• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 30 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

Chap – 30


“எனக்கு மணிய கல்யாணம் பண்ணி தர்றிங்களா?”

செந்தமிழ் அரசனுக்கு சிறு வயதில் இருந்தே எதிலும் பொறுமையாய் இருக்கும் உதய் மீது சொல்ல முடியாது பிரியம். தன்னுடைய உடன் பிறந்த சகோதரியின் பிள்ளைகள் மீது இருப்பதாய் விட, உதய் மீது பாசம் அதிகம் வைத்திருப்பார்.

உதய்க்கும் ஈஸ்வரன் மீது எந்த காலத்திலும் பாசம் இருந்தது இல்லை. அவர் பேச்சில் இருக்கும் ஊசி வார்த்தைகளும் ஒளிவு மறைவான பேச்சும் எதிலும் சரியாய் அமைதியாய் இருக்க நினைக்கும் உதய்க்கு புடிக்காமலே போய்விட்டது. அவனது விருப்பம் அறிந்து காயத்திரி கூட எதுவும் பேசியதில்லை.

ஈஸ்வரனுக்கு நேர் எதிர் செந்தமிழரசன். அவர்கள் குடும்பம் செல்வாக்கில் சொல்லும்படி இல்லை என்றாலும் எந்த நாளும் சகோதரியின் வீட்டிற்கு ஒரு வேளை உணவை மீறி இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த முயற்சியை வைத்தே அமெரிக்காவில் இருந்த மிக புகழ்பெற்ற தி யூனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ்-ல் தமிழ் பேராசிரியராக வேலை செய்யும் அளவிற்கு உயர்த்திருந்தார்.

டெக்சாஸ் சென்றால் மாமனின் இல்லத்தில் ஒரு விசிட் போடாமல் உதய் வந்தது இல்லை. காரணம், செந்தமிழரசனும் மணிமேகலையும் தான். உதய் அதிகம் பேசுவதும் இவரிடம் தான், அதுவும் நாட்டுநடப்பை பற்றி மட்டுமே இருக்கும். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உதய்யின் பணிவு அந்த தமிழ் ஆசிரியரை அவன் பக்கம் சாய்த்திருந்தது. இப்பொழுது கூட உதய் கேட்ட கேள்வியில் பேச்சற்று இருந்த அவர் மனதினுள் அத்தனை அத்தனை மகிழ்ச்சி.

மகளை தான் பாதுகாப்பது போல் பத்து மடங்கு அவனிடம் பாதுகாப்பாய் இருப்பாள் என்பது உறுதி. இந்த எண்ணம் அவர் மனதில் பல நாட்களாகவே இருந்ததும் தான் ஆனால் வசதியை எண்ணி அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டுவிட்டார். இன்று அவனே வந்து கேட்டதும் தயக்கம் காற்றில் பறந்தது.

“உனக்கு பொண்ணு குடுக்கலானா நான் தான் உதய் முட்டால். உன்ன விட என் பொண்ண வேற யார் நல்லா பாத்துக்குவா சொல்லு... என் பொண்ணு அத்ரிஷ்டசாலி தான்” திரும்பி அவர் மகளை பார்க்க, நெருடலோடு உதய்யும் மணிமேகலையை தான் பார்த்தான்.

தன்னை கண்ணீர் திரையிட்ட விழிகளோடு பார்த்தவள் மான் விழிகள் கேட்ட கேள்வியில் மாண்டான் ஆடவன். ஒரு சொட்டு நீர் அவள் கண்களிடமிருந்து விடுதலை பெற்று கன்னத்தில் சொட்டு போட சட்டென உதய் முகத்தை திருப்பிக்கொண்டான்.

‘எவ்ளோ நம்புனேன் உங்கள... ச்சை’ முகத்தை சுளித்து விறு விறுவென மாடியேறி சென்றுவிட்டாள்.

அவள் கண்ணீரை கவனிக்காத செந்தமிழரசன் மனைவியிடம் அந்த இன்ப செய்தியை கூற சென்றிருந்தார். மணிமேகலையின் அன்னைக்கும் அத்தனை மகிழ்ச்சி, “ரொம்ப சந்தோசம் பா...” என்றார் முகம் எல்லாம் சிரிப்பாக.

“மாமா ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” தயக்கம் உதய்யிடம்.

“தாராளமா டைம் எடுத்துக்கோ உதய், ஆனா ஒரு மாசத்துல நல்ல நாள் பாத்து நிச்சயம் மட்டும் வச்சுக்கலாம். வீட்டுல வந்து நான் நாளைக்கு பேசுறேன்” – செந்தமிழரசன்

“ஏன் நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும்?” உஷ்ணமாக வந்தது விஷ்ணுவின் வார்த்தை.

நேற்று அருந்திய போதையிலிருந்து வந்த பரிசான தலைவலி, கூடவே ஹரி நிலையை எண்ணி பரிதவிப்பு என மொத்தம் இருந்த கோவத்தை உதய் மீது இறக்கினான்.

“தோ இப்ப எல்லாரும் இங்க வந்துடுவாங்க. இங்கையே பேசி முடிஞ்சா இன்னைக்கே கல்யாணத்த பண்ணிடுங்க. தம்பிய அங்குட்டு ஜெயில்கு அனுப்பி வச்சிட்டு இந்த பக்கம் நீ கல்யாணம் பண்ணிக்கோ” – விஷ்ணு

“விஷ்ணு என்ன பேச்சு இது?” – செந்தமிழரசன்

“என்ன மன்னிச்சிடுங்க மாமா. நான் பொறுப்பு இல்லாம ஊதாரித்தனமா இருக்கறவன் தான் ஆனா இவன மாதிரி ஒன்னும் கல் நெஞ்சுக்காரன் இல்ல. தப்பே பண்ணாத தம்பி அங்க ஜெயில்ல இருக்கறப்ப இங்க சந்தோசமா கல்யாணத்துக்கு சம்மந்தம் பேசிட்டு இருக்குறவன மாதிரி என்னால சாத்தியமா இருக்க முடியல, ஏதோ நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு” கண்ணீர் சில அவன் கன்னங்களில் உருண்டோடியது.

“உதய் என்ன பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் விஷ்ணு. கொஞ்சம் பொறுமையா பேசு. உங்க மேல அதிகம் பாசம் வச்சிருக்குறவன் நிச்சயம் யோசிக்காம எதையும் பண்ண மாட்டான்” – செந்தமிழரசன்

“நான் செஞ்ச தப்பையே மறுபடியும் நீங்க செஞ்சிடாதிங்க மாமா. உங்கள விட அதிகம் அவனை நம்புனேன். எங்க அவன்கிட்ட கேளுங்க ஹரி மேல தப்பில்லன்னு அவனுக்கு தெரியாதானு?”

செந்தமிழரசன் உதய்யை திரும்பி பார்த்தார், அவருக்கு பதில் கூறாமல் பார்வையை அவரிடம் திருப்பவில்லை உதய். சகோதரர்களை திருத்த தான் இந்த கடின முயற்சி என்று கூறிவிடலாம் தான் ஆனால் சில நிமிடங்களுக்கு முன் அவரிடம் மணிமேகலையின் மனதை உடைத்து எழுப்பிய தவறான கேள்விக்கு தண்டனையாய் மௌனம் சாதித்தான்.

“அவன் பதில் சொல்ல மாட்டான். எப்படி சொல்லுவான்? தப்பு தான் இவன் மேல இருக்கே... யாருக்கு தெரியும் இவனே இதெல்லாம் செட் பண்ணிருப்பான்”

“அளந்து பேசு விஷ்ணு...” நளினியின் ஆத்திர வார்த்தைகள் விஷ்ணுவை நிறுத்தியது. அழைத்து அவனே... உதய் செய்தது பற்றி தந்தையிடம் கூறி உடனே இங்கு வருமாறு கேட்டுக்கொண்டவன் நளினியை எதிர்பார்க்கவில்லை.

“எப்பையுமே என் வாய அடக்கிறதுலையே இருங்க” பின்னால் வந்த தந்தையையும், சித்தப்பாவையும் பார்த்தவன் அவர்கள் அருகில் சென்றான்,

“எல்லாமே நீங்க குடுக்குற இடம் தான். சாத்தியமா சொல்றேன் ப்பா நான் ஆக்சிடென்ட் நாங்க பண்ணல, அது இவனுக்கும் தெரிஞ்சும் ஹரியை அங்கையே விட்டுட்டு வந்துருகுறான். யாருக்கு தெரியும் ஒருவேளை எங்க கதையை முடிச்சிட்டு மொத்த கம்பெனியையும் இவனே சுருட்டிக்க முடிவு பண்ணிட்டான் போல” – விஷ்ணுவின் வார்த்தைகள் எல்லையை கடந்து சென்றன.

“ஷட் அப் விஷ்ணு... ஹரிய உள்ள வச்ச தெரிஞ்ச எனக்கு உன்னை மறுபடியும் உள்ள அனுப்ப ரொம்ப நேரம் ஆகாது” சகோதரனிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அருகில் வந்த உதய்யின் தந்தை ரகுநந்தன் உதய்யின் கன்னத்தில் ஓங்கி அரைத்திருந்தார்.

கீழே பேச்சு சத்தம் கேட்டு வந்த மணிமேகலையிலிருந்து, அவள் தந்தை, நளினி, ஜெயநந்தன், விஷ்ணு வரை அத்தனை மனிதர்களும் அதிர்ச்சியில் பேச்சற்று நின்றனர். தந்தை அரைந்ததில் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நின்றவன் வார்த்தை பேசவில்லை... பார்வையை தரையில் தாழ்த்தவும் இல்லை. ஏமாற்றம் பெருகிக்கொண்டே சென்றது.

“என்னடா பேசுற? தோளுக்கு மேல வந்த பையன்-னு ஒரு நாளும் உன்ன கண்டிச்சதும் இல்லை, அரட்டினதும் இல்லை. அதுக்காக நீ என்ன செஞ்சாலும் அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைக்க வேணாம் உதய். ஈஸ்வரன் விசியத்துலையே நீ பண்ணது இப்ப வர என்னால வெளிய தல காட்ட முடியல” – ரகுநந்தன்

“அவர் பண்ண தப்பு உங்க கண்ணுல இப்ப வர தெரியலையா பா? அவர் பண்ண தப்ப சொல்லி காமிச்ச என் மேல தான் உங்களுக்கு ஏமாற்றம்” – உதய்

“இந்த ஊர்ல இருக்குற எல்லா ஆபிசர்ஸையும் வாங்க முடிஞ்சவன், ரெண்டு பத்தரத்த ரெடி பண்ண எவ்ளோ நேரம் ஆகிட போகுது?”

ஈஸ்வரன் மேல் போலியான பழியை போட்டது நிச்சயம் இவன் தான் என்றது விஷ்ணுவின் வார்த்தை, “நல்லா கேளுங்கப்பா அந்த காச இவன் வேற எங்கையாவது பதுக்கி வச்சிருப்பான்” குத்தீட்டியாய் குத்தியது விஷ்ணுவின் வார்த்தைகள் உதய்யின் நெஞ்சில்.

“என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா விஷ்ணு? அவன் உன் அண்ணன்” நளினி விஷ்ணுவை கண்டித்தார்.

“அண்ணனா?” சிரித்தான் ஏளனமாய், “என்னைக்காவது எனக்கு அப்டி ஆசையா நடந்துருக்கானா?” – விஷ்ணு

“ஆசையா சிரிச்சு பேசுனா தான் உன் மேல பாசம் இருக்கறதா அர்த்தமா விஷ்ணு? ஒவ்வொருத்தருக்கும் தன்னோட அன்ப வெளிகாட்டுறதுக்கு ஒவ்வொரு வழி இருக்கும்” – செந்தமிழரசன்

“வேணாம் மாமா... எனக்கு இவனும் வேணாம், இவன் பாசமும் வேணா. இனிமே நான் இவன் இருக்குற ஆபீஸ் பக்கமே வர மாட்டேன்” விட்டேதரியாக பேசுனான் விஷ்ணு.

“நீ ஏன் டா போகணும்? வாழ்க்கைல எல்லாமே ரொம்ப ஈஸியா கிடைச்சிடுச்சுல... அந்த மிதப்பு இவன்கிட்ட. இன்னும் ஒரு மணி நேரத்துல ஹரி வீட்டுல இருப்பான். அதுக்கு முன்னாடி ஒரு முன்னாடி இங்கையே ஒரு முக்கியமான விசியம் பேசி முடிக்கணும்”

உதய் பக்கம் திரும்பி, “மொத்த கம்பெனியையும் தலைல தூக்கி நிறுத்துற மாதிரி எண்ணம் தானே உனக்கு? அறுவது வயசானாலும் இந்த மாதிரி இன்னும் பத்து ஆபீஸ் வேலைய கூட என்னால பாக்க முடியும் டா. இனிமேலும் உன்ன அசட்டையா நம்பி என்னால ஏமாற முடியாது. அபீசியலா இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்கு நீயா இந்த சி.ஈ.ஓ போஸ்ட்ல இருந்து போகுறேன்னு மெயில் போடணும். உனக்கு ஒரு மாசம் எல்லாம் நோட்டீஸ் பீரியட் குடுக்க முடியாது. ஒரே வாரம். அப்றம் பொறுப்பையும் நான் பாத்துக்குறேன்... இன்னைல இருந்து ஏழாவது நாள் என் கைக்கு கம்பெனி கணக்கு வேணும்”

ரகுநந்தன் பேசியவை அத்தனையையும் கேட்ட நளினியின் கண்களிலிருந்து நிற்காமல் நீர் வடிந்தது, “நீங்க பண்றது ரொம்ப பெரிய தப்பு மாமா”

நளினியை திரும்பி முறைத்த ரகுநந்தன், “இத்தனை நாள் எப்படி வீட்டுக்கு வராம இருந்தானோ அதே மாதிரி இனியும் இருக்க சொல்லு”

உதய்யை இயன்றமட்டும் முறைத்தவர் வேகமாக வெளியேறிவிட அவர் பின்னே விஷ்ணுவும் திருப்தியுடன் சென்றான். ஜெயநந்தனுக்கு சகோதரனை எதிர்த்து பேச முடியவில்லை ஆனால் அவர் முடிவும் பிடிக்கவுமில்லை. அழுதுகொண்டிருந்த நளினியை அழைத்து சென்றுவிட்டார்.

செல்லும் உறவுகளை பார்த்தவாறே இறுகி போய் நின்றிருந்த உதய் தோளில் ஆறுதலாய் பதிந்தது செந்தமிழரசன் கைகள், “உதய்...”

அவர் பக்கம் திரும்பி வம்படியாக புன்னகையை வரவழைத்தவன், “ரொம்ப நாள் கழிச்சு எந்த விதமான ப்ரஷர் இல்லாம இருக்க போறேன்... நிம்மதியா இருக்கு மாமா” எப்படி தான் இவ்வளவு வேதனையையும் சிரிப்பில் மறைகிறான் என்று வியந்தார் அவர்.

“வரேன் மாமா... வரேன் அத்தை” வெளியில் வந்தவன் ஜெயனின் பார்வையை தவிர்த்து, “ஹரியை வெளிய எடுக்க ஏற்பாடு பண்ணுங்க ஜெயன். அப்பாக்கு தேவையில்லாம அலைச்சல் வேணாம்” மீண்டும் அலுவலகம் தான் சென்றான். பிறகு இதுவல்லவா அவனுடைய வலியையும் கோபத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் ஒரே இடம்.


“நான் உங்கள மீட் பண்ணனும்... இப்பயே” அடுத்த குறுந்செய்தி இடத்தை குறித்திருந்தது.

“எதுக்கு இப்ப இவளுக்கு இவ்ளோ அவசரம்?” வியப்பாக மணிமேகலை அனுப்பிய செய்தியை பார்த்தவன் சகோதரி பக்கம் திரும்பி, “சஹானா சமச்சிட்டியாடா?”

“இல்ல ண்ணா. எங்கையாவது வெளிய கெளம்பிட்டியா? ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு சட்னி போடுறேன்” – சஹானா

“வேணாம்டா சமைக்காத. உன் அண்ணிய பாக்க போறோம் வா” – ஆதி “நீ போ ண்ணா, நான் எதுக்கு?” – சஹானா

“அட வாடா” கையேடு சகோதரியை அழைத்துக்கொண்டு மணிமேகலை அழைத்த இடத்திற்கு அரை மணி நேரத்தில் சென்றுவிட்டான்.

கடையை பார்த்ததும், “ண்ணா இந்த கடைய எப்படி கண்டு புடிச்ச?”

“நான் எங்கடா கண்டு புடிச்சேன். உன் அண்ணி தான் புதுசு புதுசா போய் சாப்டுட்டு சுத்துறா” – ஆதி

“அப்ப இனிமேல் வீக் எண்ட்ல நீ சமையல் கத்துக்கோ” – சஹானா

“அத பண்ண சொல்லி அவ ஆர்டர் போட்டு ரொம்ப நாள் ஆச்சு. என் தங்கச்சி சொல்லி குடுத்தா தாராளமா கத்துக்கலாம்”

சகோதரியுடன் பேசிக்கொண்டே உள்ளே சென்று அமர்ந்தான் ஆதி. இரண்டடுக்கு கட்டிடமதில் கீழ் தளம் பார்சல், கிட்சேன் மற்றும் பில் கவுண்டர் மட்டுமே இருந்தது. அதுவே விசாலமாக இருக்க, மேல் தளம் டைனிங் பண்ண பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு டேபிலிருந்து மற்றொரு டேபிள் இருக்கும் இடத்திற்கும் நல்ல இடைவேளை விட்டு ஆங்காங்கே அழகிய பூ செடிகளுடன் மேற்கூரை பாதியளவு மட்டுமே இருந்தது காற்றிற்கு அழகாய் வழி தந்தது.

“ஆம்பியன்ஸ் நல்லா இருக்கு ண்ணா” – சஹானா

“ஆமாடா...” என்றவன் வாசலை பார்த்து, “நம்மள வர சொல்லிட்டு இவ என்ன இன்னும் கானம்?” வாய்விட்டு புலம்பி அவள் எண்ணிற்கு அழைத்தான். அழைப்பு சென்றது ஆனால் பதில் இல்லை.

“வருவாங்க ண்ணா வெயிட் பண்ணு” ஆதியும் சரி என்று விட்டு விட்டான்.

“பைக் இன்னுமா ண்ணா வேலை முடியாம இருக்கு?” அவன் வண்டியை விற்றது இன்னும் சகோதரிக்கு தெரியாது.

“ஆமாடா கொஞ்சம் வேலை அதிகம். பொறுமையா வரட்டும்” சந்தேகம் வந்தது அவன் பதிலில்

எப்பொழுதும் சிறு வேலைக்கு கொடுத்தாலும் வண்டியை சென்று ஒரு நாளில் இரண்டு முறை பார்த்து வந்துவிடுவான்.

“உண்மையா வண்டிய வேலைக்கு தான் விட்ருக்கியா ண்ணா?” சகோதரனின் கண்களை பார்த்து சஹானா கேட்க, “சொல்றேண்டா...” உள்ளே சென்ற குரலில் நிறுத்திவிட்டான்.

கைபேசியில் வந்த குறுந்செய்தியை பார்த்தவன், “வந்துட்டா” என்று வாசலை நோக்கி திரும்ப வாடிய முகத்தோடு கண்கள், மூக்கு சிவக்க வந்து நின்றாள் அவன் மான்குட்டி.

எப்பொழுதும் சிரித்த முகத்தோடு வருபவள் வதனம் இன்று வாட்டம் காட்டியது. ஆனால் அது சஹானாவை பார்க்கும் வரை தான், சஹானாவை பார்த்ததும் மகிழ்ச்சி ரேகை படர சிறு பிள்ளை போல் வந்து ஆதியை சட்டைசெய்யாமல் சஹானா அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

“ஹாய் நீங்க வருவீங்கன்னு நான் எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல. தெறிஞ்சிருந்தா பெரிய சாக்லேட் ஒன்னு வாங்கி வந்துருப்பேன். இருங்க கீழ சாக்லேட் பாத்தேன் வாங்கிட்டு வர்றேன்”

எழுந்து செல்ல போனவளை ஆதி கை பிடித்தது, “ஒக்காரு மேகா” சஹானா அருகில் அமர்த்தினான்.

“அப்ப நீங்க போய் வாங்கிட்டு வரிங்களா நான் சஹானா கூட பேசிட்டு இருக்கேன்” தன்னுடைய பையை திறந்து ஐநூறு ரூபாய் தாளை அவன் முன் நீட்டினாள். மணிமேகலையை சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த சஹானாவிற்கு தன் சகோதரனின் வாழ்க்கை நிச்சயம் அழகாய் வண்ண மயமாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லாமல் இருந்தது.

“போறப்ப வாங்கிக்கலாம் மேகா” சற்று முன் வந்து அவள் மூக்கை தொட்டவன், “எதுக்கு இது சிவந்துருக்கு? அழுதியா?” ஆதி கேட்ட கேள்வியில் அவள் முகம் சட்டென வாடிவிட தலையை குனிந்துகொண்டாள் கண்ணீரை மறைக்க.

“அண்ணி என்ன ஆச்சு?” ஆதிக்கு மணிமேகலையின் கண்ணீர் தெரியவில்லை ஆனால் அவள் அருகில் அமர்ந்திருந்த சஹானாவிற்கு தெரிந்தது.

“மான்குட்டி...” அவள் கண்ணீரை காண சகிக்காதவன் வலியோடு அவளை அழைத்தான்.

தலையை இல்லை என்று ஆட்டி தன் கையை பற்றியிருந்த சஹானாவை பார்த்தவள், “அண்ணி சொல்லாதீங்க.. எனக்கு ஏஜ் ஆன மாதிரி இருக்கு” மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவள் பேசிய அழகில் ஆதி மீண்டும் சொக்கி தான் போனான். சஹானாவிற்குமே அவள் பேசியது சிரிப்பு வந்தது.

“எதுக்கு அழுதனு கேட்டேன்” – ஆதி

“உதய் மாமாக்கு கால் பண்ணி நேத்து நம்ம லவ் பண்ணத பத்தி சொன்னேன்” – மணிமேகலை

“அது தான் பூமி பூஜை போட்ட அன்னைக்கே அவன் பாத்துட்டானே அப்றம் ஏன் நீ வேற அவன்கிட்ட தனியா சொல்லனும்?” – ஆதி

முகத்தை தொங்கபோட்டவள், “வீட்டுல அப்பா ஏதோ டாக்டர் மாப்பிள்ளை பாத்துட்டாங்க” ஆதிக்கும் அது அதிர்ச்சி தகவல் தான்.

சஹானா ஆதியை பயத்தோடு பார்க்க கண்களை மூடி ஆறுதல் கூறியவன், “தப்பு பண்ணவங்க தான் தலை குனியனும் மேகா... நீ தப்பு பன்னிருந்தா அப்டியே இரு”

கண்களை துடைத்து அவன் வார்த்தைகளில் தலையை தூக்கி ஆதியை பார்த்தாள் மணிமேகலை, “உன் அப்பாகிட்ட வந்து பேசவா?”

“இல்ல பயமா இருக்கு... அதுக்கு தான் மாமாவை அப்பாகிட்ட பேச சொன்னேன். சரின்னு தான் சொன்னாங்க” – மணிமேகலை

இலகுவானான் ஆதி, நண்பனின் தலையீட்டை கேட்டு, “அப்றம் என்ன விடு. அவன் பாத்துக்குவான்”

மணிமேகலைக்கு கோவம் வந்தது, “என்ன பாத்துக்குவாங்க? அவங்க பாத்துகுடத்தை தான் நான் இன்னைக்கு காலைல பாத்தேனே. அவன் பண்றது சுத்த ப்ராடு வேலை... பேர கேட்டாலே எரிச்சலா வருது”

அவளை விட ஆதிக்கு அதிக கோவம் வந்தது நண்பனை பற்றி பேசியதும், “ஏய் பாத்து பேசுடி. பொது இடம்ன்ற காரணத்துனால தான் அமைதியா இருக்கேன் இல்லனா பல்ல ஒடச்சிருப்பேன். பேர கேட்டா எரிச்சலா வருதாம்ல...” பற்களை கடித்து பேசியவனை பார்த்து அழுகை பீறிட்டு வந்தது பெண்ணுக்கு.

“ண்ணா பொறுமையா பேசு” சகோதரனிடம் கெஞ்சினாள் சஹானா. “இவ பேசுறத கேட்டியா சஹானா? அவன் இவன்னு பேசுறா...”

ஆதியின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது, “இங்க பாருடி... அவன மதிச்சு மரியாதையா பேசுறதா இருந்தா என் கூட இரு. இல்லையா நீ என் வாழ்க்கைல இருந்ததா கூட மறந்துட்டு நான் போய்கிட்டே இருப்பேன். எனக்கு எல்லாரையும் விட அவன் தான் முக்கியம்” ஆதியின் அதிரடி கோவத்தில் மணிமேகலையின் கன்னம் நனைந்தது.

“அண்ணா நீ பேசுறது ரொம்ப தப்பு. சொல்றத பொறுமையா சொல்லு. ஒருத்தருக்காக இன்னொருத்தர இப்டி தூக்கி ஏறியிறது ரொம்ப தப்பு. என்ன நடந்துச்சுனு தெளிவா கேட்டு அப்றம் பேசு” சகோதரி பேசினாலும் ஆதியின் மனம் ஆறவில்லை மணிமேகலையின் பேச்சில், அமைதியாகிவிட்டான்... வேண்டும் என்றால் பேசட்டும் என்று.

“என்ன நடந்துருந்தாலும் அவ பேசுறது ரொம்ப தப்புடா” – ஆதி

சஹானா ஆதியை கண்களால் கெஞ்ச, பிறகு மணிமேகலை பக்கம் திரும்பி, “என்ன நடந்துச்சு அண்ணி?”

விசும்பல் குறையவில்லை சில நிமிடங்கள் பொறுத்து பார்த்த ஆதி அவள் பேசப்போவதில்லை என்று கோவமாக எழ, “என்ன அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க” மணிமேகலையின் வார்த்தையில் ஆதி அதிர்ச்சியாகிவிட அப்டியே மீண்டும் அமர்ந்தான்.

சஹானாவிற்குமே அதிர்ச்சி தான், உதையிடமிருந்து அவள் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ஆதியின் முகத்திலிருந்த கோவம் சென்று, முகத்தை மூடி அழுத அவன் மான்குட்டியை பார்த்து கனவு பிறந்தது. இருவருக்கும் இடைவேளை கொடுக்க எண்ணி ஒரு அழைப்பு வருவதாக கூறி எழுந்திட, சகோதரி இருந்த இடத்தில் சென்று ஆதி அமர்ந்தான்.

நிமிடங்கள் செல்ல அதிர்ச்சி கோவமாகியது... சகோதரர்கள் மீது தான் கை வைத்ததால் இவனும் சரிக்கு சரியாய் தன்னுடைய காதலில் கை வைத்திருக்கிறான் என்ற கோவம் அதிகமாக பற்களை கடித்து, “அறிவில்ல அவனுக்கு? நீ என்ன லவ் பண்றத தெரிஞ்சும் இப்டி பன்றான்?”

“அத தான் நானும் சொன்னேன்...” – மணிமேகலை

“இத தானே நீ முதல சொல்லணும்... வந்ததும் திட்டுனா என்ன நினைக்க தோணும்? இரு இன்னைக்கு போய் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு வர்றேன்... அவன் முகத்தை கிழிச்சு தொங்க விடல நான் ஆதி இல்ல”

ஆவேசமாக கையிலிருந்த காப்பை முறுக்கி எழுந்த ஆதியை பிடித்து அமர வைத்தாள், “கோவப் படாதீங்க... மாமா டைம் கேட்ருக்காங்க அப்பாட்ட... அதுக்குள்ள நானே அப்பாகிட்ட பேசுறேன்”

“இடியட், உலகத்துலையே தான் தான் அறிவாளி மாதிரி பேசுவான், ஆனா பாரு இது மாதிரி சில நேரம் லூசு மாதிரி பிஹேவ் பண்ணுவான். சரி உன்ன விடு, அந்த யாழினி பொண்ணு பத்தி கொஞ்சமாவது யோசிச்சானா... சாடிஸ்ட்” தன் வாக்கில் ஆதி திட்டிக்கொண்டே போனான்.

“அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல...” நேற்று உதய்யிடம் பேசியதை வைத்து தான் யூகித்ததை கூறினாள் மணிமேகலை.

“அதுக்கு நீயும் நானும் தான் அவனுக்கு கிடைச்சோமா? யோசிச்சாலே கோவம் தான் வருது... பழி வாங்குற விசயமா மேகா இது? என்ன அறிவுள்ள இப்டி பேசுறான் அவன்?” – ஆதி

அடுத்த நிமிடங்கள் அவன் எதுவும் பேசாமலிருக்க, முகத்தை துடைத்து ஆதியை பார்த்த மணிமேகலை, “சாரி” என்றாள்.

சிறிதும் ஈகோ இல்லாமல் செய்யாத தவறுக்கு தானே வந்து மன்னிப்பு வேண்டும் பெண் கிடைப்பதெல்லாம் ஏதோ ஒரு ஜென்மத்தில் தான் செய்த புண்ணியமாக எண்ணியவன், “மன்னிச்சுடு மேகா. நான் ரொம்ப கோவப்பட்டுட்டேன்” – ஆதி

“பரவால்ல... ஆனா மாமா அப்டி கேட்டதும் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” தலையை ஆட்டி ஆட்டி அவனிடம் பாவமாக கேட்டவளை என்ன சொல்வான் அவனும்?

“உங்க அப்பா பாத்த பையன் எந்த மாதிரி?” – ஆதி

“ஏதோ ஹாஸ்பிடல் வச்சிருக்காங்களாம். எந்த கெட்ட பழக்கமும் இல்லயாம். பாகவும் நல்லா இருப்பாங்களாம்” – மணிமேகலை

“உதய் கேட்டதுக்கு உன் அப்பா என்ன சொன்னாரு?” – ஆதி

“அப்பாக்கு மாமாவை என்ன விட அதிகமா புடிக்கும்” மணிமேகலை அவன் முகத்தை ஆர்வமாய் பார்த்தாள், ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டேன் என்
று கூறமாட்டானா என்ற ஆசையில்.

“அவன் என்ன பண்ணாலும் ஒரு காரணம் இருக்கும்னு ஒரு மனசு சின்னதா சொல்லுது ஆனா இதை ஏத்துக்கவும் முடியல... அவன்கிட்ட நான் இத எதிர் பாக்கல அவ்வளவு நம்புனேன் அவனை...” – ஆதி
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அவன் பதில் மணிமேகலைக்கு திருப்தியை தரவில்லை, “தன்னோட தம்பிய ஜெயில்க்கு அனுப்புனத்துக்கும் காரணம் இருக்கும்னு சொல்றிங்களா?”

ஆதி அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல், “ஏன் என்ன ஆச்சு விஷ்ணுக்கு?” கேட்டான் புதிதாய்.

“விஷ்ணு மாமாக்கு ஒன்னும் இல்ல. ஹரி மாமா ஜெயில்ல இருக்காங்களாம். தப்பு பண்ணலன்னு தெரிஞ்சும் ஹரி மாமாவை உதய் மாமா வெளிய எடுக்கலைனு விஷ்ணு மாமா ரொம்ப சண்டை போட்டாங்க” – மணிமேகலை

“இவனுக்கு இதே வேலையா போச்சு. சும்மாவா பாத்துட்டு இருந்த நாலு போடு போட்ருக்க வேண்டியது தானே?” தான் செய்த செயலுக்கு தேவையில்லாமல் நண்பன் பேச்சு வாங்கியது மனதை அரித்தது ஆதிக்கு.

“நான் தான் மாமா மேல கோவமா இருந்தேனே... ஆனா அதே நேரம் பெரிய மாமா, சின்ன மாமா, அத்தை எல்லாரும் இருந்தப்ப எப்படி நான் போட முடியும்?” – மணிமேகலை

“எல்லாரும் இருந்தும் அவன பேச விட்டு வேடிக்கை பாத்தாங்களா?” – ஆதி

“ஆமா... எனக்கு கஷ்டமா இருந்துச்சு ஆதி. விஷ்ணு மாமா ரொம்ப பேசுனாங்க. இதுக்கு எல்லாம் மேல பெரிய மாமா, உதய் மாமாவ ரிசைன் பண்ண சொல்லிட்டாங்க அதோட விட்ருந்தா கூட பரவால்ல இத்தனை வருஷம் இருந்த கணக்கு கேட்டாங்க” எதிரிலிருந்த மேஜையை அடித்து நொறுக்கும் ஆவேசம் உள்ளே ஊற்றெடுத்தது.

“என்ன மயிறு குடும்பம் இது? ரெண்டு விசியம் நடந்ததும் ஒடனே தூக்கி போடுவாங்களா? ஏன் கோடி கோடியா வீட்டுல கொட்டுனப்ப மட்டும் இனிச்சுசோ?” எதிரில் மட்டும் உதய்யின் வீட்டினர் இருந்தால் கோவத்தை எல்லாம் அவர்கள் முன்னால் கொட்டியிருப்பான்.

“அவன் என்ன சொன்னான்?” – ஆதி

“மாமா எதுவும் சொல்லல சிரிச்சிட்டே இனி நிம்மதியா இருக்க போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க” ஆதியின் ஆதங்கம் மணிமேகலைக்கு வந்தது, என்ன தவறு செய்திருந்தாலும் பெற்ற மகனை நம்பாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை. அப்டி என்ன ஆத்திரம் கண்ணை மறைத்தது?

“ஏன்டி எவ்வளவு மனசு கஷ்டப்படிருப்பான் அவன்... அவனையே வந்து ஒரே நாள்ல தூக்கி எரிஞ்சு பேசுற நீ? அப்ப உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” ஆதி கேட்ட கேள்வியில் மணிமேகலை மனம் கூனி குறுகியது.

“காதலுக்கு மட்டும் இல்ல, உறவுகளுக்குள்ளையும் நம்பிக்கை ரொம்ப முக்கியம்... இதெல்லாம் என்னைக்கு புரிஞ்சுக்க போறீங்க?”

இப்பொழுதே சென்று உதய்யை பார்த்து அவன் அருகில் சில நொடிகள் அமர தோன்றியது, அதுவே போதும் உதய்க்கு... ஒரு தைரியம் அவனுள் நிச்சயம் வந்துவிடும். ஆனால் தான் செய்த தவறினால் நண்பன் அத்தனை மனிதர்கள் இருக்கும் முன் சிறுவனிடம் பேச்சு வாங்கியது தன் மீது மட்டுமே ஆத்திரத்தை கொடுத்தது ஆதிக்கு.

“இப்ப இருக்குற நிலமைல கண்டிப்பா உன் கல்யாணம் பத்தி உன் அப்பா பேச மாட்டாரு. நான் கிளம்புறேன்” இருக்கையிலிருந்து ஆதி எழுந்தான்.

அவன் மேல் தவறு இருந்தாலும் அவன் கையை பிடித்து அமர வைத்தவள் அவன் திமிர திமிர பொருட்படுத்தாமல் அவன் தோளில் சாய்ந்து, “எனக்கு உதய் மாமாவை ரொம்ப புடிக்கும்... அப்பா அம்மா அப்றம் உதய் மாமா தான். சொல்ல போனா ஒரு அண்ணன் மாதிரி. அது தான் அவங்க அப்டி கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. அதையும் தாண்டி உங்கள தவற யாரையும் என்னோட ஹஸ்பன்ட் இடத்துல வச்சு பாக்க கூட கஷ்டமா இருக்கு. நீங்களும் அத புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்க”

அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்து ஆதியின் மனதையும் கரைத்தது. பின்னால் திரும்பி சகோதரியை பார்த்தான், சஹானா கைபேசியில் மூழ்கியிருக்க தன் தோளில் சாய்ந்து கரையும் குழந்தையின் தோளோடு கை போட்டு, “சரி கோவத்துல பேசிட்டேன். சாரி சொல்றேன்” என்றான் மெதுவாக.

அவளோ வீம்பாக, “வேணாம் சும்மா சொல்லுவீங்க நீங்க” என்றாள்.

“இல்ல, சிவந்துருக்க மான்குட்டியோட மூக்கை பாத்தா எனக்கே கஷ்டமா இருக்கு”

அவன் தோளிலிருந்து எழுந்தவள் மூக்கை துடைத்து, “அப்டியா சிவந்துருக்கு?” மொத்தமும் மறந்து பெண்.

“ம்ம்ம்” ரசனையை அவன் கண்கள் அவள் காதுகளுக்கு சென்றது, “எங்க ஜிமிக்கி கானம்?”

“அவசரத்துல மறந்துட்டேன்” ஆதி நீட்டிய கைக்குட்டையை வாங்கி முகத்தை துடைத்தாள். சாதாரண கம்மல் அது மாங்காய் டிசைனில் அழகாக தான் இருந்தது.

“நல்லா தான் மேகா இருக்கு... சூடா இருக்குற மாமனை குளிர வக்கிறியா?” சரி சரி என்று தலையை ஆட்டியவள் தண்ணீரை அருந்தி, “ம்ம்ம் போறப்ப உதய் மாமாகிட்ட போய் சாரி கேட்டுக்குறேன்” என்றாள்.

அவள் பதிலில் தலையில் அடித்து கொண்ட ஆதி, தன்னுடைய மான்குட்டியை தன்னோடு இன்னும் அருகில் இழுத்தான், “அந்த மாமனை இல்ல மான்குட்டி. இந்த மாமனை”

ஆசை பொங்கவா வந்தது அவன் குரல்? சிறு பிள்ளை போல் விளையாட்டாக தான் வந்தது. அதிலும் அர்த்தம் புரிந்த அவன் மேகா வெட்க்கம்கொண்டு, “தப்பா பேசாதீங்க... சாமி கண்ண குத்திடும்” அவன் கன்னம் தட்டி செல்லமாக மிரட்டினாள்.

“சாமிகிட்ட நான் பேசி சமாளிச்சிக்குறேன்... நச்சுனு ஒன்னு குடு பாப்போம்” பெரிதாக எல்லாம் கேட்கவில்லை அவன், கன்னத்தில் தான் கேட்டான்.

“மாட்டேன்... மாட்டவே மாட்டேன்” – மணிமேகலை

“நீ பாரின் ரிட்ர்ன் தான?” – ஆதி

“ஆமா... பாரின்ல இருந்தா கிஸ் பண்றது எல்லாம் ஈஸியா ஆகிடுமா?” – மணிமேகலை

“மேகா...” – ஆதி

“மாட்டேன்” – மணிமேகலை

“மான்குட்டி...”

அவன் கெஞ்சல் மொழிகள் அவளிடம் வேலைசெய்யவில்லை, “மாட்டேன்” என்றாள் அழுத்தமாக.

“குடுக்க போறியா இல்லையாடி?” சற்று குரலை உயர்த்தினான் ஆதி.

தன்னுடைய தோளில் இருந்த அவன் கையை எடுத்து விட்டவள், இடைவேளை விட்டு அமர்ந்து அசராத பார்வையோடு, “முடியாது டா... என்னடா பண்ணுவ?” அதிகாரமாய் பேசிய அவள் குழந்தை பேச்சும் அவனை கட்டிப்போட்டு நிறுத்தியது.

“தைரியம் அதிகமாகிடுச்சு ம்ம்ம்?” சிரிப்போடு பார்த்தவன் விலகி அமர்ந்தான், “பாத்துக்குறேன் கல்யாணம் ஆகட்டும்” என்றான்.

எழுந்தவள், “நல்லா பாத்துக்கோங்க கண் கலங்காம பாத்துக்கோங்க... யார் வேணாம்னு சொன்னா” விஷம சிரிப்போடு ஆதியின் பதிலை எதிர் பாராமல் சஹானா இருந்த இடம் நோக்கி ஓடிவிட்டாள்.

அடுத்த நிமிடங்கள் உணவை உண்பதில் கரைய, கல்லூரி வேலையாக இருப்பதாக கூறி ஜோடி புறாக்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தாள்.

மணிமேகலை பேசியதையும், சகோதரனின் சோகமான முகத்தையும் எண்ணிக்கொண்டே ஆதவன் வர கூறியிருந்த இடத்திற்கு பேருந்திலிருந்து இறங்கி நடைபாதையில் நடந்துகொண்டிருந்த பொழுது எதிர்புறம் ஒரு பெரிய திரைகள் போட்டிருந்த காலி மனைக்கு வெளியில் இருந்த உதய்யின் வாகனத்தை பார்த்தவள் அதே இடத்தில் நின்று வேகமாக ஆதவனுக்கு தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி பிறகு சந்திக்கலாம் என்று குறுந்செய்தி அனுப்பிவிட்டு சாலையை கடந்து சென்ற நேரம் சரியாக சிலருடன் பேசிக்கொண்டே வெளியே வந்த உதய் சஹானா தன்னை பார்ப்பதை உணர்ந்து வேகமாக பேசி அவர்களிடமிருந்து விடைப்பெற்றவன் சஹானாவிடம் சென்றான் ஜெயனை கூட தள்ளியே நிறுத்தி வைத்தான்.

“கார்ல ஒக்காரு சஹானா, ஏதாவது ஹோட்டல்ல...” எதுவும் பேசாமல் கையை நிறுத்தி உதய்யை தடுத்தவள் செயல் உதய்க்கு பலத்த அடியை தந்தது.

“ஏன் இப்டி பண்ணீங்க?” என்றாள் கர கரத்த குரலில்.

உதய்க்கு புரியவில்லை, “என்ன சஹானா கேக்குற எனக்கு புரியல...” – உதய்

“என் அண்ணனோட லைப்ப ஏன் இப்டி பாழாக்குறிங்க? அவன் நிம்மதியா இருந்தா உங்களுக்கு புடிக்காதா?” – சஹானா

“யார் உன்கிட்ட அப்டி சொன்னது?” என்றான் சிரிப்புடன்.

“அவன் அவனுக்குன்னு எது வர எதுவுமே அதிகமா ஆசைப்பட்டது இல்ல ஆனா முதல் தடவ மணிமேகலை அண்ணி மேல அவனுக்கு ரொம்ப ஆசை” புரிந்துபோனது உதய்க்கு.

“எல்லாமே நல்லதுக்கு தான் சஹானா... விடு பாத்துக்கலாம்” என்றான் இலகுவாக.

“நீங்க முன்னாடி இருந்த மாதிரி இப்ப இல்ல... ரொம்ப தப்பு பண்றீங்க. அப்பா பேர கெடுத்துவிட்டீங்க, அண்ணா புட்பால் விளையாட விடாம பண்ணிட்டீங்க, இப்ப இது”

கண்களில் சகோதரனின் நிலையை எண்ணி கண்ணீர் அதிகம் வந்தது... மணிமேகலை பேசியதை முழுதாக கேட்டிருந்தால் கூட அவன் மனதை காயப்படுத்தியிருக்க மாட்டாள்.

அவள் பேசியதை அமைதியாக கேட்டான், “நீங்க இவ்ளோ பண்ணிருக்கீங்கனு தெரிஞ்சும் அண்ணன் இப்பயும் உங்களுக்கு சப்போர்ட் தான் பன்றான். அவனுக்குன்னு ஒரு பேமிலி அமையிறது கூட உங்களுக்கு புடிக்க மாட்டிக்கிது. உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் அதெல்லாம் இப்ப சுத்தமா போச்சு உதய் அண்ணா”

கை எடுத்து கும்பிட்டவள், கோவமாக, “எங்களை விட்டுடுங்க...” அவள் கையை உதய் கோவமாக தட்டிவிட்டான்.

“உன் அண்ணன் லைப்ப நான் என்னைக்கும் கெடுக்க நினைச்சது இல்ல சஹானா” கோவமாக உதய் கர்ஜிக்க, அந்த நேரம் சஹானாவின் குறுந்செய்தியை பார்க்காத ஆதவன் சரியாக உதய் சஹானாவிடம் பேசுவதை பார்த்து வாகனத்தை கூட்ட நெரிசல் காரணமாக நிறுத்தவேண்டி வந்தது.

“அப்டி இல்லனா இனிமேல் அவன் லைப்ல வராதீங்க... தம்பியாவே ஜெயில்க்கு அனுப்புனவங்க என்னோட அண்ணனை எதுவும் பண்ண தயங்க மாட்டீங்க”

அவனை விட கோவமாக பேசியவள் அவ்விடத்தை விட்டு நடந்தே சென்றுவிட, அவள் பேசிய வார்த்தைகளில், ‘இந்த பெண்ணிடமும் நம்பிக்கையை இழந்து விட்டோமே’ என்ற ஆத்திரத்தில் ஓங்கி காலால் டயரை ஏந்தியவன் ஓங்கி வாகனத்தின் மேல் பகுதியிலும் குத்தினான். என்ன வாழ்க்கை இது இத்தனை சிக்கல்கள், இத்தனை அடிகள்...

உதய்யின் கோவம் உணர்ந்து ஜெயன் வாகனத்தை உயிர்ப்பிக்க உள்ளே ஏறி அமரும் முன் கைபேசியில் இவருக்கோ அளித்தவன் தீவிரமாக சில கட்டளைகளை வழங்கி காரினுள் அமர்ந்துகொண்டான்.

தான் அழைக்க அழைக்க செல்லும் சஹானாவையும், சஹானாவை பார்த்து கோவமாக பேசும் உதய்யையும் பார்த்த ஆதவன் வாகன நெரிசலில் இருந்து விடுபட்டு வண்டியை திரும்பி வரும் பொழுது உதய்யின் வாகனமும் இல்லாமல் போக, சஹானாவை பார்க்க விரைந்தவன் கண்கள் முன் தொலைவில் வேகமாக சென்றுகொண்டிருந்த சஹானாவை மின்னல் வேகத்தில் வந்த வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவன் கத்தி கொண்டு வயிற்றிலே குத்தினான்.

அந்த செயலை பார்த்த ஆதவன் மனம் சேத்து மடிந்தது, “சஹானா...” காரினுள் இருந்து கத்தியவன் வேகத்தை கூட்டி செல்ல, அதற்குள் அதே வாகனம் சஹானாவை பலம் கொண்டு தாக்கியதில் சில அடி தூரம் சென்று நடைபாதையின் விளிம்பில் பலமாக மோதி உடல் மொத்தமும் ரத்தம் வழிய மயங்கியிருந்தாள்.

நொடியில் நடந்த காரியத்தை சிறிதும் எதிர்பார்க்காத ஆதவன் இறங்கி ஓடி வந்து சஹானாவை அடையும் பொழுது வயிற்றில் ரத்தம், கால் ஒன்று எக்குத்தப்பாக மடங்கிகிடைக்க, தலையிலிருந்தும் ரத்தம் வழிந்தோடியது... துணையை கண்ணீர் வழிய பார்த்தவன் மொத்தமும் ஸதம்பித்துப்போக சில நொடிகள் பிறகே கதறிக்கொண்டே அவள் உடலை கையில் ஏந்தி வாகனத்தில் படுத்த வைத்தவன் கை கால்கள் மொத்தமும் நடுங்கியது அவள் இல்லாத அவன் எதிர்காலத்தை எண்ணி.

துரிதமாக ஆதவன் வாகனத்திலிருந்த பர்ஸ்ட் எய்ட் கிட்டிலிருந்த காட்டன் வைத்து அவள் ரத்த போக்கை இறுக்கமாக கட்டி நிறுத்திய பிறகு தான் மருத்துவமனை வரைந்தான். செல்லும் வழியிலேயே தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவருக்கு அழைத்தவன், அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கலாமா என்று கேட்டு சேர்த்த பிறகே ஆதிக்கு, தமிழுக்கும் தகவல் கொடுத்திருந்தான்.

சகோதரி சென்றதும் இன்னும் சிறிது நேரம் மணிமேகலைக்கு ஆறுதல் கூறும் சாக்கில் அவளுடன் பேச அமர்ந்துவிட அப்பொழுது எங்கோ கேட்ட குரல் போல் இருந்ததென்று திரும்பிய ஆதி நிச்சயம் யாழினியை அங்கு எதிர்பார்க்கவில்லை. சிவப்பு நிற டீ-ஷர்ட், தளர்வான ப்ளூ ஜீன்ஸ் போட்டு கருப்பு நிற அப்ரான் இடுப்பில் கட்டியிருக்க தலையிலும் கைகளிலும் க்லவ்ஸ் என பார்த்ததுமே புரிந்தது, இந்த உணவகத்தில் தான் அவள் பணிபுரிகிறாள் என்று.

தன்னிடம் ஏதோ கதை கூறிக்கொண்டு சிரித்திருந்த மணிமேகலையை மறந்து யாழினி இருக்கும் திசையில் சென்றவன் அவள் தன்னை பார்க்காதது கூட பொருட்படுத்தாமல் கையை பிடித்து தாங்கள் அமர்ந்திருந்த மேஜை இழுத்து வர, அவன் திடீர் தாக்குதலில் அவன் யார் என்றே புரியாத யாழினி, மணிமேகலையை பார்த்து தான் அமைதியானாள். ஆனால் அவள் சிறிது தெரிந்த ஆதியின் முகத்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

“லெக் பீஸ் திருடா... கைய விடுயா” என்றாள் சுற்றமும் பார்த்து. அவன் கேட்பானா? ஒரு நாற்காலியில் அமர வைத்தவன் அவள் அருகிலே அவள் எழாதவாறு தானும் அமர்ந்தான்.

“ஏங்க நீங்க ஏன் இந்த லூசு கூட ஒக்காந்துருக்கீங்க? இவன் சரியான கிறுக்கு. எவ்ளோ ஒர்க் பண்ணாரு தெரியுமா உங்க மாமா அந்த ப்ராஜெக்ட்க்கு... அஞ்சே அஞ்சு நிமிஷம் தான். வெறும் அஞ்சு நிமிஷம் தான் மொத்தமா சொதப்பி விட்டுட்டான். அந்த மனுஷர் படுற கஷ்டம் தெரியுமா யா உனக்கு? சாப்புட மாட்டாரு காலைல, மதியம் முக்கால்வாசி நேரம் மீட்டிங் இருக்குன்னு சாப்புட மாட்டாரு.

ரெண்டு நேரம் ஜூஸ்... மதிய சாப்பாடு நேரம் ஆறு மணி தான். நைட் ஒம்போது பத்து மணி ஆகும் வீட்டுக்கு போக... இதெல்லாம் பிஸ்னஸ் மேல இருக்க பிரியத்துல செஞ்சாலும் வீட்டுல தனியா இருக்க முடியாம தன்னோட தலைல தானே போட்டுக்கிட்ட பாரம். அந்த ஒரு ப்ராஜெக்ட் அவரோட அப்பா நம்பிக்கயவே கொன்னுடுச்சு” இப்பொழுதும் அன்று அவன் தன் மடி சாய்ந்து அழுதது அவள் நினைவலையில் பசுமையாக உள்ளது.

“ஏய் கிழவி பேச்ச நிறுத்து” ஆதி அதட்டியதில் விழி மிரண்டு விழித்தவள் அமைதியாகிவிட்டாள்.

“இவ்ளோ பேசுறியே அவன் மனச புரிஞ்சுக்காம எதுக்கு வேலைய விட்டு இங்க வந்து இருக்க?” அவளை விட காட்டமாய் கேட்டான் ஆதி.

நண்பனின் மனதை தான் அன்றே படித்துவிட்டானே, “அது என்னோட இஷ்டம்” பார்வையை தவிர்த்தாள்.

“இந்த சம்மந்தமே இல்லாத பேச்ச விடு யாழினி... தெளிவா பதில் சொல்லு. உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை?” – ஆதி

“அவருக்கும் எனக்கும் என்ன இருந்துச்சுன்னு பிரச்னை வர போகுது? சம்பளம் பேசுனத அவர் தரல. வந்துட்டேன். அவ்ளோ தான்” – யாழினி

“அடிச்சு வாய கழட்டி குடுத்துடுவேன். நானும் அங்க தான் வேலை பாத்தேன்... சும்மா ஏதாவது கதை அளந்துட்டு இருக்காத”

ஆதியின் கோவம் ஏறியதை உணர்ந்த மணிமேகலை, “ஆதி ப்ளீஸ் பொறுமையா பேசுங்க” என்றாள்.

“பொறுமையா பேசுற மாதிரியா இவ பதில் சொல்றா? இந்த கெழவிய எங்க இருந்து தான் அந்த கிறுக்கன் புடிச்சானோ...” நண்பனை தான் அப்பொழுதும் திட்டினான் ஆதி.

அப்பொழுதும் தன்னை அவன் பரிகாசம் செய்ததை பெரிதுபடுத்தவில்லை அவள் ஆர்வம், “ஆமா உங்க ரெண்டு பேர்க்கு நடுல என்ன இருக்கு?”

“ஆஆ... இந்த டேபிள்” – ஆதி

“லவ் பண்றோம்” – மணிமேகலைக்கு வெட்கம்.

கைகளை தட்டி சிரித்தவள், “ஐ... சூப்பர்... நான் எதிர்பாக்கவே இல்ல...” அமர்ந்திருந்த இடத்திலே குதித்த யாழினியை பார்த்து மணிமேகலைக்கு மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.

“உங்க விசியம் கேட்டப்ப நானும் இப்டி தான் சந்தோஷப்பட்டேன் தெரியுமா? மாமா ரொம்ப நல்லவங்க, இவங்கள மாதிரி ஒரு கெட்ட பழக்கம் கூட இல்ல. ரொம்ப அறிவு...” மாமனை புகழ்த்திருந்தால் கூட பரவாயில்லை, இவளோ தன்னை இப்படி பாராட்டித்தழுகிறாளே என்ற எண்ணம், உதய்யை வேண்டாம் என்று வந்த பெண்ணோடு கதையளப்பது என்ன என்ற கோவமும் சேர்ந்து வந்தது.

“லூசு மேகா... அவ தான் உன் மாமனை வேணாம்னு சொல்லிட்டு இங்க வந்து வேலை பாக்குறா... இதுல நீ அவகிட்ட உன் மாமனுக்கு கேன்வாஸ் பண்ணிட்டு இருக்க?”

தன்னை திட்டிய ஆதிக்கு கண்களால் சமிக்கியை செய்த மணிமேகலை, “அவங்க ஏதாவது காரணம் இல்லாம இப்டி பண்ண மாட்டாங்க ஆதி”

யாழினி பக்கம் திரும்பி வாடியவளின் கைகளை பற்றினான், “என்ன பிரச்னை யாழினி? என்கிட்ட சொல்லலாம்ல?” என்றாள் பொறுமையாக.

அமைதியாக உள்ளத்தின் வார்த்தைகளை கட்டுப்படுத்தியவள், “எனக்கு வேலை இருக்கு”

எழப் போனவளை சிலையாக்கியது ஆதியின் வார்த்தை, “மணிமேகலையை அவன் கல்யாணம் பண்ணிக்க போறானாம்” துடித்துப்போனது அவள் இதயம். செய்தியை கேட்ட கண்கள் தன்னியறியாமல் நீர் சுரக்க அவள் கால்கள் துவண்டு நாற்காலியில் தடுமாறி அமர்ந்தாள். மனதில் இருந்த வலியை எப்படி விவரிக்கவென்று தெரியவில்லை...

“கண்டிப்பா உன்னோட ஏதோ ஒரு செயல் அவன ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கு யாழினி, இல்லனா நாங்க லவ் பண்றது தெரிஞ்சு அவன் இப்டி பண்ணிருக்க மாட்டான்” யாழினியை இங்கு பார்த்ததும் தான் ஏதோ புரிந்தது அவனுக்கு.

“இல்... இல்ல என்னோட வார்த்தை அவரை ஏன் பாதிக்கும்? எங்களுக்குள்ள எதுவும் இல்லங்க” என்றாள் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்று.

கோவத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்றவன், “எதுக்கு இவ்ளோ பிடிவாதம் உனக்கு? உன்னோட பிடிவாதத்துனால நாலுபேர் வாழ்க்கை கேள்விக்குறியா நிக்கிது யாழினி. அவனுக்கு உன் மேல எவ்ளோ இன்ட்ரஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சும் நீ இப்டி பேசுறது எனக்கு சுத்தமா புடிக்கல... யார் மனசையும் தெரிஞ்சே கஷ்டப்படுத்துற ஆள் அவன் இல்ல. அப்ப தப்பு உன் மேல தா...”

“பிளாக்மெயில் பன்றாங்க”

ஆதியின் வார்த்தையை குறுக்கிட்டு வந்தது அழுத யாழினியின் குரல், “என் தங்கச்சிய வச்சு, அவர் மாமா ஈஸ்வரன் பிளாக்மெயில் பன்றாங்க”

நகத்தை வைத்துக்கொண்டிருந்த அவள் கைகளிலிருந்து பார்வையை ஆதியிடம் திருப்பினாள் யாழினி, “அப்பாவை காட்டி மெரட்டுனப்ப கூட ஆனத பாருன்னு விட்டேன். ஆனா தங்கச்சிய வைச்சு அசிங்கமா மிரட்டுறப்ப என்ன பண்ண சொல்றிங்க? உங்க ப்ர்ன்ட் பக்கத்துல கூட போக கூடாதுனு சொல்றாங்க... ஒரு பொண்ணா நான் என்ன பண்ண முடியும்? காசு இருக்குறவங்க முன்னாடி என்னோட நம்பிக்கை ஒடஞ்சது” அழுகையோடு அவள் பேச எதுவும் அவள் மேல் தவறில்லை என்று புரிந்து அமைதியாய் இருந்தனர் இருவரும்.

“சாக்கடை அவன். அவனுக்கு பயந்த நீ, உதய்ட்ட ஒருவார்த்தை ஏன் யாழினி சொல்லல?” – ஆதி

“ஆமா யாழினி... நீங்க மாமாகிட்ட சொல்லிருந்தா அவங்க ஒரு சொல்யூஷன் கண்டுபுடிச்சிருப்பாங்க” மணிமேகலையும் உடன் சேர்ந்தாள்.

“போனேன் அடுத்த நாள். ஆனா அதுக்குள்ள ஈஸ்வரன் ஆளுங்க என்ன அனுப்பிவிட்டாங்க” – யாழினி

“நீயே உன் தலைல மண்ண அள்ளி போட்டுக்கிட்ட. இனியும் சொல்றதுக்கு ஒன்னுமில்ல”

எழுந்த ஆதி யாழினியை மீண்டும் ஒரு முறை பார்த்து, “சந்தோசம் நம்மள தேடி ஒரு தடவ தான் வரும் யாழினி. அத தக்கவச்சுக்குறவன் தான் புத்திசாலி. இனியும் உன்னோட தப்ப திருத்திக்கலாம். ஒடஞ்சு போயிருக்கான் உதய்” இறுதி வாக்கியத்தில் ஆதியின் குரலும் நடுங்கியது.

“கண்ணாடியை பாத்துருக்கீங்களா ஆதி?” அவன் பதிலை அவனுக்கே திருப்பி தந்த யாழினியின் முகத்தை பார்க்காமல் வாசல் நோக்கி சென்றவனை பின்தொடர்ந்தாள் மணிமேகலை.

மணிமேகலையை அனுப்பி வைத்தவன் தன்னுடைய அலுவலகம் நோக்கி பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பொழுது ஆதவனிடமிருந்து தகவல் வர அடித்து பிடித்து மருத்துவமனை வர ஸதம்பித்து அமர்ந்துவிட்டான் ஆதவனிடம் பேசிக்கொண்டிருந்த மருத்துவரின் வார்த்தைகளின் தாக்கத்தில்.

“தலைல ஹேவி டாமேஜ்... ஸ்கல் லெப்ட் சைடுல கிராக் விழுந்துருக்கு... ரைட் ஹாண்ட் ப்ராக்சர், லெப்ட் ஹாண்ட்ல தசை பிளவு, கத்தி காயத்துல பிளட் லாஸ் அதிகமா இருக்கு. டோனர் ஏற்பாடு பண்ணுங்க வேகமா... ரைட் லெக் அதிகமா அடிபட்ருக்கு, சொல்ல முடியாது அந்த கால்ல எவ்ளோ பெரிய இஸ்யூ வரவும் வாய்ப்பு அதிகம் இருக்கு. மேலோட்டமா பாத்தது இது எல்லாம்... கம்ப்ளீட் பாடிய ஸ்கேன் பண்ணிட்டு தான் முழுசா சொல்ல முடியும் ஆதவன். ஒரே ஒரு நல்ல விசியம், கர்பப்பைல எந்த காயமும் ஏற்படல. உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்ல... தைரியமா இருங்க”

அதோடு சிலையாய் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்த்துவிட்டனர். தமிழின் மொத்த குடும்பமும் அங்கே வந்துவிட அந்த இடத்தில் நிற்க தாளாமல் மருத்துவமனை விட்டு வழிந்த கண்ணீரை துடைத்து வெளியேறிவிட்டான்.

ஆதவன் வெளியில் சென்று சில நிமிடங்களில் விடயம் கேள்வியுற்ற உதய் வேகமாக அங்கு வந்தவன், சுவற்றை வெறித்து அமர்ந்திருந்த ஆதியின் இறுகிய தோற்றத்தில் பாவமாய் இருந்தாலும் உள்ளே நடந்துகொண்டிருந்த அறுவை சிகிச்சை தந்த பயத்தில் நிற்க ஆதியின் அருகில் சென்று அமர்ந்து அவன் தோளில் கை போட்டு, “ஆதி” என்று அழைத்தான்.

அவ்வளவு தான், அடங்கியிருந்த கண்ணீரில் ஒன்று வெளிவர, கண்களை சுவற்றிலிருந்து திருப்பவில்லை ஆதி. அவனுடைய ஒரே ஒரு சொந்தம் உடலெங்கும் கட்டுண்டு கிடக்க, இதயம் நெருப்பில் சுட்டது.

“ஆதி தைரியமா இருடா... ஒன்னுமில்ல” என்றவன் தன்னுடைய கைபேசியை எடுத்து ஆதியின் அருகிலே அமர்ந்து ஜெயனிடம் மருத்துவரை பார்த்த கூறி, தேவையான அத்தனை உலகின் முன்னனி மருத்துவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்திருந்தான்.

நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய் கடக்க, சஹானா மருத்துவமனை அடைந்து ஐந்து மணி நேரம் ஆகியிருந்தது.

உதய் ஆதவனுக்கு பல முறை அளித்தும் பதில்வராமல் போக, சில நிமிடங்கள் நண்பனை தனிமையைவிட முடிவெடுத்து விட்டான்.

வந்தான் ஆதவன் அடுத்த சில நிமிடங்களில் ரௌத்திரனை போல். முகம் எல்லாம் கோவத்தோடு சிவந்து வந்த ஆதவன் நேராக சென்று உதய்யின் சட்டையை பற்றி எழுந்து நிறுத்தியவன், “எதுக்குடா என் சஹானாவ இப்டி பண்ண?”

அழுகையோடு கேட்ட நண்பனி
ன் கேள்வியில் எத்தனை முறை மரணித்தான் என்ற கணக்கு இல்லாமல் போனது உதய்க்கு. உயிர் வடிந்த பார்வையோடு பேச மறந்து நின்ற உதய் மேல், நண்பனுக்கு இரக்கம் இல்லாமல் போக அவன் கை உதய்யின் கன்னத்தை பதம் பார்த்தது.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
This is too much அப்படி என்ன உதய் தப்பு பண்ண CEO post resign பண்ண சொல்லுறுக ஆமா உதய் இனி நீ இந்த family பத்தி யோசிக்காம சந்தோசமா இரு😲
விஷ்ணு வார்த்தை பாத்து பேசு என்ன ரொம்ப ஓவர் தான் போற😡😡 நளினி அம்மா சொல்லுறது சரி தான் அவன் உன்னோட அண்ணன் நீங்க நல்ல இருக்கணும் தான் ஹரியா ஜெயில் லா கொஞ்ச நேரம் விட்டு வந்தான்😔😔
மணி உன்னோட ஆதி டா சொல்லு எல்லாம் சரி ஆகும் மான் குட்டி cute ❤️❤️என்ன ஆதி உதய் மணி திட்டிட கோவம் வருது உன்னோட மான் குட்டி மேல 😂😂இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி revenge பண்ணுக லூசு😐😐
மேகா ஆதி கிட்ட சொல்லிட feel பண்ணாத ஆமா ஆதி நீ பண்ண உதய் பண்ணத நம்பிடக 😖😖
யாழினி மணி சொன்ன மாறி உதய் கிட்ட ஈஸ்வரன் மாமா சொல்லு இருக்கலாம் இப்போ time இருக்கு ஆதி சொன்ன மாறி சொல்லிட்டு வா உதய் கிட்ட 🥺
கண்ணாடி உடைத்தால் மறுபடியும் ஒட்ட முடியாது 🙊
சஹானா உதய் கிட்ட என் இப்படி கோவமா பேசுற அவன் பாவம் நீ மணி சொன்னத முழுசா கேக்கல உதய் சுத்தமா உடைஞ்சு போயட்டான்💔
Ayoo சஹானாவா யாரு இப்படி பண்ண அவ என்ன பண்ண ஒரு குழந்தை எப்படிடா உங்களுக்கு மனசு வந்து இருக்கு😭😭 இதுல ஆதவன் வேற கோவமா பேசுனா உதய் சஹானா பாத்து அடுத்து இப்படி நடந்து இருக்கு😢
ஆதவன் பாக்க கஷ்டமா இருக்கு அவன் உயிர் சஹானா ஒரு பக்கம் ஆதி ஒரு பக்கம் இதோ உதய் வந்ததுடன் ஆதியா பாக்க யாரும் கவலைபடாம இருங்க சஹானாக்கு எதுவும் ஆகாது
ஆதவா நீயும்மா உதய் இப்படி பண்ணி இருப்பேன் நினைக்கிற அவனா அடிக்காத கோபத்துல என்ன பண்றோம் தெரியல உன்னோட சஹானா வருவா அவன் உன்னோட ப்ரெண்ட் தான எல்லாம் உன்கிட்ட தான சொல்லுவான் நீ இப்படி கேட்ட அவன் என்ன பண்ணுவான் எனக்கு கஷ்டமா இருக்கு இப்படி friends சண்டை போடுறதா பாக்க முடியல 💔💔💔🥺🥺
 
Last edited:
Top