• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 16 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap – 16

ஒவ்வொரு பாரா பராக்கு கமெண்ட் இருக்கனும் சொல்லிட்டேன்... தட்’ஸ் ஆர்டர்.... 😁🤭

காலையிலிருந்து சிடு சிடுத்த முகத்துடன் வலம் வந்தவனை துளியும் அங்கிருந்தவர்களுக்கு புடிக்க வில்லை... கண்டிப்பை மட்டுமே தனது தொழிலாளர்களுக்கு தருபவன் இன்று அனைத்தையும் மீறி கோவத்தை, எரிச்சலை தத்தெடுத்திருந்தான்... காலையில் பேசிய வார்த்தைகள் எல்லை மீறி கடந்ததை அறிந்தே பேசினாலும் மனதில் பலமாக அடி வாங்கி இருந்தான் அதனை வெளிப்படுத்த இயலாமல் தனது மொத்த இயலாமையையும் கோவமாய் வெளிப்படுத்தினான்...

ஆறாவது முறையாக ஒரே பைலை எடுத்து வந்த யாழினியை பார்த்து முகம் சுளித்தவன், “அத இங்க வச்சிட்டு போங்க”

“இல்ல சார் இத இப்ப ஆர் & டி டிபார்ட்மெண்ட்க்கு மெயில் பண்ணனும்”

“சரி வாங்க” என்றான் அடக்கிய கோபத்துடன்...

அந்த பைலை கையில் வாங்கியவன் அதை திறக்கும் முன் ஜெயனை அழைத்தான்... இறுகிய முகத்துடன் வந்தவனிடம், “நீரஜ் ஓட ரிசார்ட் பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?”

“சார் ரெண்டு நாள் முன்னாடி தான் சார் நாம்ம கார்ட்ஸ் மூணு பேர அனுப்பி வச்சேன் இன்னும் சந்தேக படுற மாதிரி எதுவும் நடக்கல அங்க”

“ம்ம்ம் இன்னும் ஒரு மாசம் கழிச்சு அனுப்பி வச்சிருக்கலாம்ல ஜெயன்?”

கோவத்தை அடக்கி பொறுமையாய் கேட்டான் ஆனால் அதிலிருந்த அர்த்தத்தை அறிந்த ஜெயனுக்கு உடல் நடுங்கியது...

“சார்ர்ர்...” என்று எழுந்தவனை இடை மறித்து, “பத்து பில்லியன் யூ.எஸ் டாலர் ப்ராஜெக்ட் அது கொஞ்சமாவது அத நியாபகம் வச்சு செய்யணும். இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல எனக்கு நியூஸ் வரலைனா உங்க இடத்துல வேற ஒருத்தர வைக்க வேண்டி வரும்”

“அந்த பைலை அவனுக்கு அனுப்பாம இருந்தா இன்னேரம் இந்த 24 மணி நேரமே தேவை இல்ல” மனதில் நினைத்ததை சத்தமாய் கூறிவிட்டாள் யாழினி...

அடுத்த நிமிடம் உதய்யின் கையில் இருந்த கோப்பு ஜெயனுக்கும் யாழினிக்கும் இடையில் பறந்து சென்று சுவற்றில் மோதி தரையில் சிதறியது... திடுக்கிட்டு வாயில் கை வைத்து இரண்டடி பின்னால் அனிச்சை செயலாய் சென்றது அவள் கால்கள்...

“இங்க என்ன வேலை பாக்கணும், என்ன ஆர்டர் போடணும்னு எனக்கு தெரியும். நீ எனக்கு ஐடியா குடுக்குறது, அக்கறை காட்டுறதுன்னு இப்டி ஒரு வேலையையும் கிழிக்க தேவ இல்ல... குடுத்த ஒரு சின்ன வேலைய ஒழுங்கா பாக்க கூட தெரியாத உன்ன இத்தனை நாள் பொறுமையா வச்சிட்டு இருக்கேன் அத மனசுல வச்சிக்கிட்டு போய் ஒழுங்கா வேலைய மட்டும் பாக்கணும்” அமைதியாய் நிறுத்தி கூறினாலும் அவன் குரலில் இருந்த ஆழமும், கோபமும் ஜெயனையே உலுக்கியது...

அவன் வசம் மெல்ல மெல்ல மனதை கொடுத்த யாழினிக்கு தான் அவனது வார்த்தைகள் வேதனையை கொடுத்தது... அவள் நிலை இந்த வேலை அவளுக்கு அவசியம். இல்லையெனில் அந்த இடத்தை விட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். ஆனால் வீட்டின் சூழ்நிலையை எண்ணி அமைதியுடன் அவன் வீசி எறிந்த கோப்புகளை எடுக்க ஆரமித்தவளது மூளை அவனது வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசைபோட ரணமாய் வலித்த இதயத்தையும் அவன் வார்த்தைகள் தூண்டி விட்ட உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த சிரமப்பட்டாள்...

ஒன்று மட்டும் அவளுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது அவன் என்றும் அவள் நிலைக்கு இறங்க மாட்டான் தொழிலிலும் சரி, காதலிலும் சரி. தேவை இல்லாமல் அவனது உதவிகளை எண்ணி ஆசையை வளர்க்கும் அவள் மனதை பாடுபட்டு அடக்கி அவனிடம் அந்த கோப்பை வைத்தாள் உணர்ச்சிகளை அடக்கிய முகத்துடன்...

“சாரி சார்” அவளது எந்த வருத்தமும் அவன் காதுகளில் விழவில்லை...

மாறாக, “வச்சிட்டு கெளம்பு” என்று எரிந்து விழுந்தவன் அவளது கண்ணீரை காண வாய்ப்பு இல்லாமல் போனது. பாவம் அவளுக்கும் தெரியவில்லை, நண்பனை வேதனைக்குள்ளாக்கி தானும் வேதனைப்பட்டு, தன் மேல் இருந்த கோவத்தை தான் எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் அவளிடம் விட்டான் என்று.

“என்ன ஜெயன் எப்ப எனக்கு இன்பர்மேஷன் வரும்?” கதவை நோக்கி செல்லும் யாழினி மேல் பதித்திருந்த பார்வையை திரும்பியவன் ஒரு அன்னிய பார்வையை உதய் மீது வீசி, “இன்னைக்கு சொல்றேன் சார்”

“இன்னும் ஒரு நாள் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள எனக்கு பதில் வரணும்... புரியுதா?” வெறும் தலையை மட்டும் அசைத்தவன் அந்த இடத்தை விட்டு அகன்றான் உதய்யை சற்றும் ஏறிட்டு பார்க்காமல்...

வெளியில் வந்தவன் நேராக சென்றது யாழினியை பார்க்க தான்... வழக்கத்திற்கு மாறாக அமைதியாய் கையில் இருந்த கோப்பில் உன்னிப்பாய் மூழ்கி இருந்தவளது கண்கள் மட்டும் நீரை வெளியிட்டுக்கொண்டே இருந்தது... “யாழினி”

நிமிராமல், “சொல்லுங்க அண்ணா” என்றாள்...

“சார் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காரு யாழினி. பொதுவா இப்புடி பேசவே மாட்டாரு எவ்ளோ கோவம் இருந்தாலும். இன்னைக்கு சூழ்நிலை அப்டி... பர்சனலா எடுத்துக்காத”

“ஐயோ அண்ணா... நான் எதுக்கு இத பெருசா எடுத்துக்க போறேன்... அவரு எனக்கு முதலாளி இதுல பர்சனல்லா எடுத்துக்க என்ன இருக்குது?” தனது வலியை காட்ட விரும்பாமல் புன்னகை முகத்துடன் கூற அவளை ஏமாற்றும் விதமாக இரு துளி நீர் அவளது விழிகளிலிருந்து வலிந்து ஓடியது...

மேலும் அவளை காயப்படுத்த விரும்பாமல் அந்த இடத்தை விட்டு ஜெயன் அகன்றான்... அவன் சென்றது தான் தாமதம் முகத்தை மூடி அழுதுவிட்டாள் யாழினி. காரணம் அறிந்தும் உணர விருப்பம் இல்லை...

அங்கு உதய்யின் நிலையோ சிக்கலாகி கொண்டே சென்றது. நிலையாக ஒரு வேலையில் மனமும் மூளையும் செல்ல மறுத்தது... அலைபாயும் எண்ணங்களை ஒரு நிலை படுத்த அறியாமல் மீண்டும் ஜெயனை அழைத்தான், “எஸ் சார்”

“ஆதி இப்ப எங்க இருக்கான்?”

மனதில் இருந்த கேள்வியை கேட்காமல், “பீச்ல இருக்காரு சார் மூனு மணி நேரமா”

“தனியாவா இருக்கான்?”

“இல்ல சார் அவர் பிரண்ட்ஸ் கூட இருக்காங்க”

“ஹாஸ்பிடல் எதுவும் போனானா?”

“போனாரு சார்”

“அவன் போட்டோ காமிங்க”

ஜெயனின் ஒரு அழைப்பில் அடுத்த நிமிடம் ஆதியின் புகைப்படம் அவன் கையில் இருந்தது அதனை பார்த்த உதய் ஆழ்ந்து அவனை ஆராய்ந்தான்...

அந்த புகைப்படத்தில் தமிழும் கௌதமும் மணலில் அமர்ந்து ஆதியை பார்த்திருந்தனர்... ஆதி கடலை வெறித்து நின்றான் அவனது அமைதியை காண்பதே அரிது... அவ்வாறு அவன் அமைதியாய் இருந்தால் மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஓடும் என்று உதய் அறிவான்... எந்நிலையிலும் ஆதரவாய் இருப்பதாய் சத்தியம் செய்து இன்று அவன் நிலைக்கு தானே காரணம் ஆனதை எண்ணி மனதில் உடைய ஆரமித்தான் உதய்... இன்னும் சிறிது நேரம் இதை பார்த்தல் கண்களில் உருவாகி கொண்டிருக்கும் கண்ணீரை ஜெயன் காண நேரும் என்று அவனிடம் அந்த டேப்பை கொடுத்தனுப்பினான்...

“சார் உங்க தம்பி விஷ்ணு இன்னைக்கு ஆபீஸ் வரல”

“ஏன்?”

“வீட்டுல நளினி மேடம் எல்லாரையும் திட்டுனாங்கன்னு கேள்வி பட்டேன் டீட்டைல் கேக்கல சார்”

தன்னுடைய கைபேசியை எடுத்து ஹரிக்கு அழைத்தான், “சொன்ன ஒர்க்க முடிச்சிட்டீங்களா ஹரி?”

அந்த பக்கம் கண்களை இறுக மூடி திறந்த ஹரி, “அண்ணா இப்புடி பேசாதீங்க ண்ணா கஷ்டமா இருக்கு”

“ஆபீஸ் விசயமா பேசுறப்ப பர்ஸ்னல் விசியம் அவசியம் இல்ல”

நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு, “இன்னும் கம்ப்ளீட் பண்ணல ண்ணா இன்னும் எலிவேஷன் ஒர்க் இருக்கு. விஷ்ணு ஆபீஸ் வரல இன்னைக்கு அதுனால இன்னும் கொஞ்ச வேலை மட்டும் பாக்கி இருக்கு ண்ணா... அவன் வந்ததும் வேகமா பண்ணிடுவோம்... ஆபீஸ்க்கு வந்து நாங்களே குடுத்தறோம் ண்ணா” வேண்டும் என்றே வர்த்திக்கு வார்த்தை அண்ணனை சேர்த்தான் ஹரி...

“ஏன் வரல?”

“அவனுக்கு கொஞ்சம் பீவர்” பொய் என்று தெரிந்தும் உதய் அவனுக்கு பதில் கொடுக்காமல் அணைப்பை துண்டித்து, “என்னமோ சரி இல்ல இவன் பேச்சுல விஷ்ணுவ மானிட்டர் பண்ணுங்க”

“சரி சார்... அப்றம் சக்தி ஜெர்மனில ஒரு கிளைன்ட் கிட்ட ஈஸ்வரன் சார் பெரிய அமௌன்ட்ல டீல் பேசி கம்பெனில பைல் பன்னுறப்ப அதுல 75 % தா காமிச்சிருக்காரு... அது டீடெயில்ஸ் கொஞ்சம் கலெக்ட் பண்ணிட்டான் இன்னும் மெயின் எவிடென்ஸ் கலெக்ட் பண்றது தா டைம் ஆகுது”

“கிடைச்ச வரைக்கும் வாங்கி வச்சுக்கோங்க பிண் வேக்னர்-னு (Finn Wagner) ஒருத்தன் பேஸ்கேம்ப் கஃபேல (FaceCamp Café) ஒர்க் பண்ணுவான் அவன் மாமாகிட்ட டூ யெர்ஸ் முன்னாடி ஒர்க் பண்ணுனான் பட் ஏதோ ப்ராப்லம் வந்து மாமா அவனை ஒர்க்ல இருந்து தூக்கிட்டாரு. அவன்கிட்ட போய் பேச வேண்டிய விதமா பேச சொல்லுங்க இன்னும் டீடெயில்ஸ் நமக்கு கெடக்கும்”

“ஓகே சார்... மிஸ்டர் வில்லியம் பிரவுன் இந்த வீக் எண்டுல இந்தியா வர்றாரு”

“எதுக்கு?”

“ஒரு பார்ட்டி அன்டன் பண்ண வர்றாரு சார்”

ஆஸ்திரேலியாவில் அடுத்து கிடைக்க கூடிய மிக பெரிய ஒரு ப்ரொஜெக்ட்டின் முக்கிய பங்குதாரர் தான் இந்த வில்லியம் பிரவுன்... கிட்ட தட்ட கையில் வந்த நிலை தான். ஆனால் இதுவரை உதய் நேரில் சென்று அவருடன் உரையாடாமல் இருந்ததே சிறு பயம்... பல லச்சம் கோடி கையில் சேரும் ப்ராஜெக்ட் அது...

“அப்பா சிக்ஸ்டீத் (60th) பர்த்டே வருது இத சாக்கா வச்சு அவர இன்வைட் பண்ணிடலாம் அப்புடியே நீரஜ்கும் ஒரு இன்விடேஷன் அனுப்பிருங்க ... யார் யாரை இன்வைட் பண்ணனும்-னு அப்பா கிட்ட லிஸ்ட் வாங்கிக்கோங்க என் சைடு லிஸ்ட் நா நாளைக்கு தர்றேன். யாழினிய உள்ள வர சொல்லுங்க”

ஜெயன் வெளியில் சென்ற சிறிது நேரத்தில் யாழினி வந்து அமைதியாக ஒரு பென், குறிப்பு அட்டையுடன் நின்றாள் உதய்க்கு எதிரில்... அவள் வந்தது கூட தெரியாமல் வேலையில் மும்முரமாக இருந்தவன் அவளது வரவை கவனிக்க மறந்தான். அவள் எப்பொழுதும் வந்தால் தனது வரவை தெரிவிக்க சிறிதும் அர்த்தமில்லாத கேள்வியை அவனை நோக்கி வீசுவாள். ஆனால் இன்று அமைதியாய் இருக்க, அவள் இன்னும் வரவில்லை என்றே நினைத்தான்...

நேரம் கடக்க மீண்டும் அவளை அழைக்கும் பொருட்டு விழியை உயர்த்தியவன் ஆச்சிரியதுடன் யாழினியை பார்த்தான்... சிறிதும் அவளுக்கு பொருத்தமில்லாத வலியை மறைக்கும் கண் இமைகள், சிவந்த நாசி, நிறுத்தாமல் அவனின் நினைவலைகளை ஆட்டிவைக்கும் அழகிய அதரங்களில் இன்று அநியாயத்திற்கு அமைதி... நொடி பொழுதில் அவளை அளந்தவன் காரணம் அறிய நினைத்த பொழுது தான் தன்னுடைய தவறு பலமாய் மீண்டும் வலியை தந்தது...

“ஒர்க் முடிச்சிட்டீங்களா யாழினி?” உதய்யின் கேள்விக்கு வெறும் தலை அசைப்பை மட்டுமே தந்து அவனிடம் அந்த பைலை தந்தாள்...

கடமைக்காக அதை பார்த்தவன் சரியாக இருப்பதாய் கூறி அவளிடம் வேறு பல வேலைகளை மாறி மாறி வழங்கினான். அதுவும் அவனுடைய அறையிலே அமர்ந்து செய்யுமாறு... எந்த வேலையிலும் அவனிடம் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை...

தனது பேச்சின் வீரியத்தில் எத்தனை இதயங்களை இன்று காயப்படுத்தி விட்டோம் என்று முழுமையாக உணர்ந்தாலும் அதை இனி திரும்ப பெற இயலாது என அறிந்து முதலில் தன்னுடைய காதலை சரி செய்ய எண்ணினான்.

“கிளம்புங்க யாழினி சைட்ட விசிட் பண்ணனும்”

‘மணி இப்பயே ஆறு ஆச்சு இதுக்கு மேல சைட் பாத்து வீட்டுக்கு போக 8க்கு மேல ஆகிடுமே’ என்று நொந்துகொண்டவள் அவனிடம் பேச முடியாமல் ஒருவாறு தலை அசைத்து அந்த ப்ரொஜெக்ட்டிற்கு தேவையான கோப்புகளை கையில் எடுத்து கிளம்பினாள்.

அவளது அசைவுகள் ஒவ்வொன்றையும் கண் இமைக்காது பார்த்தவன், “உங்க பேக்கயும் எடுத்துட்டு வாங்க யாழினி சைட்ல இருந்து வீட்டுல ட்ராப் பண்ணிட்றேன்”

“ஓகே சார்”

இருவரும் மின்தூக்கியை நோக்கி செல்ல அவர்கள் பின்னே வந்த ஜெயனை, “இன்னும் பார்டிக்கு மூணு நாள் தான் இருக்கு நீங்க கூட வர வேணாம் போய் தேவையான வேலைய பாருங்க”

“இல்ல சார் பிளானெர்ஸ் அரேஜ் பண்ணிட்டேன் நாளைக்கு மார்னிங் போய் செக் பண்ணுனா போதும்”

தீர்க்கமான பார்வையை அவனிடம் வீசி, “அப்ப என்கூட நீங்களும் வரீங்க அப்டி தான ஜெயன்?”, ‘நீ வர கூடாது’ என்னும் பார்வையோடு இருந்தது அந்த பார்வை...

புரிந்தும் புரியாமலும், “இல்ல சார் நீரஜ் பத்தி விசாரிக்கணும். அப்றம் இன்விடேஷன் டிசைன் பண்ணல. நா நம்ம கார்ட்ஸ்-ஸ அனுப்பி வைக்கிறேன்”

“ம்ம்ம் குட்” என்று தரை தளத்திற்குரிய பட்டனை அழுத்தினான். அவன் அருகில் நின்றிருந்த யாழினிக்கு தான் குழப்பமாக இருந்தது... எதற்காக ஜெயன் பொய் சொல்கிறான் என்று. ஏனெனில் அவள் தானே அழைப்பிதழ்களை அவனுக்கு அனுப்பி அதை முடிவு செய்த பின்னர் அச்சடிக்க கொடுத்தது.

கதவு தானாய் மூட ஒரு நொடிக்கு முன் யாழினி கதவிற்கு நடுவில் கை வைக்க கதவு மீண்டும் தானாய் திறந்தது, “அண்ணா நா தா அத பிரிண்ட் பண்ண குடுத்துட்டேனே” என்றாள் கேள்வியாய் அவனிடம்.

பின்னால் இருந்த சுவற்றில் வாகாய் சாய்ந்து மார்புக்கு குறுக்காய் கைகளை மடக்கி ஜெயனது மருண்ட விழிகளை பார்த்து உள்ளுக்குள் சிரித்து நின்றான் உதய்.

“இல்ல அதுல சாரோட பர்த்டே இயர் தப்பா இருந்துச்சு சோ அத கரெக்ட் பண்ணனும்”

“அத போன்லயே சொல்லிறலாமே”

தலையை நாலாபக்கமும் ஆட்டியவன், “எனக்கு வேற வேலை இருக்கு யாழினி நா வரல” என்றான் முடிவாய்.

ஆனால் யாழினிக்கு தான் அது சற்றும் புடிக்க வில்லை. உதய்யுடன் தனியாக இருக்க விரும்பாமல் தான் ஜெயனை எப்படியேனும் அழைத்து செல்ல வேண்டுமென்று துடிக்கிறாள். அதை உணர்ந்துகொண்ட உதய் வேகமாக மின்தூக்கியின் பட்டனை அழுத்தினான் ஜெயனிடமிருந்து மறு வார்த்தை வரும் முன். அந்த நிமிடத்திலிருந்து காரில் செல்லும் வரை அமைதி மட்டுமே. இருவருக்குமே அது புடிக்கவில்லை தான் ஆனாலும் இருவரும் பேச முன் வரவில்லை.

“எந்த சைட் பைலை எடுத்துட்டு வந்துருக்கீங்க?” முதலில் தானே இறங்கி பேசினான் உதய்.

“ஆன்கோயிங் ப்ராஜெக்ட்ஸ் எல்லாமே இருக்கு சார்” அவளிடமிருந்து பதில் வந்தது அவனை பார்க்காமலே இந்த முறையும்.

“ஒகே தென் வீ வில் விசிட் ஆல் தி சைட்ஸ் டுடே”

அந்த கூற்று அவளது முழு கவனத்தையும் ஈர்த்தது, ‘இத்தன சைட்டையும் போய் பாத்தா இன்னும் ரெண்டு நாள் ஆகுமே’ அதிர்ச்சியில் அவனை கண்கள் விரிய பார்த்தவள், “சார் அம்மா வீட்டுல தேடுவாங்க”

‘ம்ம்ம் அப்டியே அம்மாக்கு பயந்துட்டாலும்’ என்று நினைத்தவன், “போன் பண்ணி சொல்லிடுங்க”

“அப்பா திட்டுவாரு லேட்டா வீட்டுக்கு போனா”

“ஓ அப்டியா நா கூட நடு ராத்திரி வீட்டை விட்டு வெளிய போனா கூட உங்க வீட்டுல ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நெனச்சேன்” அன்று அவனை பார்க்க ஜெயனிடம் மல்லுக்கு நின்றதை கூறினான்.

துப்படாவின் நுனியை பிசைந்து கொண்டிருந்தவள் அவனுக்கு பதில் கூறாமல் வெளியே வேடிக்கை பார்த்தள், தெளிவாக கூற வேண்டுமென்றால் அவனை தவிர்த்தாள்.

அவனிடமிருந்து ஏதோ ஒன்று அவளை வெகுவாய் ஈர்த்தது அதை மூளை அறிந்தாலும் மனம் அறிய விருப்பமில்லாமல் மீண்டும் மீண்டும் அவனது ஒரு பார்வைக்காக காத்திருந்தது. ஆனால் இன்று அவன் பேசியது வேலை சம்மந்தமாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்விலும் பொருத்தமாகும். அவளுக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒரு இடத்தில தான் இருக்கிறாள், இருக்கவும் விரும்புகிறாள்.

இரக்கத்தின் பெயரில் அவன் காட்டும் அக்கறையை, பரிதாபத்தை, உணர்ச்சிகளாக மாற்றியது அவள் தானே? அப்பொழுது தவறும் அவளிடம் தானே? கனவுலகிலில் இருக்கும் சொர்க்கத்திலிருந்து வெளி வர விரும்பாமல் எத்தனை நாட்கள் தான் உறங்குவது? என்றாவது உறக்கம் களைய தானே வேண்டும்... அவனுக்கு அருகில் இருக்கும் வரை அவனை மனம் நாடாமல் இருக்க போவதில்லை. தீர்க்கமான ஒரு முடிவுடன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை இமைகள் சிமிட்டி உள்ளே தள்ளினாள் யாழினி.

சிறிது நேரத்தில் அவர்கள் பார்வையிட வந்த கட்டிடமும் வந்தது. இரவு மணி ஏழரையை தாண்டி இருந்ததால் அங்கு பணி புரிபவர்கள் யாரும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது... அதற்காக தானே அவளை அந்த நேரத்தில் அங்கு அழைத்து வந்தது. உதய் அவனுக்கே உரிய வேக நடையுடன் முன்னே செல்ல அவனுக்கு பின்னால் சில மீட்டர் இடைவெளியிலேயே யாழினி அவன் கூறிய திருத்தங்கள், சந்தேகங்களை குறிப்பெடுத்துக்கொண்டே வந்ததால் கீழே சில அங்குலங்கள் தரையிலிருந்து தூக்கி இருந்த இரும்பு கம்பியை கவனிக்க தவறினாள்.

அவனுடைய வேகத்திற்கு ஈடு கட்ட ஓட எத்தனித்தவள் அந்த கம்பியில் கால் இடறி அப்டியே கீழே சரிந்தாள். கீழே விழுந்தவளது கை, கால்களில் ஆணியும், கூர் கற்களும் முள்ளாய் இறங்க வலி தாளாமல், “அம்மா” என்று கத்திவிட்டாள்.

அவளது அலறலில் அவள் புறம் திரும்பிய உதய், அவள் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து ஓடி வந்து அவள் எழுந்து நிற்க அவளது தோளை பற்றினான், “எப்படி கீழ விழுந்திங்க?” என்னும் கேள்வியோடு. அவள் காயங்கள் தனக்கே விழுந்தது போல் வேகமாக துடித்த
து அவன் இதயம். அவளுடன் நெருங்கி நின்றதை உணர்ந்த இதயம் மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட மூளையோ நிகழ்காலத்தை உணர்த்தி அடுத்து செய்ய வேண்டிய வேலையை நினைக்க தூண்டியது.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

கை, கால்களில் இருந்த வலியையும் தாண்டி அவன் ஸ்பரிசம் பட்ட இடம் மின்னலை பாய்ச்சியது அவள் முதுகு தண்டு வரை. அவளது உடலின் நாடகத்தை உணர்ந்தவன் ஆசையாய் அவளை பார்க்க தனது கையை ஆராய்ந்தவாறு கண்களை துடைத்து நின்றாள்... அவனை பார்த்திருந்தால் அதிலிருந்த காதலை அறிந்திருக்க வாய்ப்பு கிட்டி இருக்கும்...

உணர்ச்சிகளிலிருந்து வெளி வந்தவள், “கம்பியை கவனிக்கல சார்” என்றாள் சிறு விசும்பலுடன்.

கால்களிலும் கைகளிலும் இருந்த ரத்தம் அவனது கோவத்தை தூண்டி விட, “அறிவுன்றது கொஞ்சமாச்சும் இருக்குதா உனக்கு? எங்கயாச்சும் ஷார்ப்பான திங்க்ஸ்-ல இடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும். எந்த வேலை செஞ்சாலும் அத ஒழுங்காப் பண்ணவே தெரியாது உனக்கு?” அவன் திட்ட திட்ட கண்ணீர் மட்டும் பெருகிக் கொண்டே சென்றது. ஆனால் அதிலிருந்த அக்கறையும் அன்பும் அந்த பேதைக்கு தெரியவில்லை...

“நடக்க முடியுமா முடியாதா?” அதே அதட்டும் கோவ குரலில் கேட்டான்.

அதில் மிரண்டவள் ‘முடியும்’ என்று தலை அசைக்க அவள் கையை மெதுவாக பற்றி காரை நோக்கி அழைத்து சென்றான். அவனது கோவத்தின் அளவை அறிந்து வலியை சொல்லாமல் கண்களை இறுக்க மூடி அவனுடன் நடந்தாள்.

காரில் பின்னிருக்கையில் அவளை அமர வைத்தவன் முதலுதவி பெட்டியை எடுத்து தானும் பின்னிருக்கையில் அமர்ந்து அவள் ஒரு காலை தூக்கி இருக்கையில் வைக்க அதில் பதறியவள், “ஐயோ சார் விடுங்க” என்று அவன் கையை தன் காலிலிருந்து எடுத்துவிட்டாள்.

“ப்ச்ச்ச்... அப்ப நீயே ட்ரெஸ்ஸிங் பண்ணு. பண்ண தெரியுமா?” கண்களில் நெருப்பை வைக்காத குறை தான் அவ்வளவு சிவந்திருந்தது அவன் கண்கள்.

மறுப்பாக அவள் தலை அசைக்க மீண்டும் அவள் காலை எடுத்து மேலே வைத்தான். சிறிதும் தயக்கம் இன்றி அவளது கால் சட்டையை மேலே தூக்க, அவன் கைகளுக்கு அணை கட்டினாள் யாழினி.

“இப்ப என்ன?” என்றான் எரிச்சலுடன். அவனுக்கு கவலை அவளது ரத்தத்தை நிறுத்த வேண்டும்... அது மட்டுமே.

“வேணாம் சார் நா வீட்டுக்கு போய் ஆயின்மென்ட் போட்டுக்குறேன்” என வாய் கூற கைகளோ அவன் சற்று உயர்த்தி இருந்த கால்ச்சட்டையை கீழே இழுத்தது.

எவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவன் அவள் கால்களை தொடுவதா... ஐயோ இல்லை. இந்த எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் ஒரு பெண்ணாய் அவள் மனம் கவர்த்தவனின் கைகள் அவளை தொடுவது வேறு விதமான உணர்ச்சிகளை அவளுள் தூண்டின.

“என்ன பாத்தா பொறுக்கி மாதிரி தெரியுறேனா?” கூர்மையாய் வந்தது அவன் வார்த்தை. ஒரு ஆணாய் அவள் செயல் அவனுடைய அகங்காரத்தை கேள்வி கேட்டது.

கோவில் மாடாய் தலை ஆட்டியவள், “ஐயோ இல்ல... நீங்க என் கால தொடுறது தப்பு சார்”

அகன்று விரிந்த அந்த ஈரம் போர்த்திய கண்களை தீர்க்கமாக பார்த்தவன், “நானும் சாதாரண மனுஷன் தான் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” அவனுக்கு மறுப்பு தெரிவிக்காமல் கையை விலக்கியவள் அவன் வேலையை தொடர அனுமதித்தாள்.

சிறிதும் யோசிக்காமல் அவள் கால்ச் சட்டையை அவன் தூக்க யாழினிக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. அவள் கால்களில் இருந்த ரோமங்கள் அவளை அவன் முன்னே தாழ்த்தியது. என்றும் அதனை அகற்ற அவளுக்கு தோன்றியதில்லை ஆனால் இன்று அதை நினைத்து தன்னையே கருவிக்கொண்டாள்.

அவளுக்கு தெரியவில்லை அவன் அவளது வெளி தோற்றத்தில் அவளிடம் சரியவில்லை அவளது குணத்தில் அவளிடத்தில் ஆழ்ந்து விழுந்திருக்கிறான் என்று. உதய் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவள் முழங்காலில் வடிந்த ரத்தத்தை துடைத்து காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தான். மருந்தின் எரிச்சலும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு துளியும் தெரியவில்லை...

“பாருங்க எப்படி ஆழமா காயம் இருக்குன்னு. இல்ல தெரியாம தான் கேக்குறேன் ஒரு வேலை செஞ்சா அதுல கவனம் இருக்குமா இருக்காதா??நடக்குறப்ப மேல கீழ பாத்து நடக்கணும். ஒவ்வொரு தடவையும் உங்க கூட ஒரு ஆள் வந்துட்டே இருக்க முடியுமா?”

அவன் பேச பேச சுயத்தை அடைந்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது... எதற்காக இவ்வாறு அவள் மீது அக்கறை காட்டி அவன் பக்கம் மேலும் இழுக்கிறான்? இவ்வாறு இருந்தால் அவளால் எப்படி அவனை விட்டு செல்ல மனம் வரும்?

வலியில் தான் அழுகிறாள் என்று நினைத்தவன் அவளை ஏறிட்டு பார்க்க அவளோ அவனை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்... ஒரு நொடி தான் அதில் விழுந்து எழுந்தவள் இமைகளை தாழ்த்தி, “நா வேலைய ரிசைன் பண்ணிற்றேன் சார்”

அவளது கூற்றின் அர்த்தம் தெரிந்தும் சிறிதும் களங்காதவன் சிரித்துக்கொண்டே, “லீவ் வேணும்னா கேளுங்க யாழினி இந்த சின்ன அடிய சாக்கா வச்சு எஸ்கேப் ஆக பிளான் போட்டுட்டீங்க?”

கண்களை அழுந்த துடைத்தவள் தலை அசைத்து, “இல்ல சார் நா வேலைல இருந்து நின்னுடறேன்”

அமைதியாக அவள் கைகளை பற்றி அதிலிருந்த சிறைபுகளுக்கு ஃக்லிசரினை தடவியவன், “ஏன்?” என்று அவளை பார்க்காமலே கேட்டான்.

“ஒழுங்கா வேலை செய்ய தெரியாதவங்களுக்கு எதுக்கு சார் நீங்க தேவ இல்லாம சாளரி குடுக்கணும்? நா போயிறேன் சார்”

“ம்ம்ம் பரவால்ல நல்ல முடிவு தான்”

‘என்ன நல்ல சாப்புடுனு போற போக்குல சொல்ற மாதிரி சொல்றாரு’ என்று எண்ணியவள் மீண்டும் மீண்டும் வழிந்துகொண்டே இருந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கினாள்.

“ஒகே அப்ப நெக்ஸ்ட் எந்த ஜாப் தேடுற ஐடியா? ஓ அந்த ஸ்டார் ஹோட்டல்ல சேந்துக்க நனைக்கிறிங்களா? சூப்பர். புள் டைம் ஒர்க் பண்ணுனா நல்ல சாளரியும் கெடக்கும்” இறுதியாக அவள் கைகளை முழுமையாக ஆராய்ந்தவன் திருப்தி அடைந்தவுடன் அவள் வதனத்தை பார்க்க அது சிவந்திருந்தது அழுகையில்.

“சார்” என்றாள் விசும்பலுடன்...

அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்ய, “ம்ம்ம்” என்றான் வண்டியில் இருந்து கீழே இறங்கி.

அவளும் எழ அதை தடுத்தவன் அமர்ந்தே கூறுமாறு சைகை செய்ய மீண்டும், “நா வேற வேளைக்கு போக போறேன் சார், அந்த ஹோட்டேல்க்கு இல்ல”

அவள் கண்களை நேருக்கு நேர் ஆழ்ந்து பார்த்து நின்றவன் தனது பாண்ட் பாக்கெட்டினுள் ஒரு கையை விட்டு, “போங்க” அவ்வளவே அவன் கூறியது... ஆனால் அவன் கண்கள், ‘போய் தான் பாரேன்’ என்று சவால் விட்டது.

அந்த தீர்க்கமான பார்வையிலிருந்து வெளி வர தெரியவில்லை அவளுக்கு... என்ன அவன் நினைக்கின்றான்? எதற்காக அவளை தடுக்கிறான்?

அறியாமல் விழித்தவளுக்கு பதில் கூறும் வகையில், “ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க மூணாவது நாள் ஆபீஸ்ல என்னோட ஸ்கேட்யுளோட நா வர்றதுக்கு முன்னாடி நீங்க அங்க இருக்கனும்... ம்ம்ம்ம்?”

தன்னுடன் ராணியை போல வைத்து பாதுகாக்க நினைக்கின்றவன் எதற்காக அவளை வேறு இடத்தில் வேலைக்கு அனுப்ப போகிறான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாததால் மட்டுமே அவளிடமிருந்து சற்று தயங்கி நிற்கின்றான்... அவள் மேல் உள்ள காதலை இன்னும் ஆழமாக உணர விரும்பியே இந்த இடைவேளை அவர்களுக்குள்.

“அப்ப இன்னொரு தடவ இந்த மாதிரி என்ன திட்ட கூடாது” சத்தியம் கேட்பது போல் அவன் முன்னே கை நீட்டி கேட்டவளை அடக்கப் பட்ட சிரிப்புடன் அவளுக்கு பதில் கூறாமல் முன்னிருக்கையில் சென்று அமர்ந்து வண்டியை அவள் வீட்டிற்கு விட்டான்.

எதற்காக அவளிடம் இவ்வளவு வீழ்ந்திருக்கிறான் என்று அறியவில்லை ஆனால் இந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது... அவளை ஒரு முறையாவது ஒரு மணி நேரத்தில் பார்த்துவிட வேண்டும் அவளது சிரிப்பு சத்தத்தை கேட்டால் தானே வயிறு வலிக்க சிரிப்பதாக உணர்வு... அவள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு சலித்துக்கொண்டே வேலைக்கு இடையில் விளக்கம் தருவதும் ஒரு வித ஆனந்தம் தான் அவனுக்கு...

தெரியாமல் செய்யும் தவறுகளை மறைக்கும் பொழுது திருட்டு முழி முழிக்கும் விழிகளும் அவனை தூண்டில் போட்டு இழுக்கும் வல்லமை பெற்றது... இடை வரை நீண்டு இருக்கும் கூந்தலை வேலை செய்யும் பொழுது முன்னே போட்டு அதை பாடாய் படுத்தும் விதமும் அவளுக்கு அழகே... சிறிதும் சாயபூச்சில்லாமல் மின்னும் கூர்நாசியும் அந்த மாநிற அழகிக்கு அழகே... மொத்தத்தில் அவளிடம் தலை முதல் கால் வரை அனைத்தையும் ரசித்து ரசித்து காதலில் விழுந்தான்...

பின்னால் அமர்ந்து, ‘திமிரு திமிரு ஒடம்பு முழுக்க திமிரு மட்டும் தான் இருக்கு. கேட்டதுக்கு பதில் வந்துச்சா பாரு. மலை குரங்கு’

ரிவ்யூ கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தே தன்னை தான் அர்ச்சித்து கொண்டிருக்கிறாள் என்று அறிந்தவன் அவள் வீடு வந்தும் அவளிடம் வார்த்தை பேசாமல் இருந்தான்...

“என் வீட்டுக்கு வரிங்களா யாழினி?” அவன் கேள்வி சட்டென அவளை எழுப்ப அதில் திடுக்கிட்டு கண்களை சிமிட்டி, “அஹ?” என்றாள் அவனை பார்த்து.

அவன் கேட்ட கேள்விக்கு இரண்டு அர்த்தம் அவனுக்கு மட்டுமே புரிந்திருக்க, ‘மக்கு’ செல்லமாக அவளை மனதில் திட்டி, “வீடு வந்துருச்சு”

ஓ என்று வாயை வைத்தவள் அமைதியாக இறங்கினால் அவனை பார்க்க சங்கடத்துடன், “தேங்க்ஸ் சார்” அவள் சிவந்த உதடுகளையே பார்த்து நின்றவனுக்கு போதை ஏறியது. அந்த உதடுகளை சுவைக்க ஆசை வளர்ந்து கொண்டே செல்ல... அதை தடுக்கும் பொருட்டு வெறும் தலை அசைப்பை மட்டும் அவளுக்கு தந்து சீறி பாய்ந்தான் அவன் ஆடி காரில்.

வீட்டிற்கு ஒரு வித நிம்மதியுடன் சென்றவனுக்கு இரவு மீட்டிங்ஸ் வரிசையாக மூன்று இருந்தது. நண்பனிடமிருந்து எண்ணத்தை திசை திருப்ப அதை அழகாய் பயன்படுத்தி கொண்டான். பொதுவாக இது போன்ற இரவில் நடக்கும் மீட்டிங்களை அவன் தந்தையும், சித்தப்பாவும் தான் பார்த்து கொள்வார்கள் ஆனால் அவர்களுக்கு ஓய்வு அவசியமாக இருக்க தானே அதையும் பார்த்து கொள்வதாக கூறி உதய்யே இன்று வரை அனைத்தையும் பார்த்து கொள்கிறான்.

இரவு இரண்டு மணியை தாண்டியும் உதய் தன்னுடைய ஆபீஸ் ரூமிலிருந்து வெளி வராமல் இருக்க ஜெயனும் தன் தூக்கத்தை தொலைத்து வெளியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். கையில் ஆதியும் விஷ்ணுவும் இருக்கும் புகைப்படம், மற்றொரு கையில் ஆதி சிறைச்சாலையில் துவண்டு கிடைக்கும் புகைப்படம்.

உள்ளே செல்லாது வெளியிலேயே மனம் பொறுக்காது காத்து நின்றான்... உதய்யின் குடும்ப லாயர்களில் ஒருவரை தொடர்பு கொண்டவன் அவரது அலைபேசி இணைக்கப்படாமல் இருக்க வேறு வழிகளை தேட ஆரமித்தான். ஆனால் இந்த நேரத்தில் உதய்யின் வழிகாட்டுதல் அவனுக்கு அவசியமாய் இருக்க செய்வதறியாது தவித்தான். நிச்சயம் ஆதியின் நிலையை பார்த்தல் துவண்டு விடுவான்...


வாசலை மீண்டும் மீண்டும் பார்த்து நின்ற சஞ்சனாவிற்கு நிமிடம் கடக்க கடக்க பயம் கூடி கொண்டே சென்றது. ஒரு புறம் அழுகையும் சேர்ந்து கொள்ள தேற்றார் இல்லாமல் தவித்து நின்றாள். பல முறை கௌதமிற்கும் தமிழிற்கும் அழைத்து பார்த்தும் இருவரது அலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது...

ஆதிக்கு அழைத்தால் நாட் ரீச்சப்பில்... தமிழ் வீட்டாரையோ, கெளதம் வீட்டாரையோ இன்னேரம் எழுப்பி அவர்களையும் பதட்ட பட வைக்க விரும்பவில்லை... ஆதியின் பழைய டைரியை தேடியவள் அதில் உதய்யின் வீட்டு எண்ணை எடுத்து அழைத்தாள்...

வழக்கம் போலே தமிழ் உளறியதிலிருந்து உதய்யை சென்று பாத்திருக்கிறான் என்று அறிந்து கொண்டாள் அதனாலேயே உதய்யின் எண்ணிற்கு இந்த முயற்சி. அந்த எண் உதய்யின் பழைய வீட்டின் லேண்ட் லைன் நம்பர்...

இரவில் வாசலில் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்த ஜெயனின் எண்ணங்களை குறுக்கிட்டு அந்த ரிங் சத்தம் வீட்டின் அமைதியை குலைக்க வேகமாக அதை எடுத்தான்.

“ஹலோ” அந்த பக்கமிருந்து ஒரு பெண்ணின் பதட்டமும், தயக்கமும் நிறைந்த அழுகை குரல்.

“ஹலோ யார் நீங்க?” என்றான் ஜெயன்.

“உதய் அண்ணா கிட்ட பேசணும் ப்ளீஸ் போன்ன குடுக்குறீங்களா?” என்றாள் சஞ்சனா.

அவள் பதட்டத்தை உணர்ந்தவன், “மேடம் பதட்ட படாதீங்க. நான் சாரோட பி.எ தான் சார் மீட்டிங்ல இருக்காரு. இப்ப அவர்கிட்ட பேச முடியாது. நீங்க யார், என்ன விசியம்னு சொல்லுங்க நான் சார் கிட்ட மார்னிங் சொல்றேன்”

“இல்ல ப்ளீஸ் நா இப்பயே பேசணும்... ப்ளீஸ் போன்ன குடுங்க முக்கியமான விசியம்”

மற்ற நேரமாக இருந்தால் இன்னேரம் அவனே உதய்யை அழைத்திருப்பான் ஆனால் இப்பொழுது அனைத்து பிரச்சனைகளுக்கு முன்னாள் ஆதியின் நிலை அவனை தடுத்தது, “மேடம் புரிஞ்சுக்கோங்க சார இப்ப பாக்க கூட முடியாது”

தனது நிலையை எண்ணி அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு. வீட்டை விட்டு இந்நேரத்தில் செல்லவும் முடியாமல் தொண்டை அடைத்தது வேறு வழியே இல்லாமல், “உதய் அண்ணா பிரண்ட் ஆதவன் நம்பர் இருக்கா உங்க கிட்ட?” இனி அவன் தான் இறுதி வாய்ப்பு என்று அவனது உதவியை நாட துணிந்தாள்...

ஜெயனிடமிருந்து எண்ணை குறித்து கொண்டவள் வேகமாக அவனுக்கு அழைத்தாள்... அந்த பக்கம் தூக்கத்தில் இருந்த ஆதவனோ அலைபேசியை பார்க்காமலே அன்டன் செய்து காதில் வைத்து, “டேய் புண்ணாக்கு ஆமாடா நான் அந்த பைலை முடிக்கல அதுக்கு இப்ப என்ன? நாளைக்கு வந்து சைன் பண்றேன். வை டா பேமானி” என்று வசை பாடி அணைப்பை துண்டித்தான்...

சஹானாவிற்கு அவள் நிலைமை மோசமாகி கொண்டே செல்வது போன்ற எண்ணம். ஆதியின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைக்க விரும்பாதவள் மீண்டும் ஆதவனுக்கு அழைத்தாள்.

“தாங்கள் அழைக்கும் உயர்திரு ஆதவன் தற்பொழு...” தூக்கத்தில் உளறிய ஆதவனை தடுத்து நிறுத்தியது அவள் அழுகுரல், “நான் சஹானா”

அவள் குரலையும் போரையும் கேட்டது தான் தாமதம் படுத்திருந்த இடத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தவன் தொண்டையை செருமி, “சொல்லு சஹானா என்ன இந்த நேரத்துல கால் எதாவது பிரச்சனையா?”

அழுகையை கட்டுப்படுத்திய குரலில், “ஆமா அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரல. தமிழ் அண்ணா, கெளதம் அண்ணா கால் எடுக்க மாட்டிக்கிறாங்க ப்ளீஸ் அண்ணாவை பத்தி எதாவது உங்களுக்கு தெரியுமா? உங்க கூட தான் இருக்காங்களா பக்கத்துல இருந்தா போன் குடுங்களேன் ப்ளீஸ்”

சிறு குழந்தையாய் சகோதரனை தேடி அழுதாள்... அவள் அழுகையை கேக்க புடிக்காதவன், “ஆதி இங்க இல்ல சஹானா நீ பயப்புடாம தூங்கு அவன் எங்கயாவது தண்ணி அடிச்சிட்டு இருப்பான் காலைல வந்துருவான்”

மறுப்பாய் தலை அசைத்து, “இல்ல அண்ணா எப்பயுமே இப்டி பண்ண மாட்டான். ட்ரின்க் பண்ணிருந்தாலும் வீட்டுக்கு கரெக்ட்டா வந்துருவான் அப்டியே வரலைனா எனக்கு கால் பண்ணி சொல்லிடுவான். என்னமோ தப்பா நடந்துருக்கு ப்ளீஸ் கொஞ்சம் பாருங்க. உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்”

“சரி அழுகாத நான் பாக்குறேன் என்னனு” படுக்கியிலிருந்து எழுந்து ஒரு டீ-ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டே காரை அடைந்தவன், “உங்க வீடு அட்ரஸ் என்ன?”

திக்கி திக்கி முகவரியை கூற அவளுடன் ஆதியை பற்றி கேட்டு கொண்டே ஆதியின் வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் தேடி பார்த்தான். ஆனால் எங்கும் அவனை காணவில்லை.

“அண்ணாவை பாத்துட்டீங்களா?” ஒரு ஏக்கத்துடன் கேட்டாள் சஹானா.

“ம்ம்ஹ்ம்ம்ம் இன்னும் இல்ல”

“உதய் அண்ணா கிட்ட கால் பண்ணி கேளுங்க நான் கால் பண்ணேன் பிஸியா இருக்காங்கனு சொன்னாங்க. உதய் அன்னைக்கு தெரிஞ்சிருக்கும் ப்ளீஸ்” இதோடு எட்டாவது முறை இதையே கூறுகிறாள்.

“ஏய் என்னடி ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா நான் தான் அப்பயே சொன்னேன்ல ரெண்டு பேரும் சண்டை தான் போட்ருக்காங்க இன்னும் கொஞ்சி குலையிற அளவுக்கு இல்லன்னு... உன் அண்ணன் தான் இப்புடி எங்கயாவது போய் என் உயிரை வாங்குறானா நீயும் நொய்யி நொய்யின்னு ராத்திரி நேரத்துல கேள்வி கேட்டு சாவடிக்காத” அணைப்பை துண்டித்து கைபேசியை அருகில் இருந்த இருக்கையில் எறிந்தான்.

சஹானா நினைவிலிருந்து மறைந்திருந்தாள் அந்த நேரம்... அவனுக்கு இப்பொழுது ஆதியை கண்களால் காண வேண்டும்... அவன் நலமாக உள்ளான் என்ற செய்தி செவிகளை எட்ட வேண்டும் அவ்வளவே. தெரு தெருவாக அந்த பகுதி முழுவதும் அலைந்து திரிந்தவனின் கண்களுக்கு தனியே நடந்து வரும் பெண் உருவம் தெரிந்தது.

வண்டியின் வேகத்தை குறைத்த பொழுது தான் உணர்ந்தான் அது சஹானா என்று... எத்தனை வருடங்கள் கழிந்து பார்க்கிறான் அவளை... இருளிலும் அழுதழுது சிவந்த மூக்கும் பயத்தில் அலைபாயும் விழிகளும் அவனை கட்டி இழுக்க அவளை முழுமையாய் ஆராய்ந்தவனுக்கு அப்பொழுது தான் தெரிந்தது இளமையில் இருந்த அந்த அப்பாவித்தனம் இன்னும் அவள் முகத்தில் வசீகரத்தை குடிவைத்திருந்தது...

அவள் அருகே வந்து வண்டியை நிறுத்தியவன் மறுபுறம் இருந்த கதவை திறந்து அவளை அமர சொன்னான். அவனை சிவந்த விழிகளுடன் பார்த்தவள் அவனை கண்டு கொள்ளாதது போல் வேகமாக நடக்க துவங்கினாள்.

‘அண்ணனுக்கு இருக்க திமிரு கொஞ்சமாவது இருக்காதா பின்ன?’ மனதில் திட்டியவன் மீண்டும் அவள் முன்னே வண்டியை வளைத்து நிறுத்தினான்.

அவனை பார்க்காமல் வேறு புறம் பார்வையை செலுத்தி நிற்க, “வண்டில ஏறுடி”

மாட்டேன் என்றவள் சிறு குரலில், “நான் என் அண்ணன தேடணும் வழி விடுங்க”

“அதுக்கு தான் நானும் கூப்புடுறேன் வண்டில ஏறு”

“இல்ல நானே பாத்துக்குறேன் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”

“ம்ம்ம் நடு ராத்திரில இப்புடி தனியா ரோடு ரோடா போக போறியா?”

“ஏன் போக கூடாதா? எனக்குன்னு இருக்கது என் அண்ணன் மட்டும் தான் வேற யார்கிட்ட நான் போய் உதவி கேக்க முடியும் அப்புடியே கேட்டாலும் அவங்க உயிரை வாங்குற மாதிரி இருக்கும்”

அருவியாக கொட்டிய கண்ணீரை துடைக்க சென்ற கைகளை தன் கரத்தில் போர்த்தியவன், “சாரிடி ஆதியை காணம்னு தெரிஞ்சதுல இருந்து ரொம்ப டென்ஷனா இருக்குது”

அனிச்சையாக அவனிடமிருந்து கையை பிரித்தெடுத்தவள் பின்னே இரண்டடி சென்று, “என்ன... என்ன நீ... நீங்க டி போட்டு பேசுறி... பேசுறீங்க” அவள் ஒதுக்கத்தில் கோவம் தலை தூக்க தலையை அழுத்தி கோதி ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து, “சரி வண்டில ஏறு”

“இல்ல நான் போகிறேன்”

“அம்மா தாயே என்ன இப்ப உன் கால்ல நான் விழுகணுமா? விழுந்தா வண்டில ஏறுவியா?” அவள் காலை நோக்கி இரு கையையும் குனிவதை பார்த்தவள் வேகமாக ஓடி சென்று காரினுள் அமர்ந்தாள்.

அவள் ஓடியதை பார்த்தவன் சுற்றும் முற்றும் எவரேனும் பார்க்கிறார்களா என்று பார்க்க ‘நல்ல வேளை யாரும் இல்ல’ மனதிலே சந்தோசம் அடைந்தவன் வேகமாக வண்டியை அவள் வீட்டிற்கு கிளப்பி பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்க கூறினான்.

“இல்ல நான் வர்றேன். உதய் அண்ணாகிட்ட எனக்கு போன் பண்ணி குடுங்க நான் ஒரே ஒரு தடவ பேசுறேன் ப்ளீஸ்”

அவளது தொல்லை தாங்காமல் உதய்க்கு அழைத்து அவளிடம் தனது தொலைபேசியை கொடுத்தான். ரிங் சென்று கொண்டே இருந்தது ஆனால் உதய் அழைப்பை ஏற்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தாள் அதில் பொறுமை இழந்த ஆதவன் வெடுக்கென கைபேசியை வாங்கினான்.

“ப்ளீஸ் இன்னும் ஒரே ஒரு தடவ மட்டும்” கெஞ்சியவளின் அருகில் சென்று இறுக்கமான குரலில், “என்ன கல்யாணம் பண்ணிக்க போற போல?” என்றான் கோவத்தை கண்களில் தேக்கி.

சிறு வயதிலிருந்தே சஹானா என்றால் அவனுக்கு தனி பிரியம். அவனை விட ஐந்து வயது சிறியவள் ஆனால் அந்த சிறு வயதிலே அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தாள் அவளது அப்பாவித்தனத்துடன். ஆதியின் தாய் தந்தை ஆதி ஒன்பதாவது வகுப்பில் மறைந்திட அவளை பார்ப்பதும் குறைந்தது... அவளை பார்க்க வேண்டும் என்னும் சாக்கில் ஆதியை அடிக்கடி நேரில் சென்று சந்திக்க ஆரமித்தான். ஆனால் அவளது வயதை காரணமாக வைத்து சில நாட்கள் அவளை விட்டு மனதை மாற்ற நினைத்தான்...

விதி நண்பர்களை இரண்டாக பிரித்தது அதில் சஹானாவை முழுவதாக பிரியவேண்டி ஆகியது. பிறகு உதய்க்கு துணையாக லண்டன் செல்ல இரண்டு ஆண்டுகள், பிறகு தான் அவளை பார்த்தான் அப்பொழுது ஒன்பதாவது வகுப்பில் இருந்த சஹானா சிறு குழந்தையாய் இல்லாமல் குமரியாய் மீண்டும் அவன் மனதை வேறு பெண்களிடம் செல்லாமல் சிறை பிடித்தாள்.

அன்று பார்த்தது தான் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறான்... இத்தனை வருடங்கள் கழிந்து பார்பவளை எளிதாக வேறு ஒருவனுக்கு கொடுக்க துளியும் மனம் இல்லை... குறிப்பாக கூற வேண்டுமென்றால் அதை நினைக்கையில் மனதில் ஒரு இனம்புரியாத வலி...

ஆதியை பற்றி எல்லாம் அவனுக்கு கவலை இல்லை அவனை எவ்வாறேனும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை. ஆனால் இந்த சில்வண்டிடம் சம்மதம் வாங்குவது தான் பெருத்த சிரமம் என்பதை புரிந்து கொண்டான் பார்த்த சில நொடிகளிலே.

அவனது நெருக்கத்தில் தடுமாறியவள், “இல்... இல்ல எனக்கு தெரிய... எனக்கு தெரியல”

“ம்ம்ம்ம்... கொன்னுடுவேன் வேற எவனயாச்சும் கல்யாணம் பண்ண நெனச்சனா... ம்ம்ம் புரியுதா?”

“ஏன் இப்டி பே....”

அவளை இடைமறிக்க மீண்டும் ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்து வீட்டின் நிலைக்கதவின் அருகில் நின்றிருந்தவளின் இருபுறமும் அணையாய் கைகளை வைத்தவன், “என்ன என்னமோ சொல்ல வந்த?” என்றான் கிரங்கிய நலிந்த குரலில்...

வேகமாய் இல்லை என்று தலை ஆட்டி, “யாரவது பாக்... பாக்க போறாங்க தள்ளி நில்லு... நில்லுங்க” அவளுடன் கிடைத்த முதல் நெருக்கம் தந்த சுகத்தில் திருப்த்தி அடைந்து விலகினான்....

“ம்ம்ம் இப்ப சொல்லு... வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறியா?”

எதற்காக இவ்வாறு பேசுகிறான் என்று புரிந்தும் புரியாமலும் அவள் சுவற்றோடு ஒட்டி நிற்க அவள் முகத்திலிருந்த சந்தேகத்தை பார்த்து திருப்த்தி அடைந்தவன், “உள்ள போய் கதவை சாத்திடு படு” என்று ஆணையிட்டு வெளியில் சென்றான் ஆதி
யை தேடி...







MMM solunga paa chapter epdi irunthuchu?

Nalla irukaa….???

Mukiyamaana kelvi yentha pari pudichirunthuchu?

Udhai and Yazhini?

Or

Aadhavan and Sahana?
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Lovely episode 2 pair Vera level tha udhai ennana yazhini ku blood 😍😍vanthathum first aid panni viduran Ava job ku varala nu sonna varathu sollidu pairvaila miraduran 💓
Yazhini highlight மலை குரங்கு 🤭😂
Dai aadhava unakum love la panna theriyuma😂 paraah sahana aalutha phone la kuda antha sound unaku kekk pidigala avalaay pavom ippo poe kalyanam panniga poraya nu kekura athuyum illama miradura Vera oruthaan kalyanam panni paru nu💕💕
First aadhai ya paru 😌😌
Atlast ella friends kum pair iruku 🙈🙈
 
Messages
37
Reaction score
4
Points
8
Lovely episode 2 pair Vera level tha udhai ennana yazhini ku blood 😍😍vanthathum first aid panni viduran Ava job ku varala nu sonna varathu sollidu pairvaila miraduran 💓
Yazhini highlight மலை குரங்கு 🤭😂
Dai aadhava unakum love la panna theriyuma😂 paraah sahana aalutha phone la kuda antha sound unaku kekk pidigala avalaay pavom ippo poe kalyanam panniga poraya nu kekura athuyum illama miradura Vera oruthaan kalyanam panni paru nu💕💕
First aadhai ya paru 😌😌
Atlast ella friends kum pair iruku 🙈🙈
elarukum pair iruntha dhaane padika jly ah irukum
 
Top