• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 21 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap – 21

இன்முகமாய் துரு துருவென்று வேலையைத் தானே ஓடி ஓடிச் செய்துகொண்டிருந்த உதயின் முகத்திலிருந்த வற்றாத சிரிப்பைக் கண்கள் இடுக்க அவனைக் கடக்கும் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் யாழினி.

மாலை மூன்று மணி வரை அவன் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு, தான் செய்த ஒரு முக்கியமான தவற்றைக் கூட கண்டுகொள்ளாமல் அமைதியாக, “நெறையா மிஸ்ட்கேஸ் இருக்கு. சரி நானே பாத்துக்குறேன் நீங்க போங்க” அவளைத் துரத்த முயன்ற பொழுது யாழினிக்கு இருந்த அத்தனை பொறுமையும் காற்றில் பறந்தது.

“நேத்து தான சார் டீல் பேசுனோம் போங்க வாங்க இல்ல போ வா-னு இப்ப மறுபடியும் அங்கையே வந்து நிக்கிறிங்க?” அவன் மரியாதையான பேச்சு ஏதோ தன்னை அவனிடமிருந்து தன்னை பல மைல் தள்ளி நிறுத்துவது போன்று இருந்தது.

ஒரு கரத்தை காகிதங்கள் அடங்கிய பைலில் இருந்து கண்களை அகற்றியவன் தன்னையே சந்தேகமாய் பார்த்து யாழினியின் விழிகளை ஆராய்ந்து அவளைச் சீண்டும் பொருட்டு, “டீலா?” என்றான் எதுவும் தெரியாதது போல்.

யாழினி தலையை மேலும் கீழும் ஆட்டினாள், “நாமளா?” என்றான் மீண்டும்.

முகத்தை உர்ரென்று வைத்து மீண்டும் மேலும் கீழும் தலையை ஆட்டி, “ஆமா சார் வேற ஒருத்தன்கிட்ட பேசுன டீல உங்ககிட்ட எதுக்கு நான் சொல்ல போறேன்?”

தன் முன் அமர்த்திருப்பவன் தன்னுடைய முதலாளி என்கின்ற எண்ணம் நேற்றே முக்கால்வாசி மறைந்திருந்தது யாழினிக்கு. அது உதயின் செயல்களாலா இல்லை அவனிடம் சரண் புகுந்திருக்கும் தன்னுடைய இதயத்தின் செயலா என்ற சந்தேகத்திற்குப் பதில் அவளுக்கே தெரியாமல் போனது. தன் முன் நிற்பவன் தன் சிறு இதயத்தில் மெல்ல மெல்ல தன் தடத்தை அழுத்தப் பதிக்கும் ஒருவனாக மட்டுமே தெரிந்தான்.

“நான் அப்டி எதுவும் சொன்ன மாதிரி ஞாபகம் இல்லையே” தோளைக் குலுக்கி அனைத்தையும் மறந்தவனைப் பார்க்க கோவம் மட்டுமே வந்தது, “போடா லூசு” என்று கூட திட்ட நா துடித்தது.

“ஓஓ உங்களுக்கு எவ்ளோ வேலை இருக்கு மறந்துட்டீங்களா?” மனம் ஆறாமல் கேள்வி கேட்டவள், “ஆமா மறந்துருப்பீங்க” தன் கேள்விக்கு தானே பதில் கூறியவள், “நான் வர்றேன் சார்” என்று வேகமாக வெளியில் சென்றுவிட்டாள்.

உதயின் அறையை விட்டு வந்தவள் நேராகச் சென்றது ஜெயன் அறைக்குத் தான்.

“கன்ஸ் எல்லாம் யூஸ் பண்ண வேணாம் அல்போஸ். ப்ராடக்ட் கைக்கு வரலைனா அதுக்கு அப்றம் பாத்துக்கலாம்...”

துப்பாக்கி எல்லாம் உதய்யிடம் வேலைக்குச் சேர்வதற்கு முன்னால் கேட்டிருந்தால் நிச்சயம் மயங்கிச் சரிந்திருப்பாள் ஆனால் இப்பொழுது தண்ணீரைக் குடிப்பது போல் தான் துப்பாக்கியும் தெரிந்தது. வழக்கமாய் கதவை தட்டி வரும் யாழினி இன்று அனுமதியே வாங்காமல் வருவதைக் கண்ட ஜெயனுக்கு மட்டும் இல்லை அவனுடன் அதே அறையிலிருந்த ஜெயன் உதவியாளர் மூவருக்கும் புரிந்தது ஏதோ உதயிடம் சண்டையிட்டு வந்திருப்பாள் என்று அமைதியாகச் சிரிப்பை உதட்டில் காட்டாமல் கண்களைத் தாழ்த்திக்கொண்டனர். அவளிடம் ஒரு நிமிடம் என்று சைகை செய்தவன் ஏவ வேண்டிய வேலைகளை முடித்து அவளுக்கு ஒரு நாற்காலியையும் போட்டான்.

“நீங்க ஒக்கார சொல்றிங்க. உங்க சார் என்ன வெரட்டி விடுறதுலயே இருக்காரு”

“வேலை இருக்கும் யாழினி அவருக்கு” தன் இருக்கையிலிருந்து எழுந்து தன்னுடைய பி.எ ஒருவனிடம் ஒரு கோப்பை கொடுத்து, “நீரஜ் தழல் கைல நாளைக்கு இந்த டாக்குமெண்ட் இருக்கனும்”

மற்றொரு பார்சலை கொடுத்து, “இந்த பார்சல் ஈஸ்வரன் சார்க்கு போகணும் பட் எப்படி போச்சு யார் குடுதான்னு அவர் கண்டு பிடிக்கக் கூடாது. ரெண்டும் ரொம்ப கவனமா பண்ணிடுங்க” எச்சரிக்கையோடு அவர்களை அனுப்பி வைத்து யாழினியிடம் வந்தான்.

“என்ன பெரிய வேலை? அவர் வேலையை மட்டும் பாக்க வேண்டியது தான எதுக்கு என் வேலையும் சேத்து பாக்குறாரு. ஏன் காலைல அவ்ளோ லேட்டா ஆபீஸ் வந்திங்க? அங்க தான் என்னமோ நடந்துருக்கு. சந்தோசமா இருக்காரு” உறுதியாகக் கூறினாள் யாழினி.

“ஆபீஸ் விசயமா போனோம் யாழினி... நீ ஏன் இத வந்து என்கிட்ட கேக்குற அவர் என்ன நினைக்கிறாருனு யாரும் கெஸ் கூட பண்ண முடியாது” என்றான் ஜெயன்.

“நீங்க தான அவரோட ரைட் ஹாண்ட் அப்ப உங்ககிட்ட தான கேக்கணும்”

“அப்டிலாம் இல்ல. உனக்கு தெரிஞ்சு நான் ஒருத்தன். எனக்கு தெரிஞ்சு நான் பத்துல ஒருத்தன். அது இல்லாம அவரோட கம்பெனிஸ்க்கு சி.இ.ஓ, சி.ஓ.ஓ, ப்ரொடக்ஷன் டீம்-னு இருப்பாங்க. இங்க சென்னைல நான் அவ்ளோ தான் இதுவே வேற நாடு, ஸ்டேட் எல்லாம் இருக்கு நீயே கணக்கு போட்டுக்கோ”

அவனை கண் சிமிட்டாமல் பார்த்த யாழினி, “நீங்க பேசுற பிஸ்னஸ் கூட புரியாத என்ன போய் கணக்கு போட சொல்றிங்க” என்று சடைத்து கொண்டவளை பார்த்து சிரிப்புடன் நிறுத்திக்கொண்டான்.

“அண்ணா சொல்லுங்க ண்ணே என் உங்க சார் இவ்ளோ சந்தோசமா இருக்காரு?” பிடிவாதமாய் நின்றாள் யாழினி.

“சார் ஃப்ரன்ட் ஆதி தெரியும்ல?”

அவளும் தலையை ஆட்டினாள், “அதெப்படி தெரியாம போகும்? நேத்து பிரியாணில பீஸ் மட்டும் எடுத்து எடுத்து சாப்டாரு. ஒரு லெக்ச்சர் குடுத்துட்டு தானே வந்தேன். கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கூட நானும் குஸ்கா தான் சாப்ட்ருக்கனும் ஆனா சும்மா சொல்ல கூடாது ஜெயன் அண்ணே ஆடு நல்ல குறும்பாடு தான் அப்டியே ஜெல்லியா கரைஞ்சது” எதையோ சாதித்த இன்பம் அவளிடம். வந்த விசயத்தைக் கூட மறந்திருந்தாள், “நீங்க சாப்டப்ப பீஸ் இருந்தது தான?”

சிரிப்பை அடக்கி, “நீ வந்தது சார் பத்தி கேக்க மறந்துட்டியா?”

பற்கள் அனைத்தையும் காட்டி, “ஹிஹி... சொல்லுங்க...”

“ம்ம்ம் அவரோட சிஸ்டர இன்னைக்கு சார் பாத்தாரு. ரொம்ப வருஷம் கழிச்சு பாக்குறாங்க போல சோ கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்தாரு அதுனால தான் இந்த சந்தோசம். இப்டி அவரு வாண்டடா யார்கிட்டயும் பேசி நான் பாத்தது இல்ல” என்றான் ஆச்சிரியமாக.

அவன் பாவனையைக் கவனிக்கும் நிலையில் இல்லை யாழினி, “ஓ ஹோ கதை அப்டி போகுதா? உங்க சார்ர நம்பி நான் ஏமாந்து தான் போறேன். இவரு இவர் ஃப்ரன்ட் கூட மறுபடியும் சேர அவரோட தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்குவாரு அப்ப அவர் ஃப்ரன்டும் வேற வழியே இல்லாம எல்லாத்தையும் மறந்து ஒன்னு சேந்துடுவாங்க” நொடியில் திருமணத்தையே இருவருக்கும் நடத்தியிருந்தாள் கற்பனையில் ஏனோ ஏமாற்றம் வந்தமர்ந்தது கண்களின் முன்னே.

“இப்ப புரியுது இந்த வேலைல தான் எங்களோட டீல்ல கூட மறந்துட்டாரு” தானே புலம்பியவள் அதே வேகத்தில் வெளியேறியும் இருந்தாள் ஜெயனின் வார்த்தைகளைக் கவனிக்காமல், அவளிடம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ஜெயனும் வேலையில் மூழ்கினான்.

அவள் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்க சில நிமிடங்களில் வந்து அவளிடம் வாங்கிய பைலை அவள் மேஜையில் வைத்தவன், “கரெக்ஷன் பாருங்க யாழினி”

‘பாருங்க’ என்று உதய் கூறிய வார்த்தையில் கண்களை மூடி திறந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “நான் சொன்னா நீங்க அத ஏத்துக்க போறது இல்ல அப்றம் எதுக்கு சார் நான் சொல்லணும்” என்றவள் வார்த்தையிலும் கண்களிலும் இருந்த கோவம் எதையோ குறிக்க, சில நிமிடங்களுக்கு முன் தான் செய்த விளையாட்டின் பயன் தான் என்று நினைத்த உதய் அதையே நீடிக்க முடிவெடுத்தான்.

“ம்ம்ம் கரெக்ட் தான்” என்றவன் மேலும், “மார்க்கெட்டிங் டீம் கூட இன்னைக்கு ஆப்டர்நூன் பைவ்-கு மீட்டிங் அரேஞ் பண்ணிருப்பாங்க. அந்த மீட்டிங்கு தேவையான லிஸ்ட் உங்களுக்கு அனுப்பிருக்கேன் அதை எல்லாம் ரெடி பண்ணிட்டு, மார்க்கெட்டிங் ஹெட் கேட்ட ரெக்வையர்மென்ட்ஸ்-ல சில க்ளைம்ஸ் நான் அப்ரூவ் பண்ணாத ரீசன் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு அவரோட சிக்னேச்சர் வாங்கிட்டு என்ன வந்து பாருங்க”

வழக்கமாக இவ்வளவு பெரிதாக உதய் பேசினால் அதில் ஏதேனும் இரண்டு சந்தேகங்கள் வரும் யாழினிக்கு. புரிந்தாலும் கேள்வி வரும், புரியவில்லை என்றால் உதய் கதவைத் திறந்து வைத்துவிடுவான் அவள் கேள்விகளுக்காக ஆனால் இன்று எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தவளை அடக்கிய சிரிப்புடன் கடந்துவிட்டான் உதய் மாதவன்.

வேளையில் மும்முரமாய் இருப்பது போல் நடிக்க முடியென்றாலும் யாழினிக்கு கை கால் ஓடவில்லை.

“உதய் எங்க?” என்ற கணீர் குரலில் நிமிர்ந்த யாழினிக்கு ஆக்ரோஷமாய் விழிகளை தன் மேல் பதித்து நின்ற ஈஸ்வரனைக் கண்டு இன்னும் கோவம் அதிகம் வந்தது. ஆனாலும் தன்னுடைய தகுதியை மனதில் வைத்து, “உள்ள தான் சார் இருக்காங்க” என்றாள்.

“உள்ள பாத்துட்டு தான வந்தேன் அப்ப என்ன என்ன குருடன்னா சொல்ற?”

எங்கிருந்து தான் அத்தனை கோவம் வந்ததோ, “கண்ணு தெரியாதவங்கல மட்டும் குருடன்-னு சொல்லிட முடியாது சார். தான் உடம்பு முழுசும் பணத்தாலையும் மூளையும் தான் நிறைஞ்சிருக்குன்னு நினைக்கிறவங்க கூட சில நேரம் குருடன் தான்” பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட ஈஸ்வரனுக்குக் கட்டுக்கடங்கா கோவம் வந்தது, தன் ஆங்காரத்தை மொத்தமாகத் தட்டி எழுப்பி இருந்தாள் அந்த சிறு பெண்.

“என்ன ரெண்டு நாள் வேலை பாத்த உடனே கம்பெனி முதலாளி-னு எண்ணம் வந்துடுச்சோ வார்த்தை எல்லாம் எல்லை மீறி போகுது. கம்பெனி வாசல் தாண்டுற வரைக்கும் தான் உனக்கு பாதுகாப்பு அதுக்கு மேல என்ன நடந்தாலும் கேக்குறதுக்கு நாதி இருக்காது அதுக்கு அப்றம் அழுதாலும் எதுவும் இருக்காது”

அடிக்குரலில் கர்ஜித்த மனிதரைப் பார்த்து இம்மியளவும் அசையாமல் நின்றிருந்த யாழினி அவர் கூறிய வார்த்தைகளின் பொருளை உணர்ந்து ஒரு உணர்ச்சியற்ற புன்னகையுடன் உதயின் அறைக் கதவின் பக்கம் கை நீட்டி, “சார் ரூம்க்கு போய் செக் பண்ணிட்டு வர்றேன் சார்” என்றாள்.

தன்னை பார்த்துப் பயந்தவளை திருப்தியாகப் பார்த்தவர் அருகிலிருந்த ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, “வேகமா போ” என்றார் மீண்டும் சிடுசிடுத்து.

தன் முன்னாள் நின்ற மனிதரின் பார்வையில் தவறு இல்லை என்றாலும் அவர் வார்த்தைகளிலிருந்த வன்மத்தை எண்ணி உடலே கூசியது யாழினிக்கு. தன்னுடைய அறைக்கும், உதயின் அறைக்கும் செல்லும் இடைவேளையில் கண்கள் கூட சட்டெனக் கலங்கிவிட்டது.

சமாளித்துக்கொண்டு உதயின் கதவைத் தட்டி உள்ளே சென்றவள் அங்கு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்து கோட் அணியாமல் டையை தளர்த்தி பிளாக் டீயை பருகியபடியே மாத இதழ் ஒன்றை அலசிக்கொண்டிருந்த உதயிடம், “ஈஸ்வரன் சார் உங்கள மீட் பண்ணணுமாம்”

யாழினியின் குரலிலிருந்த மாற்றத்தைக் கேட்டு நொடியில் அவள் கண்களை ஆராய்ந்தவன் ஒரு சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, “டூ மினிட்ஸ் அப்றம் வர சொல்லுங்க”

தலையை ஆட்டி வெளியில் யாழினி சென்றதும் ஜெயனுக்கு அழைத்தான் உதய், “இப்ப மாமா ஆபீஸ் வந்ததுல இருந்து என்ன நடந்துச்சு, யாழினிகிட்ட அவர் என்ன பேசிருக்காருனு எனக்கு தெரியணும்”

“ஓகே சார்” என்று ஜெயன் இணைப்பை முறிக்க, உதய் கொடுத்த இரண்டு நிமிடங்கள் கூட பொறுக்காமல் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தார் ஈஸ்வரன்.

“என்ன உதய் இதெல்லாம்?” எடுத்த எடுப்பிலே குரலை உயர்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்த முயற்சி. சீரும் பாம்பாய் வந்து நின்ற மாமனைக் கண்டவன் எதுவும் பேசாமல் தன் முன்னே இருந்த பால் பவுடரை போட்டுச் சூடு தண்ணீரை ஒற்றி, அதில் ஒரு கட்டி சர்க்கரையும் போட்டு, டீ பேக் ஒன்று போட்டு, “உக்காருங்க. நீங்க விரும்பி சாப்புடுற ஹோம் மேட் டீ” தனக்கு முன் இருந்த அந்த ஒற்றை சோபாவை கட்டி அமர கூறினான்.

அவன் முகத்தில் சிறு பதட்டமும், கோவமும் இல்லாததைப் பார்த்த ஈஸ்வரனுக்கு மனக்குமுறல் அடங்கவில்லை... அந்த புது ப்ராஜெக்ட் நம்பி அவர் இல்லை என்றாலும் அதன் மூலம் வரும் லாபம் அளப்பரியது. இரண்டு வருடத்திற்கான லாபத்தை ஒன்பதே மாதத்தில் எடுத்துவிடலாம்.

“என்ன உதய் இவ்ளோ அலட்சியமா இருக்க காலைல இன்பர்மேஷன் காதுக்கு வந்ததுல இருந்து போன் மேல போன் எனக்கு வருது. உனக்கு கால் பண்ணுனா நீ ரிப்ளை பண்ண மாட்டிக்கிறன்னு என்ன எல்லாரும் ஏறுறாங்க.

நீ ரிலாக்ஸா இருக்க உதய்” நிதானமாக தன்னுடைய டையை சரி செய்தவன், “என்ன பண்ண சொல்றிங்க வருத்தமா தான் இருக்கு. பேசாம ஒரு துக்கம் விசாரிக்கிற நிகழ்ச்சி வச்சிடலாமா”

கேலி இழையோடிய உதயின் வார்த்தையை அந்த பெரிய மனிதரால் ஜீரணிக்கவே முடியவில்லை ஆனாலும் அவனைத் தாண்டி எதுவும் செயல்படுத்த முடியாத இயலாத நிலை, ஒரு முறை அவனுக்கு எதிராக ஆட்களை ஒன்று திரட்டி முன்னேறினால் அதற்கும் கண் சிமிட்டும் நேரத்தில் அவர் தந்திரத்தைத் தரையில் விழ வைத்து தன்னுடன் நேருக்கு நேராக இருந்தாலும் மறைமுகமாக மோதினாலும் நிதானித்து மோத வேண்டும் என்ற எச்சரிக்கையை நேரடியாகக் கொடுத்திருந்தான் உதய்.

அதைத் தான் இப்பொழுது உதயின் பலம், பலவீனமாய் இருக்கும் ஆதி கேசவனை வைத்து முன்னேறப் பார்க்கிறார். வந்த கோவத்தை மறைக்கும் விதமாய் சிரித்துக்கொண்டே தனக்கு முன்னாள் இருந்த தேநீரை கைகளில் எடுத்து, “இன்னும் நீ விளையாட்டு புள்ளையாவே இருக்க உதய்”

அதே சிரிப்புடன் மறுப்பாய் தலையை அசைத்தவன் தன்னுடைய கோட்டை எடுத்து அணிந்தவாறே, “எனக்கு தெரிஞ்ச ஒரே கேம் பிஸ்னஸ் தான் ஆனா இந்த நீங்க சொல்ற சின்ன புள்ள விளையாட்டு இல்ல இது... நரிகளுக்கு நடுல தனியா நின்னு தன்னோட ஆதிக்கத்தை உறுதி படுத்துற சிங்கத்தோட வேட்டை”

கோட் பட்டனை அணிந்துகொண்டு அவர் முகம் பார்த்து அழுத்தமாகக் கூறியவன் அடுத்த நொடி முகத்தை இலகுவாக்கி, “ஹ்ம்ம் ப்ராபிட் இல்ல தான் ஐ அக்ரீ பட் திஸ் இஸ் நாட் டெபனைட்லி எ லாஸ் உங்கக்கிடையே விட்றேன் சொல்லுங்க என்ன பண்ணலாம்”


“நடந்ததை மாத்த முடியாது தான் ஆனா இனி இது மாதிரி நடக்காம பாத்துக்கணும் அதுக்காக தான் சொல்றேன் இவ...”
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு ஈஸ்வரன் ஒரு நொடி நின்றார். வந்தது ஜெயன் என்று அறிந்த உதய், “கம் இன்” என்றான் வேண்டும் என்றே ஈஸ்வரனின் பேச்சை நிறுத்தி. உள்ளே வந்த ஜெயன் உதயை நோக்கி ஐபேட் ஒன்றை நீட்டி நின்றான்.

“இம்பார்டன்ட்டா ஜெயன்”

முதலாளியின் பார்வையை உணர்ந்து, “ரொம்ப இம்பார்டன்ட் சார்” என்றான்.

ஈஸ்வரனிடம், “டூ மினிட்ஸ்” என்றவன் ஜெயனிடம் ஐபேடை வாங்கி அவன் கொடுத்த ஏர்போட்ஸையும் வாங்கி காதில் அணிந்தவாறே இருக்கையிலிருந்து எழுந்து அவன் மேஜைக்கு பின்னாளிருந்த பெரிய சன்னலோரம் சென்று நின்று ஈஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னாள் யாழினியிடம் பேசியதைப் பார்க்கத் துவங்கினான்.

வேக வேகமாக வந்த ஈஸ்வரன் உதயின் கதவைத் திறக்கப் போகும் நொடியில் சிலையாகி நின்று இரண்டடி பின்னால் வந்து யாழினி அமர்ந்திருப்பதைப் பார்த்து முகத்தில் ஒரு ஏளன புன்னகையைப் படரவிட்டவர் அவளை நோக்கிச் செல்லும் பொழுது முத்தத்தில் கடுமையை வரவழைத்து வேகத்தைக் கூட்டினார். அதன் பிறகு யாழினியிடம் அவர் பேசிய அனைத்தையும் கேட்டவன் புஜங்கள் கோவத்தில் முறுக்கேறியது.

காணொளியை முழுதாக பார்த்த உதய் ஜெயனிடம் அந்த டேப்லட்டை ஒப்படைத்து, “செக்யூரிட்டிபோடுங்கஜெயன். ஒரு லேடி, நாலுகார்ட்ஸ். விசயம்அவளுக்குத்தெரியக் கூடாது”

“ஓகே சார். அப்றம் ஆதி...” ஜெயனின் பேச்சை உதயின் பார்வை நிறுத்தியது.

“மாமாக்கும் கேக்குற மாதிரி சொல்லுங்க அவரும் கேட்கட்டும்” அவன் குரலிலிருந்த கோவமும் எச்சரிக்கையும் ஜெயனை அப்படியே நிறுத்தியது.

ஜெயன் அமைதியாக வாசலை நோக்கி நடந்த பொழுது, “யோவ் நில்லுயா” ஈஸ்வரனின் குரலில் ஜெயன் அவரை திரும்பிப் பார்க்க, அவர் பார்வையோ உதயனின் மேல் படிந்திருந்தது.

“என்ன உதயா வர வர உனக்கு எல்லாமே சொல்லி தரணும் போல” ஆறி போன தேநீரை சுட்டிக்காட்டினார்.

வாசலை நோக்கிச் சிரித்த முகத்துடன் நடந்த உதய் ஜெயனிடம், “நீங்க போங்க ஜெயன்” என்று அவன் அறைக்கு அடுத்திருக்கும் ஓய்வறையில் அவருக்கான தேநீரைத் தானே தயாரித்து வந்து அவர் முன்னாள் வைத்தான்.

“சூடா இருக்கேன்னு கோல்ட் காபி கொண்டு வருவன்னு எதிர் பாத்தேன் உதயா”

சோபாவில் அமர்ந்திருந்தவர் கையில் காபி குவளையை கொடுத்தவன் சென்று தன்னுடைய இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டவான் குறையாத சிரிப்புடன், “எல்லாரும் நினைக்கிறதையே செஞ்சுட்டா இந்த சீட்ல ஒக்காருறதுக்கு நான் தகுதியே இல்லாதவன்னு சொல்ல நெறையா வாய் காத்துட்டுஇருக்கு. உங்களுக்கு தெரியாதது இல்ல”

உதயின் உள் அர்த்தத்தை முழுதாக புரிந்துகொள்ளாதவர், “உனக்கு என்ன குறை இருக்க போகுது, நீ போனா அடுத்து விஷ்ணு. விஷ்ணு எப்படியும் நீ சொல்றத தான் கேப்பான். எப்படி பாத்தாலும் ராஜா நீ தான்” என்றார் மருமகனின் கை பக்குவத்தில் உருவான தேநீரை ரசித்தபடியே தான் வந்ததன் காரணத்தை மறந்து.

அவர் அமைதிக்குப் பின் இருந்த வெறுப்பை அவர் கைகளின் அழுத்தத்தைப் பார்த்து உணர்த்துக்கொண்டவன், “விஷ்ணுவா...”

வாய் விட்டு சில நொடிகள் சிரித்தவன், “விஷ்ணு இதுலஎங்க இருந்து வந்தான்? இந்த கம்பெனிய நடத்துற தகுதி அவனுக்கு எப்பயும் வராது. என் பேச மட்டும் கேக்குறவன் என் அப்பா சித்தப்பாகட்டுன இந்த ராஜ்யத்தை வச்சுக்க தகுதியில்லாதவன். ஹரி தான் எனக்கு அடுத்து இந்த இடத்துலஒக்காருவான்”

கோவத்தில் கருத்த தன் முகத்தைச் சமன் செய்ய படாதபாடு பட்டவர், “என்ன உதய் விஷ்ணு தான் உன்னோட தம்பி-னு மறந்துட்ட போல”

“நல்லாவே நியாபகம் இருக்கு. அதே மாதிரி அவனோட கோவம், அவசரப் புத்தி எல்லாமும் தான் சேந்து நியாபகம் இருக்கு. அத விட, ஹரி எனக்கு விஷ்ணுக்கு மேல. நான் விஷ்ணுவை பாத்துக்குறதுக்கும் மேல ஹரி அவன பாத்துக்குவான். இது தான் நீங்க பேச அந்த முக்கியமான விசயமா?” அதற்கும் மேல் அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் நிறுத்தினான்.

காபி கோப்பையை கீழே வைத்தவர் குரலை சரி செய்து, “நான் வந்த விசியம் கண்டிப்பா உனக்கு தெரியும். பிரவுன் டீல் கேன்சல் ஆனதுக்கு உன்னோட சொந்த விசியம்நடுல வந்தது தான் காரணம்ன்னு எல்லாரும் சொல்றாங்க உதய்”

தலையை ஆமாம் என்று ஆடியவன், “ம்ம்ம் நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“எலாரும்ன்னு சொல்றேனே உதயா” இதழ் கடையோரம் சிரிப்பு தோன்றத் தோள்களைக் குலுக்கி, “எல்லாரோட எண்ணத்தையும் என்னால மாத்திட்டு இருக்க முடியாது. யார் எப்படி வேணாலும் நினைச்சுக்கட்டும்”

முகத்தில் ஏமாற்றம் தோன்ற, “இங்க வர்றதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு ரீசன் வச்சிருப்பன்னு நான் எதிர்பாத்தேன் உதயா. அப்டி இல்லனாலும் அந்த தரித்திரியம் புடிச்ச பயலுக்கு ஒரு முடிவு கட்ட ஏதாவது யோசிச்சிருப்பன்னு நெனச்சேன் ஆனா இப்ப தான தெரியுது நீ இந்த சீட் தர்ற தைரியத்துல முட்டாள் தனமான முடிவை எடுத்துட்டு அதையே சரின்னு அகந்தைல இருக்க. கேள்வி கேக்க ஆள் இல்லனு எல்லாத்தையும் தப்பு தப்ப செஞ்சிட்டு இருக்க... உன்ன நம்பி இந்த கம்பெனிய ஏன் மாமா குடுத்தாருன்னு எனக்கு தெரியல. உன்னால அந்த அனாதை நாயையும் எதுவும் செய்ய முடியாது அவனை நான் பாத்துக்குறேன்” கோவத்தில் வார்த்தைகளை வீசினார் உதயைப் பார்த்து முறைத்துக்கொண்டு.

ஆதியைப் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் தன்னையே பேசியது போல் உடல் முழுதும் தீயாய் எரிந்தாலும் அவர் முன் எதுவும் காட்டாமல் கோவத்தை அடக்கி, “அவ்ளோ நம்பிக்கை இல்லாம இருக்குல்ல? ம்ம்ம்... சரி இனிமேல் நீங்க ஜெர்மன் போக வேண்டாம். இங்கையே இருங்க. என்னோட டேபிள் பக்கத்துல இன்னொரு டேபிள் நாளைக்கு இருக்கும். உங்களுக்கு”

உதயைச் சூடாக்க நினைத்தவருக்கு தானே தீயில் விழுந்த எண்ணம். அங்குச் சென்ற எட்டு வருடத்தில் பல நூறு கோடிகள் அவருக்குக் கிடைத்துள்ளது. அனைத்தும் உதயிடம் கணக்குக் காட்டாமல் வந்த பணம். அதுவே இப்பொழுது இரண்டு சிறு தீவுகள், சில பெரு நிறுவனங்களில் முதலீட்டாளர், ஜெர்மனில் பல ஏக்கர்களில் உருவான ஆடம்பர அடுக்கு மாடிக் கட்டிடங்கள் என மாற்றம் பெற்றுள்ளது. இன்னும் இது போல் சிலவற்றை உருவாக்க நினைத்துள்ளார் ஆனால் அதில் மொத்தமாக மண்ணை வாரி இறைத்துவிட்டான் இப்பொழுது.

“நான் ஜேர்மன் போகலனா அங்க இருக்க கம்பெனிய யார் பாத்துக்குவா? யோசிச்சு எதுவா இருந்தாலும் செய் உதயா நல்ல ப்ராபிட்வர்ற அந்த ஒரு கம்பெனிய இதே மாதிரி ஆக்க போறியா?” என்றார் கறாராக.

“ப்ராபிட்ட பத்தி தெரிஞ்ச உங்களுக்கு அந்த ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் யாரால வந்ததுனும் நியாபகம் இருக்கும்னு நினைக்கிறன்”

உதட்டில் சிரிப்பை வைத்துக்கொண்டே பேசியவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து, “நாளைக்கு மார்னிங் எட்டு மணிக்கு நான் வந்துடுவேன். நீங்க ஜேர்மன்ல ஆபீஸ் வர்ற அதே பதினோரு மணி கூட வரலாம் தப்பு இல்ல” என்றவன் பேச்சைக் கேட்டு ஆச்சரியமும் கோவமும் இணைந்து கண்ணில் தோன்றியது ஈஸ்வரனுக்கு.

“இன்னொரு விசியம். ஆதி மேல உங்க சுண்டு விறல் பட நினைச்சாலும் என்னோட அம்மகாக கூட உங்கள சும்மா விட மாட்டேன்” வெகு இலகுவாகத் தான் இருந்தது அவன் வார்த்தைகள், ஆனால் அந்த கண்களிலிருந்த கோவம் ஈஸ்வரனின் உறுதியை அசைத்துப் பார்த்து தீயாய் எச்சரிக்கை செய்தி பறைசாற்றியது.

சில நொடிகள் ஆழ்ந்து அவரை பார்த்தவன், “எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நீங்க பொறுமையா எங்க உங்க டெஸ்க் போடன்னு யோசிச்சு வைங்க” செல்லும் உதயையே இயலாமை கலந்த கோவத்தில் பார்த்துக்கொண்டிருந்தார் ஈஸ்வரன்.

வெளியில் வந்த உதய் நேராகச் சென்றது யாழினியிடம் தான். தலையை மேஜையில் வைத்து, மடியில் ஏதோ ஒரு கோப்பையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் இயல்புக்கு முற்றிலும் மீறியது இந்த செயல். அரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பது பெரிய சவால் அவளுக்கு. அவன் அறைக் கதவு திறந்ததும் எழுந்து நின்றுவிடுவாள். ஆனால் பல நிமிடங்களாக நிலை மாறாத தோற்றம்.

அவள் மேஜையில் மெதுவாக இரண்டு முறை தட்டினான். சத்தம் கேட்டு வேகமாக எழுந்து அவன் முகத்தைப் பார்த்துச் சிரிப்பை வரவழைத்து, “மீட்டிங் எல்லாம் ரெடி சார். தேர்ட் ப்லோர்ல இருக்க ரூம்ல arrange பண்ணிருக்கேன். வேற ஏதாவது ரெடி பண்ணனுமா?”

“ம்ம்ம்... என்னோட ரூம்ல இன்னொரு டெஸ்க் ரெடி பண்ணுங்க”

“யாருக்கு சார்... ஓஓ உங்க தம்பி யாரும் வர்றாங்களா?”

“இல்ல என்னோட மாமா” ஆர்வமாகக் கேட்ட யாழினியின் கண்கள் அப்படியே வாடிவிட்டது நொடியில்.

“ஓகே சார்” என்றாள் மெதுவாகத் தரையைப் பார்த்து.

“யாழினி...” முகத்தை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். எப்படி முயன்றாலும் மனதின் வாட்டத்தை மறைக்க முடியவில்லை. அதுவும் அவனிடம்.

“உன்னோட டிக்னிட்டிய(dignity) யாரு ஸ்பாயில் பண்ண நினைச்சாலும் அவனை சும்மா விடக் கூடாது எந்த கொம்பனா இருந்தாலும். புரிஞ்சுதா... அந்த கொம்பன் எவனா வேணா இருக்கட்டும்” அவன் வார்த்தைகளும் கண்களும் தந்த அழுத்தத்தி
ல் அவள் தலை தானாகச் சரி என்று ஆடியது அவன் வார்த்தைகளின் பொருளை உணர்ந்து.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Eswaran unaku aapuu conform Vishnu aadhai kondu vanthu udhai ya Target pannala ellam poochu aadhai mela oru Kai vaju paru ha ha🤪🤪🤪
Yazhini negga pesunathu romba thappu😠😠 crt udhai dignity romba mukiyam☺️ ne avaruku pathil sollanum oru nall avaru pesunathuku
 
Top