• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 23 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap 23

“சார் மிஸ்டர் மாதவன் நம்மள க்ளோஸா மானிடர் பண்ற மாதிரி நியூஸ் வந்துச்சு. அதுவும் கோவா ரெஸார்ட்ல பன்றாங்க” நீரஜ் தழல் முன் சில படங்களை வைத்தான் அவன். கண்களிலிருந்த கண்ணாடியைக் கழற்றி அந்த புகைப்படங்களை எடுத்து ஆராய்ந்தவனின் இதழ்கள் கோணலாகப் புன்னகை செய்தது.

“தழல் கோட்டைக்குல்லையே வரத் தைரியம் வந்துடுச்சா மாதவன் உனக்கு? சரி வா லெட்’ஸ் சீ வாட் யூ கேன் டூ”

ஏளன புன்னகையோடு உதயை நினைத்துச் சிரித்தவன் கண்கள் சில தினங்களுக்கு முன்னர் உதய் கொடுத்தனுப்பிய அந்த கோப்பை மீது விழுந்தது. அந்த கோப்பும் அதனுடன் வந்த உதயின் திமிரான செய்யும் தழலை உச்சக்கட்ட கோவத்தில் ஆழ்த்தியிருந்தது.

‘எவ்வளவு திமிர்’ மொத்த அலுவலக அறையையும் அன்று சூறையாடியிருந்தது அவன் சினம். இப்பொழுது வரை அந்த கோப்பை பார்த்துப் பார்த்து வெறித்தனமாக வேலையைப் பார்க்கத் துவங்கினான். தொட்டுக் கூட பார்க்காத அந்த கோப்பையை விட அவன் உழைப்பு மீது அதீத வெறி,

“இத கோட் பண்ணிடுங்க. கோவால எந்த லெவல்க்கு அவன் முன்னேறிருக்கான்?” – தழல்

“ஸ்வீப்பர் வச்சு நம்ம ரிசார்ட் சறவுண்டிங்ல மானிடர் பண்ணிருக்காங்க, மினி ஸ்பை கேமரா எண்ட்ரன்ஸ்ல இருக்க ஜங்ஷன் டிடெக்டர்ஸ் ஐடென்டிபை பண்ணிடுச்சு, ஒரு மைக்ரோ ஸ்பீக்கர் லபோர்டரில இருக்க மத்த டிடெக்டர்ஸ் கூட சேந்து வந்தனால கண்டு பிடிக்கக் கொஞ்சம் லேட் பட் ஒன் டேல கண்டு புடிச்சாச்சு சார்” ஆய்வகத்தில் ஸ்பீக்கர் என்றவுடன் உச்சக் கட்ட கொதிநிலைக்குச் சென்றான் நீரஜ் தழல்.

“வாட் தி ஹெல் இஸ் திஸ்? லேப்ல ஸ்பீக்கர், அத கண்டுபுடிக்க இவ்ளோ நேரமா தேவ? ஆன் தி பர்ஸ்ட் ப்லேஸ் உன் செக்யூரிட்டி டீம் மீறி ஒரு தூசு கூட உள்ள வர கூடாது, இதுல அந்த மாதவன் ஆள் ஒருத்தன் உள்ள வந்தது மட்டும் இல்லாம ஸ்பை கேமரா, ஸ்பீக்கர்-னு நீ சொல்லிட்டே போற. இஸ் திஸ் யுவர் காட்டேம் செக்யூரிட்டி? (Is this your goddamn security?) விரேஷ்”

கர்ஜித்தவனின் குரலில் வெளியிலிருந்து நீராஜின் அசிஸ்டன்ட் ஒருவன் ஓடி வந்து கட்டளைக்காகக் காத்திருந்தான். “இமீடியேட்டா நான் கோவா போகணும்”

தலையை அசைத்து அவன் வெளியில் செல்ல, தனக்கு முன் தொடு திரையில் நின்றவனைப் பார்த்து, “டால்பின் பிளாக்ல எதுவும்?”

“அந்த பக்கம் எந்த அன்வயோலேட்டபில் ஆக்டிவிட்டீஸ் இது வரைக்கும் இல்ல சார்... எல்லாமே டூரிஸ்ட்ஸ் மாதிரி செட் பண்ணியாச்சு, இன்னும் ஒரு பதினஞ்சு நாள்ல டெலிவர் பண்ணிடலாம்”

“இன்னும் டூ ஹௌர்ஸ் தான் உனக்கு டைம் மொத்த ப்லேஸயும் கம்ப்ளீட்டா ஸ்கேன் பண்ணி வை. ஐ மீன் இட். எவ்ரி நூக் அண்ட் கார்னர் ஷுட் பி அண்டர் யுவர் கண்ட்ரோல் (I mean it. Every nook and corner should be under your control). அதே மாதிரி மாதவனுக்கு ஒரு ஸ்பெஷல் பிளான் போட்டு வை. நான் அடிக்கிற அடில அவன் இனி எழுந்திருக்கவே கூடாது”

நரம்பு புடைக்கப் பேசியவனைப் பார்க்க விரும்பாத அவன் காரியதரிசி மௌனமாய் தலை அசைத்து இணைப்பைத் துண்டித்தான். உதய், நீரஜ் போன்ற சில பெரிய புள்ளிகள் போட்டிப் போடும் இந்த அரசாங்க டெண்டரை கைப்பற்றவே இந்த ஆயத்தங்கள்.

இதில் இந்தியர்களுக்காக மட்டுமே உருவான காரணத்தினால் கட்டாயம் இந்தியர்களைத் தவிர வேறு எவரும் சிறு பொருளுக்குக் கூட வெளி நாட்டவரை நாடக் கூடாதென்பதே மிகப் பெரிய நிபந்தனை. அதில் தன்னுடைய மக்களின் திறமை மேல் நம்பிக்கை இல்லாத நீரஜ் பல வெளி நாட்டவர்களை தன்னுடைய வேலைக்காக இறக்கியிருக்க, அதன் ஆதாரம் சிறிது கையில் சிக்கினாலும் அவனால் இந்த டெண்டரை எடுக்க இயலாது.

மொத்த டெண்டர் பற்றிய தகவலையும் கொடுத்த உதய் மாதவன் பின்னால் ஏதாவது உள்குத்து வைத்தே செய்வான் என்று எதிர் பார்த்த நீரஜின் நம்பிக்கையை உடைக்காமல் இதோ இன்று துவங்கிவிட்டான், இனி உறங்காமல் டெண்டர் கைக்கு வரும் வரை தகவல்களை பாதுகாக்க வேண்டும்.

“சார்...” தன்னுடைய அசிஸ்டன்ட் வர, லேப்டாப் எடுத்து தலையைத் தூக்கியவன், “ஜெட் ரெடியா?”

“இல்ல சார் மிஸ்டர் தழல் உங்கள பாக்க ஜி.எம் ரூம்ல வெயிட் பன்றாங்க”

“ஷிட்” எரிச்சலோடு அறையை விட்டு வெளியேறியவன் ஜி.எம் அறைக்குள் அனுமதியே இல்லாமல் படாரென திறந்து வந்த வேகம் அங்கிருந்த மனிதரைச் சுத்தமாய் பாதிக்கவில்லை, அசராமல் அவனைப் பார்த்தவர் மேல் கோவம் இன்னும் இன்னும் அதிகம் வந்தது.

“என்ன தான் டாட் உங்களுக்கு வேணும்? பிஸ்னஸ் தான் எனக்குன்னு குடுத்துட்டீங்கல்ல? இன்னும் ஏன் ஒவ்வொரு விசியத்துலயும் வந்து வந்து நிக்கிறிங்க. லெட் மீ டூ மை பிஸ்னஸ்” அவருக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“டெண்டர் ஒர்க் எப்படி போகுது?”

“குட்” கோவமாய் கத்தினான், “எல்லாமே நல்லா தான் போகுது. கேன் யூ லீவ் நவ்?”

“இல்லீகலா நீ ஒர்க் பண்றது எனக்கு தெரியாதுன்னு நனைக்கிறியா நீரஜ்?” கோவத்தை கடினப்பட்டு அடக்கினார்.

“உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும், இதெல்லாம் டெண்டர் கைக்கு வர்ற வரைக்கும் தான் டாட்”

“தப்பு பண்ற நீரஜ், ஏற்கனவே உதய் மாதவன நீ ரொம்ப சீண்டிட்டு இருக்க, அவன் எனக்குக் கால் பண்ணி வார்ன் பன்றான். பீல்ட்ல அவன் கை இப்ப ஓங்கி நிக்கிது, இந்த நேரத்துல அவனை பகசுக்குறது ரொம்ப பெரிய முட்டாள் தனம்”

சினம் எல்லையைக் கடக்க, “என்ன பெரிய மாதவன் மாதவன்? என்ன பொறுத்த வர அவன் ஒரு சாதாரண ஆள் தான், அவனை எப்படி, எந்த வழில அடிக்கணும்ன்னு எனக்கு தெரியும். ஒரு சாதாரண காம்படீட்டர் இல்ல அவன், ஹி இஸ் மை எனிமி... அவ்ளோ ஈஸியா விட்டுட முடியாது டாட்”

தந்தைக்கு அதற்கும் மேல் எதுவும் நேரம் கொடுக்காமல் வெளியே வந்தவன் கையில் அவன் அசிஸ்டன்ட் ஒரு புகைப்படத்தை நீட்டினான்.

“யார் இது?”

“ஆதி கேசவன்” அந்த தமிழ்ப் பெயர் போதாதா குறுக்குப் புத்தி உடையவனின் கோணல் சிரிப்பிற்கு தீமூட்ட?


மேகமோ அவள்!
மாய பூ திரள்!
தேன் அலை சூழல்!
தேவதை நிழல்!

மூன்றாம் பிறை இன்று, ஆனால் பௌர்ணமி நிலவைப் போல் மொத்த உலகுக்கும் வெளிச்சம் தந்தது அந்த மதி. தை மாதம் காற்றைப் போல் அல்லாமல் ஆடி மாச காற்றாய் எதிர் வீட்டிலிருந்த மரத்தின் கிளை உடையும் அளவு காற்று.

சுத்தமான மொட்டை மாடியில் வெள்ளை உள் பனியினை மட்டும் அணிந்து கைப்பேசியை உபயோகித்துக்கொண்டிருக்கும் பொழுது வாசித்த கவிதை மொத்த கவனத்தையும் அந்த மேகத்தின் மீது திருப்பியது. கைப்பேசியை மாரில் வைத்து கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னால் கொடுத்து இன்னும் ஆழ்ந்து போனான் அதன் சுறுசுறுப்பைப் பார்த்து. அவளும் இப்படி தானே... துரு துரு பெண்... அவன் மான் குட்டி. அவன் மேகா...

பத்து நாட்களுக்கு முன் பேசியது அன்று பூங்காவில். அதன் பிறகு தன்னுடைய வேலைகள், சோகம் என மூழ்கி போனானவனின் நினைவுகளில் அவளுடைய விருப்பத்தைத் தெரிந்தும் அதை அனுபவிக்காமலிருந்தது ஒரு வேதனை, ஆனால் மறு பக்கம் தன்னுடைய உணர்வை ஒருவனிடம் தெரிவித்து அதன் பிறகு அவனிடமிருந்து எந்தவித பதிலும் வராமல் இருந்தால் அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும் என்ற எண்ணம், இப்பொழுது அவள் கைப்பேசி எண்ணாய் மாறி நின்று நினைவூட்டும் மேகங்களின் பிரமை தான் அவனுக்கு எடுத்துரைத்தது.

ஆனால் அவளுக்கு அழைக்கவும் ஒரு பயம்... திட்டி சண்டையிடும் ரகம் இல்லை அவன் மான்குட்டி... ஆனால் ஆதிக்குத் தான் இத்தனை நாள் இருந்த மொத்த தைரியமும் காற்றோடு கரைந்தது போல் இருந்தது. காதல் கூறிய பொழுது இருந்த தைரியம் இப்பொழுது இல்லை...

‘என்னடா ஆதி இப்டி இருக்க... நீ பேசாத பொண்ணா?’ மனம் கேட்டது.

ஆனால் மூளைக்கு மட்டும் தானே தெரியும், பெண்களிடம் இவனாக என்று சென்று பேசியிருக்கிறேன்? ஆண்களுடன் இவன் அடிக்கும் லூட்டியையும், கலாய்ப்பதையும் பார்த்து அவர்கள் வந்து பேசுவார்கள், அதற்கும் தயக்கத்தை வெளியில் காட்டப் பயமாய் இருந்தும் தைரியமாகப் பேசுவது போல் நடித்துக் குனிந்த தலையுடன் வேலை இருப்பதாகக் கூறி ஓடி வந்து விடுவான்.

‘ஹாய் மெசேஜ் அனுப்பி டேலிட் பண்ணிடலாமா? அவளே பாத்துட்டு கால் பண்ணுவா?’

‘ச்சை... என்ன ஒரு மட்டமான யோசனை... ரைட் அப்ப ஒரு எனர்ஜியான பாட்ட கேட்டுட்டு போய் கால் பண்ணிடலாம்’

கைப்பேசியை எடுத்து, “ஹே கூகிள்... பிலே ஏனர்ஜிடிக் இளையராஜா சாங்” சில நொடிகள் தேடிய அந்த எந்திரம் படு எனெர்ஜியான பாடலை எடுத்து விட்டது.


ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

லவ் மூட் ஏத்த சொன்னா இன்ட்ரோ சாங் அவசியமா கோபி “சொல்றா எந்த பபுக்கு வரணும்?” நண்பனின் குணம் அறிந்து எடுத்த எடுப்பிலே கேட்டான்.

“மச்சான்...” ஆதி குலைவாய் பேச சந்தேகமாய் அந்த பக்கம் கெளதம் கைபேசியில் அவன் பெயரை பார்த்தான் இது ஆதி தானா என்று...

“என்னடா இந்த நேரம் இவ்வளோ தெளிவா பேசுற? சரக்கடிக்க காசு இல்லையா?”

“ஒரு மனுஷன் கால் பண்ணாவே இதுக்கு தான்-னு முடிவே பண்ணிட்டியா? நீ அப்டியே லைன்ல இரு, என் ஆருயிர் நண்பன் தமிழ் என்ன புரிஞ்சுக்குவான் பாரு”

கானபரென்ஸ் காலில் தமிழை ஆதி இனைத்துவிட எடுத்த எடுப்பிலே, “ஐநூறு போட்ருக்கேன் போதுமா? மேல ஒரு ஐநூறு கூட போட்டு விடுறேன்...”

“டேய்...”

ஆதி பேச அவனை சட்டை செய்யாமல், “ஆனா அளவா குடிச்சிட்டு ஒழுங்கா வீடு போய் நிதானத்தோடு சேருற சொல்லிட்டேன்”

“டேய் டேய் நிறுத்துடா” ஆதி கெஞ்ச அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை கெளதம் தாராளமாய் வெளிக்காட்டினான்.

“நீயும் இங்க தான் இருக்கியா?”

“மாப்பிள்ளை இவன் வேற எதுக்கோ கால் பண்ணிருக்கான் போலடா... நிதானமா பேசுறான்”

“என்னால நம்ப முடியலையே... எங்க வீடியோ கால் வா பாப்போம்” தமிழ் இணைப்பை துண்டிக்க அவனை தொடர்ந்து கௌதமும் சென்றான்.

தலையில் அடித்து, “எல்லாம் என் நேரம்” புலம்பியவாறே வந்த வீடியோ காலை எடுத்தவன் முகத்தை காட்டி, கேசத்தை சரி செய்ய, “பாத்தாச்சா, தெளிவா இருக்கேன், வீட்டு மொட்டை மாடில தான் இருக்கேன்”

“சுண்டெலி எதுக்கோ பதுங்குதே...” மென்மையாக பேசிய ஆதி சந்தேகத்தை விதைத்திருந்தான் நண்பர்கள் மனதில்.

“மணிமேகலைட்ட பேசணும் எப்படி பேசுறதுன்னு தெரியல” தூபம் போட்ட ஆதியை பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தனர் இருவரும்.

“ஊர் உலகத்துல இருக்க அயோகியதனம் எல்லாம் செஞ்சிட்டு இப்ப பேச இவனுக்கு சொல்லி குடுக்கணுமாம்ல?” – கெளதம்

“அதுவும் ஒரு மாசமா வீட்டு வெளிய நின்னு காதல் செடி வளத்துட்டு இப்ப பாயிண்ட் எடுத்து தரணுமா... நல்லா இருக்குடா உன் கதை” – தமிழ்

“அது ஏதோ ஒரு ஆர்வத்துல பேசுனது இப்ப ஏதோ பீலிங்ஸ் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்றம் அதே உரிமை, எதார்த்ததோட பேச முடியல... அதுக்கு தான் உங்கட கேக்க வந்தேன்”

“நம்புற மாதிரி இல்லையே...” கோரஸாக இருவரும் பேச, “உன் நம்பிக்கையை வச்சு நான் ஒரு மண்ணும் பண்ண போறதில்ல, ஐடியா குடுங்க... என்ன பேசுறது?”

“லவ் பண்ணது இவன் தான் இவன்ட்ட கேளு” தமிழ் கௌதமை கை காட்டினான்.

“இப்டி டக்குனு கேட்டா என்ன சொல்றது... பேசமா எப்படி லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணணு கேளு” – கெளதம்

“அவ என்ட்ட லவ் பன்றேன்னு சொல்லவே இல்லையே” – ஆதி

“இப்ப தான பீலிங்ஸ் இருக்குன்னு சொன்ன?” – தமிழ்

“ஆமா பீலிங்ஸ் இருக்கு அவளே அக்ஸப்ட் பண்ணிட்டா ஆனா லவ்-னு பேசிக்கலயே” – ஆதி

“அப்ப லவ் இல்லல ஜாலியா ரெண்டு பஞ்ச் எடுத்துவிடு” – தமிழ்

“அடேய் லவ் இல்லாம எப்படிடா பீலிங்ஸ் வரும்... இது லவ் தான் ஆனா லவ் சொல்லாம லவ் சொல்ற பீலிங்ஸ் இது” – ஆதி

“சரி எதுவா இருந்தா என்ன? பிக்கப் லைன் டெய்லி ஒன்னு போட்டு விடு” – தமிழ்

“டேய் இவன் பேச்ச கேக்காத” – கெளதம்

“இவனுக்கு பொறாமைடா... இப்ப பாரு நான் ரெண்டு லைன் சொல்றேன்” வீட்டை சுற்றி பார்த்த தமிழ், அருகில் சகோதரி கைக்கு நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டிருக்க அப்படியே வெளியில் வந்தவன் ஆதியை பார்த்து, “குடிக்க தேவ தண்ணி... நீ தான் என்னோட வாழ்க்கை பன்னி”

அதை கேட்டு கெளதம் வயிற்றை பிடித்து சிரிக்க ஆதி முகத்தை எந்த வித மாறுதலும் இல்லாமல் வைத்து, “உன் லெப்ட் சைடுல செருப்பு ஸ்டாண்ட் இருக்கும்ல... அதுல ஒன்ன எடுத்து உன் தலைல நீயே அடிச்சுக்கோ”

“பொறாமை என் அளவுக்கு உங்களுக்கு யோசிக்க தெரியல்னு”

தமிழ் பேசியதை கண்ண்டுகொள்ளாமல் கௌதமிடம் சரணடைந்தான் ஆதி, “மச்சி நல்ல பிக்அப் லைன் சொல்லுடா”

சில நிமிடங்கள் யோசித்தவன், “உங்களுக்கு ரெக்கை இருக்கானு கேளு... அந்த புள்ள ஏன்னு கேக்கணும்... ஏஞ்சல்ஸ்க்கு விங்ஸ் இருக்கும்னு சொல்லுவாங்க அதான் கேட்டேன்னு சொல்லு... அவ்ளோ தா ஒரே பிளாட்”

“போடா பாடு... பிக்கப் லைன் ஒரு டாஸும் நீங்க சொல்லி கிழிக்க வேணாம்... பேச எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு சொல்லு... கால் பண்றதுக்கு பயமா இருக்கு”

“கால் பண்ணுங்க போன்ல பேலன்ஸ் இல்லனு சொல்லு... கால் பண்ணிடும்ல... இல்லனா மிஸ்ட் கால் குடு” – தமிழ்

“நான் ஒரு பிச்சை காரன்-னு படம் போட்டு காட்ட சொல்ற?”

“யார்ரா இவன் என்ன சொன்னாலும் இப்டி பேசுறான். ஆதி, லவ் பண்றதுன்னு முடிவாகிடுச்சுனா எதையும் பாக்க கூடாது யாரையும் பாக்க கூடாது. தைரியமா பேசு, முன்ன பின்ன தெரியாத பொன்னுட பேச போறதில்ல, தெரிஞ்ச பொண்ணு தான். போன்லயே பசக் பசக்-னு ரெண்டு முத்தத்தை குடு, செருப்பு வந்தாலும் சரி, அதே முத்தம் திருப்பி வந்தாலும் சரி சிரிச்சிட்டே வாங்கிக்கோ...” – கெளதம்

“அடிங்கு... இப்டி தான் என் தங்கச்சிய கரெக்ட் பண்ணியா நீ?” தமிழ் கௌதமிடம் எகிற, கெளதம் பதுங்க என சிறு சண்டை உதயமாக, வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் ஆதி இணைப்பை துண்டித்தான்.

மீண்டும் கைபேசியை எடுத்து ஒரு பாட்டை தேடினான் அந்த காதலன்.


நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே

“வாலி-னா வாலி தான்யா... என்னமா அனுபவிச்சு எழுதிருக்கான்... ரசிகன் யா நீ” மேகமே அவன் மோகமாய் மாறி நின்றது.


உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

“சரி கால் பண்ணுவோம்” மனதில் பச்சை குத்திய அந்த எண்ணிற்கு தைரியத்தை திரட்டிக்கொண்டு அழைத்தான்.


அழைப்பு சென்று சில நொடிகளில் அழைப்பை ஏற்றவள், “ஹலோ” என்கவும் இங்கு ஆதியின் இதழ்களில் அழகான புன்னகை.

அவளுக்கு பதில் கூறாமல் அந்த குரலிலே லைத்திருந்தவன் காதில் பின்னால் சில பல குரல் கேட்டது உணவை பற்றிய பேச்சுக்கள் தான். “ஹலோ” பதில் வராமல் போக மீண்டும் அழைத்தாள்.

தன்னுணர்வு பெற்றவன், “மான்குட்டி...”

உணர்ச்சிகள் குலைந்து வந்த அந்த குரலை உடனே அடையாளம் கொண்டதாய் புரை ஏற, “பாத்துடா மணி... போன்ல யாரு? சாப்டுட்டு அப்றம் பேசு” தெள்ளத்தெளிவாக அவள் தந்தையின் குரல் அவன் காதில் விழுந்தது.

“ஹே பாத்து ரோலக்ஸ்”

“பிரண்ட் ப்பா...” தந்தையின் விழிகளை சந்திக்காது இமை தாழ்த்தி உணவை வேகமாக உண்டுகொண்டிருக்க, “நான் உன் பிரண்ட்டா மேகா?” ஏகமாய் கேட்ட அவன் குரலில் உணவும் உள்ளே இறங்க மறுத்தது, ‘எத்தனை பெயர் ஒரே நிமிடத்தில்?’

தவித்தது பெண் மனம் தந்தையை எண்ணி, அவன் காதலை எண்ணி. “அம்மா போதும்... எனக்கு ஒரு அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்”

இருக்கையிலிருந்து எழ இருந்தவளை, “சாப்ட்டு எந்திரி ரோலக்ஸ்” என்று ஆதியும், “சாப்ட்டு போகலாம் மணி” என்று அவள் தந்தையும் ஒரே போல் கண்டிக்க வேறு வழி இல்லாமல் மொத்த உணவையும் உண்டுவிட்டே அவசர அவசரமாக, “குட் நைட் ப்பா... குட் நைட் மா” அறை நோக்கி ஓடினாள்.

தட தட என அவள் வேகமாக படியேறியது இங்கு வரை ஆதிக்கு தெளிவாக கேட்டது.

“ஹலோ...” இணைப்பில் இருக்கிறானா என்று உறுதி செய்ய அறை கதவை திறந்துகொண்டு கேள்வி எழுப்பினாள்.

“ம்ம்ம் இருக்கேன் இருக்கேன் பொறுமையா ரூம்க்கு போ” விண்வெளியை பார்த்து சிரிப்புடன் பேசினான்.

“என் நம்பர் உங்கள நான் மறக்க தான சொன்னேன்” சிறு பிள்ளையாய் சண்டை போட வந்தாள்.

“மணிமேகலை நம்பர் மறந்துபோச்சு ஆனா ஆதியோட மான்குட்டி நம்பர மறக்க முடியலையே....” ராகமாய் ஆதி இழுக்க இங்கு மணிமேகலையின் முகத்தில் சிரிப்பின் ஒளி.

“நான் கோவமா இருக்கேன்-னு சொன்னேன்ல”

“தாராளமா இரு... யாரு வேணாம்னு சொன்னது?”

“நான் கோவமா இருந்தா உங்களுக்கு கவலையே இல்ல?”

“ம்ம்ஹ்ம் இல்ல...” அவளை சீண்டுவதில் அவனுக்கு அலாதி இன்பம். மீண்டும் இன்று அவள் வீட்டிற்கு அருகில் வந்திருப்பானோ என்ற ஆர்வத்தில் ஜன்னலை திறந்து பார்க்க, இன்று அவன் அங்கு இல்லை.

“நீங்க இங்க வந்து என்ன வெளிய வர சொல்லுவீங்கல்ல? அப்ப நான் வர மாட்டேன்” ஏமாற்றத்தில் குரல் சோகமாய் வந்தது.

“என்ன வெளிய தேடுனியா ரோலக்ஸ்?”

உதட்டை கடித்து, “நான் ஏன் உங்கள தேடணும்? நான்... நான் பெட்ல ஒக்காந்துருக்கேன்... ஜன்னல் வழியா எட்டி எல்லாம் பாக்கல” அவள் உண்மையில் வாய் விட்டு ஆதி சிரித்துவிட அப்பொழுது தான் தான் பேசியதன் பொருள் உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள் மணிமேகலை.

“சரி என்ன நீ எதிர் பாக்கல... மீட் பண்ணலாமா?” இதை கேட்கவே தாங்கிக்கொண்டிருந்தவன் சிரிப்போடு கேட்டுவிட்டான்.

“ம்ம்ஹ்ம்ம் அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. நீங்க கால் பண்ணியே பேசுங்க”

“ஹே இத்தனை நாள் மீட் பண்ணலயா நாம? இன்னைக்கு என்ன புதுசா பயப்புடுற?” – ஆதி

“இத்தனை நாள் வேற, இனி பேச போறது வேற ஆதி... எனக்கு பயமா இருக்கு. அப்பாக்கு தெரிஞ்சு என்கிட்டே கேள்வி கேட்டா நான் உண்மைய ஒளறிடுவேன்”

“நல்லதா போச்சு... மொட்டை கடுதாசு ஒன்னு எழுதி போடுறேன்... உங்க பொண்ணு ஒரு பையன் கூட நைட் எல்லாம் பேசுதுன்னு... அப்படியாவது உன் அப்பாக்கு உண்மை தெரிஞ்சு வேகமா கல்யாணம் பண்ணி வைக்கட்டும்” ஒரே நாளில் திருமணம் வரை சென்றிருந்தான் ஆதி.

“ம்ம்ம் வைப்பாங்க வைப்பாங்க... கன்னத்துலயே ரெண்டு வைப்பாங்க” பெண் மென்மையாய் சிரிக்க உள்ளுக்குள் அதே சிரிப்பே புத்துணர்ச்சியை கொடுத்தது.

“எனக்கு தங்கச்சி மட்டும் தான் மேகா” அவன் இதழ்களில் இருந்த புன்னகை மறைந்து சாதாரணமாக மாறியது.

“தெரியும். உதய் மாமா வீட்டுல சின்ன வயசுல உங்கள பாத்துருக்கேன்” அவன் சோகம் அறிந்து பேசினாள்.

“அப்ப
என்ன முதல் நாள் மீட் பண்ணப்பவே நான் யாருனு உனக்கு தெரியுமா?”

“இல்ல... அப்ப நியாபகம் இல்ல... அன்னைக்கு உங்க பிரண்ட்ஸ் கூட நீங்க வந்திங்கள்ல அன்னைக்கு தான் கண்டு புடிச்சேன்”

“நான் உன்ன இது வர உதய் வீட்டுல பாத்தது இல்லையே”
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

“நான் ரொம்ப சின்ன பொண்ணு பல்லவி, திவ்யா கூட மட்டும் தான் இருப்பேன்... பாத்துருக்கேன் ஆனா உங்க முகம் கூட நியாபகம் இல்ல, அடிக்கடி உதய் மாமா வீட்டுல குரூப் போட்டோல பாத்துருக்கேன்”

“ம்ம்ம் அப்ப எல்லாம் மொபைல் இருக்காதுல, அதுனால நெனச்சா சேரும் சகதியுமா கூட ஸ்டூடியோல போட்டோ எடுத்துட்டு தான் வீட்டுக்கு போவோம்” அன்றைய நாட்களின் நினைவில் சிரித்தான்.

“நீங்க ஏன் இப்ப உதய் மாமாகிட்ட பேசுறது இல்ல...”

“எப்ப பாரு என் லஞ்ச்ச புடிங்கி புடிங்கி சாப்பிட ஆரமிச்சான்... அப்டியே சண்டை பெருசாகி பெருசாகி பேசுறது இல்ல” அவளை சிறுகுழந்தையாகவே நினைத்துவிட்டால் போல், கதையை மாற்றியிருந்தான்.

“ம்ம்ஹ்ம் சொல்லுங்க ஆதி” சிணுங்கினாள்.

ஆனால் எப்பொழுதும் அவனை பாதிக்கும் அந்த சிணுங்கல் இந்த முறை பாதிக்கவில்லை, “நான் உண்மைய சொன்னா நீ என்ன விட்டுட்டு போய்டுவ மேகா”

“அதெல்லாம் போக மாட்டேன்... என்னமோ கொலை பண்ண மாதிரி பேசுறீங்க”

நீண்ட மௌனத்திற்கு பிறகு வாயை திறந்தவன் “ஏற்கனவே மொத்த சொந்தத்தையும் இழந்துட்டு நிக்கிறேன் மேகா, புதுசா கெடச்சிருக்க ஒரே ஒரு சொந்தத்த விட முடியாது. உன் விசயத்துல ரொம்ப சுயநலவாதி நான், புரிஞ்சுக்கோ” உணர்வுகளின் பிடியில் இருந்த ஆதியை என்ன கூறி உண்மையை வாங்குவது என்று தெரியாமல் அந்த பெண் தத்தளித்தாள்.

“புரிஞ்சது, ஆனா இதுக்கு பதில் சொல்லுங்க. அப்பாகிட்ட என்ன சொல்லி பேசுவீங்க?” தன் பக்கம் அவன் மொத்த கவனத்தையும் திருப்பினான்.

“எத பத்தி பேசணும்?” – ஆதி

“எத பாத்தியா? நம்மள பத்தி தான் கேக்குறேன்... விளையாடாதீங்க ஆதி”

“நம்ம பத்தி பேச என்ன இருக்கு மேகா?”

“அது தான் அன்னைக்கு பார்க்ல பேசுனோம்ல”

“பேசுனோமா? ஹாஹா... நீ எங்க பேசின? நான் மட்டும் தான் பேசுனேன். நீ தான் கோவமா இருக்கேன் கோவமா இருக்கேன்னு கிளம்பிட்டியே”

தன்னை சீண்டியவனை மனதிலே வசைபாடி நகத்தை கடித்துக்கொண்டே மௌனமாய் அமர்ந்திருக்க, “இருக்கியா மேகா?” அழைத்தான் ஆதி.

“ம்ம்ம்? ம்ம்ம்ம்...”

அவள் முக வாட்டத்தை படித்தவன் சிரிப்புடன், “சரி இப்ப சொல்லு என்னோட வானதுக்குள்ள வர இந்த மேகாக்கு சம்மதமா?”

மென்மையான புன்னகையுடன், “என்னோட அப்பா மாதிரி பாத்துக்குவீங்களா?”

“ஹே உன் அப்பா மாதிரி பாத்துக்கணும்னா உன் அப்பா கூட தான் இருக்கனும். அந்த ஜிமிக்கி ஆட்டத்துக்கு மயங்கி நிக்கிற ஆதி உன்ன எப்டி, அணு அணுவா ரசிப்பானோ அந்த ஆதி மாதிரி பாத்துக்குவேன்... போதுமா?”

வெட்கப் புன்னையை இப்பொழுது மறைக்க தான் தேவை இல்லையே, வற்றாத புன்னகையுடன், “நான் போன் கட் பண்ண போறேன்”

“பதில் சொல்லல மான்குட்டி நீ...” ஆதியின் குரலில் சோகமும் ஏக்கமும் போட்டி போட்டு நின்றது.

“அப்பா சம்மதிக்கலனா என்ன அப்டியே விட்டுட மாட்டீங்கல்ல?” தந்தையும் வேண்டும் நீயும் வேண்டும் ஆனால் இருவரில் எவரையும் இழக்க நான் தயாராக இல்லை என்ற அவள் சிந்தனையை புரிந்துகொண்டான். அவள் தன்னிடம் கேட்கும் முதல் ஆசை, நிறைவேற்றாமல் விடுவானா இந்த காதலன்?

“நீயே வேணாம்னு சொன்னாலும் இனி பின் வாங்க மாட்டேன் மேகா...” கண்ணீரோடு சிரிப்பும் வந்து அவளை இதமாக்கியது.

“சரி தூங்கு நாளைக்கு பேசலாம்” அவளிடம் மேலும் பேசினால் சென்று கையேடு அழைத்து வந்துவிடுவோமோ என்ற பயத்தில் ஆதி கூற, அவளுக்கும் இந்த இனிய வார்த்தைகளோடு உறங்க மனம் ஆசைகொள்ள, “பை” என்று இணைப்பை துண்டித்தனர்.

சொப்பனமா என்ற சந்தேகத்தில் தன்னையே கிள்ளி பார்க்க தோன்றியது ஆதிக்கு, அப்படி ஒரு அழகிய தருணம் அது.


மணிமேகலையின் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தவனின் மூளையில் காரணமே இல்லாமல் உதய்யின் வார்த்தைகள் வந்து ஒலித்தது, ‘முட்டி மோதி தான் வழிய கண்டுபுடிக்க முடியும், ஒரே வழி மட்டும் இல்ல பல வழிகள் இருக்கு, முன்னாடி காயம் தந்த பழைய வழிகள் இப்ப நம்பிக்கையும் தரும். அவசரப்படாம நிதானமா யோசி’



“ஆதவா எத்தனை தடவ தான்டா நானும் உன்கிட்ட கேட்டுட்டேஇருக்குறது... அம்மாக்காகசரின்னுசொல்லுப்பா. ரொம்ப நல்ல இடம். பொண்ணு லட்சணமா அழகா இருக்கா, நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுடா”

“கேக்க எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா நான் இன்னும் பொண்ணபாக்கலையே”

மகன் இழுக்க, “காலைல தான அப்பா உனக்கு போட்டோ அனுப்புனாங்க”

“அப்டியா? லைன்ல இருங்க பாக்கறேன்”

பார்ப்பது போல் நடித்தவன், “சாரி மம்மி எனக்கு புடிக்கல பொண்ண”

“இப்டியே பேசிட்டே இரு உனக்கு பல்லி மாதிரி ஒரு பொண்ணு தான் வர போகுது. உங்க அப்பா சொல்றதையும் கேக்குறது இல்ல, நான் சொல்றதையும் கேக்குறது இல்ல. சரி மனசுல யாரையோ நினைச்சு தான் இப்டி பேசுறேன்னு கேட்டா அதுக்கும் பதில் இல்ல... என்ன தான்டா நாங்க எடுத்துக்க உன்ன. காலம் முழுசும் கல்யாணம் பண்ணாமல் சாமியாரா இருக்க போறியா?”

“இருந்துட்டா போச்சு” கூலாக மகன் பதில் கூற கோவத்தில் ஆதவனின் அன்னை இணைப்பைத் துண்டித்திருந்தார்.

ஆனால் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நிம்மதியாக கைப்பேசியை பாக்கெட்டில் வைத்தவன் மார்புக்குக் குறுக்கே கைகளைக் காட்டிக்கொண்டே தனக்கு முன்னாள் இருக்கும் அவன் மனம் கவர்ந்த சஹானாவைப் பார்த்துச் சிரிப்புடன் நின்றான்.

கடந்த அரை மணி நேரமாக இதுவே நடக்கின்றது. கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும் சஹானாவிற்கு வகுப்புகள் அதிகம் இல்லாது போக, மற்ற நேரங்களில் கல்லூரி வளாகத்தில் தோழிகள், தோழர்களுடன் ஏதேனும் மரத்தின் நிழல் பார்த்து அரட்டை அடிப்பதே வழக்கமாகி இருந்தது.

இன்றும் அது போலவே அமர்ந்திருக்க ஒருவன், “சஹானா யார் அது உன்னையே அப்ப இருந்து பாத்துட்டேஇருக்காங்க?” சஹானா திரும்பிப் பார்க்க அங்குக் கண்களில் கூலர்ஸ் அணிந்து தன்னுடைய வாகனத்தில் சாய்ந்து நின்றிருந்தான் ஆதவன்.

அவனைப் பார்த்து ஆசிரியம் பயம் எல்லாம் வந்தது, இத்தனை நாட்கள் கல்லூரிக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் அவன் வண்டியைத் தூரத்திலிருந்தே கண்டுகொள்வாள், அப்பொழுதும் சகோதரன் கண்ணில் சிக்கி விடக் கூடாதென்று பயம் இருக்கும் ஆனால் அவன் அமைதி காப்பது ஒரு வித நிம்மதியைத் தந்தாலும் இன்று இவ்வளவு தைரியமாகக் கல்லூரி உள்ளே வரை அவளைக் காணப் பிடிவாதத்துடன் இருப்பதைப் பார்த்து பயம் மேலும் அதிகரித்தது.

“ம்ம்ம் தெரியும். நான் போய் பேசிட்டுவர்றேன்”

பயத்துடன் சஹானா பேச, “ஏன் இப்டிபயப்புடுற? ஏதாவது பிரச்சனையா?” என்றான் ஒரு நண்பன்.

“இல்ல இல்ல... அப்டிலாம் இல்ல. நான் வந்துர்றேன்”

ஆதவனை நோக்கி தயக்கத்துடன் நடந்தவள் அவன் அருகே சென்று நிற்காமல் சற்று தொலைவில் நின்று அவன் பேசுவதற்காகக் காத்திருந்தாள். ஆதவனுக்கு அவள் இவ்வளவு தொலைவில் நிற்பது பிடிக்காமல் அவனே சென்று அவள் கையை பிடித்து அருகில் இழுக்க, பதறி அவன் கையை உதறியவள் பயத்துடன் ஆதவனின் விழிகளை ஏறிட்டாள்.

அவள் பயம் அவனுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்க, “ப்ச் பயப்புடாத சஹானா நீயா இங்கையேநின்னுக்கோ, இல்ல காலேஜ் ஸ்கூலுன்னு பாக்க மாட்டேன். ஒட்டி உரசி நின்னுடுவேன்”

பயத்துடன் அவன் பிடித்து நிறுத்திய அதே இடத்தில் வந்து நின்றவள் மண்ணை பார்த்தே நிற்க, அவளிடம் பேசாமல் தானும் அப்படியே பல நிமிடங்கள் ஆதவன் நிற்க, அவளும் பேசவில்லை அவனும் பேச முயலவில்லை.

இருவரின் அமைதியைக் கலைத்தது ஆதவனின் அன்னை குரல் அழைப்பு தான். அன்னையிடம் பேசிவிட்டு அதே சிரிப்போடு ஆதவன் நிற்க, தான் அணிந்திருந்த துப்பட்டாவைக் கிழிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருந்தாள் சஹானா.

“இப்டி எல்லாம் காலேஜ்ல உள்ள வராதீங்க”

“ம்ம்ம்ம்”

“டெய்லி காலேஜ் வெளிய நிக்காதிங்க”

சிரித்துக்கொண்டே அதற்கும், “ம்ம்ம்ம்” என்றான்.

“இப்டி எல்லாம் கைய புடிச்சு இழுக்காதீங்க... ப்ளீஸ்”

“ம்ம்ம்ம்”

“என்ன தேடி வராதீங்க, அன்னைக்கு வீட்டுலபேசுன மாதிரி இன்னொரு தடவ பேசாதீங்க” அடுக்கடுக்காக கட்டளைகளைப்பிறப்பித்தவளைச் சிறிதும் சட்டை செய்யவில்லை ஆதவன்.


“ம்ம்ம்ம்”


“வீட்டுல பாக்குற பொண்ண ஓகே சொல்லிடுங்க” பொறுக்க மாட்டாமல் கேள்வி கேட்டாள்.

“ம்ம்ம் சரி” விழுக்கென அவனைத் தலை தூக்கிப் பார்த்தவளுக்குக் குறும்பாகச் சிரித்துக்கொண்டிருந்த ஆதவனின் முகம் அவள் மனதை வாட்டியது.

“வண்டில ஏறி ஒக்காருரியா?” என்றான். துரிதமாகத் தலையை மாட்டவே மாட்டேன் என்று உறுதியாக ஆட்டினாள்.

“இங்க பாரு பேபி டால், உன்ன தூக்கி உள்ள ஒக்கார வைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, உன் மனசு, உன் பீலிங்ஸ் ஹுர்ட் ஆக கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன். வர்றியா?” விழிகளில் நீருடன் ஏறி வண்டியில் அமர்ந்தவள் நண்பர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவனைச் சுத்தமாகத் தவிர்த்தாள்.

ஆதவனின் மெர்சிடிஸ் மேபேச் எஸ்-கிளாஸ் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் செல்ல சஹானாவிற்குக் கண்களில் அடக்க முடியாமல் நீர் வந்துகொண்டே இருந்தது. என்ன தான் சகோதரனின் நண்பன் என்றாலும் ஆதவன் சஹானாவிற்கு எப்பொழுதுமே தூரத்தில் நிற்பவன் மட்டுமே.

இன்று அவனையே நம்பி இவ்வளவு தூரம் தனியாகச் செல்வது பயமாக இருந்தாலும், தந்தையாய் வளர்த்த சகோதரனுக்குத் துரோகம் செய்யும் எண்ணமும் வந்து பெண்ணை மேலும் அழுகை வைத்தது. அதைக் கவனித்தும் பொறுமையாய் வாகனத்தைச் செலுத்தியவன் தனியாருக்குச் சொந்தமான ஒரு பிரைவேட்பீச் இருக்கும் இடத்தில் காரை நிறுத்தி அவள் பக்கம் திரும்பினான்.

“இப்ப எதுக்கு அழகுற சஹானா?” இல்லை எனத் தலையை ஆட்டினாலும் அவனை மட்டும் பார்க்க மறுத்தது அவள் கண்கள்.

“என்ன பாத்து அத சொல்லு” என்றான். அவன் கண்ணில் இருந்த காதலையும் ஏக்கத்தையும் பார்த்த பேதைக்கு அவனிடம் எதற்கும் மறுத்துப் பேச மனம் வரவில்லை.

“என்ன காலேஜ்ல விட்டுடுங்க... ப்ளீஸ். எனக்கு மூச்சு முட்டுது” அவளின் கண்ணீரும் உதாசீனமும் பன்னிரண்டு வருடங்களாய் காதலை வளர்த்தவனுக்கு சாட்டையால் அடித்தது போன்ற வலி.

“இப்ப எதுக்குடி இப்டி அழகுற? உன்ன என்ன அசிங்கமா பாத்தேனா இல்ல தப்பா தான் பேசுனேனா? ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லடி பதினஞ்சு வருஷம் மேல பைத்தியமா லவ் பண்ணிருக்கேன். இத்தனை வருஷம் தள்ளி இருந்துட்டேன், இப்பவேற ஒருத்தன் உன்ன வந்து சொந்தம் கொண்டாடுறத வேடிக்கை எல்லாம் பாக்க முடியாது.

ஒருத்தன் பைத்தியம் மாதிரி பகல், நைட்-னு உன் பின்னாடியே சுத்திட்டுஇருக்கான்னுஓவரா தான் துள்ளிட்டு இருக்க. இதுல கண்ணீர் வேற, என்னமோ இவ மேல கண்ட இடத்துல கை வச்ச மாதிரி துடிக்கிறா. புடிக்கலைனா புடிக்கலடா முட்டா பயலே-னு சொல்லிட்டு போடி. என்னமோ ரேபிஸ்ட் மாதிரி பக்கத்துல வரப்ப எல்லாம் இந்த துடி துடிக்கிற”

கோவத்தில் அவன் கத்தி பேசிய வார்த்தைகள், அந்த வாகனதுள்ளே இன்னும் அதிக ஒலியுடன் ஒலித்தது. வேகமாகக் காரை விட்டு இறங்கி அவள் பக்க கதவைத் திறந்தவன் அவள் கையை பிடித்து இழுத்து கண்ணில் பட்ட முதல் ஆட்டோவை நிறுத்தி அவள் கல்லூரியில் விடுமாறு கூறி சஹானாவைத் திரும்பியும் பார்க்காமல் கடற்கரையை நோக்கிச் சென்றுவிட்டான்.

மனம் ஆறவே இல்லை ஆதவனுக்கு, எத்தனை ஆசையாய் தினமும் அவளைக் காணச் செல்கிறான், ஆசையாய்ப் பார்க்காவிடினும் பயத்துடன் பார்க்காமலாவது இருக்கலாம் அல்லவா? எத்தனை பெண்களைக் கடந்து வந்தும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பார்த்த அவளின் முகம் அல்லாவா முதலில் நினைவில் வந்து நிற்கும்.

அந்த ஒரு காரணத்திற்கே இத்தனை ஆண்டுகள் எந்த பெண்ணையும் மனதில் நினைக்காமல் வீட்டில் அத்தனை பேச்சுகளையும் வாங்கி சிரிப்புடன் நிற்கிறான், இது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை, அவனின் ஒரு விறல் சீண்டல் தான் அவளை எரித்தது போல் துடிக்கிறாள்...

என்னென்னமோ எண்ணங்கள் மனதில் ஓட வலித்த இதயத்தைச் சமன்படுத்தி காரை நோக்கிச் சென்றவனுக்கு ஆசிரியமாக இருந்தது வாகனத்தினுள் அமர்ந்து தலையை டாஸ்போர்டில்வைத்துப் படுத்திருந்த சஹானாவைப் பார்த்ததும்.

சில பல மூச்சுகளை இழுத்து விட்டவன் கடல் காற்றில் கலைத்திருந்த சிகையைப் பல முறை சரி செய்து அமைதியாய் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தான். ஆதவன் உள்ளே வந்து அமர்ந்த சத்தம் கேட்டவுடன் படுத்திருந்தவள் எழுந்து முகத்தை துடைத்து வெளியில் பார்க்க தனக்கு முன்னே இருந்த கண்ணாடியை திருப்பி அவள் முகம் பார்த்தான்.

அந்த பால் மேனியில் மூக்கும் கண்களும் அழுது அழுது சிவந்திருந்தது. முகத்தை வாரி அவள் அழுகையை நிறுத்த பேராசை எழுந்தாலும் அவளே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தான். சில நிமிடங்களில் சஹானாவின் அழுகை குறைய ஆதவன் பக்கம் திரும்பினாள்.

அவனோ எல்லையற்ற அந்த கடலை வெறித்து பார்த்திருந்தான், “சாத்தியமா உங்கள நான் எப்பயும் தப்பா நினைச்சது இல்ல, அந்த எண்ணம் இருந்தா அன்னைக்கு உங்களுக்கு கால் பண்ணிருக்க மாட்டேன், உங்ககூட தனியா வண்டிலயும் வந்துருக்க மாட்டேன்” ஊமையாய் அமர்ந்திருந்தான் அவள் பேச்சை கேட்டுக்கொண்டு.

“எனக்கு என் அண்ணன் தான் எல்லாமே” அந்த ஒரு வாக்கியத்தை அவளால் தெளிவாக பேச முடியவில்லை குரல் தழுதழுத்தது.

“உங்க கூட அண்ணன் உறவை தவிர வேற மாதிரி நினைச்சு பேசுறது நான் என் அண்ணனுக்கு பண்ற தப்பு இல்லையா?” விசும்பி விசும்பி அவள் கேள்வி கேட்க அவளுடைய எண்ணம் இப்பொழுது தான் அவனுக்கு முழுதாய் பிடிபட்டது, ஆனாலும் முதல் முறை மனம் திறந்து பேசுபவளை பேச விட்டான்.

“உங்க மேல விருப்பம் இருக்கா, விருப்பம் இல்லையா? இதெல்லாம் சரி வருமா, நீங்க பண்றது சரியா? எதுவும் எனக்கு சுத்தமா தெரியல. குழப்பம் மட்டும் தான் இருக்கு. அண்ணாக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவான். இதையும் தாண்டி உங்களுக்கும் எங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்குற தூரம். நீங்க பணம், புகழ், பேரோட வாழுறவங்க. அது எதுவுமே எங்ககிட்ட இல்ல. எந்த விதத்துலயும் நான் உங்களுக்கு சரி வரமாட்டேன்... ப்ளீஸ் விட்ருங்க நீங்களும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதீங்க உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்”

கெஞ்சும் விழிகளோடு கையையும் இணைத்து கூப்பி வேண்டினாள். கெஞ்சி நின்ற அவள் கைகளை பற்றியவன் அவளை நெருங்கி அமர, திரளாக வழிந்த கண்ணீர் கூட சஹானாவிற்கு சட்டென நின்றது. மிரட்சியுடன் தன்னை பார்த்த விழிகளை பார்த்து,

“காசு பணம் புகழ் தான் வேணும்னா இத்தனை வருஷம் உன்னையே நினைச்சு காத்துட்டு இருக்க மாட்டேன், இந்நேரம் என் அம்மா பாத்த பொண்ணுங்கள்ல இருவது முப்பது பேர கல்யாணம் பண்ணிருப்பேன்”

சிறு புன்னகையுடன் மேலும் தொடர்ந்தான், “ஆனா எனக்கோ என் வீட்டுல இருக்க யாருக்கும் அது தேவையில்லை பேபி டால். என் மனசுக்கு புடிச்ச, என்ன புரிஞ்சு எனக்காக வாழுற ஒரு பொண்ண தான் தேடிட்டு இருக்கோம். இப்ப கூட என் அம்மா முன்னாடி உன்ன கூட்டிட்டு போய் நிறுத்தி, இவ தான் என் பொண்டாட்டின்னு சொன்னா அடுத்த முகுர்த்தத்துலயே சிரிச்ச முகத்தோட நம்ம கல்யாணம் நடக்கும். சோ இப்ப உன்னோட ஒரு பிரச்சனை முடிஞ்சது... அடுத்..”

ஆதவன் மேலும் பேச போக, “இல்ல முடியல” அவசரமாய் இடை வந்தாள்.

“சரி சொல்லு”

“கல்யாணம் ஆகுற வர நல்லா தான் இருக்கும், அதுக்கு அப்றம் நீங்க வந்து போகுற மாதிரி எங்க வீடு பெருசு இல்ல, பத்துக்கு பத்து பெட் ரூம் தான். உங்க அம்மா அப்பா வந்தா எங்க வீட்டுல சோபா இருக்காது, ச்சார் தான் இருக்கும்... என் அண்ணனால உங்க சபை நிறைய சீர் செய்ய முடியாது... அப்டி கம்மியா செஞ்சா என் அண்ணனை எல்லாரும் இளக்காரமா பாப்பாங்க. வேணாம்... என்னால என் அண்ணன் எங்கையும் அசிங்க பட கூடாது”

“இப்ப யாரு உன் அண்ணன் கிட்ட சீர் கேட்டது?”

“பேசுறதுக்கு இப்ப எல்லாமே நல்லா இருக்கும்... ஏன் நாங்க ஏழைங்கனு பரிதாபப்பட்டு சீர் வேணாம்னு சொல்றிங்களா?”

அவளை கோவமாக பார்த்தவன், “என் மேல சாத்தியமா சொல்றேன், ‘உனக்கு வர்ற பொண்ணுகிட்ட நாம ஒரு பொட்டு சீர் கேக்க கூடாது ஆதவா’-னு என் அம்மா சொல்லுவாங்க” இன்னும் அவனை நம்பாமல் அவன் கைகளுக்குள் கட்டுண்டு கிடந்த தன் கையை சஹானா உருவினாள்.

உடனே கைபேசியை எடுத்து அவன் அன்னைக்கு அழைத்தவன் அதை ஸ்பீக்கரில் போட்டான், “மா... எனக்கு வர்ற பொண்ணுகிட்ட எவ்ளோ வரதட்சணை கேப்பிங்க?”

“ஒரு ரூபா வாங்க வேணாம்னு எத்தனை தடவ சொல்ல, கட் பண்ணு உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்” அவர் அழைப்பை துண்டிக்க இங்கு சஹானாவை ஆதவன் பார்க்க அவளோ தலையை திருப்பிக்கொண்டாள்.

“ம்ம் இப்ப அடுத்ததுக்கு வருவோம். ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லு... நான் இந்நேரம் உன்னோட அண்ணா பிரண்ட்டா இல்லாம இருந்தா நீ என்ன லவ் பன்னிருப்பியா? லவ் கூட வேணாம் புடிச்சிருக்கா என்ன?” அவன் கண்களை பார்த்து விழிகளில் நீருடன், “தெரியல” என்றாள் சின்ன குரலில்.

அவள் பதிலில் சிரித்தவன், “இல்லனு சொல்லலையே அதுவே போதும். உன் அண்ணன்னுக்கு நான் உன் காலேஜ் முன்னாடி நிக்கிறது எல்லாம் தெரியும்”

“என்னது” அழுகை சென்று வாயை பிளந்து ஆச்சிரியம் அடைந்தாள்.

“ஆமா அவன் என்ன பாத்துட்டு தான் இருக்கான் இந்த ஒரு வாரம். ஏற்கனவே ஸ்கூல் படிக்கிறப்பயே அவனுக்கு என் மேல டவுட் இருந்துச்சு இந்த வாரம் கன்பார்ம் பண்ணிருப்பான்”

“அண்ணா ரொம்ப கஷ்ட பட்டுருக்கும்ல? ஏன் உங்க பிரண்ட்டுக்கு துரோகம் பண்றீங்க?”

“டால், உன் அண்ணன பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவனுக்கு கோவமோ வருத்தமோ இருந்தா இன்னேரம் என்ன உண்டு இல்லைனு பண்ணிருப்பான். அப்றம் லாஸ்ட்... உன் வீடு குட்டி, உன் ரூம் குட்டின்னு பேசுனியே, ரூம் குட்டியா இருந்தா தானே உன்ன என் பக்கத்துலயே வச்சிட்டு ஒட்டி நிக்க முடியும்...?”

முகத்தை சுருக்கி, “இப்டி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்...” பலவீனமாய் இருந்த பெண்ணை ஒரே இழுவையில் அவள் இடையை பிடித்து தூக்கி தனக்கு மடியில் கிடத்தினான்,

மிரண்டு விழித்த அவள் விழிகளை பார்த்து, “இங்க பாருடி... உனக்கு இந்த ஆதவன் மட்டும் தான். வேற ஒருத்தன் பக்கத்துல கூட வர விட மாட்டேன், அத நல்லா மனசுல பதிய வச்சுக்கோ. அப்றம் இப்டி முகத்தை சுளிக்கிறது, தியாகம் பண்ற மாதிரி பேசுறது எல்லாம் பண்ணிட்டு இருந்தன்னு வை...”

ஆணின் கைகளில் இருந்து விடுபட போராடி கொண்டிந்தவளை வாகாக இன்னும் நெருக்கமாக அமர வைத்து, “ஏற்கனவே எப்படா-னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தூக்கிட்டு போய் இந்த சங்கு கழுத்துல தாலி கட்டிடுவேன்”

அவள் கண்களை பார்த்து சொன்னவனின் விழிகள் அவள் கழுத்துக்கு மோகத்துடன் இடம் மாற யோசிக்காமல் மெதுவாக குனிந்து அவனை உருத்திக்கொண்டிருந்த அந்த மெல்லிய தங்க சங்கிலியின் மேல் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தான். ஆதவனின் நெருக்கத்தில் திக்குமுக்காடி போனவள் அவன் இதழ் ஸ்பரிசத்தில் அவளையே அறியாமல் உடல் விறைக்க அடுத்த நொடி மொத்தமும் தளர்வுற்றது அவள் உடல்.

அவள் உடல்மொழியை படித்தவன் அப்படியே அவள் நெற்றி முட்டி, “பைத்தியமா இருக்கேன் சஹானா உன் மேல, இத்தனை நாள் விட்டு வச்சது எல்லாம் மொத்தமா குடுக்கணும் போல இருக்கு. ப்ளீஸ் டீ எத்தனை வருஷம் வேணாலும் டைம் எடுத்துக்கோ ஆனா என்கி
ட்ட வந்துடு... வந்துடுவல...?” பிறைநுதலில் இதழ் பதித்து ஏக்கத்தோடு கேட்டான்.

அவன் காதலிலும், இடையில் இருந்த அவன் விரல்களாலும் மொத்தமும் மயங்கி அவள் பேச்சை கேட்காமலே தலை தானாக சரியென ஆடியது.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
நீரஜ் நீ என்ன plan போட்டாலும் உதய் சும்மா இருக்க மாட்டான் தப்பான வழில போகாத அப்படி போய் தான் உதயா ஆழிக்கனும் நினைத்த நீ தா problem face பண்ணனும்😏😏😏
ஆதி உன்னோட frds ரொம்ப🤪 நல்லவ தான் நீ call pannathum என்ன கேக்குற நல்ல மொக்க போடுற தமிழ் கௌதம் ஆதி டேய் ஆதி இதோ தமிழ் கௌதம் சண்டை போட விட்டான் சிறப்பு😂😂😂 ரொமான்டிக் தான் ரோலாஸ் கூட உன்னோட மான் குட்டி உனக்குதான் 💕💕
ஆதவன் நீ அதுகும் மேல சஹானா பேபி டால் யா அவ பாவ டா அண்ணா ku தெரியும் ஷாக் ஆகுற இருத்தலும் நீ பிள்ளையா ரொம்ப மிரடுற உன்னோட பேபி டால் உனக்கு மட்டும் தான்💗💗
 
Messages
37
Reaction score
4
Points
8
நீரஜ் நீ என்ன plan போட்டாலும் உதய் சும்மா இருக்க மாட்டான் தப்பான வழில போகாத அப்படி போய் தான் உதயா ஆழிக்கனும் நினைத்த நீ தா problem face பண்ணனும்😏😏😏
ஆதி உன்னோட frds ரொம்ப🤪 நல்லவ தான் நீ call pannathum என்ன கேக்குற நல்ல மொக்க போடுற தமிழ் கௌதம் ஆதி டேய் ஆதி இதோ தமிழ் கௌதம் சண்டை போட விட்டான் சிறப்பு😂😂😂 ரொமான்டிக் தான் ரோலாஸ் கூட உன்னோட மான் குட்டி உனக்குதான் 💕💕
ஆதவன் நீ அதுகும் மேல சஹானா பேபி டால் யா அவ பாவ டா அண்ணா ku தெரியும் ஷாக் ஆகுற இருத்தலும் நீ பிள்ளையா ரொம்ப மிரடுற உன்னோட பேபி டால் உனக்கு மட்டும் தான்💗💗
elaraiyum epdi pair ah crct ah serthu vakkalam?? thapache
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Sister ella pair crt ya serthu vaika romantic pair la puruju vidurathiga thappalam illa 🤭🤭🤭
 
Top