• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 23

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 23

Writer : Hafa



மதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த செழியன், அவளை டாக்டர் பரிசோதிக்கும் வரை, மதி இருந்த வார்டுக்கு வெளியே குட்டி போட்ட பூனையாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்..

மதியை சோதித்த டாக்டர் வெளியே வர அவரை பிடித்துக் கொண்டவன், "டாக்டர், மதிக்கு இப்போ எப்படி இருக்கு.. அவள் ஓகே தானே.." என்று படபடக்க,

"செழியன் ரிலாக்ஸ் ஆகுங்க முதல்ல.." என்ற டாக்டர் சிறிது இடைவெளி விட்டு, "கங்கிராட்ஸ் செழியன்.. நீங்க அப்பாவாக போறீங்க.." என்று டாக்டர் சொன்னதும், "வாட்??" என்ற கூவலோடு அதிர்ந்து நின்றான் செழியன்..

செழியனின் மனமோ தான் தந்தையானதை நினைத்து சிலிர்த்து போக, உள்ளத்தில் ஒரு வித இதமான உணர்வு உருவாகி அதுவே அவனது நாடி நரம்பெங்கும் ஓடி இத்தனை நாள் உயிரற்று கிடந்த வாழ்விற்கு புத்துயிர் கிடைத்தது போல் தோன்றியது..

டாக்டரின் கையை பிடித்தவன், "தேங்ஸ் டாக்டர் தேங்க் யூ ஸோ மச்.."என்றவனை பார்த்து சிரித்த டாக்டர், "நீங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டியது எனக்கில்ல மிஸ்டர் செழியன், உங்க வைப்க்கு தான்.." என்று கூறிவிட்டு சென்று விட, தன் மடத்தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டான் அவன்..

உள்ளே இருந்த நர்ஸ் வெளியே வரும் வரை வார்டின் கதவுகளையே செழியனின் கண்கள் நோட்டம் விட்டு கொண்டிருந்தது.. அதற்குள் நர்ஸ் வெளியே வர, பாய்ந்து போனவன், "சிஸ்டர் உள்ள போகலாமா?? எப்போ அவங்கள பார்க்கலாம்.." என்க, "இன்னும் சரியா அவங்களுக்கு மயக்கம் தெரியல சார்.. மார்னிங்ல இருந்து எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க போல, மயக்கம் தெளிஞ்சதும் ஏதாவது சாப்பிட கொடுத்துட்டு இந்த பிரிஸ்க்ரிப்ஷன்ல இருக்குற டேப்லெட்ட கொடுங்க.." என்று பிரிஸ்க்ரிப்ஷனை செழியனது கையில் கொடுக்க அதை வாங்கியவன், "சிஸ்டர் நான் இப்போ உள்ள போகலாமா??" என்க, "ஓகே சார்.. பேஷன்டை டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க.." என்று நர்ஸ் நகர்ந்ததும் உள்ளே சென்றவன் அங்கு படுத்து இருந்த மதியை கண்டதும் அவன் மனதில் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொண்டது..

"அது ஏன்?? எதனால்??" என்றெல்லாம் அவன் ஆராய விரும்பவில்லை.. அந்த நொடி அவனுக்கு புதிதாய் இருக்க, மதியின் அருகில் போய் அமர்ந்தவன் அவனை அறியாமலே அவள் கைகளை பிடிக்க, அவனது ஸ்பரிசம் பட்டதும் மெதுவாக இமைகளை திறந்தாள் மதி..

கண்களை திறந்தவளின் முன்னால் செழியன் இருக்க, அவனை பார்த்து புன்னகைத்தவள், "இளா.." என்று வாய்க்குள்ளேயே முணு முணுக்க, அவள் கைகளை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டான் அவன்..

"ஏய்.. ரோட்ல நிற்கும் போது இப்படி தான் ஒருத்தன் கடத்திட்டு போற அளவுக்கு கேர்லெஸ்ஸா இருப்பியா?? கவனமா இருத்துக்கணும்னு தெரியாது.. பூல்.." என்று திட்டிய செழியன் எழுந்து வெளியே போக.,

"அடக் கடவுளே!! நானா போய் என்ன கடத்துன்னு சொன்னேன்.. சம்பந்தமே இல்லாம என்ன எதுக்கு இவன் இப்படி திட்டுறான்?? நமக்கு குழந்தை வரப் போறதை டாக்டர் இவன் கிட்ட சொல்லிட்டாரா இல்லையா?? கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இப்படி எரிஞ்சி விழுறானே.." என்று மனதுக்குள் புழுங்கியவள் வெளியே மௌனமாய் இருந்தாள்..

இரு நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தவன், "இந்தா இதுல சாப்பாடு இருக்கு.. எடுத்து சாப்பிடு.." என்று மதியிடம் பையை கொடுக்க, அதை வாங்கப் போனவள், "ஸ்ஸ்ஸ்ஸ்.." என்று கத்தவும் அவள் கையை பார்க்க, அதில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது..

"ஏய் அறிவில்ல.. கையில தான் ட்ரிப்ஸ் போட்டு இருக்குன்னு தெரியுதுல.. அப்பறம் எதுக்கு கையை நீட்டுற.." என்று முறைத்துக் கொண்டு கூறியவன், "இரு நானே ஊட்டி விடுறேன்.." எனக் கூறி மதிக்கு உணவை கொடுத்தான்..
சாப்பிட்டு முடித்ததும், "தேங்ஸ்.."என்ற மதியை கேள்வியாய் பார்க்க, " எல்லாத்துக்கும் தான்.." என்றதும், அவனும், "ம்ம்ம்.." என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டவன் வெளியே செல்லப் போக, "ஒரு நிமிஷம்.." என்றாள் மதி..

அவன் என்ன என்பது போல் திரும்பி பார்க்கவும் நர்ஸ் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"சார்.. பர்மாலிடிஸ் எல்லாம் முடிஞ்சிது.. நீங்க இனி டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.." என்க, "ஓகே சிஸ்டர்.." என்றவன் மதியை கை தாங்கலாக அழைத்து சென்று காரில் ஏற்றி தானும் ஏறிக் கொண்டான்..

செழியன் லாவகமாய் காரை செலுத்த, அதை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.. எப்போதும் இறுக்கம் குடி கொண்டிருக்கும் அவனது முகம் சற்று தளர்ந்து இருக்க, அவனை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு..

காரை செலுத்திக் கொண்டே மதியை ஓரக் கண்ணால் பார்த்தவன், "இப்போ இவ எதுக்கு நம்மள வச்ச கண் வாங்காமல் பார்த்துட்டே வர்றா.." என யோசித்தவனது, "ம்ம்ம்ம்கும்..." என்ற செறுமலில் சட்டென தனது பார்வையை திருப்பிக் கொண்டாள் மதி..

அவளது செய்கையை பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்ட செழியன், "நான் உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?? ஆனா நீ உண்மைய மட்டும் தான் சொல்லணும்.." என்க, மதியின் முகமோ, "ஐயோ இப்போ இவன் என்ன கேட்க போறான்.." என்று கலவரத்தை காட்டியது..

"நான் வேற எத பத்தியும் கேட்கல.. நான் உன் கிட்ட முன்னாடியே கேட்டது தான், நீ இதுக்கு முன்னாடி, ஐ மீன் நாம பர்ஸ்ட் மீட் பண்ணிட்ட அந்த அச்சிடேன்ட்டுக்கு முன்னாடி என்ன உனக்கு என்ன தெரியுமா??" என்றதும் மதி தலையை குனிந்து கொள்ள,

"இங்க பாரு மதி, அன்னைக்கு தர்ஷனா நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்போ நீ அவள் கூட பேசினத்துல இருந்து நல்லா தெரியுது உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாள் பழக்கம் இருக்குதுன்னு.. அது மட்டும் இல்ல, சந்திரன் அங்கிள் தான் தர்ஷனாவோட அப்பான்ற உண்மை கூட நீ சொல்லி தான் எனக்கு தெரியும்.. இப்படி எல்லாமே உனக்கு தெரிஞ்சி இருக்கும் போது கண்டிப்பா என்ன தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல.. சொல்லு, உனக்கு என்ன காலேஜ் டேய்ஸ்ல வச்சே தெரியுமா??" என்றான் செழியன்..

இதற்கு மேல் அவனிடம் பொய் சொல்ல இயலாது என்பதை உணர்ந்து கொண்டவள், "ஆமாம்.."என்பது போல் மேலும் கீழும் தலையை அசைக்க, "அப்படின்னா நீ அன்னைக்கு.." என்று அவன் ஏதோ கேட்க வர, மதி வாந்தி வரப் போவதாக கூறி வாயை மூடிக் கொண்டாள்..

காரை ஓரமாக நிறுத்தியவன், அவளை கையை பிடித்த படியே வாந்தி எடுக்கும் வரை தாங்கிப் பிடித்தவன், பின்னர் காருக்குள் அமர்த்தி, அவளுக்கு ஏதுவாய் தன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்..

இத்தனை நாள் அவனை முரட்டுத் தனமாய் பார்த்தவள், திடீரென்று இப்படி அன்பாய் பார்க்க, கலங்கித் தான் போனாள்.. அவனின் முரட்டு தனத்தை எதிர் கொண்ட மதியால் அவனது அன்பை எளிதில் புறக்கணிக்க முடியவில்லை.. அவளுக்கு அப்போது அந்த அணைப்பு தேவையாய் இருக்க, அவன் கைகளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..

சிறிது நிமிட பயணத்திற்கு பின் கார் நிற்கவும் அவள் அசையாமல் இருப்பதை பார்த்தவன், "வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. மேடம் எந்திரிக்கிறிங்களா??" என்று அவள் காதின் அருகில் போய் சொல்லவும், கூச்சத்தில் சட்டென இறங்கிக் கொண்டாள்..

செழியனின் கார் சத்தத்தை கேட்டு அனைவரும் வெளியே வர, கங்கா ஓடிச் சென்று மதியை அணைத்துக் கொண்டார்.. "மதி எங்கடா போய் இருந்த உன்ன காணும்னு நாங்க எவ்வளவு பதறி போய்ட்டோம் தெரியுமா??" என்றதும், ரவியும் சீதாவும் ஆளாளுக்கு முகத்தை பார்த்துக் கொண்டனர்..

சீதா, "என்ன அண்ணி சொல்லுறீங்க, மதிய காணும்னு பதறி போய்ட்டீங்களா?? நீங்க தானே சொன்னிங்க, மாப்ள கூட வெளிய போய் இருக்காள்ன்னு.." என்க, "அம்மா.." என்று சீதாவை கட்டிக் கொண்ட மதி, "அது ஒன்னும் இல்லமா, நாங்க போய் ரொம்ப நேரம் ஆச்சா அது தான் அத்தை பயந்து இருப்பாங்க.. வேற எதுவும் இல்லமா.." என்றாள் சமாளிப்பாய்..

"அப்படியா மதி, நான் கூட அண்ணி இப்படி சொல்லவும் உனக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கும்னு பயந்து போய்ட்டேன்..." என்க,

"சீதா, அதெல்லாம் நம்ம பொண்ணுக்கு ஒரு பிரச்சனையும் வராது, வீட்டுக்கு வந்தவங்கள வாசல்லயே நிற்க வச்சி பேசிட்டு இருக்காமல் வாங்க உள்ள போகலாம்.." என்று ரவி கூறியது அவரது கைகளை மதி பற்றிக் கொண்டு அவர்கள் மூவரும் உள்ளே செல்ல, வெளியே நின்ற செழியனை சூழ்ந்து கொண்டனர் கங்கா, சக்தி மற்றும் சிவா..

சிவா, "செழியா, என்னடா ஆச்சு?? மதி எங்க போய் இருந்தாள்?? எப்படி அவளை வீட்டுக்கு கூப்பிட்டு வந்த??" என்றதற்கு செழியனோ அமைதியாய் எதையோ யோசித்துக் கொண்டிருக்க,

"செழியா, என்னடா அமைதியா இருக்குற?? என்ன ஏதாவது பிரச்சனையா??" என்ற கங்காவை பார்த்து, "அம்மா, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. இனியும் எந்த பிரச்சனையும் வராது.. இப்போ உள்ள வாங்க, மத்த விஷயங்களை அப்பறமா பேசிக்கலாம்.." என்றவன் உள்ளே ஆளாளுக்கு முகத்தை பார்த்துக் கொண்டவர்கள் அவனை தொடர்ந்து உள்ளே சென்றனர்..

சோபாவில் உட்கார்ந்து இருந்த மதி, "கடவுளே, இப்போ நமக்கு குழந்தை வரப் போறது இவனுக்கு தெரியுமா தெரியாதா?? வீட்ல எல்லாரும் இருக்காங்க, நாமளே சொல்லிடலாமா, இல்லனா இவன் கிட்ட பர்ஸ்ட் சொல்லிட்டு சொல்லலாமா??" என்று யோசனையில் இருக்க, அவளின் முகத்தை வைத்தே மதியின் மனதில் இருப்பதை அறிந்து கொண்டவன், அவள் அருகே அமர்ந்து, அவளது கையின் மேல் தன் கையை வைத்து, அவளுக்கு மட்டும் கேட்குமாறு, "ரிலாக்ஸ்.." என்றான்..

"ம்ம்.." என்று மதி தலை ஆட்ட, எழுந்து நின்ற செழியன், "நான் உங்க எல்லாருகிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும்.." என்று நிறுத்த, அனைவரும் பீதியோடு அவனின் முகத்தை பார்த்தனர்..

"ஹேய் நீங்க டென்சன் ஆகுற அளவுக்கு ஏதும் இல்ல, அது என்னனா.."என்று மதியை பார்த்தவன், "மதி கன்சீவா இருக்காள்.." என்றது தான் தாமதம் சீதாவும் கங்காவும் கண்கள் கலங்க மதியை அணைத்துக் கொண்டனர்..

மதியின் நெற்றியில் முத்தமிட்ட கங்கா, "மதிமா ரொம்ப சந்தோஷமா இருக்குடா, எங்க குடும்பத்துக்கு முதல் வாரிசு வரப் போகுது.. நீ நல்லா இருக்கணும்டா.." என்றார்..

"மதி.. மதி.." என்று சீதா வார்த்தை வராமல் கண் கலங்க, "என்ன சீதா நீ, நாம தாத்தா, பாட்டி ஆகப் போறோம்.. நீ என்ன அழுத்துட்டு இருக்க, சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது.." என்று ரவியும் மதியின் தலையை அன்பாய் தடவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..

சிவா, செழியனுக்கு கை குலுக்கி, "வாழ்த்துக்கள் மச்சான், ஒரு வழியா அப்பா ஆகிட்ட.. சூப்பரு.." என்று அணைத்துக் கொள்ள, சக்தியும் மதியிடம், "கங்க்ராட்ஸ் அண்ணி.. நான் அத்தை ஆகப் போறேன்ல.." என்று மதியை அணைத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்..

இவ்வாறு அன்றைய நாளை மொத்தக் குடும்பமும் சேர்ந்து கொண்டாட, செழியனின் பார்வை மட்டும் மதியையே சுழன்று வந்தது.. அதை அவள் அறியாதவாறு பார்த்துக் கொண்டான்.. இராவாகும் நேரம் நெருங்க, ரவியும் சீதாவும் தங்கள் இன்னொரு நாளைக்கு வருவதாய் கூறிக் கிளம்பினர்..

"சக்தி, அண்ணிய ரூம்க்கு அழைச்சிட்டு போ.. பாவம் அவளுக்கும் டயர்டா இருக்கும்ல.." என்று கங்கா சொல்ல,

"அதெல்லாம் இல்ல அத்தை, நான் நல்லா தான் இருக்கேன்.." என்றாள் மதி..

சிவா, "டேய் செழியா!! இப்போவாச்சும் சொல்லுடா, மதி எங்க போய் இருந்தாள்?? எப்படி அவளை வீட்டுக்கு கூப்பிட்டு வந்த?? அத யோசிச்சு யோசிச்சு மண்டை காயுது மச்சான் சீக்கிரம் சொல்லுடா.." என்க, செழியனும் தர்ஷனா வீட்டிற்கு சென்றது முதற்கொண்டு பின்னர் நடந்தது அனைத்தையும் சுருக்கமாக கூறி முடித்தான்..

"ச்ச்சை.. என்னடா மச்சான், அவனை சும்மாவா விட்டுட்டு வந்த.. நாலு அடிய போட்டு போலீஸ்ல பிடிச்சி கொடுத்து இருக்கலாமேடா.." என்றான் சிவா..

"ஆமா சகோ, சிவா சொல்றது தான் கரெக்ட்டு.. அந்த பொறுக்கிய ஏன் சும்மா விட்டு வந்திங்க, போலீஸ்ல பிடிச்சி கொடுத்து இருக்கணும் அவனை, அப்போ தான் இனி நம்ம வழியில வர மாட்டான்.." என்ற சக்தியை பார்த்து மெலிதாய் புன்னகை ஒன்றை உதிர்த்தவன், "சக்திமா, நாம ஒருத்தருக்கு கொடுக்குற மிகப் பெரிய தண்டனை எது தெரியுமா?? அது மன்னிப்பு தான்.. அவனுக்கு நாம வேற எந்த தண்டனை கொடுத்தாலும் அது இன்னும் இன்னும் அவனுக்கு பழி உணர்ச்சியை தூண்டுமே தவிர, ஒரு போதும் கோபத்தை குறைக்காது.. ஆனா நாம அவன் பண்ணின தப்பை புரிய வச்சி மன்னிச்சு விட்டோம்னா அதுக்கு அப்பறம் அவனுக்கு நம்மள பழி வாங்கணும்னுற எண்ணமே வராது.." என்றவன், "அம்மா, எனக்கு டயர்டா இருக்கு.. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்.." என்று எழுந்து செல்ல, அவன் கூறியதை கேட்ட மதிக்கு அவன் மேல் கொண்டிருந்த காதல், இன்னும் அதிகமாகியது..

இரவு உணவை முடித்துக் கொண்டவள், அவனுக்கும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு போக, அவனும் அதை சாப்பிட, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மதி, அவன் கை கழுவ வெளியே சென்றதும் தன் டைரியை எடுத்து, தன் மனதில் தோன்றியதை கிறுக்கியவள், அவன் வரும் சத்தம் கேட்க, டைரியை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு போன் நோண்டுவது போல் இருந்தாள்..

உள்ளே வந்த செழியன், அவள் கையில் போனுடன் இருப்பதை பார்த்து, "ஏய் ரொம்ப நேரம் போன் பார்க்காத, அது உடம்புக்கு நல்லது இல்ல.." என்கவும் ஏனோ மறு வார்த்தை பேசத் தோன்றாமல், போனை மேசை மீது வைத்து விட்டு அவளது அறைக்குள் நுழையப் போனவளை தடுத்தவன், "அங்க ஒன்னும் தனியா படுக்க வேணாம்.. இங்கயே படுத்துக்கோ.. என்று சொல்ல, அதை கேட்டு ஆச்சரியமானவள், "இல்ல, நான் அங்கையே.." என்று ஆரம்பித்த மதி, செழியனின் ஒற்றை முறைப்பிலேயே வாயை மூடிக் கொண்டு, வேகமாக கட்டிலில் சென்று படுத்து கண்களை மூடிக் கொண்டாள்..

சிறிது நேரம் லேப்டாப்பை தட்டியவன், மதி உறங்கி விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு, அவளருகில் அமர்ந்தவன், அவளையே சற்று நேரம் உற்றுப் பார்க்க, தனக்குள் எழுந்த ஆசையை அடக்க மனமில்லாது, அவள் வயிற்றில் மெதுவாக கையை வைத்தான். குழந்தையை தொடுவது போன்ற உணர்வு தோன்ற, அதில் சிலிர்த்துப் போனவன், சில பல நிமிடங்கள் அப்படியே உறைந்து போயிருக்க, மதி அசைவது போல் தோன்ற, சட்டென்று எழுந்து சென்று மற்ற பக்கம் படுத்துக் கொண்டான் செழியன்..

∞∞∞∞∞∞∞∞∞∞

மாத்திரையை எடுத்துக் கொண்டதாலும் உடம்பில் இருந்த அசதியினாலும் அசந்து தூங்கிய மதி, கண் விழித்துப் பார்க்க செழியனோ ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான்..

"ஐயோ லேட் ஆயிடிச்சா?? அவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?? சாரி சாரி.. வெயிட் பண்ணுங்க டூ மினிட்ஸ்ல காபி போட்டு கொண்டு வர்றேன்.." என்று பதறியவளை பார்த்தவன் அவளருகில் வந்து மெத்தையில் அமர வைத்து "ஹேய், அப்படி என்ன அவசரம் உனக்கு?? எனக்கு காபி எதுவும் வேணாம், அம்மா எனக்கும் போட்டு தந்து உனக்கு பிளாஸ்க்ல பால் வச்சி இருக்காங்க, மெதுவா பிரஷ் பண்ணிட்டு வந்து அத குடி.. என்று பதமாய் எடுத்துச் சொன்னவனை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி..

அவளை பார்த்து,"என்ன??" என்பது போல் புருவம் உயர்த்த, "ஒன்றும் இல்லை.." என்று தலையாட்டினாள் மதி..

"மதி, டைமுக்கு சாப்பிடு, டாக்டர் தந்து இருக்குற டேப்லெட்ஸ் எல்லாம் கரெக்தான் டைமுக்கு எடுத்துக்கோ.. எந்த வேலையுமே இழுத்து போட்டு பண்ணிட்டு இருக்காத, எதுவா இருந்தாலும் அம்மாகிட்டயோ இல்ல சக்திகிட்டயோ கேட்டுக்கோ.. ஓகே.." என்க, அவளோ ம்ம்.. ம்ம்.. " என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள்..

"ம்ம்.. எனக்கு ஆபீஸ்கு லேட் ஆயிடுச்சு.. நான் கிளம்புறேன்.. நீ பார்த்து இருந்துக்கோ.. டேக் கேர்.." என்று கிளம்பி சென்ற செழியனை பார்த்த மதிக்கு, என்னைக்கு தான் என்னையும் என்னோட காதலையும் புரிஞ்சிக்க போறான்னு தெரியலையே, இப்போ குழந்தையும் வரப் போகுது.. எத்தனை நாளைக்கு தான் அக்ரீமெண்ட்னு அதையே நினைச்சி பயந்து பயந்து வாழுறது.. அன்னைக்கு மட்டும் அவன் போதையில இருந்து இருக்கலனா இன்னைக்கு இந்த பாப்பா கூட எனக்கு கிடைச்சிருக்காது, அந்த வகையில கடவுளுக்கு கொஞ்சமாவது என் மேல இரக்கம் இருக்குதே.. இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவன் என்ன புரிஞ்சிப்பான்ன்ற நம்பிக்கையில இருக்குறது, சில நேரங்கள்ள அவனே நெருங்கி வர்றான் சில நேரம் அவனே விலகியும் போறான்.. நீ விலகிப் போற அந்த நொடி ரொம்பவே வலிக்குதுடா.." என்று மனதுக்குள் பேசிக் கொண்ட மதி,

"பாப்பா உங்க அப்பாவுக்கு நீ வந்ததுல கொஞ்சம் கூட சந்தோஷம் இல்ல போலடா.. என்ன போல நீயும் அவரோட அன்புக்காக ஏங்கணும்னு உனக்கும் தலையில எழுதி இருக்கு போல.." என்று கூறி தன் வயிற்றை தடவிக் கொண்டவளுக்கு, கண்களில் இருந்து நீர் வழிய, அதை துடைக்கும் நினைவறியாது அப்படியே அமர்ந்து இருந்தாள்..




தொடரும்...
 
Top