• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 26 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap - 26

யாழினியை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ஜெயன் எண்ணிற்கு அழைத்தான், "ஜெயன் எங்க இருக்கீங்க?"

"ஸ்டீல் இண்டஸ்ட்ரில சார்... பேப்பர்ஸ் செக் பண்ணிட்டேன், ப்ராடக்ட்ஸ் மட்டும் செக் பண்ண வேண்டி இருக்கு" - ஜெயன்

"நம்ம ப்லேன் ரெடி பண்ண சொல்லுங்க ஜெயன், ஒன் ஹௌர்ல மும்பை போகணும் நான்" உதய் தன்னுடைய அறையில் எடுக்க வேண்டிய மொத்த கோப்புகளையும் வேகமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்க, சில எலக்ட்ரானிக் பொருட்களையும் மறக்காமல் உடன் எடுத்துக்கொண்டான்.

"அரேஞ் பண்ணிறேன் சார், நான் இன்னும் ஹால்ஃப் அன் ஹௌர்ல ஏர்போர்ட் வந்துடுவேன் சார்" - ஜெயன்

"வேண்டாம் ஜெயன். கஜபதி(மும்பை ஸ்டீல் கிளை சி.ஈ.ஓ) அவரோட டீம் இருப்பாங்க, யாழினி பின்னாடி செட் பண்ணிருக்க நம்ம கார்ட்ஸ வர சொல்லிடுங்க மாமா யாழினிய என்ன பண்ராருனு நான் பாக்கணும்" - உதய்

"சரி சார்... நான் பைலட்ஸ்ட்ட பேசிட்டு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் பண்றேன்"

"ம்ம்ம்" உதய் அடுத்த மூன்று மணி நேரத்தில் மும்பையில் உள்ள அவர்களின் சிறு பிளாட்டில் இருந்தான், கஜபதி பாசுவுடன். முக்கியமான தொழில் சார்ந்த விசயங்களை பேசி முடித்தவர்கள் இரவு உணவிற்கு அங்கிருந்த உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தார்கள்.

"எல்லாமே அரேஞ் பண்ணிட்டேன் உதய், ஆனா நீங்க வரணும்னு அவசியம் இல்லையே நானே பண்ணிருப்பேன்"

உதய்க்காக பிரத்யேகமாக செய்யப்படும் தென் இந்திய உணவு வகைகளை ரசித்து உண்டு வேளையிலும் கவனமாய் இருந்தார் அந்த ஐம்பத்தி மூன்று வயது மனிதர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இயங்கும் உதய்யின் அலுவலகங்கள் மொத்தமும் உதய்யின் பார்வையில் இருந்தாலும் அதன் பொறுப்புகளை நீண்ட நாட்கள் ஆராய்ந்து நியமித்திருந்தான் பொறுப்பை கொடுத்திருந்தான்.

"இல்ல கஜபதி நான் வந்தே ஆகணும். பாதுகாப்புக்கு யாரும் வர வேணாம், நீங்க மட்டும் கூட வரணும். புல்லட் ப்ரூப் கார் இருந்தா போதும்"

அவர் விரும்பி உண்ட இட்லியை அவர் தட்டில் ஒன்று வைத்தவன், "பேசாம சென்னை வந்துடுங்க கஜபதி, நாக்குல அந்த டேஸ்ட்ட மாத்தாம அப்டியே வச்சிருக்கும்"

அவன் கூற்றில் சிரித்தவர், "நீங்க இருக்கறப்ப எனக்கு அங்க என்ன உதய் வேலை? இப்பயே பேருக்கு ரெண்டு வேலை தான் பாக்குறேன், அதுவும் அங்க வந்தா இல்லாம போய்டும்"

மெல்லிய சிரிப்போடு, "கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறது தப்பில்லையே..." ருசியாக தான் இருந்தது உணவு ஆனால் அவன் வீட்டில் உண்பது போல் திருப்த்தி இல்லை, மூன்று இட்லிகளோடு உணவை முடித்தான்.

"எடுக்கலாம்... இன்னும் அஞ்சு வருஷம் வெயிட் பண்ணிட்டு அப்றம் எடுத்துக்கலாம் ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு நீக்கவே இடம் குடுக்காத மாதிரி வேலை தரணும்" தானும் உண்டு முடித்து தன் மடியில் இருந்த டவலை எடுத்து இதழை துடைத்தார் திருப்த்தியில்.

"நிக்க முடியாத மாதிரி வேலையா?" சிரிப்போடு கேட்டான் உதய். ஆமாம் என்று அவர் தலையை ஆட்ட, "ஜேர்மன் போறிங்களா?" அவனது அந்த கேள்வியை சிறிதும் அவர் எதிர் பார்க்கவில்லை.

சில வருடங்கள் தான் கஜபதி பழக்கம், அதுவும் கல்கத்தாவில் ஒரு முறை தொழிற் கூட்டத்தில் பார்த்தது, அப்பொழுதே அவரது திறமை பிடித்திருக்க, தன்னுடைய தொழிற்சாலையில் அவரை வேலைக்கு வரவழைத்து முழுமையாக அவரை கண்காணிக்க துவங்கினான். அதுவே அவரை அடுத்த வருடமே சி.ஈ.ஓ பதவியில் அமர வைத்தது அவரது நேர்மை, பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு தான்.

"உங்க மாமா..." இழுத்தார் தயக்கத்துடன்.

"மாமா-கு நான் செய்ய வேண்டிய கடமை கொஞ்சம் இருக்கு" அவன் பேச்சுகளின் உள் அர்த்தத்தை அவர் என்று உணர்ந்திருக்கிறார் இன்று மட்டும் புரிந்துகொள்ள?

"சின்ன பையன் இப்ப தான் ஸ்கூல் முடிச்சிருக்கான் உதய்... டெல்லி ஐ.ஐ.டீ-ல படிக்க வைக்கலாம்னு இருந்தேன்..." அவர் குரலே யோசனையில் இருக்க பார்த்தான்.

"யூனிவர்சிட்டி ஆப் கேம்பிரிட்ஜ்-ல உங்க பையனோட டாக்டர் சீட்-கு நான் பொறுப்பு" அவ்வளவு பெரிய நிறுவனத்தை மறுக்க தோன்றுமா? "திருப்த்தி இருந்தா சொல்லுங்க மேல ப்ரோசீட் பண்ணலாம். இல்லனா பரவால்ல ஐ வோண்ட் கம்பெல் யூ" நாற்காலியிலிருந்து உதய் எழ, கஜபதியும் எழுந்தார்.

"நாளைக்கு பாக்கலாம்" இருவரும் கைகுலுக்கி விடைபெற்றனர்.

மறுநாள் காலை மும்பை நெடுஞ்சாலையில் காலை எட்டு மணிக்கு உதய்யின் கைகளில் சீறி பாய்ந்தது அந்த புல்லட் ப்ரூப் கருப்பு ஆடி RS Q8 கார். மும்பையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும் அந்த பயணத்தை முக்கால்வாசி நேரம் செய்தியையும் பங்கு சந்தைகளின் நிலவரத்தையும் கேட்டுக்கொண்டே உதய் வர, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கஜபதி தன் பங்கிற்கு கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தார்.

பல நிமிடங்கள் உலக நிலவரத்தை கேட்டுக்கொண்டிருந்த உதய் அதை நிறுத்தி வைக்க, கஜபதியும் புத்தகத்தை மூடி வைத்து, "இப்ப கூட நேரம் இருக்கு உதய், நீங்க சொன்னா நம்ம ஆளுங்கள வர வச்சிடுவேன். அங்க தனியா போகிறது அவ்வளவு சேப் இல்ல"

அவனோ சிரித்துவிட்டு, "பரவால்ல கஜபதி எனக்கு உயிர் மேல அவ்வளவு நாட்டம் இல்ல" எவ்வளவு எளிதாய் கூறிவிட்டான் ஆனால் அவனை நம்பி இருக்கும் உயிர்கள் கூட அவன் எண்ணத்தில் உதிக்கவில்லை.

இதழ்கள் பிரித்து, "போகலாமா?"

அப்பொழுது தான் அவர் அவர்கள் வர வேண்டிய Paradis Feu Resort என்ற பிரெஞ்சு எழுத்துக்கள் தூரத்தில் இருந்து பார்த்தாலே அந்த ரெசார்ட்டின் இருப்பு தெரிந்தது.

காரை ஓரமாக நிறுத்தி தன்னுடைய பையிலிருந்து ஒரு சிறு எலக்ட்ரானிக் பொருளை எடுத்து கைகளில் வைத்து இவருக்கோ அழைத்து, "ஆக்டிவேட் பண்ணிடுங்க" என்றான்.

சில நொடிகளில் அவன் கையிலிருந்த ஈயின் அளவே இருந்த சாதனம் தானாக காற்றில் பறந்தது. "என்ன உதய் அது?"

"நானோபோட் ஸ்பை கேமரா" என்றவன் மீண்டும் வாகனத்தை இயக்கினான்.

"பயப்புடாம மட்டும் இருங்க கஜபதி மத்த எல்லாமே நான் பாத்துக்குறேன்" உறுதியோடு உதய் அந்த ரிசார்டின் வாயிலை அடைந்த சமயம் திறந்திருந்த அந்த இரும்பு கதவின் அருகில் நின்றிருந்த இரண்டு காவலர்கள் வந்து வழியை மறித்தனர்.

காரின் கண்ணாடியை இறக்க சொல்லி, உதய்யை பார்த்த உடனே அவர்கள் அவனை அடையாளம் கண்டுவிட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை அவர்கள். உதய்யிடம் அந்த காவலாளி ஆணையிட்டுக்கொண்டிருக்கும் பொழுதே அவர்களை பார்த்த வேறு சிலரும் கையில் ஆயுதம் ஏந்தி வந்துவிட உதய்யை வெளியே துரத்துவதிலேயே குறியாய் இருந்தனர்.

அவர்கள் பேச்சிற்கோ அவர்களுக்கோ மதிப்பே கொடுக்காதவன் மௌனமாய் இறக்கியிருந்த காரின் கண்ணாடியை முழுதாய் மூடியவன் காரை சற்று பின் நோக்கி செலுத்த அந்த காவலர்களின் கூட்டம் சிதறி தங்களுக்குள்ளே ஏதோ பேச துவங்க ரிசார்டின் உள்ளே பார்த்தான். அவனுக்கு கிடைத்த தகவலின்படி சில நூறு மீட்டர் நுழைவாயிலை தாண்டி தான் ரிசார்ட்டை அடைய முடியும்.

"உள்ள போக வழியே இல்லையா உதய்?" சந்தேகத்தோடு கஜபதி கேட்கவும்,

"வழி தானா வராது கஜபதி, நாம தான் உருவாக்கணும்" அவன் பேசியதன் அர்த்தம் அவர் மூளைக்கு எட்டும் முன்பே வாகனத்தின் வேகத்தை அதிகரித்து காரின் டயர்கள் கீரிச்சிட வேகமாக அந்த வாயிலை தாண்டி உதய்யின் சார் உள்ளே செல்ல செல்ல அவன் காரினை துரத்தி வந்த காவலாளிகளால் முடியாமல் போக அடுத்த சில நொடிகளில் உதய்யின் காரை நோக்கி துப்பாக்கி தாக்குதல் நிகழ்ந்தது.

என்ன தான் புல்லட் ப்ரூப் வாகனமாக இருந்தாலும் கஜபதிக்கு உடல் மொத்தமும் நடுங்கியது, "சார் என்ன சார் கன் வச்சு சுடுறாங்க... இதுக்கு தான் இந்த கார் கேட்டீங்களா நீங்க?" கைக்கு கிடைத்த பிடிமானதை இறுக பற்றி பதட்டத்தோடு கேள்வி எழுப்பினார்.

சிரிப்பை மட்டுமே அவன் பதில் அளிக்க இன்னும் தங்கள் வாகனத்தில் குண்டுகள் சரமாரியாக பாய, வாகனத்தில் வேகத்தை குறைத்து அப்டியே நடுவில் நிறுத்திவிட்டான். 'இவன் என்ன பைத்தியமா?' என்ற பயம் கலந்த சந்தேகத்தில் கஜபதி மிரட்சியுடன் அவனை பார்த்தார்.

"உதய்..." பயத்துடன் அவர் அவனை கேள்வியாக பார்க்க, "பயம் வேண்டாம் கஜபதி ஒரு குண்டு கூட உள்ள இறங்காது" ஆனாலும் இவ்வளவு அசட்டு நம்பிக்கை ஒரு மனிதனுக்கு இருக்க கூடாதென்று தோன்றியது.

சில நொடிகள் நீண்டுகொண்டே சென்ற தாக்குதல் அப்டியே நின்றுவிட, அதை கணித்த உதய் மாதவன் மீண்டும் தன்னுடைய வாகனத்தை இயக்கி சிறு சிறு காட்டேஜ்களாக இருந்த ரெசார்ட்டின் மைய பகுதியை அடைந்தான். கருப்பு கண்ணாடியை அணைந்து காரின் கதவை திறந்து உதய் இறங்க, கஜபதி இன்னும் குண்டு மழையை எதிர்பார்த்தது போல் உள்ளேயே அமர்ந்திருந்தார்.

"வாங்க இனி சுட மாட்டாங்க" அரைகுறை நம்பிக்கையுடன் கீழே இறங்கி உதய்யுடன் சென்றார். அந்த ரெசார்ட்டின் ஒரு ஓரத்தில் வெறும் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட உணவகத்தை நோக்கி நடந்தவன் கண்களுக்கு சற்று தொலைவில் இருந்த கடலும் அதன் அலை ஓசையும் கேட்க அதையும் பார்த்துக்கொண்டே அமைதியாக ஒரு காலி மேஜையில் அமர்ந்தான்.

பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த கஜபதி, "உதய் ஏன் எல்லாரும் நம்மள இப்டி பாக்குறாங்க?" என்றார் சந்தேகமாக. தோளை குலுக்கி அமைதியாகிய உதய்யின் முன்னாள் ஆவேசமாக கோட் சூட் அணிந்து வந்தமர்ந்த நீரஜ் தழலை சிறிதும் பொருட்படுத்தாது, "காலைல டிபன் சாப்பிடலல? போஹா (அவல் உப்மா) சாப்பிடலாம்னு இருக்கேன்" என்றவன் திரும்பி ஒரு பேரரை அழைத்தான், "எனக்கு ஒரு போஹா, கஜபதி உங்களுக்கு?"

கஜபதி நீராஜின் வரவை எதிர்பார்த்தே இருக்க, உதய் பக்கம் திரும்பி, "உதய்..." என்றார் குழப்பத்தில். அவனோ அதே பேரரிடம், "ஓகே ஒன் போஹா மட்டும்" என்றான்.

"போஹா ஓவர் சார்..."

"ஓ சாரி அப்ப கன் கிடைக்குமா?" கனல் விழிகளுடன் அவ்வளவு நேரம் அமைதியாக உதய்யை பார்த்துக்கொண்டிருந்த நீரஜ் தழல் குரல் ஓங்கியது, "மாதவன்..." என்று.

அப்பொழுது தான் எதேச்சையாக அவனை பார்ப்பது போல் திரும்பிய உதய், "ஓ ஹாய் தழல். நீங்க என்ன இங்க... பயந்துட்டீங்களா?" 'பயத்தில்' சற்று அழுத்தம் கொடுத்தவன், "வர்றப்ப ஒரு சின்ன இன்சிடென்ட் அதே நியாபகத்துல சொல்லிட்டேன். டோன்ட் மைன்ட் மீ"

நீரஜ் அந்த பேரரை பார்த்து முறைக்க அவன் சென்றுவிட்டான்.

"சார்" தாளில் பி.எ அவனை அழைக்க, ஏற்கனவே தன்னுடைய ரெசார்ட்டிற்கு உதய் ஆட்கள் அனுப்பியது அவனுக்கு கோவம், இதில் இன்று தன்னுடைய இடத்திற்கு வந்ததும் மட்டும் இல்லாமல் துப்பாக்கியை கேட்டது கிலியை கிளப்பியது தழல் மனதில் ஆதலால் கையை நீட்டி அவனுடைய பேச்சை தடுத்தான் தழல்.

"எதுக்கு மாதவன் என்னோட இடத்துக்கு வந்த?" சீற்றமாக கேள்வி எழுப்பினான்.

"நிஜமா இது உங்க இடமா? கஜபதி இது தழல் பார்ட்னர் ரிசார்ட்-னு என்கிட்டே பொய் சொல்லிருக்கீங்க" சிரிப்போடு கஜபதியை குற்றம் சாட்டினான்.

"குட் மார்னிங் மிஸ்டர் தழல்" - நட்பாய் புன்னகை சிந்தினார் கஜபதி. ஆனால் முழு சீற்றத்தில் இருந்த நீரஜ் கண்களுக்கு உதய் மட்டுமே தெரிந்தான்.

எவ்வளவு திமிர் இருந்தால் இவ்வளவு தெனாவெட்டாக தன்னுடைய ஆட்களையே மீறி தன்னுடைய இடத்தில் தனக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு கண்ணாடியை அணிந்து... பார்க்க பார்க்க நீரஜ் மனதில் நெருப்பு பற்றிக்கொண்டு வந்தது.

"மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க மாதவன்?" வன்மம் வார்த்தைகளாக வந்தது.

நீண்ட மூச்சு ஒன்றை விட்டு, "இதே மாதிரி சென்னைல ஒரு ரிசார்ட் கட்டணும்-னு நெனச்சிட்டு இருந்தேன் கரெக்ட்டா நீங்க கேட்டுட்டீங்க தழல்... என்ன டைமிங்...?" சிலாகித்தவனின் குரல் நக்கலில் வழிந்தோடியது.

"எல்லாமே உன் கண்ட்ரோல்ல இருக்குன்ற தைரியம் உனக்கு அளவுக்கு அதிகமாவே இருக்கு... அதையும் உடைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது" - நீரஜ் தழல்.

"எல்லாமே என் கண்ட்ரோலா?" வியந்தது போல் நடித்தவன், "இப்ப கூட ஆதி கேசவன் பின்னாடி அடிக்க ஆள் அனுப்புன உன்ன இந்த டேபிள் மேல போட்டு அடிச்சு துவக்கணும்னு என் மூளை என் கண்ட்ரோல் தாண்டி போகுது... இதுல எப்படி தழல் எல்லாமே என் கண்ட்ரோல்ல இருக்கும்?" உதய்யின் கண்களில் தெரிந்த கோவம் தன்னுடைய அவசர புத்தியை எண்ணி சற்று சுணங்கியது.

ஆனாலும் நிலையை சமாளிக்க எண்ணி, "அப்ப மாதவன் வீக்னஸ் ஆதி கேசவன் தான்-னு முத்திரை குத்திடலாமா?" வாய் விட்டு யார் கவனத்தையும் உறுத்தாமல் சிரித்த உதய், அதே சிரிப்போடு தன்னுடைய கைபேசியை எடுத்து பார்த்து பிறகு மீண்டும் தழல் முகத்தை பார்த்தான்.

"இப்டியே அடுத்தவன் வீக்னஸ் பாத்துட்டே இருந்தா உன்னோட பிசினஸ எவன் டா பாப்பான் முட்டா பயலே"

எப்பொழுதும் உதய்யிடம் இருக்கும் மரியாதை அந்த நொடி காற்றில் பறந்தது அதே நேரம் எள்ளல் சிரிப்போடு தன்னை பார்த்து சிரித்தவனை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினான் தழல்.

"உன் பின்னாடி ஒருத்தன் பி.பி பேஷன்ட் மாதிரி வேர்க்க வேர்க்க நிக்கிறான்ல அவன்ட்ட என்னனு தான் கேளேன்..."

நீரஜ் திரும்பி அவனை பார்க்க, "பெரிய ப்ராப்லம் சார்" உடனே இருக்கையிலிருந்து எழுந்தவன் தன்னுடைய பி.எ வை அழைத்து சில அடி தூரம் தள்ளி நிருத்தினான். "எ.டீ.எப் ரைட் சார்... டால்பின் பிளாக்ல"

பி.எ வின் கையை வலிக்கும் அளவிற்கு இருக்க பிடித்தவன், "ஆர் யூ ட்ரங்க?" என்றான் பற்களை கடித்து. வலி தாங்க முடியாமல் முகத்தை சுருக்கி, "சீஸ் பண்ணிட்டாங்க சார் பொருள் எல்லாம். சீலும் வச்சிட்டாங்க" பெரிய அடி தான் தழலுக்கு இது.

அந்த டால்பின் பிளாக்கில் தான் சிறிய அளவில் சட்டவிரோதமான துப்பாக்கிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தான். அதை வெளியில் இது நாள் வரை தெரியாமல் வைத்திருந்தவன் எப்படி வெளியில் செய்து சென்றது என்று சத்தியமாக தெரியவில்லை.

"டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்ல இருந்தும் ரைட் என்ஜின் ஒர்க்ஸ் எல்லாமே பாத்துட்டாங்க" இந்த தகவலையும் கேட்ட பிறகு மொத்த கோவமும் உதய் மாதவன் மீது படிந்தது, அவன் பக்கம் திரும்பி எல்லை இல்லாத கோவத்தை காட்டினான் கண்களாலே...

"உங்கள அர்ரெஸ்ட் பண்ண வந்துட்டு இருக்காங்க... நெக்ஸ்ட் செவன் இயர்ஸ் எந்த கவெர்மென்ட் ப்ராஜெக்ட்லயும் நாம பிட் பண்ண ரெஸ்ட்ரிக்ஷன் போட்ருக்காங்க"

தன் மேல் படிந்த நீராஜின் கண்களை உணர்ந்தவன் கைபேசியிலிருந்து தலையை தூக்கிய உதய், எகத்தால சிரிப்போடு, "ஸ்பை கேமரா உன்னோட லேப்ல வச்சேன்னு நினைச்சியா? உன்னோட பிஸ்னஸ்கு வச்சேன்டா சாலா"

இருக்கையிலிருந்து உதய் எழுந்து தழல் அருகில் வர, தன்னுடைய கோவத்தை கட்டு படுத்த முடியாத நீரஜ் உதய்யின் சட்டையை கோவத்தில் பிடித்தான்.

"யூ கன்னிங்..."

"உஷ்..." தன் வாயில் விறல் வைத்து அவனை அமைதி படுத்தினான் உதய், "என்னோட ப்ராஜெக்ட் மட்டும் என் கைக்கு வரணும்னு தான் நினைச்சேன், என்னைக்கு ஆதி மேல கை வைக்கணும்னு நினைச்சியோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் உன்ன விட்டு வைக்க கூடாதுனு. யோசிச்சதுக்கே இந்த அடி விழுந்துச்சுனா, உன் ஆளுங்க கை அவன் மேல பட்ருந்தாலும் உன் உயிரையே எடுத்துருப்பேன் தழல்"

தன் சட்டையிலுருந்த அவன் பிடியை எடுத்து தன்னுடைய வாகனம் நோக்கி சென்றவனை இயலாமையோடும், வற்றாத க்ரோதத்தோடும் பார்த்தான் நீரஜ் தழல்.

சென்றவன் ஒரு நொடி நின்று, "என்னோட வீக்னெஸ்க்கு முத்திரை குத்தணும்னு யோசிச்சதுக்கே உன்னோட கம்பெனிகு முத்திரை நச்சுனு ஒன்னு குத்திட்டேன். எல்லா நேரமும் இதே பொறுமை என்கிட்ட இருக்காது" எச்சரித்து சென்றவனை அந்த இடத்திலே வைத்து உயிரோடு எரிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தினான் தழல்.

கஜபதியை அங்கு இருந்து செய்ய வேண்டிய சில வேலைகளை இருந்து பார்த்துவிட்டு வர கூறியவன் வாகனத்தை அங்கையே நிறுத்தி வைத்து சாலையில் சிறிது தூரம் நடக்க தன் தலைக்கு மேல் வந்த ஹெலிகாப்டர் ஒன்றை தலை தூக்கி பார்த்தவன் ஆள் அரவமற்ற அதே நெடுஞ்சாலையில் இறக்க ஆணையிட்டான். இவ்வளவு அவசரமாய் ஹெலிகாப்டர் வர கூறியிருப்பதன் காரணம், நேற்றே தன்னுடைய கைபேசியில் வந்த யாழினியின் புகைப்படம்.


*************

தங்கையின் அழுகுரலை கேட்ட யாழினிக்கு கால்கள் நடுக்கமாகவே இருந்தது குழலினி குறிப்பிட்டிருந்த காவல் நிலையம் செல்லும் வரை. தங்கை கூறிய சாலையில் இருக்கும் காவல் நிலையத்தை வந்தடைந்தவள் கால்கள் அதற்கு மேல் செல்ல அச்சம் கொண்டது, உண்மையில் கால்கள் கூசியது என்று தான் கூற வேண்டும்.

காவல் நிலையத்திற்கும், மது கூடத்திற்கும் மட்டும் எந்த நிலையிலும் செல்லவே கூடாதென்பது தான் அவள் சிறு வயதில் இருந்து உறுதி. காரணம் தந்தை செயலால் ஒரு முறை காவல் அதிகாரிகள் அவர்கள் இலத்தின் முன்னாள் வந்து அந்த மொத்த தெருவும் கேட்கும்படி சகட்டுமேனிக்கு பேசி சென்றனர்.

இப்பொழுதும் அவர்கள் தந்தையை வரம்பு மீறி பேசியது காதில் விழ, கண்களில் நீர் திரள நடையை மேலும் தொடர்ந்தாள். வாயிலிலேயே கண்ணீர் மல்க நின்றிருந்த சகோதரியை பார்த்தவள் வேகமாக அவளை நோக்கி சென்றாள் யாழினி.

"குழல்..." படபடப்போடு சகோதரி அருகே சென்றவன் அவளுடைய வாடிய தோற்றத்தை கண்டு குழலினியின் கையை தன் கைகளுக்குள் அள்ளி, "உனக்கு ஒன்னும் இல்லையே" ஏனோ அந்த இடம் பயத்தை தந்தது யாழினிக்கு.

"கா... அப்பா" சகோதரியை பார்த்தவுடன் மனதில் தேக்கி வைத்திருந்த வார்த்தைகள் வர மறுத்தது.

"உனக்கு ஒன்னும் இல்லல குழல்?" தந்தையை விட தனியாக கையை பிசைந்து கண்ணீருடன் நின்ற சகோதரி அந்த நொடி யாழினிக்கு முக்கியமாய் பட்டாள்.

"இல்ல க்கா எனக்கு ஒன்னுமில்ல..."

"அம்மா எங்க?"

"நம்ம ஏரியா கவுன்சிலர் கிட்ட பேசி ஏதாவது லாயர் ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்க போயிருக்காங்க" - குழலினி

புசு புசு வென கோவம் யாழினிக்கு தலைக்கு ஏறியது, "அறிவில்ல? இப்படியா இங்க எல்லாம் தனியா நிப்ப? உன்ன சொல்லி என்ன பண்றது அந்த அம்மா-கு அறிவு இருக்கனும். உன் அப்பா என்ன சின்ன குழந்தையா அவருக்கு பாதுகாப்புக்கு நீ வெளிய நிக்க?"

"அக்கா..." காரணமே இல்லாமல் கோவப்படும் சகோதரியை குழப்பமாய் அழைத்தாள்.

குழலினியின் கையை பிடித்து உள்ளே சென்றவள் அங்கிருந்த ஒரு காவல் அதிகாரியிடம், "சார் அப்பா மேல என்ன கேஸ்..."

பயத்தோடு அவள் கேட்க, எதையோ எழுதிக்கொண்டிருந்த அந்த போலீஸ் அதிகாரி, யாழினியை தலை தூக்கி பார்த்தார், பிறகு குழலினியை பார்த்து, "ஏன் மா ஒவ்வொருத்தருக்கா நான் சொல்லிட்டே இருக்கணுமா?"

எரிந்து விழுந்தவர் மீண்டும் யாழினி பக்கம் திரும்பினார், "உன் அப்பன் கொலை செஞ்சிருக்கான். அவனோட மச்சான் கம்ப்லைன் குடுத்து உன் அப்பனா காப்பாத்தி வச்சிருக்கான். இல்லனு வை உன் அப்பன் கொலை பண்ண ஆளோட பசங்க, மருமகனுக இந்நேரம் உன் அப்பன் உரு தெரியாம ஒடம்ப வெட்டி வீசிருப்பானுக" அவர் கூறியதை கேட்ட குழலினி யாழினியின் கையை இறுக பற்றி சகோதரியின் தோளில் சாய்ந்து சத்தம் வராமல் விசும்பினாள்.

சகோதரியின் கையில் அழுத்தம் கொடுத்து, "அப்பா அப்டி பண்ண மாட்டாரு சார்... எங்களை கூட அடிக்க மாட்டாரு" தந்தைக்கு வக்காலத்து வாங்க அதில் கடுப்பான அந்த போலீஸ், "அப்ப நாங்க பொய் சொல்றோமா? ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு. குடிச்சிட்டு அவன் ஆடுன ஆட்டம் என்ன... பேசுன பேச்சு என்ன... பொம்பள புள்ளைங்க-னு நிதானமா பேசிட்டு இருக்கேன்" தன்னுடைய வேலை பளு எல்லாவற்றிலும் இருந்த கோவத்தை அவள் மீது இறக்கினார்.

"சார் ப்ளீஸ் சார்... ஏதாவது உதவு பண்ணுங்க... எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல"

நிதானமாக மூச்சு விட்டு, "உதவி எல்லாம் என்னால பண்ண முடியாது மா. இரக்கப்பட்டு ஒவ்வொருத்தருக்கா பாத்தா நான் எத்தனை பேருக்கு உதவி பண்ணிட்டே இருக்க முடியும்?" - போலீஸ்

"சார் ப்ளீஸ் சார்..." யாழினி மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். ஒரு நிமிடம் யோசித்தவர் உள்ளே எட்டி பார்த்தார், இன்ஸ்பெக்டர் அங்கே தான் அமர்ந்திருந்தார்.

"இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி, உன் அப்பா கிட்ட பேச ஏற்பாடு பண்றேன், என்ன நடந்துச்சுனு தெளிவா கேட்டுட்டு வேற ஏற்பாடு பண்ணுங்க" அதுவே போதுமானதாக இருக்க நன்றியோடு கண்ணீரை துடைத்து சற்று ஒதுங்கி நின்றனர் இருவரும்.

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் இருந்த அந்த காவல் நிலையில் குற்றங்களுக்கும் கூட்டத்திற்கும் குறைவில்லாமல் திருவிழாவை போல ஜெகஜோதியாக மதிய வேளையிலும் காட்சியளித்தது. எங்கு திரும்பினாலும் க்ரோதமும் ஆத்திரமும் மட்டுமே இருந்தது. சிலரின் பார்வை தங்கள் மீது மோகமாய் படிவத்தை கூட உணர்ந்த யாழினி சகோதரியை தன்னோடு ஒட்டி நிறுத்தி தன்னுடைய முந்தானையை தோளோடு எடுத்து போர்த்தினாள்.

"அம்மாக்கு போன் பண்ணு குழல்" சகோதரிக்கு ஆணையிட்டு சுவற்றை வெறித்து பார்த்து அமர்ந்தவள் காதுகளில் சுற்றி கேட்ட சலசலப்பும், காவலர்களின் அடியை தாங்காது கதறிய கைதிகளின் சத்தமும் மனதை போட்டு அழுத்தமாய் பிசைந்தது.

சிறிது நேரத்திற்கு முன்னர் உதய்யின் கைகளில் கிடைத்த அமைதியும் பாதுகாப்பும் வேண்டும் என்று மனம் ஏங்கியது. அவனின் உதவியை நாடலாமா? என்ற எண்ணம் அப்பொழுது தான் வர கைபேசியை எடுத்து அவனுடைய எண்ணிற்கு அழைத்தாள் ஒரு உரிமையுடன். ஆனால் அவள் நேரம் அவன் எண் நாட் ரீச்சபில் என்ற செய்தியை தந்தது.

உடனே ஜெயன் எண்ணிற்கு அழைத்து கேட்க, "முக்கியமான வேலை-னு நீ போன ஒடனே சார் மும்பை கெளம்பிட்டாரு யாழினி. கால் பண்ணப்ப கூட எடுக்கல" என்ற தகவலை கேட்டது யாழினிக்கு இருந்த யானை பலம் ஒரே நொடியில் வடிந்தது.

எதுவும் பேசாமல் இணைப்பை துண்டித்து அமர்த்தவளை அந்த கான்ஸ்டபில் அழைத்தார், "லெப்ட் சைட்ல இருக்க லாக்கர்ல உங்க அப்பா இருக்காரு வேகமா பேசிட்டு வாங்க" என்கவும் நடுங்கிய கால்களோடு மனதில் பயத்தோடும் உள்ளே சென்றவர்களை அங்கிருந்த சிலர் விசித்திரமாக தான் பார்த்தனர்.

"க்கா.." சகோதரியின் நடுங்கிய குரலில் தன்னை திடப்படுத்தி தன்னோடு நெருங்கி நிறுத்திய யாழினி, அந்த காவல் அதிகாரி கூறிய செல்லிற்கு முன்னாள் வந்து பாத்தா பொழுது இரு ஆண்கள் சட்டை, இல்லா
மல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து தங்களுக்குள்ளே பேசி கொண்டிருக்க பெண்கள் இருவரையும் பார்த்த ஒருவன் கண் சிமிட்டி சிரிக்க வேகமாக சகோதரியை தனக்கு பின்னால் நிறுத்தினாள் அவர்களை கண்டுகொள்ளாமல்.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

"அப்பா..." பயத்தை வெளிக்காட்டாமல் தெளிவாக வந்த குரலுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போக, பெண்களை பார்த்து கண்ணடித்தவன் சுவற்றின் பக்கம் திரும்பி, "யோவ் உன் குட்டிகளா பாரு?" அவன் பேச்சை கேட்ட யாழினிக்கு தங்களை இந்த இடத்தில் நிறுத்திய தந்தையின் மேல் கட்டுக்கடங்காத கோவம்.

அதையும் தாண்டி, சகோதரியை தனியாக விட்டு சென்ற அன்னை மேல் அளவுக்கு அடங்காத ஆத்திரம் தான் வந்தது. சில நொடிகளில் நடக்க சிரமப்பட்டு அவள் தந்தை நொண்டி நொண்டி வர மகள்களை பார்த்ததும் கலங்கிய விழிகளுடன் நின்றவர் மேல் சிறிய இரக்கம் தோன்றியது, இப்பொழுதாவது பிள்ளைகளை பற்றிய கவலை அவர் கண்ணில் தெரிகின்றது என.

"பாத்தியா யாழினி, உன் அப்பாவை இந்த நிலமைல வந்து நிறுத்திருக்காங்க-னு. கொஞ்சம் கூட மனுஷ தன்மையே இல்லாத மனுசங்க. காசுக்காக தான் பண்ணுறானுக படுபாவி பயலுக... அப்பாவை எவ்ளோ காசு காட்டினாலும் வெளிய எடுத்துட்டு மா... உள்ள இருக்க முடியல" தன் மேல் குற்றம் சுமத்திய மனிதர்களை வஞ்சித்தவர் அந்த நிலையிலும் தன்னை பற்றியே யோசிக்க, தந்தை மீது வெறுப்பு மட்டுமே வந்தது.

தந்தையின் வலியை பொறுக்க முடியாத குழலினி, "அப்பா..." வேதனையுடன் சகோதரி பின்னிருந்து தந்தையை நோக்கி செல்ல, அவள் கையை பிடித்து மீண்டும் தன் பின்னே நிறுத்தினாள்.

சரியாக அந்த நேரம் அவர்கள் அன்னையும் வந்துவிட, கணவனை காயங்களுடன் பார்த்த வேதனையில், "என்னங்க..." கேவலோடு கணவன் கையை கம்பிகளின் இடையில் பற்றினார்.

சுயநல மனதோடு இருக்கும் மனிதரை பார்த்து முகத்தில் எரிச்சல் கூடி அன்னையை அவர் கையை விட்டு பிரித்தவள், "நீங்க தான் கொலை பண்ணிங்களா?" என்றாள் இயந்திரமாய்.

"என்ன யாழினி கேள்வி கேக்குற? அப்பா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா... பாரு மனுஷன் எப்படி அடி வாங்கிருக்கார்-னு... ஐயோ வலிக்குதாங்க? அந்த கவுன்சிலர் வேற கைய விரிச்சிட்டான்... இறந்தது ரொம்ப பெரிய ஆள்-னு" தன்னை கூட அன்னை இவ்வளவு பாதுகாத்ததில்லை.

"அப்பா அப்டி பண்ணிருக்க மாட்டாங்க க்கா"

"நீங்க ரெண்டு பேரும் இப்ப அமைதியா இருக்க போறிங்களா இல்லையா?"

பற்களை கடித்து கேட்டவளை பார்த்து இருவரும் அமைதியாகிவிட, "சொல்லுங்க நீங்க கொலை பண்ணிங்களா?"

யாழினியின் கண்களை தவிர்த்தவர், "எப்படியும் வழக்கமா போற பார் ஏதோ பிரச்சனை-னு வேற பார் போனேன் யாழினி ம்மா... அங்க போய் நா அமைதியா தான் இருந்தேன்... அவனுங்க தான் சண்டைக்கு வந்து அது இது-னு பேசி பிரச்சனையா பெருசாக்குணங்க. அது தான் கோவத்துல கைல இருந்த ஒரு பாட்டில் எடுத்து அடிச்சிட்டேன்" அவர் செயலில் அதிர்ச்சியான அவள் அன்னை ஏதோ பேச வர, யாழினி ஒரே பார்வையில் அவரை அடக்கினாள்.

"ஆனா ஒரே ஒரு அடி தான் அடிச்சேன்... அதுக்கு அப்றம் சுத்தி நெறைய பேர் வந்தனால பயத்துல ஓடி வந்துட்டேன் யாழினி... கண்டிப்பா கொல்லணும்னு நான் எதுவுமே பண்ணல"

கண்ணீரும் நடிப்புமாய் பேசியவரையும் அன்னையையும் பார்த்து, "போதுமா? கேட்டாச்சுல? உன் புருஷன் தான் கொலை பண்ணிருக்காரு. கடை மூடிருந்தா வீட்டுக்கு வர வேண்டியது தான? ஏன் அந்த கருமம் இல்லனா செத்தா போயிடுவீங்க?"

ஏதோ ஒரு உணர்ச்சியில் சத்தமாக பேசியவன் பிறகு நிதானித்து, "பத்து பதினஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்து களி திங்கட்டும்" சகோதரி, அன்னையின் கெஞ்சல் மொழிகள் எதுவும் காதில் விழ வில்லை.

விறு விறுவென இல்லம் நோக்கி நடந்தவள் வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி வந்த சமயம் அழுது புலம்பியவாறே அன்னையும் சகோதரியும் இல்லத்தில் நுழைந்தனர். மகளை பார்த்தவுடன் அவள் கையை பிடித்து, "அம்மகாக அப்பாவை வெளிய கூட்டிட்டு வா யாழினி" இறைஞ்சினார்.

"யாருக்காகவும் அவரை வெளிய கூட்டிட்டு வர மாட்டேன். அனுபவிக்கட்டும், தண்டனையை அனுபவிக்கட்டும் அப்டியாவது திருந்துறாரா பாக்கலாம்" - யாழினி

"என்னடி பேசுற? அவரு உன்ன பெத்தவரு. அந்த நன்றி உனக்கு கொஞ்சமாவது இருக்கா?"

அன்னையை தொடர்ந்து, தங்கையும், "அப்பா அடிச்சாரு தான் ஆனா அதுனால அவர் இறந்துருக்க மாட்டாங்கன்னு அப்பா கண்டிப்பா சொல்றாங்க க்கா"

"எல்லா பிரச்சனையும் சரியானதும் குடி பழக்கத்தை விடுறேனும் தான் சொன்னாரு. இப்ப தான் எல்லாமே முடிஞ்சதே. காப்பாத்துனாரா அவரோட வார்த்தைய?" - யாழினி

"விட முயற்சி பன்றாரு யாழினி... ஏதோ ஒரு நாள் ஆசையா இருக்கு-னு சொல்லி என்கிட்டே தான் கேட்டுட்டு போனாரு" கணவனை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மனம் வரவில்லை.

"நீ தான் மா எல்லாத்துக்குமே மூல காரணம். அவர் என்ன பண்ணாலும் அதுக்கு ஒத்து ஊதி ஊதி இன்னைக்கு கொலை பண்ற அளவுக்கு வந்து நிக்கிறாரு. ரெண்டு பொம்பள புள்ளைய வச்சிருக்கோம் அவங்க வாழ்க்கைக்கு என்ன தேவை? அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? பாதுகாப்பா இருக்காங்களான்னு ஒரு தகப்பனா ஒரு நாள் உன் புருஷன் பாத்துருப்பாரா?

அவருக்கு தேவ குடிக்க பணம். அதுக்கு இந்த முட்டாள் வேலைக்கு போவா, வர்ற சம்பளத்துல ஆயிரம் ரெண்டாயிரம்-னு அதுல அவளுக்கு தேவையானதை வாங்கிக்குவா. நீ அந்த ஆளுக்காக ஊர் எல்லாம் கடன் வாங்கி குடிக்க அனுப்பி விடுவ பத்தாததுக்கு என்கிட்டே இருந்தும் கண்ண கசக்கி இருக்குற எல்லாத்தையும் வாங்கிக்கோ. உங்களுக்கு எல்லாம் உங்களோட சந்தோசம், ஆசை தான் முக்கியம். அதுக்கு நான் பலி ஆடு?" - யாழினி

கண்ணீர் வழிய, "நல்லா தான் பேசுறடி"

"ஆமா மா இது தான் என்னோட முடிவு. உனக்கு வேணும்னா நீ உன் புருஷன் பின்னாடி போ. எனக்கு நீயும் வேணாம் அந்த ஆளும் வேணாம்" ஒரேடியாக அன்னையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாள் யாழினி.

"சம்பாதிக்க ஆரமிச்சிட்டோம்ன்ற திமிரு வந்துடுச்சு வேற ஒண்ணுமில்ல. அது தான் பெத்தவளும் வேணாம் மத்தவங்களுக்கு வேணாம்-னு ஆங்காரத்துல ஆடுற" - யாழினி அன்னை

"நான் பண்றது மட்டும் தான் உனக்கு தெரியாதா மா? வயசு பிள்ளைங்க நமக்காக கண்ட கண்ட இடத்துக்கு வந்து கஷ்டப்படுத்துகளே-னு உன் புருசனுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை..." - யாழினி

"என்ன தான் அவர் பொறுப்பு இல்லாம இருந்தாலும் நம்மள ஒருத்தனும் சீண்டாம இருக்குறதுக்கு காரணம் ஆம்பள-னு அந்த மனுஷன் நமக்கு துணையா இருக்குறது தான். அத முதல புரிஞ்சுக்கோ"

"பாதுகாப்பா? அவர் கண் முன்னாடியே இன்னைக்கு ஒருத்தன் எங்களை குட்டி-னு சொல்றான், கண் அடிக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு குடுக்குற மனுஷன் தான் எதுவும் பேசாம அமைதியா இருந்தாரா? அந்த ஆள அடிச்சிட்டாங்களாம், அந்த இடத்துல இருக்க முடியலயாம். எந்த அப்பனாவது இப்டி யோசிப்பானா? சுயநல வாதி" யாழினி கன்னத்தில் பளாரென அன்னையின் கை வந்து இறங்க, கோவம் எல்லாம் கண்ணீராய் மாறியது அவளுக்கு.

"மரியாதையா பேசுடி. உன் அப்பா வீட்டுக்கு வரணும் யாழினி. தப்பு அவர் மேல, இருந்தாலும் சரி இல்லனாலும் சரி. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு போய்டுவிங்க நான் காலம் எல்லாம் உங்கள நம்பி இருக்கணுமா?"

"ஏன் மா நாங்க உன்ன பாத்துக்க மாட்டோம்... ஆனா டெய்லி குடிச்சிட்டு சண்டை போடுற உன் புருஷன் உன்ன கடைசி காலத்துல நல்லா பாத்துக்குவாரு அப்டி தான?" குடும்பத்திற்காக சிறு சிறு ஆசைகளை கூட துறந்து அன்னையின் முகத்தில் சிரிப்பை மட்டுமே பார்க்க துடித்த இதயத்திற்கு கிடைத்த பரிசை எண்ணி உடைந்தது யாழினியின் மனம்.

மகளின் வேதனையை அவள் குரலிலே உணர்ந்தவர் தான் அடித்த யாழினியின் கன்னத்தை வருடி, "அம்மா சொல்றத புரிஞ்சுக்கோ யாழினி. உன் அப்பா மாதிரி பொறுப்பானவர் பாக்க முடியாது. எறும்பு மாதிரி நிக்காம சுறுசுறுப்பா வேலை பாக்குற மனுஷன் தான் அவரும். நீங்க ஸ்கூல்-கு போறதுக்கு கூட நீங்க வீடு வந்துட்டீங்க-னு தெரிஞ்சா தான் நிம்மதியா இருப்பாரு. தொழில் அவரை முடக்கி போட்டு இப்டி மாத்திடுச்சு. கல்யாணம் ஆன இத்தனை வருஷம் என்ன கூட கை நீட்டி அடிக்காதவர், கண்டிப்பா கொலை பண்ற அளவுக்கு அடிச்சிருக்க மாட்டாரு டா. அம்மாக்காக தயவு செஞ்சு ஏதாவது முயற்சி பண்ணு யாழினி"

"நான் முன்னாடி ஒர்க் பண்ண பேக்கரி ஓனர் தம்பி லாயர் தான் மா... நான் அவர்கிட்ட பேசி பாக்குறேன்"

குழலினி அன்னையிடம் கூற, "நானே போறேன். ஆனா இதுக்கு அப்றம் அவர் குடிக்கவே கூடாது-னு எனக்கு சத்தியம் பண்ணி தாங்க" கண்ணீரோடு அன்னையிடம் யாழினி கை நீட்ட யோசிக்காமல் சத்தியம் செய்தவர் தானும் மகளுடன் வருவதாக கூற, தானே சென்று வருவதாக கூறி யாழினி வீட்டை விட்டு நடந்தாள்.

எப்படியேனும் அன்னைக்காகவும், தங்கைக்காகவும் ஆவது ஒரு வக்கீலை பிடித்து தந்தையை வெளியில் கொண்டு விட வேண்டும் என்ற உறுதியோடு சாலையில் நடக்க துவங்கியவள், பஸ் ஸ்டாப்பில் நின்று இணையத்தில் வக்கீல் முகவரியை தேடினாள். மணி ஆரை தாண்டி இருந்த சமயம் அது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்று திரும்பியவர்கள் என அந்த மொத்த பேருந்து நிறுத்தமும் மக்கள் தொகையால் நிரம்பி வழிந்தது.

நிற்கவே இடம் இல்லாத பொழுது அவளுக்கு அருகில் வந்த ஒருவன், "யாழினி..." என்றான்.

தலையை தூக்கி பார்த்தவள் அறிமுகம் இல்லாத அவனிடம் கேள்வியாய் பார்வை கொடுக்க, "சார் உங்கள வர சொன்னாரு" என்றான் கைகளை சற்று தள்ளி நிறுத்தியிருந்த வாகனத்தை காட்டி. கண்கள் அந்த வாகனத்தை ஆராய்ந்தும் அந்த மனிதனை பார்வையால் எரித்தவள் பேச்சை தவிர்த்து அமைதியாக நிற்க மேலும் அவன், "எமெர்ஜென்சி" என்றான்.

"தயவு செஞ்சு போய்டுங்க. அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன் அந்த ஆள" இருந்த கோவம் அந்த வாகனத்தை பார்த்ததும் பன்மடங்கு அதிகமானது.

"உங்க அப்பா பண்ண கொலைய பத்தி பேசலாமா?" நக்கலாக அவன் கேட்க, நடுக்கத்துடன் அந்த காரை நோக்கி யாழினியின் கால்கள் தானாய் சென்றது.

வாகனத்தின் அருகில் வந்ததும் ஈஸ்வரனை பார்த்தவள் விழிகள் கலங்கி போக, அதற்காகவே காத்திருந்தவர், "என்னடி என்னமோ அசிங்கமா பேசுவேன்னு சொன்ன? இப்ப பேசேன். எல்லாம் அந்த பரதேசி குடுக்குற இடம், கண்ட கண்ட நாய் எல்லாம் என்ன பேசுது. உன் அப்பன் அஞ்சே நிமிசத்துல உன் வீட்டுல தலை இல்லாத முண்டமா கிடப்பான்"

"உதய் கிட்ட சொல்லுவேன். உங்கள அவரு சும்மா விட மாட்டாரு" என்றாள் கண்ணீர் மேலும் மேலும் பெறுக.

"சொல்லு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா அடுத்த நிமிஷம் உன் தங்கச்சி அடையாளமே தெரியாத அளவுக்கு எங்கையாவது இருப்பா" மேலும் மிரட்டினார் ஈஸ்வரன்.

"உங்களால அப்டி எல்... எல்லாம் பண்ண முடியாது..." அந்த மனிதர் கூறியதை நினைத்து பார்த்தவளுக்கு உயிரே பறிப்போனது.

"செய்யாத கொலைய உன் அப்பன் தான் செஞ்சான்னு சொல்லி லாக்கர்ல ஒக்கார வச்சிருக்க எனக்கு, ஒரு பொட்டாசிய தூக்க முடியாதுனு சவால் விட்டு சொல்றியா?" பணம், பதவி தந்த மோகத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினார், மனதில் சிறு ஈரம் கூட இல்லாமல். இப்பொழுது அந்த மனிதரின் வலையில் தான் மொத்தமாக சிக்கியிருப்பது தெரிந்தது.

வீட்டில் இருவரின் பிடிவாதம், இங்கு இந்த மனிதரின் தந்திர ஆட்டம். வேறு வழியே இல்லாமல், "நான் என்ன பண்ணனும்?" என்றாள் உள்ளே சென்ற குரலில்.

"இனி உதய் பக்கமே நீ வர கூடாது. அவன் உன்ன தேடி வந்தாலும் இனி அவன் உன் பக்கமே வராத மாதிரி நடந்துக்கணும் நீ"

உயிருக்கு ஒரே ஆறுதலாக இருந்த காதலையும் பறி கொடுக்க வேண்டுமா? தனக்கான ஒரு வாழ்க்கையை இனி தான் வாழ போவதே இல்லையா என்ற கேள்விகளும், தன்னையே வாழ்க்கையாய் எண்ணி கைகளில் அள்ளிய உதய்யின் தொடுகையும் யாழினியின் உயிரை வதைக்க, சுயநலத்துடன் குடும்பத்திற்காக அந்த பெரிய மனிதனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டாள்.

"வர மாட்டேன் இனி அவர் வாழ்க்கைல"

தெளிவாக ஈஸ்வரன் காதில் அவள் வார்த்தைகள் விழ, வெற்றித் தாண்டவமாடிய இதழ்களுக்கிடையில், 'ஒன்னு அவுட். இனி அந்த ஆதி கேசவன மட்டும் தட்டி விட்டா... உதய் காலி' என்ற வாசகம் நிம்மதியாய் ரீங்காரமிட்டது வஞ்சகனின் மனதில்.


*****************

காலை எழுந்து பரபரப்பாக சகோதரியை கிளப்பியவன் கால்களில் இருந்த சக்கரம் தந்தையின் அலுவலகத்தில் தான் வந்து நின்றது. அந்த கட்டிடத்தை பார்த்ததுமே சஹானாவின் கண்கள் கலங்க, ஆதியை திரும்பி பார்த்தாள்.

சகோதரியின் எதிர்வினையை அவன் எண்ணியபடியே இருக்க அணைத்து தடைகளும் நீங்கி பூட்டிக்கிடந்த அலுவலகத்தை திறந்து வைத்து நேற்றே முற்றிலும் சுத்தம் செய்து வைத்திருந்தான். இன்று பூமி பூஜை போட்டு அடுத்த கட்ட வேலையை துவங்க போகிறான் உதய். அதற்காக தான் நண்பர்களின் வீட்டினர் அனைவரையும் அழைத்துளான். அனைவரும் வரும் முன் தான் வர வேண்டும் என்று சகோதரியை இழுத்து வந்துவிட்டான்.

"உள்ள போகவா ண்ணா?"

ஆசையாய் சகோதரி கேட்க, "போ டா இது உன்னோட ஆபீஸ்" என்றான் மகிழ்ச்சியாக.

நான்கு படிகள் ஏறி சென்றாள் ஒரு பெரிய போர்டிகோ நான்கு தூண்களை தாங்கி நின்றது. அதை அடுத்து இங்கிலாந்தில் இருக்கும் கட்டிடங்களை போலவே முழுதும் கருங்கல்லினால் ஆனா சுவர்கள் மதிலாய் மாறி கம்பீரமாய் காட்சியளிக்கும். நிலைக்கதவை தாண்டி வலது புறம் பெரிய சிட்அவுட் ஒன்றும், அதை தாண்டி பெரிய வரவேற்பறை போன்ற அமைப்பில் சில மேஜைகளும் இருக்கைகளும் அடுக்கியிருந்தன.

அந்த வரவேற்பறையில் இருந்து ஒரு கதவு தென்பட, அதை திறந்து பார்க்கும் பொழுதே அந்த கதவில் இருந்த ஆபீஸ் ரூம் என்ற எழுத்து அதன் பயனை கூற, தந்தையின் நினைவுகள் படங்களாக கண் முன்னாள் வந்து போனது. உள்ளே சென்றதும் ஒரு மேஜை பெரியதாகவும் அதை தாண்டி இன்னொன்று சற்று உயரமாக கட்டிடங்களுக்கு பிளான் போட என இருந்திருக்கும் என்று சஹானாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த கருங்கல் சுவற்றில் ஆணிகள் பார்ப்பது அரிதாக இருக்க பல அலமாரிகளில் பல வகையான கட்டிடங்களின் மாதிரிகள் சிறு சிறு மர துண்டுகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் தந்தையின் கை வண்ணம் தான். சிறு வயதில் அவருக்கு உதவுவதாக கூறி அந்த மர துண்டுகளை ஒட்டுவதற்கு பெவிகால் பல பொட்டலங்கள் வாங்கி வந்தது உண்டு. கண்களில் கண்ணீருடன் அவள் கைகள் அதை வருட இதழ்களில் வலி, இன்பம் என கலவையாய் சிரிப்பு வந்தது.

மீண்டும் மேஜை இருந்த இடத்திற்கு சென்றவள் அந்த மேஜையை ஆசையாய் வருடினாள். எத்தனை ஆசை இந்த அலுவலகத்திற்கு மீண்டும் வர... கண்ணீரை துடைத்து ஆசையாய் மொத்த இடத்தையும் பார்த்தவள் திருப்தியாய் வெளியில் வர தமிழ், கெளதம் வீட்டினர் வந்திருந்தனர். பூஜைக்கு தேவையான அனைத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த ஆதி சகோதரியை பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க முகம் முழுதும் புன்னகையை பார்த்ததும் தான் ஆதிக்கு நிம்மதியானது.

அலுவலகத்திலிருந்து கீழே இறங்கிய சஹானாவிற்கு ஆதவனின் கார் கண்ணில் பட காரின் கண்ணாடியை இறங்கியவன் அரக்கு நிற புடவையில் தேவதையாய் வந்தவளை ஆசையாக பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்தாது கண்ணாடிக்க, முகம் செம்மையுற்று நடையில் வேகம் கூட்டி பவித்ரா அருகில் சென்று நின்றுகொண்டாள்.

காரை நிறுத்தி வந்த ஆதவன் தாய் தந்தையை அழைத்துவந்து நண்பர்களுடன் விட்டான். பல வருடங்கள் பார்க்காதது அவர்களுக்குள் பேச ஏராளம் இருக்க பேச்சிற்கும் சிரிப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் சென்றது. "ம்மா நல்ல நேரம் எப்ப?"

"இன்னும் அரை மணி நேரம் இருக்கு ஆதி, கோமியம் மட்டும் இன்னும் வரல, உங்க அப்பா வந்ததும் ஆரமிச்சிடலாம்" என்றார் ஷீலா. சரியாக நந்தனும் வர அவர் பின்னால் ஐயர் ஒருவரும் தொடர்ந்து வந்தார். நண்பர்கள் மூவரும் ஒரு பக்கம் நின்று பேசிக்கொண்டிருக்க ஆதவன் ஷீலாவோடும் தன்னுடைய அன்னையோடும் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.

இடையில் பவித்ராவை அன்னைக்கு அறிமுகம் செய்யும் சாக்கில் சஹானாவையும் அறிமுகப்படுத்தினான். அவருடன் தயக்கத்தோடு பேசியவள் இயல்பாகாத பொழுது வேண்டும் என்றே அவளை விட்டு நண்பர்களுடன் ஆதவன் இணைந்துகொண்டான்.

ஆதி வாயிலை வாயிலை பார்த்துக்கொண்டே இருக்க, "யாரை எதிர் பாக்குற?" என்றான் ஆதவன்.

"சர்ப்ரைஸ்" என்றான் நமட்டு சிரிப்போடு.

தன்னுடைய கைபேசியில் வந்த செய்தியை பார்த்து சிரித்தவன், "அந்த பக்கம் பாருங்க" என்று நண்பர்களுக்கு கூற சரியா அடுத்த ஐந்து நொடிகளில் காம்பௌண்ட் சுவற்றின் ஓரம் நின்று திருடன் போல் எட்டி பார்த்தவள் பார்த்து மூவர் வாய்விட்டு சிரிக்க, ஆதவனுக்கு அதிர்ச்சி.

"மணிமேகலை என்னடா இங்க பண்ணுது?"

"பூஜைக்கு என் ஆள் இல்லனா எப்படி டா?" வெட்கத்துடன் சொன்னவன்

அவளை பார்த்து வருமாறு சைகை செய்ய திரு திருவென முழித்தவாறே வந்தவள் அழகில் மீண்டும் மீண்டும் சொக்கி தான் போனான் ஆதி. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சகோதரிக்கும் மணிமேகலைக்கும் புடவை எடுத்து வந்திருந்தான். அதில் மணிமேகலைக்கு இளம் ஊதா நிறத்தில் தங்க ஜரிகை இழையோட ரோஜா நிறத்தில் ரவிக்கை போட்டு கண்களை செய்திருந்தது அவள் அழகு.

நெளிந்துகொண்டே வந்தவளை பார்த்த ஆதியும் அவளை நோக்கி வர, அவன் அருகே வந்து கிசுகிசுப்பாக, "அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு வந்துட்டேன் அதுவும் ஜாலியா இருந்தது தெரியுமா?" ஆசையாக பேசினாள் அவன் மான்குட்டி.

சொக்கி கிறங்கி நின்றவன், "ஜிமிக்கி அழகா இருக்கு" கண்கள் அவள் காதுகளில் ஆடிய குடை ஜிமிக்கியில்.

"புடவை?" என்றாள் ஆசையாக.

"கல்யாண பொண்ணு மாதிரி மயக்குற மேகா. கல்யாணம் பண்ணிக்கலாமா இப்பயே" அவன் ஆசை குரலில் மணிமேகலையின் மனம் பந்தயத்தில் ஓடியது.

"ம்ம்ம் ம்ம்ம் எல்லாரும் பாக்குறாங்க" காதல் பறவைகளின் காதல் பேச்சை கவனிக்காதது போல் கெளதம் நினைவூட்ட உடனே சுயத்திற்கு வந்த ஆதி அவளை, "மணிமேகலை" என்று மட்டும் கழுத்தை தேய்த்து அறிமுகப்படுத்த, அவன் முகத்தில் இருந்த நாணம் பெரியவர்களுக்கு செய்தியை மறைமுகமாய் கூறியது.

அதன் பிறகு சிறிது நேரத்தில் பூஜை துவங்க அனைத்தையும் தமிழும், கௌதமும் ஆதியையே முன் நிறுத்தி செய்ய வைத்தனர்.

தனியாக நின்ற நண்பர்களிடம், "இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு வர்றியா?" பார்த்து ஆதி கேட்டான்.

"நீங்களுமா டா தண்ணி அடிப்பீங்க?" கெளதம், தமிழ் இருவரை நோக்கி கேள்வி எழுப்பினான் ஆதவன்.

"இல்ல, இவன் சரக்கடிப்பான். நாங்க சைடு டிஷ் சாப்புடுவோம்" கெளதம் கூறி சிரிக்க, "இது பேர் பார்ட்டியா" நண்பனின் தலையில் ஆதவன் அடித்தான்.

"பழக்கம் இல்ல ஆதி, ஆனா சும்மா வேணா வர்றேன். அத தொட்டது தெரிஞ்சா உதய் கொன்னுடுவான்" சிரித்தான்.

"அவன் இருந்தா நல்லா இருந்துருக்கும்" தமிழ் கூற,

"ல...?" ஆமோதிப்பாய் கௌதமும் உடனமொழிந்தான். ஆதி அமைதியாய் இருந்தான். ஆனால் ஆதியின் தந்தையின் இடத்தில் வேலையை தொடங்குவது முதலில் உதய் கொடுத்த சிறு துப்பு தானே... தன்னுடைய வாழ்க்கையின் ஒரு நல்ல தொடக்கத்தை துவங்கும் பொழுது நண்பன் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை காலை எழுந்த பொழுதில் இருந்தே தோன்றியது.

"இவனுக ரெண்டுபேரும் சண்டை போட்டுட்டே இருந்தா எப்படி அஞ்சுபேரும் ஒரே நேரத்துல சந்தோசமா இருக்க முடியும்?" ஆதவன் இருவரையும் குற்றம் சாட்ட, "வருவான் டா" என்றான் ஆதி மிதப்பாய்.

நண்பர்களின் ஆசை வார்த்தைகள் காதில் விழுந்ததோ என்னவோ உதய்யின் வெள்ளை ரோல்ஸ் ராய்ஸ் அந்த வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து நின்றது. வாகனத்தில் இருந்து இறங்கி வந்த ஜெயனை பார்த்து கிண்டலாக, "தம்பி மொய் எல்லாம் வாங்குறது இல்ல" என்றான் ஆதி மிதப்பாய்.

ஆனால் அவனுக்கு பதில் கூறாமல் ஜெயன் மௌனமாய் நிற்க, காரை எட்டி பார்த்தான் ஆதவன்.

"உதய் வரல மச்சி. தேவை இல்லாம டயலாக் பேசிட்ட" நண்பனை பார்த்து கெளதம் சிரிக்க, காதுகளை உறுத்தும் சத்தத்தோடும், ஆடையால் யாவும் காற்றில் பறக்க, அதே மைதானத்தில் வந்து இறங்கியது ஒரு ஹெலிகாப்டர்.

இருந்த அனைவரின் கண்களும் அங்கு செல்ல, அதிலிருந்து மிதப்பாய் கேசம் காற்றில் ஆட, வெள்ளை சட்டையும், வெளீர் சாம்பல் நிற பேண்டும் அணிந்து கண்களில் கருப்பு கண்ணாடியோடு அழகாய் வந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆதி உடனே மணிமேகலையை தான் பார்த்தான். மாமனை பார்த்தவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, தஞ்சாவூர் பொம்மை போல் தலை நில்லாது எட்டி எட்டி அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

உதய் இறங்கியதுமே அந்த ஹெலிகாப்டர் கிளம்பிவிட, ஆதியை நோக்கி வந்த உதய் அங்கிருந்த ஏற்பாடை எல்லாம் மெச்சுதல் பார்வையோடு பார்த்து, "எல்லாமே சிறப்பா முடிஞ்சதா?"

ஏதோ உள் குத்து வைத்து தான் பேசுகிறான் என்று தெரிந்து ஆதி அமைதியாக நிற்க, ஜெயன் ஆதி கையில் ஒரு பாத்திரத்தை வைத்தான். சந்தேகமாய் அதை பார்த்த ஆதி பொறுமையாய் தலையை தூக்கி உதய்யின் முகத்தை பார்த்தான்.

"மொத்த இடமும் கைக்கு வந்திருந்தா நல்லா இருந்துருக்கும். பரவால்ல, பில்டிங் மட்டும் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என்றான் ஆதியின் தந்தை கட்டியிருந்த கட்டிடத்தை கண்களாலேயே அளந்து.

ஆதியின் கையிலிருந்த கோப்பை பற்றிய ஆதவன் அதை பார்க்க பின்னாலே மற்ற இருவரும் படித்தனர். அந்த அலுவலகத்தை வைத்து ஆதியின் தந்தை உதய்யின் தந்தையிடம் முன்னர் கடன் வாங்கி இருக்க, வட்டி எதுவும் காட்டாமல் விட்ட காரணத்தால் இப்பொழுது அது உதய்யின் சொத்தானது.

"உதய் தேவை இல்லாம பண்றடா" என்றான் கண்டிப்பாய் ஆதவன்.

ஆனால் அதை எதையும் காதில் வாங்காமல் வந்த வேலை முடிந்த திருப்தியில் உதய் சிறு சிரிப்போடு நகர்ந்தான்.

"ஏண்டா இப்டி எதையுமே நிம்மதியா இருக்க விட மாற்றான்" கெளதம் பொறுக்க முடியாமல் புலம்ப, செல்லும்
உதய்யையே பார்த்த ஆதி,

"ஆளு செம்ம ஸ்மார்ட்ல?" - ஆதி

ரசனையோடு சிரித்த முகத்துடன் ஆதி நண்பனை பார்க்க, 'நீ பைத்தியமா?' என்ற கேள்வியோடு நண்பர்கள் ஆதியை பார்த்து புரியாமல் நின்றனர்.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
நீரஜ் ஆதி மேல கை வைத்து தேவையில்லாமல் உதய் கூட மோதிட இப்போ பாரு பெரிய ஆப்பு ready pannidan இனி ஜெயில் தண்டனை தான்🥳🥳
யாழினி பாவம் ஈஸ்வரன் நீ அவளை மிரட்டயது உதயாக்கு மட்டும் தெரியாது நினைக்காத உனக்கும் ஒரு நாள் இருக்கு be carefull😏😠😠 நீ கவலைபடதா உன்னோட உதய் இருக்கான் 😔🤞
ஆதி பிசினஸ் start pannidan super 🥳🥳🥳ஆதவா என்ன சஹானா பாத்து கண் அடிகுற இது சரி இல்ல தம்பி🤪🤪
டேய் ஆதி நீயா மணி யா கூப்பிடு இருக்க கேடியா எல்லாரும் இருக்கக்🤭🤭
சீக்கிரமா 5 பேர் ஒண்ணா இருக்க போறிங்க🤗🤗 அமா நிங்க பேசுனது உங்க நண்பன் உதய் கேட்டு இருக்கு வந்துடன் பாருங்க 😻😻✨✨டேய் நீங்க ப்ரெண்ட் ரசித்தது போதும் அவன் ஒரு plan ஓட வந்து இருக்கான் என்ன உதய் இப்போ ஆதி அப்பா கடன் போய் கேக்குற அதை சொல்ல தான் வந்தியா😲😲ஆதி லூசு உதய் handsome இருகான் பேசிடு இருக்க🙈😎😎 தமிழ் கௌதம் ஆதவன் ரொம்ப கஷ்டம் இவனுகளோட இனி எண்ணலாம் பண்ண போறீங்க 😅😅😅🙊
 
Top