• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113
தூறல் – 12.1 💖

சோனியா வெளியே வர, சக்தி அவளது முகத்தை ஊன்றிக் கவனித்தாள். அழுத தடயங்கள் சின்னவளைக் காண்பித்துக் கொடுத்தன.

“என்ன... சோனியா, அழுத மாதிரி இருக்க, என்னாச்சு?” என சக்தி வினவ, சோனியா எதுவும் பேசாது அவளது கையைப் பிடித்து உள்ளே இழுத்து அறைக் கதவை மூடினாள்.

“சக்தி கா, எங்களுக்கு ஒரு பிரச்சனை. அதை உன்னாலதான் தீர்த்து வைக்க முடியும் கா. வயசுல மூத்தவங்க நீ சொன்னா, சரியா இருக்கும்...” என்ற சோனியாவின் பேச்சில் சக்தியின் முகம் நொடியில் மலர்ந்து போனது.

“சோனி... இப்பவாது என்னைப் பத்தி உங்களுக்குப் புரிஞ்சுதே. துளசி விஷயத்திலயும் உன் விஷயத்துலயும் என்னைக்கும் நான் தப்பு பண்ண மாட்டேன் டி. அதனால நீங்க என்னை நம்பி தாராளமா எல்லாத்தையும் சொல்லலாம். இப்போ என்ன பிரச்சனை, அதை சொல்லு...” என்றவள் பேச்சில் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷம் கொட்டிக் கிடந்தது. அவர்களது பிரச்சனையை நீர்த்துப் போக செய்துவிட்டால், துளசியைத் தன் வசப்படுத்திவிடலாம் என மூளை கண நேர கணக்கில் கற்பனை கோட்டைகளை வரிசையாய் கட்டத் தொடங்கின. துளசி தங்கையின் பேச்சில் அமைதியாய் நின்றாள். இடையில் எதையும் கூற விழையாது அவளது செயல்களை அவதானித்தாள்.

“அது... அக்கா நம்ப வீட்டு மேல கடன் இருக்குன்னு உனக்குத் தெரியும் தானே?” சின்னவள் வினா தொடுக்க, “ஆமா சோனி, அப்பா அந்த நிலத்தை வாங்கி காசை ஏமாந்துட்டாரே... அந்தக் கடன்தானே. இப்போ கூட வட்டி கட்டீட்டு இருக்கீங்களே?” என சரியாய் வினவினாள்.

“ஆமா அக்கா, எல்லாத்தையும் சரியா ஞாபகம் வச்சிருக்க நீ...” சோனியா குரலில் கொஞ்சம் நக்கலும் வஞ்சப்புகழ்ச்சியும் இருந்தன. போலியாய் சக்தியைப் புகழ்ந்தாள்.

“நம்ப வீட்டு விஷயத்தை எப்படி டி மறப்பேன் நான். அதெல்லாம் தினமும் நினைச்சுட்டே தான் இருப்பேன்!” பெருமூச்சோடு கவலையாய் கூறியவளைத் துளசி அற்பமாய்ப் பார்த்து வைத்தாள்.

“தினமும் நினைப்பீயா கா நீ? அப்புறம் ஏன் ஒருநாள் கூட கால் பண்ணி கடனை அடைச்சுட்டீங்களான்னு கேட்கலை. காசு கொடுத்து ஹெல்ப் பண்ண தோணலை உனக்கு? நான் கூட நீ கடன் இருக்கதையே மறந்துட்டன்னு நினைச்சேன். ஆனால், பாரேன் நீ எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருந்திருக்க?” சிரிப்புடன் சோனியா கேலிக் குரலில் கூறினாலும் இந்தக் குத்தலானப் பேச்சில் சக்தியின் முகம் கன்றியது.

“சோனி... உனக்கு என் மாமியாரைப் பத்தி தெரியாதா என்ன? நீ சின்ன புள்ளை. உனக்கெங்க அந்தப் பொம்பளையைப் பத்தி தெரியப் போகுது. நம்ம வீட்டுக்குக் போன் பண்ணாலே பக்கத்துல வந்து ஒட்டுக் கேட்கும்‌. அதனாலே என்னால உங்ககிட்டே பேச முடியலை. ஆனால், நீங்க இப்படி தப்பா எடுத்துப்பீங்கன்னு நினைக்கலை. என் மனசு வெள்ளந்தியா இருக்க மாதிரி நீங்களும் இருப்பீங்கன்னு நினைச்சு ஏமாந்துட்டேன். இனிமே என் அத்தை என்ன பண்ணாலும் பரவாயில்லைன்னு வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்றேன் சோனி!” என்றவள் விழிகள் லேசாய் கலங்க, துளசி முகம் இறுக அவளைப் பார்த்தாள். எப்படி இந்தப் பெண்ணால் மட்டும் இப்படி நொடிக்கு நொடி பாவனைகளை, பொய்யான உணர்வுகளை சித்தரிக்க முடிகிறது என அவளை ஊன்றிக் கவனித்தாள்.

“அச்சோ... சக்தி கா, என்ன இது? கண்ல டேம் எதுவும் கட்டி வச்சிருக்கீயா? அப்பப்ப திறந்து விட்டிட்டுருக்க?” என்று சிரிப்பும் கேலியுமாய் சக்தியின் விழிநீரை துடைத்த சோனியா, “எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும். உன் மாமியாரைப் பத்தியும் தெரியும் கா. நீ சொல்லணும்னு அவசியம் இல்ல...” என்றவளின் இதழ்கள் வளைந்தன. அவள் பேச்சின் சாராம்சத்தை துளசியால் மட்டுமே உணர முடிந்தது. சக்தி எதுவும் புரியாது நின்றாள்.

“சரி, உன் வீட்டுப் பஞ்சாயத்தை அப்புறம் பேசிக்கலாம் கா. இப்போ இங்க இருக்க பிரச்சனைக்கு வருவோம். வைரமுத்து அங்கிள் வீட்டைக் காலி பண்ண சொல்லிட்டாரு. ஒன்னுப் பணத்தைக் கொடுங்க, இல்லை வீட்டைவிட்டு வெளியேறுங்க, நான் வித்துக்கிறேன்னு சொல்லிட்டாரு. இப்போ அவ்வளோ பணத்தை யார்கிட்டேயும் கேட்க முடியாதுல்ல. வீடு காலி பண்ணலாம்னா, எந்த வீடும் அமையலை. அப்பாவோட மெண்டல் கண்டிஷன் பத்தி உனக்குத் தெரியும் இல்ல...” என சோனியா நிறுத்தவும்,

“என்ன சோனி நீ, இப்படியொரு கஷ்டத்துல இருக்கீங்க நீங்க. என்கிட்ட இருபது லட்சம் இருந்தா, கண்டிப்பா உங்ககிட்ட கொடுத்து இருப்பேன். இப்போ எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாம இருக்கேன். ரொம்ப கஷ்டமா இருக்கு சோனி!” என அவளின் கையை ஆதரவாகப்ப் பிடித்தாள் சக்தி.

அவளது கரத்தின் மேல் தன் கைகளை வைத்த சோனியா, “க்கா... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? உன்கிட்ட காசு இருந்தா, உன் மாமியாரைப் பத்தி எல்லாம் நீ யோசிக்க மாட்டேன்னு!” என்று வார்த்தையில் லேசாய் அழுத்தம் கொடுத்தவள், “இப்பவும் உன்னால எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும் கா. நம்ம அரசப்பா வீடிருக்கு இல்ல. அதை நீ எங்களுக்குத் தர்றீயா கா? எப்படியும் மாமாவோட கன்னியாகுமரில தானே இருக்கப் போற? அங்கேயே செட்டிலாகிட்டீங்க. இந்த வீடு உங்களுக்கு தேவையில்லை தானே கா?” என மெதுவாய் சோனியா விஷயத்திற்கு வரவும் சக்தியின் முகத்தில் சில நொடிகள் அசைவே இல்லை. அவளது பேச்சின் அர்த்தத்தை கிரகிக்கவே சில கணங்கள் தேவைப்பட்டன அவளுக்கு.

“அது... அது அந்த வீட்ல ஆள் இருக்காங்களே சோனியா. திடீர்னு எப்படி காலி பண்ண சொல்ல முடியும்? அதெல்லாம் தப்பு!” என்றவள் வார்த்தைகள் திக்கின. இப்படியெல்லாம் சோனியா கேட்கக் கூடும் எனத் தெரிந்திருந்தால், அறைக்குள்ளே வந்திருக்க மாட்டாள் சக்தி. அவளது மனம் அடித்துக் கொண்டது.

“ப்ம்ச்... அதெல்லாம் ஒரு பிரச்சனையா கா? வீட்டு ஓனர் நீ. இல்ல இல்ல, இனிமே நம்ம வீடு அது. அதனால நம்ம காலி பண்ணுங்கன்னு சொன்னா, ஒரு மாசத்துல காலி பண்ணித்தானே ஆகணும். எப்படியும் உனக்கு ஓகே தானே கா?” என சோனியா சிரிக்காமல் வினவினாள். சக்தியின் முகம் இருளடைந்து மெதுவாய் சுருங்கத் தொடங்கியது.

‘தர முடியாது என கூறினால் இந்த இடத்தில் வசுமதி தன்னை தவறாக எண்ணக் கூடும் என மனம் பதைபதைத்தது. அதற்காக வீட்டை இவர்களுக்கு கொடுக்க முடியுமா என்ன? அது என்னுடைய வீடு. என் அப்பா, அம்மா எனக்காகக் கட்டிய வீடு!’ என எண்ணியவள் என்ன பொய் கூறி மழுப்பலாம் எனத் தெரியாது தவித்துப் பார்வையை சுற்றிலும் படர விட, அவளின் பயந்த முகத்தில் சோனியா இதழ்களைக் கடித்து சிரிப்பை அடக்கினாள். சக்தி பார்க்காத கணம் துளசியைப் பார்த்து சின்னவள் கண்ணை சிமிட்ட, இத்தனை நேரம் பார்வையாளராய் இருந்தவளுக்குமே உதடுகளில் சிரிப்பு முளைத்துத் தொலைத்தது. எதையோ தேடும் பாவனையில் திரும்பி நின்று கொண்டாள்.

சக்தி நீண்ட நெடிய நொடிகளைப் பதிலளிக்காது விழுங்க, “என்ன சக்தி கா, எங்களுக்காக இருபது லட்சம் தருவேன்னு சொன்ன. அந்த வீட்டை எழுதி தர மாட்டீயா? உன் பேரை சொல்லி நாங்க எல்லாம் வாழ்ந்துட்டுப் போறோம்...” என மீண்டும் அழுத்திக் கூறினாள்.

“அது... அதில்லை சோனி, உங்க மாமா!” என அவள் பேச முற்படும்போது, “அட... மாமாவைப் பத்தி, உங்க மாமியாரைப் பத்தியெல்லாம் கவலைப்படாத கா. நான் அவர்கிட்ட பேசுறேன்!” என்றவள் கணநேரத்தில் எழுந்து,‌
“மாமா... உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்!” என உரக்கக் கத்திக் கொண்டே நகர்ந்திருந்தாள்.

அதில் பதைபதைத்துப் போன சக்தி, “ஐயோ... என்ன என்ன பண்ற சோனி நீ? அவர் கிட்ட இப்படியெல்லாம் கேட்டா, அப்புறம் என்கிட்ட தனியா சண்டை போடுவாரு டி. அவர் உன்கிட்ட நல்லா பேசுறதால, நல்ல மனுஷன்னு நினைக்காத. முசுடு, எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டே தான் சுத்துவாரு!” என சோனியாவின் கையை அழுத்திப் பிடித்தபடி பதற்றத்துடன் வார்த்தைகளை வேகவேகமாக உதிர்த்தாள் சக்தி. முகம் நொடியில் பயந்து இரத்தப் பசையற்று வெளுத்துப் போனது.

அவளைப் பார்த்த சோனியா, “அப்படியா கா. சரி, சரி, நான் அம்மாகிட்ட மட்டும் நீ வீடு தரேன்னு சொல்லிடவா?” என அதிராமல் கேட்டு சக்தியை மொத்தமும் அதிரச் செய்தாள்.

“இல்ல சோனி, உங்க மாமாவைக் கேட்காம எதையும் சொல்ல வேணாம். நான்.‌.‌‌. நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன். என் மாமியார்!” என அவள் மீண்டும் தொடங்க,

அதற்குள் சோனியா, “இதோ... இப்போ கால் பண்ணி நானே அத்தைகிட்டே கேட்குறேன்...” என அலைபேசியைக் கையிலெடுத்த நொடி அதைக் கீழே தள்ளிவிட்ட சக்தி, “ஐயயோ... வேற வினையே வேண்டாம் சோனி. அத்தைகிட்டேயும் நானே பேசிக்கிறேன். நீ இப்போதைக்கு எதையும் பண்ணிடாத!” என மூச்சு வாங்கப் பேசிட, துளசிக்கு அவளைக் காணவே பாவமாய்ப் போய்விட்டது.

‘சோனி... விடு!’ கண்களாலே அவள் தங்கையை மிரட்ட, அதை ஒரு சின்ன குறுஞ்சிரிப்பிலும் தோள் குலுக்கலிலும் அசட்டை செய்தாள் சின்னவள்.

“சரி சோனி... நம்ம அப்புறம் பேசலாம். ஜெய்க்குப் பசிக்கும். வரேன்!” என சோனியா வேறு எதையும் செய்து வைக்கும் முன் சக்தி அறையைவிட்டு ஓடியேவிட்டாள்.

“ப்ம்ச்... சோனி என்ன டி...?” துளசி தங்கையை மிரட்ட, மெதுவாய் எழுந்து சென்று கதவை அடைத்து வந்தவள் அப்படியே கீழே விழுந்து, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.

ஒரு நொடி அவள் கீழே விழுந்ததில் பதறிய துளசி அவளருகே வரவும், சின்னவள் சிரிக்கத் தொடங்கவும் சரியாய் இருக்க, இடுப்பில் கையை வைத்து தங்கையை முறைத்தாள் தமக்கை.

“அச்சோ... சாரி கா. என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலை. நான்... நா என்ன பண்ண?” என்றவள் சில நிமிடங்கள் தொடர்ந்து சிரித்தபடியே இருக்க, துளசியின் முறைப்பு அதிகமானது.

“சரி.. சரிகா. நான் சிரிக்கலை!” என உதடுகளை விரல்களால் மறைக்க முயன்றவளின் முகம் பூரணமான புன்னகையில் மலர்ந்திருந்தது. நிச்சயமாக அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் துளசிக்குமே உதட்டில் முறுவல் பூத்தது.

“பாவம் சோனி, சக்தி கா...” துளசியின் குரலில் வருத்தம் இருந்தாலும் உதட்டில் குறும்பான புன்னகை வேறு முளைத்து தொலைத்தது.

“ஹாஹா... அக்கா, அந்தக்காக்கு பாவம் பார்த்தா, அப்புறம் நம்மளை ஐய்யோ பாவம்னு மாத்திவிடும். இதெல்லாம் பத்தலை கா. இன்னும் எதாவது ஹெவியா செஞ்சு ஓடவிடுவோம்!” என நம்பியார் போல கையைப் பிசைந்த சோனியா மனம்விட்டு சிரிக்கவும், துளசி அவளை அணைத்துக் கொண்டாள். இவளும் அவளை இறுக்கிக் கொண்டாள்.

இரவு உணவு அனைவரும் அமர்ந்து அமைதியாக சாப்பிட, சக்தி நிமிர்ந்து சோனியாவைப் பார்க்கவே இல்லை‌. பார்த்தால் எதாவது செய்து வைத்துவிடுவாளோ எனப் பயந்து விரைவில் உண்டு முடித்து அறைக்குள் அடைந்துவிட, சோனியாவும் துளசியும் புன்னகைத்துக்கொண்டனர்.

துளசி இரவில் படுக்கையில் விழச் செல்லும்போது அலைபேசியை எடுத்து சந்தோஷிற்கு திருமண வாழ்த்தைக் குறுஞ்செய்தியில் அனுப்பிவைத்தாள். பின் தற்காலிகமாக அவனை மனதிலிருந்து பின்னகர்த்தியிருந்தாள். இதற்கு பின்னும் அவர்களுடைய உறவு நீடித்தால், அது தேவையில்லாத மனக்கசப்பிற்கு வித்திடும் என மூளை உரைத்ததில் மனம் விழித்துக்கொண்டது. பதில் எதிர்பாராது அலைபேசியைத் தூர எறிந்துவிட்டு உறங்கிப் போனாள்.

***

மறுநாள் காலையில் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த சோனியா சக்தி குளித்து வரவும், அவளருகே சென்று நின்றாள்.
“அக்கா, சக்தி கா, நான் காலேஜ் முடிஞ்சு வர்றதுக்குள்ளே நீ மாமா, அத்தைகிட்டேயும் பேசி வச்சிடு கா. எல்லாம் சீக்கிரம் பண்ணாதான் அந்த வீட்டுக்கு நாங்க குடியேற முடியும்...” எனக் கூறவும், நான்குபுறமும் தலையை அசைத்த சக்தியின் முகத்தில் ஈயாடவில்லை.

சோனியாவும் துளசியும் கல்லூரி அலுவலகம் எனப் புறப்பட, சிவசக்தி தன்னுடைய உடமைகளை எடுத்துப் பயண பொதியில் வைத்தாள்.

“என்னங்க, வந்து ஒருவாரம் ஆச்சுல்ல. கிளம்பலாம், உங்களுக்கும் வேலை இருக்கும் இல்ல?” என கணவனைக் அவள் கிளப்ப முனைய, அவனுக்குமே வேலைகள் நிறைய இருந்தன.
அவன் தலையை அசைத்ததும் நிம்மதி பெருமூச்சை வெளிவிட்ட சக்தி, வசுமதியை நோக்கிச் சென்றாள்.

“ம்மா... அவருக்கு ஏதோ அவசர வேலையாம். இப்பவே கிளம்பணும்னு சொல்லி நிக்கிறாரு மா‌. அடுத்த தடவை வரும்போது இன்னும் கொஞ்சநாள் தங்குறோம்!” என்று கூறவும், “என்ன சக்தி, ரெண்டு நாள் கழிச்சுதான் கிளம்புறேன்னு சொன்ன? என்னதான் அவசர வேலையோ? தம்பிகிட்டே நான் பேசவா?” என அவர் கேட்க,

“ஆங்... இல்ல மா. ஏற்கனவே வேலைன்னு மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்காரு. நீ ஏதாவது பேசுனா, உன்கிட்ட மூஞ்சியைக் காமிச்சாலும் காமிப்பாரு. அதை என்னால பொறுத்துக்க முடியாது மா. போகும்போது எதுக்கு மனவருத்தம்?” என அவள் அக்கறையாய்க் கேட்க, வசுமதி மகளின் முகத்தைப் பாசத்துடன் தடவினார்.

அவரை அணைத்தவள், “ம்மா... துளசிக்கும் சோனியாக்கும் கல்யாணம் முடிஞ்சதும், நீயும் அப்பாவும் கன்னியாகுமரிக்கு வந்துடுங்க மா. நானே பார்த்துக்கிறேன்!” என்றவள் குரலில் சர்வ நிச்சயமாய் பொய்யில்லை. அதில் வசுமதிக்கு லேசாய் விழிகள் பனித்தன.

“சக்தி மா... அதை அப்போ பார்த்துக்கலாம். பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. அப்புறம் துளசிக்குப் பார்த்த மாப்பிளை வீட்ல என்னென்னு பேசிட்டு நீயே சொல்லு!” என்றார் வாஞ்சையுடன்.

“நிச்சயமா மா. நான் பேசிட்டு உனக்கு சொல்றேன்!” சக்தி பதில் இயம்ப, “ம்மா... பேண்ட்டை போட்டு விடு...” என ஜெயவர்மன் பாதி உடையணிந்தவாறு வந்து அவர்களது பேச்சை தடை செய்தான்.

“ஏன் டா, உங்கப்பா என்ன பண்றாரு?” என்ற கேள்வியுடன் அவனுக்கு உடையை அணிவித்தாள்.

“ஏன் சக்தி, புள்ளைங்க இல்லாத நேரமா பார்த்துக் கிளம்புற. சாயங்காலம் போகலாம் இல்ல?” வசுமதி கேட்க, ஒரு நொடி பதறிய சக்தி, “ஐயோ... இல்ல மா. இப்போ கிளம்புனாதான் சரியா இருக்கும்!” என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள்.

வசுமதி அவர்களுக்கு மதிய உணவை டப்பாவில் அடைத்துக் கொடுத்தார். கண்ணப்பனிடம் சிறிது நேரம் பேசிய சக்தி, கணவன் மகனுடன் வெளியேறினாள். துளசி திருமணத்தைவிட, தற்போதைக்கு அவளது வீடு பெரிதாய் தோன்றியது. வீட்டை அவர்களுக்குத் தர வேண்டும் என்ற எண்ணம் துளிகூட தோன்றவில்லை. ஏனோ, தன் பொருட்கள், உடைமைகள் என எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள சிறுவயதிலிருந்தே அவளுக்கு விருப்பம் இருந்ததில்லை. அப்பொருட்களுடன் தாய் தந்தை இறந்தப் பிறகு தன்னை ஆதரவாக அணைத்துக் கொண்ட வசுமதியும் கண்ணப்பனும் கூட அடக்கம். அதனாலே துளசியிடமும் சோனியாவிடமும் அவர்கள் காண்பிக்கும் அக்கறையை இவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது இல்லை.

தங்கைகள் என வரும்போது ஒருபடி கூட அவள் இறங்கி வரத் தயாராக இல்லை. அதனாலே சோனியா மீண்டும் வீட்டிற்கு வந்து அந்தப் பேச்சை தொடங்கும் முன் தற்காலிக தீர்வாய் கிளம்பிவிட்டாள்.

***

“என்ன சாப்பிட்ற மா, காஃபியா? டீயா?” தனக்கு முன்னே அமர்ந்திருந்த பெரியவர் வினவியதும், “இல்ல சார்... எதுவும் வேணாம்!” என சிறு தலையசைப்புடன் மறுத்திருந்தாள் துளசி.

“அட சங்கடப்படாத மா. நான் உன் அப்பா மாதிரிதான். உன் வயசுல எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அவளைப் பக்கத்து ஊர்லதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம். அவளையும் மாப்பிள்ளையும் நம்ப வீட்லயே குடி வைக்கலாம்னுதான் ரெண்டு வீடா கட்டுனோம். ஆனால், மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிட்டாரு. அதனால்தான் வீட்டை வாடகைக்கு விட்றோம்!” என்றவர் முகத்திலிருந்த புன்னகையும் சகமனிதர்கள் மீதான மரியாதையான உடல் மொழியும் துளசிக்கு மனதில் திருப்தியை அளித்தன. வீடு எப்படி இருந்தாலும், இங்கே குடிவரலாம் என முன்முடிவொன்றை மனதிற்குள் எடுத்திருந்தாள்.

“சாந்தா, காபி எடுத்துட்டு வா...” என மனைவியைப் பணித்தவர், “தம்பி பேசுனாரு, உங்கக் குடும்பத்தைப் பத்தி. கவலைப்படாத மா, எல்லாம் சரியாகிடும். உங்கப்பா பழையபடி மாறிடுவாரு. உனக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா, ஒரு அப்பாவா நினைச்சு என்கிட்ட கேட்கலாம்!” என்றவர் குரலில் அக்கறையான பாவம்தான். அதில் துளசிக்கு இன்னுமின்னும் நம்பிக்கை துளிர்த்தது.

“ரொம்ப நன்றி சார்!” என அவர்கள் கொடுத்த குளம்பியைப் பருகி முடித்து வீட்டை சுற்றி பார்த்தாள். அவள் நினைத்த அளவிற்கு இல்லையெனினும், வீட்டு உரிமையாளரின் கனிவான பேச்சிலும் தங்களது நிலைமையை அவர் புரிந்து கொண்டதிலுமே, துளசிக்கு வேறெதும் பெரிதாய் தோன்றவில்லை. வாடகை, முன்பணம் என அனைத்தையும் பேசிமுடித்து வீடு திரும்பும்போது அவளது மனது நீண்ட நாட்களுக்குப் பின்னான அமைதியில் திளைத்திருந்தது.

‌வழக்கமான வழக்கமாய் ஜெயவர்மனுக்காக இனிப்பொன்றை வாங்கிக்கொண்டு புன்னகையுடன் வீட்டை அடைந்தாள் துளசி. “ஜெய் குட்டி எங்க?” என அவள் சிரிப்புடன் வினவியபடி உள்ளே நுழைய, வீடு அதீத அமைதியைத் தத்தெடுத்திருந்தது.

சோனியா மட்டுமே கூடத்தில் அமர்ந்திருக்க, “என்ன சோனி, யாரையும் காணோம்?” என யோசனையாய் வினவினாள்.

அவளை சின்ன சிரிப்புடன் பார்த்தவாறே எழுந்து வந்த சோனியா, “இன்னைக்கு டெய்ரி மில்க் எனக்குதான் கா!” என இனிப்பை அவளிடமிருந்து உருவினாள்.

“ஏன், ஜெய் எங்க?” இவள் விழிகளால் அவனைத் துழாவ, “ப்ம்ச்...என்ன கா நீ? மாமாவுக்கு ஏதோ அவசர வேலைன்னு சக்தியக்கா கிளம்பி போய்டுச்சாம். நான் கூட எங்ககிட்ட சொல்லாமலே கிளம்பி போய்ட்டாங்கன்னு அம்மாகிட்ட கேட்டேன்!” என அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டியவள், இனிப்பை பிரித்து உண்ணத் தொடங்கினாள்.

“ஆமா துளசி, மாப்ளைக்கு ஏதோ அவசரம்னு அவங்க கிளம்பிட்டாங்க!” என பின் கூடத்திலிருந்து உள்ளே நுழைந்தார் வசுமதி.

“ஓ...” என சற்றே உதடு குவித்துக் கேட்ட துளசியை சோனியா பார்க்கவும், இருவருக்குமே சிரிப்பு வந்தது. சக்தி விடை பெற்றதில் துளசிக்கு பெரிய நிம்மதி பிறந்தது.

“தேங்காய் சட்னி அரைக்கவா? இல்லை சாம்பார் வைக்கவா சோனி?” என்ற வசுமதி அடுக்களையை நோக்கிச் செல்ல, “ம்மா... சூடா சாம்பார், அப்புறம் சட்னியும் வேணும். ரெண்டும் சேர்த்து சாப்ட்டா இன்னும் ரெண்டு இட்லி சாப்பிடுவா துளசி கா. நான் இல்ல!” எனக் கடைசி வார்த்தையைக் குறும்பாய் கூறியவளை இருவரும் சிரிப்பும் முறைப்புமாய் பார்த்தனர்.

“சரி, சரி, பார்த்தது போதும். போய் டின்னரை செய் மா. பசிக்குது!” எனத் தாயின் தாடையைப் பிடித்துக் கொஞ்சி சமையலறைக்குள் தள்ளிய தங்கையை மென்முறுவலுடன் பார்த்த துளசி உடைமாற்றி வந்தாள்.

“டீ சூடு பண்ணி வச்சிருக்கேன் துளசி, போய் எடுத்துக்கோ...” என்ற வசுமதி கூடத்தில் அமர்ந்து வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி முடித்து, தேங்காயைத் துருவத் தொடங்கியிருந்தார். தேநீரை எடுத்து வந்து அவருக்கு அருகே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்த துளசியின் பார்வை முழுவதும் தாயிடம்தான்.

அவளது பார்வை கொடுத்த குறுகுறுப்பில் நிமிர்ந்தவர், “என்ன துளசி, அம்மாகிட்டே எதுவும் சொல்லணுமா?” என மகளை சரியாய் யூகித்து வினவினார். அவரது கேள்வியில் இவளது தலை ஆமாம் என்பது போல தயக்கமாய் அசைந்தது. அதில் பெரியவர் கவனம் இவளிடம் குவிந்தது.

“அது... ம்மா, இத்தனை வருஷம் வட்டி மட்டும் கட்டீட்டு இருந்தோம் இல்ல மா... வைரமுத்து அங்கிள் இப்போ பணம் வேணும், இல்ல வீட்டைக் காலி பண்ணுங்கன்னு சொல்றாரு...” என்று ஏகத்துக்கும் தயங்கி மெதுவாய் கூற, வசுமதி சலனமில்லாமல் மகளைப் பார்த்தார். அதிலே இவளுக்கு லேசாய் வலித்திருக்க வேண்டும்.

தொடருவதா? வேண்டாமா? என அவள் ஒரு நொடி தடுமாறி நிற்க, சோனியா எழுந்து வந்து துளசியருகே நின்றாள். இவள் நிமிர்ந்து அவளைப் பார்க்க, தலையை அசைத்த சின்னவள், நடந்ததை அனைத்தையும் கூறி முடிக்க, இருவரும் வசுமதியைப் பதற்றத்துடன் பார்த்திருந்தனர். அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் எனத் தெரியாது மனது அத்தனை தவித்துப் போனது.

அனைத்தையும் அமைதியாகக் கேட்ட வசுமதி மீதமிருந்த தேங்காயைத் துருவிவிட்டு எழுந்து சமையலறைக்குள் செல்ல, துளசி அவர் பின்னே நகர்ந்தாள்.

அவர்கள் பேசியது அவருக்குப் புரிந்ததா? இல்லையா? என்ற சந்தேகம் அவளுக்கு முளைத்தது. ஏனென்றால் வசுமதி எதையும் காண்பித்துக் கொள்ளாது அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதில் ஏற்றியவர், சாம்பார் வைக்கும் பணியில் மும்முரமாகியிருந்தார்.

“ம்மா...” என்ற துளசி தவிப்புடன் அவரது கையைப் பிடித்தாள். முகம் முழுவதும் கலக்கம் நிரம்பி வழிந்தது.

“ச்சு... துளசி, கையைவிடு. அடுப்புல வேலை பார்க்கும்போது இடையில வராதேன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” என அதட்டலிட்டு அவளிடமிருந்து கையை உருவியவர் ஐந்து நிமிடங்களில்
சாம்பாருக்குத் தேவையானவற்றை வைத்து மூடியை மூடி வைத்தார். இவர்கள் இருவரும் என்ன செய்வதெனப் புரியாது திகைத்து கவலையுடன் நின்றிருந்தனர்.

 
Administrator
Staff member
Messages
1,168
Reaction score
3,348
Points
113

சட்னி வைப்பதற்கு மிளகாயைக் கிள்ளியவர், “எப்போ வீட்டைக் காலி பண்ணணும்?” எனக் கேட்க, அவர் குரலிலிருந்த பாவனையில் துளசிக்கு விழிகள் பனித்தன.

“ம்மா...” என அவரைப் பின்னிருந்து இவள் அணைக்க, ஒரு நொடி தயங்கியவரின் கைகள் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தன.

“சாரி மா...!” என இவள் குரல் லேசாய் பிசிறு தட்ட, வலக்கையை பின்னோக்கி உயர்த்தி மகளின் கன்னத்தைப் பிடித்தார் வசுமதி.

“ப்ம்ச்...எவ்வளவோ போச்சு. வீடு ஒன்னுதான் கடவுள் நமக்குன்னு விட்டு வச்சிருக்காருன்னு நினைச்சேன். அதுலயும் கடைசியில் கை வச்சுட்டாரேன்னு வருத்தமா தான் இருக்கு. ஆனாலும் வேற வழியில்லைல துளசி?” என்றவர்் குரல் லேசாய் உடைந்து போயிருந்ததை உணர்ந்த சோனியா, “ம்மா... என்ன இது?” என அவரை அதட்டினாள்.

“இதென்ன உயிருள்ள பொருளா மா, வெறும் கல்லும், மண்ணும் தானே? நான் படிச்சு முடிச்சுட்டு வேலைக்குப் போனதும், இதை விட பெரிய வீடா கட்டிடலாம். நீ கவலைப்படாத!” என ஆறுதல் அளித்தவளின் கன்னத்தை வழித்தார் வசுமதி.

“என் கவலையெல்லாம் உங்கப்பாவைப் பத்திதான். அவர் எப்படி இன்னொரு வீட்டுக்கு வந்து பொருந்திப் போவார்னு தெரியலை!” என அவரது குரல் கணவன் மீதான கவலையில் தோய்ந்தது.

“ம்மா... அதெல்லாம் அப்பாவைப் பார்த்துக்கலாம் மா!” என சின்னவள் கூற, வசுமதி முதல்கட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு தெளிந்திருந்தார்.

“வாடகை எவ்வளோ துளசி? அட்வான்ஸ்க்கு என்ன பண்ணுவ?” என பெரியவராய் அடுத்த விஷயத்திற்குத் தாவினார்.

“ஸ்கூட்டீயை வித்துடலாம்னு இருக்கேன் மா. அட்வான்ஸ் கொடுக்க...” என தங்கள் குடிபுகப் போகும் வீட்டைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தாள் துளசி. அவளது பேச்சைக் கேட்ட வண்ணமிருந்த வசுமதி அலமாரியில் ஒரு டப்பாவை எடுத்து வந்தார்.

“இதுல கொஞ்சம் பணம், வீட்டு செலவுக்குப் போக மிச்சம் பிடிச்சது இருக்கு. அட்வான்ஸ் கொடுக்க வச்சுக்கோ!” என அவள் கையில் பணத்தை திணித்தவரை துளசி சற்றே வேதனையுடன் நோக்கினாள்.

“எப்போ காலி பண்றோம் துளசி?” எனக் கேட்ட வசுமதி தன்னை இயல்பாய் காண்பித்துக் கொள்ள முயன்றாலும் துளசிக்கு அவரது வேதனை புரிந்தே இருந்தது. இரண்டு நாட்களில் அவரே சரியாகிவிடுவார் என நம்பி அடுத்தப் பேச்சிற்குத் தாவினாள்.


மறுநாள் அலுவலகம் முடிந்து வந்த துளசி பழைய வாகனங்கள் விற்கும் கடையொன்றில் தனது இருசக்கர வாகனத்தை விற்பதற்காக பேசி, தகவல்களை சேகரித்து வந்தாள். மறுநாள் தேவயான ஆதாரங்கள், சான்றிதழ்கள் என அனைத்தையும் எடுத்துச் சென்று வாகனத்தை விற்றுவிட்டாள்.

“பணம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க மா!” என்ற கடை உரிமையாளரிடம் தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தவளின் கரங்கள் அந்த வாகனத்தை ஒருமுறை தழுவி மீண்டன. வேதனையான பார்வையுடன் விறுவிறுவென நடந்துவிட்டாள். உயிரற்ற பொருளெனினும், இத்தனை வருடங்கள் அவளுடன் இருந்தப் பொருளை இழக்கிறோம் என்ற வருத்தம் மனம் முழுவதும் படர்ந்தது.

இரண்டு நாட்களில் எப்படி பொருட்களை எடுத்து செல்வது என யோசித்து அதற்கான வாகனங்கள், ஆட்கள் எனப் பேசி முடித்தாள். அடுத்த வாரமே வீட்டை காலி செய்ய முடிவு செய்தவள், பொருட்களை எல்லாம் எடுத்து அடுக்க கண்டிப்பாய் வசுமதி ஒற்றையாளாய் முடியாதெனக் கருதி, மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க திட்டமிட்டு அதற்காக அனுமதி கடிதத்தை மேலாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தாள்.

“துளசி, நான் உங்களோட லீவை அப்ரூவ் பண்ணிட்டேன். நீங்க எம்.டியை ஒரு டைம் மீட் பண்ணி பெர்மிஷன் சொல்லிடுங்க...” என்ற மேலாளரிடம் தலையை அசைத்தவளிடம் சற்றே சலிப்பு.

‘இவர் பெர்மிஷன் கொடுத்தா போதாதா?’ என்ற எண்ணத்துடன் புருவத்தை சுளித்தவாறே தன்னிருப்பிடத்திற்கு வந்தமர்ந்தாள்.

இவளது மின்னஞ்சலை சற்றே கண்கள் இடுங்கப் பார்த்திருந்தான் வேந்தன். அவனது விரல்கள் தன்போல அதற்கு ஒப்புதல் அளிக்க, முகம் தீவிரமான யோசனையில் சுருங்கியது. இன்னும் எத்தனை தூரம் இவள் செல்வாள் என கடந்த இரு மாதங்களாகக் கடைபிடித்த அமைதியை இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பிடித்திழுத்து வைத்தான்.

துளசிக்கு அவன் ஒப்புதல் அளித்ததில் அத்தனை நிம்மதி. அவனைப் பார்க்க வேண்டியதில்லை என்று நிம்மதியாய் தன் வேலையைத் தொடர்ந்தாள். அடுத்து வந்த இரண்டு நாட்களும் பேருந்தில்தான் அலுவலகம் சென்று வந்தாள். அத்தனை சுலபமாய் இல்லையெனினும் பழகிக் கொள்ள முயன்றாள். முடிந்தளவிற்கு விரைவாக பேருந்து நிறுத்தம் சென்றாள். அதனால் வாகனம் அதிக நெருக்கடியின்றி காணப்பட்டது‌. அலுவலகம் சென்று வர வசதியாய் இருந்தது.

அவள் விடுப்புக் கேட்ட மூன்று நாட்கள் தொடர்ந்து வர, வசுமதியும் அவளும் சேர்ந்து பொருட்களை மூட்டைக் கட்டினர். துளசி வேண்டாமென மறுதலித்துக் கூறியும் கேட்காது சோனியாவும் ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து அவர்களுடன் இணைந்து கொண்டாள். வீட்டைப் பிரியப் போகிறோம் என்ற வருத்தம் மனம் முழுவதும் பரவி இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையை மூவருமே உணர்ந்திருந்ததால், பெரிதாய் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. ஒருவர் வருத்தம் கொண்டால் அது மற்றவர்களை பாதிக்கும் என்றெண்ணி உள்ளக்கிடங்கில் பதுக்கிக்கொண்டனர்.

மறுநாள் வெள்ளிக்கிழமை துளசி அலுவலகம் கிளம்பினாள். ஞாயிற்றுக்கிழமை நல்ல நாள் என வசுமதிதான் அன்றைக்கு புதுவீட்டிற்குப் குடிபுகலாம் என துளசியின் முடிவை மாற்றியிருக்க, தாயின் விருப்பப்படி அனைத்தையும் விட்டுவிட்டாள்.

அலுவலகம் முடிந்து பேருந்தில் நிற்க இடமின்றி நின்றிருந்தவளின் அலைபேசி இருமுறை அடித்து ஓய, அதை கடினப்பட்டு எடுத்து காதிற்கு கொடுத்தாள்.

“ம்மா... துளசி, நல்லா இருக்கீயா மா?” எனக் கேட்ட குரல் வீட்டின் உரிமையாளருடையது.

“ஹம்ம்... நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?” என அவள் வினவ, “நல்லா இருக்கேன் மா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ ப்ரீயா இருக்கீயா?” என அவர் தயக்கத்துடன் வினவினார்.
அவர் குரல் தெளிவாய்க் கேட்கவில்லை இவளுக்கு.

அதிலும் பின்னே நின்றிருந்தவன் ஒருவன் இவளை வேண்டுமென்றே இடிப்பது போல தோன்ற, திரும்பி அவனை விழிகளில் அனல் தெறிக்கப் பார்த்தாள்.

“ஹலோ... ஹலோம்மா துளசி, லைன்ல இருக்கீயா?” என அவர் இருமுறை கத்த, “ஹம்ம்... ஒரு நிமிஷம் சார்!” என்றவள் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டாள். இதற்கு மேலும் கூட்டம் அதிகமானால் மூச்சுவிட சிரமம் என உடல் மெலிதாய் எதிர்ப்புத் தெரிவித்ததில் முடியாதென கீழிறங்கிவிட்டாள்.

லேசாய் மூச்சு வாங்க, சில நொடிகள் பின்னர் அழைப்பிலிருந்தவர் நினைவு வர,
“ஹலோ சார், சொல்லுங்க!” என்றாள். இந்த நேரத்தில் இவர் எதற்காக அழைத்திருக்கக் கூடுமென மெலிதான பயம் வியாபித்தது.

“ம்மா துளசி, என் பொண்ணைக் பக்கத்து ஊர்ல கட்டிக் கொடுத்து இருக்கோம்னு சொன்னேன்ல மா. இப்போ அவளுக்கும் அவ மாமியாருக்கும் ஏதோ மனஸ்தாபம்னு வந்து நிக்கிறா. என்ன செய்றதுன்னு தெரியலை. வீட்டை உங்களுக்கு வாடகைக்குத் தரோம்னு சொல்லி குடிவர சொல்லிட்டேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்னு நான் எதிர்பார்க்கலை...” என்றவர் குரலில் இவளிடம் சில நொடிகள் அசாத்திய அமைதி.

“நீயே சொல்லு மா. இப்போ வீட்டை தர முடியாதுன்னு சொல்றது தப்புன்னு எங்களுக்குப் புரியுது. ஆனால், வேற வழியும் எனக்கில்லை. ஒத்தப் பொண்ணு, அவளையும் வெளிய அனுப்ப மனசில்லை. மன்னிப்பை தவிர வேறென்ன கேட்கன்னுத் தெரியலை. என்னை மன்னிச்சுடுமா!” என்று அவர் கூறவும், இவளிடம் சலனமில்லாது உதட்டில் விரக்தியான புன்னகை ஒன்று உதிர்ந்தது.

“நீயும் என் பொண்ணு மாதிரிதான் மா. கடைசி நேரத்துல இப்படி சொல்றேன்னு ரொம்ப சங்டமா இருக்கு மா. எனக்கு ஒரு வாரம் டைம் கொடும்மா. உனக்கொரு நல்ல வீடா பார்த்து தரேன்!” என்றவர பேச்சில் தன் செயலின் மீதான வருத்தம் தொனித்திருந்தது. துளசியின் அமைதி அவரை மேலும் குற்ற குழியில் தள்ள, “ம்மா... துளசி!” என சின்ன குரலில் அழைத்தார் அப்பெரியவர்.

அதில் சுயம் பெற்றவள், “பரவாயில்லை சார், நீங்க வேணும்னு எதுவும் செய்யலையே. என் பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன்!” என்றவள் அவர் மேலும் பேசும்முன் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அங்கே நிழலுக்காக வைக்கப்பட்டிருந்த நீள்விருக்கையில் அமர்ந்தாள். விழிகள் சாலையில் அங்குமிங்கும் செல்லும் வாகனத்தில் அலைபாய, மனதில் எதுவுமே தோன்றவில்லை. இப்படி ஒவ்வொரு அடியாய் விழுந்து விழுந்து இதயம் மரத்துவிட்டதோ என்னவோ. பெரிதாய் வலிக்கவில்லை என மூளை கூற, கொஞ்சம் கொஞ்சமாக இரவு கவிழத் தொடங்கியிருந்தது.

இரவின் மெல்லிய கருமை அடர்ந்த மையிருட்டிற்குத் தாவ, சில பல நிமிடங்கள் இவள் அப்படியே அமர்ந்திருந்தாள். ஆட்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியதும் அறிவு விழித்துக் கொள்ள, புலன்கள் சூழ்நிலையை உணர்ந்தன. எழுந்து கைப்பையை இறுக்கிக்கொண்டு நடந்தவளின் கால்கள் எதை நோக்கி செல்கிறதென அவளுமே அறியாத புதிர்தான்.

அரைமணி நேரங்கள் அப்படியே நடந்தவளின் கால்கள் அந்த பூங்காவில் வேரோடி நின்றுவிட, விழிகளால் அதை அளவெடுத்தாள். வாயிற்காவலாளி கையிலொரு கோப்பையில் தேநீரும், மறுபுறக் கையில் அலைபேசியுமாய் இருந்ததில் யார் உள்ளே வருகிறார், போகிறார் என்பதை கவனிக்கத் தவறியிருந்தார். பூங்காவின் வழமையான நேரம் கடந்தும் அவரின் மூளையை செல்பேசி அரித்ததில், அவரது கவனம் இங்கில்லை என சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தவரைக் காணும்போது அவதானிக்க முடிந்தது.

துளசியின் கால்கள் தன்னிச்சையாக உள்ளே நுழைய, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மக்கள் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் ஒருபுறம் விளையாடிக்கொண்டிருக்க, மற்றோரு சாரர் வீட்டிற்கு கிளம்பும் எண்ணத்தில் பொருட்களை பையில் அடைத்துக்கொண்டிருந்தனர். கண்கள் அனைத்தையும் உள்வாங்கினாலும் சிந்தையில் எதுவும் பதியவில்லை. ஆள் அரவமின்றி காணப்பட்ட கல்மேஜை ஒன்றில் அமர்ந்தாள்.

விழிகள் இருளில் எதையோ தேடித் துழாவிக் கொண்டிருக்க, புறத்தூண்டல் அற்றுப் போனது போல அமர்ந்திருந்தாள். சுத்தமாய் ஸ்மரனையற்றுப் போயிருந்த மனதோடு, சர்வ அவையங்களும் இயக்கத்தில் இல்லை. என்ன செய்கிறோம் என்பது கூட சிந்தையில் உறைக்காது நிராதவராய் அமர்ந்திருந்தவளுக்கு அப்போதுதான் தன்னிலையை எண்ணி கழிவிரக்கத்தில் மெதுவாய் விழிகள் கலங்கின.

கீழிமையில் படர்ந்த உவர்நீர் மெதுவாய் பார்வையை மறைத்து மங்கலாக்க, “ஷிவா, என்னை நம்ப மாட்டீயா நீ? என்ன பிரச்சனை வந்தாலும் நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணலாம் டா. ஐ வில் பீ வித் யூ ஃபார் எவர்!” கனிவும் அக்கறையும் கொஞ்சமே உரிமையும் கோபமுமாய் தன் கரங்களைப் பொதிந்து கொண்டவனின் கைகளில் வெம்மையில் இவளது உள்ளம் தவித்துப் போனது.

மெதுவாய் கரத்தை இழுத்தவள், “வேணாம், எனக்கு எதுவும் வேணாம். யாரும் வேணாம். என்னால எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணிக்க முடியும்!” என அழுகையும் கோபமுமாய் உரைத்தவளை அனல் தெறிக்கப் பார்த்தவனின் கனிவு காணாமல் போயிருக்க, கோபமாய் அவளை உறுத்து விழித்தான்.

“என்ன பார்த்துப்ப நீ... உன்னால முடியாது. தனியா உன்னால எதையும் ஹேண்டில் பண்ண முடியாது டி!” என பற்களை நறநறத்தவனை நிமிர்ந்து ரோஷமாய்ப் பார்த்தவள், “என்னால முடியும்... என்னால முடியும்!” என அவனை உதறித் தள்ளிவிட்டு விறுவிறுவென அவ்விடத்தைவிட்டு அகன்ற காட்சி கண்முன்னே இப்போதும் விரிய, அவனது குரல் இந்நொடி செவியில் எதிரொலித்து அவளைக் கொன்று புதைத்திருந்தது.

அன்னிச்சையாய் நொடியில் கரங்கள் காதைப் பொத்திக் கொள்ள, உடலை லேசாய்க் குறுக்கினாள். “நோ... என்னால முடியும். என்னால முடியும்!” என உதடுகள் முணுமுணுக்க, விழிகளில் சரசரவென நீர் வழிந்தது.

ஏனோ எதிலோ மொத்தமாய் தோற்றுப் போன்றதொரு உணர்வு. அவனுடைய வார்த்தையின் உண்மைத் தன்மை இப்போது நிகழ்தகவாய் மாறி நிஜத்தை சமீபித்ததில் மொத்தமும் உடைந்து போனாள். வரையறுக்க முடியாத வரையறைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வொன்று குபுகுபுவென அடிவயிற்றிலிருந்த எழுந்து தொண்டையை அடைத்தப் போது அது கேவலாய் மாறியிருந்தது.

முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டாள். யாருடைய கவனத்தையும் ஈர்க்க கூடாதென மூளை கத்திக் கூச்சல் போட்டாலும் தன்னிரக்கம் பேரிரைச்சலாய் அவளது புலன்களை முடுக்கிவிட்டதில் சூடான திரவம் வழிந்த வண்ணமிருக்க, நடுங்கிய கரங்களுக்குப் பற்றுக் கோலாய் கைப்பையை அழுத்திக் கொண்டாள். தேற்ற ஆளற்ற அழுகைதான். விசும்பலில் தொடங்கிய அழுகை உடைந்து மெது மெதுவாக கேவலாக மாறி புறத்தூண்டலை மொத்தமாய் சமைந்து போகச் செய்த நொடி, அனைத்திலுமே அநியாயமாய்த் தோற்று போனதொரு உணர்வு.

எதையுமே தன்னால் சரியாய் கையாள முடியவில்லையோ? எங்குத் தவறினோம்? என மூளை இடம் பொருள் ஏவல் பாராது அலசி ஆராய்ந்து சோர்ந்து போயிருந்தது. இன்னும் ஒருநாளில் என்ன செய்துவிட முடியும் தன்னால்? அடுத்த வாரம் வீட்டை விற்க ஆட்களை அழைத்து வருகிறேன் என கூறிய வைரமுத்துவின் வார்த்தைகளை உபரித் தகவலாய் மூளை நினைவு கூற, இன்னும்மின்னும் அதிகமாய் உடைந்துதான் போனாள். அழுதழுது முகம் விழிகள் எல்லாம் சிவந்திருந்தது. கைகள் உவர்நீரில் பிசுபிசுத்துப் போயிருந்தன.

இந்நொடி யாரேனும் வந்து தன்னை இதிலிருந்து மீட்க மாட்டார்களா என்ற நப்பாசையில் வெந்து தணிந்த மனதிடம் பதிலில்லை. யாரும் யாருக்காகவும் வரமாட்டார்கள் என்ற நிதர்சனம் உறைத்ததில், விழிகள் உகுத்த நீரை கட்டுக்குள் கொண்டுவரப் போராடினாள். உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியவள், இமையை சிலுப்பி உள்ளிழுத்து தன்னை சமன் செய்ய முயன்றாள். மனம் விரக்தியில் நனைந்து தோய்ந்து உடைந்து போனது‌.

நேரம் கடப்பதை மூளை நினைவுகூற, பலமுறை அழைத்து ஓய்ந்த அலைபேசி குடும்பமென்னும் இத்யாதி அவளுக்காகக் காத்திருப்பதை உணர்த்தியதும், விழிகளில் மீண்டும் நீர் கோர்த்தது. அவர்களிடம் என்ன கூறப் போகிறோம் என்ற கேள்வி தொக்கி நின்றதில், தொண்டை அடைத்துப் போனது.

ஆங்காங்கு தென்பட்ட முகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்க, ஒரு தந்தையின் தோளில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு இவளையே பார்த்தவாறு செல்லும் குழந்தையைக் காண்கையில் நெஞ்சம் விம்மித் துடிக்க, ஏனோ குழந்தையாகவே இருந்திருந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையையெல்லாம் சந்திக்க நேரிட்டிருக்காதோ என்னவோ? தந்தையின் தோளில், தாயின் அரவணைப்பிலே நாட்களை கழித்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முகம் கசங்கிப் போக, கன்னத்தில் பட்டுத் தெறித்த நீரைத் துடைத்தாள்.

‘யாரும் உனக்காக வரப் போவதில்லை. உன்னையும் உன் குடும்பத்தையும் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்!’ எங்கோ அசரீரீ கேட்டதில், தளர்ந்திருந்த உடல் இன்னும் தளர்ந்தது. அடுத்து என்னவெனத் தெரியாத பாதையில் பயணிக்கும் உணர்வில் விழிகள் எதாவது வழித் தென்படுமா என அலைபாய, நடுங்கித்தான் போனாள்.

“ஏம்மா... டைமாச்சு... கிளம்புங்க!” அதட்டல் செவியில் நுழைய, நிமிர்ந்து தன்முன்னே நின்றிருந்த கவலாளியைக் கண்டதும் மடிந்திருந்த கால்களை கீழே நீட்டி எழுந்து நின்றவள் கரங்கள் கைப்பையை இறுக்கிக் கொள்ள, எழுந்து நடந்தாள்.

வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பிலே லேசாய் உடல் தள்ளாடியது. கண்ணில் நீர் நிரம்ப நிரம்ப, பாதை மங்கலாத் தெரிய, இமையை சிமிட்டியபடி வழியில் விழிகளைப் பதிக்க முயன்றாள். வாயிலைக் கடக்க முற்பட்ட நொடி அங்கே மகிழுந்தில் சாய்ந்து நின்றிருந்தவனில் விழிகள் படிய, முன்னை விட இன்னும் வேக வேகமாக கண்கள் நனைந்தன. இத்தனை நேரம் தனக்குத்தானே உரைத்த சமாதான மொழிகளும் வார்த்தைகளும் காற்றில் கலக்க, முன்னே நின்றவன் பிரதானமாய் இருந்து தொலைத்ததில் சுற்றியிருந்த பொருட்கள் எல்லாம் கருத்திலும் கண்ணிலும் உறைந்து போயிருந்தன.

‘அவனைக் காணாதே... காணதே!’ என பேரிரைச்சலிட்ட மூளையின் வார்த்தைகளுக்கு உட்பட்டு இவள் இரண்டெட்டு வைராக்கியத்துடன் எடுத்து வைக்க, “ஷிவா...” என அழைத்தவனின் அழைப்பில் துளசி மொத்தமாய் உடைந்திருந்தாள். நிமிர்ந்து அவனைத் தவிப்பும் நிராதரவுமாய்ப் பார்த்தவளின் பார்வையில் வேந்தன் சர்வ நிச்சயமாய் துடித்துப் போனான்.

“ஏன் டி?” எனக் கேட்டவனிடம் விழிகளில் நீருடன் தலையை இடம் வலமாக அசைத்தவள் விறுவிறுவென நடக்க, அவளது விரல்களோடு தன் கரத்தைப் புதைத்திருந்தவனின் கைக
ளின் வெம்மையில் இவளுள்ளே ஏதோ அடங்கிப் போக, “இளா...” என தவிப்புடன் அவனைத் தாவி அணைத்திருந்தாள் துளசி.

தூறும்...

 
Active member
Messages
137
Reaction score
116
Points
43
Ennathu ithu?? Already ivaga rendu perum lovers sa??
 
Top