• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 25 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap – 25

மார்ச் 2009

“என்னடா வீரமானவனே... அவ்ளோ தானா உன் வீரம்? ஓ மறந்துட்டேன் பாரு... உனக்கு புட்பால் தான வரும் கிரிக்கெட் எல்லாம் வராதுல” அமைதியாக நின்ற ஆதியை பார்த்து நக்கலடித்தான் சிவா... வேறு பள்ளியை சேர்ந்தவன்

முன்னர் ஆதி புரட்டியெடுத்த கூட்டம் தான் சிவா மற்றும் அவன் நண்பர்கள். இப்பொழுது தங்களுடைய பள்ளியில் தங்கள் நண்பர்கள் மத்தியில் அவனை எப்படியேனும் அசிங்கப்படுத்தி துவைத்தெடுக்க வேண்டும் என்ற முடிவோடு வம்பிற்கு இழுத்தனர்.

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஒன்றிற்கு வேறு பள்ளிக்கு சென்றிருந்த நண்பர்கள் கூட்டம் வழக்கம் போல் தீவிரமான பயிற்சியில் இருந்த நேரம், அந்த பள்ளியின் தாளாளருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக போட்டி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்த பொழுது தங்களது உடமைகளை எடுத்து கிளம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மழை வேறு வெளுத்து வாங்க துவங்கியது. வளாகத்தை விட்டு கிளம்பிய நண்பர்களை வேண்டும் என்றே வம்பை வளர்க்க பேச்சையும் வளர்த்தனர்.

“என்ன டா சண்டைக்கு இழுக்குறியா?” ஆதவன் முந்திக்கொண்டு போக அவனை பிடித்து நிறுத்தினான் உதய்.

“சண்டைக்கு இப்ப யார் வந்தா? ஒரே ஒரு மேட்ச் ஆடுங்க அப்ப ஒதுக்குறேன் நீங்க வீரமான ஆம்பளைங்க-னு” – பரமன், சிவனின் நண்பன் பொறுமையாக சீண்டினான் அவர்களின் ஆண் கர்வத்தை.

“ஏன் மேட்ச் ஆடி தான் நாங்க வீரம்-னு நிரூபிக்கணுமா... பின்னாடி இருக்குற கிரௌண்ட்-கு வாங்க டா ஒத்தைக்கு ஒத்தை நின்னு பாத்துடலாம். அப்ப தெரியும்ல எவன் வீரமானவன்-னு” பல்லை கடித்து கொண்டு எந்த நேரத்திற்கும் சண்டைக்கு நான் தயார் என்ற நிலையில் நின்றான் தமிழ்.

“தமிழ் வேணாம்”

நண்பனை தடுத்த உதய், தங்களுக்கு முன் இருந்த பத்து மாணவர்களை பார்த்து, “தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க. இந்த தைரியம் உன் ஸ்கூல்-கு வெளிய இருக்குறப்பையும் வரணும்”

“தோடா... கேப்டன் சார் சொன்னா நாங்க கேட்கணுமா? ஏன் இவன் அன்னைக்கு எங்களை அடிச்சது உங்க ஸ்கூல்ல வச்சு தான, அப்ப அவன் தைரியம் இல்லாத மயிறுனு நெனச்சுக்கவா?” – சாலமன், ஆதியை சுட்டிக்காட்டி பேசி அமைதியாய் இருந்தவனை மேலும் தூண்டிவிட்டான்.

ஆனால் ஆதியோ உதய்யின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவந்த கண்களுடன் நின்றிருந்தான் முறுக்கிய கைகளோடு.

“பேச விட்டு வேடிக்கை பாக்க சொல்றியா உதய்? மூஞ்சி மொகரை எல்லாம் கிழியிற அளவு செய்யணும் இவனுகள”

எகிறிக்கொண்டு சென்ற கௌதமை பிடித்தி நிறுத்தி, “இப்டி எல்லாம் நடக்கணும்-னு தான் அவனுக பேசுறானுக. அமைதியா எல்லாரும் கிளம்புங்க”

ஆணையாய் உதய் கூற அந்த மாணவர்களை முறைத்துக்கொண்டு சென்ற நண்பர்களை பார்த்து ஏளன சிரிப்போடு, “கிரௌண்ட்ட தாண்டி போறவன் ஆம்பள இல்லனு அர்த்தம்” சிவாவின் நக்கல் பார்வையில் வெளியில் செல்ல சென்ற ஐவரும் அப்டியே நின்றனர்.

ஆதி உதய்யை திரும்பி பார்க்க அவனுக்கு பதில் எதுவும் கூறாமல் தங்களை சீண்டிய அந்த மாணவர்களிடம் சென்றவன், “தோத்துட்டா நான் சொல்றத செய்வியா?” சிவாவிடம் தீவிரமாய் கேட்டான் உதய்.

“அட்றா சக்கனான... இன்னைக்கு ஒரு சம்பவம் பண்ணாம இங்கேயிருந்து போறதா இல்ல...” நரம்பெல்லாம் புடைத்தது கௌதமின் கழுத்தில்.


“டேய் நீங்க ஜெயிப்பீங்க-னு நம்பிக்கை எல்லாம் இருக்கா?” நக்கலாய் சிரித்துக்கொண்டே பேசினான் சிவா.

“கேக்குறதுக்கு பதில் சொல்லாம சிரிச்சிட்டே ஏண்டா பயத்தை மறைக்கிற?”

படு நக்கலாய் அவனை விட உதய் பேச முகத்தை சீரியஸாக வைத்தவன் உதய் முன்னால் வந்து நின்று, “உங்க எல்லாரோடக் கால்லயும் நான்ன்ன் விழுகுறேண்டா” நான் என்பதில் அழுத்தம் அதிகம் வைத்து சிவா பேச,

“சிவா...” சிவாவின் மொத்தக் கூட்டமும் பதறிக்கொண்டு அவனை எச்சரித்தது.

அவர்கள் கோரஸில் வாய் விட்டு சிரித்த உதய், “டேய் மச்சான் பயந்துட்டானுக டா” நண்பர்களை பார்த்து சிரித்து மீண்டும் அந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி, “முடிவு கண்ணு முன்னாடி வந்து நிக்கிது போல?”

“சரிடா அவன் விழுவான்... ஆனா, நாங்க பத்து பேர் இருக்கோம், உன் பக்கம் பாருடா. உன் ஸ்கூல்ல இருந்து வந்த யாரும் இங்க இல்ல. எந்த நம்பிக்கைல எங்ககிட்ட மோதுற?” – சிவாவின் நண்பன் ஒருவன்.

நண்பர்களை திரும்பி பார்த்தவன், “இவனுகள விட எனக்கு வேற ஒருத்தனும் தேவையில்லை” – உதய்

“ஆட்டைய ஸ்டார்ட் பண்ணு சிவா, அப்றம் மழை பெய்யிது, பிட்ச் சரியில்ல, ஆள் கம்மி-னு பயந்துட போறானுக”

“அடேய் முட்டா பயலே... பிட்ச் எல்லாம் கேம் பத்தி தெரிஞ்சவனுக்கு தான் கவலை, எங்களுக்கு இல்லடா வெண்ண” ஆதியின் குரலில் எகத்தாளம் வழிந்தோடியது.

காரமாய் அவனை முறைத்தவன், “ஸ்டார்ட் பண்ணலாம், அதே மாதிரி நீங்க தோத்தா நீ எங்க கால்ல விழுகணும்” – சிவா, உதய்யிடம் டீல் பேசினான்.

உதய்க்கு முன்னே முந்திக்கொண்டு வந்த ஆதி, “என்கிட்ட மோத தான இந்த ஆட்டம்... எனக்காக அவன் எதுக்குடா உங்கள மாதிரி சல்லி பயலுக கால்ல விழுகணும்? நான் விழுகுறேன். ஒவ்வொருத்தன் கால்லயும். அது மட்டும் இல்லாம இனிமேல் என் வாழ்க்கைல புட்பால்ல தொடவே மாட்டேன்... முடிஞ்சா தோக்கடிச்சு காட்டுடா பாக்கலாம்” உதய் திரும்பி ஆதியை முறைத்தான். ஆனால் எதுவும் பேசவில்லை நண்பர்கள் மீதுள்ள நம்பிகையில்.

“ஆனா என்னோட ரூல்ஸ் எல்லாத்துக்கும் சரின்னா இப்பயே ஆரமிக்கலாம், இந்த மழை வெயில் எதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல” – ஆதி

“அப்ப நாங்களும் ரூல்ஸ் போடுவோம்” – சிறுபிள்ளை தனமாய் சாலமன்.

“போடுங்க பாய், தாராளமா போடுங்க...” நண்பர்கள் பக்கம் திரும்பி தலையை அசைத்தவன் மேலும் தொடர்ந்தான், “ரூல் நம்பர் வன் – பீல்டிங்-கு நீங்க பத்து பேர் கூட இருந்துக்கோங்க, ஆனா பேட்டிங்கு அஞ்சு விக்கெட் தான்” – ஆதி

“உங்களுக்கு அடி பட்டா கூட நின்னு ஆடணும் எந்த சாக்கும் சொல்ல கூடாது” – சிவா

“சரி... அப்ப நீங்களும் பேட், க்லௌஸ், ஹெல்மெண்ட்-னு எதுவும் போட கூடாது... அதுக்கு ஓத்துக்கோங்க” – கெளதம்

“அவ்ளோ தான சரி போடல... அப்ப அம்பயர் எங்க ஆள் ஒருத்தன் தான் இருப்பான்” – சிவா

“இது எந்த ஊர் நியாயம்? ஏற்கனவே களவாணித்தனம் பண்ணி தான் ஒரு வருஷம் உங்கள எந்த மேட்ச்லயும் சேக்கல, இந்த லட்சணத்துல நீங்க அம்பயர் வேறயா?” – ஆதவன்.

“அப்டிங்களா? அப்ப உங்க பசங்க யாராவது கூப்புடுங்க. நடு நாயகமா நிக்கட்டும்” – சிவாவின் நண்பன் ஒருவன் கிண்டலடித்தான்.

“தேவையில்லாத பேச்சு எதுக்கு? அம்பயர் வேணாம்” – உதய் முடித்தான்.

“ஆமா, மொத்தம் பத்து ஓவர். எங்க டீம் கேப்டன் உதய், டாஸ் போட்டு மேட்ச் ஆரமிங்க” ஆதவன் கூற ஒருவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து கொடுக்க டாஸ் போட உதய்யின் கையில் நாணயம் வந்தது.

“தல... தலை சொல்லு” சிவாவின் நண்பன் ஒருவன் கூற சிரிப்போடு உதய் நாணயத்தை சுண்டிவிட்டான்.

“தலை” சிவா கூற சரியாக அவர்கள் நேரம் தலையே விழுந்தது, “போடு...” சிவா நண்பர்கள் ஆர்ப்பரிக்க, உதய் திரும்பி நண்பர்களை பார்த்தான்.

நால்வரும் இவன் திரும்பி பார்க்கவும் ஒரே போல் தோளை குலுக்கி, ‘எது வந்தா என்ன?’ என்பதை போல் முகத்தையும் வைக்க சிரிப்போடு உதய் சிவாவை பார்த்தான், “பேட்டிங் நாங்க”

சரியென நண்பர்கள் அருகே வந்தவன் சிவாவின் கூட்டம் தயாராகட்டும் என்று அமைதியாய் சென்று அமர்த்துவிட, “மேட்ச் ஜெயிச்சாச்சா தமிழு?” குதூகலமான குரலில் ஒரு கையில் குடை, மற்றொரு கையில் ஹரி, விஷ்ணுவுக்கு திண்பண்டங்கள் என மழையில் நனைந்ததை கூட மறந்து சிறு பிள்ளையாய் கேட்டார் உதய்யின் அன்னை, காயத்திரி.

“என்ன மழைல நனஞ்சுட்டு வந்துருக்கீங்க?” – ஆதி


“இன்னைக்கு நீங்க மேட்ச் போறிங்கனு சொன்னேன், ஒரே அடம் அது தான் பெரிய கார்ல வந்தேன், மேட்ச் முடிஞ்சதும் உங்களையும் கூட்டிட்டு போய்டலாம்ல” – காயத்திரி

“டேய் சுபிணி சப்புணி லாலிபாப் வாங்குனோமா வீட்டுக்கு போனோமா-னு இல்லாம எதுக்குடா இங்க வந்திங்க?” எழுந்து இருவரின் தலையிலும் அடித்தவன், தான் அமர்ந்திருந்த இடத்தில் காயத்திரியை பிடித்து அமர்த்தி அவர் கையிலிருந்த பெரிய பொட்டலத்தை வாங்கினான் ஆதி.

“அண்ணா அது எனக்கு வாங்குன கூஸ்பெர்ரி...” ஹரி சினுங்க, அவனை பொருட்படுத்தாமல் ஆதியுடன் இணைந்து தமிழும் ஆதவனும் கொறிக்க துவங்கினர்.

“இந்தா பால்” ஒருவன் வந்து ஆதவன் கையில் கிரிக்கெட் பந்தை கொடுத்துச் செல்ல அதைப் பார்த்த காயத்திரி,

“என்ன ஆதவா இது பந்து குட்டியா இருக்கு. இனிமேல் இத வச்சு தான் விளையாடணுமா?”

சகோதரர்களை அருகில் இருந்த டேபிள் டென்னிஸ் அறைக்குள் அனுப்பிவிட்டு வந்த உதய், “இது புட்பால் இல்ல மா... ஒரு சவால் விட்டானுங்க இவன் முன்னாடி வம்பு இழுத்தவனுக” ஆதியை சுட்டிக்காட்டி கூறினான், “அதுக்கு தான் இப்ப கிரிக்கெட் விளையாடுறோம்”

வெடுக்கென ஆதி பக்கம் திரும்பி, “இது என்னடா புது பிரச்சனையா?” சந்தேகமாக காயத்திரி கேள்வி எழுப்பினார்.

“இல்ல மா போன வருஷம் மேட்ச்ல என்ன கீழ தள்ளி விட்டானுகள்ல? அவனுக தான் முன்னாடி நடந்தத மனசுல வச்சிட்டு வம்பு பன்றானுக” – ஆதி

“உன் கைய ஒடச்சு விட்ட பசங்களா?” காயத்திரி அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.

“கை ஒடஞ்சது அவனுக்கு. இவனுக்கு இல்ல. இவன் நல்ல மாடு மாதிரி தான் நின்னான் உங்க கண் முன்னாடி...” உதய்க்கு தெரியும் அவன் அன்னை எப்படியும் தவறே ஆதி மேல் இருந்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார் என, “இவனுக்கு சின்ன அடி தான் பட்டுச்சு. ஊர்ல இருக்குற ஒருத்தன விடுறது இல்ல எல்லாரோடையும் வம்பு இழுத்து கை கால ஒடச்சிட்டு வந்தா இப்டி தான் எங்க போனாலும் நிம்மதியாவே இருக்க முடியாது. அதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுங்க” இருவரையும் வசைபாடினான் உதய்.

“நடந்து முடிஞ்சத எதுக்கு இப்ப பேசணும்? அவனுக பத்து பேர், நாம அஞ்சு பேர் தான் இருக்கோம். அத பத்தி பேசலாமா?”

கெளதம் நினைவூட்ட, “டேய் இந்தா இந்த பப்ஸ் சூடா இருக்கு சாப்புடு” அவன் பேசியதை பொருட்படுத்தாமல் தமிழ் பேச்சை மாற்றினான்.

“ஆதி, என்ன வேணாலும் தைரியமா பண்ணு... அம்மா இருக்கேன்”

ஆதியின் காதில் காயத்திரி கிசுகிசுக்க அவரை பார்த்து முகம் எல்லாம் பல்லாய் சிரித்தவன் அவர் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து, “இன்னைக்கு மேட்ச்ல பாருங்க சிக்ஸ், போர் மட்டும் தான் பறக்கும்” அன்னை தந்த வார்த்தைகள் ஆதியை நம்பிக்கையில் உச்சாந்தியில் நிறுத்தியது.

தன்னுடைய அன்னை இருந்தால் கூட இவ்வளவு பாசமாய், ஆதரவாய் எப்பொழுதும் பக்க பலமாய் இருந்திருப்பாரா என்றால் சந்தேகம் தான் என்று ஆதியால் அடித்து கூற முடியும். சிறு வயதில் இருந்தே, கயாத்திரிக்கு ஆதி என்றால் இயல்பாகவே பிரியம் அதிகம், இப்பொழுது பெற்றோரை இழந்து உறவுகளின் ஆதரவு எதுவும் இல்லாமல் தன்னுடைய வேதனைகளை மொத்தமாய் மறைத்து சிரிப்போடு நிற்பவனை ஒரு நாளில் இரு முறையாவது பார்க்காவிட்டால் அவர் நாளே ஓடாது.

“பாக்கலாம் டா... வாயிலேயே வடை சுடாம வா... நீ தான் முதல் ஓவர் போடணும்” ஆதவன் அவன் கையில் பந்தை போட்டான். சிவாவின் கூட்டம் ஏற்கனவே மைதானத்தில் இறங்கி இருந்தது.

“பாத்து விளையாடுங்க ப்பா...” காயத்திரி கூற அவரின் கன்னம் கிள்ளி, கொஞ்சி என ஆளுக்கு ஒரு விதமாக அவருக்கு நம்பிக்கை கொடுத்து செல்ல,

இறுதியாக நின்ற உதய், “தோத்துட்டா அவன் புட்பால் இனிமே விளையாட மாட்டேன்-னு சொல்லிட்டான் மா”

மைதானத்திற்குள் அந்த சிறிய கிரிக்கெட் பந்தை கால் பந்தாக நினைத்து எத்தி ஏத்தி விளையாடி சென்றி கொண்டிருந்தவனை எட்டி பார்த்த காயத்திரி, “அப்டியா சொன்னான் அவன்?” கோவமாக கேட்டார்.

ஆம் என்று தலையை ஆட்டியவன் அன்னை முன் முட்டி போட்டு அமர்ந்து அவர் கைகளை பற்றி, “ஜெய்க்கலனா என்ன மா பண்ணுவேன் நான்? அவன் பிடிவாதம் தான் உங்களுக்கு தெரியுமே”

சிறு பயம் சில நிமிடங்களாக இருந்தது உதய்க்கு. அவன் தலையை தடவியவர், “உங்க மேல இருக்குற நம்பிக்கைல தான் தம்பி அவன் அப்டி பேசிருப்பான். ஜெயிச்சு குடு உதயா அவனோட சந்தோஷத்துக்காக”

சிறு சிரிப்போடு எழுந்தவனின் கை பிடித்து நிறுத்தியவர், “எல்லாரும் விளையாட்டு பசங்க உதயா நீ தான் பொறுப்பா பாத்துக்கணும்”

தன் கையை பற்றியிருந்த அவர் கையை அழுத்த பற்றி விடுவித்தவன், “பாத்துக்குறேன் மா” என்று மைதானத்தை நோக்கி சென்றான்.

உள்ளே நுழைந்ததும் நண்பர்கள் நால்வரும் ஏதோ தீவிரமான ஆலோசனையில் இருந்தனர், “ராஜா டேய் கரெக்ட்டா ஸ்டெம்ப்ப பாத்து போடுடா... பேட்ல போடாத அப்றம் அவனுக வெளுத்துடுவானுக” தமிழ் ஆதியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“மாமே நீ கவலையே படாத முதல் பாலே நடு ஸ்டெம்ப் நச்சுனு போல்ட் ஆகும் பாரு... அய்யா கண் கூர்மை அப்டி டா...” விசயமே இல்லை என்றாலும் காலரை தூக்கிவிட்டு பெருமை பேசுவதில் ஆதிக்கு அப்படி ஒரு ஆனந்தம்.


“சும்மா இருடா தமிழு... ஆதி உனக்கு எப்படி போடணுமா அப்டி போடு... நோ பால், வைட் இல்லாம மட்டும் போடு. ரெண்டு ஓவர் சமாளிச்சா போதும் அப்றம் நாங்க பாத்துக்குறோம்” கெளதம் நண்பனை தட்டிக்கொடுத்து செல்ல உதய்யை பார்த்து தோளை குலுக்கி வந்து வீச தயாரானான் ஆதி.

சிவாவின் அணிக்கு ஏக குஷி ஆதி பந்தை பிடித்திருந்த விதத்தை பார்த்தே... ஆட்டம் விரைவில் ஆரம்பமாக ஆதி பந்தை வீசிய பொழுதெல்லாம் அவர்கள் அடித்து ஆட, கிரிக்கெட் தெரிந்தவர்களை வீழ்த்த அவனால் முடியாமல் போனது.

அதையும் மீறி கெளதம் இரண்டு பேரை வீழ்த்த, ஆதவன், உதய் ஒருவனையும் வீழ்த்தினார். பத்து ஓவர்கள் முடிவில் சிவாவின் அணி அறுபத்தி ஏழு ரன்கள் எடுத்திருக்க உதய்யின் அணிக்கு அறுபத்தி எட்டு ரன்கள் தேவைப்பட்டது.

முதலில் கௌதமும், ஆதவனும் களம் இறங்க காத்திருக்க, சிவாவின் அணியிலிருந்து ஒருவன் இரண்டு மட்டையை கொடுத்தான். அதை பார்த்த ஆதிக்கு அடக்க முடியாமல் கோவம் தான் வந்தது. காரணம் எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் இருந்தது அவை.

“செத்தானுக இன்னைக்கு என் கைல” எகிறிக்கொண்டு செல்ல இருந்த ஆதியை பிடித்து நிறுத்தவே பெரும் பாடாக போனது.

“தம்பி உதயா இது சரியா வருமான்னு பாரு?” பின்னால் இருந்து குரல் வர, காயத்திரியை திரும்பி பார்த்த உதயனுக்கு சிரிப்பு தான் வந்தது. கையில் மூன்று மட்டை பந்துகளை சுலபமாக தூக்கி வந்தார் ஆராய்ந்துகொண்டே.

அதை பார்த்த பொழுதே தெரிந்தது நிச்சயம் விலை உயர்ந்ததாக தான் இருக்கும் என.

ஆதியின் தோள் தட்டி, “பேட் வந்துடுச்சு” நண்பனிடம் கூறி அன்னை அருகில் சென்றவன் மட்டையை வாங்கி, “ஏன் மா இதெல்லாம்?” சிரித்தவாறே கேட்டான்.

“பேட் உங்கட்ட இல்லையே தம்பி, அதுக்கு தான் நம்ம டிரைவர் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொன்னேன்... சரியான்னு பாரு”

“நீங்க வாங்குனது என்னைக்கு தப்பாகிருக்கு?” அன்னை-கு அது போதும் சிரிப்பை வரவழைக்க, இன்முகமாய் சரி என தலையை ஆட்டி சென்றுவிட்டார்.

ஆனால் அவர்களுக்கான அடுத்த சவால் மழை. முதலில் சிறு சிறு தூறலாக வந்தது, நேரம் கடக்க கடக்க வேகம் பிடித்தது. மைதானத்தினுள் முதலில் வந்து நின்ற கௌதமிற்கும் ஆதவனுக்கும் பிம்பம் தெளிவாக தெரியவில்லை.

மைதானத்திற்கு வெளியிலே, “ஒரு நல்ல பேட்ஸ்மேன திறமையை வெளி காட்ட விடாம முடக்கி வச்சிருக்கீங்க” – ஆதி

“இவன் ஒருத்தன்... உதய் என்னடா இப்டி மழை பெய்யிது, பால் ஒழுங்கா வேற வராதே...” – தமிழ்

“வழி இல்ல தமிழ். அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆடணும்” – உதய் கண்கள் மைதானத்தை விட்டு நகரவில்லை.

“நான் வேணா போகவா, ஒரே ஓவர்ல ஆட்டைய முடிச்சிட்டு வந்துடுவேன்” தன் வாக்கில் புலம்பிய ஆதியை கண்டுகொள்ளவே இல்லை இருவரும்.

அங்கு உள்ளே, “அடிச்சு ஆடு கெளதம், பாத்துக்கலாம்” – ஆதவன்

“தோ இப்ப பாரு” தெனாவெட்டோடு பேசிய கெளதம் இடத்தில் நின்று பேட்டை அவன் பிடித்த விதத்தை பார்த்து அங்கிருந்த மொத்த கூட்டமும் சிரித்தது.

“பேட் புடிக்க தெரியல இவனுக எதுக்குடா வெட்டி வீராப்போட சுத்துறானுக” கௌதமின் காதுப்படவே பேசிய ஒருவன் பந்தை வாங்கி, “பால்ல உருட்டி விட்டா கூட அடிக்க மாட்டானுக போல... பாரேன் ஒரே ஓவர்ல அஞ்சு விக்கெட் விழுகும்” அளவிற்கு மீறிய நம்பிக்கை அவன் நடையிலே தெரிந்தது.

முதல் பந்தே நூலிடையில் கெளதம் தப்ப மீண்டும் சிரிப்பொலி தான் அங்கே சிவாவின் கூட்டத்திடம்.

அடுத்த பந்தும் அதே போல் சிவாவின் நண்பன் போட, இந்த முறை பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. பந்து சென்ற திசையையும் கௌதமையும் பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தான்.

“என்னா டா பேட்ட புடிக்க தெரியாம எந்த கிருகனாவது இருப்பானா?” அவனோ பதில் எதுவும் பேசவில்லை, “ஸ்ட்ரீட் கிரிக்கெட் தெரியுமா? ஸ்ட்ரீட் சாம்பியன் டா நாங்க...” கிரிக்கெட் மட்டையை தூக்கி தோளில்
 
Last edited:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
போட்டு அசால்டாக நடந்தவனை பார்த்து இன்னும் ஆச்சிரியம் தான் இருந்தது அவர்களுக்கு. சத்தியமாக இந்த பரிமாணத்தை நண்பர்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை சிவாவின் கூட்டம்.

கௌதமை பார்த்து சிரித்த ஆதவன் அதே சிரிப்போடு பந்தை போட்டவனை பார்த்து ‘எதுக்கு இது?’ என்று சைகை செய்து தலையில் அடித்துக்கொண்டான் சிரிப்புடன்.

முக்கால்வாசி நேரம் நண்பர்கள் கூட்டம் கால்பந்தில் இருந்தால் மீதி இருந்த நேரம் உதய்யின் வீட்டின் அருகே இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் தான் விளையாடுவார்கள்.

அதில் ஓரளவிற்கு அனைவரும் விளையாடினாலும் கெளதம், ஆதவன் நன்றாகவே விளையாடுவார்கள். அடுத்த சில ஓவர்கள் கெளதம், ஆதவனின் கூட்டணியை உடைக்கவே இயலாமல் போனது, கொட்டும் மழையும், ஆறாய் காலுக்கு கீழ் ஓடிய மழை நீரும் சிறிதும் அவர்கள் ஆட்டத்தை பாதிக்கவில்லை. ஆனால் கெளதம் இருபத்தி ஓர் ரன்கள் எடுத்த பொழுது ஆட்டம் இழக்க, அடுத்து தமிழ் வந்து சிறிது முயன்றான். அடுத்து அவனும் ஆட்டம் இழக்க தன்னை களத்தில் விடுமாறு ஆதி ஆடி தீர்த்துவிட்டான்.

‘நீ கத்திகிட்டே இரு’ என்று உதய்யும் அவனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆதியின் நேரம் அடுத்து ஆதவன், தமிழ் என இருவரும் வேகமாகவே ஆட்டம் இழக்க உதய்க்கு ஜோடியாக அவன் செல்ல வேண்டிய நிலை.

“இன்னைக்கு அவன் போடுற ஒவ்வொரு பாலும் உடைய போகுது பாருங்கடா... இவ்வளோ பெரிய பிளேயர ஏன் ஒலிச்சு வச்சோம்-னு இந்த உலகமே பீல் பண்ணும்” பக்கம் பக்கமாக வசனம் பேசி மைதானம் நோக்கி நடந்தவனை தமிழ் அழைத்தான்.

“சரி டா... சரி. பாத்து ஆடுறேன், அவனுக மனசு நோக்காத மாதிரி நடுல நடுல ஒரு ரன் ரெண்டு ரன் வேணும்னா அடிக்கிறேன். ஆனா சீக்ஸ், போர் அடிக்காம எல்லாம் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” – ஆதி

“எப்டி?? இது இல்லாம கைலயே புடிச்சு புடிச்சு தூக்கி போடுவியா?” பேட்டை நீட்டி ஆதவன் கேட்கவும் தான் அப்படி ஒரு இருப்பதே அவனுக்கு நினைவு வந்தது.

“சாரி” என்றவன் மேலும் முறைத்து பார்த்த மூவரையும் பார்த்து, “கேவலமா பாத்தா நான் என்ன பண்றதாம்? ஒரு நல்ல பேட்ஸ்மேன்-கு அழகே என்ன மாதிரி ஒரு சிறந்த பௌலர்-கு பேட்டிங்ல வேலையே வைக்க கூடாது” – ஆதி

“கோதாவரி அந்த வெளக்கமாத்த எடு” – தமிழ் ஆதியை பார்த்து முறைக்க,


“தோ வந்துட்டேன் உதயா...” அசடு சிரிப்போடு உதய் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.


“பாத்து ஆடு, சீக்ஸ் எல்லாம் ட்ரை பண்ண வேணாம். பால எனக்கு பாஸ் பண்ணி மட்டும் விடு” – உதய்

“சூழ்ச்சி பன்றானுக நாலு பேரும்”

ஆதி ஜாடை பேச, சிரிப்போடு, “போடா டேய்” அதே சிரிப்போடு உதய் சென்றான்.

பெரிதாக எல்லாம் இல்லை, இன்னும் பத்து ரன்கள் மட்டுமே பதினைந்து பந்துகளில். அதில் அடுத்த மூன்று பந்துகளில் ஆதி ஒரு ரன் மட்டுமே எடுக்க, உதய் சீக்ஸ் ஒன்றை அடித்தான். அடுத்த முறை ஆதி பந்துகளை சிந்திக்கவிருக்க இந்த முறையும் சொதப்பினான். ஆதியின் மேல் வந்து விழுந்த சிவாவின் கூட்டத்தின் சிரிப்பை பார்த்து அமைதியாய் ஆதி கடந்தது பார்க்க அனைவருக்குமே ஆச்சிரியம் தான்.

“ஆதி...” உதய்யின் கண்டன பார்வையை பார்த்து,

“மழை இப்டி கொட்டுது பால் எங்க வருதுன்னே தெரியல உதயா” ஆதி பேசுவது கூட தூரத்தில் நின்றவனுக்கு மெல்லிசாக தான் கேட்டது.

“அவன் கை கால் உடையனும்” தூறல்களின் சத்தத்தில் சல்மான் வேறு ஒருவனிடம் பேசியது அவர்களுக்கு சற்று அருகில் நின்ற உதய்க்கு பிசுறு தட்டாமல் கேட்டாலும் சிரிப்போடு மேலும் கவனித்தான், “பெரிய மயிறு மாதிரி ஆடுனான், இன்னைக்கு அவன் ஜெயிச்சாலும் பரவால்ல அந்த தே*** பய நம்ம கையால சாக...”

முழுதாக அவன் பேசி முடிக்கும் முன் முதுகில் பொறுக்க முடியாத வலியோடு சல்மான் தரையில் கிடந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தவன் தலையை சல்மானிடமிருந்து உயர்த்த அங்கு உதய் வெறிகொண்டு நின்றான். சல்மானை அடித்தது உதய் தான், அதுவும் பேட் வைத்து.


“என்ன சொன்ன? ஆஹ்... என்ன சொன்ன? திரும்ப சொல்லு” வலியில் துடித்து கிடந்தவனை நோக்கி உதய் மேலும் நகர அதற்குள் நிலையின் தீவிரம் உணர்ந்து கெளதம், தமிழ், ஆதவனும் உள்ளே வந்தனர். சிவாவின் நண்பர்களும் உடனே உதய்யை நோக்கி வந்த பின்னும் உதய் சிறிதும் அசையவில்லை.

“சொல்லுடா தைரியம் இருந்தா திரும்ப சொல்லு” மேலும் கோவம் அடங்காமல் இருக்க ஓங்கி மீண்டும் தாக்க, இந்த முறை அடி விழுந்தது அவன் முகத்தில்... ரத்தம், மழை நீரோடு ஓட உதய் மீது ஒரு கூட்டமே தாவியிருந்தது.

எப்பொழுதும் நிதானமாய் இருப்பவன் இப்பொழுது இவ்வளவு கோவப்படுவதிலே நண்பர்களுக்கு புரிந்தது. உதய் மீதி தாவிய கூட்டத்தில் ஒருவனை பிடித்து ஆதி அடிக்க, அதற்குள் ஆதவன், தமிழ் உதய்யை பிடித்திருந்த மற்றவர்களை பிரித்துவிட்டு சண்டையில் ஈடுபட்டனர். பத்து பேர் இருந்த கூட்டத்தை ஐவர் சமாளிப்பது கடினமாக இருந்தாலும் இரு பக்கமும் ஆக்ரோஷம் மட்டும் குறையாமல் அப்படியே இருந்தது. வாங்கிய காயங்களில், அடித்து கொட்டிய மழை பட்டு வலி அதிகம் இருந்தாலும் சிறிதும் மசியவில்லை எவரும்...

ஆதி தன் பங்கிற்கு மட்டையால் அடிக்க, தமிழ், ஆதவன் மாட்டியிருந்த ஸ்டெம்ப்பை பிடிங்கி அடித்தனர்... சில நீண்ட நெடிய சண்டைக்கு பிறகும் நிற்காமல் சென்ற சண்டையை அந்த பள்ளியின் பி.டி மாஸ்டர் வந்து தான் நிறுத்த வேண்டி இருந்தது.

“பொறுக்கி பசங்களா டா நீங்க? காட்டான் மாதிரி அடிச்சுக்குறிங்க” அவர் கத்தியதை கூற பொருட்படுத்தாமல் இன்னும் மாறி மாறி முறைத்துக்கொண்டிருக்க,

“உங்க ஸ்கூல்ல பேசிட்டேன். போங்க இருக்கு இன்னைக்கு” என்றவர் சிவாவின் கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்ல அப்பொழுதே உதய்யின் பள்ளியிலிருந்து வாத்தியார் வந்து,

“மாடு மேக்க போங்க அஞ்சுபேரும் அது தான் சரியா வரும்... காவாலி பசங்க மாதிரி இப்படியா வெளி ஸ்கூல்-கு போய் சண்டை போடுவிங்க? அசிங்கமா இருக்கு டா. பத்து நாள் சஸ்பெண்ட் பண்ண சொல்லிருக்காரு ஹெட் மாஸ்டர். அகைன் ஸ்கூல் வரப்ப பேரன்ட்ஸ் கூட்டிட்டு வாங்க” வாய்க்கு வந்தவை அனைத்தையும் கூறி அவர் திட்ட, அவர் பேசிய எதுவும் இவர்களை பாதிக்கவில்லை.

“சார் பசங்க எந்த தப்பும் பண்ணல” – காயத்திரி இடையில் வந்து நிற்க அவருக்கும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தனி வகுப்பு நடந்தது.

விடுமுறையை தேடி தேடி அலைபவர்களுக்கு தானாக வந்து வைத்துக்கொள் என்று கூறியது போல் தான் இருந்தது அவர்களுக்கு தண்டனை. என்ன சிறிய பிரச்சனை பெற்றோரை சமாளிக்க வேண்டும்... அதற்கும் காயத்திரியை முன் வைத்து பேச முடிவெடுத்தனர். அடுத்த ஆறு நாட்கள் ஐவரும் ரெக்கை இல்லாமல் பறந்தனர், விளையாட்டு மைதானமே வீடாய் மாற, வீடு ஹோட்டலை போல் உண்பதற்கு மட்டுமே பயன்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று நண்பர்கள் அனைவரும் களைப்பில் அவரவர் இல்லத்திற்கு செல்ல, ஆதி தமிழை அழைத்துக்கொண்டு வீடியோ கேம் ஆடும் இடத்திற்கு சென்றான்.

“நாளைக்கு வரலாம் ஆதி, எனக்கு அசதியா இருக்கு டா” – தமிழ்

“புதுசா ஆரமிச்ச கடை தமிழு அது ப்லே ஸ்டேஷன் எல்லாம் புதுசா இருக்காம். அதுவும் ப்லே ஸ்டேஷன் த்ரீ. செம்மயா இருக்காம் டா. என்னமோ நேர்ல ஆடுற மாதிரி இருக்காம். இன்னைக்கு கிரௌண்ட்ல எல்லாம் அதே தான் பேச்சு. அப்ப முடிவு பண்ணேன் இன்னைக்கு அத பாத்தே ஆகணும்னு” – ஆதி

“ஆனாலும் உனக்கு பிடிவாதம் அதிகம் ஆதி” – தமிழ்

“ஒரு மணி நேரத்துக்கு அஞ்சு ரூபா தான், ரெண்டு மணி நேரம் ஜாலியா இருக்குறோம். உன்கிட்ட காசு இருக்கா?” – ஆதி

“ஒரு கோடி ரூபா இருக்கு போதுமா? – தமிழ்

“அடிச்சேன் தெரு கோடில போய் விழுவ. பத்து ரூபாய்க்கு எவ்ளோ நேரம் ஆட முடியுமோ மஜா பண்றோம்” – ஆதி

“ரொம்ப ஆசை காட்டி கூட்டிட்டு வர்ற, நல்லா இல்லாம இருந்தா நீ தான் என்கிட்ட செத்த” இருவரும் பேசிக்கொண்டே ஆதி கூறிய இடத்திற்கு வர வழிந்தோடிய கூட்டத்தில் சில நிமிடங்களுக்கு பிறகு தான் இவர்களுக்கு இடம் கிடைத்தது.

முக்கால் மணி நேரத்திற்கு மேல் விளையாடியவர்கள் வெற்றி பெற வேண்டிய ஒரு விளையாட்டில் தோற்றிட அதில் வெறியான ஆதி கோவத்தில் தங்களுக்கு முன்னிருந்த சிறிய மர பலகையை ஓங்கி அடித்துவிட்டான். அவன் அடித்த வேகத்திலும் அழுத்தத்தாலும் அந்த சாதாரண பலகை தாக்கு புடிக்க முடியாமல் உடைந்து விழ அதன் மீதிருந்த அந்த ப்லே ஸ்டேஷனும் கீழே விழுந்து பலமாக உடைத்திருந்தது.

கோவத்தின் வீரியத்தை அப்பொழுது தான் உணர்த்தவனை, “அட பைத்தியமே” தமிழ் திட்டி முடிக்க, “என்னடா இது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா நீ வாடுக்கு அடிச்சு உடைக்கிற... காசு எடு” என்றான் கடையின் முதலாளி வேகமாக.

“அண்ணே தெரியாம விழுந்துடுச்சு...” – தமிழ்

“தெரியாம விழுந்துடுச்சா? நானும் இங்க தான இருக்கேன் பாத்தேன் டா இவன் தான் ஒடச்சான். காச வச்சிட்டு இடத்தை காலி பண்ணு” என்றான் அவன் விடாப்பிடியாக.

“யோவ் தர்றேன்யா” எப்படி தர போகிறோம் என்ற சிறு யோசனையும் இல்லை ஆனால் செய்யவேண்டும்.

“வா தமிழு” என்று தமிழையும் ஆதி உடன் அழைக்க, “இவனையும் கூட்டிட்டு ஓட பாக்குறியா. பணத்தை எடுத்துட்டு வந்து இவன கூட்டிட்டு போ” என்றான் இறுதியாக.

பற்களை கடித்து அந்த முதலாளியை பார்த்தவன், “இருடா வர்றேன்” தமிழிடம் கூறி வெளியில் வந்தான். யோசனையோடு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவனுக்கு உதய்யை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அருகில் இருந்த ஒரு டீ கடைக்கு சென்றவன் அங்கிருந்த போன் பூத்தில் ஒரு ரூபாய் காயினை போட்டு உதய்யின் இல்லத்திற்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்றது காயத்திரி, “மா உதய் இல்லையா?” என்றான் தயக்கமாக.

“இல்ல ஆதி ஏன் இப்ப தான் வீட்டுல எல்லாரும் அவங்க அப்பா ஆபீஸ் போனாங்க” – காயத்திரி

“சரி மா நான் வச்சறேன்” ஆதி இணைப்பை துண்டிக்க அப்டியே தலையில் கை வைத்து நின்றுவிட்டான்.

நிச்சயம் அந்த ப்லே ஸ்டேஷன் இருவதாயிரத்தை தாண்டும். எங்கு செல்வான் அந்த பணத்திற்கு? தந்தை இருந்தால் கூட இரண்டு அடி வாங்கி கெஞ்சலாம் ஆனால் இப்பொழுது என்ன செய்வது? வேறு வழியே இல்லை காயத்திரி மட்டும் தான் ஆனால் என்ன கூறுவது? ஏற்கனவே அவன் கோவத்தை அதிகம் கண்டிப்பவர் இதை கூறினால் நிச்சயம் உதவ மாட்டார், சரி ஏதாவது ஒரு பொய் கூறி, பணத்தை வாங்கிய பிறகு உண்மையை கூறி விடலாம் என்ற முடிவில் மீண்டும் கயாத்திரிக்கு தான் அழைத்தான்.

“மா இருவதாயிரத்தை எடுத்துட்டு ஒடனே எங்க ஸ்கூல் கிட்ட இருக்க மெயின் ரோடுகு வாங்க” – ஆதி

“எதுக்கு ஆதி இந்த அவசரம், அதுவும் ஏன் இவ்ளோ பணம்?” கண்டிப்போடு தான் கேள்வி வந்தது.

“தமிழுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு மா”

“என்ன ஆதி சொல்ற? எங்க இருக்கீங்க? அடி ரொம்ப பெருசா? இப்ப எப்படி இருக்கான்?” படபடப்பாக கேள்வி கேட்டுக்கொண்டே அவர் செல்ல, இப்படிப்பட்ட நல்ல மனிதரை மனம் வருத்தப்பட வைக்கிறோமோ என்ற குற்றவுணர்வை சிறிது நேரம் புடிக்க முடிவெடுத்தான்.

“பெரிய அடி இல்லமா ஆனா காசு குடுத்தா தான் அட்மிட் பண்ணுவாங்கலாம்”

“என்னடா இப்டி சொல்ற? ஐயோ வீட்டுல வேற யாரும் இல்லையே. நான் என்ன பண்ணுவேன்... ஆதி நிஜமா நல்லா இருக்கான்ல தமிழ்? அவன் வீட்டுல எதுவும் சொல்லிடாத சரியா? நான் வந்து பக்குவமா அவங்க வீட்டுல பேசுறேன்”

“மா வாங்க மா அப்றம் பேசிக்கலாம்” தன் மீது தான் கோவம் அதிகம் வந்தது ஆதிக்கு.

ஆதியிடம் பேசிவிட்டு பணத்தை எடுத்து செல்லவிருந்தவரை மீண்டும் அலைபேசி தடுக்க மீண்டும் ஆதியாக இருக்குமோ என்ற பயத்தில், “ஹலோ ஆதி என்னப்பா ஆச்சு?”

“மா நான் உதய், என்ன ஆச்சு ஏன் இப்டி படபடப்பா இருக்கீங்க?”

“உதயா... உதயா தமிழுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு ஆதி போன் பண்ணான், நீ உங்க ஸ்கூல் மெயின் ரோடு கிட்ட வாந்துடு. நான் போறேன்” அதோடு வேகமாக வீட்டை விட்டு காயத்திரி செல்ல வீட்டில் எந்த காரும் இல்லாமல் போனது.

வழிந்துகொண்டே இருந்த கண்ணீரை துடைத்தவர் சாலையில் கிடைத்த முதல் ஆட்டோவை பிடித்து ஆதி கூறிய இடத்திற்கு விரைந்தவர் ஆதியை தெருவின் அந்த பக்கம் பார்த்தார்.

“தம்பி அந்த பக்கம் போங்க” என்றார் ஆட்டோ ஓட்டுனரிடம்.

“அப்டி நேரடியா போக முடியாது மா... சுத்தி தான் அந்த பக்கம் போகணும், போலீஸ் இருக்காங்க” என்றார் ஆட்டோ ஓட்டுநர்.

போக்குவரத்தை பார்த்தவர் ஆட்டோவிலிருந்து இறங்கி நெரிசல் அதிகமிருந்த சாலையை கடந்தவர் ஒரு பாதியை கடந்து மறு பாதி சாலையை கடக்கும் பொழுது தூரத்தில் வந்த பேருந்து ஒன்றை கவனிக்காமல் போக அதை தூரத்திலே பார்த்துவிட்ட ஆதி வேகமாக, “ம்மா.... பஸ்...”

பேருந்து வந்த திசையை ஆதி காண்பிக்க அது வந்த வேகத்தில், காயத்திரி சுதாரிக்கும் முன் அவர் மேல் அது மோதி வேகத்தில் அடித்து சில மீட்டர் தூரம் தள்ளி தரையில் விழுந்தார்.

“ம்மா-ஆஆ...” வார்த்தைகள் வர மறுக்க கால்கள் சிலையாகி போனது தார் சாலையில் கிடந்த அவர் தேகத்தை பார்த்து.

மஞ்சளும் பாலும் குழைத்து செய்த தேகத்தில் எப்பொழுதும் இருக்கும் மினுமினுப்பை அவர் குருதி மறைத்திருந்தது, நெற்றியிலிருந்து ரத்தம் ஆறாய் ஓட, இலக்கே இல்லாமல் விரிந்திருந்த அவர் கண்கள் வலியை காட்ட அவர் கொண்டு வந்த பணம் ஆங்காங்கு சிதறிக்கிடந்தது. மொத்தமாய் உலகம் இருண்டத்து போன்ற எண்ணம் வியாபிக்க துவங்க, காயத்திரியை மறைத்து மக்கள் கூட்டம் கூடும் பொழுது தான் தீவிரம் உணர்ந்து அவரை நோக்கி நடந்தான். கூட்டத்தை விழக்கி அவர் அருகில் சென்றவனுக்கு சொல்ல முடியாத வேதனை. அப்படியே அன்னை அருகில் அமர்ந்தவன் கதறி அழத் துவங்கினான்.

“ஐயோ... ம்மா” தலையில் அடித்து அழுதவன் மருத்துவமனை என்ற ஒன்றை அப்பொழுது மறந்திருந்தான்...

“ஆ... ஆதி... தமி... தமிழ்...” இந்நிலையிலும் தமிழை பற்றியே யோசிக்கும் அவரை இந்நிலையில் விட காரணமான தன்னை எப்படி தண்டிப்பது என்றே தெரியவில்லை.

“ம்மா.
.. இல்ல மா அவனுக்கு... ஒன்னும்... ஒண்ணுமில்ல மா” வாய் விட்டு கதறி அழுதவன் அவர் கைகளை பற்றி மேலும் அந்த இடமே கதறும் வகையில் அழுதான்.
 
Last edited:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
“எப்பா என்னப்பா பேசிட்டு இருக்க, யோவ் எதாவது வண்டிய நிறுத்துங்க” ஒருவர் அந்த கூட்டத்தில் சுதாரிக்க சிலர் வாகனம் ஏதாவது பிடிக்கலாம் என்று சென்றனர்.

“ஆ... ஆதி...” கயாத்திரியின் முகம் வலியில் சுருங்க ஆதியின் கையை பிடித்துக்கொண்டார்.

“ம்மா... என்ன மா பண்ணுது... ம்மா... எனக்கு பயமா இருக்குமா... மா”

கண்கள் மெல்ல மெல்ல கயாத்திரிக்கு இருட்ட துவங்க, “பத்த... பத்தரம் ப்பா... உத... உதய்ய பா... பாத்துக்கோ...” விதியை கணித்தவர் கண்களில் இருந்து கண்ணீர் விழ, அது வலியிலா அல்லது வேதனையிலா என்று தெரியவில்லை அவனுக்கு.

“நான் பாத்துக்க மாட்டேன்... நீங்க தான் பாத்துக்கணும். இப்டி எல்லாம் பேசாதீங்க மா வாங்...”

“ம்மா...” உதய்யின் குரல் காதில் கேட்க அப்டியே கயாத்திரியின் கையை விட்டுவிட்டான்.

“தம்பி எந்திரி, ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகலாம்” ஆதி நகரப்போவதில்லை என்று தெரிந்து அவனை விட்டு அங்கிருந்தவர்கள் காயத்திரியை ஒரு ஆட்டோவில் ஏற்ற வேகமாக உடன் ஏறி அமர்ந்துகொண்டான் உதய்... கயாத்திரியையே பாத்துக்கொண்டிருந்த ஆதியின் கண்கள் நண்பனை பார்க்க அதில் தெரிந்த அவன் கண்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் மடிந்தது ஆதியின் மனம்.


தெருவிலே ஆசையாது நின்றவனை ஒரு கூட்டம் பிடித்து சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பத்திரமாக இருக்கும்படி அறிவுரைகள் கூறி சென்றது. கீழே கிடந்த பண தாள்களை ஒருவர் எடுத்து ஆதியின் கையில் பத்திரமாக கொடுத்து சென்றார். எவ்வளவு நேரம் அவன் அப்படியே இருந்தான் என்று தெறியவில்லை, இடத்தை மறந்து தெருவிலே அமர்ந்தவனுக்கு கயாத்திரியின் நிலை மட்டுமே கண் முன்னாள் வந்து நிற்க ஒவ்வொரு நொடியும் மாண்டான்.

“ஆதி... காயத்திரி மா-கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு டா... வா போகலாம்” வேக வேகமாக வந்த தமிழ் ஆதியின் தோளை பிடித்து உலுக்க அசைவில்லாது இருந்தவன் அழுது வீங்கிய கண்களுடன் தமிழை ஏறிட்டு,

“நான் தான் தமிழு எல்லாத்துக்கும் காரணம். பணத்துக்காக உனக்கு ஆக்சிடென்ட்-னு பொய் சொல்லி அவங்கள வர வச்சு இப்டி பண்ணிட்டேன்” உயிர் நீங்கிய குரலில் பேசியவனைக் கண்டு உடல் அதிர்ந்தது தமிழுக்கு.

“ஆதி...” அதிர்ச்சியில் தமிழுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

தன் கையிலிருந்த பணத்தை தமிழிடம் உயிரே இல்லாமல் கொடுத்தான், “தப்பு பண்ணிட்டேன் தமிழு... என் காயத்திரி ம்மா வ நானே இப்டி ஆகிட்டேன் டா” நண்பனின் காலை பிடித்து கட்டி கதறியவனை பார்க்க பாவமாக இருந்தாலும் அதை மீறிய கோவம் தான் வந்தது.

“நீ இப்டி பண்ணுவ-னு கொஞ்சம் கூட நான் எதிர் பாக்கல டா” ஏமாற்றமாக கூறியவன் ஆதியின் தோளை பிடித்து எழ வைத்தான்.

“வா ஹாஸ்பிடல் போகலாம். ஒன்னும் ஆகியிருக்காது...” ஆதியின் கை பிடித்து இழுக்க சிறு பிள்ளை போல், “நல்லா தான தமிழு காயத்திரி மா இருப்பாங்க?”

“நல்லா இருப்பாங்க டா” தன்னுடைய சைக்கிளில் ஏறி அமர்ந்தவன், “ஒக்காரு போகலாம்” ஆதியும் அமைதியாக ஏறி அமர மனதின் பாரத்தை மட்டும் அவனால் அடக்க முடியவில்லை.

மருத்துவமனை செல்லும் வழி எல்லாம் உதய்யின் குடும்பத்தை பற்றியும், காயத்திரியை பற்றியும் மட்டுமே புலம்பிக்கொண்டே வந்தவனை தமிழால் அமைதியாக்க முடியவில்லை. ஆனால் மருத்துவமனை வந்ததும் உள்ளே வராமல் வெளியிலேயே பிடிவாதமாய் நின்றான்.

“ஆதி இப்ப வர போறியா இல்லையா?” தமிழ் இறுதியாக கேட்கவும், “அங்க இருக்குற யார் முகத்தையும் என்னால பாக்க முடியாது டா. நான் வர மாட்டேன்” அழுத்தமாக கூறியவனை அதற்கு மேல் வற்புறுத்தாமல் தமிழ் உள்ளே சென்றான்.

தமிழ் உள்ளே சென்ற சில நொடிகளில் ஆதி வாசலையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருக்க தமிழ் சென்ற வேகத்திலே மீண்டும் வெளியில் வந்தான். சைக்கிளை எடுத்து மீண்டும் ஆதி முன் வந்து, “ஏறு” என்றான் இறுகிய முகத்துடன்.

“ஏண்டா, ஏதாவது மருந்து வாங்கணுமா? என்கிட்டே காசு இல்லையே” பிதற்றியவனை தண்டிக்கும் நிலையில் கூட தமிழின் மனா நிலை இல்லை.

“ஆதி இப்ப வர போறியா இல்ல நான் போகவா?”

பித்து பிடித்தவன் போல் அமைதியாக வந்து அமர்ந்தவன் செல்லும் வழி எங்கும், “எங்க போறோம் மச்சான்? காயத்திரி மா நல்லா இருக்காங்களா? உதய் என்ன உள்ள வர கூடாதுனு சொல்லிட்டானா?” கேள்வி கணைகளை மாறி மாறி தொடுக்க சைக்கிள் உதய்யின் இல்லம் நோக்கி செல்வதை பார்த்தவன், தமிழின் சட்டையை இறுக்கி பிடித்தான்.

வீதியின் நுழைவாயிலிலே கூட்டம் கூடியிருக்க சைக்கிளில் இருந்து தமிழ் நிறுத்தும் முன் இறங்கியிருந்தான்.

“தமி... தமிழ்... தமிழ் ஏன் டா எல்லாரும் வீட்டு முன்.. முன்னாடி நிக்... நிக்கி... நிக்கிறாங்க?”

பேச கூட முடியவில்லை, மனதில் உத்தித எண்ணங்கள் அத்தனையும் பொய்யாகவோ கனவாகவோ இருக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்த அத்தனை தெய்வங்களின் காலிலும் மனதிலே விழுந்தான்.

கண்கள் வாசலிலே இருந்தாலும் கேள்விகள் தமிழுக்கு, “காயத்திரி மா எங்க தமிழு?” வீடு வரை இருந்த தைரியம் தமிழுக்கு வீட்டின் வாசலை பார்த்த பின்பு மறைந்தது எதுவும் பேசவில்லை ஆதியிடம். உள்ளே சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்த தமிழை தொடர்ந்து செல்ல முடியவில்லை ஆதியால். வாசலை அடைந்தவன் கால்கள் உள்ளே கேட்ட ஓலத்தின் ஓசையில் தரையில் மடங்கி அமர்ந்து கதறினான். பெற்றோரை இழந்தவனுக்கு, பெற்றோரை விட மேலாக இருந்த அவனுடைய காயத்திரி அம்மா இன்று தன்னால் தன்னை விட்டு மொத்தமாக பிரிந்துவிட்டார் என்ற எண்ணமே இறப்பை தேடி அலைய மனம் ஆட்டம்போட்டது. தலையில் அடித்து அழுத்தவனை மொத்த கூட்டமும் விசித்திரமாய் பார்த்தாலும் அவர்கள் பார்வை கூட அவனுக்கு தெரியவில்லை, அனைத்தயும் விட பெரிய இழப்பை சந்தித்து நிற்கிறானே...

கதறினான் மணி கணக்கில், அவனை அடக்க கெளதம், ஆதவன், தமிழ் அல்லது அவர்கள் குடும்பத்தினர் எவர் வந்தாலோ உள்ளே செல்லாமல் வெயில் எதையும் பார்க்கவில்லை, அதே இடத்தில் கிடந்தவனை பார்க்க பரிதாபமே பிறந்தது. ஆனால் தெரிந்த உண்மை எதையும் பெரியவர்களிடம் இளையவர்கள் பகிர்ந்துகொள்ளவில்லை.

சடங்குகள் அனைத்தும் முடிந்து கயாத்திரியின் உடலை எடுத்து மொத்த கூட்டமே வந்த சமயம் வற்றிய கண்ணீர் எல்லாம் அன்னையை இறுகிய முகத்துடன் பார்த்துக்கொண்டு வந்த உதய்யை பார்த்ததும் மீண்டும் வேதனை அதிகமாகியது. கயாத்திரியின் உடலை பார்த்தவன் அருகில் செல்ல கூட உடல் கூசியது.

ஆதி அருகில் வந்த ஆதவன், “வாடா வந்து அம்மாவை கடைசியா பாரு” ஆதவனின் கையை உதறி முடியவே முடியாது என்று பிடிவாதமாய் இருந்தவன் இறுதி சடங்கிற்கு மின்மயானம் சென்றும் தூரத்திலிருந்து கயாத்திரியின் முகத்தை பார்த்து துடிதுடித்து போனான்.

அடுத்து வந்த நாட்களில் உதய் வீட்டை விட்டு வெளியில் வராமல் தன்னுடைய குடும்பத்தை கூட மொத்தமாக தவிர்க்க, நண்பர்களுடன் கூட அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. முற்றிலும் அனைவரையும் தவிர்த்தான். ஆதியோ அதை விட மோசமாக உணர்வதை கூட முற்றிலும் தவிர்த்து மருத்துவமனை கூட சில முறை சென்று வந்தான் தமிழின் தந்தையின் மிரட்டலில்.

ஒரு முறை உதய்யை பார்த்த சென்ற கௌதமை கட்டி அணைத்து ஏதேதோ அன்னையை நினைத்து அழுத உதய்யின் மண நிலையை கேட்ட ஆதிக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் உதய்யின் வீட்டிற்கே சென்றான், அங்கு அவனுக்கு அடுத்த அதிர்ச்சியாக அவன் கையிலே உதய்யின் பள்ளி பரிமாற்ற சான்றிதழை, “மேல தான ஆதி போற, உதய் கேட்டான் குடுத்துடு”

வாழ்க்கையையே தொலைத்திருந்த உதய்யின் தந்தையை பார்த்ததே ஆதியால் பொறுக்க முடியவில்லை அதையும் தாண்டி இவர்கள் வீட்டிற்குள் நுழைவதை பார்த்ததுமே வந்து ஆசையாய் பேசி வயிற்றை நிறைத்து அனுப்பும் கயாத்திரியின் நடை இல்லாத அந்த வீட்டின் வெறுமையை பார்த்ததுமே அங்கு நிற்கவே அவனுக்கு கால்கள் கூசியது.

ஆதியின் தயக்கத்தையும் நடுக்கத்தையும் உணர்த்த நண்பர்கள் கூட்டம் அவன் கை பிடித்து மேலே இழுத்து சென்றனர் உதய்யின் அறைக்கு. கதவு தாழிடாமல் இருக்க, நண்பனின் அனுமதி இல்லாமலே மூவர் உள்ளே செல்ல தயங்கி தயங்கி தலையை தூக்காமல் உள்ளே வந்தான் ஆதி. உதய் அவன் அறையில் இருந்த பால்கனியில் அமர்ந்து எல்லையே இல்லாத வானத்தை வெறித்து அமர்ந்திருந்தான்.

“உதய்...” அவனுக்கு கௌதமின் அழைப்பு தெளிவாக கேட்டது என்பதை இறுகி போன அவன் உடலே சொன்னது.

“உதய் உன்கிட்ட பேசணும்” தமிழ் அழைக்க முகத்தை திரும்பி பார்த்தவன் ஆதியையும் கவனித்து அமைதியாக எழுந்து வந்து ஒரு ஓரத்தில் கை கட்டி நின்றான்.

“உதயா...” தழுதழுத்த ஆதியின் குரலில் கண்கள் சிவக்க கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு முகத்தை திருப்பி நின்றான் உதய்.

“நான் தா உதயா அம்மாவை கொன்னுட்டேன். தெரியாம பண்ணிட்டேன் டா... என்ன மன்னிக்க வேணாம். என்ன தண்டிக்க மட்டும் செய் டா...” தரையில் முட்டி போட்டு அமர்ந்து யாசித்த ஆதியின் மேல் அங்கிருந்த எவருக்கும் இரக்கம் பிறக்கவில்லை.

தன்னுடைய உலகமே நண்பர்கள் என்று இருந்தவனுக்கு அந்த உலகமே இப்பொழுது இல்லை என்றான பின்பு எதற்கு உயிரோடு இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே.

“உன்ன தண்டிச்சா காயத்திரி ம்மா வந்துடுவாங்களா?” சில நாட்களாக தன்னுடைய முகத்தை கூட பார்க்காமல் அமர்ந்திருந்த ஆதவனின் கோவ கேள்விகளுக்கு பதில் அவனிடம் இல்லையே... மௌனமாய் மட்டுமே இருந்தான் உதய்.

“ச்சை இவ்ளோ கேவலமா நீ பண்ணுவ-னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல ஆதி... எதுல விளையாடுறது-னு ஒரு விவஸ்தை வேணாம்?” – கெளதம்

“தெரிஞ்சு பண்ணல டா நானு” – ஆதி

“பொய் சொல்றப்ப மனசு உருத்தலயா? இல்ல பதறிட்டு உன்ன பாக்க வந்த காயத்திரி ம்மா வ பாத்தப்ப கூட மனசு உருத்தலயா?” – தமிழ்

“டேய் அத விடு டா... என்ன சொன்னாலும் நம்புவாங்கனு தெரிஞ்சும் உயிரோட விளையாண்டு கடைசில அவங்க உயிரையே எடுத்துட்டியே டா” அடக்க முடியாமல் ஆதவன் கேட்க முட்டி போட்டு அமர்த்திருந்தவன் காதுகளை பொத்தி கதறினான் ஆதி.

“எவ்வளவு நம்பிருப்பான் இவன் உன்ன? இவன விட உன் மேல தானேடா பாசம் அதிகம் வச்சாங்க. உன் அம்மாவா இருந்தா இப்டி எல்லாம் பேசியிருக்க மாட்ட... நல்ல வேளை உன் அம்மா அப்பா இல்ல, இருந்தா அவங்கள நினைச்சும் நாங்க பயந்துருக்கணும்”

சரமாரியாக கேள்விகள் நாலா பக்கமும் இருந்து வர உதய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஏன் ஆதியின் பக்கம் திரும்ப கூட இல்லை. கண் உதய்யின் மேல் இருந்தாலும் அனைவர் பேசிய வார்த்தைகளும் ஆதியின் மனதை உயிரோடு கிழித்து கொன்றது. அனைவரையும் புறக்கணித்தான், தன் நண்பன் தன் மேல் கோவமாக மட்டுமே இருப்பான் ஆனால் நிச்சயம் புரிந்து கொள்வான் என்று ஆசையில், “உதயா...” கலங்கிய விழிகளோடு நண்பனை அழைத்தவன் தெரியவில்லை நண்பனின் செயல் அவனை மொத்தமாய் வதைக்க போவதை.

“உதயா... செத்து கூட போறேன் டா ஆனா நீ மட்டும் என்ன புரிஞ்சு மன்னிச்சிடுடா” ஆதி பேசிய அடுத்த நொடி வேகமாக தன்னுடைய அறையிலிருந்த ஒரு அலமாரி ஒன்றை திறந்தவன் தமிழ் சில தினங்களுக்கு முன்னர் கொடுத்த பணத்தை எடுத்து ஆதியின் முகத்திலே தூக்கி எறிந்தான்.

உதய்யின் செயலை பார்த்த அனைவருக்குமே ஆச்சிரியமாக இருந்தாலும், தன் முகத்தில் பட்டு சிதறி விழுந்த பணக் காகிதங்களில் இருந்த காயத்திரியின் ரத்தம் ஆதியின் மனதை கூறு போட்டு தின்றது. ‘என் அம்மாவை நீ இதுக்காக தான கொன்ன?’

கோவத்தின் உச்சத்தில் இருந்த உதய்யின் கண்கள் சாட்டிய குற்றத்தில் சிறிதும் யோசிக்காது உதயனின் காலை கட்டி மௌனமாய் கதறிய ஆதி வார்த்தைகள் எதுவும் பேசாமல் உதய்யின் முகத்தை ஒருமுறை வலி, வேதனை, கண்ணீர் நிறைந்த மூடி அவன் காலடியில் கிடந்தான்.

“அவன் பண்ணது தப்பு தான் அதுக்காக நீ பண்ணுனது ரொம்ப பெரிய தப்பு உதய்” மொத்த உயிரும் வடிந்தது போல் சென்ற ஆதியின் நிலை உயிரை கிள்ளியது கௌதமிற்கு.

“அப்ப இத்தனை நாள் உன்கூட இந்த காசுக்காக தான் இருக்கோம்-னு நெனச்சியா உதய்?” – தமிழ்

ஆதி உதய்யின் காலை பிடித்து கதறியது அனைவருக்கும் கஷ்டமாய் இருந்தாலும் உதய்யையும் கட்டாயப்படுத்த முடியவில்லை. உதய்யின் அமைதி அர்த்தம் புரியவில்லை அவர்களுக்கு, “ஆமா-னு சொன்னா இனிமே அவனை எங்க முன்னாடியே வராம பாத்துக்குவீங்களா?”

ஆதவன் வார்த்தைகள் விட அதில் கோவம் வந்த தமிழ், “எத்தனை நாள் டா இதெல்லாம் மனசுல வச்சிட்டு இருந்த? சந்தர்ப்பம் வந்ததும் உண்மை வெளிய வருது..”

கசந்த புன்னகையோடு இன்னும் அழுது கொண்டிருந்த ஆதியின் தோளை பிடித்து இழுத்தான், “வா” என்ற அதட்டலுடன்.

“உதயா... என்ன மன்னிச்சிருடா” மந்திரம் போல் அதே வார்த்தையை திரும்ப திரும்ப பேசிய ஆதியின் நிலை ஆதவனுக்கும் கண்ணீரை வரவழைக்க ஆதியை நெருங்கி வந்தவனை தடுத்தான் கெளதம்.

“அவனுக்கு பைத்தியம் புடிச்சாலும் பத்தரமா அவனை பாத்துக்க எங்களுக்கு தெரியும்”

“உதயா...” ஆதியை பிடித்து கௌதமும் தமிழும் இழுத்து செல்ல உதய்யின் பெயர் ஆதியின் நாமம் ஆனது, வலி, வேதனை, கண்ணீர் கலந்த கண்களோடு இறுகி பாறையாய் மாறி தன்னுடைய உலகமாய் இருந்த அன்னையை இழந்த உதய்யின் தோற்றத்தை பார்ப்பது அதுவே இறுதியாக இருக்கும் என்று அன்றே ஆதியின் மனதில் உத்தித ஒரு சலனம் தான்.

இன்று

தன் மடியில் படுத்திருந்த உதய்யின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை யாழினியின் மனம் சிறிதும் எதிர் பார்க்கவில்லை, ஏதோ அவன் வலி தனக்கே உரியது போல் கண்ணீர் சுரந்தது அவளுக்கும். உதய்யின் திமிரையும், நிதானத்தை மட்டுமே பார்த்து பழகியவளுக்கு அவன் கண்ணீர் பொறுக்க முடியாததாக இருந்தது.

ஆனால் அதையும் தாண்டி, அன்னையை எண்ணி வரும் கண்ணீரா இல்லை நண்பனை எண்ணி வரும் கண்ணீரா என்ற கேள்வியும் உடன் எழுந்தது. தயக்கத்துடன் அவன் கண்ணீரை அவள் துடைக்க அந்த கைகளை அள்ளி தன்னுடைய கைகளுக்குள் கோர்த்துக்கொண்டான்.

“ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் அம்மாவோட அரவணைப்பு வேணுமா யாழினி? பசங்களுக்கும் தேவை தான? அதுவும் பிசினஸ் தான் தன்னோட உலகம்-னு நினைக்கிற என்னோட அப்பா மாதிரி இருக்குறவங்ககிட்ட இருந்து பசங்க எப்படி பாசத்தை வாங்குவாங்க? அது தான் என்னோட அம்மாவை மட்டுமே சுத்தி இருந்துச்சு என் உலகம், அந்த உலகம் ஒரே நாள்ல இருந்த தடயமே இல்லாம போச்சுன்ன உடனே என் மனசு எவ்ளோ வேதனை பட்டு கதறுச்சுன்னு எனக்கு மட்டுமே தெரிஞ்சது யாழினி...

ஒரு மாசம் தூக்கம் இல்ல, சாப்பாடு சாப்புட முடியல... ஒருத்தரோட அருமை இல்லாதப்ப தான் தெரியும் ஆனா என் அம்மாவோட அருமை அவங்க என் பக்கத்துல இருந்த ஒவ்வொரு நிமிஷமும் தெரிஞ்சது, அதுனால தான் என்னமோ அவங்கள சார்ந்தே நான் இருக்க கூடாதுனு என்ன விட்டுட்டு போய்ட்டாங்க”

உதய்யின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க தன் கையை பற்றியிருந்த அவன் கையில் அழுத்தம் கொடுத்து ஆறுதல் தர முயன்றாள் யாழினி தன்னுடைய கண்ணீரை முடக்கி.

“நான் ஆதிகிட்ட அன்னைக்கு அப்டி பண்ணது தப்பா யாழினி?”

“எனக்கு தெரியல சார்... யாரா இருந்தாலும் உணர்ச்சிவசத்துல அந்த நேரத்துல அப்டி தான் பண்ணிருப்பாங்க” – யாழினி

“நான் உணர்ச்சி வசத்துல பண்ணல யாழினி, தெளிவா தான் இருந்தேன். இப்ப வர அவன் மேல எனக்கு கோவம் கொஞ்சம் கூட குறையல. அவன் தெரிஞ்சு செஞ்சானோ தெரியாம செஞ்சானோ ஆனா என்னோட உலகமே என்னோட அம்மா, ஆதி மட்டும் தான் என் குடும்பம் கூட அதுக்கு அடுத்து தான்...

அவன் நினைச்சிருந்தா அம்மா ரோடு கிராஸ் பண்ணப்ப உண்மைய சொல்லி அவங்கள நிறுத்தியிருக்கலாம். ஆனா அவன் அப்டி பண்ணல. என் நம்பிக்கையை ஒடச்சவன் இனிமே எனக்கு வேணாம்-னு தோணுச்சு யாழினி ஆனா அவன் என் அம்மாவோட மேள் வெர்ஷன், என் முகத்தை பாத்தே மொத்தமா என்ன புரிஞ்சுக்குறவன். அப்டி ஒருத்தன என்னால எப்பயும் பிரிஞ்சு, வெறுத்து இருக்க முடியும்-னு தோணல...”

“புரியுது சார்... அதுக்காக தான் அவர் மேல பொய்யா கோவத்தை காமிச்சிட்டு அவரோட வளர்ச்சியை தூண்டி விடுறிங்க”

ஆமாம் என்று தலையை ஆட்டியவன் எழுந்து, “சாப்ட போகலாம்” இயல்பாக இருக்க விரும்பி உதய் பேச, அவன் உணர்வை புரிந்து அவளும் அவனுடன் இணைந்து மதிய உணவை முடித்து விட, “வீட்டுக்கு போ இன்னைக்கு, நாளைக்கு வா” என்கவும் மன பாரத்துடன் உதய்யின் வீட்டை விட்டு சென்றாள்.

மெயின் ரோட்டிற்கு சென்றவள் ஆட்டோவை தேடிக்கொண்டிருந்த நேரம் அவள் கைபேசி அலறிக்கொண்டே இருக்க தங்கையின் அழைப்பு என்றதும் ஏற்றாள், “சொல்லு குழல்...”

“அக்கா.. அக்கா... எங்க க்கா இருக்க?” தங்கையின் பதட்ட குரல் யாழினியை பயம் கொள்ள செய்தது.

“என்ன ஆச்சு குழல்?”

“அப்பாவை
அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க க்கா... ஏதோ கொலை, கொள்ளை-னு சொல்றாங்க... எனக்கு பயமா இருக்கு க்கா. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... வா க்கா...”
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
ஆதி பண்ணது தப்புதான் ஏதோ தெரியமா பொய் சொல்லிட்டா 🥺🥺🥺உதய் நீ காசு கொடுத்து போ சொன்னதும் தப்புதான் இனி காயத்திரி அம்மா வர போறது இல்ல நீங்க அம்மா இருத்த இப்படி தா இருபிகளா அது அம்மா ku பிடிக்குமா நீங்க 5 பேரும் ஒண்ணா இருக்கணும் தான் ஆசைபடுவங்க 😞😞 பரவாயில்ல எல்லாத்தையும் மறைந்துடு பழைய மாறி சந்தோசமா இருக்கணும்☺️☺️
உதய் ஆதியா உன்னோட ஆதியாய் accept பண்ணலாம் எல்லாம் சரி ஆகும்.
யாழினி அப்பா என் arrest பண்ணக ஒன்னும் புரியல
என்ன சிஸ்டர் ஏதோ twist இருக்க
 
Top