• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 2 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
chap - 2

"சார்... அந்த புது ப்ரொஜெக்ட்ல கொஞ்சம் ப்ராப்லம்"

சக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "கேபின் உள்ள போய் பேசிக்கலாமா சக்தி?" என்றான் உதய்

அவன் கேள்வி கேட்பது போல் தோன்றவில்லை சக்திக்கு, கட்டளையிடும் அழுத்தம் தான் இருக்க, "சரி சார்" உடனே பதில் வந்தது சக்தியிடம் இருந்து .

சக்தி இயற்கையிலே பயந்த சுபாவம் உடையவன் ஆனால் வேலை என்று வரும்போது தீயாய் இருப்பான். அதனால் தான் என்னவோ உதய் மாதவன் அவனை எப்பொழுதும் தன் அருகில் வைத்து இருப்பான்.

"ஃபாரின் போற ஐடியா ஏதும் உங்களுக்கு இருக்குதா சக்தி?" துணியின் தரத்தை ஆய்வு செய்தவாறே கேள்வியை கேட்டான் உதய்.

"இப்ப வரைக்கு அப்டி எதுவும் இல்ல சார் பட் போனா நல்ல தான் சார் இருக்கும்" ஒரு வித கனவோடு வந்தது அவன் குரல். யாருக்கு தான் இருக்காது வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை.

"ஒருதடவையாச்சும் அம்மாவை பிலைட்ல கூட்டிட்டு போகணும் சார்" - சக்தி

"அம்மாவை அப்பறம் கூட்டிட்டு போகலாம் சக்தி அதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணுறீங்க நாளைக்கு மார்னிங் ஒரு 7 மணி போல ஏர்போர்ட் போங்க, ஜெர்மன்ல இருக்க நம்ம பிரான்ச்க்கு போய் மானிட்டர் பண்ணுங்க. ஒரு 3 மந்த்ஸ் அங்க இருக்குற மாறி இருக்கும் அதுக்கு அப்பறம் என்ன பண்ணனும் னு அப்பறம் சொல்றேன் நிலவரத்தை பொறுத்து. இப்ப கிளம்புங்க வீட்டுக்கு, போறப்ப என்ன இஷ்யூனு ஜெயன் கிட்ட சொல்லிருங்க நா பாத்துக்குறேன் அவன் கிட்ட தான் டிக்கெட் இருக்கு அதயும் வாங்கிக்கோங்க".

"ஆனா சார் ஆல்ரெடி அங்க உங்க மாமா இருக்காங்க நா எப்டி..." என்று இழுத்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் உதய் மாதவன்.

"எதுவும் சொன்னீங்க இப்ப?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம்,

"இல்ல சார் நைட் ப்ளைட் இல்லையானு கேட்டேன்" - சக்தி

"போங்க சக்தி" இறுதி உத்தரவாக வந்தது அவன் குரல். மண்டையை ஆட்டிக்கொண்டே இடத்தை விட்டு சென்றான் சக்தி.

"சூப்பர்வைசர் எங்க?" இடத்தையே அதிர வைத்தது அவன் குரல்.

"சார் இங்க தான் சார் இருக்கேன் ஏதும் மிஸ்டேக் ஆகிடுச்சா?" பதறியபடியே ஓடி வந்து கேட்டார் சூப்பர்வைசர்.

"ஆமாங்க மிஸ்டேக் தான். இங்க பாருங்க எத்தனை சின்ன சின்ன ஓட்டை இருக்குனு, இத பாக்க தான் உங்களுக்கு வேலை. இதுல இது குவாலிட்டி செக் தாண்டியே போயிருச்சு" சாதாரண தோணியில் பேசினாலும் அது பேச்சு அல்ல கோவம் என்று அனைவரும் நன்கு அறிந்தனர்.

"சாரி சார் இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குறேன்" நடுக்கத்தோடு பதில் அளித்தார்.

"2 வது கம்பிளைன் இது இந்த வீக்ல இப்டியே நான் உங்கள எப்பயும் விட்டுட்டு இருக்கணுமா?" - உதய்

"சார் சாத்தியமா இனி இப்படி நடக்காது சார், ஒரு தடவ எக்ஸ்குயூஸ் குடுங்க சார்"

"பேச்சுக்கு நூறு சார் போடாம வேலைய பாருங்க இது தா லாஸ்ட் வார்னிங் இனி இப்டி வந்து பேசிட்டு இருக்க மாட்டேன்" எச்சரித்து விட்டு உதய் விறு விறுவென வெளியேறினான்.

"ஜெயன் ஆபீஸ்க்கு வண்டிய விடுங்க" வாகனத்தில் ஏறி அமர்ந்து ஜெயனுக்கு உத்தரவிட்டான் உதய்.

உதயின் செக்யூரிட்டி தான் ஜெயன். சக்தியும் ஜெயனும் தான் உதயின் பெரும் பலம், இவன் நினைத்ததை அவன் கண் அசைவில் செய்துவிடும் அளவு உதய்யை புரிந்து வைத்து இருப்பர் இருவரும், "சார் உங்க ப்ரண்ட் ஆதவன் கால் பண்ணாரு".

"என்னவாம் அவனுக்கு?"

அவன் கேட்ட தோரணை ஜெயனின் இறுகிய முகத்தில் ஒரு சிறு புன்னகையை தந்தது. ஏனெனில் இவர்களின் நட்பு அவ்வாறு. உதய் எப்பொழுதும் முகத்தில் இரும்பை காய்ச்சி ஊற்றியது போல் இறுக்கமாக இருப்பவன் ஆனால் ஆதவனோ சிரிப்பை மட்டுமே இதழ்களில் வைத்து இருப்பவன். உதய் எவரிடமும் சிரித்து பேச லஞ்சம் கேட்பான். ஆனால், நண்பனிடம் மட்டும் முழுவதுமாக வேறு ஆளாய் இருப்பான்.

"ஏதோ முக்கியமான விஷயம் நேர்ல வந்து பேசுறேன்னு சொன்னாங்க. ஆபீஸ்க்கு நீங்க போறத சொல்லிரவா?" - ஜெயன்

"வேணாம் ஜெயன். வந்தா வேலையவே கெடுத்து விட்ருவான். ஈவினிங் வர சொல்லுங்க" தலையை ஆட்டி ஆதவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் ஜெயன்.

"தம்பிங்க என்ன பண்ணுறாங்க" - உதய்

"கன்ஸ்டிரக்சன் சைட்-கு அனுப்பி விட்ருக்கேன் சார், நான் வாட்ச் பண்ண வரைக்கும் அவங்களுக்கு அதுல தான் ஆர்வம் இருந்துச்சு கூடவே உங்க சித்தப்பா இருக்காங்க சார்". தந்தையை விட சித்தப்பா சற்று கடுமையானவர் தொழில் எனும்போது அதனால் சற்று அமைதி ஆனான் உதய்.

"இருந்தாலும் ரெண்டு பேரையும் நல்லா வாட்ச் பண்ணுங்க ஜெயன். எந்த சாக்கு கிடைத்தாலும் அதுல சுலபமா எஸ்கேப் ஆகிடுவாங்க. ரெண்டுபேரும் ஒரே ஆபீஸ்ல இருக்க கூடாது. எல்லாத்தையும் கத்துக்கணும். வாரம் வாரம் வேற வேற டிபார்ட்மென்ட் போக சொல்லுங்க"

சிரித்துக்கொண்டே ஜெயன் , "ஓகே சார்" ஆமோதித்தான்.

"என்ன பிரச்னை புது ப்ரொஜெக்ட்ல" கேட்டான் பார்வையை வெளியில் விட்டபடியே.

"இன்வெஸ்டர்ஸ் டீல்ல சைன் பண்ண டிலே பண்றங்க, சக்தி சொன்னதை வச்சு பாத்தா ஏதோ தப்பு நடக்குது சார். நம்ம ஆளுங்களே ஏதோ பிரச்னை பண்ணுறாங்க உள்ளுக்குள்ளயே" தலையை மெலிதாக ஆட்டியவன் ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் வெளியில் செல்லும் வாகனங்களையே வெறித்து பார்த்து வந்தான். அப்போது அந்த அமைதி பெரிதும் தேவை பட்டது போல்.

கார் அலுவலகத்தை அடைந்த பின்னர் சுயத்திற்கு வந்தவன், "மீட்டிங் போட்டு ரொம்ப நாள் அச்சுல ஜெயன்?"

"இன்வெஸ்டர்ஸ் மீட்டிங் இங்கே அரேன்ஜ் பண்ணனுமா சார்?" கேட்டான் ஜெயன்.

"வர சொல்லுங்க அடுத்த வாரம். இந்த காய்கறி வாங்கனும், கார் டயர் பஞ்சர்னு எவன் எவன்லா சாக்கு சொல்றனோ அவனைலாம் தூக்கிட்டு வர்றது உங்க வேலை. ஒருத்தன் விடாம எல்லாரும் இருக்கனும் சனிக்கிழமை 10 மணிக்கு" கோவத்தில் ஆணையாய் வந்தது அவன் குரல்.

சில நொடிகள் அமைதிக்கு பிறகு, "அதுக்கு முன்னாடி நம்ம மெக்கானிக்கல் என்ஜினீர்ஸ் டீமோட ஒரு மீட்டிங் ஃப்ரைடே இன்போர்ம் பண்ணிருங்க" எதற்காக தொழிலாளர்களிடம் பேச வேண்டும் என்கிறான் என்று புரியாமல் இருந்தாலும் அவன் செய்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்று அறிந்து அதையும் தயார் செய்தான் ஜெயன்.

காரில் இருந்து கீழ் இறங்கி கார்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் இண்டஸ்ட்ரிக்கு நுழைந்தனர். பல கிளைகள் இருந்தாலும் இதுவே தலைமை அலுவலகமாக இருந்தது. கூலர்ஸ் அணிந்து கருப்பு பாண்ட், வைட் முழு கை சட்டையுடன் வந்தவனை பார்த்து அனைவருக்கும் 'இன்னும் கொஞ்ச நேரம் இவனை பாக்கலாமே' என்று தோன்றியதில் ஆச்சரியம் இல்லை தான்.

அவ்வளவு ஸ்டைல் ஆக இருந்தான், அதிலும் அலை அலையாய் இருந்த அவன் முடியை நொடிக்கொரு முறை கோதிய விதம் அவன் அழகை ஒருபடி சற்று உயர்த்தியே வைத்தது.

அனைவரின் வணக்கத்தை சிறு தலை அசைவில் திரும்பி கொடுத்து 7 வது மாடிக்கு லிப்ட்-இல் சென்றான். அவனை பின் தொடர்ந்து வந்த இரண்டு காட்ஸ் வெளியே நிற்க ஜெயன் மட்டும் உள்ளே சென்றான்.

"மச்சி... உன் கோட் தொலதொலனு இருக்கு டா" எரிச்சலுடன் ஒரு பெருமூச்சு விட்டு உதய் திரும்பி பார்க்க அங்க நின்றது ஆதவன் தான்.

"ஏன்டா இந்த வைட், ரெட், மெரூன் கலர்ல கோட் வாங்க மாட்டியா?"

எதுவும் பேசாமல் நேராக உதய் முறைத்தது ஜெயனை தான், "சார் நா சொல்லல" என்றான் ஜெயன் பதறியவாறே.

"அவனை ஏன் மச்சி மொறைக்கிற உன் ஆளுங்கல்ல நான் மடக்க முடியாதது இவன் ஒருத்தன மட்டும் தான். ஆனாலும், நீ சம்பளமே போடாத மாதிரி 100 ரூபா குடுத்தாக் கூட நீ எங்க இருக்க-னு சொல்லிறாங்க டா உன் ஆளுங்க. பாத்து வச்சுகோடா" உதய்யின் எதிரில் அமர்ந்து காலை டெஸ்க் மேல் வைத்தான் ஆதவன்.

"சார் நா வெளிய வெயிட் பண்றேன்" சொல்லிவிட்டு வெளியே சென்றான் ஜெயன் சிரித்துக்கொண்டே...

"கோட் எடுக்க தான வந்த கெளம்பு இப்ப" - உதய்

"என்னடா பொசுக்குன்னு வெளிய போக சொல்ற, பொறு கொஞ்ச நேரம் பேசிட்டு அப்டியே இருக்கலாம் உன்ன பாத்து எவ்ளோ நாள் ஆச்சு" - ஆதவன்

"என்ன வேணும் உனக்கு டைரக்ட்டா சொல்லு வேலை இருக்கு எனக்கு" -

"அது ஒன்னும் இல்லடா இந்த டாக்குமெண்ட் இருக்கு பாரே" முன்னிருந்த ஒரு பைலை காண்பித்து, "இது கொஞ்சம் பெருசா இருக்கு முடிச்சு தரியா?" மூஞ்சியை அப்பாவியாக வைத்து கேட்டான்.

"ஏன்டா உனக்கு வெக்கமாவே இல்லையா உனக்கு எதுக்கு உங்க அப்பா கம்பெனி குடுத்தாரு?" திட்டிக்கொண்டே பைலை எடுத்து பார்த்தான் உதய்.

"மச்சி என்ன சொன்னாலு நான் கேக்க மாட்டேன்-னு தெரியும்ல அப்புறம் ஏன் கேக்குற. ஆமா எங்க உன்னோட பலகார பெட்டி?"

ஒரு முறை விட்டு, "அவனை ஜெர்மன் அனுப்பிருக்கேன்" - உதய்

"எதுக்கு?" - ஆதவன்

"நீ தான சொன்ன என்னோட மாமா என்னமோ பன்றாரு கம்பெனில எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வை-னு" அதிர்ச்சியாய் பார்த்தான் ஆதவனை.

"ஓ... நான் தான் சொன்னேன்னா...? ம் சொல்லிருப்பேன்" - ஆதவன்

ஆதவனுக்கு டிடெக்ட்டிவ் ஆக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவு ஆனால் தந்தையின் உடல்நல குறைவால் மொத்த எதிர்பார்ப்பு, சுமை, பொறுப்பு எல்லாம் அவன் தலையில் வந்து இறங்கியது.

வேறு வழியின்றி வேலையை செய்து வருபவன் மனம் சோர்த்து போகும் பொழுது உதயனை தேடி வருவது அவனுக்கும் தெரிந்த விஷயமே. அதனால் அவன் கூறும் சிறு சிறு பொய்களை வாங்கி கொண்டு அவன் பேசுவதை பொறுமையாக கேட்பான் உதய்.

"சொல்லு என்ன பிரச்னை?" பைலை பார்த்து கொண்டே கேட்டான் உதய்.

"அது ஒன்னும் இல்லடா எங்க அம்மா இருக்காங்கல்ல அவங்க என்ன ரொம்ப டார்சர் பண்ணுறாங்க" சிறு பிள்ளை போல் முகத்தை வைத்து கொண்டான் ஆதவன்.

"எதுக்கு?" - உதய்

"கல்யாணம் பண்ணிக்க சொல்லி" - ஆதவன்

"பண்ணிக்க வேண்டியது தான?" - உதய்

"எப்படிடா... பண்ணிக்க சொல்ற நீயும்? உனக்கு தான் தெரியும்ல நான் எவ்வளோ கனவோட லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன்னு"

"மாசம் மாசம் லவ் பண்றேனு போற அப்பறம் ரெண்டே நாள்ல வந்து செட் ஆகாதுன்னு பேசுற. உண்மைய சொல்லு உனக்கு வேற யாரையோ புடிச்சிருக்கு ஆனா வெளிய சொல்ல மாட்டிக்கிற" உதய் கோவத்தோடு ஆதவனை பார்த்தான்.

அவன் கூறிய வார்த்தையை கேட்ட உடனே அவன் கண் முன்னால் வந்த முகத்தை ரசிக்க முடியாமல் இதயம் சுருங்கியது ஆதவனுக்கு.

"அட போடா அப்டிலா ஒன்னுமே இல்ல, சரி உனக்கு எப்ப கல்யாணம்?"

"ஐடியா இல்ல"

ஆர்வமே இல்லாமல் வேலையை பார்த்தவனை, "ஏண்டா...! உன்ன மாதிரியும் மனுசங்க உலகத்துல இருக்க தான்.. செய்வாங்களா, எப்படி உனக்குனு ஏதாச்சும் ஆசை, கனவுனு இருக்கனும்டா, எத்தனை நாள் தான் பொம்மை மாறியே இருப்ப கொஞ்சம் ஆச்சும் என்ஜாய் பண்ணுடா லைஃப்-அ. பார்ட்டி கூப்டா வர மாட்டிக்கிற, பிரண்ட்ஸ் கூட வெளிய வர மாட்டிக்கிற 24 மணி நேரமும் வேலையவே பாத்துட்டு இருந்தா மனசுக்கு ஏதாச்சும் ஆறுதல் வேணாமா?"

" வெளிய போனா சந்தோசமா இருக்கும் தான், ஆனா தனியா போய் போய் என்னோட ஸ்ட்ரெஸ் தான் கூடுதே தவற குறையல ஆதவா. என்ன சுத்தி என் குடும்பம் வேணும் எனக்கு. நானும் வீட்டுல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் வெளிய கூட்டிட்டு போனேன், ஆனா என்ன ஆச்சு தெரியுமா??

உனக்கு புடிச்ச ட்ரெஸ்ஸ வாங்கி குடுன்னு பயந்து பின்னாடி நிக்கிறாங்க. புடிக்காத ஒன்ன காமிச்சு ஒகேவா-னு கேட்டா கூட சரினு மண்டைய மண்டைய ஆட்டுறாங்க. அதுக்காகவா கூட்டிட்டு போனேன்? ஒரு நாள் சந்தோசமா அவங்களுக்கு புடிச்சத அவங்களா அவங்க என் முன்னாடி நிக்க வச்சு பாக்கணும்னு ஆசை. என் தம்பிக என்னமோ எதிரியை பாத்த மாறி நிக்கிறாங்க, தங்கச்சிக ஒரு டீச்சரை பாக்குற மாறி பயப்புடுறாங்க. ஆனா அவங்க நாலு பேர் அவளோ ஒத்துமையா இருக்காங்க. நேத்து கூட அவனுங்க தண்ணி அடிச்சிட்டு 12 மணிக்கு வந்ததுக்கு அண்ணனுகளுக்கு அப்படி சப்போர்ட் பண்றா திவ்யா" என்றவன் மௌனமாக சிறிது நேரம் கழித்தான்.

"ஓகே... என் மேல இருக்க பயத்துனால தான் எப்படி ஒதுங்கி போறாங்கனு அதுக்கு ஒரு சொல்யூசன் பிளான் பண்ணுனேன், ஒரு வாரம் ஆபீஸ் லீவு போட்டேன் நீ அப்ராட் போன டைம்ல. நாலு பேரும் ஒரே ரூம்ல தான் மணி கணக்கா இருப்பாங்க, உள்ள போய் நானும் கூட இருந்தேன். அவளோ நேரம் கலகலப்பா இருந்த ரூம் நான் போனதும் சய்லண்ட் ஆகிடுச்சு. சரி, அவங்க சீக்ரெட்ஸ் ஷேர் பண்ண வேணாம் ஆனா ஒரு அண்ணன் கிட்ட பேசுற மாறி ஆச்சும் பேசலாம்ல?"

"ஒரு வார்த்தை கூட பேச மடிக்கிறாங்க டா. மொத நாள் தான நாளைக்கு பேசலாம்-னு போனேன். மறுநாளும் அதே நிலைமை தான். மூணாவது நாள் இருந்து எல்லாரும் அவுங்க அவுங்க ரூம்ல இருக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் சித்தி கிட்ட பேசப் போனேன், 'வா பா'-னு பாசமா தான் இருக்காங்க.

ஆனா, விஷ்ணு மேல இருக்க அந்த உரிமை என்மேல காட்ட மாட்டிங்கிறாங்க. அவங்கள நான் அம்மாவா பாக்குறேன் ஆனா அவங்க என்ன புள்ளைய பாக்கலைடா. இன்னும் அக்கா பையனா தான் பாக்குறாங்க. உரிமையா என்கிட்ட இது வரைக்கும் எதுவும் கேட்டது இல்ல, ஒரு தயக்கம் இருக்கு அவங்க கண்ணுல அந்த ஒரு பார்வையே தள்ளி போடானு சொல்லுது. அப்பா சித்தப்பா சொல்லவே தேவ இல்ல அவங்க பக்கத்துல போய் ஒக்கந்தாலே 'என்ன பா பிசினஸ்ல எதுவு ப்ராப்லமா'-னு கேக்குறாங்க"

எப்போதும், ஏதுவாகிலும் கம்பீரமாக, சிதறாமல் இருக்கும் தன் நண்பனா இவன் என்று வியக்கும் அளவுக்கு இருந்தது அவன் பேச்சு ஆதவனுக்கு "டேய் திடு துப்புன்னு நீ போய் பேசுனனால அப்டி இருந்திருப்பாங்க டா"

பெருமூச்சு விட்ட உதய், "அதெல்லாம் இல்லடா அந்த ஒரு வாரம் செய்யாததை ஒரு மாசம் ட்ரை பண்ணேன் காலைல சாயந்தரம்னு. ஆனா ஒன்னும் மாறல, வீட்டுல இருந்து தான் டா நிம்மதி, சந்தோசம், துக்கம் எல்லாமே ஒரு மனுசனுக்கு. அங்க சந்தோசம் இருந்ததா வேலை அலுப்புலாம் ஒன்னுமே இல்ல. ஆனா எனக்கு வீட்டுல இருந்து எந்த உணர்வும் கிடைக்கல வெறுமை மட்டும் தான் இருக்கு. எல்லாத்தையும் மீறி ஊர் சுத்தி வீட்டுக்கு போனலும் அது நிலைக்க போறது இல்ல. அப்ப ஏன் மனசுக்கு அந்த கொஞ்ச நேரம் அல்ப சந்தோசம்? அது பாட்டுக்கு இப்டியே எம்டியா இருக்கட்டும்"

'எப்படி டா இவ்வளோ வருத்தத்தை இப்படி மறச்சு வச்சிருக்க?' தோழனின் நிலை ஆதவனுக்கு வலித்தது.

"சொந்த வீட்டுலயே மூணாவது மனுஷன் மாறி இருக்க வேண்டி இருக்கு" வலி நிறைந்த புன்னகையோடு உதய் வார்த்தைகளை உதிர்த்த பொழுது மனம் கனத்தது ஆதவனுக்கு.

"எங்க வீட்டுக்கு கொஞ்ச நாள் வந்து இருடா" ஒரு நாளும் மனதில் இருப்பதை வெளியில் கூறாதவன் இன்று இவ்வளவு பேசியதை கேட்க கேட்க பொறுக்க முடியவில்லை ஆதவனால்.

சிரித்தான் உதய், "டேய் இப்ப தான சொன்னேன், தற்காலிகமா இருக்க எந்த சந்தோஷமும் எனக்கு வேணாம் டா. எனக்கு நிம்மதி-னு ஒன்னு இருந்தா கண்டிப்பா கிடைக்கும், இல்லனு இருந்தா எப்பவும் இருக்காது. இப்படியே பேசிட்டு இருக்காத இந்தா பைலை வாங்கிட்டு கிளம்பு" என்றபடி மடிக்கணினியை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான் சாதாரணமாக.

பைலை எடுக்காமல் டேபிளை சுற்றி உதய்யின் முன்னால் வந்து நின்றவன் சட்டென்று குனிந்து நண்பனை இறுக்க அணைத்தான், "எவன் உன்கூட இருந்தாலும் இல்லன்னாலும் நான் இருப்பேன். எப்பயும் எங்கயும் உயிரை குடுக்க கூட தயங்க மாட்டேன்"

கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் கண்டு கொள்ள வில்லை ஆதவன். எப்பொழுதும் விளையாட்டாய் இருப்பவனின் இந்த அழுத்தம் திருத்தமான கணீர் பேச்சில் அவ்வளவு உறுதி இருந்தது. அது உதயனை மௌனம் ஆக்கியது உண்மை தான் ஆனால் ஒரு ஆழ்ந்த அமைதி கிடைத்தது அவனுக்கு.

நிதானத்திற்கு வந்தவன், "சரி அப்டியே போன மாசம் ட்ரீட் பாக்கி இருக்கு மறந்துட்டியா?" புருவத்தை உயர்த்தி கேட்டான் ஆதவன்.

ஒரு நூறு ருபாய் தாளைக் குடுத்து "நீ குடிக்கப் போறது ஒரு கோக் அதுக்கு இது போதும்" என்றான்.

"என்னடா பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட" புலம்பினான் ஆதவன். கையில் கோடி கோடியாக பணம் இருந்தாலும் நண்பனை நச்சரித்து அவன் பணத்தில் ஒரு ரொட்டி வாங்கி உண்டால் கூட அதன் சுவை தனி தானே?

வாய்விட்டு சிரித்தான் உதய், "நீ எனக்கு எப்பயும் பிச்சைக்காரன் தான் டா, எப்ப பைலை எடுத்துட்டு வராம இருக்கியோ அப்ப தான் உன்ன மதிப்பேன்"

"இனி உன் கேபின்ல கால வச்சா என்ன-னு நீ என்ன கேளுடா" என்றான் வேடிக்கையாக.

"ஆமா மறந்துட்டேன் வீட்டுல ஒரு பூஜை ஏற்பாடு பண்ணிருக்காங்க சித்தி. உன்னையும் வர சொன்னாங்க. நாளைக்கு வந்து சேர்ந்துரு" தகவல் கொடுத்து வேலையில் இறங்கினான் உதய்.

"ஞாயிற்று கிழமைடா நாளைக்கு. காலைல வேகமாலாம் எந்திரிச்சு வர முடியாது" சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்.

"எனக்கு தெரியாது சித்திட்ட பேசிக்கோ" - உதய்

'ஆத்தி சிக்குனா அட்வைஸ் பண்ணியே வச்சு செஞ்சிருவாங்களே' யோசித்து, "சரி வரேன் ஆனா நல்ல நாட்டுக் கோழியப் புடிச்சு கொழம்பு வையுங்க"

"சாம்பார் தான் இஷ்டம்னா வா, இல்லனா போ"

'எங்க போனாலு லாக் வைக்கிறானே' தன்னையே பார்ப்பவனை பார்த்து, "உனக்காண்டி வர்றேன் சரியா?" நண்பனின் குறும்புத்தனத்தை உள்ளூர ரசித்தபடி, "கிளம்பு இல்லனா உங்க அப்பாக்கு போன் போட போறேன்"

"அஅ...அப்பாக்கு எதுக்கு தேவ இல்லாம இந்தா போய்ட்டேன் பாரு" கூறி ஓடி விட்டான் ஆதவன். அவனின் வருகை உதயனுக்கு சற்று அவசியமாக தான் இருந்தது.

*******************

ஷீலா கடும் கோபத்துடன் பிள்ளைகளை முறைத்து முறைத்து பார்த்து கொண்டு இருந்தார். தமிழும் பவித்ராவும் தான். இனிப்பான கரும்பை அண்ணன் எடுத்ததற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தனர் அவர்களுக்கு இணையாக முறைத்து கொண்டே இருந்த ஷீலாவை பார்த்து, "அம்மா உன் முட்டை கண்ண எவளோ உருட்டி பாத்தலும் நான் நிக்க போறது இல்ல, என்ன தைரியம் இருந்தா அவன் நான் எடுத்து வச்சிருந்த கரும்ப திருடி திம்பான்?"

தாய்க்கு பின்னால் நின்று போக்கு காட்டியபடியே, "மா நீங்களே சொல்லுங்க நான் என்ன அவளை மாதிரி திருடி , ஒளிச்சு வச்சா சாப்பிடுவேன். ஒழுங்கா கொஞ்சம் மொதயே தந்துருந்தா வாங்கியிருக்க கூட மாட்டேன். ஆனா இவ முழுசா ஒளிச்சு வச்சிருக்கா" இன்னும் சண்டையை முடிக்கும் எண்ணம் தமிழுக்கு இல்லை.

கோவம் ஏறிக்கொண்டே சென்றது ஷீலாவிற்கு இவர்களின் சிறு பிள்ளை வேலையை பார்க்கும் பொழுது.

"நடிக்காதடா ...நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும் சும்மா அளந்து விடறது நல்லவன் மாதிரி" - பவித்ரா

"உன்ன விட நான் நல்லவன் தான்டி, போன வாரம் என்ன பண்ண நீ? நியாபகம் இருக்கா? உன் கிளாஸ் பசங்க கூட சேந்து சினிமாக்கு போயிட்டு வந்துட்டு, வீட்டுல பொண்ணுங்க கூட போறேன்னு பொய் சொன்ன" - தமிழ்

"நீ என்ன பண்ண? என் பிரின்ட் கிட்ட லவ் லெட்டர் என்ன வச்சே குடுக்க வச்சல?" - பவித்ரா

இருவரின் ரகசியங்களும் சிறுகச்சிறுக வெளியே வர ஆரம்பிக்க கடுப்பானது என்னவோ ஷீலா தான், "இப்ப ரெண்டு பேரும் வாய மூடுறீங்களா இல்லையா? இப்டியே பேசிட்டே இருந்தா சோறு கிடையாது மதியம்"

அவ்வளவு தான் சாப்பாடு பேச்சு வந்தால் அனைத்தும் அடங்கி விடும் இருவருக்குள்.

தாயின் முகத்தில் இரு
க்கும் மாறுதலை உணர்ந்தவன் அருகில் சென்று அமர்ந்தான் அவர் தோளில் அன்பாக கை போட்டு, "என்ன ஆச்சு என் மம்மிக்கு? முகம் ஏன் டல்லா இருக்கு?"

"ஏண்டா தமிழு உனக்கு ஆதியை பாக்குறப்ப ஒன்னுமே தோணாதா?" - ஷீலா

(கீழே தொடர்ந்து படிக்க)
 
Last edited:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
"ஏன் தோணாது நல்ல படுக்க வச்சு அவன் வாயிலேயே வண்டிய ஏத்தணும் போல தோணும்" - தமிழ்

"ப்ச்... அது இல்லடா உனக்கு கல்யாணம் ஆக போகுது அவனுக்கு அதே மாறி தான நடக்கணும், பேசாம அவனை நம்ம மருமகளோட தங்கச்சிக்கு கேக்கலாமா?" - ஷீலா

கோவம் கலந்த அதிர்ச்சியில் பார்த்தவன், "உண்மைய சொல்லு இத அந்த நாயி தான உன்ட சொல்லுச்சு?" சட்டென முகம் மலர்ந்தது ஷீலாவோ, "அப்ப என் பையனுக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கா?"

"ம்க்கும்... அவனுக்கு ஊர்ல இருக்க எல்லா பெண்ணையும் தான் புடிக்கும். அதுக்குன்னு அவனுக்கு எல்லாரையும் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?" - தமிழ்

"டேய் வெளயாடாத"

"மா... நான் நிஜமா வெளயாடலமா. அந்த பொண்ணு அவங்க அத்தை பையன லவ் பண்ணுது நீ வேற. உனக்கு முன்னாடியே நான் 100 தடவ கல்யாணம் பத்தி பேசிட்டேன் . ஆனா அவன் கேக்க மாட்டான். வேணும்னா நீயே பேசிக்கோ" என கூறிவிட்டு அறைக்குள் அடைந்தவன் கைபேசியில் ஆதிக்கு அழைத்தான்.

"டேய் எங்க இருக்க?" - தமிழ்

"வீட்டுல. ஏன்?"

"நா வரேன்" வண்டியை நேராக ஆதி வீட்டிற்கு தான் விட்டான். வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஆதி அவன் வீடு சிறிய தோட்டத்தில் செடி நட்டு கொண்டு இருந்தான்.

"தமிழ் அந்த தண்ணிய எடுத்து குடு"

'வந்ததும் வராததுமா வேல வாங்குறான்' அழுத்துக் கொண்டு குடுத்த தமிழ், "ஏண்டா இப்ப நான் வரலைனா நீ தான போய் எடுத்துருப்ப?" - தமிழ்

"ஆமா" அசால்ட்டாக பதில் கூறி கொண்டே தண்ணீர் ஊற்றி இன்னொரு செடியை நட தொடங்கினான்.

"அப்ப அதே மாறி நெனச்சு போய் எடுத்திருக்க வேண்டியது தான?" மறுபடியும் டப்பாவை கையில் கொடுத்தவன், "போய் இன்னோரு டப்பா கொண்டு வா"

"உன்ன பாக்க வந்ததுக்கு வேலைக்காரன் மாறி நடத்துற நீ" வேறு வழி இல்லாமல் எடுத்து வந்தவன், "ஏன்டா கல்யாணம் பண்ண மாட்டிக்கிற?" ஒரு ஆழமான பாசம் இருந்தது தமிழ் குரலில்.

"எதுக்கு பண்ணணும்?" கையை கழுவி கொண்டே கேட்டான் ஆதி.

"ஏன்டா ஊருல உள்ள பொண்ணுகளை எல்லா சைட் அடிக்கிற ஆனா கல்யாணம்-னு வந்தா மட்டும் உத்தமன் மாறி பேசுற?"

"அண்ணா வாங்க எப்ப வந்திங்க?" ஒரு இலகுவான குரல் வாசலை நோக்கி திரும்ப வைத்தது தமிழை.

நின்று கொண்டு இருப்பது ஆதியின் தங்கை சஹானா. அமைதியான சாந்தமான முகம், மெல்லிய புன்னகை, லட்சணமான அழகிய முகம், கண்ணில் வற்றாத ஒரு பாசம் இவை அனைத்தும் அவளை மிக அழகாக காட்டும்.

"இப்பதாமா வந்தேன். உன் அண்ணே என் உயிரை வாங்குறான்"

ஒரு மெல்லிய அளவான புன்னகை சிந்தினாள் அவள், "அண்ணா அப்டி தான்-னு உங்களுக்கே தெரியும்ல. சரி, உள்ள வாங்க காபி போடுறேன்"

கோவம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் பெண் அவள். அப்படியே ஆதிக்கு நேர் மாறாக. ஆதிக்கு கோவம் வந்தால் என்ன நடக்கும் என்று யாராலும் கூற இயலாது அப்பேற்பட்ட கோவக்காரன்.

"வரேன் மா" அவள் பின்னே சென்றான் காபி எனும் வார்த்தையை கேட்டு.

ஆதியின் வீடு ஒரு சிறிய வீடு தான், ஒரு அறை, ஒரு ஹால், ஒரு சமையல் அறை. தங்கைக்கு அந்த அறையை கொடுத்து ஹாலில் எப்பொழுதும் இருப்பான் ஆதி.

தங்கைக்கு பிடித்தார் போல் வீட்டை அலங்கரிப்பான், 'இது எனக்கு வேணும், இது வேணும்' என்று கேட்கும் பிள்ளை இல்லை அவள், ஆசை பட்டத்தை அவள் கண்களை பார்த்து செய்வான் சகோதரன்.

முக வாட்டத்தை கண்டால் இவன் நெஞ்சில் அது குத்தும் உடனே எங்காவது அழைத்து சென்று விடுவான் அவள் மன போக்கை மாற்ற. சிறு வயதிலே வீட்டின் பொறுப்பை ஏற்றவள் பாதை அதிலே போய் விட கூடாது என்பதற்காக சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று எல்லா வேலையிலும் ஆதியும் இருப்பான் அவள் அருகில்.

சுடச் சுடக் காபியை வாங்கி கொண்டே, "உன் கையால குடிச்சு எம்புட்டு நாள் ஆச்சு?" முகர்ந்து கொண்டே குடிக்க ஆரம்பித்தான் தமிழ்.

"ஓசில குடிச்சா அப்டி தான்டா நல்லா இருக்கும்" கையை துடைத்து கொண்டே உள்ளே வந்தான் ஆதி.

"சாப்பாடு விசயத்துல சூடு சொரணை எல்லாம் தூக்கி போட்டுனும்டா"

"அது சரி, வா கொஞ்சம் வெளிய வேலை இருக்கு"

"வெளிய கூப்டு போய் அடிக்கத் தான போற?"

ஒரு நக்கல் பார்வையோடு பார்த்தான் ஆதி, "இல்ல ராசா அது இன்னைக்கு இல்ல, ரெண்டு வீடு தள்ளி ஒரு பொண்ணு புதுசா குடி வந்துருக்காம் வா பாக்க போகலாம்"

கண்ணை பார்க்க தவிர்பவனை பார்த்து அழுத்தமாக, "எங்க டா?"

"கெளதம் வர சொன்னான் டா" - ஆதி

கெளதம், தமிழ், ஆதி மூவரும் நெருங்கிய தோழர்கள்.

"அவன் பேச்சையே எடுக்காத எனக்கு கோவம் தான் வருது, நிச்சயத்துக்கு கூட வர முடியாம அப்டி என்ன கிழிக்கிற வேலை அவனுக்கு?" - தமிழ்

"இப்ப வரியா இல்லையா?" சட்டையை மாட்டிக்கொண்டே கேட்டான் ஆதி பொறுமை அற்று.

"மாட்டேன்-னு சொன்னா விடவா போற ஆனா அவன் கூட நான் பேச மாட்டேன். இப்பயே சொல்லிட்டேன்"

"சனியனே கூப்டியா ஒரு வார்த்தை நிச்சயத்துக்கு? சரி அத கூட விடு. ப்ரன்ட் பங்சனுக்கு கூப்புடாம தான் வரணும் ஆனா பொண்ணு பாத்த விசயத்தை கூட சொல்ல தோணல நீ பேசுற? மூடிட்டு போய் வண்டிய எடு பேச வைக்காத" மறுவார்த்தை வர வில்லை.

சோர்ந்த முகத்தோடு வெளியே சென்றவனை பார்த்து, "இந்த மூஞ்சிக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, சஹானாமா நான் வெளிய போயிட்டு வரேன் வீட்டை பூட்டிக்கோடா"

"சரி ண்ணா பாத்து போயிட்டு வாங்க" கிட்சனுள் இருந்து வந்தது சஹானாவின் குரல்.

வண்டியை ஸ்டார்ட் செய்து நின்று கொண்டு இருந்தவனின் பின்னால் ஏறி அமர்ந்தான் ஆதி. கண்ணாடியில் தமிழின் முகத்தை பார்த்தவன், "டேய் மூஞ்சிய நார்மலா வை, சகிக்கல பாக்க"

சிறிது நேரத்தில் கெளதம் வீட்டிற்கு வந்தவர்கள் அவனின் அப்பாவை பார்த்து விட்டு கெளதம் அறைக்குள் நுழைந்தனர். அங்கே அவன் தலையிலும் கையிலும் ஒரு கட்டோடு கிடந்தான், அவனை பார்த்த மாத்திரம் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான் ஆதி வயிறை பிடித்து கொண்டு.

"ம்ப்ச்... டேய் சிரிக்காதடா" அசிங்கத்தில் நெளிந்தான் கெளதம்.

தமிழுக்கு என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை மாறி மாறி இருவரையும் பார்த்தான், "என்ன டா நடக்குது இங்க, என்ன ஆச்சு உனக்கு? ஏன் இவன் இப்டி சிரிக்கிறான்?" கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றான் தமிழ்.

"என்ன தெரியுமா இவன் பண்ணியிருக்கான்? சார் ஏரியா சின்ன பசங்க கிட்ட இருக்க கிரிக்கெட் பேட்ட வாங்கி விளையாண்டு இருக்கார். ஒரு கட்டத்துல வீரத்தை பேட்ல காமிச்சு ஒடச்சிட்டாரு. என்ன பண்ணிருக்கணும் ஒழுங்கா வேற பேட் வாங்கி குடுத்துருக்கணும். அத விட்டுட்டு 'முடியாது போடா' வீர வசனம் பேசிருக்கான். அவனுங்க ஒடஞ்ச பேட்ட வச்சே மண்டையயும் கையயும் ஒடச்சிட்டு போய்ட்டானுங்க. சின்ன பசங்கட்ட வெக்கமே இல்லாம அடி வாங்கிருக்கான். ப்ப்ப்ஹ்ஹா..." உனக்கு இது தேவையா என்பது போல் தமிழ் பார்த்தான்.

"மூடு. ரொம்ப சிரிக்காத. சின்ன பசங்கனு தான் விட்டேன். அதுவு இல்லாம அவங்க அம்மா இருந்தாங்க இல்லனா மண்டைலயே நாலு கொட்டு கொட்டிருப்பேன்" கெளதம் நண்பர்களிடம் வீராப்பாக கூற, வெளியில் சத்தம்.

"அங்கிள் எங்க அந்த நெட்ட கொக்கு?" வரவேற்பறையில் வந்த அந்த குரலைக் கேட்டு விழி விரித்தான் கெளதம், 'ஐயோ இவ எதுக்கு இங்க வந்தா?' அதீத பயத்தோடு மனதிலே புலம்பினான் என்ன செய்வதென்று தெரியாமல்.

"கெளதம் நான் வாக்கிங் போயிடு வரேன் வீட்டை பாத்துகோ" கௌதமின் தந்தை நாசுக்காக வெளியே சென்றுவிட்டார்.

'அட தகப்பா பையன காப்பாத்துறத விட்டுட்டு அந்த பிசாச உள்ள அனுப்பி வைக்கிற?' தந்தையை திட்டி கொண்டே ஆதியை மேலும் கீழும் பார்த்து யோசித்தான், 'என்னமோ பிளான் பண்ணிட்டான் இவன்' என்று.

"என்னடா நடக்குது இங்க?" தமிழ் கௌதமை கொலை காண்டுடன் பார்த்தான்.

ஆனால் ஆதியோ வழக்கம் போல் சிரித்து கொண்டு இருந்தான். "அது ஒன்னு இல்லடா மச்சா. உனக்கு போன் பண்ணாலாம்... நீ எடுக்கலையாம் என் கிட்ட பாவமா கேட்டாளா.. அதான் நீ இங்க இருக்க-னு சொன்னேன். ஏதோ முக்கியமான விசியமாம்" ஆம் வந்தது தமிழின் சகோதரி பவித்ரா தான்.


'நலம் நலமறிய ஆவல்...

உன் நலம் நலமறியா ஆவல்...

நீ இங்கு சுகமே...

நான் அங்கு சுகமா...'

வெளியில் இருந்து வந்த பாட்டிற்கு தாளம் போட்ட படி , "ஓ அண்ணனை பாக்க வரப்ப இந்த மாறி பாட்டையும் பாடலாமா?" கெளதம் ஆதியிடம் அப்பாவியாய் கண்ணால் கெஞ்சினான், 'மச்சி காப்பாத்து டா'

"சின்ன பசங்கட்ட அடி வாங்குனப்பயே வெக்க பட்டு கூனி குறுகி செத்துருக்கணும் பரவால்ல இந்த தடி மாட்டு கையாள சாகு" அசால்டாக அருகில் இருந்த ஆப்பிள் பழத்தை சுவைத்தான்.

இன்னிசை கச்சேரியுடன் ஆடிக்கொண்டே வந்த பவித்ரா உள்ளே இருந்த சகோதரனை கண்டதும் அதிர்ச்சியயை அப்பட்டமாய் காட்டினாள்.

சட்டென்று தனது 32 பற்களையும் காண்பித்து, நெளிந்தவள், " ஹி ஹி .. அண்ணா.. நீ இங்க என்ன பண்ற?"

"ஓ அண்ணா? அப்டி? சரி அப்பறம்?...." - ஆதி

"இல்ல அ.. அதுதுது.. வந்து...."

"ஆஹ் இந்த பழம் இருக்குல்ல பழம்" உளறியவாறு ஆதியை பார்த்தவள் "ஆஹா என்ன ருசி!! என்ன ருசி!! அருமை... அருமை..!!" என ஆதியும் எடுத்து கொடுக்க.

ஆதியை முறைதான் தமிழ், "நானும் பவித்ரா மாறி பழத்த தான் டா சொல்றேன், என்னமா சரி தான?" நண்பனிடம் பதில் கொடுத்து பவித்ராவிடம் கேட்டான்.

"ஆஹ்... ஆமா ஆமா... அண்ணா இந்த பழம் இருக்குல்ல அத நீ வீட்டுல வச்சிட்டு வந்துட்ட. அத குடுக்க வந்தேன்" கையில் இருந்த பழ கவரை தமிழிடம் அவசரமாய் திணித்தவள், கௌதமை பார்த்தாள்.

அவன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான், 'ஒரு பொய்ய சொல்லிச் சமாளிக்க தெரியல. இத வச்சு என்ன பண்ண போறேனோ' நினைக்கவே அவனுக்கு தலை சுற்றியது.

"ஏய்... அளக்காத உண்மைய சொல்லு அவனுக்கு அடி பட்டது எனக்கே இப்ப தான் தெரியும் உனக்கு எப்படிடி தெரியும்? என்ன நடக்குது இங்க?" பற்களை கடித்தான்.

பவித்ரா எங்கே ஓடி செல்வதென்று தெரியாமல் முழித்தாள். கௌதமுக்கு, 'இன்னோரு கையும் உடைய போகுதோ' என்றெல்லாம் எண்ணம் தோன்றியது

"முட்டா பயலா இருக்க மச்சி" கையை கௌதமின் கட்டில் துடைத்து, "ஏன்டா அவுங்கள மாத்தி மாத்தி பாக்குற? ரெண்டும் லவ் பண்ணுதுங்க" தமிழின் தலையில் அசராமல் குண்டைப் போட்டான் ஆதி. அதிர்ந்தது மூவருமே.

"என்னது...??? லவ்வ்வ்... பண்றங்களா?" பொத்தென கட்டிலில் அமர்ந்தான் தமிழ் அதிர்ச்சியில்.

பதறிய கெளதம், "மச்சா பாத்து டா" என்றான்.

"பெட் இருக்குனு தெரிஞ்சு தான் அவன் வேகமா ஒக்கந்தான். நீ ஏன் பதற" - ஆதி

"ராசா கம்முனு இருடா கொஞ்ச நேரம்" வேண்டினான் கெளதம் ஆதியிடம்.

சற்று நிதானம் திரும்பியவன் அமைதியாக , "இது எவ்ளோ நாளா நடக்குது?" சகோதரி மற்றும் நண்பனை பார்த்து கேட்டான்.

"1 இயர் 4 மந்த்ஸ் 24 டேஸ்" இப்பொழுதும் பதில் அளித்தது ஆதி தான்.

"உனக்கு எப்படி டா நாங்க லவ் பண்றது தெரியும்?" ஆதி காதில் கிசுகிசுத்தான் கெளதம்,

"வாலண்டைன் டேக்கு பிளாக் ஷர்ட் போட்டு வண்டிக்கு ரோஜா பூ வாங்கி வச்சல அப்பயே தெரியும்" அழகாக ஆதி சிரிக்க, தன்னையே நினைத்து நொந்துக்கொண்டான் கெளதம்.

"டேய் ஏன்டா இப்டி பண்ண?" பாவமாக இருந்தது தமிழை பார்க்க.

பவித்ரா ஓரத்தில் அமைதியாக நின்று அழுது கொண்டிருந்தாள், "சாரி ண்ணா"

"ஏய் மூடுடி வாய. பண்றதெல்லாம் பண்ணிட்டு அண்ணா நொண்ணா-னு. ஏண்டா நாயே.. ப்ரண்ட்னு நம்பிக்கைல தான வீட்டுக்குள்ள விட்டேன் இப்டி சோத்துல கை வச்சுட்ட" கௌதமின் காலரை பிடித்தான் தமிழ் ஆக்ரோஷத்துடன்.

போக்கு சரியாய் இல்லை என்று உணர்த்த ஆதி, "மச்சா நிதானமா பேசுவனு தான் கூட்டிட்டு வந்தேன். வார்த்தைய விடாத"

"ஐயோ நல்லவரே நீங்களா? ஒரு வருசமா இது நடக்குதுன்னு தெரியும் ஆனாலும் துறை சொல்லல? ஏன்? உங்க வீட்டுலையும் ஒரு பொண்ணு இருக்குல்ல அப்ப இப்டி நடந்தா தான் தெரியும் உனக்கு. நானே இவன வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் என் தங்கச்சிய வச்சு பழக விட்ட மாறி இரு..." அடுத்த வார்த்தை வர வில்லை வெளியே. ஓங்கி அறைந்திருந்தான் ஆதி.

"நாக்கு கூசல பேசுறப்ப? ஏத்துக்கணும்னு தோணுச்சுனா ஏத்துக்கோ. இல்லையா, முடியாதுனு சொல்லு. அத விட்டுட்டு என்ன என்னமோ பேசுற"

கோபத்தில் ஆதியை யாருமே விரும்ப மாட்டார்கள் அத்தனை ஆக்ரோஷமாய் இருக்கும் அவன் கண்கள். கஷ்டப்பட்டு கட்டு படுத்தி மீண்டும் தொடர்தான்.

"அண்ணனா யோசிக்கிறப்ப கோவம் வர தான் செய்யும். ப்ரன்டா யோசிச்சிருக்கலாம்ல? நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொல்லிருந்தா இன்னேரம் என்ன செஞ்சுருப்ப? சூப்பர்டானு கை குடுத்துருப்ப, அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன் இருந்துருப்பான்ல? அவனுக்கு வலிக்காதா?"

இவ்வளவு நேரம் கத்தியவன் குரலில் வருத்ததுடன் தொடர்தான். "இப்டிலாம் நடக்கும்னு உனக்கு முன்னாடி எத்தனை தடவ இவன் யோசிச்சிருப்பான்? ப்ரன்ட ஏமாத்துறோம்னு அவனுக்கு தோணிருக்காதுனு நீ நெனக்கிறியா? இல்ல பவித்ரா தான் யோசிச்சிருக்க மாட்டாளா? அஞ்சு வருசமா லவ் பன்றான்", என்றவுடன் அதிர்ந்தான் தமிழ்.

"ஆனா ஒரு தடவ கூட நீ இல்லாம உன் வீட்டுக்குள்ள அவன் வந்தது இல்ல, தப்பான ஒரு பார்வை விட்டது இல்ல அவமேல. கேளு அவகிட்ட எப்ப லவ் சொன்னான்னு. ஒரு வருஷம் முன்னாடி சொன்னப்ப கூட அவளை விட முடியாம தான் சொல்லிருப்பானே தவற அப்பயும் உன்ன பத்தி ஆயிரம் தடவ யோசிச்சிருப்பான், நம்ம நடுப்ப பத்தி யோசிச்சிருப்பான்”

தமிழ் பார்வையை தரையில் வைத்தவன் தான் நிமிர்த்து பார்க்கவே இல்லை.

"டேய் முடிஞ்சா வீட்டுல பேசு இல்லனா நானே அப்பா அம்மாட்ட பேசுறேன். நீ கல்யாணத்துக்கு சும்மா வந்து ஒரு கிபிட் குடுத்துட்டு கெளம்பு", கோபமோ, வருத்தமோ நண்பனிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை என்றதும் கடுப்புடன் முடித்தான் ஆதி.

"பவித்ரா வீட்டுக்கு போ" ஆதி கூறியதும் அவள் பார்த்தது அவள் சகோதரனை தான்.

"அவனை ஏன் பாக்குற கெளம்புனு சொன்னேன்"

ஆதியிடம் மண்டையை ஆட்டிவிட்டு "உனக்கு வேணம்னா எனக்கு வேணா ண்ணா" என சகோதரனிடம் கூறிவிட்டு தன்னை பார்க்காமல் சென்றவளை பார்த்த கௌதமிற்கு தான் வலித்தது அவள் செயல்.

"கேட்டல்ல... சொன்னத? உன் ப்ரன்ட்ங்கிற நால தான் லவ் பண்ணா. இல்லனா பண்ணிருக்க மாட்டா. இன்னும் ஏதோ ஒன்னு சார் கேட்டீங்களா? என்ன அது? ஆ.... உன் தங்கச்சியா இருந்தா என்ன பண்ணிருப்பனு? கண்ண மூடிட்டு என் கௌதமுக்கு குடுத்துருப்பேன் என் தங்கச்சிய. யாருக்குடா இப்டி ஒருத்தன் கிடப்பான்? ராணி மாறி வச்சு பாத்துக்குவான்.

மனமே ஆறவில்லை தமிழின் வார்த்தைகள், சிகையை மிக அழுத்தமாக கோதிவிட்டு தமிழிடம், “காலைல என்னமோ கேட்டல்ல ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டிக்கிறன்னு? இதுக்கு தான் பண்ணல. 25 வருசமா கூடவே இருக்க நீயே இவ்ளோ அசால்ட்டா பேசுறப்ப வேற ஒருத்தி என் சஹானாவை பேசுனா சத்தியமா தாங்கிக்க முடியாது என்னால. அவளுக்கான வாழ்க்கை அமைச்சு குடுத்துட்டு தான் என் வாழ்க்கையை நான் பாப்பேன்.

இத்தனை நாளா மூணு பேரோட குடும்பத்தை பிரிச்சு பாத்தது இல்ல நான் ஆனா நீ பிரிச்சுப் பேசிட்ட இன்னைக்கு. உள்ளுக்குள்ள என்னமோ வலிக்கிது, என்ன தான் இருந்தாலும் அனாதை பய தான நானு?" நெஞ்சை தடவிக்கொண்டே கூறியவனை, "ஆதி.." சட்டென கண்டன குரலில் நிறுத்தினான் கெளதம்.

தன்னை அறியாமலே இதயம் வலித்தது ஆதிக்கு, "கெளதம் கார் எடுத்துட்டு போறேன்" நொடி தாமதிக்காமல் வெளியே பறந்தான் ஆதி.

ஆதி கூறிய இறுதி வார்த்தைகள் தமிழை வேரோடு சாய்த்தது. 'எவ்வாறு இப்படி எல்லாம் பேச தோன்றியது எனக்கு? என்ன காரியம் பண்ணிட்டேன் நான்?'

எப்பொழுதும் குறும்போடும், சிரிப்போடும், கோவதோடும் இருக்கும் அந்த கண்ணில் பல வருடங்கள் பிறகு வலியை காண்கிறான். அதுவும் அந்த வலியின் வீரியம் அதிகமே...

நாள் முழுவதும் ஊரைச் சுற்றினாலும் ஆதி செலுத்திய கார் நேராக சென்றது என்னமோ அவன் எத்தனை முறை தான் செல்ல கூடாது என மனதில் நினைக்கும் அதே இடத்திற்கு தான். கீழே இறங்கி ஒரு சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்து அந்த வெறித்து வெறித்து பார்த்தான்.

தெரு விளக்கில் இருந்து வந்த வெளிச்சத்தில் ஒரு சிறிய பகுதியே அந்த கட்டிடத்திற்கு கிடைத்தது ஆனாலும் அதில் வளர்த்து உள்ள செடிகளும், சிறிய மரங்களும் பார்க்க ரம்யமா
க இருந்தாலும் அவன் கண்ணில் அது எரிச்சல் ஊட்டும் பொருளாகவே இருந்தது.

“எப்டியும் நாலும் உன் கிட்ட வர வச்சிடுறல?" சிகரட் புகையை ஆழமாக இழுத்தான். ஏனோ அந்த வலிக்கு அது மருந்து தரவில்லை வழக்கம் போல்.
 
Last edited:
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
உதய் family மேல ஏவ்வளவு பாசமா இருக்கான் அவன எல்லாரும் ஒரு டெரர் ஃபேஸ் ஓட பாக்கும் போது கஷ்டமா இருக்கும் but உனக்கு ஒரு நல்ல நண்பன் இருக்கான் உதய் don't feel ஒரு நாள் எல்லாரும் பேசுவக
2 ஃப்ரெண்ட்ஸ் இல்ல 3 roses ya ஆதி பேசும் போது கஷ்டமா இருக்கு ஆதி எங்க போய் இருக்கான் தமிழ் என்ன பேசுற கோவதுல எப்போ யோசிக்கிற பேசும் போது யோசிக்கணும் கௌதம் சோ ஸ்வீட் ப்ரெண்ட் தங்கச்சி அவனோட 4 years love கூட சொல்ல
3 பிரண்ட்ஸ் நல்ல இருக்க டா ❤️❤️❤️❤️
 
Messages
37
Reaction score
4
Points
8
உதய் family மேல ஏவ்வளவு பாசமா இருக்கான் அவன எல்லாரும் ஒரு டெரர் ஃபேஸ் ஓட பாக்கும் போது கஷ்டமா இருக்கும் but உனக்கு ஒரு நல்ல நண்பன் இருக்கான் உதய் don't feel ஒரு நாள் எல்லாரும் பேசுவக
2 ஃப்ரெண்ட்ஸ் இல்ல 3 roses ya ஆதி பேசும் போது கஷ்டமா இருக்கு ஆதி எங்க போய் இருக்கான் தமிழ் என்ன பேசுற கோவதுல எப்போ யோசிக்கிற பேசும் போது யோசிக்கணும் கௌதம் சோ ஸ்வீட் ப்ரெண்ட் தங்கச்சி அவனோட 4 years love கூட சொல்ல
3 பிரண்ட்ஸ் நல்ல இருக்க டா ❤️❤️❤️❤️
thank u so much daa 😍
 
Well-known member
Messages
854
Reaction score
626
Points
93
Udhay paavam pa, manasula evlo feeling's irukku avanukkum

Tamil ipdi pesittane, aadhi paavam
 
Top