- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 8
கணினியில் பதிந்த விழிகளை நகர்த்தாது வேலையில் மூழ்கி இருந்தாலும் எண்ணங்கள் என்னவோ சந்தோஷ் அறையை மொய்த்த வண்ணம் இருந்தன. அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் வந்துவிட்டானா எனப் பார்க்கச் சொல்லி உந்திய மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் துளசி. சிந்தை முழுவதும் அத்தனை எண்ணச் சிதறல்கள். விரல்கள் விசைப்பலகையை தஞ்சமிட்டிருக்க, விழிகளை இருமுறை சிமிட்டியபடி அதன் பணியைத் தொடர்ந்தன.
சந்தோஷ் அவளிடம் பேசிச் சென்று பன்னிரெண்டு மணி நேரங்கள் முடிந்துவிட்டன என மூளை கூற, தான் உடைத்துவிட்ட அந்த அன்பின் இதயம் என்னக் காயம் கண்டிருக்குமோ என இரவெல்லாம் அதே சிந்தனைதான். அதை விரட்டி, இரவு தாமதமாய் உறங்கி தாமதமாக எழுந்து காலையிலே அவசரமாக அவசரமாக அலுவலகம் வந்திருந்தாள் பெண்.
உள்ளே நுழைந்ததும், ‘குட்மார்னிங் துளசி!’ எனப் புன்னகைத்துவிட்டு நகருபவனை ஒரு நண்பனாய் மனம் எதிர்பார்த்துத் தொலைத்தது.
“ஹே துளசி, என்ன சந்தோஷ் சார் லீவ் இன்னைக்கு, உன்கிட்ட சொன்னாரா?” தேனருவி குரல் செவியில் விழிவும் சிந்தை கலைந்து நிமிர்ந்தவள், “ஹம்ம்... அது தெரியலையே தேனு. என்கிட்ட சொல்லலை!” என்றாள் மெய்யும் பொய்யுமாக.
அவனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றொரு மனம் நச்சரித்தாலும் துளசி எதையும் செய்ய விழையாது அப்படியே இருந்தாள். வேண்டாம் என அவனிடம் நேரடியாய்க் கூறிவிட்டப் பின் எந்த வகையிலும் இருவருக்கும் தொடர்பு தற்போதைய நிலைக்கு தேவையற்றது. கண்டிப்பாக சந்தோஷின் மனம் மாறிவிடும். வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என நம்பியவள், அவனைப் பற்றி ஆராய ஆர்வம் காட்டவில்லை. எப்போதும் போல தன் வேலையில் சிரத்தையாய் இருக்க முயற்சித்த வண்ணமிருந்தாள்.
‘அவன் நன்றாய் இருந்தால் போதும்!’ என்றெண்ணம் மனம் முழுவதும் விரவியிருந்தது. தொடர்ந்து நான்கு நாட்கள் கடந்திருக்க, சந்தோஷ் அலுவலகம் வரவேயில்லை. அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற செய்தி மட்டும் யார் மூலமாகவோ அலுவலகத்தை அடைய, அனைவரும் கலந்து கொள்வதாக திட்டமிட்டிருந்தனர். விடுமுறை நாளில் நிச்சயதார்த்தம் நடைபெறவும் அது இன்னுமே வசதியாகிப் போக, ஒருவர் விடாது அனைவரும் வருவதாய் உறுதியளித்திருந்தனர்.
“துளசி, நீ அந்தப் பிங்க் கலர் சேரி கட்டீட்டு வா டி. நானும் சேம் கலர் கட்றேன்!” காலையிலிருந்து தேனருவி நாளை செல்லவிருக்கும் நிகழ்வைப் பற்றியே உரைத்த வண்ணமிருக்க, துளசி வெறும் புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.
“என்ன துளசி, அமைதியாவே இருக்க, நீயும் சந்தோஷ் சாரும் ரொம்ப க்ளோஸ். நான் கூட நீங்க கமிட் ஆகிடுவீங்க, ட்ரீட் கேட்கலாம்னு நினைச்சேன். கடைசியில இப்படியாகிப் போச்சே!” அவள் வருத்தமும் ஆதங்கமுமாய்க் கேட்க, அதற்கும் துளசி பதில் புன்னகைதான்.
“இப்படி சிரிச்சே மழுப்பிடு நீ...” எனக் குறைபட்ட தேனு, “ஆமா, நாளைக்கு நீ வருவ தானே?” என சந்தேகமாய்த் தோழியை நோக்கினாள்.
சில நொடிகள் மௌனமாய் இருந்த துளசி, “தேனு, நாளைக்கு அப்பாவுக்கு அப்பாய்ன்மெண்ட் இருக்கு டி. அவரை ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போகணும். சோ, வர்றது கஷ்டம்...” என்று உண்மையாய்க் கூற, தேனருவி முகம் சுருங்கியது.
“என்ன துளசி இது, கண்டிப்பா அந்த மனுஷன் உன்னை எதிர்பார்ப்பாரு. நீ வராம எப்படி?”
“ப்ம்ச்... தேனு, எப்பவுமே அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். நான் வந்தாலும் வரலைனாலும் என் மனசு அங்கதான் இருக்கும். சீனியர் லைஃப் நல்லா அமைய நான் வேண்டிப்பேன்!” என்றாள் மென்னகையுடன்.
“துளசி, உங்களுக்குள்ள எதுவும் ப்ராப்ளமா? பொய் சொல்லாம சொல்லு, அவர் என்னடான்னா நாலு நாள் ஆஃபிஸ் வரலை. திடீர்னு மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. இது எதுவும்
உனக்குத் தெரிஞ்ச மாதிரி தெரியலை?” தேனருவி தானாய் யூகித்து வினவினாள்.
“தேனு, ஏன் பிரச்சனை வந்தாதான் பிரியணுமா என்ன? ரெண்டு பேரோட நல்லதுக்கும் பிரிஞ்சுப் போகுறது இல்லையா? அவர் வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் இந்தப் பிரிவு. நான் அங்க வந்தா, தேவையில்லாத சங்கடம்தான். அதான் வரலை, போதும் இந்த டாபிக்!” என்றவள் கணினியில் கவனத்தைப் பதிக்க, ஒரு கரம் விசைப்பலகையில் பதிந்தது.
“துளசி, சீரியஸா ஆன்சர் பண்ணு. டூ யூ லவ் ஹிம்?” தேனருவி குரலில் தோழிக்கான வேதனைக் கொட்டிக் கிடந்தது. இந்தப் பெண் ஏன் இப்படி செய்தாள் என கனிவும் கரிசனமுமாய் அவளை நோக்கினாள்.
பக்கவாட்டாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்த துளசி, “லவ்னா அன்பு தானே தேனு, அந்த மனுஷன் மேல எனக்கு நிறைய அன்பு, பாசம், பிடித்தம் எல்லாமே இருக்கு. ஏன்னா, நான் கஷ்டம்னு வாயைத் திறந்து சொல்லாமலே என் முகத்தைப் பார்த்து கண்டுபிடிச்சிடுவாரு. இதெல்லாம் ப்ரெண்ட்ஷிப்ன்ற ஒரு கோட்டுக்குள்ள தான் டி. ஹம்ம், என் வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு வரலை, எனக்குத் தோணலை, கண்டிப்பா தோணாது!” என்றவளின் உதடுகளில் மெல்லிய புன்னகை. அவள் உரைத்தது எல்லாம் சந்தோஷிற்கான அவளின் உணர்வுகள். ஏனோ எத்தனையே ஆண்கள் பார்வை வக்கிரத்துடனும் தவறான எண்ணங்களுடனும் தன் மீது பதியக் கண்டிருக்கிறாள். ஆனால், கண்ணைத் தவிர எங்கேயும் பார்த்துப் பேசாத இந்த சந்தோஷை அவளுக்கு நிரம்ப பிடிந்திருந்தது, இனிமேலும் பிடிக்கும். ஆனால், அது நட்பென்ற புள்ளியிலே தேங்கிவிடும் அவர்களுக்கான நேசக் கணைகள். அதைத் தாண்டி அவள் செல்ல விழையவில்லை. அவனையும் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.
மறுநாள் அலுவலகம் முழுவதும் சந்தோஷ் நிச்சய விழாவிற்கு செல்ல, துளசி காலையிலே தந்தையை மருத்துவமனை அழைத்துச் செல்ல தயார்படுத்தினாள். வசுமதி கண்ணப்பனை குளிக்க வைத்து உடை மாற்றிவிட, இவள் உணவை ஊட்டிவிட்டவள், அதில் தூக்க மாத்திரையைக் கலந்திருந்தாள். ஏனென்றால் வெளியே அழைத்துச் செல்லும்போது கண்ணப்பன் செயல்கள் கொஞ்சம் அதிகபடியாக இருக்கும். அவரது பேச்சு, நடத்தை என அனைத்தும் வேறுபடுவதால், பலரது விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என தவிர்த்துவிடுவாள்.
அதுமட்டுமின்றி மருத்துவமனையைக் கண்டதும் கண்ணப்பன் அவர்களிடமிருந்து தப்பித்து எங்கேனும் ஓடிச் செல்ல முயன்றுவிடுவார். இதற்கு முன்பு அப்படியொரு சம்பவம் நடந்து லாரியில் அடிபட இருந்த மனிதர் நொடியில் உயிர் தப்பியிருக்க, இவர்கள் மூவரின் உயிரும் ஒரு நொடி சென்று திரும்பியிருந்தது. அதிலிருந்தே இது மாதிரியான விபரீதங்களைத் தவிர்க்க, அவரைத் தூக்க நிலையில் வைத்தே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்.
“துளசி, கார் வந்துடுச்சான்னு பாரு...” என்ற வசுமதி தயாராகி வெளியே வர, சோனியா உறங்கும் தந்தையின் தலையை மடியில் வைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
“ஹம்ம்... ஒரு டூ மினிட்ஸ்ல வந்துடுவாரு!” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே மகிழுந்து அவர்களது வீட்டு வாயிலில் வந்து நின்றது.
“வாங்க அண்ணா, எப்படி இருக்கீங்க?” என்ற துளசி அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
“ம்மா... கிளம்பலாம்!” என்றவள் நடந்து சென்று கண்ணப்பனைத் தூக்க, சோனியா ஒருபுறம் பிடித்துக் கொண்டாள். இருவரும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று மகிழுந்தில் அமர வைக்க, வசுமதி வீட்டைப் பூட்டி வர, நால்வரும் மருத்துவமனையை நோக்கிக் கிளம்பினர்.
“உங்கப்பாவுக்கு நல்லா இம்ப்ரூமெண்ட் தெரியுது துளசி. முன்ன மாதிரி ரொம்ப அரொகண்டா நடந்துக்குறாரா? இல்ல தானே?” மருத்துவர் முன்பு மூவரும் அமர்ந்திருக்க, அவர் கேள்வி எழுப்பினார்.
“முன்ன மாதிரி ரொம்ப கத்துறது இல்ல டாக்டர். பட், புதுசா யாரையும் பார்த்தா ஹார்ஷா நடந்துக்கிறாரு...” என்று துளசி பதிலுரைக்க, “ஹம்ம்... அது அவரோட மென்டல் இன்ஸ்டெபிலிட்டிதான் காரணம். போக போக சரியாகிடுவாரு. இந்த டைம் நான் டேப்லெட் மாத்தி எழுதித் தரேன். சிம்ப்டம்ஸ்ல இம்ப்ரூமெண்ட் இருக்கான்னு பார்த்துட்டு நெக்ஸ்ட் என்னென்னு டிஸ்கஸ் பண்ணலாம்!” என்றவர்,
“ஒவ்வொரு டைமும் உங்ககிட்ட சொல்றேன், இங்கேயே அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் பார்த்தா எங்களுக்கும் அவரைக் கேர் பண்ண ஈஸியா இருக்கும். வீட்ல இருந்து பார்க்குறதைவிட இங்க இருக்கும்போது அஸ் அ டாக்டரா அவரை நான் நல்லா அப்சர்வ் பண்ண முடியும்மா. இல்ல, உங்களுக்குத்தான் டிலே ஆகும்!” என்று மருத்துவர் கூற, மூவரிடமும் பதிலில்லை.
“வி வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட் டாக்டர்!” என துளசி அமைதியைக் கலைத்தாள். மேலும் சில பரிசோதனைகள் முடித்து மருந்து மாத்திரையை அவள் வாங்கிவர, வீட்டை நோக்கிப் பயணமாகினர். எப்போதும் வாங்கும் மருந்து மாத்திரைகளும் சிகிச்சையும் பத்தாயிரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், இந்த முறை கூடுதலாக ஒரு ஐந்தாயிரம் வந்திருக்க, வீடு பார்க்க வைத்திருந்த காசை மருத்துவமனையில் செலுத்திவிட்டாள். தற்போதைய சூழ்நிலைக்கு இது அவசியமாகத் தெரிந்தது. வீட்டு வாடகைக்கு வேறு எதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம் என நினைவில் அது பின்னகர்ந்திருக்க, தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். மாத்திரையின் உதவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார் கண்ணப்பன்.
அவரது தலையைக் கோதியவள், ‘சீக்கிரம் சரியாகிடுவீங்க பா. பழைய மாதிரி நம்ம நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம் பா!’ என்று மனதில் கூறிக் கொண்டவளுக்கு அந்த நாள் என்று வருமோ என ஏக்கம் பிறக்காமல் இல்லை. அதையெல்லாம் உள்ளக்கிடங்கில் புதைத்துக் கொண்டாள்.
வீட்டிற்குச் சென்று சேர்ந்ததும் கண்ணப்பனை அவரது அறையில் படுக்க வைத்தனர். துளசிக்கு கையெல்லாம் வலித்தது, உதறிக் கொண்டாள். கண்ணப்பன் சற்றே உடல் பருமனுடையவர். அவரை இரண்டு பெண்கள் தூக்குவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.
“துளசி, சோனி... வாங்க சாப்பிடுங்க...” என்ற வசுமதி மூவருக்கும் உணவைப் பரிமாற அமைதியாய் உண்டனர். வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் அந்த ஓய்வு நாளிலும் துளசிக்கு வீட்டில் எதாவது வேலைகள் இருந்துவிடும். அதனாலே ஓய்வெடுக்க தனியாய் நேரம் ஒதுக்க முடியாது என கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வாள். இப்போது உடல் அசதியாய் இருக்க, அந்த நீள்விருக்கையில் சாய்ந்தவாறே விழிகளை மூடினாள்.
“அக்கா, தூக்கம் வந்தா ரூம்ல போய் தூங்கு கா. ஏன் சோபால படுத்திருக்க?” என்று சோனியா குரல் காதில் கேட்டாலும் அதை பொருட்படுத்தாமல் கால்களை மேலிழுத்து சற்றே குறுக்கிப் படுத்தாள். உடல் அலண்டு போயிருக்க, ஓய்விற்குக் கெஞ்சியது. மெதுவாய் விழிகளை மூடினாள். சுகமாய் இருக்க, முகத்தைப் பஞ்சு நீள்விருக்கையில் தேய்த்துக் கொண்டாள்.
வசுமதி கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்தவர், “சோனி, அப்பாவைப் பார்த்துக்கோ. அக்கா தூங்கட்டும், அவளுக்கே வாரத்துல ஒருநாள்தான் லீவ் கிடைக்குது, புள்ளை ஓடிக்கிட்டே இருக்கா!” என்றவர் குரலில் மகளின் மீதான வாஞ்சை நிரம்பி வழிந்தது.
“நான் அப்படியே மெதுவா நடந்து போய் மார்க்கெட்ல காய்கறி வாங்கீட்டு வர்றேன்!” என்று அவர் வாயிலைக் கடந்து காலணிகளை அணிய, துளசியின் தூக்கம் மொத்தமும் கலைய, எழுந்துவிட்டாள்.
“ம்மா... நடந்து போக வேணாம். இருங்க, நான் ஸ்கூட்டியை எடுத்துட்டு வர்றேன்!” என்றவள் ஆணியில் மாட்டியிருந்த சாவியைக் கையிலெடுத்தாள்.
“துளசி, பத்து நிமிஷத்துல நடந்து போய்ட்டு வந்துடுவேன். நீ போ, போய் தூங்கு, இன்னைக்கு ஒரு நாளாவது ரெஸ்ட் எடு!” என்றவரிடம் மறுப்பாய்த் தலையை அசைத்து வெளியே வந்தாள்.
“ப்ம்ச்... எனக்காவது ஒரு நாள் லீவ் கிடைக்குது. உங்களுக்கு மட்டும் வாரத்துல ஏழுநாள் வேலையா?” என மென்மையாய் அவரை முறைத்தவள் இருசக்கர வாகனத்தை இயக்க, அவள் பின்னே ஏறியமர்ந்தார் வசுமதி.
“ஏன் துளசி ஓடிட்டே இருக்க. ரெஸ்ட் எடுத்தா என்ன?” குறைபட்டத் தாயைப் பார்த்துப் புன்னகைத்தவள், “சோனி, பத்திரமா இரு. அரைமணி நேரத்துல வந்துடுவோம். எதுவும் எமர்ஜென்சின்னா, உடனே கால் பண்ணு...” எனத் தங்கையிடம் அறிவுறுத்திவிட்டு நகர்ந்தாள்.
விடுமுறை நாள் அப்படியே கழிந்துவிட, மறுநாள் திங்கட்கிழமை பரபரப்பில் நாள் துவங்கியது. காலையிலே அவள் வீடு பார்க்கச் சொல்லியிருந்த தனியார் நிறுவனத்திலிருந்து துளசிக்கு அழைப்பு வந்திருந்தது.
“மேடம், உங்களோட வசதிக்கு ஏத்த மாதிரி ரெண்டு வீடு இருக்கு. நீங்க எப்ப ஃப்ரீயோ வந்து பார்த்துட்டு ஓகேவான்னு சொல்லுங்க!” என்று அந்த வாலிபன் கூற, “ஈவ்னிங் நான் ஃப்ரீ தான் சார். இன்னைக்கே கூடப் பார்க்கலாம்!” என்று ஒப்புக் கொண்டிருந்தாள்.
“ம்மா... நைட்டு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வர நேரமாகும்!” என்றவாறு தன் கைப்பயைத் தோளில் மாட்டினாள் துளசி.
“சரி துளசி, முடிஞ்சளவுக்கு வேலையை சீக்கிரம் முடிக்கப் பாரு. இருட்டுல வராத!” என்ற வசுமதியின் பேச்சிற்குத் தலையை அசைத்துவிட்டு செல்லும் தமக்கையை யோசனையாய்ப் பார்த்தவாறே கல்லூரி கிளம்பினாள் சோனியா.
“துளசி, அந்த ஹோட்டல் கட்டுறதுக்கான டிசைன் இன்னும் நீங்க இன்கம்ப்ளீட்டா வச்சிருக்கீங்க? இதுக்கு முன்னாடி இப்படி நீங்க பண்ணது இல்லை. வாட் இஸ் ராங்க் வித் யூ?
இங்க வேலை செய்ய தானே வர்றீங்க?” என மேலாளர் காலையில் துளசியை அழைத்து குரலை உயர்த்தி திட்டிவிட, இவளது முகம் வாடிப் போனது. அவர் கூறியது போல துளசி இதுவரை எந்த வேலையும் பாதியிலே கைவிட்டதில்லை. ஆனால், இந்த இடத்தின் வரைபடத்தை வரைய முயற்சிக்கும் போது கைகள் நடுங்குவதை அவளால் தவிர்க்க இயலவில்லை. அதனாலே இந்தத் தாமதம் ஏற்பட்டிருந்தது.
“சாரி சார், திஸ் இஸ் மை மிஸ்டேக். ஐ வில் சென்ட் வித்தின் டுடே!” என உரைத்தவள் கணினியை உயிர்ப்பித்ததும் அந்த விடுதி கட்டுவதற்கான வரைபடத்தை எடுத்து வைத்தாள். சில நிமிடங்கள் விழிகளை மூடி தங்களுக்காக மனதில் வரைந்திருந்த வடிவமைப்பைக் கண்முன்னேகொண்டு வந்தாள். இது எந்த வகையிலும் என்னைப் பாதிக்கவில்லை என மனதிலே உருப்போட்டவள், இரண்டு மணி நேரத்திலே அதை நேர்த்தியாய் வடிவமைத்திருந்தாள்.
“ஹே துளசி, இந்த டிசைன் ரொம்ப யுனிக்கா இருக்கே!” என்று தேனருவி ஆச்சர்யப்பட, “ஆமா துளசி, நல்லா டிசைன் பண்ணியிருக்க...” என சக ஊழியரும் அவளைப் பாரட்ட, அவளது உதடுகளில் புன்னகை. ஆனால், அதன் பின்னே இருக்கும் வலி அவள் மட்டுமே அறிந்த ஒன்று.