- Messages
- 1,104
- Reaction score
- 3,173
- Points
- 113
தூறல் – 4
“மாமா... மாமா!” என்ற குழந்தைகளின் சத்தத்தில்தான் இளவேந்தன் கண்விழித்தான். இருக்கையில் அமர்ந்தவாக்கிலே உறங்கியதை உணர்ந்தவனின் கால்கள் லேசாய் மரத்துப் போயிருந்தன. அதை மெதுவாய் நகர்த்தி உள்ளறையைவிட்டு வெளியே வந்தவன், சாவியை வைத்துப் பூட்டிவிட்டான். ஏனோ அந்த அறை அவனுக்கு மட்டுமேயானது. தனது மனதைப் போல அத்தனைப் பத்திரமாகப் பூட்டி வைத்திருப்பான். குழந்தைகள் என்றாலும் கூட உள்ளே நுழைய விடமாட்டான். தன்னுடைய இசைக் கருவிகளை தன்னைத் தவிர ஒருவரையும் வாசிக்கவும் அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிப்பானா? என்ற கேள்விக்கு என்னவோ எப்போதும் விடை சுழியமாக இருக்கும். ஆனால் இன்று உதடுகள் துளசி என முணுமுணுக்க, முகத்தை அஷ்டக் கோணலாக மாற்றினான்.
தன்னை சுத்தம் செய்து வந்த இளவேந்தன் அவளது நினைவுகளை விரட்ட, குழந்தைகளோடு பேசச் சென்றான். அவர்கள் பேச்சோடு பேச்சாக மீண்டுமொரு பயணத்திற்கும் பனிக்கூழ் மற்றும் திண்பண்டங்களுக்கும் திட்டமிட்டனர்.
“க்ருத்தவ், அனு... இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க?” என்ற சாம்பவி அவர்களை முறைத்தாள்.
“மாமா, வீ நீட் லீவ் டூடே...” என குழந்தைகள் முகத்தைச் சுருக்கினர்.
“க்கா... இன்னைக்கு லீவ் போடட்டுமே. நாளைக்கு நீ கிளம்பு!” என்றான் இளவேந்தனும். அவனது இரண்டு கரங்களும் பிஞ்சுக் கைகளுக்குள் பொதிந்திருக்க, அவனுக்கும் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்றொரு எண்ணம் முகிழ்த்தது.
“அட! இப்பதான் என் தம்பி பிஸினஸ் மேன் ஆகிட்டான். ஆஃபிஸ் கிளம்பி போய்டுவானே. யார் கூட குழந்தைங்க விளையாடுவாங்க?” சிரிப்புடன் உரைத்த தமக்கையை முறைத்தான்.
“ப்ம்ச்... முறைக்காத டா. போ, போய் ஆபிஸ் கிளம்பு. நாங்களும் இவங்களுக்கு லீவ் கிடைக்கும்போது வர்றோம்...” என்றவள், குழந்தைகளை உணவுண்ண வைத்து அழைத்துச் சென்றுவிட்டாள். அவர்கள் குடும்பமாய் விடை பெற, மகிழ் அலுவலகம் கிளம்பிவிட, தீக்ஷி ஆரண்யாவுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
இளவேந்தன் அலுவலகம் செல்லத் தயாராகி உணவுண்ண அமர்ந்தான். சரியாய் அவனுக்கருகே அமர்ந்த சைந்தவி, “அண்ணா, நீ ஆபிஸ் போகும்போது அப்படியே என்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிட்றீயா. இன்னைக்கு காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்...” என்றாள் கெஞ்சலாய். அவள் வார்த்தைகளை இளவேந்தன் கவனித்ததாய் தெரியவில்லை. அமைதியாய் உண்டான்.
“டேய் வேந்தா, உன்கிட்டதான் அவ கேட்குறா. போகும்போது அப்படியே அவளை இறக்கிவிட்றா!” என்ற தாயை முறைத்தவன், “இன்னைக்கு ஏன் லேட்டு?” எனத் தங்கையிடம் வினவினான்.
“அது... அது ண்ணா, இன்டர்னெல் எக்ஸாம் இன்னைக்கு. அதான் மார்னிங் எழுந்து படிச்சுட்டே இருந்தேனா, டைம் பார்க்க மறந்துட்டேன்!” என்றவளின் வார்த்தைகளில் துளியும் மெய்யில்லை என்று உணர்ந்தவன் அவளை ஓரக்கண்ணால் பார்க்க, “போகலாம் வேந்தா...ரொம்ப பண்ற நீ...” என அவனை சமாதானம் செய்தாள் தங்கை. ஆனாலும் இவனது சந்தேகப் பார்வை அவளை மொய்த்தது.
சந்தனவேல் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் எப்போதும் பிள்ளைகளை தங்கள் கண்காணிப்பிலே வைத்திருப்பார். ஆனால் சைந்தவி அவரிடம் அடம்பிடித்து கல்லூரி பேருந்தில் செல்ல அனுமதி வாங்கி, அதில் தான் சென்று வருகிறாள். திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இளநிலை மருத்துவம் இறுதியாண்டில் இருக்கிறாள் அவள். இன்று வேண்டுமென்றே கல்லூரி பேருந்தை தவறவிட்டிருந்த தங்கையின் எண்ணம் இவனுக்கு நொடியில் புரிந்திருந்தது.
இருவரும் உண்டுவிட்டு கிளம்பினர். மகிழுந்து வீட்டின் வாயிலைக் கடந்ததும், தொண்டையைச் செருமிய சைந்தவி கல்லூரி பையிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்தாள்.
“வேந்தா, இது என்னென்னு தெரியுமா? உனக்காகத்தான் நோட்ஸ் எடுத்தேன்!” என்றவளின் உதடுகளில் குறும்பான புன்னகை. அவளைத் திரும்பிக் கேள்வியாய் நோக்கினான்.
“பிசியலாஜிக்கல் சைன்ஸ் அண்ட் சிம்ப்டம்ஸ் ஆஃப் லவ்... ஹம்ம், காதல் வந்துச்சுன்னா, இந்த அறிகுறியை வச்சு கன்பார்ம் பண்ணலாம்னு நிறைய ஜீனியஸ் சொல்லி இருக்காங்களாம்...” என இழுத்தவளை முறைத்தவன், “அமைதியா வா சைந்து...” என்றான் அதட்டலாய்.
“அட! இந்த அதட்டல் எல்லாம் இங்க வேணாம் பையா. நீ நேத்து வராத காலை எடுத்துப் பேசிட்டு நைட்டு எங்கப் போனேன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோ...” என்றாள் மிதப்பாய். இளவேந்தன் நெற்றியை கோதியவாறே அவளைத் திரும்பி முறைக்க முயன்றாலும் முடியவில்லை. அகப்பட்டுக் கொண்ட திருடன் போல மனம்
பரபரத்தாலும் அதை கிடப்பில் போட்டவன், “உன்னை அமைதியா வர சொன்னேன் சைந்து...” என அழுத்தமாய் உரைத்தான்.
“ஆக... நீங்க அக்செப்ட் பண்ண மாட்டீங்க. அதானே ப்ரோ, சரி விடுங்க. உங்களுக்காக இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் கூட உண்டு!” என்றவளின் பேச்சில் வேந்தனின் நெற்றி கேள்வியாய் சுருங்கினாலும் பார்வையை பாதையிலிருந்து அகற்றவில்லை.
“என்னுயிரே என்னுயிரேன்னு நம்ம ஷாரூக்கான் பாடுவாரு இல்ல? அந்தப் பாட்டைக் கேளு வேந்தா. காதல்ல மொத்தம் ஏழு ஸ்டேஜ். இப்போ நீ இருக்குறது ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்... தட் இஸ் அட்ராக்சன். செகண்ட் ஸ்டேஜ் இன்பாக்சுவேஷன்... அப்புறம் மூனாவது ஸ்டேஜ் ரொம்ப இப்ம்பார்டென்ட் ஒன்னு. அதான் லவ்!” என்று சைந்தவி கூறியதும் இவனது கரங்களில் மெல்லிய நடுக்கம் பிறக்க, நேற்றைக்கு துளசியைக் கண்டதும் தோன்றிய உணர்வு இப்போதும் அவனை திகைக்க வைத்து, தடுமாறி சிந்தனையை சிறை செய்திருந்தது. வாகனத்தை நிறுத்திவிட்டான் வேந்தன். முகத்தில் கோப ரேகைகள் படரத் தொடங்கின.
பேசிக்கொண்டே சென்ற சைந்தவி அவனது முகத்தைப் பார்த்து வார்த்தையை விழுங்கிவிட்டாள். “சைந்து, ஷட் அப்! காலேஜ் படிக்கிற வயசுல இதெல்லாம் உனக்கு தேவையில்லாத பேச்சு. அமைதியா வர்றதா இருந்தா என் கூட வா. இல்லைன்னா கீழே இறங்கு...” என்றவன் வார்த்தைகளில் அனல் தெறிக்கவும், இவளுக்கு முனுக்கென்றுவிட்டது.
“ஏன், ஏன் என்னால தனியா போக முடியாதா என்ன? நான் பஸ்ல போய்க்கிறேன். உன்னோட உதவிக்கு நன்றி!” என்று பதிலுக்கு கோபமாய் இரைந்த சைந்தவி கதவில் கைவைத்து வெளியே இறங்கிவிட்டாள்.
“மகியும் அம்மா பார்க்குற பொண்ணைக் கட்டிக்கிட்டான். இந்த அக்காவும் அப்பா பார்த்து சொன்னதும் மாமாவைக் கண்ல பார்க்காமலே ஓகே சொல்லிட்டா. சரி இவனாவது லவ் பண்றானேன்னு ஹெல்ப் பண்ண போனா, ரொம்ப பண்றான் இந்த வேந்தா. போ டா... போ இப்ப என்கிட்ட கத்துன நீதான் ஒருநாள் அந்தப் பொண்ணு முன்னாடி பேச முடியாம திக்கித் திணறுவ. இது என் சாபம் ண்ணா!” எனத் தமையனை மனதில் திட்டிக்கொண்டே அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றாள்.
இளவேந்தன் சில நொடிகளில் தன்னை நிதானித்தவன், “சைந்து...” எனப் பல்லைக் கடித்தவாறு இறங்கி தங்கையை நோக்கி நகர்ந்தான்.
தன்னருகே வந்து நிற்பவனைப் பொருட்படுத்தாத சைந்தவி பேருந்து வருகிறதா என எட்டிப் பார்க்க, “சைந்து, வந்து கார்ல ஏறு!” என்றான் அதட்டலாய்.
“ஒன்னும் தேவையில்லை வேந்தா, நீ கிளம்பு. எனக்கு காலேஜ் போக வழித் தெரியும்!” என சடைத்தாள் இவள்.
“சைந்து, ரோடுன்னு பார்க்க மாட்டேன். அடிச்சுடுவேன், அடம்பிடிக்காம என் கூட வா. பஸ்ல போய் உனக்குப் பழக்கம் இல்ல...” என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.
“எல்லாரும் பழகிட்டா வர்றாங்க. ஐ வில் மேனேஜ்!” என்றவளின் வார்த்தைகள் பாதியில் நின்றிருந்தன.
“டிக்கெட் பின்னாடி எழுதியிருக்கேன் மா. அடுத்த பஸ்ல போங்க...இந்த பஸ் இதுக்கும் மேல மூவ் ஆகாது!” என்ற நடத்துநர் ஒவ்வொருவராய் பேருந்திலிருந்து இறக்கிவிட, துளசியும் அந்தப் பேருந்திலிருந்து இறங்கினாள்.
‘கடவுளே! இன்னைக்கும் லேட் தானா?’ மனம் பதற, விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. அடுத்த பேருந்து எப்போது வருமோ? என்ற எண்ணத்தில் கைக்கடிகாரத்தையும் சாலையும் மாற்றி மாற்றிப் பார்த்த வண்ணமிருந்தாள் துளசி.
“ண்ணா... உன் ஆளு!” தன்னுடைய கோபத்தை மறந்த சைந்தவி வேந்தனின் கைகளை சுரண்டினாள். அவளது குரலை அவதானித்தாலும் அவனுக்குப் புரியலை.
“ப்ம்ச்... வேந்தா, அந்தக் கூட்டத்துல பேபி பிங்க் கலர் சேரில நிக்கிறது உன் ஆளு. நல்லா பாருண்ணா!” என்றவள் வேந்தனது முகத்தைத் திருப்ப, அவனது பார்வையும் துளசியிடம் குவிந்தது. அவளைப் பார்த்ததும் இவனது புருவங்கள் இடுங்கின.
அவளது முகத்தில் பதற்றம் மேவியிருந்தது.
பேருந்து வருகிறதா என ஆராய்ச்சியிலிருந்த விழிகளின் மேல் இமைகள் நிமிடத்திற்கு பத்து முறையாவது அதன் இணையோடு சேர்ந்திருக்கும். இவனது பார்வை அங்கேயே தங்கிவிட, “அண்ணா, அவங்களும் நம்ப ஆபிஸ் தானே. பேசாம கூப்ட்டு போய் ட்ராப் பண்ணலாமா?” என்ற சைந்தவி சிரிப்புடன் தமையனது சிந்தனையைக் கலைத்தாள்.
அவளை முறைத்தவன், “பேசாம வா சைந்து...” எனத் தங்கையை இழுத்துச் சென்றுவிட்டான்.
சைந்தவியைக் கல்லூரியில் இறக்கிவிட்ட வேந்தனைப் பார்த்து நக்கலாய் சிரித்தவள், “பூனைக்குட்டி ஒருநாள் வெளிய வந்துதான் ஆகணும் ப்ரோ. அப்போ பார்த்துக்கிறேன்...” என எக்கி அவன் பையிலிருந்து ஐநூறு ரூபாய் தாளொன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்திருந்தாள். இவன் முகத்தை உர்ரென்று வைத்து அவளை முறைத்தான்.
நேரம் செல்வதை உணர்ந்து அலுவகலத்தை அடைந்தான். துளசி இன்னும் வந்திருக்கவில்லை என மனம் ஓரக்கண்ணால் அவளது இருக்கையைக் கண்டுவிட்டு உரைக்க, அதை கிடப்பில் போட்டுவிட்டு தனதறைக்குச் சென்றான்.
பேருந்திலேறி அலுவலகத்தை அடைய அரைமணி நேரத் தாமதமாகிவிட்டது துளசிக்கு. விரைவில் வந்துவிட வேண்டும் என்றுதான் அரைமணி நேரம் முன்பே கிளம்பினாள். ஆனாலும் விதி சதி செய்திருந்தது.
தாமதமான வருகைப் பதிவேட்டில் முகத்தையும் விரலையும் பதிந்தவள் தன்னிருகைக்கு வந்தாள்.
“என்ன டி, ஏன் இவ்வளோ லேட்?” தோழியொருத்தி வினவ, “பஸ்ல வந்தேன். அதான் லேட்டாகிடுச்சு!” என பதில் அளித்தவாறே கணினியை உயிர்ப்பித்தாள்.
வேந்தனும் அவளது தாமதான வருகையை கவனித்த வண்ணமிருந்தான். “இப்போ நம்ம பண்ணீட்டு இருக்க ப்ராஜெக்ட்ஸ் அண்ட் அதோட டிசைன் அண்ட் லே-அவுட் சார். சைட்ல இன்ஜினியர் பார்த்துப்பாரு. வொர்க்கர்ஸை அதி சார் கைட் பண்றாரு...” அஸீம் கூறியவற்றை தலையசைத்துக் கேட்டவன், ஒவ்வொரு கோப்பாகத் திறக்க, துளசி செய்திருந்த கட்டிட வடிவமைப்பு கண்களில்பட்டது.
“அஸீம், இதை யாரு டிசைன் பண்ணா... ஐ நீட் டீடெயில்ட் எக்ஸ்ப்ளனேஷன்!” என உதவியாளரிடம் கேட்டான்.
“இது... இந்த டிசைன் நம்ம ஷிவதுளசி பண்ணாங்க சார். நான் அவங்களை வர சொல்லவா?” எனக் கேட்டவரிடம் தலையை அசைக்க, அவளுக்கு அழைப்பு செல்லப்பட்டது.
தாமதமாக வந்ததற்குத்தான் கேட்கப் போகிறான் என்றெண்ணி உள்ளே நுழைந்தவளுக்கு அஸீமைக் கண்டதும் நிம்மதி பிறந்தது. அதைக் கண்டவன் இதழ் கடையோரம் புன்னகை முகிழ்க்க, “அஸீம், யூ மே கோ நவ்...” என்றான். அவள் நிமிர்ந்து அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
“ஹம்ம்... தேர்டி மினிட்ஸ் லேட்டா லாகின் பண்ணி இருக்கீங்க. வொய் திஸ் லேட்?” என இளவேந்தன் வினவ, சில நொடிகள் அவளிடம் அமைதி.
“பஸ் ப்ரேக் டவுன் ஆகிடுச்சு சார்!” என்றாள்.
“ஓஹோ... ஒவ்வொரு பஸ்ஸூம் இப்படி பிரேக் டவுன் ஆகி, ஒவ்வொரு ஸ்டாப்க்கும் ஹாஃப் அன் அவர் பெர்மிஷன் கொடுத்தா ஆஃபிஸ் என்னாகுறது மிஸ் துளசி?” என நக்கலாக வினவியவனை இவள் அமைதியாக நோக்கினாள்.
“வெல்... நீங்க லேட்டா வந்ததுக்கு பனிஷ்மெண்ட் என்னென்னா, ஆஃபிஸ் டைம் முடிஞ்சதும் நீங்க ஒரு எக்ஸ்ட்ரா ஹாஃப் அன் அவர் வொர்க் பண்ணுங்க...” என்றவனின் பதிலில் துளசியிடம் நொடி நேரம் திகைப்பு. இது போன்ற நடைமுறை இதற்கு முன்பு அலுவலகத்தில் இல்லையே என்றொரு பாவனை அவளது முகத்தில்.
“யெஸ்... இந்த பனிஷ்மெண்ட் இன்னைல இருந்து எக்ஸ்க்யூட் பண்றோம். அப்படி உங்களுக்கு எக்ஸ்ட்ரா ட்யூட்டி பார்க்க விருப்பம் இல்லைன்னா, நோ இஷ்ஷூஸ். ஹாஃப் டே சேலரியைக் கட் பண்ணிடலாம். ரெண்டு சாய்ஸ் உங்களுக்கு, முடிவு உங்களோடது தான்!” என்றான். அவனுக்குத் தெரியும் அரைநாள் சம்பளத்தை இழக்க துளசி முன்வரமாட்டாள் என்று. அதனாலே வேண்டுமென்றே இப்படி பேசினான். இரண்டு தேர்வுகள் கொடுத்திருந்தவன், தன்னுடைய முடிவைத்தான் அவள் எடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் புன்னகைத்தான். அதன் அர்த்தத்தை அவனைத் தவிர ஒருவரும் அறியார்!
‘இவ்வளவுதானா நீ?’ என இன்றும் ஒரு பார்வையை வீசி அவனுக்குள்ளே இருக்கும் தன்னகங்காரத்திற்குத் தீனிப் போட்டவள், “ஹாஃப் அன் ஹவர் எக்ஸ்டரா வொர்க் பண்றேன் சார்!” என்றாள் அழுத்தமாய்.
அவளது பார்வையிலும் பேச்சிலும் சீண்டப்பட்டவன், “வெல், யுவர் விஷ். இப்போ இந்த டிசைன்ல எனக்கு சில டவுட்ஸ். அதை க்ளியர் பண்ணுங்க...” என்றவன் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை கேள்விகளை அவளிடம் கேட்டறிந்தான். வந்ததிலிருந்து துளசியை அமர சொல்லவே இல்லை. நிற்க வைத்தே கேள்வி கேட்டான். அனைத்திற்கும் பொறுமையாய் பதிலுரைத்தாள். அவளுக்கும் கோபம் வராமல் இல்லை. இருந்தும் அதை காண்பிக்க முடியாத இடத்தில் இருந்தாள். கோபம், ரோஷத்தைவிட இந்த வேலை அத்தனை முக்கி
யமாகப்பட்டது அவளுக்கு. குடும்பம் என்ற வார்த்தை அவளது கோபத்தை அர்த்தமில்லாமல் செய்திருந்தது.