- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 18
அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண்.
துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும் அழுகையுடன் தாவி அவனை இறுக அணைத்தவளின் உடல் இளவேந்தனில் பொருந்த, அவளை அப்படியே தன்னுயரத்திற்குத் தூக்கினான்.
“நீங்க அப்பாவாகப் போறீங்க இளா!” திக்கித் திணறி கமறலான குரலில் உரைத்தவள் அவன் முகத்தோடு தன் முகத்தை இழைத்தாள். இருவருக்கும் இடையேயிருந்த பிணக்குகள் அந்நொடி பின்னகர்ந்திருந்தன. மனைவியின் முன்னுச்சியில் அழுந்த முத்தமிட்டவனின் உணர்வுகள் எல்லாம் வரையறுக்க முடியாது வரையறைகளைத் தகர்த்து இதயத்தை இதமாக்கித் தொலைத்தது. அவள் கண்ணீரைத் துடைத்து விழிகளில் முத்தமிட்டான். அவனுக்குமே கண்கள் பனித்தன. எத்தனை ஆத்மார்த்தமான நிமிடங்கள் அவை. தங்களது தாய்மையை உணர்ந்த இருவரும் அதை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாது மகிழ்ச்சியில் திகைத்துப் போயிருந்தனர்.
அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்த துளசியின் சூடான கண்ணீர் ஆடவனை நனைத்தன.
“ப்ம்ச்... துளசி!” அதட்டலிட்டவனின் கரம் உயர்ந்து மனைவியின் கன்னத்தைத் துடைத்தன. சில நிமிடங்கள் தேவைப்பட்டது; அந்நொடியை உணர, ஸ்பரிக்க, உவகை கொள்ள, உணர்ச்சி வசப்பட என நொடிகள் நிமிடங்களாகக் கரைந்தன.
துளசியை இருக்கையில் அமர வைத்தவன், தண்ணீர் பொத்தலை நீட்டினான். அதை வாங்கிக் குடித்து தன்னை சமன் செய்து கொண்டாள் பெண். இருந்தும் மெதுவாய் மூச்சிரைத்தது அவளுக்கு.
“இன்ஹேலர்... இன்ஹேலரை எடுங்க!” எனத் துளசி கூறும் முன் வேந்தன் அவளது கைப்பையிலிருந்து உறுஞ்சியை எடுத்துக் கொடுத்திருக்க, அதை உபயோகித்து சில நிமிடங்களில் தன்னிலைப் பெற்றாள்.
அதிக உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த வேந்தன், “ஈஸி துளசி... ஒன்னும் இல்ல!” என தோளை ஆதுரமாகத் தடவவும், அவனது கரங்களை விடாது பற்றிக் கொண்டாள் துளசி. இளவேந்தனும் ஆதரவாக அவளுக்கருகே நின்றான்.
“வேந்தா... துளசி, சாப்ட வரலையா நீங்க? டைமாச்சு!” என நளினி குரல் கொடுத்தார். மனைவியிடமிருந்து பிரிந்தவன் தாயிடம் சென்று அவரை அணைத்துக் கொண்டான்.
“வேந்தா... என்ன டா? என்னாச்சு?” அவர் பதற, “ம்மா... நீங்க பாட்டியாகப் போறீங்க!” என்றான் முகம் கொள்ளா புன்னகையுடன். அவன் கூற்றின் சாராம்சம் உணர்ந்த நளினியின் முகம் மலர்ந்து போனது.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. இந்தப் பொண்ணு என்கிட்ட சொல்ல சங்கடப்பட்டுட்டு இருக்காளா என்ன?” என்றவர் விறுவிறுவென அவர்களது அறைக்குள் நுழைந்தார். துளசி மாமியாரைக் கண்டதும் எழுந்து நிற்க, “நல்ல பொண்ணுமா நீ...” என சிரிப்பும் அதட்டலுமாய்க் கூறியவர், அவளின் கன்னம் வழித்தார்.
“நல்லபடியா பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுத்துடு மா. ஆரண்யாவை வளர்த்த மாதிரி நானே வேந்தன் புள்ளையையும் வளர்க்கணும்!” என ஆசையாய்க் கூறியவரிடம் புன்னகையுடன் தலையை அசைத்தாள் துளசி.
“உங்க அம்மாவுக்கும் போன் போட்டு சொல்லிடு துளசி. அவங்களும் சந்தோஷப்படுவாங்க. அதுக்கு முன்னாடி வந்து சாப்பிடு நீ. புள்ளத்தாச்சி பொண்ணு!” எனக் கையோடு அழைத்துச் சென்றார். தீக்ஷிதாவிற்கு விஷயம் பகிரப்பட, அவளும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள்.
உண்டு முடித்த வேந்தன் பாதியிலே விட்டுவிட்டு வந்த வேலையைத் தொடர செல்ல, துளசி தாயிற்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தாள். அவருக்கு அத்தனை சந்தோஷம். மறுநாள் வருவதாய் அவரிடம் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், சோர்வாய் இருக்கிறதென உறங்கிவிட, மாலை சைந்தவியின் பேச்சில்தான் விழித்தாள்.
“ஐயோ அண்ணி, சாரி. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என தயங்கியபடி உள்ளே நுழைந்தவளின் பின்னே டீவாவும் ஆரண்யாவும் நுழைந்தனர்.
“இல்ல சைந்து... சும்மாதான் படுத்திருந்தேன்!” என்ற துளசி கட்டிலில் சாய்ந்தமர, அவளுக்கு அருகே மற்றவள் உட்கார்ந்தாள்.
“இப்போதான் அம்மா சொன்னாங்க. அகைன் நான் அத்தையா ப்ரமோட் ஆகி இருக்கேன்னு. ஹேப்பி அண்ணி. கங்கிராஜூலேஷன்ஸ்!” என்றாள் படபடவென.
கட்டில் மீது தத்தி தாவி ஏறிய ஆரண்யா துளசியின் மீது குதித்து அமரவும், “ஆருமா... இப்படி இனிமே டொம்முன்னு சித்தி மேல உட்காரக் கூடாது. சித்தி வயித்துல குட்டி க்ருஷ்ணா இருக்கான்!” என்றாள் குழந்தைக்குப் புரியும்படியாக.
“குட்டி க்ருஷ்ணாவா?” என விழிகளை விரித்த ஆரண்யா துளசியின் மடியிலிருந்து எழுந்தாள். தனது குட்டிக் கண்களை விரித்து அங்குமிங்கும் அலைபாயவிட்டவள், “எங்க... குட்டி க்ருஷ்ணாவைக் காணோம். என்கிட்ட கொடுங்க அவனை, நாங்க ரெண்டு பேரும் விளையாட்றோம்!” என சின்னவள் கேட்க, இருவருக்கும் புன்னகை மிளிர்ந்தது.
“ச்சு... க்ருஷ்ணா வர இன்னும் நாளாகும் டா ஆரு!” என துளசி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“நோ... நோ ஆருவுக்கு இப்பவே குட்டி க்ருஷ்ணாவைப் பார்க்கணும்!” என சின்னவள் கண்களை கசக்க, சைந்தவி என்ன செய்வது எனத் தெரியாது விழித்தாள்.
“குழந்தையை என்ன ஆர்டர் போட்டா டி வாங்க முடியும்?” என அதட்டலுடன் உள்ளே நுழைந்த தீக்ஷிதா, “முதல்ல நீ வந்து ஹோம் வொர்க் பண்ணு ஆரு. அப்புறம் விளையாடலாம்!” என அவளை அழைத்துச் சென்றுவிட்டாள்.
சைந்தவி மருத்துவம் பயில்வதால் தனக்குத் தெரிந்த அறிவுரைகளை வழங்கி முடிய, துளசி சின்னப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள். சோனியா அழைத்து அலைபேசியிலே ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.
துளசி நாளைக்குக் கண்டிப்பாக வீட்டிற்கு வருவதாக உத்திரவாதம் அளித்தப் பின்னர்தான் சின்னவள் அழைப்பைத் துண்டிக்க, இவளுக்கு முகத்திலிருந்த புன்னகை வாடவே இல்லை. வேந்தன் வேலை முடிந்து வந்தான். மறுநாள் காலையில் மருத்துவரிடம் சென்று பார்க்கவென முன்பதிவு செய்திருந்தான். சந்தனவேலும் மகிழும் விஷயமறிந்து வேந்தனிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இரவு துளசி வேந்தனுக்கு முன்பாகவே வந்து படுத்துவிட்டாள். உடல் கொஞ்சம் அசதியாய் இருக்க, நளினி தான் மருமகளை அதட்டி அறைக்குள் அனுப்பியிருந்தார். வேந்தன் உள்ளே நுழைந்து அவளருகே படுக்க, இவள் மெதுவாய் நகர்ந்து அவனருகே சென்று படுத்துக் கொண்டாள்.
அவனை இறுக அணைத்து மார்பில் முகம் புதைத்தவளுக்கு கணவனின் அருகாமை அத்தனை தேவைப்பட்டது. அதை உணர்ந்தவனும் துளசியின் கையைப் பிடித்து அதில் உதடுகளை ஒற்றி எடுக்க, இவள் நிமிர்ந்து அவனை அமைதியாய்ப் பார்த்தாள். பின்னர் கொஞ்சம் எக்கி அவனது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட, வேந்தன் உடல் சிலிர்த்தது.
இரண்டு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தமிட்டவள் தயக்கத்துடன் கணவனின் உதட்டில் தன் இதழ்களைப் பொருத்தினாள். இத்தனை நேரம் அமைதியாயிருந்தவன் கைகள் நீண்டு அவளை வளைக்க, விலாங்கு மீனாய் துள்ளி வளைந்து கணவனிடம் புகுந்தாள் பெண். இருவரிடமும் காமத்தைக் கடந்த காதலே மிஞ்சியிருக்க, அத்தனை மென்மையாய் மனைவியைக் கையாண்டான் வேந்தன். களைத்துப் போய் தன் மார்பில் முகம் புதைத்தவளின் முகத்தை மறைத்த முடியைப் புறந்தள்ளி அழுந்த முத்தமிட்டவன், “தூங்கு டி...” என அதட்டலுடன் கூற, இருவரும் உறங்கிப் போயினர்.
காலையிலே வேந்தனும் துளசியும் மருத்துவமனை சென்று கர்ப்பத்தை உறுதி செய்திருந்தனர். மகிழ்ச்சி இரண்டு மடங்காக உயர்ந்திருந்தது.
“அம்மாவைப் பார்த்துட்டுப் போகலாம்!” என்றவளின் கூற்றை ஏற்றவன் மகிழுந்தை துளசியின் வீட்டை நோக்கி செலுத்தினான்.
அவர்கள் உள்ளே நுழைந்த நொடி ஓடி வந்து தமக்கையைக் கட்டியணைத்த சோனியா, “சோ ஹேப்பி ஃபார் யூ கா!” என்றாள் துள்ளலுடன்.
“சோனி, மாப்பிள்ளயை உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்டீயா?” என அதட்டலுடன் பின்னே வந்த வசுமதி இருவரையும் அழைத்து அமர வைத்தார்.
தேநீரைக் குடித்து முடித்த இளவேந்தன் அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணி, “துளசி, நான் ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறே. இப்போ ஆஃபிஸ் போறேன்!” எனக் கிளம்பினான்.
“மாப்பிள்ளை, இருந்து சாப்ட்டு போங்க!” என வசுமதி கூற, “இல்ல அத்தை, ஆஃபிஸ்ல வொர்க் இருக்கு...” எனக் கூறி விடை பெற்றான். வசுமதிக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. மகளுக்குப் பிடிக்குமென அத்தனை உணவுகளை ஒரே நேரத்தில் சமைத்தார்.
“ம்மா... ஒருத்திக்கு ஏன் மா இத்தனை சமைக்கிற?” எனத் துளசி சுகமாய் அலுத்தாள். சோனியா கூட அவரிடம் ஏதோ பேசி வம்பிழுத்தாள். மாலை வேந்தன் வந்து துளசியை அழைத்துச் சென்றான்.
இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தப் பின்னர் துளசி வேலைக்கு செல்வதாக கூற, நளினி விடவில்லை.
“இல்ல துளசி, நீ என்ன சொன்னாலும் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். புள்ளதாச்சி பொண்ணு தினமும் எப்படி வேலைக்குப் போய்ட்டு வருவ?” என அவர் குரலை உயர்த்திவிட, துளசியிடம் பேச்சில்லை. அவளது முகம் வாடிவிட்டது. விழிகள் கலங்குவது போலிருக்க, இமையை சிமிட்டி அதை மறைக்க முயன்றாள்.
“ம்மா... என்னம்மா சொல்ற நீ. எங்க ஸ்டாஃப் ஒருத்தவங்க ப்ரக்னென்ட்தான். அதுக்காக காலேஜ் வராம இருக்காங்களா என்ன? வீட்லயே இருக்கதைவிட வெளிய போய்ட்டு வந்தாதான் அண்ணி ரிலாக்ஸா பீல் பண்ணுவாங்க. நம்ம ஆஃபிஸ்ல அவங்களுக்கு நிறைய வேலை எல்லாம் கொடுக்கப் போறாங்களா என்ன?” என சைந்தவி துளசியின் முகத்தைப் பார்த்து தாங்காது பேசினாள்.
“சைந்து, இது பெரியவங்க விஷயம். நீ தலையிடாத...போ காலேஜ் கிளம்பு!” என அவளை அதட்டியவர் இறங்கி வரவேயில்லை.
“அத்தை, கார்ல போய்ட்டு கார்ல வரப் போறா. இதுல என்ன கஷ்டம் இருக்கப் போகுது. என்னை மாதிரி அவளுக்கு வாமிட்டிங் சிக்னெஸ் கூட இல்ல. அப்புறம் என்ன அத்தை?” என்ற தீக்ஷி துளசிக்கு ஆதரவாக கரம் நீட்டினாள்.
“தீக்ஷி, நீ ஆராவை சுமக்கும் போது நல்ல ரெஸ்ட்ல இருந்தனாலதான் குழந்தை நல்லபடியா பொறந்துச்சு!” என அவர் பேச்சிலே நின்றார். யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
அறையிலிருந்து வெளியே வந்த வேந்தன், “ம்மா... டாக்டர் ஆஃபிஸ் போய்ட்டு வர்றதுல பிராப்ளம் இல்ல. டெய்லி ஆக்டீவா இருந்தாதான் நார்மல் டெலிவரியாகும். இல்லன்னா சிசேரியன்னு சொல்லிட்டாங்க. உங்க இஷ்டம் நீங்களே சொல்லுங்க!” என்ற மகனை முறைத்தவர், “டேய், அப்படியெல்லாம் டாக்டர் சொன்னாங்களா என்ன?” என வினவினார். அவன் பதிலுரைக்கும் முன்னர் வெளியே அரவம் கேட்க, சாம்பவியும் அவளது இரண்டு குழந்தைகளும் உள்ளே நுழைந்தனர்.
“மாமா...” என க்ருத்தவ், அனாமிகா இருவரும் இளவேந்தனிடம் விரைய, இடையில் நுழைந்த தீக்ஷிதா, “ஏன் இந்த அத்தைங்களை எல்லாம் உங்களுக்குக் கண்ணுக்குத் தெரியாதா டா?” என அவர்களை செல்லமாய் முறைத்தாள். அனாமிகா அதை காதில் வாங்காது அவனிடம் சென்றுவிட, க்ருத்தவ் என்ன செய்து எனத் தெரியாது விழித்தான். அதில் அனைவருக்கும் புன்னகை மிளிர்ந்தது.
“வா டி... தம்பி பொண்டாட்டியைப் பார்க்க உடனே வந்துட்டா!” நளினி நீட்டி முழக்க, அவரை முறைத்தாள் சாம்பவி.
“ஆமா... அப்படியே கேட்டதும் எங்களை எல்லாத்தையும் அன்னைக்கே பொறந்த வீட்டுக்கு அனுப்புற மாதிரி தானே மா மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்ச நீ?” என அவள் பதிலுக்குப் பேசியபடி இருக்கையில் அமர்ந்தாள்.
“அட! சண்டை வேணாம் விடுங்க... விடுங்க!” தீக்ஷி சன்னமான சிரிப்புடன் இருவருக்குமிடையே நுழைந்தாள்.
“ஆமா... நாங்க குடுமி புடி சண்டை போட்றோம். இவங்க இடையில வந்து தீர்க்கட்டும்!” என கிண்டலாய் சிரித்த சாம்பவி, “ம்மா... பசிக்குது மா. எதாவது எடுத்துட்டு வா!” என அவரை அனுப்பி வைத்தவள், “ஏன் வேந்தா எல்லாரும் அட்டென்ஷன்ல நிக்குறீங்க?” எனக் கேட்டாள். தீக்ஷிதா கூறும் முன்னே அறையிலிருந்து வெளியே வந்த சைந்தவி நடந்ததை சுருக்கமாகக் கூறி குழந்தைகளை முத்தமிட்டு கல்லூரி கிளம்பினாள்.
சாம்பவி துளசியருகே எழுந்து சென்றாள். “நீ எதுவும் நினைக்க வேணாம் துளசி. அம்மா அப்படித்தான், அந்தக் காலத்து மனுஷி. அதனால பயப்பட்றாங்க. நான் பேசி சரி பண்றேன்!” என்றாள் ஆதரவாய். துளசி வலிய முறுவலித்தபடி தலையை அசைத்தாள்.
நளினி மகளுக்கு பெரிய குவளையில் பழச்சாறும் குழந்தைகளுக்கு இன்னெட்டுகளையும் எடுத்து வந்தார். பழச்சாற்றைப் பருகிய சாம்பவி, “ஏன் மா, இத்தனை பேர் சொல்றாங்களே. ஏன் கேட்க மாட்ற. துளசி வேலைக்குப் போகட்டும். நான் ரெண்டு பேரை ப்ரெக்னன்டா இருக்கும்போது வொர்க் பண்ணீட்டு இருந்தேன்னு மறந்துடாத மா. துளசிக்கு கம்பர்டபிளா இல்லன்னா, வேலையை அவளே விட்ருவா. விடுங்க மா!” என்றாள்.
“இல்ல, என்னால சம்மதிக்க முடியாது!” என நளினி உரைக்க, எழுந்து சென்று அவரது தோளில் கையைப் போட்டவள், “ப்ம்ச்... அந்தக் காலத்துலயே இருக்காத மா. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க. இப்போ கேர்ள்ஸ் எல்லாருமே ப்ரெக்னென்சி டைம்ல வொர்க் பண்ணதான் செய்றாங்க. அவ போய்ட்டு வரட்டும்!” எனப் பேசி நளினியை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தாள்.
“பார்த்தீயா துளசி, அத்தை நம்ம. சொல்றதுக்கு சம்மதிக்காம பொண்ணு சொன்னதும் கேட்டுட்டாங்க!” என தீக்ஷி துளசியிடம் முணுமுணுக்க, அதைக் கேட்டு வேந்தன் புன்னகைத்தான். சாம்பவி அவளது குரல் கேட்டதும் சிரிப்பும் முறைப்புமாய்ப் பார்க்க, நளினி மருமகளை முறைத்தார்.
“ஐயோ அத்தை... அடுப்புல ஏதோ கருகுது பாருங்க!” என அவள் அசடு வழிந்தபடி ஓட, அனைவருக்கும் சிரிப்பு மலர்ந்தது.
“வேந்தா, துளசி நாளைல இருந்து ஆஃபிஸ் வரட்டும். இன்னைக்கு அவளைப் பார்க்கத்தான் நாங்க வந்திருக்கோம்...” என அவனை அலுவலகம் அனுப்பிய சாம்பவி, துளசியுடன் அமர்ந்து பேசினாள்.
அன்றைய நாள் அவளுடன் கழிய, மறுநாளிலிருந்து அலுவலகம் செல்லத் துவங்கினாள்.
அலுவலகத்தில் சக பணியாளர்கள் அவளுக்குத் தங்களது வாழ்த்தைத் தெரிவித்தனர். சந்தோஷ் விஷயமறிந்து துளசிக்கு அழைத்துப் பேசி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். பின்னர் ஒருவாரம் கடந்த நிலையில் தன் மனைவியுடன் நேரில் வந்து அவளைப் பார்த்துச் சென்றான். அவனுடைய வாழ்க்கை நன்றாக செல்கிறது என அவன் பேச்சிலே உணர்ந்த துளசிக்கு மனதிலிருந்த பாரம் விலகிய உணர்வு.
சிவசக்தி பெயருக்கென்று துளசிக்கு அழைத்துப் பேசினாள். அவளது வார்த்தைகளிலே வஞ்சம் தெறித்தாலும், துளசி அதை கண்டு கொள்ளவில்லை. இவள் இப்படித்தான் என மனதிலும் எதையும் ஏற்றிக் கொள்ளவில்லை.
நாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. வேந்தன் முன்பு போல் அல்லாது கொஞ்சம் மனைவியிடம் கனிவாகவே பேசினான். அவளுக்கு வேண்டியதை புன்னகை முகமாக செய்தான். கொஞ்சமே கொஞ்சம் தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்தி ஓரிரு வார்த்தைகள் அதிகம் பேசினான். ஆனால் முழுதாக அவன் மாறவில்லை. துளசிக்கு அதில் வருத்தம் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவன் சரியாகிவிடுவான் என நம்பினாள்.
மாத மாதம் மருத்துவரை சந்தித்து சரியாய் பரிசோதனை செய்து கொண்டனர். குழந்தை ஆரோக்கியமாக வளரத் தொடங்கியது. அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்தவள், தந்தையும் பார்த்து வந்தாள். அவரிடம் அத்தனை மாற்றத்தை எதிர்பாராது மனம் இன்பத்தில் திளைத்தது. ஆம், இப்போது மனைவி மக்களை நன்றாய் அடையாளம் காணத் தொடங்கியிருந்தார் மனிதர். கூச்சல் கத்தல் என அனைத்தும் அறவே தொலைந்திருக்க, அமைதியாய் இருந்தார். இவள் ஏதாவது பேசினால் பதில் பேசினார். ஆனால் வார்த்தைகளில் தெளிவில்லை. சிறிது மாதங்கள் சென்றால் நன்றாய் தேறிவிடுவார் எனப் புரிந்ததும் வசுமதிக்கு கண்கள் கலங்கிப் போயின. வேந்தனிடம் மீண்டும் ஒருமுறை தன்னுடைய நன்றியைப் பகிர்ந்தார்.
நாட்கள் அதிவேகத்தில் நகர்ந்தன. துளசிக்கு ஆறுமாதங்கள் முடிந்து ஏழாவது மாதம் தொடங்கியிருக்க, நளினி மருமகளை அலுவலகம் செல்ல நூற்றி நாற்பத்து நாலு தடை விதித்துவிட்டார். இதற்கு மேலும் அவளுக்கு அலைச்சல் வேண்டாமென்று அவர் உறுதியாய் கூற, வேந்தனும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குவது போல பிரசவ கால விடுப்புடன் சம்பளத்தையும் தருவதாகக் கூறி மனைவியை சமாதானம் செய்ய, துளசியும் சரியென்று விட்டாள். அவளுக்குமே சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கியது. சிறு வயதிலிருந்தே அவளுக்கு மூச்சிரைப்பு நோயிருக்க, இப்போது பிரசவகாலத்தில் இன்னுமின்னும் அதிகமானது. அதனாலே முழு ஓய்வில் இருந்தாள். தீக்ஷிதாவும் நளினியும் துளசியை நன்றாய்ப் பார்த்துக் கொண்டனர். இருந்தும் தாயை மனம் தேடியலைந்தது.
அந்த வார இறுதியில் காலையிலே தன்னை எங்கோ கிளம்பச் சொல்லிய கணவனைப் புரியாது நோக்கிய துளசி குளித்து தயாராகினாள். தாய்மையில் அவளது முகம் மிளிர்ந்தது. வற்றியிருந்தக் கன்னமும் புசுபுசுவென மாறியிருக்க, கொஞ்சம் எடை போட்டிருந்தாள் துளசி.
“ம்மா... மாமாவைப் பார்த்துட்டு வர்றோம்!” என நளினியிடம் உரைத்தவன் மனைவியோடு கிளம்பினான்.
“மெதுவா காரை ஓட்டீட்டு போ டா!” என்று அவர் கூற, தலையசைத்தவன் நகர்ந்திருந்தான்.
“அப்பாவைப் பார்க்கப் போறதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லலை?” என்றவளைத் திரும்பிப் பார்த்தவன் பதிலுரைக்கவில்லை. சாலையில் கவனமாக, அவனை மென்மையாக முறைத்தவள் இருக்கையில் சற்றே சாய்வாக அமர்ந்தாள்.
வாகனத்தை ஓரமாய் நிறுத்தி அவளிருந்த இருக்கையை நன்று சாய்வாக்கியவன், வாகனத்தை செலுத்த, துளசி புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். சில பல நிமிடங்களில் இருவரும் மருத்துவமனையை அடைந்தனர்.
“வாங்க துளசி, வாங்க வேந்தன், ஹவ் ஆர் யூ?” என மலர்ந்த சிரிப்புடன் வரவேற்ற மருத்துவரிடம் புன்னகை முகமாக பதிலளித்த துளசிக்கு வாகாக இருக்கையை முன்னிழுத்த வேந்தன் அவளை அமர வைத்துவிட்டு தானும் அமர்ந்தான்.
“துளசி, உங்கப்பா இஸ் கம்பிளீட்லி ஃபைன். இன்னைக்கு அவரை டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டீட்டுப் போகத்தான் உங்களை வர சொன்னேன்!” அவர் கூறவும், துளசிக்கு ஒரு நொடி எதுவுமே புரியவில்லை.
மகிழ்ச்சியில் தொண்டை அடைக்க, “டாக்டர்... டாக்டர் லாஸ்ட் டைம் வரும்போது இன்னும் த்ரீ மந்த்ஸ் ஹாஸ்பிடல்ல ஸ்டே பண்ணணும்னு சொன்னீங்க?” என வினவியவளின் குரலில் மகிழ்ச்சி ததும்பி வழிந்தது.
“யெஸ்... பட், இப்போ நல்ல இம்ப்ரூவ்மெண்ட் அவர்கிட்ட. இனிமே நோ நீட் ஹாஸ்பிடலிசேஷன். அவரை நார்மலா ட்ரீட் பண்ணலாம். அவரைக் கஷ்டப்படுத்துற எதையும் பேசாதீங்க. டேப்லெட்ஸ் மட்டும் கண்டிப்பா கன்டினியூ பண்ணணும். மத்தபடி நெக்ஸ்ட் மந்த் ஒரு சின்ன செக்கப்க்கு மட்டும் கூட்டீட்டு வந்தா போதும். அதுவும் அவரோட கண்டிஷன் பார்க்கத்தான்...” என மருத்துவர் பேசப் பேச, துளசிக்கு மகிழ்ச்சியில் விழிகள் பனித்தன.
“தேங்க் யூ டாக்டர்... தேங்க் யூ சோ மச் டாக்டர்!” என முகம் மலர புன்னகைத்தாள் துளசி.
“போய் அவரைப் பார்க்கலாம் நீங்க. நர்ஸ் கிட்டே மத்த டீடெயில்ஸ் நான் சொல்லிட்றேன்!” என அவர் கூறியதும் விருட்டென துளசி இருக்கையிலிருந்து எழ, “பொறுமையா எழுங்க...” என அவர் புன்னகைக்க, இளவேந்தன் அவளை முறைத்து தோளில் கை வைத்து நிதானப்படுத்தினான்.
சில நொடிகள் தன்னை சமன் செய்த துளசி விறுவிறுவென தந்தையைக் காண விரைந்தாள். அவர் மகளை எதிர்நோக்கிக் காத்திருந்து கட்டிலில் அமர்ந்திருந்தார். இவள் கொஞ்சம் வேக வேகமாக அவரருகே வர, “துளசி மா, பார்த்து வா டா!” என அதட்டலிட்ட தந்தையை அணைத்துக் கொண்டாள் மகள்.
“அப்பா... நம்ப வீட்டுக்குப் போகலாம் பா...” என உவகையுடன் கூறியவளின் கன்னத்தில் மெல்லிய கோடாய் உவர் நீர் இறங்கியது. கண்ணப்பனிடம் காலையில்தான் மருத்துவர் கூறியிருக்க, அவருக்கும் மருத்துவமனை வாசம் முடிந்து வீடு செல்வதில் அத்தனை மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக அவர் மனநிலை சரியாகிக்கொண்டு வரும்போதே நடந்தவற்றின் நிதர்சனம் உணர்ந்து அனைத்தையும் ஏற்கப் பழகியிருந்தார். மகளுக்கு திருமணம் முடிந்து அவள் நன்றாய் வாழ்கிறாள் என்றதும் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி தான். ஆனால், அவளுடைய திருமணத்தில் தன்னுடைய பங்கு எதுவுமின்றிப் போனதே என மனதெங்கும் அத்தனை வருத்தம் மேவியிருந்தது. அதற்கும் சேர்த்து மகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
“ப்ம்ச்... என்ன டா துளசி!” என அதட்டி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டார் கண்ணப்பன். இளவேந்தன் எதுவும் கூறாது அவரைப் பார்த்துப் புன்னகைத்தான். அவருக்கு மருமகன் மீது அத்தனை மரியாதை வந்திருந்தது. தானில்லாத இடத்தை அவன் நிரப்பியிருக்கிறான் என அவனது செயல்களை அறிந்தவருக்கு, வேந்தனைப் பிடித்துப் போனது. மகளைத் திருமணம் செய்து தன்னுடைய பொறுப்பு அவள் மட்டுமே என்றில்லாது அனைத்திலும் அவன் முன்னிலை வகித்ததில் மனமகிழ்ந்து போயிருந்தார். செவிலியரிடம் பேசி பரிந்துரைகளை பெற்றுக் கொண்டு மூவரும் கிளம்பினர்.
வீட்டிற்கு செல்லும் வழியில் மகிழுந்தை செலுத்தாது வேந்தன் வேறெங்கோ செல்ல, துளசி வார்த்தையில்லாது அவனைப் பார்த்தாள். அவன் அலைபேசி ஒலிக்க, அதை ஏற்றுப் பேசினான்.
“அங்கேயே வெயிட் பண்ணுங்க சோனியா, டூ மினிட்ஸ்ல வில் பீ தேர்!” என்றவனை முகத்தில் சிந்தனை முடிச்சுகளோடு ஏறிட்டாள் பெண். சில நிமிடங்களிலே வசுமதியும் சோனியாவும் மகிழுந்தில் ஏறினர். அவர்களிடம் கண்ணப்பனை மருத்துவமனையிலிருந்து அழைத்து வருவதாக மட்டுமே கூறியிருந்தான்.
“அப்பா... எப்படி இருக்கீங்க பா?” என சோனியா அவரை அணைத்துக் கொண்டாள். அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போனது. தந்தை மீண்டுவிட்டார் என்று மனம் உணர்ந்தாலும் மூளை உணராததில் அவர் முகத்தையே பார்த்தார். எதாவது பேசுவார் என இவள் மெதுவாகத் தேம்ப, “சோனி குட்டி, அப்பாவுக்குத்தான் சரியாகிடுச்சே. அப்புறம் ஏன் அழுகை?” என சின்ன மகளை அதட்டி அணைத்துக் கொண்டவரின் கரங்களில் கூட மெல்லிய நடுக்கம். மகள் வளர்ந்துவிட்டாள் என்ற எண்ணம் பிறந்தது அவருக்கு. ஆனால் அவர்களது வளர்ச்சியில் தானில்லை என்ற குறை அரித்தது. வசுமதி எதுவுமே பேசவில்லை. கணவனை கண்ணில் நிரப்பிக் கொண்டார். ஏனோ வார்த்தைகளில் எல்லாம் அவரால் வடிக்க முடியவில்லை. இனி அனைத்தையும் கணவர் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியில் அவர் மனது லயித்திருக்க, கண்ணப்பன் மனைவியின் கையை மட்டும் அழுத்தினார். சின்னவள் அவரது கையைப் பிடித்து தோளில் சாய்ந்தபடியே வந்தாள். இன்னுமே அவளால் எதையும் சட்டென நம்ப முடியவில்லை. மீண்டும் தந்தை சென்றுவிடுவாரோ என அஞ்சி அவரைக் கெட்டியாகப் பிடித்திருந்தாள். துளசி உதட்டைக் கடித்து கண்களில் குளம் கட்டியிருந்த நீரை இமையை சிலுப்பி உள்ளிழுத்தபடி அவர்களைப் புன்னகையுடன் பார்த்திருந்தாள். வேந்தனைத் தவிர ஒருவருக்கும் செல்லும் இடம் தெரியவில்லை.
அரை மணி நேரப் பயணத்தில் வேந்தன் அந்த புதிதாய்க் கட்டப்பட்ட கட்டிடத்தின் முன்பு வாகனத்தை நிறுத்த, மற்றவர்களுக்கு அந்த இடத்தை எளிதில் அடையாளம் தெரியவில்லை. ஆனால், துளசிக்குத் தெரிந்திருக்க, தொண்டையை ஏதோ அடைக்கும் உணர்வு. நொடியில் வேந்தனை திரும்பி அவள் பார்த்தாள். பார்வையில் ஏன் என்ற கேள்வியுடன் இறைஞ்சுதலும் கொட்டிக் கிடந்தன.
கண்ணப்பனுக்கு அவ்விடத்தை மறக்க முடியுமா என்ன? மூளை நினைவு கூர்ந்திருக்க, அவருக்குமே உடல் நடுங்கியது. மகிழுந்திலிருந்து இறங்கிய வேந்தன், “மாமா... வாங்க உள்ள போகலாம்!” என அவரை கைப்பிடித்து அழைத்தான்.
“இல்ல மாப்பிள்ளை, நான் வரலை. வீட்டுக்குப் போகலாம்!” என்றவரிடம் இத்தனை நேரமிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் தளர்ந்திருந்தது. குரல் லேசாய் கலங்கியிருந்தது.
“மாமா... நான் சொன்னா கேட்பீங்களா? மாட்டீங்களா?” என உரிமையான அதட்டலுடன் அவரை அழைத்துச் சென்றவன், மற்றவர்களைப் பார்வையாலே உள்ளே வருமாறு செய்திருந்தான். துளசியின் கற்பனைக்கு முழு வடிவம் கொடுத்து அந்தக் கட்டிடம் ஒரு உணவகம் நடத்தத் தயார் நிலையில் எழும்பி நின்றிருந்தது. துளசி பதற்றத்துடன் உள்ளே நுழைந்தாள்.
கண்ணப்பன் அந்தக் கட்டிடத்தை வேதனையுடன் பார்த்தவாறு தயங்கியபடி உள்ளே நுழைய, நால்வரையும் அழைத்து அமர வைத்த இளவேந்தன், “மாமா... இந்தாங்க!” என ஒரு பத்திரத்தை அவர் கையில் நீட்டினான்.
“இது நீங்க வாங்குன உங்களோட லேண்ட் பத்திரம். நேர்மையான முறையில அதை மீட்டு வாங்கியாச்சு. நீங்க ஆசைப்பட்டு கட்ட நினைச்ச ஹோட்டல். உங்களோடது!” என அவன் கூறவும், நால்வருக்கும் அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
“இந்த ஹோட்டல் கட்ட பினான்ஸ் பேங்க்ல வாங்கினேன். நீங்க ஹோட்டல் ரன் பண்ணுனதும், கொஞ்சம் கொஞ்சமாக அதை ரீபே பண்ணுங்க!” என்றவனை விழிகளில் நீர் தளும்பப் பார்த்தார் மனிதர்.
“மாப்பிள்ளை... இது... இது!” எனக் கையை கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் சுற்றிக் காண்பித்தவருக்குப் பேச நாஎழவில்லை.
“மாமா... ரிலாக்ஸ். ரொம்ப எமோஷனலாக வேண்டாம். லீகலா எல்லா பார்மலிட்டீஸூம் முடிஞ்சது. இனிமே இந்த பில்டிங்கை நல்ல ஹோட்டலா மாத்திக்க வேண்டியது உங்களோட திறமை” என அவன் அதிராமல் புன்னகைக்க துளசிக்குள்ளே ஏனோ ஆயிரம் பெருவெடிப்பு நிகழ்ந்தன. இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் எனத் தெரியாது தொண்டை