- Messages
- 1,040
- Reaction score
- 2,977
- Points
- 113
மனத்துகிலில் உன் நினைவிழைகள் - 1
மெல்லிய இரைச்சல் சத்தத்தோடு அந்த காலேஜ் பஸ் தலைநகருக்குள் பயணித்துக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஜனங்கள் வாகனங்களில் அவசரமாய் எதற்கோ போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்க ஐந்தாவது சீட்டில் யன்னலோரம் இருந்தவள் கண்ணாடியில் தலைவைத்து நல்ல தூக்கத்தில் இருந்தாள் வழக்கம் போலவே!
“பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…இல்லை எனினும்…நாடகம் ஓடும்…”
மெல்ல மெல்ல காதுகளுக்குள் அதிகரித்துக்கொண்டே போன பீட் சத்தத்தில் சோம்பலாய் கண் விழித்த நிருதி இன்னும் நெரிசல் குறையாத பஸ்ஸில் பிறர் கண் மறைவில் உடலை நெளிக்க எத்தனித்தபடி பாதையில் விழிகளை பதித்து விட்டு பதறியடித்து எழுந்து நின்றாள்.
அச்சோ அவள் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இருந்து இன்னுமே இரண்டு ஸ்டாப்கள் கடந்து போயிருந்தன!
பெல்லை அவசரமாய் இழுத்து விட்டு நின்றவர்கள் மேல் மோதுவதை கூட பொருட்படுத்தாமல் எக்ஸ்கியூஸ்மீ என்று மந்திரமாய் ஜபித்தபடி அடித்து பிடித்து டிரைவருக்கு அருகில் வந்து நின்றவளை கண்ணாடியில் பார்த்த டிரைவர் “என்ன வழக்கம் போல ஸ்டாப்பை விட்டுட்டியா?” என்று முறைக்க
பதிலுக்கு பெரியதொரு அசட்டு சிரிப்பை அள்ளி வழங்கினாள் நிரு.
“உனக்கு இதே வேலையா போச்சு! இறங்கும்மா!!” என்று கடிந்தபடி ஓரமாய் பஸ்ஸை பெரிய மனது வைத்து நிறுத்தியவருக்கு “தாங்க்ஸ் அண்ணா” என்று குதூகலமாய் பதிலளித்துக்கொண்டு அவள் குதித்திறங்க..
“ரோட்டுலயாவது கனவு காணாம ஒழுங்கா வீடு போய் சேரு” என்று பின்னாலேயே அவர் குரலும் கூடவே சக காலேஜ் வாசிகளின் சிரிப்பொலியும் கேட்க முகச்சிவப்பு ஏறிக்கொண்டாலும் நடை பாதையில் தாவி இறங்கியவளை அதொன்றும் அவ்வளவாய் பாதிக்கவில்லை. இதெல்லாம் பார்த்தா முடியுமா?
அவளது நியாயம் அவளுக்கு..
அவள் வேலை பார்க்கும் கம்பனியில் பெரிய தலைகள் எல்லாம் நாளை பாரிஸ் கிளம்ப இருந்ததால் நேற்று அவளுக்கு வீடு வரவே தாமதமாகி விட்டிருந்தது. “எல்லாம் அந்த இரண்டு...” என்று மனதுக்குள் திட்ட ஆரம்பித்தவள் சிறிய பெரிய மூச்சுக்களுடன் நல்ல நாளில் அந்த பிராணிகளை பற்றி நினைத்து ப்ளட் பிரஷரை ஏற்றி கொள்ள வேண்டுமா என்ன என்று அவர்களை டீலில் விட்டுவிட்டு ஜாக்கிங் மோடிலேயே தான் போகவேண்டிய இடத்துக்கு ஓட ஆரம்பித்தாள் நிரு.
இருபதுகளின் ஆரம்பத்துக்கே உரிய குறும்பு முகமும் அதில் நீங்காமல் நிறைந்திருக்கும் சிரிப்பும், இடைதாண்டி நீண்ட முடி பட்டர்ப்ளை லேயரிங் செய்யப்பட்டு எல்லா பக்கமும் பறந்து கொண்டிருக்க முன்புறமும் அது முழு நெற்றியையும் மறைத்து விழுந்திருக்க நீலப்பச்சை ப்ரின்டட் பளாசோ, டாப் செட், முதுகில் காலேஜ் பை என தங்களை தாண்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நிருவை தெருவில் அத்தனை கண்களும் ஒரு தடவை பார்த்துத்தான் மீண்டிருக்கும். அவளுக்கு தான் அந்த பிரக்ஞையே இல்லை. என்றைக்கு இருந்தது என்று அவளை தெரிந்தவர்கள் கேட்கக்கூடும்.
இப்படி நிரு ஒரு கணக்கில் ஓடிக்கொண்டிருக்க இன்றைக்கு உன்னை விட்டேனா பார் என்று போன் வைப்ரேட் செய்யவும் வேகத்தை குறைத்தபடி அதை கையில் எடுத்துப்பார்த்தாள். “RW காலிங்” என்று ஸ்க்ரீன் பல்லிளித்துக்கொண்டிருந்தது. ‘முடிலடா’ நிருவின் விழிகள் ஒருதடவை மீண்டும் தலைக்குள்ளே போக முயன்று வெளி வந்தன.
‘என்னை லீவு நாளில் கூட நிம்மதியா இருக்க விடமாட்டாய்ங்களா அய்யோடா’
மனதுக்குள் திட்டிக்கொண்டே போனை எடுத்து காதில் வைத்தவளின் குரலில் எங்கிருந்தோ அத்தனை பவ்வியம் வந்து தொற்றிக்கொண்டது.
“ஹலோ”
“மாணிக்கம்!!! எங்க போய் தொலைஞ்ச நீ?” கரகரப்பான ஆண்குரல் கடுகடுவென பல்லைக்கடித்தது மறுமுனையில்
என்னை பெற்ற பாவத்துக்கு பாவம் செத்துப்போயும் அந்த மனுஷன் நிம்மதியாய் இருக்க முடிகிறதா? உதட்டோரம் மீண்டும் பூத்த முறுவலோடு சாரிப்பா என்று தந்தையிடம் மானசீகமாய் கேட்டுக்கொண்டவள் “இன்னிக்கு நான் லீவு சார்” இன்று தயக்கமாய் சொல்லி முடிக்கமுன்னர் லைன் கீ என்றது.
கட் பண்ணிட்டான். பை என்றாவது சொல்லும் நாகரீகம் இருக்கா? காட்டுமிராண்டி காட்டுமுராண்டி..என்று அவனை திட்டத்தான் முடிந்தது அவளுக்கு
வேலை நாளில் தான் டென்ஷன் என்றால் லீவை கூட என்ஜாய் பண்ண விடாமல் போனை போட்டு டென்ஷன் பண்னினால் நா எங்கே தான்டா போறது? நொந்து கொண்டே மீதி ஓட்டத்தை தொடர முயன்றவளை விதி எங்கே விட்டது மீண்டும் போன் வைப்ரேட்டியது.
இம்முறை அலைபேசியில் LD calling என்று காண்பிக்க தலையில் அடித்துக்கொள்ளாத குறையாய் எடுத்து ஹலோ என்றாள் நிரு. இம்முறை பவ்வியம் கொஞ்சம் குறைந்து இயல்புத்தன்மை மீண்டிருந்தது.
“பாப்ஸ், உன்னோட லீவ் டே வை ஸ்பாயில் பண்றதுக்கு சாரி. ப்ரஷாவுக்கு லாஜிஸ்டிக்ஸ் நீயா பார்த்த?” இவனின் குரலில் குறும்புச்சிரிப்பு
இந்தா வந்துட்டாங்கல்ல...
“ஆமாம். நான் தான் சார். ப்ரஷாவுக்கு உங்களை விட ஒரு நாள் முன்னே திரும்பி வர்றது போலத்தான் புக் செஞ்சோம்” என்று விறைப்பாய் பதில் சொன்னாள் நிரு.
“அதை சேஞ் பண்ணனுமே பாப்ஸ். அவளுக்கு ஒரு நாள் தான் பாரிசில் ஸ்டே பண்ண முடியுமாம்”
“எந்த நாள்?” அனாவசிய பேச்சின்றி அவள் நேரடியாய் கேட்க
“முதல் நாள்” என்றான் அவனும்.
“சரி அரேஞ்மென்ட்சை மாத்தும்படி சயந்தன் சார் கிட்ட இன்பார்ம் பண்ணிடறேன்”
“லவ் யூ பாப்ஸ்” சிரிப்போடு எதிர் முனை மௌனமானது.
ஷ்... அந்த காதை ஒரு தடவை தேய்த்து விட்டுக்கொண்டாள் நிரு. என்னமோ காதில் கேட்டதை அழிப்பது போல..
இரண்டும் இரண்டு விதமான இம்சைகள். என்ன செய்ய வாங்கி வந்த வரம் அப்படி.. இனி சயந்தனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி புரியவைத்து...
நினைக்கும் போதே அப்படியே போனை கீழே போட்டு உடைக்கலாமா என்று புசு புசுவென வந்தது. ம்க்கும் இன்னும் இன்ஸ்டால்மென்ட் கூட கட்டி முடிக்கலை உடைக்கிறாளாம் என மனம் ஒரு பக்கத்தால் நக்கல் செய்து கொண்டு போக ஐபோன் x ஐ மானசீகமாய் தொட்டு கும்பிட்டவள் நடந்தபடியே சயந்தனை கான்டாக்ட் லிஸ்டில் தேட ஆரம்பித்தாள்.
ஒரு முடிவு எடுத்து தொலைய மாட்டார்கள்.. இந்த ப்ரஷாவுக்கு மட்டும் இறுதி முடிவு சொல்ல இரண்டு நாள் எடுத்தது. இனி சயந்தனிடம் சொன்னால் அவர் என்னமோ இவளில் வள்ளென்று விழுவார். வயதான மனுஷன் சட்டென்று கிரகிக்கவும் மாட்டார்.
தேவந்தி ப்வனத்தின் பிரமாண்ட கதவுகளை இவளை கண்டதும் மலர்வாய் திறந்து விட்ட செந்தூர் அண்ணாவுக்கு புன்னகைத்து விட்டு உள்ளே போனபோதும் நிருவுக்கு சயந்தனுடனான கால் முடிந்திருக்கவில்லை.
“நிரூ ஏன்டி இவ்ளோ லேட்” என்று சிரிப்போடு ஓடி வந்த காவ்யாவிடம் வாயில் கை வைத்து சைகை செய்தவள் “ அங்கிள் கன்பியூஸ் ஆகிக்காதிங்க.. நான் ஒண்ணு பண்றேன் எல்லா டீட்டெயிலையும் டைப் பண்ணி வாட்சாப் பண்றேன் பாலோ பண்ணிக்கோங்க” எனவும் மறுமுனை பெருத்த ஆசுவாசத்துடன் “சீக்கிரம் அனுப்பும்மா” என்பதோடு மௌனமானது
“சாரிடி ஒரு நிமிஷம்” என்று விட்டு யாருக்கு எந்த நாட்கள் ப்ளைட் டிக்கட், ஹோட்டல் ரூம் தேவை, அங்கே அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் என்று தனித்தனியாக டைப் பண்ணி வாட்சப் செய்து விட்டு அவளையே பார்த்திருந்த காவ்யாவிடம் “ஆபீஸ்ல விட மாட்டேங்குறாங்கடி நேத்தும் வீட்டுக்கு போக லேட்.. அப்புறம் தான் கிட்டத்தட்ட நைட் முழுக்க தூங்காமலே இருந்து எக்சாமுக்கு படிச்சேன் அதுனால பஸ்ல தூங்கி நடந்து வர்றேன்” என்று நீளமாய் அலுத்து உதட்டை கடித்து சிரித்தாள்.
“நீ சொல்லும் போதே எனக்கு பிரஷர் ஏறுது.. எப்படித்தான் சிரிக்கிறியோ தெர்ல.. லீவ் நாள்ல போனை ஆப் பண்ணி வையேண்டி” என்று காவ்யா கேட்க
போனை ஆப் பண்ணக்கூடாது என்ற நிபந்தனையோடேயே தானே இந்த லீவே வழங்கப்பட்டது என்ற நினைப்பில் சிரிப்பாய் வந்தது அவளுக்கு
அவள் சிரிப்பை பார்த்து விட்டு “என்னமோ Adira designs ஐ தாங்கற தூணே நீதான்ற போலவே பன்றடி” என்று நொடித்துக்கொண்ட படி அவளது கையை பிடித்து இழுத்தபடி செம்பருத்தி மரக்கூடல்களுக்குள்ளே தெரிந்த கட்டடங்களை நோக்கி அவளை இழுத்துச்செல்ல ஆரம்பித்தாள் காவ்யா..
“ம்க்கும்.. நல்ல தூண் தான் போ..நான்லாம் அங்கே கராம்பு மாதிரிடி. சமையலுக்கு கண்டிப்பா தேவை ஆனா சாப்பிடும்போது தூக்கி போட்டுட்டு தான் சாப்பிடணும்” என்று நிருதி சொல்லவும்
ஒருநிமிஷம் அவளை ஏறெடுத்துப்பார்த்த காவ்யாவின் கண்களில் சின்னதாய் ஒரு அனுதாபம் மின்னி பிறகு சுவடின்றி மறைந்து பிறகு குறும்புச்சிரிப்பு உதடுகளை நிரப்பிக்கொண்டது.
“என்னடி சிரிக்கிற?”
“உனக்கு திறமை பத்தலை நிரூ. கராம்பா இருந்தா தூக்கி போடத்தான் செய்வாங்க.. இதே கராம்பு கரம் மசாலாவா இருந்தா சாப்பிட்டுத்தானே ஆகணும்?” என்று காவ்யா இமைகளை ஏற்றி இறக்க வெடித்து சிரித்தாள் நிரு.
“கராம்பாய் இராதே, கரம் மசாலாவாய் இரு.. அட அட மோட்டிவேஷன் கோட்னா இப்படித்தான் இருக்கணும்”
ரொம்ப புகழாதடி..என்று சிலிர்த்துக்கொண்ட காவ்யா “ஆமா இப்பத்தான் உனக்கு டிகிரி முடிஞ்சதேடி.. இன்னும் அடிராவுக்குள்ளே இருக்கணும்னு உனக்கு என்ன அவசியம்.. பேசாம ஒரு வேலை தேடிக்கிட்டு வெளியே வந்திடேன். எங்களை மாதிரி இல்லையே நீ.. உனக்கு கிட்டத்தட்ட நாலு வருஷமாவது குறைஞ்சது வேலை செய்த அனுபவம் இருக்கும்ல..” என்று கேட்டாள்
நிரு அந்தக்கேள்வியை எதிர்கொள்ள பயந்தவள் போல சின்னத்தவிப்புடன் விழிகள் அலைபாய “முடியும் தான்..” என்று இழுத்தவள் ஆனா பிறந்ததுல இருந்து அதுவே உலகமா அங்கேயே பழகிட்டேன்டி. எனக்கு அதை விட்டா வெளியே என்ன இருக்கு?” என்று கேட்டாள் அவளையே கேட்டுக்கொள்வதைப்போல.
ஒருகணம் அவளையே ஏறெடுத்த காவ்யாவும் பிறகு “ஏன் நாங்கல்லாம் இல்லையா? உனக்குன்னு ஒரு நாள் தோணும்வரை அங்கேயே கிட” என்று பொய்க்கோபமாய் அடித்த காவ்யா அவளை இப்போது செம்பருத்தி மரங்களின் முடிவில் அழகாய் இளம்பச்சை வர்ணத்தோடு நின்றிருந்த இரண்டு மாடி கட்டிடத்தை நோக்கி இழுத்துப்போனாள். அவர்கள் வளாகத்துக்குள் வர வெளியே நின்றிருந்த இரண்டு பதின் வயதுப்பெண்கள் உற்சாகமாய் அவர்களை கண்டு கையசைத்துவிட்டு உள்ளே ஓடிவிட செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.
“நிரூ... கவி வாங்க வாங்க உங்களைத்தான் பார்த்துட்டே இருந்தோம் என்று சோம்பல் சிரிப்போடு எழுந்து வந்த சம்யு மிஸ் ஐம்பது வயது மதிக்கத்தக்க உருவத்தில் நடன ஆசிரியைக்கேயுரிய காஜல் கண்களுடன் ஸ்வீட் கொண்டு வந்தார்.
அன்றைக்கு அவர்களுடைய தேவந்தி பவனத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா. ஏற்கனவே அங்கே டேபிளில் கேக் வெட்ட தயாராய் வட்டமாய் ஐம்பது என காண்பிக்கும் டாப்பருடன் தயாராக இருக்க நேராக அவர்களை அங்கேயே அழைத்துப்போனார்.
கொஞ்ச நேரம் அந்த இடமே கலகலப்பாய் சிரிப்பும் சந்தோஷமும் போட்டோ ப்ளாஷ்க்களுமாய் அல்லோலகட்டப்பட கவி தான் கொண்டு வந்த சமோசா பார்சல்களை பிரித்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்திருக்க மெல்ல விலகி வந்தாள் நிரு.
சம்யு மிஸ் உண்மையில் அவர்கள் இருவருடைய ஸ்கூல் டான்ஸ் டீச்சர் தான். அவரது இந்த தேவந்தி பவனம் பரம்பரை பரம்பரையாக அப்பா அம்மா இல்லாத பெண் குழந்தைகளை மேற்படிப்பு வரை படிக்க வைக்கும் பணியை செய்து வர இப்போது வெறும் எட்டே பெண்கள் அவரோடு எஞ்சியிருக்கிறார்கள்.
பதினாறு வயதில் நிரூவின் அப்பா தவறியபோது அவளுக்கு வசிக்க இடம், படிப்போடு வேலை என்று அப்பா பணி செய்த Adira designs நிறுவனமே அவளை அரவணைத்துக்கொண்டாலும் மனதார அவளை தாங்கி தேற்றியது சம்யு மிஸ் தான். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இங்கே வந்து விடுபவள் இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் வெகு நெருக்கம், அவளோடு கூட வருவதால் கவியும் அவர்களோடு ஒரு அங்கம் தான்.
எட்டே குழந்தைகள் ஆகையால் அடிப்படை தேவைகள் ஸ்கூல் எல்லாவற்றுக்கும் மிஸ்சிடமே குறைவற்ற நிதி உண்டு. ஆனாலும் மேற்படிப்பு, இதர பரிசுகள் என்று சம்யு மிஸ்ஸின் நண்பர்கள், மிகப்பெரும்பாலும் பழைய மாணவர்கள் ஸ்பான்சர்களாகி உதவிடுவது வழக்கம். அவர்களது வருடாந்த ஆண்டு விழாவுக்கும் அப்படித்தான் பரிசுகள் வந்து குவியும். அந்த குழந்தைகளை பொறுத்தவரை அதுவும் ஒரு கிறிஸ்துமஸ் நாளே.
அன்றைக்கும் வந்து குவிந்திருந்த பரிசுப்பொருள் பெட்டிகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை பிறர் கண்ணில் படாத படி விழிகளாலேயே சல்லடையிட்டுக்கொண்டிருந்தாள் நிரு.
“அஹெம்.. நீ தேடுற பாக்ஸ் பெருசா இருந்ததாலே அடியில வச்சிருக்கோம்” சம்யு மிஸ்ஸின் சிரிப்புக்குரல் பின்னாலேயே கேட்க மாட்டிக்கொண்டவளாய்
“மிஸ்! அதெப்படி நான் அதை தேடுவேன்னு நீங்க நினைக்கலாம்?” அவரிடம் செல்லமாய் சண்டைக்கு போனவளை நமுட்டுச்சிரிப்பாய் மேலும் கீழும் ஒரு பார்வையிட்டபடி அவள் கண்கள் மானசீகமாய் தேடிய அந்த பாக்சை எடுத்து முன்னே வைத்தார் அவர்.
அதற்குள் அங்கே ஓடி வந்து சேர்ந்திருந்த சிறுமிகள் “மிஸ் அப்படியே பிரிச்சிருங்க.. நிருக்கா கால் ரெண்டும் சஸ்பென்ஸ் தாங்காம ஆடிட்டே இருக்கு” என்று கலாய்க்க அவர்களோடு சண்டைக்கு போனவளை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு “அந்த சிசர்சை எடுத்து கொடு கவி” என்றபடி தனிக்கறுப்பு நிற கிப்ட் ராப்பரால் கவர் செய்திருந்த பெட்டியை பிரித்தார் மிஸ்.
எல்லார் கண்களிலுமே ஆர்வம். ஒவ்வொரு முறையும் இந்த பரிசு எல்லார் மனதையும் கொள்ளை கொள்ளும். ஆக எதிர்பார்ப்பு எல்லார் முகத்திலும் இருந்தது.
அதை ஏமாற்றாமல் அழகழகான வர்ணங்களில் காட்டன் ஜம்ப்சூட், டீனேஜ் பெண்கள் டியூஷன் போன்ற இடங்களுக்குஅணிவதற்கேற்றபடி, கண்ணை உறுத்தாத டிசைன்கள், கொஞ்சமாய் வின்டேஜ் ஸ்டைல் காலர்களை சேர்த்து அழகாக உருவாக்கப்பட்டு வெகு அழகான பார்சல்களில் இருந்தன. கூடவே இன்னொரு நீளமான டாப் செட்டுகள் , பல வர்ண பளாசோ பான்ட்கள், எல்லாமே எட்டுப்பேருக்கும் சமமாக இரண்டு சைஸ்களில் இருந்தது.
எல்லாருக்குமே அந்த உடைகள் ரொம்ப பிடித்திருந்தது என்பது அவர்கள் எனக்கு உனக்கு என்று அடித்துக்கொண்டு எடுத்துக்கொண்டதிலேயே தெரிந்தது.
குட்டீஸுக்கு எல்லாமே கியூட்டா இருக்கும்! நிருவின் மனதிலும் மகிழ்ச்சி மத்தாப்பாய் பூக்க தானாவே அவள் உதடு கடித்த கணம் பெட்டியின் அடியில் கடைசியாய் தனியாய் பாக் செய்து வைத்திருந்த ஒரு செட்டை வெளியே எடுத்தார் சம்யு.
அதைக் கண்டதுமே சுற்றி நின்றவர்கள் எல்லாரும் ஓஓஒ என்று சீண்டலாய் நிருவை பார்த்து குரல் கொடுக்க ரத்தமாய் சிவந்து விட்ட முகத்துடன் சம்யு அதை பிரிப்பதை பார்த்திருந்தாள் அவள்.
மரூன் வர்ணத்தில் காட்டனில் வெறுமனே ஒருபக்க தோளில் மட்டும் பச்சை எம்பராய்டறி வேலைப்பாட்டுடன் கூடிய உடை முழங்கால்களை தாண்டி வழுவி சமச்சீரற்ற வெட்டுடன் இருந்த ஸ்லீவ்லெஸ் ட்ரஸ், எளிமையாய் ஆனால் நளினமாய் இருந்தது.
நிரு இங்கே வர ஆரம்பித்து இரண்டாம் வருடத்தில் இருந்து இந்த பெயரற்ற நலன்விரும்பி இந்த உடை பரிசுகளை அனுப்பி வைப்பார், கூடவே ஒன்பதாவதாய் ஒரு செட் இருக்கும். அதுவும் மிகச்சரியாய் அந்தந்த ஆண்டுகளில் இருந்த நிருவின் அளவுக்கு மிகச்சரியாய் இருக்கும்.
இந்தா என்றபடி குறும்புச்சிரிப்போடு சம்யு அதை அவள் மீது போட எல்லாரும் ஓட்டியதில் வெட்கமாகி இருந்தவள் “கவி நீ எடுத்துக்கிறியா?” என்று சமாளிப்பாய் கேட்க
“எதே? உன்னோட ஸ்மால் சைஸ் எனக்கா? ஏன்டி கேட்கணும்னு ஒரு கேள்வியை கேட்டு வைப்பியா? அதெல்லாம் உன் ஆள் உனக்கு அனுப்பறதை நா கேட்கமாட்டேன்.. எடுத்துக்கோ” என்று சிரித்தாள் கவி
அடுத்து “மிஸ்..” என்று சம்யுவை பார்க்க
“உதைப்பேன் ஓடிடு ராஸ்கல்” என்று மிரட்டிவிட்டு அவர் அடுத்தடுத்த பார்சல்களை பிரிக்க போய்விட ரகசியமாய் அந்த மரூன் உடையை விரல்களால் வருடி ரசித்தாள் நிரு.
“அக்கா..நிஜமாவே உனக்கு இது யார்னே தெரியாதா?” ஒரு சின்னக்குரல் ரகசியமாய் கேட்க திடுக்கிட்டுப்போனவளோ
இல்லடி.. என்று அவசரமாய் தலையாட்டி சமாளித்தாள்
“அதெப்படி சைஸ் எல்லாம் கரக்டா தெரிஞ்சு அனுப்புறாங்க..?”
“ஒருவேளை சம்யு மிஸ் பிரண்டா இருக்கலாம்.” என்று நிரு அந்த வால்களை சமாளிக்க முயல
“சும்மா சொல்றா..இது அக்காவோட சீக்ரட் அட்மைரர்” என்றாள் இன்னொருத்தி
“அது சரி.. “ மானசீகமாய் தலையில் கைவைத்தாள் நிரு.
அக்கா இது பொண்ணா இருந்துட்டா?
அட அன்புக்கு எதுடி ஆண்பால் பெண்பால்.. என்று அவர்களே பதிலும் சொல்லிக்கொண்டு கடந்து போய்விட
அவளோ அவசரமாய் அந்த உடையை ஹான்ட்பாக்கில் திணித்துக்கொண்டு கிச்சனை நோக்கி ஓடிவிட்டாள்
அவள் திரும்பி வந்த போது ஏறக்குறைய எல்லா பார்சல்களும் பிரிக்கப்பட்டிருந்தன. இந்த தடவை வெளிநாட்டில் இருந்து ஒரு ஸ்பான்சர் மூன்று லாப்டாப்களை அனுப்பி சர்ப்ரைஸ் செய்திருக்க எல்லார் முகமும் மகிழ்ச்சியில் மினுங்கியது.
“இதையும் நம்ம கிட்ட இருக்கற ரெண்டு கம்பியூட்டர்களோட சேர்த்து மூணாவது அறையில் கம்பியூட்டர் ரூமா செட் பண்ணிடலாம். ப்ரீ டைம்ல எல்லாரும் ஷேர் பண்ணிக்கோங்க.. ஜாக்கிரதை நான் மானிட்டர் பண்ணிட்டே இருப்பேன். விளையாட்டு அதிகமாச்சுன்னா எல்லாத்தையும் பூட்டி உள்ளே வச்சிருவேன்..”
சம்யு மிஸ் கண்டிப்பாய் சொல்லிக்கொண்டிருந்தார்.
“தாங்க்யூ சொல்ல வேணாமா மிஸ்?”
“அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன், நீங்க ரொம்ப சந்தோஷப்பட்டதாவும் சேர்த்தே சொல்லிடறேன். ஹாப்பி?” என்ற படி பீட்சா சொல்லிருக்கு இன்னிக்கு, கிச்சன்ல பொய் எடுத்துட்டு வாங்க என்று அவர்களை விரட்டி விட்டவர் பிரித்திருந்த பைகளை ஒதுக்கி குப்பைகளை பிரித்துக்கொண்டிருந்த நிரு கவியிடம் வந்தார்.
அவர் அப்படித்தான் இந்த குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆனதற்கு சமுதாயமே மிகப்பெரிய காரணம் ஆக அவர்களுக்கு உதவுவது தார்மீக கடமையே அல்லால் அவர்களுக்கு உங்களிடம் எந்த நன்றிக்கடனும் கிடையாது. உங்கள் உதவி மிகவும் மதித்து ஏற்கப்படுகிறது அவ்வளவே என்று வெளியே எழுதியே வைத்திருப்பார். அதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு புரிந்ததோ இல்லை, கிட்டத்தட்ட அந்த குழந்தைகளின் நிலையிலேயே இப்போது இருக்கும் நிருவுக்கு அது தான் கீதோபதேசம். தங்களருகில் வந்தமர்ந்தவரை வாஞ்சையாய் பார்த்து புன்னகைத்தாள் அவள்
எப்படியிருக்கீங்க ரெண்டு பேரும்? பார்த்து ரொம்ப நாளாச்சு?
எக்ஸாம் மொத்தமா முடிஞ்சு மிஸ். இனிமே நாங்கள் சுதந்திர பறவைகள்” இருவரும் ஒரே குரலில் சிரிப்போடு அறிவிக்க
ஆஹா ஆல் தி பெஸ்ட் ஒரு இனிய தொடக்கத்துக்கு என்று சிரிப்போடேயே வாழ்த்தியவர் நிருவை குறிப்பாய் பார்த்து புதிய ஆரம்பம் நல்லது என்று சிரித்தார். டாப்பில் இருந்து பிரிந்து ஓரமாய் இருந்த நீல நூலிழை ஒன்றை விரலில் சுற்றிக்கொண்டு தலை கவிழ்ந்தாள் நிரு.
சற்றைக்கெல்லாம் ஏகப்பட்ட பெட்டி பீட்சாக்களை எடுத்துக்கொண்டு சிறுமிகள் வந்து விட எல்லாருமாய் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அவர்களோடே இன்டோர் கேம்ஸ் கொஞ்சம் விளையாடி களைத்துப்போய் கண்மணி அக்காவிடம் காபி வாங்க கிச்சனுக்கு போனவளுக்கு மனதுக்குள் நீண்ட பெருமூச்சு. நாளை மறுபடியும் வேலை.. அதே பொருளற்ற ஓட்டம்.. மீண்டும் கவி கேட்டதும் மிஸ் குறிப்பாய் சொன்னதும் மனதில் வந்தது..
ப்ச் ...வெளியே போய்விடலாம்தான். ஆனால் பெற்ற குழந்தையை விட்டுப்போக மறுக்கும் தாய்போல அங்கே அவளுக்கும் ஒரு நூலிழை சிக்கிக்கொண்டிருக்கிறதே...
நிரு! போலாமாடி? டைம்
ஆச்சு.. கவியின் குரல் வெளியே கேட்டது..போகத்தான் வேண்டும்.. பயணங்கள் தொடர்ந்தாகத்தான் வேண்டும்.