• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 34 ❤️ (pre-final)

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap 34

சிறைச்சாலையை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரன் முகம் எதையோ சாதித்த உணர்வில் திளைத்திருந்தது. தன்னுடைய பி.எ-வை பார்த்தவர் கை காட்டி வாகனத்தைத் திருப்பி வரக் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஜம்பமாக ஏறி முன்னிருக்கையில் அமர்ந்தார்.

வாகனம் மெதுவாகச் செல்ல, "ஏன்யா அவன் எவ்ளோ பெரிய ஆளு, மயிறு, மட்டுனு அந்த சீன் குடுத்த நீ? இப்போ என்னையா ஒரே பிளான்ல பொட்டுனு போய்ட்டான்" ஏளனமாகச் சிரித்தவர் அவன் தோளில் விளையாட்டாக அடித்தார்.

'தரித்திரியம் புடிச்சவனே நீ சாகுறதும் இல்லாம என்னையும் கூடயே சேந்து குழில தள்ளு. மூடிட்டு வாடா' மனதில் தான் நினைக்க முடிந்தது பி.எ-வால். வாயை விட்டு ஏதாவது பேசினால் இந்த கிழவனிடம் யார் அடி வாங்குவது. சிரித்துச் சமாளித்தான் அவன்.

"ம்ம்ம் அப்றம் என்ன சரியா மூணாவது நாள் என்ன வெளிய எடுத்திருக்க... குடும்பமே ஒரே கூப்பாடு போட்ருப்பானுகளே... பாக்க கண் கோடி வேணும். கருமாதி இன்னைக்கா?"

"சார்..." ஈஸ்வரனுக்குப் பதில் கூற முடியாமல் அமைதியாய் இழுத்தான் அவன் பி.எ.

"சும்மா சொல்லுயா... எதுக்கு இந்த பதட்டம்? என் மாமன் எப்டியும் இன்னும் நொந்து மூலைல போய் சுருண்டுருவான். அவன் தம்பிய ரெண்டு தட்டு தட்டிவிட்டா அடக்கிடலாம். என் மாப்பிள்ளை நான் 'ம்ம்' சொன்னா யோசிக்காம அப்டியே செஞ்சிடுவான்.

ஹரியை விட்டு தள்ளு, ஆதவன் உதய் இல்லனா வர மாட்டான். அந்த ஆதியைத் தான் என்ன பண்ணாலும் கொஞ்சம் கஷ்டம் பரவால்ல, கைய கால ஒடச்சு போட்டுடலாம்"

அத்தனையையும் இந்த மூன்று நாட்களில் யோசித்து வைத்தவர் போல் மனதிலிருந்த திட்டத்தை எல்லாம் வெளியில் உடைத்தார். வலது காதின் அருகே ஏதோ உரச, தன்னுடைய காதை துடைத்து அமைதியாய் இருக்க மீண்டும் அந்த காதில் உரசியது ஏதோ ஒன்று,

"தோ இங்க தான் இருக்கு ஒடச்சு காட்டு பாப்போம்" திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பி ஈஸ்வரன் பார்க்க இன்னும் இன்னும் அதிர்ச்சி.

தன்னுடைய ஆட்கள் தான் பின்னால் அமைத்திருக்கின்றனர் என்று எண்ணிய மனிதருக்கு, மூவர் இருக்கையில் நால்வர் அமர்ந்திருந்த ஆதி, கெளதம், தமிழ், ஆதவன் தான் தெரிந்தனர்.

'என்ன என்ன பேசிவிட்டோம், நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமேடா' என்று தன்னுடைய பி.எ முகத்தைக் கோரமாய் பார்த்து வைத்தார்.

அவனோ உன்னைப் பார்த்தால் தானே பிரச்சனை என்று தெரியாமலும் அவர் பக்கம் திரும்பவில்லை. மீண்டும் ஆதி பக்கம் திரும்பும் பொழுது அவனின் ஷூ அவர் கன்னத்திலே பட உஷ்ணம் ஏறியது பன்மடங்கு.

"கால் எடு டா" என்றார் ஈஸ்வரன் ஆணையாக. அவனோ சிறிதும் அலட்டாமல் காலை நன்றாக ஆட்ட அவன் கால் மீண்டும் தன் முகத்தில் படாமல் இருக்கச் சற்று பின்னால் தள்ளி அமர்ந்தார்.

"டேய் வண்டிய நிறுத்து" வாகனம் நிற்கவில்லை.

மாறாக வேகமெடுத்தது நேஷனல் ஹைவேயில் அந்த வெள்ளி நிற ஆடி Q5. அதுவே தன்னுடைய பி.எ தன்னை சிறையில் வந்து சந்திக்காத பொழுது என்ன நடந்திருக்கும் என்று உறுதி கூறியது.

"ஏன்டா மாமா ரெண்டே வாரத்துல எளச்ச மாதிரி இல்ல?" - தமிழ்

"பின்ன அங்க போய் பத்து பாத்திரம் எல்லாம் தேச்சா..." கெளதம் இழுத்தான்.

"பாத்தரம் மட்டுமா கக்கூஸ் கூட கழுவனுமாம்... கழுவிருப்பாரு கழுவிருப்பாரு" - ஆதி

"கக்கூஸ் கழுவுற மாதிரியா இருக்காரு நம்ம மாமா? அவரு சல்மான் கான் மறு பிறவிடா... முகத்தை பாரு அந்த கெத்து உனக்கு வருமா?" - ஆதவன்

"அதுவும் சரி தான் கக்கூஸ் கழுவுறது கூட ஒரு தொழில் தானே... என்ன மாம்ஸ்?" துப்பாக்கி மட்டும் கையிலிருந்தால் நால்வரையும் நெற்றியிலே சுட்டு தள்ளும் ஆவேசம் அந்த மனிதருக்கு. அடக்கினார் அந்த நொடியில்.

"பேர் புகழ் பணம் பாதுகாப்புன்னு இருந்தவனையே ஒரே நாள்ல மண்ணுக்குள்ளே அனுப்புனேன். நீங்க எல்லாம் பொடி பசங்க... ஜாக்கிரதை"

நீ கூவிக்கொண்டே இரு என்று கைப்பேசியை எடுத்து ஹரியின் எண்ணிற்கு வீடியோ காலில் அழைத்தவன் ஈஸ்வரன் பக்கம் திரையை நீட்டினான். கட்டிலில் படுத்திருந்த உதய்யின் வலது பக்கம் அமர்ந்து உறங்கியவனின் தலையைக் கண்ணீர்த் துளிகளுடன் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார் நளினி. அவனின் இடது பக்கம் ஏக்கத்தோடு யாழினியும் அருகில் சகோதரிகளும் சகோதரனின் ஒரு பார்வைக்காக ஏங்கிக்கொண்டிருந்தனர்.

"மெயின் பிச்சர காமிடா" ஆதி கூறவும் ஹரி திரையைத் திருப்பினான். உதய்யின் தந்தை, சித்தப்பா, விஷ்ணு என அத்தனை மனிதர்களும் அங்குச் சங்கமித்திருந்தனர்.

அதிர்ந்து முழித்த ஈஸ்வரனின் பார்வையே இது புடிக்கவில்லை என்று கூற, இணைப்பை துண்டித்தான் ஆதி.

"இவன்..." இழுத்தார் ஈஸ்வரன்.

"உயிரோட பத்தரமா அவன் குடும்பம் கைக்குள்ள இருக்கான்" - ஆதி


அவர் கையில் ஒரு பத்தரத்தையும் ஒரு பத்திரிகையையும் கொடுத்தான். இரண்டுமே அவர் சிறிதும் கனவில் கூட யோசிக்காதவை.

"மாம்ஸ் நீ இனி காலம் எல்லாமே சிங்கள் சிங்கமா இருக்கலாம். பொண்ணு இப்டி பட்ட ஒரு கேடு கெட்ட அப்பன் வேணாம்-னு லவ் பண்ண பையன கல்யாணம் பண்ணி சந்தோசமா போக போறா... பொண்டாட்டி, ஒரு கம்னாட்டி, கஸ்மாலத்த திரும்பியும் பாக்க மாட்டேன் னு ஒரே அடம்" - தமிழ்

"நாங்களும் எவ்வளவோ கெஞ்சி பாத்தோம் மாமோய் ஆனா மனம் கல்லா மாறிடுச்சு போல... முடிஞ்சா ஜெயில்ல கெடந்தே சாவட்டும்னு டிவோர்ஸ் கேக்குது..." - ஆதவன் பொய் பரிதாபம் காட்டினான் அவர் முன்னால்.

"அவ்ளோ சிகரம் நீ செத்தா எங்களுக்கு என்ன வேலை? நாங்க எதுக்கு இருக்கோமாம்?" குரலில் கேலியும் கண்களில் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் வெறியோடு பேசிய ஆதியின் முகம் முதல் முறை திகிலை பரவவிட்டது ஈஸ்வரன் ஆழ் மனதில்.

"அதான் பதமா பாத்து செஞ்சு வீட்டுக்கு அனுப்புறோம்னு சொல்லி உன்ன வெளிய எடுத்தோம்" - கெளதம்

அவர் கையில் ஒரு பேனாவை கொடுக்க கைகள் வாங்க மறுத்து சிலையாகி போனது.

"அப்றம் என்ன இனி செட்அப் கூட ஜாலியா சுத்தலாம்" - தமிழ்

"உனக்கு அந்த கதையே தெரியாதா தமிழு? அந்த அம்மா கிட்ட இந்த ஆளுக்கு எதுரா சாட்சி கேக்க போயிருந்தோம். 'உங்களுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்'-னு ஜெயனகிட்ட வந்து ஒரசிட்டு நிக்கிது"

அன்று நிகழ்ந்த நினைவில் ஆதி வாய் விட்டு நண்பனின் தோளில் சாய்ந்து சிரிக்க, நண்பர்களும் அவனுடன் இணைந்தனர் சிரிப்பில்.

"அவன் மெரண்டுட்டு ஓடுறான். பாவம் மாமா மேட்டர்ல ரொம்ப சுமார் போல, மாமி இப்டி தாவுது" மீண்டும் ஆதி வயிற்று வலி ஏற்படும் அளவிற்கு ஈஸ்வரனை பார்த்து சிரிக்க அவன் சட்டை காலரை பிடித்து முகம் சிவக்க முறைத்தார்.

ஆனால் அவனோ குதூகலத்தில் அல்லவா இருந்தான் சாதாரணமாக அவர் கையை சட்டையிலிருந்து எடுத்தான்.

"யோவ் மாமா நீ என்ன பண்ணாலும் உருப்படியா பண்ண மாட்டியா? இப்போ பாரு எவன் எந்திரிக்கவே மாட்டான்னு சந்தோசமா துள்ளிட்டு இருந்த, அவனே உன் முன்னாடி நிக்க போறான்"

"அவன் வர்ற வரைக்கும் நாங்க உனக்கு கம்பெனி தர்றோம்" தமிழ் தொடங்கியதை ஆதவன் முடித்து வைத்தான் மனதில் ஏதோ நினைத்தவனாய்.

ஆதி அமைதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டான். "யோவ் என்னயா நடக்குது இங்க? இவனுக கார்ல தான் இருக்கானுங்கனு ஒரு வார்த்தை சொல்லாம வர்ற? கட்சி மாறிட்டியா?" வாகனத்தை சிரத்தையாக செலுத்திக் கொண்டிருந்தவனை பார்த்து கோவமாக கேள்வி எழுப்பினார்.

"உன் கட்சில இருந்தா தானேயா மாறுவான்?"

ஆதவனின் கேள்வியில் அதிர்ச்சி கூடியது ஈஸ்வரனுக்கு, "உன் மேல சந்தேகம் வந்த நாள்ல நானே அவனை உனக்கு வேலைக்கு சேத்து விட்டேன். என்ன நீ யாரையும் நம்பாம நீயா எல்லாத்தையும் செஞ்சதால அவனால பெருசா எதுவும் பண்ண முடியல"

"உன்ன எவ்ளோ நம்புனேன்... ஏமாத்திட்டியேடா பாவி" அவன் மேல் காய்ந்தவருக்கு பதில் இப்பொழுதும் வரவில்லை.

"ஏமாத்துறத பத்தி நீ பேசலாமாடா சொட்ட" ஆத்திரத்தில் நாக்கை மடித்து அவர் தலையிலேயே ஒன்று வைத்தான் ஆதி.

"டேய் மரியாதை..." எச்சரித்தவர் கன்னத்தில் ஒரு அடி வைத்து,

"உனக்கெல்லாம் என்னடா மரியாதை மானம் கெட்ட பயலே" - தமிழ்

மொத்தமாய் தன்னை வெள்ளம் சூழ்ந்திருந்த பொழுதும் கோவம் மட்டுமே அந்த மனிதரின் ஆயுதமாக இருந்தது, "நான் யாருனு தெரியாம கை வச்சு நீயே உன் சமாதிக்கு வழி..."

மறு கன்னத்தில் செல்லமாக தட்டிய கெளதம் அவன் கன்னத்தை பற்றி கிள்ளி, "நீ பெரிய பிஸ்கோத்தாவே இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல மாம்சு" கொஞ்சி மிரட்டினான்.

அவன் பற்றிய அழுத்தத்தில் வெண்ணை வைத்து செய்திருந்த அவரது கன்னம் வலியில் சிவந்துவிட மீண்டும் அதை அழுத்தி அடித்தான், "நீ என்ன அமுல் பேபியா இப்டி கொழு மொழு-னு ஒடம்ப வச்சிருக்க?" என்றான்.

"ஓசில தின்னு வளந்தா..." - தமிழ்

"பாவத்துல நாளைக்கு நரகத்துக்கு போனா நம்ம கக்கா எல்லாம் சாப்பிடணும், அதுக்கு இப்ப கொஞ்சம் பாலும் பலமும் நெய்ல கொலச்சு சாப்பிடணும்னு ஆசை இருக்கும். விடுங்கடா" சிறிது ஆன்மிக புத்தகங்களின் அனுபவத்தால் பேசினான் ஆதி.

நால்வரும் மாறி மாறி அவரை வெறுப்பேற்றிக்கொண்டிருக்க அமைதியாக வந்த வாகனம் ஒரு கிளை பாதையில் பிரிந்து காட்டுவழியினுள் பல மீட்டர் சென்று தனித்திருந்த ஒரு சிறிய குடில் முன்னால் வண்டி நின்றது. மொத்த இடமும் வறண்ட காடு தான்...

சுற்றிலும் மனித நடமாட்டம் கூட இல்லை. வாகனத்தில் இருந்து இறங்கிய நண்பர்கள் நால்வரும் சோம்பல் முறித்து உள்ளே செல்ல, அங்கிருந்து உதய்யின் ஆட்கள் சிலர் வெளியில் வர, ஈஸ்வரனுக்கு மனதில் ஏதோ கௌரி கத்தியது பயத்தில். இறுதியாக ஜெயன் வர, ஈஸ்வரன் மேல் அவன் கண்கள் பதிந்த வீதத்தில் கோவம் ஏறி அவனிடம் கோவத்தை காட்டினார்,

"என்னடா முறைக்கிற? நாய குளிப்பாட்டி நடு வீட்டுல அந்த பரதேசி வச்சான் பாரு..." அடுத்த வார்த்தை தொண்டையில் அடைத்தது. அவருடைய கழுத்தை பற்றி வாகனத்தில் அடித்து நிறுத்தினான் ஜெயன்.

"என்ன பேசிட்டே போற? சங்க அறுத்து போட்டுடுவேன். அவரை பத்தி பேசவே நீ தகுதியிலாதவன்" உஷ்ணமாய் அவன் உறும பயத்தில் மொத்தமும் நடுங்கி போனார் ஈஸ்வரன்.

"விடுடா ஜெயன்... அவனை உள்ள கூட்டிட்டு போ..." ஆதியின் பேச்சை கேட்டு ஈஸ்வரன் கழுத்தை பிடித்தே குடில் உள்ளே தள்ள சுவற்றில் முட்டி கீழே விழுந்தார்.

இனி தன்னுடைய வாழ்க்கையில் அவமானமும் வலியும் மட்டுமே வியாபித்திருக்கும் என்ற எண்ணம் அப்பொழுதே வந்துவிட்டது. மனதிலிருந்த பயத்தை வெளியில் காட்டவில்லை. அடுத்த சில நிமிடங்களில் உள்ளே நுழைந்த உதய்யின் ஆட்கள் குண்டுக்கட்டாக ஈஸ்வரனை தூக்கி ஒரு அறையினுள் அடைத்து விட்டனர். மொத்தமும் இருட்டாக இருந்த அறையில் மனதை உடைக்கும் அமைதி. சுற்றிலும் ஏதேனும் பற்றுக்கோளுக்கு ஏதேனும் உள்ளதா என்று தேடியவர் கைகளுக்கு சுவற்றை தவிர எதுவும் இல்லை.

"ஜெயன் லைட் ஆன் பண்ணு... ஆதி... ஆதவன்" ஒவ்வொருவரையும் அழைத்தவர் காலுக்கடியில் ஏதோ நகர்வது போல் தெரிய எலியோ என்ற ஐயம் வர நிற்கவே பயமாக இருந்தது.

"எங்கடா கூட்டிட்டு வந்துருக்கீங்க? என்ன என்னமோ ஓடுது..." காலை உணவை கூட சிறைச்சாலையில் எடுத்துக்கொள்ளவில்லை வெளியில் வரும் ஆர்வத்தில்.

அது வேறு உணவிற்கு பஞ்சமே வைக்காத உடலுக்கு மயக்கத்தை தர பயத்தோடு தான் கால்களும் தடுமாறியது. கெஞ்சினார் ஒவ்வொருவரின் பெயரையும் அழைத்து, பதில் தான் வரவில்லை.

"நான் பெயில்ல தான் வெளிய வந்துருக்கேன்... தெரியும்ல? ஜெயில் வெளிய கேமரால என்ன தேடுனா நீங்க செத்திங்க..."

"ஆதவன்... டேய் நானும் உன் மாமா மாதிரி தானே? செஞ்ச தப்புக்கு உதய் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறேன்... வெளிய விடுடா..." சுவற்றில் தட்டினார் கதவை தேடி... நேரம் சென்றுகொண்டே இருக்க பசி மயக்கத்தில் மயங்கினார் தரையில்.

சூரியனின் வெளிச்சத்தை ஒத்த ஒளி கண்களை கூச செய்ய தன் மீது மீண்டும் ஏதோ ஊர்வது போல் இருந்தவர் கண்களை நன்றாக திறந்து பார்த்தவர் அரண்டு போனார்.

காலுக்கடியில் ஒரு நாகம் வட்டமிட்டுக்கொண்டிருக்க, ஒரு பச்சை நாகம் தன் மேலே ஊர்ந்து கடந்து சென்றது. 'பொத்' சத்தம் கேட்க சந்தம் வந்த திசையில் பார்த்தவருக்கு சிகப்பு நிற நாகம் ஒன்று கீழே விழுந்தது தெரிய, கண்ணில் பட்ட இரண்டு கதவில் ஒன்றை ஓங்கி அடித்தார்...

"யாரவது இருக்கீங்களா? ஆதி... ஜெயன்... பயமா இருக்கு பா... காப்பாத்துங்க பா" நாகங்கள் அதன் வாக்கில் தன்னுடைய வேலையை செய்துகொண்டிருந்தது.

மீண்டும் காலில் ஏதோ உரச கீழே குனிந்து பார்த்தவர் சுவற்றோடு ஒன்றி போனார். நெளிக்க முடியாமல் நீண்டு படுத்திருந்தது அந்த பெரிய சாம்பல் மலை பாம்பு. நிச்சயம் உணவை முக்கால்வாசி செரித்திருந்தது அதன் வடிவிலே தெரிந்தது.

உடல் படுத்திருந்தாலும் வெளிச்சத்திலும் பளபளக்கும் கண்கள் தன்னை முழுமையாக நோட்டமிடுவது தெரிந்து. இன்னும் சில மணி நேரங்களில் தான் தான் இரையாக போகின்றோம் என்பது தெரியாது என்ன செய்து இந்த இடதிர்லிருந்து தப்பிப்பது என்று தெரியவில்லை. முற்றிலும் சுவர் மட்டுமே இருக்க எப்படி தான் தப்பிப்பது? உடல் மொத்தமும் பயத்தில் வியர்த்தது... தட்டினார் கதவை, தட்டிக்கொண்டே இருந்தார்...

அவருடைய அலறல் சத்தமும், பயத்தில் வெளிறி கன்றி கிடந்த முகத்தையும் கேமரா மூலம் சாவகாசமாக கையில் தேனீர் கோப்பையோடு பார்த்துக்கொண்டிருந்தனர் நண்பர்களும், ஜெயனின் ஆட்களும்.

"குட்டி அனுப்பு ஜெயன்" ஆதி சொல் கேட்டு ஒரு சிறிய துவாரத்தின் வழியாக பத்து பதினைந்து குட்டி பாம்புகளை அனுப்பிவிட்டான் ஜெயன்.

ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்தவர் இதயத்தை இந்த சுறுசுறுப்பான பாம்புகள் அழவே வைத்தது.... அந்த சிறிய பாம்புகளோ மனித வாடையில் விறுவிறுவென அவரது மேல் ஏற துவங்கியது...

"டேய் கடிச்சிட போகுது... அஞ்சே நிமிசத்துல செத்துடுவான்" - ஆதி

"இதுல எதுக்கும் விஷம் இல்ல... பல்லு புடுங்குன பாம்புக தான்" ஆதவன் கூறினான் விஷம சிரிப்போடு.

அங்கு நாகங்கள் மொத்தமும் தன்னுடைய உடலில் ஏற ஈஸ்வரனின் அலறலும், அழுகையும், உளறலும் நண்பர்களுக்கு இதமாய் மாறி போனது... அதோடு நிற்காமல் பயத்தில் உடலில் இருந்த சட்டையை ஒவ்வொன்றாக பாம்புகளோடு இணைந்து தூக்கி எரித்தவர் எந்த பாம்பின் மீதும் கால் படுகிறதா இல்லையா என்றும் பாராமல் மற்றொரு கதவு இருந்த பக்கம் ஓடி சென்று தட்டினார்.

அவர் நிற்க அந்த நாகங்களுக்கு வசதியாகி போனது, சிறு நாகங்கள் உடையை தாண்டி உள்ளே செல்ல, பச்சை நாகம் ஒன்று அவர் கால்களை பின்னி உடலில் மேலும் முன்னேற, பயத்தில் தைரியம் பெற்றவராக பச்சை நாகத்தை தூக்கி எறிந்தார்.... அதற்குள் ஆடைக்குள் நுளைந்த சிறு நாகங்கள் சாதாரணமாக ஊர்ந்தாலும் தன்னுடைய நிலையில் அவை அனைத்தும் தன்னை கொத்துவது போலவே பிரமை இருந்தது.

எஞ்சிய கால்ச்சட்டையையும் அவிழித்து போட, "அடேய்... அந்த கதவை அன்லாக் பண்ணி விடுடா... இவன் அம்மணமா இருக்குறத பாக்க முடியாது" முகத்தை மூடி கெளதம் காத்த சிரிப்போடு ஜெயன் அந்த கதவை இங்கிருந்தே திறந்து விட்டான்.

கதவு திறந்த சத்தத்தில் உடனே திறந்திருந்த கதவினுள் நுழைந்த மனிதர், முதலில் தன் மேல் எந்த நாகமும் இல்லை என்பதை உறுதி செய்தவர், நொடியில் கதவினை இழுத்தி சாற்றிக்கொண்டார். ஆசுவாசமாக மூச்சை இழுக்க முடியவில்லை, தொண்டை வறண்டு பலவனமாகியிருந்தது. கால்கள் பின்னால் நகர எதிலோ முதுகுத்தண்டு தட்டுப்பட, திடுக்கிட்டு பின்னால் திரும்பினாள் சுவர்...

தரையில் அமர போனவரின் கால்கள் இரண்டு பக்கமும் எதிலோ தட்டுப்பட கை வைத்து பார்த்தார்... கண்ணாடி. இரண்டு பக்கமும் கண்ணாடியால் அடைக்கப்பட்டிருக்க சுதாரித்தவர் முன்னாள் இருந்த கதவில் கை வைக்க செல்லும் பொழுது எங்கிருந்து தான் வந்ததோ அந்த திடீர் கண்ணாடி அடைப்பு...

"இது என்னடா புதுசா... விட்ருங்கடா... முடியல" பேச கூட முடியவில்லை அவரால். குத்த வைத்து அமர்ந்தவர் அடியில் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் கிடக்க அதிலிருந்த தண்ணீரை பார்த்தவர் வேகமாக எடுத்து அரை பாட்டில் காலி செய்திருந்தார்.

பிறகு தான் தொண்டை, வயிறு என மொத்தமும் எரிய துவங்க, நடுங்கிய கைகளின் பலனாய் உடல் மொத்தமும் கொட்டியது.

"ஆ... ஆஆ.... ஆ...." அவஸ்தையில் அலறினார். அவர் குடித்தது, அரைகிலோ பச்சை மிளகாயை அரைத்து வடிகட்டிய தண்ணீர்.

"ஐயோ முடியல... ஐயோ" அவர் கதறலை பார்த்து திரும்பி நின்றுகொண்டான் ஆதவன். மனதினுள் இருந்த மனிதாபிமானம் தலைதூக்கியது.

கெளதம், தமிழும் கூட, "தண்ணி குடுக்க சொல்லு ஜெயன்" என்றதற்கு ஜெயனின் கையை பிடித்து வெறித்த கண்களோடு ஈஸ்வரனையே பார்த்து நின்றான் ஆதி.

"அவனை இப்டி பண்ணா நமக்கும் அவனுக்கும் என்னடா வித்யாசம்?" - தமிழ்

"வாத்தி, அவனை விட நான் மோசமானவன்... அத அவனுக்கு காட்டியே ஆகணும். அவன் குடலை உருவி வெளிய போடுவேனே தவற, சும்மா விட மாட்டேன்"

உறுதியாக நின்றவனை எதுவும் கூறி நிறுத்த முடியவில்லை நண்பர்களால். உடலில் இருந்த எரிச்சல் போதாதென்று, குடித்த தண்ணீரின் வீரியத்தில் வயிற்றில் எரிச்சல் அதிகமாக உருவாகியது.

"அவன் தோல உரிச்சு ரத்தம் வழிய வழிய அதே கூண்டுக்குள்ள அடைச்சு வச்சு கொதிக்கிற தண்ணிய உள்ள ஊத்தி வை"

ஆதி ஜெயனிடம் சொல்ல, "ஆதி வேணாம் டா" - ஆதவன்

"பகைல பன்றேன்னு நினைக்காத, வெறில பண்றேன்... ஜெயன் போ" ஆதியை விட சற்றும் கோவம் குறையாமல் நின்ற ஜெயனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

ஜெயன் தன்னுடைய ஆட்களுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே இறங்கி செய்தான் ஈஸ்வரனின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கும் வேலையை. தமிழ், கெளதம் ஈஸ்வரனின் கதறல் சத்தத்தை கேட்க சகிக்காமல் வெளியில் சென்றுவிட, ஆதவன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். ஈஸ்வரன் உடலில் ரத்தம் வெளி வர துவங்க துவங்க ஆதியின் முகத்தில் திருப்த்தி பிறந்தது. ஓய்ந்து போய் வலியில் கதறி கிடந்த ஈஸ்வரன் அருகில் வியர்வை சொட்ட சொட்ட வெறியோடு நின்ற ஜெயன் தோளில் தட்டிய ஆதி, தான் பார்த்துக்கொள்வதாக கூறி ஈஸ்வரன் அருகே சென்று அமர்ந்தான்.

மூடிய கண்களில் அங்கிருந்த தண்ணீரை ஊற்றியவன் ஈஸ்வரன் தன்னை பார்ப்பதை உறுதி செய்துகொண்டு, "நீயும் அந்த தழலும் அனுப்புன ஆளுங்க அவனை எங்க எங்க தெரியுமா வெட்டிருக்கானுக?" ஈஸ்வரன் கையை பற்றி உள்ளங்கையில் தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து சதையோடு அறுக்க, துடிதுடித்தார்.

"ஸ்ஸ்... உன்கிட்ட போய் கேக்குறேன் பாரேன், நீ தான் அங்க தானே இருந்த" ஈஸ்வரனின் கத்தல் மொழிகள் கோவத்தை தர எரிச்சலோடு தன்னுடைய கை குட்டையை எடுத்து அவர் வாயில் வைத்து அழுத்தி அமைதியாக்கினான்.

"எனக்கு நான் பேசுறப்ப யார் பேசுனாலும் புடிக்காது" பார்வை அவன் முகத்திலிருந்து வெட்டுப்பட்டு கிடந்த கைக்கு சென்றது, "இவ்ளோ ஆழம் இல்ல" கத்தியை வைத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக கிழித்தான் தயக்கம் சிறிதும் இல்லாமல்.

"ம்ம்ம் இப்ப சரியா இருக்கு" ஆதியின் கால்ச்சட்டையிலே அவன் ரத்தம் வழிய சுகப்பட்டது ஆதி மனம். மற்றொரு கையை எடுத்து அதே போல் கீறிவிட்டவன் முகத்தில் வெற்றி புன்னகை. வலியில் சோர்ந்து படுத்துவிட்டான் ஈஸ்வரன்.

"என்ன மாமா... இதுக்கே இப்டி சோர்ந்துட்டா மிச்சம் இருக்குற பரிசை யார் வாங்குறது?"

இனி அழுக கூட தெம்பில்லாத உடலை வைத்து எங்கு கதறுவது? அவரது நிலை புரிந்த ஆதி காயத்தில் தன்னுடைய கட்டை விறல் கொண்டு அழுத்த பறந்திருந்த கதறல் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது, "ஆ... ஆஆஆ"

"ம்ம்ம் இப்ப தான் பேச நல்லா இருக்கு மாமோய். நா பேச பேச நீ ம்ம் கொட்டு இல்லையா" மீண்டும் காயத்தை அழுத்தினான்.

"ஐயோ விடு.... டா எ... எ... என்ன" - ஈஸ்வரன் "ம்ம்ம் இந்த ரெஸ்பான்ஸ் கூட ஓகே தான்" - ஆதி

கையை ஆதியிடமிருந்து கடினப்பட்டு விளக்கியவர் அவன் முகம் பார்த்தார், தெளிவாக அவன் பிம்பம் தெரியவில்லை மங்கலாய் அரை கண் மட்டுமே அவரை கண்டது, "அவன் மேல கை வச்சதுக்கா என்ன இப்டி பண்ற?"

ஈஸ்வரன் கேள்வியில் வாய் விட்டு சிரித்தவன், "ச்ச ச்ச... இதெல்லாம் நீ அவன் மேல கை வைக்க நினைச்சதுக்கு மாமா, அவன் மேல கை வச்சதுக்கு, அவனோட ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் இனி தான் பழி வாங்க போறேன்" - ஆதி

"வேணாம் டா... வய... வயசானவன இப்டி துடிக்க வக்கிரியே..."

ஒரே நொடியில் ஈஸ்வரன் இடையில் கத்தி கொண்டு சதையை வெட்டியவன், "நீ யோசிச்சியாடா? ஒரு பொண்ணு, ஒரு குடும்பம், அஞ்சு கோடி மனுசங்க நம்பி இருக்குறவன, இனி தான் வாழ்க்கையை ஆரமிக்க போற ஒரு சின்ன பையனோட வாழ்க்கையை அவன் ஆரமிக்கிறதுக்கு முன்னாடியே எடுக்க போறோமே-னு யோசிச்சியா? துடிக்க வைக்கல?"

ஈஸ்வரன் கழுத்தை பற்றியது ஆதியின் இரும்பு கரங்கள், "ஒரே நிமிசத்துல கத்திய குத்தி சொருகிட்டு போக எனக்கு நேரம் ஆகாது, ஆனா தங்கச்சி பையன்-னு கூட பாக்காம, அவனை சுட்டு, வெட்டி என் கைல அவன் துடிச்சு கெடந்த அந்த அரை மணி நேரம் அவன் அனுபவிச்ச வேதனை, என்னோட தவிப்பு எல்லாத்துக்கும் உன் வாய் பதில் சொன்னா என் மனசு ஆறாதுடா... அவன் ரத்தத்துக்கு உன் ரத்தமும், என் தங்கச்சியோட அழுகைக்கு உன்னோட கதறலும் தான் பதில் சொல்லணும்"

இரக்கமே இல்லாமல் கண்ணில் தோல் தெரிந்த இடத்தில் எல்லாம் வெறித்தனமாக கத்தியால் ஆதி கீற அவனது ஆக்ரோஷம் பார்த்த ஜெயன் ஆதியை அவனிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

"விட்றா என்ன, இன்னைக்கு அவனை கொல்லாம இங்க இருந்து நான் வெளிய போக மாட்டேன்"

"சார் ப்ளீஸ்... இவன விட முக்கியமான விசியம் பேசணும்" துடிக்கும் இளம் ரத்தத்தின் வாசனை அங்கிருந்த அனைவருக்கும் அடித்தது ஆதியின் கண்கள் மூலம்.

"அப்றம் பாத்துக்கலாம்..." மீண்டும் ஈஸ்வரனை நோக்கி செல்லவிருந்தவனின் கையை பிடித்தான் ஜெயன் கெஞ்சல் பார்வையோடு.

"உதய் சார் முழிச்சிட்டார்..." அதிர்ச்சியில் மனம் உறைந்தது ஆதிக்கு.

நம்ப முடியாமல் ஜெயனை திரும்பி பார்த்தான், "நிஜமா சொல்றேன் சார்... டாக்டர்ஸ் சொன்ன டைம்கு முன்னாடியே முழிச்சதுக்கான அவரோட காரணம் கூட நீங்க தான்"

கையிலிருந்த கத்தியை போட்டவன் தன்னை பற்றி ஜெயன் கூறியதை கேட்கவில்லை, "வா அவனை பாக்க போகலாம்"


ஈஸ்வரன் பின்னுக்கு சென்றான், தானும் தன் சகோதரியும் அனுபவித்த வேதனைகள் கடல் கடந்து சென்றது, இப்பொழுது இந்த நொடி உதயன் மட்டுமே, அவன் பார்வை ஒன்று மட்டுமே தேவை என மனம் அடித்து துடித்தது.

கையிலிருந்த கத்தியை எக்கி மேலே இருந்த திட்டில் வைத்து வெளியேறினான் ஆதி
. ஆதி வெளியில் வரும் பொழுது நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே காரில் அமர்ந்திருக்க, கெளதம் மட்டும் வெளியில் நண்பனின் வரவிற்கு காத்திருந்தான். ஆதி வரவும் வாகனம் மருத்துவமனை நோக்கி சீறியது.

"அவன் நல்லா தானே இருக்கான்?" - ஆதி
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
"ம்ம்ம் நல்லா இருக்கான்" நண்பனுக்கு பதில் கூறிய ஆதவன் தன்னுடைய கை பேசியை ஆதி கையில் கொடுத்தான். வாங்கி பார்த்தவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் போனது.

ஒரு சவப்பெட்டியில் கழுத்து வரை மண்ணை நிரப்பியிருந்தனர், கைகள் பின்னால் பிணைத்திருக்க உதவிக்கு நொடிக்கொருமுறை வெளியில் இருக்கும் ஆட்களை அழைத்துக்கொண்டிருந்தது அவன் உயிர் பயம். நீரஜ் தழல். பார்க்கவே பரவசமாக இருந்தது ஆதிக்கு.

"எஸ்டிமேட்ட் டைம் பிப்டி மினிட்ஸ் தான். அதுக்கு மேல மூச்சு முட்டி இறந்துடுவான்" ஆதவன் கைகளில் வாகனம் லாவகரமாக அந்த மருத்துவமனை வாசலில் அலுங்காமல் நின்றது.

ஆதி வேகமாக முன்னே செல்ல, மற்ற மூவரும் தயக்கத்துடனே உள்ளே செல்வதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். நண்பர்கள் தன்னை தொடர்ந்து வரவில்லை என்பது உணர்ந்து ஆதி அவர்களை சந்தேகமாய் கண்கள் சுருக்கி பார்க்க, அவனிடம் கெளதம், "உள்ள வர மனசு உறுத்துது..." என்றான்.

"சரியா தான் வேலை செய்யிது" இன்னும் கோவம் தீரவில்லை என்று ஆதி நேரடியாகவே கூறி உள்ளே விரைந்தான். சத்தமில்லாமல் அமைதியாக இருந்த வளாகத்தை தாண்டி, வி.வி.ஐ.பி மனிதர்களுக்கென்று தனியாக இருந்த ஒரு கட்டிடம் அதில் இருந்தது உதய் இருந்த அரை.

ஒரு தளத்தில் இரண்டு நோயாளிகள் மட்டுமே இருக்க முடியும். அந்த தளத்தில் நுழைந்ததுமே சிறு பேச்சு சத்தங்கள். மின்தூக்கியை விட்டு வெளி வந்தவன் கண்களுக்கு மகிழ்ச்சியாய் சிரித்து பேசும் நளினி, உதய்யின் சகோதரிகளையும் அவர்களுடன் கதை அளந்துகொண்டிருக்கும் ஆதவன், தமிழின் அன்னையும். அவர்களை தாண்டி உதய் வீட்டின் ஆண்கள் மற்றும் நண்பர்களின் தந்தைகளை பார்த்தவன் அவர்களிடம் எதுவும் பேசாமல் நேராக உதய் இருக்கும் அறைக்குள் செல்ல எத்தனித்த பொழுது, "ஆதி அண்ணா... வெயிட் பண்ணுங்க" ஆதி பின்னால் வந்தது தமிழ் சகோதரி பவித்ரா குரல்.

அவளை அதிர்ந்து பார்த்தவன், "நீ இங்க என்ன பண்ற? சஹானா தனியா இருப்பால?" அவனுக்கு பதில் கூறாமல் அவள் கண்கள் சென்றது உதய் இருக்கும் அறையை தான். அவள் கண்கள் கூறும் செய்தியில் உள்ளே எட்டி பார்த்த ஆதிக்கு சிரிப்பில் முகம் பிரகாசித்திருந்த நண்பன், சகோதரி, யாழினி மற்றும் தன்னுடைய மனம் கொய்தவள் தெரிந்தனர்.

அவன் வரவை உணர்தானோ என்னவோ, உதய் கண்கள் உடனே நண்பனிடம் வந்தது. அதற்குள் ஆதியும் உள்ளே செல்ல, அவனை பார்த்த மணிமேகலையின் கண்கள் பிரகாசித்தது. அனைவருக்கும் சிறு சிரிப்பை தந்தவன், நண்பன் அருகே சென்று கை கட்டி நின்றுகொண்டான். உரியவளுக்கோ முகம் உடனே வாடியது. ஆதி நண்பன் முகத்தை மட்டுமே பார்த்திருந்தான். மிகவும் சோர்ந்திருந்தான். பேச கூட உடலில் சத்து இல்லாதது போல் அமைதியாக இருந்தான்.

"என்ன லவர்ஸ் ரெண்டு பேரும் தனியா பேசணுமா?" யாழினி தான் பேச்சை துவங்கி வைத்தாள்.

"ஆமா-னு சொன்னா எந்திரிச்சு போய்டுவீங்களா?" - ஆதி

அவளோ உதய் அருகே ஒட்டி அமர்ந்து அவன் கையை பற்றிக்கொண்டு, "மாட்டேன் பா" என்றாள் சிறுபிள்ளையின் சிரிப்போடு.

அவள் செயலில் ஆதியும் சிரித்திட உதய்யின் கண்கள் தன்னவள் மேல் ஆசையாக படிந்தது.

"கொஞ்ச நேரம் வெளிய இருக்கீங்களா?" உதய் யாழினியிடம் கேட்க, புரிந்த மற்ற மூவரும் வெளியில் சென்றனர்.

மூவரும் வெளியில் சென்றதும், "என்ன பாதிரியார் மாதிரி எல்லாருக்கும் பாவ மன்னிப்பு குடுத்து நிம்மதியா இருக்க போல?" ஆற்றாமையுடன் கேட்டான் ஆதி.

"மன்னிச்சுடு-னு கண்ணு முன்னாடி அழுகுறவங்க கிட்ட வீராப்பு காட்ட சொல்றியா?" - உதய்

"ஏன் காட்டுனா தான் என்ன? இத்தனை நாள் நீ அழுதப்ப ஒரு கை வந்து தொடச்சதா?" - ஆதி

"நான் அழுகவே இல்லடா" சிரித்தான் உதய்.

"நடிச்சு தொலையாத" எரிச்சலுற்றான் ஆதி.

"சரி என்ன பண்ண சொல்ற? சொந்தம்-னு இருந்தா என் கண்ணீரை துடைக்கிறதுக்கு தான் அவங்க வேலையா?" - உதய்

"பின்ன சொந்தம் எதுக்கு? பின்னாடி நின்னு பெரனி பேசவும், விசேஷம் நடக்குறப்ப பக்கத்துல சிரிச்சிட்டே நிக்கவும் தானா? அதுவும் நான் இங்க பேசுறது மூணாம் மனுஷங்கள பத்தி இல்ல, உன் சித்தி சித்தப்பா தம்பி தங்கச்சி, முக்கியமா உன் அப்பா" கோவமாக ஒரு நாற்காலியை தூக்கி உதய் அருகில் போட்டு அவன் காயங்களை ஆராய்ந்தான் ஆதி. அத்தனை கட்டுகளும் இன்று காலை தான் மாற்றியிருந்தனர்.

"இன்னும் அடுத்து மூணு தடி மாடுக வருவானுக... அவனுகளையும் நெத்தில திருநீர் பூசிவிட்டு ஆசீர்வாதம் பண்ணி வை" ஆதியின் பேச்சில் இடுப்பை பிடித்துக்கொண்டு மெதுவாக சிரித்தான் உதய்.

"எதுக்குடா உனக்கு இவ்ளோ கோவம் வருது?"

"கோவம் இல்ல, வெறில இருக்கேன்"

"அடிக்கடி கோவம் வந்தா அதுக்கு மரியாதையே இல்லாம போய்டும் ஆதி... ஆமா எங்க போயிருந்த இவ்ளோ நேரம்?" - உதய்

"சும்மா வெளிய தம் அடிக்க" முகத்தை திருப்பினான் ஆதி.

"என் மேல சத்தியம் பண்ண தம் அடிக்க மாட்டன்னு. உண்மைய சொல்லு, ஜெயன், ஆதவன் யாரையும் கானம்" - உதய்

ஆதி அமைதியாக இருந்தான்.

"ஜெயன் எங்க?" ஆதியின் மௌனத்தில் ஏதோ தவறு உள்ளதென்று புரிந்தது உதய்க்கு.

"அவனை எதுக்கு நீ கேக்குற? அது தான் மொத்த பொறுப்பையும் உன் அப்பன் தலைல கட்டிடல, வாய மூடிட்டு ரெஸ்ட் எடு. உன்ன பாக்க அவனுகள எல்லாம் வர வேண்டாம்னு சொல்லி அனுப்பியாச்சு" - ஆதி

"சரி ஆதவன் தமிழ் கெளதம் எங்க?" - உதய்

"அவன் பண்ண தப்புக்கு வெளிய நிக்கிறானுக" - ஆதி

"என்ன பெரிய தப்பு பண்ணிட்டாங்க?" புருவம் உயர்த்தி ஆதியிடம் கேள்வி எழுப்பினான் உதய். பேச முடியவில்லை ஆனால் இந்த அழுத்தக்காரனின் மனதை மாற்றி உண்மையை உரைக்க வைக்க வேண்டும்.

"ஓ உன்ன பேசுனது எல்லாம் கேட்டதும் இந்த கன்னத்துல அடிச்சா அந்த கன்னத்தை காட்டுற ஆளோ நீங்க?" நீ மனிதன் தானா என்ற பாவனையில் ஆதி உதய்யை பார்த்தான்.

"அவனுக என்ன நம்பல, சரி. உன் அப்பா மேல நான் பொய்யா பழி போட்டு பேர கெடுத்தேன்னு எவனோ ஒருத்தன் வந்து சொல்லுவான்... அதை நீ நம்புவ. ரெண்டுக்கும் என்ன வித்யாசம்? உன்ன மன்னிக்கல? அதே மாதிரி அவங்களையும் மன்னிச்சிடுவேன்" - உதய்

பேச்சற்று அமைதியாய் உதய்யின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். நண்பர்களை, உதய்யின் மொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து கேள்வி கேட்டவனுக்கு மனதில் இருந்த அந்த பெரிய பயத்தை நண்பன் மூலியமே வெளியிட்டான் ஆதி கேசவன்.

"என்னடா பதில் கானம்?" - உதய்

"நான் நேஷனல் லெவல் புட்பால் டீம்ல செலக்ட் ஆகாம தடுத்தது நீ இல்லனு சொல்லு" - ஆதி

"சந்தேகமே வேணாம், அது நான் தான்" - உதய்

"ம்ம்.. அப்ப என்ன அடிக்க நீ என்ன வேணாலும் பண்ணுவ-னு இதையும் அப்டியே யோசிச்சிட்டேன்" - ஆதி

"சரி தான் ஆனா உன்ன மட்டும் தான், நான் பண்றது பாதிக்கணும்னு உறுதியா இருந்தேன், உன் குடும்பத்தை இல்ல. சத்தியமா உன்னோட இறந்த அப்பாவை எல்லாம் இதுல இழுக்கிற அளவு நான் அவ்ளோ கீழ்தரமா போக மாட்டேன்" உதய் அழுத்தமாக ஆதியின் கண்ணை பார்த்து குற்றம் சாட்டினான்.

"சரிடா தப்பு பண்ணிட்டேன், ஆனா நீ கொலை பண்ணணு சொன்னா நம்புற அளவு நான் முட்டாள் இல்ல. தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்காக..." - ஆதி

"ஏற்கனவே தலை வலி அதிகமா இருக்கு, நீ டென்ஷன் ஆக்காத, நீ எத உன் இஷ்டத்துக்கே எல்லாத்தையும் செய்ரியோ, அதே மாதிரி தான் நானும் இருப்பேன்" - உதய்

"நீ ஓவரா பண்ற உதயா, எல்லாருக்கும் இவ்ளோ ஈஸியா இடம் கொடுக்குறது தப்பு" - ஆதி

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன், நீ போய் யாழினிய உள்ள அனுப்பு, அவகிட்ட தனியா பேசவே முடியல"

"நல்லா இருக்குடா உங்க ஊர் கதை. லவ் வந்ததும் நண்பன் எல்லாம் பின்னாடி போய்டுவான்னு ஊர்ல எல்லாரும் சொன்னப்ப எல்லாம் நம்பல ஆனா இப்போ தானே புரியுது. சொன்னவன் அனுபவசாலி" புலம்பிக்கொண்டே செல்லும் நண்பனை பார்த்து இதமாய் சிரித்தவன்,

"ஆதி" என்றழைத்தான்.

எரிச்சலோடு திரும்பி பார்த்த ஆதியிடம், "என் மேல சாத்தியமா சொல்றேன் உன்னால மாமா உயிர்க்கு ஏதாவது சேதாரம்னு தெரிஞ்சா கண்டிப்பா உங்கிட்ட பேச மாட்டேன்"

"ஓ இவரு எனக்காக மினிஸ்டர போட்டு தள்ளுவாராம் ஆனா நாங்க ஒருத்தர் மேல கை வச்சாலும் இவருக்கு கோவம் வருமாம்" - ஆதி

"நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ, நான் என் பேச்ச மாத்திக்கிறதா இல்ல" இன்னும் உறுதியாய் வந்தது உதய் வார்த்தைகள்.

தெரியும் அவனுக்கு இந்நேரம் ஜெயன், ஆதவன் உதவியோடு ஆதி, ஈஸ்வரனை ஒரு வழி ஆகியிருப்பான் என்று. தலையை பிடித்தான் ஆதி இயலாமையில், "உன்ன விட எனக்கு தான் மண்டை சூடேறுது. உன் கை கால் மட்டும் ஒழுங்கா இருந்தது ஒடச்சு போட்டு போயிருப்பேன்" அறையே அதிரும் வகையில் கத்திவிட்டு கதவினை திறக்க போனவனை மீண்டும் உதய் அழைத்தான்,

"நான் இன்னும் பேசி முடிக்கல" என்று. உச் கொட்டி திரும்பியவன் என்ன என்று புருவத்தை உயர்த்தினான்.

"உன் கனவை ஒடச்சதுக்கு என்ன மன்னிச்சுடு ஆதி" ஏதோ ஒரு கோவத்தில் ஆதி விளையாடுவதை மாமனின் உதவியோடு செய்துவிட்டான் உதய்,

ஆனால் அதற்கு பிறகான ஒவ்வொரு நொடியும் கால்பந்தை பார்க்கும் பொழுதோ நினைக்கும் நேரத்திலோ மனம் துடிக்கும் உதய் மாதவனுக்கு. உயிர் கொடுக்கும் காற்றாய் அதை நேசித்தவன் அல்லவா நண்பன்?

"உன் குடும்பத்தையே ஒடச்சவன்கிட்ட மன்னிப்பெல்லாம் கேக்காத உதயா"

சிரிப்போடு நண்பனிடம் கூறி, "அப்படியும் கேட்டே தீருவேன்னு அடம் பிடிச்சா சரி, கால நீட்டுறேன் தொட்டு கண்ணுல ஒத்திக்கோ" - ஆதி "என்ன என்ன... என்ன சொன்ன?" உதய் கேட்காதது போல் பாவனை செய்தான்.

"ஒன்னும் இல்லைங்கோ... வெளிய போக இது தான் வாசலா-னு கேட்டேனுங்க" சமாளித்து வெளியேறிவிட்டான் ஆதி.

அவன் வெளியேறிய சில நிமிடங்களில் யாழினி அறைக்குள் நுழைந்தாள். உதய்யின் முகத்தை பார்த்து சிரிப்போடு அவன் அருகில் அமர்ந்தவள், "என்ன சார் கை கால்க்கு எல்லாம் ரெஸ்ட் கொடுக்கணும்னு முடிவு பண்ணது சரி. ஆனா ஒரேடியா ஒரு மாசம் எடுத்துகுட்டிங்க?"

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், "யாழினி..." அழைத்தான்.

ஆனால் அவளோ ஆர்வமாக அவன் கட்டுகளை பார்த்துக்கொண்டிருந்தாள், "இருக்கட்டும் இருக்கட்டும் எல்லாத்துக்கும் சேத்து பைசல் பண்ணிடலாம். ஆனா ஒன்னு, நான் கல்யாணம் ஆனதும் வேலை எல்லாம் போக மாட்டேன். என்ன வச்சு கண் கலங்காம பாத்துக்குவிங்க தானே?" - யாழினி

"யாழி..." - உதய்

"வீட்டுல அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டேன், ஒரே என்குயரி... விடலயே நான்" கைகள் வலியையும் பார்க்காமல் அவள் கையை தன்னுள் புதைத்தான், "தங்கச்சிக்கு டபுள் ஓகே... அம்மா தான் யோசிக்கிறாங்க... வசதியான இடம், அவங்க எதிர்பாக்குற மாதிரி நாம சீர் செய்ய முடியுமானு... ஏன் சார் ரொம்ப சீர் எதிர்பா..."

குனிந்திருந்த அவள் முகத்தை கழுத்தை வளைத்து பார்த்து, "யாழிமா..." அவன் அழைத்த மயக்கத்தில் துள்ளி அவன் கழுத்தில் கையை வளைத்து அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து அடைத்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம் வெளியேற்றினாள்.

துணையை தோள் சாய விட்டவன் கைகள் அவளை அணைக்க முடியாமல் தவிக்க, அவன் தோளில் அழுபவள் மனதில் இருந்த வேதனையை கண் விழித்ததிலிருந்து பார்த்துக்கொண்டே தானே இருக்கிறான். அவனை சந்திக்கவில்லை அவள் கண்கள், சிரிக்கிறாள் மகிழ்ச்சியாக பேசுகிறாள் ஆனால் அவனை மட்டும் பார்க்கவில்லை.

"என்னால கட்டி புடிக்க முடியாதுன்ற தைரியத்துல இவ்ளோ டைட்டா ஹக் பண்ணிட்டு இருக்கியா?"


"பேசாதீங்க..." அவன் கழுத்தில் அவள் அணைப்பின் வீரியம் ஏறியது, இன்னும் இன்னும் அவன் உடலில் ஒன்றினாள் பெண்.

"என்ன பதில் சொல்ல மாட்டிக்கிறீங்க" அவன் அமைதியை உணர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.

அவனோ சிரித்த முகத்தோடு, "நீ தானடி பேச வேணாம்னு சொன்ன?"

அவன் உதட்டில் அடித்தவள், "சிரிக்காதிங்க... என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? உயிரே போய்டுச்சு தெரியுமா உங்கள பத்தி தெரிஞ்சதும்?"

"கண்ண தொட யாழி... அது தான் எனக்கு எதுவும் ஆகலல?" - உதய்

"ஆகல. ஆனா ஏதாவது ஆகிருந்தா சாத்தியமா சொல்றேன் நானும் உங்க கூடயே வந்துருப்பேன்"

அவள் பேச்சை கேட்டு முகம் இறுகிய உதய், "ஒருத்தர் இருந்தா தான் நம்ம வாழ்க்கை இந்த உலகத்துல இருக்கணும்னா உன்னோட உயிர்க்கு என்ன 2மதிப்பு யாழினி? நான் என்னோட அம்மா போனப்பயே போயிருக்கலாமே" பரிதவிப்போடு அவனை பார்த்தாள் யாழினி.

"ஒடனே ஹிட்லர் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிடாதீங்க. நான் இன்னும் உங்க மேல ரொம்ப கோவமா தான் இருக்கேன். அப்டி என்ன கன், கார்ட்ஸ் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கனும்? உங்களுக்கே உங்க மேல கோவத்துல இருக்கவங்கள பத்தி தெரியாதா? தெரிஞ்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாமே. நீ அமைதியா வந்து படுத்துட்டீங்க பெட்ல, நாங்க தான் நேத்துல இருந்து உயிரை கைல புடிச்சிட்டு இருக்கோம். உங்க ப்ரன்ட் எல்லாம் இடிஞ்சு போய் நின்னவங்க தான் ஆனா அந்த கண்ணுல எப்பப்பா என்ன கோவம்... பயமா இருந்துச்சு எனக்கு"

நண்பனை பற்றி கூறியதும் இறுகிய முகம் உடனே இளகியது.

"ம்ம்ம் அது தான் நட்பு. நாளைக்கு நடக்கபோறத பத்தி எல்லாம் கவலையே இருக்காது, அந்த நிமிஷம் சந்தோசம் மட்டும் தான் பெருசா தெரியும். கண்ணு சிவந்து வந்தான் பாரு, சட்டைல ரத்த கரை வேற இருக்கு. கண்டிப்பா மாமா இன்னைக்கு ஒருவழி ஆகிருப்பாரு... அவனோட எதிர்காலம் பத்தி கொஞ்சம் கூட யோசிச்சிருக்க மாட்டான் என் மேல கை வச்சவன கொல்லாம விட மாட்டான். அது தான் வார்ன் பண்ணி அனுப்பிவச்சேன்"

"போதும் போதும் உங்க நட்பு புராணம். அவரை பத்தி பேசுன ஒடனே கைக்குள்ள இருக்குறவ எண்ணம் எல்லாம் மறந்து ஓடிடும்"

குற்றம்சாட்டியவளின் முகம் தனக்கு மிக அருகில் இருப்பதாய் மறந்து தான் போனாள் போலும். ஆங்காங்கு உடல் அதிகமாய் வலித்தாலும் அதை எல்லாம் தூக்கி எரிந்து மெதுவாய், அழுத்தமாய் அவள் இதழில் தன்னுடைய அச்சாரத்தை வைத்து விலக மனம் இல்லாமல் தவித்தான். ஒரே ஒற்றலில் சூடேற்றிய அவள் அங்கங்களை தன்னுடலோடு ஒன்றியே வைத்துக்கொள்ள அவா எழுந்தது.

"ஹே பட்டாசு... இப்பயே பர்ஸ்ட் வச்சுக்கலாமா?" மோகம் தூண்டிவிடும் குரலில் அவன் பேசியவை அவள் செவிகளை சந்தித்து மயிர் சிலிர்த்தது.

வலிக்கின்றது தான் மொத்த உடலும். அதற்காக இந்த சொர்கத்தை விடவும் மனம் வரவில்லை உதய்க்கு. மேலும் முன்னேறிய அவன் தலை சாய்ந்து அவள் காதின் ஓரம் முளைத்திருந்த பூனை முடியை தன் சூடாம காற்றை ஊதி அவள் உடலுக்கும் தன்னுடலிலிருந்த உஷ்னத்தை பகிர்ந்துகொண்டான்.

"நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலேயே..."

அவன் அருகாமை தந்த சுகத்தில் அவன் நிலை மறந்து யாழினிக்கு. இதழ்கள் விரிய அவள் கழுத்தில் உதய் முத்தம் பதிக்க கைகளை மேலும் அவன் கழுத்தில் இறுக்கி அவனுக்கு எளிமையாய் மேலும் தன்னில் முன்னேற வழி வகுத்துக்கொடுத்தான் அந்த காதலன்.

"அதுக்கெல்லாம் என்ன அவசரம்? அவசர தேவைகல மட்டும் இப்போ பாக்கலாமே" இன்னும் தாபமாய் அவள் மேல் விழுந்தது அவன் இதழ்கள்... அஞ்சி கிடந்த ஆசைகளை தட்டி எழுப்பியவள் மீது இரக்கமே காட்டாமல் தன்னுடைய ஆட்டத்திற்கெல்லாம் அவளை ஆட்டுவிக்க புரண்டு தவித்தது மனம்.

அவன் கூற்றில் தெளிந்தவள் அவன் பிடரி மயிரை பற்றி தள்ளி நிறுத்தி, "யோவ் ஹிட்லர், எனக்கெல்லாம் எந்த வேலை பண்ணாலும் அதுல தெளிவு இருக்கனும். உன் அவசரத்துக்கெல்லாம் என்னால முடியாது ப்பா" கூச்சத்தை விளக்கி அவனுக்கு சரி சமமாய் நிற்கும் இந்த பெண் சிட்டு அவனுக்கு புதியவளே.

சிரித்தவன், "கொஞ்சம் இடம் மட்டும் குடேன், அய்யாவோட வித்தையெல்லாம் பத்தே நிமிசத்துல காட்டுறேன்" கண் சிமிட்டி போதையேற்றினான் அவளுள்.

படாரென கதவு திறக்கவும் இதற்கு மேல் இவனிடம் இருந்தால் பேசியே அவன் இச்சைக்கு இழுத்துவிடுவான் என்று அவனை விட்டு தள்ளி நின்றவளை ஏகமாய் துரத்தி சென்றது உதய்யின் கண்கள். இவர்களின் நெருக்கத்தை பார்த்த மணிமேகலை, ஆதி தயக்கத்துடன் உள்ளே வர, அவனை கண்டுகொண்ட உதய், "என்ன ஆதி?" என்றான்.

"வீட்டுக்கு கிளம்புறேன் மாமா... நாளைக்கு வர்றேன். அப்பா இன்னைக்கு ஈவினிங் உங்கள பாக்க வர்றேன்னு சொன்னாங்க" வாடிக்கிடந்தது மணிமேகலையின் முகம்.

"எப்படி மணி போற? வண்டில வந்தியா" - உதய்

அவளோ ஆதியின் முகத்தை பார்த்தாள், "எப்டியோ போறேன் மாமா" எந்நேரமும் அழுது விடுவாள் என்று பார்க்கும் பொழுதே தெரிந்தது.

உதய் ஆதியை முறைத்து பார்க்க அவனோ மணிமேகலையை மட்டுமே பார்த்து நின்றான்.

'கண்களில் உள்ள தவிப்பை செயலில் தான் காட்டினால் என்ன?' மணிமேகலை வெளியில் சென்றதும், "ஏன்டா அவள காரணமே இல்லாம அழுக வக்கிர?" - உதய்

"ச்... விடுடா" - ஆதி

"கண்மூடி தனமான பிரியம் இருந்தா தான்டா காதல். உன்னோட சூழ்நிலை மாறுச்சுனா அவள போக சொல்லுவியா? இதே இடத்துல தான் அப்பாக்காக அவ உன்ன வேணாம்னு சொன்னா சரி போ-னு விட்டுட்டு போய்டுவியா? என்ன நடந்தாலும் நம்மளையே சுத்தி சுத்தி வர்ற உறவெல்லாம் கிடைக்கிறது வரம் ஆதி... அதுவும் மணி கொழந்தை... புரிஞ்சு நடந்துக்கோ" - உதய்

"அதுக்குன்னு சஹானாவை விட முடியலடா..." - ஆதி

"அவளுக்கு தான் டாக்டர் பாத்து சொன்னேன்ல?" - உதய்

"அவனை தான் உன் மாமனோட ஆளுங்க கொன்னுட்டாங்களேடா" உச்சபட்ச குரலில் கத்தினான் ஆதி.

ஏமாற்றம் தாங்க இயலவில்லை ஆதிக்கு. ஒரே ஒரு கதவு திறந்து சொர்கவாசலை காட்டாமல் விட்டாலும் கூட பரவாயில்லை, நரகத்தை காட்டாமல் இருக்கலாம் அல்லவா? விதியை நினைத்தால் ஆத்திரமும், வலியும் மட்டுமே மிஞ்சியது.

"யார் சொன்னா?" - உதய்

"அந்த தழல் அனுப்புன மெசேஜ உன் மொபைல்ல நான் பாத்தேனே" கைகளை முகத்தில் வைத்து தேய்த்து பலவீனமாய் நிற்கும் ஆதியை பார்க்கவே யாழினிக்கு கஷ்டமாக இருந்தது.

ஆனால் உதய்யோ சிரிப்போடு, "இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு ஆக வேண்டியத நான் அந்த செகண்டே பண்ணி முடிச்சிட்டேன்" கண்ணீர் குளம் கட்டி நின்றது ஆதியின் கண்களில்.

அன்று ஆதி சென்ற பிறகு கைபேசியை எடுத்து பார்த்தவன் நீரஜ் தழலின் குறுந்செய்தியை பார்த்து உடனே தனக்கு தெரிந்த ஒரு நபரின் உதவியோடு அந்த மருத்துவரின் உயிருக்கு எந்த தீங்கும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மன்றாட்டினை வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே உதய்யை தங்கியிருந்தனர்.

அந்த மருத்துவர் உயிருக்கு ஆபத்து நேர்த்திட வில்லை என்ற உறுதி செய்தியை அறிவதற்காக தான் கை கொண்டு மாறி மாறி வெட்ட வந்தவர்களின் அரிவாளை கையில் கெட்டியாக உதய் பிடித்தது. அந்த மருத்துவனுக்கு ஆபத்தில்லை என்றதும் தன்னால் உதய்யின் கைகள் இலகிட, பின்னாலிருந்து ஈஸ்வரன் ஆதியை துப்பாக்கி குண்டுகள் கொண்டு தங்கியிருந்தது. அதன் பிறகு தானே உடலில் இருந்த பலம் சரிந்து கீழே விழுந்தது.

வேக எட்டுகளோடு உதய் நோக்கி வந்த ஆதி, அவனை கட்டி அனைத்து தோள் சாய்ந்து அழுதான்.

"எப்படிடா நான் உனக்கு கடன் அடைக்க போறேன்... கடைசி வர என்ன கடனாளியாவே இருக்க வைக்கணும்னு முடிவோட தான் இருக்கியா?"

கட்டுகளோடிருந்த கையை கொண்டு ஆதி முதுகில் தட்டிய உதய், "என் மாமா மகளை கல்யாணம் பண்ணிக்கோ... கடன் அடைஞ்சிடும்" அழுகையோடு சிரிப்பு வந்தது ஆதிக்கு.

"விலகுங்க விலகுங்க... நான் மட்டும் தான் இருக்க வேண்டிய இடம் அது" இருவரையும் விலகினாள் யாழினி பொய் கோவத்தோடு.

"எங்க இருந்து தான் இந்த மாதிரி சரோஜாக்காவ புடிச்சியோ தெரியல... இப்போ கூட ஒன்னுமில்ல, என் கூட வேலை பாத்த பொண்ணு ஒன்னு நச்சுனு அசின் தங்கச்சி மாதிரி இருக்கும். கரெக்ட் பண்ணி விடவா?" - ஆதி "அவர் நோ சொல்லிடுவாரு" உறுதியாக யாழினி உதய்யை பார்த்து சிரிப்போடு கூறினாள்.

"அவனுக்கு அசின் ரொம்ப புடிக்கும். டேய் மாப்பிள்ளை, ம்ம்ம் சொல்லுடா" யாழினியுடன் மல்லுக்கட்ட துடித்தான் ஆதி.

"டேய்..." சத்தமாக சிரித்த உதய், "கோர்த்து விடாத..."

"அதெல்லாம் முடியாது... அசின் வேணுமா வேணாமா?" - ஆதி

உதய்யோ ஓரக்கண்ணால் யாழினியை பார்த்து ஆதியிடம், "அசின் வேணாம்னு சொல்ல மனசு வருமா?" என்றதும் கொண்டாட்டமாகி போனது ஆதிக்கு. சிரிப்பே வராமல் யாழினி முன்னாள் சுற்றி சுற்றி சிரித்தான்.

அதில் கடுப்பான யாழினி உதய்யை பார்வையாலே எரிக்க அவன் தன்னை பார்த்ததும் முகத்தை வெட்டு வெட்டி திரும்பினாள், சுதாரித்தவன், "ஆனா எனக்கு இப்போல்லாம் சரோஜாக்கா மேல தான் ஒரே கண்ணா இருக்கே"

அழகாக யாழினி பக்கம் சென்றது உதய் வார்த்தைகள். தன்னை அதிர்ச்சியில் கண்கள் மின்ன பார்த்த யாழினியிடம் கண்ணடித்து மௌனமாக காதல்
பேச சென்றது உதய்யின் கண்கள்.

"ரைட் புரிஞ்சு போச்சு... நான் என் கிளம்புறேன்"

"ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ ஆதி, நம்ம வெறும் கைய வெற்றிடமே இல்லாம புடிக்கிற கைக்கு தான் வெற்றி நிறைஞ்ச நம்ம கைய புடிக்க தகுதி இருக்கு"
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Prefinal யா🥺🥺
ஈஸ்வரன் ஜாலியா இருக்கிஙகளா வெளிய வந்ததும் ஆப்பு ready பின்னாடி😂😂
எனக்கு ஆதி ஆதவன் தமிழ் கௌதம் இப்படி பாக்க செம்மை யா இருக்கு full form la இருக்காங்க ப்ரெண்ட் ku ஒன்னு சும்மா இருக்க முடியுமா மாமா நீ காலிதான்🥳🙊
எப்படி எல்லாம் பிளான் பண்ணி செட் பண்ணி இருக்க ஆதி snake ya கேக்க பயமா இருக்கு அவரு உதைக்கு பண்ணாத விட இது தப்பு இல்ல
மிளகாய் தண்ணி அஹ் அனுபவி🤪🤪
ஆதி கொல மட்டும் பண்ணாத எல்லாரும் உடைந்து போடுவக சஹானா பாவம் உதய் மணி எல்லாரும்
போங்க டா உங்க ப்ரெண்ட் கண்ணா திறந்து பாதுடன் ஆதி போதும் போ ஜெயன் டா விடு
தமிழ் ஆதவன் கௌதம் ready நீயும் போ😁😁😁
Next ஆப்பு நிராஜ் சூப்பர் டா நீங்க😂😂
அது என்ன 3 பேரும் உள்ள போக உங்க உதய் எதுவும் சொல்ல மாட்டான்😁🤗🤗
ஆதி மணி பாத்து ஃபேஸ் bright ஆகுது சரிதான்🤩
டேய் இப்போ பேசுற மாறி முன்னாடி பேசி இருத்த இந்த பிராப்ளம் லா solve பண்ணி கேளு உதய் frds எங்க ஆதி விடு
உதய் ரொம்ப நல்லவன் எல்லாரும் மண்ணிப்பு கேட்ட அவன் என்ன பண்ணுவான் நீயும் அந்த தப்பா தா பண்ண இனி சந்தோசமா இருக்கணும்
உதய் யாழிலி romance பண்ண hospital போதும் 2 பேரும் அமைதியா இருக்கணும்
ஆதி மணி என் ஆழுக வைகுர சஹானா இதோ டாக்டர் ready paru உன் உதய் யாரு happy தான ஆதி
இனி மணி உனக்குத்தான்
உண்மை தான் உதய் சொன்னது இனி எல்லாரும் சந்தோசமா ஒன்ன இருக்கணும்😻😻💗💗💗😍😍😍😍
 
Last edited:
Messages
37
Reaction score
4
Points
8
Prefinal யா🥺🥺
ஈஸ்வரன் ஜாலியா இருக்கிஙகளா வெளிய வந்ததும் ஆப்பு ready பின்னாடி😂😂
எனக்கு ஆதி ஆதவன் தமிழ் கௌதம் இப்படி பாக்க செம்மை யா இருக்கு full form la இருக்காங்க ப்ரெண்ட் ku ஒன்னு சும்மா இருக்க முடியுமா மாமா நீ காலிதான்🥳🙊
எப்படி எல்லாம் பிளான் பண்ணி செட் பண்ணி இருக்க ஆதி snake ya கேக்க பயமா இருக்கு அவரு உதைக்கு பண்ணாத விட இது தப்பு இல்ல
மிளகாய் தண்ணி அஹ் அனுபவி🤪🤪
ஆதி கொல மட்டும் பண்ணாத எல்லாரும் உடைந்து போடுவக சஹானா பாவம் உதய் மணி எல்லாரும்
போங்க டா உங்க ப்ரெண்ட் கண்ணா திறந்து பாதுடன் ஆதி போதும் போ ஜெயன் டா விடு
தமிழ் ஆதவன் கௌதம் ready நீயும் போ😁😁😁
Next ஆப்பு நிராஜ் சூப்பர் டா நீங்க😂😂
அது என்ன 3 பேரும் உள்ள போக உங்க உதய் எதுவும் சொல்ல மாட்டான்😁🤗🤗
ஆதி மணி பாத்து ஃபேஸ் bright ஆகுது சரிதான்🤩
டேய் இப்போ பேசுற மாறி முன்னாடி பேசி இருத்த இந்த பிராப்ளம் லா solve பண்ணி கேளு உதய் frds எங்க ஆதி விடு
உதய் ரொம்ப நல்லவன் எல்லாரும் மண்ணிப்பு கேட்ட அவன் என்ன பண்ணுவான் நீயும் அந்த தப்பா தா பண்ண இனி சந்தோசமா இருக்கணும்
உதய் யாழிலி romance பண்ண hospital போதும் 2 பேரும் அமைதியா இருக்கணும்
ஆதி மணி என் ஆழுக வைகுர சஹானா இதோ டாக்டர் ready paru உன் உதய் யாரு happy தான ஆதி
இனி மணி உனக்குத்தான்
உண்மை தான் உதய் சொன்னது இனி எல்லாரும் சந்தோசமா ஒன்ன இருக்கணும்😻😻💗💗💗😍😍😍😍
thank uu sis 😍 😍
 
Top