• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 9 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் - 9

வெகு நாள் பிரிவிரிக்குப் பின் வேகத்தால் க்ரோததாலும் நிகழ்ந்த சந்திப்பில் கோவம் கண்களை மறைந்திருந்தாலும் உயிரினும் மேலாய் நினைத்த நண்பனை இத்தனை வருடங்கள் கழிந்து சந்திக்கும் பொழுது ஒரு எதிரியை பார்ப்பது போலவா சந்திக்க நேர்ந்தது... எத்தனை எதேச்சையாய் சந்திப்புகள் நிகழ வாய்ப்புள்ளது அனைத்தையும் தாண்டி இவ்வாறொரு நிலையிலா காண வேண்டும்...

நலம் விசாரிக்க வேண்டிய இதழ்கள் அவனை அழிக்க சபதமெடுக்க வேண்டிய அவசியம்... ஆற தழுவ துடிக்கும் கைகள் இப்பொழுது அடிக்க துடிக்கின்றது... காலம் விளையாடும் விளையாட்டும் அதில் மடியும் உறவுகளும்...

அலுவலகத்தில் உதய்யை அவன் கண்கள் அளவெடுத்தப் பொழுது அவனுடைய கம்பீரமான தோற்றத்தில் மனம் மகிழ்ந்தாலும் அவன் கண்களில் இருந்த வெறுமை அவனுடைய மனதை பளிச்சிட்டு காட்டியது... ஆனால் இன்று தன்னை கட்டி அழுகும் இந்த வளர்ந்த பிள்ளையை பார்க்கும் பொழுது அவனை விட ஆதி அதிகம் உடைந்திருந்தான்...

அவன் உடைந்திருக்கின்றான், ஏதோ மரணத்திற்காக காத்திருப்பவன் போல் நிற்பவனை தள்ளி விட்டு அறைய தோன்றியது... ஆனால் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நாளும் மனம் களங்காதவன் இன்று இவ்வாறு பேசும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஆதியால் சற்றும் யூகிக்க முடியவில்லை...

வீசி எறிந்தான் ஆதி அவனுடைய அகந்தையை நண்பனுக்காக, அவனுடைய உயிரை விடவா என்னுடைய 'நான்' என்னும் அகந்தை... நிச்சயம் இல்லை...

"என்..." ஆதி வாயை திறக்கும் பொழுது அவர்கள் முகத்தில் ஒரு காரின் வெளிச்சம் பட, அந்த திசையை நோக்கி ஆதி திரும்ப அந்த காரிலிருந்து வேக வேகமாக இறங்கி வந்த ஆதவன் ஆதியை பார்த்த நொடி அதிர்ச்சியாய் உறைந்தாலும் அடுத்த நொடி நிம்மதி மனதில் பரவியது...

விடாமல் பொலிந்து கொண்டிருந்த மழையும் குறைந்த பாடில்லை உதய்யின் அழுகையும் குறையவில்லை விட்டு விலக மனம் இல்லாமல் நின்றவன் அவன் நிதானம் பெரும் வரை அசையாதிருக்க உதய் தன்னுடைய இயல்பிற்கு வந்த நொடி அணைப்பை விட்டு விலகி ஆதியை தன்னுடைய தலை கொத்திக்கொண்டே பார்க்க அவனோ இமைக்காமல் உதய்யையே பார்த்து நின்றான்...

"என்னடா ஆச்சு... ஜெயன் நீ தனியா வெளிய வந்தணு சொன்னான் அதான் எதாவது பிரச்னையோனு அவனை உன் பின்னாடியே போக சொன்னேன்" ஆதவன்

பதில் அளிக்காமல் உதய் வேறு பக்கம் திரும்பி நின்றான் மௌனத்தை மட்டுமே பரிசளித்து...

"என்ன ஆச்சு ஆதி?"

ஆதி பதில் எதுவும் கூறாமல் தோளை குலுக்கி வேறு புறம் திரும்பி நின்றவன் மீண்டும் ஒரு முறை உதய்யை பார்த்து நீண்டதொரு பெருமூச்சு விட்டு அவன் இப்பொழுது நிதானத்தில் உள்ளான் என்று உறுதி செய்தவன் ஆதவனிடம் திரும்பி,

"பூச்சி மருந்து வாங்கி குடு குடிச்சிட்டு சாகட்டும்..." ஆதியின் கூற்றில் உதய்க்கு சிரிப்பு தான் வந்தது.... இதை அக்கறை என்பதா இல்லை பழி வாங்கும் செயல் என்பதா??

மீண்டும் குழப்பமே...

உதய் ஆதியை பார்க்க அவன் தன்னுடைய வண்டியில் ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டே தன்னை தான் பார்த்துக் கொண்டிருந்தான் எச்சரிக்கை பார்வையை வீசியபடியே...

ஆனால் எதற்கு....???

ஆதி சென்றதும் ஆதவன் உதய்யை பார்க்க அவன் ஆதவனின் பார்வையை அழகாக தவிர்த்தான்...

"ஒன்னும் கேக்க மாட்டேன் வண்டில ஏறித் தொலை" உதய்யின் கையில் இருந்த சாவியை வாங்கியவன் அவன் வண்டிக்கு பின்னால் இருந்த ஜெயனிடம் கொடுக்க, "வேணாம் நானே போய்க்குவேன்"

"நீ பண்ண வரைக்கும் போதும் உன்ன வீட்டுல விட்டா தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். ஏறு இல்லனா அறைஞ்சிடுவேன்" முடிவாய் ஆதவன் கூற, உதய் வேறு வழி இல்லாமல் அமைதியாய் வண்டியில் ஏறினான். வீட்டிற்கு செல்லும் வரை ஆதவனோ உதய்யோ எதுவும் பேசவில்லை.

உதய்யின் வாசலில் வண்டியை நிறுத்தியவன், "நாளைக்கு நாம லண்டன் போறோம் வர ஒரு வாரம் ஆகும். அங்க புது பிரான்ச் ஓப்பன் பண்ண கொஞ்சம் வேலை இருக்கு உன்னோட ஹெல்ப் தேவை, பிலைட் காலைல ஆறு மணிக்கு வந்து சேறு"

அவ்வளவே ஆதவன் அவனிடம் மறு பதில் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்... பிறகு அவனுக்கு நொடி பொழுது கொடுத்தாலும் ஏதேனும் ஒரு காரணம் கூறி மறுத்துவிடுவான்...

ஆதவனுக்கு நண்பனை இப்பொழுது அந்த வீட்டில் இருந்து வெளியே துரத்த வேண்டும் அதற்காகவே இந்த முடிவு, அதற்காக எவ்வளவு பொய் வேணும் என்றாலும் கூற தயாராக உள்ளான்...

அதன் பிறகு உதய்யும் மாதவனும் ஒரு வாரம் என்று எண்ணிய பயணம் பத்து நாட்கள் கடக்க அதன் பிறகே இந்தியா திரும்பினார் இந்த பத்து நாட்களில் அவனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது ஒரு முறை மட்டுமே... முதல் வாரம் அழைப்பை ஆவலுடன் எதிர் பார்த்தவன் பிறகு தன்னை மாற்றிக்கொண்டான் தேவை இல்லாமல் எதற்காக மனதிற்கு ஒரு பாரத்தை கொடுக்க வேண்டும் பிரியம் இல்லாத உறவுகளுக்காக?

அவனுடைய ஒரே ஆதரவான அவனது நண்பன் ஆதவன் அவனை ஒரு நிமிடம் கூட தனியே விடாமல் வேலைகளை வாரி இரைத்தான். அவனது முயற்சியை உணர்த்த உதய்யும் மறுக்காமல் செய்தான், அவனுக்கும் அந்த இடைவேளை தேவைபட்டது போல...

இந்தியாவிற்கு திரும்பி நான்கு நாட்கள் கடந்த நிலையில் அவன் இரவு பகல் பாராமல் வேலையை மட்டுமே செய்தான். வீட்டிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து அலுவலகமே கதியாய் கிடந்தான். அவனது தந்தை அதை பற்றி கேட்டதற்கு,

"வேலை இருக்குப்பா டீல் சைன் ஆகுற வரைக்கும் நான் வீட்டுக்கு வர மாட்டேன்" என்றான்...

வீட்டில் இருக்கும் அவனின் சித்தி நளினிக்கு ஹரி மற்றும் விஷ்ணுவின் வித்யாசமான நடவடிக்கை சந்தேகத்தை வரவழைத்தது அதிலும் உதய்யின் செயலும் சேர்ந்து அவரை சிந்திக்க செய்தது...

ஆதவனுக்கு அழைத்தவர் அவர்களிடையில் ஏதேனும் சண்டை நிகழ்ந்ததா என்று கேட்க அவன் மறுத்துவிட்டான் ஏனேனில் ஆதவனுக்கும் அவர்களிடையில் என்ன நடந்தது என்று தெரியாதல்லவா... அப்படி இருக்கையில் அவன் எவ்வாறு கூறுவான் அதிலும் கோவத்தில் அவரை திட்டியும் விட்டான்...

"என்ன புதுசா உதய் பத்தி எல்லாம் கேக்குறீங்க எப்பையும் உங்க பசங்கள பத்தி மட்டும் தான யோசிப்பிங்க"

அவன் கூறியதை கேட்டதும் அவருக்கு கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது அவன் கேட்பதும் உண்மை தானே விஷ்ணுவையும் ஹரியியும் பற்றியே எப்பொழுதும் யோசிப்பவர் உதய்யை பற்றி யோசிப்பது அரிதே... உதய்யின் தாயார் மறைந்த பிறகு அவன் தந்தை புதல்வர்களை அழைத்து தனியாக செல்வதாக இருக்கையில் நளினி தான் அவர்களை தன்னுடைய புதல்வரால் போல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அதை பின்பற்றவில்லை... இதற்கு காரணம் உதய்யின் ஒதுக்கம் ஒரு புறம் இருந்தாலும் அவன் வயதை காரணம் வைத்து அவனை அவ்வளவாக கவனிக்கவில்லை... இப்பொழுது அவனை காணாத இரண்டு வாரங்கள் அவரை பெரிதும் பதித்து இருந்தது... தினம் இரவு வந்து வீட்டையே சுற்றி அவரிடம் வந்து வீட்டிற்கு என்ன தேவை அவருக்கு எதாவது உதவி தேவையா சகோதரிகளுக்கு எதுவும் தேவையா என்று வொவொன்றையும் ஆழ்ந்து அலசியே படுக்கைக்கு செல்வான்...

உணவு மேஜையில் இருக்கும் பொழுது எவரேனும் ஒருவர் சரியாக உண்ணவில்லை என்றால் உடனே அவர்களுக்கு என்ன உணவு புடிக்குமோ அது அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெயன் மூலம் அவர்கள் முன் இருக்கும் இதை யாவரும் கவனிக்கவில்லை என்றாலும் நளினி கவனித்திருக்கிறார் ஆனால் அவனுடைய ஒதுக்கம் அவருக்கு அவன் தனிமையை விரும்புவதாக தெரிய விலகியே இருந்தார்...

"நா என்னடா ஆதவா பண்ணுவேன் அவன் தா எப்பையுமே தனி தீவா இருக்க ஆசை படுவான் அதுனால தள்ளியே இருந்தேன்" அழுதுகொண்டே பேசினார்... "பிள்ளைக்கு எதுவும் ஒடம்பு சரி இல்லையா சிரத்தையே இல்லாம பேசுனான்"

"வந்தேன்னு வைங்க கொமட்டுலயே குத்துவேன் இத்தனை நாள் எங்க போச்சு உங்க புள்ள பாசம் எல்லாம்..."

அவன் பேச பேச அவர் விசும்பிக்கொண்டே இருந்தார், "உங்களுக்கு அவனை பத்தி என்ன கேக்கணும்னு தோணுச்சுனாலும் அவன் கிட்ட டேரக்டா அவன்கிட்டயே கேட்டுக்கோங்க"

"அவன்கிட்ட பேச பயமா இருக்கு ஆதவா"

"பிள்ளை கிட்ட பேச என்ன பயம் வைங்க போன்-அ எனக்கு வேலை இருக்கு அப்றம் உங்க பையன் விஷ்ணுவை கொஞ்சம் அடங்கி இருக்க சொல்லுங்க இல்லனா மூஞ்சி அடையாளம் தெரியாத மாதிரி ஆக்கிடுவேன்"

'பயம் ஆம்ல பயம்' என்று அவரை திட்டிக்கொண்டே அலைபேசியை அனைத்துவிட்டான்

இங்கே உதய் வேளையில் மும்முரமாக உணவை கூட சரியாக எடுக்காமல் இருக்க அவனை பார்த்த யாழினிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது... இன்னொரு புறம் இவ்வாறு உணவிற்கு முக்கியம் இல்லாமல் வேலை பார்த்து எந்த கோட்டையை கட்ட போகிறான் என்று கோவம்... ஆனால் அவனிடம் இருந்த மாற்றத்தை அவளும் நன்றாக கவனித்தாள்... அவன் முகத்தில் இருக்கும் இறுக்கம் நீங்கி வெறுமை படர்ந்திருந்தது... அவளின் அசைவுகளை நோக்கும் கண்கள் கணினியின் திரையை தவிர வேறு எங்கும் அசைய மறுத்தது தன்னுடடைய ஏமாற்றத்தை மறைத்தவள் இன்றேனும் அவன் மத்திய உணவை உண்கிறானா என்று கடிகாரத்தை பார்க்க அது உணவு இடைவேளை அரை மணி நேரம் தாண்டி சென்றதை குறித்தது... இனியும் இவனை விட்டு வைக்க கூடாதென முடிவுடன் அவனுடைய அறைக்கு சென்றாள்...

அவள் வருவதை பார்த்தவன், "நல்ல வேலை வந்திங்க யாழினி நேத்து உங்கள ஒரு மெயில் அனுப்ப சொன்னேன்ல யு.ஸ் தாம்சன் கம்பெனிக்கு இன்னொரு மெயில் அனுப்பனும் அத உங்களுக்கு டாக்குமெண்ட்-அ சென்ட் பண்ணிருக்கேன் அத ஒன் டைம் ரிவைஸ் பண்ணிட்டு நாம போட்டு வச்சிருக்க பட்ஜெட்க்கும் இதுக்கும் எவ்ளோ டிஃபரென்ஸ் வருதுன்னு பாத்து சொல்லுங்க அப்றம் அந்த ப்ளூ பைல்ல..." இவனை விட்டால் இவன் பேசிக்கொண்டே செல்வான் என்று அறிந்தவள் அவனை நிறுத்தினாள்... எதை கூறினால் அவன் அமைதி அவனோ அதை கூறி நிறுத்தினாள் அந்த காட்டாற்றை...

"சார் எனக்கு பசிக்கிது" திரையில் இருந்து கண்களை உயர்த்தியவன், "ஓ நீங்க சாப்புடலையா சரி போய் சாப்பிட்டு வாங்க" என்று மறுபடியும் திரையில் கவனம் சென்றது....

அவனின் செயலில் கோபமுற்ற யாழினி அவன் அமர்ந்திருந்த பக்கம் சென்று மடிக்கணினியை மூடினாள் அதில் கோவம் அடைந்த உதய் அவளை பார்க்க, "நீங்களும் என் கூட சாப்பிட வரீங்க சார்"

புருவம் உயர்த்தி பார்த்தவன் அவள் கண்களில் இறைஞ்சுதலை கண்டு மனம் இறங்கினாலும் அவன் மூளை சொல்வதை கேட்டு, "இல்ல நீங்க போங்க எனக்கு பசிக்கல"

"இல்ல சார் நீங்க வந்த தான் நா சாப்புட போவேன்"

"பசிக்காம நா வந்து என்ன பண்ண போறேன் டைம் தான் வேஸ்ட் ஆகும் நீங்க போங்க"

"என் சார் இப்டி பொய் சொல்றிங்க எனக்கு தெரியும் சார் நீங்க நாலு நாளா ஒழுங்கா சாப்பிடல தூங்கலை... உங்க கண்ணு கூட எப்படி சிவந்திருக்கு பாருங்க கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க உங்க கண்ணனுக்கு"

"சரி இருங்க ஜெயன் கிட்ட ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்றேன்"

"இல்ல வேணாம் நாம வெளிய எங்கயாச்சும் போகலாம் வாங்க"

அவள் கண்களில் அவ்வளவு ஆசை... இதற்காக ஆவது வெளியில் அவளுடன் செல்ல ஆசை எழுந்தது அவனுக்கு... அவனும் கவனிக்கிறான் அவளை உள்ளே அவனிடம் எதாவது உதவி என்று வருபவள் அவனை ஒரு ஆவலுடன் பார்ப்பாள்... எதாவது பேச முயற்சித்துக்கொண்டே இருப்பாள் ஆனால் பதில் கூறும் நிலையிலோ உற்சாகமாக உரை நிகழ்த்தும் நிலையிலோ அவன் இல்லை அதனால் வெளியில் செல்லும் பொழுது அந்த சிறிய முகத்தில் படரும் சோக ரேகைகள்...

அது தன்னை பாதிக்க கூடாதென உறுதியாக இருந்தவன் இப்பொழுது அதே உறுதியை பிடித்து வைத்திருக்க முடியவில்லை அவன் ஆனந்தத்திற்காக அவன் மன நிம்மதிக்காக அவள் செய்யும் உதவிகளை ஏற்கவே மனம் துடித்தது...

"சரி வாங்க" என்று எழுந்தவன் தன்னுடைய சட்டையின் ஒரு பட்டனை கழட்டியவன் கையை மடித்து விட்டு வெளிய செல்ல யாழினி அவன் பின்னே அவன் வேகத்திற்கு இணையாக ஓடினாள் இவர்களை பார்த்த ஜெயன் உதய்யின் பின்னே வேகமாக வந்தான்...

"சார்"

"ஜெயன் நா சாப்புட போறேன் வரீங்களா?"

'பேசுவது உதய் தானா' என்னும் நோக்கில் ஜெயன் அவனை வியந்து பார்த்தான்...

"வாங்க ஜெயன்" என்று உதய் மின் தூக்கியை நோக்கி செல்ல வேறு வழி இன்றி ஜெயன் அவனுடன் செல்ல பின்னே யாழினி முகத்தில் ஒரு ஆனந்த பூச்சுடன் வந்தாள்.

"அய் அண்ணா நீங்களும் வர்றிங்களா? சூப்பர் வாங்க உங்க கூட ஒக்காந்து நா சாப்பிட்டதே இல்ல... உங்களுக்கு என்ன டிஷ் புடிக்கும்... எனக்கு பட்டர் சிக்கன் தா ரொம்ப புடிக்கும்..." உதய்யை பார்த்து, "சார் பட்டர் சிக்கன் ஒன்னு அப்றம் மெயின் டிஷ் பிரைடு ரைஸ் எனக்கு... அண்ணா உங்களுக்கு?"

'பட பட பட்டாசு' உதய் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்...

ஜெயன் உதய்யை பார்க்க அவன் சிரிப்புடன் கீழ் தளத்திற்கான பட்டனை அழுத்தி சாதாரணமாக நின்றான்...

"அண்ணா சொல்லுங்க" மேலும் அழுத்தினாள் யாழினி...

"நா சாப்டுட்டேன் மா"

"பொய் சொல்ராங்க சார், பாருங்க கண்ணு எப்படி பட படக்குதுனு"

"ம்ம்ம் அப்டியா ஜெயன்?" உதய் மறைத்து வைத்த சிரிப்புடன் கேட்டான் ஆனால் கண்கள் சிறு பிள்ளை போல் குற்றம் சாட்டிய யாழினியை பார்த்துக்கொண்டே இருந்தது...

"ஆமா சார் நா நீங்க சாப்பிட்டதும் தான் சாப்பிடுவேன்"

"சரி அப்ப நல்லது தான் எல்லாரும் சாப்பிடலாம்... ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் பாருங்க தூரமா இருந்த கூட பரவால்ல"

"இல்ல சார் பக்கத்துல ஒரு புது பைவ் ஸ்டார் ஹோட்டல் ஓபன் பண்ணிருக்காங்க நல்ல இருக்குனு கேள்வி பட்டேன் அங்க போகலாம்"

"ஐயோ பைவ் ஸ்டார்ட் ஹோட்டல் எல்லாம் வேணாம் எனக்கு ஒரு கடை தெரியும் அங்க போகலாமா" - யாழினி கேட்டால் உதய்யிடம்

"இல்ல மேடம்..."

"ஐயோ அண்ணா என்ன மேடம் எல்லாம் கூப்புடாதிங்க யாழினி-னு பேர் சொல்லியே கூப்புடுங்க அப்ப தா அந்நியமா தெரியாது பாருங்க"

"ஹோட்டல் பேரு சொல்லுங்க யாழினி"

மின் தூக்கியில் இருந்து வெளி வரும் பொழுது உதய் கேட்க அவள் அந்த கடையின் பெயரை கூறி அவனை பின் தொடர்ந்தாள்... இவர்களுக்கு பின்னால் வந்த ஜெயனுக்கு ஆச்சிரியத்திற்கு மேல் ஆச்சிரியமாக இருந்தது எவருடனும் அதிகம் ஒட்டாத இவன் எவ்வாறு இவளுடன் இவ்வளவு குறுகிய காலத்தில் அதுவும் பெண்களிடம் தன்னால் முடிந்த அளவிற்கு இடைவெளியை கடை பிடிப்பவன் இவளுடன் சகஜமாக பேசுவது அவளுக்கு உணவு வாங்கி தருவது, கம்பெனி ரூல்ஸ்ல் இல்லாத புது விதியாய் அவளுக்கு வாகனம் ஏற்பாடு செய்வது, வந்த பத்து நாட்களில் முன் பணம் தருவது என்று சலுகைகள் ஏராளம் அதுவும் அவளுக்கு மட்டுமே... பத்து நாட்கள் அவனுடைய அறையை விட்டு வராதவன் இன்று அவளுடைய ஒரு வேண்டுகோளுக்காக வந்திருக்கிறான்... அதற்கு காரணம் என்னவாக இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை அவனுடைய சார் நீண்ட நாட்களுக்கு பிறகு மத்திய உணவு உண்ண போகிறான்... அதற்காக யாழினிக்கு மனதார மானசீகமாக நன்றி கூறிக்கொண்டான்...

ஜெயன் ஓட்டுனருக்கு சைகை செய்து வண்டியை எடுக்க கூற அவனை தடுத்த உதய் அவனே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கதவை அடைத்தான்...

"சார் நீங்க என் ஓட்டுரிங்க நா வண்டி எடுக்குறேன்"

"இல்ல ஜெயன் ஏறுங்க டைம் இல்ல"

"சார் இது ரோல்ஸ் ராய்ஸ் கார் தான?"

பின் இருக்கையில் அமர்ந்த யாழினி மிக மிக மெதுவாக கதவை சாற்றி அந்த காரை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்... அந்த கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி... முன் கண்ணாடியில் அதை பார்த்த உதய்க்கு இந்த காட்சிக்காகவே இது போன்ற பல புது கார்களை வாங்க தோன்றியது...

"ம்ம்ம்ம்ம்" என்றான் வண்டியை சாலையில் பாய்ச்சி

"குண்டு ஊசி போட்ட கூட கேக்காதாமே சார்" இருக்கைகளை மெல்ல வருடியவள், "ரொம்ப சாப்ட்-ஆ இருக்கு சார்... எவ்ளோ வரும் இந்த கார்"

"11 C"

"ஆத்தி" வாயை பிளந்தாள் யாழினி... இதை பார்த்த ஜெயனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...

"சார் கேக்குறேனு தப்பா நெனச்சுக்காதீங்க ஒரு நூறு கோடி இருக்குமா உங்க சொத்து?" அவள் கேள்வியில் எந்த கள்ளம் கபடமும் இல்லை

"ம்ம்ம்ம் இருக்கும்" என்றான் சிறு புன்னகையுடன் ஆனால் இவர்கள் மதிப்பில் அந்த நூறு கோடி ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும்

அவள் கேள்வியிலேயே இருக்க உதய் அவள் கூறிய கடையின் முன்னே வண்டியை நிறுத்தினான்... அது ஒரு சாதாரணமான கடை சிறிதும் இல்
லை பெரிதும் இல்லை ஆனால் கடையினுள் இருந்து வந்த மனம் கால்களை கட்டி இழுத்தது... காரை விட்டு இறங்கியவள் யாருக்காகவும் நிற்க வில்லை விறு விறுவென உள்ளே சென்றாள்...
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

"சார் நா வேற ரெஸ்டாரண்ட் பாக்கவா?" கேட்டான் ஜெயன் அந்த கடையை நோட்டம் விட்டபடியே, கடையில் கூட்டம் வழிந்தோடியது உள்ளே உண்ண கூட இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்கு அதை விட உதய் இது போன்ற இடத்திற்கெல்லாம் வந்ததே இல்லை எப்பொழுதும் பெரிய பெரிய உணவகத்திற்கு மட்டுமே செல்லும் பழக்கம் கொண்டவன் அதை விட அவன் தொழில் அவனை அவ்வாறு இருக்க வைத்தது என்று கூறலாம்...

"கார் பார்க் பண்ணியாச்சுல, வாங்க போகலாம்" என்று அவனுடைய பேச்சை அலட்சிய படுத்தி தன்னுடைய வால்ட்டை எடுத்து அதில் போதுமானளவு பணம் உள்ளதா சென்று உறுதி செய்து உள்ளே சென்றான்...

"பசங்க எல்லாரையும் சாப்பிட சொல்லுங்க ஜெயன்"

"சரி சார்"

உதய் உள்ளே சென்றதும் யாழினியின் குரல் அங்கு உள்ள மொத கடையின் கவனத்தையும் இருந்த அதனை ஒளியையும் தாண்டி கேட்டது, "சார் இங்க வாங்க" கையை மேலே தூக்கி காட்டினாள் தனக்கு அருகில் உள்ள ஒரு இருக்கையை பிடித்துக் கொண்டு... சத்தமாக பேசுவதையே பொறுக்காதவன் இன்று சிரிப்புடன் அவள் கூறிய இடத்திற்கு சென்று அவள் அருகில் அமர்ந்து கடையை நோட்டம் விட்டான்... இளம் மஞ்சள் நிற வண்ணம் பூச பட்டிருந்த சுவர்களில் பல கறைகள்... அவன் அமர்ந்திருந்த நாற்காலியும் ஒரு புறம் ஆடிக்கொண்டு இருந்தது... கையை நாடியில் வைக்க நினைத்து அந்த டேபிளை பார்த்தவன் அது இருந்த கோலத்தை பார்த்து யாழினியை பார்க்க அவள் மும்முரமாக தனது பையில் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள்...

"இங்க டேபிள் எல்லாம் துடைக்க மாட்டாங்களா?"

சட்டென அவள் டேபிளை பார்க்க இவர்களுக்கு முன்னாள் உணவிருந்தி சென்றவர்கள் விட்டிருந்த சாதம் குழம்பு எல்லாம் அப்படியே இருந்தது... சங்கடத்துடன் அவனை பார்க்க விரும்பாதவளாய்... "அண்ணா" அங்கே வேலை பார்த்தவர்களை கத்தி அழைத்தாள்...

"அண்ணா இந்த டேபிளை கிளீன் பண்ணல இன்னும்"

"இந்த வந்துட்டேன் யாழினி" என்று ஒருவர் வந்து துடைத்துக்கொண்டே, "தம்பி யாருமா, தோஸ்தா?"

'ரெகுலர் கஸ்டமர் போல' - உதய்

"இல்ல ண்ணே இவரு என்னோட பாஸ்"

"ஓ தம்பி என்ன கடை வச்சிருக்கீங்க" என்றார் அவர் எந்த தயக்கமும் இன்றி... அவர் கேட்டதில் சிரித்த யாழினி, "அண்ணா அது கடை இல்ல பெரிய பேக்டரி மாதிரி இருக்கும்"

பிறகு இருவரும் உணவை ஆர்டர் செய்ய ஜெயன் மற்றும் அவனுடைய மற்ற கார்ட்ஸ் சற்று தள்ளி அமர்ந்தனர்... அனைவர்க்கும் ஆச்சிரியம் உதய்யின் இந்த புது செயல்...

உணவை ஆர்டர் செய்து காத்திருக்க யாழினி மட்டுமே பேசினாள் உதய் கேட்க மட்டுமே செய்தான் ஏனோ அந்த பேச்சு அவனுடைய மனதிற்கு அமைதியை வரி வரி கொடுத்தது... அவன் கண்களுக்கு அவள் ஒரு அழகிய பதுமையாய் தெரிந்தாள் அதற்கு அழகு சேர்க்கும் விதமாக பேசும் பொழுது சிரிக்கும் அந்த சிவந்த இதழ்கள், வசீகரிக்கும் கண்கள் என்று அவனின் மனதை பெரிதும் சலனப்படுத்தியது... சாதாரண பெண் தான் ஆனால் அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு அவனுக்கு அந்த வெள்ளந்தியான மனதை பார்த்து...

"இந்த கடைக்கு எங்க வீட்டுல தெரியாம அடிக்கடி வருவேன் சார் கடை ஓனர் அப்பா ஓட பழைய பிரன்ட் இணைக்கு அவரு இல்ல போல... இங்க இருக்க பிரியாணிக்கு அவ்ளோ மவுசு சும்மா ஜொள்ளு வழிய வழிய சின்ன வயசுல சாப்பிடுவேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க இப்ப வரைக்கும் அந்த டேஸ்ட் அப்டியே இருக்கு சாப்பிட்டு பாருங்க இனி இந்த கடைய தவற வேற எந்த கடைக்கும் போக மாட்டீங்க... உங்க வீட்டுல இருக்க எல்லாத்தையும் இங்க ஒரு நாள் கூட்டிட்டு வாங்க நா டிஸ்கவுண்ட்-கு பேசி ஏதாச்சும் வாங்கி தரேன்"

"பட்டாசு கொஞ்ச நேரம் கம்முனு இருந்த யாழினி மூச்சு வாங்க வேணாம்" என்றான் கிண்டலாக உதய்...

"சார் பேசாம இருந்தேனா எனக்கு மண்டைக்குள்ள என்னமோ பண்ண ஆரமிச்சிடும் வீட்டுல தங்கச்சி பேசாம இருப்பா அதுனால அம்மா என்னைய தான் பேச சொல்லுவாங்க அப்ப பேச ஆரமிச்சது இப்ப வரைக்கும் மூட முடியல... சரி சொல்லுங்க எத்தனை பேர கூட்டிட்டு வருவீங்க டிஸ்கவுண்ட் பத்தி அங்கிள் கிட்ட பேசுறேன்"

"எது டிஸ்கவுண்ட் வாங்கி தர்றியா?" என்றான் புருவங்களை வளைத்து சிறு சிரிப்புடன்...

"ம்ம்ம் ஆமா சார்" என்றாள் அதே தீவிரமான முக பாவத்துடன்...

"எவ்ளோ டிஸ்கவுண்ட் வரும் என்கிட்டையும் காசு கம்மியா தான் இருக்கு" அவள் வழியிலேயே சென்றான்...

"டென் பெர்ஸன்ட் வரைக்கும் வாங்கி தருவேன் அதுக்குமேல எல்லாம் கேக்க முடியாது... என் பில்ல நானே கட்டிருவேன் உங்க பில்க்கு மட்டும் நீங்க கட்டுங்க எனக்கு சலரி வந்ததும் உங்களுக்கு ஒரு நாள் என் ட்ரீட் அப்ப வேற கடைக்கு போகலாம் அது கிண்டில இருக்கு அங்க இருக்க ஷவர்மா வேற லெவல்ல இருக்கும் அதுல அப்டியே அவங்க குடுக்குற மயநீ..." பேசியவளின் கண்களும் இதழ்களும் உரைத்தன அவள் கண்ட காட்சியில்...

சிரித்துக்கொண்டே அவள் பேசியதை கைபேசியை பார்த்துக் கொண்டே கவனித்த உதய் அந்த அமைதிக்கான காரணத்தை அறிய தலையை நிறமிர்த்தியவன் கண்டது அவனுக்கு முன்னே அவர்கள் ஆர்டர் செய்திருந்த பிரியாணி, ரைஸ், மற்றும் பட்டர் சிக்கன் எல்லாவற்றையும் ஒரு இளம் வயது பெண் அடுக்கினாள்... அவன் யாழினியை பார்க்க அவள் முகம் கறுத்து காணப்பட்டது... ஏதோ பெரிதாய் அதிர்ச்சியை சந்தித்தது போலெ உணர்ந்தான் அவன்...

"எதுவும் பிரச்சனையா"

அவனது குரலில் நினைவு பெற்றவள் தலையை குலுக்கி, "இல்ல சார் நா இப்ப வர்றேன்" அந்த குரலில் சுரத்தையே இல்லை அவள் எழுந்து செல்ல அவளையே பார்த்தவன் அவள் பின்னே சென்றான் ஜெயனுக்கு சைகை செய்து...

வேகமாய் சமையல் அறையை நோக்கி ஓடியவள் அதை தாண்டி பின்னே இருந்த குடோன் இருந்த இடத்திற்கு செல்ல அங்கே அவள் சகோதரி குழலினி தன்னுடைய சுடிதாரின் மேலே அந்த கடையின் பெயரை தாங்கிய பனியனை அணிந்து சில சாமான்களை அடுக்கிக்கொண்டிருந்தாள் தெளிவாக தெரிந்தது அவளுக்கு தன்னை பார்க்க மறுத்து அவள் கண்களை பார்க்க தவறிய தங்கையை மெதுவாக வலி நிறைந்த குரலில் அழைத்தாள்...

"குழலு"

அதில் வந்த நடுக்கத்தை பார்த்த உதய்க்கு ஆச்சரியம் இவ்வளவு நேரம் தன்னுடன் வளவளத்த பெண்ணா இவள்? நிமிடத்தில் மாறிவிட்டாளே...

"வேலை இருக்கு அக்கா நா வீட்டுக்கு வந்து பேசுறேன்" என்றாள் அவள் யாழினியை பார்க்காமலே...

அவள் கையை பிடித்து திருப்பிய யாழினி, "குழலு நீ காலேஜ் போகலையா?" இன்னும் அவள் வார்த்தையில் கவலை நீண்டு கொண்டே சென்றது...

"அக்கா நா தான் சொல்றேன்ல வீட்டுல போய் பேசிக்கலாம் கா ஓனர் பாத்தா திட்டுவாங்க"

"குழலு கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு காலேஜ் போகலையா?"

"இல்ல"

"ஆனா ஏன்... அப்பா சேத்து விட்டாரா இங்க?"

"இல்ல கா நானா தான் சேந்தேன்... ஆனா அப்பாக்கு தெரியும் நா இங்க வேலை பாக்குறது"

"ஏன் அவரு இப்புடி பண்ணுறாரு" வழிந்த கண்ணீரை துடைத்து, "சரி நீ வா இனி இங்க வேலை பாக்க வேணாம் நீ"

"அக்கா வேலை பாக்கவேணாம்னா சாப்டுக்கு நாம என்ன பண்றது? உன் கல்யாணம் நடந்த அதுக்கு செலவுக்கு கூட நமக்கு காசு இல்ல"

"அத பத்தி நீ கவலை படாத குழலு நா பாத்துக்குறேன்... எனக்கு கல்யாணம் கூட வேணாம் நீ படிக்கணும் குழலு"

"அக்கா நா படிச்சு இப்ப என்ன ஆகா போகுது சொல்லு உனக்கு இப்பையே 24 வயசு ஆகிடுச்சுனு அம்மா ரொம்ப பீல் பண்ணுனாங்க அதுவும் இல்லாம பேங்க்ல மாசம் முப்பத்தி அஞ்சு ஆயிரம் கடனும் அது இல்லாம வெளிய வாங்குன கடன் வேற... கொஞ்சம் கஷ்ட படுறேன் கா நானு அப்ப தன் உன் லைப் நல்ல அமையும்"

"என்னடி பெரிய மனுசி மாதிரி பேசுற ரெண்டு காசு சம்பாதிச்சிட்டா உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுமா... என்ன தெறியும் உனக்கு இந்த உலகத்தை பத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறேன்னு சொல்லிட்டு உன் வாழ்க்கையை நீ பாலாகிக்க போறியா? எவன் உன்ன கல்யாணம் பணிக்குவான் படிக்காம இருந்தா? எனக்கு என்ன வயசு 24 எல்லாம் ஒரு வயசா? நா சம்பாதிக்கிறது எதுக்கு உன்ன இப்புடி தட்டு கழுவ வைக்கிறதுக்காகவா? இல்ல குழலு... நீ நல்லா படிக்கிற பிள்ளை உன்ன இப்புடி பாக்குறது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா... அம்மா உன்ன நல்ல நிலமைல பாக்கணும்னு எவ்ளோ அசைய இருக்காங்க தெரியுமா... உன் வாழ்க்கையை அழிச்சு கிடக்கிற வாழ்க்கை எனக்கு வேணாம்... மொத மாசம் சம்பளம் வந்ததும் உன்ன அந்த பார்ட் டைம் வேளைக்கு கூட போக வேணாம்னு சொல்லணும்னு நெனச்சேன் ஆனா அதுக்குள்ள உன்ன இப்புடி பாப்பேன்னு கனவுல கூட நெனச்சு பாக்கல... எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நான் பாத்துக்குறேன் நேரா அறுபதாவது கல்யாணம் கூட பண்ணிக்கிறேன் ஆனா நீ உன் படிப்பை மட்டும் நிறுத்தாத குழலு எனக்காக இத ஒன்னு மட்டும் பண்ணு... அப்பாக்கு காசு தான குடுக்கணும் நா வேற வேலை பாத்து கூட அவருக்கு காசு குடுக்குறேன்"

"அக்கா ஏன் கா இப்புடி எல்லாம் பேசுற நாம ரெண்டு பெரும் சேந்து வேலை பாத்தா கடன் எல்லாம் சீக்கிரம் அடைச்சிடலாம் அப்றம் வாரம் வாரம் வீட்டுக்கு கடன் காரங்க வர மாட்டாங்க நிம்மதியா இருக்கலாம் கா... ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற? என்னால இத்தனை பிரச்சனையை வச்சுக்கிட்டு படிக்கச் முடியல ஒரு படத்துல ஃபெயில் கூட ஆகிட்டேன்... எனக்கு படிப்பு வராதுகா இனிமேல்"

யாழினிக்கு உயிரே போவது போல் வலித்தது... இதனை நாட்கள் விளையாட்டாகவே இருந்ததற்காக தன்னையே தண்டிக்க தோன்றியது... ஒரு வருடம் முன்னர் வேளைக்கு சென்றிருந்தால் இன்னேரம் சகோதரியின் வாழ்க்கை இந்த நிலையில் இருந்திருக்காதல்லவா?

உறுதியாக நிற்கும் சகோதரியிடம் இறுதி முயற்சியாக அவள் முன்னே சுற்று புறம் பார்க்காமல் மண்டியிட்டு அவள் கால்களை தொட்டு, "உன் கால புடிச்சு கெஞ்சி கேக்குறேன்"

பதறிய குழலினி யாழினிக்கு சரி சமமாக மண்டியிட்டு அவள் கைகளை பிடித்து அழுதுகொண்டே, "என்ன கா இது எல்லாம் கால்ல விழுகுற கஷ்டமா இருக்கு கா"

"வேலைய விற்று குழலு நா இன்னும் கொஞ்ச நாள்ல ஆபீஸ்ல லோன் ஏதாச்சு அப்ளை பண்றேன்... இன்னும் ஒரு வருஷம் தான படிப்பு அப்றம் நீயும் படிச்சதுக்கு ஏத்த வேளைக்கு போ அப்ப நா உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்... வீட்டுக்கு போடி கெஞ்சி கெடுக்குறேன்... இல்ல பிச்சை கேக்குறேனு வச்சுக்கோ... அம்மா கேட்டாங்கனா துடிச்சிடுவாங்க"

"அக்கா ஆனா..."

"பேசாத குழலு வீட்டுக்கு போ இல்லனா நா வீட்டு பக்கமே வர மாட்டேன் எனக்காக யாருமே கஷ்ட பட வேணாம்" இறுகிய குரலில் கூறியவள் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அசைத்து பார்த்தது குழலினியை...

"நா ஓனர் கிட்ட சொல்லிட்டு போறேன்"

"வேணாம் நா பாத்துக்குறேன் நீ போ"

தலையை அசைத்தவள் அங்கிருந்து செல்ல அருகில் இருந்த சிங்க்ல் முகத்தை கழுவி உதய் இருந்த இடத்திற்கு சென்றாள் எப்பொழுதும் போல் முகத்தை வைத்துக் கொண்டு... அவளை கண்ட உதய்க்கு தான் மனம் சுருங்கியது எவ்வளவு எளிதாக வெளியில் சிரிக்கிறாள்... சொல்லபடாத பல வலிகளை உள்ளே மறைத்து வைத்து அதில் தவிக்கும் இதயத்தை என்ன கூறி சமாளிப்பது? அவளை பார்க்கும் பொழுது அவனுக்கு அந்த எண்ணம் மட்டும் தான் வீட்டில் ஒரு ஆண் மகனின் துணை இல்லாமல் அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை பரிதவிக்கும் நிலையே...

குடும்பத்தின் நிலையை அறிந்து அவள் துடிப்பது, சகோதரியின் காலில் அவளின் எதிர்காலத்திற்காக விழுந்தது, தனக்காக தன் சகோதரி வாழ்க்கை அழிவதை பார்த்து திருமணமே வேண்டாம் என்று கூறும் அவள் சொல்லில் இருந்த வழியும், வேதனையும், உண்மையும் அவனுக்கு சிலிர்ப்பை தந்தது...

அவளின் செய்கை வொவொன்றும் அவனின் இதயத்தில் ஆனந்தமாகவும், வலியுடன் கூடிய சுகத்திலும் அவள் இடம் பிடித்திருக் கொண்டிருந்தாள் அவளுக்கே தெரியாமல்...

அந்த குறும்பிலும் இருந்த பக்குவம் அவனுக்கு பிடித்திருந்தது... இப்பொழுது தனக்கு முன்னே அமர்ந்திருந்த யாழினி உணவை பார்த்து இன்முகத்துடன் எடுத்து ஒரு வாய் சாப்பிட திடீரென நியாபகம் வந்தவளாய் நிமிர்த்து அவனை பார்த்தாள்... இவள் சற்று நேரத்திற்கு முன்னே நடந்ததை மறந்து விட்டாளா இல்லை மறைத்து விட்டாளா என்ற சந்தேகம் அவனுக்கு...

"புடிக்கலயா சார்?" தான் ஏதோ பெரிய தவறு செய்தது போல் கேட்டாள், அவனை அழைத்து வந்து அவனுக்கு விருப்பம் இல்லாததை செய்தது போல் நினைத்திருந்தாள்...

அவள் கேள்வியில் சிரிப்பு வர பார்க்க... முகத்தை திருப்பி தொண்டையை செறுமியபடி நிதானித்து கொண்டான், "டிஸ்கவுண்ட் வாங்கி தரேன்னு சொன்னிங்க எவ்ளோ பண்ண முடியும்?"

"ஏன் சார் ரொம்ப மோசமாவா இருக்கு?" ஒரு சோகத்துடன் கேட்டவள் அவன் தட்டில் இருந்த உணவை எடுத்து ஒரு வாய் உண்ண கணைகள் மூடி அதை ரசித்தாள் சிறு முணங்களுடன், "சார் அப்டியே டேஸ்ட் நாக்குல கரையிது... இது உங்களுக்கு புடிக்கலயா?" இறுதிரில் இருந்தது செல்ல கோவம் மட்டுமே...

"சரி சரி சும்மா சொன்னேன் சாப்பிடுங்க இணைக்கு என்னோட ட்ரீட்-னு வச்சுக்கோங்க. ஒகேவா"

அவன் கூறியதில் நெளிந்தவள், "இல்லை சார் ஆல்ரெடி நீங்க எனக்கு தோசை வேற வாங்கி தந்திங்க அதுக்கே நா இன்னும் காசு தரல இதுல நீங்க இது வேற வாங்கி தர வேணாம்"

"சேத்து ஒரு நாள் நீ எனக்கு தருவ" பன்மையில் வந்த சொற்கள் இப்பொழுது ஒருமையில் வந்தது அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை... ஆனால் அவனின் நெஞ்சில் அவள் ஒரு உரிமையுள்ள இடத்தில் குடியேறினாள்...

"போகலாமா?" தலையை அசைத்து அவள் வெளியே சென்று விட்டாள்... இந்த ஒரு சிறிய இடைவேளை அவனுக்கு தேவைப்பட்டது அதை அழகாய் அவள் நிரப்பி இருந்தாள் அவன் மனம் குளுர...

ஜெயனுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்று சேர ஆடி தீர்த்தது... இந்த இடத்தை பார்த்தவுடன் ஓடி விடுவான் என்று நினைத்தால் அவன் உணவை ஒரு கை மிச்சம் வைக்காமல் ரசித்து ரசித்து உண்டது, அவளுடைய கதைகளை முகம் சுளிக்காமல் கேட்டது அவனுடைய புதியதொரு பரிமாணம் பளிச்சிட்டு நின்றது கண்முன்னே...

உதய் ஜெயனை பார்க்க அவன் உதய்யை நெருங்கி வந்தான், "யாழினி பத்தி தெரியுமா ஜெயன்?"

"ஹல்ப் அன் ஹௌர் சார்"

வெளியில் அவன் செல்ல யாழினி கையை பிசைந்து முகம் சிவக்க சங்கடத்தில் நின்றிருந்தாள் அவளை கேள்வியாய் பார்த்தவன் 'என்ன' என்று புருவம் உயர்த்த, "எனக்கு இணைக்கு லீவு கிடைக்குமா சார்?" ஆதுரமாய் கேட்டாள் தயக்கமாக...

உதய்யின் கண்கள் அவள் பின்னே செல்ல அங்கே அவள் தங்கை ஒரு கடைக்கு அருகில் நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள்... நிலைமையை புரிந்து உதய் அனுமதி பெற்று அவள் சிட்டாக பறந்துவிட்டாள்...

உதய் வண்டியில் ஏறி அமர சிறிது நேரம் கழிந்து ஜெயன் வந்து வண்டியை கிளப்பினான் அவளுடைய ஜாதகத்தோடு, "அவங்க கூட பொறந்தது தங்கச்சி சார், அப்பாக்கு பிஸ்னஸ்ல நெறய லாஸ் ஆகிருச்சு, இப்ப வரைக்கும் கடன்-அ அடக்க முடியல, அம்மா கவர்மன்ட் டீச்சர், யாழினி கூட நிறைய பார்ட்-டைம் ஜாப் பாத்துருக்காங்க வீட்டுக்கு தெரியாமல்... அவங்க அப்பா பிசினஸ் பத்தி இன்னும் டீடெயில்ஸ் நாளைக்கு ஈவினிங் கைல கிடைக்கும்..."

"வீட்டை சுத்தி ஒரு ரெண்டு பேர் போடுங்க ஜெயன்"

"போட்டுட்டேன் சார்"

"கெஸ்ட் ஹவுஸ்க்கு வண்டிய விடுங்க ஜெயன்"

வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் கேள்வியாய் உதய்யை பார்க்க அவன் ஆழ்ந்த யோசனையுடன் வழக்கமாய் செய்யும் வெளியில் தெருவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்... "சார்ர்ர்ர்"

"ம்ம்ம்"

"உங்க சித்தி கூப்டாங்க சார்"

"கெஸ்ட் ஹவுஸ் வழி தெரியாத ஜெயன்"

"இல்ல சார் விஷ்ணு சார் கூட உங்கள பத்தி கேட்டாரு"

"வண்டிய நிறுத்துங்க" உத்தரவாய் கடுகடுத்த குரலில் ஆணையிட்டான்...

அந்த குரலில் உறைந்த ஜெயன் வண்டியை நிறுத்தினான்... வண்டியின் வேகம் கூட குறையவில்லை சட்டென இறங்கியவன் எதிரில் வந்த ஒரு வண்டியை நிறுத்தி அதில் ஏறி சென்றுவிட்டான்...

இதுவரை உதய் கோவப்பட்டு பார்த்திராத ஜெயனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒரு நாள் கூட இந்த கோவம் அவனிடம் இருந்தது இல்லை ஆனால் விஷ்ணுவின் பெயரை கேட்டதும் எதற்காக இந்த கோவம்???

தனக்கு அருகில் இருந்த அலைபேசியை எடுத்தவன் காதில் வைத்து, "சார் இருக்கீங்களா?"

"ம்ம்ம் இருக்கேன் ஜெயன்... எனக்காக அண்ணன் கூட இருங்க... அவன் என் மேல கோவமா இருக்கான்... அவனா தான் இனி வீட்டுக்கு வருவான்... என்ன இது வரைக்கும் அவன் அப்டி பண்ணதே இல்ல வழக்கத்தை விட ரொம்ப பேசிட்டேன்... பாத்துக்கோங்க" என்று அணைப்பை துண்டித்தான்...

'எதற்
காக இந்த வீம்பு சண்டை? இருவருக்கும் இருக்கும் பாசம் மலை அளவு ஆனால் வெளி காட்டும் விதம் கடுகளவு' என்று வண்டியை உதய் சென்ற வண்டியின் பின்னாலே செலுத்தினான்...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Aadhai sir negga unga frd kuda pesama poediga 😁😁
Yazhini cha avaloda manasula evaluyu kastam iruku sikirama Namma udhai athalam sari panniduvan😌😌 udhai Vishnu pesama iruthalum pasam romba iruku 😍😍
 
Messages
37
Reaction score
4
Points
8
Aadhai sir negga unga frd kuda pesama poediga 😁😁
Yazhini cha avaloda manasula evaluyu kastam iruku sikirama Namma udhai athalam sari panniduvan😌😌 udhai Vishnu pesama iruthalum pasam romba iruku 😍😍
amaa pasam rombave athigama dhaan iruku. udhai and aadhi kandipaa pesuvaanga. and udhai yazhini avlo sikiram sera matangale
:( :(
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அட பயபுள்ள யாழினிய லவ் பண்ணுறான் 😃😃😃😃😃😃
 
Top