- Messages
- 1,168
- Reaction score
- 3,348
- Points
- 113
தூறல் – 11
சக்தி திருப்பூர் வந்து ஒருவாரம் முடிவடைந்திருந்தது. துளசியின் திருமணப் பேச்சை எப்படியேனும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வசுமதியின் மனதை கரைக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.
அவள் பேச்சின் சாராம்சம் மொத்தமும் துளசியின் திருமணம் மட்டுமே நிறைந்திருந்தது. வார்த்தையில் தேன்தடவிப் பேசியவளின் பேச்சில் வசுமதியும் மயங்கிவிட்டிருந்தார். இந்த வீட்டின் மீதான அவளது அக்கறையிலும் உரிமையிலுமே இந்த முடிவு என்றும், நம் குடும்பத்தின் நலனைத் தவிர வேறொன்றும் பெரிதில்லை என்பது போலத்தான் அவளது உரையாடல்கள் பெரும்பாலும் இடம்பெரும். அவற்றை பெரியவர் மனதிலும் பதிய வைத்தாள். கண்ணப்பன் அறைக்குச் சென்று அவரிடமும் இதைப் பற்றி பேசினாள். சக்தியைக் கண்டதும் அந்த மனிதர் மகிழ்ந்தாலும் சிறிது நேரத்திலே ஆர்ப்பாட்டம் செய்ய, இவளால் அமர முடியாது அறையைவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஜெயவர்மன் மட்டுமே தாத்தா என அவரிடம் சிறிது நேரம் விளையாடினான். வசுமதி பேரனைத் தன் கண் வளைவிலே வைத்திருந்தார். தன் கணவனால் அவனுக்கு ஏதும் நேர்ந்து விடக் கூடாதே என அவர் மனம் அஞ்ச, அதற்கெல்லாம் வேலையே இல்லாது போனது. கண்ணப்பனும் ஜெயவர்மனும் சிரிப்புடன் விளையாடி மகிழ்ந்தனர். நீண்ட நாட்கள் கழித்தான அவர் முகத்தின் புன்னகையில் இவருக்கு மனம் நிறைந்து போனது.
“அடிக்கடி வந்துட்டுப் போ சக்தி. உங்களை எல்லாம் பார்த்ததும் அவர் ரொம்ப சந்தோஷமா இருக்காரு. பேரனைத் தேடுறார் போல!” என கணவனை விழிகள் கலங்கப் பார்த்திருந்தார் பெண்மணி.
“எங்க மா... நேரம் கிடைச்சா வரேன். ஒரு பேரன் என்ன, துளசிக்கு கல்யாணமாகிக் குழந்தைப் பிறந்து அந்தப் பேரனையும் அப்பா கொஞ்சணும்னுதான் ஆசைபட்றேன் நான்!” என சக்தி எங்குத் தொடங்கிய உரையாடலாக இருந்தாலும் அதன் நீட்சி என்னவோ துளசியின் திருமணம்தான். அப்படியே பேச்சைத் தொடர்ந்தாள்.
“ம்மா... துளசி கல்யாணம் பண்ணிப் போனதும் வீட்டைப் பார்த்துக்க ஆள் இல்லைன்னு எல்லாம் நினைக்காத மா. அவர்கிட்டே சொல்லி சோனியாவுக்கு நல்ல வேலையா, படிப்பு தகுந்தாப்புல வாங்கிடலாம். நானும் என்னால முடிஞ்ச உதவியைப் பண்றேன். கல்யாணம் எல்லாம் காலகாலத்துல பண்ணணும். வயசு கூடிப் போச்சுன்னா, நல்ல மாப்ளை அமையுறது கஷ்டம். அப்புறம் நெட்டையோ, குட்டையோ, கருப்போன்னு எவன் வந்தாலும் நம்ம பொண்ணைக் கொடுக்குற நிலைமைக்கு வந்துடுவோம். உனக்குத் தெரியாதது இல்ல. அந்தக் காலத்து மனுஷிம்மா நீ. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன்னோட முடிவுதான் எல்லாம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்!” என்று வாய் வார்த்தைக்கு மொழிந்தாலும் அவளது செயல் சிந்தனை அனைத்தும் வசுமதியை சம்மதிக்க வைத்திடும் நோக்கிலே இருந்தன. அதை பெரியவர் கவனிக்கவில்லை. சக்தி கூறியது போல நாட்கள் செல்ல செல்ல மகளின் திருமணம் தடைபட்டுவிடுமோ என்ற பயம் அவரின் நெஞ்சைப்போட்டு அழுத்தித் தொலைத்தது.
இந்த இரண்டு நாட்களில் அவரது மனநிலை முற்றிலும் மாறி, வேறாளாகிவிட்டிருந்தார். சக்தி அவரை மாற்றிவிட்டாள் என்பதுதான் கசப்பான உண்மையும் கூட. இரண்டு நாட்கள் பேசியே அவரை மொத்தமாய்க் கரைத்திருந்தாள்.
அவ்வப்போது துளசியையும் பேச்சில் இழுக்கத் தவறவில்லை. ஆனால், அவள் எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. சக்தி பேசுவதற்கு எல்லாம் மதிப்புக் கொடுக்க அவளிடம் நேரம் இல்லை என்பதே உண்மை. அலுவலகம் வீடு என நாள் முழுவதும் அங்குமிங்கும் கழிந்துவிட, வீட்டிற்கு உறங்க வருவது போலத்தான் இருந்தாள்.
இந்த மாத சம்பளம் வங்கி கணக்கில் வந்தவுடன் வைரமுத்துவின் நினைவு வந்தது. அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்பு இவளே அவரைப் பார்க்க சென்றாள்.
“அட, துளசி... நீயா வந்துட்டீயா? வாம்மா... உள்ள வா!” என்றவர் அவளை எதிர்பாராது அதிர்ந்தாலும் புன்னகையுடனே வரவேற்றார்.
“இல்ல அங்கிள், இந்தப் பக்கம் ஒரு வேலை வந்துடுச்சு. சோ, வட்டிப் பணத்தையும் அப்படியே கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்!” என்றவள் அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தயங்கினாள்.
“சொல்லு துளசி, வேற வீடு பார்த்தாச்சா?” அவர் நினைவு வந்தவராக வினவ, துளசியிடம் ஏகத் தயக்கம்.
“அது, அங்கிள்... வீடு இன்னும் செட்டாகலை. ஒரு டூ வீக்ஸ் டைம் தர முடியுமா? அதுக்குள்ள வேற எதாவது நல்ல வீடா பார்த்துடுவேன்...” என்றவள் குரலில் அத்தனை சோர்வு. முகத்தில் அவர் என்ன பதிலளிப்பாரோ என்ற பதகளிப்பு வேறு கொட்டிக் கிடந்தது. சற்றே தவிப்பாய் தன் முகத்தை நோக்கும் இந்தப் பெண்ணிடம் அவருக்கு கொஞ்சம் இரக்கம் சுரந்தது.
“சரி மா, ரெண்டு வாரம் டைம் எடுத்துக்கோ. வீட்டை பேசி முடிச்சுட்டேன். நீங்க கிளம்புனதும் கை மாத்திவிடணும். அதனால முடிஞ்சளவுக்கு சீக்கிரம் பாரும்மா...” என்றவர் பதிலில் இவளிடம் கொஞ்சம் நிம்மதி துளிர்க்க, பதட்டம் சற்றே தணிந்தது.
“தேங்க்ஸ் அங்கிள், கண்டிப்பா டூ வீக்ஸ்ல ஷிப்ட் ஆகிட்றோம்!” என வலிய புன்னகைத்து விடை பெற்றவளின் சிரிப்பு கண்களை எட்டவே இல்லை. தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பதற்கு யாரோ ஒருவரிடம் அனுமதி கேட்கும் நிலையை எண்ணித் தொண்டையை ஏதோ அடைக்கும் உணர்வு. கலங்கிய விழிகளை சிமிட்டி சரிசெய்தவள் நடுங்கிய கரங்களுடன் வாகனத்தை இயக்கினாள்.
சாலையில் கவனம் எள் அளவும் இல்லை. முன்தினம்தான் அந்த வாலிபன் கூறிய மற்றொரு வீட்டை சென்று பார்த்து வந்தாள். அட்சர சுத்தமாய் அந்த வீடு அவர்களுக்குப் பொருந்திப் போக வாய்ப்பே இல்லை. அந்த வீட்டின் உரிமையாளரைக் கண்டவுடனே மனம் சோர்ந்து போனது.
தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என இவள் வீடு வேண்டும் எனக் கேட்டிருந்தாலும் இவளது நேரத்திற்கு எதுவுமே கிடைக்கவில்லை. மனம் செயலற்று நிச்சலமாக நின்றுவிட, சிந்தை முழுவதும் இந்தக் கவலைதான் சிதறிக் கிடந்தது.
யாரிடமும் பேசாமல் வீட்டிற்குள்ளே நுழைந்தவளை மேலும் எரிச்சலடையச் செய்வது போல சக்தி பேசினாள். “வா துளசி, ட்ரெஸ் மாத்திட்டு, ப்ரெஷ்ஷாகிட்டு வா. உன்கிட்ட கல்யாணம் பத்திப் பேசணும்!” என்றவளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தாள் இவள்.
“உள்ள வந்ததும், வராததுமா இதைப் பேசியே ஆகணுமா சக்தி கா?” சோனியா ஆத்திரம் மிகுதியில் வினவினாள்.
“ப்ம்ச்... சோனியா, முக்கியமான விஷயம் இல்ல. அதான் சொன்னேன்!” என்றவள் முகம் மலர்ந்திருந்தது. அதைக் கவனித்த துளசியின் அடிவயிற்றில் பயபந்து லேசாய் சுழன்றது.
“சரி, நீ போ துளசி. டயர்டா வேற இருப்ப. நான் ஒருத்தி, வந்ததும் பேசிட்டே நிக்க வைக்கிறேன். உழைச்சு களைச்சு வர்றா புள்ளை!” என்ற சக்தி எழுந்து இவளருகே வந்து முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்துவிட்டாள். அந்தப் பேச்சின் பின்னே ஒளிந்து கிடக்கும் பேராபத்தை மனம் உணர்ந்ததும் மெல்லிய பதட்டம் படர்ந்தது. ஏற்கனவே மனதில் ஆயிரம் போராட்டங்கள். அதில் இது ஆயிரத்து ஒன்றா என சோர்ந்திருந்த மனது சுரத்தையின்றி மெலிதாய் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது. அவளிருந்த மனநிலையில் சக்தியிடம் போராட உடலிலும் மனதிலும் சுத்தமாய் ஆற்றலில்லை என்றுணர்ந்து வேக எட்டுகளுடன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.
கதவை சாற்றி சில நொடிகள் அதில் சாய்ந்து நின்றவளின் முகத்தில் சொல்லவியலாத துயரம் படர்ந்திருந்தது. செவி சக்தியின் பேச்சை உள்வாங்கிய வண்ணமிருக்க, கைகள் தன் போல இரவு உடையை எடுத்து அணிந்து கொண்டன. பின்னலை அவிழ்த்து தூக்கிக் கொண்டையிட்டு முகம் கழுவினாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கவே அத்தனை வித்யாசமாக இருந்தது அவளுக்கு. சுத்தமாய் இரண்டு கன்னத்திலும் சதையின்றி வற்றிப் போய்விட்டன.
சமீபகாலமாக அத்தனை அலைச்சல், வேலை என வீட்டிற்குள் நுழையவே இரவு கவிழ்ந்துவிடுகிறது. அத்தோடு மன உளைச்சலும் சேர்த்து அவளது உடலை உருக்கியிருந்தது. விழிகள் எல்லாம் உள்ளே சென்று கண்ணைச் சுற்றி கருவளையம் படர்ந்திருந்ததைக் கவனித்தவளின் வலக்கரம் உயர்ந்து மெதுவாய் அதைத் தடவின. சில நிமிடங்கள் கண்ணாடி முன்பு அமைதியாய் நின்றிருந்தாள்.
வெளியே செல்லும் எண்ணம் சுத்தமாய் இல்லை. சிறிது நேரம் உறங்கு என உடல் அசதியில் கெஞ்ச, படுக்கையை சரிசெய்து அதில் விழச் சென்றவளை ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்த அலைபேசி திரையும் அதன் ஒலியும் கவனத்தைத் திசை திருப்பியது. கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்தவளின் விரல்கள் திரையை மேல் நோக்கி நகர்த்தின.
‘சந்தோஷ் மேரேஜ்!’ எனப் புதிதாய் முளைத்த புலனக் குழுவொன்றில் துளசியின் அலுவலகத் தோழிகளும் தோழர்களும் இணைந்திருக்க, தொடர் சங்கிலிப் போன்று குறுஞ்செய்திகள் வந்து விழுந்த வண்ணமிருந்தன. சந்தோஷின் திருமணத்திற்கு எவ்வாறு செல்வது என அவர்கள் தீவிர கலந்துரையாடலில் லயித்திருந்தனர். தற்போதைய அவளுடைய மனநிலைக்கு இதிலெல்லாம் கவனது செல்லாது என்றுணர்ந்து அசிரத்தையாய் அலைபேசியை வைக்கச் சென்றவளின் மூளையில் ஏதோ பளிச்சிட, கண நேரம் கரங்கள் காற்றில் மிதந்தன.
‘சந்தோஷ்...சந்தோஷ் கிட்ட. ஹெல்ப் கேட்டா கண்டிப்பா கிடைக்கும்!’ புதிதாய் துளிர்விட்ட நம்பிக்கையின் பெயரில் முகம் சற்றே விகசிக்க, நொடியும் தாமதிக்காது அவனுடைய இலக்கத்திற்கு அழைத்திருந்தாள்.
அவன் வேண்டாம் என்று எந்த வித உறவுச் சங்கிலியையும் தொடரக் கூடாதென முன்தினம் மனதில் எடுத்த சபதங்கள் எல்லாம் வரிசைக்கட்டி நின்று இவளை யோசிக்க செய்தன.
நட்பைக் கூடத் தொடர முடியாத இடத்தில் இருப்பவனிடம் ஒவ்வொரு முறையும் உதவியை யாசிக்கும் தன்னிலையை எண்ணி கழிவிரக்கத்தில் கண்கள் கரித்துத் தொலைத்தது. அழைப்பைத் துண்டிக்கலாம் என இவள் எண்ணிய நொடியில், “ஹலோ... துளசி!” என்ற சந்தோஷின் குரல் செவியைத் தொட்டது. ஏனோ அவனிடம் உதவியைக் கேட்கும் எண்ணம் பின்னகர்ந்திருந்தது.
கனத்த அமைதியைக் கிழித்த சந்தோஷ், “துளசி, லைன்ல இருக்கீயா? என்னாச்சு டா, எதுவும் பிரச்சனையா?” என பதட்டம் மேவிய குரலில் வினவியவனின் அக்கறையில் இத்தனை நேரம் மேழிமைத் தொட்டு கீழிமை படர்ந்து தொக்கி நின்ற உவர்நீர் கன்னத்தில் இறங்கியது.
“அது... அது ஒன்னும் இல்ல சீனியர். நாளைக்கு உங்களுக்கு மேரேஜ் இல்ல, சோ விஷ் பண்ணலாம்னு கால் பண்ணேன்!” திக்கித் திணறி அடைத்தத் தொண்டையை சரிசெய்தவளின் குரல் பேதத்தை நொடியில் உணர்ந்திருந்தான் சந்தோஷ்.
“துளசி... பொய் சொல்லாத. எதாவது பிரச்சனையா? ஸ்பீக் அவுட். ஸ்டில் நான் அதே உன்னோட சீனியர் சந்தோஷ், நீ எனக்கு ரொம்ப பிடிச்ச ப்ரெண்ட்தான். என் கல்யாணமோ இல்ல பிராஞ்ச் ட்ரான்ஸ்பரோ நம்மளைப் பிரிக்காதுன்னு நீ சொன்னதை நான் நம்புறேன்!” என்றவன் பேச்சில் இவளுக்கு அழுகை வந்துவிடும் போலானது. மெல்லிய விசும்பல் அவளிடம் வெளிப்பட்டதில் சந்தோஷ் பதறிப் போனான்.
“துளசி, துளசி என்னாச்சு டா. ஏன் அழற? எந்தப் பிரச்சனைனாலும் பார்த்துக்கலாம்னு இத்தனை நாள் எனக்கும் சேர்த்து தைரியம் சொன்ன துளசி எங்கப் போனா?” என்றவன் குரலில் அத்தனை கலக்கம். துளசி பதிலுரைக்காது தேம்பவும், அங்கே அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
“துளசி, கிவ் மீ ஹாஃப் அன் அவர். ஐ வீல் பீ தேர்!” என அவசரமாக அழைப்பைத் துண்டிக்கச் சென்றவனை, “நோ... வேணாம் சந்தோஷ். நீங்க வர வேணாம். என்னால மேனேஜ் பண்ண முடியும்!” என்று திடமாய் மறுதலித்தவளின் கரங்கள் கண்ணீரை துடைத்த வண்ணமிருந்தன. இந்த நேரத்தில் அதுவும் திருமணத்திற்கு முன்தினம் தன்னால் அவனுக்கு எவ்வித தொந்தரவும் வந்துவிடக் கூடாது என தன்னை சமாளிக்க முயன்றவளின் கண்ணில் நீர் வற்றவில்லை.
“இல்ல, நான் வரேன் துளசி. உனக்கு என்னோட சப்போர்ட் இப்போ வேணும்!” என அவள் மீதான அக்கறையிலும் கரிசனத்திலும் மிகுந்து வந்த வார்த்தையில் துளசியின் நெஞ்சம் நனைந்தது.
“சீனியர்... ஐ யம் ஓகே!” எனக் கூறியவளின் உதடுகள் அழுகைக்குப் பின்னான அமரிக்கையான புன்னகையை உதிர்க்க, விழிகளை நன்றாய் சிமிட்டி உருண்டு திரண்ட நீரை முழுவதும் உள்ளிழுக்க முயன்று வெற்றிக் கண்டாள்.
“சரி, என்ன பிராப்ளம், அதை முதல்ல சொல்லு நீ!” அன்பான அதட்டலிட்டான் அவன். சில நொடிகள் யோசித்தவள், மெல்லிய குரலில் அனைத்தையும் கூறி முடித்தாள்.
“ப்ம்ச்... துளசி, முதல்லயே என் ஞாபகம் வரலையா உனக்கு?” எனக் கடிந்தவன், “ஒரு டென்மினிட்ஸ்ல கால் கனெக்ட் பண்றேன்!” என அழைப்பைத் துண்டித்து கூறியது போல பத்து நிமிடங்களிலே மீண்டும் அழைப்பை இணைத்தான்.
“துளசி, என் ஃப்ரெண்ட் ரிலேட்டீவ் வீடு ஒன்னு அவைலபிளா இருக்கு. நான் எல்லாத்தையும் பேசிட்டேன். ஓகேன்னு சொல்லிட்டாங்க, நீ நாளைக்கு போய் வீட்டைப் பார்த்துடு. பிடிச்சிருந்துச்சுன்னா, ஒன் வீக்ல ஷிஃப்ட் ஆகிடலாம்!” என பிரச்சனைக்கு எளிதாக முற்றுப்புள்ளி வைத்திருந்தான் சந்தோஷ்.
“தேங்க்ஸ் சீனியர்... தேங்க் யூ சோ மச் சீனியர்!” என்றவளின் உதடுகளில் நிம்மதியின் சாயல் படர்ந்தன.
“ப்ம்ச்... துளசி... இதுக்கெல்லாம் தேங்க்ஸா? இனிமே என்ன ஹெல்ப்னாலும் தயங்காம கால் பண்ணு. முன்னாடி சொன்னதுதான், ஸ்டில் நான் உன் ப்ரெண்ட்தான். அதை யாராலும் மாத்த முடியாது!” என்றவனின் குரல் கொஞ்சமே கொஞ்சம் வேதனையில் தோய்ந்து மடிந்து மறித்தது. இவளிடம் கனத்த அமைதி.
“சாரி டு சே திஸ் துளசி, நான் ரொம்ப அன்லக்கி பெர்சன். உன்னைக் கல்யாணம் பண்ண முடியாம போச்சு. பட், உன் லைஃப்ல என்னை விட பெட்டரான பெர்சன் வருவாங்க. யூ டிசர்வ் மோர்!” என்ற சந்தோஷிற்கு இவளிடம் பதிலில்லை. அவன் குரல் இந்நொடி கூட துளசியை இழந்துவிட்ட வருத்தத்தின் சாயல் அட்சர சுத்தமாய் எதிரொலித்தது.
“சீனியர்... என்ன பேச்சு இதெல்லாம். நீங்க ரொம்ப லக்கி. அதனால்தான் எங்க குடும்பத்துல வந்து மாட்டலை. இல்ல, காலம் பூராம் கஷ்டப்படணும். அதனால யூ ஆர் லக்கி பாய்!” கேலிக் குரலில் சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாலும் இருவராலும் ஒன்ற முடியவில்லை. ஏதோ பெரிய திரையொன்றை இருவருக்கும் இடையில் திடீரென பொருத்தியதைப் போலொரு விரும்பதகாத மாற்றம். துளசி அதை ஏற்றுக்கொண்டு நகர முற்பட்டாலும் சந்தோஷால் எளிதில் இந்தப் பெண்ணைக் கடக்க முடியவில்லை.
“ஓகே சீனியர், என்னோட அட்வான்ஸ் விஷ்ஷஸ். ஹேப்பி. மேரீட் லைஃப், குட் நைட்!” என இவளே அழைப்பை வலிய துண்டித்தாள். மேலும் எதாவது பேசினால் சந்தோஷ் காயப்படக்கூடுமென கூறிய மனதின் வார்த்தைகளுக்கு உட்பட்ட விரல்கள் அலைபேசியை அணைத்து தூர எறிந்தன. எதிலிருந்தோ விடுபட்ட உணர்வில் மனம் இலகுவானது. தற்போதைய மாபெரும் பிரச்சனை ஒன்றின் பிடியிலிருந்து நழுவிவிட்டதில் தேற்ற ஆறுதல் இல்லாத இடத்திலிருந்தவளுக்கு சிறிய வழி புலப்பட்டதொரு உணர்வில் உதடுகளில் மெதுவாய் புன்னகை ஏறின. ஆனால் அது நொடியில் காற்றில் கலந்திருந்தது சக்தியின் குரலால். இவளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் பொத்தென இருக்கையில் அமர்ந்து கைகளைத் தலைக்கு கொடுத்து தாங்கி நின்றவளின் முன்னே சோனியா வந்து நின்றாள்.
“என்ன சோனியா, எதுவும் வேணுமா?” என்ற துளசி நிமிராது வினவ, அவளிடம் பதிலில்லை. சில நொடிகளில் தலையிலிருந்த கைகளைத் தளரச் செய்து நிமிர்ந்த துளசியின் முகத்தை சோனியாவின் விழிகளில் வழிந்த சூடான திரவம் ஸ்பரிசித்தது.
அதில் பதறி எழுந்த துளசி, “ஏய், சோனி... என்னாச்சு டா. எதுக்கு அழகை?” எனக் கேட்டு அவளது கண்ணீரைத் துடைக்க முனைய அதை தட்டிவிட்ட சின்னவள், “அக்கா...” எனத் தமக்கையை இறுக அணைத்திருந்தாள். அவளது உடல் அழுகையில் குலுங்க, துளசி என்னவெனத் தெரியாது துடித்துப் போனாள்.
“ப்ம்ச்... சோனியா, என்ன...எதுக்கு அழற நீ? எதுவா இருந்தாலும் அக்காகிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன். நான் இருக்கேன் இல்ல?” என தங்கையின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினாள்.
“வீட்டை காலி பண்ற மாதிரி எல்லாத்தையும் நீயே பார்த்துப்பீயா கா?” என சோனியா தேம்பியபடி வினவ, துளசியிடம் நிச்சயமாய் பதிலில்லை. ஒரு நொடி திகைத்தப் பாவனைதான்.
“அது... சோனி!” என்றவளுக்கு அந்நொடி என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை. தங்கைக்கு உண்மை தெரிந்துவிட்டது என மூளைக்குப் புரிந்தாலும் சமைந்து நின்றதென்னவோ ஒரு நொடிதான்.
“சோனி, அழாத...” என அதட்டலாய் உரைத்து அவளை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்தாள்.
“ஏன் கா சொல்லலை நீ. இது நம்ம வீடு கா. நம்ம ஏன் காலி பண்ணி வேறெங்கேயும் போகணும். இங்கே இருப்போம் கா. அப்பா நமக்காக ஆசையா கட்டுனதுக்கா!” என அவள் வீட்டை நிராசையுடன் பார்த்து அழத் தொடங்க, துளசிக்கு அடி வயிற்றிலிருந்து குபுகுபுவென வரையறுக்க முடியாததொரு உணர்வு மேலெழுந்து நெஞ்சை அடைத்துத் தொலைத்தது. அவளுக்கு மட்டும் இவ்விடத்தைவிட்டு அகல வேண்டும் என்ற ஆசையா என்ன? கட்டாயத்தின் கடைசி நுனியில் இருக்கும் பட்சத்தில் இந்த வீட்டை விட்டுக்கொடுப்பதைத் தவிர வழியில்லாது நிர்க்கதியாக த்தானே நிற்கிறாள்.
“நம்ம எங்கேயும் போக வேணாம் கா. இங்கே இருக்கலாம்!” என்ற சோனியாவைப் பார்த்த துளசிக்கு வேதனை தொண்டையை அடைத்தது. தங்கையை இழுத்து அணைத்து அவளது முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள். சில நிமிடங்கள் சோனியா தன்னிலை பெற்று ஆசுவாசம் அடைந்தாள். அழுகையும் மெதுமெதுவாய் குறையத் தொடங்கியது.
“சோனி மா, அக்கா சொல்றதைப் புரிஞ்சுக்கிற வயுசுதான் உனக்கு. ஹம்ம்... இந்த வீட்டைக் காலி பண்ணணும்னு சொன்னப்ப எனக்குமே அழுகை வந்துச்சுதான். ஆனால், நமக்கு இப்போ வேற வழியே இல்லை. கடனை அடைக்கிறதுக்கு இருபது லட்சத்துக்கு எங்கப் போறது? காலம் முழுக்க வைரமுத்து அங்கிள் வட்டியை மட்டும் வாங்கிட்டே இருந்துடுவாரா என்ன? எல்லாரோட நிலையிலிருந்தும் நம்ம யோசிக்கணும். நம்ப யாருக்கும் எந்தக் கஷ்டமும் தரக் கூடாது...” என்றவளின் கண்ணீர் கன்னம் தொட்டது. சோனியாவிற்கு மட்டுமல்ல அது தனக்குத்தானே கூறிக் கொள்ளும் ஆறுதல் மொழிகள் என துளசி மட்டுமே அறிந்த ஒன்று. சோனியாவிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.
“சோனி, இது...இது வெறும் கல்லும் மண்ணும் மட்டும்தான் டா. அப்பாவுக்கு சரியாகிட்டா, அவர் இதைவிடப் பெருசா புதுசா வீடு கட்டிடுவாரு. அந்த வீட்ல நம்ம எல்லாரும் சேர்ந்து இருக்கலாம். இப்போதைக்கு நமக்கு அப்பா முக்கியம். புது வீட்டுக்குப் போய்ட்டா, அப்பாவுக்கு இன்னும் நல்லா ட்ரீட்மெண்ட் பார்க்கலாம். சீக்கிரம் சரி பண்ணிடலாம்...” என ஏதேதோ மனக்கிடங்கில் இருந்தவற்றைக் கூறித் தங்கையைத் தேற்றினாள். வாய் வார்த்தையாக வெறும் கற்கள், மணலாலான கட்டிய வீடென்று துளசி கூறினாலும், இது அவர்களுடைய உணர்வு ரீதியில் அதிகம் உயிர்ப்புடைய பொருளாகிற்றே. கண்டிப்பாக காலங்கள் கடந்தாலும் மீண்டும் கிடைக்காத சொர்க்கத்தில் சேர்த்திதான்.
சோனியாவிற்கு நிதர்சனம் உறைத்தாலும் அதை எளிதில் ஏற்றுக்கொள்ள மனது முன்வரவில்லை. உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே இந்த வீட்டோடான அவர்களுடைய உறவு என்பது உணர்வோடானப் பிணைந்ததாகிற்றே. அப்படியெல்லாம் தூக்கிக் கொடுத்துவிட முடியாதே என மனம் அரற்றித் தொலைத்தது.
எதையோ தொலைத்த குழந்தையாய் தன் முகத்தை நோக்கும் தங்கையைப் பார்த்த துளசிக்கு குபுகுபுவென நீர் பொங்கியது. இவள் கூறி அழுது சாய என் தோள் உள்ளது. ஆனால் தன்னுடைய கவலையைப் பகிர்ந்தளித்து அழக்கூட யாருமில்லயே என கழிவிரக்கம் ஒருபுறம் கூத்தீட்டீயாய்க் குத்தித் தொலைக்க, விழியில் நீரோடு புன்னகைக்க முயன்றாள். சத்தியமாய் இத்தனை கனமான கணங்களைத் தாங்கிய உடல் பரிபூரணமாய் ஸ்மரயனையற்றுப் போயிருக்கக் கூடுமென மூளை இடை நுழைந்தது. உதட்டைக் கடித்துப் புன்னையென்னும் அரிதாரத்தைப் பூசினாள்.
“நம்மால எதையும் மாத்த முடியாது சோனியா?” என்றவள் பதிலில் சின்னவள் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம்தான். தாவி தமக்கையை அணைத்துக் கொண்டாள். துளசிக்கும் பற்றுக் கோல் தேவைப்பட்டது போல தங்கையை இறுக அணைத்துக் கொண்டாள். சில நிமிடங்கள் கணத்தின் கனத்தை வெகுவாய் கரைக்க முயன்றபடி நகர்ந்தன.
“ஏன் கா எங்ககிட்ட எதையும் சொல்லாம நீயே உன் தலைல போட்டுக்குற. வீடு பார்க்க ரொம்ப கஷ்டப்பட்டீயா நீ?” கவலையும் ஆதங்கமுமாய்க் கேட்ட சோனியா துளசியின் முகத்தில் வழிந்த நீரை தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள். தங்கை தன்னை மீட்டுவிட்டாள் எனப் புரிந்ததும் துளசியின் முகம் நிச்சலமாகியது. பதிலில்லாது மெலிதாய் சிரித்து வைத்தாள்.
“பதில் சொல்லு கா...” சோனியா அவளது கரத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். துளசியிடமிருந்த மௌனத்தில் அவளது முகத்தையே நோக்கினாள்.
“இதோ... இதோ என் சின்னக் குட்டி இப்படி அழுவாளே. இந்த வீடுன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம் இல்ல. அவ அழறதை என்னால பார்க்க முடியாதே. அதனால்தான் இத்தனை நாள் சொல்லாம வச்சிருந்தேன்!” என மனதின் வார்த்தைகள் எல்லாம் துளசியின் பகிரப்படாத வாதையும் வலியும்தான். புன்னகைக்க முயன்ற அகமும் முகமும் ஆயிரம் கதை சொல்லின.
அந்தப் பதிலில் சோனியாவிற்கு கண் கலங்கியது.
“ப்ம்ச்... அது... திடீர்னு காலி பண்ணப் போறோம்னு தெரிஞ்சதும் கொஞ்சம் எமோஷனாலாகிட்டேன் கா. அதான்... மத்தபடி ஐ யம் ஓகே. நீ சொன்ன மாதிரிதான் கல்லும் மண்ணுக்கும் எதுக்கு இம்பார்டென்ட் கொடுக்கணும். எங்கப் போனாலும் என் அக்கா, அப்பா, அம்மா கூட. இருந்தாலே போதும். அதுவும் சொர்க்கம்தான்!” நான் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று பெய்யான அலட்சியத்தில் துளசியை சமாதானம் செய்ய முயன்றன சோனியாவின் வார்த்தைகள். தங்கையைப் பார்க்க பார்க்க வேதனையில் துடித்துப் போனது துளசியின் மனது.
‘கடவுளே... போதுமே. இதற்கு மேலும் ஏன் எங்களுக்கு இத்தனை சோதனை?’ என வெடித்துச் சிதறக் காத்திருந்த அழுகையெல்லாம் மௌனமாய் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, துளசி முகத்தை வேறுபுறம் திருப்பிவிட்டாள்.
“உன்கிட்ட எப்படி சொல்லப் போறேன்னு கவலையோட இருந்தேன் சோனி. பட், நீயா தெரிஞ்சுக்கிட்டதும் நல்லதுதான். அம்மா... அம்மா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. வீடு கன்பார்ம் ஆனதும் அவங்ககிட்டே சொல்லிக்கலாம். அதுவரைக்கும் அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும்!” என்றவள் விழிகள் ஜன்னலில் இலக்கில்லாது இருளில் எதையோ தேடித் துழாவி தோல்வியைத் தழுவின.
துளசியை பின்னிருந்து அணைத்த சோனியா, “கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன் கா!” என்றாள் இவளது தோளில் தலையை சாய்த்து.
“துளசி... சோனியா, கதவைப் பூட்டீட்டு என்ன பண்ணீட்டு இருக்கீங்க. வெளிய வாங்க!” சக்தி கதவைத் தட்டி உரக்கக் கத்தவும், இவளிடம் அத்தனை சலிப்பு.
தமக்கை முகத்தைப் பார்த்த சோனியா, “க்கா... சக்திகாவைப் பார்த்து பயபட்றீயா. இப்போ நான் வெளிய போய் போட்ற வெடில நாளைக்கு நீ ஆபிஸ் முடிஞ்சு இங்க வரும்போது இந்தக்கா ஓடியிருக்கும் பாரு...” என்று கேலியாய்ப் பேச, இவளிடம் மென்மையான முறைப்பு.
“வேணாம் சோனி, அம்மா உன்னைத்தான் திட்டுவாங்க. தேவையில்லாத பிரச்சனை எதுக்கு. பார்த்துக்கலாம் விடு!” என்ற துளசியின் கையைத் தட்டிவிட்டு வெளியே சென்ற சோனியாவின் பேச்சில் சக்தி திகைத்துதான் போனாள். மறுநாளே அவர்களது குடும்பம் கன்னியாகுமரியை நோக்கிப் பயணமாகியது.
தூறும்...