- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 22
வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது.
பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள் எதுவுமே பதிலளிக்கவில்லை.
“நீ ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்ல இருக்க. உன்னால இப்படி பேச முடியுது. பட், ஐ யம் அப்சஸ்ட்... யெஸ், ஐ யம் அப்சஸ்ட் ஆன் திஸ் ஷிவதுளசி. அதனால உன்னை மாதிரி ஈசியா வேண்டாம்னு என்னால தூக்கிப் போட முடியாது!” என்றான் அழுத்தமாக. அவன் பேசியதும் இவளின் கன்னம் உவர்நீரால் நனைந்தது. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடியே அவன் கொடுத்த முத்தத்தின் கதகதப்போடு இந்த வார்த்தைகளையும் உள்வாங்கினாள்.
“முதல் தடவை மீட் பண்ணும்போது, நாயைப் பார்த்து பயந்து என் கையைப் பிடிச்ச பொண்ணை ஏதோ ஒரு வகையில எனக்குப் பிடிச்சது. லைக் ஒரு ஸ்பார்க். ஸ்டேஜ்ல டேன்ஸ் ஆடும்போது இன்னும் ஏதோ ஒன்னு உன்கிட்ட பேச சொல்லி என்னை இன்சிஸ்ட் பண்ணுச்சு. தெரியலை எனக்கு, அப்படி எந்தப் பொண்ணுகிட்டேயும் ஆர்வமா போய் பேசி, பழகுனதும் இல்ல. பட், கேர்ள்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் உண்டு. அதனாலே உன்னை சின்ன ஸ்மைலோட க்ராஸ் பண்ணிட்டேன். ஆனாலும் மனசுல சின்னதா ஒரு சலனம். அதை பெருசாகவிடாம பார்த்துக்கிட்டேன். அப்போ அப்போ அகாடமில எங்கேயாவது இருக்கீயான்னு என் கண்ணுத் தேடும். மீட் பண்ண சான்ஸ் கிடைக்கலை.”
“அன்னைக்கு கேண்டீன்ல எதிர்பாராம சந்திச்சப்போ நானா வந்து உன்கிட்ட பேசினேன். இந்தப் பொண்ணு கிட்ட பேசி பழகிட்டா, சலனம் போய்டும்னு நம்பிதான் உன்கிட்ட ப்ரெண்ட்ஷிப்பை ஸ்டார்ட் பண்ணிட்டேன். பட், இந்த நொடி இந்த ஷிவதுளசியை, என் ஷிவாவை எவ்வளோ பிடிக்கும்னு சொல்லத் தெரியலை டி. இப்போ நீ முடியலைன்னு தேம்பி அழும்போது, உன்னோட கண்ணீரை பார்த்தப்போதான் தெரியுது ஐ யம் ஆப்சஸ்ட் ஆன் யூ.
யெஸ், ஐ லவ் திஸ் கேர்ள். ஐ மேட்லி டீப்லி லவ் யூ!” என அவன் பேசியதும் இவளுக்கு விழிகள் குளம் கட்டின. அந்த வார்த்தைகளில் அதிர்வை தாங்கவில்லை பெண்ணால். உடலில் மெல்லிய நடுக்கம் படர்ந்தது.
“யெஸ், நீ சொன்ன மாதிரி என் ஃபேமிலியா நீயான்ற சூழ்நிலை கண்டிப்பா வரும். பட், ஃபேமிலிக்காக உன்னையும், உனக்காக அவங்களையும் என்னால எப்பவுமே விட்டுக் கொடுக்க முடியாது டி. போராடுவேன், என் உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கவரை போராடுவேன். என் லவ் அவ்வளோ ஈஸியா கிடைச்சுட்டா, அதுக்கு வேல்யூ இல்லாம போய்டுமே. ரெண்டு வீட்டையும் சமாளிச்சு, நமக்காக அவங்களை ஒத்து வைக்க என்னால முடியும்னு நம்பிக்கை என் மேல, என் காதல் மேல இருக்கு. இனிமேலும் அது குறையாது!” என இடைவெளிவிட்டவன்,
“என்னோட ஷிவாவை நான் எப்பவும் உடைய விடமாட்டேன். ஏன்னா, நீ உடைஞ்சா, தூள் தூளா நானும் உதிர்ந்து போய்டுவேன். ஐ லவ் யூ தட் மச். அதனால சாகுற வரைக்கும் இந்தப் பொண்ணை விட்டுக் கொடுக்குற ஐடியா எனகில்லை. எதுவா இருந்தாலும் போராடி பார்த்துடலாம் டி. நினைச்சுப் பார்க்க மட்டும் இல்ல காதல், காலம் முழுக்க சந்தோஷமா வாழ்றதுக்கும் தான் காதல். சந்தோஷமா வாழலாம் ஷிவா. மனசு முழுக்க உன்கூட வாழுறதுக்கு ஆசையும் காதலும் என்கிட்ட நிறைய இருக்கு ஷிவா!” சிந்தி சிதறவிடாது அத்தனை லாவகமாய் தன் பிரியங்களை அவளிடம் கொட்டிவிட்டான். கையை விரித்து வா என்பது போல நின்றவனைப் பார்த்து உதட்டைக் கடித்தவள், ஒரே எட்டில் எக்கி அவனைக் கட்டிக்கொண்டு கழுத்தோடு முகம் புதைத்திருந்தாள். அவளின் சூடான கண்ணீர் இளாவின் தேகத்தை நனைத்தது.
“பயமா இருக்கு இளா. விட்றாதீங்க இளா. நீங்க, நீங்க இல்லாம நான் உடைஞ்சு போய்டுவேன். நானே வேணாம்னு சொன்னாலும் எந்த இடத்துலயும் என்னை விட்டுட மாட்டீங்க தானே?” என தேம்பியவளின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்தவன், நெற்றியில் மீண்டுமொருமுறை முத்தமிட்டான்.
“வேண்டாம்னு நீயே தொரத்துனா கூட, உன் கூடவேதான் இருப்பேன் டி. லூசு மாதிரி அழாத ஷிவா!” என உதடுகளை அவளது விழிகளில் ஒற்றி எடுத்தவனின் வார்த்தைகளிலும் செயலிலும் அந்த கதகதப்பான அணைப்பின் பிடியிலும் இவளின் உடல் மெதுவாய் தளர்ந்தது.
சில நிமிடங்கள் மௌனமாய் கழிய, “சாப்டியா?” எனக் கேட்டான். இத்தனை நேரமிருந்த இலகுவான குரல் அன்று அது. கொஞ்சம் கடுமையை சுமந்திருந்தது. லேசாய் அவனிடம் கோபம் எட்டிப் பார்த்தது.
“அது... சாப்பிட்டேன்!” என பொய்யுரைத்தவளை முறைத்தவன், “சாப்ட்டு போகலாம்...” என்றான்.
“இல்ல, இல்ல... டைமாகிடுச்சு” துளசி மறுக்க, அவன் அழுத்தமாய் நின்றான்.
“வீட்டுக்குப் போன் பண்ணி ஒரு ஹாஃப் அன் ஹவர் லேட்டாகும்னு சொல்லு. ஆட்டோவை வர வேணாம்னு சொல்லிடு...” என அவன் கூற, துளசி வீட்டிற்கும் தானி ஓட்டுநருக்கும் அழைத்து பேசிவிட்டு வைக்க, இருவரும் அவ்விடத்தைவிட்டு நகர ஆரம்பித்தனர்.
இளவேந்தன் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைப் பார்த்துவிட்டு அவள் தோளில் கையைப் போட்டு அருகே இழுத்து நடக்க வைத்தான். ஒரு நொடி தயங்கிவிட்டு, “இளா, உங்ககிட்டே ஒன்னு சொல்லணும்...” என்றவளின் குரல் மெலிதாய் வெளிவந்தது. அவனிடம் பதிலில்லாது போக, இவளே தொடர்ந்தாள்.
“அது... இனிமே இந்த மாதிரி ஹக், கிஸ் எல்லாம் வேண்டாம்!” என அவள் உரைத்ததும் இளவேந்தன் கீழ் கண்ணால் அவளை முறைத்து வெடுக்கென கையை உதறியபடி முன்னே விறுவிறுவென நடந்தான்.
“ப்ம்ச்... ஐயோ... இளா, அது... திடீர்னு ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டீங்களா. ஒரு மாதிரியா இருக்கு. இத்தனை நாள் ப்ரெண்ட்ஸா இருந்துட்டு சட்டுன்னு ஒரு ரிலேசன்ஷிப்குள்ள வரும்போது அது ஏத்துக்க, அக்செப்ட் பண்ண டைம் வேணும். அதுவும் இல்லாம நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு, ஆஃப்டர் மேரேஜ் இன்னும் புரிஞ்சுக்கலாம், லவ் பண்ணலாம். அதுக்காகத்தான் சொன்னேன். தப்பா ஏதும் சொல்லலைப்பா!” என அவனை சமாதானம் செய்யும் குரலில் பேசினாள்.
“இதுல எல்லாம் நல்லா தெளிவா இருடி...” என முணுமுணுத்துவிட்டு அவன் ஒரு உணவகத்திற்குள் நுழைய, இவளின் முகத்தில் மெல்லிய புன்னகை விரவியது.
இருவரும் சென்று இருக்கையில் அமர, “ஒரு ப்ளேட் மசால் தோசை...” என்றான் இளவேந்தன்.
“உங்களுக்கு எதுவும் வேணாமா?” துளசி வினவ, அவன் பதிலுரைக்கவில்லை.
கடை ஊழியரிடம் திரும்பியவள்,
“ஒரு ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி...” என்றாள் அவனுக்காக. உணவு வரவும் துளசி மெதுவாய் தோசையைப் பிய்த்து உதட்டுக்கு கொடுக்க, இரண்டு வாய் உண்டதும் தான் பசி தெரிந்தது. கடகடவென அவள் உண்ண, இளவேந்தன் பார்வையை சுற்றிலும் படரவிட்டிருந்தவன், ஊழியரை அழைத்து அவளுக்கும் ஒரு குளிர்பானத்தை வரவைத்தான்.
தோசையை உண்டு முடித்து கையை கழுவிட்டு வந்து அமர்ந்தவள், ஸ்ட்ராவை குளிர்பானத்தில் கலக்கியவாறு அவன் முகத்தையே பார்த்திருந்தாள். நொடிக்கும் அதிகமாய் தன்னை இம்சித்த பார்வையில் திரும்பி அவளைப் பார்த்தான்.
“இளா... அது, சாரி. நான், உங்களை வேண்டாம்னு சொல்லி இருக்கக் கூடாது. அது!” என வேறு ஏதோ பேச வந்தவளின் முன்னே கையை நீட்டியவன், “நோ மோர் டாக்ஸ் அபவுட் திஸ்!” என்றான்.
“அப்போ கோபமா இருக்கீங்களா? நான் பேசுனதை மன்னிச்சிடுங்க இளா. சாரி இளா... சாரி பா!” என இறைஞ்சினாள்.
“மன்னிக்க முடியாது!” திட்ட வட்டமான குரலில் உரைத்தான்.
“இளா...” தவிப்பாய் அவள் அழைக்க, “மறக்க வேணா ட்ரை பண்றேன். தட்ஸ் இட்!” உறுதியாய் அழுத்தமாய்க் குரல் வெளிவந்தது. இவளது முகம் கசங்கிப் போக, லேசாய் விழிகள் கலங்கின.
அதைப் பார்த்தவனின் அகம் கனியத் தொடங்க, அதட்டி அடக்கியவன், “பேசாம ஜூஸை குடி டி...” என்றான் அதட்டலாய். அந்தக் குரலில் அவனை முறைத்தவள், பழச்சாறை குடித்து முடிக்கவும், இருவரும் கிளம்பினர்.
“வெயிட் பண்ணு. பைக்கை எடுத்துட்டு வர்றேன்...” இளவேந்தன் நகரச் செல்ல, “நோ... நோ இளா. பைக் வேணாம், யாராவது பார்த்துடுவாங்க. வீட்லயும் கேள்வி கேட்பாங்க. ஆட்டோ ஆர் பஸ்ல போகலாம் பா. ப்ளீஸ்!” என்றாள். புரிந்து கொள்ளேன் என்ற பாவனையை முகம் தாங்கியிருந்தது. தலையை அசைத்தவன், வழியில் செல்லும் தானியை மறைத்து ஏறி, இருவரும் வீடு சேர்ந்திருந்தனர்.
துளசி இறங்கி நின்று அவனைப் பார்க்க, இளவேந்தன் பார்வை சாலையில்தான் இருந்தது. அதில் இவளுக்கு வருத்தம்தான். அவனது நாடிப்பிடித்து தன் பக்கம் திரும்பியவள், “சாரி இளா...” என்றாள். அவளது கையைத் தட்டிவிட்டவன், “தொட்டுப் பேசாத டி...” எனவும், இவளுக்கு புன்னகை முளைத்துத் தொலைத்தது.
சிரிப்பும் முறைப்புமாய் அவனைப் பார்த்தவள், “போயா...” என அவன் கன்னத்தை நறுக்கென கிள்ளிவிட்டு செல்ல, இவனுக்கும் உதடுகளில் மெல்லிய புன்னகை ஏறின.
வழக்கம் போல அவர்களது நட்பு மறுநாளில் இருந்து மலரத் தொடங்கியது. இளவேந்தனின் கோபத்தை ஒரு வாரத்திற்கு மேல் இழுத்துப் பிடிக்க முடியவில்லை
இந்தப் பெண் துளசி குட்டிப் போட்ட பூனை போல அவன் பின்னே சுற்றி வந்தாள். அவனுக்காக விரைவில் வந்து காத்திருப்பது முதல், அவன் வரத் தாமதமானால் அலைபேசியில் அழைத்துப் பேசி என பல வழிகளில் அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
அவளிடம் அவனாலும் கோபத்தை காண்பிக்க முடியவில்லை. அதிலும் தன்னையே சுற்றி வரும் இந்தப் பெண்ணை இன்னுமின்னும் பிடித்துப் போனது. தன் பிடிவாதங்களைத் தளர்த்தி, தானும் அவளுக்காக இறங்கி வந்திருந்தான். அவன் கோபம் குறைந்ததில் துளசிக்கு அத்தனை நிம்மதி.
நாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. துளசிக்கும் இளவேந்தனுக்குமான நாட்கள் அவை. நட்பிலிருந்து காதல் என்ற உணர்வுக்குள் நுழைந்தவர்களுக்கு, அது அத்தனை புதிதாய் தெரிந்தது. காதலை ஆராதித்தனர். ஆனாலும் எப்போதும் போல நட்புதான் பிரதானமாய் இருந்து தொலைத்தது.
இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். துளசிக்கு இளவேந்தனை அத்தனைப் பிடித்தது. அவ்வப்போது அதை வாய் வார்த்தையாகவும் உரைத்திடுவாள். அவனுக்கென்று அவளிடம் தனி வாசனையுண்டு; வாசமுண்டு: நேசமுண்டு; அள்ள அள்ளக் குறையா பாசமும் உண்டு. இளவேந்தன் துளசியை நிறைய நிறைய காதலித்தான். ஆனாலும் கண்ணியமான காதல் அவர்களது. பெரிதாய் எங்கேயும் ஊர் சுற்றவில்லை. அவளாக அழைத்தால் இருவரும் ஒன்றாய் கோவிலுக்குச் சென்று வருவார்கள். மற்றப்படி அவர்களது வாசம் முழுவதும் நடனப்பள்ளியில்தான் வாசம் செய்தன.
எதிர்பாராத நேரத்தில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பாடல்களைக் கேட்டு ரசிப்பது போலத்தான் துளசிக்கும் இளவேந்தனுக்கும் அவர்களது காதல் ரசனையாய் இருந்தது. அதில் இருவரும் ரசிகர்கள்தான்.
அவளது பேச்சிற்கு மதிப்புக் கொடுத்தவன், முன்பு போல கையைப் பிடிப்பது, நட்பின் நிமித்தம் அணைப்பது என அனைத்தையும் தவிர்த்திருந்தான். அவனது செய்கையில் துளசிக்கு இளவேந்தன் மீது தனி மதிப்பு உருவாகியிருந்தது. அதற்காக அவள் அவ்வப்போது இடும் செல்ல சண்டைகள், அதற்குப் பின்னான சமாதானங்கள் என எதையுமே விட்டுக் கொடுக்கவில்லை. எப்போதும் போல இளவேந்தன் அவளிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதும், பின்னர் தானே விட்டுக் கொடுத்துப் போவதும் வழக்கமாகியிருந்தது.
“போதும் டி... இதோட நாலாவது டைம்!” இளவேந்தன் துளசியை ஏகத்திற்கும் முறைத்து வைக்க, அவள் அதற்கெல்லாம் அசருவதாய் இல்லை.
கையை சற்றே அவன் முன்னே நீட்டிக் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள், “என் செல்ல இளா இல்ல? இன்னும் ஒரு டைம் மட்டும் அந்த லைனை வாசிச்சுக் காட்டுங்க...” என்றாள் கெஞ்சலாய். உதடுகளோடு விழிகளும் கெஞ்சிக் கொஞ்ச, தொண்டையைக் கனைத்தவனின் முகத்தில் புன்னகை படரப் பார்த்தது.
அதை அடக்கியவன் மீண்டும் அந்த வரிகளை இசைக்கத் தொடங்கினான்.
“ஒரு காதலிலே மொத்தம்
ஏழு நிலை
இது எந்த நிலை என்று
தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே!” என முணுமுணுப்போடு அப்பாடலை கிட்டாரில் வாசித்தான் இளவேந்தன். துளசி அமைதியாய், ஆசையாய் காதலாய் அவனைப் பார்த்திருந்தாள். இவன் விழிகளை மூடி பாடிக் கொண்டிருந்தான்.
சுற்றுப்புறத்தில் பார்வையை மெதுவாய் சுழலவிட்டவளின் செவி இசையைக் கேட்ட வண்ணம் இருக்க, தூரத்தில் அவர்களை நோக்கி வந்த சுபியைப் பார்த்தவளின் முகம் கடுகடுவென மாறியது. எப்போதும் அவர்கள் இருவரும் ஒன்றாய் இருந்தாலும் எதாவது ஒரு காரணம் காண்பித்து இளவேந்தனிடம் பேசுவாள், இல்லை தன்னுடன் அழைத்துச் சென்று விடுவாள். இதில் போதாதற்கு வகுப்பில் வேறு அவனோடு அட்டைப் போல ஒட்டிக்கொண்டிருப்பாள்.
இதற்கு இன்றே ஒரு தீர்வு வேண்டும் என நினைத்த துளசி தனக்கும் அவனுக்கும் இடையே இருந்தப் பையை எடுத்து தூர வைத்துவிட்டு அவனுக்கருகே நெருங்கியமர்ந்தவள் அவன் கையோடு தன் கையை நுழைத்திருந்தாள்.
“என்னடி...” என ஒரு நொடி விழித்த இளவேந்தன், “டோன்ட் டச் மீ ஷிவா...” என சன்னமான சிரிப்புடன் கையை விலக்கப் பார்க்க, அவனை ஏகத்திற்கும் முறைத்தவள், “கொஞ்ச நேரம் சும்மா இருங்க...” என்ற அதட்டலுடன் தன் பிடியை இறுக்கியவள், இன்னுமே அவனுடன் ஒன்றியமர, இளவேந்தனுக்கு என்னவோ செய்தது.
“இம்சைப்படுத்தாம தள்ளி உட்காரு டி...” என்றான் அடிக்குரலில். மிரட்டலாய் உரைத்தவனின் குரல் கரகரத்துப் போயிருந்தது.
“டூ மினிட்ஸ் அமைதியா இருங்க...” என்றவள், அலைபேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“ஹம்ம்... நம்ம ரெண்டு பேரையும் ஃபோட்டோ எடுங்க!” என்றவளின் செய்கையை விசித்திரமாகப் பார்த்தபடியே சுயமிப் புகைப்படத்தை எடுக்க முனைய, துளசி அவன் தோளில் தலைசாய்த்து முகம் புதைக்க, இவனின் வதனத்தில் ஆச்சர்யம் படர, அதை அலைபேசி உள்வாங்கிக் கொண்டது.
சுபி அவர்கள் அருகே வந்துவிட்டிருந்தாள். “ஓ சுபி... நீங்களா?” அப்போதுதான் அவளைப் பார்ப்பது போல துளசி சாவகாசமாக வேந்தன் தோளிலிருந்து தலையை நிமிர்த்தி அமர, மற்றவளுக்கு முகம் முழுவதும் புசுபுசுவென பொறாமை கொட்டிக் கிடந்தது. துளசியின் செயலுக்கு காரணமறிந்த வேந்தன் அவளை முறைத்தான்.
சுபி என்னப் பேச வந்தோம் என்பதை மறந்து நிற்க, “சுபி, இளாவைப் பார்க்க வந்தீங்களா?” என துளசி கேட்க, அவளது தலை அசைந்தது.
“ஹம்ம்... அவர் கொஞ்சம் பிஸியா இருக்காரு. நீங்க கிளாஸ்ல பேசிக்கலாமே!” என்றவள் விரல்கள் இன்னுமே இளவேந்தன் கரங்களோடு புதைந்திருக்க, சுபிக்ஷா அதை முறைத்துப் பார்த்துவிட்டு, “இல்ல... இல்ல துளசி, எனக்கு அவர்கிட்ட பேசணும்!” என்றாள் தீவிரமாய். இளா ஏதோ பேச வர, கையை அழுத்தியவள், ‘தான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்பது போல தலையை அசைத்தாள்.
“சுபி, இங்க உட்காருங்க. உங்ககிட்ட பேசணும்!” என அவளை தங்களுக்கு எதிரே அமர வைத்த துளசி, “இவர் என்னோட இளா. என்னால இவரை யார்கிட்டேயும் விட்டுக் கொடுக்கவோ, இல்ல ஷேர் பண்ணிக்கவோ முடியாது. உங்களோட மனசுல என்ன இருக்குன்னு ஐ யம் நாட் ஷ்யூர். இருந்தாலும் இதை சொல்றது என்னோட கடமை. ஐ லவ் இளா. உங்களுக்கு அவர் மேல எதுவும் அபிப்ராயம் இருந்தா, அதை அழிச்சுடுங்க...” என்றாள் தன்மையாய். இவள் பேசப் பேச சுபிக்ஷாவின் கண்களில் நீர் கோர்த்தது.
“இளா, இவ சொல்றது உண்மையா?” அவள் அவனிடம் கேட்க, பெருமூச்சை வெளிவிட்டவன், “ஆமா சுபி. வீ ஆர் இன் லவ்!” என அவன் கூறவும், எழுந்து நின்றவள், “ஐ ஹேட் யூ போத்...” என முனங்கிக்கொண்டே சென்றாள். துளசிக்கு அவளைப் பார்க்க பாவமாய் இருந்தாலும், சிரிப்பும் வந்தது.
‘நீ ஹேட் பண்றதுதான்மா எல்லாருக்கும் நல்லது!’ என மனதில் நினைத்தவள், திரும்பி இளவேந்தனை முறைத்தாள்.
“நான் சொன்னப்போ நீங்க நம்புனீங்களா. பாவம் அந்தப் பொண்ணு அழுதுட்டே போறா...” என இவள் அதட்ட, “நான் என்னடி பண்ணேன்?” என அவன் கீழ்கண்ணால் பார்த்தான்.
“ஹம்ம்... முதல்லயே அவகிட்டே சொல்லுங்க சொல்லுங்கன்னேன். கேட்டீங்களா?” என துளசி சற்றே கோபம் கொள்ள, “ப்ம்ச்... எனக்கென்ன ஷிவா தெரியும், அவ மனசுல என்ன நினைச்சிருக்கான்னு!” இவன் சலித்தான்.
“போச்சு போங்க... அழுதுட்டுப் போறவ வீட்டுக்குப் போய் அம்மா, அப்பாவை அழைச்சுட்டு வந்து, டேடி டேடி, இவன் என்னை ஏமாத்திட்டான்னு சொல்லப் போறா!” இத்தனை நேர காரசாரமான பேச்சிலிருந்து அவள் குறும்பிற்கு மாறவும், இவனுக்கு சிரிப்பு வந்தது.
“அப்படி வந்தா, அவளுக்கு வாழ்க்கை கொடுத்துர வேண்டியது தான்!” என அவன் இழுக்க, “ஓஹோ... அந்த ஐடியா வேற சாருக்கு இருக்கோ. இவர் பெரிய பாரி வள்ளல் பரம்பரை! வாழ்க்கை கொடுக்கப் போறாரு!” என முட்டிப்போட்டு எழுந்து நின்று அவன் தலைமுடியைப் பிடித்து ஆட்டினாள்.
“ஆ... ஏய், வலிக்குது டி... ப்ளீஸ் விடு டி. எல்லாரும் பார்க்குறாங்க!” என அவன் அலற, “பார்க்கட்டும்... பார்க்கட்டும். விளையாட்டுக்கு கூட இனிமே இப்படி பேசக் கூடாது நீங்க!” என அவள் அதட்ட, இளவேந்தன் முகம் சரியாய் ஆடி அசைந்து அவளது வயிற்றில் மோதியது.
அவளது வாசமும் சுவாசமும் இவனுள் அலை அலையாய் ஏதோ பொங்கச் செய்ய, “துளசி... ரொம்ப இம்சைப்படுத்தற டி நீ!” என்றவன் குரலில் அவன் முகம் தொட்டு மீண்ட வயிற்றில் அப்போதுதான் ஸ்மரணை வரப்பெற்றது போன்று திகைத்து அதிர்ந்து விலகியவள், கீழே விழப் போக, இளவேந்தன் பிடித்து அவளை சரியாய் அமர செய்திருந்தான்.
அவன் உதட்டிலிருந்த சன்னமான சிரிப்பில் இவளுக்கு காது முகமெல்லாம் சிவக்கத் தொடங்க, “என்ன... என்ன சிரிப்பு உங்களுக்கு. கிளாஸ்க்குப் போங்க...” என அவனை விரட்டிவிட்டு வகுப்பிற்கு ஓடியே போனாள்.
சிரிப்பு சிணுங்கல், கொஞ்சல் கெஞ்சல் ஊடல், தேடல் என அவர்கள் நாட்கள் வேகமாக நகர, துளசி கல்லூரி இறுதியாண்டில் இருந்தாள். இன்னும் ஓரிரு மாதங்களில் அவளுக்கு கல்லூரி நிறைவு பெறவிருந்தது. இளவேந்தனும் முதுநிலை முடிக்கும் தருவாயில்தான் இருந்தான்.
அன்றைக்கு துளசிக்குப் பிறந்தநாள் என இளவேந்தன் சேலை ஒன்றைப் பரிசளித்திருந்தான். அதிக விலைக்கு வாங்க வேண்டாம் என இவள் அதட்டி உருட்டியதில் குறைந்தவிலை என இரண்டாயிரத்து சொச்சத்திற்கு ஒரு புடவையை வாங்கிக் கொடுத்திருந்தான்.
காலையிலே எழுந்து குளித்து புடவையை அணிந்தவள், தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவிநாசியப்பர் கோவிலை நோக்கிச் சென்றாள்.
அவள் வாகனத்தை நிறுத்திவிட்டு வர, இளவேந்தன் காத்திருந்தான். முதன்முறையாக துளசியை சேலையில் காணவும், அவனது பார்வை ஆசையாய் அவளைத் தொட்டுத் தடவியது. அவனைப் பார்த்த துளசிக்கும் முகம் மலர, அருகே சென்றாள்.
“ஹேப்பி பெர்த் டே ஷிவா...” என அவன் மனமுவந்து வாழ்த்த, சந்தோஷத்துடன் தலையை ஆட்டி ஏற்றவள், முன்னே நடக்க இருவரும் கோவிலுக்குள்ளே நுழைந்தனர். சாமியை தரிசித்து முடித்து இருவரும் ஒரு இடத்தை தேடி அமர்ந்தனர். துளசியின் முகம் நிர்மலமாய் இருக்க,
“கடவுள்கிட்டே என்ன கேட்டீங்க மேடம்?” சின்ன சிரிப்புடன் கேட்டான் இளா.
அவனை மென்மையானப் புன்னகையுடன் பார்த்தவள், “எதுவுமே கேட்கத் தோணலை இளா. அம்மா, அப்பா, சோனியா, அப்புறம் நீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த சந்தோஷத்தையும் நிம்மதியையும் மட்டும் அப்படியே தக்க வச்சிடுங்க கடவுளேன்னு கேட்டேன்!” என்றாள். இளவேந்தன் அவளை ஆசையாய் பார்த்தான். அவனை விட அவளுக்கு தன்னோடான வாழ்க்கையில் எத்தனை கனவுகள் இருக்கின்றன என கடந்திருந்த நாட்களில் மனதிலுள்ளதை எல்லாம் பகிர்ந்திருக்கிறாளே.
“கிளம்பலாமா இளா?” என அவள் கடிகாரத்தைப் பார்த்தபடி வினவ, “ஷிவா... உனக்கு வேற எதாவது வேணுமா?” அவன் கேட்க, சில நொடிகள் யோசித்தவள், சின்ன சிரிப்புடன் தலையை ஆமாம் என அசைத்தாள்.
இளவேந்தன் முகத்தில் ஆச்சர்யம். எத்தனையோ முறை அது இதுவென எத்தனையோ வாங்கித் தருவதாய்க் கூறியும் மறுத்துவிட்டவள், இன்று ஏதோ கேட்கப் போகிறாள் எனவும் கண்டிப்பாகக் கொடுத்துவிட வேண்டும் என்ற உந்துதலில் நெருங்கி அமர்ந்தவன், “என்னடி வேணும்?” எனக் கேட்டான் ஆர்வமாக.
சுற்றிலும் ஒரு முறை பார்த்தவள் பார்வையை தழைத்துவிட்டு, “அன்னைக்கு என் நெத்தில கிஸ் பண்ணது போல இன்னொன்னு வேணும்!” என்றாள் அமைதியான புன்னகையுடன். அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், “உன்கிட்ட ஏதோ சரியில்ல டி...” என்றான் யோசனையாய்.
“என்ன சரியில்லை, அதெல்லாம் நல்லா இருக்கேன்!” என எழுந்தவள் அவனையும் கைப்பிடித்துத் தூக்கிவிட்டாள்.
“பத்திரமா ஓட்டிடுவீயா டி?” எனக் கேட்டவனை கண்ணாடியில் பார்த்து முறைத்தவள், “அதெல்லாம் ஓட்டுவேன்!” என உதட்டை சுழிக்க, இருவரும் அவளது இருசக்கர வாகனத்தில் சென்றனர். எங்கேயும் செல்லாது சிறிது நேரம் அந்தப் பகுதியை சுற்றி வந்தாள்.
இத்தனை நாட்கள் தெருவிற்குள்ளே வாகனத்தை ஓட்டியவள், இப்போதுதான் பிரதான சாலைக்குப் பழகியிருந்தாள்.
“இப்போ யாரும் நம்பளை பார்க்க மாட்டாங்களா ஷிவா?” என இவன் கேலியாய்க் கேட்க, “ஏன் பார்க்க மாட்டாங்க. அதெல்லாம் பார்ப்பாங்க... பார்த்துட்டு என் அப்பா அம்மாகிட்டே கூட சொல்லலாம்!” என்றாள் இவளும் இழுத்து.
“அப்போ என்ன பதில் சொல்லுவ?” அவன் வம்பிழுக்க, “ஏதோ ரோட்ல போற பையன் ஒருத்தன் லிஃப்ட் கேட்டான், கொடுத்தேன்னு சொல்லுவேன்...” என்றவளை அவன் தீவிரமாய் முறைக்க, துளசி பொங்கிச் சிரித்தாள். பின்னர் அவனை மீண்டும் கோவில் வாயிலுக்கு அழைத்து வந்துவிட, இளவேந்தன் தன்னுடைய வாகனத்தில் கல்லூரிக்கு கிளம்ப, இருவரும் ஒருவருக்கொருவர் விடை கொடுத்தனர்.
மாலையில் எப்போதும் போல நடனப்பள்ளியில் சந்தித்தனர். கல்மேஜையில் அமராது மரத்திற்குப் பின்னே அமர்ந்திருந்தவளை முறைத்தவன், “எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ஷிவா, இந்த இருட்டுல ஏன் வந்து உட்கார்ற?” என்ற அதட்டலுடன் அவளருகே அமர்ந்தான்.
“ப்ம்ச்... இந்த இடத்துல தானே ப்ரஃபோஸ் பண்ணீங்க. சோ, பெர்த்டே அன்னைக்கு இங்க உட்காரலாம்னு...” என சமாதானக் குரலில் உரைத்தாள்.
“ஹம்ம்... ப்ரபோஸ் பண்ணேன் இல்ல, பண்ணோம்!” என திருத்தியவனை புன்னகையுடன் பார்த்தவள், நெருங்கியமர்ந்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
“துளசி மா...” என கனிவாய் அழைத்தவனை இவள் ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள். இப்படி அழைப்பதெல்லாம் அரிதிலும் அரிது.
“உனக்கெதுவும் பிரச்சனையா டா?” எனக் கேட்டு, அவளது முகத்தில் விழுந்த முடியைப் பின்னே தள்ளினான். குரலில் வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது.
அந்தக் கேள்வியில் புன்னகைத்தவள், “ஒரு பிரச்சனையும் இல்ல இளா. நீங்களா எதையும் நினைச்சுக்க வேணாம். ஐ யம் ஓகே...” என்று மீண்டும் அவன் தோள் சாய்ந்தாள்.
இளவேந்தன் இந்தப் பெண்ணிற்கு என்னவானது எனத் தெரியாது யோசனையுடன் அவளைப் பார்க்க, துளசி இரண்டு நாட்களாய் பாரமேறிய மனதிடம் காரணம் என்னவெனத் தெரியாது குழம்பியிருந்தாள். ஏதோ தவறாய் நடக்கப் போகிறது என உள்மனம் உத்தேசமாய் உரைத்து முன்முடிவெடுத்திருக்க, என்ன செய்வது எனத் தெரியாது உள்ளே கவலை அரித்தது. எதாவது இருந்தால் இவனிடம் பகிரலாம். எதுவுமே இல்லாது இளவேந்தனையும் கவலைப்பட வைக்க விரும்பாது தான் அவள் வாயைத் திறக்கவில்லை.
நேரமானதை உணர்ந்தவள், “இளா, டைம் ஆச்சு. ஆட்டோக்கார அண்ணா வந்திருப்பாங்க. நடக்கலாம் வாங்க!” என எழுந்து நின்றாள். தலையை அசைத்து எழுந்தவன், “ஷிவா...” என அழைக்க, திரும்பியவளின் முகத்தைத் தாங்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விலகினான். இவனுக்குள்ளே ஏதோ சொல்ல முடியாத தவிப்பு பிறந்தது. ஆனாலும் அவளிடம் காண்பிக்கவில்லை.
துளசி முகம் முழுவதும் விரவிய புன்னகையுடன், “ஃபைனலி மனசு வந்துடுச்சு போல...” எனவும், அவளை முறைத்தான். அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்தாள் துளசி. இதுதான் அவர்களுக்கு இடையேயான ஆதர்ச இறுதி சந்திப்பாய் நினைவடுக்கில் முகிழ்க்கும் என இருவருமே அறியவில்லை.