• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 17 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் – 17

“டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கான் உன் சார் மொத அவன்ட்ட போன குடு” கடும் கோவத்தில் ஆதவன் ஜெயனை திட்ட ஒரு வாறு அவனுக்கு ஆதியை பற்றி தெரிந்திருக்கும் என்று யூகித்தான் ஜெயன்.
“சார் மீட்டிங்ல இருக்காரு சார் எப்ப மீட்டிங்ன்னு தெரியாது”
“நைட் 2 மணிக்கு எந்த கிறுக்கண்டா மீட்டிங் வச்சிட்டு இருக்கான்? உள்ள போய் பாரு அவன் தூங்கிருப்பான்”
“சார்... இல்ல சார்... உள்ளுக்குள்ள வர கூடாதுன்னு சார் சொல்லிருக்காரு”
“டேய் அவன் எந்த கொம்ப வச்சு முட்டுறான்னு நானும் பாக்குறேன். ஆமா ஆதி பின்னாடி உன் ஆளுங்கள ஏவி விட்ருப்பானே இன்னேரம்... எங்க இருக்கான் ஆதி?” அவன் குரலில் இருந்த இறுக்கமும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த ஹார்ன் சத்தமும் அவனது கோவத்தை கூற உண்மையை கூற தயங்கினான் ஜெயன்.
ஜெயனின் அமைதியே அவனுக்கு உண்மை தெரியும் என்று கூற நிதானமான குரலில், “அப்ப அவன் எங்க இருக்கான்னு உனக்கு தெரியும்... சரி எங்க இருக்கான் ஆதி?”
“உதய் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன் சார்” என்றவன் ஆதவனிடம் பேசியபடியே உதய்யின் அறையை நோக்கி சென்றான்.
கதவிற்கு அருகில் வந்ததும் அதை தட்ட பயத்துடன் வெளியே நின்றிருக்க காதில் கத்திக்கொண்டிருந்தான் ஆதவன், “டேய் என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க என் ப்ரண்ட? மவனே நேர்ல வந்தேன் கொன்னு பொதச்சிடுவேன் உன்னயும் அவனையும். அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகிருந்துச்சு இந்த ஆதவன் யாருன்னு உன் ஆளுங்களுக்கு தெரியும்” ஆதவனின் பொறுமையின்மையை பார்க்க எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை என்று உணர்ந்த ஜெயன் கைகள் தானாய் உதய்யின் கதவினை தட்டினான்.
“சார் நாங்க ஒன்னும் பண்ணல சார்... சுச்சுவேஷன் அப்டி உதய் சார் மாமா...” மாதவனுக்கு புரியவைக்கும் எண்ணத்தோடு கூற விளைய,
“மாமா என்ன பண்ணாரு?” மிடுக்காக வந்தது உதய்யின் குரல்.
ஜெயன் காதில், “அந்த ஆளு என்ன மயிரை இங்க கிளிக்கிறான்...” இன்னொரு பக்கம் ஆதவன் கத்தினான்.
இருவரில் யாருக்கு பதில் கூற வேண்டும் என்று தெரியாமல் விழிக்க அவன் கையில் இருந்த அலைபேசியை தா என்று உதய் கேட்டான். யோசிக்காமல் அவனிடம் நீட்ட அதில் இருந்த ஆதவனின் எண்ணை பார்த்து ஒரு யோசனையுடன், “இந்த நேரத்துல எதுக்குடா கால் பண்ணுன தூங்கலையா?”
அவன் கேள்வியில் பதில் கூற விருப்பம் இல்லாமல், “ஆதி எங்கடா?” என்றான் வறண்ட குரலில்.
“அவன் எங்க இருக்கான்னு எனக்கு எப்பிடிடா தெரியும்?” சிறு சிரிப்புடன் கேட்க ஆதவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது.
“செத்துட்டானா இல்ல உயிரோட இருக்கானா?”
உதய்க்கு அதுவரை இருந்த அமைதியான மனநிலை மாறி மீண்டும் வெறுமை குடிகொண்டது அந்த கட்சியை நினைத்தால் கூட இதயம் நின்று விடும் போன்ற எண்ணம்.
“ஆதவா...” பல்லை கடித்து எச்சரிக்கை செய்தான்.
“டேய் சும்மா என் பேர ஏலத்துல விடாம உனக்கு நேர்ல நிக்கிறவன்கிட்ட ஆதி எங்கன்னு கேளுடா” என்றான் எரிச்சலுடன். ஜெயனை பார்க்க அவன் விழிகளில் தயக்கமும் பயமும் குடிகொண்டிருந்தது.
“ஆதி எங்க?” ஜெயனிடம் விழுந்தது கேள்வி
“சார் ஏதோ டிரக் கேஸ்ல அவரை...” கண்களை இருக்க மூடி கோவத்தை கட்டுப்படுத்தியவன், “ஆதி எங்க?” என்றான் கண்களில் கோவத்தை தேக்கி வைத்து.
“K4 போலீஸ் ஸ்டேஷன்ல” அவ்வளவு தான் அவ்விடத்தை விட்டு தன்னுடைய அறைக்குள் மீண்டும் அடைந்தான்.
செல்லும் வழி எல்லாம் நண்பனுக்காக நண்பனிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டே சென்றான் ஆதவன், ‘ஆதி எந்த தப்பும் பன்னிருக்காதடா’
“டேய் இந்த பால் நல்லா இருக்கா பாருங்க” ஒரு அழகான பொம்மை படம் நிறைந்த கால்பந்தை எடுத்து ஆதியிடமும், உதய்யிடமும் முகத்தில் கொள்ளை இன்பத்துடன் கேட்டார் காயத்திரி, உதய்யின் அம்மா.
அவர் கையில் இருந்ததை வாங்கி பார்த்தவன், “என்ன காயத்திரி நான் என்ன இன்னும் கை சூப்பிட்டு இருக்க குழந்தையா ஹி-மேன் படம் போட்டதை எடுத்துட்டு வந்துருக்கீங்க”
“ஏண்டா இந்த பந்துல என்ன குறைய கண்டுட்ட நீயி” சுற்றமும் பார்க்காமல் அவனுடன் சண்டைக்கு வந்தார் அவர்.
அவருடைய முகத்தை பார்த்து சிரித்தவன், “என்ன குறையா? அட காயுமா இத வச்சுக்கிட்டு நா வெளிய விளையாட போனேன்னு வைங்க அப்றம் அமுட்டு பயலுகளும் என்ன சீண்டுவானுக. இதோ இங்க நிக்கிறான் பாருங்க உங்க புள்ளைக்கு வாங்கி குடுங்க” உதய்யை கை நீட்டி கூறினான்.
“ம்ம்ம் நீயும் என் புள்ள தா நியாபகத்துல வச்சுக்கோ அத” என்றவர் கண்டிப்புடன் அவனை பார்த்து முறைத்து அவனிடம் அவர் தேர்தெடுக்க பந்தினை குடுத்து வேறு பக்கம் சென்று விட்டார்.
அவரை நினைத்து சிரித்தவன் உதய்யின் புறம் திரும்ப அவன் ஆதியை தான் முறைத்து நின்றிருந்தான், “எப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன் ஒடனே குடும்பமே கெளம்பி வந்துறாதீங்க. போன வாரம் தான் விவேகானந்தர் (உதய்யின் அப்பா) வந்து போதிச்சிட்டு போனாரு இன்னைக்கும் அனுப்பி விற்றாத டா. தண்ணி கூட குடிக்காம மனுஷன் தம் கட்டி பேசுறாரு இப்டியே பேசிட்டு இருந்தா மனுஷன் வேகமா போய் சேந்துருவாரு சொல்லி வைங்க” என்க உதய் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
“அறிவு கெட்டவனே எப்படி தான் இப்டி லூசா இருக்கியோ. வேற பால எடு”
“தோ பார்றா துறை சொல்லிட்டாரு இந்த பொம்மை கூட நல்லா தான் இருக்கு நான் இதையே எடுத்துக்குறேன்” என்றான் ஆதி.
அவனை உதய் முறைக்க, ‘இதுக்குமேல இங்க நின்னா கண்டு புடிச்சிடும் பயபுள்ள’ என்று காயத்திரி சென்ற திசையில் அவரை சமாதானம் செய்ய சென்றான் ஒன்றும் தெரியாதவன் போல்.
ஆனால் அவனுக்கு தெரியும் உதய் தன்னை இன்னேரம் அறிந்திருப்பான் என்று. இன்றோடு ஆதியின் தாய் தந்தை இறந்து இரண்டு மாதங்கள் ஆகிற்று. வீட்டினுள் ஒன்றரை மாதங்களாய் அடைந்து கிடந்தவனை கடந்த ஒரு வாரமாக தான் அவன் நண்பர்கள் வெளியில் இழுத்து வந்தனர். அவனது கவனத்தை முழுவதும் திசை திருப்பும் திறன் இந்த கால் பந்திற்க்கு மட்டுமே என்றறிந்து கயாத்திரியும் உதய்யும் அவனை இங்கு அழைத்து வந்தது.
இங்கு வந்தும் எந்த பொருட்களையும் வாங்காமல் இருந்தவனுக்கு தானே முன் வந்து பொருட்களை தெரிந்தெடுக்கு கொடுக்கும் பணியை செய்தார் காயத்திரி. ஆனால் அவர் எதை எடுத்தாலும் அதன் விலையை பார்த்து நிராகரித்தவன் அந்த கார்ட்டூன் பந்தை வாங்கி கொள்வதன் காரணம் அதன் விலை மலிவு என்பதால் மட்டுமே.
ஆதி சென்றதும் நல்ல கால்பந்தை எடுத்து உதய் பில் போட குடுக்க அதை ஆராய்ந்த ஆதி, “டேய் பரவால்லயே நீயும் நல்லா தான் சூஸ் பண்ற. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்” என்றான்.
“ம்ம்ம் அப்றம் நீ அடிக்கிற அடிக்கு இது தான சரி வரும்”
சட்டென அவன் கூறியது புரிய கோவம் கண்ணை மறைத்தது ஆதிக்கு, “என்னடா இரக்கப்பட்டு பிச்சை போடுறியா?”
அவனது ஆத்திரத்தை புரிந்து நிதானமாக, “பிச்சை இல்ல இத்தனை வருஷம் எனக்காக இந்த ஒடம்பு தான ரத்தம் சிந்துச்சு அத தான் இப்டி கடன் அடக்கிறேன்” தீர்க்கமாக உதய்யை பார்த்து முறைத்து அவன் கையில் இருந்த பந்தை வாங்கி வெளியே சென்று விட்டான்.
அவன் சென்ற திசையிலேயே பார்த்து நின்ற உதய்யின் பின்னால் இருந்து வந்தது கயாத்திரியின் குரல், “டேய் உதய் இத பாரேன் உன் தம்பிகளுக்கு இது புடிக்குமான்னு?” கையில் இரண்டு பந்துடன் வந்து நின்றார் கயாத்திரி, இந்த இரண்டும் பொம்மை போட்டவையே.
அவரை பார்த்து சிரித்தவன், “மா நீங்க சின்ன புள்ளையா இல்ல அவனுக சின்ன பசங்களான்னு எனக்கு தெரியல. இப்ப எதுக்கு அவனுகளுக்கு? போன வாரம் தான அப்பா வாங்கிட்டு வந்தாங்க?”
“ம்ம்ம் எல்லாம் இந்த ஆதிய...” என்று நிறுத்தியவர் ஆதியை உதய்யின் பின்னால் தேடினார், “என்னப்பா ஆதி எங்க?”
“வெளிய நிப்பான் மா”
“ம்ம்ம்ம் அவனை சொல்லணும் நேத்து வீட்டுக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் குப்பை தொட்டிலை இருந்து தூக்கிட்டு வந்தாங்கனு ஹரி, விஷ்ணுகிட்ட சொல்லிட்டு போய்ட்டான். அந்த ரெண்டு வாண்டும் நம்பிருச்சு. ஒரே அழுகை நேத்து. நான் தான் பந்தும், கலர் கோழியும் வாங்கி தரேன்னு சொல்லி சமாளிச்சு வச்சிருக்கேன்”
ஆதியின் சேட்டையை கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டான் உதய். இது தான் உதய். அவனை சுற்றி என்ன நடந்தாலும் அவன் எண்ணம் முழுதும் ஆதியிடமே வந்து நிற்கும் இறுதியில். அதுவே ஆதியின் உலகிலும் விடியலும் இரவும் உதவியுடன் தான் நேரம் அனைத்தையும் செலவிடுவான்.
ஆனால் அன்று பந்தை வாங்கி சென்றவன் அடுத்து இரண்டு நாட்கள் உதய்யின் கண்ணில் படவே இல்லை. நண்பர்கள் நால்வரும் அவனை தேடாத இடம் இல்லை... தெரு தெருவாக தேடினர் அவர்கள் வழக்கமாக செல்லும் இடம் இல்லாமால் மற்ற இடங்களுக்கும் சென்றனர். சிறு வயது என்பதால் பெரியவர்களிடம் கூறும் எண்ணம் கூட எழவில்லை. ஒரு புறம் அவன் உயிரை எடுத்திருப்பானோ என்ற எண்ணம் கூட உதித்தது. ஆனால், உதய் அதில் தெளிவாக அவன் செய்திருக்க மாட்டான் என்று இருந்தான்.
நேரம் செல்ல செல்ல மனதில் பயம் எழ உதய் அவன் மாமாவிடம் அடைக்கலம் தேட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டான். அவன் நம்பிக்கையை வீணாக்காமல் அவன் இருக்கும் இடம் உதய்யின் தாய் மாமன் மூலம் உதய்க்கு நள்ளிரவில் தெரிந்தது. ஆனால் அந்த இடத்தை கேட்டு மனதில் உடைந்து போனான் உதய்.
“மாப்பிள்ளை நீ இரு... நா ஆள வச்சு கூட்டிட்டு அவன் வீட்டுல விட்றேன்” என்றார் ஈஸ்வரன்
“இல்ல மாமா நா அவனை பாக்கணும். நீங்க இடத்தை மட்டும் சொல்லுங்க” அழுத்தமாக அவன் கேட்க வேறு வழி இல்லாமல் அவனிடம் இடத்தை கூறி அவர் ஆட்களை அவனுக்கு துணைக்கு அனுப்பி வைத்தார்.
அவர் கூறிய இடத்திற்கு தனது சைக்கிள் மூலம் வந்தவன் அதை அந்த தெருவின் கோடியில் நிறுத்தி ஒரு வித அச்சத்துடன் சென்றான். முதல் முறை வருகிறான் இதுவே இறுதி முறையாக இருக்கவும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டே சென்றான். அந்த கடையை நெருங்க நெருங்க வயிற்றில் ஏதோ புரட்டுவது போன்ற பிரம்மை.
அந்த இடத்தின் வாசனை உவப்பாய் இருந்தாலும் உள்ளே தன்னை மறந்து மதுபானத்தில் மயங்க போகும் நண்பனை அதிலிருந்து விடுவிக்க ஐம்புலன்களையும் அடக்கி மெதுவாய் உள்ளே சென்றான். அவன் செல்கையில் அவனை தாண்டி சென்ற இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தள்ளாடிய நிலையிலும் உதய்யை பார்த்து உறவு காரனை பார்த்து சிரிக்கும் சிரிப்பை உதிர்க்க ஆதி மேல் அவனுக்கு கோவம் கூடியது.
உதய்க்கு ஓரளவிற்கு விவரம் தெரிந்ததுமே காயத்திரி அவனுக்கு மதுபானத்தின் வீரியத்தை கூறி இருக்கிறார். அந்த கொடிய பானத்தால் அவருடைய தந்தையின் இல்லபை எவ்வளவு வலியுடன் அவர்கள் கடக்க வேண்டி இருந்தது என்று அவனுக்கு கூறி கூறி வளர்த்ததால் அவனுக்கு அதன் மேல் பதின் பருவத்திலும் என்றும் நாட்டம் இருந்தது இல்லை. ஆனால் இன்று தெரு முழுவதும் தன்னை மறந்து ஆங்காங்கே கிடக்கும் ஆண்களை பார்க்க சிறிதும் ஜீரணிக்க இயலவில்லை.
நடுங்கிய கால்களுடன் அந்த டாஸ்மார்க் உள்ளே சென்றவன் கண்கள் அந்த களைந்து கிடந்த அரை முழுதும் நோட்டம் விட அங்கு எங்கும் ஆதி இல்லை. வேகமாக அவனுக்கு தெரிந்த கதவின் வழியில் செல்ல ஆதியின் குரல் அந்த பெரிய காலி இடத்திலிருந்து வந்தது. அரை இருளில் முழுவதும் அவன் உருவம் தெரியவில்லை என்றாலும் ஆதி தரையில் கிடப்பது தெரிந்தது. அதுவும் ஒருவனின் காலை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தான்.
பதட்டத்தில், “ஆதி” என்று அழைத்தான் உதய்.
உதய்யின் பேச்சு ஆதியின் காதில் விலவே இல்லை, “அண்ணா குடுங்க ண்ணா நான் எப்டி நாலும் காசு தந்துருவேன். ஆனா, அந்த செயின மட்டும் குடுத்துருங்க ண்ணா”
தான் பார்ப்பது ஆதி தானா என்ற சந்தேகம் அவனுள் வேரூன்றியது... எப்பொழுதும் வயது பாராமல் சண்டைக்கு செல்பவன் இன்று ஒருவன் காலடியில் கெஞ்சிக் கொண்டிருப்பது ஏதோ உயிரின் ஒரு பகுதியை பிசைவது போன்று இருந்தது.
வேகமாக அவனை நோக்கி சென்று அவன் தோளை புடித்து பின்னால் இழுத்தான், “டேய் ஆதி என்ன டா பண்ற நீ” என்று.
அவனை துளியும் சட்டை செய்யாமல் உதய்யின் கையில் இருந்த அவன் சைக்கிள் சாவியை பிடிங்கி அவனுக்கு எதிரில் இருந்த நபரிடம் கொடுத்து, “இந்தாங்க இததத... வச்சி...வச்சிட்டு எனக்கு அந்த செயின் தா...ங்க”
ஆதி சுத்தமாக சுயநினைவில் இல்லை... ஆனால் ஆதியின் கழுத்தில் எப்பொழுதும் இருக்கும் வெள்ளி செயின் அவன் கழுத்தில் இல்லை. அது உதய், ஆதியின் கடந்த வருட பிறந்த நாளிற்கு பரிசளித்தது. இதற்காகவா எவனோ ஒருவன் காலில் விழுந்து கிடக்கிறான்?
நண்பனின் நிலை பார்க்க முடியாமல் சினம் தலைதூக்க,”டேய் இப்ப நீ எந்திரிகல உன்ன கொன்னு போட்டுருவேன்” என்று அவனை மீண்டும் அந்த மனிதனிடமிருந்து பிரித்தெடுக்க போராடினான்.
உதய்யுடன் வந்த ஆட்கள் அங்கிருந்த மற்ற இருவரிடம் என்ன நடந்ததென்ன கேட்டு கொண்டிருக்க அதில் வந்த பதிலில் சிலையாய் மாறி நின்றான் உதய்.
“யோவ் இப்ப எதுக்கு இங்க சலம்பிட்டு இருக்கீங்க... அவன் போதை கேட்டான் குடுத்தோம் இப்ப துட்டு தராம எங்களை பாடா படுத்துறான். காசு இல்ல ஆனா கோவம் மட்டும் அவன் அம்மா மேல கை வச்ச மாதிரி வரு...”
அந்த மனிதன் மீதி பேசும் முன் உதய் அவன் கன்னத்தில் ஓங்கி குத்தி இருந்தான்... அந்த சிறுவனின் கை அவன் மீது பெரிதாக வலி கொடுக்காவிட்டாலும் ஒரு மனிதனிற்கே உரிய கெளரவம் உதய்க்கு அந்த அடியை மீண்டும் கொடுத்தான்.
அவ்வளவு நேரம் தரையில் கிடந்த ஆதி, நண்பன் மீது ஒருவன் கை வைத்ததும் அடங்காத காளையாய் எழுந்து அங்கிருந்தவர்களை தன்னால் முயன்ற அளவிற்கு அடிக்க ஆரமித்தான்... அதில் ஒருவன் கோவத்தில் ஆதியை கத்தியால் குத்த வர அதை கவனித்த உதய் அவனை தரையில் சாய்க்க மற்றொருவன் உதய்யின் கையில் கத்தியை கொண்டு பலமாக காயம் ஏற்படுத்தினான்... அதற்குள் அங்கு நடந்த கலவரம் தெரிந்து மற்றவர்கள் உதய்யை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்...
உதய்யின் ரத்தம் படிந்த கையை பார்த்த ஆதி நின்ற இடத்தில உறைந்தான்.
பிறகு இரண்டு வாரங்கள் தனக்கு அருகில் ஆதியை உதய் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து தனது உறவுகளின் பிரிவினை தாங்க இயலாது கயாத்திரியின் மடியில் படுத்து அழுகையில் கரைந்தான்.
“ஏன் மா எனக்கு மட்டும் இப்டி எல்லாம் நடக்குது? அப்பா போனத முழுசா ஜீரணிக்கிறதுக்குள்ள அம்மா ஒரே மாசத்துல போய்ட்டாங்க. சந்தோசத்தை மட்டும் வாரி வாரி குடுத்துட்டு இப்புடி மொத்தமா ரெண்டு பேரும் எடுத்துட்டு போய்ட்டாங்க. இது வரைக்கும் ஒரு அஞ்சு ரூபா காசு எப்டி வருதுன்னு எனக்கு தெரியாது... நேத்து வீட்டுல சோப்பு தீந்து போச்சுன்னு சஹானா சொன்னா நா காசுக்கு எங்க போவேன் மா? அடுத்து பால்காரு வந்து நிக்கிறாரு...
பசிக்கிதுன்னு சஹானா வந்து என் முகத்தை பாக்குறப்ப அப்டியே செத்துரலாம் போல இருக்கு மா... இப்டி தெனமும் ஒன்னு ஒன்னு. இந்த எல்லா பிரச்னைலயும் இருக்குற ஒரே ஆறுதல், ‘பாத்துக்கலாம் விட்றா’-னு என் தோள்ல கை போட்டு சொல்ற அவன் ஒரு வார்த்தை மட்டும் தான். ஆனா இப்ப அதுவும் இல்ல. பேசாம நீங்க சஹானாவை தத்தெடுத்துக்குறீங்களா நா எங்கயாச்சும் போய்டுறேன்” என்றவன் கண்களில் இருந்த கண்ணீரும்,மொழியில் இருந்த வலியும் அவனை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த உதய்யின் கண்களிலும் நீரை வர வைத்தது.
“என்னடா லூசு மாதிரி பேசிட்டு இருக்க” கயாத்திரியின் கண்களும் கலங்க ஆரமித்தது அவன் பேச்சில், “அவ உன் தங்கச்சிடா நீ வெறும் தண்ணிய குடுத்தா கூட குடிச்சுக்குவா. அப்டி அவளை நா தத்தெடுக்கணும்னா நீயும் இந்த வீட்டுக்கு வந்துரு. உன்ன மட்டும் தனியா விட்டுட்டு நாங்க இங்க தெனம் தெனம் மனசுக்குள்ள செதுக்கிட்டு இருக்கவா? ஆனாலும் நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு ஆதி. அது தான் உதய் உன்கிட்ட இன்னும் பேசாம இருக்கான்”
“மா இனிமே இந்த மாதிரி எதுவும் நா பண்ண மாட்டேன் மா. என்ன அடிக்க கூட சொல்லுங்க ஆனா இப்டி பேசாம மட்டும் இருக்க சொல்லாதீங்க என்னமோ மனசு ரொம்ப வலிக்கிது. இவன் பேசாதனால அவனுகளும் பேச மாட்டிக்கிறாங்க. ப்ளீஸ் மா பேச சொல்லுங்க... நீங்க சொன்னா கண்டிப்பா அவன் கேப்பான்” என்று அவர் கைகளை புடித்து கெஞ்சியவனை இனி அழுகையில் பார்க்க விரும்பாது அழுந்த தன் கண்களை துடைத்து ஆதியை அழைத்தான்.
“டேய் அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? மேல வா” அவன் குரல் கேட்டதும் மீண்டும் உயிர் பெற்றவன் போல் மாடி படியை நோக்கி ஓடியவனை மீண்டும் உதய் தடுத்தான், “நில்லு...”
ஆதி கேள்வியாய் அவனை பார்க்க, “இனிமே இந்த மாதிரி நடந்தது அன்னையோட இந்த உதய் உன் வாழ்க்கைல இல்ல. போதைனு ஒன்ன இனி தொட மாட்டேன்னு நீ உறுதியா இருந்தா மேல வா” இந்த குரலை கேட்க தானே தவமாய் இருந்தான்? அதனால் யோசிக்காமல் நண்பனுக்கு செய்யும் சத்தியமாக படியில் கால் வைத்து மேல தாவி சென்றான்.
அந்த உயர் ரக கார் தார் சாலையில் பெரும் கீச்சலுடன் அந்த போலீஸ் ஸ்டேஷன் முன்னாள் வந்து நின்றது. அதிலிருந்து வேகமாக இறங்கிய ஆதவன் தனது கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டு வெளியில் நிற்கும் உதய்யின் ஆட்களை தீ பார்வை பார்த்து எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். மணி மூன்று அதனால் ஆள் அரவமற்று காட்சியளித்தது அந்த இடமே.
உள்ளே சென்றவன் அங்கு தூங்கிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரை பார்த்து கோவம் கண்களை மறைத்தது. பல்லை கடித்து அங்கிருந்த கணினியை தூக்கி எறிந்தான். அதில் பதறி எழுந்த இன்ஸ்பெக்டர் இவனை பார்த்ததும் கண்களை துடைத்து, “சார் நீங்களா?” என்றான் அதிர்ச்சியில். அங்கு இருந்த மற்ற காவல்துறையினர் ஆதவனை தாக்கும் பொருட்டு நெருங்கி வர அவர்களை தன் பார்வையாலே நிறுத்தி வைத்தான்.
“வேற் ஐஸ் ஹி?” அவனது அழுத்தமான ஆளுமை நிறைந்த குரல் அந்த இடத்தையே அசைத்து பார்த்தது உண்மை தான்...
“லாக்கர்ல இருக்கான் சார். நாளைக்கு கண்டிப்பா உதய் சார் சொன்ன மாதிரி எப்.ஐ.ஆர் போற்றலாம் சார் ஒரு த்ரீ ஹௌர்ஸ் வெயிட் பண்ணுங்க அடுத்து ரெண்டு வருஷம் வெளியவே வர முடியாத மாதிரி ரெண்டு மூணு கேஸ் சேத்து போட்றேன் சார்...”
தனது அமைதியை சிறிதும் இழக்காமல் மெதுவாக அந்த இன்ஸ்பெக்டர் அருகில் சென்று நின்றவன் அவன் உயரத்திற்கு கீழே பார்த்து, “எங்க பண்ணுடா பாக்கலாம்” என்றான் சவால் விடும் பொருட்டு.
அவன் பதிலில் குழம்பிய அந்த இன்ஸ்பெக்டர், “சார்...” என்றான் பயத்தில்.
“ம்ம்ம் போடு ரெண்டு வருஷம் ரொம்ப கம்மி பாத்து வருஷம் உள்ள இருக்க மாதிரி போடு விடு... ஆனா அவன் உள்ள இனி இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் வேலை உன்ன விட்டு தூரமா போயிட்டே இருக்கும்... டேய் ஆதி வாடா” என்றான் நண்பன் எங்கிருக்கிறான் என்று தெரியாமலே...
“முடியாது” மிகுந்த சோர்வுடன் ஆனால் உறுதியுடன் வந்தது ஆதியின் மெல்லிய குரல் ஆனால் ஆதவனின் ஆளுமையான பார்
வையில் அந்த அமைதியான இரவில் அது தெளிவாக அங்கிருந்த அனைவர் காதிலும் விழுந்தது.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
ஆதியின் பேச்சு கேட்டும் அவன் புறம் திரும்பாமல், “போய் அவனை தொறந்து விடு” என்றான் ஆணையாய் மூர்க்கமான குரலில்...
“சார் லாக்கர்ல இருக்க கிரிமினல இப்டி வெளிய விட முடியாது சார்” என்றான் அந்த இன்ஸ்பெக்டர் பயத்துடன்.
“ஓ அப்ப எப்.ஐ.ஆர் எடு”
ஒரு நடுக்கத்துடன், “இல்ல சார் எப்.ஐ.ஆர் இன்னும் போடல”
“ஒகே அப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?” ஆதவன் கேள்விகளை கேட்க ஆரமித்த பொழுது அங்கே அவன் நண்பன் ஒருவன் வக்கீலுடன் வர அவன் பின்னாலே ஜெயன் பதட்டத்துடன் வந்தான்...
“சார் அவரு கஞ்சா வித்துருக்காரு அவர் பாக்கெட்ல இருந்து நானே எடுத்தேன்” என்றான் ஒரு வித தைரியத்தை வரவழைத்து...
“ஆதாரம் எடு”
திருட்டு முழி முழித்தவன், “சார் நா என் கண்ணாலேயே பாத்தேன் சார் கான்ஸ்டபில் தா செக் பண்ணுனாரு” என்றான் அந்த இன்ஸ்பெக்டர்...
“ஆதாரம் எடு” என்றான் மீண்டும் தான் புடித்த புடியிலேயே...
“டேய் நீ அப்றம் பேசு... யோவ் எங்கயா அவன்? அவன் மேல கை மட்டும் வச்சிரு அடுத்த நிமிஷம் உன் ஒடம்புல கை இருக்காது” ஆத்திரமாய் ஆதவன் கர்ஜிக்க அந்த இன்ஸ்பெக்டர் துணை இல்லாது விழித்தான்...
விழி பிதுங்கி செயலற்று நின்றான்... ‘அதுவும் ஆதியின் நிலையை பார்த்தல் நிச்சயமாக ஆதவனின் எச்சரிக்கை படியே கையுடன் சேர்த்து தலையையும் எடுத்து விடுவார்களே...’ பயம் உச்சந்தலைக்கு ஏற, உடல் நடுங்க ஆரமித்தது...
“லாக்அப்-ல இருக்கான் சார்...”
ஆதவன் வேகமாக அந்த இன்ஸ்பெக்டர் காண்பித்த லாக்அப்பிற்குள் உள்ளே சென்றான்... உள்ளே சென்றவன் ஆதியின் நிலையை பார்த்ததும் அதிர்ந்து நின்றுவிட்டான்...
ஒரே நொடி தான் சென்ற வேகத்திலேயே வந்தவன் அந்த இன்ஸ்பெக்டரின் சட்டை காலரை கொத்தாக பற்றி தரையிலிருந்து ஒரு அடி மேலே தூக்கி, “என்னடா பண்ணி வச்சிருக்க அவன....” ஆதவனின் கர்ஜனையை அந்த இடமே அதிர்ந்தது...
“ஜெயன் டாக்டர்” ஆதவனின் உத்தரவை ஜெயன் நொடியில் செய்துவிட ஆதவனை அந்த இன்ஸ்பெக்டரிடம் பிரித்து நிறுத்தினான்...
ஆதவனின் அக்னி பார்வையை சமாளிக்க இயலாது நடுக்கத்துடன், “சார் நா எதுவும் பண்ணல சார் ஈஸ்...”
“ஆட்டத்த நீ ஆடிட்ட இனி இத நா முடிச்சு வைக்கிறேன்”
தனது அலைபேசி எடுத்தவன் ஒரு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பி ஆதி இருந்த செல் நோக்கி வேகமாக சென்ற ஐந்தாவது நிமிடம் அந்த இன்ஸ்பெக்டர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக தொலைநகல்(fax) வந்து அவன் வேறை ஆட்டியது...
சிட்டாக விரைந்த ஆதவன், ஆதி இருந்த கோலத்தை பார்த்து பதறினான்... சுவற்றில் சாய்ந்து முட்டியை மறுப்புக்கு முட்டு கொடுத்து சுவற்றை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான் ஆனால் அவன் உடலில் இருந்த ரத்த காயங்கள் அப்பட்டமாய் வெளியில் தெரிந்தது... நெற்றியில், கைகளில், வலது கன்னத்தில், காக்கி கால்ச்சட்டையை தாண்டி வழிந்த ரத்தம் என ரத்த களறியாய் இருந்தவனை பார்த்து உடலே நடுங்கியது உதய்க்கு... ஆனால் ஆதியோ எந்த உணர்ச்சியையும் கண்களில் காட்டாமல் ஜடமாய் அமர்ந்திருந்தான்...
“ஜெயன் டாக்டர் எங்க?” பதட்டத்துடன் ஜெயனிடம் தன் கோவத்தை இறக்கினான்...
“சார் இப்ப வந்துருவாரு சார்” என்று ஜெயன் மீண்டும் அந்த மருத்துவருக்கு அழைக்க வெளியில் சென்றுவிட...
தன்னையே மிரட்சியுடன் பார்த்து நின்ற கான்ஸ்டபிளிடம், “பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க?”
“ஆஹ்??” அவன் பேசியது விழியில் விழுந்தாலும் காதில் விழவில்லை அவன் சற்று முன்னர் நிகழ்த்திய அதிரடியால்...
“பர்ஸ்ட் எயிட்” என்று கத்தினான்... இரண்டே நொடியில் அந்த கான்ஸ்டபில் முதலுதவி பெட்டியுடன் வந்து நின்றான்...
அதிலிருந்த காட்டனை எடுத்து முதலில் ஆதியின் நெற்றியில் இருந்த ரத்தத்தை துடைக்க சென்றவன் கைகளை ஆதி தட்டி விட்டான்...
தன் மீது கோபமாக இருக்கிறான் என்று மீண்டும் அதை துடைக்க செல்ல இப்பொழுதும் ஆதி அவன் கையை தட்டி விட்டான் அதில் கோபத்துடன், “என்னடா நெனச்சிட்டு இருக்க நீ மூடிட்டு அமைதியா இரு” குரலை உயர்த்தி ஆதியை அடக்க நினைத்தான் ஆதவன் ...
ஆனால் ஆதி அதற்க்கு சற்றும் அசராமல், “வெளிய போ” நிதானமாய் ஆனால் அழுத்தமாய் இருந்தது. முதல் முறை ஆதவனின் நெருக்கத்தை ஆதி தவிர்க்க விரும்பினான் ஏதோ அவனை பார்க்கவே புடிக்கவில்லை.
“அமைதியா இருடா எதுவா இருந்தாலும் அப்றம் பேசிக்கலாம்” ஆதிக்கு பதிலளிக்க நேரம் கொடுக்காமல் அவன் ரத்தத்தை துடைத்து விட்டான்... இம்முறை அவன் கையை மெதுவாக தள்ளி நிறுத்தியவன் சற்று நகர்ந்து அமர்ந்து, “பேசுறதுக்கு ஒன்னும் இல்ல நீங்க போங்க மிஸ்டர் ஆதவன்”
“சரி நா பேசல பிளட் வந்துட்டே இருக்கு டாக்டர் வர்ற வரைக்கும் அமைதியா இரு அவர் வந்ததும் அவரே உனக்கு டிரீட்மென்ட் குடுப்பாரு” ஏற்கனவே முதுகில் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்பு தான் வெட்டு காயத்துடன் உயிர் பிழைதான் இப்பொழுது மீண்டும் இந்த நிலையா என்று உதய்யின் உள்ளம் மடிந்து கொண்டிருந்தது... காலையில் பேசியது, அவன் மேல் ஆண்டுகளாய் இருந்த கோபம் என அனைத்தையும் தூக்கி எரிந்து அவன் முன் அமர்ந்து இருந்தான்.
அவ்வளவு நேரம் சுவற்றை பார்த்து அமைத்திருந்தவன் இப்பொழுது ஆதவன் புறம் திரும்பி இளக்காரமாக சிரிப்பை உதடுகளில் வைத்து கண்களில் வெறுப்பும் ஏமாற்றத்தையும் வைத்து, “ஓஓ போலீஸால முடியலன்னு டாக்டர் வச்சு என் கதையை முடிச்சிரலாம்னு அவன் சொல்லி அனுப்புனானா?” மிஸ்டர் ஆதவன் என்று தன்னை மூன்றாம் மனிதர் போல் பெயரை கூறி அழைத்த பொழுதே பாதி உடைத்திருந்தவன் இப்பொழுதும் முழுதும் உடைந்திருந்தான்
அப்பொழுது தான் வக்கீலுடன் பேசி முடித்திருந்த ஜெயன் அந்த வந்த பொழுது ஆதியின் வார்த்தை தீயாய் அவனுள் இறங்கியது... அவன் பேச்சில் இருந்த கோவமும் வெறுப்பும் புரிந்தவன் முதலில் ஆதவனின் முகத்தை தான் பார்த்தான்...
“என்னடா பேச்சு இது?” ஆதவன் அதட்டல் மொழி எதுவும் ஆதியின் செவியில் விழவில்லை.
“உண்மை தான இவனுக்கு...ஸ்ஸ்ஸ் சாரி சாரி இவருக்கு ஆளுங்கள கொல்லுறது புதுசு இல்லையே...”
“ம்ம்ம் சரி தான் ஆனா அவன் இப்ப முடிவை மாத்திட்டான். தன்னோட எதிரி பலசாலியா இருக்கனும்னல” என்று ஆதியின் கையை பிடித்தவன் அதிலிருந்த ரத்தத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தான் ஆதவன் முகம் மட்டும் அவனை பார்த்த தவிர்த்து அவன் கைகளில் இருந்த ஆழமான காயத்தை பார்த்து என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியாதவன் ஆதியின் கோவத்தை எல்லாம் கண்டுகொல்லாமல் அவனுக்கு முதலுதவி செய்ய மட்டுமே முனைப்பாய் இருந்தான்,
“அதுக்காக தான் இப்ப உன்ன காப்பாத்த நெனக்கிறான். அதுவும் இல்லாம உன்ன நம்பி வீட்டுல ஒரு பொண்ணு இருக்கு அதுக்காக மட்டும் தான் உன்ன இப்ப விடுறான். சீக்கிரம் சரியாகி வாங்க ஆதி கேசவன் அவனை முழுசா தெரிஞ்சிகிட்ட ஒருத்தன் தான் தனக்கு எதிரியா இருக்கது தான் அவனுக்கு பெருமை”
“இல்ல அவனை இந்த உலகத்துல யாராலயும் முழுசா புரிஞ்சிக்க முடியல... இத்தனை வருஷம் என்னோட கணக்கு எல்லாமே தப்பா தான் போயிருக்கு... எனக்கு நல்லா தெரிஞ்சவன் குடும்பத்தை பாதிலேயே விட்டுட்டு வர மாட்டான், உயிருக்கு உயிரா நெனச்ச பிரன்ட பலி வாங்க துடிக்க மாட்டான்” கோவத்தின் உச்சத்தில் இருந்தவன் முதல் முறை தன் உயிருக்கு நிகராக நினைக்கும் நண்பன் கண்ணீருக்கு தானே காரணம் ஆனான்...
ஆதி பேசியதை அனைத்தும் ஜெயன் மூலம் கேட்டுக்கொண்டிருக, ஆதியின் வார்த்தை இதயத்தை கிழிக்க ஒரு சொட்டு கண்ணீர் உதய்யும் அறியாமல் கீழே சிந்தியது நொடியில் சிரிப்பில் அதை உள் வாங்கினான், “நீங்க வேனனும்னா என்ன கொல்லுறதுல இருந்து பின் வாங்கியிருக்கலாம் ஆனா நா செத்துட்டேன்... எல்லாத்தையுமே மனசலவுல யோசிச்சு யோசிச்சு செய்றவன் போய்ட்டான். இனி இந்த ஆதி கிறுக்குத் தனமா இருக்க போறான் நீங்க என்னலாம் நா பண்ண மாட்டேன்னு நெனைக்கிறிங்களோ அதெல்லாம் இனி பண்ணுவேன்... இனி உங்களோட ஆட்டத்தை அழிச்சிட்டு தான் இந்த ஆதி ஓயிவான்”
‘சோப்பா போதும்டா சாமி’ மனதில் நினைத்த உதய் இணைப்பை துண்டித்திருந்தான்.
“எப்படி சார் அடுத்தவங்க தூக்கத்தை அவனை மாதிரி மனுசங்க எல்லாம் மொத்தமா எடுத்துட்டு நிம்மதியா தூங்குறாங்க...?”
“அவனை வீட்டுக்கு பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வீட்டுக்கு போங்க... நான் வீட்டுல இல்ல, என்னை தேடி எங்கையும் போக வேணாம் ஜெயன்” ஜெயனிடம் குறுந்செய்தி மூலம் உத்தரவிட்டவன் தனது காரினை தனது தாயின் கல்லறைக்கு விரைந்தான்... மனதில் உள்ள பாரம் தீர கரையும் ஒரே இடம் அவன் தாய் மாடி தானே.
இங்கே ஆதியின் காயத்திற்கு காயமிட்ட ஆதவன் ஆதியிடம் மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவனுக்கு இந்த நிலையில் யாருக்கு உறுதுணையாய் நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது ஆதி எதையோ தவறாக நினைத்திருக்கிறான்... அதே நேரம் உதய்யின் மனது பெரிதும் காயப்பட்டிருக்கும் என்றும் அவன் அறிவான்.
“என்னடா அவன் பண்ணத சொல்லி காமிச்சா உனக்கு கோவம் வருதா?”
“…..”
“பேசுடா உன்கிட்ட தான கேக்குறேன்” – ஆதி
“முதுகுல எதுவும் வலி இருக்கா?” – ஆதவன்
“ஓஓ பேச்ச மாதிரியா சரி தான் இத்தனை வருஷம் அவன் கூட இருந்துருக்கல அவன் புத்தி உனக்கு கொஞ்சமாச்சு வரலாமா இருக்குமா என்ன?” – ஆதி
“அவனை பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு இப்ப இப்டி பேசிட்டு இருக்க?” நிதானமாய் கேள்வி கேட்டான் ஆதவன்... கோவமாய் இருக்கும் ஆதியை சமாளிக்க கோவத்தை கையில் எடுத்தால் நிச்சயம் அது தவறான பாதையில் தான் முடியும் அதனாலே இந்த அமைதி. இல்லையெனில் ஆதவன் விரல்கள் ஆதியின் கன்னத்தை பதம் பார்க்க தயங்காது.
“அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் ரொம்ப நல்லா தான் தெரியும் கூட நான் எங்கையோ செத்துட்டு இருக்கேன்னு தெரிஞ்சு நிம்மதியா அவன் தூங்குவானே அதுக்கு என்ன அர்த்தம்?” – ஆதி
ஆதியின் வார்த்தைகள் அனைத்தும் ஆதவனை குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்கியது... அவன் படும் வேதனைகளை வெளியில் தெரிய கூடாதென்று சத்தியம் அல்லவா வாங்கியிருக்கிறேன் அந்த அழுத்தக்காரன்.
ஆதியை கை தாங்கலாய் தூக்கியவன், “நீ அவனை தெரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தான்... என்னமோ சொன்ன அவன் நிம்மதியா தூங்க போறான்னு... உனக்கு எங்கடா தெரியும் அவன் தூக்கத்தை பத்தி” அந்த நேரம் சரியாக மருத்துவர் வந்திருக்க அவன் காயங்களை ஆராய்ந்தவர் ஆன்டிசெப்டிக் ஊசியும், ப்பைன் கில்லர் ஒன்றும் குடுத்து அவன் முதுகில் இருந்த காயத்தை ஆராய்ந்து அவனை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.
ஆதியின் வீட்டிற்கு அலைந்து வந்த ஆதவன் அவனை வீட்டிற்குள் படுக்க வைத்து சஹானாவிடம், “உன் அண்ணனை வாய கொறச்சு பேச சொல்லு இல்ல வாய ஒடச்சிருவேன்... என்னமோ பெரிய வில்லன் ரேஞ்சுக்கு பேசுறான்” என்ன நடக்கின்றது என்று தெரியாமல் விழித்தவள் கண்களிலிருந்து ஆதியின் நிலையை பார்த்து கண்ணீர் ஆர்ப்பரித்தது அதை பார்த்தவன் தன்னை நிதானித்து அவளிடம் எதுவும் பேசாமல் கோவமாக கதவை சாத்தி சென்றுவிட்டான்.
மறுபுறம் தாயின் மடியில்(கல்லறையில்) தேற்றார் இல்லாமல் சரிந்து கிடந்தான் உதய்... தனக்கு மேலும் மேலும் சோதனைகள் வர போவது தெரியாமல்...
“அவன் என் உயிர் மா... என் உயிரையே கொல்லுற அளவுக்கா ம்மா நான் மோசமானவன்? எப்படி பேசிட்டான்பாருங்க ம்மா” கேட்ட வார்த்தைகள்
எதுவும் அவ்வளவு எளிதாய் ஜீரணிக்கும்படி இல்லையே...
 
Top