- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 21
“போதவில்லையே! போதவில்லையே!
உன்னைப்போல போதையேதுமில்லையே
நாள்முழுக்க உன்னை
கண்கள் தின்ற பின்னும்
உந்தன் சொற்கள் பெய்து
நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும்
பக்கம் வந்தும்
கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும்
மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்...
தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை கோர்த்துப் போக இந்த
சாலை போதாதே
என்னென்ன விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி
உன் அழகை பருக என் கண்கள் போதாதடி
என் நிலையை எழுத வானங்கள் போதாதடி
நேரமுல்லை பின் இழுத்தும்
வாரம் எட்டு நாள் கொடுத்தும்
சுற்றும் பூமியை தடுத்துமே... ஹே...
கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே
கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
நம் கனவை செதுக்க பேரண்டம் போதாதடா
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா
குட்டிக்குட்டி கோபம் கொண்டும்
கட்டி முட்டி மோதிக்கொண்டும்
திட்டித்திட்டி தீர்த்த பின்னும்....ம்ம்
போதவில்லையே போதவில்லையே!”
என்ற பாடலை முணுமுணுத்தபடி கிட்டாரில் கையை வைத்து அதற்கேற்றவாறு இசையை மீட்டிக் கொண்டிருந்த இளவேந்தனின் விழிகள் அதிலே லயித்து மேழிமை கிழிமையோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
துளசி அவனுக்கு சற்றுத் தள்ளியமர்ந்தவாறு பாடலோடு சேர்த்து அவனையும் அமைதியாய் ரசித்த வண்ணமிருந்தாள். இன்றோடு அவர்களின் நட்பு தொடங்கி இரண்டு வருடங்கள் முழுதாய் முடிவடைந்திருந்தன. எதிர்பாராத நேரத்தில் வேந்தனின் சிறு உதவியைப் பற்று கோலாக்கி அவர்களது நட்பு நேசக் கயிறாய் பிண்ணிப் பிணைந்திருந்தது. எத்தனையோ சண்டைகள், அதற்குப் பின்னான சமாதானங்கள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள், அன்பான நிமிடங்களாய் ஒருவரின் வாழ்க்கையும் மற்றவர் அதிகமாய் அழகாய் ஆக்கிரமித்திருந்தனர்.
இந்த வருட புதிய மாணவர்களை வரவேற்பதற்காக வரவேற்பு நிகழச்சி நடைபெறவுருந்தது. அதில் இளவேந்தன் கிட்டார் வாசிப்பதற்காக பயிற்சி எடுத்திருக்க, அதை இவளிடம் வாசித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.
அவன் பாடலை பாடி முடித்து விழிகளை திறக்க, துளசியின் பார்வையில் அத்தனை ரசனை. அதில் இவனது உதடுகள் மலரப் பார்க்க, பிடரி முடியைக் கோதியவன், “ஹக்கும்... எப்படி இருக்கு ஷிவா? ஓகே வா?” என வினவினான். வார்த்தையால் பதிலுரைக்காதவள் புருவத்தை மெச்சுதலாக ஏற்றி இறக்கினாள். அந்தப் பாவனையில் இவனது உதடுகளில் புன்னகை ஏறின.
சில நொடிகள் இருவருக்கும் இடையில் ஆழ்ந்த அமைதி. துளசி வேறு ஏதாவது பாடலை அவனை வாசிக்க சொல்லலாம் என அலைபேசியில் விழிகளைப் பதித்தாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“இளா... இங்க இருக்கீங்களா? ஐ யம் சர்ச்சிங் யூ...” என புன்னகையுடன் வந்து நின்றாள் இளம்வயது யுவதி ஒருத்தி.
“ஆமா சுபி...” என்றவன் எழுந்து நின்றான்.
“நீங்க இப்போ ஃப்ரீயா இருந்தா ஒரு ஃபைவ் மினிட்ஸ் என் கூட வர முடியுமா? நான் செலக்ட் பண்ண சாங்க்ல சில டவுட்ஸ் இருக்கு. ஐ திங்க் யூ கேன் ஹெல்ப் மீ!” என அவள் தயங்கி தயங்கிக் கேட்க, “ஹம்ம்... ஷ்யூர் சுபி” என ஒப்புக் கொண்டவன், “ஷிவா, ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வரேன். வெயிட் பண்ணு...” என்றவளிடம் தலையை அசைத்தவளின் பார்வை அப்பெண்ணை அமைதியாய்த் தொட்டு மீண்டது.
இளவேந்தன் சென்று ஐந்து நிமிடம் கடந்தது. ஐந்து ஐம்பதாகி இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க, துளசி அமைதியாய் சுற்றுப் புறத்தை ஆராய்ந்த வண்ணமிருந்தாள். பயிற்சி முடிந்து நண்பர்களுடன் பேசியபடியே வந்தவன் துளசியை அதே இடத்தில் அவன் அமர்ந்தபோது எப்படி இருந்தாளோ, அப்படியே கண்டதும் திகைத்துப் போனான்.
அவளிடம் விரைந்தவன், “ஹே ஷிவா, நீ கிளாஸ்க்குப் போகலையா?” என ஆச்சர்யமாய் வினவினான்.
அவனைப் பார்த்து அதிராமல் புன்னகைத்தவள், “போகும்போது என்ன சொல்லீட்டுப் போனீங்க இளா?” என அமைதியாய் வினவினாள்.
ஒரு நொடி என்னவெனப் புரியாது யோசித்தவன், “ஷிட்...” என்றுவிட்டு, “சாரி டா. சாரி, அங்க சார் வந்துட்டாரு. சோ, உன்னை மறந்துட்டு கிளாஸ்ல ஜாய்னாகிட்டேன்!” என்றவன், “நான் வரலைன்னா கிளாஸ்க்குப் போக வேண்டியது தானே. டூ ஹவர்ஸ் வெயிட் பண்ணணுமா?” எனக் கடிந்தான்.
ஒரு நொடி அவனை ஊன்றிப் பார்த்தவள், தன் பையை எடுத்துத் தோளில் மாட்டினாள். “தட்ஸ் ஓகே இளா, டூ ஹவர்ஸ் தானே? நாட் அ பிக் டீல்!” என அலட்டிக்காது கூறியவள், கைக்கடிகாரத்தை குனிந்து பார்த்தாள்.
“ஓகே இளா, நான் வீட்டுக்குக் கிளம்புறேன். இன்னைக்கு அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க, ரிலேட்டீவ் பங்சனுக்குப் போகணும்னு. நீங்க மதியம் கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்க. நான் வரேன்!” என வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் துளசி. அவளது குரலும் முகமும் இவனுக்குள்ளே ஏதோ செய்தது.
“ஷிவா...” என அழைக்க வந்தவனின் முன்னே சுபி வந்து நின்றாள். “இளா, ஈவ்னிங் நீங்க வீட்டுக்குப் போகும் போது என்னையும் அப்படியே விவேகானந்தர் ஸ்ட்ரீட்ல ட்ராப் பண்றீங்களா? என் அண்ணாவுக்கு வேலை இருக்குன்னு வரமாட்டேன்னுட்டார்!” எனக் கேட்டாள்.
சில நொடிகள் யோசித்தவன், தன் வீட்டிற்கு செல்லும் வழி தானே என ஒப்புக் கொள்ள, “தேங்க் யூ இளா. யூ ஆர் ஸ்வீட்...” என இவன் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு அவள் நகர்ந்தாள்.
இளவேந்தன் இப்போது திரும்பிப் பார்க்க துளசி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புலப்படவில்லை. நெற்றியை சொரிந்தவன், அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். மூன்று முறை அழைப்பு சென்று துண்டாக, நான்காவது முறை அழைப்பை ஏற்றாள் பெண்.
“சொல்லுங்க இளா...” என்றவளின் பேச்சில் ஒட்டாத் தன்மை கொட்டிக் கிடந்தது. அதை உணர்ந்தவனும், “வீட்டுக்கு எப்படி போவ ஷிவா?” எனக் கேட்டான்.
“ஏன் கால் இருக்கே, நடந்து போய்டுவேன்!” என்றாள் அசட்டையாய்.
“ப்ம்ச்... அவ்வளோ தூரம் எப்படி நடப்ப நீ. வெயிட் பண்ணு, நான் டூ மினிட்ஸ்ல பைக்ல வந்து, உன்னை வீட்ல ட்ராப் பண்றேன்!” என்றான் அதட்டலாய்.
“நோ இளா... மறுபடியும் வெயிட் பண்ண நான் ரெடியா இல்ல, என்கிட்ட டைமும் இல்ல. அம்மா, சோனியா எனக்காக வெயிட் பண்ணுவாங்க. நான் பஸ்லயே போய்க்கிறேன்!” என்றாள் சாதாரணக் குரலில். இவனுக்கு சுருக்கென்றது.
“ச்சு... பஸ்ல பத்திரமா போய்டுவீயா நீ?” என அவன் கேட்டதும், இவளிடம் கேலி சிரிப்பு.
“நான் பஸ்ல போறது ஃபர்ஸ்ட் டைம் இல்லயே. இதுக்கு முன்னாடி நிறைய தடவை பஸ்ல போய்ருக்கேன். நீங்க எனக்கு ஃப்ரெண்டாக முன்னாடில இருந்து பஸ்ஸூல தனியா போய் பழக்கம்தான். என்னை எனக்குப் பார்த்துக்கத் தெரியும். நீங்க கவலைப்படாதீங்க இளா!” என்றாள் குரலில் என்னவென அறிய முடியாத பாவனை கொட்டிக் கிடந்தது.
அந்தப் பதிலில் சமாதானமாகதவன், “ஹம்ம்... பத்திரமா போ...” என்று சில நொடிகள் இடைவிட்டவன், “சாப்டீயா நீ?” என்றான் தன்னை நொந்து. அவன் நண்பர்களுடன் உண்டுவிட்டான். அன்றைக்கு சுபிக்ஷா வேறு அவனை தன்னருகே இருத்திக்கொண்டு கட்டாயபடுத்தி உண்ண வைத்திருந்தாள். அவன் கேட்டதும் இவளுக்கு நக்கலாய் புன்னகை உதிர்ந்தது.
“இவ்வளோ சீக்கிரம் கேட்டுடீங்களே இளா...” என நிறுத்தியவள், “பசிக்கலை, சோ சாப்டலை!” என்றாள் அசாதாரணமாய்.
அதில் வேந்தனுக்கு கோபம் வர, “டைம் என்னென்னு பார்த்தீயா நீ? இரண்டரையாகப் போகுது. இன்னும் சாப்பிடாம, ரீசன் வச்சிருக்க!” என்றான் எரிச்சலாய்.
“ஒரு நாள்.. சாரி, சாரி ஒருவேளை சாப்பிடலைன்னா, செத்துட மாட்டேன் இளா...” என்று உரைத்தவள், அவன் பதில் கூறும் முன், “பஸ் வந்துடுச்சு இளா. நான் ஏறப் போறேன். அப்புறம் பேசுவோம்...” என அழைப்பைத் தூண்டித்திருந்தாள். இளவேந்தனுக்கு ஒரு நொடி தலை சுற்றியது.
‘என்னவானது இந்தப் பெண்ணுக்கு. ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?' என யோசித்தவாறே இருந்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் துளசி நடனப்பள்ளி வரவில்லை.
இளவேந்தன் அவளுக்கு அழைத்துப் பார்த்தான். அழைப்பு சென்று முழுதாக துண்டாகியது. விடாது அழைத்தவன், குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டான். எதற்குமே அவளிடமிருந்து பதிலில்லை. மூன்றாவது நாளும் அவள் வரவில்லை என்றால், நேராக வீட்டிற்கே சென்றுவிடலாம்
எண்ணுமளவிற்கு துளசி அவன் சிந்தை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தாள்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் துளசி நடனப்பள்ளி வந்தாள். சரியாய் வகுப்பு துவங்கும் நேரம் வந்தவள், அவனைக் கண்டதும் ஒரு புன்னகையுடன் வகுப்பறைக்குள் அடைந்துவிட, இளவேந்தனுக்கு அவளது செயல்களைக் கண்டு கோபம் வரத்தான் செய்தது. அந்தப் புன்னகை அத்தனையாய் அவனை அந்நியப்படுத்தியிருக்க, அதிலே ஏகஎரிச்சல் மூண்டது.
‘இவளை...’ என மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு, தன்னுடைய வகுப்பிற்கு சென்றான். எப்படியும் வகுப்பு முடிந்து இருவரும் வழக்கமாக அமரும் இடத்தில் சந்திக்கும்போது என்னவென கேட்டுக் கொள்ளலாம் என விட்டுவிட்டான். துளசி வருவதற்கு முன்பே இவன் கல்மேஜையில் அமர்ந்து அவளுக்காகக் காத்திருந்தான்.
“யாருக்காக வெய்டிங் இளா? இங்க உட்கார்ந்து இருக்கீங்க? வீட்டுக்குப் போகலையா?” என்ற கேள்வியுடன் சுபிக்ஷா அவன் முன்னே நின்றாள். வீட்டுக்கு செல்வதற்காக வாயிலை நோக்கி நடந்தவள், அவனைக் கண்டுவிட்டு நின்று பேசினாள்.
“அது... ஷிவா, என் ப்ரெண்ட்காக வெயிட் பண்றேன் சுபி...” என்றான் பதிலாய்.
“ஓ... ஓகே, ஓகே...” என்றவள் தோளிலிருந்த பையை கீழே வைத்து அவனுக்கருகே அமர்ந்தாள். இளவேந்தன் அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“என் அண்ணன் வர லேட்டாகும். அதான் கொஞ்ச நேரம் உங்கக் கூட உட்கார்ந்து பேசலாம்னு. உங்களுக்கு எதுவும் பிராப்ளம்னா சொல்லுங்க இளா. நான் வெளிய கூட வெயிட் பண்றேன்!” அவள் உரைத்ததும், “இல்ல சுபி. இங்கே உட்காரு... வெளில வேணாம். இருட்டீடுச்சு இல்ல?” என நட்பாய் புன்னகைத்தான்.
துளசி வகுப்பு முடிந்து வெளியே வந்தவள், அப்படியே ஒரு நொடி நின்றுவிட்டாள். எப்போதும் அவளும் அவனும் அமரும் இடம். இப்போது அவளுக்குப் பதில் சுபிக்ஷா அங்கே அமர்ந்து இருந்ததை பார்த்ததும் தொண்டையில் ஏதோ அடைக்கும் உணர்வு. நெஞ்சடைத்துப் போனது போல இருக்க, பையை இறுக்கிப் பிடித்தவள், விறுவிறுவென வாயிலை நோக்கி நடந்தாள்.
வேண்டாம் என தடுத்தாலும் பார்வை சிரித்தவாறே அலைபேசியை அவனிடம் நீட்டிப் பேசிக் கொண்டிருக்கும் சுபிக்ஷாவிடமும், அவளுக்குப் புன்னகையுடன் பதிலுரைக்கும் வேந்தனிடமும் நிலைத்தன.
தூய பாலின் நிறத்திலிருந்தாள் சுபிக்ஷா. அவளது சுருட்டை முடி முகத்தின் முன்னே வந்து விழுந்து அழகாய் இருந்தது. குண்டு கண்களில் மெலிதாய் ஒரு கண்ணாடியை மாட்டி, அதை மறைத்திருந்தவள், உதட்டிற்கு மென்சாயம் இட்டிருந்தாள். விலை உயர்ந்த மேல்சட்டை இடையைத் தாண்டியிருக்க, இறுக்கிப் பிடித்த கால்சராய் அவளை அழகாய் காண்பித்தது. அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க, கண்கள் பனித்து தொலைத்தன. யார் கவனத்தையும் கவராது கவனமாய் இமையை சிலுப்பி உருண்டு திரண்டிருந்த நீரை உள்ளிழுத்தபடி வாயிலைக் கடக்க, இளவேந்தன் தூரத்தில் சென்றவளைக் கண்டுவிட்டான்.
நொடியில் பட்டென எழுந்தவன், “சுபி, ஒன் மினிட்...” என்றுவிட்டு, அவளிடம் ஓடிச் சென்றான். தன்னருகே கேட்ட காலடி சத்தத்தை அசட்டை செய்தவாறு நடந்தாள் துளசி.
“ஷிவா... ஷிவா!” எனக் கத்திக்கொண்டே அவளது கையைப் பிடித்திழுத்து நிறுத்த முயன்றவனிடமிருந்து லாவகமாய்த் தள்ளி நின்றாள் பெண்.
“என்னாச்சு உனக்கு?” அவன் நெற்றி சுருங்கக் கேட்க, “எனக்கென்ன இளா. ஐ யம் ஓகே...” என்றாள் ஒட்ட வைத்தப் புன்னகையுடன்.
“அப்புறம் ஏன் அகாடமிக்கு டூ டேய்ஸா வரலை நீ?”
“ப்ம்ச்... தோணலை, அதான் வரலை. ரீசன் எதுவும் இல்ல இளா!” குரல் சாதாரணமாய் வந்தது.
“பொய் சொல்றீயா ஷிவா நீ? யூ ஆர் நாட் ஆல்ரைட். சம்திங் ராங். உனக்காக நான் வெயிட் பண்ணது தெரிஞ்சும் ஏன் ஸ்டோன் பெஞ்சுகிட்டே வரலை நீ?” என அவளை உறுத்து விழித்தபடி கேட்டான்.
“அப்பா லேட்டா வருவாரு, அதனால அங்க உட்கார வருவேன். பட், இப்போ அவருக்கு ஹோட்டல்ல வொர்க் லோட் அதிகம் ஆகிடுச்சு. சோ, தெரிஞ்ச ஆட்டோகார அண்ணாவை இனிமேல் பிக்கப் பண்ண ரெடி பண்ணிட்டாரு. அதோ, அங்க நிக்குதே, அந்த ஆட்டோ தான் இளா. அண்ணா வெயிட் பண்றாங்க, நான் கிளம்புறேன்!” என இரண்டு எட்டுகள் வைத்தவளின் முன்னே வழியை மறைத்தவன், “என்கிட்ட ஏன் லீவ் போட்டதை சொல்லலை. இப்போ ஆட்டோல போகப் போறேன்றதையும் சொல்லலை?” என கடினக் குரலில் கேட்டான்.
“ஏன் சொல்லணும்?” துளசி எதிர் கேள்வி கேட்க, இவனின் பொறுமை காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
“ப்ம்ச்... என்னடி ஆச்சு உனக்கு? என்னதான் பிரச்சனை?” என எரிச்சல் மிகக் கேட்டான்.
அந்தக் குரல் இவளது தன்முனைப்பை தட்டிவிட, “சொல்லி எதுவும் மாறப் போகுதா இளா. வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ், அவ்வளோ தானே? இன்னும் ஒன் ஆர் டு இயர்ஸ், அகாடமி முடிஞ்சதும், வீ வில் பீ ஸ்ட்ரேஞ்சர்ஸ். அதுக்கு ஏன் எமோஷனலா அட்டாச் ஆகணும். நீங்க உங்களோட லிமிட்ல இருந்துகோங்க, ஐ டூ. ஹம்ம், நான் லைக் பாசிங் க்ளவுட் ப்ரெண்ட்தான். அதனாலே கோபப்படாதீங்க இளா!” என முதலில் சினம் மிகுந்த குரலில் ஆரம்பித்து அமைதியான குரலில் முடித்தவள், “அங்க... உங்க ஃப்ரெண்ட் சுபி தனியா உட்கார்ந்திருப்பாங்க. அவங்களை பத்திரமா வீட்டுக்கு அனுப்பிட்டு, நீங்க கிளம்புங்க இளா. ஆட்டோக்கார அண்ணா வேற பாவம். ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு...” என சம்பிரதாயப் புன்னகையுடன் கடந்தவளை என்ன செய்வது எனத் தெரியாது கோபமா, ஆற்றாமையா எனப் பிரித்தரிய முடியாத உணர்வில் நின்றான்.
துளசி அவள் கூறியது போலவே அவனிடம் ஒரு வாரமாக எதுவுமே பேசவில்லை. எல்லா விதத்திலும் தள்ளி நின்றுவிட்டாள். அவனையும் எட்ட நிறுத்திவிட்டாள். இளவேந்தனுக்கு என்ன ஏதென எதுவுமே புரியாத நிலை. இந்தப் பெண் ஏன் என்னை இம்சைபடுத்துகிறாள் என நாள் முழுவதும் அவளது சிந்தனையே மூளையைக் குடைந்தது. அவளால் பேசாதிருக்க முடியும் என நின்றுவிட, இவனால் சத்தியமாய் முடியவில்லை.
யோசித்து யோசித்து மூளை சூடாகியது. பேசாமல் அவளை இழுத்து வைத்து நான்கு அறைந்துவிடலாமா என்ற யோசனை கூடப் பிறந்தது. கோபத்தை தள்ளி வைத்தவன், நிதானமாய் அவளிடம் பேசலாம் என முடிவெடுத்திருந்தான். இரவில் அவர்களது சந்திப்பு தடைபட்டிருந்தது. தானி ஓட்டுநர் வர சற்று நேரம் எடுத்தாலும் துளசி முன்பு போல அந்தக் கல் மேஜையில் அமரவில்லை. எங்கே செல்கிறாள் என அவனுக்குத் தெரியவில்லை.
அன்றைக்கு நடனப் பள்ளியையே அலசி முடித்தவன், சோர்ந்து போய் நின்றிருந்தான். தூரத்தில் தெரிந்த ஆலமரத்தில் இவனது பார்வை பட, அதற்குப் பின்னிருந்து மெல்லிய வெளிச்சம் படர, அந்த இருட்டில் அது பிரதானமாய் தெரிந்தது. இவன் சப்தமிடாது யோசனையாய் அங்கு சென்றான்.
மரத்தின் பின்னே இருந்த திண்டில் கையைக் கட்டி சாய்ந்தமர்ந்திருந்த துளசியின் பார்வை நிலவை பார்த்திருந்தது. காதிலிருந்த காதொலிப்பானில் ஏதோ பாட்டுக் கேட்டுக்கொண்டே இரவை வெறித்திருந்தாள். அவளை இப்படி நிராதரவானத் தோற்றத்தில் காண்கையில் இவனுக்குள்ளே ஏதோ ஒன்று பல பாகங்களாய் சிதறியது. சில நொடிகளில் இவன் அரவம் உணர்ந்தவளிடம் நொடி நேர அதிர்ச்சி. அதை அந்நியமான புன்னகை ஒன்றில் மறைத்தவளின் உதடுகள் மெதுவாய் விரிந்தன.
இளவேந்தன் அமைதியாய் அவளைப் பார்த்தான். தன்னைக் கண்டதும் மின்னும் விழிகள் மங்கியிருந்தன. உதட்டிலிருந்த புன்னகை உயிர்ப்பு இல்லாதிருந்தது. அவளருகே சென்று அமர்ந்தான். அவனிடமிருந்த பார்வையை அகற்றி சுற்றுப்புறத்தில் சுழலவிட்டவளின் காதிலிருந்த ஒரு பக்க காதொலிப்பானை தனது செவிக்கு ஈந்தான். அதை எதிர்பார்க்காதவள், அவனிடமிருந்து பிடுங்க முனைய, அதற்குள்ளே போதவில்லையே என்ற பாடல் அதில் கசிந்தது. இளவேந்தன் வாசித்ததை அவனுக்குத் தெரியாது அலைபேசியில் பதிந்து வைத்திருப்பாள் போல. கண்டு கொண்டான் என பதறிய முகம், பின்னர் பரவாயில்லை என்ற தோரணையை உமிழ்ந்தது.
“ஷிவா...” அத்தனை நேர அமைதியைக் கலைத்தது அவன் குரல். திரும்பாது தலையை மட்டும் அசைத்தாள்.
“என்னாச்சு? ஏன் என்னை அவாய்ட் பண்ற?” எனக் கேட்டவனை திரும்பிப் பார்த்தவள் பதிலளிக்கும் முன், “பிராப்ளம் எதுவும் இல்ல, அவாய்ட் பண்ணலைன்னு பொய் சொல்லாத...” என அவனே முடித்திருந்தான்.
அவனைப் பார்த்து அதிராமல் புன்னகைத்தவள், “நான் உங்களை அவாய்ட் பண்றேன்னு குழந்தை கூட கண்டு பிடிச்சிடும். நான் ஏன் பொய் சொல்ல போறேன் இளா?” என மென்மையாய் சிரித்தவள், “பிராப்ளம் வந்தா தான் அவாய்ட் பண்ணணும்னு இல்ல. பிராப்ளம் வர்றதை தடுக்கக் கூட அவாய்ட் பண்ணலாம்!” என்றாள்.
“பிராப்ளம்... நான், நான் என்ன பிராப்ளம் பண்ணேன். நம்ம ப்ரெண்ட்ஷிப்ல என்ன கண்ட நீ?” என அவன் மெலிதாய் குரலை உயர்த்தினான். இரவு நேரத்தில் அது சத்தமாய்க் கேட்டுத் தொலைத்தது.
“ப்ம்ச்... பிராப்ளம்னா அது உங்க சைட் மட்டும் இல்ல. என் சைட் கூட இருக்கலாம்...” என்றவள் பார்வை இப்போது நிலவு வெளிச்சத்தில் மெதுவாய் பளபளத்தன. இளவேந்தன் எதுவும் உரைக்காது அவளுக்குப் பேச இடைவெளி கொடுத்தான்.
“இளா, யூ க்னோ, ஐ திங்க் ஐ யம் இன் லவ் வித் யூ!” என அவன் முகம் காணாது கூறியவளின் பக்கவாட்டில் அமர்ந்திருந்தவனின் இதயம் அந்த வார்த்தையில் மென்மையாய் அதிர்ந்தது. மெதுமெதுவாய் கீழிமைத் தொட்டு மேழிமை வரை நீர் படரத் தொடங்க, நிலவொளியில் அவளது கண்ணீர் பளபளத்து.
“எனக்கு உங்க மேல ஒரு அன்பு... ஹ்கூம் நல்ல ப்ரெண்ட மேல நமக்கு இருக்குமே ஒரு பொசசீவ்னெஸ் அது எப்பவுமே உண்டு. நீங்க யாரு கூடப் பேசுனாலும், கொஞ்சம் பொறாமைபடுவேன். அது ஜஸ்ட் லைக் ப்ரெண்ட்ஷிப் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். பட், எப்போ அந்த பொசசீவ்னெஸ் லவ்வா மாறுச்சுன்னு தெரியலை, ஆராய்ச்சியும் பண்ணலை!”
“மே பீ சுபிக்ஷாகிட்டே நீங்க சிரிச்சுப் பேசும் போது இருக்கலாம். இல்ல, நேத்து என்னோட இடத்துல அவளையும், உங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது லவ் வந்து இருக்கலாம்...” எனக் கூறியவளின் முகம் வலியில் சுருங்கியது.
“ஹம்ம்... ப்ரெண்ட்ஷிப்க்கு ஸ்டேட்டஸ் பார்க்கத் தேவையில்லை. பட், காதல், ஹம்ம் கல்யாணம் இதுக்கெல்லாம் அந்தஸ்துன்னு ஒன்னு இருக்குல்ல? நீங்க... ஐ மீன் உங்கக் குடும்பம் ரொம்ப பெருசு. டு பீ பிராக்டிகல் யூ ஆர் டூ ரிச். உங்கப்பா பாலிடிக்ஸ்ல இருக்காரு. அண்ணா பிஸ்னஸ் பண்றாங்க. அக்கா, அண்ணா, தங்கை, அம்மா, அப்பான்னு பெரிய பேமிலி வித் பேக்ரவுண்ட் உங்களோடது!”
“பட், நாங்க அப்படி இல்ல. எங்களோடது சின்ன குருவிக் கூடு மாதிரி. நான், அம்மா, அப்பா, சக்திகா, எங்க ஹோட்டல், அவ்வளோதான் நாங்க. பயமா இருக்கு இளா. எங்க என்னால இந்தக் கூடு கலைஞ்சுடுமோன்னு!” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது. கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின.
“யெஸ் அப்கோர்ஸ் ஐ லவ் யூ. பட், அதுக்கு அர்த்தம் இல்லாம போய்டுச்சு. நான் உங்ககிட்ட என் மனசுல இருக்கதை சொல்லணும்னு நினைக்கலை. எனக்கொரு காதல் இருந்துச்சுன்னு பாஸ்ட்டென்ஸ்ல மனசுலயே முடிச்சுடலாம்னு நினைச்சேன். பட், சொல்ல வச்சுட்டீங்க...”
“ஒருவேளை நான் ப்ரபோஸ் பண்ணி, நீங்க என்னை ப்ரெண்டா மட்டும் பார்த்தேன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணி இருந்தா, நான் உடைஞ்சு போய்டுவேன் இளா. இல்ல, உங்களுக்கும் என்னைப் பிடிச்சு லவ்வை அக்செப்ட் பண்ணுறீங்கன்னு வச்சுப்போம். ஒரு டூ இயர்ஸ் லவ் பண்ணுவோமா? அதுக்கப்புறம் ஃபேமிலிக்குத் தெரிய வரும். உங்க ஃபேமிலில, ஐ யம் ஷ்யூர் ஒத்துக்க மாட்டாங்க. உங்களுக்கு நானா ஃபேமிலியான்னு ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை வரலாம். ஃபேமிலி ப்ரெஷர் தாங்க முடியாம, லெட்ஸ் பிரேக்கப்னு சொல்லீட்டு போய்டீங்கன்னா, அதையும் என்னால தாங்கிக்க முடியாது. மோசமா உடைஞ்சு போய்டுவேன். ஏன்னா, அந்தளவுக்கு என்கிட்ட மனதைரியம் கிடையாது. நான் பார்க்க, பேசன்னு போல்ட்டா தெரியலாம். பட், என் மனசுக்குத் தெரியும் அது எவ்வளோ பலவீனமானதுன்னு...”
“இல்ல, எனக்காகன்னு என் அப்பா, அம்மா உங்க வீட்ல வந்து பேசலாம், அது சுமூகமாவும் முடியலாம். ஆர் என் ஒருத்திக்காக அவங்க அவமானப்படலாம், தலைகுனியலாம். அதை என்னால அக்செப்ட் பண்ண முடியாது. இப்படி எல்லா வழியிலயும் நான் உடைஞ்சு போய்டுவேன்னு பயம்.”
“வேணாமே... எதுக்கு காதலை சொல்லி, நீங்க கஷ்டப்பட்டு, நானும் கஷ்டப்பட்டு, குடும்பத்தை தலைகுனிய வச்சு, அப்புறம் ஒத்து வராதுன்னு தெரிஞ்சு பிரிஞ்சு போய், காயப்படணும். அதான் ஸ்டார்டிங்லயே அவாய்ட் பண்றேன். நம்மளால யாருக்கும் கஷ்டம் வரக் கூடாது இளா...” என்றாள் வலிக்க. வலித்தது, அத்தனை வலித்தது. மனம் முழுவதும் காதல் இருந்தாலும் அதை வெளியே சொல்ல முடியவில்லையே என வலித்தது.
“இது லவ் இல்ல, மே பீ ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் ஆஃப் லவ்வா கூட இருக்கலாம். அட்ராக்ஷன், அவ்வளோதான். ஹம்ம், நமக்கு சாரி எனக்கு உங்களோட காதல் எல்லாம் ஒத்து வராது. உங்களுக்கு லைக் சுபிக்ஷா மாதிரி பொண்ணுதான் ஒத்து வரும். அவ ரொம்ப நல்ல பொண்ணு, உங்களோட வசதிக்கும், குடும்பத்துக்குமே ஏத்த பொண்ணு. ஐ திங்க் அவளுக்கு உங்க மேல விருப்பம் இருக்கு. உங்கக் கண்ணுக்கு அது தெரியலை. பட் ஐ கேன் ஃபெல்ட்!” என்றவளின் இதயம் மொத்தமாய் உடைந்து சுக்கலாகியிருந்தது. இத்தனை வலியை இந்தக் காதல் பரிசளிக்கும் எனத் தெரிந்திருந்தால், இவனை கண்ட நொடியை தனது மனதிலிருந்து அழித்திருப்பாளே.
தன்னை சமன்செய்ய, உறுதிப்படுத்த மூச்சை இழுத்து வெளிவிட்டவள், கண்ணீரை இமையை சிலுப்பி உள்ளிழுத்துவிட்டு, “மனசுல லவ்வை வச்சிட்டு என்னால உங்கக் கூட ப்ரெண்டா பழக முடியாது இளா. அதான் அவாய்ட் பண்ணேன். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும். ஹோப் யூ ஹேவ் அ குட் ப்யூச்சர்!” என்றாள் இறுதியாய் காதலை மொத்தமாய் புதைக்கும் எண்ணத்தில். நினைத்துப் பார்க்க ஒரு காதலிருந்தது, இருக்கிறது, இனிமேலும் என் வாழ்க்கையின் அங்கமாய் நினைவுகளில் புதைந்திருக்கும், அவ்வளவுதான் அவளது சித்தாந்தம்.
மனதிலிருந்த மொத்த உணர்வுக்கும் உயிர் கொடுத்து வார்த்தைகளாய்க் கொட்டிவிட்டாள். இளவேந்தன் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தான்.
“இதெல்லாம் அந்த டூ ஹவர்ஸ்ல யோசிச்சு முடிவெடுத்ததா?” என அழுத்தமாய்க் கேட்டான். துளசி பதிலளிக்கவில்லை.
“ரைட், நம்ப ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமே! அதிலென்ன
தப்பு?” என்றான் மீண்டும். குரலில் என்ன இருந்ததென இவளால் உணர முடியவில்லை.
“ம்கூம்... ப்ரபோஸ் பண்ணிட்ட பிறகு எப்படி ப்ரெண்டா இருக்க முடியும். நீங்கதானே சொன்னீங்க?” எனத் திரும்பாமல் கேட்டாள். இத்தனை நேரப் பேச்சிற்கும் அவனது முகத்தைப் பார்க்கவே இல்லை. பார்த்தால் உடைந்துவிடுவோம் என மனம் பயந்து தொலைத்தது. இவனைக் கடந்துவிடு மனமே என ஊமையாய் அழுதாள். ஏனோ உறுதியெல்லாம் இந்தக் காதலின் முன்பு, வேந்தனின் முன்பு தோற்று விடுவது போலொரு பிரம்மை நெஞ்சை அழுத்தியது.
“சரி, ஃப்ரெண்ட்ஸா வேணாம். லவ் பண்ணலாம்!” என்றவன் கூற்றில் இதயம் அதிர அவனைத் திரும்பிப் பார்த்தாள் துளசி.
அவளது கண்களிலிருந்து கண்ணீர் குபுகுபுவென வழிந்து கன்னத்தை நனைத்தன. “முடியாது இளா!” என்றாள் அழுகையுடன். எதுவும் பேசாது எழுந்து அவள் முன்னே நின்றான். இவள் பளபளத்த விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, குனிந்து அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டிருந்தான். அவன் உதடுகளின் வெம்மையில், மென்மையில் இன்னுமின்னும் துளசிக்குக் கண்ணீர் பொங்கியது.