுவில் தோளில் ஒரு பையோடும் சூட்கேசோடும் அலைபாயும் விழிகளோடும் நடந்து கொண்டிருந்தவளை ஒரு கணம் பார்த்து மீண்டு கொண்டிருக்க பொதுப்படையான புன்னகையோடேயே வெளியே வந்தவள் வாசலிலேயே வெள்ளை கார் அவளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருந்த இலக்கத்தோடு நிறுத்தப்பட்டிருப்பதை அடையாளம் கண்டு கொண்டு அந்த காரை நோக்கி நடந்தாள்.
அவளை கண்டதுமே கார் கதவு திறக்க நிதர்ஷனன் புன்னைகையோடு தன் முழு உயரத்துக்கும் நிமிர ஆச்சர்யப்புன்னகையோடேயே அவனை நெருங்கினாள் நிரு.
வெல்கம் மேடம்.
“தாங்க் யூ சார்..டிரைவரை அனுப்புவீங்கன்னு நினைச்சேன்..” என்றபடி சூட்கேஸ்களை பின்னால் அடுக்கி விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
சின்னதாய் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை..
இவளும் வெளியே தெரிந்த காட்சிகளில் மூழ்கிப்போனாள். அது மலைப்பிரதேசமில்லை.. அதற்காக சம தரையும் இல்லை. இரண்டுக்கும் இடையில் மழை வீழ்ச்சி அதிகமாய் சிவப்பு மண் பரந்து காணப்பட்ட இடம் சின்ன சின்னதாய் வீடுகளோடு இருந்ததே தவிர மாடி வீடுகளோ பெரிய அமைப்புக்களோ தென்படவில்லை.
“இங்கே கோவில்களை தவிர பெரிதாய் வேறேதும் இருக்காது. ஒரே ஒரு ஆறு மட்டும் இருக்கும். வார இறுதிகளில் வேணும்னா நீ ஒரு பஸ் எடுத்தேன்னா ஹில் ஸ்டேஷனுக்கு இரண்டே மணி நேரத்தில் போய்டலாம். நல்லா பொழுது போகும்.. நம்மூர் வழக்கமான கிராமம் தான்” என்றவன் அதன் பின்னர் தொழிற்சாலையை எழுபது வருஷங்களின் முன்னர் எப்படி ஆரம்பித்தார்கள். எப்படி தொடர்ந்தது..என்று சொல்லிக்கொண்டே வந்தான்.
“இந்த மண்ணுக்கு ஒரு டேஸ்ட் இருக்குன்னு தாத்தா சொல்வார். அது தான் ஏலச்சி தேயிலைன்னா இன்னும் ஒரு பேர் இருக்கத்தான் செய்யுது. காலமாற்றத்துல பொருள் தரம் மட்டும் போதாது. வடிவங்கள் மாறிட்டே இருக்கணும்.. இல்லைன்னா மதிப்பிழந்து போய்டும்னு தாத்தாக்கு புரியல. அப்படியெல்லாம் பண்ணுறது தரம் குறைந்தால் மட்டும் தான்னு சொல்லி திமிரா அப்படியே விற்பனை பண்ணினார். வியாபாரம் விழுந்து போச்சு.”
“பிறகு வந்த அப்பாவுக்கு அதெல்லாம் புரிஞ்சது. ஆனால் எப்படி சரி பண்றதுன்னு தெரியல.. திடீர்னு வித்துருவோம்னு சொல்றாங்க.. ஷாக் ஆகிட்டேன். எங்க குடும்பத்தோட அடையாளம் இன்னொருத்தன்கிட்ட போறதா இருங்க..நானே வர்றேன்.. என்னாலையும் முடியலைன்னா கொடுத்துரலாம்னு சொல்லி தான் உள்ளே வந்தேன்.. எனக்கும் இருக்கறது இந்த ஒரு வாய்ப்பு மட்டும் தான் நிருதி” என்றவன் “எஸ்டேட் கட்டமைப்புலையே ஏகப்பட்ட மாற்றங்கள் பண்ணிருக்கேன்.. புதுசாவும் சிலது சேர்த்துருக்கேன்.நீயும் அதுல ஒண்ணு தான்.. நம்ம எல்லாரும் சேர்ந்து இந்த தேரை இழுத்துத்தான் பார்ப்போமே..” அவன் சொல்ல சொல்ல நிருதியின் கண்கள் அவனையும் தாண்டி எங்கோ பயணப்பட்டிருந்தன.
முதல் தடவையாய் அவளுக்கு சொல்லப்படுகிறது. அவளுக்கே அவளுக்காய்..இத்தனை நாளும் யாரும் யாருக்கோ சொல்வதை குறிப்பு மட்டும் எடுப்பவளுக்கு இன்றைக்கு இந்த தகவல் உனக்குத்தான் என்பதை சட்டென்று கிரகித்து கொள்ள முடியவில்லை..
யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்.....சுடர் போல் தெளிவாய்
கார் பிரதான வீதியில் இருந்து கிளை பிரிந்து, மெலிதான, இருபுறமும் மரங்கள் அடர்ந்த பாதை நெடுகிலும் ஒரு பத்து நிமிடங்கள் மேலும் கீழும் ஏறி இறங்கிய தரையில் பயணித்து இன்னொரு தடவை கிளை பிரிந்து வீ ஆர் எஸ்டேட் என்றிருந்த போர்டை தாண்டி மேலேறிக்கொண்டே போன சரிவில் ஏற ஆரம்பித்தது. வீதியின் இருபுறமும் சின்னதான மலைப்பகுதி போன்றிருந்த சரிவு முழுதுமே தேயிலை பசுமையாய் படர்ந்திருக்க எல்லாவற்றையும் விழிகளில் உள்வாங்கியபடியே வந்து கொண்டிருந்தவளை
“இதோ உன்னோட வீடு வந்திருச்சு” என்ற நிதர்ஷனனின் குரல் கலைத்தது. வீட்டு வாசலில் காரை நிறுத்தி, பக்கத்திலேயே ஏலச்சி வீ ஆர் டீ எஸ்டேட் என்ற பிரமாண்டமான போர்டோடு இருந்த பாக்டரியின் ஒரு எல்லை மதிலோடு இருந்த வீட்டை காட்டினான் அவன்.
“சார்.. இது தானே பாக்டரி?” அவள் கண்களை அங்கிருந்து எடுக்காமலே வினவ
“ஆமாம்.. நீ தனியா வர்றதால தான் நான் உனக்கு இந்த வீட்டை தேர்ந்தெடுத்தேன் ஏன்னா பாக்டரி வாசல்ல செக்கியூரிட்டி கார்ட்ஸ் இருபத்து நாலு மணி நேரமும் இருப்பாங்க.. சின்ன வீடு, சுத்தி பெரிய நிலம் இருக்குன்னு எல்லாம் யோசிக்காதே.. இதை விட பாதுகாப்பான இடம் இங்கே வேற இல்லை..”
என்றபடி அவன் இறங்கிக்கொள்ள செக்கியூரிட்டி கார்ட்ஸ் அவனைக்கண்டு மெல்ல நெருங்கினார்கள்.
“இது தான் நிருதி மேடம் நம்ம பாக்டரியில் புதுசா வேலைக்கு வந்துருக்காங்க.. இந்த வீட்டில் தான் தங்கப்போறாங்க” என்று அறிமுகப்படுத்தியவன் பிறகு அவள் தன் சூட்கேஸ்களை இறக்க அதில் ஒன்றை தானே வாங்கிக்கொண்ட படி கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
யாரோ பழைய குடியிருப்பாளர்கள் போகன் வில்லா மரங்களில் ஆர்வம் கொண்டவர்கள் போலும். வீட்டை சுற்றி போகன் வில்லா மரங்கள் மஞ்சள், பிங்க் வெள்ளை, வயலெட் என்று இவள் இதுவரை காணாத வர்ணங்களில் அடர்ந்திருந்தன. சின்ன வீடு தான்.. பின்புறமும் பாக்டரி மதிலே இருந்ததை கண்ட அவளுக்குள் பெருத்த நிம்மதி..
வீட்டு போர்டிக்கோவில் நின்று பார்க்க பக்கத்து வீட்டில் ஆர்வமாய் எட்டிப்பார்த்த குழந்தைகள் வெட்கமாய் கையசைப்பதை கண்டு சிரித்தவள் தானும் பதிலுக்கு கையசைத்தாள்.
“வீட்டில் எல்லாம் தயார் பண்ணித்தான் இருக்கு. மளிகை சாமான்கள் வாங்கும் கடை பாக்டரிக்கு அந்தப்பக்கமாய் நீ கொஞ்சம் இறங்கி கீழே போனா இருக்கும். வெளியே போகணும்னா செக்கியூரிடிகளிடம் கேள். எதுவானாலும் வழி சொல்வார்கள். அப்புறம் வேறென்ன? நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பாக்டரில பார்ப்போம்” என்றபடி தேவையற்ற பேச்சுக்களற்று நிதர்ஷனன் விடைபெற்றுப்போய் விட கதவை பூட்ட வந்தவள் செக்கியூரிட்டிகளிடமும் மளிகைக்கடையை விசாரித்து சிநேகமாகி விட்டாள்.
“இங்கே பயமே இல்லை மேடம். சுத்தி எல்லாருமே ஊர்க்காரங்க சொந்தக்காரங்க தான். எந்த நேரமும் எங்களில் ரெண்டு பேர் இங்கே இருப்போம்” என்று இலகுவாய் சொன்னவர்களிடம் நன்றியாய் புன்னகைத்து விட்டு உள்ளே வந்தவளுக்கு மனதுக்குள் இன்னும் பயம் இருக்கத்தான் செய்தது.
மேடம் மேடம் என்று அவர்கள் அழைப்பதை கேட்டு லேசாய் சிரிப்பும் வந்தது. நம்மை பார்க்க அப்படியா தோணுது? அங்கேன்னா பாப்பா..குழந்தைன்னு ஏலம் விடுவானுங்களே....
நன்றாய் பழைய வீடு தான். போர்டிக்கோ தாண்டி உள்ளே போனால் சின்ன ஹால், அடுத்து கிட்சன். கொஞ்சம் பெரிய படுக்கையறை அதோடு கூடிய பாத்ரூம் அவ்வளவே தான். அளவான தளபாடங்கள்.. ஹாலில் ஒரு சோபா கிச்சனில் ப்ரிட்ஜ் மைக்ரோவேவ் இருந்தது
என்னென்னவோ சமாதானங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இங்கே வந்திருந்தாலும்.. அவளுக்கு உரித்தாய் இருந்த உறவுகளை எல்லாம் விட்டு தூரம் வந்ததோ என்னமோ தனிமை பூதாகரமாய் தெரிந்தது.
நினைத்துப்பார்க்கும் போது அப்பாவுக்கு பின் தன்னுடைய பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து நிருதி உலகத்தை தனியாக சமாளிக்கும் முதல் நாள் இது தான். இந்த நாள் என்றைக்கோ வந்திருக்க வேண்டும். இது ரொம்ப லேட். ஆனால் இப்போதாவது உணர்வு வந்ததே..
அபய் இப்போது என்ன செய்வான்..என்றொரு நினைவு குறுக்கால் ஓட
ப்ச்..நிறுத்து..அந்த அமுசடக்கி ஆள் மயக்கி பிரவுன் ட்ராகன் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். அவன் அங்கே என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இந்த உறவு வேண்டுமானால் இனிமேல் அபய் வியர்வை சிந்தாமல் முடியாது..என்று அதை இழுத்துப்பிடித்து கட்டி வைத்து விட்டாள்
தன் நினைவுகள் தூரம் போவதை நிறுத்த தனக்கு பிடித்த இசைக்கோர்வையை சத்தமாய் ஒலிக்க விட்டவள் சூட்கேஸ்களை திறந்து உடைகளை அறைக்குள் இருந்த கப்போர்டில் அடுக்கி, அந்த வீட்டை தனக்கேற்றது போல மாற்ற ஆரம்பித்தாள்
எல்லாம் திருப்தியாய் அடுக்கி முடித்து விட்டு சூட்கேசில் இருந்த கடைசி இரண்டு பிரேம்களை வெளியே எடுத்தவள் இரண்டில் அப்பாவும் அவளும் இருக்கும் போட்டோவை ஹாலில் இருந்த டேபிளில் சாய்த்து வைத்தாள்
மற்றப்படத்தை கையில் வைத்து கண்கள் வெகு நேரம் பார்த்திருந்தன. அன்றைக்கு காராதீவில் அவனோடு செல்பி எடுக்க முயன்றபோது அவன் எதற்கோ திரும்ப கலங்களாகி விட்டிருந்தது அந்த புகைப்படம்.. அவளின் உருவம் மட்டும் பெரிய சிரிப்போடு கண்களில் அத்தனை மகிழ்வோடு தெரிய பக்கத்தில் இருந்தவனோ தெளிவே இல்லாமல் வர்ணங்களின் கலங்கல் புதிராய் அந்த புகைப்படத்தில் விழுத்திருந்தான். முகம் தெரிந்தது ஆனால் தெரியவில்லை என்பது போல யாரேனும் பார்த்தால் அது போட்டோ அல்ல ஓவியம் என்றே சொல்லும் அளவுக்கு அந்த புகைப்படப்பிழை கலையுருப்பெற்றிருந்தது. ஏன் அதை இன்னும் பத்திரமாய் அதுவும் பெரிதாய் பிரிண்ட் செய்து பிரேம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை..
பல இடங்களில் மாற்றி மாற்றி வைத்து பார்த்து திருப்தியில்லாமல் அறையில் யன்னலின் மேற்பகுதியில் இருந்த ஆணியிலே அதை மாட்டி வைத்தவள் கொஞ்சம் பின்னே வந்து அதை ஆராய்ந்து கொண்டிருக்க அக்கா அக்கா யாராவது இருக்கீங்களா? என்று ஒரு பெண் குரல் கேட்டது.
வர்றேன் என்றபடி வெளியே வந்தால், ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணியும் பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமிகளும் நின்று கொண்டிருந்தனர்.
தன்னை சாதனா என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர் தாங்கள் தான் பக்கத்து வீட்டில் குடியிருப்பதாகவும் தனது கணவரும் தானும் பாக்டரியிலே பணி புரிவதாக சொல்லி மகள்களையும் நிருவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சாரண்யா, ஷாமிலா என்று பெயர் கொண்ட இருவரும் துருதுரு விழிகளோடு அவளையே ஆர்வமாய் பார்த்திருக்க பெரிய புன்னகையோடு அவர்களை உள்ளே அழைத்தாள் நிரு.
சாதனா அவளுக்கு இரவு உணவு எடுத்து வந்திருந்தார்.
“புதுசா வந்து வீடு அடுக்கற வேலையில பிசியா இருப்பீங்கன்னு இரவு சாப்பாடு எடுத்து வந்துட்டேன்” என்று அவர் எடுத்து மேசையில் வைத்த பாத்திரத்தின் அளவை பார்த்து மலைத்தவள்
“நீன்னே சொல்லுங்க,,,ஆமாம்..எனக்கு ஒரு வாரத்துக்கே சாப்பாடு கொண்டு வந்துட்டீங்க போலிருக்கே” என்று சிரிக்க
கூடச்சேர்ந்து சிரித்தவர் “பரவாயில்லை..பிரிட்ஜ் தான் இருக்கே..வச்சு சாப்பிடு” என்று விட்டார்.
கொஞ்ச நேரம் சாதனாவிடம் பேசியபோது அவர்களின் அப்பா அம்மாவும் பாக்டரியில் தான் பணிபுரிந்ததாக சொல்ல அந்த தகவல் அவளை ஆச்சர்யப்படுத்தியது. அப்போ எஸ்டேட்டின் உரிமை மட்டும் பாரம்பரியமாய் கைமாறவில்லை. அங்கே பணி புரிபவர்களும் பரம்பரைகளாய் தொடர்கிறார்கள். அப்படியானால் நிர்வாகத்தோடு எவ்வளவு இறுக்கமான உறவு இருக்க வேண்டும்.. இதை விற்க வேண்டி நேர்வது கொடுமையே. நிதர்ஷனன் சார் போராடுவதன் நியாயம் அவளுக்கு இன்னும் தெளிவானது.
அம்மாவும் பிள்ளைகளும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவளோடு கூட இருந்தனர். அதற்குள் அவளுக்கு கிட்டத்தட்ட அங்கே வாழ்வதற்கு தேவையான முழு அறிமுகமும் கொடுத்து என்ன தேவை என்றாலும் மதில் வழியாய் ஒரு குரல் கொடுக்கும் படி அவர்கள் சொல்லி விடை பெற்ற போது இருள் கவிந்து விட்டிருந்தது.
பழைய பயங்கள், இருள் எல்லாம் இப்போதும் மேற்புறத்துக்கு வந்து விடுவேன் என்று மன விளிம்பு வழி எக்கிக்கொண்டிருக்க எல்லா விளக்குகளையும் ஒளிர விட்டு விட்டு சோபாவிலேயே சம்மணமிட்டபடி கண்ணை மூடி தியான நிலையில் அமர்ந்து விட்டவள் தனக்கே தைரியம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தாள்.
கடந்தது..கடந்து போனதே.. வாழ்க்கை இன்னும் ஏகப்பட்டது மிச்சமிருக்க அங்கேயே நின்று விட முடியுமா?
எந்திரக்கப்பலில் ஒரு காலை வைத்தாயிற்று..இனி திரும்பிப்பார்க்க முடியாது
இரண்டு எல்லைகளில் பாக்டரி..ஒருபக்கம் சாதனாக்கா வீடு, முன்னால் வாசலிலேயே செக்கியூரிட்டிகள், இதை விட என்ன பாதுகாப்பு வேண்டும்?
இரண்டு பெரிய மூச்சுக்களோடு எழுந்து கொண்டவள் காவ்யாவுக்கும் சம்யு மிஸ்சுக்கும் அழைத்து பத்திரமாய் வந்து சேர்ந்ததை சொல்லி வீட்டையும் வீடியோ காலில் காண்பித்து பெருமை அடித்து விட்டு, மிஸ்ட் கால் வைத்திருந்த சௌமிக்கும் போன் பேசி எல்லாம் நன்றாய் இருப்பதை உறுதி செய்து விட்டு சாதனா கொண்டு வந்திருந்த டின்னரை எடுத்து பார்த்தாள்
தோசை கொண்டு வந்திருந்தார். சாம்பார் சட்னி இரண்டும் தனித்தனியே இருந்தது. குறைந்தது பத்து தோசைகளாவது இருக்கும். இரண்டை மட்டும் எடுத்து சாம்பார் சட்னி பரிமாறிக்கொண்டு வந்தவள் திறந்திருந்த யன்னலோரம் கதிரையை இழுத்து போட்டு விட்டு அதற்குள் கால்களை மடித்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.. நிலவும் அவள் நலன் விசாரிப்பது போல யன்னலுக்கு வெளியே வந்து நின்றது. அங்கெல்லாம் அவள் கதவை திறந்து நிலவை ரசித்தது கடைசியாய் எப்போ என்றே அவளுக்கு நினைவில்லை.. இப்போ தான் உனக்கு என் ஞாபகம் வந்ததா என்று அது அவளை கேட்பதாகப்பட்டது..
எங்கோ மழை பெய்து கொண்டிருக்க வேண்டும்..கருமேகம் நிலவை அடிக்கடி மூடித்திறந்து கொண்டிருந்தது.
அவன் என்னை நினைத்துக்கொண்டிருப்பானா? கோபமாய் இருப்பானா? என் விலகலுக்கு காரணமாவது புரிந்திருக்குமா?
எங்கோ தொலைவில் மின்னல் ஒன்று மின்னிப்போனது..

Last edited by a moderator: