- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 19
உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தது. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான்.
“ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப் பொங்கியது.
“என்னதான் வேணும் உங்களுக்கு. வேணாம், வேணாம்னு சொல்லியும் இவ்வளோ செய்றீங்க? காலம் முழுக்க உங்களுக்கு நான் நன்றிகடன் பட்டவளா கில்டி கான்ஷியஸோட இருக்கணுமா?” எனக் கோபமாய் உடல் அதிரக் கேட்டாள் துளசி.
“ஷ்... துளசி, மெதுவா!” அவள் பேசியதைப் பொருட்படுத்தாமல் மேடிட்ட வயிற்றில் அவனது கண்கள் பதிந்து மீண்டன.
“இப்போ கூட நான் கேட்குற கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியலை. குழந்தைக்கு எதுவும் ஆகிடும்னு யோசிக்குறீங்க? என்னை நீங்க ஒரு பொருட்டாவே மதிக்கலை. ஆமா! தப்பு பண்ணேன் தான். அதுக்காக காலம் முழுக்க பேசாம இருந்து என்னைத் தண்டிக்கப் போறீங்களா? என்னோட சூழ்நிலை என்னென்னு ஒரு வார்த்தைக் கேட்க கூட உங்களுக்கு மனசு இல்லைல?” எனக் கேட்டவளின் உதடுகளில் விரக்திப் புன்னகை.
“என் வாழ்க்கையில ஏன் திரும்பி வந்தீங்க? என் பாரத்தை நானே சுமந்துக்கிறேன்னு தானே சொன்னேன்? இப்படி மறுபடியும் வந்து என்னைக் கொஞ்சம் கொஞ்மா சாகடிக்குறீங்க. நான் ஒருத்தி தனி மனுஷியாய் இருந்தப்போ என்கிட்ட இந்த மாதிரி அக்கறையா, அன்பா பேசி இருப்பீங்களா? உங்கக் கோபம் நியாயமானது தான். அதை எத்தனையோ வழில காட்டி இருக்கலாமே. ஏன் நீங்க என்னைக் கைநீட்டி அடிச்சு இருந்தா கூட வலிச்சு இருக்காது. இப்போ ரொம்ப வலிக்குதுங்க. ப்ரெக்னன்ட் ஆனப்புறம்தான் இந்த அக்கறை, பாசம் எல்லாம். அப்போ குழந்தை பிறந்ததும் மறுபடியும் பேசாம போய்டுவீங்களோ, உங்களோட கோபம் நம்ப வாழ்க்கையை அழிச்சுடுமோன்னு எத்தனை நாள் அழுது இருக்கேன்?” எனக் கேட்டவள் அப்படியே அமர்ந்து முட்டியில் முகம் புதைத்தாள். கோபமும் ஆற்றாமையும் கண்களில் நீராய் பெருகின. வேந்தன் அவளது வார்த்தைக் கொடுத்த அதிர்வு தாங்காது அப்படியே நின்றிருந்தான்.
“நீ, நான் இல்லாம இருந்துடுவேன்னு நிரூபிச்சுட்ட. பட், என்னால இந்த ஷிவா இல்லாம இருக்க முடியாது, முடியலை. அது தான் ட்ரூ. அதான் வந்தேன்!” சுயம் பெற்று வார்த்தைகளை உதிர்த்தவனின் குரலில் அத்தனை இடறல். மனைவி கண்ணீர் இவனுக்கும் கண்களைப் பனிக்கச் செய்தன; வலிக்கச் செய்தன.
“இப்படி கொஞ்சம் கொஞ்சமாக என்னைக் கூட வச்சு சித்ரவதை பண்றதுக்கு நான் இல்லாமலே நீங்க நல்லா இருந்துருப்பீங்க. நாம ரெண்டு பேரும் நல்லா இருந்திருப்போம்!” என்றாள் வலியையும் வேதனையும் அடக்கிய குரலில். இவன் தலையை இடம் வலமாக அசைத்தான்.
“கஷ்டமோ, நஷ்டமோ சேர்ந்தே இருக்கலாம், இருக்கணும்!” என்றான் அழுத்தமாய்.
“வேணாம்... என்னால முடியலை!” என்று கையைப் பின்னால் ஊன்றி மெதுவாக எழுந்து நின்றவள், “உங்களை மாதிரி கடமைக்காக என்னால வாழ முடியாது. என்னை விட்ருங்க!” என்றவளின் ஒருக் கரம் உயர்ந்து முகத்திலிருந்த உவர் நீரைத் துடைத்தன.
“விட்ருங்கன்னா, என்ன அர்த்தத்துல பேசுற துளசி?” என்றவனை வெறித்தவள், “துளசி, துளசின்னு சொல்லி என்னை தள்ளி வச்சு தண்டனை கொடுத்து, நீங்களும் கஷ்டப்படுறதுக்கு நான் என் அம்மா வீட்லயே இருந்துட்றேன்!” என்றவளை அனல் கக்கும் விழிகளால் முறைத்தவனின் உடல் இறுகியது.
“இந்த ஜென்மத்துல அது நடக்காது!” என்றான் ரௌத்திரமானக் குரலில்.
சில நொடிகள் அவனை வேதனை பொங்கப் பார்த்தவள், “மன்னிக்கவும் தயாரா இல்ல, என்னை ஏத்துக்கவும் தயாரா இல்ல. வெளிப் பார்வைக்கு புருஷன் பொண்டாட்டியா நடிச்சு, குழந்தை வந்ததுக்குப் பிறகு அக்கறை காட்டுறீங்க. குழந்தை பிறந்தப்புறம் கண்டிப்பா நான் உங்களுக்கு வேண்டாதவளா போய்டுவேன். இப்போ இருக்க அன்பானவரை அப்போ என் மனசு தேடுமே! என்ன பண்ண சொல்றீங்க? எதுக்கு இப்படி நடிச்சுட்டே வாழணும். ஒரேடியா உதறித் தள்ளிடுங்க. நிம்மதியாவது மிஞ்சும்!” என்றவளைத் தாண்டி சில காகிதங்களை எடுத்து வந்தவன், “இஷ்டமோ, கஷ்டமோ என் கூட நீ வாழ்ந்து தான் ஆகணும். ரெண்டு பேருக்குமே டிவோர்ஸ் வாங்குற ரைட்ஸ் இல்ல. அக்ரிமெண்டை ஞாபம் வச்சுக்கோ துளசி. இனிமே பிரிஞ்சுப் போறேன்ற வார்த்தை உன் வாயில இருந்து வரக் கூடாது!” எனக் கர்ஜிக்கும்
குரலில் பேசி, காகிதத்தை நீட்டியவனை வெறுப்புடன் பார்த்தவள், அதை வாங்கி மனதிலுள்ள கோபம் கரையும் வரை கிழித்தாள். வேந்தன் எப்போதோ அகன்றிருந்தான்.
துளசிக்கு அத்தனையாய் சினம் பொங்கியது. செல்லும் அவனை வேதனையுடன் பார்த்தவளுக்கு என்ன செய்து வாழ்க்கையை சரிசெய்ய போகிறோம் எனத் தெரியாது மனம வெதும்பியது. நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தது கால் வலி ஏற்பட, மெதுவாய் நகர்ந்து சென்று ஓரிருக்கையில் அமைதியாய் அமர்ந்து விழிகளை மூடினாள். இமையோரம் வழிந்த நீர் செவியைத் தொட்டுத் தடவி முத்தமிட்டன.
என்று தீரும் இந்த வலியும் வேதனையுமென மனம் ஏங்கியது. வேண்டாமென இழுத்துப் பிடித்தும் நினைவுகள் வேந்தனை முதன் முதலில் சந்தித்த நாளில் சென்று நின்றது.
***
திருப்பூரின் டி.என்.கே புறத்தில் அமைந்திருந்த ஜக்கன் நடன மற்றும் இசைப் பயிற்சி பள்ளி அது. அன்றைக்கு ஏதோ விசேஷமென அங்குமிங்கும் பெண்களும் ஆண்களும் அலைபாய்ந்த வண்ணமிருந்தன. மேடை அலங்காரம் முதல் வாயிலில் வண்ணக் கோலங்கள் வரை அத்தனை அழாகாய் மின்னின.
மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே தங்கநிற வேலைபாடுகளால் மெல்லிய இழையில் நெய்திருந்த பரதநாட்டிய உடை பாந்தமாய் துளசியைத் தழுவியிருந்தது. கழுத்துக்கு கீழிலிருந்து அடுக்கடுக்காய் இடமிருந்து வலமென அரைக் கோளம் போலிருந்த தங்கநிற ஜரிகை விழிகளைக் கவர, கண்ணாடி முன்னே அமர்ந்திருந்தாள்.
துளசி இளங்கலை முதல் வருடத்தில் இருந்தாள். முன்பு சிறிய நடன கூடத்தில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தவள், கடந்த ஆறு மாதங்களாக ஜக்கன் நடன பள்ளியில் மாலை நேர வகுப்பில் தனது பயிற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். இன்றைக்கு அவளும், அவளுடைய தோழி பாரதியும் சேர்ந்து விழாவிற்கான வரவேற்பு நடனம் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
“ஷிவா, நல்லா பண்ணிடணும் டி. அப்போதான் மேம் நம்மளுக்கு கல்சுரல்ஸ்க்கும் சேன்ஸ் தருவாங்க!” எனப் பாரதி பதற்றமும் சந்தோஷமுமாய் உரைக்க, பதிலுறுக்காது தலையை மட்டும் அசைத்தவளின் முகத்தில் பதகளிப்புக் கொட்டிக் கிடந்தது. இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருபது நிமிடங்கள் இருந்தன.
“பாரு, நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வந்துட்றேன்!” என துளசி எழ, “தனியா போய்டுவீயா டி. நான் யாரையும் கூப்பிடவா?” என பாரதி வினவினாள்.
“இல்ல டி... நான் தனியா போறேன்...” என்ற துளசி அவர்கள் அமர்ந்திருந்த அறையின் பின்பக்க கதவு வழியே ஒருவரது கண்ணையும் கவராது மெதுவாய் பூனை நடையிட்டு சென்றாள். இருந்தும் காலிலிருந்த சலங்கை அவளைக் காண்பித்துக் கொடுத்தது. ஒருசிலர் அவளைப் பார்க்க, அதற்குள் மறைந்திருந்தாள். மேடைக்கும் கழிவறைக்கும் ஐந்து நிமிட தொலைவிருந்தது.
இவள் கழிவறைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தாள். இரண்டு எட்டுகள் வைத்திருப்பாள். அதற்குள்ளே ஆளுயர நாய் ஒன்று அவள் முன்னே வந்து நிற்க, இவளிடம் பேச்சில்லை. மூச்சை இழுத்துப் பிடித்தவள் இந்த நாயிடமிருந்து தப்பிக்க வழியிருக்கிறதா என ஆராய்ந்தாள். மேடைக்குப் பின்புறமாதலால், ஒருவரையும் காணவில்லை. இவள் கொஞ்சம் திரட்டி வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் இரண்டு எட்டுகள் எடுத்து வைக்க, நாயும் அவளுடன் நகர்ந்தது. அதில் பயம் வேறு முகத்தில் வியர்வையை அரும்பச் செய்தது.
நிகழ்ச்சி தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது என மூளை அறிவுறுத்த, மெல்லிய இழையாய் விழிகள் பனித்தன. யாரேனும் உதவிக்குத் தென்படுகிறார்களா என கண்கள் சுற்றுப் புறத்தை துழாவின.
“முடியாது...வாங்கிட்டு வர முடியாது!” என சிரிப்பும் முறைப்புமாய்க் கூறிக் கொண்டே பின்பக்கம் வழியாக மேடையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் இளவேந்தன்.
“ண்ணா... ப்ளீஸ் ணா. இனிமே அப்பாகிட்ட உன்னைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன். எனக்காக இந்த ஒரு டைம் மட்டும் இயோசின் பென்சில் வாங்கிட்டு வாயேன். நாளைக்கு ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ணணும்!” என சைந்தவியின் இறைஞ்சல் குரலில் மனமிறங்கியவன், “சரி... சரி. போனா போகுதுன்னு வாங்கிட்டு வரேன்!” என அவன் அலுத்துக்கொண்டு ஒப்புக் கொள்ள, அங்கே சைந்தவிக்கு நிம்மதி பிறந்தது.
“ரொம்ப பெரிய மனசுனா உனக்கு. மறக்காம வாங்கிட்டு வா!” என அழைப்பைத் துண்டித்தாள் சின்னவள். இளவேந்தன் முகம் புன்னகையில் மிளிர, நடந்து கொண்டே கையைத் தூக்கி தலை முடியை சரிசெய்ய முயன்றவனின் புஜத்தை இருகைகளால் பிடித்திருந்தாள் துளசி.
இவனது நடை நின்றுவிட, மெல்லிய திடுக்கிடலுடன் திரும்பினான். “சாரி சார், சாரி. அது.... இந்த நாய் என்னைத் தொரத்துது. ஸ்டேஜ் வரைக்கும் கூட்டீட்டுப் போய் விட்றீங்களா?” என மையிட்ட விழிகள் கலங்க கேட்டாள் துளசி.
இவனது கண்கள் நொடியில் அவளது உடையை, நீண்ட பின்னலை, முக அலங்காரத்தை என அனைத்தையும் ஆராய்ந்து பின்னர் நாயிடம் நிலைத்தன. அது தன் பற்கள் அனைத்தையும் காட்டி நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டு மூச்சிரைக்க நிற்க, திரும்பி துளசியைப் பார்த்தான். அவள் பயத்துடன் நின்றிருந்தாள்.
ஒரு நிமிடம் அவனது மீசைக்கு கீழே சிரிப்பு முளைத்துத் தொலைக்க, அதை உதட்டுக்குள் மென்றவன், சிறிய கல்லை எடுக்கக் குனிய அந்த நாய் நிமிடத்தில் மறைந்திருந்தது.
அதில் துளசியின் முகத்தில் நிம்மதி படர, மெதுவாய் கரங்களை அவனது புஜத்திலிருந்து நீக்கினாள். இருந்தும் விழிகள் அந்த நாய் வந்துவிடுமோ என அஞ்ச, “வாங்க, ஸ்டேஜ்ல விட்டுட்றேன்!” என அவள் முகமறிந்து இளவேந்தன் கால்கள் நடக்க, இவளும் பின்னே நடந்தாள். துளசியின் சலங்கை சத்தமும் வளையல்கள் உரசும் சத்தம் மட்டுமே இருவருக்கும் இடையில் பிரதானமாகக் கேட்டன.
அறைக்குள்ளே நுழையச் சென்றவளை நிறுத்தியவன், ஒரு நிமிடத்தில் கையில் தண்ணீர் பொத்தலுடன் வந்தான். “தண்ணியைக் குடிச்சு ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க!” எனப் புன்னகையுடன் அவளிடம் நீரை நீட்டினான். அதை வாங்கிப் பருகி தன்னை சமன் செய்த துளசியிடம் இத்தனை நேரப் பதற்றம் தணிந்திருக்க, உதடுகளை மெதுவாய் விரித்தாள்.
“ஆர் யூ ஓகே?” இளவேந்தன் கைகளை இருபுறமும் ஆட்டிக் காண்பித்து கேட்க, அவன் கரங்கள் நீண்ட புறம் கருவிழிகளை நகர்த்தியவள், “யெஸ்... தேங்க் யூ சோ மச்!” என அகமும் முகமும் மலரப் புன்னகைத்தாள்.
“பெஸ்ட் விஷஸ் ஃபார் யுவர் டேன்ஸ்!” என்றவன் விடைபெற, துளசியும் மென்னகையுடன் அறைக்குள் சென்றாள். சில நிமிடங்களில் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது.
பாரதி வலப்புறமும் துளசி இடதுபுறமுமாக மேடையில் ஏறினர். ஸ்வாகதம் கிருஷ்ணா பாடலின் இசை மோஹன ராகத்தில் நிரஜனா ரமணன் குரலில் கசியத் தொடங்கியது. வலது காலின் பாதத்தை முதலில் தரையில் தட்டி, பின்னர் இடது காலின் பாதத்தையும் நிலத்தில் முத்தமிட்டு குனிந்து இரண்டு கைகளையும் தரையில் தொட்டுக் கண்களில் ஒற்றி வணக்கத்தை தெரிவித்த துளசியும் பாரதியும் நடுவில் வீற்றிருந்த நடராஜர் சிலைக்குப் பூ தூவி அவர் காலைத் தொட்டு வணங்கினர்.
அப்படியே அந்த வணக்கத்தின் நீட்சி நட்டுவாங்கம் பாடுபவர்களிடம் குவிந்து மீள, இருவரும் முழுதாய் பாடலுக்குத் தங்களை ஒப்புவித்து பரதநாட்டியத்தைத் தொடங்கினர். இளவேந்தன் கடைசி வரிசையில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.
முதலில் அசுவாரஸ்யமாகப் பதிந்த அவனது கண்கள் துளசியின் விழி அசைவில் அங்கே நிலைத்தன. மஞ்சள் பூசிய முகம் விளக்கொளியில் மின்ன, மையிட்ட விழிகள் அபிநயத்தில் லயித்திருக்க, கரங்களையும் கால்களையும் ஒவ்வொரு அசைவிற்கும் அழகாய் எடுத்துச் சென்றாள். உதடுகள் பாடல் வரிகளை முணுமுணுத்தன.
“ஸ்வாதகம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா!” என கிருஷ்ணாவில் தொடங்கியப் பாடல் கிருஷ்ணாவில் முடிவுற்றது. இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி ஒரு காலை முன்னும் பின்னும் வைத்தபடி சிலையாய் சில நிமிடங்கள் நிற்க, ஆடிக் களைத்த களைப்பில் துளசியின் முகத்தில் சோர்விருந்தாலும், உதடுகளில் புன்னகை மிளிர, விழிகள் விகசித்தன.
இத்தனை நேரம் அமைதியாய் இருந்த அரங்கம் முழுவதும் கைத்தட்டலிலும் ஆராவராத்திலும் நிறைந்து போயின. அதில் துளசியின் விழிகள் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த தந்தை மற்றும் தங்கையிடம் நிலைத்தன. கண்ணப்பன் மகளின் நடனம் கொடுத்த சந்தோஷத்தில் அத்தனையாய்ப் புன்னகைக்க, சோனியா ஏதோ கத்தினாள். அரங்கினர் சத்தத்தில் அவளின் மெல்லிய குரல் கேட்கவில்லை. மெதுவாய் விழிகளை சுழற்றிய துளசியின் விழிகள் இளவேந்தனில் நிலைக்க, அவன் இவளைப் பார்த்து கண்ணசைத்து மென்னகை புரிய, பெண்ணின் தலை மெதுவாய் அசைந்தது.
பின்னர் பாரதியும் அவளும் மேடையைவிட்டு இறங்கினர். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிய, துளசி அலங்காரத்தைக் கலைந்துவிட்டு தந்தையிடம் சென்றாள். கண்ணப்பன் மகளைப் பாராட்டித் தள்ளிவிட்டார். பின்னர் வீட்டிற்குக் கிளம்பினர்.
இளவேந்தனும் வீடு செல்லும்போது மறக்காது சைந்தவி கேட்ட இயோசின் பென்சிலை வாங்கிச் சென்றான். காலை மாலை என இரண்டு நேரமும் நடன மற்றும் இசை பயிற்றுவித்தனர் இப்பள்ளியில். இளவேந்தன் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். இசை மீதிருந்த ஆர்வத்தில் இங்கே கடந்த இரண்டு வருடங்களாக கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறான். அன்றைய சந்திப்பிற்குப் பின்னர் ஓரிரு மாதங்கள் கடந்திருக்க, அவர்கள் சந்திக்க வாய்ப்பின்றி போயிருந்தது.
“பாரு, எங்கடி இருக்க? டென் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லிட்டுப் போன. பட், ஹாஃப் அன் அவர் ஆச்சு. எனக்கு செம்மையா பசிக்கு. மார்னிங் பிரேக் பாஸ்ட் கூட சாப்பிடலை நான்!” மெல்லிய குரலில் அலைபேசியில் தன் தோழியைத் திட்டிக் கொண்டிருந்தாள் துளசி. வார இறுதியில் முழு நேர வகுப்பிற்காக வந்திருந்த துளசி, மதிய உணவிற்காக பணிமனையில் அமர்ந்திருந்தாள்.
“சாரி டி, ஒரு ஃபைவ் மினிட்ஸ். வரேன், வரேன்!” என அவள் அழைப்பைத் துண்டிக்க, தனது கைப்பையை அவளிடம் கொடுத்ததை எண்ணி நொந்தபடி அமர்ந்திருந்த துளசிக்கு வயிற்றில் அதிகப்படியாக அமிலம் சுரந்தது.
“லஞ்ச் மட்டும் கட் பண்ணவே முடியாது போல. ஏன்னு தெரியலை!” என முணுமுணுத்தவள் கையில் ஒரு ரூபாய் பணம் கூட இன்றி பணிமனையில் அமர்ந்திருந்தாள்.
“எக்ஸ்யூஸ் மீ?” எனத் தனக்கு முன்னே கேட்ட குரலில் இவள் அமர்ந்தவாறே நிமிர்ந்து பார்க்க, இளவேந்தன் நின்றிருந்தான். பரிட்சயமான முகம் என்ற எண்ணத்தில் இருவரது உதடுகளும் நொடியில் புன்னகையில் மலர்ந்தன.
“மே ஐ சிட் ஹியர்?” என்ற இளவேந்தன் அவள் பதிலளிக்கும் முன்னே அருகிலிருந்த இருக்கையை ஆக்கிரமித்தான். அவன் கையிலிருந்த இரண்டு பழச்சாற்றில் ஒன்றை துளசி முன்னே நீட்டியவன், தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டான்.
அவள் யோசனையுடன் அவனை நோக்கினாள்.
“ப்ரெண்ட்காக வாங்குனது. அவன் வரலை. சோ...” என நிறுத்திவிட்டு, “உங்களுக்குப் பசிக்குதுன்னு போன்ல சண்டை போட்டீங்களே!” என்று குறும்பான குரலில் கூறவும், துளசியின் முகம் லேசாய் சிவந்தது.
“இல்ல... அது லஞ்ச் மட்டும் சாப்பிடாம இருக்க முடியாது என்னால. கரெக்ட் டைம்க்கு சாப்ட்ருவேன்!” என்றாள் தயக்கத்துடன்.
“இதுல என்ன தயக்கம்... குட் ஹேபிட் தானே. ஹேவ் திஸ் ஜூஸ்!” என்றான் சகஜமான குரலில். முதலில் தயங்கி மறுத்தவள், பின்னர் அதை எடுத்துப் பருகலானாள்.
இளவேந்தன் பார்வை எதேச்சையாக அவளது கூந்தலில் நிலைத்தன. அன்றைக்கு அத்தனை நீளமாய் இருந்த முடிக்கு என்னவானது எனத் தோன்ற, அதை வாய்விட்டும் கேட்டு விட்டான்.
“அது சொந்த முடி இல்லை. ஜவுரி முடி தான் வச்சிருந்தேன்!” என மீண்டுமொரு சங்கோஜம் வாய்க்கப் பெற்றதில் அவளது குரல் உள்ளே சென்று வெளி வந்தது. இளவேந்தன் முகத்தில் மென்முறுவலுடன் கூடிய சிரிப்பு படர்ந்தது.
“ஐ யம் இளவேந்தன்!” என அவன் அவள் முன்பு கையை நீட்ட, “ஷிவதுளசி!” என்றாள் பதில் புன்னகையுடன்.
“ஹம்ம்... ஷிவா. நைஸ் நேம்!” என அவன் இருக்கையிலிருந்து எழுந்தான். அவனது கண்கள் கைக்கடிகாரத்தில் நிலைக்க, துளசியின் பார்வையும் அங்கேதான். விலையுயர்ந்த கடிகாரத்தைக் கண்டதும் அவனுடைய பின்புலம் இவளுக்குப் புரிந்தது.
“தேங்க்ஸ் இளா! ரெண்டு டைம் கேட்காம ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. உங்ககிட்ட நன்றிகடன் பட்டுட்டேனே!” என சின்ன சிரிப்புடன் அவள் கூற, இளவேந்தனுக்கும் புன்னகை பிறந்தது.
“சான்ஸ் கிடைச்சா ஹெல்ப்பைத் திருப்பி வாங்கிக்கிறேன்!” என அவன் குறும்பாய்க் கூற, இருவரும் விடை பெற்றனர். பாரதி இன்னுமே தாமதமாய் வரவும், துளசி அவளை வசைபாடி முடித்துப் பின் உண்டுவிட்டு இருவரும் வகுப்பறையை நோக்கி நகர்ந்தனர்.
அடுத்த வார வெள்ளிக்கிழமை வகுப்பு முடிய, இரவு எட்டைத் தொட்டிருந்தது. துளசி கண்ணப்பனுக்கு அழைத்துக் கூறிவிட்டு பள்ளி வாயிலருகே இருந்த கல்மேஜையில் அமர்ந்திருந்தாள். சுற்றிலும் மையிருட்டாயிருக்க, எஞ்சியிருந்த ஒரு சிலரும் விடை பெற்றிருந்தனர். முகப்பிலிருந்த நியான் விளக்கு மட்டும் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. எப்போதும் பாரதி இவளுடன் தான் அமர்ந்திருப்பாள். ஆனால், கடந்த வாரம் அவளது வீட்டினருகேயிருந்த பெண் ஒருத்தியுடன் நட்பாகிவிட, அவளோடு சேர்ந்து செல்லத் துவங்கினாள். அதனால் துளசி தனித்து விடப்பட்டாள்.
அதற்கெல்லாம் துளசி பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. இவள் இப்பள்ளியில் தன்னுடன் சேராது போயிருந்தால், தனியாகத்தானே அமர்ந்திருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டாள். சுற்றுப்புறத்தில் ஒரு கண்ணையும் அலைபேசியில் மறுகண்ணையும் வைத்திருந்தவளின் விரல்கள் அலைபேசி திரையில் அலைந்த வண்ணமிருந்தன.
வகுப்பு முடிந்து நண்பர்களுடன் வெளியேறச் சென்ற இளவேந்தனின் பார்வை தனித்து அமர்ந்திருந்த பெண்ணில் நிலைத்தது. விழிகளை சுருக்கிப் பார்த்தவனின் உதடுகள் ஷிவா என உச்சரிக்க, நண்பர்களை அனுப்பி வைத்துவிட்டு அவளருகே விரைந்தான்.
தன் முன்னே பரந்து விரிந்த வெளிச்சம் ஓர் உருவத்தில் அடைபட்டு கருநிழல் சுற்றிப் படர, யோசனையாய் நிமிர்ந்தாள் துளசி. “ஷிவா... இங்க என்ன தனியா உட்கார்ந்து இருக்கீங்க?” என்ற கேள்வியுடன் இளவேந்தன் அவளருகே அமர்ந்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “அப்பாகாக வெய்ட்டிங் இளா!” என்றாள் பதிலாய்.
“ஹம்ம்... ஃப்ரெண்ட்ஸ் கூட உட்காரலாமே. ஏன் நைட் டைம், தனியா உட்கார்ந்து...அது, சேஃப்டி இல்ல மா!” என்றான் அவளுக்குப் புரிய வைத்திடும் எண்ணத்தோடு. அதில் இவளது உதடுகளில் மெல்லிய புன்னகை.
“ப்ம்ச்... வாட்ச்மேன் அண்ணா இருப்பாங்க இளா. அப்புறம் பெப்பர் ஸ்ப்ரே வச்சிருக்கேன். அப்பா ஷார்ப்பா எய்ட்க்கு வந்துடுவாரு...”
“ஓ... அப்பா என்ன பண்றாரு!” இவன் இயல்பாய்க் கேட்டான்.
“ஹோட்டல் வச்சிருக்காரு!” அவள் பதிலளித்ததும் இவன் பார்வை குறும்பாய் அவளிடம் படர, அதன் சாராம்சம் உணர்ந்தவள் முகத்தில் சிரிப்பும் முறைப்பும் வந்து போனது. கொஞ்சம் கொழுகொழு என இருந்த துளசியின் கன்னங்கள் நன்றாய் உப்பியிருந்தன. தன் கன்னங்களில் படர்ந்த பார்வையில் முகத்தை மறுபுறம் திருப்பிய துளசி, “இளா...” என்றாள் மென்முறைப்பாய்.
“சாரி... சாரி, ஜஸ்ட் ஜோக்கிங்!” என்றவன் உதட்டுக்கு கீழே புன்னகை நெளிந்தது. அதைப் பார்த்து இவளுக்கும் முறுவல் பூத்தது.
“இந்த 98ல ஸ்டார்ட் ஆகி 28ல முடியுற ஃபோன் நம்பர் உங்ககிட்ட இருக்கா?” என அவன் வினவ, இவளது முகம் புரியாது யோசனையில் சுருங்கி விரிந்தது.
“யாரோட நம்பர்?” துளசி கேள்வியாக நிறுத்த, “அது... அஹம் இளவேந்தன்னு ஒரு பையனோடது!” என்றான் சிரிக்காமல். சில நொடிகள் யோசித்த துளசிக்குத் அவனைத்தான் அவன் குறிப்பிடுகிறான் என்றுணர்ந்ததும், முகத்தில் புன்னகை படர்ந்தது.
“ரொம்ப க்ளவர்தான்...” என்றவள் அலைபேசியை அவனிடம் நீட்ட, அதில் தன்னுடைய இலக்கத்தை பதிந்துவிட்டு அழைப்பு விடுத்துக்கொண்டான். சில பல நிமிடங்களிலே கண்ணப்பன் வந்துவிட்டார்.
“ப்பா... இது இளவேந்தன்!” என அவனை அறிமுகம் செய்து பரஸ்பரம் பேசி முடிய, இருவரும் விடை பெற்றனர். இளவேந்தன் செல்லும் துளசியைப் புன்னகை மாறாது பார்த்திருந்தான்.
அடுத்தடுத்து வந்த நாட்களும் இதுவே தொடர் கதையாகிப் போனது. துளசி வேண்டாமென மறுத்தும் இளவேந்தன் அவளுக்காகவென வந்தான். கண்ணப்பன் வரும்வரை காத்திருப்பான். அவர் இருசக்கர வாகன சத்தம் கேட்டு இவள் நகர்ந்ததும், தன் வாகனத்தில் வீட்டை நோக்கி நகருவான். தினமும் பேசிப், பழகிப், புரிந்து, உணர்ந்து, ஸ்பரிசித்து என அவர்களுடைய நட்பு அழகாய் மொட்டவிழ்ந்தது.
வேந்தனின் நீங்க, வாங்க, என்ற பன்மை விளிப்புகள் எல்லாம் ஒருமைக்குத் தாவியிருக்க, துளசி இரண்டு வயது வேறுபாட்டின் காரணமாக பன்மையிலே நின்றுவிட, அவர்களுக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம் உரிமையுடன் உயர்ந்திருந்தது. அன்றாட நிகழ்வுகள், கல்லூரி பழக்க வழக்கங்கள், குடும்ப நிகழ்வுகள் என அனைத்தையும் பகிர்ந்து கெண்டனர். அதில் விருப்பங்களும் வெறுப்புகளும் அடக்கம்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இளவேந்தன் வரவில்லை என நடனப்பள்ளியை ஒரு முறை சுற்றி வந்தாள் துளசி. மாலையில் அவனுடனான பொழுதுகள் இல்லாது கடந்த இரண்டு நாட்கள் வெறுமையைப் பூசியிருக்க, இன்றும் தனியாய் அமர்ந்திருக்க வேண்டுமோ? என எண்ணம் சிந்தையில் உதித்தது. கைகள் இளவேந்தனுக்கு அழைப்பு விடுக்கலாமா வேண்டாமா என அலைபேசியுடன் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்க, ஒரு மனதாய் அழைத்துவிட்டாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “ஹம்ம்... ஹலோ!” முனங்கலான குரல் கரகரப்புடன் செவியில் விழுந்தன.
“இளா...” தயக்கத்துடன் இவளது குரல் கேட்டதும், அவனது உதட்டில் முறுவல் பூத்தது. இமைகளைப் பிரிக்க முயன்ற இளவேந்தன், “சொல்லு ஷிவா!” என்றான் சோர்வான குரலில்.
“என்னாச்சு, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கே. அகாடமிக்கும் ரெண்டு நாளா வரலை நீங்க?” கவலை அப்பிய குரலில் கேட்டாள் பெண்.
“ஃபீவர் டா. வேற ஒன்னும் இல்ல!” என்றான் சமாதானக் குரலில்.
“ஓ... இப்போ பரவாயில்லையா? டாக்டர் கிட்டே போனீங்களா?”
“போய்ட்டேன், டேப்லெட் சாப்ட்டேன். நவ் பெட்டர்!” அவன் அடுக்கடுக்காய்க் கூறியதும், இவளுக்கு மென்னகை படர்ந்தது.
“ஹம்ம்... ரெண்டு நாளா உங்களுக்காக வெய்ட் பண்ணேன். நீங்க வரலைன்னதும் சின்ன டிசப்பாய்ன்மெண்ட். அதான் கால் பண்ணேன்!” அவளது குரலில் இவன் முகம் முழுவதும் மலர்ந்து போனது. தலையணையில் மடியில் வைத்து கையைக் குற்றி எழுந்தமர்ந்தான்.
“இன்னைக்கும் வெய்ட் பண்ணலாம். ஏமாத்த மாட்டேன்!” என்றான் சின்ன சிரிப்புடன்.
“நோ... வேணாம். நீங்க ஹெல்த்தைப் பாருங்க. சரியானதும் வரலாம்!” அவசரமாக அவளது குரல் மறுத்தது.
“ஹம்ம்... ஓகே வரலை!” இவன் நொடியில் பதிலளித்ததும், அவளிடம் ஆகப்பெரும் மௌனம். அதில் இளவேந்தனுக்கு முறுவல் பூத்தது.
“வரவா? வேண்டாமா?” கேலி சிரிப்புடன் கேட்டான்.
“ஒன்னும் வர வேணாம்!” ரோஷக் குரலில் துளசி கூற, “வருவேன், நீ வெயிட் பண்ணணும் ஷிவா!” என்றான் சிரிப்புடன்.
“நிச்சயமா வெய்ட் பண்ண மாட்டேன். போங்க!” துளசி மென் கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தாள். ஆனால் இளவேந்தனுக்கு முன்னே வந்து அவனுக்காக காத்திருந்தப் பெண்ணைக் காண்கையில் இவனுக்கு முகமும் அகமும் மலர்ந்து போனது. அவளுடைய செல்லக் கோபத்தை பேசி, சரி செய்து அவர்கள் நாட்குறிப்பில் விடுபட்டிருந்த இரண்டு நாட்களையும் அன்பால் நிரம்ப செய்திருந்தனர்.
தூறும்...