• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 24 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம்– 24

“அண்ணா அண்ணா... அண்ணா” அந்த தளமே அதிருமளவு கத்திக்கொண்டே வந்த யாழினி வேகமாக ஜெயனின் அறைக்குள்ளே சென்றாள்.

அவள் வருவதற்கு முன் அவள் ஓசை அந்த தளத்தையே நிறைத்துவிடும், அவனுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அவனுடைய ஆட்களும் அவளுடைய பேச்சைத் தினமும் கேட்டுப் பழகியிருந்தனர். வழக்கத்தை விடக் குரலில் இன்று அதிகம் குதூகலம்.

“சொல்லு யாழினி... இன்னைக்கு என்ன நடந்துச்சு?”

இது யாழினியின் வழக்கம், தினமும் காலை வந்து முதல் நாள் வீட்டில் நிகழ்ந்தவை, செல்லும் வழியில் சாலையில் பார்த்தவை, கேட்டவை என ஒவ்வொன்றையும் ஜெயனிடம் மட்டும் அல்ல குறைந்தது இரண்டு மூன்று பேரிடம் பேசி தான் வேலையைத் துவங்குவாள்.

“இன்னைக்கு இல்ல வெள்ளி கிழமை ஆபீஸ்கு நான் லீவு போட்டேன்ல அன்னைக்கு நடந்துச்சு...”

இன்னும் தலையைத் தூக்காமல் வேலை பார்த்து, “அப்டி என்ன நடந்துச்சு? ஏதாவது சாப்பிட்டியா?”

“இல்ல அத விட பெருசு ரொம்ப ரொம்ப பெருசு...” சிணுங்கியபடியே, “அண்ணா இங்க என்ன பாருங்க...”

சிரிப்புடன் தலையைத் தூக்கியவன் தன் முன்னாள் நிற்கும் பெண்ணை பார்த்து பேச்சற்று போனான். எப்பொழுதும் சுடிதார் உடுத்தி வருபவள் இன்று புடவையில்.

“சாளரி வந்துடுச்சு ண்ணா... எவ்ளோ தெரியுமா அம்பதாயிரம் ரூபா” அவ்வளவு சந்தோசம் அவள் குரலில்.

“சந்தோசம் யாழினி... இன்னைக்கும் வர மாட்டேன்னு சொன்ன இப்டி திடீர்னு வந்து நிக்கிற?”

“சாளரி வந்துச்சுல அது தான் உங்களுக்கு டிரீட் வச்சிட்டு போகலா...”

“ஜெயன் இங்க வாங்க...”

உதய்யின் குரல் கேட்டு விழி அகல விரித்தவள் பேச வந்ததை மறந்து ஜெயனிடம், “அண்ணா அவங்க வந்துட்டாங்களா?”

ஆசையாய் கண்கள் மிளிர கேட்க ஜெயன் சிரிப்போடு ஆமாம் என்றான். உதய் ஒரு முக்கியமான வேலை சார்ந்து ஜப்பான் சென்று நேற்றோடு எட்டு நாட்கள் ஆகியிருந்தது, அவனைக் காணாமல் வாடிக்கிடந்தவள் காதுகளுக்குத் தேனாய் வந்தது அவன் குரல்.

ஜெயன் எழுந்து செல்ல அவன் கையை பிடித்து நிறுத்தி, “ப்ளீஸ் நான் போறேன் ண்ணா” கண்களால் கெஞ்ச யோசிக்காமல் நாற்காலியில் அமர்ந்து அவளுக்கு அனுமதி கொடுத்தான். துள்ளிக் குதித்துச் சென்றவள் அவன் அறைக்கு முன் சென்றதும் நின்று கூந்தலைச் சரி செய்து, புடவை மடிப்பை நீவிவிட்டு அந்த கனமான மரக் கதவைத் தட்டினாள்.

“வாங்க ஜெயன்” அவன் காந்த குரலில் தன் மனதையே வசைபாடி உள் நுழைந்தாள்.

“இன்னைக்கு லஞ்ச்...” தீவிரமாய் ஏதோ மடிக்கணினியையும், ஒரு புத்தகத்தையும் பார்த்து குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருந்தவன் கைகள் அப்படியே அந்த மல்லிகையின் வாசத்தில் நின்றது.

வந்தது இவள் தான் என்று புரிந்தது, மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தவனுக்கு இளம் ஊதா நிற காட்டன் புடவை அணிந்து, இடை தொடும் அவள் கூந்தல் காற்றில் ஆடி நிற்க அந்த கருங்கூந்தலில் ஒரு சரம் குண்டுமல்லிகை சூடி பாந்தமாய் காட்சியளித்தாள். அவன் கண்களுக்கு விருந்தாக அந்த மெல்லிய காட்டன் புடவை அவள் அறையினுள் நுழையும் முன் சரி செய்த பொழுது ஒரு பிளீட் மட்டும் கண்ணாடியாய் மாறி அவள் கொடி இடையை அப்படியே காட்டச் சாவிருக்கையில் அமர்த்திருந்தவன் அப்படியே சாய்ந்து பெருமூச்சு ஒன்றை விட்டான்.

என்ன தான் கண்ணியமாக நடந்து கொள்ள முயன்றாலும் ஆணால் அவள் புடவையிலிருந்து விடுபட்டுக் காட்சியளித்த அந்த இடையை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை. இன்று ஏனோ அந்த முகம், கைகள், இடை எல்லாம் தங்கமாய் ஜொலித்தது உதயனின் கண்களுக்கு.

அழகழகா அவ
தொிவா உயிா் உாிவா...
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா...

காரணமே இல்லாமல் காலையில் அலுவலகம் வரும் பொழுது காரில் கேட்ட பாடல் நினைவிற்கு வந்தது. அவன் பார்வை வீச்சைத் தாங்காமல் நாணத்துடன் அவனை நோக்கி வந்தவள் கை புடவை முந்தானையை இறுக்கமாய் பற்றியிருந்தது.


எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா

“குட் மார்னிங் சார்” அவன் கண்கள் அடிக்கடி தொட்டு மீண்ட அவள் வயிற்றுப் பகுதியிலிருந்த புடவையைச் சரி செய்ய முன்னாள் இருந்த நாற்காலிக்கு ஒட்டி நின்று, ‘கண்ணு எங்க போகுது பாரு...’ தன்னுடைய மனதின் உரிமையாளனைத் திட்டிக்கொண்டே நின்றாள்.

“குட் மார்னிங் யாழினி”

சிரமப்பட்டு கண்ணை அவள் முகத்திற்கு வந்து நிறுத்தினான், “லீவ் இல்ல நீங்க?”

“தொல்லை இல்லனு சந்தோச பட்டீங்களா சார்?” – யாழினி

“எங்க யாழினி என்ன முழுசா சந்தோச பட விட்டீங்க... வந்துட்டீங்களே” – உதய் “அப்ப நா வேணா வந்த வழியே போய்டவா?” – யாழினி

“தாராளமா போகலாம் ஆனா நாளைக்கு வந்து லீவ் எடுத்த ரெண்டு நாள் ஒர்க் எல்லாம் சேத்து முடிச்சு வைக்கணும்” – உதய்

“நீங்க இப்டி சொல்லுவிங்க, அங்க ஜெயன் அண்ணா எனக்கும் சேத்து அவரே பண்ணிடுவாரு... நான் தைரியமா ஒரு வாரம் கூட லீவ் போடலாம்”

சிரித்தவன், “சாளரி அதுக்கு தகுந்த மாதிரி தான் வரும்...” சரியாக அவளை ஞாபகப் படுத்திவிட்டான்.

“சார் பாத்திங்களா... இதுக்கு தான் சார் நீங்க வேணும்னு சொல்றது. நான் எதுக்கு வந்தேனோ அத மறந்துட்டேன், வெள்ளிக்கிழமை சாளரி வந்துடுச்சு சார். இவ்ளோ சாளரி வரும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல. அன்னைக்கு நைட் எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட்டு, பீச் போய் நல்லா என்ஜோய் பண்ணோம். நேத்து அம்மாக்கு, அப்பாக்கு, தங்கச்சிக்கு எல்லாம் டிரஸ் எடுத்தோம். ரொம்ப சந்தோசமா இருந்தேன் சார் ரொம்ப வருஷம் கழிச்சு...”

ஆசையாய்ப் பேச வந்த வார்த்தைகள் இறுதியில் ஒரு நெகிழ்ச்சியுடன் முடிந்தது. அவளையே பார்த்து அவன் மனதில் ஒரு எண்ணம், ‘அவள் வருமானத்தில் அவளுக்கென்று அவள் எதுவும் வாங்கவில்லை. இன்னும்...’

தயக்கத்துடன் அவன் அருகில் பெரிய சாக்லேட் ஒன்றை வைத்து, “ரொம்ப தேங்க்ஸ் சார்...” என்ன முயன்றும் விழிகள் கலங்காமல் இருக்க மாட்டேன் என்றது.

“இப்டி எல்லாம் எமோஷனலா பேசி ட்ரீட்ல இருந்து மிஸ் ஆக முடியாது யாழினி, வேலையும் குறைக்க மாட்டேன்”

“இந்த அம்பதாயிரத்துக்கு எல்லாம் நான் ட்ரீட் வைக்கணும்னா நீங்க எனக்கு ஒவ்வொரு செகண்ட்டுக்கும் ட்ரீட் வைக்கணும்”

“ம்ம்... கம்பெனி கணக்கு எல்லாம் பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போல?”

அவன் கூறி சிரிக்க, “நான் தான் மேக்ஸ்ல எவ்ளோ வீக்னு உங்களுக்கே தெரியும் சார்”

அவள் கொடுத்த சாக்லேட்டை எடுத்துக்கொண்டவன், “ஜெயன் எங்க?”

“அவங்க பிஸி சார்... அது தான் நான் வந்தேன்”

“அவன் பிஸியா?” அவளின் நோக்கம் புரிந்து சிரித்தவன், “லஞ்ச் முடிஞ்சதும் ஸ்டீல் இண்டஸ்ட்ரிக்கு போக போறேன், ரெடியா இருங்க, ஜெய்னக்கும் இன்பார்ம் பண்ணிடுங்க”

“ஓகே சார்...” குரலில் ஏமாற்றம் பெண்ணுக்கு, தலை முதல் கால் வரை பார்த்தவனுக்கு ஒரு வார்த்தை பாராட்ட தோன்றவில்லையா என்று.

“யோவ் இப்ப எதுக்கு என்ன கத்திடு இருக்க?”

வெளியில் ஈஸ்வரனின் குரல் கேட்டதும் உதய் யாழினியை அவனுக்கு முன்னாள் இருந்த நாற்காலியில் அமர கூறினான். இப்பொழுது தான் பெண்ணுக்கும் நினைவு வந்தது, அந்த மனிதன் இருப்பதாய்.

“என்னால இப்போதைக்கு அங்க வர முடியுமான்னு தெரியலையா... நீயே சமாளி” கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் உதய் இருப்பது தெரியாமல் சாவகாசமாகப் பேசிக்கொண்டே வந்தார்.

அறைக்குள் வந்தவர் உதயைப் பார்த்ததும் அதிர்ந்தாலும் எதுவும் கூறாமல் அவனுக்கு அருகில் அவனுடைய மேஜைக்கு அருகில் இருக்கும் தன்னுடைய மேஜைக்கு வந்தார்.

“என்ன உதய் எப்ப வந்த?”

“நேத்து தான் வந்தேன். வேலை எல்லாம் செட் ஆகிடுச்சா?” என்றான் தன்னுடைய வேளையிலும் ஒரு கண் வைத்து.

“எங்க உதய் செட் ஆகுது, அங்கனா ஒரே ஒரு கம்பெனி கண்ணுல வச்சு பாத்துக்குவேன், இங்க இத்தனை இருக்கு, நேரம் பத்தலை, அதுவுமில்லாம உன்னையும் மீறி இங்க சிலர் உன்னோட காசுலையே கை வைக்கிறாங்க உதயா” யாழினியைப் பார்த்து ஈஸ்வரன் பேச விழி விரித்துத் திடுக்கிட்டு அவரை பார்த்துத் திரும்பினாள்.

அவரை பார்க்காமல் வேளையில் கவனமாய் இருந்தவன் அவர் பார்வை யாழினி மீது படிந்ததை உணராமல், “யாருன்னு சொல்லுங்க தூக்கிடலாம்” யாழினி வருகையோடு, ஆதியிடம் அன்று இரவு பேசியதும் வந்து மகிழ்ச்சியைத் தர, குதூகலமாக இருந்தான்.

“யாழினி என்னோட கார்ல தண்ணி வச்சிருக்கேன் எடுத்துட்டு வா...”

அதிகாரமாய் யாழினிக்கு ஈஸ்வரன் உத்தரவிடத் தலையைத் தூக்கி அவரை தீயாய் முறைதான் உதய், அவளோ அவர் பேச்சுக்கு மறுப்பேதும் கொடுக்காமல் எழுந்து நிற்க மேலும் ஈஸ்வரன், “கார்ல என்ன பொருள் எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்” திருட்டு பழியையும் அவள் மீதே போட்டார். மொத்தமாய் மனம் வெறுத்தாள் பெண் தவறேதும் செய்யாமல் பழியை வாங்கிக்கொண்டு.

“யாழினி இங்க என்னோட பி.எ மட்டும் தான் நல்லா அத புரிஞ்சுக்கோங்க. பக்கத்துல இருக்க என்னோட ரூம்ல சுத்தமான தண்ணி தான் வரும், அதுவும் புடிக்கலைனா தாராளமா லிப்ட் யூஸ் பண்ணி பார்க்கிங்க்கு போகலாம். கால்ல எதுவும் அடி பட்ருந்தா, உங்களுக்குனு ஒரு பி.எ வச்சுக்கலாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல”

காட்டமாய் ஈஸ்வரனிடம் பதில் கூறி, தன்னுடைய மேஜையிலிருந்து ஒரு சாவிக் கொத்தையும், ஒரு சிறிய குறிப்பேட்டை யாழினியிடம் கொடுத்து, “இனி என்னோட வால்ட்ஸ் கீ, பாஸ்வோர்ட்ஸ் எல்லாமே உங்களுக்கும் தெரியும் யாழினி. நான் இல்லாத நேரத்துல எல்லாமே உங்களோட பொறுப்பு மட்டும் தான். ஜெயன கூட்டிட்டு பார்க்கிங் வாங்க, ஸ்டீல் இண்டஸ்ட்ரிக்கு போகணும்”

திரும்பிக் கூட பார்க்காமல் அறையை விட்டு உதய் வெளியேற, அவன் பின்னாலே கலங்கிய கண்களுடன் சென்ற யாழினியின் முதுகைத் துளைத்தது ஈஸ்வரன் சகுனிப் பார்வை.

“காதல் வளக்குறிங்களோ... எப்படி இவளை கூடயே வச்சிருக்கன்னு நானும் பாக்குறேன்டா” என்றவர் கைப்பேசியை எடுத்து உதயிடம் நேரடியாக மோதத் தயாரானார்.


தமிழின் வீடு பழங்காலத்து வீடு, முற்றம், ஓட்டு கூரைகள், பின்னங்கட்டில் குட்டி கிணறு, துணி துவைக்க இடை வரை இருக்கும் கல், ஷீலாவின் கை வண்ணத்தில் போது குலுங்கும் மலர் செடிகள், வீட்டின் மையப்பகுதியான முற்றத்தில் துளசி மாடம் என அப்படியே அக்ரஹாரத்து வீடே.

அமெரிக்காவிற்கு சென்று ஒரு அய்யங்கார் குடும்பத்திடமிருந்து தமிழின் தந்தை நந்தன் வாங்கிய அந்த வீடு இப்பொழுதும் சிறு விரிசல் கூட வராமல் அழகாய் நின்றது. அதே முற்றத்தில் தான் இன்று தமிழ் குடும்பம், கெளதம் குடும்பம், சஹானா என அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர். இதில் வீட்டின் குறுக்கும் நெடுக்குமாய் ஆதி நடந்துகொண்டிருக்க, கெளதம் ஒரு பக்கம் காதல் பயிரை வளர்த்துக்கொண்டிருந்தான், தமிழ் பெரியவர்களிடம் பேச, சஹானா தான் வேறு ஏதோ ஒரு யோசனையில் தவித்தாள்.

“தரையே தேஞ்சு போச்சு இவன் நடந்து நடந்து... ஒழுங்கா என் கல்யாணத்துக்கு ஒரு கோடி ரூபா மொய் வச்சிட்டு”

“உன் கல்யாணத்துக்கு எல்லாம் வர்றதே பெருசு இதுல ஒரு கோடி மொய்”

நண்பனுக்காக பேசிய கெளதம், “எதுக்குடா எங்களை வர சொன்ன?” ஆதியிடம் கேள்வி திரும்பியது.

“சொல்றேன் சொல்றேன் ஒரு ஆள் வர வேண்டி இருக்கு” பிறகு மீண்டும் அனைவரும் பேச்சில் மும்முரமாக இருக்க வெளியில் சென்ற ஆதி, சில நிமிடங்களில் உள்ளே வர அவனை தொடர்ந்து ஆதவனும் வந்தான்.

ஆதவனை அங்கு பார்த்ததில் பெரியவர்கள் குழம்பி நிற்க இளையவர்களுக்கு ஆச்சரியம், முக்கியமாக சஹானாவிற்கு. உள்ளே வந்தவன் முதலில் சென்று கட்டி தழுவியது கெளதம், தமிழ் இருவரின் தந்தையை தான்.

“ஆதி இது...”

“அதே கிழிஞ்ச ஜட்டி ஆதவன் தான்” ஆதவன் வெடுக்கென திரும்பி ஆதியை பார்த்தான், “இந்த டீடெயில்ஸ் எல்லாம் இப்ப கேட்டாங்களா?”

“போடா படவா அப்டி” ஆதவனை தள்ளி நிறுத்தினார் நந்தன்.

“ப்பா...” – ஆதவன்

“பேசாதடா... எங்க போன இத்தனை வருசமா? அப்பா அப்பா-னு காலையே சுத்திட்டு இருந்தவனுக ஒரே வாரத்துல இருக்குற இடம் தெரியாம காணாம போயிட்டீங்க. இப்ப வந்து என்ன உறவு கொண்டாடிட்டு இருக்க?”

“ப்பா என்ன பேசுறீங்க?” கெளதம் தந்தையை தடுத்தான்.

“வேற எப்படி கெளதம் பேச சொல்ற? நீயும் ஆதியும் எப்படி எங்களுக்கு அதே மாதிரி தான இவனையும் நாங்க நெனச்சோம், இப்டி பண்ணிட்டாங்க...” – நந்தன்

“சரி... அது தான் சின்ன வயசு. அதுக்கு அப்றம் எது தப்பு எது சரின்னு தெரியாதா? உங்களுக்குள்ள இருக்க சண்டைல எங்களையே மறந்துட்டீங்கல்ல... இதுல அவன் இன்னும் வர கூட இல்ல”

உதய்யையும் மொத்த குடும்பமும் எதிர் பார்த்தது. யோசிக்காமல் சாஷ்டாங்கமாக பொதுவாக இரு தந்தைமாரின் காலில் விழுந்தான்.

“தெய்வங்களா என்ன மன்னிச்சிடுங்க... என்ன என்னமோ நடந்து போச்சு தான்... இந்த சின்ன பிள்ளையை பெரிய மனசு பண்ணி பெரிய மனுசங்க நீங்க மன்னிச்சு ஏத்துக்கோங்க”

தூரத்தில் அமர்ந்து கலங்கிய கண்களுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்த ஷீலா, ஆண்கள் இருவரும் ஆதவனை சட்டைசெய்யாமல் நிற்கவும் துரிதமாக சென்று அவன் தோளில் கை பிடித்து எழுப்பியவர் ஆண்களை பார்த்து, “பிள்ளை எவ்ளோ நேரம் தான் இப்டியே நிப்பான்... பேசுறிங்களா கல் நெஞ்சு”

கணவனை சாடியவர் ஆதவனின் கன்னம் தடவி, “எப்படி டா ஆதவா இருக்க?”

குனிந்து அவரை கைகளில் தூக்கி இரண்டு சற்று சுற்றி சிரிப்போடு இறக்கிவிட, “நீ இன்னும் மாறவே இல்ல ஆதவா”

“அதே அதே... அப்டியே தான் நல்லா இருக்கேன்” என்றவன் பார்வை அன்னைக்கு பின் நின்றிருந்த பவித்ராவிடம் பட, “என்ன பவி மறந்து போய்டியா?”

சிரிப்போடு இல்லை என்று தலை அசைத்தவள், “மறக்குற மாதிரியா என் கைல தழும்பு விட்டு வச்சீங்க?” இடது கையிலிருந்த தீ காயத்தை காட்டினாள்.

“தமிழு உனக்கு நியாபகம் இருக்கா? ஒரு தடவ கிளாஸ் கட் அடிச்சிட்டு பைக்ல போனப்ப பவி பாத்து அப்பா கிட்ட சொல்லி குடுக்க போறேன்னு சொன்னா, அவளையும் வண்டில அல்லி போட்டு போனோம், அந்த நேரம் பாத்து ஒரு கார்ல நான் வண்டிய விட்டு சைலென்சர்ல பவி கை பட்டு வாங்குன வீர தழும்பு”

“அவளை அப்டியே விட்ருந்தா கூட அடி கொஞ்சம் கம்மியா விழுந்துருக்கும், அவளை கூட்டிட்டு போனது தான் நாம பண்ண பெரிய தப்பே...” – தமிழ்

அனைவரும் அன்றைய நிகழ்வில் சிரித்துக்கொண்டிருக்க சஹானா ஆதவனை பார்த்து பயத்தில் நின்றாள். ஆனால் அவன் சிறு ஹாய் சொன்னதோடு அவள் பக்கம் திரும்பவே இல்லை. பேச்சும் கேலியாக அரை மணி நேரத்திற்கு மேல் செல்ல அனைவரையும் அமைதிப்படுத்தி அவர்களை அழைத்த காரியத்தை பேச துவங்கினான் ஆதி கேசவன்.

“லோன் பேங்க்ல எல்லாம் கேட்டு பாத்துட்டேன், எதுவுமே சரியா வரல. புதுசா இடம் வாங்கி பில்டிங் எடுக்குறது எல்லாம் சரி வராது. அதுனால இருக்குறதுல என்ன பண்ண முடியுமோ அத பண்ணலாம்னு இருக்கேன்”


அனைவரும் அவன் மேலும் தொடரட்டும் என்று அமைதியாக இருந்தனர். “அப்பா ஆபீஸ் இருந்த இடம் பத்தரம் என்கிட்டே தானே இருக்கு... அந்த இடத்துல கான்ஸ்டருக்ஷன் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்” அத்தனை பேருக்கும் இன்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தான் ஆதி.

அந்த இடம் கிட்ட தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது, அவன் தந்தை ஆசையாக வாங்கியது. ஒரு சிறு பகுதியில் தன்னுடைய அலுவலகத்தை வைத்துக்கொண்ட ஆதியின் தந்தை, மீத மிருந்த இடத்தில் பிற்காலத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், தங்களுக்கு விசாலமான ஒரு சொந்த வீடை கட்டவும் நினைத்தார்.

ஆனால், விதியின் விளையாட்டில் அவர் மறைவையும் தாண்டி அவர்கள் குடும்பம் கோவிலாய் நினைத்திருந்த அலுவலகத்தை சீல் வைத்ததில் அவர் சம்மந்தமான எந்த பொருளும் தனக்கு வேண்டாம் என்று ஆதி ஒதுக்கி வைத்தான். இப்பொழுது அதை பயன்படுத்தி தொழில் துவங்க போவதாக கூறவும் நம்ப முடியவில்லை யாராலும்.

அனைவரின் மௌனத்தை புரிந்தவன், “அப்பா மேல எந்த தப்பும் இல்ல டா” வலி நிறைந்த குரலில் சஹானாவைப் பார்த்து பதில் தந்தான்.

அவன் கூறியதில் விழிகளில் நீர் திரண்டுவிட சகோதரனை மட்டுமே பார்த்து நின்றது அந்த அப்பாவி பெண்.

“அவர் மேல பழிய போட்டு மொத்த உலகத்துக்கும் அவரை திருடனா, அயோக்யனா காமிச்சிருக்காங்க. ஆனா நம்ம அப்பா அப்டி இல்ல டா” சகோதரியின் கை பிடித்து அவளை சமாதானம் செய்தான், ஆனாலும் அவள் அனுபவித்த வேதனைகள் அவள் அழுகையை நிறுத்திவிட வில்லை.

“இத தான ஆதி நாங்களும் சொன்னோம்... அந்த மனுசனை பத்தி எங்களுக்கு தெரியாதா. நீ தான் கோவத்துல எங்க பேச கேக்கல”- கெளதம் தந்தை.

“யார் ஆதி இப்டி பண்ணது?”

ஆதவன் முகம் சுருங்கியது நந்தனின் கேள்வியில்.

நண்பனை பார்க்க அவனோ, “அத பத்தி இப்ப பேச வேணாம் பா... எத எல்லாரும் நம்பிட்டு இருக்காங்களோ அந்த பேர நான் மாத்தணும் கூடவே நானும் வளரனும். ரெண்டுக்கும் ஒரே சொல்யூஷன் அதே இடத்துல நான் அபார்ட்மெண்ட் கட்டி, அதே ஆபீஸ்ல நான் ஒக்காரனும்” ஆணித்தரமாக இருந்தது அவன் பதில்.

“எல்லாம் சரி தான் ஆதி ஆனா சீல் வச்ச கம்பெனில போய் என்ன பண்ண முடியும். அதுல நீ மறுபடியும் கம்பெனி ஸ்டார்ட் பண்ணா யாரும் நம்பி வர மாட்டாங்க” – ஷீலா

“தெரியும் மா. எல்லாமே தெரிஞ்சு தான் துணிஞ்சு பண்றேன். அது விசயமா சி.எம்.டி.எ ல நேத்து தான் பேசுனேன் கொஞ்சம் பெரிய ஆளோட ரெகமெண்டேஷன் வேணும்னு சொன்னாங்க... அது தான் ஆதவன் பேசி இன்னும் ஒரு வாரத்துல அந்த தடை போய்டும். லோன்க்கு நேத்து தான் அப்ரூவள் வாங்குனேன் இடத்தை காமிச்சு. இப்போதைக்கு டூ பி.ஹச்.கே அபார்ட்மெண்ட் கட்டலாம்னு யோசிச்சேன்”

நிறுத்தி தயக்கமாய் கெளதம், தமிழின் பெற்றோரை பார்த்தான். “எனக்கு நீங்க ரெண்டுபேரும் ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணனும்...”

அவனுடைய தயக்கம் அவர்களுக்கு புதிது, “என்னடா கறிக்கொளம்பு கேக்குறப்ப எப்படி உரிமையா கேப்ப, அது மாதிரியே கேளுடா” என்றார் ஷீலா.

“இல்ல லோன் வாங்குறதுக்கு சாட்சி கையெழுத்து போடுறிங்களா?” என்ன தான் உரிமையாய் பழகி இருந்தாலும் இவ்வளவு பெரிய காரியத்தை கேட்பதற்கு பெருத்த தயக்கமே.

“ஏன் டா இவ்ளோ கஷ்ட படுற, எவ்ளோ வேணும்னு சொல்லு அஞ்சே நிமிசத்துல தர்றேன்” – ஆதவன்

“ஏன் அவன் ஒரு தடவ வாங்குன அடி போதாதா?” கெளதம் முந்திக்கொண்டு ஆதவனிடம் சண்டைக்கு வந்தான்.

“கெளதம் அது வேற இது வேற... அது ஏதோ கோவத்துல உதய் பேசிட்டான். நாய் மாதிரி ரெண்டு வாரமா அலைஞ்சிட்டு இருக்காண்டா இந்த லோன்-கு. அப்டியே சுத்து-னு வேடிக்கை பாக்க சொல்றியா?” – ஆதவன்

“இப்ப இப்டி பேசுவீங்க, நாளைக்கு மனசு வேற சொல்லும், மூளை வேற மாதிரி யோசிக்கும். வேணாம். இப்டியே இருக்கட்டும் நாங்க பாத்துக்குறோம்” – தமிழ்

“என்னடா பாத்துக்குரிங்க... கிழிச்சீங்க. பேச வந்துட்டானுக பெருசா”

“ஆதவா...” – ஆதி

“டேய் சும்மா நிறுத்து டா... கூட இருந்திங்க, நல்லா பாத்துக்க தான் செஞ்சிங்க, அவன் தங்கச்சிய உங்க தங்கச்சி மாதிரி தான் பாத்துக்குட்டிங்க இல்லனு சொல்லல ஆனா அவன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்-னு யோசிச்சீங்களா? பத்து வருசமா வாரம் வாரம் உதய் வீட்டு முன்னாடி வந்து நிக்கிறான் மணி கணக்கா. நீங்க அவனை ஒழுங்கா பாத்துக்குறதா இருந்தா உதய் எண்ணமே வராம உங்க கூட மட்டும் இருந்துருக்கனும்.

வாரம் வாரம் தண்ணி, டெய்லி சிகரெட் புடிக்கிறான். அப்ப எங்க போனீங்க? சரி அதெல்லாம் விடுங்க. இப்ப நாய் மாதிரி அவன் சுத்திட்டு இருக்கானே... ஒரு நாள், ஒரே ஒரு நாள் அவன் கூட சேந்து லோன்கு அலைஞ்சிருப்பீங்களா? இல்ல அவனுக்கு மெண்டல் சப்போர்ட் தான் குடுக்க தோணுச்சா?”

தமிழ் கெளதம் இருவரும் அமைதியாகிவிட நந்தன் அவ்விடத்தை விட்டுச் சென்றார். ஆதி பக்கம் திரும்பிய ஆதவன், “உனக்கு நான் ஸ்பெஷல் சிபாரிசு பண்ண கூடாது, நான் உனக்கு சாட்சி கையெழுத்து போட்டா நீ கேக்குற அமௌன்ட்ட அவன் (பேங்க்) எனக்காக குடுப்பானு தான யோசிக்கிற?” தன்னுடைய கோட் சூட்டில் இருந்த செக் புக்கை எடுத்து ஏதோ எழுதி ஆதி கையில் திணித்தான்.

“அதுல அட்வான்ஸ் அம்பது லட்சம் செக் எழுதிருக்கேன்... உன்னோட கம்பெனில தேர்ட்டி பெர்ஸன்ட் நான் இன்வெஸ்ட் பண்றேன்... இன்வெஸ்ட் பண்றது பிஸ்னஸ்மேன் ஆதவன் இல்ல... உன்னோட பிரண்ட் ஆதவன். என்னோட பண பலமோ, பேரோ உன்னையும் உன் இடியாஸையும் எந்த விதத்துலையும் பாதிக்காது. இந்த மாசம் பூமி பூஜை போட்டு ஆரமிக்கிறோம்” தீவிரமாய் பேசியவன் கண்ணில் உறுதி இருந்தது.

“வேணாம் ஆதவா...”

ஆதி பேச துவங்க, “நான் ஒன்னும் தானம் பண்ணல, ப்ராபிட் வர்றப்ப ஷேர் தா... தாராளமா வாங்கிக்கிறேன். லேண்ட், ஆபீஸ் உன் பேர்ல இருக்குறது அப்டியே இருக்கட்டும். நீ கட்ட போற பில்டிங்-கு மட்டும் நான் இன்வெஸ்ட் பண்றேன். வேணாம்னு சொல்லாத ஆதி. உன்னோட முன்னேற்றத்துக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி”

எதுவும் பேச முடியாத நிலையில் இருந்தான். அவனுக்கும் தெரியுமே... அவன் மனதில் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு எல்லாம் பேங்கில் கடன் பெற முடியாது. வேறு ஏதாவது முதலீட்டாளரை தேட வேண்டி இருந்தது. அதில் தமிழ் கெளதம் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும் அவள் பிடித்தமும் உள்ளதென்று விட்டவனுக்கு ஆதவன் வருவது நிறைவாக தான் இருந்தது.

“என்ன டா காசு இருக்குற நீ மட்டும் தான் அவன் கூட பார்ட்னர்ஷிப் போடுவியா? நாங்களும் போடுவோம். நேத்து தான் ரெண்டுபேரும் ரேசிக்னேஷன் லெட்டர் அனுப்பிட்டு அப்ரூவள்-கு வெயிட் பண்ணிட்டு இருக்குறோம், ஓகே ஆனதும் சொல்லலாம்னு இருந்தோம். அப்பா வீட்டு பத்தரம் தரேன்னு சொன்னாரு, கௌதமும் தருவான்...”

சரியாக நந்தன் வந்து ஆதி கையில் வீட்டு பத்தரத்தை கொடுத்து, “ஜாம் ஜாம்னு வருவ ஆதி உன் மனசுக்கு” மனமார ஆசீர்வதித்தார் நந்தன்.

“எங்க மனசுக்கு நாங்க என்ன கக்கூசா கழுவுவோம்?” தந்தையை வம்பிற்கு இழுத்து சூழலை இலகுவாக்கினான் தமிழ்.

“அது தான கேளுடா மாப்பிள்ளை...” – கௌதமும் வரிந்துகட்டி வந்தான்.

“சொன்னாலும் சொல்லலானாலும் இன்னைக்கு நீ தான் கழுவனும்” கௌதமின் தந்தை நினைவூட்டினார்.

“டேய் லூசு அண்ணா... சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு-னு பேக்கிரௌண்ட் மியூசிக் தேடுறதுக்குள்ள ஏண்டா பேசுன?”

பவித்ரா தமிழிடம் சண்டைக்கு செல்ல, “ஆதி நீ சொன்ன மாதிரியே இந்த பொண்ணு அரை லூசு தான் டா” சிரித்துக்கொண்டே ஆதவன் பவித்ராவை கேலி செய்தான்.

“இருங்க உங்கள...” அடிக்க ஏதோ ஒரு பொருள் பவித்ரா தேட சரியாக ஒரு அழைப்பு வந்து அவனை காத்தது.

“முக்கியமான கால், ஆதி சி.எம்.டி.எ செகிரேட்டரி தான் கால் பன்றாரு... நான் பேசிட்டு இருக்குறேன் எனக்கு குடிக்க மட்டும் ஏதாவது கொண்டு வா” என்று ஆதவன் வீட்டின் பின் பக்கம் சென்றுவிட்டான்.

அதிலிருந்த சிக்கல்களை அவன் பேசிக்கொண்டே வர அவனுக்கு பின்னால் அமைதியாக நின்ற சஹானாவை பார்க்காமல் விட்டான். சில நேரம் பொறுத்து பார்த்தவள் அவன் கவனம் சிதறாது என்று தெரிந்து
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
தொண்டையை செருமினாள், “ம்ம்ஹ்ம்...” திரும்பியவன் சஹானாவை பார்த்து சிரிப்புடன் சுவற்றில் சாய்த்து நின்றான்.
சஹானா கையிலிருந்த குளிர்பானத்தை கொடுக்க அதை வாங்காமல் அவளை காக்க வைத்து பேச வேண்டியதை எல்லாம் பேசி முடித்து தான் வைத்தான். பிறகு அவள் கொடுத்ததை வாங்கும் பொழுது அவள் கையை புடிக்க வேகமாக சஹானா கையை உருவினாள் அவன் பிடியிலிருந்து. சென்றுவிடுவாள் என்று ஆதவன் நினைக்க அவளோ போகாமல் ஏதோ பேச தயக்கத்தோடு நின்றாள்.
தலையை குனிந்து அவள் முகம் பார்த்தவன், “ஏதாவது கேட்கணுமா?” என்றான்.
ஆமாம் என்று தலையை ஆட்டி அவன் முகத்தை ஏறிட்ட பெண், “எதுக்கு இதெல்லாம் பண்றீங்க?” பெண்ணின் மனநிலையை நன்றாக புரிந்தது ஆதவனுக்கு.
“உனக்காக பன்றேன்னு நினைக்கிறாயா?” அவள் மௌனமே அவன் வார்த்தைக்கு உறுதி தந்தது.
“உன் அண்ணன் என்னோட பிரண்ட். அவனுக்காக மட்டும் தான் இத பண்றேன். உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு உன் அண்ணனை ஐஸ் எல்லாம் வைக்க முடியாது, அதுக்கு மசியிர ஆளும் அவன் இல்ல” பின் வாசலை பார்த்தான், எவரும் வரும் தடயம் கூட இல்லை.
சஹானாவை நெருங்கி வர அவளோ பயத்தில் வீட்டிற்குள் செல்ல பார்க்க அதற்குள் ஆதவன் அவள் கை பிடித்து கிணற்றில் சுவரோடு ஒற்றி நிறுத்தினான்.
“மஹாராணி-கு என்ன அவசரம்?”
“யாராவது வந்துட போறாங்க...” அவள் பார்வை மொத்தமும் பயத்தோடு வாசலை நோக்கியே இருந்தது.
“வந்தா வரட்டும் பேபி டால்...” இடது கையை அவள் இடை பக்கமும் வலது கையால் அவள் கன்னத்தையும் பற்றி உதட்டை பெருவிரல் கொண்டு தொட்ட ஆண் மகனுக்கு அவளை என்ன என்னவோ செய்யும் ஆசை, அதிலும் அச்சத்தில் கண்கள் மூடி, வெக்கத்தில் சிவந்திருந்த அவள் முகம் போதையையும் மோகத்தையும் தந்தது.
அசையாமல் சிலையை நின்றவள் நெஞ்சம் பயத்தில் வேகமாக மூச்சு விட அவளை பார்த்து மேலும் நெருங்கி பெண்ணின் பஞ்சு கன்னத்தோடு தன் கன்னம் இழைத்தவன் அழுத்தமாக அந்த சிவந்த கன்னங்களை முத்தமிட சஹானா பணியாய் அவன் இதழ் ஒற்றலில் கரைந்தாள்.
மூடிக்கிடந்த கண்ணனுக்கு ஒரு முத்தம் வைத்தவன், அவள் கன்னம் வருடி, “இந்த கலர்ல நம்மக்கு பர்ஸ்ட் நைட்-கு உனக்கு புடவை எடுத்து வச்சிட்டேன் டால்... அம்மாகிட்ட இந்த வாரம் பேச போறேன் உன்ன பத்தி... எல்லாமே அல்மோஸ்ட் ரெடி... இன்னும் நீ மட்டும் தான் வரணும்”
அத்தனை காதலை குரலில் வைத்து பேசியவனை பார்த்த விழிகள் கலங்க, ‘வேண்டாம்’ என்று தலையை ஆட்டி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து மெல்ல மெல்ல பிரிந்து சிரிப்போடு வீட்டிற்குள் நுழைந்தான் சஹானாவின் கள்வன்.
உதய்யின் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தாலும் அதை விட மிஞ்சும் அளவிற்கு உள்ளே அமர்ந்திருந்த யாழினியின் இதய துடிப்பு இருந்தது. அவளுக்கு அருகில் அமர்த்திருந்தவன் அருகில் ஒரு பெண் இருப்பது கூட தெரியாதது போல் அவள் பக்கமே திரும்பவில்லை, அது யாழினிக்கு பயத்தை உருவாக்கினாலும் மறு பக்கம் ஈஸ்வரனின் செயல் அவமானத்தை கொடுத்தது.
காரணமே இல்லாமல் ஒரு மனிதர் தன் மீது வன்மத்தை கக்குவது அநாகரிக செயலாக இருந்தாலும், பணம் பதவி என பெரிய இடது மனிதரை பகைக்க உதய்யின் வார்த்தைகள் கூட துணை நிற்கவில்லை. அவளை நம்பி அவள் சகோதரியின் படிப்பு உள்ளது, அணைத்து அசிங்கங்களையும் தாங்கி வாழ முடிவெடுத்தாள். வாகனம் யாழினி எதிர் பார்த்த தொழிற்சாலைக்கு செல்லாமல் ஏதோ ஒரு இல்லத்தினுள் செல்வது போல் தோன்றியது, நீண்ட மதில் சுவறுகளை தாண்டி சென்ற வாகனம் ஒரு இலத்தின் தோட்டத்தில் நின்றது.
வாகனத்திலிருந்து உதய் இறங்கியதும் ஜெயனும் இறங்க யோசனையோடு யாழினியும் இறங்கினாள். யாழினி இறங்கிய பொழுது உதய் அந்த இரண்டு அடுக்கு வீட்டிற்குள் செல்ல ஜெயன் யாழினியை பார்த்து, “அவர் கூட போ யாழினி” என்றான்.
“இது யார் வீடு ண்ணா? எதுக்கு நான் உள்ள போகணும்?” குழப்பமாய் பெண் கேள்வி கேட்டாள்.
“சார் வீடு தான் யாழினி, போ”
அவள் கையை பிடித்து உள்ளே அனுப்ப முயன்றான், ஆனால் அவள் கையை பற்றியவள், “அவங்க வீட்டுக்கு ஏன் நான் வரணும்? அவங்க வீட்டுல எல்லாரும் இருப்பாங்க... எனக்கு பயமா இருக்கு ண்ணா...”
“பயப்புடாத யாழினி, சார் மட்டும் தான் இங்க இருக்காரு”
முகம் வெளிறி, “ஐயோ யாரும் இல்லையா? அப்ப நான் இந்த வீட்டு வாசலையே மிதிக்க மாட்டேன். நான் ஆபீஸ் போறேன்...”
“யாழினி...” அவ்வளவு தான் உதய்யின் குரல் கேட்டதும் அடுத்த நொடி அவன் வீட்டினுள் இருந்தாள். வரவேற்பறையில் இவள் வரவிற்காக காத்திருந்த உதய், அவளை பார்த்ததும் மேலும் நடக்க, யாழினி அவன் சென்ற திசை எல்லாம் பின்தொடர்ந்தாள்.

உதய்யின் கால்கள் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் நிற்க, அந்த இடத்தை பார்த்த யாழினிக்கு கண்கள் விரிந்தது. நல்ல விசாலமான இடத்தில் மேற்கூரை இல்லாமல் ஒரு ஓரத்தில் செயற்கை நீரூற்று விழ அதன் கீழ் ஒரு சிறிய குட்டை தேங்கி நிற்க, அதில் அழகிய சிறிய மீன்கள் கண்ணை பறிக்கும் விதத்தில் விளையாடிக்கொண்டிருந்தது.

மத்தியில் இருவர் அமரும் வகையில் ஒரு மர ஊஞ்சல், அதை சுற்றி வகை வகையாக பராமரிக்கப்பட்ட செடிகளும், குட்டி குட்டி மரங்களும், அதில் ஒன்று மட்டும் விதிவிலக்காக விருட்சமாக வீட்டின் மேற்கூரையை தொட்டிருந்தது. பல வருடங்களாக இருக்கும் போல்...

“சார் என்ன சார் உங்க வீடு இவ்ளோ அழகா இருக்கு, எப்படி சார் இதெல்லாம் கட்டுனிங்க? வீட பாத்து பாத்து பண்ணவன் கலாரசிகன் தான்” மர ஊஞ்சல் அருகே சென்றவள் அதில் பொறிக்கப்பட்டிருந்த சிற்பக்கலை பார்த்து மெல்ல தொட்டு பார்த்தாள்.

“எங்க அம்மாக்கு இதே மாதிரி ஊஞ்சல் எல்லாம் வாங்கி மொத்த வீடையும் மரத்துலையே நிரபணும்னு ஆசை... என் தங்கச்சிக்கு செடி நடுறது எல்லாம் ரொம்ப புடிக்கும்... மொட்டை மாடில எல்லாம் நெறையா செடி தான் இருக்கும். நாங்க யூஸ் பண்ற பச்சை மிளகாய் கூட எங்க வீட்டுல இருக்குற செடில தான் சார் பறிப்போம்”

சூழலை மொத்தமாய் மறந்து பேசும் அவளை ரசிக்கும் எண்ணத்தில் உதய் மாதவன் நிச்சயம் இருக்கவில்லை. அவன் மனம் கொதித்தது தாய் மாமனை எண்ணி, அவர் கூறுவதை எல்லாம் கேட்கும் இந்த பெண்ணை எண்ணி.

“மாமா உன்கிட்ட இதே மாதிரி தான் ஒரு வாரமும் பண்ணாரா?” அவள் பேச்சை புறக்கணித்து உஷ்ணமாக கேட்டான். அவன் தொனியில் திடுக்கிட்டவள் உடனே நிகழ் காலத்திற்கு திரும்பினாள்.

தான் கேட்ட கேள்விக்கு முகத்தை தொங்கப்போட்டு நிற்பவளை நெருங்கி வந்த உதய், “உன்கிட்ட தான் கேட்டேன்” அவன் உரிமை பேச்சை கவனித்தாலும் அவன் கேள்வி கணைகளுக்கு பதில் கூற தான் முடியவில்லை, அவன் தாய் மாமன் ஆயிற்றே, எப்படி அவனிடமே அவரை பற்றி கூறுவது?

“தப்புனா யார் செஞ்சாலும் தப்பு தான் யாழினி. அது என் மாமாவா இருந்தாலும் சரி... நானா இருந்தாலும் சரி”

பதிலை எப்படியும் வாங்கியே தீருவேன் என்ற உறுதியில் அவன் நிற்க, என்ன கேட்டாலும் மௌனமாய் மட்டுமே நான் என்று அவளும் அவன் முகத்தை கூட பார்க்காமல் சாக்ஸ் அணிந்திருந்த அவன் கால்களை மட்டுமே பார்த்து நின்றாள்.

பொறுமை காற்றில் பறக்க மேலும் யாழினியை நெருங்கி வந்த உதய் அவள் நாடியை தன் ஒற்றை விறல் கொண்டு தூக்கினான். கண்ணீரை வழிய விடாமல் பாதுகாத்து வந்த பெண் அவன் தொடுகையில் மொத்தத்தையும் வெளியிட்டது.

அவள் விழி நீரை துடைத்தவன், “சொல்லு யாழினி...” குறையவில்லை ஆண் மனம் அவள் கண்ணீரில். கோவம் அதிகம் தான் ஆகியது ஆனால் அவளுக்காக மெதுவாக பேசினான். ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

“என்ன சொன்னாரு?”

“சிகரெட் வாங்கிட்டு வர சொன்னாரு”

“அப்றம்” அவளை விட்டு விலகி நிற, தூக்கிய அவள் தலை மீண்டும் நிலம் நோக்கி...

“நம்ம ப்லோர்ல இருக்க ரெஸ்ட்ரூம கிளீன் பண்ண சொன்னாரு” சினம் எல்லையைக் கடக்க அருகிலிருந்த ஒரு சிறிய பூ செடியை தூக்கி சுவற்றில் எறிந்தான்.

சிதறி விழுந்த மண் சட்டியின் சத்தத்தில் திடுக்கிட்டவள் பயத்துடன் பின்னால் சென்று தூணில் இடித்து நின்றாள். தலையைக் கோதி ஆசுவாசப்படுத்தியவன், “அப்றம்” அவன் சினத்தை பார்த்து மேலும் பேச தைரியம் வருமா?

“அவ்ளோ தான் சார்” என்றாள் பயத்துடன்.

“சொல்லுன்னு சொல்றேன்” வீடே அதிரும் அளவு அவன் குரல் ஒலித்தது.

“அவ... அவரோட ஷூ... ஷூ லேஸ் கட்ட சொன்...”

அழுகையோடு கடினப்பட்டு பேசியவளை முழுதாக பேச விடாமல் கோவத்தில் அவள் தாடையை பலம் கொண்டு பிடித்தவன், “ம்ம்ம்ம் பண்ணு டீ... அவன் என்ன சொன்னாலும் அத செய். இன்னைக்கு ஷூ லேஸ் கட்டி விட சொன்னவன் அப்றம் திருட சொல்லுவான், கிணத்துல விழுந்து சாக சொல்லுவான் அதையும் செய்... நாளைக்கு படுக்க கூப்புடுவான் அதுக்கும் போவியா?”

என்ன முயன்றும் உதய்யால் அவள் செய்ததாக கூறிய எதையும் ஜீரணிக்க இயலவில்லை அதனாலே பேசுவதை உணராமல் வார்த்தையை விட்டான். மறு பக்கம் அவன் வார்த்தையை கேட்ட யாழினிக்கு மொத்தமாய் மனம் உடைந்தது... அவளுடய அழுகை கேவலாக மாற தன் தாடையை பற்றியிருந்த அவன் கையை உதறி விட்டு மடங்கி அமர்ந்து அழத் துவங்கினாள்...

“காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியா? ச்சை... இனிமே நீ ஆபீஸ் பக்கமே வரக் கூடாது”

அதற்கு மேல் அங்கு நில்லாமல் பாக்கெட்டில் அவள் கொடுத்த சாக்லேட்டை கோவத்தில் அவள் காலடியில் போட்டு சென்றுவிட, பெண்ணின் மனது சாட்டையால் அடி வாங்கியது போல் பொறுக்க முடியாத வலி தந்தது... அழுகை நிற்க வில்லை, விசும்பல் உருவாக துவங்கியது... நேரம் சென்றது ஆனால் வலி செல்லமாட்டேன் என்று அடம் செய்தது.

யாழினியை மனம் நோகும்படி பேசி சென்ற உதயனுக்கு கோவம் தாறு மாறாக வர தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் அறைக்குள் சென்று சட்டையை கழட்டி தூக்கி எரிந்து அங்கிருந்த பண்சிங் பேக்கில் மொத்த கோபத்தையும் இறக்கினான்.

உடம்பில் உள்ள மொத்த தெம்பும் வடிந்த பிறகும் ஆத்திரம் மட்டும் அடங்க மறுத்தது. அவனுடைய கைபேசி சிணுங்கிய பிறகே பஞ்ச் செய்வதை நிறுத்தியவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“சார் ஏதாவது... பிரச்ச... பிரச்சனையா?” உள்ளே சென்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வெளியில் வராமல் போக ஒரு பயத்தில் தான் உதய்க்கு அழைத்தது.

அப்பொழுது தான் அழுத யாழினியின் முகம் நினைவிற்கு வர, “யாழினி எங்க?”

“வெளிய வரல சார்...”

“அவ வந்தா வெளிய விடாதீங்க ஜெயன். லஞ்ச் யாழினிக்கு புடிச்ச கடை ஏதாவது ஒன்னுல சாப்பாடு வாங்கிட்டு வந்துடுங்க... நான் லஞ்ச் முடிச்சிட்டு தான் ஆபீஸ் வருவேன். நீங்க ஆபீஸ் போங்க”

“ஓகே சார்” பயத்துடன் பேச வந்த ஜெயனுக்கு உதய்யின் வார்த்தைகள் புன்னகையை தந்தது.

இணைப்பை துண்டித்த உதய் வேகமாக குளியலறை சென்று குளித்து இலகுவான வெள்ளை நிற முழுக்கை ஷர்ட் முழங்கை வர மடித்து, சாம்பல் நிற பார்மல் பாண்ட் அணிந்து அவளை விட்டு சென்ற தோட்டத்திற்கு வந்து பார்க்க, உதய் திட்டிய பொழுது எப்படி தரையில் அமர்ந்து கண்ணீர் சிந்தினாலோ அதே போல் தான் இப்பொழுதும் கால்களை நெஞ்சோடு கட்டி தலையை முட்டிமீது வைத்து அமர்ந்திருந்தாள்.

அவளை நெருங்கியவன் காதுகளுக்கு அவள் விசும்பல் கேட்க, “யாழினி” என்ற அவன் அழைப்பு கேட்டு தலையை உயர்த்தியவள் அவன் பக்கம் திரும்பாமல் கண்களை துடைத்து, கீழே கிடந்த அவளுடைய கைப் பையையும் கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

சிவந்திருந்த கண்களும், தளர்வுற்ற அவள் நடையும் பார்த்து அதற்கும் மேல் தன்னுடைய பிடிவாதத்தையும், இறுக்கத்தையும் அவனால் பிடித்துவைத்திருக்க முடியவில்லை.

சோர்வாய் இருந்த அவள் நடையை இரண்டே எட்டில் உதய் மாதவன் அடைத்து அப்படியே அவளை கைகளில் அள்ளிக்கொண்டான். மொத்தமாய் மனதை வெறுத்து சென்றவளுக்கு அவனுடைய இந்த திடீர் நெருக்கம் திகைப்பை தந்தாலும் சிறிது நேரத்திற்கு முன் அவன் பேசிய வார்த்தைகள் பெண்ணின் மனதை கூறுப்போட்டு அறுத்தது, இப்பொழுது அவன் கரங்களில் இருக்க இனிமையை தராமல் தீயில் நிற்பது போன்ற உணர்வு.

“இற... இறக்கி விடுங்க சார்...” எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்கும் மனநிலையில் நிறுத்தவில்லை அவன் வார்த்தைகள். அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அதே சிறிய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஊஞ்சலில் அமர்ந்து அவளை தன் மடியிலே கிடத்தினான்.

அவனிடமிருந்து விடுபட போராடியவள், “விடுங்க சார்...” அவன் முகம் பார்த்தாள் நிச்சயம் இன்னும் அழுகை தான் வரும் என்று சுத்தமாக அதை தவிர்த்தாள்.

“ஏன் விடணும்?” அவள் முதுகில் இருந்த அவன் கை இப்பொழுது அவள் இடையில் பிடித்து தன்னை நோக்கி இன்னும் நெருக்கமாக அமர்த்தினான்.

அவன் கையை பிடித்து தள்ளிக்கொண்டே, “பணத்துக்காக என்னென்னமோ பண்ற என்கிட்டே வந்து ஏன் சார் நீங்க அழுக்காகுறீங்க?” சூழ் என்ற வலி அவன் இதயத்தில் பதிந்தது.

“நான் சொல்றது உனக்கு புரியவே இல்லையா டீ?” – இயலாமையில் உதய். அவன் முகத்தை பார்த்துக்கொண்டே, “நல்லாவே புரிய வச்சிட்டீங்க சார்” கண்ணிலிருந்து வழிந்த நீரை துடைக்க மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

அவள் முகத்தை பிடித்து திருப்பியவன், “நான் சொன்னதுல அத மட்டும் தான் நீ புரிஞ்சுக்குட்டியா?”

“வேற எதுவுமே நீ சொல்லலையே சார்... உங்கள மாதிரி பணக்காரங்கல பொறுத்தவரை நாங்க நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்டுக்குவோம். பணத்துக்காக எந்த எல்லைக்கும் போவோம். ஆமா நான் அவர் சொல்றது எல்லாம் பண்ணேன் தான். எனக்கு பணத்துக்கு தேவ இருந்துச்சு... அந்த பணம் எனக்காக மட்டுமே இருந்தா இவ்ளோ தூரம் இறங்கி போயிருக்க மாட்டேன். இந்த பணத்தை நம்பி தான் என் தங்கச்சியோட வாழ்க்கை இருக்கு...”

“அந்த பணத்தை உனக்கு தர்றது யாரு நானா இல்ல நீ சேவகம் செஞ்ச அந்த ஆளா? ஷூவ தொட சொன்னபயே அவர் போட்ருக்க அதே செருப்பை கழட்டி அடிச்சிருக்கணும்... அப்டி பண்ணிருந்தா இந்நேரம் நான் உன்ன கொண்டாடி தீத்துருப்பேன்” – உதய்

“சொல்லுவீங்க சொல்லுவீங்க ஈஸியா... எந்த ஆளா இருந்தாலும் அவர் உங்க மாமா தான? என் மேல ஒரு திருட்டு பழியை போட்டிருந்தா நீங்களும் நம்பி தானே இருப்பிங்க...? கண்டிப்பா நம்பிருப்பிங்க. குழலை பத்தி எனக்கே தெரியாத விசயத்தை சொல்லி அவர் வேலை வாங்குறாரு. எந்த விதமான பிடிமானமும் இல்லாத ஒரு அக்கா தன்னோட தங்கச்சியோட பாதுகாப்புக்கு என்ன பண்ணிருக்குமோ அத தான் நான் பண்ணேன்” – யாழினி

“ஏன் பிடிமானம் இல்ல, நான் இருக்கேன்ல? ஜெயன் இருக்கான்ல. சொல்ல வேண்டியது தான? மத்த நேரம் நிறுத்தாம பேசுவ...” – உதய் கோவமாய்...

“பேச எல்லாம் நல்லா தான் சார் இருக்கும், சொந்த மாமாவா இல்ல யாருன்னே தெரியாத பி.எ வா-னு வந்தா சொந்தம் பக்கத்துல தான் நீங்களும் நிப்பிங்க”

“ஏன் உனக்கு தெரியாதா நான் யார் பக்கம் நிப்பேன்னு?”

“யார் பக்கம் நீங்க நின்னாலும் வலி எனக்கு தானே சார் வரும்?” – யாழினி

“அவர் பக்கம் நான் நிப்பேன்னு இன்னும் நீ நினைக்கிறியா?” மௌனமே அவளிடமிருந்து பதிலாய் வர காலையிலிருந்து தன்னை இம்சித்த அந்த இடையை மூடிக்கிடந்த சேலையை ஒதுக்கிவிட்டு உதய் கைகள் அவள் மெல்லிடையை தொட்டது. உடல் சிலிர்த்து ஏதோ புதிதாய் அடிவயிற்றில் தொடங்கி இதயத்தில் வந்து நின்ற உணர்வுக்கு பெயர் வைக்க தெரியவில்லை பெண்ணுக்கு.

“ம்ம்ம்?”

கேள்வியெழுப்பியவாறே அவன் கைகள் மேலும் அவள் இடையில் இறுக்கத்தை கொடுக்க படபடத்த இதயத்தோடு, “தெரியல சார்” என்றது பெண்.

பொய் கூறிய இதழ்களை தண்டிக்க மனம் துடித்தாலும் அந்த அழகிய நிமிடத்திற்கான ஏற்ற தருணம் இது அல்ல என்று உணர்ந்து அவள் கழுத்தில் மெல்லிய முத்தம் ஒன்று வைத்தான். ஏற்கனவே அவன் கைகள் தந்த குறுகுறுப்பில் மூச்சு விடாமல் இருந்தவளுக்கு அவன் மீசையின் நெருக்கமும் இணைந்து அவளை ஒரு வழி ஆக்கியது.

“பொய் பேசுனா எனக்கு புடிக்காது யாழினி...”

தன் இடையை பற்றியிருந்த அவன் கைகளை பிடித்துக்கொண்டே, “எனக்காக உங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனை வர்றது எனக்கு புடிக்கல சார்”

உள் சென்ற குரலில் அவள் பேச, பூக்களின் வாசத்தை தந்த அவள் கழுத்திலிருந்து விடுபட முடியாமல் பட்டும் படாமலும் அவளின் கழுத்தில் தன்னுடைய முத்திரையை பதித்துக்கொண்டே அவள் வார்த்தைகளுக்கும் விளக்கம் கொடுத்தான்,

“என் குடும்பத்துக்காக நான் யாரை வேணாலும் எதிர்த்து நிப்பேன் யாழினி” அவள் பதிலில் அதிர்ச்சியுற்றவள் தன் கழுத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆணவன் கழுத்தில் தன்னுடைய கரத்தை மாலையாக்கி மயங்கிய குரலில், “சார்...” என்று இழுத்தாள் என்ன பேசுவதென்று தெரியாமல்.

தன்னுடைய கழுத்தில் அவள் கைகள் பட்டதும் மேலும் முன்னேற முயன்றவனுக்கு அவள் கண்ணீர் தடையாய் வந்து நின்றது. பெருமூச்சோடு தன்னை நிதானப்படுத்தியவன் அவளை அப்படியே அணைத்துக்கொண்டான் அவள் முதுகை வருடிக்கொண்டு. காதலை வார்த்தைகளால் கூறாமல் மௌனமாய் கூறி இரு உள்ளங்கள் சஞ்சலத்திலும், குழப்பத்திலும் முழுதாக இணைய முடியாமல் தவித்து விதியால் இன்னும் வலியை அனுபவிக்க காத்திருந்தது.

நிமிடங்கள் கரைய முதலில் அவனிடமிருந்து விலகி அவனுக்கு அருகில் அமர்ந்தவள் எதுவும் பேசாமல் அவனை தவிர்த்தாள். அவளை புரிந்துகொண்டவன் அவள் மடியில் தலை வைத்து ஊஞ்சலில் படுத்துக்கொண்டே அவள் கைகளை பற்றி தன்னுடைய சிகையில் வைத்துவிட்டான்.

அவன் செய்தியை புரிந்து மென்மையாய் யாழினி வருட, “சாரி யாழினி...”

“தப்பு என் மேலையும் இருக்கு சார்...”

“ஆனாலும் நான் ரொம்ப பேசிட்டேன்ல...” அவள் கையை பற்றி அதில் முத்தம் ஒன்று வைக்க பெண் மௌனமானாள்.

இதற்கு மேல் அவள் பேசப்போவதில்லை என்று புரிந்து, “இந்த இடம் அம்மா ஆசைப்பட்டு கேட்டது... இந்த மரம், அம்மாவும் ஆதியின் நட்டது தான்” அந்த பெரிய மரத்தை காட்டி சொன்னான்.

“அம்மா இருந்தப்ப அவங்களோட ஆசையெல்லாம் பண்ண முடியல அதுக்காக தான் இப்ப எல்லாத்தையும் செய்றேன். இந்த வீட கூட அப்பா வித்துடலாம்னு சொன்னாங்க. என் அம்மா இருக்குற வீட்டை எப்படி யாழினி நான் குடுப்பேன்? அதுக்காக தான் ஒவ்வொரு இடமும் அம்மா வாங்குன பொருள், அம்மா
ஆசைப்பட்டதுன்னு வீடு மாறாம அப்டியே இருக்கு. மனசு கஷ்டமா இருக்குற நேரம் எல்லாம் இங்க தான் நான் இருப்பேன்”

“உங்களுக்கும் உங்க பிரண்ட் ஆதிக்கும் என்ன சார் பிரச்சனை?”
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Aadhava vanthudan good family yarum feel pannathiga udhai yum oru nall varuvan amma appa aadhai ne business pannuda nalla varuva ellarum support pannuvaga🤞🥳🤩🤩
Dai aadhava enga enna nadaguthu ne enna da unnoda baby doll kuda romance pannidu iruka💝💝
Udhai yazhini super ya love sollitaga 🥳💕💕kelu yazh enna sandai nu ippovathu unmaiya solluvagala papom 😔😔😔
 
Top