11
என்ன தான் மனதுக்குள் குழம்பினாலும் தன்னுடைய அலுவலக மேசையில் பார்த்தனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணனின் சிற்பத்தை அபய் வைத்திருந்தது ஒவ்வொரு முறை பார்க்க நேரிடும் போதும் அவளுக்குள் பட்டாம் பூச்சியை பறக்க வைக்கும். அப்படியாக தங்களுக்கிடையில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பாமல் வலுக்கட்டாயமாய் விழிகளை மூடிக்கொண்டிருந்தவளை காலம் மெல்ல மெல்ல கண் திறக்க வைத்துக்கொண்டிருந்தது.
காலேஜில் சேர்ந்து மூன்று மாதம் இருக்கும். ஏகப்பட்ட அசைன்மென்ட் கொடுத்து கொல்கிறார்கள் என்று கம்ப்ளைன்ட் பண்ணிக்கொண்டிருந்தவளிடம் “உனக்கு இப்போ நீ பார்க்கற வேலை பிடிச்சிருக்கா?” என்று திடும்மென கேட்டான் அபய்
“ஏன் கேக்கறீங்க?” இப்போதெல்லாம் அவளின் வாயில் அபய்ண்ணா வருவது வெகு அரிதாயிருந்ததை அவள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
“சந்திரா உனக்கு பயிற்சி கொடுத்து முடிச்சதும் உன்னை முழு நேர வேலைக்கு போட்டுருவாங்க. அதனால் தான் கேக்கிறேன், டூ யூ லைக் வாட் யூ டூ?” அவன் கூர்மையாய் கேட்டான்
கொஞ்சம் யோசித்தவளுக்கு மனசில் இருப்பது வெளி வந்து விட்டது. “ ப்ச் சுத்தமா பிடிக்கல. இப்போவே ஒரே வேலையை திரும்ப திரும்ப பண்ற போல தோணிடுச்சு. ஆனா ஆதவன் சாரே தான் என்னை அங்கே வேலை பார்க்க கேட்டார். இல்லை நான் உங்க கிட்ட வேலை பார்க்க மாட்டேன் வேறே டிப்பர்ட்மென்ட்ல போடுங்கன்னு கேக்கறது நல்லாருக்காதே”
“நிதி நீ படிப்பது மார்க்கட்டிங். நீ அதுக்குரிய பிரிவுல இருந்தா தான் உனக்கு உபயோகமா இருக்கும். நியாயமா அவர் அதை யோசிச்சிருக்கணும்..ஆனால் நீயே உனக்காக யோசிக்கலைன்னும் போது மத்தவங்க எதுக்கு உன்னை பத்தி யோசிக்கபோறாங்க?” அவன் விழிகளை உருட்ட வழக்கம் போல தலைகுனிந்து தப்பிக்க முனைந்தாள் அவள்
அவளுக்கு தயக்கமாய் இருந்தது. ஆதவன் சாரும் அவர் குடும்பமும் அவளுக்கு செய்தவைகளுக்கு அவளால் என்றைக்கும் திருப்பி செய்து விட முடியாது. இப்போது அவரது நெடுங்கால காரியதரிசி வேலையை விட்டு செல்லும் தருணம்.. நிரு நல்லா பர்பார்ம் பண்றா, காலங்காலமா கம்பனில என்கூடவே இருந்தது போலவே ஸ்மூத்தா வேலை பார்க்கிறா..இல்லைன்னா சந்திரா போகப்போற இந்த நேரத்துல கஷ்டமா இருந்துருக்கும். என்று போன வாரமும் HR அலுவலர் ஒருவரிடம் சொன்னார். அவருக்கு தேவையான முக்கியமான நேரத்தில் நான் காலை வாருவதா? தன்னுடைய நன்றியை திருப்பி செலுத்தும் வாய்ப்பாய் தான் அவள் பார்த்தாள்.
குனிந்த அவளின் தலையை முறைத்துப்பார்த்தவனும் அடம் பிடிவாதம், சொன்ன சொல் கேட்பதில்லை போன்ற அடைமொழிகளை வாய்க்குள் முணு முணுத்து விட்டு அப்படியே விட்டு விட்டான்.
அவளை சொல்கிறானே.. அவன் மட்டும் இங்கே என்ன செய்கிறான்.. பழைய கசப்பான கடந்த காலத்துக்காக எதிர்காலத்தை இங்கே அடமானம் வைத்து கொண்டிருக்கிறானே..அதை நான் கேட்டால் படிக்கும் வேலையை பார் என்று சொல்ல வேண்டியது...என்று மனதுக்குள் கடுப்பானவள் ஒன்றும் சொல்லவில்லை.
உண்மையில் அவனுக்கும் கம்பனிக்கும் ஆன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே தான் வந்தது. செந்தில் ராமை அவன் வேலையே செய்யவிடாமல் மீட்டிங்குகளில் ஜூனியர் மெம்பர்களின் முன்னே அவருடைய முடிவுகளை கேள்வி கேட்பதும், அவரின் துறை சார் அறிவுப்போதாமையை எல்லார் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி அவரை வாயடைக்க வைப்பது என்று அபய் அங்கே டிசைன் டீமில் பிரச்சனை செய்வதாய் அடிக்கடி முறைப்பாடு வர ஆதவனே இரண்டு தடவை அவனைக் கூப்பிட்டு கோபமாய் பேசியிருந்தார்.
அவன் தான் ஆதவனின் கதவை தட்டுவதுமில்லை பூட்டுவதுமில்லையே.. அப்படியே எல்லாம் இவளுக்கு கேட்கும்.
“கொஞ்சம் கூட விஷய ஞானமோ அடிப்படை அறிவோ இல்லாவனிடம் என்னால் தலையாட்ட முடியாது. முடிந்ததை பாருங்க” என்று விட்டு போய்விடுவான்.
அதன் எதிரொலியாய் சில ப்ராஜெக்ட்களில் அவன் பங்கு கொள்ள கூடாது என்று ஆதவன் அபயை விலக்கி வைப்பதும், அதை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் அவன் பாட்டுக்கு சுற்றி வருவதும் நடக்கும்.
நிருவுக்கு ஆதவன் மேல் சரியான கோபம். பிடிக்கவில்லை என்றால் நீ நின்று கொள் என்று அவனை அனுப்பி விட வேண்டியது தானே.. கெட்ட பெயராகிவிடும் என்ற பயத்தில் கூடவே வைத்துக்கொண்டு அவனை டம்மியாய் மாற்ற முயல்கிறார்.. ஆனால் அவனும் கொஞ்சமாவது வளைந்து கொடுக்க வேண்டுமே...ப்ச்..
செந்தில் ராமை அலுவலகத்தில் பலருக்கு பிடிக்காது. இதுவரை வந்த திறமையான டிசைனர்களை எல்லாம் தனக்கு போட்டியாகிவிடுவார்கள் என்ற காரணத்துக்காய் வெட்டி வெட்டி வேலையை விட்டே அனுப்புபவன் என்றார்கள்..இருந்தாலும் அவனோடு இப்படி முகத்துக்கு நேராய் மோதுவது சரியா?
அபய் பெரியவன், தான் செய்வதை தெளிவாக புரிந்தே செய்பவன், நாம் ஏன் இந்தளவு அதற்காய் மனதை வருத்திக்கொள்கிறோம் என்று அவள் அப்போதெல்லாம் யோசித்தும் பார்க்கவில்லை. மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தாள்.
அந்த காலகட்டத்தில் தான்... அவன் பெயர் கூட இப்போ மறந்து விட்டது. பிரதீப் என்று ஒருவன் அலுவலகத்தில் வந்து சேர்ந்தான். அவனுடைய டேபிள் நிரு இருக்கும் ஹாரிடோர் தாண்டி வெளியே போனால் முதலாவதாக இருக்கும்.
எப்போதும் அவளது பாதையில் எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தான். நிருவுக்கோ அவனை ஏனோ முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட அவனுடைய நட்புக்கரத்தை எல்லாம் தட்டி விட்டு விட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒரு நாள் மதியம் அவள் காபி எடுத்து வர கிச்சனுக்கு போன போது பின்னாலேயே வந்து விட்டவன்
“என்ன நீ, பேசவே மாட்டேங்கிற? என்னை பார்த்தால் கெட்டவன் மாதிரி தெரியுதா?” என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லைங்க. பாஸ் அவசரமா ஒரு வேலை கேட்டிருந்தார். கொஞ்சம் வழி விட்டீங்கன்னா காபி எடுத்துட்டு போய்டுவேன்” என்று சமாளித்து அங்கிருந்து அகல முயன்றாள் இவள்.
“முடியாதே..” என்ற அவனது கண்கள் சிரித்ததில் நிச்சயம் வெகுளித்தனம் இருக்கவில்லை.
இவள் பயிற்சியில் இருப்பவள் தானே, சின்னப்பெண் வேறு ஆக விளையாடிப்பார்க்கலாம் என்று நினைக்கிறானோ?
“இங்க பாருங்க சார். நீங்க பேசறது பண்றதெல்லாம் கொஞ்சமும் நல்லால்ல.. நான் HR கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்” என்று முறைப்பாய் சொல்ல
உடனே முகபாவத்தை மாற்றிக்கொண்டவன் “ஐயோ விளையாட்டுக்கு சொன்னேன் எதுக்கு நீ சீரியஸா எடுத்துக்கிற?” என்று சிரிக்க நிரு சிரிக்கவே இல்லை. திரும்பி காபியை நிரப்ப ஆரம்பித்துவிட்டாள், அவனோ போகும் வழியை காணோம்.
அப்போது தான் “நிருதி. உன்னை ராம் தேடுறார். எவ்ளோ நேரமா வெயிட் பண்றது?” என்று கடுமையான அபயின் குரல் வாசலில் கேட்டது.
அனைத்தும் மறக்க “ ராமா? என்னயா? அந்தாள் எதுக்கு என்னை தேடுறார்?” என்று யோசித்தவள் இந்த பிரதீப்பை கிடப்பில் விட்டு விட்டு அபயின் பின்னால் போய் விட்டாள் நிரு.
எங்கே அவர்?” அவள் கண்ணை சுழற்றி தேட
“அந்த ஆளு ஒண்ணும் உன்னை தேடல.. அவன் கிட்ட எப்போவும் ஒரு கண் இருக்கட்டும். அவன் பார்வை சரியில்லை.. நீ போற இடமெல்லாம் பாலோ பண்ணிட்டு சுத்துறான்” பிரவுன் ட்ராகன் எரிக்க தயாராய் நின்றிருந்தது
“யார் பிரதீப்பா?” என்று கேட்டுவிட்டவள்
அது கூட தெரியாதா என்று அவன் முறைக்க
சரி சரி பழக்க தோஷத்துல கேட்டுட்டேன்..விடுங்களேன் என்றவள் “ஆமாம் நானும் இன்னிக்கு தான் கவனிச்சேன்” என்றாள், மனதில் அவளுக்கு இவன் எத்தனை நாளாய் கவனிக்கிறான் என்ற கேள்வி தான் ஓடியது
அதே முறைப்புடன் “கண்ணை உன்னை சுத்தி வச்சு பழகு” என்று விட்டு அவன் போய்விட
அவனுக்கு பழிப்பு காண்பித்து விட்டு திரும்பி வந்தவள் அத்தோடு அந்த விஷயத்தை மறந்து விட்டாள், அந்த பிரதீப்புமே இவளிடம் முயற்சி செய்து பலனில்லை என்று கை விட்டிருக்க வேண்டும்.. நிருவுக்கு அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த தொல்லையும் வரவில்லை.
இன்னும் ஒரு இரண்டு வாரங்கள் கடந்திருக்கும், ஒருநாள் ஆதவன் அவளை அழைத்து அவசரமாய் ஒரு மீட்டிங்கை ஒழுங்கு செய்ய சொல்லிவிட்டு யார் யாரை அழைக்க வேண்டும் என்று சொன்னவர் குறிப்பெடுக்க வேண்டும் மீட்டிங்குக்கு நீயும் வாம்மா என்று இவளையும் அழைத்து சென்றார்.
டிசைன் டீமில் எல்லாருக்கும் அழைப்பு விடுத்ததால் அபயும் வந்திருந்தான். கூடவே மற்ற பிரிவுகளின் தலைவர்களும் வந்தனர். யாரையும் தெரிந்ததாய் காண்பிக்காமல் நிருவும் கொஞ்சம் ஓரமாய் உட்கார்ந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தாள்.
ஆதவன் அன்றைக்கு தனக்கு வந்திருந்த ஒரு அழைப்பை பற்றித்தான் எல்லாருக்கும் விபரித்தார்.
சமீபத்தில் கடல் நீர் உள்ளே வந்து வெகுவாய் பாதிக்கப்பட்ட காராதீவு எனப்படும் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிதிரட்டி உதவி வழங்க மாநில அரசு உட்பட நிறைய பெரிய ஸ்பான்சர்கள் ஒன்று திரண்டிருந்தார்கள். அந்த ஊரில் கலைநிகழ்வு போல ஒரு இரவு முழுதும் விழாவை ஒழுங்கு படுத்தி அந்த டிக்கட் வருமானத்தை அப்படியே அந்த மக்களிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார்கள். அந்த ஊரில் நெசவுத்தொழிலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்களால் செய்யப்படுவதால் அந்த கலைநிகழ்வில் அவர்களின் தயாரிப்புக்களையே வைத்து கண்காட்சி ஒன்று செய்ய அடீரா உதவுமா என்று கேட்டிருந்தார்களாம்.
நல்ல வாய்ப்பு, உதவி செய்ததும் ஆகும் அதே நேரம் சரியான விளம்பரமும் ஆகும் என்று இவள் நினைத்துக்கொண்டிருக்க
ஆதவன் சாருக்கும் இதை ஏற்க ஆசை ஆனால் தங்களிடம் சரியான வளங்கள் இல்லை என்று அபிப்பிராயப்படுவதாக சொன்னார். அத்தோடு அடீராவின் ஸ்டைல் இது அல்லவே.. அவர்கள் பெரிய பிரான்ட்களுடன் தானே இது வரை பணி புரிந்திருக்கிறார்கள், உங்கள் அபிப்பிராயம் என்ன என்று அவர் யோசனையாய் கேட்க
செந்தில்ராமும் அவசரமாய் அதை ஆமோதித்து “அங்கே அவ்வளவு நாள் தங்கி கண்காட்சி எல்லாம் செய்ய எங்களிடம் உரிய டிசைனர்களும் இல்லை,ஆட்களும் போதாது” என்று விட
மற்ற தலைவர்களும் பெரும்பாலும் அதையே ஒத்து கருத்து தெரிவித்தனர்.
ஆதவனும் “நாங்கள் நிதியுதவி வேண்டுமானால் செய்கிறோம் நேரடியாக இணைந்து கொள்ள முடியாது” என்பது தான் என் முடிவும் என்று சொல்ல
அப்போது தான் “தலையை சுற்றி மூக்கை தொடுவானேன்.. ஐயோ சார் நாங்கள் வெள்ளைக்காரன் செய்யும் டிசைன்களை காப்பி மட்டுமே பண்ணுவோம்.. ஒரிஜினலாக எல்லாம் எங்களுக்கு பண்ண தெரியாது என்று உண்மையையே சொல்லிவிடுங்களேன்..” அபய் நக்கல் குரலில் இடையிட்டான்.
என்ன நம்மாள் இப்படி முகத்துக்கு நேரா அதுவும் இங்கே வச்சு சொல்றார் என்று அவள் படபடப்பாக
“அபய்..” என்று அதட்டினார் ஆதவன் மிகவும் கோபமாய்
“பின்னே ..மிஸ்டர் ராம் நம்மகிட்ட அதற்கு தகுந்த டிசைனர்கள் இல்லைன்னு சொல்றார். கேட்டுட்டு சும்மா இருக்கீங்க? அவர் வேணும்னா சொந்தமா டிசைன் பண்ண தெரியாதவரா இருக்கலாம். டீமில் இருக்கும் மீதி எல்லாருமே தகுதியான ஆட்கள் தான்” என்று அவன் ராமை பார்த்து நக்கலாய் சிரிக்கவும் செய்தான்.
அதில் வெறியாகி போன ராம் “சரிப்பா நீ சொல்றபடியே வர்றேன். எங்களோடது சின்ன டீம். அங்கே போய் வேலை செய்தால் இப்போ போயிட்டிருக்கும் மீதி ப்ராஜெக்ட்களை யார் பார்க்கறது” என்று பதிலுக்கு சீற
வாய்விட்டு சிரித்தான் அபய். “இதுக்குத்தான் தகுதியான தலைவர் இருக்கணும்றது. காராதீவின் ஸ்பெஷாலிட்டியே அவங்களோட கைத்தறி சேலைகளும் வேஷ்டிகளும் தான். நம்மளோட ஒரு டிசைனர் மட்டும் அங்கே இருந்தால் போதும்..உதவிக்கு ஏதாவது ஒரு டிசைன் ஸ்கூலின் ரெண்டு ஸ்டூடன்ட்சை வைத்தே அழகாய் செய்து முடிக்கலாம்”
“அப்படியெல்லாம் பொறுப்பை ஒரு ஜூனியர் கைல கொடுக்க முடியுமா? எவ்ளோ பெரிய ஸ்பான்சர்கள் இருக்கற இடம். ஒண்ணு நம்ம இருந்து பண்ணணும்..இல்ல ஒதுங்கணும்”
காரசாரமாய் பல தரப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் எதிராயே வர ஒரு கட்டத்தில் கோபமாகி விட்ட அபய் கதிரையை உதைத்து விட்டு எழுந்தவன் “இது எங்களுடைய இடம் என்று அழுத்தமாய் நிரூபிக்க லட்டான வாய்ப்பு.. நீங்க மிஸ் பண்ணினா அது உங்களுக்கு தான் லாஸ்.. நான் இதை மிஸ் பண்ண தயாரா இல்லை..” என்று ஆதவனை குறிப்பாய் பார்த்து விட்டு யாரையும் கண்டு கொள்ளாமல் வெளியே போய்விட்டான்.
எல்லார் முன்னிலையிலும் அவமானம் ஆகியதாலோ என்னமோ ஆதவனும் நான் எங்கள் நிலைப்பாடு நிதியுதவி மட்டும் தான்னு உத்தியோகபூர்வமா அறிவிச்சுடறேன் நிரு வாம்மா என்று அவளையும் அழைத்துக்கொண்டு எழுந்தவர் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து கிடந்தது.
உள்ளே அவரது அறைக்குள் போனதும் கூண்டுப்புலியாய் அங்கும் இங்கும் சிலமுறை நடை பழகியவர்
“அங்கே விழாவுக்கு அபராஜிதன் போவானாக இருந்தால் அங்கே அடீராவின் லோகோவோ பெயரோ, வளங்களோ எதையும் உபயோகிக்க கூடாதுன்னு அவனுக்கு ஒரு ஈமெயில் அனுப்பும்மா. If he wants to do this, fine, but he’s on his own in this”
என்று கோபமாய் சொல்ல நிருவும் அவசரமாய் அவர் சொன்னதை டைப் செய்து அவரது இமெயிலில் இருந்து அபய்க்கு அனுப்பி வைத்தாள்.
“அப்படியே விழா கமிட்டிக்கு இவன் அடீராவின் பிரதிநிதி இல்லை என்று ஈமெயில் பண்ணணும். சரியான பின்னணி இல்லாமல் இவனை உள்ளேயே சேர்த்துக்க மாட்டாங்க. அப்படியே உள்ளே போயிட்டாலும் அங்கே போய் இவன் பண்ணும் கூத்துக்கு அடீரா பொறுப்பாக முடியாது”
நிருவின் விரல்கள் ஒரு முறை வேலை நிறுத்தம் செய்ய அவளை அறியாமல் ஆதவனை நிமிர்ந்து பார்த்தாள். இது அநியாயம் பெரிய பாஸ்
ஆதவனே அதை நினைத்தாரோ என்னமோ அடுத்த செக்கன்ட் “இல்லை வேணாம்.. அனுப்ப வேணாம்” எனவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது
மனதில் பெருங்கலக்கத்தோடு வீட்டிலும் நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள் நிரு.
யார் உதவியும் இல்லாமல் அங்கே போய் என்ன செய்வான்? இனிமேல் திரும்ப கம்பனிக்கு வருவானா?
ஆதவன் சாரை தனியாய் சந்தித்து கன்வின்ஸ் செய்திருந்தால் அவர் கன்வின்ஸ் ஆகியிருப்பார் ..அவனுக்கும் பொறுமை இல்ல..
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொள்ள இவருக்கும் மனதில்லை..
ப்ச்.. உண்மையிலேயே போய்விடுவானோ.. அவனுக்கு இங்கே மரியாதை இல்லை என்று அவளே நினைத்திருக்கிறாள், அப்படியிருக்க அவன் இங்கிருந்து போவது ஏன் இப்படி மனதை அறுக்கிறது என்று அப்போதெல்லாம் அவளுக்கு ஆராய நேரமில்லை
நினைவு தெரிந்ததில் இருந்து பரிட்சயமான இடம் திடீரென அபயின் இன்மையால் அன்னியமாவது போலிருந்தது. மனம் படபடத்து போனது. போன் பேசுவது அவர்களுக்குள் வழக்கமே இல்லை. ஒற்றை வார்த்தை அதுவும் அவனே தேவைப்பட்டால் வெகு அரிதாய் குறுஞ்செய்தி அனுப்புவான். ஆக எதுவும் தெரியாமல் நிரு மண்டையை உடைத்துக்கொண்டிருக்க
அபய் அடுத்த நாள் வரவில்லை.
அட் காராதீவு என்று ஒரு மெசேஜ் மட்டும் அவளுக்கு வந்தது.
எல்லாம் நன்றாக போக வாழ்த்துக்கள் என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பி வைத்தவளுக்கு அழுகையாய் வந்தது.
கான்டீனுக்கு போகவே பிடிக்கவில்லை.
போனாலும் சாப்பாடு இறங்க மாட்டேன் என்றது. அபய் என்ன செய்கிறான்? திரும்பி வருவானா? அப்படியே போய்விடுவானா? என்று குழப்பத்தில் கண்ணில் நினைக்கும் போதெல்லாம் நீர் கட்டிக்கொள்ள அவள் தவித்துப்போனாள்
இரண்டு நாள் வீட்டில் இருந்து சான்ட்விச், வ்ராப் என்று எதையோ எடுத்து வந்து தன்னுடைய இடத்திலேயே சாப்பிட்டு விட்டு காலம் கடத்தியவள் அடுத்த வாரம் வேறு வழியின்றி கான்டீனுக்கு போனாள்
எப்போதும் அமரும் டேபிளில் தனியாக அமர்வதே கடினமாய் இருக்க தன் மனம் போகும் போக்கை நினைக்க அவளுக்கே பயம் வந்தது.
“என் மனதில் அபய்க்கு நட்பைக்கடந்த உணர்வுகள் வந்து விட்டனவா?”
“ச்சே ச்சே அவர் என் ப்ரிய சீனியர்..”
“ப்ரிய சீனியர் என்றால் எங்கிருந்தாலும் வாழ்க என்று நீ மகிழ வேண்டும்..இப்படி என் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க கூடாதே..”
“அவன் என்னதான் இருந்தாலும் ஆதவன் சாரின் மகன். அந்தப்பக்கமும் பெரும் பிசினஸ் குடும்பத்தின் மூத்த பேரன்.. நான் எங்கோ ஒரு மூலையில் காம்பவுண்டில் ஒற்றை அறை வீட்டில் வசிக்கும் சின்ன பெண்.. நான் போய் அப்படியெல்லாம் அவனை நினைப்பேனா?”
“பின்னே உன் கண் ஏன் கலங்குகிறது?”
“அது ஒன்றும் அபய்ண்ணாவுக்காய் இல்லை..” இப்போதெல்லாம் மிக அரிதாயே வெளிப்படும் அந்த அண்ணா இப்போது தன் மேல் அவளுக்கே சந்தேகம் வந்ததும் வரிக்கு வரி கூடவே முளைத்து அவளுக்கே அவளை நிரூபிக்க முயன்றது அவள் மனம்..
“என்ன மேடம் தனியா சாப்பிடுறீங்க.. வழக்கமா பாடிகார்ட் கூட தானே வருவீங்க..”
பிரதீப்!
சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவி வந்தவன் கண்ணில் நிரு பட்டிருக்கிறாள். அவன் பேச்சு கொடுத்த அருவருப்பில் என்ன பேசுகிறாய் என்பது போல அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு எழுந்தாள்.
“மேடம் கூட பேசக்கூட பெரிய குடும்ப வாரிசா இருக்கணுமோ? டம்மி வாரிசா இருந்தாலும் பரவாயில்லை போலயே.. சின்னப்பொண்ணா இருந்தாலும் காரியமா தான் இருக்கீங்க மேடம். ஏன் இந்த மிடில் கிளாஸ் பசங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியமாட்டோமோ?”
இப்படிப்பட்ட வார்த்தைகள் அவளை நோக்கி வீசப்படுவது இதுவே முதன்முறை! அதிர்ந்து உறைந்து ஒருகணம் அப்படியே நின்று விட்டவள் பிறகு சுதாகரித்துக்கொண்டு அவனை ஏறிட்டாள்.
“சின்னப்பொண்ணுதானே.. கேட்க யாரும் இல்லை.. சோ என்ன வேணா பேசிட்டு தப்பிச்சிடலாம்னு நினைக்கிறீங்கல்ல..? HR கிட்ட மீதியை பேசிக்கோங்க” என்றவள் அவன் சொல்ல வந்ததை கூட கேட்காமல் விடுவிடுவென HR பிரிவின் அறைக்குள் நுழைந்து தலைவரிடம் தன் பிரச்சனையை சொன்னாள். அதுவும் அவன் பயன்படுத்திய அநாகரிக வார்த்தைகளை தவிர்த்து தேவையில்லாமல் தன்னை தொல்லை செய்வதாய் மட்டும் சொன்னவள் வேலைக்கு திரும்பி விட்டாள்.
எது அவளை செலுத்தியது? அவளை பற்றி பேசியதா? இல்லை அபயை டம்மி என்றதா? அவள் எதையும் ஆராயவில்லை
மறுநாள் அவளது முறையீட்டை விசாரித்ததாகவும் பிரதீப்பின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் முதல் தடவை என்பதால் ஒரு மாத சம்பளம் அபராதம் மற்றும் முதலாவது எச்சரிக்கை கடிதத்துடன் அவனிடம் இருந்து மன்னிப்பு கடிதமும் பெற்றதாக HR இடமிருந்து தகவல் வந்தது. அவளுக்கு இந்த நடவடிக்கைள் மீது ஏதேனும் கருத்து இருந்தால் நேரில் சந்திக்குமாறும் சொல்லியிருந்தார்கள். இந்த கொட்டு போதும்.. தோளைக்குலுக்கி விட்டு அதை அத்தோடு மறந்து விட்டாள் நிரு.. அவள் மனம் தான் வேறு பிரச்சனைகளில் பாரமாகிவிட்டதே..

Last edited by a moderator: