• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நான்சியின் அவள் - 4

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
திரவியம் வேகமாக அவள் பிடித்து இழுக்க... நிலை தடுமாறி அவன் மேல் விழுந்தாள்...

திரவியம் அவளை கட்டி கொண்டு "அத்தான் வேலைக்கு போயிட்டு வரட்டா..."என்று மெதுவாக கேட்க...

அவள் : சரிங்க‌... இப்ப என்னைய விடுங்க...

திரவியம் : ஏய் என்ன டி இது... கட்டி தானே பிடிச்சு இருக்கேன்... அது சரி நானும் நீ ஒரு தடவையாவது அத்தான் னு கூப்டுவ னு பார்த்தா... கூப்டவே மாட்ற... ஏங்க ஏங்க னு பேசுற...

அவள் : உங்களுக்கு late ஆகலையா...

திரவியம் :அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடு...

அவள் சிரித்துக் கொண்டே அவன் நெற்றியில் கொடுக்க...

திரவியம் : "ஏய் ச்சீ இங்க இல்ல... இங்க.."என்று உதட்டை காட்ட...

அவள் "முடியாது ..‌‌"என்பது போல் தலையே ஆட்ட...

திரவியம் அவளை கன்னத்தே பிடித்து உதட்டில் முத்தமிட்டான்
....

‌‌தொடரும்...
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அவள் 4.........

அவளுக்கும் அழுகைக்கும் மிகவும் நெருங்கிய சொந்தம் போலும்... சொல்லாமல் கொள்ளாமல் வரும் விருந்தாளி போல் அழுகை சொல்லாமல் வந்து விடும்... அது வந்ததும் தெரியாது... போவதும் தெரியாது...

தன் கணவன் கோவமாக செல்வதை பார்த்து அழுதவள்...அத்தையின் குரல் கேட்டு வேகமாக வெளியே வந்தாள்...

மாமியார் : உள்ள என்ன தான் டி பண்ணு வ... வீட்டுல எவ்ளோ வேலை இருக்கு... எப்போ பார்த்தாலும் உள்ள போய் உட்கார்ந்துக்கோ...

அறையில் இருந்து வெளியே வந்த ரஞ்சனி அம்மா பேசியதை கேட்டு "அம்மா ஏன் மா... சும்மா வே இருக்க மாட்ட... எதுக்கு சும்மா அண்ணி திட்டிக்கிட்டே இருக்காத... உனக்கு சொன்னா‌ புரியாதா... ஏன் தான் இப்படி இருக்கீங்களோ..."என்று கத்தி விட்டு அவளை பார்த்து "அண்ணி நா போயிட்டு வரேன்... அப்புறம் அந்த லூசுக்கு பொரியல் செஞ்சு சாப்பாட எடுத்துக்கிட்டு அலையாதீங்க... ஒரு‌ நேரம் பட்னி இருக்கட்டும்... அப்போ தான் அடங்குவா..."என்று செல்ல...

மாமியார் : அவ என்ன‌ சொல்லிட்டு போறா... என் சின்ன பொண்ணு சாப்பாடு கொண்டு போகலையா...

அவள் : "அது வந்து அத்த.‌.ஜனனிக்கு.."என்று இழுக்க...

மாமியார் : எதுவும் பேசாத... என் மகளை பட்னி போட்டு கொல்லலாம் னு நினைக்கிறீயா...

அவள் : "அய்யோ அத்த என்ன வார்த்தை சொல்றீங்க...அப்படி எல்லாம் இல்ல..."என்று பதற...

மாமியார் : அப்படி இல்ல ல ஒழுங்கா நடந்தே போய் கொடுத்துட்டு வா...எனக்கு சாப்பாடு கட்டி வச்சுட்டியா...

அவள் : இதோ வைக்கிறேன் அத்தை...

மாமியார் : இன்னும் எடுத்து வைக்கலையா... எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்ட...ஆமா இது என்ன கிண்ணத்துல சட்னி இருக்கு...

அவள் : அது ரஞ்சனி உப்புமா கேட்டா...

மாமியார் : ஓ...அப்போ உள்ள மாவு இருக்கு ல... தோசை சுட்டு எடுத்து வா... சட்னி ய தொட்டு சாப்டுகிறேன்...

அவள் : "ம்ம்ம் சரி அத்த..."என்று தோசை சுட்டு எடுத்து வந்து கொடுத்தாள்...

மாமியார் : என்ன டி வெறும் தோசை யா சுட்ட... அந்த வெங்காயம் தோசை அப்புறம் இந்த மூட்டை தோசை இதெல்லாம் இருக்கு ல... அது சுட்டி எடுத்துட்டு வா... அதுல ரெண்டு எடுத்துட்டு போ...

அவள் ரெண்டு தோசை எடுத்து வைத்து விட்டு வெங்காயம் நறுக்கும் திரிவியம் கோவமாக சென்றது ஞாபகம் வர... விரலை ஐ வெட்டி கொண்டாள்...

ரத்தம் வர...கையை கழுவி விட்டு தோசை சுட்டு எடுத்து வர.. திரவியம் அமர்ந்திருந்தான்...

அவள் திரவியத்தையே பார்க்க... அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் "எனக்கும் தோசை எடுத்துட்டு வா..."என்று சொல்ல...

அவனின் பாராமுகத்தால் கண் கலங்க... வேகமாக சென்று விட்டாள்...

இருவரும் தோசை சுட்டு எடுத்து வர... சாப்டு முடித்து மாமியார் கிளம்பி வாசலில் நின்று "வீட்டை துடைச்சு வை... ரேசனுக்கு போயிரு... வர்றதுக்குள்ள சமைச்சு வச்சுரு...சரியா..."என்று செல்ல...

திண்ணையில் அமர்ந்திருந்த மாமனார் "அம்மாடி கொஞ்சம் சுடு தண்ணி வைக்கிறீயா மா.. . மாத்திரை போடனும்..."என்று கேட்க...

ஒரு செம்பில் கொண்டு வந்து கொடுக்க...

மாமனார் : என்ன மா உடனே எடுத்து வர...

அவள் : எனக்கு தெரியாதா... நீங்க மாத்திரை போடுவீங்க னு அது தான் வச்சுட்டேன்... மாமா சாப்பாடு எடுத்து வரட்டா...

மாமனார் : என்ன மா சமைச்ச...

அவள் : சாம்பார் மாமா...

மாமனார் : எடுத்துட்டு வா மா... திரவி எங்க மா...

அவள் : உள்ள தான் மாமா இருக்காரு...

மாமனார் : அவன் போக நேரமாகுமா... இல்லைனா நா நடந்து போவேன்‌.... அண்ணாச்சி வேற call பண்ணிக்கிட்டே இருக்காரு... மில் ல வேலை இருக்கு...

அவள் : "இதோ போய் கேக்குறேன் மாமா..."என்று உள்ளே சென்றாள்...

திரவியம் கட்டில் படுத்திருக்க...

அவள் : ஏங்க... போக late ஆகுமா...

திரவியம் : ஏன்‌...

அவள் : மாமா வ மில் ல விடனுமா...

திரவியம் : அவர நடந்து போக சொல்லு... இல்ல சிவா இன்நேரம் கிளம்பி இருப்பான்... அவன் கூட போக சொல்லு...

அவள் எதுவுமே பேசாமல் நகர...

திரவியம் : ஏய்...

அவள் திரும்பி பார்க்க...

திரவியம் : சொல்லிட்டு இங்க வா...

அவள் :"ம்ம்ம்..."என்று தலையை ஆட்டி கொண்டு சென்றாள்...

மாமனார் : என்ன மா நேரமாகுமா...

அவள் : ஆமா மாமா... இருங்க சிவா மாமா போயிட்டாரா னு பாக்குறேன்...அவர் கூட நீங்க போங்க‌...

மாமனார் : சரி மா...பாரு...

அவள் முன்னால் வீட்டிற்கு செல்ல...

துளசி வீடு கூட்டுவதை எடுத்து கொண்டு வெளியே வர...

அவள் : அய்யோ‌ என்ன கா...வீட்டுக்கு வர கூடாது னு அடிக்க வரீயா...

துளசி ' அடச்சீ வா... வீடு கூட்டுனேன்... என்ன இந்த பக்கம் எல்லாம் வந்து இருக்க... என்ன விசயம்...

அவள் : ஏன் கா நா வர கூடாதா‌‌...

சிவா : நீ வா மா... உனக்கு இல்லாத உரிமையா... இது உன் வீடு மா... நீ எப்போ வேணும்னாலும் வா...

அவள் சிரித்து கொண்டே "உங்கள தான் மாமா பாக்க வந்தேன்‌.."என்று சொல்ல...

சிவா :என்ன மா‌...

அவள் : அது வந்து அவர் அப்பா கிளம்பிட்டாரு‌... நீங்க போற வழி தானே... மாமா வ drop பண்றீங்களா...

சிவா : அட என்ன மா நீ... வர சொல்லு மா... கூட்டிட்டு போறேன்... திரவியா கிளம்பிட்டானா‌...

அவள் : கிளம்பிட்டாரு மாமா...

சிவா : சரி சித்தப்பா வ‌வர சொல்லு மா...

அவள் :"சரி மாமா..."என்று அழைத்து வந்தாள்...

சிவா : சித்தப்பா போலாமா...

மாமனார் : ம்ம்ம் போலாம் யா...

அவள் : சிவா மாமா பாத்துட்டு கூட்டிட்டு போங்க... உங்களுக்கு என்ன ஆனாலும் பரவா இல்ல... என் மாமனார் பத்திரமா இருக்கனும்...

சிவா திரும்பி அவளை ஏன் இறங்க பார்க்க...

துளசி : "அடிப்பாவி என் புருஷனுக்கு என்ன ஆனாலும் பரவா இல்லயா..."என்று அவள் காதை பிடித்து திருக...

அவள் :"ஸ்... ஆ...அய்யோ அக்கா வலிக்குது கா..."என்று வலிப்பது போல் நடித்து சிரித்து சொல்ல...

மாமனார் அவளையே பார்க்க...

அவள் : என்ன மாமா அப்படி பாக்குறீங்க...

மாமனார் : "அந்த வீட்டை விட்டு வந்தா நீ எவ்ளோ சந்தோஷமா இருக்க... உனக்கு சிரிக்க தெரியும் னு இந்த ஒரு வருசத்துக்கு அப்புறம் எனக்கு இன்னக்கி தான் மா தெரியும்...நீ தான் மா என் மூத்த பொண்ணு... நீ எப்பவும் சிரிச்சுக்கிட்டே நல்லா இருக்கனும் தாயி..."என்று மனசார வாழ்த்தினார்...

அவள் சிரித்து கொண்டே "அயயோ மாமா ரொம்ப குளுருது..."என்று நடுங்கி கொண்டு சொல்ல...

துளசி : பாத்தீயா மாமா... உன் மருமகள... நீ ரொம்ப ice வைக்கிறீயாம்... அதுக்கு தான் இப்படி சொல்ற... இவளுக்கு வாய் கொஞ்சம் அதிகம்...

மாமனார் : அவ சிரிக்கிறாளோ இல்லையோ... நம்மள எப்பவும் சிரிக்க வச்சுக்கிட்டே இருக்கா... நானும் என் அப்பாவும் இருக்குறதால தான் இந்த பொண்ணுக்கு கொஞ்சமா மரியாதை கிடைக்குது... நாங்க ரெண்டு பேரும் இல்ல அவ்ளோ தான்‌...

இந்த பொண்ணை வேலைக்காரிய விட கேவலமா நடத்துவ என் பொண்டாட்டி... அதுவும் என் அப்பன் இருக்கும் போது என் பொண்டாட்டி எதாவது சொன்னா அவ்ளோ தான்‌‌... என் அப்பா கிட்ட நல்லா வாங்கி கட்டிக்குவா...அவ அடங்குறது ஒன்னும் என் அப்பா இன்னொன்னு அவ தம்பி...

அவங்க ரெண்டு பேரும் இப்ப இங்க இல்ல... அதனால் தான் இவ இந்த ஆட்டம் போடுறா...

அவள் : மாமா உங்களுக்கு மணி ஆகலையா... கிளம்புங்க...சிவா மாமா வண்டிய எடுக்க...

சிவா அவளையே குறுகுறுவென பார்க்க...

அவள் : இப்ப நீங்க எதுக்கு மாமா இப்படி பாக்குறீங்க...

சிவா : "உனக்கு பிடிச்ச உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிட்டு வரலாம் னு நினைச்சேன்‌‌... நீ ரொம்ப பேசுற... அதனால சிப்ஸ் cancel..."என்று வண்டி இயக்க...

அவள் "அய்யய்யோ சிப்ஸ் போச்சே...விட கூடாது..."என்று நினைத்து கொண்டு "சிவா மாமா நீங்களும் தான் பாத்து போயிட்டு வாங்க... வட்டார வேகமாக ஓட்டாதீங்க... நீங்க நல்லா ஓட்டுனாலும் எதிர் ல வர்றவற் ஒழுங்கா வருவானா னு தெரியல...பாத்து மாமா..."என்று சொல்ல...

சிவா :"இப்ப எனக்கு குளுருது..."என்று சித்தப்பா வை அழைத்தை கொண்டு கிளம்பினான்...

அவள் : சரி கா...அவரை கிளம்பி விட்டுட்டு வரேன்...

துளசி : அய்யோ டா அவன் என்ன school பையனா கிளம்பி விடுறதுக்கு...

அவள் : "அக்கா சும்மா இரு கா..."என்று வேகமாக வீட்டிற்கு சென்றாள்‌...

அவள் உள்ளே நுழைய...

திரவியம் கட்டிலில் சாய்ந்து கால் ஐ நீட்டி கையை கட்டி அமர்ந்தவாறு "madam க்கு இப்ப தான் வீட்டுக்கு வரனும் னு தோணுச்சா... அது என்ன டி ரோட்டு ல நின்னுக்கிட்டு சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க..."என்று கேட்க..‌.

அவள் : "இல்லங்க சிவா மாமா கிட்ட உங்க அப்பா கூட்டிட்டு போக முடியுமா னு கேட்டேன்..."என்று தயங்கியவாறு சொல்ல...

திரவியம் : அது எதுக்கு சிரிக்கிற...

அவள் : இல்ல உங்க அப்பா கிட்ட நா...

திரவியம் : இல்ல சிரிக்கிறதுக்கு நா ஒன்னும் சொல்லல... ரோட்டுல போறவங்க ஏதாவது தப்பா ‌பேசிருவாங்க... அதுக்கு தான் சொன்னே சரியா... கோச்சுக்கிட்டீயா...

அவள் : இல்லங்க... நீங்க என் நல்லதுக்கு தானே சொன்னீங்க‌‌...

திரவியம் வேகமாக அவள் பிடித்து இழுக்க... நிலை தடுமாறி அவன் மேல் விழுந்தாள்...

திரவியம் அவளை கட்டி கொண்டு "அத்தான் வேலைக்கு போயிட்டு வரட்டா..."என்று மெதுவாக கேட்க...

அவள் : சரிங்க‌... இப்ப என்னைய விடுங்க...

திரவியம் : ஏய் என்ன டி இது... கட்டி தானே பிடிச்சு இருக்கேன்... அது சரி நானும் நீ ஒரு தடவையாவது அத்தான் னு கூப்டுவ னு பார்த்தா... கூப்டவே மாட்ற... ஏங்க ஏங்க னு பேசுற...

அவள் : உங்களுக்கு late ஆகலையா...

திரவியம் :அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடு...

அவள் சிரித்துக் கொண்டே அவன் நெற்றியில் கொடுக்க..
.

திரவியம் : "ஏய் ச்சீ இங்க இல்ல... இங்க.."என்று உதட்டை காட்ட...

அவள் "முடியாது ..‌‌"என்பது போல் தலையே ஆட்ட...

திரவியம் அவளை கன்னத்தே பிடித்து உதட்டில் முத்தமிட்டான்....

‌‌தொடரும்...
 
Top