- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 5
தனது கணினியில் தலையைப் புதைத்திருந்தாள் துளசி. அவள் வடிவமைத்துத் தர வேண்டிய இரண்டு கட்டிடங்களின் வாடிக்கையாளர்களும் அன்றே தருமாறு வற்புறுத்தி இருந்தனர்.
“இன்னைக்குத்தான் நல்ல நாள் மேடம். நாளைக்கு அஷ்டமி, அதனாலே இன்னைக்கே டிசைன் பைனலைஸ் பண்ணிக் கொடுங்க. எங்கம்மா ரெண்டு தடவை சொல்லிவிட்டாங்க!” என்ற வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்று அன்றைக்கே வடிவமைத்து தருவதாய் ஒப்புக்
கொண்டிருந்தாள் துளசி.
இளவேந்தன் காலையில் அலுவலகம் வரவில்லை. தற்போதைக்கு கட்டி முடிக்கும் தருவாயிலிருந்த கட்டிடம் ஒன்றை மேற்பார்வையிட சென்றிருந்தான். இரண்டு நாட்கள் அலுவலகத்தை ஓரளவுக்கு கணித்தவனுக்கு, அடுத்ததாக இதைக் கவனிக்குமாறு காலையிலே பணித்திருந்தான் மகிழ் வேந்தன்.
“வேந்தா, இன்னைக்கு குமரேசன் அங்கிள் வருவாரு. அவரோட போய் சைட்டைப் பாரு. எதாவது டவுட் இருந்தா அவர்கிட்டே கேளு!” என்று அலுவலகம் கிளம்பும் மும்முரத்தில் மகிழ் கூற, வேந்தன் சரியென்பதாய் தலையை அசைத்தான்.
“ப்ம்ச்... என்ன மகிண்ணா, வேந்தா ப்ரோ ஆஃபிஸ் தவிர எங்கேயும் போக மாட்டாரு. அவருக்கு அங்கதானே மெயின் ஜாப்!” என்ற சைந்தவி தன் கல்லூரிப் பையை எடுத்துத் தோளில் மாட்டினாள். அவளது விழிகள் தமையனை ஓரக் கண்ணால் நோட்டமிட்டன. உதட்டோரம் குறும்பு வழிந்தது.
இளவேந்தன் நிமிர்ந்து அவளை முறைத்தான்.
“சைந்து, ஆஃபிஸ் வொர்க் மட்டும் இல்ல, சைட்டும் விசிட் பண்ணணும். அதுவும் முக்கியம்தான்!” என்ற மகிழ் விடை பெற்றான்.
“ஹக்கும்... பேசாம அண்ணியையும் சைட்டடிக்க, சாரி, சாரி சைட் விசிட்க்கு கூட்டீட்டுப் போ வேந்தா!” அவன் செவியருகே குனிந்து முணுமுணுத்த சைந்தவி ஓடியேவிட்டாள்.
“சைந்து...” என வேந்தன் அதட்ட, “காலேஜ்க்குப் போகும்போது அவன்கிட்ட என்னடி வம்பிழுக்கிற?” என்ற நளினியின் குரல் காற்றில் கலந்திருந்தது.
“என்னக் கொழுந்தனாரே, என்ன மேட்டர் ஓடுது உங்களுக்கும் அவளுக்கும். ரெண்டு நாளா குசுகுசுன்னு பேசிட்டே இருக்கீங்களே!” தீக்ஷிதா ஆரண்யாவைப் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு உள்ளே வந்ததும் வராததுமாய் வேந்தன் முன்பு கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். அவளது பார்வை இவன்மீது அழுத்தமாய்ப் படர்ந்தது.
“ச்சு... அண்ணி, அதெல்லாம் ஒன்னும் இல்ல. இவ சும்மா கிண்டல் பண்றா, அவ்வளோதான்!” என்றவனின் குரல் தடுமாறியது. தீக்ஷி முகத்தைக் காணாது பதிலளித்தான்.
அவனை நம்பாத பார்வைப் பார்த்தவள், “இது சரியில்லை...” எனத் தலையை அசைத்து நகர்ந்தாள்.
தன்னை தடுமாறச் செய்த துளசி மீது இப்போது கோபம் வந்தது. தங்கையை நினைத்தொருபுறம் சினம் பொங்கப், பல்லைக் கடித்தான். அவனை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காது குமரேசன் வந்து சேர்ந்தார். அவருடன் சேர்ந்து கட்டிடத்திற்குச் சென்றான். தொன்னூறு சதவீதம் கட்டி முடிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய வீட்டை இருவரும் சுற்றி வந்தனர்.
“இந்த மாசம் இதுதான் பெரிய ப்ராஜெக்ட் தம்பி. எலிவேஷன் போட்டுட்டு, பைப்பிங், எலக்ட்ரிக்கல் வொர்க் பண்ணா எல்லாம் ஓவர்...” என்று அவர் கூற, தலையை அசைத்தான்.
“ப்ரண்ட்ல ஏன் இவ்வளோ ஸ்பேஸ் அங்கிள். ஒரு டென் இஞ்சஸ் எக்ஸ்ட்ரா எடுத்திருந்தா, ஹெட் ரூம் இன்னும் பெருசா இருந்திருக்கும் இல்ல?” என வினவினான்.
“தம்பி, இந்தக் க்ளையண்ட் இப்படித்தான் வேணும்னு கேட்டாங்க. முன்னாடி இருக்க இடம் கார் பார்க்கிங்னு பிக்ஸ் பண்ணியாச்சு. இது பதினைஞ்சாயிரம் ஸ்கொயர் பீட் வரும். சோ, இன்டீரியர்ல இருந்து டிசைன் வரைக்கும் ஆர்க்கிடெக் டிபார்ட்மெண்ட்தான் பார்த்தாங்க...” என அவர் பதில் அளித்தார்.
புது முதலாளி வந்திருக்கிறார் என்றதும் ஊழியர்கள் வந்து இவனைப் பார்த்து பேசிவிட்டு சென்றனர். கட்டிடப் பொறியாளரும் வந்து வேந்தனிடம் நின்று ஓரிரு வார்த்தைகள் சம்பிரதாயத்திற்காக உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.
அடுத்ததாக அருகே கட்டிக் கொண்டிருக்கும் வேறொரு கட்டிடத்திற்கு இருவரும் செல்ல, இளவேந்தன் கைகள் அலைபேசியை உயிர்பித்தன. அதில் அலுவலகத்திலிருக்கும் கண்காணிப்பு கருவியை இணைத்திருந்தவன், அதை ஓடவிட்டான்.
அவனது பார்வை துளசியை வட்டமிட்டது. தீவிரமாகத் தன் பணியில் மூழ்கியிருந்தாள். இடையிடையே தேனருவி அவளிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகள் பதிலளித்த வண்ணமிருந்தாள்.
“துளசி, ஆர் யூ ஓகே?” என்ற சந்தோஷ் குரலில் கவனம் கலைந்தவள், “யெஸ் சீனியர். ஐ யம் ஓகே, என்னாச்சு?” எனப் புரியாது முகத்தைச் சுருக்கினாள்.
“நீ எனக்கு சென்ட் பண்ணியிருக்க டிசைனை ஓபன் பண்ணி பாரு...” என்று அவன் கூறவும், அதைத் திறந்து பார்த்தாள். பின்னர் அவன் முகத்தை மீண்டும் நோக்கினாள்.
“மிஸ்டேக் இருக்கா சீனியர்?” என்றவள் பார்வையை மீண்டும் அந்த வடிவமைப்பின் மீது ஓடவிட்டாள். ஆனால் அவளால் அதை இனம் கண்டறிய முடியவில்லை.
“அங்க ரூஃப் போடணும், நீ ஓபன் டெரஸ் போட்டிருக்க. ஹெட் ரூம் மிஸ்ஸிங்?” என்று அவன் கேட்கவும், துளசி அந்தப் படத்தை ஊன்றிப் பார்த்தாள். அவன் கூறிய இரண்டு தவறுகளையும் செய்திருந்தாள். அப்படியே வரைபடத்தை கட்டிடப் பொறியாளரிடம் கொடுத்திருந்தால், அதில் பெரிய நஷ்டம் ஏற்ப்பட்டிருக்கும் என மூளை பரபரவென ஆராய்ந்தது. எப்போதும் நேர்த்தியுடன் செய்து முடிப்பவள், இம்முறை தவறிழைத்திருந்தாள். மனம் ஒரு நிலையில் இல்லை என்பதை அவளது வேலையே புடம் போட்ட தங்கம் போல மின்னிக் காண்பித்துக் கொடுக்க, சந்தோஷ் என்னவென விசாரிக்க அவளிடம் வந்துவிட்டான்.
“என்னாச்சு மேடம்?” என்றவன் அவளது இருக்கைக்கு அருகே மற்றொரு இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான். அவனது குரலிலும் முகத்திலும் இந்தப் பெண்ணுக்கான கரிசனமும் அக்கறையும் கவிழ்ந்து கிடந்தன.
“சாரி சீனியர், ஏதோ ஒரு ஞாபகத்துல மிஸ் பண்ணிட்டேன். கரெக்ஷன் பண்ணி அனுப்புறேன்...” என்றாள் நலிந்த குரலில். அவனிடம் வேறு எதையும் பகிர முனையவில்லை பெண்.
“அது பரவாயில்லை, நான் பார்த்துக்கிறேன். இப்போ நீ என் கேள்விக்குப் பதில் சொல்லு...” என்றான் விடாப்பிடியாக. அவளுடைய பிரச்சனைகளைக் களைந்தே தீர வேண்டும் என்றொரு தீவிரம் சந்தோஷிடம்.
அவனது முகத்தைப் பார்த்துத் தயங்கியவள், “அது... அது ஒன்னும் இல்ல சந்தோஷ். லஞ்ச் டைம்ல சொல்றேனே. இப்போ இந்த டிசைனை நான் மார்னிங்குள்ள முடிக்கணும் பா, ப்ளீஸ்!” என்றாள் இறைஞ்சலாய்.
'என்னைப் புரிந்து கொள்ளேன்!' என்ற பாவனையைத் தாங்கி நின்ற முகத்தைப் பார்த்த சந்தோஷ், “சரி துளசி, எதுனாலும் பார்த்துக்கலாம். கவலைப்படாத டா, நான் உன் கூட எப்பவுமே இருப்பேன்!” என்றவன் அவளது கரங்களை தன் கைகளுக்குள் பொதிந்தான். அந்த வார்த்தை ஏதோ புதிய தெம்பைக் கொடுத்தது பெண்ணுக்கு. அலைப்புற்றிருந்த மனம் ஆறுதலடைய, உதடுகளில் மெதுவாய் புன்னகை ஏறின. அவனை அன்பாய்ப் பார்த்தாள்.
அவளது புன்னகைத்த முகத்தைப் பார்த்த சந்தோஷ், “திஸ் இஸ் மை துளசி...” என அவளது கன்னத்தில் மெதுவாய் தட்டிவிட்டு நகர்ந்தான். நடந்தவற்றை எல்லாம் ஒருவித முகச் சுளிப்புடன் பார்த்திருந்தான் வேந்தன். ஏனோ இவனுக்கு என்னவென விவரிக்க முடியாததொரு உணர்வு குபுகுபுவென மேலெழும்பியது. வேலை மட்டும் இல்லாவிட்டால் விறுவிறுவென அலுவலகத்திற்குச் சென்றிருப்பான். துளசி அந்தத் தவறுகளைத் திருத்தி சந்தோஷிற்கு அனுப்பினாள். பின்னர், பாதியிலேவிட்ட வேலையைத் தொடர்ந்தாள்.
இவர்கள் கட்டிடத்திற்குச் சென்று இறங்க, அங்கே ஏதோ சிறு சலசலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கட்டிடப் பொறியாளரிடம் அந்தப் பெரிய மனிதர் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தார்.
“சார், என்னாச்சு சார்?” என குமரேசன் ஓடிச்சென்று வினவினார்.
“நீங்க யாரு சார்?” என அப்பெரியவர் கேள்வி எழுப்பினார்.
“நானும் இங்க வொர்க்கர்தான் சார். என்ன பிராப்ளம்?”
“சார், நான் என்ன சொன்னேன்? நீங்க எப்படி கட்டிக் கொடுத்து இருக்கீங்க? ஹம்ம்... பால்கனி பக்கத்துல பெரிய விண்டோ வேணும், டெரஸ்க்கு ஸ்டெப்ஸை உள்ளே வைங்க, இன்டீரியர் க்ரியேட்டீவா இருக்கணும்னு சொல்லி இருந்தேன். ஆனால், எதையுமே நீங்க ஃபாலோ பண்ணாம, உங்க இஷ்டத்துக்கு ஏனோ தானோன்னு கட்டி வச்சிருக்கீங்க? இது என் பொண்ணோட கல்யாணத்துக்கு கிஃப்டா தரப்போற வீடு. அவளுக்குப் பிடிச்ச மாதிரி கட்டணும்னுதான் இங்க வந்தோம். மத்த எல்லா க்ன்ஸ்ட்ரக்ஷனும் ஸ்கொயர் பீட்க்கு ஆயிரத்து எண்ணூறு
ரூவா தான் வாங்குனாங்க. ஆனால், நீங்க ரெண்டாயிரம் போட்டிருந்தாலும், நல்லா பண்ணுவீங்கன்னு நம்பி வந்தோம். இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?” என அவர் மூச்சு வாங்கக் கோபமாகப் பேசினார்.
வேந்தன் தன் மகிழுந்திலிருந்து தண்ணீர் பொத்தலை எடுத்து வந்து அவரிடம் நீட்டியவன், “சார், ரிலாக்ஸ். இந்த தண்ணியைக் குடிங்க, மூச்சு வாங்குது பாருங்க...” அவரை ஆசுவாசம் செய்தவன், “அங்கிள், ஒரு சேர் எடுத்துட்டு வாங்க...” என குமரேசனைப் பணித்தான்.
அப்பெரியவரை இருக்கையில் அமர்த்தியவன், “நீங்க சொன்ன எல்லா ரெக்கொயர்மென்ட்ஸூம் நாங்க செஞ்சுத் தரோம் சார்!” என்ற வேந்தன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு சிறிய புன்னகையுடன் அவரிடம் பேசினான். கோபப்பட வேண்டாம் என்றும் ஒரு வாரத்திற்குள் அந்தத் தவறுகளை சரிசெய்து தருவதாய் தன்மையாகப் பேசினான்.
அவனது பேச்சிலும் அணுகுமுறையிலும் சற்றே மனமிறங்கிய மனிதர், “சரிங்க தம்பி, எல்லாத்தையும் சரி பண்ணிடுங்க. என் பொண்ணுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல மேரேஜ் இருக்கு!” என்றுவிட்டு மேலும் சில பல கோரிக்கைகளுடன் விடை பெற்றார்.
“அங்கிள் சைட் இன்ஜினியரை வர சொல்லுங்க...” என்றவன் அந்த இருக்கையில் அமர்ந்து கட்டிடத்தை நோட்டமிட்டான். என்னென்ன தவறுகள் இருக்கக் கூடுமென அவனது விழிகள் ஆராய்ந்தன.
நெடு நெடுவென ஒருவன் வந்து நின்றான். அவன் முகத்தில் பயரேகைகள் படர்ந்திருந்தன.
“சார், ஐ யம் ஸ்வரூப், சைட் இன்ஜியர்!” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
“ஹம்ம்... சரி சொல்லுங்க ஸ்வரூப், டிசைன் பண்ணதை எக்ஸ்யூட் பண்றதுதானே உங்க வொர்க். அதுல ஏன் இவ்வளோ மிஸ்டேக்? இது கேர்லெஸ்னால தானே?” என்றவன் குரலின் அழுத்தத்தில் இவனுக்கு வியர்த்துப் போனது. புது முதலாளி எப்படி எனத் தெரியாது முதல் நாளே அவனிடம் திட்டு வாங்கப் போகிறோம் என அவன் மனம் பதைத்துப் போனது.
“அது, சார், டிசைன் இன்ஜியர் கொடுத்ததை நான் அப்படியே பண்ணிட்டேன். நான் எந்த மிஸ்டேக்கும் விடலை சார்!” என்று ஸ்வரூப் கூற, இளவேந்தன் குமரேசனைப் பார்த்தான்.
“தம்பி, சந்தோஷ் இல்ல பிரமோத் இரண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தான் பிராஜெக்ட் மேனஜரா இருப்பாங்க!” என்று அவர் பதிலளித்தார்.
“ஓகே, அஸ்க் தெம் டூ கம். தென் டிசைன் இன்ஜினியர் யார்?” என அவன் கேள்விக்கு, “ஷிவதுளசிதான் டிசைன் பண்ணாங்க!” என ஸ்வரூப்பிடமிருந்து பதில் வந்தது. எப்போதும் வடிவமைப்பு பொறியாளர் செய்து கொடுக்கும் வடிவமைப்புகளை திட்ட மேலாளர் சந்தோஷ் சரிபார்த்து எக்ஸ்யூட்டீவ் மேலாளருக்கு அனுப்ப வேண்டும். அவரிடம் அனுமதிப் பெற்ற பின்னர்தான் இங்கே கட்டிடப் பொறியாளர் அந்த வடிவமைப்பைக்கொண்டு தனி வீடு, பல அடுக்குமாடிக் குடியிருப்புகள், பல்பொருள் அங்காடி என அதற்கேற்ப உயிர் கொடுத்து கட்டிடமாக மாற்றுவார்கள். இதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால், கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
“அவங்களை வர சொல்லுங்க...” என்றவன், “ஓகே ஸ்வரூப், உங்க மேல எந்த மிஸ்டேக்கும் இல்லைல. சோ, யூ மே கோ...” என்று அவன் கூறவும், ஸ்வரூப்பின் முகம் தெளியவில்லை. தலையை அசைத்துப் பின், அவ்விடத்தைவிட்டு அகன்றான்.
குமரேசன் சந்தோஷிற்கு அழைப்பைவிடுத்தார்.
“சொல்லுங்க சார்!” என அவன் அழைப்பை ஏற்றான்.
“சந்தோஷ், கந்தசாமின்னு ஒரு க்ளையண்ட்க்கு இங்க நல்லூர்ல வீடு கட்டிட்டு இருக்கோமே, உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என அவர் வினவ, கணினியில் அந்தப் பகுதியில் எங்கே என தரவுகளில் தேடியவன், “ஆமா சார், ஏன், அந்த ப்ராஜெக்ட் கம்ப்ளீட் ஆகப்போகுது தானே?” என வினவினான்.
“ஆமா சந்தோஷ், அந்தப் பில்டிங்ல சின்ன சின்ன மிஸ்டேக்ஸ்னு அந்த ஓனர் கொஞ்சம் சத்தம் போட்டுட்டாரு. சைட் இன்ஜியர் டிசைனரையும் ப்ராஜெக்ட் மேனஜரையும் கைக்காட்டிட்டாரு. அதனால, வேந்தன் தம்பி உங்களையும் துளசியையும் வர சொல்றாரு. இப்பவே வாங்க, வந்து என்னென்னுப் பாருங்க!” என்றார். அவர் பேசத் துவங்கியதுமே அந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பை எடுத்துப் பார்த்தான் சந்தோஷ். எந்தத் தவறும் இருப்பதாய்த் தெரியவில்லை. இருந்தும் நேரில் சென்று விளக்க வேண்டியது அவனுடைய கடமையாகிற்றே. எனவே கணினியைப் பூட்டிவிட்டு கிளம்பினான்.
இவன் சென்று துளசியிடம் விஷயத்தைப் பகிர்ந்தான். எதிர்பார்த்தேன் என்பதைப் போலதான் அவளுடைய முகம் பிரதிபலித்தது. வேந்தன் அலுவலகம் வரவில்லை என்றாலும் அவனுடைய எண்ணத்தை இவள் கணித்திருந்தாள்.
“சீனியர், மார்னிங்குள்ள இதை கம்ப்ளீட் பண்ணணும். ஈவ்னிங் எலிவேஷன் ஒன்னுப் போடணும்!” என்றாள் சலிப்பான குரலில்.
“போய்ட்டு வந்துடலாம் துளசி. வா!” என அவன் நடக்க, இவளுடைய இருசக்கர வாகனத்திலே சென்று இறங்கினர். சந்தோஷ் துளசி பின்னே அமர்ந்து வந்தான். நீண்ட நாட்கள் கழித்தான அவளுடனான பயணத்தில் அவனது முகம் மலர்ந்திருந்தது.
அவர்கள் வந்து இறங்க, குமரேசன் வந்துவிட்டார்.
“வாம்மா துளசி, வா சந்தோஷ்!” என்றவர், இளவேந்தனிடம் அழைத்துச் சென்றார்.
துளசியை ஆழப் பார்த்தவன், “ஹம்ம் மிஸ்.ஷிவதுளசி, இந்த ப்ராஜெக்ட் நீங்கதானே டிசைன் பண்ணீங்க?” எனக் கேட்டான். இவளது தலை 'ஆமாம்' என்பதாய் அசைந்தது.
“ஹம்ம், சந்தோஷ் நீங்க அதைக் கரெக்ஷன் பார்த்து அப்ரூவ் பண்ணி இருக்கீங்க. ஆனால், கஸ்டமர் சொன்ன நிறைய ரெக்கொயர்மென்ட்ஸ் இதுல வரலை அண்ட் லாட் ஆஃப் மிஸ்டேக். என்ன பண்ணலாம் சொல்லுங்க!” என வினவினான்.
“சாரி சார், எங்க சைட் எந்த மிஸ்டேக்கும் இல்ல. வி ஹேவ் டன் அவர் வொர்க் பெர்பெக்ட்லி. யூ கேன் செக்!” என்ற சந்தோஷ் கையோடு எடுத்து வந்திருந்த கோப்பை அவனிடம் நீட்ட, அதை வாங்கிப் பார்த்த வேந்தனின் முகம் யோசனையானது. அந்த வாடிக்கையாளர் கந்தசாமி கேட்டது போல அவர்கள் சரியாய் வடிவமைத்திருக்க, ஸ்வரூப் மீதுதான் தவறென புரிந்தவன், “அங்கிள், கால் ஸ்வரூப்!” என்றான் கோபமாய்.
ஸ்வரூப் அமைதியாய் வந்து நின்றான். “ஹம்ம்... இந்த டிசைன்ல தானே மிஸ்டேக் சொன்னீங்க ஸ்வரூப், எங்க என்ன மிஸ்டேக்குன்னு கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க!” எனக் கோபமாய் அவன் முன்னே கோப்பை நீட்டினான். அதை வாங்க முற்படாத ஸ்வரூப், “சாரி சார்!” என்றான் தலையைக் குனிந்து.
“வாட் சாரி, செஞ்ச மிஸ்டேக்கை அக்செப்ட் பண்ண பழகுங்க. இதுதான் லாஸ்ட் வார்னிங். இனிமே இந்த மாதிரி மிஸ்டேக் வந்துச்சுன்னா, உங்களை வேலையைவிட்டுத் தூக்க வேண்டியது வரும்!” என்றவன், “அங்கிள், இதுக்கு ஆகுற நஷ்டத்தை இவரோட சேலரில மந்த்லி மந்த்லி ரெடக்ஷன் பண்ணுங்க...” என்றான் பல்லைக் கடித்து. அப்படியென்ன வேலையில் கவனக் குறைவு என சினத்துடன் மொழிந்தான்.
“சாரி சார்...” என்ற ஸ்வரூப் அமைதியாய் நின்றான். அவனது முகம் அத்தனை பேரின் முன்பு அவமானப்பட்டதில் கன்றி சிவந்திருந்தது. துளசி வேந்தனைக் கோபமாக உறுத்து விழித்தாள்.
‘என்ன மனிதன் இவன்? தவறு செய்வது இயல்புதான். அதற்காக இப்படி செய்ய வேண்டுமா?’ என அவளது மனம் ஸ்வரூப்பிற்காக வருத்தப்பட்டது.
“இங்கேயே நிக்காதீங்க. போங்க!” என்று வேந்தன் வார்த்தைகள் பல்லிடுக்கில் விழ, அவன் அகன்றான்.
“ஓகே சார், நாங்க ஆஃபிஸ் போறோம்!” என்ற சந்தோஷ் பன்மையில் விளித்து துளசியையும் உடன் சேர்த்துக் கொள்ள, “நோ சந்தோஷ், யூ கேன் லீவ். பட், இவங்க... ஹம்ம் துளசி ரைட்... இங்க எலிவேஷன் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணீட்டு வருவாங்க. அதுல எதுவும் மிஸ்டேக்னா, நஷ்டம் ஆகிடும். சோ!” என்றவனின் பார்வை நீ சென்றுவிடு என்பதாய் இருக்க, சந்தோஷ்க்கு எரிச்சல் படர்ந்தது. எதையும் சரியாய் விசாரிக்காது இருவரையும் அலைய வைத்துவிட்டு ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்காத இந்த மனிதன் அவன் மனதிலிருந்து சற்றே இறங்கிப் போனான். அவன் துளசியைப் பார்க்க, அவள் தலையை அசைக்கவும் விடை பெற்றான். அதை வேந்தனின் கண்கள் அசூயையாய் மேய்ந்தன.
துளசி விறுவிறுவென கட்டிடத்தின் உள்ளே சென்றுவிட்டாள். ஸ்வரூப் உள்ளே நிற்க, அவனிடம் சென்றவள், “அண்ணா, எலிவேஷன் டிசைன் பார்த்தீங்களா, அதுல எதுவும் டவுட்ஸ் இருக்கா?” என வினவ, இருவரிடமும் சில நிமிடங்கள் பேச்சு சென்றது. ஸ்வரூப் பதிலளித்தாலும் அவனது முகம் இன்னும் சரியில்லாது இருந்தது.
“அண்ணா, வொர்க்ல மிஸ்டேக் வர்றது சகஜம். சோ, லீவ் இட். நெக்ஸ்ட் டைம் கரெக்டா பண்ணுங்க!” என்றாள் ஆறுதலாய்.
ஸ்வரூப் புன்னகைத்தான். “என் சைட் மிஸ்டேக் இல்ல மா. வொர்க் பண்றவங்க கொஞ்சம் கேர்லெஸ்ஸா பண்ணிட்டாங்க. அதை அவர்கிட்ட சொன்னா, அவங்களுக்குத் திட்டு விழுமேன்னு சொல்லலை. அப்புறம், அவங்களை சரியா கைட் பண்ணலைன்னு என் மேலயும் மிஸ்டேக் இருக்கே!” என விளக்கினான். துளசிக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை. வேலை சம்பந்தப்பட்ட பேச்சிற்குத் தாவிவிட்டு, வெளியே வந்து கட்டிடத்தை ஒருமுறை பார்த்தாள்.
பின்னர் வேந்தனிடம் சென்றவள், “சார், என் வொர்க் ஓவர். ஐ நீட் டூ லீவ்!” என்றாள். அலைபேசியில் எதையோ விரல்கள் மேலும் கீழும் தள்ள, அவளது குரலுக்கு இவன் செவி சாய்க்கவில்லை. துளசிக்கு எரிச்சல் படர்ந்தது.
“சார், உங்கக்கிட்டேதான் சொல்றேன்!” என்று இவள் அழுத்திக் கூறவும், “ஓ... சாரி மிஸ்.ஷிவதுளசி, கவனிக்கலை!” என்று போலி வருத்தத்தைக் குரலில் தேக்கியவன், “ஹம்ம்... உங்களுக்கு இன்னைக்கு நான் வேற வொர்க் அசைன் பண்றேன். சோ, நீங்க இங்கயே இருங்க!” என்றான்.
“நான் பண்ண டிசைன் பாதியிலே இருக்கு சார். இன்னைக்கு ஆப்டர்நூன்க்குள்ள க்ளையண்ட்க்கு தரேன்னு சொல்லி இருக்கேன்!” என்றவளுக்கு அங்கே இருக்க துளியும் விருப்பமில்லை. அதை முகத்திலும் காண்பித்தாள்.
“லுக் துளசி, இங்க நான் தான் எம்.டி. சோ நீங்க எனக்கு ஒபே பண்ணியாகணும். நீங்க ஒருத்தவங்கதான் டிசைன் இன்ஜினியரா? மொத்தம் டென் பீபிள் இருக்காங்க. சோ, யார்கிட்டேயும் மாத்திவிடுங்க!” என்றான் அதிகாரமாக. அவன் முகத்தையே பார்த்திருந்தாள் துளசி. அந்தப் பார்வையில் இவனிடம் கணநேரத் தடுமாற்றம். குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டான்.
தனது அலைபேசியை எடுத்து தேனருவிக்கு அழைத்து அந்த வடிவமைப்பை செய்து முடிக்குமாறு வலியுறுத்திவிட்டுத் துண்டித்தாள்.
“ஹம்ம்... நான் இன்னொரு சைட் விசிட் பண்ணணும். சோ, அதுவரைக்கும் நீங்க இங்கேயே இருங்க!” என்றவன் அவளை அங்கேயே அமரவைத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்.
துளசி என்ன செய்வது எனத் தெரியாது அந்தக் கட்டிடத்தையே சுற்றி வந்தாள். ஒருமணி நேரத்திற்கும் மேல் கடந்துவிட்டது. மதிய உணவு நேரம் வந்துவிட, ஊழியர்கள் உணவுண்ண அமர, இவளுக்கும் பசித்தது. காலையிலும் உணவுண்ணாது வந்திருந்தாள். கண்டிப்பாக இன்றைக்கும் சாப்பிட முடியாது எனப் புரிந்த போதும் இளவேந்தனை நினைத்துக் கோபம் வந்தது. விழிகளும் லேசாய் கலங்கின. கோபத்தை அவனிடம் கொட்ட முடியாத இயலாமையின் வெளிப்பாடு. ஆனாலும் நொடியில் தன்னை சமாளித்திருந்தாள். கண்கள் வாயிலையே வெறித்த வண்ணமிருந்தன. ஆனால் சிந்தனை இங்கில்லை.
காலையிலே வீட்டை அடமானத்திற்கு எடுத்திருந்த வைரமுத்து வந்து பேசிச் சென்றதே, அவளது மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
“இந்தாங்க அங்கிள், இந்த மாசம் வட்டிப் பணம்!” என அவரிடம் இருபதாயிரத்தை நீட்டினாள் துளசி.
அதை வாங்கி எண்ணிய மனிதர், “சரியா இருக்கு மா...” என்றுவிட்டு, எதையோ கூறத் தயங்கினார்.
“என்ன அங்கிள்?” என இவள் வினவ,