• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 33 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap - 33

"உதயாாா..." உதய்யின் உடலை கைகளில் அள்ளி மடியில் கிடத்தி முதலில் அவன் மூச்சை தான் பார்த்தான்... அந்த நொடி வரை சீராக தான் இருந்தது. உதய்யின் மூச்சை தெரிந்துகொண்ட பிறகு தான் ஆதிக்கு மூச்சு விட முடிந்தது.

சுற்றிலும் கண்களை சுழலவிட்டு பார்த்தான் எங்கும் கும் இருட்டு ஆனால் சலசலக்கும் மனிதர்கள் காலடி சத்தம் சத்தம் தெளிவாக கேட்டது. நிச்சயம் உதய்யையும் தன்னையும் வெளியில் விட மாட்டார்கள் என்று தெரிந்தது. வெறியை கண்களிலே அடக்கியவன் எழுந்து சென்று வாகனத்தை உயிர்ப்பித்து ஆக்சிலரேட்டரை அந்த இடமே அதிரும் வகையில் முறுக்கி விட்டான்.

"வா***தா டேய் ஆம்பளையா இருந்தா வெளிய வாங்கடா..." வாகனத்தின் சத்தத்தை விட அதிக உருமாளாய் வந்தது ஆதியின் ஆத்திர குரல். அகங்காரத்தை தட்டிவிட வந்தனர் நான்கு மனிதர்கள்... வீச்சருவாலும், கூரிய கத்திகளோடும்.

"யார்ரா நீயி? அவனை மட்டும் தான் போட சொல்லி ஆடர். சம்மந்தமே இல்லாம வந்து ஆஜராகி சீன் ஆகிடாத... ராஜா நடுல எவன் வந்தாலும் போட்டு தள்ளு. இவனோட பாடிய"

அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வெள்ளி காப்பை முறுக்கிவிட்டு குனிந்து வேகமாக கைக்குட்டை பிடித்து சைலன்சரை வண்டியிலிருந்து அவிழ்தவன் ஆணையிட்டுக்கொண்டிருந்தவன் முகத்தோடு சூடாக இருந்த சைலன்சரை வைத்தே ஓங்கி அடிக்க முகத்தை பிடித்து துடித்து கீழே விழுந்தான்.

"அண்ணாத்த..." இருவர் அவனை பார்த்து ஓட ஆதியோ வெறி ஏறியது போல் மீண்டும் அவன் முன் வந்து நெஞ்சிலே காலை மிதித்து,

"நைனா இப்ப என்ன சொன்ன நீ... மறுபடியும் சொல்லு... சரியா கேக்கல காதை காட்டி ஆதி கேலி செய்ய அந்த இடைவேளையில் ஆதியின் கையில் ஒருவன் அரிவாள் கொண்டு ஆழமாக கையை கீறிவிட்டிருந்தான்.

வலியை பொறுக்க முடியாமல் ஒரு நொடி அதிர்ந்த ஆதி அடுத்த நொடி, அதே சூடான சைலன்சர் கொண்டு அவனின் காலிலே அழுத்தமாக சூடு வைத்து அவன் கழுத்தோடு ஓங்கி அடி வைத்தான்.

மேலும் தாமதமாகினால் உதய்யின் உயிருக்கு தான் சேதாரமென துரிதமாய் மீதமிருந்த இருவரையும் அடித்து துவைத்தவன் அவர்களை உதய்யின் கைபேசி எடுத்து புகைப்படம் எடுத்து உதய்யை தோள்களில் போட்டான். பாரம் தங்காவிடினும் நண்பனை தூக்கி சாலையில் ஓடினான்.

வெறிச்சோடி இருந்த தெருவை பார்த்தவன் வேகமாக முக்கிய சாலைக்கு செல்ல அங்கு ஒரு சில வாகனங்கள் கண்ணில் பட்டாலும் எவரும் உதய்யின் நிலையை பார்த்து உதவி செய்யவில்லை.

"சார் ப்ளீஸ் சார்... உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது சார்... பிளட் ரொம்ப லாஸ் ஆகுது ஹெல்ப் பண்ணுங்க சார்" கெஞ்சினான்.

ஒரு ஆணின் காலில் கூட விழுந்து கெஞ்சினான் எவரும் அசையாமல் போக மீண்டும் சிறிது தூரம் தள்ளி இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நினைவிற்கு வர உதய்யை முதுகில் கிடத்தி மீண்டும் கால்கள் வலிக்க வலிக்க ஓடினான். தூரத்திலே ஆதியின் நிலை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் வேகமாக தன்னுடைய வண்டியை அவன் முன் நிறுத்தி உதய்யையும் உள்ளே படுக்க வைத்தார்.

"அண்ணா வேகமா போங்க... பக்கத்துல இருக்க எந்த ஹாஸ்பிடல் இருந்தாலும் பரவால்ல" அவரிடம் வேண்டிக்கொண்டே ஆட்டோ துடைப்பதற்கு அவர் வைத்திருந்த துணியை எடுத்து வயிற்றுக்கும் நெஞ்சிற்கு இடையில் இருந்த அரிவாள் வெட்டை துணி கொண்டு அழுத்தி மூடினான்.

ஆனாலும் ரத்தம் வடிய உதய்யின் சட்டை கிழித்து பார்த்த பொழுது இடையில் வலது பக்கம் வேறு ஒரு காயம் இருந்தது. கலங்க இது நேரம் இல்லை என்று தன்னால் இயன்ற அளவிற்கு அதையும் அழுத்தி பிடித்தான். வலது கையில் வேறு காயம்... அரிவாளையோ கத்தியையோ வைத்து அவர்கள் தாக்க வந்த பொழுது உதய் தடுக்க நினைத்து வாங்கிய காயம்... பார்த்தாலே உள்ளேயிருந்த சதையெல்லாம் தெரிந்தது.

"உதயா..." உதய்யின் கன்னம் தட்டி அழைத்தான்.

ம்ம்ஹ்ம் சிறு அசைவு கூட அவனிடம் இல்லை. இதயத்தின் மீது கை வைத்தான்... இதயத்தின் துடிப்பு வேகமாக இருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஒருவரை இழந்தது போதாதா இவனையும் இழந்தால் என்ன சொந்தம் தனக்கு? மகனை பார்த்துக்கொள்ளும்படி அந்த தயார் கேட்டுக்கொண்டார்... அவர் கேட்க அந்த சிறு கோரிக்கையை கூட தன்னால் நிறைவேற்ற முடியாதா?

உதய்யின் நெஞ்சிலே வலிக்காமல் அடித்தான் ஆதி, " டேய் எந்திரிடா... உதய்..." இவன் ஏதோ ஒரு மூலையில் நலமாக இருக்கின்றான் என்ற எண்ணமே ஆதியை நிம்மதியாய் இத்தனை ஆண்டுகள் ஓட வைத்தது ஆனால் இன்று இவன் தன்னை விட்டு செல்வதை நினைத்தாலே இதயத்தில் பத்து பாறைகளை வைத்தது போல் அவ்வளவு கணம்.

"உதய் பாருடா என்ன... டேய் உனக்காக ஒரு பொண்ணு காத்துட்டு இருக்காடா... இப்டி பேசாம இருக்காத மச்சான்... டேய்"

உதய்யின் முகத்தை பற்றி கெஞ்சினான் கண்ணீரோடு ஆனால் கல் நெஞ்சக்காரன்... எப்பொழுதும் காட்டும் கோவத்தை கூட இன்று காட்டவில்லை.

"தம்பி அழுகாத... அடுத்தது ஆக வேண்டியதை பாரு. இப்போதைக்கு ஒரு சின்ன ஹாஸ்பிடல்ல வண்டிய வுடுறேன்... அதுக்குள்ள ஏதாவது நல்ல ஹாஸ்பிடல் பாத்துடு"

"சரி ண்ணா ஏற்பாடு பண்றேன்... கொஞ்சம் வேகமா போங்களேன்" ஜெயன் நினைவு வர உதய்யின் கைபேசி எடுத்து அவன் எண்ணை தேடினான்... தொடுதிரையை விலக்கினால் கடவுச்சொல்லை கேட்டது... ச

ரியென எமெர்ஜன்சி காண்டாக்ட் இருந்த இடத்திற்கு சென்றான்... ஜெயனின் எண் மட்டுமே அதில் இருக்க உடனே ஜெயனுக்கு அழைத்து தகவல் கூற, அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு சிறிய மருத்துவமனை உள்ளே சென்றது. இரவு நள்ளிரவை நெருங்கிய நேரமாதலால் வரவேற்பு இடம் காலியாக இருந்தது.

ஓட்டுநர் சென்று உள்ளே பேச போக உதய்யை தூக்கி சென்ற ஆதிக்கு வாக்குவாதம் செய்த ஓட்டுநர் தான் தெரிந்தார். ஆதியை பார்த்ததும் வேகமாக வெளியில் வந்தவர், "மனசாட்சியே இல்லாத மிருகங்க தம்பி இவனுக. நீங்க வாங்க வேற ஹாஸ்பிடல் போகலாம்"

உதய்யின் இடை பிடித்து ஆட்டோவிற்குள் ஏற்ற போக, "அண்ணா நான் பேசி பாக்குறேன்..." உள்ளே செல்லவிருந்தவனை அவர் வார்த்தைகள் தடுக்கவில்லை.

"சார் ரொம்ப சீரியஸ் கண்டிஷன் சார்... கொஞ்சம் பர்ஸ்ட் எய்ட் மட்டும் குடுங்க..."

"போலீஸ் பெர்மிஸ்ஸின் இல்லாம எதுவும் பண்ண முடியாது சார்... புரிஞ்சிக்கோங்க"

யோசிக்காமல் வாதம் செய்தவனின் காலில் விழுந்தான், "கெஞ்சி கேக்குறேன் சார்.. பிளட்ட மட்டும் நிறுத்துங்க இல்லனா ஒரு டாக்டர் கூட வாங்க, அடுத்த ஹாஸ்பிடல் போகுற வர ப்ளீஸ்" கை பிடித்து ஆதி கெஞ்சினாலும் சிலையாய் மாறி போனான் அந்த மருத்துவன்.

"தம்பி பிக்ஸ் வருது ப்பா" வெளியில் ஆட்டோ ஓட்டுனரின் ஓங்கிய குரல் கேட்டு வேகமாக வெளியில் ஆதி வர கை கால்கள் எல்லாம் வெடவெடுத்து பிடித்து இழுத்தது உதய்க்கு...

"ஐயோ..." தலையில் அடித்து உதய்யின் கைகளை பிடித்து ஆதி அமர அந்த ஓட்டுநர் அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த சிறிய அரசு பாலாசபத்திரியில் வண்டியை நிறுத்தினார். இன்னும் உடல் மொத்தமும் நடுங்கிக்கிடக்க துடித்து போனான் ஆதி கேசவன்.

"இத பாக்கவா டா உன்ன தேடி வந்தேன்..." வழி எங்கும் புலம்பியவாறே வந்த ஆதி முகம் அந்த ஓட்டுனருகே பாவமாக போனது.

"இவனுக எல்லாம் காசு சம்பாதிக்கிறதுல சட்ட திட்டம் பாக்க மாட்டாங்க தம்பி... அடுத்தவன் வலில துடிக்கிறப தான் கேட்டது படிச்சது எல்லாம் புத்தில உரைக்கும். எத்தனை உயிரை காவு வாங்கிருக்கங்களோ" அரசு மருத்துவமனையை பார்த்ததும் தான் ஆதிக்கு ஓரளவிற்கு நிம்மதியே வந்தது.

வேகமாக ஒரு ஸ்ட்ரெச்சர் இழுத்து வந்த ஓட்டுநர் ஆதிக்கு உதவ, அவசரம் உணர்ந்து அங்கிருந்த வார்டு பாய், செவிலியர் என சிலர் விரைந்திட, உதய் அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்தான். உதய்யை அழைத்து சென்ற வழியையே பார்த்திருந்த ஆதியின் கால்கள் அப்டியே தடுமாற, சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்துவிட்டான்.

என்ன கொடுமையான நாட்கள்... ஒரு துக்கத்திலிருந்து மீண்டு வரும் முன் அடுத்த துக்கம் கதவை திறந்து காத்திருந்தது...

"உத... உதய்ய பா... பாத்துக்கோ..." கயாத்திரியின் குரல் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்து ஏதோ ஒன்று குடைந்தது ஆதியின் மூலையில். தலையை பிடித்து அமர்த்திருந்தவன் தோளில் கை வைத்து குலுக்கினார் ஆட்டோ ஓட்டுநர்.

"தம்பி போன் ரொம்ப நேரமா அடிக்கிது" என்கவும் தான் உதய்யின் கைபேசியை எடுத்து பார்த்தான். ஜெயன் தான் அழைத்தது.

"எங்கடா இருக்க? எனக்கு என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியலடா... அவன் ஒடம்பு எல்லாம் ரத்தம், எத்தனை வெட்டுன்னு தெரியலடா... உதய் உதய்ன்னு அத்தனை தடவ கூப்பிட்டேன்..."

"சார்..."

"கண்ண தொறக்க கூட மாட்டிக்கிறான்டா... கடைசியா பிக்ஸ் வந்து ஒடம்பெலாம் தூக்கி தூ..."

"சார்... பொறுமையா இருங்க"

"தூக்கி போட்டுச்சு... உள்ள போய் ரொம்ப நேரமாச்சு யாரும் எ..."

மனதில் தோன்றியதெல்லாம் பைத்தியம் போல் பிதற்றியவனை ஜெயனின் சத்தமான குரல் தான் நிதானத்திற்கு கொண்டு வந்தது, "ஆதி நிறுத்துங்க" நிறுத்தியதும் சிறு குழந்தை போல் அழுதவனை தொலைதூரத்தில் இருந்த ஜெயனால் தட்டி கொடுத்து கூட சமாதானம் செய்ய முடியவில்லை.

"எமோஷன்ஸ் கண்ட்ரோல் பண்ணிட்டு எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க... ப்ளீஸ்"

கலங்கிய விழிகளோடு ஆட்டோ ஓட்டுனரை ஏற்றிட்டு பார்த்தவன் கைபேசியை அவரிடம் நீட்டி, "கொஞ்சம் அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ் ண்ணா" உடனே வாங்கி அவர் ஜெயனுக்கு முகவரியை கூறிவிட்டு ஆதி அருகில் அமர்ந்தார் கைபேசியை நீட்டி.

அதை வாங்கியவனுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது அவருக்கு பணம் கொடுக்காதது. பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு பார்த்தான், இருநூறு ருபாய் மட்டுமே இருக்க வேறு பணம் அவனிடம் இல்லை. யோசிக்காமல் கழுத்தில் இருந்த வெள்ளி சங்கிலியை அவிழ்த்தான்...

ரத்தம் படிந்த தன்னுடைய கைகளில் காற்றின் வேதியல் மாற்றத்தால் சற்று கருகிய நிறமாய் மாறியிருந்தாலும் ஆதியின் கண்களுக்கு அது விலைமதிப்பற்றதாகவே மின்னியது. உதய் வாங்கி தந்த வெள்ளி சங்கிலி. இத்தனை நாட்கள் வீட்டின் தாழ்வாரத்தில் ஒரு பெட்டினியுள் கிடந்ததை நேற்று தான் எடுத்து அணிந்தான்.

"என்னடா பிளாட்டினமா" தன்னுடைய கழுத்தில் மும்முரமாய் அணிவித்துக்கொண்டிருந்த உதய்யின் முகம் பார்த்து கேலியாக கேட்டான் ஆதி.

"ம்ம்ம் அது நான் நல்லா சம்பாதிச்சு வாங்கி தர்றேன்" எப்பொழுதும் இருக்கும் அதே சாந்தமான உதய்யின் முகம் தான் ஆதிக்கு தெரிந்தது.

"அப்ப நான் சம்பாதிக்கவே தேவையில்லன்ற?" கழுத்தில் இருந்த அந்த அழகிய பரிசு எத்தனை கொடு கொடுத்தாலும் ஈடாகாது என்று அந்த நொடியே உணர்ந்து பூரித்தது ஆதியின் மனம்.

"அவ்ளோ தான... நீ நல்லா ஒக்காந்து சாப்புடு. நான் உனக்கு சாப்பாடு போடுறேன்" - உதய்

இப்பொழுதும் உதய்யின் வார்த்தைகள் காதில் கேட்க அந்த சங்கிலியை கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்டு குலுங்கி அழுதான் சில நொடிகள். "மனச ஒடைஞ்சிடாதயா... அந்த பையனுக்கு ஒன்னும் ஆகாது" கண்ணீரை துடைத்து நிமிர்த்தவன் கையிலிருந்த சங்கிலியை அவரிடம் கொடுத்தான்.

"என்கிட்டே காசு இல்ல ண்ணா... இத வச்சுக்கோங்க உங்க வண்டி எல்லாம் ரத்தமா ஆகிடுச்சு"

அவனை பார்த்து சிரித்தவர், "நான் இன்னைக்கு உயிரோட இருக்க காரணமே அந்த பையன் தான் ப்பா... ஹார்ட் அட்டாக் ஒரு நாள் நைட். ஸ்டாண்ட்ல யாரும் இல்ல. இந்த பையன் தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி என்ன இன்னைக்கு நிக்க வச்சிருக்கான்...

அன்னைக்கு எனக்கு ஏதாவது ஆகிருந்தா என் பொண்ணு அனாதையா தான் இருந்திருப்பா. என் உயிரை காப்பாத்துன அவனுக்கு நான் அதே உதவிய தான் பண்ணிருக்கேன். காச குடுத்து என்ன மறுபடியும் கடனாளியா மாத்திடாத" என்றவர் மேலும், "போன்ல பேசுன பையன் வந்ததும் நான் கிளம்புறேன். பொண்ணு தனியா வீட்டுல எனக்காக காத்துட்டு இருக்கும்" என்றார்.

அவருக்கு எந்த சொல்வதென்று தெரியவில்லை கண்ணீரோடு கை எடுத்து கும்பிட்டவன் அவர் காலையும் பற்றி நன்றி பல உரைதான்.

அவனை தோளோடு அணைத்த அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுதலாய் இருக்க அடுத்த சில நிமிடங்களில் ஜெயனும் அவனுடைய ஆட்கள் சிலரும் வேகமாக வர முதலில் ஆதி கூறியது உதய்யின் குடும்பத்திற்கு இது பற்றி தெரிய வேண்டாம் என்று தான். இருமனதாக ஜெயனும் தலையாட்ட, "வேற ஹாஸ்பிடல் பாருடா... இங்க சும்மா பர்ஸ்ட் எயிட் பண்ண தான் வந்தோம்"

"நான் வர்றப்பயே எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். டாக்டர்ஸ் கிட்ட பேச பசங்க போயிருக்காங்க" ஜெயன் வந்தது ஏதோ பலம் வந்தது போன்று தோன்றியது ஆதிக்கு. சற்று தெளிந்திருந்தான்.

ஆனால் ஜெயனால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை அதுவும் ஆதியின் அடர் நீல நிற சட்டையிலும் தெரிந்த உதய்யின் ரத்தம்... "எப்படி சார் ஆச்சு?" கேட்டான்.

"நாலு ***** மாடுக வெட்டிருக்கானுக" காதிலே கேட்க முடியாத நான்கு வார்த்தைகள் அடுத்து வந்தது.

அழுகையில் சிவந்திருந்த ஆதியின் முகம் அப்பொழுது கோவத்தில் சிவந்திருந்தது. ஆதியை உன்னிப்பாக பார்த்த ஜெயன் சற்று தொலைவிலிருந்து தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவனை கையசைத்து ஆதியை சுட்டிக்காட்ட அவனும் சில நொடிகளில் ஒரு மருத்துவரோடு வந்தான்.

"இங்க உக்காருங்க" ஆதியை பிடித்து வம்படியாக அமர வைத்த ஜெயன் மருத்துவரிடம் அவனது கையில் பட்டிருந்த பலமான வெட்டிற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினான். அவன் ஆழ்ந்த காயத்திற்கோ, மருத்துவரிடம் தையலோ அவனுக்கு சிறிதும் வலியை தரவில்லை.

உதய்யின் கைபேசியை ஜெயனிடம் தந்தவன், "பாஸ்ஒர்ட் தெரியுமா?" என்றான்.

"இல்ல சார்..." - ஜெயன்

"ரிமூவ் பண்ணி தா" கை காயத்திற்கு மருந்தாற்றி முடிக்கும் முன் கடவுச்சொல் நீங்க ஆதியின் கைகளில் விழுந்தது உதய்யின் கைபேசி.

அதில் தான் எடுத்த அந்த நால்வரின் புகைப்படத்தை காட்டியவன், "இவங்கள தெரியுமா?" நால்வரையும் பார்த்தான் ஜெயன். சிறிதும் பரிச்சயமில்லா முகங்கள்.

"தெரியல" - ஜெயன்

"இவனுக தான் நான் போய் பாத்தப்ப அங்க இருந்தது. யாரோ சொல்லி வந்துருக்கானுக. அந்த பக்கம் சிசிடிவி எதுவும் இருந்தா செக் பண்ண சொல்லு" இன்னொரு கைபேசியை அவன் கையில் கொடுத்தான்.

"அங்கேயிருந்து எடுத்தேன். இந்த ஐ-போன் நிச்சயமா அவனுக யூஸ் பண்ற மொபைல் இல்ல. வேற யாரோ அங்க இருந்துருக்காங்க. யாருன்னு மட்டும் கண்டு புடி" - ஆதி

"சொல்றேன்னு தப்ப நினைச்சுக்க வேண்டாம் சார்.. நீங்க இதுல வராதீங்க நான் பாத்துக்குறேன் பசங்கள வச்சு"

ஜெயனின் வார்த்தைகளில் பொறுமை பறக்க, "அத சொல்ல நீ யாருடா... உள்ள குத்துயிரும் கொலையுயிருமா இருக்கறவன பாத்ததுக்கு அப்றமும் வாய பொத்திட்டு நின்னு அழுக சொல்றியா? சும்மா விட மாட்டேன் டா. ஏண்டா இவன் மேல கை வச்சோம்ன்னு ஒவ்வொரு செகண்டும் பீல் பண்ணியே சாகனும் அவன். அது வர ஓய மாட்டேன்" சொடக்கிட்டு சவால் விட்டான் ஆதி.

"இதுக்கு பயந்து தான் சார் வேணாம்னு சொல்றேன். உதய் சார்க்கு தெரிஞ்சா தன்னால தான்-னு நெனச்சு ரொம்ப கஷ்டப்படுவாரு" - ஜெயன்

"அவனுக்கெல்லாம் நான் பயப்புற்ற ஆள் இல்ல. என் மேல ஒரு சின்ன அடி பட்டத்துக்கே அடுத்த நாள் மினிஸ்டர் செத்து கெடந்தான்ல இப்ப என்னோட டர்ன்... எப்ப அவனை ரத்த கரையோட என் கைல தூங்குனேனோ அப்பயே இது என் பொறுப்புல வந்துடுச்சு. நீ ஆள கண்டு புடி... இல்லையா நின்னு வேடிக்கை மட்டும் பாரு."

அப்படி அவன் மாட்டேன் என்றால் ஆதி தானே சென்று அத்தனையையும் கண்டு புடிடித்துவிடுவான் என்பதால் சரி என்று கூறுவதை தவிர வேற வழி இல்லாமல் போனது ஜெயனுக்கு. உதய்யின் நிலை பற்றி அறிந்துகொள்ள தானே மருத்துவரை பார்க்க காத்திருந்தான். சில நிமிடங்கள் காத்திருந்தான். எவரும் வெளியில் வரவும் இல்லை உள்ளேயும் செல்லவும் இல்லை...

பொறுமை தாங்காமல் உள்ளே சென்றவனுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே தெரிய ஒரு மன்னிப்புடன் வெளியில் வந்தான். ஏதோ யாரையும் நம்ப மனம் வரவில்லை சில நிமிடங்களுக்கு முன் நடந்த விபத்தில்.

இன்னும் சில நிமிடங்களில் வெளியில் வந்த மருத்துவர், "ஏங்க என்ன உங்களுக்கு அப்டி ஒரு அவசரம்? உள்ள டிரீட்மென்ட் குடுக்குறதா இல்ல காவல் காக்குறதா?" திடீரென கதவை சடாரென திறந்து வந்ததில் கத்தி தவறாக ஏதாவது நிகழ்ந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற பயத்தில் தான் ஆதி மேல் காய்ந்தான் அந்த இளம் வயது மருத்துவன்.

"அவன் எப்படி இருக்கான் சார்?"

பாவமாக கேட்டவனின் பரிதவிப்பை உணர்ந்த அந்த மருத்துவன் பெருமூச்சோடு, "இன்னும் கிரிட்டிக்கல் தான். பிளட் ஸ்டாப் பண்ணிருக்கேன். இங்க பெருசா வசதி இல்ல. நீங்க ஜி.ஹச் இல்லனா ஏதாவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. முதுகல ரெண்டு கன் ஷாட், ஒடம்புல மொத்தம் மூணு வெட்டு, அது இல்லாம கைல அருவா புடிச்சிருக்காரு.

காயம் எதுவும் ரொம்ப ஆழமா போகாதனால ரொம்ப பிளட் லாஸ் ஆகல. ஆம்புலன்ஸ் அரேஞ் பண்ணிட்டேன். டாக்டர்ஸ் வேற யாரும் இல்ல சோ நானே கூட வர்றேன். எனக்கு மிஸ்டர் உதய் மாதவன் ஒரு பிஸ்னஸ் மேன்-னு தெரிஞ்ச காரணத்துல எந்த கொஸ்டின் கேக்காம டிரீட்மென்ட் குடுத்துட்டேன். எல்லாரும் இதே மாதிரி இருக்க மாட்டாங்க. சோ ஏற்பாடு பண்ணிக்கோங்க"

உடனே எல்லா வேலைகளும் மின்னல் வேகத்தில் நடந்தது. பத்து நிமிடத்தில் ஜெயன் ஏற்பாடு செய்திருந்த மல்டி ஸ்பேசாலிட்டி ஹொஸ்பிடலில் ஆம்புலன்ஸ் நிற்க உதய் உடனே சிகிச்சைக்காக உள்ளே அழைத்து செல்லப்பட, அவனுடைய தற்போதைய நிலை பற்றிய தகவல்களை அங்கிருந்த மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்து ஆதி கையில் உதய்யின் உடமைகளை கொடுத்தான் அந்த மருத்துவன்.

"ஒரு டாக்டரா என்னோட வேலைய முடிச்சிட்டேன்... அஸ் எ ஹியூமன் பீயிங் சொல்ல வேண்டிய முக்கிய விசியம் இது. மிஸ்டர் உதய் ஏற்கனவே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்காரு. சில வருஷங்களுக்கு முன்னாடின்னு வச்சுக்கோங்க... இது உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஓகே... தெரியல்னா ஒரு டாக்டரா சொல்ல வேண்டியது என்னோட கடமை.

இத நான் இப்ப உங்ககிட்ட சொல்ல வேண்டிய ரீசன், டிரீட்மென்ட் குடுக்குறப்ப என்னோட டிரீட்மென்ட்க்கு அவர் குடுத்த ரெஸ்பான்ஸ்... ஏதோ ஒரு கோவம் அவர்கிட்ட இருக்கு முடிஞ்சா இன்னைக்கே எழுந்து நடந்துடுவார் போல... உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல... ஜஸ்ட் பி கேர்புல்" சரி என தலையை ஆட்டினான் ஆதி.

ஆனால் மனதில் மீண்டும் மீண்டும் அந்த மருத்துவரின் வார்த்தைகள் சந்தேகத்தை கொடுத்தது. தான் பேசும் பொழுது தெளிந்திருந்தானே உள்ளத்தளவில்... கோவமோ வருத்தமோ இருந்தால் ஜாடை மாடையாக கூட தகவலை தெரிவித்திருப்பான் என்பது திண்ணம்.

ஆக தான் சென்ற அந்த சிறிய இடைவேளையில் தான் ஏதோ நடந்திருக்கின்றது... யோசனையில் மூழ்கி கிடந்தவன் உதய்யின் வாழ்க்கையில் தனக்கு தெரிந்த அத்தனை மனிதர்களையும் ஒவ்வொருவராக முடிச்சிட்டு பார்த்தான்.

எங்கும் சிக்கல்கள். எங்கு சென்றாலும் உதய் ஏதாவது ஒரு பிரச்னையை பிடித்து வைத்திருந்தான். துணைக்கு ஜெயனை அருகிலே அமர்த்தியவன் கேட்க வேண்டிய சந்தேகங்களை எல்லாம் கேட்க இத்தனை கோணங்களில் கேள்வி வருமா என்ற சந்தேம், சந்தேகத்துடன் சுற்றி திரியும் ஜெயனுக்கே வந்தது.

அத்தனையையும் கேட்டு முடித்தவன் இறுதியாக அந்த மருத்துவன் கொடுத்த உஹையின் உடமைகளை பார்த்தான். ரத்தம் படிந்த அவனின் சட்டை, பாண்ட் இருக்க அதில் ஏதேனும் இருக்கின்றதா என்று பார்த்தான். எதுவும் இல்லை. உதய்யின் கைக்குட்டையை தவிர.

ரத்தம் படிந்த அத்தனையும் குப்பையில் கிடத்தியவன் உதய்யின் தங்க சங்கிலியையும் வெள்ளி மோதிரத்தையும் பத்திரப்படுத்தினான். மேலும் இருந்தது ஆதவன் அன்று உதய்யிடம் கேள்வி கேட்க வைத்த உதய்யின் அலுவலக முத்திரை. முன்னும் பின்னும் திருப்பி சில நிமிடங்கள் பார்த்தான்.

"இது ஒரு டிக்கெட் மாதிரி சார்... எல்லாரும் வச்சிருப்போம், இதுக்குன்னு சில ஸ்பெஷல் ஆக்ஸஸ் இருக்கு லைக் நார்மல் எம்பலாய்ஸ் வர முடியாத இடத்துக்கு நாங்க போகலாம், சார் வீட்டுக்கு எப்ப வந்தாலும் இந்த காயின் காட்டிட்டு தான் போகணும், ஈவென் கார், டூ வீலர் இதுல எது எடுத்தாலும் இத காட்டணும். உதய் சார் கிட்ட இருக்காதே" என்று ஆதியிடமிருந்து வாங்கி அதை ஆராய்ந்தான்.

"இது ஃபேக் சார்" என்றான் அதிர்வாக ஜெயன்.

"எத வச்சு சொல்ற?" - ஆதி

"யாராவது இத தப்பா யூஸ் பண்ணிட கூடாதுனு தான் கண்ணனுக்கு உறுத்தாத மாதிரி இந்த காயினோட ஒரு கார்னெர்ல ஸ்கிராட்ச் போட்டிருக்கும்... இந்த காயின்ல அந்த ஸ்கிராட்ச் இல்ல. சோ கண்டிப்பா இத யாரோ செஞ்சு தான் யூஸ் பண்ணிருக்காங்க. வெயிட் கூட கம்மியா இருக்கு" தன்னுடைய சந்தேகத்தை ஜெயன் கூற, சஹானா நினைவு தான் வந்தது ஆதிக்கு.

"ஆதவன் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல காட்டுனது நியாபகம் இருக்கா?" பொறி தட்டியது ஆதிக்கு... நிச்சயம் ஏதோ சம்மந்தம் இரண்டுக்கும் இருக்கும் என்று உறுதியாக இருந்தான்.

"இல்ல சார்... அத பத்தி விசாரிக்க வேண்டி இருக்கும்னு நான் எடுத்து வச்ச போட்டோ கூட உதய் சார் டெலீட் பண்ணிட்டாங்க" - ஜெயன்

"முப்பது நாள் ரீசைக்கிள் பின்-ல இருக்கும் டா... ரேகவ்ர் பண்ணு" அதுவும் சரியாக பட எடுத்தான் ஜெயன். ஆதி சந்தேகத்தை உறுதியாக்க அந்த புகைப்படத்தில் அந்த கீறல் இல்லை.

"தன்ன கொல்ல ட்ரை பண்ணவன்கிட்டயிருந்து இத எடுத்து வச்சு நமக்கு ஹிண்ட் குடுத்துருக்கான்.. அப்ப சஹானாவ கொலை பண்ண ட்ரை பண்ணவன் தான் இப்ப உதய் மேலயும் கை வச்சிருக்கான். ஒ*** செத்தானுக என் கைல" வேங்கையாய் பாய தயாராக இருந்தவனை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த கைபேசி வெறுப்பேற்றியது.

கோவத்தில் எடுத்து காதில் வைத்தவன், "இப்ப என்ன உங்களுக்கு வேணும்?" என்றான் கோவமாக.

அந்த பக்கம் நளினிக்கோ மணி இரண்டை தாண்டியும் மகன் வீட்டிற்கு வராததால் தூக்கம் ஒரு பொட்டு கூட வர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.

"உதய் நல்லா தானே ப்பா இருக்கான்?" ஆதியின் ஆத்திர குரலை உடனே இனம் கண்டவர் மனதில் சிறு அச்சம்.... இருவருக்குள்ளும் ஏதேனும் சண்டையோ என்று.

"தம்பி டாக்டர் வர சொன்னாங்க"

வார்டு பாய் ஒருவன் வந்து செய்தி சொல்ல, "உங்கள எல்லாம் விட்டு தள்ளி நிக்கிற வர அவன் நல்லா தான் இருப்பான்" அவசரமாக நளினிக்கு கோவமாக பதில் தந்தவன் மருத்துவரை நாடி சென்றான்... பட படத்த இதயத்தோடு...

ஏதேனும் அசம்பாவிதமான வார்த்தைகளை கூறிவிடுவாரோ என்ற பயம் மனதில் தொற்றிக்கொண்டது.

'இருக்காது... சின்ன வயசுல நீ நெனச்ச ஒடனே உன் முன்னாடி வந்து நிப்
பானே ஆதி... அப்ப தோணுமே இவனுக்கு ஆயிசு நூறுன்னு'

ஒரு மனம் ஆறுதல் கூறும். மறு மனமோ, 'ரத்தம் அப்டி கொட்டுச்சே... அவனுக வெட்டுனதுல நரம்பு ஏதாவது பாதிச்சு அவனுக்கு தாங்க முடியாத கஷ்டத்தை குடுத்தா?'
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

குரங்காய் மாறி மாறி பேசும் மனதை ஒரு நிலை படுத்தவே முடியாமல் ஆபரேஷன் தியேட்டர் முன்னாள் வந்து நின்றான். சில நிமிடங்களில் உடன் ஜெயனும் ஆதி பின்னால். பயம் கொண்ட இதயத்தோடு காத்திருந்தவன் மனதின் வேகத்தை கூட்டவே திறந்தது அந்த கதவு.

நிதானமாக வந்த மருத்துவர்களில் இருவர் சென்றுவிட, அறுவது வயதை தொட்ட ஒருவர் மட்டும் நின்றார், "நீங்க அவருக்கு என்ன ரிலேஷன்?"

"ப்ரன்ட் டாக்டர்" - ஆதி

"அவரோட பேமிலி வரலையா?" - டாக்டர்

"இல்ல... அவங்க வெளிய போயிருக்காங்க..." பயம் கூடியது ஆதிக்கு அவரது தயக்கத்தில், "ஏ.. ஏதாவது பிரச்... பிரச்சனையா டாக்டர்?"

"இல்ல பேமிலி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. டிரீட்மென்ட் இன்னும் உள்ள நடந்துட்டு தான் இருக்கு. பர்ஸ்ட் எயிட் குடுத்தனால ரிஸ்க் கம்மியாகிருக்கு. பாக்கலாம். பேஷன்ட் அன்கான்ஷியஸ் ஸ்டேஜ்ல தான் இன்னும் ரெண்டு நாள் இருப்பார். அது வர எங்களால எதுவும் சொல்ல முடியாது"

அவ்வளவு தான் என் வேலை என்று சென்றுவிட்டார் அந்த மருத்துவர். புலம்பி அழுக முடியவில்லை, செய்தாக வேண்டிய வேலைகள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக ஓரம் சென்று அமர வைத்தது ஆதியை. ஒரு பெரிய பேட்டி முழுதும் பத்திரங்களோடு வந்த ஜெயன் ஆதி அருகில் வைத்தான்.

கேள்வியாக அவனை பார்த்த ஆதியிடம், "இதெல்லாம் பாருங்க சார்... என்னால உதய் சார் குடும்பத்தை வாய் தொறந்து பேச முடியல. மனுசனை கொடஞ்சு எடுத்துட்டாங்க" மனம் தாங்காமல் ஆதியிடமே அத்தனையையும் ஒப்படைத்தான்.

"நீங்க பேசுறப்ப டாக்டர பாக்க சொன்னது கேட்டு ஆதவன் சார்க்கு கால் பன்னிருப்பாங்க போல. எனக்கு அவர் கால் பண்ணி கேட்டதும் உண்மைய சொல்லிட்டேன். எப்டியும் இன்னும் ஹால்ப் அன் ஹௌர்ல வந்துடுவாங்க. ஆனா அவங்க யாரும் உதய் சார் முகத்தை கூட பாக்க தகுதி இல்லாதவங்க"

கோவமாய் ஜெயன் கூற ஆதி அங்கிருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தான் ஆச்சிரியதோடு. நெற்றியை நீவி தலை தொங்க பொட்டு அமர்ந்தவன் முன்னாள் அமைதியாக வந்து நின்றது மூன்று ஜோடி கால்கள். நண்பர்கள் தான்.

அந்த கால்களை கண்களை மற்றும் உயர்த்தி பார்த்த ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ஜெயனிடம் விசாரிப்புகள் சென்றது. கடமைக்கு கூறினான் அவனும் பேச விருப்பமில்லாமல்.

ஆதியின் அருகில் கூட மூவரும் வரவில்லை, தூரத்தில் நின்றே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் உதய்யின் மொத்த குடும்பமும் திமு திமுவென வந்து மொத்த இடத்தையும் ஆக்கிரமித்தது. பெரிய இடது விவகாரம் என்பதால் மருத்துவமனை நிர்வாகமும் இரு மனதாய் அமைதியாகிவிட்டது.

உதய்யின் நிலை கேட்டு நளினி புடவை தலைப்பில் வாயை பொத்தி ஓ-வென ஒரே அழுகை. சமாதானம் செய்த சகோதரிகளுக்கும் நிற்க மாட்டாமல் கண்ணீர் தான். யாரை எப்படி தேற்றுவதென்று தெரியவில்லை ஹரிக்கு. தந்தைமார்கள் மனதில் பாரத்தோடு அழுகும் பெண்களை பார்க்க மட்டுமே முடிந்தது.

"எதுக்குடா இவனுக்காக எல்லாம் அழுகுறாங்க? அவன் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறான்... என்ன கேட்டா இதுவே கம்மி" இந்த நிலையிலும் உதய் மேல் ஏனோ கோவம் செல்லவில்லை ஆதவனுக்கு.

பேசி இரண்டு நொடிகள் கூட ஆகவில்லை, பாய்ந்து வந்து அவன் டீ-ஷர்ட்டை கொத்தாக பிடித்த ஆதி வந்த வேகத்தை விட இன்னும் ஆவேசமாக ஆதவன் முகத்திலே இரண்டு முறை ஓங்கி குத்தினான்.


"ஆதி..." தமிழ் கெளதம் ஆதியை தடுக்க ஜெயன் அமைதியாய் நின்றுகொண்டான். ஹரி தான் பயத்தில் வந்து ஆதியை கெஞ்சினான். ஆனாலும் அசராமல் மூவரையும் உதறி சட்டையை சரி செய்து நின்றான்.


"யாருடா தப்பு பண்ணது? நீயா இல்ல அவனா?" ஆதவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி உறுமினான்.

உதய்யின் பெயர் பதித்த போலி நாணயத்தை எடுத்து ஆதவன் முகத்திலே எறிந்தவன், "இந்த மயிரை பாத்துட்டு தானே அவனுக்கு கொலைகாரன் பட்டம் குடுத்த. இது பொய், அந்த கார் பொய், அதுல வந்த உதய் ஆளுங்க பொய். எல்லாத்துக்கும் மேல நீயும் உன்னோட இத்தன நாள் நட்பும் பொய்"

ஆதவன் சட்டையை பிடித்து உலுக்கி பின்னால் சுவற்றோடு மீண்டும் தள்ளினான். அங்கிருந்த அத்தனை மனிதர்களும் ஆதியை விரிந்த விழிகளோடு ஏறிட்டனர்.

"யாருக்காக இவன் வேணாம்னு நீ தூக்கி போட்டியோ அவளுக்காக மூலை மூலைல நின்னு கண்ண கசக்குறத தவற வேற என்ன பண்ண?"

உதய்யின் மீது தவறில்லை என்றறிந்த பிறகே மனதில் தாங்க முடியாத பாரம் குடியேறியிருக்க இப்பொழுது சஹானாவிற்காக அவன் என்ன செய்தான் என்று கேட்டதும் அவனை அறியாமலே கண்கள் கலங்கிவிட்டது.

"ஒரு ஆணியும் புடுங்கல... ஆனா யாரு இரக்கமே இல்லாம கேவலம் ஒரு கேள்வி கேட்டதுக்கு பழி வாங்குறான்னு சொன்னியோ அவன் தான் இன்னைக்கு நீ ஏன்டா கலங்குற உன் தங்கச்சிய நான் நடக்க வக்கிறேன்னு சொல்லி என் தங்கச்சிக்கு டிரீட்மென்ட் ஏற்பாடு பண்ணிருக்கான்...

இப்போ சொல்லு நீ தப்பு பண்ணியா இல்ல, உன் பேச்சு எல்லாம் கேட்டுடும் இத பண்ணவன் தப்பான ஆளுனா... ஆமா டா. என் உதய் தப்பு தான் பண்ணிருக்கான்"

கெளதம், தமிழை பார்த்தவன், "இதுல இவனுகளும் சிங் ச்சாங் அடிச்சிட்டு... ச்சை வெக்கமா இருக்குடா உங்கள எல்லாம் பாக்க"

உதய் மனதில் ஆதவன் வார்த்தைகள் எந்த அளவிற்கு விடுவாய் மாறியிருக்கும் என்று நினைக்கும் பொழுதே நரம்பெல்லாம் புடைத்து முறுக்கேறியது ஆதிக்கு. ஜெயன் வந்து கொடுத்த அந்த பெரிய அட்டை பெட்டியை உதய் குடும்பத்தின் முன்னேற் தூக்கி எறிந்தான்.

"இந்தாயா நீ கேட்டியே கணக்கு எல்லாம் இதுல இருக்கு"

ரகுநந்தன் ஏற்கனவே மகனின் நிலையில் சோர்ந்துபோயிருந்தார். என்ன தான் மூத்த மகன் மீது கோவமாக இருந்தாலும் அந்த குடும்பத்தின் அஸ்திவாரம் அவன் அல்லவா... அவன் நிலையை கேட்ட நொடியே தந்தை மனம் அதிகம் ஆட்டம் கண்டிருந்தது. இப்பொழுது ஆதி கூறுவது புரியவில்லை அவர் இருந்த மனநிலையில்.

"இதுல உங்க நாலு பசங்களுக்கு லாபம் வர்ற நேரம் எல்லாம் ஒவ்வொரு சொத்து தனி தனியா வாங்கி போட்ருக்கான்... நாளைக்கு நீங்களோ உங்க தம்பியோ இவங்க யாரையும் எதிர் பாத்து இருக்க கூடாதுன்னு தனியா உங்க மூணு பேர் பேர்ல டேப்பாஸிட் பல கோடி பண்ணி வச்சிருக்கான். இது வர அவன் சம்பளத்தை தவற ஒரு பைசா உங்க கம்பெனி சொத்துல எடுத்து இல்ல...

இது தான் அந்த முட்டா பையன் பண்ண பெரிய தப்பு. ஒரு வேலையும் செய்யாம சும்மா சுத்திட்டு இருந்தவனுக பேர்ல சொத்து மேல சொத்து வாங்கி போட்டதுக்கு அவன் பேர்ல வாங்கி போட்ருந்தா இன்னைக்கு நீங்க கணக்கு கேட்டப்ப மனசு வலிக்காம இருந்துருக்கும். பரதேசி பரதேசி எல்லாம் அவனை சொல்லணும் கண்ண கசக்கிட்டு நின்னான்"

அவர் சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது ஆதிக்கு. அவ்வளவு ஆதங்கம் மனதில் நின்றது.

"உனக்கு என்னையா தெரியும் உன் பையன பத்தி" ரகுநந்தன் அருகே ஒட்டி சென்று நின்றான், "சும்மா ஆபீஸ் ஆபீஸ்-னு அதையே கட்டிட்டு சுத்துன உனக்கு எங்கயோ அவனோட குணம் எல்லாம் தெரிய போகுது? இந்த பிஸ்னஸ், கணக்கு, இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் அவனுக்கு சுத்தமா புடிக்காது.

அவன் நல்லா யோசிப்பான். கவிதை எழுதுவான். ஒரு லிரிஸிஸ்ட் இல்லனா டைரக்ட்டரா தான்டா ஆவேன்னு என்கிட்டே சொல்லிட்டே இருப்பான். போய் அவன் ரூம்ல பாரு, ஒளிச்சு வச்சிருப்பான் ஏதாவது ஒரு மூலைல அவனோட ஆசைய எல்லாம். அதை தூக்கி போட்டுட்டு நீங்க கஷ்டப்பட கூடாதுன்னு தான் இந்த சாக்கடைக்குள்ள வந்து விழுந்தது தோ இப்ப உள்ள எப்ப எப்பன்னு இருக்கான்" முகத்தை சுளித்தான் அவரின் உணர்ச்சியில்லா முகத்தில்.

"முதல உன் பையனோட மனச படிச்சிட்டு அப்றம் போய் பிஸ்னஸ் மண்ணாங்கட்டிய பாரு. நீ சம்பாதிக்கிற காச அனுபவிக்கானாலும் பிள்ளைன்னு ஒன்னு வேணா?"

மனைவியின் தோளை பிடித்து ஆதரவாய் நின்ற ஜெயனந்தன் தம்பதியிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான், "உங்க பையனா இருந்தா இது மாதிரி தான் இத்தனை வருஷம் தனியா விட்ருபிங்களா?"

தாங்களாவது அவனை பார்த்திருக்கலாமே என்று ஆதங்கமாய் பார்த்த அவன் கண்களை சந்திக்க இருவருக்கும் துணிவில்லை. சாட்டை அடியாய் இருந்தது அவன் கேள்வி... கணவனின் கை பிடித்து இன்னும் அழுதார் நளினி.

அவர்களை ஒட்டி நின்ற விஷ்ணு மீது விழுந்தது ஆதியின் பார்வை, சுளித்தான் முகத்தை, "நீ எல்லாம் என்னடா மனுஷன்? அவன் மனசுல என்ன இருக்குன்னு உன்னால தெரிஞ்சுக்க முடியலைன்னா மூடிட்டு போய்டணும் அத விட்டுட்டு வந்து வந்து அவனை நோகடிச்சிட்டு எப்படிடா இப்டி எதுவுமே தெரியாத மாதிரி வந்து நிக்கிற?




ஒரு அண்ணனா நீங்க பண்ற தப்ப தட்டி கேட்டான் அத ஒரு குத்தம்னு சொல்லி, வார்த்தை விட்டு... ஏன்?" தாங்க முடியவில்லை ஆதிக்கு. இத்தனையையும் செய்து இவர்களிடம் ஒரு ஆறுதலான பார்வை கூட அவனுக்கு கிடைத்ததில்லையே...

"நடு ரோட்டுல நின்னு அழுகுறான் சின்ன கொழந்த மாதிரி... அம்மா கூடயே செத்து போயிருக்கலாம்னு" அன்று உதய் ஆதியை கட்டி அழுதது இன்றும் ஆதியின் மனதில் நின்று அழுத்தியது.

"இவன்கிட்ட கேளு" ஜெயனை கை நீட்டினான், "உங்கள சுத்தி எவ்ளோ பாதுகாப்பு வச்சிருக்கான்னு. உன் அப்பா சித்தப்பா, அவன் சம்பாதிச்ச பகையை எல்லாம் யாரும் உங்க மேல காட்டிட கூடாதுன்னு எந்நேரமும் உங்கள சுத்தி ஆள் இருந்துட்டே இருக்கும். கண்ணுக்குள்ள வச்சு பாத்துட்டான்... ஆனா நீங்க அவனுக்கு தந்த கிப்ட் செத்து போகணும்ங்கிற ஐடியா.

என்னமோ ஜெயிலுக்கு போன உன் மாமனுக்கு சப்போர்ட் பண்ணி இவன் தான் அந்த தீவு எல்லாம் வளச்சு போட்ருப்பான்னு சொன்னியாம்ல. உன் மாமன் பண்ண தில்லாலங்கடி வேலைய சொல்லவா?"

விஷ்ணுவிற்கு உதய் மேல் கோவம் இருந்தது நிறைய விசயங்களில் ஆனால் என்றும் சகோதரன் மீது வெறுப்பு இருந்ததில்லை, சகோதரனிடம் தந்தை கணக்கு கேட்ட பொழுது கூட தனியாக சென்று தந்தியிடம் சண்டையிட்டவன் தானே இதில் இன்று அவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பொழுது மகிழும் அளவிற்கா மனதிலிருந்த ஈரம் வற்றியிருக்கும்? மனதின் உள்ளே அழுகை தான் செய்தான் விஷ்ணு.

"உன் அண்ணன் யாழினிய லவ் பன்றான். அத தெரிஞ்ச உன் மாமா அவளோட அப்பாவ ஜெயில்ல போட்டு, அவளோட தங்கச்சிய வச்சு மிரட்டி அவளை உன் அண்ணன் பக்கமே வர கூடாதுன்னு கண்டிஷன் போட்ருக்கான்.

இது இல்லாம செத்து போன என்னோட அப்பாவோட சொத்துக்கு ஆசைப்பட்டு அவரோட பேர கேட்டாலே ஊரே காரி துப்புர மாதிரி பண்ணதும் இல்லாம அத உதய் மேல பழி போட்ருக்கான்" சில நிமிடங்களுக்கு முன்னர் தான் ஜெயன் இந்த தகவலை ஆதியிடம் கூறியிருந்தான்.

பல வருடங்களுக்கு முன்னர் ஈஸ்வரன் கையில் அதிக பணம் இல்லாத நேரம், ஆதியின் தந்தை பெயரில் இருக்கும் நிலத்தை அபகரித்து விட எண்ணி அவர் கட்டிய கட்டிடங்களை தகர்த்தி சன்மானம் என்னும் பெயரில் அந்த இடத்தை வாங்க ஏற்பாடு செய்திருந்தார்.

அதை அலுவலகம் சென்றுகொண்டிருந்த உதய்யின் பார்வைக்கு எப்படியோ தெரிந்து போக, அந்த நிலத்தை வைத்து ஆதியின் தந்தை பணம் வாங்கியிருப்பதாக கூறி தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டான்.

"இதெல்லாம் பண்ண உன் மாமன் நல்லவன், அத தட்டி கேட்ட இவன் கெட்டவன், திருடன்? நல்லா இருக்குடா உங்க ஊர் நியாயம்... உன் அண்ணனை அவன் குடும்பத்துக்கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னு நான் தான்டா உங்கள போலீஸ்ல ட்ராமா போட்டு மாட்டி விட்டேன். தெரியல அன்னைக்கு...

ஏற்கனவே அவன் குடும்பம் அவன் கூட இல்லனு. அப்பயும் நீங்க இத காரணமா வச்சாவது நிதானமா மாறுவீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டான். நீ பேசுன வார்த்தையை உன்னால இன்னைக்கு திரும்ப வாங்க முடியுமா?"

விஷ்ணுவின் சட்டை பிடித்து தள்ளினான், அடுத்து ஹரியின் கையையும் பிடித்து வெளியில் தள்ளினான், "போங்கடா. எல்லாரும் போங்க" நண்பர்களை பார்த்தும் அதே கோவத்தோடு கத்தினான்.

"யாரும் வேணாம். நான்... நான் பாத்துக்குறேன் என் உதய. சாகுற வரைக்கும் அம்மாவா, அப்பாவா நின்னு அவனை நான் பாத்துக்குறேன். போங்க... போலியா பாசம் காட்டி, அவனை யூஸ் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா கொல்லுற நீங்க அவனுக்கு வேண்டவே வேண்டாம்" தன்னையே அறியாமல் நிற்காமல் ஆதியின் கைகளிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.

"இதுக்கெல்லாம் என்ன தான் சொல்லணும்" தலையில் அடித்து அமர்ந்தான் ஆதி, "அன்னைக்கு மட்டும் நான் பொய் சொல்லி காயத்திரி ம்மா-கு கால் பண்ணி கூப்புடாம இருந்தா இந்நேரம் அவங்க உயிரோட இருந்துருப்பாங்க" கண்ணீரில் மூழ்கிச்சிருந்த மொத்த குடும்பமும் விழுக்கென ஆதியை நிமிர்த்து பார்த்தனர்.

"ஆதி வேணா" இத்தனை வருடங்கள் மூடி மறைத்த உண்மையை அவன் இவர்கள் முன்னாள் கூறுவது ஆதவனுக்கு துளியும் விருப்பமில்லை.

"தெரியட்டும். தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க கொலைகாரன்னு தானே? சொல்லிக்கட்டும். அது தானே உண்மை. நான் பண்ண தப்புக்கு இன்னைக்கு அவன் இவங்கதா சிக்கி அனுபவிச்சிட்டு இருக்கான். என் காயத்திரி ம்மா இருந்தா இந்த நிலைமை அவனுக்கு வந்துருக்காதுல... இதுல நான் வேற அவனை எவ்ளோ கஷ்ட படுத்திட்டேன்..."

இவ்வளவு நேரம் ஆடி தீர்த்த ஆதி மொத்தத்தையும் பறிகொடுத்து ஏதோ போல் அமர்ந்திருக்க அவனை பார்க்கவே அவர்களால் முடியவில்லை. அனைவரும் பேச வார்தையின்று அமர்ந்திருந்தனர். கண்ணீர் மட்டுமே அங்கு கேட்கும் சத்தமாக போனது.

நண்பனின் நொறுங்கிய நிலையை பார்த்த கெளதம் கண்களை துடைத்து அவன் முன்னே தரையில் மண்டியிட்டு அமர அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினான் ஆதி.

"போடா... அவனையே சந்தேகப்பட்டுட்டீங்கல்ல... ஒரு உயிரை எடுக்குற அளவாடா அவன் இரக்கமில்லாதவன்?"

"ஆதி... மன்னிச்சுடுடா" நண்பன் கை பற்றினான் கெளதம்.

"அவன் மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன். போ" மீண்டும் நண்பனை தள்ளினான் ஆதி.




பிறகு அவனே, "நாம மன்னிப்பு கேக்கானாலும் அவன் திரும்பி வருவானா-னு தெரியலையேடா" நொடிந்து போன நண்பனின் வார்த்தைகள் தாளாமல் ஆதியை அவன் திமுறலையும் மீறி அனைத்திருந்தான் கெளதம்...

சில நொடிகள் திமிறியவன் அவன் தோளிலே சாய்ந்து வாய் விட்டு கதறி அழ அவன் மனதில் இத்தனை நாட்கள் இருந்த காயங்களுக்கெல்லாம் சேர்த்து உதிர்ந்தது கண்ணீர் துளிகள்.

கௌதமை தொடர்ந்து ஆதவனும் ஆதியை கட்டிக்கொள்ள அவன் இருந்த நிலையில் நண்பர்களின் இந்த அணைப்பும் அவசியம் தேவைப்பட்டது, "அவனுக்கு ஒன்னும் ஆகாது ஆதி... வருவான்டா, என் சட்டையை புடிச்சு ஏன் என்ன நம்பல கேள்வி கேக்க வராமையா போயிடுவான்?"

ஆதவன் பேசவும் தான் நிதானித்தவன் இருவரையும் உதறி எழுந்து தூரம் சென்று நின்றுகொண்டான். நேரம் கடந்துகொண்டே இருந்தது, மருத்துவர்கள் கூறிய பதிலை மாற்றவில்லை. இரண்டு நாள் ஆகும் என்றனர் உண்மையான நிலையை தெரிவிக்க.

சோர்த்தனர் அனைவரும். ஒரு முறை பார்க்க கூட அனுமதிக்கவில்லை. காலை விசியம் கேள்விப்பட்டு ஓடி வந்த யாழினியின் அழுகையை அடக்க முடியாமல் அனைவரும் திணறி போக சில நிமிடங்களில் தரையிலே மயங்கி சரிந்தாள். அவளுக்கு துணையாய் நளினியும் பல்லவியும் இருந்தனர்.

சில நிமிடங்களில் தேறி வந்த யாழினி சோர்ந்து மீண்டும் உதய் இருந்த அறைக்கு வெளியிலேயே அசையாது அமர்ந்துவிட்டாள்.

அவள் அருகே ஆதி வந்து அமர, "இவ்ளோ நடந்துருக்கு ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லல" குற்றம் சாட்டினாள்.

"இது என்ன சந்தோசமான விசயமா நேரம் காலம் பாக்காம கால் பண்ணி சொல்ல?"

"நல்ல விசயத்த கூட பொறுமையா சொல்லிக்கலாம் ஆனா இந்த மாதிரி விசயத்த தான் யோசிக்காம சொல்லணும்" சலிப்பாகக் கூறினாள் ஆதியின் முகம் பார்த்து.

"அன் டைம்ல சொன்ன எப்படி வருவ நீ?" முறைதான் அவளை.

"ஏன் நான் வர மாட்டேனா?" கோவமாக அவனைப் பார்த்தாள்.

"நீ பஜாரியாச்சே வராம இருப்பியா..."

"ஆமா சரோஜாக்கா சவுண்ட் குடுத்தா கூவமே அதிரும்ல" யாழினிக்கும் ஆதிக்கும் இடையில் வந்து அமர்ந்த ஹரி யாழினியை ஆதியோடு சேர்ந்துகொண்டு கலாய்க்கத் துவங்கினான்.

"டேய் நான் உன் அண்ணிடா மரியாதையா பேசு" - யாழினி

"கொஞ்ச நேரம் முன்னாடி பச்சைப் பிள்ளை மாதிரி அழுத்த ஆளுக்கெல்லாம் அண்ணின்ற மரியாதை தர முடியாதுப்பா" ஒரு முடிவோடு தான் இருந்தான் ஹரி, அவளைப் பேச வைக்க வேண்டும், சகஜமாக.

"நீ அழுகலையா? என்ன மட்டும் சொல்ற" சரிக்குச் சரியாய் நின்றாள்.

"அழுதேன் தான் அதுக்குன்னு அங்கப்பிரதட்சணம் மாதிரி ஹாஸ்பிடல் தரைல படுத்து நான் சுத்தம் பண்ணலையே..." - ஹரி

"பொய். நான் ஒன்னும்..." இருவரும் சண்டையிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்குத் தன்னை கடந்து தன்னையே பார்த்துச் செல்லும் ஜெயனின் பார்வை தனியாக அழைக்க மெதுவாக எழுந்து ஜெயன் அருகில் நின்றுகொண்டான்.

"அந்த மொபைல் யாரோடதுன்னு தெரிஞ்சு போச்சு சார்..." மேலும் தொடருமாறு சுற்றிலும் பார்த்து ஆதி சொன்னான்.

"குமரன்-னு ஒருத்தனோடது. பைனான்ஸ் பெரிய அளவுல பன்றான் அண்ணா நகர்ல. ஏதாவது பெரிய இடத்துல ஆளத் தட்ட வேண்டி இருந்தா இவன்கிட்ட வருவாங்க. கிளீனா வேலை நடக்கும்" அவன் புகைப்படத்தைக் காட்டினான் ஆதியிடம்.

ஜெயன் காட்டியவனை நேற்று ஆதி பார்க்கவில்லை, "இவன் நேத்து அங்க இல்ல, இவன்கூட ஏதாவது பிரச்சனை?"

"இல்ல இவன தெரியும் ஆனா இது வர அவன் லைன்ல நம்மளோ நம்ம லைன்ல அவனோ கிராஸ் பண்ணதில்ல. இத பாருங்க" தன்னுடைய டாபிள் இருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.

"இந்த ஒரே ஒரு வண்டி தான் நீங்க கேட் உள்ள போறதுக்கு முன்னாடி சுடுகாடு குள்ள இருந்து வந்தது. வண்டியும் அந்த குமரனோடது தான். ஆள புடிச்சு விசாரிக்க சொல்லவா?"

ஆதி யோசித்துக்கொண்டிருந்தான், "இவன என்ன அடிச்சாலும் கண்டிப்பா உண்மைய சொல்ல மாட்டானுக..." அந்த புகைப்படத்தை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி.

"அதுனால தான் சார் நான் ஸ்டெப் எடுக்காம இருக்கேன். இவன புடிச்சா மெயின் ஆளு சுதாரிச்சிடுவான்" தீவிரமாக இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தயக்கமாக ஆதவன் அவர்கள் அருகில் வந்து நின்றான் ஆதியின் கையிலிருந்த புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு.

சந்தேகம் தோன்ற ஆதியிடமிருந்து அந்த டாபை பற்றியவன் அந்த படத்தை ஜூம் இன் செய்து வாகனத்தின் பின் பக்க இருக்கையிலிருந்த கையை பார்த்தான்.

"ஈஸ்வரன் விஸ்வாசிக மொபைல் எல்லாம் ட்ராக் பண்ணிட்டு இருக்கேன் சார், அதுல சிக்குனது ஒரு உறுத்தலாக விசியம் நீரஜ் ஆளுங்ககிட்ட இவரோட ஆளுங்க அடிக்கடி பேசிருக்காங்க" ஜெயன் பேச்சைத் தடுத்து, "ஜெயன் இது அந்த ஈஸ்வரன்" உடனே கண்டுகொண்டான் ஆதவன்.

"அவன் ஜெயில்ல இருக்கான்" பேச வேண்டும் என்று ஏதாவது பேசுகிறான் என்று ஆதி கோவமாய் எரித்தான் கண்களாலே ஆதவனை.

"ஜெயில்ல தானே இருக்கான்? வர முடியாதா என்ன?" என்றவன், "இந்த கைய பாரு" புகைப்படத்தில் அவருடைய கணுக்கையைச் சுட்டிக் காட்டினான்.

"ஒரு தடவ மெஷின்ல அடிபட்டு அந்த ஆள் கைல விழுந்த தழும்பு. நல்லா தெரியும் இது அவன் தான்-னு" அடித்துக் கூறினான் ஆதவன். புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் நாடி இறுகியது கோவத்தில்.

"இவனையும், அந்த தழலையும் ஒரு வாரம் ஜாமீன்ல எடுக்க முடியுமா
உன்னால?" ஜெயனிடம் கேட்டான்.

"நான் எடுக்குறேன்" ஆதியின் பதிலைக் கேட்காமல் கைப்பேசியை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியிருந்தான் ஆதவன்.




Hi epdi iruku??


 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
இது என்ன கொஸ்டின் எப்படி இருக்கு ரொம்ப ரொம்ப எமோஷனல் இருக்கு 😭😭
உதய் இல்லனா யாரும் இல்ல
ஆதி வருவான் உன்னோட உதய் பாரு அந்த கேத்து ஓட மறுபடியும்
ஆதவா இப்போ நீ பண்ண தப்பு புரியுதா தமிழ் கௌதம் நீங்களும் support
ஆதி நல்ல கேளு அவன் family ya பாத்து எண்ணலாம் பேசு உதய் மனச உடைத்து கணக்கு கேட்டு
விஷ்ணு ஹரி பவி திவ்யா உங்க மேல உதய் இவளோ பாசமா இருப்பா சொல்ல மாட்டான்
யாழினி நீ உதய் பாக்க வந்த இப்போ நீ மயங்கு விழுகிற
ஆதி என் காயத்ரி அம்மா பாத்தி இப்போ சொல்லுற ஆதவா அவ சும்மா இருக்கா சொல்லு ஃபுல்லா burst out பண்ணிட்டான் relax 💔💔
கௌதம் போ ஆதி கூட பேசு ஆதவா நீயும் தா நீ அவ நம்பல கண்டிப்பா உதய் வந்து கேப்பா பதில் சொல்ல ready ya இரு டேய் உங்க 5 பேரும் இப்படி பாக்க கஷ்டமா இருக்கு உங்க உதய் வருவான் பாருக உங்க கூட மறுபடியும் சண்டை போட முன்னாடி மாறி நீங்க எல்லாரும் சந்தோசமா ஒன இருக்கணும் 🥺🥺🤗
ஆதவன் தெரியுது இனி அந்த ஈஸ்வரன் சும்மா விட போறது இல்ல 😡😡
 
Top