• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 25

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 25

Writer : Hafa



அங்கு மதியோ மேடிட்ட வயிற்றுடன், கையில் தனது பையுடன் ஆட்டோவில் இருந்து இறங்கியவளை பார்த்த ரவியும் சீதாவும் பதறிப் போய் மதியிடம் என்னவென்று வினவ, அவளோ எதுவும் பேசாது உணர்ச்சிகள் அற்றவளாய் உள்ளே சென்றவளுக்கு இத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கம் கண்ணீராய் வெளிப்பட்டது..

மதியின் அருகே வந்த பெற்றோர், ஒன்றும் புரியாது நிற்க, திடீரென்று அவளது கண்ணீரை பார்த்தவர்கள், அதிர்ந்து போய், "மதி என்னாச்சுடா?? ஏன் நீ மட்டும் தனிய வந்து இருக்க?? மாப்ள எங்க??" என்க, கண்ணீருடனே அவர்களை நிமிர்ந்து பார்த்தவள், " இனி யாரும் யாருக்கும் மாப்ள இல்ல, ஒரு வருஷத்துக்கு மட்டும் தான் அவரு எனக்கு புருஷனா இருந்தாரு.. இல்ல இல்ல நடிச்சாரு.. இதுக்கு அப்பறம் நானும் என்னோட பாப்பாவும் யாருக்குமே சுமையா இருக்க விரும்பல.." என்ற மதி தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள்..

வடியும் கண்ணீரை நிறுத்தும் திராணி இல்லாதவள் குலுங்கிக் குலுங்கி அழ, அவள் அழுதது வயிற்றில் இருக்கும் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு தெரிந்ததோ என்னவோ, அது வயிற்றுக்குள் இருந்து எட்டி உதைத்து உனக்கு நான் இருக்கிறேன்.." என்று நினைவு படுத்தியது.. குழந்தையின் அசைவை உணர்ந்த மதி வயிற்றின் மீது கை வைத்து, "பாப்பா உனக்கு அம்மா நான் இருக்கேன்டா.. நீ எதுக்கும் கவலை படாத.. நாம ரெண்டு பேருக்குமே அப்பா வேணாம்டா.. நாங்க அவரு கூட இருந்தா அவருக்கு தான் பாரமா இருக்கும்.. இன்னும் கொஞ்ச நாளையில ரெண்டு பேருமே தனியா எங்கைச்சும் போயிரலாம்.. வீணா யாருக்கும் கஷ்டம் கொடுக்க வேணாம்.." என்றவளுக்கு கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது..

வெளியே ரவியும் சீதாவும் ஒன்றும் புரியாது குழம்பிப் போய் நிற்க, வாசலில் நிழலாடுவதை கண்டவர்கள், நிமிர்ந்து பார்க்க அங்கு செழியன் நின்றிருந்தான்..

"மாப்ள.. வாங்க வாங்க.. உள்ள வாங்க.." என்றார் சீதா..

ரவி, "மாப்ள, மதி ஏதேதோ சொல்லுறாள்.. அவ என்னைக்குமே இப்படி சோர்ந்து போய் நாங்க பார்த்ததில்லை.. இப்போ இப்படி பார்க்கும் போது எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல.. நீங்களாச்சும் சொல்லுங்க.. உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனையா?? சொல்லுங்க தம்பி.." என்றவரை கைகளை பிடித்து ஆறுதல் படுத்தியவன்,

"அங்கிள் நீங்க டென்சன் ஆகுற மாதிரி எதுவும் இல்ல, சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டான்டிங்.. நாங்க பேசி சரி பண்ணிக்கிறோம்.. நீங்க ஒர்ரி பண்ணிக்காதிங்க.." என்று கூறிய செழியன், கண்களாலேயே மதியை தேட, அதை கண்டு கொண்ட சீதா, "மதி உள்ள இருக்காள் தம்பி.." என்று மதியின் அறையை காட்ட, அவனும் வெளியே நின்று கதவை தட்டினான்..

கதவை திறந்த மதியோ அங்கு நின்றிருந்த செழியனை பார்த்து அதிர்ந்து போனவள், அவனை திட்ட வாயை பின்னால் நிற்கும் பெற்றோரை கண்டு கட்டுப் படுத்திக் கொண்டு, அவனிடம் எதுவும் பேசாது உள்ளே சென்று விட, அவனும் உள்ளே சென்று கதவை லாக் செய்தான்..

மதியோ ஒன்றும் பேசாது கட்டிலின் ஒரு மூளையில் போய் அமர்ந்திருக்க, அவளுக்கு சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த செழியனுக்கு வீட்டில் நடந்த நிகழ்வுகள் கண் முன் தோன்றியது..

டைரியின் முதல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த செழியனின் விழிகள் அதிர்ச்சியில் இருந்து மீளாதிருக்க, அவன் கைகள் தானாக அடுத்த பக்கத்தைப் புரட்டியது.. மூன்று ஆண்டுகளுக்கு முன் திகதியிட்ட பக்கத்தோடு தொடங்கப்பட்டிருந்தது மதியின் காதல் நினைவுகள்..

முதன் முதலில் செழியன் அவள் மனதுக்குள் குடி கொண்ட, காலேஜ் முதல் நாள் நிகழ்வோடு தொடங்கி இருந்தாள்..
(இந்த சீன் நான் முன்னமே ஒரு எபில போட்டு இருக்கேன்..)

கண்டவுடன் காதல் வரும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.. ஆனால் அது நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமில்லை என்றே எண்ணியிருந்தேன் உன்னை காணும் வரை..

அன்று இன்டெர் காலேஜ் காம்படிஷன் என்றபடியால் மொத்த காலேஜூமே பரபரப்புடன் காணப்பட்டது.. அங்கு ஒரு மரத்தின் கீழ் குழுமியிருந்த கல்லூரி மாணவிகளின் அந்த இடத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தது..

"ஹப்பா, செம்ம என்ஜாய்மென்ட்லடி.. என்னா சாங்கு, என்னா டான்ஸு.. எல்லாமே செம்ம கலக்கலா இருந்துச்சுல.." என்று தோழிகள் கூட்டத்தில் ஒருத்தி சொல்ல,

"ஆமாடி செம்ம ஆட்டம் போட்டாச்சு.. இப்போ ரொம்ப டயர்டா இருக்கு, த்ரீ டேய்ஸ்க்கு வீட்டுக்கும் போக முடியாது.. வாங்க ஹாஸ்டலுக்கு போயிட்டு ஒரு குளியலை போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்.." என்றாள் மற்றொருத்தி.

"ஹேய் கடுப்ப கிளப்பாதிங்கடி.. நீங்க இருந்த சைடு நல்ல என்ஜோய் பண்ணியிருக்கீங்க.. நாங்க இருந்த சைடு ஒதுங்கிப் போய் நிற்க வேண்டியதா போச்சு.." என்று கவலையில் சொல்ல,

"ஏன்டி உங்களுக்கு என்ன?? நீங்களும் நல்லா என்ஜோய் பண்ணி இருக்கலாமே.. அந்த சைடு என்ஜோய் பண்ண முடியாத அளவுக்கு டிஸ்டர்பன்ஸ் உங்களுக்கு.." என்று ஒருத்தி வினவ,

"ஐயோ அத ஏன்டி கேட்குற, அந்த ஜொள்ளு விஷ்ணு இருக்கான்ல, அவன் நம்ம மதி பின்னாடியே சுத்தி சுத்தி வந்து எங்கள என்ஜாய் பண்ணவே விடலடி.." என்று கூறியதை கேட்ட மற்றவர்கள் சிரித்து வைக்க மதியிற்கு தான் கடுப்பாகியது..

"டேய் விஷ்ணு, பக்கிப் பயலே ஏன்டா என்ன இப்படி டார்ச்சர் பண்ணி இவளுங்க வாய்க்கு சுவிங்கம் ஆக்கிவிட்ட.. இப்போ பாரு இவளுங்க இது தான் சான்ஸ்னு என்ன மென்னு துப்புராளுங்க.. இப்போ மட்டும் நீ என் கையில மாட்டின, மவனே செத்தடா நீ.." என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, கதை கேட்கும் ஆவலில் ஒருத்தி, "அப்புறம் என்னாச்சு?? சொல்லுங்கடி.." என்று கேட்க.,

"ஏய் இப்போ இது ரொம்ப முக்கியம்.. போங்கடி போய் வேல இருந்தா பாருங்க.." என்று கடுப்பில் மதி கூறவும் அதற்கெல்லாம் அசருபவர்கள் தாங்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக அவர்கள் அதை பற்றியே பேசிக் கொண்டிருக்க, "அடப் போங்கடி.. என்ற மதி, எழுந்து வகுப்பறையில் இருக்கும் தன் பையை எடுக்கச் சென்றவளை தடுத்த அவளது தோழிகள், "ஏய் மதி, நீ ஏன் போய் கஷ்ட பட போற, அந்த விஷ்ணு பயலுக்கு ஒரு போன் பண்ணி விட்டேனா எங்க இருந்தாலும் உன்னோட பேக்கை எடுத்துட்டு வந்து கொடுத்துருவான்.." எனக் கூறிச் சிரிக்க, அவர்களை முறைத்து விட்டு வந்தவள், "எல்லாம் இந்த விஷ்ணுவால வந்தது.. அவன் எல்லாத்தையும் மூடிட்டு சும்மா இருந்து இருந்தால் இவளுங்க இப்படி பேசுவலுங்களா?? பக்கிப் பயலே.." என்று புலம்பியபடி நான்காம் புளோரை அழுத்தி விட்டு லிப்ட்டுக்குள் முனுமுனுத்துக் கொண்டு நின்றாள்.. லிப்ட் நான்காம் தளத்தை தொட்டதும் கதவு திறக்க, அங்கு நின்றிருந்த செழியனை கண்ட மதி தன்னை மறந்து அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி வெளியேறினாள்..

வகுப்பறையில் இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு, "ஐயோ இவனா?? எப்படிடா எனக்கே தெரியாம என்னோட மனசுக்குள்ள புகுந்த??" என்று தனக்குள் கேட்டபடி, நடந்தவள் எப்படி தோழிகள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை..

அமைதியாக இருந்த மதியை நோட்டம் விட்ட அவளது தோழிகள் அனைவரும் அவளின் தோளை பிடித்து உலுப்ப, "ஆஹ்.. என்னங்கடி.. என்னாச்சு?? ஏன் எல்லாரும் என்ன சுத்தி நிற்குரிங்க.." என்றாள்..

"அடியேய் உன் மேல கொலவெறில இருக்கோம்.. நாங்களும் அப்போதுல இருந்து மதி மதின்னு காட்டு கத்தல் கத்திட்டு இருக்கோம், நீ என்னடான்னா எந்தக் ரியாக்ஷனும் கொடுக்காம சைலன்ட்டா இருக்குற.. வா ஹாஸ்டலுக்கு போகலாம்.." என்று அழைக்க,

"நீங்க போங்கடி.. நான் அம்மாக்கு எடுத்து பேசிட்டு வர்றேன், எதிர்பார்த்துட்டு இருப்பாங்க..” என்றவள் போனை கையில் எடுத்துக் கொண்டு செல்ல, "சரிடி ரொம்ப நேரம் தனியா நிற்காத, சீக்கிரமா வந்து சேரு.." என்று கூறிவிட்டு ஹாஸ்டலுக்கு சென்றனர்..

அன்னைக்கு அழைத்து சிறிது நேரம் பேசி விட்டு வந்த மதி, ஹாஸ்டலுக்கு போக மாடிப்படிகளில் போனை பார்த்துக் கொண்டே ஏறியவள், திடீரென்று எதன் மீதோ மோத, பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள்..

அவள் காதின் அருகில் இதயத் துடிப்பின் ஓசை கேட்க, மெதுவாக கண்களை திறந்தவளுக்கு அங்கு நின்றிருந்த செழியனை பார்த்ததும் மெல்லிய படபடப்பு தோன்ற, கைகளை பிசைந்தபடி அவஸ்தையாக நெளிந்து கொண்டு நின்றாள் மதி..

அவன் அவள் முகத்தை கூடப் பார்க்காது, "ஹலோ மிஸ், அக்கம் பக்கம் பார்த்து நடங்க.." என்று விட்டு அவளை விலக்கிச் செல்ல, அவன் கூறியது அவளுக்கு ஏதோ, "ஐ லவ் யூ.." சொல்லியது போல் தித்தித்தது..

"ஐயோ மதி, இப்படியா பண்ணுவ?? அவன் என்ன நினைச்சிருப்பான் உன்ன பத்தி.. ரெண்டு வாட்டி தான் பார்த்து இருக்கோம்.. அதுக்குள்ளயே காதல் வந்துடுமா??" என்று தனக்குள் வினா எழுப்பிக் கொண்டவள், தன் தோழிகளுடன் ஐக்கியமானாள்..

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அதற்கு பின்னர் செழியனை பார்க்கும் வாய்ப்பு மதிக்கு கிட்டவில்லை.. சந்திக்கும் வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லையே தவிர அவனது நினைவுகள் மட்டும் மதியினுள் வட்டமிட்டுக் கொண்டே தான் இருந்தன..

செழியனையே நினைத்துக் கொண்டிருந்த மதி, வார இறுதி நாளில் தன் தோழிகளுடன் ஷாப்பிங்கிற்காக ஒரு பிரபல துணிக்கடைக்கு சென்றிருந்தாள்..

தனக்கு தேவையான ட்ரஸ்களை தெரிவு செய்து கொண்டவள், தந்தைக்கு ஷர்ட் எடுக்கலாம் என ஆண்களின் ஆடை பிரிவிற்கு சென்று அங்கிருந்த ஆடைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தவளின் விழி வட்டத்தில் விழுந்தான் செழியன்.. அதற்கு பிறகு மதியின் கவனம் ஆடைகளில் இருக்குமா என்ன??

செழியன் ஒரு நேவி ப்ளூ கலர் ஷர்ட்டை தெரிவு செய்தவன், அதை எடுத்துக் கொண்டு ட்ரயல் ரூமிற்கு சென்று அதை ட்ரை செய்து பார்த்து விட்டு வெளியில் வந்ததும், அவனுடன் வந்திருந்த சிவா, செழியா இந்தா இந்த கலர் ட்ரை பண்ணு, இது உனக்கு சூட் ஆகும்.." என்று தான் ஒன்றை எடுத்துக் கொடுக்க, "ஒகேடா லெட் மீ ட்ரை.." என்று கூறி விட்டு அந்த நேவி ப்ளூ ஷர்ட்டை அங்கேயே வைத்து விட்டு உள்ளே செல்லவும் சிவாவும் தனக்கு ஏதோ போன் வர அவன் அதை எடுத்து பேசியபடி நகர்ந்து சென்றான்.. அந்த கேப்பில் செழியன் தெரிவு செய்து வைத்திருந்த அந்த நேவி ப்ளூ ஷர்டை பில் போட்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பினாள் மதி..

செழியனுக்கோ, சிவா செலக்ட் செய்த ஷர்ட்டை விட தான் முன்பு தெரிவு செய்த ஷர்ட் தான் பிடித்திருக்க அதையே எடுத்துக் கொள்வோம் என்று வெளியில் வந்தவன், தான் வைத்த இடத்தில் அது காணாமலிருக்க, அங்கும் இங்கும் தேடியவன், அது இல்லாமலிருக்கவும் வேறு ஷர்ட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினான்..

அதன் பின் மதி செழியனை கண்டது, காலேஜில் தர்ஷனாவும் செழியனும் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றதை தான்.. பின் அதே காலேஜில் படிக்க, தைரியம் இல்லாதவள், வேறு காலேஜுக்கு சென்று விட்டதில் இருந்து, தர்ஷனாவை வினயுடன் பார்த்தது வரை அனைத்தையும் குறிப்பிட்டு இருந்தாள்.. அந்த பக்கங்களில் எல்லாம் எழுத்துக்களோடு கண்ணீர்த்துளிகளும் அதில் பதியப்பட்டிருந்தன..

கடைசியாக இருவரும் அச்சிடேன்ட்டில் சந்தித்தது முதற்கொண்டு, அவர்களது ஒப்பந்தத் திருமணம், அவன் போதையில் தன்னை தொட்ட போது மனதில் தோன்றிய உணர்ச்சிகள், இறுதியில் குழந்தை உண்டானது.. என ஒன்று விடாமல் அந்த டைரியில் எழுதி இருக்க, கடைசியாக அவள் கிறுக்கியிருந்த அந்த வரிகளை படித்த செழியனுக்கோ மனம் கனமாகியது..

அதில்..

எங்கு எதிர்பார்ப்புகள் பொய்யாக்கப் படுகின்றனவோ.. அங்கு ஏமாற்றங்கள் மிதமிஞ்சிப் போகின்றன..
மனித வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல.. எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் சுயநலமாக யோசிக்கத்தான் செய்கிறார்கள்..

என்று எழுதியிருந்ததோடு அந்த டைரியின் கடைசிப் பக்கம் முடிந்திருந்தது..

இத்தனை நாள் மதி அனுபவித்த கஷ்டங்களை உணர்ந்து கொண்டான் செழியன்..

டைரியை மூடி வைத்தவன், யார் அழைப்பதையும் காதில் வாங்கிக் கொள்ளாது, பாய்ந்து ஓடி காரில் ஏறிக் கொண்டவன் மதியை தேடிச் சென்றான்..



தொடரும்...
 
Top