• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 29 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
chap - 29




"ண்ணே பயமா இருக்கு..." பட படத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை அந்த விலையுயர்ந்த வாகனத்தையும், உள்ளே உல்லாசமாய் உலாவிக்கொண்டிருந்த ஹரி, விஷ்ணு இருவரின் முகத்தை பீதியோடு பார்த்தான் அவன். இயற்பெயர் வணங்காமுடி பாண்டியன்.

ஆனால் அவன் வசனங்களை சிறிதும் சட்டை செய்யாமல் ஹரி, விஷ்ணுவின் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஹூட் மீது ஷூ காலுடன் அமர்ந்து மும்முரமாக கைபேசியில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான்.

"ண்ணே உன்ன தான்... கேக்குதா?" ஆதியின் தொடையை சுரண்டி கேட்டான் அந்த இளைஞன்.

"பயமா இருந்த சொவத்துல முட்டு டா நாயே... ஐயோ அய்யய்யய்யோ..." ஆத்திரமாக எழுந்தவன் அந்த இளைஞனை மண்டையிலே வலி தாங்க முடியாத அளவிற்கு நான்கு அடியை வைத்தான்.

"சும்மா இருக்க மாட்ட? ஆஹ்? முக்கியமான மேட்ச் போட போறேன்னு சொல்லிட்டு தானடா போனேன்" என்ன தான் இந்த ஆண்களுக்கு இந்த விளையாட்டின் மீது அப்படியொரு மோகம் என்று தெரியவில்லை.

சஹானா கூற இரண்டொரு முறை கேட்டாலும், "அது ஒரு போதை டா" என்று ரசனையாய் கூறுபவனை சிரிப்போடு கடந்துவிடுவாள் சகோதரி.

முகத்தை சுருக்கி வலியை கட்டுப்படுத்தியவன், "போ நான் போறேன். நீ என்ன ரொம்ப தான் திட்டுற" வாசலை நோக்கி வேகமாய் நகர்த்தவனை எட்டி கையை பிடித்து, "டேய் மயிறு பாண்டியா... நில்லுடா"

விருட்டென திரும்பியவன், "ண்ணா... என் பேர் கமல்காந்த்" ஆம் அவன் தனக்கு தானெ வைத்த புனைப் பெயர் கமல்காந்த்.

திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் மிகுந்தவன் சிறு சிறு திரைப்படங்களில் ஒரு நொடி இரண்டு நொடி வந்த தடயமே தெரியாமல் மறைந்துவிடுவான். எப்படியேனும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் கமல், ரஜினிகாந்த் பெயரை இணைத்து கமல்காந்த் என்று வைத்துக்கொண்டான்.

"சரிடா காந்தம்... கோவிச்சுக்காத ஏதோ ஒரு கோவத்துல கொட்டிட்டேன். இதுக்குலாமா கோவிச்சுப்பாங்க... வாடா வாடா" கமல்காந்த்தின் தோளில் கை போட்டு சமாதானப்படுத்தினான் ஆதி.

ஆனால் அவனோ இன்னும் விறைப்பாக, "நீ இப்ப இப்டி பேசுவ, அப்றம் மறுபடியும் அடிப்ப... வந்ததுல இருந்து கண்ணு முன்னாடி இருக்குற சரக்கு வாங்கி தரலானாலும் பரவால்ல ஒரு சோடா வாங்கி குடுத்துருக்கியா? மனசாட்சியே இல்ல ண்ணா உனக்கு. நீ மட்டும் வாட்ச் மேன ஐஸ் வச்சு டீ வாங்கி குடிச்சிட்ட. என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?"

இவன் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இல்லை பள்ளி சிறுவனா என்ற சந்தேகம் தான் வந்தது ஆதிக்கு... நடிக்க பயம், பேச பயம் என எதற்கு எடுத்தாலும் பயம் கொடண்டவன் கண்களே

"அண்ணே என்ன பண்ணாலும் உன் நல்லதுக்கு தான்டா பண்ணுவேன்" காலை தான் சந்தித்தது போல் அல்லாமல் ஏதோ பல காலம் முன்னரே சகோதரனாக தத்தெடுத்தது போலே பேசினான், "இன்னைக்கு மட்டும் காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டு வந்துடு அப்றம் இந்த பார்ல கோலாகலாமா ஒரு கொண்டாட்டத்தை வச்சிடலாம்"

ஆதியின் கையை தட்டிவிட காந்தம், "உன்ன நம்ப மாட்டேன் நீ பைசா செட்டில் பண்ணு நான் கிளம்புறேன்"

"முதல நான் குடுத்த அட்வான்ஸ் காசுக்கு ஒழுங்கா நடிடா என் டோமரு..." - ஆதி

"அந்த காசு பஸ் புடிச்சு இங்க வரவே சரியா போய்டுச்சு" அவனும் வீம்பாக தான் பேசினான் ஆனால் பயம் முகத்தில் கொட்டி கிடந்தது, "ண்ணா அவனுகள பாரேன்... நான் ஓசில கூட இவ்ளோ குடிக்க மாட்டேன் ண்ணா... நான் ஸ்டாப்பா அடிச்சிட்டே இருக்கானுங்க. என் கை காலுக்கு என்ன ஆனாலும் பரவால்ல இந்த முகத்தை மட்டும் எப்படியாவது காப்பாத்திடு" கதறினான் கமல்காந்த் பயத்தில்.

"நசுங்குன பழைய நால்ணா காசு மாதிரி இருக்குற மூஞ்சிக்கு இதெல்லாம் தேவையா கோபி" - ஆதி

"என் முகத்துக்கு என்ன குறைய கண்டுட்ட நீயி?" - கமல்காந்த்

"எல்லாமே குறையா தாண்டா இருக்கு. அதுக்கு மூஞ்சில அண்ணே கையாள ரெண்டு அபிஷேகம் பண்ணி விடுறேன். அங்க அங்க கிழிஞ்சு தொங்கிடும். அப்றம் உனக்கு புடிச்ச அஜித் விஜய் மாதிரி முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிடலாம். அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரு போலி டாக்டர் சீனால தான் இருக்கான்"

எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் ஆதி சீரியஸாய் பேச அதையே செய்துவிடலாமா என்ற ஆசையும் அந்த சிரியவனின் மனதில் ஒரு நொடி உதிக்க பிறகு தான் போலி டாக்டர் என்னும் வார்த்தையில் உஷாரானான்.

"நீ என்ன சப்ப ஆளுன்னு தானே என்ன நெனச்ச. எனக்கு வெளிய ஒரு ரசிகர் மன்றமே இருக்கு. இப்ப கூட ஒரு மெசேஜ் தட்டுனா போதும், இங்க ஒரு கலவரமே நடக்கும் பாத்துக்க" - கமல்காந்த்

"இப்டியே கிணத்துக்குள்ள விழுந்த மாடு மாதிரி கத்திட்டே இரு, நான் வேற ஆள பாத்துக்குறேன்" இப்பொழுது கையை பிடித்து நிறுத்துவது கமல்காந்த்தின் வேலையாகியது.

"ண்ணா ண்ணா என்ன அவசரம், அடுத்த வாரம் ஒரு படத்துல நான் பேச போற ஸ்கிரிப்ட் அது. சொல்லி பாத்தேன் அவ்ளோ தான்" அருமையாக சமாளித்தவனை ஆதி கேவலமாக பார்க்க கேவலமான பாவ முகத்துடன் காந்தம் ஆதியை கெஞ்சினான்.

"சரி, ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வர்றியா?" - ஆதி மனதில் ஒரு பக்கம் தான் செய்வது தவறு என்று புரிய ஏதோ புகையாவது சற்று ஆசுவாசப்படுத்துமா என்ற எண்ணத்தோடு தான் கேள்வி எழுப்பினான்.

"உனக்கு வேணும்னா நீ போய் வாங்கு, அதெல்லாம் நான் தொட்டு கூட பாக்க மாட்டேன்" - கமல்காந்த்

"என்னடா காந்தம்... இந்த காலத்துல இப்டி ஒரு புள்ளையா?" ஆச்சிரியமாக பேசிய ஆதி அவன் தோளில் மீண்டும் கை போட்டு தன் அருகே இழுத்தவன் மீண்டும் ஹரி, விஷ்ணுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

"ண்ணா கோடு விழுந்துட போகுது ண்ணா... நீ வேற ஷூ காலோட அப்டியே நிக்கிற" என்றான் கோவத்தை காட்டி.

"உங்கப்பன் வீட்டு சொத்தா இந்த துள்ளு துள்ளுற" ஓங்கி ஒரு மிதி காரில் வேண்டும் என்றே மிதித்தவன், "அப்டி தான்டா நான் மிதிப்பேன் சனியன்புடிச்சவன்" என்றான் ஆதி கமல்காந்த்தின் கழுத்தில் இறுக்கம் கூட்டி.

"ஒன்னும் பண்ண மாட்டேன். சொன்னா கேக்குற ஆளா நீ?" - கமல்காந்த்

"சரிடா என் இவ்ளோ ஒல்லியா இருக்க? வீட்டுல மம்மி உனக்கு சோறு போடலையா?" - ஆதி

"மதியம் சாப்பிடல அது தான் அப்டி தெரியும் உனக்கு" - கமல்காந்த்

"ஏன் சண்டை போட்டுட்டு வந்துட்டியா? அம்மாகிட்ட எல்லாம் சண்டை போட கூடாதுடா" - ஆதி

"அவசர குடுக்கு ண்ணா நீ... என்ன பேச விடுறியா?" - கமல்காந்த்

"சரி நீயி கூவு" - ஆதி

"சொன்னா செண்டிமெண்ட் ஆகிடும் அப்றம் அதுக்கும் நீ என்ன கலாய்ப்ப" - கமல்காந்த்

"பரவால்ல சொல்லு கேட்டு தான் பாப்போமே" - ஆதி விடவில்லை.

"என் தங்கச்சி பொறந்து கொஞ்சம் வருசத்துலயே அப்பா கால் ரெண்டும் ஆக்சிடென்ட்ல போய்டுச்சு... அம்மா தான் எல்லாத்தையும் பாத்துக்குச்சு, வீடு வீடா போய் மாடா வேலை பாக்கும். அது படுற கஷ்டத்தை பாத்து நானும் தத்தி புத்தி காலேஜ் செகண்ட் இயர் வர ஸ்காலர்ஷிப்ல படிச்சேன்... ஆனா ஆறு மாசம் முன்னாடி அம்மா தூக்கத்துலையே போய்டுச்சு. விட்டேன் படிப்ப, தங்கச்சி நல்லா படிப்பா. அவளையாவது படிக்க வைக்கணும்.

அதுக்கு தான் அப்பாவை தங்கச்சிக்கு துணையா ஈரோடுல இருக்க எங்க கிராமத்துல விட்டுட்டு இங்க வேலை தேடி வந்துட்டேன். இங்க என்ன வேலை தேடுறதுன்னு கூட தெரியாம இருந்தப்ப தான் படத்துல நடிக்க ஒருத்தர் கூப்டாரு. போனேன். இத்தனை மாசத்துல ரெண்டு தடவ போனேன், கூட்டத்தோட நின்னேன். காசு பத்தல. மூணு வேளை சாப்பாடு ரெண்டு நேரமா மாறிடுச்சு"

அவன் பேசியதை எல்லாம் கேட்கும் பொழுது ஆதிக்கு தன்னையே பார்ப்பது போல் இருந்தது, அவனும் கல்லூரி சென்ற புதிதில் மதிய உணவை புறக்கணித்துவிடுவான் சகோதரிக்காக. இரவு தான் வேலை செய்த ஹோட்டலில் தந்த நான்கு இட்லியில் ஒரு இட்லி உண்டு மீதியை சகோதரிக்கு வந்து கொடுப்பான். பசியால் அந்த நாட்கள் இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து பிறகே உறங்கிய நியாபகம் இன்னும் மனதில் பச்சையாய் இருந்தது.

"டேய் காந்தம் நீ ஏன் டைரக்டர் ஆக கூடாது?" சூழலை அப்படியே மாற்ற முனைந்தான் ஆதி.

"நீ ப்ரடியூசர் ஆகு, நான் அந்த படத்துக்கு டைரக்டர் ஆகுறேன்" ஆதிக்கு சற்றும் சளைக்காமல் அவனும் பேசினான்.

"ஒரு வீடு காட்டவே வழியில்லாம இருக்க என்ன படம் எடுக்க சொல்ற" - ஆதி

"ஒரு டயலாக் பேச தெரியாத என்ன ஒரு படத்தை எடுக்க சொல்ற" - கமல்காந்த்

தலையை ஆட்டி யோசித்த ஆதி, "அதுவும் சரி தான்" என்றான்.

பிறகு கொஞ்சம் இடைவேளையில் தெரிந்த கதவின் வழி பார்த்த ஆதி, "சரிடா நீ நான் சொல்றப்ப போய் பொசிஷன்ல நின்னுடு. நான் போய் வேலைய ஆரமிக்கிறேன்"

"ண்ணா உன்ன நம்பி தான் ண்ணா நான் பண்றேன். எனக்கு ஏதாவது ஆச்சு நீ தான் காரணம்-னு எழுதி வச்சிட்டு தான் வந்துருக்கேன்... பெரிய இடம் மாதிரி வேற இருக்கு, என்ன நம்பி தான் என் குடும்பமே இருக்கு"

அவன் முதுகில் அடித்த ஆதி, "உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் அப்பாவ ஒரு பட்டாசு கம்பெனி-கு அனுப்பிட்டு உன் தங்கச்சிய நான் காட்டுகிறேன் நீ ஏன்லே கவலை படுற. வேலைய பாரு"

"என்ன தம்பி-னு சொன்ன" - கமல்காந்த்

"முறையை மாத்திட்டா போச்சு மாப்பிள்ளை" ஆதிக்கு பதில் பேச கூட முடியாமல் பயத்தில் ஒரு தூணுக்கு பின்னால் சென்று நின்றுகொண்டான் கமல்காந்த்.

சாதாரண மக்கள் அவ்வளவு எளிதாக அந்த பப் உள்ளே நுழைந்துவிட முடியாது. காரணம், அதன் விலை. நடுத்தர மனிதர்கள் தங்களுடைய மாத சம்பளத்தின் பாதியை அதில் போட்டால் தான் உள்ளேயே நுழைய முடியும். அதுவும் அப்படி இப்படி என்று முப்பதாயிரம் தாண்டும். ஏற்கனவே அலுவலகத்திற்கு என கையில் இருந்த தொகை மொத்தமும் போட்டு பத்தாமல் போக, தன்னுடைய ஆசை வாகனத்தையும் மனமே இல்லாமல் தடவி தடவி பார்த்து விற்று வந்தான்.

இப்பொழுது இதில் உள்ளே நுழைய எங்கு போவான்? பின் வாசல் வழியே விஷ்ணு ஹரியை பிடித்து வெளியில் இழுக்க முயல்வதையும் ஹரி விடாமல் குதூகலித்தபடியே மேலும் மேலும் மது பானத்தை உள்ளே தள்ளிய படியே இருந்தான். அதனால் தான் எப்படியும் வெளியே வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் விஷ்ணு, ஹரிக்கு உதய் நியமித்திருந்த இரண்டு கார்ட்ஸ் கவனத்தை தன் பக்கம் மொத்தம் ஈர்க்க எண்ணி வாசல் பக்கம் கிடந்த ஒரு காலி முது பாட்டில் ஒன்றை கையில் எடுத்து சென்றான்.

அவ்வளவு நேரம் சகோதரர்களுடன் இருந்த காவலர்களும் வெளியில் வந்திருக்க, எந்த விதமான உள் நுழைவு சீட்டு இல்லாமல் தள்ளாடியபடியே வேகமாக சென்றவனை வாசலில் நின்ற இரண்டு பௌன்சர்ஸ் தடுத்து நிறுத்தினர். போதையில் இருந்தாலும் தெளிவாக இருப்பவன், போதையே இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே தெளிவில்லாதது போல் திண்டாடினான்.

"உள்ள போகணும் விடுங்க டா"

"டிக்கெட் இல்லாம உள்ள விட மாட்டோம்" இரும்பை காய்ச்சி முகத்தில் விட்டது போல் அவ்வளவு இறுக்கம் அவர்கள் இருவரின் முகத்திலும்.

"டேய்... இத" *போலி விக்கல்*, "இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானடா கண்ட்ரி ப்ரூட்ஸ்"

தான் பயணம் செய்த பேருந்தில் வாங்கிய டிக்கெட் ஒன்றை பத்திரமாக பாக்கெட்டின் ஆழத்தில் வைத்திருந்தவன், தள்ளாடிக்கொண்டே அவர்கள் கையில் திணித்து மேலும் முன்னேற, ஆதியின் சட்டையை பிடித்து ஒருவன் பின்னே தள்ளினான். அவன் பிடித்த வேகத்தில் போதையை நிரூபிக்க ஆதி அப்டியே படியில் சரிய அவன் கையிலிருந்த அந்த காலி பாட்டில் உடைந்து சிதறியது.

அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உதய்யின் காவலர்கள் இருவரும் வேகமாக வந்து ஆதிக்கு உதவ முற்பட அவர்களிடமிருந்து திமிறி எழுந்தவன், பௌன்சர் ஒருவனின் சட்டையை பிடித்தவன் கையில் இருந்த உடைந்த பாட்டில் கொண்டு குத்த போக, உதய்யின் ஆள் ஆதியின் கையை பீதியுடன் பிடித்தது நிறுத்தினான்.

"சார் என்ன பண்றீங்க?" ஆதியை தடுத்து நிறுத்த அவன் சற்று திணறி தான் போனான்.

"டேய் வந்து பாட்டில வாங்கு" மற்றொருவனுக்கு உத்தரவிட, நொடி தாமதிக்காமல் கையிலிருந்ததை உருவிப்போட, அதற்குள் பௌன்சர் ஒருவன் உள்ளிருந்து இன்னும் இருவரை அழைத்து வந்துவிட, அவர்களும் ஆதி மேல் பாய துவங்கினர்.

ஆதி மேல் கை வைத்தது தெரிந்தும் அமைதியாக இருந்துவிட்டால் தங்கள் நிலை உதய்க்கு போகாமலே ஜெயன் பதமாக ஏதாவது செய்துவிடுவான் என்று அறிந்து அந்த பௌன்சர்ஸ் மக்களை சமாளிக்க சென்றுவிட, பிரபலமான அந்த பாரில் ஆட்களுக்கா பஞ்சம்? இன்னும் திரளாக நான்கு பேர் வர, உதய்யின் இரண்டு ஆட்கள் அவர்களை சமாளித்தாலும், அந்த எட்டு பௌன்சர்ஸ் உதய்யின் ஆட்களை சமாளிக்க முடியாமல் திணறியிருந்த நேரம் அவ்விடத்தை விட்டு நைசாக நழுவி கமல்காந்த் எண்ணிற்கு அழைத்துக்கொண்டு ஓடினான் பப்பின் பின் பக்கம் ஓடினான்.

மூச்சிரைக்க வந்தவன் காரியத்தை முடித்தானா என்று கூட தெரியவில்லை, அழைப்பும் ஏற்கப்படவில்லை. ஆதி சென்ற நேரம், ஊரே அடங்கியிருந்த வேளையில், சாலை ஈயாடிக்கொண்டிருந்தது.

"காந்தம்... டேய் காந்தம்" கமல்காந்த்தின் பெயரை அழைத்துக்கொண்டே அந்த வீதியை தாண்டி மற்றொரு பாதைக்கு நடந்தவன் காதுகளில் டயர்களின் கீரிச்சிடும் சத்தம் கேட்க, ஒலி வந்த பாதையில் ஓடியவன் கண்ணில் சரியாக பட்டது அந்த காட்சி...

ஹரி விஷ்ணுவின் வாகனத்திற்கு சில அடிகள் தொலைவில் குத்துக்காலிட்டு தலையை கையால் இறுக்கப்பற்றி ஏதோ பிதற்றிக்கொண்டிருந்தான். கண்கள் வேறு வெளிச்சத்தாலோ அல்லது பயத்தாலோ தெரியவில்லை சிறு ஒளி கூட கருவிழிகளை அடையாத வகையில் மிகவும் இறுக்கமாக மூடியிருந்தான்.

ஆதி தலையில் அடித்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுத்தெருவில் ஒற்றை கையை இடுப்பிலும், மற்றொரு கையை தலையிலும் வைத்து நின்றுவிட்டான். வாகனத்தின் உள்ளே இருக்கும் இரண்டு குடிமகன்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனரோ என்ற பயத்தில் ஆதி அப்டியே நிற்க, நேரம் கடந்ததே தவிர இருவரில் ஒருவர் கூட வெளியே வரவில்லை. மெல்ல வரவழைத்த தைரியத்தோடு ஆதி வாகனத்தை நோக்கி நடந்தான்.

"ஏசப்பா, முருகா, அல்லா, பெருமாளே... அவனுக கண்ணுல மட்டும் பட்டுட கூடாது" சுற்றிலும் தேடியவன் கண்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பை கிடைக்க அள்ளினான் கைகளில்.

தலையில் கவிழ்த்துப்போட்டு மங்கலாக தெரிந்த தூரத்து தெருவிளக்கின் உதவியுடன் வாகனம் நெருங்கி வந்த பொழுது தான் கமல்காந்த்தின் முணுமுணுப்பு கேட்டது, "சிவ சிவா சிவ சிவா..." பயத்தில் உளறிக்கொண்டிருந்தவன் நா வரண்டாலும் பிதற்றுவதை நிறுத்தவில்லை.

"போச்சு என்னமோ இந்த பரதேசி பண்ணிடுச்சு..." புலம்பியவாறே வாகனத்தினுள் மெதுவாக ஆதி காதை அருகில் கொண்டு செல்ல எந்த சத்தமும் திறந்த ஜன்னல் வழியாக கேட்கவில்லை.

ஒருவித தைரியத்தோடு உள்ளே எட்டி பார்த்தவனுக்கு பின் இருக்கையில் படுத்திருந்த விஷ்ணுவும் முன் இருக்கையில் ஸ்டேரிங் வீலில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஹரியும் தென்பட, நிம்மதியாக மூச்சை விட்டு, மடங்கி அமர்ந்திருந்த கமல்காந்த் கையை பிடித்து கிள்ளிவிட்டவன் ஆத்திரத்தில் இரண்டு அடி அவன் முதுகிலே போட்டான்.

அடி பலமாக வாங்கியிருந்தாலும் சிவனை துணைக்கு அழைத்திருந்தவன் வதனம் மகிழ்ச்சியை தத்தெடுத்தது.

"ண்ணா... எனக்கு ஒன்னும் ஆகல... நான் உயிரோட தான் இருக்கேன்" ஆர்பரிப்பில் இரண்டு முறை குதிக்கவும் செய்தான் அவன்.

"அடேய் கிறுக்கா... என்ன சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க நீ?" - ஆதி

"நீ சொன்னதை தான் ண்ணா நான் செஞ்சேன்... பாரு கார் முன்னாடி விழுந்துட்டேன்" விழுந்த இடத்தை சுட்டிக்காட்டினான்.

"நான் கார் முன்னாடி விழுக சொல்லல டா... கார்ல விழுக சொன்னேன்... தரித்திரியம் புடிச்சவனே... மொத்தமா சொதப்பி வச்சிருக்கியே டா"

"ண்ணா நீ சொன்ன மாதிரி தான் பண்ணேன்... என்ன பயத்துல கொஞ்சம் முன்னாடி விழுந்துட்டேன்" விட்டுவிட தயாராக இல்லை காந்தம்.

"புடுங்குன... அடி படுற மாதிரி விழு-னு சொன்னா நாடு ரோடுல சிவபுராணம் படிச்சிட்டு இருக்குற... பைத்தியகாரப் பயலே"

ஏதாவது செய்ய வேண்டும்... இதை விட்டால் பிறகு இது போன்ற சந்தர்ப்பமே அமையாது. இன்னும் சில நொடிகளில் உதய்யின் ஆட்களும் வந்துவிடுவார்கள். பைத்தியம் பிடித்தவன் போல் நாளா பக்கமும் பார்த்த ஆதியின் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை, சில கற்கள் மட்டுமே கிடைக்க அதை எடுத்து அந்த இளையவனின் தலையை உடைக்கும் எண்ணம் தான் மேலோங்க அதையே ஏன் செய்ய கூடாது என்ற எண்ணத்தில் அதை வேகமாக எடுத்து வந்தவன் கமல்காந்த் பக்கம் திரும்பினான்.

அவனோ, தான் திடீரென இடையில் வந்ததும் சடன் பிரேக் அடித்த வேகத்தில் ஸ்டேரிங்கில் முட்டி அடித்த போதையில் உறங்கியிருந்த ஹரியையும் விஷ்ணுவையும் பார்த்து, அந்த வாகனத்தை சுற்றி சுற்றி பார்த்தான்.

"டேய் தம்பி..." ஆதியின் குரல் கேட்டு திரும்ப, "மன்னிச்சுடு டா..." முழுதாய் அந்த வார்த்தையை காந்தம் கிரகிக்கும் முன்பே கமல்காந்த்தின் நெற்றியில் ஆதி ஓங்கி கல்லை கொண்டு அடித்திருந்தான்.

"ஆஆ.... ஐயோ அம்மா..."

நெற்றியை பிடித்து கதறியவனின் முகத்தை பிடித்து, "டேய் காந்தம்... ராசா மன்னிச்சுடு டா. போலீஸ்-கு வேற போன் பண்ணிட்டேன். அப்டியே டயர்கு ஒட்டி குப்புற படுத்துகோடா" கெஞ்சினான் ஆதி.

"யோவ் போயா நீயும் வேணாம் உன் காசும் வேணாம்"

"சரி டா போ... ஆனா நயா பைசா தர மாட்டேன்" - ஆதி

"ண்ணே இப்டி எல்லாம் பேசாமலாமா? எந்த இடத்துல படுக்கணும்னு சொல்லு சரியா படுத்தறேன்" பேசிக்கொண்டே இருக்கும் பொழுதே போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்க வாகனத்தின் டயர் அருகே குப்புற வேகமாக படுத்துகொண்டான் காந்தம்.

"நான் உன் பின்னாடியே தான் வருவேன் சரியா? தைரியமா இருடா சொதப்பிடாத... எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்றாங்கனு பாத்து எனக்கு மெசேஜ் போடு"

பல அறிவுரைகளை கூறி ஆதி அவ்விடத்தை விட்டு அகல பார்க்க படுத்த வாக்கிலே, "நீ அடிச்ச அடிக்கு என் மூளை எதுவும் ஆகிருகத்துல?"

என்ன செய்வான் அவனும்? ஆதி அடித்த அடியில் தலை வின் வின்னென்று தெறித்தது அதுவும் ரத்தம் வடிய வேறு துவங்கியது. இடத்தை விட்டு ஓடிக்கொண்டே,

"ஏற்கனவே அப்டி தான்டா இருக்க பேமானி... ஒழுங்கா நடி" - ஆதி

ஓரமாக சென்று ஆதி நின்று கொள்ள சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் ஒன்று வந்துவிட அதிலிருந்த காவல்துறையினர் வந்து முதலில் கமல்காந்த்தை ஆராய்ந்தவர்கள் அவன் மூச்சு காற்றை உணர்த்த பின்னர் ஹரி விஷ்ணுவின் வாகனத்தை உள்ளே உற்று பார்த்தனர்.

"சார் பெரிய இடம் மாதிரி தெரியுதே பசங்கள பாக்க" கான்ஸ்டாபில் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி எழுப்பினார்.

"ஆமாயா..."

"பேசாம அப்டியே விட்டுட்டு போய்டலாமா?" - கான்ஸ்டாபில்

"யோவ் நம்பர் ப்ளேட் பாத்தியா ஆர்.ஜே குரூப்ஸ் வண்டி. புடிச்சா நல்லா தேறும்" - இன்ஸ்பெக்டர்

"சார் கில்லாடி சார் நீங்க" பூரித்தான் அந்த கான்ஸ்டாபில்.

"பசங்கள எதுவும் பண்ணிட வேணாம். வண்டிய டோ போட்டு இழுத்துட்டு வர சொல்லு. இவன நாம ஹாஸ்பிடல் எடுத்துட்டு போகலாம்"

"அட்றா சக்க" மறைந்திருந்து பார்த்த ஆதியின் மனதில் உற்சாகம்.

ஹரி, விஷ்ணுவின் பாதுகாப்பிற்கும் எந்த தீங்கும் வர கூடாது, தன்னை நம்பி வந்த கமல்காந்தின் நிலைமையும் தான் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த காவல் அதிகாரிகளின் பேச்சை உன்னிப்பாக கவனித்தான்.

இப்பொழுது அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என்ற பிறகு தான் நிம்மதி. ஆதி மனதில் வேறு சில எண்ணங்களும் பய பந்தை உருட்டிக்கொண்டிருந்தது. உதய்யின் ஆட்கள். அவர்கள் மட்டும் வந்தால் மொத்த திட்டமும் வீணாகிடும் என்ற பயம் மனதின் வியாபித்தது.

"யாரு யா இன்பர்மேஷன் குடுத்தது?" - இன்ஸ்பெக்டர்

"தெரியல சார்... கால் பண்ணா போன் போகல... வண்டி வருது சார்..."

படபடப்புடன் ஆதி நிற்க, அவனுடைய பி.பியை ஏற்றாமல் சில நிமிடங்களில் அந்த வாகனம் வர விஷ்ணு, ஹரி இருந்த கார் அவ்விடத்தை விட்டு அகன்றது. அதன் பிறகு கமல்காந்தை பிடித்து வண்டியின் பின்னிருக்கையில் போட்ட காவல்துறையினர் வாகனத்தை எடுக்க மெதுவாக ஜன்னல் வழி எட்டி பார்த்த கமல்காந்த் ஆதிக்கு சிரிப்போடு டாட்டா கூற தலையில் அடித்து அவனை பின் தொடர சென்றான்.

அந்த பக்கம் உதய்யின் ஆட்கள் விஷ்ணு ஹரி இருவரையும் அந்த மொத்த இடத்தையும் புரட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தார்.

********************

இரவு மணி ஒன்பதை தாண்டி இருந்தது... அலுவலகத்திலிருந்து வந்த உதய், வீட்டிற்குள் போக மனமே இல்லாமல் அலுவலக பையை ஜெயன் கையில் கொடுத்து தளர்வாய் வீட்டின் வாசல்படியிலேயே அமர்ந்துவிட்டான். உள்ளே செல்ல மனமே இல்லை. அதனால் தான் நேரத்தை அதிகம் அலுவலகத்திலே செலவிட்டான்.

வீட்டினுள் நுழைந்தால் அன்னையின் நியாபகம், அந்த வீட்டில் அவர்கள் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும் நினைவுகளும் வந்து ஆட்டி படைக்கும் உதய் மாதவனை. சகோதரர்களை விரைவாகவே வீட்டிற்கு அழைத்து செல்லும் அவன் அன்னை, உதய்யின் வரவிற்காக நிமிடத்திற்கொரு முறை வாசலை பார்க்கும் அன்னையை இத்தனை வருடங்களில் எத்தனை முறை நினைத்தாலும் மனம் துடியாய் துடிக்கும்.

அன்னையின் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை அழைத்து சென்றவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது, செல்லும் வெளியில் எங்கும் ஒரு சிரிப்போடு பாதி மூடிய கண்களோடும் உதய்யின் முகத்தை கயாத்திரியின் ரத்த கரை படிந்த கைகள் வருடியதையும் அவர் வார்த்தைகளையும்,

"ஆதியையும், நம்ம குடும்பத்தையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கோ தம்பி..." எவ்வளவு கதறியிருப்பான் அன்று அன்னையிடம் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று... கேட்டாளா அந்த அன்னை?

அன்று அவர் கேட்டிருந்தால் இன்று இப்படி மனம் முழுதும் வெறுமையோடும், கண்களில் கண்ணீரோடும் யாருமே இல்லாத வீட்டில் எவரும் இல்லாதது போல் அமர்ந்திருக்க தேவை இல்லையே... மனதிற்கு ஒரு ஆறுதல் யாழினியின் இடைவிடா பேச்சும், அர்த்தமிலா அவள் கேள்விகளும். இப்பொழுது அதுவும் இல்லை.

ஒரு கட்டத்தில் எதற்காக உயிர் வாழ்கிறோம் என்ற எண்ணங்கள் கூட சில தினங்களாக வர துவங்கியது. ஆதி, யாழினி, குடும்பம் இவர்களின் பிரிவு ஒரு புறமென்றால், இன்னும் சில வாரங்களில் அன்னையின் இறந்த தினம் வரவிருக்கிறது. எப்படி அந்த நாளை கடத்த போகிறோம் என்ற பயம் கூட அதிகம் வந்தது. தளர்வாய் அப்டியே வாசலில் படுத்துவிட்டான். தரையில்...

அன்னிச்சை செயலாக கைகள் பிடிவாதம் செய்து யாழினியின் எண்ணிற்கு அழைத்தது. சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட்டது. திருமண பேச்சை துவங்கிய அன்னையிடம் சண்டையிட்டு அழுது வீங்கிய கண்களோடு மொட்டை மாடியில் படுத்திருந்தவளுக்கு ஆறுதலாய் இருந்தது தொடுதிரையில் தெரிந்த அவனுடைய விறைப்பான முகம்.

உதய்யின் புகைப்படத்தை பார்க்க பார்க்க கண்ணீர் துளிகள் வழிந்துகொண்டே இருக்க அழுகையை மீறி விசும்பலும் விடாது வர துவங்கியது. அன்று அவன் இல்லத்தில் அவன் மடியில் அமர்ந்த நொடியே அவனை மட்டுமே தன்னுடைய உலகமாய், மானசீகமாக கணவனாய் எண்ண துவங்கியவள் வேறு ஒருவனை அந்த இடத்தில் வைத்து கூட பார்க்க உடல் கூசியது.

திருமணம் வேண்டாம் என்று ஒரேடியாக மறுத்த மகளை ஆத்திரம் தீர அன்னை திட்டுவிட்டார். அதனாலே அவன் புகைப்படத்தை பார்த்து ரணமான இதயத்தை ஆற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த நிமிடமே உதய்யின் அழைப்பு வர, மீண்டும் ஏதோ வலி புதிதாக ஆழமாக உருவாகியது. அவளுக்கு எப்படி தெரியும், தன்னை ஆட்டி வைத்த ஈஸ்வரன் சிறையில் உள்ளான் என்று?

அழைப்பை எடுக்காமல் விட்டால் அவனுக்கு என்ன மரியாதை என்று உடனே அழைப்பை ஏற்றாள் கண்களை துடைத்து. அழைப்பை ஏற்றும் இரண்டு பக்கமும் அமைதி மட்டுமே இருக்க, "இருக்கியா?" ஆடவனின் குரலும் தடுமாறியதோ?

"ம்ம் இருக்கேன் சார்" அழுகையை கட்டுப்படுத்துவது அவளுக்கு சவாலாக தான் இருந்தது... ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு இன்னும் தன் மேல் இருந்த பிரியமும் அவள் மனதி
ற்கு சுகத்தோடு வலியை தந்தது.

"என்ன பண்ற யாழினி?"

"சும்மா... மாடில இருக்கேன் சார்"

"சந்தோசமா இருக்கியா யாழினி?"

இல்லை என்று தலை ஆடியது ஆனாலும் நாவோ, "எனக்கு என்ன சார்? சந்தோசமா இருக்கேன்" என்றது.

"ஆபீஸ் வரலாமே..."
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

"இல்ல சார் வேணாம்... வேற இடத்துல வேலைக்கு போறேன். நிம்மதியா இருக்கேன் சார்"

"இங்க உன்ன நிம்மதியா நான் இருக்க விடலன்னு சொல்றியா யாழினி?"

"சில விசயங்கள் பேசாம அப்டியே விடுறது தான் சார் நல்லது" மௌனம் அவனிடம்.

"அப்ப நான் வைக்கவா சார்?"

"நடந்த எதுவுமே தேவையில்லாததுனு சொல்லாம சொல்றியா யாழினி?"

அவன் குரலில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் உணர்ந்தே இருந்தாலும் தன்னை எப்பொழுதும் யாரோ கண்காணிக்கும் எண்ணம் பெண்ணுக்கு அதிகம் இருந்தது. ஈஸ்வரனின் பார்வை வட்டத்தினுள் வந்தது புரிந்தாலும் அந்த வட்டத்தை தூசியை போல் தட்டி உடைக்கும் ஆற்றல் அவள் மனதை பறித்தவனுக்கு அதிகம் உள்ளது என்பதை உணர மறைந்துபோனது குடும்பத்தை தன்னை விட அதிகம் நேசிக்கும் யாழினியின் மனம்.

"பேசாம இருக்காத யாழினி... ஏதாவது பதில் பேசு"

"என்ன சார் பேசுறது? நமக்குள்ள பேச என்ன இருக்கு?" சற்றே குரல் உயர்ந்தது அது தன்னுடைய உணர்வுகளை மறைப்பதற்காக கூட இருக்கலாம்.

"இத்தனை நாள்ல உனக்கு ஒரு நிமிஷம் கூட என் மேல நம்பிக்கை வரலையா? இல்ல உனக்கு நம்பிக்கை தர்ற மாதிரி நான் நடந்தது இல்லையா யாழினி?" இதழ்களை கடித்து அழுகையை அடக்கியவள் வார்த்தைகளையும் விழுங்கினாள்.

உதய்க்கோ நெஞ்சம் அடைத்தது அவள் அமைதியும் அவனை சுற்றியிருந்த இருளும். ஏதாவது ஒரு ஏக்கமோ வேதனையோ அவள் குரலில் தெரியாதா என்ற அவன் ஆசை நிராசையாகவே மாறியது.

"இல்லன்ற ஒரே காரணத்துல தான் உங்கள பாக்க கூட நான் வரல-னு நான் என் வாயால சொல்லனுமா சார்?" செத்து செத்து மடிந்தாள் யாழினி தன்னுடைய ஒவ்வொரு பொய்யிலும், அது பொய்யாகவே இருந்தால் பரவாயில்லையே... அவள் பேசுவது ஒவ்வொன்றும் அவனின் பாசத்திற்கு தான் செய்யும் துரோகமாக தான் தெரிந்தது.

வேதனை நிறைந்த அவன் மெல்லிய சிரிப்பு அவள் காதுகளை அடைந்து கொன்றது, "சார்..." என்ன முயன்றும் அந்த நொடி தன்னுடைய தவிப்பை யாழினியால் மறைக்க முடியவில்லை.

"என்ன யாழினி இது... சார் அப்டி இப்படின்னு? உனக்கும் எனக்கும் எதுவும் இல்லடா மடையானு சொல்லிட்டு எதுக்கு மரியாதை எல்லாம் வருது?"

"அப்டி எல்லாம் இல்ல சார்... புரிஞ்சுக்கோங்க"

"புரிஞ்சிட்டேன் யாழினி. இப்ப தான் எல்லாமே புரிஞ்சிட்டேன்... நம்மள ஆசையா பாசத்தோட உரிமையோட பாத்துக்குறதுக்கு ஒருத்தர் வர எல்லாம் ஒரு ராசி வேணும்"

மீண்டும் சிறு சிரிப்பு அவனிடம், "ஓகே... பீ ஹாப்பி. உனக்கு வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்கனு சொன்னல... கங்ராட்ஸ்"

நொடி பொழுதில் இணைப்பு துண்டித்துவிட அவன் குரலில் தெரிந்த பரிதவிப்பை உணர்ந்தவள் மனம் கதறி அழுதது, எத்தனை ஆசையாய் அவள் மடியில் அன்று கிடந்தான்... இதுநாள் வரை எவரிடமும் மனம் திறவாதவன் அன்று மனதில் இருந்த வலியை அவளிடம் பகிர்ந்துகொண்ட பொழுது வழிந்த கண்ணீர் கூறியதே அவன் வாழ்க்கையின் அவள் இடத்தை...

அத்தனையையும் தானே உடைத்து அவன் மனதையும் உடைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டுமே மிஞ்சியது. அத்தனையையும் உதறி அவன் தோளில் சாய்ந்து அவனுக்கு ஆறுதலாய் மாற துடித்தாலும் இத்தனையையும் பேசி அவன் முன் நிற்க கால்கள் கூசியது. தரையின் சூட்டையும் மறந்து மடங்கி படுத்து அழுத்தவளுக்கு ஆறுதல் அந்த நிலாவாய் கூட இருக்க முடியவில்லை.

கைபேசியை தூரம் வைத்து அப்படியே வெறும் தரையில் கிடந்தவன் காதில் அவள் வார்த்தைகள் விழுந்துகொண்டே தான் இருந்தது. அவள் வார்த்தைகளை தாண்டி ஒலித்த அவன் கைபேசியை எடுத்து பார்த்தான். மணிமேகலை.

ஓரளவு யூகித்துவிட்டான். ஆதியின் பூமி பூஜையில் இருந்த மணிமேகலையை பார்த்த உடனே புரிந்து போனது அவர்கள் இருவரின் உறவை. எப்பொழுது வேண்டும் என்றாலும் அவள் மாமன் மகள் அழைப்பாள் என்று எதிர்பார்த்தான். நண்பனுடைய காதலாவது கை கூடட்டும் என்ற எண்ணத்தோடு அழைப்பை ஏற்றான்.

"மாமா..." எப்பொழுதும் குதூகலமாக வரும் மாமன் மகள் குரல் அல்ல அது.

"என்ன மணி இவ்வளவு சோகம் குரல்ல?"

"மாமா நான் ஒன்னு சொன்னா நீங்க கோவ பட கூடாது" சிரித்தான், "பச்சை கொழந்த மேல கோவம் வருமா மணி? நீ கொழந்த டா. தப்பு பண்ணிருக்க மாட்ட" என்றான் புன்னகை மாறாமல்.

"நீங்க ரொம்ப ஸ்வீட் மாமா... ஆனா நான் மிஸ்டேக் பண்ணிட்டேன் தான். அப்பாவை நினைச்சா பயமா இருக்கு மாமா" பயம் அவள் குரலில் பளிச்சிட்டு தெரிந்தது.

"நீ பண்ணது பெரிய தப்பு இல்லடா" - உதய்

"மாமா உங்களுக்கு தெரியுமா? அப்ப நான் தப்பு பண்ணலல?" உற்சாகம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது மணிமேகலையின் குரலில்.

"பூஜைல நீ இருந்தத பாத்தேன்... மாமா கிட்ட சொல்லிட்டியா?"

"இல்ல மாமா பயமா இருக்கு... உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே?" - மணிமேகலை

"இல்ல டா மனசுக்கு புடிச்சவனோட இருக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்ல. அதுவும் நீ செலக்ட் பண்ணிருக்க ஆள் மாதிரி யாராலயும் உன்ன பாத்துக்க முடியாது" - உதய்

"அவங்க ரொம்ப நல்லவங்க மாமா... ஆனா அப்பா அக்ஸப்ட் பண்ணுவாங்களா? இன்னைக்கு தான் மாப்பிள்ளை பாக்க ஸ்டார்ட் பண்ண போறதா அம்மாகிட்ட பேசிட்டு இருந்தாங்க... உங்ககிட்ட கூட நாளைக்கு பேச போறாங்களாம். ப்ராமிஸ் பண்றேன் மாமா கண்டிப்பா அப்பா சொல்ற பையன மேரேஜ் பண்ண மாட்டேன். இருந்தாலும் அப்பாவை அப்போஸ் பண்ணி நோ சொல்ல பயமா இருக்கு மாமா" கட கடவென பேசியவன் சட்டென நிறுத்திக்கொண்டாள்.

அவள் அமைதியை படித்தவன், "மாமாகிட்ட நான் பேசணுமா மணி?"

"பயர் மாமா நீங்க" ஆர்பரித்தாள் பெண்.

"சரிடா பேசுறேன்... நாளைக்கு வீட்டுக்கு வர்றேன் மணி இப்ப நிம்மதியா தூங்கு"

"மாமா..." இணைப்பை துண்டிக்க போனவனை மீண்டும் நிறுத்தியது அவள் குரல்.

"சொல்லு டா"

"எங்களை பத்தி பேசுறப்ப யாழினி பத்தியும் அப்பாகிட்ட சொல்லிடுங்களேன்"

உதய் அமைதியாகிவிட்டான், "அவங்க சொன்னாங்க மாமா... நீங்க யாழினிய லவ் பண்றத"

சிரித்தான் ஆடவன்., "அவன் ஒரு லூசு டா... வக்கிறேன்"

ஏதோ ஒரு வித சோர்வோடு எழுந்தவன் வீட்டிற்குள் சென்று குளித்து உடையை மாற்றி உறக்கம் வராமல் மொட்டை மாடிக்கு சென்றான். நிலவை பார்த்து அமர்த்திருந்தவன் மனதில் அதனிடம் ஓராயிரம் கேள்விகள் கேட்டது. சிதறி கிடந்த மின்மினிகள் கூட அவன் கேள்விகளுக்கு பதில் கூறாமல் சிரித்துக்கொண்டிருந்தது. உதய்யை தேடி வந்த ஜெயன் மூச்சு வாங்க உதய்யை பார்த்து நின்றான்.

"சொல்லுங்க ஜெயன். இந்த நேரத்துல என்ன அவசரம்?"

"ஹரி விஷ்ணு ஜெயில்ல இருக்காங்க" சற்றும் எதிர்பாராத செய்தி அது, சட்டென இடத்திலிருந்து எழுந்தான் உதய்.

"என்ன பிரச்சனை ஜெயன்?"

"ட்ரங்க அண்ட் டிரைவ் சார்"

"யாருக்கும் எதுவும்....??" பயத்தோடு வேகமாக கேட்டான்.

"இல்ல சார் மைனர் இன்ஜூரி தான்" கோவத்தில் உதய்யின் முகம் சிவந்தது. ஒரு உயிரை இழந்தது போதாதா? இதற்காக தானே சகோதரர்களிடம் அத்தனை முறை சிறு குழந்தைகளுக்கு கூறுவது போல் பாடம் எடுத்தான்...

"அவங்க ட்ரிங்க்ஸ் பண்ணிருக்குறப்ப எதுக்கு டிரைவ் பண்ண விட்டீங்க ஜெயன்?" என்ன தான் இருந்தாலும் சகோதரனின் மனம் வாடவும் செய்தது.

"சார்.. ஆதி சார் தம்பிக இருந்த பார்ல வந்து பிரச்சனை பண்ணிருக்கார். அத பாத்துட்டு இருக்கறப்ப தம்பிக அந்த பக்கம் போய்ட்டாங்க"

சந்தேகம் வந்தது, "அவன் எதுக்கு அந்த வந்தான்?"

"ரொம்ப போதைல இருந்ததா நம்ம ஆளுங்க சொன்னாங்க சார். நிதானம் இல்லாம கோவப்பட்டு பௌன்சர்ஸ் மேல பாட்டில் வச்சு குத்த வந்துருக்காரு... பிரச்சனைய சால்வ் பண்ணிட்டு பாக்குறப்ப அவரும் இல்ல, தம்பிக காரும் ஆக்சிடென்ட் ஆகியிருந்தது" - ஜெயன்

"சி.சி.டீ.வி ஃபூடேஜ் ஏதாவது?" - உதய்

"பார்ல இருந்த கேமரால பாதப்ப தம்பிக கார் கண்ட்ரோல்ல இல்லாம தான் இருந்துருக்கு. ஆனா அவங்க கார் போன வேகத்துக்கு ஆக்சிடென்ட் ஆன பையன் இவ்ளோ சின்ன காயத்தோட இருந்தது தான் சார் சந்தேகமா இருக்கு..." - ஜெயன்

"அவனுக என்ன சொல்றானுங்க?" - உதய்

"ரெண்டுபேரும் எவ்ளோ எழுப்பியும் எந்திரிக்கல சார்" - ஜெயன்

"இடியட்ஸ்... இப்படியா சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருப்பாங்க?" சகோதரர்களை அர்ச்சித்துக்கொண்டிருந்த உதய்யின் கைபேசி மீண்டும் அடித்தது.

அழைப்பு ஆதியிடமிருந்து வர உடனே எடுத்து காதில் வைத்தான், "என்னடா நீ இன்னும் தூங்கலயா?" ஜெயன் கூறியது போல் முழு போதையில் இருப்பவனிடம் இருக்கும் உளறல் வார்த்தைகள் சற்றும் இல்லை, நிதானமாக ஏளனமாக வந்தது ஆதியின் குரல்.

"நீ எப்படி தூங்குவ? உன் தம்பிக தான் அங்க ஜெயில்ல இருக்காங்கல... ச்ச அங்க கொசு அடிக்க கூட ஆள் இருக்காதே" பரிகாச குரலில் பாவப்பட்டான்.

"பேசாம குடும்பமா அங்க போய் ஒக்காந்துக்கோங்களேன்" எத்தனை நாட்கள் எதிரி நாடு மன்னர்களை போல் சண்டையிட்டு வசனம் பேசிக்கொண்டே இருக்க என்ற எண்ணம் தான் வந்தது, சகோதரர்களை சிறைக்கு அனுப்பியது இவன் தான் என்று தெரிந்தும். எவருடனும் சண்டையிடும் நிலையில் இல்லை அவனும், "ஆதி..." நிதானமாக அழைத்தான்.

"வேணாம் உதய் சார்... நீங்க கீ குடுத்தா மட்டும் தான் எல்லாமே நடக்குமா என்ன?"

வெளியில் தந்தையின் அலுவலகம் தனக்கு இல்லாதது வருத்தம் தரவில்லை என்றாலும் உள்ளுக்குள் சொல்ல முடியாத கோவம் இருந்தது ஆதிக்கு,

"பணம் எல்லா இடத்துலயும், யார் தூண்டிவிட்டாலும் சத்தமா பேசும் உதய் சார்" அழுத்தமாக இதற்கு நான் மட்டுமே காரணம் என்று நேரடியாக கூறி முடித்தான்.

அடிபட்ட பாம்பாய் சீரியவனின் வேதனை புரிந்துவிட அவனிடம் பேசி பயன் இல்லை என்று உணர்ந்து பேச்சை நிறுத்திக்கொண்டான் இணைப்பை துண்டித்து.

"அவங்க அங்கையே இருக்கட்டும் ஜெயன்" - உதய்

"சார்..." நம்ப முடியவில்லை முதலாளியின் பேச்சை.

"சரியா தான் கேட்டுச்சு ஜெயன், விடுங்க. சொல்லி திருந்தாதவங்க பட்டு திருந்தட்டும். நாளைக்கு வண்டி ஓட்டுனவன் அங்கையே இருக்கட்டும். இன்னொருத்தன கூட்டிட்டு வந்துக்கலாம்"

இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று சென்றவனை மேலும் பேச்சில் பிடித்து நிறுத்த முடியவில்லை ஜெயனால்.

மறுநாள் காவல்நிலையத்தில் இருந்து விஷ்ணுவை பிடித்து வெளியில் இழுத்து வந்த ஜெயன் ஹரியை அங்கேயே விட்டு வந்தான். ஜெயன் பின்னால் சகட்டுமேனிக்கு கத்திகொண்டே வந்த விஷ்ணு உதய்யின் காரை வெளியில் பார்த்ததும் உள்ளே சென்று அமர்ந்துகொண்டான்.

"எதுக்கு என்ன மட்டும் வெளிய எடுத்த... அவனையும் எடு" ஆணையிட்டான் சகோதரனுக்கு.

"நீயும் வரியா என்கூட?" சம்மந்தமே இல்லாத கேள்வியை கேட்டவன், "போகலாம் ஜெயன்" அவசரமே இல்லாமல் பேசிய சகோதரன் மேல் விஷ்ணுவிற்கு வெறுப்பு வளர்ந்துகொண்டே சென்றது.

"ஆக்சிடென்ட் நாங்க பண்ணல... அந்த கிறுக்கன் போய் சொல்றான்" கத்தினான் அந்த மைதியான வாகனமே அதிரும்படி, "அவன் மேல வண்டிய இடிக்கிறதுக்குள்ள ஹரி பிரேக் போட்டுட்டான்"

"தெரியும் உங்க மேல தப்பில்லன்னு" நாளிதழை எடுத்து புரட்டியவனின் அலட்சியம் சுத்தமாக அங்கிருந்த ஜெயனுக்கு கூட புடிக்கவில்லை.

"தெரிஞ்சு ஏன் இப்டி எல்லாம் பண்ற? உன்ன எல்லாம் நம்பி தானே இருக்கோம் நாங்க எல்லாரும். முதல மாமா, இப்ப ஹரி. என்ன தான் கிடைக்கிது உனக்கு? தயவு செஞ்சு எங்க குடும்பத்தை விட்டு போய்டு நீ... உன்னால நான் அதிகமா நேசிக்கிற எல்லாரும் என்ன விட்டு போகுறாங்க" வெறுத்துவிட்டான் விஷ்ணு சகோதரனை.

பார்வை செய்தித்தாளில் இருந்தாலும் அதிலிருந்த ஒரு எழுத்து கூட உதய்யின் கவனத்தை ஈர்க்கவில்லை. தான் சில தினங்களாக யோசித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களை தான் சகோதரனும் கூறியிருக்கிறான்.

"சார் கேஸ் எல்லாம் பைல் பண்ணல சார்... அடிபட்ட பையன ரெண்டு தட்டு தட்டுனா உண்மைய சொல்லிடுவான் சார். அந்த பையனோட கை தடம் கூட கார் மேல இல்ல. ஹரி சார் ரொம்ப பாவம் சார்" ஜெயனும் தன் பங்கிற்கு சமாதான வார்த்தைகளை கூறினான் முதலாளிக்கு.

நீ பேசிக்கொண்டே இரு என்று அடுத்த சில நிமிடங்கள் உதையிடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. மணிமேகலையின் இல்லத்தை பார்த்த விஷ்ணு, "இங்க எதுக்கு வந்துருக்க, ஜெயன் உங்க போன் தாங்க"

காரை விட்டு உதய்க்கு முன்னாள் இறங்கியவன் தன்னுடைய தந்தைக்கு அழைத்து அத்தனையும் விடாமல் ஒபிதித்துக்கொண்டிருக்க அவனை சட்டை செய்யாமல் வீட்டிற்குள் நுழைந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த மணிமேகலையின் தந்தை முன்னே அமர்ந்துகொண்டான்.

"அடடே உதய்... உனக்கு நூறு ஆயிசு தான் போ. நானே உன்ன பாக்க வரணும்னு நெனச்சேன்" - செந்தமிழரசன்(மணிமேகலையின் தந்தை, நளினியின் உடன் பிறந்த சகோதரர்)

உதய்யின் சத்தம் கேட்டு வேகமாக படி இறங்கி வந்த மணிமேகலை முகத்தில் சிறிதும் பயம் இல்லை. உதய் கூறினால் நிச்சயம் அவன் தந்தை மாரு வார்த்தை பேசாமல் ஆதிக்கு டிக் போட்டுவிடுவார் என்ற சந்தோஷத்தில் வரவேற்பறை அருகே இருந்த உணவு மேஜையில் சுவாரஸ்யமாக கதை கேட்க தயாராக அமர்ந்தாள்.

மணிமேகலையை பார்த்தவன், செந்தமிழரசனை பார்த்து, "நானும் உங்ககிட்ட முக்கியமான விசியம் பேச தான் மாமா வந்துருக்கேன்" என்றான்.

"இல்ல உதய் உன்ன நான் இப்ப பேச விட மாட்டேன். கொஞ்சம் இரு" எழுந்து சென்றவர் திரும்பி ஒரு புகைப்படத்துடன் வந்தார் அந்த இடைவேளையில் மணிமேகலை அவனை ஆர்வமாய் பார்க்க விழிகள் மூடி திறந்து தைரியம் கூறினான்.

"இது நான் மணிக்கு பாத்துருக்குற பையன். பேர் ராம் பிரகாஷ். புதுசா இப்ப தான் ஒரு ஹாஸ்பிடல் கட்டி நிர்வாகம் பண்ணிட்டு இருக்கான். குணத்துல தங்கம், யாரும் சொன்னப்ப கேக்காம நானே அவனை கடந்த ரெண்டு வாரமா பாத்துட்டே தான் இருக்கேன். நம்ம மணிய சந்தோசமா வச்சுக்குவான். நீ நோ சொல்லிடாத... மாமா மனசு கஷ்டப்படும்"

சிரிப்பு அவர் இதழ்களில் இருந்து சிறிதும் மறையவில்லை, கண்களோ உதய்யின் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்த்தது. அவர் நீட்டிய புகைப்படத்தை சில நொடிகள் மௌனமாக பார்த்து தங்கள் எதிரில் இருந்த டீபாயில் வைத்தான்.

"நான் நோ சொல்ல போறதில்லை மாமா... அதே நேரம் நான் சொல்றத கேட்டுட்டு நீங்க உங்க பதில் என்னனு சொல்லுங்க" அவரின் கண்களை முதல் முறை சந்திக்க தவறினான் உதய்.

"நீ தப்பு செய்றவன் இல்ல உதய்" அவன் தயக்கம் உணர்ந்து ஊக்குவித்தார் அவர், "உன் மாமாகிட்ட எதுக்கு தயக்கம்?"

நீண்ட நெடிய மூச்சை விட்டவன் கண்களை மூடி
திறந்து தலையை உயர்த்தினான், "எனக்கு மணிய கல்யாணம் பண்ணி தர்றிங்களா?"















































 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
ஆதி என்ன பண்ணிட்டு இருக்க ஹரி விஷ்ணு எதையும் பண்ணல என் ஆதி உதய்க்கு வலிக்கும் இப்படி பண்ணி இருக்கா அப்படித்தான 😞😞😞
யாழினி நீயும் உதய கஷ்ட படுற மாறி பேசுற உனக்கு கல்யாணம் சொல்லுற அவன் wish பண்றான் 2 பேரோட மனசு உடைத்து தனா இருக்கு இப்படிலாம் பேசதிக💔
மணி கண்டிப்பா உதய் மாமா உனக்கு ஹெல்ப் பண்ணுவான் feel பண்ணாத ஆதி அவனோட உயிர் ❤️❤️
உதய் என்ன நீ விஷ்ணுவை மட்டும் வெளிய எடுத்து ஹரிய விட்டு இருக்க 😬😬
மாமா வீட்டுக்கு போற ஈஸ்வரன் மணி அப்பா இல்லையா மணி நம்பிக்கை ஓட இருக்க டேய் உதய் நீ என்ன லூசா மணியா கல்யாணம் பண்ணி தர சொல்லிட்டு இருக்க😲😲😲
ஆதியா பழி வாங்கவே இப்படி லம் பண்ணுராய 😐😐
மணி பாவம் தான🥺🥺🥺
 
Top