• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 31 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
"ஆதவா..."

பேச வந்த உதய்யை நிறுத்தினான், "சொல்லாதடா என் பேர" விஷத்தை நாவில் தடவி ஆதவன் பேச அவனை அடக்க வந்தான் தமிழ்.

"ஆதவா பொறுமையா இரு... நீ பேசுறது செய்றது எதுவுமே சரியில்ல"

"சரியில்லாமயே இருந்துட்டு போகட்டும். இவன மாதிரி மனுஷ மிருகங்ககிட்ட எல்லாம் இப்டி தான் கைல பேசணும்" - ஆதவன்

ஆதவன் பற்றியிருந்த உதய்யின் சட்டையை விட்டு பிரித்த கெளதம், "என்னடா ரொம்ப தான் பண்ற.. நானும் வந்ததுலயிருந்து பாக்குறேன் பைத்தியம் மாதிரி நடந்துக்குற" ஆதவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டான் கெளதம்.

ஒரு அடி பின்னால் சென்ற ஆதவனின் கால்கள் தடுமாற உதய்யின் கைகள் தன்னிச்சையாக அவனை பிடிக்க செல்ல அதற்குள் தானே சுதாரித்த ஆதவன் கால் ஊன்றி நின்றுகொண்டான்.

உதய் பக்கம் வந்து நின்ற ஆதவன் தந்தை அவன் தோள் பற்றி, "என்ன ஆச்சு உதய்? ஏன் இவன் உன் மேலயே கோவமா இருக்கான்?" என்றார் அவன் சட்டையை சரி செய்து.

உதய் மீது ஆதவனின் தந்தைக்கு அவ்வளவு மரியாதை உண்டு, தொழில்ரீதியான முறையில் மட்டுமல்ல. தன்னை கொலை செய்யவும் துணிந்து நிற்கும் நண்பன் அந்நியமாகிப்போனான் உதய்க்கு, "தெரியல அங்கிள் காதல் கண்ண மறச்சிடுச்சு போல"

உதய்யின் வார்த்தையில் இன்னும் கோவம் வர, "ஆமா டா.. மறச்சிடுச்சு. உன் கண்ண எப்படி பழி மறச்சிடுச்சோ அதே மாதிரி பதினஞ்சு வருஷம் லவ் என்னோட கண்ண மறச்சிடுச்சு"

சீறி அந்த வளாகமே அதிரும் வகையில் கத்தினான். அப்பொழுதும் பொறுமையாக நின்ற உதய் ஆதவன் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டு, "ஆதவா பொறுமையா இரு. யோசிச்சு பேசுற நிலமைல நீ இல்ல"

அவன் கையை தட்டிவிட்ட ஆதவன், "நான் நல்லா நிதானமா தெளிவா தான் இருக்கேன்" தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து உதய்யின் முன் எறிந்தான்.

சில புகைப்படங்கள், ஒரு நாணயம் வடிவிலான வட்ட முத்திரை பதித்திருந்த வெள்ளி உலோகம் ஒன்றும் உடன் இருந்தது. அதை பார்த்த உதய் கையில் எடுத்த பொழுது ஆதவனின் ஆத்திரம் புரிந்தது. அது உதய்யின் நெருங்கிய பாதுகாவலர்கள் மட்டுமே வைத்திருக்கும் வெண்கல நாணயம். உதய்க்காக சிலர் அவன் அனுமதியோடு சில இல்லீகல் வேலைகளை நிழலுலகில் செய்வதற்கு என்றே தனியாக நியமிக்கப்பட்டிருந்த சில காவலர்களுக்கு கொடுக்கும் நாணயம் அது. அலுவலக முத்திரை பதித்திருந்த அந்த நாணயத்தின் கீழ் உதய் மாதவன் என்ற அவன் பெயரும் இருந்தது.

இதை போல் உதய்யின் தந்தைக்கும், சித்தப்பாவும் சில ஆட்கள் இருப்பதுண்டு. அதை போலவே அந்த புகைப்படங்களில் உதய் மாதவனின் ஆட்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் வாகனத்தின் அடையாளமாக அந்த வாகனத்தின் ஸ்டியரிங் வீலில் மாட்டியிருந்த தங்கத்தில் செய்திருந்த கார் வடிவ சிறிய அலங்கார பொருள்.

"என்ன பேச முடியலல? எப்படி பேசுவ? கொலை பண்ண ஆள் அனுப்புனவன் மாட்டிக்கிட்டா பேச்சு எப்படி வரும்?" - ஆதவன்

"முட்டாள் மாதிரி பேசுற ஆதவா... அவன் எதுக்குடா தேவையே இல்லாம சஹானாவை கொலை பண்ண போறான்?" - தமிழ்

"இத அவன்கிட்ட நீயே கேளு... நிறம் வெளுத்துக்கு அப்றம் உண்மை வெளிய வர தானே செய்யும்?" - ஆதவன்

"நீ ஏதோ தப்பா புரிஞ்சுக்குற ஆதவா... இதெல்லாம் என்ன எதுன்னு எனக்கு சாத்தியமா தெரியல"

தன்னிலை விளக்கத்தை கூறும் முன், "போதும்டா... உனக்குள்ள இவ்ளோ வன்மம் இருக்குன்னு தெரியாம போச்சு. ஆதி உன் தம்பிய ஜெயில்ல தள்ளுனத்துக்கு அவன் லவ் பண்ற பொண்ண நீ பொண்ணு கேட்டு போயிருக்க, அப்பவும் அடங்காம உன்கிட்ட தன்னோட அண்ணனோட லைப்காக சண்டை போட்டு நின்ன சஹானாவை கத்திய வச்சு குத்தி ஆக்சிடென்ட் பண்ணிட்ட... சோ உன்ன எதிர்த்து யார் நின்னாலும் அடுத்த கொஞ்ச செகண்ட்ல அவங்கள ஏதாவது ஒரு வகைல அமைதியாக்கிடனும்? அப்டி தான?" நிச்சயம் இதை எல்லாம் உதய் எதிர்பார்க்கவே இல்லை.

என்ன நிகழ்த்திருந்தாலும் உன் மேல் தவறில்லை என்று வந்து நிற்கும் நண்பனை தானே எதிர்பார்த்தது அவன் நெஞ்சம்... மீண்டும் அந்த பாவப்பட்ட நெஞ்சத்தில் ஒரு ஈட்டி குத்து.

"அவன் அப்டி எல்லாம் பண்ணிருக்க மாட்டான்" கெளதம் அடித்து கூறினான்.

"எங்க அவனை இல்லனு சொல்ல சொல்லு" ஆதவன் உதய்க்கு சவால் விட்டான்.

எதுவும் பேசாத உதய் ஆதியை பார்த்தான், அவனோ இங்கு நடப்பவை அத்தனையும் காதில் வாங்கினாலும் எதுவும் பேசும் நிலையில் இல்லை.

"உதய்..." மௌனமே சமதமாய் எண்ணி தமிழ் வியக்க, கௌதமின் மனதிலும் அதே நிலை. எல்லாம் பொய்த்துப்போனது போல்.

"தப்பு உதய் நீ பண்றது... ரொம்ப பெரிய தப்பு" கெளதம் ஒரே நொடியில் மாறிவிட அதை எதிர்பார்த்தே ஆதியிடமிருந்து கண்களை திருப்பினான் உதய்.

"மனசுல எப்ப உதய் உனக்கு இப்டி ஈரமே இல்லாம போச்சு?" மீண்டும் கெளதம்.

"ஆதி முகத்துல பணத்தை தூக்கி எறிஞ்சப்பவா? இல்ல... ஆதி அப்பா மேல பழியை போடப்பாவோ... எப்பயோ போச்சு" - தமிழ்

"வாழ வேண்டிய பொண்ணு உதய் அது... ஆதிக்காக இல்லனாலும் அட்லீஸ்ட் ஆதவனுக்காக நீ சஹானாவை விட்ருக்கலாம்" கண்களை துடைத்துக்கொண்டே விசும்பினார் ஆதவனின் அன்னை.

மனைவியை சமாதானப்படுத்திய அவர் கணவர், "உன்கிட்ட நான் இத எதிர்பாக்கல" ஏமாற்றம் கண்ணில் தெரிந்தது.

புறக்கணிந்தான் அனைவரையும், நம்பிக்கையோடு ஆதி பக்கம் பார்வை செல்ல, நாவோ, "ஆதி..." ஏகமாய் உச்சரித்தது.

"அவனை ஏண்டா கூப்புடுற? யாருக்காக இத்தனை வருஷம் மாடா உழைச்சானோ அவளே இன்னைக்கு இந்த நிலமைல இருக்குறா.. இன்னும் பேசி அவனையும் எங்ககிட்டயிருந்து பிரிச்சிடாத"

"எதையும் தெளிவா பாக்காம பேசாத ஆதவா... தப்பு அவன் மேல இல்லனா எங்க போய் மூஞ்சிய வப்ப?" தமிழின் அன்னை ஷீலா ஆதவனை கடிந்தார்.

"கைல எல்லா ஆதாரமும் இருக்கு மா... இனி என்ன வேணும் அவனை நிரூபிக்க?" - ஆதவன்

"அவ்ளோ தானே டா உங்களுக்கு என் மேல இருக்க நம்பிக்கை?" தன்னை பொருட்டாய் கூட மதிக்காதவரிடம் தன்னுடைய உணர்ச்சிகளை காட்டி என்ன பலன்? இறுகியது முகத்தோடு அவன் இதயமும்.

"நாலு போட்டோவ பாத்துட்டு என்ன தூக்கி எரிஞ்சவனுக எனக்கு வேணாம். இன்னைக்கு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க... உதய் மாதவன்ற ஒருத்தன் இன்னையோட உங்க வாழ்க்கைல இனிமே இல்ல... அவன் செத்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. செத்தா கூட என்ன பாக்க வந்துடாதீங்க"

கழுத்தில் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியில் மாட்டியிருந்த வெள்ளி மோதிரத்தை அவிழ்தவன் அதை ஆதியின் காலடியில் தூக்கி எறிந்தான். அந்த மோதிரம், பள்ளி பருவத்தில் உதய் தனக்காக கொடுத்த வெள்ளி சங்கிலியை போலவே அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆதி பள்ளி விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று வாங்கி கொடுத்தது. இன்று வரை அதை உதய் அணிந்திருப்பான் என்ற ஒன்றே அத்தனைபேருக்கும் ஆச்சிரியம் தான் தந்தது.

ஆனால் ஆதியோ தன் காலடியில் விழுந்த மோதிரத்தை கூட கவனிக்கவில்லை. சிகப்பு நிற விடி விளக்கு எறிந்த அந்த ஐ.சி.யூ கதவின் மீது மட்டுமே நிலைத்திருந்தது பார்வை, கவனம் எல்லாம்.

கோவத்தை காட்டாத அவன் குரலில் இருந்த தீவிரத்தை அனைவரும் உணரும் முன் வெளியேறிய உதய்யின் கால்கள் திரும்பியது, "என்ன சொன்ன நான் கொன்னேனா..."

இளக்காரமாக சிரித்தவன், "நான் உதய் மாதவன் டா... ஆள வச்சு எல்லாம் கொல்ல வேண்டிய அவசியம் இல்ல... நடு ரோட்டுல கன் எடுத்து, நெத்தி பொட்டுல சுட்டு, தற்காப்புன்னு சொன்னாலும் கோர்ட் வார்த்தை பேசாம தலையாட்டும்" அதே கர்வத்தோடு நடந்தவனின் நடையில் இருந்த வில்லத்தனம் அங்கிருந்தவர்கள் மூலையை உறையவைத்தது.

உதய் முன்னாள் நடக்க நடப்பவை அத்தனையையும் வேதனையோடு நின்று பார்த்துக்கொண்டிருந்த ஜெயன் ஆதவனிடம், "தப்பு பண்றீங்க சார்" திடமான குரலில் எச்சரித்தவன் உதயனை தொடர்ந்தான். அதே போலவே உதய்யின் ஆட்களில் ஒருவன் இங்கு நடந்தவை அத்தனையையும் உதய்யின் தந்தை ரகுநந்தனுக்கு தகவலாய் கூற அங்கு வீட்டையே இரண்டாக்கிக்கொண்டிருந்தார் அந்த பெரிய மனிதர்.

மதியம் மணி மூன்றை தாண்டி தான் காவல் நிலையத்தில் இருந்த அத்தனை சட்ட சடங்குகளையும் முடித்து உதய்யின் ஆள் ஹரியை வீட்டில் வந்து இறக்கிவிட்டிருக்க சில மணி நிமிடங்கள் ஓய்வில் இருந்த ஹரியே பெரியப்பாவின் என்றும் இல்லாத அதி கோவமான பேச்சை கேட்டு கீழே இறங்கினான். வரவேற்பறையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது... விஷ்ணு, பல்லவி, திவ்யா, தன்னுடைய தந்தை என மொத்த குடும்பமும் இருந்தது... அவன் அன்னையை தவிர.

"என்ன அடக்குறதுலையே இரு ஜெயா நீ... அவனை மாதிரி ஒரு புள்ளைய எதுக்குடா பெத்தோம்னு இருக்கு... பெத்துவிட்டுட்டு அவ போய்ட்டா இப்ப நான் தானே எல்லார் முன்னாடியும் அசிங்க படுறேன்"

ரகுநந்தன் கோவத்தில் கத்த, சமயலறையில் பாத்திரங்கள் கண்டமேனிக்கு உருளும் சத்தம் கேட்டு வேகமாக ஹரி கீழே இறங்கினான். படியின் இறுதியில் விஷ்ணு இருக்கும் பொழுதே சமையலறையிலிருந்து வேகமாக வெளியில் வந்தார் நளினி.

"என்ன நீங்க அசிங்கப்பட்டுட்டீங்க அவனால?" கோவமாக ரகுநந்தனுக்கு சரி சமமாய் நின்றார்.

"என்ன மா... அந்த யோகியானுக்கு நீ சப்போர்ட் பண்ற? ஆதி மணிமேகலையை லவ் பன்னிருக்கான்... தெரிஞ்சும் பொண்ணு கேட்ருக்கான், அதோட நிறுத்தாம அவன் தங்கச்சிய வேற கொலை பண்ண பாத்துருக்கான். இதுக்கும் மேல அவன் கொடுமை என்ன பண்ணனும்?" - ரகுநந்தன்

"உங்களுக்கு தெரியுமா அவன் தான் எல்லாத்தையும் பன்னானு?" - நளினி

"ஆதவன் எல்லாத்தையும் தெளிவா சொல்றான்" பல்லை கடித்து பொறுமையை கடைபிடித்தார் ரகுநந்தன், "என்னத்த புள்ளைய வளத்தேனோ"

"ஊர்ல இருக்குற எல்லாத்தையும் நம்புவீங்க ஆனா நீங்க பெத்த புள்ளைய நம்ப மாட்டீங்க... அப்டி தானே மாமா? அப்றம் என்னமோ புள்ளைய வளர்த்தது பத்தி பேசுனீங்களே... என்னைக்காவது ஒரு நாள் அவனுக்கு நல்லது கெட்டது சொல்லி குடுத்துருக்கீங்களா?"

"அளவுக்கு மீறி இப்ப உன் பேச்சு வருது நளினி... அண்ணன் கிட்ட பேசுற நீ" மனைவியை எச்சரித்தார் ஜெயநந்தன்.

"எனக்கு எல்லாமே தெரியுதுங்க... ஒரு நாள் கூட பிள்ளைங்களை பாத்துகாம குறை மட்டுமே சொல்லிட்டு இருக்குற ஒரு அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன்" - நளினி

"என் பசங்கள நான் ஒழுங்கா கவனிக்கலனு சொல்றியா நளினி? என் பசங்களுக்கு என்ன தேவையோ அது எல்லாத்தையும் நான் அவங்க என்கிட்டே கேக்குறதுக்கு முன்னாடியே பண்ணிருக்கேன்" - ரகுவரன்

"பணம், பொருள் மட்டும் தான் சந்தோசம் தருமா மாமா? இப்ப ஹாஸ்பிடல்ல இருக்குற பொண்ணுக்கு உங்க காச வச்சு ஒரு கீறல் இல்லாம கொண்டு வர முடியுமா?" - நளினி

"அவன் பண்ண தப்புக்கு நான் பொறுப்பா மா?" - ரகுவரன்

"இது தான் மாமா உங்க தப்பு... உதயால நல்ல பேர் வந்தப்ப பெருமையா பேசுன நீங்க, அவன் தப்பு பண்றப்ப தட்டி குடுத்து சொல்லி குடுக்க தெரியல. உங்கள விட உதய் நல்லா பிஸ்னஸ் பண்ணான், நல்லா வீட்டை பாத்துக்குறேன், எல்லாத்துக்கும் மேல இந்த குடும்பத்தை பாத்துக்குவான். டெய்லி டைனிங் டேபிள்ல வந்து சாப்பாடு சாப்டுட்டு போறது மட்டும் தான் ஒரு ஆம்பளைக்கு கடமை இல்ல, என்ன தேவைன்னு பாத்து செய்றது"

விஷ்ணு அருகில் சென்ற நளினி, "உனக்கெல்லாம் கண்ணு இருக்குமா இருக்காதா விஷ்ணு? நமக்காக தன்னோட சந்தோஷத்தையே விட்டு குடும்பத்துக்காக வேலை பாத்தவன, வீட்டை விட்டே அனுப்பிட்டு சந்தோசமா இருக்க தான பா?" தன்னுடைய தவறை அந்த நேரமும் உணராமல் நளினியின் வார்த்தையில் தான் வருத்தம் உண்டானது.

"சோகமா முகத்தை வச்சாலும் நீ பண்ணது தப்பு தான் விஷ்ணு"

கணவனை பார்த்தவர், "இவனுங்க ரெண்டு பேரும் வாரத்துல மூணு நாலு நாள் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு வருவாய்ங்க... தெரியுமா உங்களுக்கு? அத அந்த பையன் எவ்வளவோ சொல்லியும் கேக்காம இருந்ததும் தான் இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல ஒக்கார வச்சான் உதய். அத புரிஞ்சுக்க முடிஞ்சதா நம்மளால? அதுக்கும் அந்த பையன தப்பு சொல்லி வேலைய விட சொன்னது கூட பரவால்ல, கணக்கு கேட்டீங்க பாருங்க..."

பேசிக்கொண்டிருந்த பொழுது வந்த அழுகை எல்லாம் விசும்பலாய் வெடித்தது அவருக்கு, ஹரி வேகமாக வந்து அன்னையை அணைத்தான். அவரோ அவன் கையை உதறி, "கேட்ட எனக்கே மனசு அப்டி வலிச்சது... என் பையனுக்கு எப்படி இருந்துருக்கும்?"

"ம்மா..." அன்னையின் அழுகையை பார்க்க முடியாமல் பல்லவி அன்னையின் கையை பிடிக்க வர, அதையும் உதறினார், "அவனை பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்ல"

ரகுநந்தனை பார்த்து நளினி கூற, அவர் பேசியதை கோவத்தோடு கேட்டிருந்தவர், "நாலு காசு சம்பாதிச்சு குடுத்தா அவன் பண்ற எல்லாமே சரியா மாறிடுமா? பசங்க தப்பு பண்ணா எங்ககிட்ட சொல்லிருக்கலாமே... நாங்க அவங்கள கண்டிச்சிருப்போம். அத விட்டுட்டு ஜெயில்க்கு அனுப்புறது நல்லாவா இருக்கு? வெளிய தெரிஞ்சா குடும்ப கெளரவம் என்ன ஆகும்? இத நியாயப்படுத்த வேற நீ வர்ற ம்மா..." நளினியை கண்டித்தார் அவர்.

"உங்க பசங்க ஒருத்தன் மேல கார் ஏத்தி கொல்ல பாக்குறப்ப அது குடும்ப கௌரவத்தை கெடுக்காது, என் பையன் தப்பு செஞ்சவங்கள தண்டனை அனுபவிக்க விட்டா அது கௌரவ குறைச்சல்? அப்டியே அவன் தப்பு பண்ணிருந்தாலும் அவனை இத்தனை வருஷம் கவனிக்காம விட்ட நீங்க தான் முழுக்க முழுக்க காரணம்" - நளினி

"சித்தி நாங்க அவன் மேல வண்டிய ஏத்தவே இல்ல நாங்க..." - விஷ்ணு

"பேசாதடா நீ... நீங்க பண்றது எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. படிப்பு முடிச்சு எத்தனை வருஷம் ஆச்சு? இன்னும் வேலைய கத்துக்காம ஊர் சுத்திட்டு இருக்கீங்க. உங்க வயசுல அவன் அமெரிக்கா, லண்டன்ல இருக்க மொத்த பிஸ்னஸையும் ஒரே ஆளா நின்னு பாத்துகுட்டான். ஆனா உங்கள ஒரு வார்த்தை சொன்னதில்ல ரெண்டு வருஷம்... சரி தம்பிக தான் அனுபவிச்ச கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுனு விட்டான்.

அதுக்கு நீங்க காட்டுற விஸ்வாசம் அவனுக்கு திருடன் பட்டம் கட்டி, ஆபீஸ் விட்டு வெளிய அனுப்புனது" நளினி பிள்ளைகளிடம் கோவத்தை காட்டிக்கொண்டிருக்க, ரகுநந்தன் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று குடியேறிக்கொண்டார். கணவன் தன்னிடம் கோவமாக ஏதோ பேச வரும் முன் சமைலறைக்குள் புகுந்துகொண்டார் நளினி.

******************

ஆதி பேசிய வார்த்தைகள் அன்று வீடு வரும் வரை யாழினியின் மனதில் விடாமல் ஓடிக்கொண்டே அவளின் வேலைகளை செய்ய விடாமல் உதய் பக்கம் தள்ளியது. நேற்று கூட அவன் பேசியதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி இருந்ததே... தெரிந்தும் தான் விட்டுவிட்டோமா?

எனக்கான பிரச்னையை நான் பேசுவதை வைத்தே செய்பனுக்கு அதே ஆறுதல் திரும்பி தாராவிடினும் தோள் சாய அருகில் இருந்திருக்க வேண்டுமோ? அவன் நிலை தான் என்ன? ஏற்கனவே குடும்பத்தின் மீது பாசம் அதிகம் வைத்திருப்பவன் அவர்கள் உதாசீனத்தால் உடைத்திருக்கிறான்...

இப்பொழுது அதை விட என்ன மன கஷ்டம் தனவனுக்கு என கேள்விகளால் தன்னுடைய மனதை குடைந்துகொண்டே நகத்தை கடித்து யோசனையில் இருந்தாள். ஆனால் அதை தாண்டிய கோவம், நான் மாட்டேன் என்ற சில நாட்களிலேயே வேறு பெண்ணை பார்க்க சென்றுவிடுவானா?

"நகத்தை கடிக்காத யாழினி" பள்ளி முடிந்து வந்த அன்னை கண்களுக்கு யாழினியின் சிறு வயது பழக்கம் இப்பொழுதும் மாறாமல் அப்டியே இருப்பது தெரிந்தது.

"என்ன இன்னைக்கு வேகமா வந்துட்ட?"

"வேலை பாக்க தோணல மா" - யாழினி

"சரி என்ன இவ்ளோ தீவிரமா யோசிக்கிற?" உச் கொட்டி சலித்தவள் மனதிற்கு இதை அன்னையிடம் சொல்லும் அளவு உதய் பற்றிய பேச்சுகள் இல்லை, அதனால் எழுந்து வழக்கம் போல் மொட்டை மாடிக்கு தஞ்சம் புகுந்திட தோன்றியது.

அன்னையோ மகள் நேற்று தங்களிடம் அதிகம் பேசியதால் வருந்துகிறாள் என்று எண்ணி, "நீ தப்பு செஞ்சா தான் யாழினி இவ்ளோ யோசிப்ப... தயங்காம தப்ப ஒத்துக்கோ... மனசு சந்தோஷமாகிடும்" தீ பொறி தட்டியது போல் வந்தது அன்னையின் வார்த்தைகள்.

அவள் மகிழ்ந்து பல நாட்கள் ஆகியது. எத்தனை வறுமை இருந்தாலும் மகிழ்வாக இருக்க காரணம் ஆயிரம் கிடைக்கும் அவளுக்கு, ஆணின் சில நாள் பழக்கம், பிரிவு மொத்த சந்தோஷத்தையும் பறித்து சென்றது.

"மா நான் வர லேட் ஆகும்" அன்னையின் பதிலுக்கு கூட காத்திராமல் ஓடிய மகளை பார்த்து அதிர்ச்சியானவர், "எங்க இவ்ளோ வேகமா போற? ஷாலாவது போட்டு போடி..."

"ம்ம்ம் உன் மருமகனை பாக்க தான்" அவள் வார்த்தைகளை அவர் கிரகிக்கும் முன் வெளியேறியிருந்தாள். உதய்யின் யோசனையில் இல்லம் வந்தும் கூட உதய் மாற்ற மனம் இல்லாமல் அப்டியே இருந்தது இன்னும் வசதியாக போனது சிரியவளுக்கு.

அன்னையிடம் துப்பட்டாவை வாங்கி கழுத்தில் மாட்டியவள் வேகமெடுக்க கால்கள் மெயின் ரோட்டில் தான் வந்து நிற்க அடுத்த சில நிமிடங்களில் ஓலா புக் செய்து உதய்யின் இல்லத்திற்கு விரைந்தாள். எப்படியும் இந்நேரமே வந்திருக்க மாட்டான் என்று தெரிந்து தான் விரைவாக அவன் இல்லம் நோக்கி சென்றதே...

உதய்யின் வீட்டிற்குள் வந்தவளை தடுக்க அங்கிருந்த எவருக்கும் உரிமையில்லாமல் போனது. துள்ளலோடு உள்ளே சென்றவள் கண்களுக்கு களையிழந்து காட்சியளித்த அந்த பெரிய மாளிகை வீட்டிற்கு சிறு அழகு சேர்க்க ஆங்காங்கு இருந்த அலங்கார விளக்குகளை மிளிரவிட்டு, மூடிக்கிடந்த ஜன்னல்கள் திரைசீலைகளை விலக்கியவள் கண்களுக்கு அழகாக காட்சியளித்தது, அந்த சிறிய தோட்டம்.

நன்றாக இருட்டியிருந்த நேரத்தில் பாதுகாப்பிற்கு எரிந்துகொண்டிருந்த விளக்குகள் மூலம் தெரிந்த பச்சை செடிகள் யாவும் பொறாமையூட்டும் வகையில் காட்சி தந்தது. கண்களை விலக்கியவள் அடுத்து பூஜாடியில் வாடிக்கிடந்த பூக்களை களைத்து, இரவானாலும் பரவாயில்லை என பூக்களிடம் மன்னிப்பு வேண்டி அழகாய் பூத்து குலுங்கிய மலர்களை அள்ளி வந்து அடுக்கினாள் தனக்கு தெரிந்த அழகில்.

அத்தனையையும் முடித்தவள் அன்று ஒரு நாள் உதய்யை ஹோட்டல் அழைத்து சென்ற பொழுது அவன் விரும்பி உண்டது பூரி, பண்ணீர் க்ரேவி ஒன்று. உடனே வேலைகளில் இறங்கினாள். மாவை பிணைந்து வைத்து, க்ரேவி தயாரித்து அவன் வந்ததும் பூரி செய்திட நினைத்தவள், வரவேற்பறையில் தொங்கிய கயாத்திரியின் படத்திற்கு பூ கட்டியவள் தூசியில்லாத அந்த படத்தை மீண்டும் ஒருமுறை துடைத்து மாலையிட்டு கீழ் இறங்கிய பொழுது வெளியில் வாகனம் வரும் சத்தம் கேட்க விரைவாக சமையலறை நுழைந்தாள், அவனுக்கு பூரி சுட.

எப்பொழுதும் இருக்கும் நடையைவிட சிறு தளர்வு வீட்டினுள் நுழைந்தவனிடம். ஆனால் ஒளிர்ந்த வரவேற்பறையை கண்டவன் கண்கள் அடுத்து அவன் அன்னையின் படத்திற்கு சென்றது. இருளை பிரதானமாக கொண்டவன் மனம் இந்த நிலவின் குளுமையான ஒளியை நிச்சயம் வீட்டிற்குள் எதிர்பார்க்கவில்லை. வீட்டை சுற்றி பார்த்தவன் கண்கள், சமயலறையில் சத்தம் கேட்க கால்கள் தன்னால் அந்த பக்கம் சென்றது. வாசல் வந்தவன் கால்கள் நின்றது அங்கு தெரிந்த உருவத்தில்.

அடர் நீல நிற பாட்டியாலா பாண்ட் அணிந்து, மேல் அதே நீல நிறத்தில் முட்டி மேல் இருந்த குர்த்தா அவள் எடுப்பான உடலை கட்டி தழுவியிருந்தது. இரண்டு தோள்களிலும் நுனியில் பிடித்திருந்த அந்த ஊக்கு கண்ணாடி துப்பட்டா அவள் கைகள் செல்லும் திசை எல்லாம் சென்றது. உதய்யின் கண்கள் தனக்கு முதுகை காட்டி நின்ற பெண்ணை பார்த்த உடன் மீண்டும் இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

ஆணின் பார்வை பெண்ணுக்கு புரிய, முகத்தில் வந்த வெட்க சிரிப்பை இதழ் கடித்து அடக்கியவள் சிரித்த முகத்தோடு கிண்ணத்தில் உப்பிய பல பூரிகளை எடுத்து திரும்பினாள்.

"சாப்பிடலாமா சார்?" அவனை கடந்து உணவு மேஜை இருந்த பக்கம் சென்றவள் சமைத்த உணவுகள் அத்தனையையும் அதில் அடுக்கினாள்.

"என்ன சார் அமைதியா இருக்கீங்க?"

மீண்டும் சமயலறையில் நுழைந்தவள், "சரி சரி பரவால்ல, நீங்க ரொம்ப டயர்டா இருப்பிங்க... ப்ரெஷ் ஆகிட்டு வாங்க சார். டின்னர் எல்லாமே ரெடி... நீங்க ஆசையா சாப்பிட்டீங்கல்ல அன்னைக்கு ஒரு நாள்... பூரி சன்னா மசாலா... அதோட கொஞ்சம் சிக்கன் க்ரேவி வச்சிருக்கேன். பரவால்ல நீங்க சிக்கன் அவாய்ட் பண்ணாலும். எனக்கும் ஜெயன் அண்ணாக்கும் சிக்கன் தா ரொம்ப புடிக்கும். அதுவும் நீங்க ஜப்பான் போன டைம்ல வீட்டுல இருந்து நான் கொண்டுவர்ற சாப்பாடுக்கு அவர் அடிக்ட் ஆகிட்டாருன்னா பாத்துகோங்களேன்... எல்லாம் அம்மா கை வண்ணம் தான். ஆயிரம் குடுத்து வெளிய சாப்பிட்டாலும் அம்மா செய்ற ஒரு பருப்புக்கு ஈக்வ..."

"ஜெயன்..." உதய் ஜெயனை அழைத்த குரலில் அவனை விட்டு சில அடி தூரம் தள்ளி நின்ற யாழினியின் இதயம் பயத்தில் ஓட்டமெடுத்தது.

அடுத்த சில நொடிகளில் ஜெயன் அவன் முன்னாள் நிற்க, "வெளிய போக சொல்லுங்க... இனி என்னோட வீட்டுக்குள்ள இவ வர கூடாது"

யாழினிக்கு நிச்சயம் தெரியும், இவன் தன் மீது கோவமாக இருப்பான் என்று ஆனால் இந்த அளவிலான கோவத்தை எதிர்பார்க்கவில்லை பெண். ஜெயனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அமைதியாக நின்றான் யாழினியின் கெஞ்சல் பார்வைகளை புரிந்து. உதய்யோ ஜெயனுக்கு கட்டளைகள் பிறப்பித்து தன்ரை நோக்கி சென்றுவிட்டான்.

"என்ன உங்க சார் ரொம்ப தான் ஓவரா பன்றாரு என்னமோ பிரளயம் நடந்த மாதிரில கத்துறாரு" நெடிதுக்கொண்டாள் பெண்.

ஆனால் அவள் அறியாமல் போனது ஒன்று பிரியமானவர்கள் பிரிவும் ஒரு பிரம்மாண்டமான பிரளயம் தான் என்று...

"உனக்கு தெரியாது யாழினி அவரோட பிரச்சனைகள்" சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயமா அது? சொன்னாலும் புரிந்துகொள்பவள் அவனை விட்டு தான் சென்றிருப்பாளா?

"அண்ணா நீங்க போங்க நான் பேசுகிறேன்"

"நடுல வந்து வந்து போறதா இருந்தா இனிமேல் நீ வராத யாழினி... அத தாங்கிகிற மனசு கண்டிப்பா சார்க்கு இல்ல" ஜெயனிடம் இருந்து வந்த பதில் யாழினியின் கண்களை கலங்கடித்தது.

அருவியாக நீர் சொட்டிட அதை துடைக்காமல், "சூழ்நிலைகள் எல்லாருக்கும் எந்த நேரமும் சாதகமா இருக்காது... என்னோட சூழ்நிலை அந்த மாதிரி"

"எல்லாமே எங்களுக்கு தெரியும் யாழினி" - ஜெயன்

"தெரிஞ்சும் உங்க சார் என்ன விட்டு தள்ளி இருந்தாரா அண்ணா?" உண்மையை கேட்டதும் மேலும் அழுகை வந்தது அவளுக்கு.

"காரணம் தெரியல எனக்கு ஆனா யார் பேச்சையும் கேக்குற நிலமைல அவர் இல்ல. இன்னொரு நாள் வந்து பேசு" அவன் பார்வை அவள் தயாரித்திருந்த உணவுகளின் மீது விழுந்தது, "இதையும் சார் சாப்புடுவாரான்னு டவுட் தான்" இதற்கு மேல் உன் முடிவென ஜெயன் வெளியேறிவிட தயக்கத்தோடு வீட்டின் ஒவ்வொரு அறையையும் எட்டி எட்டி பார்த்து மேலே ஏறினாள்.

மேலே ஏறியதும் வலது புறத்தில் இறுதியில் உதய்யின் அறை இருக்க அத்தனையையும் தேடி பார்த்தவள் கண்களுக்கு அவன் கிடைக்காமல் போனான். இறுதியாக மொட்டைமாடி சென்றவளை ஈர்த்தது நிலவொயில் நின்றவனின் நிழல். நிழலை பிடித்து அவன் உருவத்தை அடைந்தவள் இறுகி நின்ற அவன் உருவத்தை பார்த்து மனதில் பெரும் பகுதி உறுத்த கால்கள் மெதுவாக வேகமெடுத்தது அவனை நோக்கி.

சிறு தயக்கமும் இல்லாமல் அவனின் இடையை பின்புறமாக கட்டி முகத்தை அவன் முதுகில் வைத்து மனதிலிருந்த காதலை கண்ணீரால் அவனிடம் மாற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த நொடி தான் உணர்ந்தாள் தன்னுடைய அணைப்பில் அவன் இன்னும் இறுகி நின்றான் என்று.

"சாரி... சாரி... ரொம்ப ரொம்ப சாரி. மன்னிச்சிடுங்க சார்" அவனோ எந்த எதிர்வினையும் ஆற்றாமல் கோவத்தை கட்டுப்படுத்தி அமைதியாய் நின்றான்.

"பேசுங்க... ப்ளீஸ்" அவன் மௌனம் அவளை கொல்ல, மனதிலிருந்த கூச்சத்தை எல்லாம் தூக்கி எரிந்து சுவற்றோடு சண்டையிட்டு அவன் முன் வந்து அவன் உடலோடு உடல் உரசி அவன் கழுத்தில் தன்னுடைய கைகளை கோர்த்தவள் கண்கள் உதய்யின் கண்களை ஆழம் பார்க்க, என்றும் இருக்கும் இணக்கம் இன்று அதில் இல்லை. அந்நிய பார்வை. நொடிந்து பெண் மனம்.

"சராசரி பொண்ணு சார் நான்... குடும்பத்தோட பாதுகாப்புன்னு வர்றப்ப என்ன வேணாலும் பண்ணிக்கோன்னு விட்டுட்டு ஒதுங்கி நிக்க முடியல" அவனோ தன்னுடைய கழுத்திலிருந்த அவள் கையை வம்படியாக விலக்கி நிறுத்தினான் பின்னே ஒரு அடி எடுத்து வைத்து.

இடைவேளையை அதிகப்படுத்தியவனை காயம் கண்ட கண்களோடு பார்த்தவள் விட மனம் இல்லாமல் அவனோடு நெருங்கி நின்றாள், "ஒதுங்கி தான் இருந்தேன், பிரிஞ்சு போகல சார்" என்ன செய்வ
து? அவனை சமாதானம் செய்ய பொய்கள் அவசியமாகியது.

"மாப்பிள்ளை தேடிட்டு இருக்கறப்ப அடுத்தவங்க வீட்டுக்கு இந்த நேரத்துல வர்றது தப்பு யாழினி. நீங்க கிளம்புங்க" அவளை முற்றிலும் அவன் கண்கள் வருட மறுத்தது.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
விடும் நிலையிலும் அவள் வரவில்லை, "மாப்பிள்ளை பாக்க தான் போறேன்னு வீட்டுல சொல்லிட்டு தான் வந்தேன்"

உதய் எரிச்சலோடு அவளை பார்க்க, "கோவப்படாதிங்க சார்... ப்ளீஸ்"

அவள் முகத்தை கோவத்தோடு மேலும் உதய் முறைத்து, "கிளம்புங்க யாழினி... எனக்கு வேலை இருக்கு" முடிவோடு இன்று அவனிடமே மொத்தத்தையும் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்தவளை யாரோ என அவன் பார்க்கும் பார்வையும், மீண்டும் மரியாதையோடு அழைக்கும் பேச்சும் கோவத்தை தர அவனை நெருங்கி வந்து நின்றவள்,

"என்ன ரொம்ப ஓவரா பண்றீங்க? யாரோ மாதிரி பாக்குறீங்க... என்னமோ மாதிரி பேசுறீங்க? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா நீங்க பண்றது?"

விழிகளில் நீர் நிறைய கேட்பவளை பார்த்து கோவம் எழுந்திட அவள் கழுத்தை பற்றியவன், "யாருக்குடி கஷ்டம்? உனக்கா? வெக்கத்தை விட்டு வா வானு எத்தனை தடவ சொன்னேன்? ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட வந்து என்ன கஷ்டம் வந்தாலும் என்கிட்ட சொல்லு-னு சொல்லிட்டே இருக்கணுமா? என்கிட்டே வேலை பாக்குற எல்லாருக்கும் தெரியிதுடி நான் உன் மேல எவ்ளோ பாசமா இருக்கேனு... ஆனா உனக்கு தெரியல"

கையிலிருந்தவளை உதறி தள்ளியவன், "போய்டு. ஒவ்வொரு தடவையும் என்னோட பாசத்தை எல்லாருக்கும் நிரூபிச்சு நான் கடைசில பைத்தியமா நிக்கிறேன்டி. இனிமேல் ஈஸ்வரன் ஆளுங்க உன் பின்னாடி வர மாட்டாங்க... போ"

"போ போ னு சொன்னா எப்படி போக முடியும்?" கோவமாய் நின்றாள் அவன் முன்.

"அன்னைக்கு போக தெரிஞ்சவளுக்கு இன்னைக்கு போக தெரியாதா?" - உதய்

"ஏன் நான் போனா தான் உங்க மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியுமா?" - யாழினி

"ஆமாடி... போதுமா?" கோவத்தில் தான் கூறினான் ஆனால் அவனை அந்த கோலத்தில் எண்ணி பார்க்கவே மனம் அதிகம் வலித்தது.

அவன் மேல் நம்பிக்கை வராமல் இத்தனை நாட்கள் தள்ளியிருக்க வில்லையே, அவன் மாமன் மீதிருந்த பயத்தில் தானே ஒதுங்கியிருந்தாள். மூக்கை உறிஞ்சி அழுகையை கட்டுப்படுத்த முயன்றும் பலன் இல்லாமல் போக, இயலாமை கோவமாய் வந்தது.

அவன் சட்டையை இரு கைகள் கொண்டு பற்றியவள், "அன்னைக்கு சொன்னேன்ல இன்டாரக்ட்டா ஃபோன்ல எதுக்காக இதெல்லாம் பன்றேன்னு... ஏன் அப்ப உங்க மேல நம்பிக்கை இல்லாமையா சொன்னேன்? எப்படியாவது அதுக்கு ஒரு சொல்யூஷன் கண்டு புடிபிங்கன்னு நம்பிக்கைல தான சொன்னேன். ஏன் அத சொல்ல மாட்டிக்கிறீங்க? அப்றம் என்ன சொன்னிங்க வா வா-னு நீங்க கெஞ்சுனாங்களா?

ஆபீஸ் வர சொன்னிங்க. ஏன் கொஞ்சம் இறங்கி வந்து எனக்காக வாடினு சொன்னா அடுத்த நிமிஷம் வந்துருக்க மாட்டேனா? உங்களுக்கு உங்க ஈகோ முக்கியம். பாசத்தை மனசுல மட்டும் வச்சிட்டு வெளிய காட்ட மாட்டேன்... என் கண்ண பாத்து நீயே தான் கண்டு புடிக்கணும்னு சொன்னா? யாருக்கு புரியும்? இங்க என்ன ஜோசியமா படிச்சிட்டு வந்துருக்கோம்?" குலுங்கியது அவள் கைகளோடு அவன் சட்டை மட்டும்.

"நல்லா கேட்டுக்கோங்க... தெரியாம பண்ண தப்புக்கு தெரிஞ்சு பண்ற தப்பு ஈடாகாது. அதே மாதிரி உங்க மாமா பொண்ண நீங்க கல்யாணம் பண்ண போறப்ப வாழ்க பல்லாண்டுன்னு அழுதுட்டே அச்சதை போட்டு வாழ்த்த மாட்டேன். ஆயிரம், பத்தாயிரம் பேர் இருந்தாலும் அத்தன பேர் முன்னாடியும் உங்க கொழந்த என் வயித்துல இருக்குனு சொல்லுவேன்"

மிரட்டியவளை பார்த்து சிறிதும் ஆச்சிரியம் கொள்ளவில்லை உதய்யின் கண்கள். தெரியுமே அவனுக்கு அவள் பஜாரி என்று.

"ஆனத பாத்துக்கோங்க யாழினி" அவன் சட்டையிலிருந்து சில நொடிகளுக்கு முன் விடைபெற்ற அவள் கைகள் மீண்டும் அதனை பற்றியது, "யோவ் மரியாதையா பேசாதீங்க" உன் மேல் முழு உரிமை எனக்கு மட்டுமே என வார்த்தையால் அவள் நிரூபிக்க அவள் கையை உதறினான் உதய்.

"முதல் பத்திரிகை உனக்கு தான்" தொழில் சார்பாக பேசும் உதய் மாதவனின் பிடிவாதம் உறுதியாய் இருக்க மீண்டும் கலங்கியது அவள் விழிகள்.

"ஏன் சார்... உங்க ப்ரன்ட் ஆதி உங்கள எவ்ளோ கஷ்டப்படுத்துனாலும் அவங்கள மன்னிப்பீங்க ஆனா நான் யாரோ தான உங்களுக்கு..."

"வாய ஒடச்சிடுவேன்... அவனுக்கும் இதுக்கும் என்ன சம்மதம்?" சினம் மீண்டெழ வைத்தது அவள் வார்த்தைகள்.

"அந்த திருடன் தான் சொன்னான்... நான் தான் மூனுபேரோட வாழ்க்கை இப்டி ஆனதுக்கு காரணமாம். உங்ககிட்ட பேச சொன்னதே அவன் தான்" - யாழினி

"ஓ அவன் சொன்னதை கேட்டு தான் இப்பயும் என்ன பாக்க வந்துருக்க... நீயா பாக்கணும்னு வரல" - உதய்

"காரணம் தேடிட்டு இருந்தேன் சார்... உங்க பக்கத்துல வர காரணம் தேடிட்டு இருந்தேன்" - யாழினி

"நமக்குள்ள என்ன இருக்குனு கேட்ட?" - உதய்

"பயத்துல..." - யாழினி அவனை முந்தினாள் சீற்றமாக... எத்தனை முறை தான் அவளும் கூறுவாள் தன்னுடைய காரணத்தை.

"ஜெயில்ல இருக்கவன் நாளைக்கு வெளிய வந்தா உன்ன அகைன் என்ன விட்டு போகாம எப்டி கூடயே வச்சுக்குறதுனு நான் டெய்லி யோசிச்சே சாகணுமா?"

"உங்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கா? எனக்கெல்லாம் இருக்காதா? டெய்லி செத்துடு இருக்கேன். என்னைக்கு உங்கள பாக்க மாட்டேன்னு அந்த சொட்டையன்கிட்ட சொன்னேனோ அன்னைக்கு நைட்ல இருந்து தூங்கலை நான்"

பட படத்த கைகளோடு தன்னுடைய கைபேசியில் இருந்த அவனை திருடன் போல் எடுத்திருந்த புகைப்படங்களை வரிசையாக தன் தொடுதிரையில் ஓட விட்டு காட்டினாள். "மனசில்லாதவ இதெல்லாம் பாத்துட்டு பைத்தியம் மாதிரி மன்னிப்பு கேட்டுட்டு இருப்பாளா?"

அவள் காட்டிய அத்தனையும் அவனுடைய புகைப்படங்கள்... வாகனம் ஓட்டும் பொழுது, அலுவலகத்தில், உண்ணும் பொழுது, சைட் விசிட் செல்லும் பொழுது என சித்தமும் அவனே.

"பதினாறு வயசுல அப்பா வாங்குன கடனால ஆரமிச்ச பயம்... படிக்காம, அம்மா கஷ்டப்படாம இருக்கணும்னு வீட்டுக்கு தெரியாம வேலைக்கு பயந்து பயந்து போய், கடன்காரங்களுக்கு பயந்து-னு பயத்துலையே நீந்திட்டு இருந்தவ சார் நான். ஆனா அந்த பயம் போய் நிம்மதியா மூச்சு விட்டது நீங்க என் ஏரியால கால் வச்ச அந்த நாள்... நான் கனவுலையும் எதிர்பாக்காத நிம்மதி சார் நீங்க. உங்கள மறக்கணும்னு நெனச்சாவே எனக்கு மன்னிப்பு கெடைக்காது"

"டயலாக் எல்லாம் ரொம்பவே நல்லா தான்டி பேசுற... ஆனா வீட்டுல மாப்பிள்ளை பாக்குற அளவுக்கு போனவை தானே நீ"

அவள் மீது கோவம் கூட அதிகமில்லை ஆனால் அவளுக்கு பெண் பார்க்கும் படலத்தை அவள் வாயிலே கேள்வியுற்றவன் மனம் துடித்தது.

"என்னமோ நானே பாருங்கன்னு சொன்ன மாதிரி பேசுறீங்க... அவங்களா பாக்குறாங்க, அவங்களா பேசுறாங்க. இவன புடிச்சிருக்கா, இவன புடிச்சிருக்கானு கேக்குறப்ப கத்தி அழுகணும் போல இருக்கும். அது தான் இன்னைக்கு மொத்தமா ஒடச்சிட்டேன்... நீங்க தான் எல்லாமேனு சொல்லிட்டு வந்துட்டேன்..."

"அதுக்கு நான் பொறுப்பா?" - உதய்

"இல்லையா பின்ன? சும்மா வேலை பாத்துட்டு இருந்தவல வச்ச கண்ணு வாங்காம அடிக்கடி பாத்துட்டே இருந்து ஆசைய வளத்து விட்டாச்சு... அப்றம் என்னமோ உங்க பொண்டாட்டி மாதிரி கைல தூக்கி மடில ஒக்கார வச்சிங்கள்ல... அந்த செகண்ட்லயே நான் உங்க பொறுப்புல வந்துட்டேன்"

யாழினி பார்வை ரசனையோடு மாறுவதை உணர்ந்தவன் மனமும் அவள் கெஞ்சலில் கரைய அந்த பார்வை தந்த தித்திப்பை தள்ளி வைக்க இரண்டடி பின்னோக்கினான். துளியும் இறுக்கம் இல்லாதிருந்தவன் தோற்றம் துணிவை தர அவன் கைகளுக்குள் செல்ல மாலையிலிருந்து துடித்த மனதிற்கு நிம்மதியை தர திரட்டிய தைரியத்தோடு ஆசையாய் முன்னேற அவனோ அதற்கு மேல் பின் செல்ல முடியாமல் ஆண் மனம் நிறுத்தியது.

"நில்லுடி" உரிமை கட்டளை அவளிடம் வேலை செய்யவில்லை. ஒரே நொடியில் அவன் அருகில் வந்தவள் அவன் காலில் ஏறி நின்று அவன் கழுத்தோடு கைகள் கோர்த்து கண்களை உற்று நோக்கினாள்.

"எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப புடிக்கும் சார்... தோ இங்க இருந்து கீழ குதினு சொல்லுங்களேன் குதிச்சிடுவேன்" - யாழினி

ஆசையாக மனதை கூற, "சரி குதி" என்றான் அவனும் வேண்டும் என்றே.

அவளோ நமட்டு சிரிப்புடன், "மாட்டேன். எனக்கு நாலு குழந்தைங்க வேணும்... உங்கள மாதிரி ரெண்டு, என்ன மாதிரி ரெண்டு"

எவ்வளவு தான் வீறாப்பாக முகத்தை வைத்தாலும் தன்னோடு மல்லுக்கு நிற்கும் இவள் மீது இருந்த கோவம் காற்றில் பறக்க துவங்கியது உதயனுக்கு,

"எப்பயும் நான் உங்ககூடயே இருக்கனும் சார்... கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?" கண்களில் காதல் மின்ன எதிர்பார்ப்போடு கேட்டவளின் ஆசையை அந்த கணமே செய்திட பேராவல் வந்தது.

ஆனாலும் ஒரு தயக்கம், அவனை அமைதி மனதை உடைக்க, "உங்க தகுதிக்கு நான் கம்மினு யோசிக்கிறீங்களா சார்?" துறந்தான் கோவத்தை, கர்வத்தை. அவளை கட்டி அணைக்க பரபரத்த கைகளுக்கு மேலும் தடை விதிக்காமல் மிருதுவான அவன் இடையை பற்றி தன்னோடு இறுக்கினான்.

"தகுதினா இந்த வீடு, காசு, பதவி தான்னா... இனிமேல் நானும் உனக்கு சமமானவன் தான் யாழினி. என்ன சுத்தி இருக்க எல்லாம் இன்னும் ஒரு வாரம் தான் என் கூட இருக்கும்" புரியாமல் விழித்தவளுக்கு நடந்த அத்தனையையும் கூறினான்.

என்ன வகையான உணர்வு இவன் முகத்தில் என்று பகுத்தறிய முடியவில்லை அவளால், "கஷ்டமா இல்லையா சார் உங்களுக்கு?" அவளது கை அவன் பின்னந்தலையில் ஆறுதலாக துழாவியது.

தோளை குலுக்கினான் உணர்வுகளை மறைக்க. நொடி யோசனையின்றி எக்கி அவன் நெற்றியில் ஆழமான ஒரு முத்தத்தை யாழினி வைக்க, மன பாரத்தை குறைக்க அவள் தோளில் முகம் புதைத்து கண்களை மூடி சாய்ந்துவிட்டான்.

"வலிக்கிது யாழி" அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சில் அம்பை பாய்ச்சியது. எத்தனை கம்பீரமானவன் சுணங்கி கிடக்கிறான்...

கண்களில் நீர் சுரக்க, அணைப்பை கூட்டி, "என்ன நினைச்சிட்டு இருக்காங்க? கேக்க ஆள் இல்லனா? வீடு அட்ரஸ் தாங்க நாலு வார்த்தை கேட்டுட்டு வர்றேன்"

அவள் அணைப்பிலிருந்து விழகியவன், "என்ன?" என்றான் சிரிப்பாய்.

"அட்ரஸ் கேட்டேன். உங்க ரெண்டு தம்பிகளுக்கு நாலு வார்த்தை, தங்கச்சிகளுக்கு நாலு வார்த்தை, உங்க அப்பாக்கு இருவது வார்த்தை. லெப்ட் ரைட் வாங்கணும். இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகணும். கணக்கு வேணுமாம்ல கணக்கு... பைசல் பண்றேன் எல்லா கணக்கையும் இன்னைக்கு"

உதய்யின் கை பிடித்து இழுத்தவளை ஒரே இழுவையில் தன்னுள் அடக்கியவன் அவள் கன்னம் பற்றி விடாது பேசிக்கொண்டே இருக்கும் அந்த ஸ்ட்ராபெர்ரி இதழ்களை சிறை செய்திருந்தான். அவன் திடீர் தாக்குதலில் விக்கித்து விழி விரித்து நின்றவள் அவன் நெஞ்சில் கை வைத்து நிறுத்த முயல, அவள் கைகளை தூக்கி தன்னுடைய பின்னந்தலையில் வைத்துவிட்டான்.

உறைந்து நின்ற அவள் தேகத்தை இடை தொட்டு தன்னோடு இறுக்கியவன் கரங்களில் பாவை துவண்டுவிழ, இதழ் முத்தம் தரும் மயக்கத்தில் கண்கள் மூடி அவனுடன் ஒன்றி போனவள் கை அவன் கழுத்தில் ஆசையாய் மாலையாகியது. மலரின் தேனை அவளில் பருகியவன் இதழ்களில் முத்தம் விழகா சிரிப்பு. நிலவின் குளுமையோடு முதல் முத்த அச்சாரத்தை பதிவு செய்தவன் அவள் மூச்சிற்கு ஏங்குவதை பார்த்து விலகி அவள் நெற்றி முட்டி நின்றான்.

அந்த மாநிற காரிகையின் கன்னங்கள் சிவக்க, மேலும் போதையூட்டியது அவனுக்கு, "இந்த வாய் ஓயவே மாட்டிக்கிது... பிஜிலி பட்டாசுலாம் இல்ல... ஸ்ட்ரையிட் டென் தொளசண்ட் வாளா தான். ம்ம்ம்?"

குனிந்த தலை நிமிரவில்லை அவள், வெட்கத்தில்.

"ஏற்கனவே குடும்பத்தை விட்டு, ப்ரன்ட்ஸ் இல்லாம-னு நொந்து போயிருந்தேன்... அதே நேரம் ஒரே ஆறுதல் என்ன உரிமையா மிரட்டி திட்டு வாங்குற நீ மட்டும் தான். அப்ப நீயும் இல்லனா நான் எவ்ளோ கஷ்டப்படிருப்பேனு யோசிக்கவே இல்ல-னு தான் உன் மேல கோவம் யாழினி" - உதய்

"உங்க நிலைமை புரியாம இல்ல சார்..." - யாழினி

"உதய் சொல்லு யாழினி... சார் வேணாம்" அவள் ம்ம் கொட்டியது அவன் நெஞ்சத்தின் அதிர்வில் புரிய, காற்றிலாடிய அவள் சிகையை வருடிக்கொண்டே இதமாய் உள்வாங்கினான்.

"உன் நிலைமையும் புரியாம இல்ல யாழினி ஆனா என்கிட்டே உனக்கு சொல்ல தோனலனு நினைக்கிறப தான் ரொம்ப கஷ்டமா போச்சு... எப்படி எல்லாம் உன்ன பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன் அதெல்லாம் இனி இல்ல... நீ ரொம்ப ஆசையா நேசிக்கிறவங்க எல்லாரும் உன்ன விட்டு போயிட்டே தான் இருப்பாங்கன்னு மூளை சொல்றப்ப வருமே ஒரு வலி... சாத்தியமா தாங்கிக்க முடியல"

அவன் இதயத்தின் மீது கை வைத்து அதை அவள் வருட, அவள் கையை பற்றியவன் மிருதுவான அந்த கையில் மென்மையாய் ஒரு முத்தம் வைக்க, அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த பெண்ணின் உடலில் மின்சார அதிர்வு. அந்த ஒரு அசைவு போதாதா... தன்னால் மட்டுமே தன்னவள் இது போன்ற அழகிய உணர்வுகளை அடைய முடியும் என்ற எண்ணமே ஆணுக்கு வரும் முதல் காதல் கர்வம்.

"இப்ப கூட உள்ளுக்குள்ள ஒரு பயம்..."

அவன் நெஞ்சிலிருந்து எழாது அவன் முகத்தை பார்த்தவள், "எதுக்கு இவ்ளோ பீல் பண்றீங்க?" வருத்தமாக இருந்தது வாடிய அவன் முகத்தை பார்க்க.

"ஒன்னு வந்தா ஒன்னு போகுது யாழி... நீ வந்த, ஆதவன் போனான்..." சில நொடி மௌனத்திற்கு பிறகு, "ஏதோ பெருசா நடக்க போகுது... ரெண்டு வாரமாவே மனசு சஞ்சலமா இருக்கு"

மனதில் பல நாட்களாக அரித்த உண்மை அது. மாறி மாறி ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருக்க, மனதில் இருந்த ஒரு குடைச்சல் மட்டும் நீங்கவில்லை.

"ரொம்ப யோசிக்கிறீங்க" அவன் அளவான மீசையை முறுக்கி முறுக்கி பார்த்தும் அவள் எதிர் பார்ப்பது போல் முறுக்காமல் விறைப்பாய் நின்றது.

"உங்கள மாதிரியே இதுக்கும் திமிரு அதிகம்" முகத்தை கோவமாக வைத்து மீசையை சரி செய்துகொண்டே பேசினாள், "மீசையை மட்டும் முறுக்கி விட்டா அப்டியே பாக்க எங்க ஊர் அய்யனார் மாதிரியே இருப்பிங்க... ஆனா எங்க ஊர் அய்யனார் எதுக்கும் பயப்பட மாட்டார்"

அவள் ஊக்கத்தை சிரிப்போடு ஏற்றவன், "ஆஹான்" என்றான் கிண்டலாய்.

மேலும் கீழும் தலையை ஆட்டி, "ஆமா... திமிரா, விறைப்பா, தெனாவெட்டோட இருங்க... அப்ப தான் என்னோட ஹிட்லர் மாதிரியே இருப்பிங்க, இது பால்வாடி பாப்பா மாதிரி இருக்கு" வாய் விட்டு சிரித்துவிட்டான்.

"ஹாஹா... ஹாஹா... அது என்னடி ஹிட்லர்?" - உதய்

"அது தான் சொன்னேனே... திமுரா, தெனாவெட்டா, யார் பேச்சையும் கேக்காம" - யாழினி

"நான் எப்படி திமுரா இருப்பேன்... ஆமா இது என்ன டிரஸ்?" உதய்யின் கண்கள் அவளை முழுதாய் அளந்தது ரசனையோடு.

"பாட்டியாலா... ஓல்ட் மாடல் தான்... ஆனா எனக்கு ரொம்ப புடிக்கும்... ஏன் நல்லா இல்லையா?" வாடியது அவள் முகம்.

"நல்லா தான் இருக்கு... ஆனா இது என்ன லோ நெக்?"

கழுத்தை ஒட்டி கிடந்த துப்பட்டாவை சட்டென கீழ் இறக்க முறைத்தான் உதய், "இத போட்டு தான் வேலைக்கு போனியா?"

"இல்லையே அங்க போய் வேற மாத்திக்குவேன்" - யாழினி

"ம்ம்ம்" அவன் மேலும் முறைக்க, "சரி இனி போடல" சோகமாக கூறினாள்.

அந்த துப்பட்டாவோ காற்றில் மீண்டும் அவள் கழுத்தோடு ஒட்டிக்கொண்டது. சிரித்தவன், குனிந்து மீசை உரச அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்து, "என் கூட இருக்கறப்ப போடலாம்" அவன் மீசை உரசி கன்னம் சிவந்ததா இல்லை வார்த்தைகளில் சிவந்ததா என்று தெரியவில்லை.

"அழகா இருக்க யாழி..." குலைந்து வந்த அவன் குரலில் மயங்கியவள் அவன் கன்னத்தை தொட, அந்த சுகமே அழகாய் இருந்தது உதய்க்கு. கன்னத்தில் இதழ் அச்சாரம் பதித்தவன் அவள் மூக்கோடு மூக்கை உரசி மீண்டும் நெற்றியில் முட்டி நிறுத்தினான்.

"உனக்கு என்ன புடிக்குதோ அத போடலாம்... ஆனா இப்டி டெம்ப்ட் பண்ற மாதிரி என்கூட இருக்கறப்ப மட்டும் தான் போடணும்" கேலி செய்தவனின் உள் அர்த்தம் புரிய உடனே அவனை விட்டு வெட்கத்தோடு தள்ளி நின்றாள்.

"சாப்பிடலாம் வாங்க" தன் அணைப்பிலிருந்து விடுபட போனவள் கை பற்றி மீண்டும் தன்னோடு அடக்கியவன் அவள் இதழ் வருடி, "தாராளமா" என்றான் விஷம சிரிப்பாய்.

"இந்த ஹிட்லர்க்கு ரொமான்ஸ் எல்லாம் வருமா?" - யாழினி

"டார்க் ரொமான்ஸ் கூட தாராளமா வரும்" - உதய்

அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தியவள் முறைப்போடு, "ஆத்தி... நீங்க எட்டையே நில்லுங்க.. நான் ஜெயன் அண்ணாகிட்ட உங்களுக்கு சாப்பாடு குடுத்து அனுப்புறேன்"

கீழே செல்ல அவள் பின்னே அவள் துப்பட்டாவை பிடித்து அருகில் நிறுத்தி, "ஊட்டி விடுறியா பட்டாசு?" ஆசையாய் அவன் கேட்க மறுப்பாளா பெண்? இரண்டு மூன்று உண்பவன், இன்று அவள் கதைகளை கேட்டு கணக்கே இல்லாமல் உள்ளே சென்றது பூரிகள்.

அன்று யாழினியை வீட்டிற்கு அனுப்ப மனம் வரவில்லை உதய்க்கு. அதனால் அவளும் வீட்டினரிடம் ஏதேதோ காரணம் கூறி வேறொரு அறையில் தங்கிவிட, மறுநாள் சற்று மன நிம்மதியோடு கண் விழித்த உதய் குளித்து அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்த பொழுது சமைலறையிலிருந்து யாழினியின் சிரிப்பொலி கேட்க அந்த பக்கம் நோக்கி உதய் செல்ல, சரியாக அப்பொழுது தான் சமையலறையிலிருந்து சிரித்த முகத்தோடு வெளி வந்தான் ஜெயன்.

"குட் மார்னிங் சார்" - ஜெயன்

"மார்னிங் ஜெயன். ஹல்ஃப் அன் ஹௌர்ல வரேன்" - உதய்

"ஓகே சார்" - ஜெயன்

"நீங்க சாப்டாச்சா?" - உதய்

"சாப்பிட்டேன் சார்... ஆக்சிடென்ட் பத்தி விசாரிக்க சொல்லிருக்கேன் சார்"

சஹானாவை பற்றிய எண்ணங்களே அவனை இரவு முழுதும் உறங்கவிடாமல் தடுத்திருந்தது, "சஹானா எப்படி இருக்கா ஜெயன்?" - உதய்

"இன்னும் டாக்டர்ஸ் எதுவும் சொல்லல சார்" - ஜெயன்

"நான் சொன்ன டாக்டர்ஸ் எல்லாம் கூட தானே இருக்காங்க?" - உதய்

"இல்ல சார், ஆதவன் சார் விட மாட்டிக்கிறாரு" - ஜெயன்

பற்களை கடித்தவன், "அவன் கைய கால ஒடச்சு போட்டாலும் பரவால்ல, நான் அனுப்புன டாக்டர்ஸ் எல்லா செக் அப் டைம்லயும் அங்க தான் இருக்கனும்"

புரிந்ததாக தலையை ஆட்டி ஜெயன் வெளியேற சிந்தனையோடு சமையலறை நோக்கி வந்தவன், "யாழினி பிளாக் காபி" என்று கூறிக்கொண்டே சமையலறை வந்தடைந்த பொழுது கண்கள் விரிந்தது அவனுக்கு.

காரணம், அங்கு சமைத்துக்கொண்டிருந்தது அவன் சித்தி நளினி. போதாக்குறைக்கு யாழினி அவன் உடையில் சமையல் திட்டில் அமர்ந்திருக்க நளினி சமையலில். இவனை பார்த்ததும் யாழினி விரிந்த புன்னகையோடு ஒரு ஹாய் சொல்ல, அவன் கேட்ட பிளாக் காபியை அடுப்பில் வைத்தவர் அவனை பார்த்து திரும்பி, "என்ன பா இவ்ளோ நேரமாவே ஆபீஸ் கெளம்பிட்ட?" என்றார்.

"இல்ல சித்தி இன்னும் டைம் ஆகும்"

சங்கடமாக உணர்ந்த உதய், நளினி அந்த பக்கம் திரும்பவும் யாழினி அருகே வந்தவன் கிசுகிசுப்பாக, "யாழினி போ வேற டிரஸ் மாத்து" என்றான்.

முகத்தை சோகமாக வைத்தவள் மாட்டவே மாட்டேன் என்று தலையை ஆட்டி அவன் சட்டையை பிடித்து தன் உயரத்திற்கு குனிய வைத்து அவன் காதில், "இது தான் உங்கள கட்டி புடிச்ச மாதிரி இருக்கு" கண்ணடித்து சிரித்தாள்.

அவன் சித்தி மட்டும் இல்லையெனில் உலகம் மறக்கும் அளவிற்கு ஆழ்ந்த இதழ் அச்சாரத்தை வழங்கியிருப்பான். ஆனால் இப்பொழுது அவன் அசௌகரியம் இன்னும் கூடியது அவன் சிற்றன்னை முன். தள்ளி நின்றான் அவளை விட்டு முறைத்துக்கொண்டு.

ப்ரிட்ஜ் திறந்து பிரட் பாக்கெட் எடுத்தவன் அதில் ஜாமை தடவியவாறே, "ஏதாவது பிரச்சனையா சித்தி வீட்டுல? ஜெயன்கிட்ட சொல்லிருந்தா அவனே என்கிட்டே விசயத்த சொல்லிருப்பான். நீங்க ஏன் சிரமப்படுறீங்க?"

தலை குனிந்து தன்னை பார்ப்பதை தவிர்த்தவனின் சங்கடத்தை உணர்ந்த நளினி அவன் கையிலிருந்த பிரட்டை வாங்கி ஓரம் வைத்து காபியை கையில் திணித்தார்.

"ஏன் உதய், எங்களுக்கு தேவைன்னு ஒன்னு இருந்தா தான் உன்ன தேடி வருவோமா?"

வலியோடு சிரித்தார், "உன் மேல தப்பு இல்ல பா... நாங்க அப்டி தானே இத்தன வருஷம் நடந்துட்டோம்" என்றவர் மேலும் நாடியில் கை வைத்து அவன் தலையை தூக்கினார், "நீ தல குனிஞ்சு நிக்காத உதய்... உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவர் பார்வை யாழினி மீது படிய அவளோ அழகாய் நளினியை பார்த்து சிரித்தாள்.

சற்று ஆசுவாசமடைந்தவன் நிம்மதி மூச்சு விட்டான். "எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்?" - நளினி

"பெரிய மாமா இவர்கிட்ட மன்னிப்பு கேட்டதும் தான்" உதய்யை முந்திக்கொண்டு வந்தது யாழினியின் பதில்.

"யாழினி.." அவளை உதய் எச்சரிக்கை செய்ய,

"அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு உதய்? உன் அப்பா உன்கிட்ட மன்னிப்பு கேட்டு தானே ஆகணும்?" யாழினிக்கு துணை நின்றார் நளினி.

"அவர் எவ்ளோ பெரிய மனுஷன், என்கிட்டே மன்னிப்பு கேக்கலாமா? அதுவும் அப்பா பையன்கிட்ட... நல்லா இல்ல சித்தி இது" - உதய்

"தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான். பெரியவங்களா இருந்தா தப்பில்லன்னு ஆகிடுமா?" ஹரியின் குரல் கேட்டு உதய் வேகமாக திரும்ப அங்கு தோளில் ஒரு பெரிய பையும், கையில் இரண்டு பையும் வைத்து நின்றான்.

"அதானே" கோரஸாய் மேலும் இரண்டு குரல்கள் ஹரி பின்னால். பல்லவி, திவ்யா. அவர்கள் கையிலும் பைகள்..

வெடுக்கென நளினியை பார்த்தவன், "சித்தி இது தப்பு" என்றான் வாடிய முகத்துடன்.

"இல்ல ண்ணா... உங்கள நம்பாத அந்த வீட்டுல எங்களுக்கு மட்டும் என்ன வேலை? அதான் அம்மா பின்னாடியே நாங்களும் வந்துட்டோம். கட்டி அழுகட்டும் கம்பெனி, கணக்குன்னு"

காரமாக கூறிய ஹரியின் கண்கள் அடிக்கடி தனக்கு கை காட்டிக்கொண்டிருந்த யாழினியை சிரிப்போடு பார்த்தது. ஒருவழியாக சகோதரனின் வாயை அடைந்தவன், "அடடே நம்ம சரோஜா க்கா இங்க என்ன பண்ற"

"டேய் அரிப்புழு..." யாழினியின் அழைப்பில் சிரித்துவிட்டான் ஹரி.

"ஹரி அண்ணி சொல்லு..." - நளினி

அடுத்த சில நொடிகளில் யாழினிக்கு ஒரு சிறு இன்டெர்வியூ நடக்க காலை உணவு சிரிப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்றது. ஆர்ப்பாட்டமான உணவு வேளையில் ஜெயன் உதய்க்கு அழைத்தான். சிரிப்போடு அழைப்பை ஏற்ற உதய், "வந்துட்டேன் ஜெயன். நீங்க கார் ரெடி
பண்ணுங்க"

"சா.. சார்..." தடுமாறியது ஜெயன் வார்த்தைகள். ஏதோ நெருடியது உதய்க்கு மனதில், "சொல்லுங்க ஜெயன்..." பயம் வந்தது... "சஹானா ஒரு கால்ல நரம்புல ஏதோ பெரிய பாதிப்பு போல. ஒரு கால் நடக்க முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க"
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
ஆதவா யாரோ இப்படி உதய மாட்டி விட பண்ணி இருப்பாங்க 💔💔நீ கூட நம்பமா கேட்ட எப்படி
தமிழ் கௌதம் சொல்லுறது கேளு ஏதோ proof குடுத்தா இப்போ neggalum உதய் கிட்ட பேசுறது தப்பு😡
ஆதி உன்னோட உதய் குப்பிடுகிறன் பேசு ஆதி
Ayoo உதய் நீயும் இப்படி லா பேசாத கஷ்டமா இருக்கு ஒரு நாள் எல்லாரும் அவகா உன்னை புரிந்து கொண்டு வருவாங்க🥺🥺
நளினி அம்மா சூப்பர் பேசுக🤩 இப்போ இந்த family ku உதய் பண்ணது மட்டும் தப்பு😡
யாழினி ஆஹா வந்துட்டா இது போதும் உதய் மனசு சந்தோசமா இருக்கும்💝💝
ஹிட்லர் பட்டாசு நல்ல பேர் தான்😹😹
ஜெயன் happy 😁😁😁
என்னடா மொத்த குடும்பம் இங்க நளினி அம்மா யாழினி close agitaga ❤️❤️
ஹரி பவி திவ்யா அண்ணா ku support ✨✨
யாழினி crt udhai appa கண்டிப்பா மன்ணிப்பு கேக்கணும்💯
சஹானா என் இப்படி ஒரு நிலைமை கால் எதுவும் இல்லனு டாக்டர் சொல்லுக🥺💛
சீக்கிரமா ஒரு நல்ல நியூஸ் சொல்லுக 😐😐
 
Last edited:
Top