• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 7 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் – 7


"என்னடா இந்த ப்ராஜெக்ட் இன்னும் சைன் ஆகாம இருக்கு?" தன்னிடம் கொடுத்த பைலை பார்த்துக்கொண்டிருந்த ஹரி விஷ்ணுவிடம் வினவ அவனோ மும்முரமாக கைபேசியை விளையாடிக் கொண்டிருந்தான், "டேய் கொஞ்ச நேரம் கம்முனு இருடா" என்று மீண்டும் விளையாட சென்றவனின் கைபேசியை வாங்கி ஓரமாக வைத்தான் ஹரி.
கோவத்தில், "எரும மாடே குடுடா அத" விஷ்ணு கேட்க, "அத விடு இத மொத பாரு" என்று அவன் பார்த்து கொண்டிருந்த பைலை விஷ்ணுவிடம் திணிக்க அதை பார்த்தவனின் நெற்றி சுருக்கத்தில் அவனுக்கும் அது புரிய வில்லை என்பது தெரிந்தது.
அது ஒரு மிக பெரிய ப்ராஜெக்ட். ஜவுளி துறையில் வெற்றியடைய உதய் இத்தனை நாட்களாக காத்து கொண்டிருந்த திட்டம். வாகனங்களின் உதிரி பாகங்களை தயாரிப்பதில் முதல் இடத்தில் இருக்கும் அவனது கம்பெனியை ஒவ்வொரு துறையாக மேம்படுத்தி கொண்டிருந்தான் உதய். அதில் சற்று பின் தங்கி இருப்பது ஜவுளி துறை மட்டுமே. அதற்காக அவன் கடந்த ஒரு வருடமாக உழைக்கும் ப்ராஜெக்ட் தான் இது. மேலை நாடுகளுக்கு ஜவுளி எற்றுமதி செய்யும் திட்டம். இதை அவன் கை பற்றுவதற்கு தடையாகவே நடக்கும் சதி திட்டம் இது.
"இது கெடச்சிரும்னு ரொம்ப நம்புனாண்டா அண்ணே. அதுக்காக நாம எம்ப்லாயீஸ்கு பார்ட்டிலாம் வச்சானேடா. இன்னும் இந்த டீல்ல சைன் பண்ணாமையா இருக்கு?"
விஷ்ணு ஆச்சிரியமாக கேட்க, "அது தான்டா எனக்கும் ஆச்சிரியமா இருக்கு. எதையும் இப்டி லேட் ஆகுறவன் இல்லையே அண்ணா. வா ஜெயன்ட்ட கேப்போம்" என்று வெளியே சென்றவர்களை இடை மறித்தது ஒரு குரல்.
"மாப்பிள்ளை?" அமர்த்தலாக வந்தது அந்த குரல்.
மாப்பிள்ளை என்னும் அழைப்பிலேயே பாதி யூகித்த விஷ்ணு முக மலர்ச்சியோடு குரல் வந்த திசை நோக்க அங்க நின்றார் ஈஸ்வரன். விஷ்ணுவின் பாசத்திற்குரிய தாய் மாமன். காயத்திரியின்(உதய், விஷ்ணுவின் தாய்) உடன் பிறந்த சகோதரர். தங்கையின் குணத்திற்கு எதிர் மாறாக பிறந்தவர்.
உறவுகளை அனுசரிக்கும் எண்ணம் என்றுமே அவருக்கு இருந்தது இல்லை. நரியின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியும், கண்களில் குரூரமும் காண படுபவர். தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தங்கை கணவருக்கு நல்ல பிள்ளையாக நடந்து சிறிது சிறிதாக தொழிலும் நுழைத்து விட்டார்.
"மாமா எப்ப வந்திங்க இந்தியாக்கு?" பாசத்தில் அவரை நோக்கி ரெண்டு அடி வேகமாய் எடுத்து இறுக்க அணைத்து கொண்டான் விஷ்னு.
"நேத்து தான் மாப்பிள்ளை வந்தேன். என்ன மாப்பிள்ளை துரும்பா எளச்சு போயிட்ட?" என்று மேலும் கீழும் தன் பாச மருமகனை பார்த்தார்.
"மாமா நானா எளச்சு போயிருக்கேன் பாருங்க நல்லா ஜிம்கு போய் பாடி பில்டு பண்ணி வச்சிருக்கேன், இது ஆர்ம்ஸ் மாமா" என்று தனது புஜங்களை அவரிடம் காண்பித்தான்.
அவனை ரசித்து பார்த்தவர், "என்ன இருந்தாலும் நீ எளச்சு தா போயிருக்க மாப்பிள்ளை. என்ன வீட்டுல ஒழுங்கா கவனிப்பு இல்லையா?" என்று இறுதி வரியை ஹரியை நோக்கி பேசியவறை, விருப்பம் இல்லா பார்வையை அவர் மீது வீசி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான் ஹரி.
ஹரி சென்றதை பார்த்து, "ஏன் மாமா இப்டி பேசுனீங்க அவன் முன்னாடி? சித்தி மாதிரி என் அம்மா இருந்த கூட இன்னேரம் பாத்துருக்க முடியாது. நாங்க ஒன்னும் சித்தி பசங்க பெரியம்மா பசங்க மாதிரி பழகல. அவன் என் கூட பொறந்தவனுக்கும் மேல... என்னோட சித்தி என்னோட அம்மாக்கு சமம்" அழுத்தமாய் அடி குரலில் இருந்து தனது எதிர்ப்பை தெரிவித்தான்.
ஒரு நொடி தன் முன் நிற்பது விஷ்ணுவா இல்லை உதய் மாதவனா என்ற சந்தேகம் பிறந்தது அவன் குரலில்.
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, "அட என்ன மாப்பிள்ளை சும்மா சொன்னா சின்ன மாப்பிள்ளை கோச்சுக்குறான் அத போய் நீயும் பெருசா எடுத்துக்காத. அப்றம் என் பொண்ணு என்ன சொல்றா? எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்?"
அவரது கேள்வியில் நெளிந்தவன், "இப்ப எதுக்கு மாமா அத பத்தி, அதி படிக்கட்டும் அப்றம் பேசிக்கலாம்" என்று பேச்சை மழுப்பினான்.
ஈஸ்வரனின் ஒரே புதல்வியின் பெயர் தான் அதிதி. விஷ்ணுவை விட நான்கு வயது இளையவள். அவளை எவ்வாறேனும் உதய்க்கு திருமணம் செய்து வைக்க நினைத்தவர் அவனுடைய சாதுர்யத்தையும், யாரிடமும் ஒட்டாது இருக்கும் குணத்தையும் பார்த்து விஷ்ணுவை மாற்றினார். ஆனால் ஒருநாளும் அவனுக்கு அவள் மீது அவ்வாறு ஒரு எண்ணம் வந்தது இல்லை அதே போல் அவளும் அவனிடம் அவ்வாறு நெருங்கியது இல்லை. தந்தையின் பேச்சின் தீவிரத்தை உணர்ந்தவள் ஒரு நாள் விஷ்ணுவிடம் வந்து அவள் வேறு ஒரு ஆணை விரும்புவதாக கூறி அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். நேரம் வரும் பொழுது அவனே இதற்கு முற்று புள்ளி வைப்பதாக அவளிடம் வாக்கும் அளித்தான் விஷ்ணு.
"என்ன மாப்பிள்ளை என்நேரமும் போன்ல பேசிட்டே இருக்கீங்க அதான் கல்யாணம் பண்ணி வச்சா நேர்ல சந்தோசமா பேசுவீங்கன்னு நெனச்சு சொன்னே"
'சண்டாளி கோர்த்து விட்டுட்டா'
அசடு வழிந்தபடியே, "பரவால்ல மாமா கொஞ்ச நாள் ஆகட்டும் தொழில் கொஞ்சம் கத்துக்குறேன் அப்றம் அத பத்தி பேசலாம்" என்று அவரிடம் இருந்து நழுவி ஹரி சென்ற திசையில் தானும் சென்றான்.
அங்கே ஜெயனை பார்க்க சென்ற ஹரி மீட்டிங் ரூமிற்கு வெளியில் நின்று யவருடனோ ஜெயன் கைபேசியில் பேசி கொண்டிருக்க அவன் அருகில் நின்றான் அவனுக்காக காத்து. அவனை கண்ட ஜெயன் 'ஒரு நிமிஷம்' என்று சைகை செய்து பேசி முடித்து ஹரியை பார்க்க, "சொல்லுங்க சார்" என்றான்.
"இல்ல இது உண்மையானு உங்கட்ட கேக்க தான் வந்தேன்" என்று அந்த பைலை அவனிடம் நீட்ட, அவனை எப்பொழுதும் போலே சிறு ஆசிரியதுடன் தான் பார்த்தான் ஜெயன். சகோதரனை போலவே தனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு மரியாதையை வழங்குவது இந்த குடும்பத்தினரால் மட்டும் தான் முடியும் என்று மனதிற்குள் பாராட்டி "ஆமா சார், டீல் இன்னும் சைன் பண்ணல" என்றான்.
"என்ன ஆச்சு எதுவும் ப்ராப்லமா? அண்ணா தான இந்த ப்ராஜெக்ட் ஸ்டார்டிங்க்ல இருந்து பாத்தது அவரோட சைன் மட்டுமே இருந்தாலே போதுமே, அதுவு இல்லாம இது அவரோட ரொம்ப நாள் உழைப்பு" என்று தன் ஐயத்தை அவனிடம் வினவ,
"ஆமா சார், அஸ் எ சி.இ.ஓ ஆப் தி கம்பெனி ( As a CEO of the company) உதய் சார் மட்டும் சைன் பண்ணா போதும் ஆனா உங்க கம்பெனி இன்வெஸ்ட்டர்ஸ்கு இந்த டீல்ல இன்வால்வ் ஆகுறது புடிக்காம இருந்தாலோ இல்ல அவங்களுக்கு இந்த டீல் ப்ராபிட் தராதுனு அவங்க யோசிச்சலோ இதுக்கு அப்போஸ் பண்ணலாம். நாம இன்வெஸ்ட்டர்ஸ் ரெண்டு பேரு டீல்க்கு ஒதுக்கல அதுக்கு தான் இந்த மீட்டிங்"
"யார் அந்த ரெண்டு பேரு?" ஹரியின் பின் இருந்து வந்தது விஷ்ணுவின் குரல்.
அவனை சட்டை செய்யாமல் ஹரி ஜெயனை நோக்கி, "சரி ஜெயன் தங்க்ஸ், மீட்டிங்கில் பாக்கலாம்" என்று விஷ்ணுவின் கேள்வியை புறக்கணித்தான் ஹரி.
விஷ்ணுவை ஒரு பார்வை பார்த்து ஜெயன் சென்றதும் ஹரியிடம் கோபமாய், "டேய் ஆரமிக்காதடா ஒவ்வொரு தடவையும் மாமாவை பாக்குறப்ப உன்ன சமாளிக்கிறது தான் எனக்கு பெரிய வேலையா இருக்கு" சலிப்பாக நெற்றியை நீவினான்.
"என்ன ஏண்டா நீ சமாளிக்கணும், போ உன் மாமா கூப்புடுவான். அப்றம் உனக்கு தூசி பட்டு கண்ணு கலங்குனா கூட நான் தான் உன்ன அடிச்சேன்னு சொல்லிருவான்"
ஹரிக்கு ஈஸ்வரனை சுத்தமாக புடிக்காது ஏதோ விஷ்ணு அவருடைய பார்வையில் இருக்கும் பொழுது மாறுவது போல தோன்றும். அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரன் எப்பொழுதும் அவனது பெற்றோரை ஏளனமாக பேசுவதால் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டான்.
"மரியாதையா பேசுடா அவரை. வயசுக்கு ஆச்சும் மரியாதை குடு" என்று கடிந்தவனை, "ஐயோ சரிங்க சார். உங்க மாமாக்கு நான் மரியாதை கண்டிப்பா குடுக்குறேன். அதே மாதிரி அவரை எங்க அம்மா அப்பாட்ட பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க சொல்லுங்க கூடவே நீங்களும் நீங்களா இருக்க பாருங்க அவர் கூட ஒரு வாரம் இருந்துட்டு. அப்றம் நான், அவருக்கு மரியாதை என்ன? தலைல தூக்கி வச்சு கூட ஆடுறேன்"
"ஒழுங்கா பேசுனு சொன்னது தப்பாடா? ஏன்டா உங்க அம்மா அப்பான்னு பிரிச்சு பேசுற அவங்களும் என் அம்மா அப்பா மாதிரி தான்டா. அவரு என்ன சித்தப்பா சித்திக்கு மரியாதை இல்லாம நடந்..."
அவர்களின் பேச்சை இடை மறித்த ஜெயன், "சார் டைம் ஆச்சு மீட்டிங் ரூம்குல எல்லாரும் வந்துட்டாங்க" என்று கூற விஷ்ணுவை முறைத்து மீட்டிங் நடக்கும் அரையினுள் நுழைந்தான் ஹரி. பின்னர் நெடிய பெருமூச்சொன்றை விட்டு விஷ்ணுவும் அவனை தொடர்தான்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் பின் தொடர்ந்து உதய் வேகமாக நுழைந்து அவனுடைய இருக்கையில் அமர அவனுக்கு வலது பக்கமாக ஜெயன் நிற்க இடது பக்கமாக யாழினி சற்று தள்ளி அவனுக்கு பின்னே அமர்ந்தாள்.
"குட் மார்னிங் எவ்ரிவன். எல்லாரையும் ஒண்ணா மீட் பண்ணியே பல மாசம் ஆச்சு. ஹாப்பி டு ஸீ யூ ஆல். கமிங் ஸ்ட்ரைட் டு தி பாயிண்ட். யாரு யாருக்கு இந்த ப்ரொஜெக்ட்ல அப்ஜெக்க்ஷன் இருக்குனு உங்க முன்னாடி இருக்க பைலை பாத்துட்டு எனக்கு பதில் சொல்லுங்க. டேக் யுவர் ஓன் டைம் ஜென்டில்மென்" என்று அவர்களை அணு அணுவாக கவனிக்க ஆரமித்தான்.
உதய்யை பார்த்து ஏதோ கேட்க வந்த விஷ்ணுவை, "மீட்டிங் முடிஞ்சு" என்று அமைதி படுத்தினான் உதய். 'சரி' என்று தலை அசைத்தவன் அவன் முன்னே இருக்கும் பைலை மீண்டும் புரட்ட தொடங்கினான்... இம்முறை ஆழமாக.
உதய்யின் கண்கள் நாவலவன் மீது படிய அவரோ அந்த பைலை ஆர்வமே இல்லாமல் கடமைக்கு புரட்டிக்கொண்டிருந்தார் அவரின் செய்கையில் புன்னகை சிறிது ததும்ப தலையை அசைத்து ஜெயச்சந்திரனிடம் சென்றது அவன் கண்கள். அவர் அந்த பைலை படித்து கொண்டு தான் இருந்தார் ஆனால் முழு கவனம் அங்கில்லை.
சிறிது நேரம் கழிய அனைவரும் அதை படித்து அவரவர் கருத்தை கூற ஆரமித்தனர், "இத பத்தி தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே உதய்... நீ இருக்கன்ற தைரியத்துல மட்டும் தான் நான் இங்க இன்வெஸ்ட் பண்ணத்தோட சரி, இந்த பக்கம் வர்றதே இல்ல... எதுக்கு இந்த மீட்டிங்? ஆல் தி பெஸ்ட். மை சப்போர்ட் இஸ் வித் யு (All the best. My support is with you)" என்று ஒருவர் கூற மற்றொருவரும்,
"கிலியர் ப்ராஜெக்ட். சக்ஸஸ் ஐஸ் ஆன் யுவர் சைடு எங் மேன் (Clear project. Success in on your side young man)" என்று பாராட்டுக்கள் குவிய, ஈஸ்வரன், "நல்ல ப்ராஜெக்ட் தான மாப்பிள்ளை அப்றம் யாரு டீல்ல சைன் பண்ண மாட்டிக்கிறாங்க?" என்றார்.
"நான் தான் சார்" என்று நாவலவன் எரிச்சலுடன் பேச,
"எதுக்கு? சார் இந்த ப்ராஜெக்ட்ல நீங்க குறை சொல்ல ஒண்ணுமே இல்ல... அதையும் மீறி உங்களுக்கு இதுல சந்தேகம் இருந்தா நேரடியா வந்து அண்ணன்ட்ட கேக்கணும் சார் தேவையில்லாம இப்டி மொத்த ப்ராஜெக்ட்டயும் நிறுத்தி வைக்கிறது கிளைன்ட்ட பேர் கெட்டு போக தான் வைக்கும்" என்று கோவத்தை அடக்கிய விஷ்ணு கேட்டான்.
"தம்பி நீங்க சின்ன புள்ள அமைதியா இருங்க. பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல" என்று ஜெயச்சந்திரன் விஷ்ணுவை அடக்க முயல,
"ஏன் நாங்க பேசுனா என்ன ஆக..." என்று எகிறியவனை உதய் அமைதி ஆக்கினான், "விஷ்ணு" என்றதும் பற்களை கடித்து தன் இடத்தில் அமைதியாய் அமர்ந்தான்.
நாவலவனை பார்த்து, "நீங்க பேசுங்க சார்" என்று அவருக்கு அனுமதி கொடுக்க அவர் கொண்டு வந்த சில பைலை யாழினியை பார்த்து நீட்டி, "இந்தாம்மா இத உன் சார்ட்ட குடு"
அவர் பேச்சை கேட்டு எழுந்தவளை தன் ஒற்றை பார்வை கொண்டு நிறுத்தினான். அவனின் பார்வையில் இருந்த அனலை உணர்ந்து அவள் அமைதியாக உட்கார ஜெயன் அவரிடம் சென்று அதை வாங்கி உதயிடம் தந்தான்.
"அதுல காட்டன் இண்டஸ்ட்ரியோட புள் டீடெயில்ஸ் இருக்கு அதோட லாபம் நஷடம் எல்லாமே இருக்கு" என்று அங்கிருந்த மற்றவருக்கும் அதே போல் பைலை கொடுக்க, "இத பாத்துட்டு நீங்களே சொல்லுங்க எப்படி இந்த டீல்கு நான் ஒத்துக்க முடியும்?"
"ஆமா உதய் நீயே இத எக்ஸ்பிளைன் பண்ணு. காட்டன் இண்டஸ்ட்ரி ஸ்டார்ட் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு ஆனா இன்னும் அதுல 20 % பிராபிட் கூட வரல அதுவும் இல்லாம இதுல வந்த லாபத்தை விட நஷடம் தான் அதிகம். எப்டி இத நம்பி நாங்க டீல்கு அக்சப்ட் பண்ண முடியும்?" என்றான் ஜெயச்சந்திரன்.
தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்த உதய், "வாஸ்தவம் தான் சார், ஆனா அதுக்கு சேத்து தான மத்த இண்டஸ்ட்ரிஸ்ல உங்களுக்கு லாபம் வருது, லாபம் வருதுன்னு சொல்லி அத நீங்க சைன் பண்ணாமையா இருக்கீங்க?"
அவனுக்கு பின்னால் இருந்த ப்ரொஜெக்டார் திரையில் வந்தது ஒரு படம், "இதுல இருக்கது நம்மளோட எல்லா இண்டஸ்ட்ரீஸ் ப்ராபிட் அண்ட் லாஸ்(Profit and loss). எல்லா இண்டஸ்ட்ரீஸ்லயும் ஒரே நேரத்துல ப்ரோபிட் கொண்டு வர முடியாது அதுவும் ஆரமிச்ச ஒடனே"
அவனை இடை மரித்த நாவலவன், "தம்பி ரெண்டு வருஷம் ஆச்சு ஒடனே எல்லாம் லாபம் நாங்க கேக்கல" என்றார் நக்கலாய், அவர் பேச்சில் எள்ளலாக ஜெயச்சந்திரனும் உடன் நகைத்தார்.
"சரி சார் நீங்க சொல்ற மாதிரியே ரெண்டு வருசத்துல என்னால லாபம் கொண்டு வர முடியல. ஒரு வருஷம் டைம் தரேன் ப்ராபிட்ல இருக்க ஸ்டீல் இண்டஸ்ட்ரிக்கு உங்களால 35 % ப்ரோபிட் கொண்டு வரமுடியுமா?" என்று கைகளை மார்புக்கு நேராக கட்டி கேட்டவனை கோபத்துடன் பார்த்தார் நாவலவன். தன்னால் தான இயலாதே. 'அந்த அளவுக்கு அறிவு இருந்த நான் இன்னேரம் தனியால பிசினஸ் பன்னிருப்பேன்' என்று நினைத்தார் மனதில்.
"உதய் நாம பேசுறது காட்டன் இண்டஸ்ட்ரி பத்தி. ப்ராபிட் வராத ஒரு இண்டஸ்ட்ரிக்கு இவ்ளோ பெரிய அமௌன்ட் இன்வெஸ்ட் பண்றது நாமளே போய் தூக்கு மேடைல நிறத்துக்கு சமம்" என்றார் ஜெயச்சந்திரன் கோபமாக.
"சார் பிஸ்னஸ்ன்னா லாபம் நஷ்டம் ரெண்டுமே இருக்க தான் செய்யும். எல்லாம் தெரிஞ்சு தான இன்வெஸ்ட் பன்னிருக்கிங்க?" என்றான் ஹரி.
அந்நேரம் சரியாக உதய்யின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர அதற்கு பதில் அளித்து ஜெயச்சந்திரனை பார்த்தான் அவரோ, "ஹரி தம்பி இதுல நீ நடுல வராதீங்க இன்வெஸ்டர்ஸ் பேசுறப்ப உங்களுக்கு இதுல சம்மந்தம் இல்ல. என்ன உதய் சின்ன பசங்கள விட்டு பேச வச்சு வேடிக்கை பாக்குறியோ? அடக்கி வை உதய்" என்றார் ஏளனத்துடன்.
கோவத்தில் பதிலடி கொடுக்க வந்த விஷ்ணுவை நிறுத்திய உதய், "விஷ்ணு வெளிய ஆதவன் இருப்பான் உள்ள வர சொல்லு" என்று அவனை திசை திருப்பினான். 'மெசேஜ்ல தான பாத்தா? அதுலயே வர சொல்ல வேண்டியது தான? அந்த கிழட்டு நாய பேசாம என் வாய அடக்கிறதுலயே இரு நீ' மனதில் உதய்யை புகழ்ந்து வெளியே சென்றான்.
"எதுக்கு அடக்கணும்? சுயமா யோசிக்கிற புத்தி இருக்கு அவங்க ரெண்டு பேருக்கும் பேசட்டும்" என்று ஒரு வித பொடி வைத்து பேசுவது போல் இருந்தது அவன் பேச்சு.
"நான் வேற என் தம்பிக வேற இல்ல சந்திரன் சார் அவன்ட்ட பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க" அவன் குரலில் அவ்வளவு கோபம், "இப்ப என்ன உங்களுக்கு இந்த ப்ரொஜெக்ட்ல விருப்பம் இல்ல அப்டி தான? அதையும் மீறி நான் இத பண்ணா என்ன பண்ணுவீங்க?"
கோவமாக இறுக்கியில் இருந்து எழுந்த நாவலவன், "என்ன உதய் ஷேர் அதிகம் இருக்குனு தைரியத்துல பேசுறியா? சந்திரன்கும் எனக்கும் ஷேர் சேத்து 13.74 % இருக்கு நாங்க ரெண்டு பெரும் ஷேர்ல இருந்து விலகிட்டா என்ன பண்ணுவ? கம்பெனி லாஸ்ல தான் போகும் பேசுறப்ப பாத்து பேசணுமாம்ல?"
அறையினுள் வந்த ஆதவனை பார்க்க தலையை அசைத்தான் அவன். "என்ன சந்திரன் எதுவும் பேசாம போன்ன பாத்துட்டு இருக்கீங்க?" என்று கத்த, "யோவ் உனக்கு மெசேஜ் வந்துருக்கானு பாரு" என்றார் நாவலவனிடம் பதற்றத்துடன்.
புரியாமல் தன்னுடைய அலைபேசியை எடுத்து பார்த்து, "ஒன்னும் வரல" என்றார்.
"பினாமி பேர்ல ஷேர் வாங்கிருக்கவங்களுக்கு வராது சார். உங்க தம்பிக்கு மெசேஜ் போயிருக்கும்" என்று கூறி தன்னுடைய இறுக்கியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக அமர்ந்து, "மீட்டிங் ஹால் ரொம்ப கூட்டமா இருக்குதுல ? ஷேர் இருக்கவங்க மட்டும் தான் இங்க இருக்கணும்னு சொல்லுங்க ஜெயன்" என்று கூறி தன் முன்னே வைத்திருந்த தேநீரை சுவை பார்க்க ஆரமித்தான்.
நாவலவனும் ஜெயச்சந்திரனும் திகைப்பில் இருக்க, ஈஸ்வரனுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை, "என்ன உதய் இது யாரை கேட்டு எங்க ஷேர்ஸ் எல்லாம் ரிட்டன் பண்ண?" உண்மையில் அவர்களுடைய பங்கை அவர்களுக்கே அவர்களுடைய வாங்கி கணக்கில் பணமாய் செலுத்தி இருந்தான்.
இப்பொழுது அவர்களுக்கு அது பெரும் இழப்பை மட்டுமே தந்திருக்கும், அது மட்டும் அல்லாது கருப்பு பணம் இப்பொழுது தூயதாக மாறி இருந்தது. அவர்களுக்கு அது எவ்விதத்திலும் பயன் பட கூடாதென்று தான் இந்த ஏற்பாடு செய்திருந்தான் உதய் மாதவன்.
இதை கேட்ட ஈஸ்வரனுக்கு தான் மிக பெரிய அதிர்ச்சி அதை உதய்யும் மாதவனும் கவனிக்காமல் இல்லை, "உதய் யோசிச்சு தான் பண்றியா? இவ்ளோ ஷேர் இருந்தா, லாஸ் ஆகுறப்ப அதே அளவு வரும். லாபத்தை மட்டும் பாக்குற நேரம் இது இல்ல"
மாமனின் எச்சரிக்கையை, "எதையும் யோசிக்காம செய்ய மாட்டேன், ஹரி உனக்கு இந்த ப்ராஜெக்ட் பத்தி என்ன தோணுது?" என்று அவருடைய கேள்விக்கு செவி சாய்க்காமல் கேட்டான், "உங்க மேல நம்பிக்கை இருக்குணா" இதற்கு மேல் என்ன வேண்டும்? ஒரு தமயனுக்கும் சரி, தொழிலதிபருக்கு சரி....!
யாழினியிடம் இருந்து ஒரு பைலை வாங்கி அவன் முன் நீட்டியவன், "இதுல ரெண்டு பேரும் சைன் போடுங்க" ஒன்றும் புரியாமல் விழிக்க ஜெயனை பார்த்தான் ஹரி, அவன் ஒரு சிறிய சிரிப்பை தர யோசிக்காமல் சகோதரனுக்காக கையெழுத்திட்டனர் இருவரும்.
"வெல்கம் Mr ஹரி அண்ட் Mr விஷ்ணு" அவர்களை பார்த்து கூறியவன் தன் முன் அமர்ந்து இருக்கும் மற்றவர்களை பார்த்து, "இனி ஹரி, விஷ்ணு ரெண்டுபேரும் நம்ம ஷேர் ஹோல்டேர்ஸ்ல ஒருத்தர். இ நீட் ஆல் ரெஸ்பெக்ட் பார் தேம் (I need all respect for them). எனக்கு இன்னும் எத்தனை நியூ இன்வெஸ்ட்டர்ஸ் வேணாலும் கெடப்பாங்க"
"தப்பு பண்ற உதய்... இத்தனை வருசமா கூட இருந்த எங்களை கொஞ்சம் கூட இன்பார்ம் பண்ணாம இவ்ளோ அசிங்கப்படுத்தி வெளிய அனுப்புறது ரொம்ப பெரிய தப்பு" நாவலவன் எச்சரிக்க ஜெயச்சந்திரனும் முகம் சிவக்க கோவத்தில் நின்றார்.
"நீ சொல்ற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையை ஆட்டிட்டு இருந்தா நாங்களும் உனக்கு நல்லவங்களா இருந்துருப்போமோ? என்ன உதய் அடக்கி வைக்க பாக்கறியா"
ஆற்றாமையில் பேசிய ஜெயச்சந்திரனை பார்த்து, "உங்களோட அனுபவமும் எனக்கு இது வர உதவுனது இல்ல, உங்களோட பேச்சும் உதவுனது இல்ல. இவ்ளோ பெரிய பிசினஸ ஆட்டி படைக்க தெரிஞ்ச எனக்கு ரெண்டு பேர அடக்கி வைக்க தெரியாதா மிஸ்டர் சந்திரன்? உங்களால ஆல்ரெடி ரெண்டு ப்ராஜெக்ட் லாஸ் ஆகியிருக்கு, எவிடென்ஸோட இப்ப கூட கோர்ட் ஏற நான் ரெடி... எப்படி வசதி? கோர்ட்டா இல்ல வீடா?"
அத்தனை நிமிர்வாய் பேசியவனிடம் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் மானத்தை காத்துக்கொள்ள கோவமாய் இருவரும் வெளியில் சென்றனர்.
"என்னோட இந்த முடிவுல உங்களுக்கு எதுவும் ஆப்ஜெக்ஷன் இருந்தா தாராளமா சொல்லலாம்" மற்றவர்களை பார்த்து கூற அதை அறிந்தவர்கள் அவனது கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
"சார் எனக்கு ஒரு டவுட்" அந்த அறையில் திடீரெனெ புதிதாய் ஒரு குரல்.
குரல் வந்த கதவின் திசை நோக்கி அனைவரும் பார்க்க அங்கே கருப்பு நிற முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து, வெள்ளை நிற பாண்ட் அணிந்து முகத்தில் இருக்
கும் கோவத்தை மறைக்க சிரிப்பெனும் ஆபரணம் அணிந்து நின்றான் ஆதி. ஆதி கேசவன்.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
வந்தவனை ஆதவன் ஆச்சிர்யத்தின் உச்சியில் நின்று பார்க்க ஆதியின் கண்கள் ஒரு நொடி அவன் மேல் பட்டு மீண்டு உதய்யை நோக்கி சென்றது.
ஆதியை வெளியில் அனுப்பும் பொருட்டு ஜெயன் அவனை நோக்கி "யார் நீ? பெர்மிசன் இல்லாம இங்க எல்லாம் வர கூடாது வெளிய போ" என்று ஜெயன் அவனை வெளியே அனுப்ப எத்தனிக்க உதய் அவனை தடுத்தான்,
"வெயிட் பண்ணுங்க ஜெயன். சி யு ஆல் இன் நெக்ஸ்ட் மீட்டிங் (See you all in next meeting)" என்று தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு மறைமுகமாக கட்டளையிட்டவன் அவன் முன் நிற்பவனை விழி அகற்றாமல் பார்த்தான்.
ஆச்சிரியம், அவன் இத்தனை வருடங்கள் தன் முன் தோன்றாமல் இன்று எதற்காக அதிலும் இவ்வளவு அவசரம் ஏன்? அதே நேரம் அந்த கோவம் நிறைந்த கண்களை பார்த்து அதன் காரணத்தை அறிய இயலவில்லை அவனால்.
சம்மந்தமே இல்லாமல் ஒருவன் தங்கள் அலுவலகத்தில் நுழைந்ததை பார்த்த ஹரி மற்றும் விஷ்ணுவிற்கு அவன் நிற்கும் தோரணை சற்றும் புரியவில்லை, புடிக்கவும் இல்லை. யார் வந்தாலும் பார்த்துக்கொள்வேன் என்று தெனாவெட்டோடு நிற்கும் தோள்கள், யாருக்காகவும் அஞ்சுபவன் நாள் அல்ல என்று நேராய் நிற்கும் கண்கள்.
அவனை கடந்து செல்பவர்களை பொருட்படுத்தாது அவன் பார்வை உதய்யின் மீதே படிந்திருந்தது. அதில் ஒரு கோவம், இனம் புரியா கோவம் அந்த கோவத்தை கட்டுப்படுத்த அவன் படும் பாடு அவன் கண்களிலே தெரிந்தது. எதற்கு இந்த கோவம்? அதுவும் உதய்யை நோக்கி?
என்ன நடக்கின்றது இங்கே, சாதாரண ஒரு வேலையை பற்றி பேசும் பொழுது கூட தனக்கு கீழே இருப்பவர்களிடம் பேச நேரம் இல்லாமல் இருப்பவன் உதய். இன்று தனக்கு சற்றும் அறிமுகம் இல்லாத நபரிடம் ஒரு சிறு கேள்வியும் இன்றி பேச தயாராக இருப்பது அவர்களுக்கு ஆச்சிர்யமே. என்ன தான் ஒருவன் அவசரமாக இருந்தாலும் அநாகரிகமாக அனுமதியே இல்லாமல் ஒரு அறையினுள் நுழைவது அவன் மேல் ஒரு ஏளன பார்வையை பாதிக்க வைத்தது.
உதய்யின் உத்தரவில் அதிர்ச்சி அடைந்த ஜெயன் அவனை விட்டு விலகி நிற்க அந்த அறையில் இருந்த அனைவரும் சென்ற பின்பு மீதம் இருந்தது உதய்யின் மாமா, ஹரி, விஷ்ணு, ஆதவன், ஜெயன், யாழினி மட்டுமே.
அதை உணர்ந்து, "விஷ்ணு மாமாவை உங்க பழைய கேபினுக்கு கூட்டிட்டு போ"
"அண்ணா எதுவும் ப்ராப்லமா. நாங்க வேணும்னா கூடயே நிக்கவா? அவன பாத்தாலே எனக்கு சரியா படல" என்று ஹரி.
அவனுக்கு பதிலாய் தலை அசைத்து மறுப்பு தெரிவித்தவன், "எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க வெளிய போங்க" அவனின் வார்த்தைகளை அறிந்தவனாய் ஈஸ்வரனை அழைத்து ஹரியும், விஷ்ணுவுடன் வெளியே சென்றான்.
"என்ன சார் பயம் வந்துருச்சு போல, பெரிய மனுஷங்கள எல்லாம் வெளிய அனுப்பிட்டீங்க. பரவலா உன் தம்பிய விட ஹரி உன்ன நல்லா பாத்துப்பான் போல என்னாமா பாசம் வழியிது" என்று உதய்யை கடந்து அவனுடைய நாற்காலியில் அமர்ந்து அதன் கைபிடியை தட்டி பார்த்தான், "சும்மா சொல்ல கூடாது நல்லா மெது மெத்துன்னு இருக்கு இது. ஏன் சார் இதுல ஒக்காந்தா அடுத்தவன் குடிய எப்படி கெடுக்கணும், அவன எப்படி நிம்மதி இல்லாம வாழ வைக்கணும்-னு யோசிச்சிட்டே இருக்க தோணுமோ"
நாற்காலியின் ஒருகையில் தன் ஒரு கையும், மீசையை முறுக்கி ஒரு கையும் வைத்து யோசினையுடன் கேட்ட ஆதியை ஜெயனுக்கு அவனை துவைத்து எடுக்கும் அளவு கோவம் வர ஐந்தே அடியில் ஆதியை நெருங்கி அவன் சட்டையை பிடித்து எழுப்ப முற்படுகையில் ஆதவன் அவனை தள்ளி நிறுத்தினான்.
கண்கள் சிவக்க சிவக்க ஜெயனின் சட்டையை பிடித்து, "அவன் மேல கை வச்ச" விரலை நீட்டி எச்சரித்து தன் ஆறடி உயரத்திற்கு சரி சமமாக கண்களை இவ்வாறொரு தீயை ஜெயன் இதுவரை பார்த்ததில்லை, குறும்பு மட்டுமே இருக்கும் கண்களில் இன்று தெரிந்த கோவம் அவனை இரண்டு அடி தானாக பின்னுக்கு தள்ளியது.
அதிர்ச்சியில் உதய்யை பார்க்க அவன் தனக்கே உரிய அந்த நேர்கொண்ட பார்வையை ஆதியின் மேல் செலுத்தி கவனத்தை வேறு எங்கும் மாற்றாமல் வைத்து இருந்தான், எவனோ ஒருவன் தன் மரியாதைக்குரிய முதலாளியின் இருக்கையில் இவ்வாறு அமர்ந்து அவனையே கேள்வி கேட்பது இதுவே முதல் முறை.
"பார்ர்ரா பாடிகார்டா, அந்த தைரியத்துல தான் மத்த எல்லாரையும் வெளிய அனுப்பிருக்கிங்க ஒரு நிமிஷம் நான் கூட நீங்க தைரியமா ஆகிட்டீங்களோனு நெனச்சேன் மாதவன் சார்" - ஆதி
"டேய் ஆதி என்னடா பேசுற நீ 12 வருஷம் கழிச்சு பாக்குறப்ப இப்டி தான் பேசுவியா?" நொடியில் ஆதவனின் கோவம் எல்லாம் காற்றில் கரைந்து ஆதியை கெஞ்சலுடன் கேட்டான்.
'என்ன 12 வருசமா? இவர்களுக்குள் என்ன உறவு? ஆனால் ஏன் இந்த நீண்ட இடைவேளை?' - ஜெயன் மனம்.
"ஐயோ என்ன சார் நாங்க காசு இல்லனா பேச கூட உரிமை இழந்துட்டோமா? அப்றம் சார் நான் அங்க நிக்கிறாரே மிஸ்டர் மாதவன் அவர்கிட்ட தான் பேச வந்துருக்கேன்" சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன், "எப்பா என்னமா சூடு ஏறுது இந்த சீட், அப்றம் சூட்டுல நான் ஏதாவது சொல்லி, சந்தோசமா வெளிய நடிச்சிட்டு நிம்மதியா மூணு வேலை சாப்பாடு சாப்புடுற என் தங்கச்சிக்கு சம்பாதிச்சு போட கூட வழி இல்லாத மாதிரி பண்ணிட போறான் உன் பிரண்ட்"
"டேய் உதய் என்னடா சொல்ல வர்றான் இவன், ஏதாச்சு பிரச்னை பண்ணியா? ஏதாச்சு பேசுடா இப்புடியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?"
பாண்ட் பாக்கெட்டினுள் இரு கைகளையும் விட்டு ஆதியையே பார்த்து கொண்டிருந்தவன், "இவன நான் என்னடா பண்ண போறேன், நான் என்ன வேலை வெட்டி இல்லாமயா இருக்கேன்? ஒருத்தர்கிட்ட மோதணும்னா அவங்க நமக்கு மொத தகுதியா இருக்கனும் இவன்ட்ட என்ன இருக்குனு இவனுக்கு சரி சமமா நான் சண்டை போட போறேன்?" - நக்கலாய் உதய்.
"கொழுப்பு. பணத்துலயே ரெத்தம் ஊருதுல அதான் இந்த கொழுப்பு. இதே கொழுப்பு எங்க அப்பா பேர கெடுக்குறப்ப இருந்துந்தா உன்ன பாராட்டிருப்பேன். ஆனா பாரேன் உன் நல்ல நேரம் இத்தன வருஷம் கழிச்சு நீ என்கிட்ட மாட்டிருக்க கையும் களவுமா"
"ஆதி நீ பேசுறது சரி இல்லடா... அவன் அப்டி எல்லாம் பண்ற ஆளு இல்ல நீ தேவையில்லாம ஏதாச்சு பேசிட்டு இருக்காத அவன பத்தி எனக்கு நல்லா தெரியும். பாதிலேயே விட்டுட்டு ஓடுன உனக்கு எங்கடா அவன பத்தி தெரியும்?"
"ஆஹாங் எனக்கு அவன பத்தி நல்லா தெரியாது தான் அதுக்கு இப்ப என்னங்கிற? இவன் என்ன சுபாஷ் சந்திர போஸ்சா இவன பத்தி குறிப்பு எடுக்குறதுக்கு? மிஞ்சிமிஞ்சி போனா ஒரு 20 குடும்பத்தோட வாழ்க்கைய அழிச்சிருப்பான், அதுவும் இல்லனா வச்சிருக்க காச எப்படி வீணாக்கலாம்னு க்லபுகும் பப்புகும் மாறி மாறி சுத்திட்டு இருந்துருப்பான். இல்லனா என்ன பணத்தை வச்சு பத்து பதினஞ்சு கொலையை பண்ணிருப்பான்... தலைவருக்கு வேற என்ன தெரியும்" என ஆதி கூற, ஆத்திரமாய் அவனை நோக்கி முன் நடந்தான் உதய்.
"12 வருசமா நீ இல்லாம நிம்மதியா இருந்தேன் எதுக்குடா இப்ப வந்த வீணாப்போனவனே, போனவன் அப்டியே போக வேண்டியதுதானே நீ வரலன்னு இப்ப யாரு அழுதது"
"உன்ன பாக்கணும்னு இங்க யாரும் கங்கணம் கட்டிட்டு சுத்தலை"
"வந்த வழியே அப்ப வெளிய கெளம்பு. உன்ன பாக்க பாக்க அடிச்சே கொல்லனும்-னு தான் தோணுது"
சட்டையை முடித்துவிட்டு, "என்னடா கொல்ல போறியா? கொல்லு... இப்டி எல்லாம் பேசுனா நீ பண்ணதுக்கு உன்ன கேள்வியே கேக்காம நான் போய்டணுமா?"
"டேய் அடங்குடா என்ன வந்ததுல இருந்து நான் பண்ணது நான் பண்ணதுன்னு பீட்டர் விட்டுட்டு இருக்க... என்ன உன் குடும்பத்தை நடு தெருவுல நிறுத்தின மாதிரி பேசிட்டு இருக்க"
"நீ பண்ணதுக்கு நடு தெருவுல நிறுத்திருந்தா கூட இவ்ளோ வலிச்சிருக்காதுடா எனக்கு" ஆற்றாமையுடன் வலியில் வந்தது ஆதியின் குரல்.
"என்ன தாண்டா அவன் பண்ணான், சொல்லி தொலயேன்டா" - ஆதவன்
"இவனுக்கு பழி வாங்கணும்னா என்ன என்ன வேணாலும் பண்ணவேண்டியது தான என்ன மயித்துக்கு எங்க அப்பா பேர இப்புடி ஊரே சிரிக்கிற மாதிரி பண்ணான்? நான் தான் பாவம் பண்ணிட்டேன் ஆனா என் தங்கச்சி என்னடா இவனுக்கு பாவம் பண்ணுனா?
எங்க அப்பா ஒரு பிராடு பிராடுனு மூஞ்சிக்கு முன்னாடி அத்தனைபேர் சொன்னப்ப ஒரு ஆம்பளையா என்னால கோவத்தை காட்ட முடியல ஆனா ஒரு பொம்பள புள்ளயால எப்பிடிடா தாங்கிக்க முடியு தன்னோட அப்பன இப்புடி ஊரு பேசுச்சுனா? தெனம் தெனம் சுருங்கி போன பூ மாதிரி அவ ஒரு மூலைல ஒக்காந்து அழுகுறத பாத்த எனக்கு மட்டும் தா அந்த வலி தெரியு. வெவரம் தெரிஞ்ச வயசில இருந்து அண்ணா அண்ணனு அவன் காலுக்குள்ள தாண்ட சுத்தி சுத்தி வருவா? அவளுக்காகவாச்சும் ஒரு சாதாரண மனுசனா நடந்துருக்கலாம்ல?"
"என்னடா உதய் இது? ஏண்டா இப்டி பண்ண?" - ஆதவன்.
ஆதவனை உதாசீனம் செய்தவன் ஆதியை நோக்கி, "உன் தங்கச்சியா பொறந்ததுக்கு அவ அனுபவிச்சு தான் ஆகணும். இல்ல தெரியாம தான் கேக்குறேன்... பெரிய உத்தமன் மாதிரியே பேசுறியே உன்ன விட நான் என்னடா பெருசா பண்ணிருப்பேன் வாழ்க்கைல" - உதய்
"ஆமாடா நான் தப்பு பண்ணே தான். அதுக்காக தான் 12 வருசமா உன் மூஞ்சில முழிக்காம நீ என்ன பண்ணாலும் கண்ணு தெரியாத கழுத மாதிரி எல்லா அடியையும் வாங்குனேன்ல அப்படியும் உனக்கு கொட்டம் அடங்கலயா. ஆனா இத்தன நாள் என்ன என்ன பன்னாலும் நான் தங்கிட்டு இருந்தேன் ஆனா இப்ப என் குடும்பத்துல நீ கை வச்சிருக்க பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்" - ஆதி
"என்னடா பண்ணுவ?" அவனுக்கு நேருக்கு நேராக நின்று நக்கலாக கேட்டான் உதய்.
அவன் கண்களில் தெரிந்த நக்கலான பார்வை அவனை வேறு விதமாக சிரிக்கவைத்தது. தனக்கு பின்னே இருந்த நாற்காலியை திருப்பி போட்டு அமர்ந்தவன், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை ஆழ்ந்து இழுத்து உதய்யின் முகத்திற்கு நேராக அந்த புகையை விட்டு, "கட்டம் கட்டி அடிக்கிறது கேள்வி பற்றுக்கியா?"
"........"
"நிக்க முடியாம, மூச்சு முட்டுற அளவு சுத்தி சுத்தி அடிப்பேன், ஏண்டா இவன்கிட்ட வச்சுகுட்டோம்னு நீ பொலம்புர அளவு சும்மா வச்சுசுசுசு... செய்வேன்"
ஆதியை போலவே ஒரு நாற்காலியில் அமர்ந்து அவனை எந்த வித கோவமோ, வெறுப்போ முகத்தில் காட்டாமல் சிறு சிரிப்பை மட்டுமே தந்தான். பின்னர் அவன் கையில் இருந்த சிகரெட்டை வாங்கி காலில் அதன் அனலை மிதித்து,
"என்ன இங்கிலிஷ் வாசிக்க தெரியாதா? இது டொபாக்கோ பிரீ கேம்பஸ். சிகரெட் புடிக்க கூடாது. அப்றம் என்னமோ ஒன்னு சொன்னியே ஆஹ்ஹ்ஹ்... கட்டம் கட்டி அடிப்பனு, ஹாஹாஹா அந்த கட்டத்தை கட்டுறதுல நா கிங்குடா, சும்மா நிக்க வச்சு விளையாடுவேன் இதுவரைக்கும் ஒருத்தன் பொழச்சு இல்ல... எனக்கே கட்டம் கட்டுவியா.. ஆனா நீ வாய் பேசுறத வச்சு பாத்தா அவ்ளோ தூரம் எல்லாம் நீ தாக்கு புடிக்க மாட்ட.
எனக்கு ஆல்ரெடி நெறய வேலை இருக்கு உன்ன மாதிரி சில்வண்டோடலாம் விளையாட எனக்கு நேரம் இல்ல. போ சமத்துபுள்ளையா வீட்டுல போய் பால் குடிச்சிட்டு கைசூப்பிட்டே தூங்கு போ" தோரணையை பேசியவனை பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஆதியால்.
"மிஸ்டர் மாதவன் ஒருத்தன் வானத்துல பறக்கணும்னு ஆசை பட்டு பலூனை புடிச்சிட்டே பறந்தானாம், வழில வர்ற காக்கா, குருவி, சின்ன சின்ன பறவை எல்லாத்தையும் வெரட்டி விட்டு சந்தோசமா பறந்தானாம்... அவன் ஆசை பட்டமாதிரி மேகத்தை எல்லாம் தாண்டி போனப்ப வந்துச்சாம் ஒரு கழுகு மத்த பறவையை மாதிரி இத அவனால விரட்ட முடியலயாம். விளைவு பலூன் ஓட்டை ஆகி அவன் அவ்ளோ உயரத்துல இருந்து.... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பாவம்" உதய்யை பார்த்து புருவத்தை அமர்த்தலாக மேல் தூக்கியவன், "ஏன் தெரியுமா?"
"....."
"கீழ மனுஷனோட ராஜியம்னா மேல கழுகோட ராஜியம்"
சற்றுநேரம் அந்த அறையே நிசப்தமாக ஆதி மீண்டும் ஒரு சிகரெட்டை தன் உதட்டின் நடுவில் வைத்து அதை பற்ற வைக்க, அவனையே விழி அகற்றாமல் பார்த்து கை கட்டி அமர்ந்து உதய் "என்ன மிஸ்டர் ஆ.. கேசவன் சவால் விடுறிங்களோ பேஷ் பேஷ் நல்லா பண்ணுங்க இப்போ நான் கெளம்பிட்டா இல்ல உங்க கதையை கேக்க நேரம் கழிச்சு போகவா? இன்னொரு விசியம் சிகரெட் குடிக்க உங்களுக்கு மட்டும் நான் அனுமதி தரேன் ஏன்னா அப்டியாச்சும் வேகமா போய் சேருவீங்கல்ல நீங்க?"
ஆதியின் கோவம் எல்லாம் தவறே செய்யாமல் என் குடும்பம் இவனால் இவ்வாறொரு பெயருடன் இருக்கவேண்டுமா... ஆனால் உதய்க்கோ அவனை பார்க்க பார்க்க கோவமே வந்தது அவன் செய்த செயல்கள் அவன் கண் முன்னே வந்துவந்து நின்று அவனை இம்சித்தது...
ஆகமொத்தம் இவர்கள் இருவரும் அவர்களுக்கே தெரியாமல் வரப்போகும் நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பேற்க போகிறார்களென்று அறியாமல் வாக்குவாதம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போனது...
"காசு இருக்குனு நீ என்ன வேணாலும் பேசுவல... உன்னையும் மனுசனா மதிச்சுவந்து பேசிவந்த என்ன தான்டா சொல்லணும்... நீ மனுசன் இல்ல... கேவலம் ஒரு பத்து லட்சம் காசு எங்களை இப்டி நடுத்தெருவுல அனாதை மாதிரி ஊருல இருக்க எல்லாரோட பேச்சையும் கேக்க வச்சிருச்சு. அதே பத்து லட்சத்தை நான் உனக்கு இப்ப தரேன் எங்க அப்பா பேர உன்னால மறுபடியும் உசுரோட கொண்டு வர முடியுமா"
"இப்ப எதுக்கு நீ இப்புடி தைய தக்கனு குதிச்சிட்டு இருக்க... நான் பண்ணது தப்பு இல்ல ஏங்கவேனாலும் நான் சொல்லுவேன் உன்னால ஆனத பாத்துக்கோ... உங்க அப்பா ஒரு பிராடு தா.."
கோவத்தில் எகிறி ஆதி கொத்தாக அவனது சட்டியை பற்றிட, ஆதியின் சட்டையை அதே கோவத்தில் உதயும் பற்றி நிற்க கண்களில் தீ தெறிக்க தெறிக்க, "ஏஏஏய்ய்ய்ய்ய்ய்... என்னடா ****** அவரை பத்தி ஒரு வார்த்தை தப்ப சொல்றதுக்கு கூட உனக்கு அருகதை இல்ல... செத்து போனவரை எதுக்குடா உன் ஆட்டைல இழுத்த... சொந்த புள்ளையா பாத்தவருக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத அவருக்கு கொஞ்சம் கூட வலிக்காம பண்ணிட்ட. எங்க அப்பா எவ்ளோ வேகமா செத்ததுக்கு வாழ்க்கைல மொத தடவ நேத்து தான்டா சந்தோச பட்டேன்... நல்ல வேளை இருந்துருந்தாருன்னா உசுரோட செத்துருப்பாரு"
"அத்தனை பேர கொன்னுட்டு உங்க அப்பா மட்டும் எதுக்கு உயிரோட இருந்துருக்கணும்..."
'செய்வதெல்லாம் செய்துவிட்டு எவ்வாறு இப்படி நாக்கில் நரம்பே இல்லாமல் நடந்துகொள்ள இவனால் முடிகிறது?' என்று ஆதியின் எண்ணம் தனது பிடியை அவன் சட்டியில் இறுகியது... "உனக்கு எந்த விதமான எக்ஸ்பிளனேஷன் குடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல நீ எனக்கு யாரோ ஆகி பல வருஷம் ஆச்சு" என்று அவனும் ஆதியின் சட்டையில் இறுக்கத்தை குடுக்க, ஆதவன் தான் அவர்களை பிரித்து நிறுத்தினான்.
அவனை இடைமறித்த ஆதவன், "டேய் அவன் என்னமோ தெரியாம பன்னிட்டான்டா நான் உங்கிட்ட சாரி கேட்டுக்குறேன், நீ அநாதை இல்லடா நாங்க இருக்கோம்"
"ஊருக்கே படம் ஓட்டி காமிச்சான் உன் பிரன்ட் அப்ப என்ன தேடி வராம இப்ப எங்க இருந்துட்டு புதுசா வருது உன் பாசம்..."
ஆதவனிடம் கோவத்தை காட்டி, உதயிடம் திரும்பி, "நீ பண்ணது என் நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருக்குடா... என் அப்பக்காக நான் உன்ன கொஞ்சம் கூட பழி வாங்காம இருந்தா அது நான் அவருக்கு பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல" அதே வெறியோடு சிவந்த கண்களை துடைத்தவன் உதய்யை தீயாய் முறைத்துவிட்டு புயல் வேகத்தில் வெளியேறினான்.
அவன் வெளியேறியதும் வெகுவாய் சோர்ந்த மனதுடன் அமர்த்துவிட... அவனை பார்த்த ஆதவனுக்கும் ஜெயனுக்கும் தான் அவனை பார்க்க பாவமாய் இருந்தது... அவன் படும் வேதனைகள், அனுபவிக்கும் ஒதுக்கம், இரவில் நிம்மதி இல்லாத தூக்கம் எல்லாம் ஒருபுறம் இம்சிக்க பனிரெண்டு வருடங்கள் முன்னே இருந்த நட்பு மீண்டும் சந்திக்கையில் பிறகும் இன்பம் இல்லாமல் அவனுக்கு இன்னொரு வலியையே பரிசாக தர காத்திருக்கிறது... உதய்யின் முகத்தை பார்க்கையில் அவனுக்கும் சென்றவனின் இந்த அவதாரம் மனத்தால் ஏற்க முடியாமல் இருந்தது... என்ன செய்வது என்று உதய் அப்படியே அமர்ந்து விட்டான்.
"ஜெயன்"
"சொல்லுங்க சார்"
"அவனுக்கு எப்படி இந்த விசியம் தெரிஞ்சதுனுக்கு கண்டு புடிங்க"
"சரி சார்"
"ஆதவா"
"சொல்லுடா"
"அவன பதியும், அவன் தங்கச்சி பதியும் எனக்கு டீடெயில்ஸ் வேணும்"
"ஏண்டா... அடுத்து எப்படி பழி வாங்கலாம்னு யோசிக்கணுமா?" - கோபத்துடன் ஆதவன்.
அவன் கேள்வியில் தனது வழியை அடக்கி வலப்பக்க உதடு
வலய சிறிதாக விரக்தியோடு சிரித்தவன் அறையை விட்டு வெளியேறினான்.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Enna nadaguthu Inga aadhi udhai frds ya 12 years ya writer oray twist ya iruku sikirama reveal pannuga yaru thappu pannathu aadhai ennama kovam varuthu dai udhai eppo athuku thangachi ya kekura enna da 2 payrum panna poriga 😲😲😲 tamil gowtham enga motha aadhai thani vittu poedaga enga udhai aadhavan frds ok ethula aadhi enga iruthu vanthaan ini enna la nadaga poguthu 😐😐😐
 
Messages
37
Reaction score
4
Points
8
Enna nadaguthu Inga aadhi udhai frds ya 12 years ya writer oray twist ya iruku sikirama reveal pannuga yaru thappu pannathu aadhai ennama kovam varuthu dai udhai eppo athuku thangachi ya kekura enna da 2 payrum panna poriga 😲😲😲 tamil gowtham enga motha aadhai thani vittu poedaga enga udhai aadhavan frds ok ethula aadhi enga iruthu vanthaan ini enna la nadaga poguthu 😐😐😐
இனி எல்லாமே ட்விஸ்ட் தான் சிஸ். போக போக உங்களுக்கே எல்லாம் புரியும்.🙂
 
Top