- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 6
இளவேந்தனின் மகிழுந்து ஓரிடத்தில் சென்று நிற்கவும், துளசியும் அவன் பின்னே சென்றாள். அந்த இடத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் ஒரு நொடி திடுக்கிட்டுப் போக, விழிகள் வேக வேகமாக நனைந்தன. கீழிமைத் தொட்டு மேழிமை வரை நீர் படர, இவளுக்குத் தொண்டை அடைத்தது.
“துளசி மா, இங்கதான் நம்ம ஹோட்டல் கட்டப் போறோம். சீக்கிரம் படிச்சு முடிச்சுட்டு, நீயே கட்டிடத்துக்கு டிசைன் பண்ணி கொடு டா. நமக்குன்னு முத முதல்ல கட்டப் போறோம். என் பொண்ணுதான் எல்லாம் பண்ணணும்!” என கண்களில் கனவு மின்ன கூறியத் தந்தையைக் கனிவாய்ப் பார்த்திருந்தாள் இவள்.
“ப்பா... அதென்ன அக்கா மட்டும். நானும் டிசைன் பண்ணுவேன்!” பள்ளி படிக்கும் வயதில் சற்றே எட்டிப் பார்த்த பொறாமையில் சோனியாவின் உதடுகள் தங்கையைப் பார்த்து சுழிய, கண்ணப்பன் பொங்கிச் சிரித்தார்.
“இந்தச் சின்னக் குட்டியைப் பாரேன் வசு!” எனத் தாயையும் பேச்சில் நுழைத்து மனம்விட்டுச் சிரித்த தந்தையின் பேச்சு இன்னுமே மனதில் பசுமையாய் பதிந்திருக்க, அந்நினைவில் விழிகள் அந்த இடத்தை வெறித்தன. இதோ இந்த இடத்தினால்தானே தங்களது குடும்பம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்ற நிதர்சனத்தில் கால்களில் சிறியதாய் நடுக்கம். மெல்லிய அழுகை விசும்பலாக மாறத் தொடங்க, இப்போதே உடைந்துவிடுவேன் என உடல் உத்தமமாய் உரைத்ததில் கைகள் கன்னம் தொட்ட உவர்நீரை விரைந்து தட்டிவிட்டன.
‘ஒன்னும் இல்ல துளசி! ஒன்னும் இல்லை!’ எனத் தன்னைத் தானே தேற்றினாள். எதுவும் என்னை எளிதில் உடைத்துவிடாது என மனதில் உருப்போட்டவளின் கண்ணீர் அருகே இருந்தவனை ஏதோ செய்திருக்கக் கூடும் போல. கால்சராயில் வைத்திருந்த குளிர் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டான்.
‘வேண்டாம்!’ என கட்டளையிட்ட மூளையின் குரலை கடந்து சென்றவனின் கரங்கள் தண்ணீர் பொத்தலை எடுத்து அவளிடம் நீட்டியது.
“ஐ திங்க் யூ நீட் வாட்டர் துளசி!” என்றவனின் கரிசனமான வார்த்தைகள் கேட்டவளுக்கு, அவன் முன்னே அழுது விட்டோம் என அவமானத்தில் முகம் சிவந்தது. எதுவும் பேசாது தனது இருசக்கர வாகனத்திலிருந்த நீரை எடுத்து முகம் துடைத்து தன்னிலைக்கு வந்திருந்தாள். வேந்தனுக்கு அத்தனை கோபம்.
‘போடி...போ!’ என நினைத்தவன்,
“இந்த இடத்துல ஒரு பெரிய ஹோட்டல் கட்டணும், இதுக்கான டிசைன் நீங்க பண்ணா நல்லா இருக்கும். சோ, கோ அஹெட், எப்படி பண்ணலாம்னு ஒன்ஸ் பார்த்துட்டு முடிவு பண்ணுங்க!” என்றவனின் பேச்சுத் தொழிலுக்குத் தாவியிருக்க, துளசியும் மீண்டிருந்தாள். ஆனாலும் இந்த இடத்திற்குத் தன்னால் வடிவமைக்க முடியுமா? என்ற கேள்வி எழ, மீண்டும் உள்ளம் கலங்கிப் போனது. முகத்தில் எதையும் காட்டாதிருக்க வெகுவாய் பிரயத்தனங்களை மேற்கொண்டவளுக்கு இந்த நாளுடைய துன்பங்களின் நீட்சி போதுமே என மனம் கதறியழச் சொல்லி உந்தியது.
‘முடியாது! என்னால டிசைன் பண்ண முடியாது. நோ, ஐ காண்ட்!’ என அரற்றிய மனதிற்குப் பதிலில்லை. மாட்டேன் என்று கூறினாள் இவன் விட்டுவிடுவானா என்ன? என்ற எள்ளலில் உதடுகளில் விரக்தியா, கேலியா எனத் தெரியாது புன்னகை உதிர்ந்து விழுந்தது.
அதை மாற்றாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் வேந்தனிடம் தடுமாற்றம் இல்லை. இந்தப் பார்வை என்னை எதுவும் செய்துவிடாது என்பது போல உறுதியாய் நின்றவன், “நீங்க சைட் விசிட் பண்ணிட்டா, கிளம்பலாம்!” என்றான் இரக்கமற்று.
‘நீ இப்படித்தான். உன் பதில் இப்படித்தான் இருக்கக் கூடும்!’ என எண்ணிக் கசந்தவளிடம் வெறுமையான பார்வை. விழிகளை சுழற்றியவளுக்கு ஏற்கனவே அவள் மனதில் கட்டி வைத்திருந்த வடிவமைப்பு உயிர்பெற்று எழுந்தது. மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்றாகிற்றே. கடினப்பட்டு துக்கத்தை விழுங்கியவள், தலையை அசைத்துவிட்டு விறுவிறுவென தனது இருசக்கர வாகனத்தை நோக்கிச் சென்றாள்.
வேந்தன் எதுவும் பேசாதவன் தனது மகிழுந்தை உயிர்ப்பித்தான். இருவரும் செல்லும் வழியில் வேந்தன் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் வாகனத்தை செலுத்தினான். துளசியும் தனக்கும் எரிபொருள் நிரப்ப, “ரெண்டு பேருக்கும் டேங்க் பில்லஃப் பண்ணுங்க!” என்றவனின் பேச்சில் இவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பார்வை அவனிடமிருந்தாலும் உதடுகள், “அண்ணா, டூ ஹண்ட்ரடுக்குப் போடுங்க!” என்று அப்பணியாளரிடம் உரைத்தது.
“நோ, ரெண்டு பேருக்கும் டேங்க் பில்லஃப் பண்ணுங்க!” என்ற வேந்தனின் குரலில் இவளது விழிகள் அவனை எரித்தன.
“ஆஃபிஸ் வொர்க்கா வெளிய வந்ததால, இந்த ஆஃபர். எல்லா ஸ்டாப்ஸ்க்கும் பே பண்ண அஸீம் கிட்ட சொல்லிட்டேன். சோ இது உங்களுக்கான அட்வாண்டேஜ் இல்ல!” என்றவனின் பேச்சில் இவளுக்கு நம்பிக்கை வரவில்லை. துளசி பார்வையை மாற்றாதிருக்க, பணத்தை செலுத்திவிட்டு அவன் நகர, அலைபேசியை எடுத்துத் தேனருவிக்கு அழைத்து விசாரித்தாள்.
“ஆமா துளசி, நோட்டீஸ் போர்ட்ல இருந்ததே. நீ பார்க்கலையா? சைட் விசிட் போறவங்களுக்கு புட் அண்ட் பெட்ரோல் சார்ஜ் இனிமே ஆஃபிஸ்ல பே பண்ணுவாங்க அண்ட் சேலரில கூட இன்க்ரீமெண்ட் பண்ணி இருக்காங்க டி. நம்ம புது பாஸ் வந்ததுல இருந்து நிறைய பண்றாரு டி!” என்றவளின் பேச்சில் கொஞ்சம் துள்ளலிருந்தது. அதை கேட்க விருப்பமில்லாதவள், அழைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலகத்தை அடைந்தாள்.
“துளசி, வந்துட்டீயா? எந்த சைட் பார்க்கப் போன? சந்தோஷ் சார் லஞ்ச்ல எல்லாத்தையும் சொன்னாரு...” என்ற தேனருவி நடந்ததை விசாரிக்க, பதிலளித்துக்கொண்டே அவள் வடிவமைத்தவற்றை ஒருமுறை சரி பார்த்தாள் துளசி.
“துளசி, உங்களை சார் கூப்பிட்டாரு!” அஸீம் வந்து அழைத்ததும், வேந்தனின் அறைக்குள் நுழைந்தாள்.
“துளசி, ஐ திங்க் நீங்க இன்னும் சாப்பிடலை. ஹம்ம், போய் சாப்ட்டு வாங்க!” என்றவன் கரிசனத்தில் அவனை ஆழ்ந்து பார்த்தாள் துளசி. அந்தப் பார்வையைத் தவிர்க்க இவன் ஜன்னல்புறம் திரும்பினான்.
“இப்போ போய் சாப்பிடணும்!” கட்டளையாய் அழுத்தமாய் வந்தக் குரலை அலட்சியம் செய்தவள், வெளியேறினாள்.
தன்னிடத்திற்குச் சென்று துளசி அமர, சில நிமிடங்களில் அஸீம் வந்துவிட்டார். “ம்மா, துளசி நீங்க சாப்டலையா? போய் சாப்ட்டு வந்து வேலை பாருங்க!” என்று அவர் கூற, அவள் பதிலளிக்கும் முன், “ஏய் துளசி, இன்னும் சாப்பிடலையா டி நீ, டைம் என்ன ஆச்சு?” என்று தேனருவி தோழியை முறைத்தாள்.
“இல்லை தேனு, பசிக்கலை...” என இவள் மறுக்க, “ப்ம்ச்... அதெப்படி பசிக்காம இருக்கும். நீ போய் சாப்பிடு, இல்ல சந்தோஷ் சாரைக் கூப்பிடவா?” என தேனு கேட்க, “சரி, சரி. சாப்பிட்றேன்!” என்றவள் பணிமனையை நோக்கி நகர, வேந்தன் இதழ்களில் வெற்றிப் புன்னகை.
பசிக்கவில்லை என உதடுகள் பொய்யுரைத்தாலும், வயிற்றில் இன்னுமே அமிலம் சுரந்து கொண்டிருக்க, நன்றாக உண்டுவிட்டு வந்தாள் துளசி. இப்போது உடலில் தெம்பு வந்தது போலிருக்க, எதுவும் பேசாது வேலையை கவனிக்கச் சென்றாள்.
மேலும் ஒருவாரம் வேகமாய் கடந்திருந்தது. துளசியும் சந்தோஷூம் அலுவலகத்தில் சந்திக்க வாய்ப்புகள் குறைந்து போயிருந்தன. இவனுக்கு வெளி வேலை இருந்தால், அவளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அழுத்தியது. அதனாலே பேசிக் கொள்ள சந்தர்ப்பங்கள் அமையவில்லை. வேந்தன் அமையவிடவில்லை என்பதே உண்மை.
அதுவுமில்லாது இந்த ஒரு வாரம் துளசி வேந்தனிடம் கூடப் பேசவில்லை. அவரவர் வேலையே பிரதானமாய் இருக்க, ஒருவர் முகத்தை மற்றவர் காண நேரமில்லாது ஓடினர். வேந்தனும் அலுவலகம் வரும் நேரம் குறைந்துவிட, கட்டிடங்கள் மற்றும் நிலங்களைப் பார்வையிடச் சென்றுவிட்டான்.
சந்தோஷ் துளசிக்கு அலைபேசியில் அழைத்துதான் பேசினான். அதுவும் பெரிதாய் இல்லாது ஓரிரண்டு வார்த்தைகளிலே துளசி பேச்சை முடித்திருந்தாள். அவளுக்கு, வேறுவீடு பார்க்க வேண்டும் என்ற பெரிய பொறுப்பொன்று புதிதாய் உதித்திருக்க, அதிலே அவளது கவனம் சென்றது.
உறவினர்கள் நட்புகள் எனத் தெரிந்தவர்கள் மூலம் இரண்டு வீட்டைக் கண்டுவிட்டு வந்தவளுக்கு அதில் திருப்தி இல்லை. அவர்கள் மூவருக்கும் சிறிய வீடாய் இருந்தாலும் போதுமென்று நினைத்திருந்தாள். ஆனால், கண்ணப்பன் தங்குவதற்குக் கண்டிப்பாக ஒரு தனியறை வேண்டும். அதுவும் பெரிதாய் வீடுகள் இல்லாத தனிவீடாய் இருந்தால்தான் அவரது கத்தல்கள், கூச்சல்கள் என எதுவும் சுற்றி இருப்பவர்களைப் பாதிக்காது என அது போல ஒரு வீட்டைத் தேடினாள். மாலை அலுவலகம் முடிந்தவுடன் வீடு தேடும் பணியில் இறங்கினாள். அதனாலே இரவு தாமதமாக வீடு வந்தாள்.
“அக்கா, நீ டைம்க்கு வீட்டுக்கு வந்து ஒன் வீக் மேல ஆகுது. ஆஃபிஸ் டைமிங் ஆறு தானே? எதுக்கு இவ்வளோ நேரம் வச்சிருக்காங்க!” எனக் கேள்வி கேட்ட சோனியாவிடம் பொய்யுரைத்து மழுப்பிவிட்டாள். தங்களுக்கு ஏற்ற வீடு கிடைத்ததும், தங்கையிடம் தாயிடமும் கூறி அவர்களை அழைத்துச் செல்லலாம் என எண்ணி எதையும் கூறவில்லை.
“வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா துளசி?” எனக் கவலையுடன் கன்னம் வழித்தத் தாயின் கரங்களை எடுத்து முகத்தோடு அழுத்திக் கொண்டவளுக்கு அழ வேண்டும் என்றொரு எண்ணம். ஆனாலும் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. இன்றைக்கு ஒரு வீடு பார்க்க சென்றிருந்த இடத்தில் வீட்டின் உரிமையாளர் பேசிய பேச்சில் இவளுக்கு அத்தனை கோபம். ஓரளவிற்கு இவர்களுடைய தேவைக்கு ஏற்ற வீடாய் இருக்கிறது என அவள் உரிமையாளரிடம் மற்றவற்றை விசாரிக்க, அத்தனை கெடுபிடிகள் அவரது பேச்சில்.
அதையெல்லாம் ஏற்று இவள் தயங்கித் தயங்கித் தன் தந்தையின் விஷயத்தைக் கூற, “ஏம்மா... குடும்பத்துக்குத்தான் நாங்க வீட்டை வாடகைக்கு விடுவோம். பைத்தியக்காரரை வச்சிட்டு வீட்டைக் கேட்குறீங்க, அக்கம் பக்கத்துல யாரும் குடியிருக்க வேணாம்னு நினைக்குறீங்களா?” என அவர் பேசப் பேச, இவள் அதை எதிர்பார்த்திருந்தாலும் தாங்காது மனம் மொத்தமாய் தளர்ந்தது. அந்தப் பேச்சு வேறு இவளது கோபத்தைத் தூண்டிவிட்டது.
“போதும் நிறுத்துங்க, உங்களுக்கு வீடு கொடுக்க இஷ்டம் இல்லைன்னா, இல்லைன்னு சொல்லுங்க. தேவையில்லாம பேச வேணாம்!” என துளசியும் பதிலுக்குப் பேசிவிட்டு வந்திருந்தாலும், இன்னுமே உடலில் மெல்லிய நடுக்கம்தான். எப்படி வேறொரு வீடு பார்த்து குடிபுகப் போகிறோம் என்ற எண்ணமே ஏதோ சுமக்க முடியாத பாரத்தை முதுகிலேற்றி வைத்தது போல கனத்தது.
“துளசி, துளசி... போ, போய் முகத்தைக் கழுவி ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா டா. நான் சூடா தேசையை சுட்றேன். புள்ளை மெலிஞ்சுட்டே போற நீ!” என்றவரின் கனிவான வார்த்தைகளில் விழியோரம் துளிர்த்த நீரை சிறிய புன்னகையில் அடக்கியவள், அறைக்குள் நுழைந்தாள். இப்போது யாருமில்லாத அறையில் தேற்ற ஆளற்ற அழுகையில் கன்னங்கள் நனைந்தன.
இத்தனை நேரம் முகத்திலிருந்த அரிதாரங்கள் கண்ணீரில் கரைந்தன. விசும்பலிலிருந்து மெல்ல மெல்ல உடைந்தழ ஆரம்பித்தது குரல். கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டாள். கரங்களும் நனைந்தன.
‘யாரேனும் என் துயரங்களை, பாரங்களை கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்களேன்!’ என்று ஆதுரமாய் ஒரு கரம் நீளாதோ என்ற ஏக்கமெல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். இத்தனை நாட்கள் எத்தனையோ துயரங்களை கடந்திருந்தாலும், இன்று அவளால் சுத்தமாய் முடியவில்லை.
எங்கேயும் உடைந்துவிடக் கூடாது என்ற உறுதியெல்லாம் சில நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருந்தது. சகிப்புத்தன்மை கூட கரைந்து கொண்டிருந்தது. எப்போதும் அமைதியாய் இருக்கும் மனம் கூட அரற்றத் தொடங்கியிருக்க, எதிலுமே கவனம் செல்லவில்லை. இப்போது வேந்தன் எல்லாம் சிந்தனையில் பின்னகர்ந்திருந்தான். சில பல நிமிடங்கள் அழுகையில் கவலைகளைக் கரைக்க முயன்றாள்.
“அக்கா... அக்கா!” என்ற சோனியாவின் குரலில் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தவளுக்கு பேச வார்த்தை உடனே வரவில்லை.
“அக்கா, பசிக்குது கா. வா சாப்பிடலாம்!” மீண்டும் சோனியா கூற, “ஹம்ம்... சோனி ஒரு டூ மினிட்ஸ்!” என்று மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். வெளியே வரும்போது முகத்திலிருந்த அழுகை, சோகம் என அனைத்தையும் உதட்டுப் புன்னகையில் மறைத்திருந்தாள்.
“ஹம்ம்... ஏன் கா, ட்ரெஸ் தானே மாத்தப் போன? குளிக்கிறதுக்கு கூட இவ்வளோ நேரம் ஆகாது. ரெஸ்ட் ரூம்ல தூங்கிட்டீயா?” என சின்னவள் கேலியாய் வினவ, தங்கை காதைப் பிடித்துத் திருகினாள் துளசி.
“ஆ... அக்கா, வலிக்குது!” சோனியா துள்ள, “சண்டை போடாம சாப்பிடுங்க...” என்ற அதட்டலுடன் வசுமதி இருவருக்கும் தோசைகளைச் சுட்டுக் கொடுத்தார். துளசி உண்டு முடித்தவள், “ம்மா... நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. நான் சுட்றேன்!” என அவரை உண்ண வைத்தவள், கண்ணப்பனுக்கு உணவை எடுத்துக் கொண்டு சென்றாள்.
இவளைக் கண்டதும் அவர் அருகிலிருந்த தண்ணீர் பொத்தலைத் தூக்கியெறிந்தார்.
“ப்பா... என்ன பண்றீங்க?” என சின்ன சிரிப்புடன் அவரருகே சென்று அமர்ந்தாள். முகத்தைத் திருப்பியவர், உண்ண மறுத்தார்.
“ப்பா... நீங்க இப்போ சமத்தா சாப்டீங்கன்னா, இந்த வாரம் வெளியப் போகலாம்!” என்றாள் குழந்தைக்கு ஆசைக் காட்டும் தாயாக.
“பொய்! பொய்... நீ ஏமாத்துற என்னை. போ, வெளிய போ துளசி!” என அவளது கையைப் பிடித்து இறுக்கினார். பிடி வன்மையாய் இருக்கவும், வலி அதிகமாகி கண் கலங்கியது அவளுக்கு.
“அப்பா, வலிக்குது பா!” என மகள் கூறியதும், கையை விட்டுவிட்டார் கண்ணப்பன். அவளையே சில நொடிகள் பார்த்தவர், பின்னே முகத்தை ஜன்னல்புறம் திருப்பினார். மெதுவாய் அவரிடம் பேசி சமாதானம் செய்து உணவை உண்ண வைத்தவள், மாத்திரையும் கொடுத்தாள். இன்னும் இரண்டு நாட்களுக்கே மாத்திரைகள் இருக்க, தந்தையை மாதந்திர மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நினைவு எழுந்தது. வசுமதியும் நேற்று அவளுக்கு நினைவுப் படுத்தியிருந்தார்.
“மிஸ் துளசி, உங்கப்பாவுக்கு முன்னாடி விட இம்ப்ரூமெண்ட் நல்லா தெரியுது. உங்களால முடிஞ்சா, நீங்க அவரை இங்க ஸ்டே பண்ண வைங்க. கொஞ்சம் ஈஸியா ரெக்கவர் பண்ணலாம். காசுக்காக யோசிக்காதீங்க!” என ஒவ்வொரு முறையும் கூறும் மருத்துவரிடம் தலையை மட்டும் அசைத்து வைப்பாள். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் எதையும் எடுக்க மாட்டாள்.
மருத்துவமனையிலே தங்க வைத்து மருத்துவம் பார்க்க குறைந்தது ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே, அவளை இந்த விஷயத்தில் பின்னடையச் செய்திருந்தது. ஆரம்பக் காலத்தில் கண்ணப்பனை மருத்துவமனையில் தங்க வைத்துதான் மருத்துவம் பார்த்து வந்தாள். ஆனால் செலவை சமாளிக்க முடியாதுதான் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று வருகிறாள்.
அரசு மருத்துவமனையில் பார்க்கலாம் என உறவினர்கள் கூறியும் இவள் அதற்கு செவிசாய்க்கவில்லை. என்னவோ மனதிற்கு அதை செய்ய விருப்பமில்லாதிருக்க, அந்த எண்ணத்தையே அப்படியே விட்டிருந்தாள்.
“ம்மா... எதுக்கு நைட்டே பாத்திரத்தை எல்லாம் கழுவிட்டு இருக்க. நாளைக்கு எனக்கு காலேஜ் லீவ், நான் மார்னிங் பண்றேன்!” என வசுமதியிடம் கூறியத் தங்கையை இவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“நாளைக்கு ஓடி கா. அதான் லீவ்!” என்றவள் அறைக்குள் நுழைய, துளசியும் உள்ளே வந்தாள்.
“ஏன் நாளைக்கு ஓடி சோனி?” இவள் யோசனையாய்க் கேட்டாள்.
“அது... ஜூனியர்ஸ்க்கு இன்னும் ப்ரெஷர்ஸ் கொடுக்கலை. இப்போதான் கொடுக்கப் போறாங்க. நான் போகலை!”
“ஏன் போகலை, ஜாலியா இருக்கும் இல்ல சோனி, போய்ட்டு வா!” என்றாள்.
“ச்சு... அதெதுக்குப் போய்ட்டு கா. எனக்கு இஷ்டம் இல்ல!” என்றவள் பேச்சில் துளசி, “ஏன் காசு எதுவும் வேணுமா சோனி?” என சரியாய்க் கணித்துக் கேட்டாள்.
“இல்லையே... அதெல்லாம் ஒன்னும் இல்ல கா. ஹம்ம், சொல்ல மறந்துட்டேன்... நெக்ஸ்ட் வீக் செமஸ்டர் ஃபீஸ் கட்டணும் கா. அதுக்கு ஒரு பத்தாயிரம் வேணும் கா!” என்றாள் தயங்கியபடி. ஏற்கனவே கேட்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்ததுதான். தேர்வுக்குக் கட்டும் பணமே துளசி எத்தனை கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்கிறாள் என சோனியா அறிந்ததே. அதனாலே கல்லூரி விழாவிற்கு செல்லவில்லை. தங்கையின் முகத்திலே அகத்தைக் கணித்தத் துளசிக்கு இன்னுமே வருத்தமும் பாரமும் கூடிப் போனது.
“சாரி சோனி!” எனத் தங்கையை அணைத்துக் கொண்டாள்.
“ப்ம்ச்... அக்கா, இப்போ அங்கப் போய் என்ன பண்ணப் போறேன் நான். எக்ஸாம்க்குப் படிக்க டைமே இல்லை, நாளைக்குத்தான் கொஞ்சம் படிக்கணும்!” என்றாள் சமாதானமாய். சில நிமிடங்களில் இருவரும் பிரிந்தனர்.
“இன்னும் தூங்கலையா ரெண்டு பேரும்... படுங்க!” அதட்டலுடன் பாயைக் கீழே விரித்த வசுமதி விளக்கை அணைக்க, இருவரும் கட்டிலில் விழுந்தனர். உறக்கம் விழிகளைத் தொட்டும் தொடாமலும் வந்து சென்றது.
மறுநாள் காலையில் துளசி விரைவாய் எழுந்து கிளம்பினாள்.
“சைட் விசிட் மா, அதான் சீக்கிரம் கிளம்பணும்!” என்றவள் அவசர அவரமாக உண்டுவிட்டு நேரே சென்றது வாடகைக்கு வீடு பார்த்துத் தரும் தனியார் நிறுவனத்திற்குத்தான்.
உள்ளே சென்றவள் வீடு பார்க்க வேண்டும் என்று கூறி தன் குடும்பத்தைப் பற்றி உரைத்தாள்.
“ஓகே மேடம், நீங்க உங்கப்பாவுக்கு ஏத்த மாதிரி வீடு தேடுறீங்க. புரியுது, பட் சிட்டிகுள்ள கிடைக்கிறது கஷ்டம். கொஞ்சம் அவுட்டர்ல பார்த்தா உங்களுக்கு ஓகே வா?” எனக் கேட்டான் அந்த வாலிபன்.
சில நொடிகள் யோசித்தவள், “ஓகே தான், பாருங்க!” என்றாள்.
“சரிங்க மேடம், உங்க தேவைக்கு ஏத்த மாதிரி வீட்டைத் தேடீட்டு உங்களைக் காண்டாக்ட் பண்றோம். நீங்க ஒரு டூ தௌசண்ட் முன் பணம் கட்டணும்!” என்றவனிடம் மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனக் கேட்டு தந்தையின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த பணத்தில் இரண்டாயிரம் எடுத்துக் கொடுத்த துளசி அலுவலகத்தை நோக்கிச் சென்றாள். சோனியாவின் தேர்விற்கும், வீடு பார்ப்பதிற்கான மீதப் பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என யோசித்துக்கொண்டே சென்றவளுக்கு நகைகள் அடகு வைக்கும் கடை தென்பட்டது.
அங்கேயே நின்றவளுக்கு மூக்கிலிருந்த மூக்குத்தி நினைவு வந்தது. எத்தனையோ பணக் கஷ்டங்கள் வந்தப் போதும் அதை விற்காமல் வைத்திருந்தாள். அது கண்ணப்பன் அவளுக்கு ஆசையாய் வாங்கிக் கொடுத்தது. இப்போதைக்கு தங்கமென்று கூற அந்த மூக்குத்தியைத் தவிர அவளிடம் நகை எதுவும் இல்லை. கழுத்தில் போட்டிருந்த மெல்லிய கழுத்தணியும் வெள்ளிதான்.
சில நிமிடங்கள் யோசித்துப் பின் வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளின் கைகள் அந்த மூக்குத்தியைக் கழட்டின. அதை தன் கைக்குட்டையில் நன்றாய் துடைத்தவள், “இந்த மூக்குத்தியை விக்கணும் சார், எவ்வளோ தருவீங்க?” எனக் கேட்கவும், கடை உரிமையாளர் அதன் எடையைக் கணக்கிட்டார்.
“ஹம்ம்... நாலு கிராம்க்கு கம்மியா இருக்கு மா. ஒரு பதினறாயிரம் தரலாம் மா!” என்றார்.
“சரிங்க சார், இதை எடுத்துட்டுப் பணத்தைக் கொடுங்க!” என அதை விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொண்டாள். இந்தப் பணம் செலவுகளை சமாளிக்கப் போதும் என்றதும் தற்காலிக தீர்வில் மனம் நிம்மதியடைந்திருந்தது. வாகனத்தின் கண்ணாடியில் பார்க்க, முகத்தில் ஏதோ குறையாய் தெரிந்தது.
இப்படியே சென்றால் நிறைய கேள்வியெழும் எனத் தோன்ற, பழைய மூக்குத்தியை நகலெடுத்தது போல ஒன்றை வாங்கி அணிந்து கொண்டாள். அத்தனை எளிதில் இனம் கண்டறிய முடியாத வகையில் இருக்கவும், உதட்டில் நிம்மதியானப் புன்னகை உதிர்ந்தது.
அலுவலகம் நுழைந்ததும், “துளசி, இன்னைக்கு புதுசா ஒரு டிஷ் ட்ரை பண்ணேன். நீ சாப்ட்டு எப்படி இருக்குன்னு சொல்லு டி!” தேனருவி வந்ததும் அவளைப் பிடித்துக் கொள்ள, பேச்சினூடே வேலை சென்றது.
சந்தோஷ் வேலைக்குத் தாமதமாகத்தான் வந்தான். ஒருவாரம் கழித்து அவனைக் கண்டதும் துளசி, “ஹாய் சீனியர்!” என்றாள் மலர்ந்து. ஆனால், சந்தோஷ் முகத்தில் புன்னகை இல்லை. சோர்ந்து தெரிந்தான். ஒரு வாரத்தில் உடல் லேசாய் மெலிந்ததிருந்ததைக் கவனித்தவளுக்கு, முகத்தில் அத்தனை யோசனை.
“ப்ரேக்ல பேசலாம் துளசி. உன்கிட்ட பேசணும்!” என்றவன் குரலே சோர்வாய் வந்தது. இவளுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்ற, தலையை அசைத்து வைத்தாள்.
அவன் கூறியது போல இடைவேளை நேரத்தில் இருவரும் பணிமனையில் அமர்ந்திருந்தனர். “சீனியர், ஏன் டல்லா இருக்கீங்க? என்னாச்சு, எதுவுமே பேச மாட்றீங்க?” என கனிவாய்க் கேட்டாள். அவளது கரத்தை எடுத்துத் தன் கைகளுக்குள் புதைத்தவன், “நம்ப கல்யாணம் பண்ணிக்கலாமா துளசி, இந்த மாசமே?” எனக் கேட்டவன் குரலில் தவிப்பும் வேதனையும் எஞ்சியிருக்க, துளசி செய்வதறியாது அவனை நோக்கினாள்.
தூறும்..