• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 18 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
chap - 18


அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி. எவரிடமும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி வாய் மொழியவில்லை அவன். இன்று நடு இரவில் ஆள் அரவமற்ற ஒரு பாலத்தில் நின்று ஆனந்த கூத்தாடுகின்றான்.

"டேய் தண்ணி போடாமயே இந்த ஆட்டம் ஆடுறியேடா. கீழ இறங்கு" கௌதமின் காரில் அமர்ந்திருந்த தமிழ் முகத்தில் சிறு எரிச்சல். கௌதமிற்கோ தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.

"ஆதி வாடா தூக்கம் வருது" நண்பனின் கெஞ்சல் மொழிகளோ அதிலிருந்த களைப்போ ஆதியின் செவிகளில் எட்டாமல் அவனுடைய தனி உலகில் லைத்திருந்தான் நிகழ் காலமும் கவலை அளிக்கவில்லை எதிர் காலமும் கவலை அளிக்கவில்லை அவனுக்கு இப்பொழுது, இந்த நொடி மட்டுமே ஆனந்தம் தந்தது காரணமே இல்லாமல்... ஒருவேளை மனதில் உள்ள கவலையை இவ்வாறு துரத்தி அடிக்கிறானோ என்ற எண்ணமும் அவன் முகத்தில் இருந்த சந்தோசத்தின் முன்னாள் சிலு சில்லாய் சிதறியது.

"வேலைய விட்டுட்டு வந்து ஆட்டத்தை பாரு... மனசுல ராஜான்னு நெனப்பு" இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு மனிதனால் இவ்வளவு துள்ளலாக இருக்க முடியுமோ என்ற கேள்வியும் திருமண வயதில் தங்கையை வைத்து எந்த நம்பிக்கையில் கை நிரம்ப வருமானம் கிடைக்கும் வேலையை விடுபவன் மூடன் என்ற ஆதங்கத்தில் தமிழ் மொழிந்தான்.

"இல்ல... அது அவன் வேலைய விட்டுட்டு வந்த சந்தோசம் இல்ல என் வேலையையும் சேத்து பறிச்சதுக்கான ஆர்ப்பரிப்பு" தனக்கே தெரியாமல் ஆதி, கௌதமிற்கும் சேர்த்து விடுதலை பத்திரம் அனுப்பி வைத்துவிட்டான் அவர்கள் மேனேஜரிடம் அதை பற்றி கேட்டால், "நான் இல்லாம நீ இருக்க மாட்ட தான மச்சான் அது தான் உன் மனசு அறிஞ்சு ஒரு சிறிய உதவி தங்களுக்கு" என்று தூய தமிழில் முடித்தான்.

"அது எப்படி மச்சான் ஒருத்தன் வாழ்க்கைல கிறுக்கு தனத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்து வாழ முடியுது?" ஆதியை பற்றி பல நாட்களாகவே இருந்த அந்த கேள்வியை இன்று கெளதம் தமிழிடம் கேட்டு விட்டான்.

நீண்ட பெருமூச்சுடன், "ஹ்ம்ம் நீ வாய தொறந்து கேட்டுட்டடா நான் கேக்கல அவ்வளவு தான் நமக்குள்ள வித்யாசம்"

காரின் ஹாரனை விடாமல் அடித்ததன் பலனாக தான் நின்றிருந்த பாலத்தின் சுவற்றிலிருந்து கீழே இறங்கினான் ஆதி, "மச்சி இன்னைக்கு ஸ்டார்ஸ் எல்லாம் அழகா இருக்குதுல?"

"ம்ம்ம் அது எல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனா உன் கூட சேந்தா நாளைக்கு என் பொண்டாட்டி என்ன செருப்பாலேயே அடிப்பாளோங்கிற பயம் தான் இப்ப அதிகமா வருது" இதோடு பவித்ரா முப்பது முறை கௌதமிற்கு அழைத்துவிட்டாள். அவர்கள் வழக்கமாக பேசும் நேரம் கடந்து இரண்டு மணி நேரம் ஆகியது. மகிழி, தமிழின் மண உறுதி செய்யப்பட்ட பெண் தமிழுக்கு தற்பொழுது கூட ஒரு முறை அழைத்திருந்தாள் ஆனால் அவளிடம் பேசும் நிலையிலா ஆதி அவனை வைத்திருக்கிறான்?

"இதுக்கு தான் அப்பயே சொன்னேன் அந்த கோண முக்கி வேணாம்டா வேணாம்டான்னு கேட்டியா அனுபவி ராஜா அனுபவி" என்று களிப்பில் சிரித்தவன் காரின் போணட்டில் ஏறி அமர்ந்தான் இரவின் அரசனாகிய நிலாவை ரசித்த வண்ணம்.

"ம்ம்ம் உன் பேச்ச கேட்டா எனக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்... வண்டில ஏறுடா தூக்கம் கண்ண கட்டுது" அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நண்பர்களை சிறு உதட்டு சலிப்புடன் தவிர்த்தவன், "என் கண் முன்னாடி நம்ம எதிர்காலம் பிரகாசமா தெரியாது மாப்பிள்ளை" என்றான் எதையோ மனதில் வைத்து.

கௌதமை காட்டி, "எங்க அத இந்த முகத்த பாத்துட்டு சொல்லு பாப்போம்" பரிதாபமாக முகத்தை வைத்து நின்றான் கெளதம் தமிழுக்கு ஒரு நன்றியை தெரிவித்து, தன் நிலையை விலக்கியதற்கு.

"அட இவன் கெடக்குறாண்டா பர்ஸ் வாயன்... நீ தைரியமா இரு மாப்பிள்ளை நமக்கு ஐ.நா சபைலயே போஸ்டிங் தருவாய்ங்க" என்று கௌதமின் கழுத்தில் கை போட்டு நண்பனை ஆசுவாச படுத்த விரும்பினான்.

அதையும் அந்த சிறு குழந்தை நம்பியது, "மாப்பிள்ளை நல்லி எலும்புக்காக தான நீ இந்த வேலைய பாத்துருக்க? நான் இனிமே என் வாழ்க்கைல நல்லியே சாப்புட மாட்டேண்டா வீட்டுல கல்யாண பேச்சு ஆரமிக்கிற இந்த நேரத்துல வேலை இல்லாம இருந்தா இந்த கருவாயனே எனக்கு பொண்ணு தர விட மாட்டாண்டா" கெஞ்சலும் கொஞ்சலுமாய் நண்பனிடம் தனது நிலையை எடுத்துரைத்தான் கெளதம்.

"உனக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்றவனை ஒரே வெட்டு மாப்பிள்ளை"

"டேய் அடங்குடா... வண்டில ஏறு" தமிழ் ஆதியின் கை புடித்து வண்டியில் தள்ள முயற்சிக்க அதை தவிடுபுடியாக்கி அசராமல் முகத்தில் இன்னும் சிரிப்பை கட்டி நின்றான்.

"ஏண்டா நீ பெரிய ஆள் ஆனதும் என்ன பண்ணுவ?" கண்களில் கனவோடும் இதழ்களில் மகிழ்ச்சியிலும் மூழ்கியிருந்த ஆதிக்கு தங்களை தாண்டி செல்லும் வாகனங்களின் புழுதி காற்றும் தென்றலாய் தெரிந்தது.

"ம்ம்ம்... வாக்கிங் போவேன்" சலிப்புடன் தமிழும், "மச்சி பெரிய ஹோட்டல் காட்டுறோம்" பரவசத்தில் கௌதமும் பதிலளித்தனர்.

தமிழை பார்த்து, "பாத்தியா இதுனால தான் நீ இன்னும் வாத்தியாவே இருக்க..."

"டேய் நிறுத்து..." கெளதம் ஆதியை குறுக்கிட்டு, "நீ என்ன பிளான்ல இருக்க?" ஏதோ புடிபட்டாலும் சரியாக புள்ளிகளை சேர்க்க இயலாமல் எண்ணங்கள் அலைபாய்ந்தது கௌதமிற்கு ஆதியின் செயலில்...

"பிஸ்னஸ் பண்ண போறோம்" ஆலோசனைகள் செய்யவில்லை, அதில் சந்திக்கப்போகும் இழப்புகளை பற்றிக் கவலையில்லை, பலமுறை யோசித்து நிதானத்தில் முடிவெடுத்தவன் போல் வெறும் கூற்றாய் மட்டுமே வந்தது ஆதியின் வார்த்தைகள்.

"கன்பார்ம். இவ்வளவு நேரம் இவன் கிறுக்கு புடிச்ச மாதிரி இருக்கான்னு நெனச்சேன் இப்ப தான தெரியுது இவன் நமக்கே தெரியாம போதைல இருக்கான்"

"ஏண்டா ஒரு மனுஷனோட ஆசைய வெளிய சொன்னா அவனை பைத்தியம்ன்னு சொல்லுவிங்களோ?" முகத்தில் சிரிப்பு இருந்தாலும் ஒரு கடுமை அவன் கண்களில்...

"ம்ம்ம் இருக்கலாம் ஆனா நம்ம கனவுக்கும் ஒரு தகுதின்னு ஒன்னு இருக்குதுல கைல பத்து பைசா காசு இல்ல, எந்த தைரியத்துல இந்த முடிவு எடுத்த நீ? இதுனால தான் நீ, இவன் வேலையையும் சேத்து கெடுத்து விட்டியா?" வலிக்க வலிக்க கேள்வி கேட்டாலும் அதிலிருந்த உண்மையை ஆதியால் மறுக்க இயலவில்லை ஆனாலும் அவனுடைய முடிவில் தெளிவாய் நின்றிருந்தான்.

"காச மட்டுமே வச்சிட்டு இங்க யாரும் தொழில் பாக்க வர்றது இல்ல... திறமை தன் அவசியம் அது என்கிட்டே கொஞ்சம் இருக்குது... கூட இருக்க புடிச்சா இருங்க இல்லனா அவசியமே இல்ல கிளம்புங்க" ஒருவருடைய கனவு நிறைவேற பணம் மட்டும் தான் இந்த உலகிற்கு தேவையா? எனில் படிப்பறிவு இல்லாதவனும் செல்வமற்றவனும் தகுதியற்றவனாகி விடுவார்களா என்ற கோவத்தில் ஆதியின் வார்த்தை வெளி வந்தன.

"உன்ன வீட்டுல விட்டுட்டு நாங்க கிளம்ப தான் போறோம்... இவனால் நான் திருப்பியும் அந்த யானை தலையன் (மேனேஜர்) கால்ல விழுகணும்" தன் பங்கிற்கு கௌதமும் தான் நண்பனுடைய இந்த அர்த்தமில்லாத திட்டத்தில் இணைய போவதில்லை என்று மறைமுகமாக கூறி ஆதியின் நம்பிக்கையை அசைத்து பார்த்துவிட்டான். இனி இவர்களிடம் இதை பற்றி விளக்கி பயனில்லை என்று உணர்ந்தவன் அவர்களாக இனி வந்தால் மட்டுமே தனது திட்டத்தை பற்றி அவர்களிடம் கூற போவதாக மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.

அமைதியாக சென்று வண்டியில் அமர்ந்தவன் அவன் வீடு வந்து சேரும் வரையிலும் அமைதியாய் இருந்தது அவன் எண்ணத்தை பற்றி மறுபரிசீலனை செய்கிறான் என்று நண்பர்கள் தவறாக நினைக்க ஆனால் ஆதியோ தனியாக என்ன செய்யலாம், எவ்வாறு பணம் சேர்ப்பதென்று புரியாமல் ஆழந்த சிந்தனையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

"ஆதி வீடு வந்துருச்சு" தமிழின் குரல் அவன் எண்ண அலைகளை அடக்கி நிகழ்காலத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது, "சரிடா வர்றேன்" என்று ஒன்றும் நடவாதது போல் வீட்டினுள் சென்றவனுக்கு எப்பொழுதும் போல் சகோதரனுக்காக காத்திருப்பது போல் கையில் புத்தகத்துடன் வரவேற்பறையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் சஹானா.

ஒரு நிமிடம் அவளது முகத்தை பார்த்ததும் அவள் எதிர்காலம் கண்கள் முன்னாள் வந்து படம் ஆட தான் தவறாக முடிவெடுத்துவிட்டோமோ என்ற சந்தேகம் நொடி பொழுதில் வந்து மறைந்தது, "தூங்க போ மா" என்றவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் சகோதரியை பார்க்க துணிச்சலின்றி. தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவனுக்கு வரவேற்பறை விளக்கு சுடர்விட்டு கொண்டிருக்க சகோதரி தனக்காக காத்திருப்பது தெரிந்து சிரித்த முகத்துடன் நடையை தொடர்ந்தான்...

"என்ன சஹானா தூக்கம் வரலையா?"

"வந்துச்சுண்ணே ஆனா உனக்காக தான் வெயிட் பண்றேன் வா ஒக்காரு சாப்பிடலாம்" சாப்பிட மனமே இல்லை ஆனாலும் உணவை வீணாக்குவது அவனுக்கு புடிக்காததால் மறுபேச்சின்றி அமர்ந்தான் ஆதி கேசவன்.

அமைதியாக உண்ண ஆரமித்தவன் மனமே இல்லாமல் சாப்பிடுவதை பார்த்து, "எதுவும் பிரச்சனையா ண்ணா?"

"எனக்கென்ன டா பிரச்னை வர போகுது... சந்தோசமா இருக்கேன்"

"இல்லன்னா நீ சரி இல்ல என்கிட்ட சொல்லு" சகோதரனின் கைப்பற்றி அழுத்தம் தந்தாள் அவனை தேற்றும் பொருட்டு.

"உன் அண்ணன் இப்ப வேலை வெட்டி இல்லாத வி.ஐ.பி டா" என்றவன் சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்து கழுவி வைத்து சகோதரியின் மறுமொழி என்னவாக என்ற பதத்தோடு அவள் முகம் பார்க்க அவளோ சாதாரண செய்தியை கேட்டது போன்று ஆசுவாசமாக சகோதரனை பார்த்திருந்தாள்.

"நீ எதாவது யோசிக்காம இந்த முடிவை எடுத்திருக்க மாட்ட ண்ணா" என்றவளது இதழ்கள் சிரிப்பில், நம்பிகையில் விரிந்திருந்தது. அவன் அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து, "ம்ம்ம் சொல்லு அடுத்து என்ன பண்ற பிளான்?" அந்த கண்ணில் இருந்த ஆர்வம் சிறு சிரிப்பை அவன் இதழ்களுக்கு கொடுத்தது...

"வேற என்ன பிஸ்னஸ் தான் ஆனா கெளதம், தமிழ் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியல அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது கூடவே இருக்கவனுகளே புரிஞ்சிக்க மாட்டிக்கிறானுக அடுத்து என்ன பன்னுறதுன்னு தெரியல" முகத்தை கைகளால் மூடி தேய்த்தான் என்ன செய்வதென்று தெரியாமல். கைகளில் முழுதாக ஒரு லட்சம் ருபாய் கூட கையில் இல்லை, "என் கனவெல்லாம் போச்சா சஹானா?" என்றவன் குரலில் இருந்த வழியும் வேதனையும் உடன் பிறந்த ரத்தத்திற்கு உறுத்தியது.

தன்னை எந்த நிலையிலும் கலங்க விடாத சகோதரன் இன்று கலங்கி நிற்பது சகோதரிக்கு நெஞ்சில் பாரத்தை தந்தது... அவன் கை பற்றி, "நீ ஏன் ண்ணா கவலை படுற உன்னோட திறமைக்கும் குணத்துக்கும் நீ கண்டிப்பா நல்லா வருவ. தமிழ் அண்ணாக்கு கல்யாணம்... அடுத்து ஒடனே பவிக்கு கல்யாணம் பண்ணனும் அவங்க. கெளதம் அண்ணாக்கும் அடுத்து கல்யாணம் நீயே யோசி கல்யாணம் ஆக போறவங்க இந்த நேரத்துல ரிஸ்க் எடுப்பாங்களா? நீயே இந்த இடத்துல இருந்தாலும் இத தான் செஞ்சிருப்ப" அவள் கூறுவதும் சரியாகவே பட்டது ஆதிக்கு.

"உன் கனவு கண்டிப்பா நடக்கும் நம்ம வீட்டுல இருக்குற நகை எல்லாம் எடுத்துக்கோ ண்ணா... ஆபத்துல இருக்குற நேரத்துல யூஸ் பண்ணிக்க தான இந்த ஜெவெல்ஸ் எல்லாம்" சிறிது பணம் சேர்ந்தாலும் அதில் சிறிது சிறிது நகை வாங்கி சேர்த்துக்கொண்டிருக்கிறான் கடந்த மூன்று வருடங்களாக சஹானாவின் திருமணத்திற்காக... தந்தையின் பெயரை கூறி கடன் கேட்பவர்கள் ஒரு புறம் இருக்க வேலைக்கு சேர்ந்த நாட்களிலிருந்து செலுத்த ஆரமித்து கடன் அடுத்த நான்கு வருடங்கள் ஆதியின் கடுமையான உழைப்பால் இப்பொழுது தான் தீர்ந்தது.

"இல்லடா அந்த நகை மேல கை வைக்க மாட்டேன் உனக்கு மாப்பிள்ளை பாக்க ஷீலா கிட்ட சொல்லிட்டேன் இந்த விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்" திடீரெனெ வரம் அமைந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தவன் ஒரு காத தூரம் அந்த நினைவை தள்ளியே வைத்தான்.

அப்பொழுது தான் ஆதவனின் கேள்வி அவளுக்கு புரிந்தது அவன் செய்கையை ஒதுக்கி வைத்து சகோதரனை சம்மதிக்க வைக்கும் செயலில் முதலில் முன்னேறினாள், "புரிஞ்சிக்கோ ண்ணா உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப நீ பண்ணி வைக்கணும்ன்னு நனைந்த கல்யாணத்த இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம் நான் ஒண்ணுமே சொல்லல ஆனா இப்ப நீ அத யூஸ் பண்ணிக்கோ இத விட ரெண்டு மடங்கு நீ எனக்கு நகை போடுவ..."

"உன் அண்ணன் மேல நீ அளவுகடந்து நம்பிக்கை வச்சிருக்க டா என்னால அத காப்பாத்த முடியுமான்னு தெரியல" அவள் நம்பிக்கை அவனுக்கு முதல் முறை பயத்தைப் பரிசளித்தது...

சகோதரனின் வாக்கியத்திற்கு சிறு சிரிப்புடன், "பத்து வயசுலயே உன் மேல நம்பிக்கை வச்சு உன் கைய புடிச்சேன் இப்ப அந்த நம்பிக்கை போருக்கும்னு நனைக்கிறியா ண்ணா? நீ சாப்புடலனாலும் நான் இது வரைக்கும் ஒரு வேலை சாப்பாடு இல்லாம இருந்ததில்லை ண்ணா நீ என்ன அப்டி விட்டதும் இல்ல... அப்டி பட்ட நீ என்னோட வாழ்க்கைய எப்படி பாத்துக்குவன்னு எனக்கு தெரியும்" என்றவள் தனது கையை காண்பிக்க அது ஆதியின் கைகளில் அடைபட்டிருந்தது. இந்த ஒரு நம்பிக்கை போதாதா அவனுக்கு தனது இலட்சியத்தை சாதிக்க? நூறு யானைகளின் பலம் கிடைத்த மகிழ்ச்சி மனதில்...

"என்ன பிஸ்னஸ் பண்ண போறண்ணா?"

"அப்பா கம்பெனிய ரி-பில்ட் பண்ண போறேன்" அவன் உதட்டில் இருந்த சிரிப்பில் இருந்த வன்மத்தையும், கோபத்தையும் பாவம் வெளுத்ததெல்லாம் பாலாய் நினைப்பவளுக்கு பிரித்து பார்க்க தெரியவில்லை....

காலை எழுந்து தனது ராயல் என்பீல்ட் வண்டியை எடுத்து வெளியில் சென்றவனுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி... மணிமேகலை அங்குள்ள ஒரு தெருக்கடையில் தனது காலை உணவை உண்டுகொண்டிருந்தாள் வேக வேகமாக, 'அட நம்ம மான்குட்டி' மனதினுள் சிலாகித்தவன் வண்டியின் ஹாரனை அவள் கவனம் ஈர்க்கும் வரை அழுத்தினான்...

ஆதியை பார்த்தவள் திருட்டு முழியோடு வேறு புறம் திரும்பிக்கொண்டாள், "பார்றா சேட்டையை" வாயினுள் முணுமுணுத்தவன் வண்டியிலிருந்து இறங்கி அவள் இருக்கும் திசை நோக்கி நடந்தான்... அவன் அவளை நெருங்கும் முன் இருந்த இரண்டு வாய் தோசையை ஒரே வாயில் திணித்தவள் கையை கழுவ செல்லும்போது புரை எற அவள் அருகில் சென்றிருந்த ஆதிக்கு சிரிப்பு வந்து விட்டது, "நான் என்ன புடிங்கியா சாப்புட போறேன் ஏன் இந்த அவசரம்?" என்று சிரித்தவன் அவள் தலையில் தட்டி தண்ணீர் தம்ளரை அவள் கையில் திணித்தான், "குடிங்க"

மறுக்காமல் அதை வாங்கி அருந்தியவள், "தேங்க்ஸ்" ஒரு சங்கடத்துடன் அவன் விழிகளை தவிர்த்தாள்.

"என்ன வீட்டுல காசு குடுக்கலயா இந்த சின்ன கடைல சாப்புடுற?" என்றான் அவளுடன் பேச்சை வளர்க்கும் எண்ணத்துடன். "இல்லையே என்கிட்டே பைவ் ஹன்ட்ரேட் ருபீஸ் இருக்கே" தனது பர்சினுள் இருந்து தான் வைத்திருந்த புத்தம் புதிய ஐநூறுபாய் தாளை எடுத்து காண்பித்தாள், "எனக்கு ஸ்ட்ரீட் புட்ஸ் புடிக்கும் ஆனா அப்பா ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிட்டாங்க அது தான் வீட்டுல டயட்-னு பொய் சொல்லிட்டு இப்டி இங்க வந்து அப்பாக்கு தெரியாம சாப்புடுறேன்" என்றவளது இதழ்கள் புன்னகையில் மலர்த்திருந்தன.

"அப்ப எனக்கு ரெண்டு தோசை சொல்லேன் சாப்டுக்குட்டே பேசலாம்" என்றவன் அருகில் இருந்த ஒரு நாற்காலியில் தான் அமர்ந்து அவளுக்கும் ஒன்றை எடுத்து போட்டான்...

வேகமாக முடியாதென்று தலை ஆட்டினாள், "அது தான் ஐநூறுபா காசு வச்சிருக்கல்ல வாங்கி தர மாட்டியா?"

"நான் மனி தர்றேன் பட் நீங்க வாங்கிக்கோங்க அப்பா வெளிய கெளம்புற டைம் இது இங்கிட்டு தான் கிராஸ் பண்ணுவாங்க... இல்லனா வேற கடைக்கு போகலாமா?" போகலாமா என்று அவனிடம் தலை ஆட்டி கேட்டவளது காதில் இருந்த அழகிய கல் வேலைபாடில் இருந்த அந்த காதணியிடம் தான் அவன் காதல் நிறைந்த கண்கள் சென்றது... அவள் அசையும் அசைவிற்கெல்லாம் செல்லும் அந்த சிறிய ஆபர்ணத்திடம் போட்டி போட மனம் துடித்தது ஆதிக்கு...

நீண்ட பெருமூச்சுடன், "ரைட்டு விடு நான் கிளம்புறேன்" என்று எழுந்தவனை தடுத்தாள் மணிமேகலை சொற்கள்... "என்ன யூனிவர்சிட்டில ட்ராப் பண்றிங்களா?" உடலை சிறிது சாய்த்து அவன் முகத்தை நோக்கும் எண்ணத்துடன் ஆவலாய் பார்த்தாள் ஆதியை...

அவளை திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் மின்ன மின்ன கண்டது அவனது ராயல் ஏபிஎல்டை மட்டுமே... நொடிக்கொருமுறை ஆதியையும் அவன் வண்டியையும் ஆசையாய் பார்த்தது அவள் விழிகள் அந்த சிறு குழந்தை ஆசையில் சிரிப்பு வர, "உங்க அப்பா பாத்துட்டா என்ன பண்ணுவ?" என்றான் அவளை சீண்டும் பொருட்டு...

"தெரிஞ்ச அண்ணனு சொல்லிடுவேன்" அலுங்காமல் தோளை குலுக்கி சிரமமே இல்லாமல் ஆதியின் நெஞ்சில் தீயை இறக்கினாள் ஒரே வார்த்தைக் கொண்டு...

எங்கேனும் சென்று முட்டிக்கொள்ளலாம் போன்று தெரிந்தது, "ஓ ஹோ என்ன பாத்தா உனக்கு அண்ணன் மாதிரி தெரியுறேனா?" என்று சற்று குரலை உயர்த்தி எகிறியவனை பார்த்து மிரண்டவள் அக்கம் பக்கம் பார்த்து மீண்டும் ஆதியின் கண்களை பார்த்து வேகமாக தலை ஆட்டினாள் இல்லை என்று, "என்ன என் தங்கச்சிய தவற வேற யார் அண்ணனு கூப்டாலும் புடிக்காது சொல்லிட்டேன் உனக்கும் சேத்து தான்"

"சாரி ஃபிரன்ட்-ன்னு சொல்லுறேன்... ஆனா நீங்க என்னைவிட ரொம்ப வயசானவரா தெரியிறீங்களே" என்றாள் பயத்தை கண்களில் வைத்து ஆதியின் கோவத்தை பார்த்து திக்கி திக்கி, "ஐ... மீன் பெரியவங்க...ம்ம்ம் ஆமா சீனியர் மாதிரி இருக்கீங்க" ஒருவழியாக சமாளி
த்துவிட்டாள்...

"நல்லா ஒளறு... வண்டில வந்து ஏறு" என்றவன் சாலையை கடக்க செல்ல அவன் பின்னே பூனையாய் வந்தாள்...
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
வண்டியை ஆதி ஓட்ட அவன் பின்னே அமைதியாய் அமர்ந்தவள் அவன் எப்பொழுது வேகமாக வண்டியை செலுத்துவானென்று ஆர்வமாய் இருக்க அவனோ வண்டியை நாற்பது கி.மீ வேகத்திற்கு மேலாக செல்வேனா என்று உருட்டினான்...

"ஏன் ஆதி நீங்க இதுக்கு முன்னாடி யார்மேல அச்சும் வேகமா போய் இடிச்சு கொன்னுட்டீங்களா?"

இவளுக்கு மட்டும் ஏன் இப்டி லூசு தனமா தோணுது என்றெனியவன், "ஏன் கேக்குற?"

"நா படிச்ச புக்ஸ்-ல இப்டி தான் ஏதாச்சு நடந்து வண்டிய மெதுவா ஓட்டுவாங்க அதுவும் இல்லாம இந்த வண்டில நா பாத்து நெறய பேர் ரோடுல பறப்பாங்க"

அவள் கூறியது தான் தாமதம் அவளே மிரளும் வகையில் வண்டியை செலுத்தினான் அப்பொழுது மிரண்டு கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்தவள் தான் பல்கலைக்கழகம் வந்த பிறகு தான் தன் விழிகளை திறந்தாள்.

"பைக் ஓட்டணும்னு ஆசை இருக்குறவங்களுக்கெல்லாம் உங்க கூட ஒரு ரவுண்டு வண்டின போனா அந்த ஆசையே பறந்து போயிரும்" உதட்டை சுளித்து தன்னுடைய கோவத்தை வெளிக்காட்டினாள்.

"ம்ம்ம் நீ ரொம்ப ஆசை பட்டு கேட்டன்னு வேகமா ஓட்டுனேன் இல்லனா இவ்ளோ வேகமாலாம் ஓட்ட மாட்டேன்"

"ஆமா கேக்கணும்னு நெனச்சேன் என்ன இது முகத்துல, கைல எல்லாம் அடி?" அந்த குண்டு கண்களில் கவலையை காணும் ஆவலுடன் அதை உன்னிப்பாக பார்க்கையில் தான் எதிர்பார்த்தது கிடைத்ததும் வந்ததே ஒரு மகிழ்ச்சி ஆதி றெக்கை இல்லாமல் பறந்தான்...

"அட அந்த கதையை ஏன் கேக்குற இதெல்லாம் வீர தழும்புகள்" தரையில் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் தெளிவாக கவனித்துக்கொண்டான் ஆதி.

அவனை பார்த்து கேலியான சிரிப்புடன், "உண்மைய சொல்லுங்க யார் கிட்ட அடி வாங்குனீங்க?"

"அட என்ன பாத்தா அடி வாங்குறவன் மாதிரியா இருக்கு" தன்னுடைய வெள்ளி காப்பை காட்டி, "நானே அடி வாங்குனாலும் இது துடிச்சிட்டு வந்து வெட்டிடும்... இந்த காயம் எல்லாம் ரோட்ல சில குழந்தைகளை பிச்சை எடுக்க வச்சிட்டு அதுல வந்த காச வச்சு ஒரு பத்து பேர் நோகாம நொங்கு தின்கிறாய்ங்க... விடுவேனா நானு பொங்கி போயி பிரிச்சு மேஞ்சிட்டேன் அப்ப வாங்குனது தான் இந்த குட்டி குட்டி அடிகள்" தான் எதையோ சாதித்ததன் விளைவாக கிடைத்த வெற்றியை கொண்டியது போன்று கர்வமாக பேசினான்...

புருவம் உயர்த்தி தலையை ஆட்டியவளது செவிகளுக்கு மீண்டும் அவன் பார்வை சென்றது, "நீங்க பொய் சொல்றிங்க... நான் அமெரிக்கால இருந்தேன் தான் ஆனா தமிழ் படமும் பாப்பேன்... ஆமா அது என்ன நோகாம நொங்கு திங்கிறது?" அவன் கூறிய பொய்யை கூட ஒரு அளவிற்குமேல் அவளால் கொண்டு செல்ல இயலவில்லை...

"அட நம்பு... நிஜமா ஒரு தப்ப தட்டி கேட்டேன் அடிச்சிபுட்டாய்ங்க" அவள் கண்களை பார்க்க தவிர்த்து பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் கூறினான், "நோகாம நொங்கு திங்கிறதுனா ஹார்ட் ஒர்க் பண்ணாம வெட்டியா இருந்து சாளரி வாங்குற மாதிரின்னு வச்சுக்கோயேன்" என்றான் சிறுபிள்ளை கதை கேடுப்பது போல் நின்றிருந்தவளிடம்.

சிறிது நேரம் அமைதியே அங்கு... இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை அவள் தன்னுடைய கைப்பையை பிசைந்துகொண்டே நின்றாலே ஒழிய அவன் முகத்தை கூட பார்க்கவில்லை.

"என்ன நேரமாகலயா?" என்றான் இறுதியாக அமைதியை உடைத்து.

எதுவும் பேசாமல் தலையை இல்லையென்று ஆட்டி, "உங்களுக்கு கோவம் வரலையா?"

சிறு குழந்தையின் குரல் போன்று இருந்தது அவள் குரல், அவள் முகத்தின் பாவனை அதை விட பாவமாக இருந்தது. அவள் கேள்வியில் குழப்பம் அடைந்து, "ஏன் கோவ படனும்?" என்றான் சந்தேகமாக.

"ஆனாலும் நீங்க ஒரு ஸ்டுபிட் தான் இப்படியா பண்ணுவீங்க. இப்டி பண்ணுனா நான் அப்றம் என்ன பண்ணுவேன் நீங்களே சொல்லுங்க. அதுவும் மூஞ்சிய வேற அப்டி வச்சிருந்திங்க" என்ன கூறுகிறாள் எதை பற்றி கூறுகிறாள் என்று புரியாமலே இருந்தாலும் அவளுடைய கோவம் கலந்த வெகுளித்தனம் அவனை மேலும் மேலும் அவளிடம் தள்ளியது என்றால் அவள் முகபாவமும் அந்த கண்கள் ஆடிய நர்த்தனமும் கைகள் தன்னுடைய செல்ல குலந்தையான வண்டியை அடித்த பொழுதுகூட அவளிடம் கிறுக்கனாக்கியது.

மனதில் உள்ள காதல் சிரிப்பாய் வெளியில் வர, "என்ன பேசுற நீ?" என்றான் சுவாரஸ்யமாய் அவள் முகம் பார்த்து. "சிரிக்காதிங்க உங்ககிட்ட முடியாதுனு சொல்ல முடியல நீங்க சொல்றத செய்யவும் முடியல. உங்களுக்கே மைண்ட் வேணாம்? ஒரு பொண்ண நடு ராத்திரி கூப்டுவாங்களா? ஒரு ஒன் ஹௌர் முன்னாடி வந்திருந்தா தான் என்னவாம்? நைட் சாப்புடாம வேற படுத்தேன் அந்த காஞ்சுபோன ரொட்டியை சப்புடா புடிக்காம"

நடு இரவில் ஆதி அவளை வெளியில் வர அழைத்ததை தான் கூறுகிறாள் என்று உணர்ந்தவன், "நான் உன்ன வெளிய கூட்டிட்டு போகணும்னு நெனக்கல எனக்கே தெரியும் ஒரு பொண்ண உரிமையே இல்லாம வெளிய கூட்டிட்டு போக கூடாதுன்னு, நான் சும்மா தான் வந்தேன் உன்ன ஒரு பத்து அடி தள்ளி வச்சு பாத்துட்டு நீ ஒளறுறத கேட்டா கொஞ்சம் மண்டை காலியாகும்ன்னு" தான் வந்ததன் உண்மையான நோக்கத்தை கூறினான்.

"என்ன சொல்லனும் இப்ப சொல்லுங்க நான் ப்ரீ தான்" என்றாள் மகிழ்ச்சியாக... அவள் மகிழ்ச்சியின் நோக்கத்தை உணர்ந்தவன், "ம்ம்ம் ரொம்ப தான் அக்கறை காலேஜ் போகுறத கட் அடிக்கிறதுக்கு என்ன என்ன சொல்ற..."

"இல்ல நான் காலேஜ்ல படிக்கல சும்மா ஒரு டவுட் அது தான் ஒரு ப்ரோபஸ்ஸர் கிட்ட க்ளியர் பண்ண வந்தேன்... வாங்களேன் பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட்ல பில்டர் காபி செமயா இருக்கும் அப்பா ஒருநாள் வாங்கி குடுத்தாங்க தெரிஞ்ச அங்கிள் தான் அவரோட எ.சி ரூம்ல கூட டேபிள் போட்டு தருவாரு எனக்காக... எங்க அம்மாக்கு எல்லாம் இப்ப காபி கூட ஒழுங்கா போட தெரியல அது தான் இங்க வருவேன் அத விட அன்னைக்கு ஒரு நாள் எங்க அத்தை வீட்டுக்கு போனேன் பாருங்க பூரி வித் சிக்கன் க்ரேவி வேற லெவல்ல இருந்துச்சு... அங்க அமெரிக்கால உப்பு காரம்ன்னு ஒண்ணுமே இருக்காது எனக்கெல்லாம் நாக்கே..."

அவள் பேச பேச கண்கள் நடனமாடியதை மட்டுமே ஆதியால் பார்க்க முடிந்தது... தேவையே இல்லாமல் பல தலைப்புகளுக்கு சென்றவளது ஒரு வார்த்தையும் அவன் செவிகளுக்கு செல்லவில்லை... ஆனாலும் தனக்கு இருக்கும் வேலைகள் நினைவிற்கு வர அவளை தடுத்து நிறுத்த வேண்டியாகியது.

"நீ அப்டியே பேசிட்டு இரு நான் கிளம்புறேன்..." என்று தனது வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள் மணிமேகலை ஆதியின் கையை கெட்டியாக பிடித்தாள்... மின்னல் பாய்ச்சியது போன்ற உணர்வு ஏற்பட அவள் முகத்தை பார்த்தவன் அதிலிருந்த பயத்தை கண்டதும் அவள் பார்வை பதிந்திருந்த திசையை பார்த்ததும் தான் புரிந்தது. அங்கே ஒருவன் மணிமேகலையையும் ஆதியையும் கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான் அந்த விழிகளில் தெரிந்த ஆத்திரமும், நேசமும் ஆதிக்கு தெளிவாய் புரிந்தது, "யார் அவன்?"

"என் பிரன்டோட அண்ணன்" அவள் அடுத்த நிமிடமே முகம் புன்னகையில் பூத்தது, "ஹண்ட்ஸமா இருகாருல? என்கிட்டே ரெண்டு நாள் முன்னாடி ப்ரப்போஸ் பண்ணாரு. நான் ஓகே சொல்லிரவா? எனக்கு அவரோட ஐஸ் ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா அப்பாகிட்ட என்ன சொல்றது? அப்பாக்கும் அவரை புடிக்கும் சோ ப்ராப்லம் இருக்காதுன்னு நெனக்கிறேன்..." அவளே கேள்வியும் கேட்டு பதிலையும் அவளே கூறினாள்.

தன்னுடைய வண்டியின் சைடு மிரரரை திருத்தி தன் முகம் பார்த்தான், 'என்னடா ஆதி உன் கண்ணும் ஓரளவு பாக்குற மாதிரி தானே இருக்கு... அப்டி என்ன அந்த பூனை கண்ணன் கிட்ட இருக்குன்னு அத பாத்து லவ் பண்ண போறேன்னு சொல்றா? இந்த மான்குட்டிக்கு அந்த அளவு வெவரம் இருக்காது பேசி ஆட்டைய களைச்சு விடுவோம்'

"அந்த கண்ண விட அவன் முகம் பாருங்க கலையா இருக்கு அதுக்காகவே நீங்க ஓகே சொல்லிறலாம்" என்று நிறுத்தியவன் அவள் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை பார்க்க அவள் அவர்களை முறைத்து நின்றவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வேகமாக மகிழ்ச்சியில் அவனுக்கு கை அசைக்க சென்றவளது கையை ஆதி நொடியில் நிறுத்தினான், "என்ன அவசரம் முழுசா கேளு... என்ன தான் உன் அப்பாக்கு அவனை புடிச்சிருந்தாலும் அவரோட பொண்ணுக்கு லைப் பார்ட்னர் அப்டின்னு வரப்ப இந்த மாதிரி பசங்கள புடிக்காது. பாரு காதுல கடுக்கன், கைல இருவது கருப்பு வளையல், மண்டைல செம்பட்டை கலர், பைக் பாரு ட்டூயிக்(Duke) நாளைக்கு இதுல கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டுபேரும் போனா உன் அப்பா பாத்து என்ன நெனப்பாரு? அதெல்லாம் விடு நீ என்கிட்டே பிரண்ட்லியா தான் பேசிட்டு இருக்க ஆனா அவன் இதுக்கே எவ்ளோ கோவ படுறான் பாரு... என்ன தான் நீ தமிழ் பொண்ணா இருந்தாலும் பாரின் ரிட்டர்ன் நாலு பசங்க கூட பேசுவ அப்ப ஒவ்வொரு டைமும் அவன் இப்டி தான் ரியாக்ட் பண்ணுவான். பொசசிவ்னஸ் இருக்கலாம் ரிலேஷன்ஷிப்ல ஆனா சந்தேகமோ கோவமோ வர கூடாது... இப்டி இல்லாம நல்லா தமிழ் கலாச்சாரம், திராவிட நிறமா இருக்குற பையன் பாரு... சரி சொல்றத சொல்லிட்டேன் இனி உன் இஷ்டம்"

தன்னுடைய காலரை தூக்கிவிட்டு அவள் முகத்திலிருந்த சந்தேகத்தை பார்த்து மனதில் சிரித்தவன் ஆனந்தமாக தன்னுடைய அப்ளிகேஷனையும் போட்ட பின்னரே சென்றான், "பை... டாட்டா"

*****************************

"சார் நீரஜ் அந்த ரிசார்ட்ல பாரினர்ஸ வச்சு ஒர்க் பண்ணுறாரு அத வெளிய மறைக்க தான் பீச் பக்கத்துல அந்த ரிசார்ட்... பிளஸ் ஏதோ ஜேர்மன் பர்சன்ஸ் கூட ஏதோ டீலிங் பேசுறாரு கோட் வொர்ட்ஸ் எல்லாம் பாத்தா நம்ம ப்ராஜெக்ட் ஏதோ ஒன்னுல ப்ராப்லம் குடுக்க ட்ரை பண்ற மாதிரி தெரியுது. அப்றம் சக்தி, ஈஸ்வரன் சார்க்கு ஆப்போசிட்டா எவிடென்சஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டானாம் ஒரே ஒரு டாக்குமெண்ட் மட்டும் கைக்கு வந்தா எல்லாமே ஓவர்"

ஜெயன் கூறியதை அமைதியாய் தலையசைப்புடன் கேட்டவன் தனது நாற்காலியிலிருந்து எழுந்து தன்னுடைய மேசையிலிருந்த ஒரு அழைப்பு பத்திரிகையை எடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியில் சென்றான்... இது சில கடந்த மூன்று நாட்களாக நடக்கும் வாடிக்கை தான். முன்னர் இருந்த அவனது சில நேர புன்னகை வெளிப்படா சிரிப்புகளும், தன்னை பற்றிய சிறு கவலையும் மறைந்து இயந்திரமாய் சுற்றி திரிந்தான். இப்பொழுது ஜெயன் வழங்கிய செய்தியும் அவனை பெரிதும் அசைக்க வில்லை.

அவன் வழக்கத்தில் மாறாதது யாழினியின் அறையை ஒரு நொடியில் பார்த்து நகர்வது. அதை மட்டும் இப்பொழுதும் சரியாக செய்து மின் தூக்கியில் நுழைந்தான். அவன் பின்னே வந்த ஜெயன் உதய்யின் ஆனைக்காக காத்திருக்க தான் கேட்ட செய்திகளுக்கும் தனக்கும் துளியும் சம்மந்தம் இல்லையென்பது போன்று இருந்தான். தனது வாகனத்தை எறியவன், "மாமா எங்க?"

தன் கையிலிருந்த தாவலை (tab) பார்த்து, "அவர் வீட்டுல சார்"

"வண்டிய அங்க விடுங்க ஜெயன்" அதற்கு பிறகு அமைதி மட்டுமே அந்த அரைமணி நேர பயணத்தில். ஈஸ்வரனின் இல்லம் அடைந்ததும், "நீங்க வர வேணாம்" ஜெயனை தடுத்து தான் மட்டுமே உள்ளே நுழைந்தான். தன்னை துளைக்கும் ஈஸ்வரனின் ஆட்கள் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய சுய்ட்டை தோளில் ஒற்றை விரலால் போட்டபடி கம்பீரமாய் நடந்தவனை பார்த்த ஆண்களுக்கும் கூட பொறாமை வர தான் செய்தது.

உள்ளே நுழைந்தவன் பார்வை அந்த நுழைவாயிலை அளக்க ஈஸ்வரன் அங்கில்லை... மெலிய இருமல் சத்தம் மாடியிலிருந்து கேட்க ஐந்தே எட்டில் அவன் கண்களுக்கு தெரிந்தார் ஈஸ்வரன்.

நீல நிற முழுக்கை சட்டையின் பட்டனை கழட்டி தனக்கு முன்னாலிருந்த சதுரங்க பலகையில் தனது முழு கவனத்தையும் பதித்திருந்தார், "எதிரியே இல்லாம ஆட்டம் ஆடுனா சுவாரஸ்யமே இல்லல??" உதய்யின் திமிர் கலந்த கேலியான குரல் அவரது ஆழ்ந்த கவனத்தை ஈர்த்தது.

ஒலி வந்த திசையை பார்க்காமலே அந்த குரலை அறிந்தவர் அவனை பார்க்காமல் ஒரு சிரிப்புடன், "என்ன வராத ஆளுங்க எல்லாம் இந்த பக்கம் வர்றாங்க?"

அவரது அழைப்பை எதிர்பாராமல் தானே அவருக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தவன் சதுரங்க காய்களை முதலிருந்து ஆரமிக்க அடுக்கினான், "ஏதோ ஒரு மூலைல நீங்க மட்டும் தனியா ஆட்டம் ஆடி போர் அடிச்சு போய் இருப்பீங்கன்னு தோணுச்சு. அது தான் நீங்க தனியா ஆட வேணாம் எதுத்து ஆட ஒருத்தன் இருக்கேன்னு நியாபக படுத்த வந்தேன்"

அவனுடைய பேச்சில் ஏதோ ஒன்று தெரிய ஆட்டத்தை அவர் தொடங்கினார். தன்னுடைய ரூக் என்றழைக்கப்படும் சிப்பாயை நகர்த்தினார், "என்ன உதய் என்னோட ஆடி ஜெயிக்க முடியும்ன்னு நம்பிக்கை முகத்துல ரொம்ப தெரியுது?" அவர் குரலிலிருந்த கர்வமும் செருக்கும் உதய்யின் அலட்சிய சிரிப்பில் மாண்டது.

"இதுல சந்தேக பட என்ன இருக்குது? நான் தான் ஜெயிப்பேன்... பின்ன படிச்ச படிப்பும் பண்ணுற வேலையும் எதிராளியோட எண்ணம் எப்படி இருக்கும்ன்னு கத்து குடுத்துருக்கே. ஒவ்வொரு காயையும் நகர்தரப்ப எதிரியோடு இடத்துல இருந்து யோசிச்சு அடுத்த மூவ் வைக்கணும். உங்களுக்கே தெரியாம உங்க ஆட்டத்துல என்னோட ஐடியாவ நான் செஞ்சு காட்டுவேன்" என்றவன் உலகின் மிக சிறந்த நகர்வான 'தி குயின்'ஸ் கம்பிட்' என்னும் நார்க்வில் தன்னுடைய கருப்பு சிப்பாயை சதுரங்கத்தின் மத்தியில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்தினான், "இது பேரு, 'தி குயின்'ஸ் கம்பிட்' நம்ம காயி இந்த போர்டு நடுல எவ்ளோ நேரம் இருக்கோ அவ்ளோ நேரம் ஆட்டம் நம்ம கைல. எவன் முதுகில குத்துறான்... எவன் கால வாறுரான்னு இங்க இருந்தா மட்டும் தான் தெரிஞ்சுக்கலாம். எனக்கு சும்மாவே கண்ண நாலா பக்கமும் வச்சுக்க புடிக்கும் இதுல இந்த சாதாரண செஸ்ல வச்சுக்க மாட்டேனா? உங்களுக்கு தெரியாததா?? என்ன மாமா?"

அவர் உதய்யை கூர்மையாக பார்த்து அவன் கூற வரும் செய்தியின் அர்த்தம் முழுமையாக புரியாமல் தன்னுடைய ரூக்கை முன்னேற விடவும் உதய்யின் ஏளன சிரிப்பு அவரை கண்கள் சுருங்க வைத்தது கோவத்தில்.

"நான் சொல்லல?" வாய் விட்டு சிரித்தவன், "பாருங்க என்னால ரெண்டாவது மூவ்லயே உங்க ராஜாவை ஈஸியா தூக்கி போட முடியும்" என்றவன் தன் ராணியின் மேல் ஒற்றை விறல் வைத்து அவரை பார்த்து புருவம் உயர்த்தி சிரித்து பிறகு தன்னுடைய மற்றொரு ரூக்கை நடுவில் வைத்து, "ஆனா பாருங்க ஒரே அடில அடிச்சா உங்களுக்கு என்னோட அடுத்த அடி எப்படி இருக்கும்ன்னு நான் எப்படி காமிக்கிறது? ஆட்டம் சூடு பறக்க எப்பயுமே இருக்கனும். சோ நீங்க உங்க முழு திறமையையும் என்கிட்டே காமிங்க நான் என்னோட ஏனோ தானோ அறிவை வச்சு கொஞ்சம் விளையாடி பாக்குறேன்"

மனதில் ஏதோ வைத்து பேசுகிறான் என்று அவருக்கு புரிந்துவிட அதன் பிறகு தன்னுடைய ஆட்டத்தில் முழு கவனத்தையும் வைத்தார். உதய்யின் ஆட நுணுக்கங்களை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தவரால் பூல'ஸ் மேட் என்னும் நுணுக்கம் கொண்டு யானையை வைத்து அவனது ராஜாவிற்கு செக் மேட் வைத்தார், "உன்ன விட வயசிலேயும் சரி அனுபவத்துலயும் சரி... நான் பெரியவன் உதய்" என்றவர் அவனை வென்று விட்ட பார்வை ஒன்று பார்த்து, "செக் மேட்" என்றார்.

அவரது கூற்றில் மாறாத அவன் முகத்தை பார்த்தவருக்கு மீண்டும் அதிர்ச்சியே, "ம்ம்ம் பூல'ஸ் மேட்? பிண்றீங்க மாமா... நாம நல்ல இருக்கணும்னா ஒருத்தர முட்டாளாக்கி பண்ணனும்னு அவசியம் இல்ல இப்ப என்னையே வச்சுக்கோங்களேன் நீங்க என்ன பண்றீங்க எதுக்காக பண்றிங்கன்னு நல்லா தெரியும் அப்ப என்கிட்டே இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம், இந்த பூல'ஸ் மேட் எல்லாமே வேஸ்ட் தான் பாருங்க" என்று 'தி பிரெஞ்சு டிபன்ஸ்' முறையில் அவருடைய ராணியையும் வெட்டி அவருடைய ராஜாவிற்கும் இரண்டாவது முறையாக செக் மேட் வைத்தான், "இது பிரெஞ்சு டிபென்ஸ் சிம்பிளா சொல்லனும்னா காப்பி அடிப்பேன் நீங்க என்ன பன்னிங்கனாலும் நானும் அத மட்டும் தான் பண்ணுவேன்... நீங்க பனிஞ்சா நா பணியிவேன் நீங்க வெட்டுனா நானும் வெட்டுவேன்... நீங்க என் குடும்பத்துக்குள்ள வந்தா நானும் வருவேன். செக் மேட்"

அதை சற்றும் எதிர்பாராவதர், 'தி ஸ்லாவ் டிபென்ஸ்' முறையை பயன்படுத்த உதய் அவரை பார்த்து மெச்சும் பார்வையோடு, "இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க... உங்களால பலச மட்டும் தான் யோசிக்க முடியும். நா அப்டி இல்ல என்னோட ஒவ்வொரு அடிலயும் எங்க சறுக்கும், எங்க தூக்கி குடுக்கும், எங்க என்னோட ஆளே... ஐ மீன் என்னோட காயே எப்ப என்ன பலி வாங்கும்ன்னு யோசிச்சு, தெரிஞ்சே தான் நகத்துவேன்..." 'மார்ஷல்'ஸ் லெஜென்றி மூவ்' என்னும் நரகர்வை முயற்சித்தான்.

அவர் இந்த முறை அடுத்த காயை நகர்த்த சராசரியாக ஐந்து நிமிடங்கள் பிடித்தது. அவருக்கு தேவையான அவகாசத்தை அமைதியாக அளித்தவன் அவருடைய அடுத்த இலக்கையும் யூகித்திருந்தான். அவன் எதிர் பார்த்தபடியே அவரது மந்திரி காயை 'டெஸ்பேராடோ சாகிரிபைஸ்' முறையில் இழக்க. உதய் சில நிமிடங்கள் யோசனைக்கு பிறகு 'மேயர்'ஸ்' என்னும் முறையை பயன்படுத்தி அவருக்கு மீண்டும் அதிர்ச்சியளித்தான். இவர்களது ஆட்டம் நீண்டு கொண்டே போக நேரமும் கரைந்தது.

ஈஸ்வரனது நிதானமான ஆட்டத்தில் தானே ஒரு சிறு தவறை செய்து உதய் எதிர்பார்த்த இடத்திற்கு அவரது ராணியை வைத்தார். தன்னுடைய குதிரையை வைத்து அவரது ராஜாவிற்கு 'எண்டு கேம்' முறையில் மீண்டும் செக் வைத்தான் உதய். இந்த முறை அவருடைய எந்த அசைவுக்கும் ஐந்து இடங்களில் அவரது ராஜாவை கட்டம் கட்டி நிறுத்தி வைத்திருந்தது அப்பொழுது தான் அவருக்கே புரிந்தது.

"நான் தான் சொன்னேன்ல மாமா... எனக்கு என்ன சுத்தி என்ன நடந்தாலும் தெரியும்... நீங்க என் ராஜாவை தூக்குறேன்னு நெனச்சு நீங்களே அதுல வந்து வான்டடா மாட்டிக்கிங்க இனி நீங்களே நெனச்சாலும் உங்களை காப்பாத்த முடியாது... இனி ஜோரா வெற்றி தான்"

அவன் இது வரை ஒரு முறை கூட சதுரங்கம் விளையாடு பார்காதவருக்கு அவனுடைய அசாத்திய திறமையும் அவன் சிந்தனையின் அளவையும் ஒரு மணி நேரத்திற்குள் புரியவைதான், "ஒரே ஆட்டத்துல மூஞ்சியே மாறிடுச்சே மாமா இனி தானே வேடிக்கையே இருக்கு... இந்தாங்க இன்விடேஷன் சண்டே அப்பா பர்த்டே செலிப்ரரேஷன் வந்து தெம்பா சாப்டுட்டு அடுத்த ரௌண்ட்க்கு ரெடி ஆகுங்க"

மாமா என்னும் வார்த்தையை அரிதாக பயன்படுத்துபவன் ஒவ்வொரு முறையும் மாமா என்று அழைக்கும் பொழுது அவரது சந்தேகம் வலுப்பெற அவனது மறை முகமான இருபொருள் பட்ட பேச்சுகளும் அதிலிருந்த எச்சரிக்கையும் ஆதி
மற்றும் விஷ்ணுவை பற்றி மட்டுமே உதய் அறிந்துக் கொண்டான் என்று சரியாக தவறாக புரிந்துக் கொண்டார்...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Aadhai job ya resign pannidaya 🥴paravailla ne atho plan pannida Pannu success fulla ya varadum😍
Ne feel pannatha tamil gowtham support pannuvaga☺️
Thangachi ku anna mela romba nambigai ❤️
Dai nalla pandra manimehalai ta ennama but potura avalaay confuse aagida 😂😂🙈
Vera level game udhai chess semma ya play pannida🤗 mama negga ini carefull ya iruka Vishnu aadhai kondu udhai athavathu pannidalam matum ninaikathiga😠 romba periya muttal neggatha🤭🤭
Udhai game start Wait and watch eswaran 🤞🤞
Appa birthday celebration ku waiting🥳🥳🥳
 
Top