• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 5 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் - 5



ராக்கெட் வேகத்தில் ஓடிய நாட்களில் அந்த வார வெள்ளிக்கிழமையும் வந்தது விரைவாக. இரவு முழுதும் தான் எடுத்துவைக்கும் அடுத்த கட்ட முயற்சியை தடை செய்வது யாராக இருக்கும் என்று ஆராய்தவனின் முயற்சிக்கு விடை எனோ கிடைத்த பாடு இல்லை. என்ன செய்தால் அந்த கருப்பு ஆடை கண்டு புடிக்கலாம் என்று எண்ணியவனின் நினைவுகளில் வந்து நின்றது ஒரு முகம் மட்டுமே. கடும் கோபத்துடன் அந்த முகத்திற்கு திரை சீலை இட்டவன் வெள்ளிக்கிழமை மெக்கானிக்கல் என்ஜினீர்களுடன் இருக்கும் சந்திப்பு நினைவிற்கு வர கண்ணயர்ந்தான் ஒரு தீர்மானத்துடன்.
காலை எந்த பதட்டமும் இல்லாமல் அந்த பெரிய கானபெரென்ஸ் ரூமிற்குள் வந்தவன் தன் அணைத்து தொழிலாளர்களும் இவனுக்காக காத்திருப்பதை உணர்ந்து தனக்கே உண்டான திமிருடன் தலைநிமிர்ந்து தன் இருக்கையில் கால் மேல் கால் போட்டு ராஜாவை போல் அமர்த்தவனை சிலர் பொறாமையுடன் பார்க்க தான் செய்தனர்.
அவன் அருகே வந்து நின்ற யாழினி அவன் எடுத்து வர கூறிய அணைத்து பைலையும் அவனுக்கு முன்னே கொடுக்க அதை சட்டை செய்யாமல் அவன் மேனேஜரிடம் அவர் பேச்சை நீடிக்க கூறி கூட்டத்தையே நொடி வீணாக்காமல் உற்று நோக்கினான் ஒரு மணி நேரமாக.
தன் மேல் மேலாளரின் பார்வை தொடர்ந்து விழுந்ததை அறிந்தவன் அதை சற்றும் போற்றுட்படுத்தாமல் தன் வேளையில் மும்முரமாக இருந்தான். ஒரு தெளிவு பிறந்தவுடன், "மீட்டிங் முடிஞ்சது எல்லாரும் போகலாம்னு சொல்லிருங்க வெற்றி" என்று அவனுடைய அறையை நோக்கி நடந்தான்.
அவன் செய்வது எதுவும் புரியாமல் அவன் பின்னே ஓடியவள் , "சார், மீட்டிங்னு சொல்லிட்டு நீங்க ஒன்னுமே பேசாம வந்துட்டீங்க" கேட்டாள் யாழினி.
"அதுதா மேனேஜர் பேசுனார்ல"
'லூசா இருக்கான் இவன்'
"இந்த பைலை போய் மேனேஜர் கிட்ட குடுங்க அப்டியே ஜெயன உள்ள வர சொல்லிட்டு போங்க"
"வெளிய இருன்னு சொன்னாலே புரிஞ்சிருப்பேன் சார்" என்றவள் அவன் பதில் கூறும் முன்பே வெளியே சென்றுவிட்டாள்.
உள்ளே வந்த ஜெயனிடம் உதய், "லாஸ்ட் ரோல கிறீன் ஷர்ட், 4 வது ரோல வைட் ஷர்ட் அண்ட் நம்ம executive மேனேஜர் இவங்க எல்லாரையும் ஒடனே வேலைய விட்டு தூக்குங்க"
"எதுவும் ப்ரோப்ளேமா சார்?"
"நா குடுக்குற காசு பத்தலயாம்"
வேறு யவருக்கோ அவர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தவன், "யாருக்கு சார்" என்றான்.
"வேற யாருக்கு அந்த மும்பை காரனுக்கு தான்"
நீரஜ் தழல், மும்பையில் உதய் மாதவன் போல் தொழில் செய்யும் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவன். தன் தந்தைக்கு பிறகு தொழிலை தன் கையில் எடுத்தவனால் அவரை போலவே வெற்றிகளை குவிக்க இயலவில்லை. பல முயற்சிகளுக்கு பிறகு அவனுக்கு கிடைத்தது சிறு சிறு வெற்றிகளே. காரணம் உதய் மாதவனின் வரவு. வந்த ஒரு வருடத்திலே தன் முத்திரையை அழுத்தமாக பதிக்க ஆரமித்தான் உதய். அப்பொழுதிலிருந்து உதய் மாதவன் எதிரியாக மாறினான் நீரஜ் தழலிற்கு.
முதலில் நேர்மையாக இருந்த நீரஜ் காலபோக்கில் பாதை தவறியதை உணர்ந்து இடைவேளியை ஏற்படுத்தினான் உதய். ஆனாலும் அந்த இடைவேளியை க்ரோதமும் வன்மமும் கொண்டு நிரப்பிய நீரஜ் தன்னால் இயன்ற தவறான செயல்களை விடாது முயன்றுகொண்டு தான் இருந்தான். அதில் ஒன்று தான் இந்த வேலை, தன் ஆட்களை உதய்யின் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தான்.
"எப்டி சார் கண்டு புடிச்சீங்க"
"ஒருத்தர் தன்னோட வேலைய பொறுப்பா பாக்குறதுக்கும் வேவு பாக்குறதுக்கு இருக்க வித்யாசத்தை கண்டு புடிச்சேன் அவ்ளோ தான். இப்ப என்ன பண்ணுறீங்க நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்டோட டீடெயில்ஸ் எல்லாம் அவருக்கு அனுப்பி விட்ருங்க. முடிஞ்சா என்ன மீறி அவன் ப்ராஜெக்ட் வாங்க ட்ரை பண்ணட்டும்"
"சார் ஆயிரம் கோடி ப்ராஜெக்ட் கொஞ்சம்..." தயங்கியவனை பார்வையாலே நிறுத்தினான் உதய்.
"சொன்னதை செய்ங்க ஜெயன். அது என்னோட பல மாச உழைப்பு அத எப்டி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும். நா ஒன்னும் அவன மாதிரி கோழை இல்ல முடிஞ்சா ஜெயிச்சு காட்டட்டும் அதையும் மீறி அவன் ஜெயிச்சா அடுத்து வர்ற அமெரிக்கன் ப்ரொஜெக்டயும் விட்டு குடுத்தறேன். அடுத்த தடவ ஒரு தைரியமான ஆம்பளையா நேர்ல மோத சொன்னேன்னு சொல்லுங்க"
"ஒகே சார்" உதய்யின் மேல் இருக்கும் அலாதியான நம்பிக்கையின் காரணமாக எதுவும் கூறாமல் வெளிய சென்றான்.
ஜெயன் வெளியில் சென்றதும் உள்ளே வந்த யாழினி உதய்யின் மேஜையில் தேநீர் கோப்பையை வைத்து விட்டு அவனுடைய மேஜையை சுத்தம் செய்ய ஆரமித்தவளை கண்கள் பின்தொடர்த்ததன் காரனனத்தை அவனும் அறியவில்லை, "சார் உங்க ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் இவ்ளோ பட்ஜெட் அதிகமா இருக்கே எப்டி அந்த காசு எல்லாம் சேத்து வக்கிரிங்க?"
"எனக்கு கணக்கு பிள்ளையா வந்துருங்க யாழினி நீங்களே தெரிஞ்சுக்கலாம்" ஒரு நக்கலுடன் கூறினான்.
தன் வேளையில் இருந்து நின்றவள், "நாலாம் மாக்ஸ்ல ரொம்ப வீக் சார்" ஒரு நொடி யோசித்தவள் அவனிடம் திரும்பி, "ஏன் சார், உங்களுக்கு காம்ப்படிட்டர்ஸ் நெறைய பேர் இருப்பங்கள்ல? அப்ப அதே மாதிரி கூட இருக்க ஒருத்தரே உங்கள ஏமாத்தி உங்க ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் போச்சுன்னா என்ன பண்ணுவீங்க?" பிசினஸ் என்றாலே தந்தையின் இழப்பே கண் முன் வந்து போகும் அவளுக்கு.
"என்ன யாழினி நீங்க அப்டி எதுவும் பிலனோட வந்திருக்கிகளா?"
அவன் கேள்வியில் கண்கள் தானாய் விரிந்தன வேக வேகமாக தலையை ஆட்டியவள், "கண்டிப்பா அப்டி பண்ண மாட்டேன் சார் நீங்க இவ்ளோ கஷ்ட பற்றுக்கிங்கனு உங்களுக்கு தா தெரியும் அதுவும் ஒருத்தரோட உழைப்புல இன்னோருத்தர் வாழுறது ரொம்ப பெரிய தப்பு . சரி ஒரு வேல அப்டி யாராச்சு பண்ணுன என்ன பண்ணுவீங்க?"
"என்ன மீறி என் கம்பெனில திருட்டு நடந்துச்சுனா ஒன்னு எனக்கு தெரிஞ்சு அது நடக்கும் இல்லனா அத வெளிய காட்டுற நேரத்துக்காக நா வெயிட் பன்னிட்டு இருக்கேனு அர்த்தம் ஆனா எனக்கு தெரியாம இங்க எதுவுமே நடக்காது அப்டி நடக்கவிட்டா நா இந்த ஷேர்ல ஒக்காருறதுக்கு தகுதி இல்லாதவன்னு அர்த்தம்"
ஆழ்ந்து யோசித்தவள், "அப்ப எங்க அப்பா ஒழுங்கா கவனிச்சிருக்க மாட்டாரு"
"என் உங்க அப்பா பிசினஸ் பண்ணுறாரா?"
"பண்ணார் இப்ப இல்ல" சரி என்று தலையை அசைத்தவன் மேலும் எதுவும் பேசாமல் தன் வேளையில் கவனம் செலுத்த ஆரமித்தான்.
"நாளைக்கு ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங்க்கு காண்பிரென்ஸ் ரூம் ரெடி பன்னிருங்க அப்றம் இந்த லிஸ்ட்ல இருக்க பைல்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இப்பயே ரெடி பண்ணி வச்சிருங்க ஜெயன் கிட்ட வர்ரவங்க லிஸ்ட் வாங்கி ஆஃபிஸியலா ஒரு மெயில் போட்ருங்க, ஜெயன் தவற வேற யாரும் காண்பிரென்ஸ் ரூம்குள்ள இருக்க கூடாது அப்றம் ஜெயன்கிட்ட சொல்லி ஹரி, விஷ்ணுவ மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லுங்க. Everything should be perfect"
அனைத்தையும் தன் மனதில் குறிப்பெடுத்தவள், "யாரு சார் இந்த ஹரி, விஷ்ணு?"
"அது எதுக்கு உங்களுக்கு?" தன் மேஜையில் இருந்து சில பைலை எடுத்து வைத்து கொண்டே கேட்டான்.
அவனுக்கு சற்று அருகில் வந்தவள் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், "உங்க ஆபீஸ்ல யாருமே சைட் அடிக்கிற மாதிரி இல்ல அதா அவுங்களாச்சு நல்லா இருப்பார்களானுனுனு...." நிர்மிந்து அவளை ஒரு பார்வை பார்த்தவனின் கண்களில் இருந்த கூர்மை அவளை வாயடைக்க வைத்தது, "கேக்க மாட்டேன் ஆமா யாரு எப்டி இருந்தா நமக்கு என்ன சார்? வரவங்க நல்லா வேலை பாக்கணும் அது தானே முக்கியம்..." என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் சமாளித்தவளை ஒரு முறை முறைத்துவிட்டு தன்வேலையை தொடர்ந்தான் உதய்.
'என் தம்பிகளை பத்தி என்கிட்டயே சைட் அடிக்க கேக்குறா' உள்ளுக்குள் சிரித்தவன் வெளியில் இறுக்கத்துடன் தான் இருந்தான்.
"நா மொத சொன்னது நியாபகம் இருக்கட்டும் யாழினி எனக்கு உங்க ஒர்க் புடிக்கலான உங்கள வேலைய விட்டு தூக்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன். உங்க விளையாட்டு புத்தி எல்லாம் தூக்கி போட்டுட்டு வேளைக்கு வாங்க. எல்லாருக்கும் ஆப்பர்சுனிட்டீஸ் உங்கள மாதிரி ஈஸியா கெடக்காது. யூஸ் இட் வைஸ்லி"
'ஐயையோ என்ன லக்சர் குடுக்க ஆரமிச்சிட்டான்'
ஒரு 10 பைலை முன்னே வைத்தவன், "போய் வேலைய பாருங்க" என்று அவளை முந்தி அறையை விட்டு வெளியே சென்றான்.
ஜெயனை நோக்கி நடந்தவனை கவனித்த ஜெயன் வண்டியை தயார் நிலையில் வைத்திருக்க கூறி உதயனுடன் நடக்க ஆரமித்தான், "ஜெர்மன்ல இருந்து மாமா கெளம்பிட்டாரா?"
"ஒன் ஹௌற்கு முன்னாடி தான் சார் ஏர்போர்ட்ல வந்து இறங்கிருக்காரு."
"ம்ம்ம்"
"ஆனா பிலைட் கோயம்பத்தூர் புக் ஆகியிருக்கு அதே மாதிரி நாவலவன் சார் நேத்து கோயம்பத்தூர் போயிருக்காரு ஏதோ காலேஜ் விசியமா"
"ஆனா போயிருக்க மாட்டாரே"
"ஆமா சார்"
காரில் ஏறி அமர்ந்தவன், "கான்ஸ்டருக்ஷன் ஆபீஸ் போங்க" அதிர்ச்சியாவனன் தான் கேட்டது சரி தான என்று உதயனை பார்க்க அவன் இறுக்கமான முகத்துடன் இருப்பதை உணர்ந்து ஓட்டுனரிடம் தலை தலையசைத்து முன் இருக்கையில் அமர்ந்தான். கடந்த 5 வருடங்களாக அந்த பக்கம் ஒரு முறை கூட செல்லாதவன் இன்று ஏன் செல்கிறான் என்று அவனுக்கும் தெரியாமல் தான் இருந்தது
"அவருக்கு எதுவும் டவுட் இருக்கா என் மேல?"
"இல்ல சார் ஆனா சக்தி அங்க போனது அவருக்கு புடிக்காத மாதிரி பேசுனார்னு சக்தி சொன்னான். கிளைண்ட்ஸ் கிட்ட பேச இது வரைக்கும் சக்திக்கு சான்ஸ் கெடக்கலையாம் எம்பலோயீஸ் கிட்ட பேசுனத வச்சு பாத்தா ஏதோ தப்பு கண்டிப்பா நடக்குது கொஞ்ச டைம் எடுக்கும்"
"மாமா அங்க இல்லாதப்ப தான் ஈஸியா அவருக்கு சப்போர்ட் பண்றவங்கள கண்டு புடிக்க முடியும் வேகமா தெரிஞ்சுக்க சொல்லுங்க. நாவலவனோட 1 மந்த் பிலைட் டீடெயில்ஸ் பாருங்க அவரோட பி.ஏ காண்டாக்ட் செக் பண்ணுங்க ரெண்டு பேருக்கும் நடுல இருக்க கனக்க்ஷன் தெரிஞ்சிடும். யார் யார் டீல்ல சைன் பண்ண பிரச்னை பண்றது?"
"நாவலவன், ஜெயச்சந்திரன்"
புரிந்தது என்று தலையை ஆடியவன் தலை வெளியில் ஓடும் வாகனங்களிடம் திரும்பியது. ஆயிரம் சிந்தனைகளுடன் இருந்தவன் கவனம் மீண்டும் நினைவிருக்கு வந்தது அலுவலகம் அடைந்த பிறகே.
"காரை பின்னாடி கேட்ல விடுங்க" என்றான் வண்டி முன்வாசல் வழியே நுழையும் முன்பே.
ஓங்கி உயர்த்து இருந்த அந்த பத்து மாடி கட்டிடத்தின் கீழே உள்ள பார்க்கிங்கில் வண்டி நிற்க தன்னுடைய கோர்ட்டை கழட்டி வைத்தவன், "நீங்க வராதீங்க ஜெயன் நா சொல்றப்ப வந்தா போதும்" என்று ஜெயனின் அனுமதி அட்டையை வாங்கி உள்ளே சென்றான் பின் வழியாக.
தன்னை அடையாளம் கண்டு கொண்டவர்களிடம் தலையசைவை கொடுத்து 4 வது மாடிக்கு லிப்ட்டின் மூலம் சென்றவன் சிறிது நேரம் போக்கிடம் இல்லாதவன் போல் உலாவியவனின் கண்கள் மட்டும் அலை பாய்ந்தது அந்த வளாகம் முழுவதும், நேரம் கழிய மீண்டும் இயங்கு ஏணி (lift) மூலம் ஒன்பதாவது மாடியில் வந்து இறங்கினான், வந்தவன் நேராக சென்றது அவன் சகோதரர்களின் அறையை நோக்கிதான். கதவை திறக்க போனவனின் கைகள் உறைந்து நின்றது அவர்களின் பேச்சில்.
"ஆமாடா எனக்கும் அவ நடவடிக்கைளை கொஞ்சம் டவுட் இருந்துச்சு ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்டி தோனுதோனு நெனச்சு விட்டுட்டேன்" என்றான் ஹரி.
"அட கிழட்டு பயலே இத மொதயே சொல்லிருந்தா ஏதாச்சு பன்னிருக்கலாமே டா இப்ப வந்து டவுட் இருந்துச்சுனு சொல்ற அறிவு கெட்ட முட்டா நாயி" தெளிவாக ஒலித்தது விஷ்ணு ஹரியை அடிப்பது.
"அவா நம்மகிட்ட சொல்லிருந்தா கூட பரவாயில்ல யார்கிட்டயும் சொல்லாம அப்டி என்ன அவளுக்கு கொழுப்பு, அவனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா இத ஒரு பிரச்னையா மாத்திருவான். ஏன் அவளுக்கு கிரௌண்டுக்கு போகாம இருக்க முடியாதகோம். மனசுல பொம்பள ரொனால்டோன்னு நெனப்பு" கடிந்து விழுந்தான் விஷ்ணு, அனைத்தையும் வெளியில் இருந்து அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் உதய்.
"அவளுக்கு அதுல ஆர்வம் அதிகம் டா ஜெய்கிறாளோ இல்லையோ புட்பால் ஆடிட்டே இருக்கணும்னு ஸ்கூல் படிக்கிறப்ப கூட அடிக்கடி சொல்லுவா. அவளை போய் எப்டி டா வெளையாடத்தானு தடுக்குறது. நா வேணா உதய் அண்ணாகிட்ட பேசி பாக்கவா?" ஒரு தீர்மானத்துடன் தான் இருந்தது அவன் குரல். அந்த தீர்மானத்தையும் தாண்டி இவை அனைத்தும் அவனுக்கு முன்னதாகவே தெரியும் என்று உதய்யால் உறுதியாக கூற முடிந்தது.
"அவன்கிட்ட எல்லாம் ஒன்னும் பேச வேணாம், முடிஞ்சா அளவு மறைக்க பாப்போம் முடியலைன்னா அப்றம் பாத்துக்கலாம்" என்றான் விஷ்ணு.
"டேய் உனக்கு எல்லாமே அசால்ட்டா போச்சு ஏற்கனவே அவருக்கு நம்மள பத்தி எல்லாமே தெரியும்னு நனைக்கிரே இதுல ஆதவன் அண்ணா வேற நமக்கு முன்னாடி சொல்லிற போறாரு அப்றம் ரெண்டு நாள் கிளாஸ் எடுப்பார்" முகத்தை சுளித்து கூறினான் ஹரி.
தலையாய் ஆட்டி, "ஆமாடா வாய்ப்பு இருக்கு" ஆழ்ந்து யோசித்தவன் ஒரு பெருமூச்சு ஒன்று விடுத்து, "ஆனாலும் டா ஏன் அண்ணா வாத்தியார் வேளைக்கு எல்லாம் ட்ரை பண்ணாம இருந்துருக்கான், அதுலயும் இந்த அட்வைஸ் பன்னுறதுக்குனே நாலுபேரு சுத்துவான்களை அப்டி இவனையும் அனுப்பிருக்கனும்டா. செருப்பு போட்டா அட்வைஸ், ஜீன்ஸ் போட்டா அட்வைஸ், வண்டிய தொட்டா அட்வைஸ், ரோட்டுல கண்ணுக்கு குளுர்ச்சிய எதையாச்சும் பாத்துட்டு இருந்தா அட்வைஸ், ஒரு நாள் லீவு போட்டா அட்வைஸ், இவனுக்கு உதய் மாதவன்னு பேரு வாசத்துக்கு பதிலா அட்வைஸ் மாதவன்னு பேரு வச்சிருக்கலாம். உங்க பெரிம்மா தப்பு பண்ணிட்டாங்க" தன் சகோதரன் பேசிய அனைத்தையும் வெளியில் இருந்து சிரித்து கேட்டு கொண்டிருந்த உதய்யின் காதில், "டேய் நாம பண்ணி வச்ச வேலை அப்டி டா"
ஹரியின் வார்த்தை விழுந்ததும், "எல்லாமே தப்புனு தெரிஞ்சும் பண்ணுறாங்க" பின்னோக்கி சில அடிகள் எடுத்து வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் அவன் வந்திருக்கும் தகவலை உள்ளே இருக்கும் சகோதரர்களிடம் தெரிவிக்க கூறி வெளியில் காத்திருந்தவன் சில நிமிடங்கள் கடந்த பிறகு கதவை தட்டி உள்ளே நுழைந்தான்.
"என்னடா அவன் ரூமுக்குள்ள வந்த மாதிரி அசால்ட்டா நடந்து வர்றான், இவன் இங்க வர மாட்டான்னு தெரிஞ்சு தான இந்த கான்ஸ்டருக்ஷன்க்கு வந்தோம் இப்ப இங்கயும் வர அரமிச்சிட்டானா?" முணுமுணுத்தான் ஹரி.
"நாயே நமக்குன்னு ஒரு ரூமே தனியா இருக்க கூடாதுனு சொன்னான் இப்ப குளுகுளுனு எ.சி ரூம்ல இருக்கத்துக்கே அவன் என்ன பின்னாலும் நாம இப்ப கண்டுக்க கூடாது. வாய மூடு கிளாஸ் ஆரமிக்க போகுது"
"எந்த ப்ரொஜெக்ட்ல ஒர்க் பண்ணுறீங்க?" வழக்கமான அதிகார தோரணையே இருந்தது அவன் குரலில் அதிலும் இன்று சற்றே கோவமும் மகிழ்ச்சியும் கலந்து தெரிந்தது.
"புதுசா ஸ்டார்ட் பண்ற அந்த 30 floors அபார்ட்மெண்ட்"
ஹரியை பார்த்தவன், 'நீ?' என்று கேள்வியுடன் பார்த்தான்.
"நானும் அத தான் பாக்குறேன்"
"48 முக்கியமான கான்ஸ்டருக்ஷன் ஒர்க்ஸ் போயிடு இருக்கு, சென்னைல 7. இந்த 7 ப்ரொஜெக்ட்ல நீங்க சொன்ன ப்ராஜெக்ட் லிஸ்ட்ல எங்க இருக்குனு எனக்கு எடுத்து காமி ஹரி, அப்றம் விஷ்ணு எனக்கு அந்த டீடெயில்ஸ் சொல்லுவான்" என்று அவன் எதிரில் இருந்த மடிக்கணினியை காட்டினான்.
கண்மணிகள் வெளியில் வந்துவிடும் அளவிற்கு முழித்தவர்கள் என்ன கூறுவதென்று அறியாமல் விழித்தனர், கனவில் கூட உதய்யை அங்கு எதிர்பார்க்கவில்லை அவர்கள். அதிலும், இவ்வாறு எந்த ப்ராஜெக்ட் எந்த இடத்தில இருக்கின்றது என்று தெரியாதவர்களிடம் அதன் விளக்கத்தை கேட்டால் என்ன கூறுவார்கள் பாவம்.
"இல்ல இல்ல அந்த அபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட் இணைக்கு டிஸ்கஸ் பண்ணது நாங்க மெயின்னா கான்செண்ட்ரேட் பண்றது மெட்ரோ சென்னை ப்ராஜெக்ட்ல. என்னடா?" என்ன பேசுகிறான் என்று பார்த்த ஹரியை தன்னுடைய சூ காலால் மிதித்து சுயநினைவுக்கு கொண்டு வந்தவன், "சொல்லுடா கேக்குறாங்கல்ல?"
"ஆமாண்ணா மெட்ரோ ப்ராஜெக்ட் தா ஒன்னு வீக்கா பாக்குறோம்" சமாளித்தவனைன் கண்கள் தன்னை சந்திக்காததை உணர்ந்தவன், "எக்ஸ்பிளைன் பண்ணு"
'அட பாவி சும்மா விட்ருந்த கூட திட்டு கம்மியா விழுந்துருக்கும், சும்மா கெடந்த சனியனை பனியன்ல போட வச்சிட்டானே' விஷ்ணுவை ஹரி முறைக்க, அசடு வாய்ந்தவன், 'நா பாத்துக்குறேன்' என்று புன்னகை சிந்தி அருகில் இருந்த ஒரு அலமாரியில் ஒரு பெரிய பிளான் பேப்பரை எடுத்து மேஜையில் விரித்தான்.
"இந்த ரெட், கிறீன் டாட்டெட் லைன்ஸ் (dotted lines) எல்லாம் அண்டர் கிரௌண்ட், திக் லைன்ஸ் எல்லாம் elevated. இந்த எல்லோ காலர்ஸ் எல்லாம் கான்ஸ்டருக்ஷன்ல இருக்கது. பர்ஸ்ட் எல்லா ட்ரைன்ஸோட ஸ்டார்டிங் பாயிண்ட் சென்ட்ரல் தான். மொத்தம் நாலு பத்ஸ் கட்டணும். இதுல லாங்கஸ்ட் பாத் இந்த பிங்க் கலர் பாத் தான் சென்ட்ரல் ல இருந்து கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டினு நெறய மெயின் பிளாசிச கவர் பண்ற பாத் இது தான். இதோட டோடல் coverage கிலோமீட்டர்ஸ்ல பாத்தா 80 kms கு மேல வருது. இது ஆகுப்பை பண்ற இடம் கிட்ட தட்ட....." வளைத்து வளைத்து அந்த அட்டையில் இருக்கும் அனைத்தையும் கூறியவனின் கண்களில் இருக்கும் அந்த ஆர்வம் குறையாத பார்வை உதய்யின் கண்களை வேறு பக்கம் நகர்த்தவிடாமல் தடுத்தது. ஒரு அரை மணி நேர விளக்கத்திற்கு பிறகு இனொரு பிளான் பேப்பரையும் மடிக்கணினியையும் எடுத்து விவரிக்க அரமித்தவனை தடுக்க மனம் இல்லாமல் அவன் கூறியதை கேட்டு கொண்டு இருந்தான் உதய்.
ஹரியும் அவனுடன் சேர எதிர்பார்க்காமல் நடந்த அந்த சிறிய மீட்டிங் சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது, அவர்கள் கருத்தில் சில திருத்தங்களை கூறியவன், மேலும் சில ப்ரொஜெக்ட்ஸ் பற்றிய முடிவுகளையும் கூறி சகோதரர்களின் ஆலோசனையையும் தெரிந்து கொண்டான்.
விளையாட்டை மட்டுமே வீட்டில் உள்ளவர்களிடம் காட்டிய ஹரியும், விஷ்ணுவும் சகோதரன் கண்களில் மட்டும் வேறு விதமாகவே தெரிந்தனர். அதன் விளைவு, இன்று கண்முன் அவர்களின் ஆளுமையை கண்டவன் மனதில் கவலை சிறிது நீங்கியது. ஆனாலும் அனைத்தையும் மீறி இருவரும் அவனிடம் நெருங்க விரும்பவில்லை.
"நாளைக்கு சார்ப்பா 9 மணிக்கு மெயின் ஆபீஸ்க்கு வந்துருங்க, போர்டு மீட்டிங் இருக்கு" என்று அறிவிப்பை கூறி வெளியில் சென்றவன் கால்கள் தன்னை அறியாமல் நிலை குழைவதை உணர்ந்தவன், மனதிற்
கு பெரிய கட்டு போட்டு வெளியில் சென்றான்.
***********************************
(தொடர்ந்து கீழே படிக்க)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
"டேய் இந்த கை லைட்டா ஒதருதா பாரு?"
தமிழ் வீட்டு மடியில் நிலா வெளிச்சத்தில் தமிழ், ஆதி, கெளதம் மூவரும் தரையில் படுத்து வானத்தை பார்த்து கொண்டு இருந்தனர். ஆதி நடுக்கத்தில், தமிழ் யோசனையில், கெளதம் கனவில். மூவரும் அவரவர் உலகில் பயணித்து கொண்டு இருந்தனர். இரவில் வீசும் அந்த குளிர் காற்று அவர்களின் எண்ணத்தை மேலும் காற்றை போல நிலை இல்லாமல் பறக்க வைத்தது.
அமைதி பதிலாய் கிடைக்க கௌதமை திரும்பி பார்த்தவன், அவன் வானத்தை பார்த்து சிரித்து கொண்டு இருப்பதை உணர்ந்து தனக்கு மேல் இருக்கும் சொம்பில் இருந்த தண்ணீரை மேலே ஊற்றினான். ஆனாலும் முகத்தை துடைத்து மீண்டும் சிரிக்க ஆரமிக்க காலை ஓங்கி ஒரு மிதி வைக்க வழியால் துடித்த கெளதம், "டேய் போன் பேச கூடாதுனு வாங்கி வச்சிட்ட, சேரி பேசுவனு பாத்தா கனவு காண போய்ட்ட இப்ப எதுக்குடா என்ன அடிக்கிற சனியனே"
"அவனை மாதிரியே நாமளும் சாமியாருனு நெனக்கிறாண்டா இவன்" என்றான் தமிழ்.
"யாரு சொன்னா நா ஒரு ஆழ உசார் பண்ணிட்டேன்" அசடு வழிந்தான் ஆதி.
"தம்பி இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேணாம் உனக்கு வர்ற ஒரு வார ஈர்ப்பு எல்லாம் கணக்கு இல்ல. அவன் கல்யாணம் பணிக்க போறான். நா லவ் பண்றேன். நீங்க 'பிலேகாட்'. ஒரு மோகம் இருந்தா கூட உன்ன ஒரு வகைல பொறுக்கின்னு சேக்கலாம் நீ பொழுது போக்குக்கு வாரத்துக்கு ஒரு பொண்ணு கூட கடலை மட்டுமே போட்டுட்டு இருக்க. வாய் பேசவே தகுதி இல்லாதவன் நீ" ஆதி போர்த்தி இருந்த போர்வையை எடுத்து தலையை துடைத்தவன் மீண்டும் தன் போர்வைக்குள் புகுந்தான்.
கெளதம் கூறியதை கேட்ட தமிழ் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரமித்தான், "மச்சா பாத்தியா உன்ன இந்த ஆக்டோபஸ் வாயன்லாம் பேசுற நிலமைல இருக்க"
"ஏய் ச்சீய் அங்குட்டு போய் தொலை" என்று தன் மேல சிரித்தபடியே இருந்த தமிழை தள்ளி விட்டவன், கௌதமை மீண்டும் எழுப்பி, "டேய் மச்சான் என்ன வேணா பேசிக்கோங்கடா ஆனா இந்த கை ஒதறலுக்கு ஏதாச்சு வழி சொல்லுங்கடா"
"மொடா குடிகாரன் மாதிரியே நடிக்கிறியேடா" என்றான் தமிழ்.
"இந்த நேரத்துல சரக்குக்கு எங்கடா போறது நேரம் கேட்ட நேரத்துல இதெல்லாம் கேப்ப. கீழ உன் தங்கச்சி வேற இருக்கு மூடிட்டு படுத்து தூங்கு" என்று மீண்டும் படுக்க சென்றவனை நிறுத்தினான் ஆதி.
"டேய் எல்லாம் பக்காவா என் வண்டில இருக்கு. என் தங்கச்சி இங்க இருக்க நால தான் நா தைரியமா குடிக்கலாம்னு சொல்றேன். ப்ளீஸ்டா போன வாரமே குடிக்க வேண்டியது"
நண்பர்கள் திருமணம், பார்ட்டி என்று எல்லை கோடு வகுத்தவன் நாட்கள் செல்ல செல்ல மாதம் இருமுறை கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு மாறி இருந்தான். கெளதம், தமிழ் பல முறை எடுத்து கூறியும் கேட்காதவன் சிகரெட்ட, குடி பழக்கத்தில் மட்டும் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டனர் என்று தெரிந்த பிறகு பூனை போல் வந்து மறைத்து வைத்து இருந்த இரண்டு பைகளை எடுத்து மாடிக்கு விரைந்து ஓடினான். அங்கே கெளதம், தமிழ் ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருக்க தன் வேளையில் மட்டுமே குறியாக இருந்தான் ஆதி. ஒரு பாட்டில் எடுத்து கடகடவென குடிக்க ஆரமித்தவன் பாதி தீரும் வரை மூச்சு கூட விடவில்லை.
திருப்தியாக குடித்தவன் தன் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பத்த வைத்தான் முகத்தில் ஒரு சிரிப்புடன், "நா வென வேணாம்னு தான போறேன் ஆனா ஏண்டா எனக்கு இப்புடி எல்லாம் நடக்குது?" வாழ்க்கையே வெறுத்தவன் போல் கூறி அந்த கேடான புகையை ஆழ்ந்து உள் இழுத்தான்.
"அரை போதை நாயே குடிச்சு முழுசா ஒரு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள அரமிச்சிருச்சு" என்று அங்கே இருந்த ஒரு சிக்கன் கரி துண்டை எடுத்து உண்ண ஆரமித்தான் தமிழ். ஆனால் கெளதம் அவன் கூறியதில் சற்று புருவம் உயர்த்தி பார்த்தவன், "என்னடா ஆச்சு" என்றான்.
"நாம எத பாத்து கத்துக்குறோமோ அது மாதிரி தான நாம ஆகமுடியும்?" மீண்டும் ஒரு மடக்கு குடித்தவன் கௌதமை நோக்கி கேள்வி எழுப்பினான், ஒன்றும் புரியாதவன் ஆமாம் என்று தலையை மட்டுமே அசைக்க முடிந்தது அதை மீறி மனதில் இருக்கும் வலியை மறைக்கும் ஆதியின் கண்களில் அவனால் எதுவும் காண இயலவில்லை.
தன்னால் இயன்ற வரை அவன் வலியை எவரிடமும் காட்டிகொல்லாதவன் வழக்கமாக போதையில் இருக்கும் பொழுது செய்யும் ரகலையை எங்கோ தொலைத்து இருக்கிறான் என்று கௌதமால் யூகிக்க முடிந்தது, "ஆரமிச்சிட்டாண்டா இவன். ஒரு பாட்டில் புல்லா காலி பண்ணிட போதும் படுத்து தூங்கு" என்று தமிழ் உறங்க சென்று விட கௌதமால் அவனை இந்த நிலைமையில் விட்டு தூங்க முடியவில்லை. கையில் பாட்டிலோடு எழுந்த ஆதி சுவற்றின் மீது ஏறி அமர்ந்தான் வானைத்தை வெறித்து.
"ஒரு மாதிரி இருக்கு மச்சா" தன் கையை காண்பித்தவன், "இங்க பாரு என் கை இன்னும் நடுங்குது. போதைக்கு இல்ல மனசுல என்னமோ பெருசா நடக்க போகுதுனு சொல்லுது, கண்டிப்பா எனக்கு புடிக்காத ஒரு விசியம் நடக்க போகுது" மீண்டும் ஒரு சிகெரெட் எடுத்து வாயில் வைத்தவன் அதை பத்த வைக்கும் பொழுது நடுங்கிய கைகளை கோபத்துடன் பார்த்து அந்த சிகரெட்டை தூக்கி எறிந்தான்.
"இன்னைக்கு ஒருத்தர பாத்தேண்டா ஆபீஸ்க்கு வெளிய. நல்ல டிப் டாப்பா இருந்தாரு ஒரு அம்பது வயசு இருக்கும், கோட் சூட் போட்டு சும்மா தல தளன்னு இருந்தாரு. இருவது வயசுல கண்டிப்பா செம்மையை இருந்துருப்பாரு" கண்களை சுருக்கி ஆதியை பார்த்தவன், 'கெழவன கூட விட்டு வைக்க மாட்டிக்கிறான்'
"ஆனா அவரு பார்வைல ஏதோ ஒரு திமிரு, கர்வம் இருந்துச்சு. என்ன மேல கீழ எற இறங்க பாத்தாறுடா சரி தெரியாம பாக்குறாருனு அவரை கிராஸ் பண்ணி போனேன் ஆனா அவரு என் பேர கரெக்டா சொல்லி கூப்டாரு. எப்டி என் பேரு தெரிஞ்சதுனு சுத்தமா தெரியல அவரை முன்ன பின்ன நா பாத்தது கூட இல்ல. என்னனு கேட்டப்ப அப்றம் அவரே வந்து என்கிட்ட தனியா பேசணும்னு சொல்லி பக்கத்துல இருக்க ஒரு காபி ஷாப்க்கு கூட்டிட்டு போனாரு, எனக்கே தெரியாம நா போனே அவர் கூட. அப்ப தான் சொன்னாரு அவருக்கு என் அப்பாவை தெரியுமாம்" ஏதோ ஒன்று பெரிதாக நிகழ்ந்து உள்ளது என்று யூகித்தான் கெளதம் துணைக்கு தமிழை தேட அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
"என்ன நீங்க முன்ன பின்ன பாத்துருக்க மாட்டீங்க தம்பி உங்க அப்பாவை எனக்கு நல்ல தெரியும் அடிக்கடி தொழில் விசயமா சந்திச்சுக்குவோம் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியே உங்க அப்பா தொழில் அவளோ சுத்தமா இருக்கும்னு நினறயபேர் சொல்லி கேள்வி பட்ருக்கேன்"
அவர் மீண்டும் பேசும் முன்பே, "உங்க பேர் என்ன?" தந்தையை பற்றி கேட்ட நொடி அவன் கண்களில் வந்து ஓடிய வெறியையும், கோபத்தையும் கண்டவர் இவனை தவிர வேறு யாவராலும் அவருக்கு உதவி செய்ய இயலாது என்று ஆணித்தனமாக நம்பினார்.
கண்களில் பெருமை மின்ன, "விருத்தாச்சலம்"
தன்னை படித்தவன் அமைதி காக்க மேலே தொடர்ந்தார், "அதுக்கு அப்றம் ஒருதடவை நா உன் அப்பாவை பாத்தேன். என்ன மனுஷன்யா சொக்க தங்கம் பேசுற வொவொரு வார்த்தையையும் சும்மா செதுக்கி வச்ச மாதிரி தெளிவா இருந்துச்சு. ரொம்ப புடிச்சிருந்துச்சு அவரோட பேச்சு குணம் எல்லாமே. சேரி அப்புடியே அவர் கூட சேந்து வேலை பாக்கலாம்னு அவர்கிட்ட பேசுனேன். நிமிஷம் வேஸ்ட் பண்ணாம முடியாதுனு சொல்லிட்டாரு"
"ஏன்?" கேட்டான் ஆதி.
"லாபமோ நஷ்டமோ தனியாவே பாத்துக்குறேனு சொல்லி வெலகிட்டாரு. நானும் ஒன்னும் நினைக்கல அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு அப்பா தவறிய செய்தி வந்துச்சு, அம்மாவை பாத்து தொழிலுக்கு உதவி பண்ணலாம்னு வந்தேன் உங்க வீட்டுக்கு. அப்ப தான் உங்க அம்மா என்கிட்ட அந்த பொறுப்பை குடுத்தாங்க ஒரு கண்டிஷனோட அந்த தொழிலை வர வருமானதுல வெறும் 5 பெர்ஸன்ட் ப்ராபிட் மட்டும் தான் தர சொன்னாங்க அதுவும் உங்க பேர்ல டெபாசிட் பண்ண சொன்னாங்க, என் கைல அந்த பொறுப்பை எடுத்த கொஞ்ச நாளையே உங்க அம்மாவும் தவறிட்டாங்க"
"சார் ஒரு நிமிஷம் தப்பா நனைக்காதிங்க இப்ப அந்த பணத்தை குடுக்க தான் நீங்க வந்துருந்தா ப்ளீஸ் எனக்கு அது வேணாம் நீங்களே வச்சுக்கோங்க, எங்க அம்மா பிள்ளை கஷ்ட பட கூடாதுனு நெனச்சு சொல்லிருப்பாங்க. என் கைய நம்பியே நா பொழச்சிக்குவேன். இப்ப அது உங்க கைக்கு போச்சோ அப்பயே அது உங்க பணம்"
ஆதியை தெளிவாக கவனித்தனர் "இது தான் தம்பி வளர்ப்பு. உங்க அப்பா அம்மா குணம் உங்களுக்கு அப்புடியே இருக்கு. ஆனா நா இன்னும் முழுசா சொல்லி முடிக்கல" ஆதி தலையை அசைக்க அவர் மீண்டும் தொடர்ந்தார், "நா உங்க அப்பா தொழிலை எடுத்து 8 வருசமா நடுத்துனேன் நல்லா போய்ட்டு இருந்துச்சு. உங்க அம்மா சொன்ன மாதிரி நா அத நடத்துறது உங்க யாருக்குமே தெரியாது ஏன் உன்னோட பிரிஎண்டோட அப்பாவுக்கு கூட தெரியாம பாத்துக்குட்டேன். ஆனா ஒரு 6 வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் வந்துச்சு அந்த வேலைய பாக்க கூடாதுனு. நா எடுத்து வக்கிர வொவொரு அடிக்கும் எனக்கு தோல்வியும், என் வீடு ஆளுங்க ஒருத்தரோட உயிரும் ஆபத்துல வந்து நின்னுச்சு. ஆனாலும் அத தொடர்ந்து பண்ணுனேன், உன்ன கூட அடிக்கடி அந்த ஆபீஸ்க்கு வெலிய பாப்பேன் ஆனா உள்ள கூப்புடா முடியாத சூழ்நிலை. அடுத்து நாள் நகர நகர என்னால தாங்க முடியாத சூழ்நிலை ஒரு நாள் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து அவசரமா வர சொல்லி சொன்னாங்க போய் பாதப்ப உங்க அப்பா கட்டுன பல கட்டடங்கள் தரமே இல்லாம இருக்குனு ரிப்போர்ட் வந்துச்சு அதுல 4 கட்டிடங்கள் இடிஞ்சும் விழுந்துருச்சு"
ஆதி கண்களை மூடி தன்னை அமைதி படுத்தி கொண்டிருந்தான். எப்படி மறக்க முடியும் அந்த நாட்களை கல்லூரி படித்து முடித்து தந்தையின் தொழிலை பார்க்க நினைத்தவனுக்கு பரிசாக கிடைத்தது தொலைக்காட்சிகள் அவர் புகைப்படத்தை உலகிற்கே காட்டி கொண்டிருந்தது ஏளன பேச்சுகளுடன். அவரை சபிக்காத ஆட்கள் இல்லை, அது வரை எட்டி பார்க்காத உறவுகள் வீடு தேடி வந்து கூறிய சொற்கள் காதில் விழுந்தது தானே. கட்டிட கலையை பற்றி அவன் தந்தை பேசும் பொழுது அவர் கண்கள் மின்னுவதை கண்கூடாக பார்த்தவனுக்கு அவன் தந்தை இவ்வாறு செய்வார் என்று நம்ப இயலாத காரியமாக இருந்தது ஆனால் தன்னையும் மீறி அவர்மேல் கோவம் தான் வந்தது அவனுக்கு. எப்படி இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் அவரால் செய்ய முடிந்தது என்று தந்தையை வெறுக்கவும் செய்தான்.
"உங்க அப்பாவோட நேம்ல இருந்த லைசன்ஸ்ல தான் நானும் வேலை பாத்ததால என்னால வேலைய தொடர்ந்து பண்ண முடியாம இந்த ஊற விட்டே போய்ட்டேன் சிங்கப்பூக்கு. கம்பெனியையும் கவர்மென்ட் சீல் வச்சிடுச்சு. ஆனா தொடர்ந்து எனக்கு உறுத்திட்டே இருந்துச்சு அதனால இந்த ப்ராப்லம் பின்னாடி இருக்கத விசாரிக்க சொன்னேன் போன மாசம். அப்ப தான் தெரிஞ்சது உங்க அப்ப மேல எந்த தப்பும் இல்லனு அவர் செஞ்ச வொவொரு வேலையும் தரமான வேலை. ஒருத்தர் உங்க அப்பா பேர கெடுக்குறதுக்குனே நடந்த சதி வேலை அதுனு தெரிஞ்ச ஒடனே சொல்லணும்னு தான் தம்பி உங்கள பாக்க வேகமா வந்தேன்"
"யாருனு தெரிஞ்சதா சார்?" என்று கேட்டவனது கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது. தந்தையின் பெயரை ஊருக்கே தவறாக காட்டியவன் தன்னையும் தந்தைக்கு எதிராக மாற்றி வெற்றியும் பெற்றிருந்தான். யாரை போல் வர கூடாது என்று எவரேனும் கேட்டால் தந்தை என்று யோசிக்காமல் கூறுவான் அவ்வளவு கோவம் இருந்தது ஆதிக்கு ஆனால் இன்று அதற்கு துளி கூட அர்த்தம் இல்லை என்று தெரியும் பொழுது தன்னையே வெருகதான் செய்தான். அவர் தெரிந்தது என்று தலை அசைத்தார் உள்ளுக்குள் தன் திட்டம் வெற்றி பெற போகின்ற ஆனந்தத்தில்.
"யார் அது?" கெளதம் கேட்க...
கையில் இருந்த பாட்டிலை கோவத்தில் எரிய அது தண்ணி தொட்டியில் பட்டு கண்ணாடி சில்கள் சிதறும் சத்தம் பலமாக கேட்டது. தூக்கத்தில் இருந்த தமிழ் அலறி அடித்து எழும்ப...
"உதய் மாதவன்" என்று வெறுப்பு நிறைந்த ஆதியின் வார்
த்தைகளே அவன் காதில் விழுந்தது.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Hari Vishnu negga la da ethu ennama explain pandriga🤩🤩 udhai ku Kandipa santhosama tha irukum Avan athavathu sollidu poe irugalam thambi ya pathu 😁
Cha enna ethu aadhi udhai name ya solluran ethu yaru plan ayoo ini enna nadaga poguthu 😲😲😲
 
Messages
37
Reaction score
4
Points
8
Hari Vishnu negga la da ethu ennama explain pandriga🤩🤩 udhai ku Kandipa santhosama tha irukum Avan athavathu sollidu poe irugalam thambi ya pathu 😁
Cha enna ethu aadhi udhai name ya solluran ethu yaru plan ayoo ini enna nadaga poguthu 😲😲😲
ama oru varthai paratiruntha avanungalum santhosapatrupanunga
 
Top