- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 17
ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப்போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எழுந்தன. நேற்று வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை அழுத்தித் தொலைத்தது. இந்த இளவேந்தனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன்னுடைய செயல்களால் அவன் காயம்பட்டிருக்கிறான் என்றுணர்ந்தாலும், அதை எந்த வகையில் சரிசெய்ய இயலுமென இவளுக்குப் தெரியவில்லை.
இது தான் காதலித்த இளவேந்தன் இல்லையென மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது. நான்கு வருடங்களாக இவன் தனக்காக காத்திருந்திருக்கிறானா? என அவனை மீண்டும் கண்ட நாள் முதலாய் மனதில் வேதனையும் வலியும் தோன்றின. அவனுக்காகப் பார்த்து தானே அத்தனை நேசத்தையும் கொட்டி கவிழ்க்க முடியாது மனம் வலிக்க வலிக்க வேண்டாமென மறுத்திருந்தாள்.
தற்போதைய அவனின் ஒதுக்கத்திற்குத் தன்னுடைய வார்த்தைகளும் செயலும் தான் இதற்கு காரணம் எனப் புரிந்தாலும், சூழ்நிலைக் கைதியான தன்னை நிரூபிக்கும் முயற்சியைக் கூட அவன் தட்டிவிடுகிறானே என இமையோரம் ஈரம் துளிர்த்தது. கடந்த காலத்தைப் பற்றி பேசி இன்னுமே அவனைக் காயப்பட வைக்க அட்சர சுத்தமாய் இவள் எண்ணியிருக்கவில்லை. அவளுடைய சூழ்நிலையை எப்படியாவது அவனிடம் பகிர வேண்டும் என்றொரு எண்ணம். அவன் இல்லாத இத்தனை நாட்களும் நானும் எத்தனை வேதனைப்பட்டிருக்கிறேன், காயம் கண்டிருக்கிறேன் எனத் தாயைக் கண்டதும் கீழே விழுந்தக் குழந்தை ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக் கொண்டு அழும் மனநிலையிலிருந்தாள். ஆனால், உடையவனோ, அதைப் பற்றிய பேச்சைத் தவிர்க்கிறானே என மனம் விம்மியது.
கதவு திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து இளவேந்தன் உள்ளே நுழைந்ததும் இவளுக்குப் புரிய, கண்ணைத் துடைத்துக் கொண்டு அவன் முன்னே நின்றாள். வேந்தன் இவளைக் கண்டு கொள்ளாது நகர, கையை நீட்டித் தடை செய்தவள், “ஒரு ஃபைவ் மினிட்ஸ் நான் பேசுறதைக் கேளுங்க!” என அழுத்தமாக உரைத்தவள், அவனது பதிலை எதிர்பாராது தொடர்ந்தாள்.
“எனக்கு... எனக்கு இது பிடிக்கலை...” என்றாள் வேதனையான குரலில். வேந்தன் புருவ சுருக்கத்துடன் அவளைப் பார்த்தான்.
“அது... எனக்கு உங்களோட அன்பு, அக்கறை, புரிதல்னு எல்லாமே வேணும். எனக்கு என் பழைய இளா வேணும். அவரோட... அவரோட நான் சந்தோஷமா வாழணும். அவரை தான் நேசிச்சேன், நேசிக்கிறேன், இனிமேலும் அவரை மட்டும்தான் காதலிப்பேன்!” என்றவள் பேச்சில் அவனது பார்வையில் வெறுமை படர்ந்தது. காதல் என்ற வேம்பின் கசப்பை நான்கு வருடங்கள் வலிக்க வலிக்க உணர்ந்தவனாகிற்றே.
“நீ என்னை எப்போ லவ் பண்ண? அன்பு, அக்கறை எல்லாம் என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ற. நான்தான் உன்னை லவ் பண்ணவே இல்லையே. பணம் காசு இருக்குன்னு வேலை வெட்டி இல்லாமதானே உன் பின்னாடி சுத்துனேன். என்னோட லவ் எல்லாம் வொர்த்லெஸ்... குப்பையில தானே போடணும்!” என்றவனை வேதனையுடன் பார்த்த துளசியின் கண்களில் குபுகுபுவென நீர் இறங்கியது. அவள் கூறிய வார்த்தைகள் தான் எனினும் அவன் வாய்மொழியாகக் கேட்கும்போது அதிகம் வலித்துத் தொலைத்தது.
“பொய் சொல்லாதீங்க!” என்றாள் குரல் கமற. கோபப்பட முயன்றாலும் வார்த்தைகள் தழுதழுத்தன.
“நோ... இட்ஸ் நாட் லவ்!” என்றவனை வெறித்தவள், "நான் பேசுனது எல்லாம் தப்புதான். இப்போ நீங்கப் பழி வாங்குறீங்களா?" என வேதனையுடன் கேட்டாள் துளசி.
அவளது கன்னத்தில் இறங்கிய கண்ணீரில் இவனுக்கு வலித்துத் தொலைத்தது.
ஒரே ஒரு நொடி நிதானித்தவன், “பாஸ்ட் இஸ் பாஸ்ட் துளசி. நடந்த எதையும் மாத்த முடியாது. இதைப் பத்திப் பேசுறது இதுதான் லாஸ்ட்டா இருக்கும்..” எனக் கோபத்தில் இரைந்துவிட்டு அகன்றிருக்க, துளசி பொத்தன இருக்கையில் அமர்ந்து முகத்தைக் கைகளில் தாங்கிக் கொண்டாள். விழிகளில் தேங்கி நின்ற நீர் இப்போது அணையைக் கடந்து உடலை நனைக்க, இவள் முகத்தை மடியில் புதைத்துக் கொண்டாள். கதறி அழ வேண்டும் என்றொரு உந்துதல். ஆசையாய் காதலித்தவனை கரம் பிடித்தும் அந்த வாழ்க்கை தனக்கு மட்டும் நரகமாகிவிட்டதே என மனம் வேதனையில் வெந்து தணிந்தது.
அடிவயிற்றிலிருந்து பயம் தொண்டையைக் கவ்வியது. எங்கே இப்படியே கடைசிவரை சண்டையிட்டுக் கொண்டே இருந்துவிடுவோமா என பயமாய் இருந்தது. என்றைக்கு இவன் என்னைப் புரிந்து கொள்ளுவான் என்ற ஏக்கம் மனதை பிசைய, இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள். கரங்கள் முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்த வண்ணமிருந்தன. புறத்தோற்றத்தை சரிசெய்தவளால் அகத்தை சரிசெய்ய முடியவில்லை. எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ தெரியாது. அலைபேசி இரண்டு முறை அழைத்து ஓய்ந்தப் பிறகு புறத்தூண்டல் உறைக்க, எடுத்துப் பார்த்தாள். சோனியா தான் அழைத்திருந்தாள்.
எழுந்து சென்று முகம் கழுவி வந்தவள், தண்ணீரை எடுத்து மடமடவென சரித்தாள். அழுத தடயங்களை கவனமாய் தவிர்த்தவள், தங்கையிடமும் தாயிடமும் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, சைந்தவியும் தீக்ஷிதாவும் இவளைப் பேச்சில் இணைத்துக் கொள்ள, ஒட்ட வைத்தப் புன்னகையுடன் அவர்களுடன் கலந்தாள். மனம் கோபத்துடன் சென்றவனை எதிர்பார்த்து பதைபதைத்துப் போக, அதை முகத்தில் காண்பிக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்த வேந்தன் ஒருவரையும் காணாது அறைக்குள் சென்றடைய, நளினி கேட்ட கேள்வி கூட அவனுக்கு உறைக்கவில்லை. துளசி அனைத்தையும் பார்வையாளராய்க் கண்டிருந்தாள்.
“அண்ணி, உங்களுக்கும் வேந்தனுக்கும் எதுவும் பிரச்சனையா?” சைந்தவி கேள்வியில் ஒரு நொடி தடுமாறிப் போன துளசி, “இல்லையே சைந்து...” என்றாள் வரவழைத்தப் புன்னகையுடன்.
“இல்லையே... நல்லா தானே போனார் சைந்து?” துளசி வினவ,
“இல்லையே அண்ணி...” என ஏதோ பேச வந்தவளை தீக்ஷி திசை திருப்பியிருந்தாள். திருமணமான புதிதில் சண்டை எல்லாம் இயல்பாய் வருவது என நினைத்தவள், சைந்தவியை துளசியின் முன்னே கண்டிக்க இயலாது விட்டுவிட்டாள்.
இரவுணவை அனைவரும் அமர்ந்து உண்ண வேந்தன் வரவில்லை. இவள் என்ன செய்வது எனத் தெரியாது திணறியபடி நிற்க, “வேந்தா... வேந்தா, சாப்பிட வா டா!” என நளினி குரல் கொடுத்தார். பதிலில்லை.
“எல்லாரும் சாப்பிடும்போது உன் மகன் வர மாட்டானா?” சந்தனவேல் கடிந்தார்.
“ஏங்க, எதாவது வேலையா இருப்பான்...” என்றவர், “சைந்து, அவன் என்ன பண்றான்னு பாரு” என சின்னவளை அனுப்பினார்.
“ப்ம்ச்... ம்மா, உம்மகன் அந்த ரூம்ல போய் அடைஞ்சுகிட்டான். இனி வெளிய வந்த மாதிரி தான்!” சைந்தவி அலுத்தவாறே கூறி இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தாள். துளசி புரியாது அவளைப் பார்த்தாள்.
“இந்தப் பையன் வேற... கிட்டார், வயலின்னு அதை கட்டிட்டே அழுவான். சாப்பிட கூட வரமாட்டான். கொஞ்சநாள் நல்லா இருந்தான்னு நினைச்சேன்!” என நளினியின் புலம்பலில் இவளுக்கு ஏதோ புரிந்தது.
“அண்ணி, அந்த ரூம்ல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கூட இருக்கு. ஆமா, அந்த ரூமைப் பார்த்தீங்களா? இல்லையா?” சைந்தவி கிசுகிசுப்பாய் துளசியிடம் கேட்க, “சைந்து, சாப்பிடும்போது என்ன பேச்சு. அமைதியா சாப்பிடு!” என மகிழ் அதட்ட, அவனை முறைத்தவள் உணவில் கவனமானாள். துளசிக்கு உணவு உள்ளே இறங்க மறுத்து சதி செய்ய, பெயரளவில் உண்டு எழுந்து அறைக்குச் சென்றுவிட்டாள்.
வேந்தனைத் தேடி கண்கள் சுழன்று பின்னர் அந்தப் பூட்டிய கதவில் நிலைத்தன. அவள் வந்ததிலிருந்தே அவ்வறையைக் கவனித்தாலும் அதையெல்லாம் சிந்திக்க நேரமில்லாது போனது. வேந்தன் அந்த அறைக்குள்தான் இருக்கிறான் என்பது புரிய, விளக்கை அணைத்துவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கடக்க, அவன் வருவதாய் தெரியவில்லை என்றதும் படுக்கையில் படுத்து தலையணையில் முகம் புதைக்க, கண்கள் கலங்கின. இத்தனை நாட்கள் பழக்கமாக வேந்தனின் ஸ்பரிசமும், வாசமும் அருகிலிருப்பதாய் ஒரு எண்ணம். நீண்ட நேரம் கழித்தே உறக்கத்தை தழுவினாள்.
காலையிலே எழுந்ததும் கணவனின் அணைப்பிலே எழுந்து பழகியவளுக்கு, அது இல்லையெனப் புரிய நேரமெடுக்க, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்; அவன் இல்லை. தூங்கவே வரவில்லையா என மனம் பரபரவென யோசிக்க, எழுந்து அந்தப் பூட்டிய அறையின் முன்பு நின்றாள். கைகள் ஒரு நொடித் தயங்கிப் பின்னர் மெதுவாய் அதைத் தட்ட, பதிலில்லை. கொஞ்சம் அழுத்தியதும் கதவு திறந்து கொள்ள, மெதுவாய் உள்ளே நுழைந்தாள். முதலில் விழிகள் கணவனில் நிலைத்தன. இருக்கையில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தான்.